Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டுமா?

மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டும். 40 members have voted

  1. 1. மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டும்.

    • ஆம்
      27
    • இல்லை
      13

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை மட்டுநிறுத்துவதென்பது....

மட்டுநிறுத்தினரே.... நீங்கள் (தனி தனியே) ஒரு கருத்தை வெட்டுகீறீர்கள் என்றால் அது தொடர்பாக கேள்வி வரும் போது நீங்கள் பதில் அளித்தே ஆக வேண்டும். அதற்கு நிர்வாகம் பதில் அளிக்கும் என்று ஒளிந்து கொள்வதால் எந்த பிரயோசனமும் இல்லை. வெட்டும் திறமையுள்ளவர் பதிலளிக்கும் திறமையுள்ளவராக இருக்க வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு....திறமை இல்லாதவரும் நேரம் இல்லாதவரும் இந்தப் "உயர் " பதவியில் இருந்து விலகிக் கொள்வதே "எங்கள்" யாழ் களத்துக்கு செய்யும் நன்மையாகும்.

கள உறவுகளே நாங்களும் எம்மை திருத்திக்கொள்ள வேண்டும். எமது கருத்துகளை நிர்வாக விதிகளுக்கு அமைய எழுதுவதற்கு முயற்சி செய்யவேண்டும். எமது மட்டுநிறுத்தினரின் வேலைப் பளுவை கொஞ்சமாவது குறைப்பதற்கு நாங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை காணுவோம்.

Edited by வாசகன்

  • Replies 87
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இங்கு மட்டறுத்தினரின் நேரமின்மையால், களத்தில் பல கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமலே கிடக்கின்றது என்று குறைகள் உண்டு. அதுக்குள்ளே மட்டறுத்தினரை விலகட்டாம். மேலும் மட்டறுத்தினர் தெரிந்து என்பது வாறவன் போறன் எல்லோரையும் தெரிவு செய்ய முடியாது. நடுநிலமை, கோபப்படாத தன்மை என்று நிறைய இருக்க வேணும். அப்படித் தெரிவு செய்தாலே இங்கே அது குறித்தும் பிரச்சனைகள்.

வெற்றிகரமாக யாழை 9 வருடமாக இயக்கத் தெரிந்தவர்களுக்கு ஒவ்வொருவனும் அறிவுரை கூற வெளிக்கிட்டால், வாறவன் போறவன் எல்லாம் எனி புத்தி சொல்ல வெளிக்கிடுவான். எங்கே சான்ஸ் கிடைக்கும் என்று திரிகின்றார்கள்.

வாசகன் அண்ணாவின் கருத்தோடு ஒன்றி போகும் அதே நேரம் திறமையை நாங்கள் ஆதாரமாக காட்ட முடியாது ஏனெனில் ஒவ்வொருவருக்கு ஒருதுறையில் திறமை இருக்கு....ஆகவே பழக பழக திறமை ஏற்படும் என்பதே என் கருத்து..........அத்தோட மட்டுநுறுத்தினர்களை விலகவேண்டும் என்று சொல்வது அவ்வளவு சரியாக படவில்லை,

நிச்சயமா எனிவரும் காலங்களில் நீங்கள் சொல்வது மாதிரி களவிதிகளுக்கு அமைய செயற்படலாம் ஆனால் நான் செயறப்டபோகும் போது என்னை செயற்படுத்தாம பண்ன சிலர் வந்து கொண்டே இருப்பார்கள்...............ஆகவே அந்த சந்தர்பங்களில் களவிதிகளுக்கு அப்பால் நாங்களும் செயற்பட வேண்டிய நிலை ஏற்படும்.

தூயவன் யாருக்கும் சொல்வதிற்கான உரிமை இருகிறது ஆகவே வாறவன் போறவன் என்று சொல்வது அவ்வளவு சரியாக படவில்லை,எல்லோரும் ஒன்று என்று பார்தாலே எல்லா பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காணலாம்...

தயவு செய்து இந்தத் தலைப்பில் கள விதிகளை மதித்தும் ஆக்கபூர்வமாகவமாகவும் உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.

- இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

வாசகனின் பிரேரணை குறித்து சிந்திக்க வேண்டும்.

