அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
ஜெனீவா தீர்மானம் ஏற்கப்படாத நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா சொல்லப்போவது என்ன? 1983 ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் அண்டு முள்ளிவாய்க்கால் அவலம் வரை எத்தனை கண்டனங்கள் அழுத்தங்கள். அத்தனையும் சலித்துப்போய்விட்டன. பொதுநலவாய நாடுகளின் மாநாடு இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறும்போது இனப்பிரச்சினைத் தீவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் இந்தியாவும் கூறுகின்றது. ஏன் பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்காத அமெரிக்காவும் எதிர்பார்க்கின்றது. ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த கண்டனங்கள் அழுத்தங்கள் போன்றவற்றை 1983ஆம் ஆண்டில் இருந்து காண்கின்றனர். 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடைபெற்றபோது எத்தனை கண்டனங்கள் எழுந்தன. ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் கூட இலங்கை நிலைமை விவாதிக்க…
-
- 1 reply
- 842 views
-
-
சீனாவின் கடன் பொறியில் சிதைந்த ‘கொழும்பு’ புருஜோத்தமன் தங்கமயில் கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம், கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான, கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி, புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர், கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது, துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் ஊடாக, சீனாவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றது. நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு பற்றியெல்லாம், தென் இலங்கையில் கடந்த காலங்களில் பேசிக் கொண்டிருந்த தரப்புகள் எல்லாமும், துறைமுக நகர் விடயத்தில் கிட்டத்தட்ட பேச…
-
- 0 replies
- 842 views
-
-
தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும் எம். காசிநாதன் / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:48 Comments - 0 கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம். இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது அந்தக் களம். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே, கூட்டணி அமைக்கும் பலமுள்ள கட்சிகள் என்பது, மீண்டுமொருமுறை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையிலும் பறை சாற்றப்பட்டுள்ளது. இருபெரும் தலைவர்களும் இல்லாத சூழ்ந…
-
- 0 replies
- 842 views
-
-
உஷார் பகவதி’ என்று ஒரு திரைப்படம் 15 வருடங்களுக்கு முன்னர் வெளியானது. நடிகர் விஜய்தான் திரைப்படத்தின் கதாநாயகன். அந்தப் படத்தில் இரண்டு பாத்திரமேற்று வடிவேலு நடித்திருக்கிறார். நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத திரைப்படம். வடிவேலுவின் பிரபல வசனமான, ‘வந்துட்டான்யா... வந்துட்டான்’, அந்தத் திரைப்படத்தில்தான் உள்ளது. அத்திரைப்படத்தில், விஜய்யின் பெயர் பகவதி. அதனால், இரண்டு வடிவேலுகளில் ஒருவர், தனது பெயரை ‘சின்ன பகவதி’ என்று வைத்துக்கொண்டு காட்டும் அலப்பறைகள் படுசுவாரசியமானவை. ‘சின்ன பகவதி’ வடிவேலு, மற்றைய வடிவேலுவைச் சந்திக்க வரும்போது, நிலம் அதிரும்; பாத்திரங்களில் அசைவற்றிருக்கும் நீர் தளம்பத் தொடங்கும்; புழுதி கிளம்பும்; இதன்போத…
-
- 1 reply
- 842 views
-
-
