Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் ஆர். அபிலாஷ் எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை அவர் தன் இலக்காகவும் வைக்கலாம். ஒரு கட்சியின் இலக்கு என்கிற விதத்தில் தப்பில்லை. ஆனால் இந்த மேற்பூச்சுகளை சுரண்டி எடுத்து விட்டால் சீமானிடம் ஒன்றுமில்லை என்பதே பிரச்சனை. இந்த புரட்சிகர கருத்துக்களும் சீமானுடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்பதே பிரச்சனை. அவர் கல்வி, வேலை வாய்ப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு வைக்கும் மாற்றுகள் பற்றி பே…

  2. விஷயம்: தமிழ் வரி வடிவத்தை (script. அதாவது ‘அ, ஆ, இ, ஈ’) தூற எறிந்துவிட்டு ஆங்கில வரி வடிவத்தையே (அதாவது a, b, c,d) தமிழ் எழுத உபயோப்படுத்தலாமே என வில்லேஜ் விஞ்ஞானி ஜெயமோகன் 'இந்து-தமிழில்’ எழுதியிருக்கிறார். அதில் அவர் செய்த கர்ண கொடூரமான தவறுகள்: 1) வரி வடிவம் எனக் குறிப்பிடுவதற்கு பதில் எழுத்துரு என எழுதியிருக்கிறார். வரி வடிவடிவம் என்பதுதான் script. எழுத்துரு என்றால் font! 2) ஆங்கில எழுத்...துரு (வரி வடிவம்) என்று இல்லாத ஒன்றை குறிப்பிடுகிறார். ஆங்கிலத்திற்கென்று சொந்த வரி வடிவம் கிடையாது. லத்தீன் வரிவடிவம் தான் ஆங்கில வரி வடிவம். என் எதிர்வினை: 1) இந்து தமிழ், ”எதுக்குடா தமிழ்-ஆங்கிலம் என இரண்டு எழுத்துருக்கள் வைத்து இரண்டு தனித்தனி ப்ரஸ் வைத்து நடத்த வேண்ட…

  3. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அடுத்தது முற்றத்தையும் இடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவி. கொளத்தூர் மணி கைது, நெடுமாறன் கைது என்று கைதுகளுக்கும் குறைவில்லை. சர்வாதிகார ஆட்சியின் காட்டுத் தர்பாரை எதிர்க்கத் துணிவற்ற தமிழ்த் தேசியவாதிகளோ… ‘இது மத்திய உளவுத் துறையின் சதி‘ என்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லையாம். ‘‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’ கைதுக்கு முந்தைய நெடுமாறனின் பேட்டியைக் கவனியுங்கள்… ‘‘மத்திய புலனாய்வுத் துறை மூலமாக இதை இடிக்கவும் விழாவை தடுக்கவும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசும் ஏன் எதிராக செயல்படுகிற…

  4. அரசியல் மற்றும் சமூக இடைவெளிகள் தொடரும் வரை வெற்றிகள் கடினம் May 7, 2022 — கருணாகரன் — ராஜபக்ஸக்களின் அரசாங்கத்துக்கு எதிராக தெற்கிலும் மேற்கிலும் நடக்கும் “மக்கள் போராட்டங்கள்” பற்றிய தமிழ்த்தரப்பினரின் அபிப்பிராயம் என்ன? பங்கேற்பு என்ன? இந்தக் கேள்வியின் ஆழம் வரலாற்று ரீதியாகப் பெரியது. ஏனென்றால், என்னதான் வெவ்வேறு அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் இருந்தாலும் இன்றைய காலச் சூழலில் இந்தப் போராட்டங்கள் மிக முக்கியமானவை. அதுவும் பெருந்திரள் தமிழ்ச்சமூகத்தின் நோக்கு நிலையில். ஏனென்றால், பெருந்திரள் தமிழ்ச்சமூகம் ராஜபக்ஸக்களை அதிகாரத்திலிருந்து அகற்ற விரும்புகிறது. போர்க்குற்றம் உட்பட அவர்களுடைய ஆட்சித் தவறுகள் வரையானவற்றுக்க…

    • 1 reply
    • 248 views
  5. சுமந்திரனின் கருத்தும் வியாக்கியானமும் July 28, 2022 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — எதிர்கால அரசை அமைக்கும் உரிமை ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணிக்குக் கிடையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டபய ராஜபக்சே மக்கள் ஆணையை இழந்ததைப் போலவே அவரது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் ஆணையை இழந்துள்ளது. எனவே, நாட்டின் எதிர்கால அரசைஅமைப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்குத் தமது நாடாளுமன்றப் பெரும்பான்மையை உபயோகிக்கும் உரிமை கிடையாது’ (காலைக்கதிர் 15.07.2022 மின்னிதழ் மாலைப் பத…

