அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
தமிழ் மக்கள்... 21ஆவது திருத்தத்தில், தொங்கிக் கொண்டிருக்கலாமா? -நிலாந்தன்!- மிருகக்காட்சி சாலைகளில் உள்ள மிருகங்களுக்கு உணவு கொடுக்க முடியாத அளவுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி மோசமாகி வருகிறது. மிருகங்களுக்கு உணவு வழங்க முடியாத ஓர் அரசாங்கம் மனிதர்களை எப்படி பாதுகாக்கப் போகின்றது ? தொடரும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக கொழும்பு ‘லேடி ரிட்ஜ்வே’ சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.அண்மை நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும், அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறி…
-
- 1 reply
- 308 views
- 1 follower
-
-
வெற்றிக்கு வித்திடும் பௌத்த மேலாதிக்கம் இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் மூன்று முக்கிய விடயங்களில் சுற்றிச் சுழல்கின்றது. இராணுவ நலன்களை முதன்மைப்படுத்திய தேசிய பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, சிறுபான்மை இன மக்களின் தேவைகள், கோரிக்கைகள் புறக்கணிப்பு என்ற மூன்று விடயங்களுக்கான பரப்புரைகள் தீவிரமாக முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் என்பது மிக முக்கியமானது. நாட்டின் அதிஉயர் அரச தலைவர் ஜனாதிபதியை நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நேரடி வாக்களிப்பு மூலம் தெரிவு செய்வது. இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற ஒருவர் கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் தேசிய அளவில் பொதுவானவராக…
-
- 1 reply
- 855 views
-
-
-
அமெரிக்கப் பேச்சு- யாழ் திண்ணைச் சந்திப்பு- புவிசார் அரசியல் போட்டியைப் பயன்படுத்தத் தவறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமெரிக்க- இந்திய அரசுகளை நோக்கிக் கேள்வி எழுப்பத் தயங்கியதன் பின்னணி இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் செயற்திட்டங்களில் அமெரிக்க- இந்திய அரசுகள் எவ்வாறு ஈடுபடுகின்றன. இந்த வல்லாதிக்க நாடுகளுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு எவ்வாறான நிபந்தனைகளை விதிக்கின்றது என்பது பற்றியெல்லாம் எமது கூர்மை செய்தி இணையத்தளத்தில் பல செய்திக் கட்டுரைகளும் விளக்கக் கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி அரசாங்கத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு ராஜபக்ச அரசாங்கம் பத…
-
- 1 reply
- 412 views
-
-
விக்கினேஸ்வரனை ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும் ‘வீடு’! யதீந்திரா தமிழரசு கட்சி பெருமெடுப்பில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. ஒரு வகையான அமைதியாக காண்பித்துவருகிறது. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருகோணமலையில் இதுவரை பெரியளவில் எந்தவொரு பிரச்சாரங்களும் இடம்பெறவில்லை. அன்மையில் திருகோணமலையிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு சம்பந்தன் சென்றிருந்தார் எனினும் அங்கு சம்பந்தனுக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. மக்கள் கேள்விகளுடன் வருகின்றனர். இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. தமிழரசு கட்சியின் அமைதி தொடர்பில் இரண்டு வகையான பார்வைகள் உண்டு. மக்கள் என்னதான் பேசினாலும் இறுதியில் பழக்கப்பட்டுப்போன வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிப்பர். எனவே எதி…
-
- 1 reply
- 505 views
-
-
