அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன? July 9, 2023 — கருணாகரன் — வடமாகாணத்தில் மாணவர் வரவின்மையினால் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என்று கடந்த வாரம் (24.06.2023) தெரிவித்திருக்கிறார் வடமாகாண ஆளுநர் பீ.எஸ். எம். சார்ள்ஸ். இதைப் போல கிழக்கு மாகாணத்திலும் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், பிறப்பு வீதம் குறைவாக இருப்பது ஒன்று. இன்னொரு காரணம், கிராமங்களை விட்டு மக்கள் நகரங்களை நோக்கிச் செல்வதாகும். இப்படி ஆட்கள் குறைந்த பிரதேசங்களாக யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதி, வடமராட்சி கிழக்கு முதல், கிளிநொச்சியில் பூநகரி, அக்கராயன், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருக்கும் தொலைதூரக் கிராமப்புறங்களைக் குறிப்பிடலாம்.…
-
- 32 replies
- 2.7k views
- 1 follower
-
-
(திரு.எம்.சி.எம் இக்பால் ஆங்கிலத்தில் எழுதி இணையத்தில் 2009 ஜூலையில் பிரசுரமான கட்டுரையின் தமிழாக்கம் ) 1. அறிமுகம். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் போருக்குக் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் அரசியல் சிக்கலுக்கு ஒரு தீர்வு தரப்படும் என்ற தனது வாக்குறுதியை அரசு நிறைவேறற்றும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அண்மையில் ஜனாதிபதி இந்து செய்தி நாள் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவ்வாறான தீர்வு அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான் முன்வைக்கப்படும் என்ற கூற்று எதிர்பார்த்து இருந்தவர்களை ஏமாற்றிவிட்டது. இந்தக் கூற்றை அடுத்த கையோடு எனுமாப்போல் விரைவில் ஒரு தீர்வை முன்வைக்க ஜனாதிபதிக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக இலங்கையின் இந்தியத…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஹுயூமன் றைற்ஸ் வோச் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது. சில நாட்களின் முன்பு விடுதலைப் புலிகளைப் பற்றி சில பல புரளிகளைக் கிளப்பியிருந்தது. யார் இதன் மூல கர்த்தாக்கள் என்பது மூடு மந்திரமாக இருந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவில் சோவியத் யூனியனுக்கெதிரான பனிப்போரில் அவதூறுகளைக் கிளப்புவதற்காக முதன்முதலில் ஆரம்பித்து பின்னர் முந்நாள் கம்யூனிசநாடுகளின் அரசுகளை ஆட்டங்காண வைத்து ஸ்வாகா செய்வதற்கு பேருதவி செய்த ஒரு தனியார் அமைப்பு இன்று பரிமாண மாற்றங்களைக் கண்டு ஹியூமன் றைற்ஸ் வோச் என்ற அமைப்பாக புரளிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றது. ஐ.நா போன்ற பொது ஸ்தாபனங்களின் எந்த தொட்ர்பும் இல்லாது தனியார் ஸ்தாபனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது கிளப்பும் புரளிக்கெல்லாம் ஆதாரம் இருக்க…
-
- 10 replies
- 2.6k views
-
-
மாவிலாறு மற்றும் வட களமுனைச் சண்டைகளில் விடுதலைப் புலிகளில் 50 சதவீதமானோர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் விட்டனர். எஞ்சியிருப்பவர்களும் சிறுவர்களே. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இன்னமும் சொற்பகாலமே தேவையான தாகும் என்பது சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் மதிப்பீடாகும். இந்த வகையில் பார்க்கையில் இன்னமும் சொற்பகாலத்திற்கு யுத்தத்தைத் தொடர்ந்தால் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வை எட்டிவிடலாம் என்பது அவரின் கூற்றின் மறைமுகப் பொருளாகும். சிறிலங்கா ஆட்சியாளரும் இதில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளதன் காரணமாகவே யுத்த நிறுத்த உடன்பாட்டை ஓரம்தள்ளிவிட்டு இராணுவத்தீர்வில் முனைப்பை வெளிப்படுத்தி வருகின்றார். ஆனால் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல…