  6. மக்கள் போராட்டங்களைப் பலவீனப்படுத்த ரணில் கையில் எடுத்துள்ள உபாயங்கள்-அகிலன் August 3, 2022 இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்த ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களில் முன்னணி செயற்பாட்டாளரான ஒருவர், டுபாய் செல்லவதற்காக சிறிலங்கன் விமானத்தில் ஏறிய பின்னர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுப் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்ட காட்சியை நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். விமானத்திலிருந்த பயணிகள் பலர் இந்த சம்பவத்தை தமது கைப்பேசிகளில் பதிவுசெய்து உடனடியாகவே பகிர்ந்திருந்தார்கள். விமானப் பயணிகளிலும் பலர் இந்தக் கைதை எதிர்த்தார்கள். ஆனால், எதனையிட்டும் கவலைப்படாமல் கைதான தனிஸ் அலி என்ற அந்த முன்னணி செயற்பாட்டாளர் விமானத்திலிருந்த…

  7. இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது? MinnambalamFeb 13, 2023 07:00AM ராஜன் குறை இந்துத்துவம் என்பது ஓர் அரசியல் தத்துவம், கோட்பாடு: அது இந்து மதத்தை ஓர் அடையாளமாக எடுத்துக்கொள்கிறதே தவிர, அந்த மதத்தின் வழிபாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மீது அதற்கு ஈடுபாடு ஏதும் கிடையாது என்பது நாம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது. நடைமுறையில் கண்கூடாகக் காண்பது. உதாரணமாக இந்துத்துவ அரசியலைத் தீவிரமாக எதிர்க்கும் திமுக ஆட்சியில் இந்து அறநிலையத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்து கடவுளர்களை வழிபடுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அரசியலை ஏற்பவர்கள் அல்லர். ராம பக்தரான காந்தியையே எதிரியாகக் கருதிக் கொன்றது இந்துத்துவம். இந்த …

  8. யாழ்இணைய செய்தி அலசல் அரச பயங்கரவாதமும் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டமும் அன்று தொட்டு இன்று வரை தமது உரிமைகள் மறுக்கப்பட்டு, அதற்காக ஆயுதங்கள் ஏந்தி போராடிய இயக்கங்கள் பயங்கரவாதம் என்ற பெயர் சூட்டப்பட்டு பயங்கரவாதிகள் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றார்க

  9. இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் நாளாந்தம் உலக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. நாளுக்கு நாள் புலத்தில் தஞ்சம் அடைவதற்காக பயணிப்பவர்களும் கைது செய்யப்படுபவர்களும் என நீண்டு செல்லும் பட்டியலுக்குள் இன்னமும் ஈழத்தமிழர்களின் அவலம் தொடர் கதையாக மாறியிருக்கின்றது. மே 18 இன் பின்னர் இன்றுவரையில் குறைவடையா தொடர் அவலத்தினை தமிழினம் சந்தித்துவருகின்றது என்பதற்கு புலத்தில் தஞ்சம் கோரும் எம்மவர்களின் எண்ணிக்கை எடுத்துக்காட்டுவதாகத் தோற்றங்காட்டினாலும் அதனால் ஏற்பட்டு வருகின்ற பாதக நிலைமை தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டிய தேவை உணரப் பட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு அறிந்தோ அறியாமலோ பங்கெடுத்தவர்கள் நாட்டில் வாழ்வியலை முன்னெடுப்பதில் நெருக்கடிகளை…

  10. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு காரணம் என்ன? மங்களேஸ்வரி சங்கர் நேர்காணல் July 23, 2020 புவிநெசராசா கேதீஸ் “வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வடக்கு வடக்கு மாகாணசபையாகவும் கிழக்கு கிழக்கு மாகாணசபையாகவும் இருப்பதால் பிரச்சனை இல்லை. இரண்டுமே இரண்டு வகையான தேவைகளை கொண்ட மாகாணங்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் மங்களேஸ்வரி சங்கர். கேள்வி ; தமிழ் தேசிய கூட்டமைப்பில் களமிறங்குவீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், திடீரென அந்த நிலைமை மாறி தமிழ் மக்கள் விடுதலை புல…