காரணம்.. மட்டுறுத்தினர்களை களப் பொறுப்பாளர் திறமை.. நடுவுநிலைமை நிற்பவர்கள்.. பொறுமையின் எல்லையில் நிற்பவர்கள் என்று பார்த்து நியமித்ததாகத் தெரியவில்லை.

களத்தில் அவர்களின் நடைமுறைகளை அவதானித்து இங்கு நியமங்கள் வழங்கப்படுகின்றன.

அதில் பல வழுக்கள் உள்ளன. அண்மையில் செய்திப் பிரிவுக்கு செய்தி ஒட்ட நியமிக்கப்பட்டவங்களில.. அந்தக் கடமையை சரிவரச் செய்யுறவங்க எத்தனை பேர்..????!

ஒரு மாத காலம் கடந்தும் நிர்வாகம் அந்த நியமனங்களின் செயற்பாடுகளை மீள் பார்வை செய்ததா..??! இல்லை.

ஆனால் இங்கு சில கள உறவுகள் தங்களையும் செய்தி பிரசுரிக்க அனுமதிக்க பகிரங்கமாகக் கேட்டனர். அவர்களின் செயற்பாடுகளில் இதுவரை காலமும் நாம் எந்த பிரச்சனையையும் அவதானிக்கல்ல. ஆனா அவங்க கோரிக்கை கவனத்தில எடுக்கப்படவே இல்ல நிர்வாகத்தால.

இதுக்கும் நிர்வாகத்துக்கு நேரமில்லையா.. இல்ல பரிசீலிக்க மனசில்லையா..??!

நிர்வாகத் திறமை இன்மைகள் மற்றும் அர்பணிப்பற்ற மனநிலை என்பன நேரத்தின் மேல் பழியாகி விழுகின்றன..!

எல்லாத்துக்கும் நேரத்தை குறை சொல்லுறதென்றா.. நிர்வாகத்தில உள்ளவங்க குறைதான் அதுவே அன்றி.. உறுப்பினர்களதல்ல. ஒரு பொதுப்பணியை அர்பணிப்போடு செய்ய முடியல்ல... என்றால் அப்புறம் நிர்வாகத்தில ஒட்டிட்டு இருக்கிறதில அர்த்தமில்ல...!!!!!!

ஒரு கணம் மட்டுறுத்தினர்கள் பொறுமையின் எல்லைகள் எங்கிறார்கள்.. மறுகணம்..மட்டுறுத்தினர்களும் மனிதர்கள் என்றார்கள்.. அப்புறமா என்ன சொல்வார்களோ..???! :blink::D

முதலில் யதார்த்தத்தைப் பாருங்கள்.

நிர்வாகம் என்ற ஒன்றை ஒழுங்காகச் செய்ய அர்ப்பணிப்புக்கள் அவசியம். நேரம் இல்ல.. வேலை குடும்பம் குட்டி.. என்றால் நிர்வாகத்தை வேறு திறமை மற்றும் முன்வருவங்க கிட்ட பகிர்ந்து கொள்ள முனைய வேண்டும்.

களத்தில் பரீட்சயமே இல்லாத (பெயரளவில்) இணையவன் இன்று நிர்வாகக் கடமை ஏற்றுள்ளார். இவரின் பொறுமை திறமை நடுவுநிலமை குறித்து சத்தியமா யாரும் சொல்லுங்க அறிஞ்சுக்குவம். பெயர் மாற்றம் செய்து வந்திருந்தாலும்..அது சாத்தியமில்லை.

நிர்வாகம் என்ற அலகை கள உறவுகள் அனைவரினதும் பங்களிப்போடு உருவாக்கும் சிநேகித பூர்வ நிலையை இங்கு காணக்கிடைக்கல்ல.

நாங்கள் பல்கலைக்கழகங்களில் எல்லாம் இப்படியான போறங்களில் இருந்ததுண்டு. அப்ப எல்லாம் எல்லோரும் நண்பர்களாக இருப்போம். யாரையும் யாரும் துரத்தனும் அடிக்கனும் என்ற சிந்தனையோ இல்ல தற்பெருமை கொண்டு அலைஞ்சதையோ கண்டதில்ல. ஆனா இங்க நிலை தலை கீழ்.