இலங்கையில் இஸ்லாமியவாத தீவிரவாதம்: எங்கே செல்லும் இந்தப் பாதை? பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் Getty Images கோப்புப்படம் (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டமை உள்ளூர் ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாரிய எதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இத்தாக்குதலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது, தாக்குதலின் பிரமாண்டமும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுமே அன்றி தாக்குதல்கள் அல்ல. இதுவரை வந்துள்ள தகவல்களின் அடிப்படையில், தாக்குதலாளிகள் அனைவரும் இலங்கையின் இரண்டா…
-
- 0 replies
- 842 views
-
-
மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன் July 28, 2024 ஜனாதிபதித் தோ்தலுக்கான அறிவித்தலை தோ்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட உடனடியாகவே முதல் ஆளாக ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றாா். கட்சி சாா்பின்றி சுயாதீன வேட்பாளராகவே அவா் போட்டியிடுகின்றாா். இதன் மூலமாக ரணில் வெளிப்படுத்திய செய்திகள் முக்கியமானவை! பொது ஜன பெரமுனவின் சாா்பில் களமிறங்கினால் மட்டுமே அவருக்கு ஆதரவளிக்க முடியும் என ராஜபக்ஷக்கள் அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், அதனையிட்டு தான் கவலைப்படப்போவதில்லை என்பதை இதன் மூலம் ரணில் தெளிவாக உணா்த்தியிருக்கின்றாா். ரணிலின் இந்த நகா்வு மொட்டு அணிக்குத்தான் அதிகளவுக்கு அதிா்ச்சியைக் …
-
- 4 replies
- 842 views
-
-
பி.கே.பாலச்சந்திரன் சீனாவின் ஹொங்கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்களை மூளவைத்த சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது.ஆனால், மார்ச் மாதத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன ;அவற்றின் தீவிரம் அதிகரித்து பரவலாக வன்முறைகளும் இடம்பெறகின்றன.அதனால் கிழக்காசியாவின் பொருளாதார இயக்கமையம் என்று வர்ணிக்கப்படும் அந்த பிராந்தியம் முடங்கிப்போய்க்கிடக்கிறது. சீனாவில் இருந்து தப்பியோடிவரும் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதற்கு வசதியான ஒரு ' புகலிடமாக ' ஹொங்கொங் மாறுவதற்கு காரணமாக இருக்கும் சட்ட ஓட்டைகளை மூடுவதை நோக்கமாகக் கொண்டதே சீன நாடுகடத்தல் சட்டமூலம்.ஆனால், அதேவேளை சீனாவின் கொள்கைகளை எதிர்க்கும் ஹொங…
-
- 2 replies
- 842 views
-
-
மகாவம்சம் பீடித்த மாந்தர் திசராணி குணசேகரா ஆங்கிலத்திலிருந்து தமிழில்: மணி வேலுப்பிள்ளை “ஒரு குழுமத்தின் மீதான காழ்ப்பு, இன்னொரு குழுமத்தின் மீதான காழ்ப்புக்கு வழிவகுக்கக்கூடும்.” அமார்த்தியா சென் (The Argumentative Indian) இலங்கையில் கட்டுக் கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அருவமானது; ஆபத்தானது. இலங்கை அரசியலில் இந்த மர்மக்கதையுலகு தீர்க்கமான பங்குவகித்து வருகிறது. ஓர் இந்திய ஆரிய இளவரசி ஒரு சிங்கத்துடன் கூடிவாழ்கையில் உதித்த இனத்தைச் சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மாணவர்களுக்கு புகட்டப்பட்டு வருகிறது. கதை படிக்கும் வேளையில் அல்ல, வரலாறு படிக்கும் வேளையிலேயே இந்தக் கதையை அவர்கள் படிக்கிறார்கள். இந்தச் சிங்கக் கதை ஒரு மகாவம்சக் கதை. பெரும்…
-
- 0 replies
- 841 views
-
-
ஜெனீவா வருடாந்த திருவிழா உங்க, ஜெனீவால வருசா, வருசம் ஒரு கொடி ஏத்தி, திருவிழா நடக்கிறதெல்லே... உந்த முறை, இந்தியன் மேளம் அடிக்க மாட்டினம் எண்டு, காசோடை, டெல்லிக்கு ஆள் போயிருக்கு. இவங்களை தப்ப விட்டால், ஒரு வருசத்திக்கிடையில, சீனாவோட சன்னதம் கொண்டாடுவாங்கள் எண்டு டெல்லி வாலாக்கள் நினைத்தாலும், போனவர், கொடுக்கிற இடத்திலை, கொடுக்க வேண்டியதை கொடுத்தால் நடக்க வேண்டியது, நடக்கும் என்று, சிரிச்சுக் கொண்டு அலுவல் பார்க்கிறாராம். நம்மடை பொறுக்கி, சுப்புரமணிய சுவாமி தான், முதலிலை ஆவெண்டவர் போலை கிடக்குது. ராஜபக்சேக்களை நம்பலாம். ஆக்கள் தங்கப்பவுன் எண்டு கொண்டு நிக்குதாம் மனிசன். ஜெனீவாவிலை, எல்லா உதவிகளையும் செய்யோணும். மகிந்தா எண்ட மச்சான் எண்டு நிக்கிறாராம். அவைய…