  11. இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா.? டிசம்பர் 10 – இன்று உலக மனித உரிமைகள் தினம். இந்த நாளைக் குறித்து உலகின் தலைவர்கள் பலரும் இன்று பேசுவார்கள். இந்த நாளைப் பிரகடனப்படுத்திய ஐ.நாவும் இந்த நாளைக் குறித்து இன்று பேசக்கூடும். மனித உரிமை பிரகடனம் பற்றியும் இந்த ஆண்டின் குறிக்கோள் குறித்தும் அவர்கள் எடுத்துரைப்பர். அத்துடன் இலங்கையின் அரச தலைவர்களும் இந்த நாளைப் பற்றி இன்றைக்கு பேசுவார்கள். ஆனால் உலகம் எங்கும் மெய்யாகவே இந்த நாளின் அர்த்தம் பேணப்படுகின்றதா என்பதே பெருத்தவொரு கேள்வியாகும். ஒரு மனிதனின் அடிடைப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனது உரிமைகளுடன் வாழ்வதே அடிப்படை உரிமையாகும். இன்றைய பூகோள சூழலில் மனிதன் தன் மண் கடந்து தேசம் கடந்தும் வாழ்…

  12. லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்! June 22nd, 2013 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார். பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்து, அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது. மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்…

  13. மகிழ்ச்சி பெருமகிழ்ச்சி, பட்ட நம்பிக்கைகள் பசுமையாய் துளிர்க்கிறதில். நாம் நட்ட வீரரின் நடுகல் சிதைவுகள் முன் அஞ்சலியாய் மீண்டும் அஞ்சாது நிமிர்கிறதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பத்திர்கையாளர் மாநாட்டின் சில பகுதிகளை ஒளிப்பரப்பில் பார்த்தேன்.. சம்பந்தர் மிகவும் நிதானமாக பேசினார். விக்னேஸ்வரனின் பேச்சிலும் பொறுப்புணர்வு தொனித்தது. பேட்டி ஆங்கில மொழி பெயர்ப்புடன் தமிழில் நடந்திருக்க வேண்டும். முதல் பேச்சையே கொழும்புத் தமிழரான சுமந்திரன் சிங்களத்தில் வளா வளா என்று பேசி சரணாகதி சாயலை ஏற்படுத்த முணைந்தமை கண்டனத்துக்குரியது. ஆனால் கொழும்பில் வாழ்ந்தபோதும் திரு விக்னேஸ்வரன் விடுதலைக்கான இராசதந்திரத்துடன் ஆனால் உறுதியாக பேசியது நம்பிக்கை தருகிறது. பேட்டிகளில்…

    • 2 replies
    • 617 views
  14. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும் October 26, 2021 — கருணாகரன் — யாழ்ப்பாணத்தின் மருத்துவச் சரித்திரத்தில் இரண்டு பெயர்கள் முக்கியமானவை. ஒன்று Dr.சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr.Samuel Fisk Green); இரண்டாவது Dr.சத்தியமூர்த்தி. 1800இன் பிற்பகுதியில் Dr.கிறீன் யாழ்ப்பாணத்தின் மருத்துவத்துறையில் ஒரு புதிய பாதையைத் திறந்தார். அதுவரையும் தமிழ் வைத்தியம் அல்லது கை வைத்தியம் என்று சொல்லப்படும் மரபுவழியான சித்த மருத்துவமே நடைமுறையிலிருந்தது. Dr.கிறீனுடைய காலகட்டத்திலேயே ஆங்கிலமருத்துவத்துறை யாழ்ப்பாணத்தில் பரவலாக்கமடைந்தது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மருத்துவத்துறையில் பயின்ற Dr.கிறீன் இலங்கைக்கு வந்து…

  15. முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த மஹிந்தவின் வீழ்ச்சி -தனபாலா மஹிந்த இராஜபக்ச தன் நண்பர்களை வீழ்த்தி, தன் எதிரிகளை சிம்மாசனத்தில் ஏற்றினார் என வரலாறு அவரைப் பற்றிய கணிப்பீட்டை பதிவு செய்யத் தவறாது. 2005ஆம் ஆண்டு, மஹிந்த இராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கியவர் மங்கள சமரவீர. சுதந்திரக் கட்சிக்குள் இருந்த பண்டாரநாயக்க அணியைத் தோற்கடித்து, சுதந்திரக் கட்சியினை மஹிந்த இராஜபக்சவின் காலடியில் கொண்டு வந்து விட்டவர் மங்கள சமரவீர. இதுவே அவரது ஜனாதிபதி பதவிக்கான முதல் அடித்தளமாகும். ஆனால் அவர் பதவிக்கு வந்ததும் முதலில் ஏமாற்றப்பட்டவரும், ஏப்பமிடப்பட்டவரும் மங்கள சமரவீர தான். அடுத்து, மஹிந்த இராஜபக்சவுக்கான பிரச்சாரப் பீரங்கிகளாய் செயற்பட்டு அவரை அரச கட்டில் ஏற உதவியது ஜே.வ…