நிர்வாகம் கூட பதிலளிக்க முடியாத சூழலில் இருக்கிறதென்றால் பிறகெதற்கு அது ஒரு நிர்வாகம் என்று..???!

ஏன் பகிரங்கமாகவே இங்கு நிர்வாகக் கடமை செய்ய முன் வரத்தக்க கள உறவுகளை அழைக்கலாம் தானே.

நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது கள உறவுகளின் (அநேகர்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவங்களை தெரிவு செய்யும் போது ஒத்துழைப்பும் நல்லுறவும் அதிகம் இருக்கும்.

ஜனாதிபதியா ரகசிமா ஒருத்தரை மக்கள் முன் கொண்டு வந்தால் அது சர்வாதிகாரமே அன்றி ஜனநாயகமல்ல. அங்கு மக்களின் ஒத்துழைப்பை அவர் எதிர்பார்ப்பது கடினம்.

அதேதான் இங்கும்.

நட்புறவும்.. ஏற்றத்தாழ்வற்ற.. பாகுபாடற்ற.. நடுவுநிலையும்... அர்ப்பணிப்பும் தான் இங்கு அவசியமே அன்றி.. நிர்வாகக் கடமை செய்வதால் நான் நிர்வாகி என்ற தோறணையிலான செயற்பாடுகள்.. நிச்சயம் பொதுக்களம் ஒன்றில் வெற்றிகரமான நிர்வாகச் செயற்பாட்டுக்கு உறுதுணையாக அமையாது.

அதேபோல் கள உறுப்பினர்களில் இவர் பொறுமை அவர் நடுவுநிலை என்று நாம் தீர்மானிக்கவும் முடியாது. காரணம் நிர்வாகத்துக்குள்ள உள்ளவங்க மனநிலை மாறுபட்டது என்பது மட்டுமன்றி நிர்வாகத்துக்க கூட நிறைய கருத்து முரண்பாடுகள் உண்டு என்பதும் அதன் பின்னணிகள் என்ன என்பதும் நாம் எல்லோரும் அறிவோம்..??! சிலருக்குச் சொல்லியும் அது புரியப் போறதில்ல...! மனசுக்க உள்ளதுகளை காட்ட ஒரு கருவி கண்டறியும் வரை..!

எனவே வெளிப்படையா கள உறவுகளோடு நட்புறவு.. அவர்களின் குரல்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கக் கூடிய நிர்வாகிகள் நிச்சயம் உறவுகளின் ஆதரவை தட்டிச் செலவர்..??! ஏனையோர்.. குறித்து பலத்த சந்தேகப் பார்வைகள் தான் மிகும்..! :P :)

Edited by nedukkalapoovan

ஏற்கனவே இங்கு மட்டறுத்தினரின் நேரமின்மையால், களத்தில் பல கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமலே கிடக்கின்றது என்று குறைகள் உண்டு. அதுக்குள்ளே மட்டறுத்தினரை விலகட்டாம். மேலும் மட்டறுத்தினர் தெரிந்து என்பது வாறவன் போறன் எல்லோரையும் தெரிவு செய்ய முடியாது. நடுநிலமை, கோபப்படாத தன்மை என்று நிறைய இருக்க வேணும். அப்படித் தெரிவு செய்தாலே இங்கே அது குறித்தும் பிரச்சனைகள்.

வெற்றிகரமாக யாழை 9 வருடமாக இயக்கத் தெரிந்தவர்களுக்கு ஒவ்வொருவனும் அறிவுரை கூற வெளிக்கிட்டால், வாறவன் போறவன் எல்லாம் எனி புத்தி சொல்ல வெளிக்கிடுவான். எங்கே சான்ஸ் கிடைக்கும் என்று திரிகின்றார்கள்.

பெருமையாக எதையாவது சொன்னீங்கள் எண்றால் வாசிக்கும் போது குளிர்ச்சியாக இருக்கும்... இப்படி வெளிப்படையாய் குற்றம் சாட்டுவதை எப்படி எடுத்து கொள்வார்கள் என்பதை யாழ்களத்துக்குள் நீண்ட அனுபவம் உள்ள உங்களுக்கு தெரியாதா...?? :):blink::D

இங்கே பிரச்சினை என்பது மட்டுறுத்தினர் என்பது அல்ல புரிகிறது....! யார் இங்கே பெரியவர் ஏன்பதாகத்தான் படுகிறது...!