-
- 1 reply
- 841 views
-
-
மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன் [ புதன்கிழமை, 23 ஒக்ரோபர் 2013, 00:37 GMT ] [ நித்தியபாரதி ] வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், கடந்த 11ம் நாள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை. வடக்கு மாகாண சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் எனது சகோதர சகோதரிகளே! இங்கு கூடியிருக்கும் எங்களில் பலர் முன்னர் வேட்பாளர்களாக சந்தித்திருந்தோம். தற்போது நாங்கள் அனைவரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் என்ற வகையில் இங்கு கூடியிருக்கிறோம். தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள்…
-
- 4 replies
- 841 views
-
-
-
- 7 replies
- 841 views
- 1 follower
-
-
அப்துல் கலாமிற்கு எனி 3 நாளைக்கு சோறு தண்ணி கொடுக்காதீங்கப்பா. இந்தியாவின் புகழ் பூத்த அணு குண்டு விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமிற்கு எனி 3 நாட்கள் சாப்பாடு (சோறு தண்ணி) கொடுத்திட்டு.. 3 நாட்கள் கொடுக்காமல் விட வேணும். 1 நாள்.. சமையல்காரர்களுக்கு.. சமையலுக்கு விடுதலை..! அப்போது தான் தெரியும்... கடல் வளத்தில் ஜீவனோபாயம் செய்யும் மக்களின் பசியும் வலியும். கலாம் அவர்கள் மன்னார் வளைகுடாவில் மீனவர் பிரச்சனைக்கு முன் வைத்துள்ள 3 நாள் ஈழப் பக்க மீனவர் மீன் பிடி.. 3 நாள் தமிழக பக்க மீனவர் மீன் பிடி.. 1 நாள் இரு பகுதிக்கும் மீன் பிடியில் இருந்து விடுதலை என்பது பற்றி இதனையே சொல்ல முடிகிறது. தமிழக தமிழ் சொந்தங்களுக்கும்.. ஈழத்தமிழ் சொந்த…
-
- 1 reply
- 840 views
-
-
வெடுக்குநாறி மலையை இனி விடமாட்டார்கள்!
-
- 2 replies
- 840 views
- 1 follower
-
-
காய் நகர்த்தும் ரணில் - சஜித்: வேட்பாளராகப் போவது யார்..? ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடு பிடித்துக்கொண்டிருக்கின்ற நிலை யில் கட்சிகளின் வேட்பாளர்களும் ஒவ்வொருவராக வெளிவந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் வேட்பாளர்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றனர். தற்போது அரசியல் களப்போக்கை பார்க்கும்போது இருமுனைப்போட்டி மும்முனைப்போட்டி அல்லது நான்கு முனைப்போட்டியாகக் கூட தேர்தல் வந்துவிடுமோ என்று தோன்றும் அளவிற்கு அரசியல் காய் நகர்த்தல்கள் மற்றும் களநிலைமைகள் முன்னேற்றமடைந்து வருகின்றன. தற்போதுவரை இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரம…
-
- 0 replies
- 840 views
-
-
அதிகாரப் பரவலாக்கல்: 35 வருடங்களில் எத்தனை குழுக்கள்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 06 புதன்கிழமை, மு.ப. 02:34 Comments - 0 பழைய முக்கிய இரண்டு விடயங்கள், மீண்டும் களத்துக்கு வந்துள்ளன. ஒன்று நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்தல்; மற்றையது அதிகாரப் பரவலாக்கல். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளமையால் அந்த விடயம், மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சித் தலைவர்களுடன் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகக் கலந்துரையாடி, அந்த விடயம் தொடர்பாக, மேலும் ஆராயக் குழுவொன்றை நியமித்துள்ளதை அடுத்து, அந்த விடயமும் மீண்டும் முக்கியத்த…
-
- 0 replies
- 840 views
-
-
