அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
வரதராஜ பெருமாள் - ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர். புலிகளின் கொலைப் பட்டியலில் அவர் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் அங்கிருந்து தப்பினார். எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த சூழலில் அவரைச் சென்னையில் சந்தித்தோம். ''இத்தனை ஆண்டுகள் எங்கேதான் இருந்தீர்கள்?'' ''11 வருடங்கள் ராஜஸ்தானிலும் பத்து வருடங்கள் டெல்லியிலும் இருந்தேன். இலங்கையில் இருந்திருந்தால் இப்போது நான் இருந்திருக்க மாட்டேன். ராஜீவ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக இருந்ததால், என்னைக் கொல்வதும் இந்தியாவை அடிப்பதும் ஒன்று என புலிகள் கருதினார்கள். தலைமறைவாக இரு…
-
- 7 replies
- 1.1k views
-
-
விக்கிலீக்ஸ் - அம்பலமாகும் இரட்டை வேடங்கள் சந்திர பிரவீண் குமார் 1940களில் லக்ஷ்மிகாந்தன் என்ற பத்திரிகையாளர் சினிக்கூத்து என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் மட்டுமல்லாது நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அவதூறான செய்திகளை வெளியிட்டதால் பத்திரிகை தடை செய்யப்பட்டது. ஆனால் அவர் அசராமல் ஹிந்துநேசன் என்ற பத்திரிக்கையைத் துவங்கி அதில் நடிகர்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பற்றி விமர்சனம் செய்தார். இறுதியில் லக்ஷ்மிகாந்தன் கொல்லப்பட்டார். அவரது கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு அந்த நாளைய நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருக்கு நாடு கடத்தும் தண்டனை வழங்கப்பட்டது. கடைசியில் அவர்கள் ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள் – நிலாந்தன். September 12, 2021 கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில் 14 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு “மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்” என்பதாகும். வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையொட்டித் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் அரசாங்கம் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது. முதலாவதாக அனைத்துலக விசாரணை மற்றும் அனைத்துலக தகவல் சேகரிப்பு பொறிமுறைகள் தொடர்பாக பின்வருமாறு கூறப்பட்டு…
-
- 8 replies
- 1.1k views
-
-
[size=5]ஜெனிவா பொறியில் இருந்து மீள்கிறதா இலங்கை?[/size] [size=4]நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வெளியிட்டுள்ளது. என்னதான், அரசாங்கம் மேற்குலக நாடுகளையும், ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளையும் காட்டமாக விமர்சித்து வந்தாலும், அவற்றின் அழுத்தங்களைத் தட்டிக்கழிக்க முடியவில்லை என்பதை இந்த செயற்திட்டம் உறுதிசெய்கிறது. மேற்குலக மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு அரசாங்கம் உள்ளாகியுள்ளது. அதனால் தான் இந்த செயற்திட்டம் வெளியாகியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் டயாஸ்பொறா பலமானதா? கலாநிதி சர்வேந்திரா தமிழ் டயாஸ்பொறாவின் பலம் தொடர்பான கருத்துக்கள் அண்மையில் வெளிப்பட்டிருந்தன. எரிக் சூல்கெய்ம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டன் பேச்சுவார்த்தை தொடர்பாக நிலாந்தன் எழுதிய கட்டுரையில் எரிக் சூல்கெய்ம் வெளிப்படுத்திய கருத்தைக் குறிப்பிட்டு இலண்டன் பேச்சுவார்த்தைகளின் போதும் பின்னும் தமிழ் டயாஸ்பொறா நடந்து கொள்வதைப் பாரத்தால் அப்படியா தெரிகிறது என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார். உண்மையில் தமிழ் டயாஸ்பொறா பலம்மிக்கதுதானா? இதுவே இன்றைய பத்தியின் பேசுபொருள் ஆகிறது. இங்கு பலம் என்பது எதனைக் குறிக்கிறது? வளங்கள் நிறைந்த சமூகம் என்பதையா? அனைத…
-
- 3 replies
- 1.1k views
-
-