    • 3 replies
    • 948 views
  16. முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம் தேசிய சர்வதேச விவாதங்கள் தொடர்பில். - வ.ஐ.ச.ஜெயபாலன் . இலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும் முஸ்லிம்களின் நண்பனாக முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பாக விவாதித்த அனுபவங்களில் இருந்து சில சொல்ல முன்வருகிறேன். இதனை ஆரோகியமான விவாதமாக்குவதும் பொருட்படுத்தாமல் ஒதுக்குவதும் முஸ்லிம்களின் உரிமை. . சரியத் அடிப்படையிலான முஸ்லிம் விவாக சட்டங்கள் பற்றிய விவாதங்கள் இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகளாவியும் இடம்பெறுகின்றன. சரியத் போன்ற முஸ்லிம் முன்னவர்களின் சட்டங்களை கோட்பாட்டு ரீதியாகவோ அல்லது நடைமுறையிலோ புனித நூலுக்கு இணையாகவோ தொடற்ச்சியாகவோ கருதுகிற பழமை வாதிகளுக்கும் இணையோ தொடற்ச்சியோ இல்லை என்கிற இளைய தலைமுறைக்கும் இடையிலான உள் விவாத…

  17. தமிழர்கள் ஒன்றுபடாத வரை -விமோசனம் கிடைக்காது!! தமி­ழர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டா­தி­ருந்­தால் தனி ஈழம் என்ற சிந்­தனை அவர்­கள் மத்­தி­யில் எழுந்­தி­ருக்­க­மாட்­டா­தென நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன் கூறி­யுள்­ளமை ஆட்­சி­யா­ளர்­க­ளின் கவ­னத்­துக்­கு­ரி­யது. தற்­போ­தும் தமி­ழர்­க­ளுக்­குப் பல வகை­யி­லும் அர­சி­யல் நகர்­வு­க­ளால் அநீ­தி­கள் இழைக்­கப்­பட்ட வண்­ணம்­தான் இருக்­கின்­றன. தமி­ழர்­கள் எதி­லும் முன்­னிலை வகிக்­கக்­கூ­டாது என்­பதை வேத­வாக்­கா­கக் கொண்டு பெரும்­பான்மை இன­வா­தி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். அரச நிர்­வாக சேவை­யில் ஆட்­களை இணைப்­ப­தற்­கான போட்­டிப் பரீட்­சை­யில் தமி­ழர்­கள் அதி­கம் சி…

  18. ஒளி வடிவில்

  19. அமைச்சர் மனோவுடன்- சிறப்புச் செவ்வி!! பதிவேற்றிய காலம்: Feb 3, 2019 கேள்வி: – புதிய அர­ச­மைப்­புக்­கான வரை­வில் ஏக்­கிய ராஜ்­ஜிய/ ஒரு­மித்­த­நாடு என்று மூன்று மொழி­க­ளி­லும் குறிப்­பி­ டப்­பட்­டுள்­ளது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கூறு­கின்­றது. ஆனால் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் அமைச்­சர்­க­ளும், தலைமை அமைச்­ச­ரும் ஏக்­கிய ராஜ்­ஜிய என்­று­தான் மூன்­று­மொ­ழி­க­ளி­லும் இருக்­கும் என்று சொல்­கின்­றார்­கள். உண்மை எது? பதில்: – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­மொ­ழி­வின் அடிப்­ப­டை­யில் மூன்று மொழி­க­ளி­லும் ஏக்­கிய என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­தி­விட்டு அதற்­குப் பக்­கத்­தி­லேயே விளக்­கத்­தை­யும் கொடுத்­துள்­ளார்­கள். ஏக்­கிய என்ற சொல்­லுக்குத் தமி­ழ…

  20. நாடுகடந்த தமிழீழ அரசின் மாபெரும் பொதுக்கூட்டம் Date: 2011-12-18 at 5:00 pm Address: ஐயப்பன் ஆலய மண்டபம், 635 Middlefield Road, Scarborough, ON Canada Fee: - Details: நாடுகடந்த தமிழீழ அரசின் மாபெரும் பொதுக்கூட்டம் நாடுகடந்த தமிழீழ அரசின் மூன்றாவது அமர்வு

  21. பொறுப்புக் கூறுவாரா சந்திரிகா? போர்க் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் செயல்முறைகள் இன்னும் சில வாரங்களில் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ, இந்த விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவராக அவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விவகாரங்களில், இந்தப் பணியகத்தின் ஊடாக முக்கிய பங்காற்றவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இந்த அறிவிப்பு முக்க…