சொல்ஹெய்மின் மீள்வருகை: தமிழ்த் தரப்புக்கான பொறி புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அடிக்கடி கொழும்பு வந்து இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்திச் செல்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசிய கூட்டமைபின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்களை, கடந்த சில நாள்களுக்கு முன்னரும் சந்தித்துச் சென்றிருக்கின்றார். இந்தச் சந்திப்புகள் அனைத்திலும், அண்மையில் நடைபெற்ற சர்வகட்சித் தலைவர்கள் மாநாட்டில் உரையாடப்பட்ட, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்கள் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னராக, இனப்பிரச்…
-
- 1 reply
- 840 views
-
-
-
- 1 reply
- 840 views
-
-
வெடுக்குநாறி மலையும் தையிட்டி விகாரையும்! நிலாந்தன்! வெடுக்குநாறி மலையில் மீண்டும் பூசைகள் தொடங்கியுள்ளன.இது நீதிமன்றத்தில் சுமந்திரனுக்கு கிடைத்த வெற்றியாக அவருடைய ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகின்றது.அதேசமயம் அவருடைய அரசியலை விமர்சிப்பவர்கள் அதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்கின்றார்கள். “ஒரு வழக்கில் எதிரி தரப்பு ஆட்சேபனை இல்லை என்றால் அந்த வழக்கில் வழக்காளி தரப்பு தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெறுவது சட்டத்தரணியின் திறமையினால் அல்ல.வெடுக்குநாறி மலையில் தொல்பொருள் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்காதபோது அதற்காக ஆணையைப் பெற்றதை சிலர் வெற்றியாக காட்ட முனைகின்றார்கள். அந்த திணைக்களத்திற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அது சரி, திருக்கேதீஸ்வரத்தில் கத்தோலிக்கர…
-
- 0 replies
- 839 views
-
-
கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் தமிழீழ விடுதலைப் புலிகள், தனிநாடு கோரிப் போராடவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (கஜன்கள் அணி) செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம், கடந்த வாரம் சர்ச்சையானது. அதுபோல, அதேவாரத்தில் வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்திருந்த முன்னணி, இந்திய தூதரக அதிகாரியின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த ஒத்திவைப்புப் பிரேரணையைக் கைவிட்டது. இது, வடக்கு மீனவர் அமைப்புகளால் நம்பிக்கைத் துரோகமாக விமர்சிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நெருக்கடியான காலப்பகுதியில், (குறிப்பாக, 2010 பொத…
-
- 4 replies
- 839 views
-
-
பொசுங்கிய புரட்சிக் கனவு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், நான்காவது நாள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவினால் முடித்து வைக்கப்பட்டமை பலருக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. சிலருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. சமூக ஊடகங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் பலரும் வெளியிடுகின்ற கருத்துக்களில், இருந்து ஏமாற்றத்தின் தாக்கத்தை உணர முடிகிறது. மேலும், பலரது மனோநிலையை, ஆழ்மன விருப்பங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட போராட் டம், அரசாங்கத்தினால் நிறுத்தப்…
-
- 0 replies
- 839 views
-
-
மாகாணசபை தேர்தல் வெற்றியால் இனமான மகிழ்வின் உச்சத்தில் இருந்த மக்களை சடுதியாக தரையில் இறக்கி உள்ளனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். ஒன்றுபட்டு திரண்டெழுந்து அல்லது திரண்டெழும் வகையில் திட்டமிட்டு செயலாற்றி, மக்களிடமிருந்து மகத்தான ஆதரவினை பெற்ற பின் ஒன்றுபட்ட அந்த மக்கள் திரளினை அப்படியே கை விட்டு விட்டு ஏற்கனவே தங்களுக்கென நிர்ணயிக்கப்பட பாதையில் பிரிந்து செல்லத்தொடங்கி உள்ளனர் எனலாம். ஒரே பாதையில் பேரணியாக வந்து அந்த பாதை பிரியும் இடத்தில், பதவிகளை கையகப்படுத்தியவர்கள் இரு பாதைகளாலும் பிரிந்து செல்லத்தொடங்க அவர்களால் அழைத்துவரப்பட்ட மக்கள் சந்தியில் நின்றுகொண்டு மீண்டும் தங்களுக்குள் முரண்படத் தொடங்கியுள்ளனர். இத்தகைய செயற்பாடுகள் தமிழர் அரசியல் மேடைகளில…