மாயக்கல்லி மலை: விடாப்பிடி முகம்மது தம்பி மரைக்கார் / நீண்ட மௌனத்தின் பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது, மாயக்கல்லி மலை விவகாரம். இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று, புத்தர் சிலையொன்றை அடாத்தாக வைத்ததிலிருந்து தொடங்கிய சர்ச்சை, இப்போது இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை முன்னிறுத்தி, அங்கு விகாரை ஒன்றை அமைப்பதற்காக, ஓர் ஏக்கர் காணி வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர் டி.டி.அநுர தர்மதாஸ உறுதியளித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளத…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழனா? இந்தியனா? "தமிழன் மட்டும்தான் ஏமாளியாக இந்தியா, இந்தியா என்று வாய்கிழியப் பேசி ஏமாந்து போகிறான். வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவனும் அவனது மாநிலப்பற்றோடு மட்டும் தான் இருக்கிறான்.'' என்றார் ஒரு தமிழ்த்தேசியவாதி. "இங்கு மட்டும்தான் தமிழன் தமிழன் என்று மாநிலப் பற்றோடு இருப்பதாக அல்லவா பலர் பேசுகிறார்கள்" என்றேன். "கன்னடரைப் பாருங்கள், நீர்ப் பிரச்சனை வந்தால் எல்லா கட்சிக்காரனும் ஒரே குரலில்தான் பேசுவான். கேரளத்தைப் பாருங்கள் எந்த பிரச்சனையென்றாலும் எல்லா கட்சிக்காரனும் ஒரே குரலில்தான் பேசுவான். மராட்டியனைப் பாருங்கள் அவனும் அப்படியே" என்றார். "அதனால் அவர்களுக்கு தேசப்பற்று இல்லை. இந்தியா என்றால் ஒன்றுபடமாட்டார்கள் என்று எப்படிச் சொல்கிறீர…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=3] [size=4]உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்க[/size] [size=4]ளே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது. …
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரசார ஆயுதமாகும் போர்க்குற்ற விசாரணை கே. சஞ்சயன் / 2019 பெப்ரவரி 15 வெள்ளிக்கிழமை, மு.ப. 01:07 Comments - 0 ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கில் நீதி கோரும் மக்களின் போராட்டங்கள், தீவிரம் பெறத் தொடங்கி விட்டன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் போராட்டங்கள்; காணிகளைப் பறிகொடுத்து நிற்கிறவர்களின் போராட்டங்கள்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள்; இறுதிக்கட்டப் போரின் போது, நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நீதியை வழங்கக் கோரும் போராட்டங்கள், போன்றவை நடக்கின்றன. இத்தகைய போராட்டங்கள், போர் முடிவுக்கு வந்த பின்னர், சுமார் 10 ஆண்டுகளாகத் தொடர்ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
தலைமைக்கு இதுதான் தகுதியோ? கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 28 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:04 முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, “நான் அப்படிக் கூறினேனா” என்று கேட்பது, “அவ்வாறு கூறவேயில்லை” என்று தலையில் அடித்து சத்தியம் செய்வது போன்றன, அரசியல்வாதிகளுக்குப் புதிதான விடயமல்ல. இது அரசியல்வாதிகளின் பொதுமையான குணவியல்பாக மாறியிருக்கிறது. மிகச்சமீபத்தில், இந்தக் குணவியல்புகளை, அப்பட்டமாகவே வெளிக்காட்டியிருப்பவர்கள் இருவர். ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; இன்னொருவர் மஹிந்த ராஜபக்ஷ. இரண்டு பேருமே, ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்புக்கும் அதையடுத்த 51 நாள்கள் நீடித்த குழப்பங்களுக்கும் காரணமானவர்கள். இதனால் தான், இரண்டு பேரினதும் செல்வாக்கு, கடுமையாகச் சரிந…
-
- 0 replies
- 1.1k views
-
-
மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை? - நிலாந்தன் தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது. தேசிய அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டும் அரசியற் செய்முறைதான். இந்த அடிப்படையில் சிந்தித்தால் கடந்த சில நாட்களாக நடந்து வருபவை நிச்சயமாக தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்ல. தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்ததன் உள்நோக்கம் பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளுவதுதான். வீட்டுச் சின்னத்தைக் கைவிட்டால் பங்காளிக் கட்சிகள் வெல்ல முடியாது என்று தமிழரசு கட்சி நம்புகின்றது. கடந்த பொதுத் தேர்தல் அந்த நம்பிக்கையைத் தோற்கடித்து விட்டது. எனினும் தமிழரசு கட்சி அப்படி நம்புகிறது. எனவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா? Editorial / 2019 ஒக்டோபர் 10 வியாழக்கிழமை, பி.