போதையால் தள்ளாடும் தமிழ் இளைஞர் சமூகம் புருஜோத்தமன் தங்கமயில் வடக்கில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பாவனை, கணிசமாக அதிகரித்திருப்பதாக வைத்தியத்துறையினரும் பாடசாலை சமூகத்தினரும் தெரிவிக்கின்றனர். இதனால், சமூகக் குற்றங்களும் இளவயதினரின் தொடர் மரணங்களும் பதிவாகி வருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும், போதைப்பொருள் பாவனையால் பத்துக்கும் அதிகமான இளவயதினர் நோய்வாய்ப்பட்டும் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, நூற்றுக்கணக்கானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளிலும், போதை விடுவிப்பு நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான நாள்கள், வடக்கு - கிழக்கில் போதைப…
-
- 1 reply
- 454 views
-
-
நவம்பர் -02 உள்ளிட்ட போராட்டங்கள் எதற்காக? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan வரலாறு காணாத மக்கள் எழுச்சியை இலங்கை சந்தித்து, அதன் வாயிலாக, 2019 நவம்பரில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, வெறும் இரண்டரை ஆண்டு பதவிக்காலத்துக்குள் பதவி விலகியமை, பெரும் வரலாற்று நிகழ்வு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இந்த மக்கள் எழுச்சிக்கான காரணம், இலங்கை சந்தித்து நின்ற வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்களால் தம் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை உருவானதுமாகும். எரிபொருள் பற்றாக்குறை; அதன் விளைவாக மின்சாரத் தடைகள் எனபன, இலங்கையை ஸ்தம்பிக்கச் செய்திருந்தன. எதிர்காலம் பற்றிய அச்சம் ஒருபுறமும் நிகழ…
-
- 1 reply
- 333 views
-
-
கடன் பொறியிலிருந்து விடுபடுவதற்காக உலகின் பொருளாதார சக்திகளிடம் சரணடைய முடியாது - ஜனாதிபதி By VISHNU 02 FEB, 2023 | 01:03 PM (எம்.மனோசித்ரா) பொருளாதார யுத்தத்தை எதிர்கொண்டுள்ள நாம் கடன் பொறியிலிருந்து விடுபட வேண்டும். அதற்காக உலகின் பொருளாதார சக்திகளிடம் சரணடைய முடியாது. நாட்டின் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியல் சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என்று நம்புகின்றேன். இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில…
-
- 1 reply
- 432 views
- 1 follower
-
-
"திண்ணைக் காற்று" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] "திண்ணைக் காற்று புயலாய் வீசுது கண்ணைத் திறந்து மின்னலாய் ஒளிருது மண்ணைக் காப்பாற்ற இடியாய் முழங்குது ஒன்றாய் இணைய எனோ மறுக்குது?" "தேர்தல் வருகுது மனத்தைக் குழப்புது தேசம் இருந்தும் பிரிந்து நிற்குது தேய்வு இல்லா ஒற்றுமை இல்லாமல் தேசியம் பற்றி மேடையில் கத்துது?" "ஆவதும் உன்னாலே அழிவதும் உன்னாலே ஆற அமர்ந்து ஆழமாய் சிந்திக்காயோ ஆக்கம் கொண்ட கொள்கை வகுத்து ஆசை துறந்து அர்ப்பணிப்பு செய்யாயோ?" "உறவை மறவாதே உண்மையைத் துறக்காதே உலகம் உனதாகும் உள்ளம் திறந்தால் உடம்பு ஆற திண்ணையில் இருப்பவனே உயிரோடடம் உள்ள கருத்துக்களை பகிராய…
-
- 1 reply
- 276 views
-
-
சேனல் நான்கின் அறம் - யமுனா ராஜேந்திரன் சேனல் நான்கு அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளிடம் அதற்காக சேனல் நான்கு நிதிபெறுவதாகவும், அதிலிருந்தே இத்தகைய ஆவணப்படங்கள் எடுப்பதாகவும் 'மார்க்சீயர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்' எனத் தம்மைக் கோரிக் கொள்பவர்கள் கூச்சநாச்சமின்றி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். சானல் நான்கு ஒரு பொதுநிறுவனம். அது அரசிடமிருந்து எந்த விதமான நிதியும் பெறுவது இல்லை. 2007 ஆம் ஆண்டு அது கடுமையான நிதி நெருக்கடியில் வீழ்ந்தபோது, அன்றைய பிரித்தானிய சட்டத்தின்படி, அரசு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் லைசென்ஸ் கட்டணத்தில் இருந்து அதனது மீட்புக்காக ஒரு தொகை வழங்கியது. பிற்பாடாக, பிரித்…