-
- 11 replies
- 2.6k views
-
-
''ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. தலைவர், தன் பிள்ளைகளைக் களமுனையில் நிறுத்தினார். தளபதிகள், தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்கள். ஆனால், இலங்கை ராணுவம் சுற்றி வளைத்தபோது அந்தக் கட்டாய ஆள்சேர்ப்பும்கூட பயன்படவில்லை!'' - ஈரமற்ற குரலில் உருக்கமாகப் பேசுகிறார் தமிழ்க் கவி. இவரின் 'ஊழிக்காலம்’ நாவல், ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் துயரங்களை 'கண் முன் சாட்சி’யாகப் பதிவுசெய்திருக்கிறது. இவர், விடுதலைப் புலிகளின் மூத்த பெண் போராளி. ஈழ…
-
- 4 replies
- 2.6k views
-
-
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன் உலகில் எங்கெல்லாம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் புதிய உற்சாகம் ஆரம்பித்துவிடும். மாற்றத்திற்கான கனவுகளுடன் சாரிசாரியாகத் தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்படும் ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஏமாற்றப்படுவர்கள். இத் தேர்தல் ஜனநாயகத்திற்குள் தங்களை நுளைத்துக்கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரின் பின்னாலும் பிழைப்புவாத நோக்கங்களைத் தவிர வேறு எதுவும் காணப்பட்டதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் ஆழமானவை. 2005 ஆம் ஆண்டு மிகச் சிறிய தொகையான வாக்குப் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்ற போது இலங்கையின் ‘மன்னனாக’ மகிந்த உருவெடுப்பார் என …
-
- 0 replies
- 2.6k views
-
-
வடக்கில் வசந்தம் வீசுகிறதென்றால் வழியில் எதற்கு தடை போட வேண்டும்..? இந்த ஆண்டு கொமன் வெல்த்தின் கதாநாயகன் யார் என்று கேட்டால் அது சனல் 4 நிருபர் கெலும் மக்ரேதான் என்று துணிந்து கூறலாம். அப்படிக் கூறுவதற்கான அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன, 2009 வன்னிப்போரில் சிறீலங்கா எவ்வளவு மடைத்தனமான தவறுகளைப் புரிந்து இப்போது கையறு நிலையில் நிற்கிறதோ.. அதைவிட பெரிய தவறை கெலும் மக்ரே விடயத்தில் இழைத்திருக்கிறது. சரியாக நடந்திருந்தால்.. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன் வெல்த் கதாநாயகனாகியிருப்பார்… பாவம் தன்னுடைய வெளிநாட்டு அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சிறீலங்கா அனுப்பி அந்த வாய்ப்பை பறிகொடுத்தார். கெலும் மக்ரே சிறீலங்காவில் இறங்கும்வரை கதாநாகனாக இருந்தவர் கனேடிய பிர…
-
- 18 replies
- 2.6k views
-
-
ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு: தனித்து ஓடும் சம்பந்தன் - சுமந்திரன் கூட்டணி முத்துக்குமார் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துள்ளது. கூட்டமைப்பு மைத்திரி ஆதரவு நிலை எடுத்தமைக்கு மேற்குலகினதும் இந்தியாவினதும் அழுத்தம்தான் பிரதான காரணம். இவை ஆட்சிமாற்றத்தினை விரும்புகின்றன என்பது கடந்த சில வருடங்களாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேற்குலகத்தையும், இந்தியாவையும் பொறுத்தவரை இரண்டு வேலைத்திட்டங்கள் உள்ளன. ஒன்று ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவது, இரண்டாவது தனக்குச் சாதகமான ஆட்சியைப் பாதுகாப்பது. இரண்டிற்கும் முக்கியமான நிபந்தனை தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியடைய விடாமல் …
-
- 3 replies
- 2.6k views
-
-
