நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
இனப்படுகொலைப் பயங்கரங்களுக்குப் பிறகு கதறி அழக்கூட உரிமையற்று இருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மா னிக்க அடித்தளமாக, ஓர் ஆரம் பமாக... முதல் முத்திரை வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்! இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது, ஈழத் தமிழர்கள் ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு. முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், 1,32,255 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார். 36 தொகுதிகளில் 28 தொகுதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற, ஒரு மாகாண சபையில் அதிகளவு தொகுதிகளைப் கைப்பற்றும் கட்சிக்கு, கூடுதலாக இரண்டு தொகுதிகள் எனும் மாகாண சபையின் விதிப்படி, 30 தொகுதிகள் இப்போது தமிழ் தேசியக் …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு நாள் ரணில் என்கின்றனர், மறுநாள் சந்திரிகா என்கின்றனர். இடையே சரத் வரலாம் என, அவரின் கையினை கட்டினார். பின்னர் கரு என்றார்கள். போன் போட்டு வாழ்த்தினார். பின்னர் பிக்கர், தேரர் என்றார்கள். எதிர்க்கட்சி ஒரு வேட்பாளரினை தெரிவு செய்ய முடியாமல் தடுமாறுவதாக நினைத்தார். இடையே மங்கள UNP யினை விட்டு விலகி தன்னுடன் இணையப் போகிறார் என்று பெரும் புளங்காகிதம் அடைந்தார். தான் முகம் தெரியா நிழலுடன் மோதுவதாக தெரிவித்து சந்தோசப் பட்டார். என்னடா இது, இலங்கைக்கு வந்த சோதனை, என்னுடன் போட்டியிட்டு வெல்ல, இந்த தேசத்திலேயே யாருமே இல்லையா என இறுமாந்தார்... இடையே அரசல் புரசலாக மைத்திரி பெயர் வந்த போது, முதல் நாளிரவு, விருந்துக்கு அழைத்து, என்ன பிளான் என்று கேட்க, ஐயா, உங்களுக்கு எதிரா…
-
- 4 replies
- 1.1k views
-
-
நாம் ஒரு சில வருடங்களுக்கு முன் செய்த ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள்.உண்மைக்காகவும், நீதிக்காகவும்.மனித உரிமை மீறல்களைத்தடுப்பதற்காகவுமே செய்யப்பட்டன. ஆனால் இன்று மனித உரிமைமீறலும், கொடியகொடுமைகளும் நிறைவேறியபின் அதை விசாரணை செய்ய, ஐ நாவினால் ஏற்படுத்தப்பட்ட குழுவிற்கெதிராக அவன் செய்கிறான் உண்ணாவிரதமும், ஊர்வலமும். என்ன கொடுமை சார் இது. இனியாவது இந்தக்கொடுமையய்,உலகம் புரிந்துகொள்ள முன்வருமா? முன்வந்தால்??????/ நமக்கு நல்லகால////////
-
- 1 reply
- 1.1k views
-
-
வெளிநாடுகளில் வெளிநாட்டுப்பிரசைகளாகவே நாம் நடந்துமுடிந்த ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலின்பின்னான விழைவுகளால் என்மனதில் எழும் சில வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும்.... அதேநேரம் எமது அடுத்த ஐபோப்பாவில் நடக்கவிருக்கும் அல்லது நாம் பங்குபற்றவிருக்கும் தேர்தல்கள் சம்பந்தமாக நாம் செய்யவேண்டியவை சம்பந்தமாக ஆராய்வதற்கும் அல்லது அது சம்பந்தமான கருத்தாடல் வேண்டும் என்பதற்காகவும்.... இதனை தனி ஆய்வாக இங்கு முன்வைக்கின்றேன் அதேநேரம் எனது கருத்துக்களையும் மன வருத்தங்களையும் எனது எதிர்பார்ப்புக்களையும் முதல் இங்கு வைக்கமுயல்கிறேன் நேரம்கிடைக்கும்போதெல்லாம் எழுதுவேன் எனது கேள்விகள்:- எம்மில் எவ்வளவு பேர் ஐரோப்பிய பிரசாஉரிமை வைத்திருக்கின்ற…
-
- 7 replies
- 1.1k views
-
-
'என் தேசத்து மண்ணே! உனக்கு என் ரத்தத்தை தருவேன். இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...' அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு. கன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கஸ்ரோ வன்னி யுத்த களத்தில் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட ஒரு இளைஞன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் புலிக்கொடியினால் போர்க்கப்பட்ட காட்சி போர்க்குற்ற ஆவணமாக வெளியானது. யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய மேதினக் கூட்டத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் சிங்கக் கொடியை ஏந்திக் காட்டிய பொழுது அதே புலிக்கொடியைத்தான் இராணுவம் ஏந்திக் காட்டியது. வன்னி யுத்த களத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு தமிழ் மக்களின் போராட்டம் அழிக்கப்பட்டதன் வெற்றியை இலங்கை