-
- 1 reply
- 795 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்-கொய்தாவின் தற்போதைய தலைவராக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளால் கூறப்படும் அய்மான் அல் ஜவாகிரி இணையதளத்தில் அவிழ்த்து விட்ட வீடியோ காட்சி இந்திய தீபகற்பத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா ஆகிய இந்திய தீபகற்ப நாடுகளில் அல்-கொய்தா இயக்கத்தை வளப்படுத்துவதற்காக இந்தியாவை மையமாக கொண்டு காயிதத்-அல்-ஜிஹாத் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் இந்த அமைப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஆசிம் உமர் தலைமை வகிப்பார் என்றும் அந்த வீடியோ காட்சியில் அய்மான் அல் ஜவாகிரி பேசுவதாக தயார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவால் கிளப்பி விடப்பட்ட இந்த அல்-கொய்தா சினிமாவிற்கு திரைக்கதை எழுதியது யார், இயக்கியது யார் என்பது…
-
- 1 reply
- 604 views
-
-
அரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு - பி.கே.பாலச்சந்திரன் - இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உத்தேச நீதிச் செயன்முறையில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதை தடுக்கும் ஏற்பாடு எதுவும் நாட்டின் அரசியலமைப்பில் இல்லை என்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் செய்த வாதம் அரசாங்கத்தை தடுமாற்றத்திற்குள்ளாக்கக் கூடியதாகும். அத்துடன் அவரை எதிர்க்கின்ற தமிழ் அரசியல்வாதிகளையும் அது ஓரங்கட்டும் வாய்ப்பு இருக்கின்றது. இலங்கை நீதிமன்றங்களுக்கு…
-
- 1 reply
- 782 views
-
-
தமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ Johnsan Bastiampillai / 2020 ஜூன் 20 இது தேர்தல்க் காலம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், எவ்வாறு வாக்குகளை வாரி அள்ளிக் கொள்ளலாம் என்பதிலேயே, கவனம் செலுத்துவார். தேர்தல் அரசியலில், அதுதான் முக்கியமானதும் கூட! கட்சியொன்றிலோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்யும் முகமாகப் புள்ளடி இடும், வாக்காளர் ஒருவர், அந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது, அறிந்தவர், தெரிந்தவர், ஊரவர் என்ற முட்டாள்தனமான காரணங்களைத் தவிர்த்து, 'எனதும் எனது சமூகத்தினதும் வாழ்க்கையைச் செழிக்கச் செய்வார்' என்ற எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு வாக்காளனும் ஏதோவோர் எதிர்பார்ப்பின் நிமித்தம், தான் சிந்தி…
-
- 1 reply
- 567 views
-
-
நந்திக் கடலோரம் .. ஒரு மீள்பயணம் - முல்லை சபா காலம் திரைகளை நிறம் மாற்றி விரிப்பதுண்டு. வரலாற்றிற்தான் எத்தனை விசித்திரங்கள்? கோடையிற் காய்ந்து மாரியிற் துளிர்க்கிற நந்திக்கடலில் இப்பொழுது மயான அமைதி. தன்னுடைய சனங்களை இழந்து போனேன் என்ற துயரத்தில் உறைந்து போன அமைதியா அது? அங்கே கடலில் விளையாடும் கறுத்த, மெலிந்து ஒடுங்கிய சிறுவர்கள் இல்லை. மாரியில் வலை படுக்கின்ற, கோடையில் கரப்புக் குத்துகிற அல்லது தூண்டில் போடுகிற மீனவர்களும் இல்லை. சீசனுக்கு வரும் கடற்பறவைகள் கூட இன்னும் வரவில்லை. உக்கிப் போன அல்லது உறைந்து போன கடந்த காலத்தின் எச்சங்களாகக் கரையோரங்களில் சிதைந்த சிறிய படகுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதைந்து கிடக்கின்றன. சாம்பல…
-
- 1 reply
- 977 views
-
-