அடர்ந்து வளர்ந்திருக்கும் வனாந்தரத்திற்கும், வனாந்தரத்திற்கு நடுவே மழை வெள்ளத்தால் நிரம்பிக்கிடக்கும் ஒரு ஒடுங்கிய மண்சாலைக்கும் பின்னால் நாகரீக வேடுவர்களாய் மாற்றப் பட்டிருக்கும் மக்களின் கதை அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வடக்கின் வசந்தம் வீசாமல், அபிவிருத்தியினால் அலங்கரிக்கப்படாமல் அலங்கோலப்பட்டிருக்கும் ஒரு கிராமம் புதிய குடியிருப்பு என்ற மிகப் பின்தங்கிய கிராமம். kilinochchi people 2013கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னர் தோன்றிய, இன்றுவரை அடிப்படை வசதிகள் கூட இல்லாத பல கிராமங்களில் இதுவும் ஒன்று. மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் நிலமற்ற மக்களை கொண்டு 2011ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த புதிய குடியிருப்பு கிராமத்தில் இன்று 60ற்கும் மேற்…
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று! ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன! ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன! கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை. இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அ…
-
- 11 replies
- 2.6k views
-
-
மார்க்சியம் என்றால் என்ன? _ தோழர் தியாகு
-
- 0 replies
- 2.6k views
-
-
இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களா? : சபா நாவலன் இலங்கையில் 9 வீதமான சனத்தொகைப் பரம்பலை நிரப்பிக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் 97 வீதமானவர்கள் தமிழ்ப் பேசுபவர்கள். பேரினவாதிகளின் பிரித்தாளும் நோக்கங்களுக்காகவும், பிழைப்புவாத அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காகவும் இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள் அரேபியர்கள் என்ற புனைவு நீண்டகாலமாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது. இதற்கான எந்த அடிப்படையுமற்ற நிலையில், இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களாகவிருந்து மதம் மாறிய தமிழ்ப் பேசும் மக்களே என்ற உண்மை பல்வேறு ஆய்வாளர்களால் நிறுவப்பட்டது. 1885 ஆம் ஆண்டில் சட்டவாக்கப் பேரவையில் சேர்.பொன்.இராமநாதன் ஆற்றிய உரையில் இலங்கையில் தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள், முன்னதாகத் தாழ்த்தப்பட்ட இந்துக்களாகவிருந்து மதம் மாறிய…
-
- 6 replies
- 2.6k views
-
-
-
- 41 replies
- 2.6k views
-
-
இந்த சர்வதேச சமூகம் எண்டால் யார் மச்சான்? கனடாத்தடைக்கு எங்களவர்கள் அங்கே கருத்தாதரவு தேடாததுதான் காரணம் என்கிறார் சிவத்தம்பி. குழந்தைகளை கொன்றதை சர்வதேச சமூகத்தின் மத்தியில் கொண்டுசென்று பரப்புரைக்குமாறு வேண்டுகின்றன புதினம், நிதர்சனம் உள்ளிட்ட வலைத்தளங்கள். சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்கிறார் தமிழ் செல்வன். அதையே தம்பக்கமிருந்து சொல்கிறார் மகிந்த. எங்குபார்த்தாலும், யாரைக்கேட்டாலும், ஒருவார்த்தை மிகவும் பிரபலமாகி இருக்கிறது. அதுதான் "சர்வதேச சமூகம்". சர்வதேச சமூகம் என்றால், உலக நாடுகளில் வாழ்கின்ற மக்களா? அவர்கள் எப்படி எமது பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு தேடித்தருவார்கள்? பெரும்பாலும், நாட்டை ஆள்வது ம…
-
- 8 replies
- 2.6k views
-
-
இறையாண்மை என்பது யாதெனில்...? (பாகம்-1) இறையாண்மை (Sovereignty): இறையாண்மை எனற சொல் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையாது. தேசங்கள் (Nations) உருவான போது உடன் உருவான சொல் அது. இறையாண்மை என்பது தேசங்களுக்குத்தான் உண்டு. 'தேசம்' என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் அன்று. இறையாண்மை என்பது மன்னனுக்கோ அல்லது அரசுக்கோ உரியது அல்ல, அது மக்களிடம் இருக்கிறது. மக்கள்தான் இறையாண்மை உடையவர்கள் என்பது 18-ஆம் நூற்றாண்டில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஐரோப்பாவில் ஐனநாயக அரசுமுறையின் அடிப்படையாக இது ஏற்கப்பட்டது. தேசிய இனங்கள் தேசங்களை உருவாக்கும் என்பதும், அந்த தேச…