இராணுவத்தினர் சிங்கக் கெடியை உயர்த்திப் பிடித்து அறிவித்தனர். தமிழ் மக்களின் பிணங்களின்மீதும் இரத்ததின்மீது வெற…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகம் அழிவதை தமிழினப்படுகொலை கட்டியம் கூறுகின்றது ஈழத்தமிழர்களை படுகொலை செய்ததற்காக ராஜீவுக்கு கிடைத்தது தண்டனை. ராஜீவைக் கொன்றதற்காக பிரபாவின் புலிப்படைமீது போர்தொடுத்தனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 70,000க்கு மேற்பட்டவர்களும், இன்னும் சிறையில் அடைத்து கொல்லப்படும் தமிழ் மக்களும் விட்ட விடுகின்ற கண்ணீரும், துடிப்பும் இப்படியாகச் சங்கிலியாகச் சென்று இதற்கு உதவியாக இருந்த சர்வதேசங்களின் முரண்பாட்டில் முடியப்போவது நிச்சயம். ஈராக்கில் உள்ள குர்டிஷ் இனத்தை அழிக்க அமெரிக்கன் இரசாயனக்குண்டு வழங்கினான். அந்த இனம் கொடுமையான முறையில் அழிக்கப்பட்டு அதற்கு எவரும் குரல் கொடுக்கவேயில்லை. பின்னர் குண்டு கொடுத்தவனும், வாங்கி அழித்த சதாமும் முரண்பட்டு இப்போ இருவரும் அழிந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரத்தின் புதிய வெளியீடாக வந்திருக்கும் நூலிலிருந்து ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். நூலின் விலை ரூ.20.00. புத்தகக்கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில், (எண்-64-65) இந்நூலைப் பெறலாம்) http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/ vote-012திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி. “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார…
-
- 1 reply
- 1.1k views
-
-
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அரசியல் தீர்வு பேச்சு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில் மக்கள் ஓர் அணியில் நின்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பது நடை பெறப் போகும் பேச்சுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமையுமெனக் கல்விமான்கள் கூறுகின்றார்கள். சனிக்கிழமை 8 ஆம் திகதி நடைபெற இருக்கும் கிழக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளபடியால், அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஓர் அணியின் கீழ் ஒன்று திரண்டு, அரசியல் அடிமைகளாக்கப் பட்டுள்ள எமது இனத்தின் விடுதலைக்காக உழைக்க முன்வர வேண்டும். இந்த நேரத்தில் கடந்த 64 வருடங்களாகத் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை, கொலைகளை, பாலியல் வல்ல…
-
- 0 replies
- 1.1k views
-
-
2008, 2009 ஈழமண்ணில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற உருக்கமான பதிவான உச்சிதனை முகர்ந்தால் என்ற படத்தை எவ்வாறேனும் முடக்கிவிடுவதென்ற முயற்சிகள் தமிழகத்தில் தொடர்கின்றன. இந்த முயற்சியில் படத்தை வெளியிடுவதாக ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கும் பங்கு இருக்குமோ என்ற ஐயம் இருக்கின்றது. திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதிலும், ஊடகங்களில் அதை விளம்பரப்படுத்துவதிலும் படத்தின் விநியோகத்தினரான ஜெமினி நிறுவனம் செய்த குழறுபடிகள் முதற்சுற்று வெற்றியை கடுமையாக பாதித்திருப்பதாகத் தெரிகிறது. பல தொலைக்காட்சிகள் விளம்பரத்தை ஒளிபரப்ப மறுத்துவிட்டதாகவும், பல திரையரங்குகள் படத்தை திரையிட மறுத்து விட்டதாகவும் ஜெமினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
வினவண்ணாவுக்கு அட்வான்ஸ் மன்னிப்புக் கடிதம்! தினமலரின் காசுவெறி - காமவெறி! - வினவு http://www.vinavu.com/2012/08/24/dinamalar-sucks/ <கேரளாவைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை செகாநாத் என்று தினமலர் குறிப்பிடுகிறது. மற்ற பத்திரிகைகள் சகானாஸ், சகானா என்றும் அழைக்கின்றன.> அப்படி என்றால் தினமலர் தவிர மற்ற பத்திரிகைகள்தாம் அந்தப்பெண்ணை மதரீதியாக அடையாளம் காட்டுவதில் முனைப்பாய் இருக்கின்றன என்றல்லவா பொருள்படுகிறது. இப்படி சேம்சைட் கோல் போடுவதற்கே மார்க்ஸ் எங்கல்ஸ் மாவோ என்று எவ்வளவு படிக்கவேண்டி இருக்கிறது. புரட்சிகர வாழ்க்கை நடத்துவதுதான் எத்துனை சிரமமானது? <மற்ற பத்திரிகைகள் காதல் வலையில் இளைஞர்களை வீழ்த்திய கேரள அழகி என்பதாக முடித்துக் கொள்…
-
- 0 replies
- 1k views
-