சாதாரண தமிழ் மக்களுடன் பேசுகின்ற போது அவர்களில் பலர் சஜித் பிரேமதாச பற்றி பேசுவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இப்படித்தான் முன்னர் மைத்திரிபால பற்றி பேசியிருந்தனர். இறுதியில் ஏமாந்து போயினர். ஆனால் இம்முறை பொதுவாகவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியி;ல் அக்கறையற்ற தன்மையே காணப்படுகின்றது. அதற்கு அனேக காரணமுண்டு. அதனை பின்னர் பார்ப்போம். ஆனால் கூட்டமைப்பை வழிநடத்தும் சம்பந்தன்- சுமந்திரன் தரப்போ, சஜித்தை சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் சஜித் கூட்டமைப்பிலிருந்து சற்று எட்ட நிற்பதாகவே தெரிகிறது. இதுவரை அவர் கூட்டமைப்புடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. அதே போன்று கூட்;டமைப்பும் அவருடன் எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையிலும்…
-
- 1 reply
- 697 views
-
-
தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் : அப்போது நிலவிய உலகச் சூழல் தான். அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் நான்கு பயணிகள் விமானங்கள் உலக வரலாற்றை மாற்றிவிட்டன. அல்-குவெய்தா தீவிரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை அதிரடியாகக் கைப்பற்றி அதே விமானங்களைத் தாமே ஓட்டிச் சென்று விமானங்களைத் தாக்குதல் கருவியாகப் பயன்படுத்திப் பேரழிவை ஏற்படுத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயோர்க் நகரின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான இரட்டைக் கோபுரத்தில் மோதி 3000 வரையானோரைக் காவு கொண்டது. இன்னொரு விமானம் அமெரிக்க பாதுகாப்பு படையினரின் தலைமையகம் பென்ரகன் மீது…
-
- 1 reply
- 883 views
-
-
கொள்கை நோக்கும் விட்டுக்கொடுப்பும் கூட்டுச்சேர்வும் வெற்றிக்கான அடிப்படைகள் தத்தர் 'நெருப்பில் பூத்த மலர்கள் வெய்யிலில் வாடுவதில்லை'. ஈழத்தமிழர் நெருப்பில் பூத்த மலர்கள். அவர்களின் தியாகங்கள் அளப்பெரியவை. இழப்புக்கள் மிகப்பெரியவை. அவர்களின் துயரங்கள் மிகப்பெரியவை. வலியும் வேதனையும் அப்படியே அளப்பெரியவை. கனவிலும் நனவிலும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்திருப்பவர்கள். உறங்காத கண்களும் ஆறாத மனமுமாய் துயர்தோய்ந்த வாழ்க்கைச் சங்கிலியில் தொங்கிக்கொண்டிருப்பவர்கள். ஈழத்தமிழர் அரசற்ற தேசிய இன மக்கள் மட்டுமல்ல அவர்களுக்காகக் குரல்கொடுக்க உலகில் எந்தவொரு அரசும் இல்லாத மக்களும்கூட. சர்வதேச உறவென்று ஒன்று அரசியல் அகராதியில் சொல்லப்படுகின்றதே ஆயினும், நடைமுறையில் சர்வ அரசுகளு…
-
- 1 reply
- 447 views
-
-
பாலஸ்தீன சுதந்திரநாடு உருவாகுமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) இன்று ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில் பலவித சாதனைகளை ஐ.நா. அமைப்பும் அதன் முகவர் நிலையங்களும் நிகழ்த்தியுள்ளன என்பதை பொது வெளியில் மறைக்கவோ மறுக்கவோ முடியாது என்பது யதார்த்தமானது. இரண்டு உலக யுத்தங்களை எதிர்கொண்டு மானிட இனம் அனுபவித்த இன்னல்களால் மீண்டும் ஒரு உலகயுத்தம் ஏற்படக் கூடாதென்ற அடிப்படையில் ஐ.நா. சபை தாபிக்கப்பட்டது. பிரதான நோக்கமாக சமாதானமும் பாதுகாப்புமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. எனினும் மூன்றாம் உலகமகா யுத்தம் உருவாகவில்ல…
-
- 1 reply
- 788 views
-
-
மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்? மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்ற- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்து பல்வேறு விதமாகவும் வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகிறது. மஹிந்தவுடன் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளது போலவும், செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கோ, அவருடன் இணைந்து ஆட்சியில் பங்கெடு ப்பதற்கோ சம்பந்தன் விரும்புவார் என்று தோன்றவில…
-