-
- 1 reply
- 2.5k views
-
-
உள்ளூராட்சி மன்றங்களின் தோல்விக்கான காரணங்கள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலைத்தொடர்ந்து சபைகளுக்கான மேயர்கள் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்கள் உப நிலைப்பதவியாளர்கள் உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு உள்ளூராட்சிசபைகள் இயங்கு நிலை பெறத்தொடங்கியுள்ளதை பத்திரிகை செய்திகளிலும் அறிக்கைகள் விடுக்கப்படுவதைக்கொண்டும் அறிந்து கொண்டிருக்கிறோம். புதிய பதவிகளை ஏற்றுக்கொண்டவர்கள் ஆர்வத்துடனும்விசுவாசத்துடனும் செயற்படப்போவதாகவும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட சபைகளை உயர்ந்த தரத்துக்கும் வளர்ச்சி நிலைக்கும் ஆளாக்கப்போவதாகவும் ஆர்வத்துடன் அற…
-
- 0 replies
- 2.5k views
-
-
கட்டுப்பாடுகளை மீறுகின்றனரா தமிழ் அகதிகள்.. இலங்கை தமிழர் முகாம் பற்றிய ஆய்வு.... ஈழத்தில் இருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டு 29 ஆண்டுகளை தொடுகின்றது எம்மினம்.. இன்னும் 100 க்கு மேற்பட்ட தமிழக முகாம்களில் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர், 1983, 1990, 2006 என மூன்று பெரிய காலகட்டங்களின் போது இடம் பெயர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாம் ஏன் இங்கு இருக்கின்றோம் என்பதே தெரியாதவர்கள் 25வயதுக்குக்கு உட்பட்ட பலர் சொந்த மண்ணின் வாசனை தெரியாதவர்கள். தமிழகத்தில் அகதியாக வரும் ஈழத் தமிழர்கள் ஈழத்தின் இறுதிக் கட்ட போர் முடிவு வரைக்கும் தாம் தாயகத்துக்கு மீண்டும் செல்வோம் அங்கு சொந்த நிலங்களில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையினை மனதி…
-
- 0 replies
- 2.5k views
-
-
அண்மைக் காலங்களில் நான் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் சிறு பிள்ளை பாலியல் கொடுமைகள். ஜேர்மனியர்கள் தம் மண்ணில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அல்லது பயணித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு சமூகத்தினரால் கொலைகள் செய்யப்படுகின்றார்கள். கொலை செய்யப்படுகின்றவர்கள் எதுவுமறியாத அப்பாவிகள்.எதுவுமறியாத சிறுவர் சிறுமிகள். இப்படியான நடத்தைகளை செய்பவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டிலிருந்து வந்த அகதி தஞ்சம் கோரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாருங்கள் என வரவேற்றவர்களின் நெஞ்சிலே இன்று குத்துகின்றார்கள். ஒரிருவர் இந்த தவறுகளை செய்தால் பரவாயில்லை என்றாலும் ஆயிரமாயிரம் இப்படியான மனநிலை உள்ளவர்கள் ஜேர்மனிய மண்ணில் உலாவுகின்றார்கள் என் இன்ற…
-
-
- 44 replies
- 2.5k views
-
-
புலிகளை (மட்டும்) விமர்சித்து நடுநிலைமையை பேணுவோம் : முல்லைத்தீவில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இலங்கை அரசின் விமானத் தாக்குதலால் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 61 இதனை கண்காணிப்பு குழுவினரும், யுனிசெப் அதிகாரிகளும் சென்று பார்வையிட்டதுள்ளதுடன். கண்காணிப்பு குழுவின் தலைவர் ஹென்றிஹீசன் 61 குழந்தைகள் கொல்லப்பட்டதையும், 123 மேற்பட்ட குழந்தைகள் காயப்பட்டதையும் உறுதிசெய்திருப்பதோடு குறிப்பிட்ட செஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் புலிகளின் ஆயுத முகாம்களோ, எந்தவொரு ஆயுதப் பயிற்சி நிலையங்களோ இல்லை என உறுதிப்படுத்தியுமுள்ளார். ஆனால் அரசாங்க பேச்சாளரான ஹெகலிய ரம்புக்வெல்ல திரும்ப திரும்ப அது புலிகளின் பயிற்சி முகாமெனவும், புலிகளினால் கட்டாயமாக பிடித்து வரப்பட்ட சிறுவர்களு…