  22. வேலையற்ற பட்டதாரிகள்; அரசின்; தீர்வு?நிருபா குணசேகரலிங்கம்:- 21 பெப்ரவரி 2016 வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கோரி அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப் போராட்டங்களின் தொடர்சியாக கடந்த வாரம் கொழும்பில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி அரசாங்கத்திடம் முன்வைத்த காலக்கெடு முடிவடைந்த நிலையிலேயே இவ் ஆர்ப்பட்டத்தினை நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தினை நோக்கி முன்னேற முற்பட்ட வேளையில் அங்கு பெரும் களோபரமும் இடம்பெற்றது. இவ்வாறாக வேலையற்ற பட்டதாரி…

  23. தமிழ்நாட்டு அரசியல் காணொளிகள் உள்ளடக்கம்:- விவசாயின் உள்ள குமுறல் செந்நாய் கூட்டமும், மூன்று மனிதர்களும் & நான்கு குதிரைகளும் கதைதான் தற்போதைய விவசாயிகளின் நிலமை Ramana Karunarathnam9 hours ago நல்ல பதிவு வயதானவர்கள் விழித்து விட்டார்கள் இந்த திராவிட மத்திய அரசு புறக்கணித்து வரும் காலத்தில் விவசாயி உங்கள் பிள்ளைகள் உரிமையுடன் வாக்கு செலுத்துங்கள் அப்போ பாருங்கள் நாட்டை நாம் தமிழர் சின்னம் விவசாயி உங்கள் பிள்ளைகள் உங்களுடன் நிமிர்ந்து நிற்கிறது நிற்பார்கள் ஒரு தரம் வாக்கு செலுத்துங்கள் அப்போ பாருங்கள் நாட்டை வெற்றி உறுதி மக்கள் எழுச்சி விரைவில் நாம் தமிழர்

  24. யாரிந்த மனித உரிமை ஆணையாளர்? ஐ நா மனித உரிமை ஆணையாளர் கடும் நிலைப்பாட்டினை எடுக்க, இந்த முறையும் போய், சுத்தி விட்டு வரலாம் என்று நினைத்திருந்த, கொழும்பு, வாரிச் சுருட்டிக் கொண்டு எழும்பி இருக்கிறது. சுஜ தனிமைப்படுத்தலில் உள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ், பெரிதா எதுவுமே பேசாத நிலையில், படைத்துறை பின்புலம் கொண்ட வெளிவிவகார செயலாளர், ராஜதந்திர எல்லைக்கோட்டினை தாண்டி, அமெரிக்காவை, முதலில் உங்கள் உள்வீட்டு பிரச்சனைகளை முடித்து விட்டு, எங்களிடம் வாருங்கள் என்று சொன்னது, பழுத்த ராஜதந்திரிகளை கவலை கொள்ள வைத்துள்ளது. கொழும்பு அரச தலைமை என்ன செய்வது என்று, தலையை உடைக்க, சில்லறை அல்லக்கைகள் ஆன, ரம்புக்வல, ஆனந்த வீரசேகர வாயை திறந்து, குப்பைகளை கொட்டுகின்றனர். …

    • 3 replies
    • 891 views
  25. நமது மண்ணினதும் மக்களினதும் விடிவுக்காக தமது இன்னுயிரினையும் ஈகைதந்த மாவீரச் செல்வங்களின் நினைவு தினத்தினை தமிழீழத்தின் மாவீரர் நாளாய்... தேசிய எழுச்சி நாளாய் அனுஷ்டித்தோம். எப்பொழுதும்போல் இல்லாமல் இம்முறை வித்தியாசமான எதிர்பார்ப்புகளோடும், உணர்வுகளோடும் அதை வரவேற்று அனுசரித்தோம்.அவை மிக எழுச்சிபூர்வமானதாகவும் அமைந்திருந்தன. மாவீரர் நிகழ்வின்பின்... உள்ள நிலைப்பாடுகள் மற்றும் நாம் செய்யவேண்டிய நிகழ்ச்சிநிரல் பற்றி உங்களின் கருத்துக்கள் என்ன??? எமது போராட்டம் எவ்வகையில் தொடரவேண்டும்? என்பது பற்றி தமிழ் உறவுகளான நீங்கள் உங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் முன்வையுங்கள். விழ விழ எழுவோமா...??? இங்கு முன்வைக்கப்படுபவை உங்களது தனிப்பட்ட கருத்துக்களாக அமை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.