- 1 reply
- 516 views
-
-
காத்திருந்து, காத்திருந்து கடைசியில் இலங்கையின் போர்குற்ற ஐ. நா. மூவர் குழு அறிக்கை முழுதாய் வெளியாகிவிட்டது. ஏதோ புதுப்பட Trailer போல் Isaland பத்திரிக்கை அறிக்கையின் ஓர் பகுதியை கொஞ்சமாய் வெளியிட்டது. இப்போ முழுதாய் பக்கம், பக்கமாய் உயிரை பதறவைக்கிறது. எங்குமே, Bloggers தொடக்கம் சர்வதேச ஊடகங்கள் வரை அலசப்படுகிறது. இந்த அலசல் எல்லாம் துண்டு, துண்டாய் அறிக்கை வெளியானபோதே முடிந்துவிட்டது. ஆனாலும், பயங்கரவாதத்தை வன்மையாக, மிதமாக கண்டிப்பவர்கள் எல்லோருமே ('Counterinsurgency Writers') அல்லது எனது மொழியில் நடுநிலமையாளர்கள் என்று கொள்ளலாமா தெரியவில்லை, அவர்கள் அரசும் புலிகளும் போர்க்குற்றங்கள் செய்ததாக அறிக்கையின் துணை கொண்டு பக்கம், பக்கமாய் விளக்கியுள்ளார்கள். இந்த …
-
- 1 reply
- 1k views
-
-
*********
-
- 1 reply
- 1.8k views
-
-
மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன் உப்புக்குத் தட்டுப்பாடு. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. இத்தனைக்கும் இலங்கை ஒரு தீவு. சுத்திவர உப்புக்கடல். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரச்சாரத்திற்கு அள்ளிக் கொட்டுவதற்கு தாராளமாக நிதி இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரமாண்டமான கூட்டங்களை சிறீதரன் ஒருவரைத் தவிர தேசிய மக்கள் சக்திதான் ஒழுங்குபடுத்துகின்றது. கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்கள் தமது இருப்பை காட்சிப்படுத்தும் விதத்தில் தமிழ்க் கட்சிகளிடம் இல்லாத ஓர் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பூட்டிக் கிடக்கும் ஒரு கடை அல்லது ஒரு மண்டபம் அல்லது ஒரு முழிப்பான இடம் போன்றவற்றில் கவிழ்த்து விடப்பட்ட பானா வடியில…
-
- 1 reply
- 436 views
-
-
மக்களுக்கும் தலைமைக்குமான இடைவெளி அதிகமாகிறதா? பதில் தருகிறார்... சரவணபவன் பா.உ
-
- 1 reply
- 530 views
-
-
300ரூபாய் சம்பளத்தில் ஜெராக்ஸ் கடையில வேலைசெஞ்சேன் | Thol.Thirumavalavan | Parveen Sulthana| வன்னியர் சமூகத் தம்பிகள்தான் மாலை கட்டினாங்க - Thirumavalavan | Parveen Sultana | Part 02 திமுக, அதிமுகவை பொம்மைகள் போல கையில்வச்சு அரசியல் செஞ்சவர் ராமதாஸ் | Parveen Sultana | Part 03 நன்றி - யூரூப் பழைய திரியொன்றிலே குறுவெட்டொட்டு ருவிற்றர் பகிர்வுகளை வைத்து உரையாடுவதைவிட இந்தப் பேட்டியை முழுமையாகப் பார்த்தால் திருதொல்மாவளவன் இருவேறுகாலகட்டத் தமிழர் தாயக மற்றும் சிறிலங்காப் பயணங்கள் தொடர்பாண கருத்துகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
-
- 1 reply
- 482 views
-
-
இலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும் 1941 ஆம் வருடம் ஒற்றைக் காற்றாடி பொருத்தப்பட்ட சிறிய விமானத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறார் அந்தப் புகழ்மிக்க எழுத்தாளர். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல பத்திரிகையாளரும் இந்திய சுதந்திரப் போராட்டவீரரும் கூட. வரலாற்றை நன்கறிந்தவர் என்ற வகையிலும் இலங்கையின் கள யதார்த்தத்தை புரிந்துகொண்டவர் என்ற முறையிலும் அவர் பின்வரும் கருத்தை தெரிவிக்கிறார். இந்தியாவில் (அன்றைய பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியா) முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு வழங்கப்படுமோ அதே தீர்வுக்கு இலங்கைத் தமிழர்களும் உரியவர்கள் என்றார். அவர் வேறுயாருமல்ல இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜியின் வலது கரம் என்று புகழப்பட்டவரும் இன்றுவரை தமிழர்களால் நேசிக்கப்படும்…
-
- 1 reply
- 904 views
-