-
- 9 replies
- 2.5k views
-
-
பண்டாரநாயக்க: ஆங்கிலேயத்தனத்திலிருந்து சிங்களத்தனம் வரை – என்.சரவணன் July 16, 2020 காலனித்துவ காலத்தில் மதம் மாற்றவர்களை மீண்டும் பழையபடி பௌத்தத்துக்கு வந்து சேர்க்கும் பிரச்சாரத்தையும், இயக்கத்தையும் நடத்தி முடித்தவர் அநகாரிக்க தர்மபால. மீண்டும் பௌத்தத்துக்கு மாறுவது மட்டுமன்றி பழைய கிறிஸ்தவ பெயர்களைக் கலைந்து பௌத்தப் பெயர்களை மீண்டும் சூட்டிக்கொள்ளும் ஒரு வேலைத்திட்டமே முன்னெடுக்கப்பட்டது. அநகாரிக்க தர்மபால கூட தனக்கு சூட்டப்பட்டிருந்த காலனித்துவ அந்நியப் பெயரான டொன் டேவிட் ஹேவாவித்தாரன என்கிற பெயரை தர்மபால என்று மாற்றிக்கொண்டார். மற்றவர்களை மாற்றச்சொல்லி வற்புத்தினார். கிறிஸ்தவ பெயர்களைக் கொண்டிருப்பவர்களை கேலியும் செய்தார். கிறிஸ்தவ பெயர்களை மாற்றிக்கொள்வ…
-
- 24 replies
- 2.5k views
-
-
கடாபி-இராச்சியத்தில் இருந்து பூச்சியம், 24Share கடைசியில் கேணல் கடாபியை சுட்டுக் கொன்று விட்டார்கள்,இரத்தம் தோய்ந்த நிலையில் மேற்சட்டை கூட இல்லாது ஒரு தெரு நாயை இழுத்து வருவது போல ஒரு நாட்டின் 42 வருட ஆட்சியாளரை இழுத்துவரும் காட்சியை முதல் தடவையாக அல் ஜெசீரா தொலைக் காட்சி ஒளி பரப்பிய வேளையில் சரியாக நான் எனது நண்பனின் வீட்டில் இருந்தேன்,தொலைக் காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த எனது நண்பனின் தந்தையால் அக் காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை ஏன் நம்பக் கூட முடியவில்லை,அவரைப் பொறுத்த வரை கேணல் கடாபி ஒரு ஹீரோ,ஒரு ஆதர்சனம் அவரிற்கு மாத்திரமல்ல சுதந்திரம் வேண்டி நின்ற இளமை துடிப்புள்ள,சுய மரியாத…
-
- 4 replies
- 2.5k views
-
-
ஒற்றையாட்சியும் சாணக்கியமும் (தமிழர் தலைமையும்) - என்.கே. அஷோக்பரன் பல தசாப்தங்களாக, நம்பிக்கைத் துரோகத்தையும் தொடர் ஏமாற்றங்களையும் சந்தித்து வந்த ஒரு மக்கள் கூட்டம், நல்லெண்ணத்துடன் எழக்கூடிய முயற்சிகளையும்கூட, ஐயக்கண் கொண்டே நோக்குவதென்பது இயல்பானது; யதார்த்தமானது மாறி மாறி வந்த பெரும்பான்மையின சிங்கள-பௌத்த அரசாங்கத் தரப்புகள், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று சொல்லும் போது, அதிலுள்ள தொழில்நுட்பங்கள், கருத்தியல்கள் அன்றி, நாம் கேட்பதை அரசாங்கம் ஒருபோதும் தரத்தயாராகவில்லை என்ற செய்தியே, தமிழ் மக்களைச் சென்றடைகிறது என்பது, இங்கு கவனித்து நோக்கப்பட வேண்டியது. மறுபுறத்தில், தமிழர் தரப்பு, சமஷ்டி ஆட்சியைக் கோரும் போது, அதிலுள்ள …
-
- 0 replies
- 2.5k views
-
-
இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இலங்கையின் தற்போதைய கவலைக்கிடமான நிலைக்கு சீனாவே காரணம் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை மீறி, இலங்கையில் அதிகரிக்கும் சீனா ஆதிக்கம் தமிழர்களுக்கு ஆபத்தானது என நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இலங்கையை இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தாரைவார்த்தாலும் சீனாவை இலங்கையில் அனுமதிக்கக்கூடாது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு, சீனா குறித்த பல கருத்துகளை நாளும் நாம் கேட்கவும் வாசிக்கவும் கிடைக்கிறது. இங்கு மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவது, நாம் சீனாவை விளங்கி இருக்கிறோமா? …
-
- 17 replies
- 2.5k views
-
-
-
- 12 replies
- 2.5k views
-
-
ரீ.ரீஎன் தொலைக்காட்சியில் வரும் முக்கியமான நிகழ்வுகளை கண்டுகளியுங்கள். www.mms://66.135.40.34/sk www.tamilvision.tv
-
- 11 replies
- 2.5k views
-