ப. 05:06 -இலட்சுமணன் பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரு காலச்சுழலினுள் இன்றைய தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது. கடந்த கால வரலாறுகளும் அவை கற்றுத்தந்த பாடங்களும் நல்லிணக்கமும் அதற்கான தேவைப்பாடுகளும், தற்காலத்தில் பேசுபொருளாக இருந்த போதும், அதனால் ஏற்பட்டிருந்த விளைவுகள், எமக்குப் பல்வேறு கருத்தியல்களை, பதிவுகளை பாடமாகத் தந்…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதித் தேர்தல்! - காலங்கள் மாறும், காட்சிகள் மாறும்! முத்துக்குமார் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வழங்கத் தொடங்கிவிட்டன. மாரிப் பருவநிலைபோல இரு தரப்பினதும் செல்வாக்குத் தளங்களும் நாள் தோறும் ஏறி இறங்குகின்றது. மைத்திரிபால சிறிசேனா களமிறக்கப்பட்டதும் மகிந்தர் ஆடிப்போய்விட்டார். எதிரி தனது கோட்டைக்குள் இருந்து வந்திருக்கிறார் என்பதுதான் அவர் ஆடிப்போனமைக்குக் காரணம். எனினும் சிறிய சேதாரங்களுடன் வியூகங்களை வகுத்து நிலைமைகளை ஒருவாறு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளார் போல தெரிகின்றது. பலர் எதிர்த்தரப்பிற்கு மாறுவர் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இவரது கட்டுப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் கீழ்வரும் காணொளியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு உருவான நிகழ்வும், அதன் நோக்கமும் சிறிதளவில் விளக்கப்பட்டுள்ளது..! 2:20 நேரக்கணக்கில் இருந்து பாருங்கள்..! http://www.youtube.com/watch?v=gvqE0AMndCc இன்றைய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அதன் ஆரம்ப நோக்கங்களை விட்டுக் கொடுத்திருந்தாலும் பாதக நோக்கங்கள் எதையாவது காவி நிற்கிறதா என்கிற கேள்வி எழாமல் இல்லை. குறிப்பாக, புலிகள் உருவாக்கித்தந்த இந்த அமைப்பின் முதுகில் இன்று இந்திய அரசு சவாரி செய்வது ஓரளவு ஊகிக்கக்கூடியது.. இது பற்றி உங்கள் கருத்துக்களைப் பதிந்தால் நன்றாக இருக்கும்.. தேசியத் தலைவருடன் அன்று காட்சி தந்த சம்பந்தன் அவர்கள் புலி அடையாளத்தை படிப்படியாகத் துறந்து வருகிறார் …
-
- 2 replies
- 1.1k views
-
-
கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும் 06/12/2018 இனியொரு... விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதிய…
-
- 3 replies
- 1.1k views
-
-
கூடவே இருந்து குழி பறிக்க ஆள் தேவை? அண்மையில் வடக்கு மாகாண அரசியல் அரங்கில் அநாவசியமான, அநாகரிமான, அசிங்கமான விடயம் நடந்தேறியுள்ளது. கொடிய போரால் அனைத்தும் இழந்த தமிழ் மக்கள், ‘குடிக்கும் கஞ்சிக்கு உப்பு இல்லையே’ என்று நாளாந்தம் கதறுகின்றார்கள். ஆனால், அவர்களைப் பிரதிநிதித்துவம் ( ? ) செய்யும் அரசியல்வாதிகள் ‘கொண்டைக்கு பூ இல்லையே’ என்று அடம் பிடிக்கின்றனர் என்பது போல, களநிலைவரம் உள்ளது. தற்போதைய வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல் விவகாரமும் அதற்கான தீர்ப்பும் பின்னர் அதன் வழி வந்த போராட்டங்களும் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, முப்படையினரின் காணி அபகரிப்பு, முன்னாள் போராளிகளின் பிரச்சினைகள், முழுமை அடையாத …
-
- 2 replies
- 1.1k views
-
-
போர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா! தோற்றுப்போன சீனா? Report us Suresh Tharma 7 hours ago இலங்கையில் தற்போதைய நிலை குறித்த இந்தப் பதிவிற்குள் உறைந்திருக்கின்ற பல உண்மைகள் காலம் கடந்துமே வெளிவர முடியாதவை. அந்தளவிற்கு இப்போது நடைபெற்ற அரசியல் களேபரங்கள் சர்வதேச அரசியலுடன் பிற நாடுகளின் நலன்களிற்கான ஒரு முயற்சியாகப் பின்னிப் பிணைந்துள்ளது. சீனாவும் அமெரிக்காவும் தேர்வு செய்துள்ள பல இடங்களில் இலங்கை தற்போது மையமாக மாறியுள்ளதே இதற்கான காரணமாகும். சர்வதேசம் பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்பாக நாங்கள் அனைவரும் ஒரு விடயத்தை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை சீனாவிடம் முற்றுமுழுதாகச் சிக்குண்டுள்ளது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர் – நிலாந்தன் கடந்த பௌர்ணமி தினத்தன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஓர் ஆசிரியர் தனது மகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். தென்மராட்சியில் ராணுவ தளங்களுக்கு முன்னே பௌத்த மதக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. அதைப் பார்த்துவிட்டு மகள் தகப்பனிடம் கேட்டாள் “இந்த ராணுவத்தில் வேறு மதத்தவர்கள் இல்லையா?” என்று. “இருக்கிறார்கள் இப்போது உள்ள தளபதி ஒரு கத்தோலிக்கர் தான்” என்று அவர் கூறினார். “அப்படி என்றால் ஏனைய மதத்தவர்களின் புனித நாட்களின் போது அவர்களுடைய கொடிகளையும் சின்னங்களையும் முகாம்களின் முன் கட்டுவார்களா?” என்று மகள் கேட்டாள் “ இல்லை அப்படி நான் பார்த்ததில்லை” என்று தகப்…