-
http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8582-will-sri-lankan-government-release-kp.html Will Sri Lankan Government Release KP? Wednesday, 21 April 2010 00:00 The Indian Multi Disciplinary Monitoring Agency (MDMA) which is investigating the possible conspiracy behind the assassination of Rajiv Gandhi has recently informed that it has need to investigate KP, the former leader of the Tamil Tiger International chain presently under detention in Sri Lanka Prior to this, India’s RAW (Reasearch and Analysis Wing- intelligence service) came to Sri Lanka and questioned KP. The latter however during the investigation denied having any involvement in the …
-
- 2 replies
- 1k views
-
-
இரண்டு தரம் O/L பெயில்... ஆனால் தேப்பன், commander in chief என்ற வகையில் Navy commender இடம் ஓர்டர் போட, அடிப்படை தகுதியே இல்லாமல் யோசித்த ராஜபக்ச கடற்படையில் கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் சேர்க்கப் பட்டார். ஈன்ற பொழுதில் பெரிது உவர்க்கும், தன், மோனை...லியுடிநென்ட் என பார்த்த தேப்பன் அது மட்டும் இல்லாமல், சேர்ந்த மறு மாதமே, காத்திருந்த தகுதியான பலர் புறக்கணிக்கப் பட்டு, இங்கிலாந்தின் புகழ் மிக்க sandhurst military அகாடமி யிக்கு அனுப்பபட்டார். இலங்கை கடற்படை இவருக்காக 16 கோடி செலவு செய்துள்ளது. அதே வேளை கடற்படையில் இருந்து கொண்டே, கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் அவரது குடும்பம் ஆரம்பித்த தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ளார்…
-
- 4 replies
- 1k views
-
-
பார்த்தீபன் குமரகுருநாதன் என்பவரின் பிழையான கட்டுரைக்கு எனது பதில். அவரது கருத்துக்களை அடைப்புக்குறியுள் இட்டுள்ளேன்.(இஸ்லாமியர்களில் தமிழர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் வடக்கு, கிழக்கு, புத்தளம் போன்ற பகுதிகளில் வாழ்கிறனர்.)முஸ்லிம்களில் பலர் ஏற்கனவே அரபும் தமிழும் கலந்த சோனக பாசை பேசுவோராக வாழ்ந்தனர். இந்தியாவில் இருந்து தமிழர்கள் வடக்கு கிழக்கில் குடியேறியதால் தமிழ் மொழி செல்வாக்கு சூழல் காரணமாக முஸ்லிம்களும் தமிழ் பேச ஆரம்பித்தனர்.(அடுத்ததாக மொரோக்கோ, அரேபிய வழித்தோன்றல் இஸ்லாமியர்கள். கல்வி, வியாபாரம் , அரசியல் என தொன்றுதொட்டு உயர் நிலைகளில் இருப்பவர்கள். )மொரோக்கோ அரேபிய வழித்தோன்றல் முஸ்லிம்கள் இலங்கையில் இல்…
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
"கொழும்பை பற்றிக் கொள்ளும் பரபரப்பு" இலங்கை அரசியலில் கடந்தவாரம் தோன்றிய பரப்பரப்பு அடங்குவதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் செல்லப் போகிறது. கடந்த வருடம் மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், நவம்பர் மாத இறுதியில் இதுபோன்றதொரு பரபரப்புத் தொற்றிக் கொள்வது வழக்கம். புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர்நாள் உரை தான் அந்தப் பரபரப்புக்கான காரணமாக இருப்பதுண்டு. புலிகள் இயக்கம் ஒரு தவிர்க்கப்பட முடியாத சக்தியாக விளங்கிய காலத்தில்இ பிரபாகரனின் மாவீரர் நாள் உரையை அவதானித்து, அதுபற்றி ஆராய்வதற்காக வெளிநாட்டு இராஜதந்திர மட்டங்கள் கூட உன்னிப்பாக இருக்கும். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. அதனால் ஏற்படும் வழக்கமான பரப…
-
- 1 reply
- 1k views
-
-
பதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தமிழ் மக்களின் உாிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிாிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூற தடை விதிப்பது தமிழா்களின் உாிமைகளை மறுதலிக்கும் ஒரு செயற்பாடு என தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன. எனவே ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அக் கட்சிகள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜனநாயாக போராளிகள், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இன்று மாலை நல்லூர் இளங்கலைஞா் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன. இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு …
-
- 2 replies
- 1k views
-
-
-
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர் September 9, 2024 — எழுவான் வேலன் — ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தென்னிலங்கை அரசியல் பெரும் மாற்றங்களையும் திருப்பங்களையும் சந்தித்து வருவதை சாதாரண பத்திரிகை வாசகனால் விளங்கிக் கொள்ள முடியும். பழம் பெரும் அரசியல் கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சியின் சார்பாக வலுவான ஒரு தலைவரை முன்னிறுத்த முடியாதளவுக்கு அரசியல் சூழல் மாற்றமுற்றிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கேற்ப ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்படுகின்றனர். அரசியல் வியூகம் எனும் போது கொள்கை சார்ந்த விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. இந்தக் கொள்கை சார்ந்தே வாக்குறுதிகள் நடைமுறைகள் என்பன அமைகின்றன. பசுத்தோல் போர…
-
-
- 7 replies
- 1k views
-
-
விஸ்வரூபம் எடுத்துள்ளார் நிதீஷ். அவரது வெற்றி பிகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் பிகாரில் நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி? என எல்லா கட்சிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில், இந்த வெற்றியை எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஏற்ற வகையில் பொருத்திப் பார்க்கின்றன. ஆனால் எல்லோருக்குமே படிப்பினையாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ÷நிதீஷ்குமார் தலைமையிலான அரசு செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள்தான் அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என திமுக…
-
- 7 replies
- 1k views
-
-
-
'தமிழீழ மக்களின் அழிவுக்குச் சம்பந்தப்பட்ட மேற்குலகமே காரணம்!' -சபேசன் (அவுஸ்திரேலியா)- அண்மைக்காலமாகச் சில மேற்குலக நாடுகள், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டு, நிதி உதவிகளையும் வழங்க ஆரம்பித்துள்ளன. அவுஸ்திரேலிய அரசு, இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் சுயசேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்காக 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இதேபோல் பிரித்தானிய அரசும், இடம் பெயர்ந்து வாழுகின்ற மக்களுக்கு உதவும் பொருட்டு, ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸை வழங்க உள்ளது. வழமைபோல், இந்த நாடுகள் இலங்கைத்தீவில் அதிகரித்து வருகின்ற வன்முறைகள், மனித உரிமை மீறல…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
தமிழகத்தில் பித்துக்குளி அரசியல்! அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு, அதில் ஒவ்வொன்றாக செய்ய வேண்டிய செயல்களை வரிசைப் படுத்தி அதனை எல்லாக் கட்சிகளும் தொடர்ந்து பின்பற்றி, வலியுறுத்தி, நடத்திக் காட்ட வேண்டியதுதான் இன்றைக்குத் தேவை. இவ்வளவு நாள் திடீர்-ஞானாம்பிகை செய்த அடாவடியால் ஈழ விதயங்களைப் பேசுவதற்கே அஞ்சிக் கிடந்த தமிழகம் - தற்போதைய மெல்லிய மாற்றத்தால் குறைந்த பக்கம் பேசத் தொடங்கியிருக்கிறது. தேவைக்கேற்றபடி திருப்பிக்கொள்ள ஏதுவாகத்தான் அம்மையார் அளந்து விட்டிருக்கிறார் அறிக்கை. அதனை அரசியல் நோக்கர்கள் உணராமல் இல்லை. ஆயினும் வலமா போனாலும் சரி இடமா போனாலும் சரி கடிக்காமல் போனால் போதும் என்ற நிலையிலேயே தமிழகம்இருக்கிறது. தி.மு.க ஆட்சியிலே "தமிழகத்தில் இருந…
-
- 2 replies
- 1k views
-
-
அப்துல் கலாம் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மற்றும் கூடன்குள மக்கள் கூறுகின்றனர். முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை சோனியா அரசு மிக தந்திரமாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. இதே சோனியா காந்தி அரசு அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது சோனியா காங்கிரஸ் கும்பல், இந்திரா காந்தியின் வீட்டில் சமையல் பணி புரிந்த பிரதீபா பாட்டில் என்ற அம்மையாரை ஜனாதிபதி பதவியில் ஏற்றி அழகு பார்த்தது. சமையல் பணி புரிந்தவர் என்ற குறையாகப் பார்ப்பதன்று விசயம். இந்திய மக்களிடம் மிகப் பெரும் அறிவாளி என்றும் விஞ்ஞானி என்றும் அறியப்பட்ட அப்துல…
-
- 4 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-