-
- 1 reply
- 839 views
-
-
மைத்திரியின் அளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும் Nillanthan18/11/2018 அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதுஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராகநியமிக்கப்பட்ட மாணவர் சற்று வெட்க குணமும் பெண் சுபாவமும் கொண்டவராகஇருந்தார். அத்தோடு அவர் அவரது சில குறிப்பிட்ட நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலத்தில் கதைப்பவராகவும் இருந்தார்.இந்த நடவடிக்கைகள்அப்பாவை கோபத்திற்கு ஆளாக்கியது.உடனே வகுப்பாசிரியரிடம் சென்று உதவிமாணவத்தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறு அடம்பிடித்திருக்கிறார்.இதனால்இரண்டு நாட்கள் பாடசாலைக்கும் செல்லவில்லையாம்.அப்பாவின் முகம்சாதாரண நிலையிலும் கோபக்காரரைப்போலவே இருந்ததால்வகுப்புத்தலைவருக்கு அவரே பொருத்தம் என கருதிய…
-
- 0 replies
- 839 views
-
-
Courtesy: Nada. Jathu இரட்டை இலைச் சின்னப் பிரச்சினையில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இழுபறிபட்டு நீதிமன்றத்தினை நாடி கட்சியின் செயல்வலுலை சீர்குலைத்த ஒரு நிலையையே இன்றைய தமிழரசுக்கட்சியும் அடைந்திருக்கின்றது. இருசம்பவங்களினதும் பின்னணிகள் மற்றும் அணுகுமுறைகள் வேறு வேறு விதமாக இருந்தாலும் இரு சம்பவங்களாலும் கட்சிக்கு விளையும் விடயம் ஒன்றாகத்தான் இருக்கும். சுமந்திரனது அரசியல் பிரவேசமானது தேர்தல் வியாபாரத்தில் ஈடுபடாத புத்திசாலிகளை உள்வாங்க என அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு கதவான தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற வாழ்க்கைக்குள் நுழைக்கப்படுகின்றார். தமிழ் தேசிய அரசியல் அவர் ஒரு புத்திசாலியாக நிபுணத்துவ மேற்சட்டையுடன் அடைய…
-
- 0 replies
- 838 views
-
-
கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் – மட்டு.நகரான் 92 Views தமிழர்களின் ஜனநாயக ரீதியான போராட்டம் இன்று சர்வதேச ரீதியான அங்கீகாரத்தினைப் பெற்றுவருகின்றது. ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது தமிழ் மக்களுக்கு சாதகம், பாதகம் என்பதைவிட சர்வதேச ரீதியில் தமிழர்களின் ஜனநாயக ரீதியான கோரிக்கைகளுக்கு வலுவான ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வடகிழக்கு இணைந்த தாயகத்தின் கோட்பாட்டை தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து பலமான முறையில் வெளிப்படுத்தி வந்ததன் விளைவே, இன்று சர்வதேசம் தமிழ் மக்களுக்கான சமிக்ஞையை காட்டியுள்ளது. ஆனால் வடகிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றும…
-
- 5 replies
- 838 views
-
-
காணாமல்போன கடவுள்: ஈழப் போராட்டத்தில் கூடப் பிறந்த நாஸ்திகம் ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், மக்கள் மத்தியில் நாஸ்திக சிந்தனையும் துளிர் விட்டது. ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் மத்தியில் கணிசமான அளவு நாஸ்திகர்கள் இருந்தனர். உலகப் புகழ் பெற்ற நாஸ்திக அறிவுஜீவியான டாக்டர் கோவூர் இலங்கையில் வாழ்ந்து வந்தார். எழுபதுகளிலேயே, கடவுள் இல்லையென்பதை, பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக விளக்கி வந்தார். அவரது நடவடிக்கைகள், அறிவியல் செயல்கள், பரபரப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வெளியாகும். அவற்றை வாசிக்கும், அல்லது வாசித்தவரிடம் கேட்டறியும் சாதாரண கூலித் தொழிலாளிகள் கூட, " கடவுள் இருக்கிறாரா, இல்லையா?" என்று தமக்குள்ளே வாதிட்டுக் கொள்வார்கள். ஏழைப் பாட்டாளி மக்…
-
- 1 reply
- 838 views
-