-
- 14 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
மைத்திரியின் பேயாட்டம் - தடுமாறும் மக்கள் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 05 புதன்கிழமை, பி.ப. 12:30 Comments - 0 ராஜபக்ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக் கேலிக்குள்ளாக்கிவிட்டு, சர்வாதிகாரத்தின் வேர்களைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார். இலங்கை அரசியல் மோசமான தலைவர்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. நாட்டில் இன ரீதியான மோதல்களைக் கட்டமைத்துக் கொண்டு, வாக்கு அரசியலில் வெற்றிபெற்று, நாட்டைப் படுகுழிக்குள் தள்ளிய தலைவர்கள் ஏராளம். ஆனால், நாட்டின் முதற்குடிமகனாக சர்வ அதிகாரங்களோடு இருக்கும் ஒருவர், மைத்திரி அளவு…
-
- 0 replies
- 1.1k views
-
-
30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்தும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் நாட்டில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இழப்புகளைக் கொடுத்த 30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா என்று பார்த்தால் அது விடை கிடைக்காத ஒரு கேள்வியாகவே இருக்கும். காரணம் கடந்த 10 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களின் பிரச்சினைகளும் இன்னும் பிரச்சினைகளாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. அரசியல் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம், …
-
- 10 replies
- 1.1k views
-
-
ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது? நிலாந்தன் வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் “ பண்ணப் பார்க்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலான மக்கள் எழுச்சிகளின்போது ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் கெட்ட நாட்களாகக் காணப்பட்டன. இந்த அரசியல் எண்கணிதத் தர்க்கத்தின்படி வரும் ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாளாக அமையுமா? அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் தற்காப்ப…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
பூகோள அரசியல் மாற்றங்கள்: இலங்கை எதிர்கொள்ளும் சவால் -ஹரிகரன் ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்பது போல தான், முதன்மையான நாடு என்ற தகைமையைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்பாத இரண்டு நாடுகளும், முட்டி மோதத் தொடங்கியிருக்கின்றன. இந்த மோதலின் விளைவுகள் இலங்கை போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போர், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்சினைகள் என்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹிட்லர்- II Sri Lankan Defence Ministry Secretary Gotabaya Rajapaksa (C) rides in a jeep with three forces commanders during a Victory Day parade rehearsal in Colombo on May 17, 2013. சில தென்னிந்தியச் சினிமாப் படங்கள்தான் சிங்கம் I, சிங்கம் II என்ற விதத்தில் தொடர்ச்சியாக வௌிவந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அஸ்கிரிய பீட அனுநாயக்கர் வெந்தறுவ உபாலி தேரர், ஹிட்லர் II என்றதொரு பாத்திரத்தை இலங்கை அரசியலில் உருவாக்க முயல்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. கோத்தபா…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதுடெல்லி: மத்திய அமைச்சரவையிடம் தெரிவிக்காமலேயே இலங்கைக்கு இந்திய படைகளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அனுப்பி வைத்ததாகவும், தொடக்கத்திலிருந்தே இலங்கை தமிழர் பிரச்னை தவறாக கையாளப்பட்டு, இறுதியில் முற்றிலும் தோல்வியில் முடிந்ததாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் மற்றொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்திரா - சோனியா குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், 'ஒரு வாழ்க்கை போதாது: ஒரு சுயசரிதை' ( 'One Life is Not Enough: An Autobiography') என்ற தலைப்பில் என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் தனது அரசியல் வாழ்க்கையில் தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து அவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தில…
-
- 6 replies
- 1.1k views
-