மடுறுத்துனர் தங்களை கௌரவமாக (தங்களுக்கு இசைவாக) நடத்தவேண்டும் எண்று எல்லாரும் எதிர்பார்ப்பது புரிகிறது.... தங்களின் மரியாதையை காத்துக்கொள்வது உறுப்பினர்களின் கடமை....! ஊறுப்பினார் ஒருவர் சீண்டப்பட்டால் அவர் திருப்பி சீண்டுவார் என்பது சீண்டுபவருக்கு தெரிந்தே இருக்கும்....

இதை மட்டுறுத்துனர் வந்து மல்லுபிடிப்பது யாழின் நாகரீக வழர்ச்சியின் சாண்று....! மட்டுறுத்துவது கடினமான காரியம் எண்றாலும் நிர்வாகம் மட்டுறுத்துவதின் தன்மையில் இன்னும் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன்....!

முக்கியமாக வெட்டிய இடங்கள் பற்றிய அறிவிப்பை நிப்பாட்டா வேணும்...!! மட்டூசின் கருத்துக்களின் எண்ணீக்கை குறையும் எண்றாலும்...

Edited by தயா

வணக்கம் வாசகன்,

நீங்கள் எழுதிய கருத்துக்கான அவசியம் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் - நீங்கள் தெளிவடைய விரும்பின் அதற்கான பதில்:

நிர்வாகத்துக்கு நகர்த்தப்படும் கருத்துக்கள், தணிக்கை செய்யப்படும் கருத்துக்கள், நீக்கப்படும் கருத்துக்கள் தொடர்பான தகவல்கள் விளக்கங்கள் கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் எழுதப்படுகின்றன. கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கருத்துக்கள விதிமுறைகள் தெரிந்திருக்கும். அந்தவகையில் தமது கருத்துக்கள் எதற்காக நீக்கப்பட்டன என்று தெரிந்திருந்தும் பல உறுப்பினர்கள் விளக்கம் கேட்கிறார்கள். தாம் நேரம் செலவழித்து எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டுவிட்டனவே என்கிற ஆதங்கம். புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கருத்துக்கள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டால் இப்படியான சிக்கல்கள் தோன்றப்போவதில்லை. சீண்டி எழுதப்படும் கருத்துக்களுக்கும், தனிநபர் தாக்குதலாக எழுதப்படும் கருத்துக்களுக்கும், பண்பற்ற முறையில் எழுதப்படும் கருத்துக்களுக்கும் பதிலளிக்காமல் நிர்வாகத்தினரிடம் சுட்டிக்காட்டலாம். இது மேலும் மேலும் பிரச்சனைகளைத் தோற்றுவிக்காமலும் - வளர்க்காமலும் இருக்க உதவும்.

1. கருத்துக்களில் மாற்றங்கள் என்னும் தலைப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

2. தனிமடலில் கருத்துக்கள உறவுகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய மட்டுறுத்துனர்களால் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அப்படியிருக்க, "நிர்வாகம் பதிலளிக்காமல் ஒளிந்துகொண்டது" என்று நீங்கள் குறிப்பிடுவது எதன் அடிப்படையிலானது?

அடுத்து, கருத்துக்களத்தில் "யாழ் உறவோசை" பகுதியில் இடப்படும் தலைப்புகள் தொடர்பில் - அவசியமெனின் கருத்துக்கள நிர்வாகம் அதற்கான பதிலை அளிக்கும்.

கருத்துக்களம் சார்ந்த உதவிகள், சந்தேகங்கள் போன்றனவாக இருந்தால் சக கருத்துக்கள உறுப்பினர்களே அதற்கான விளக்கத்தை அளிக்கிறார்கள். அல்லாத சந்தர்ப்பத்தில் நிர்வாகம் சார்பாக பதிலெழுதப்படுகின்றன.

சில தலைப்புகளுக்கு/அல்லது கேள்விகளுக்கு நிர்வாகம் பதிலளிப்பதற்கு குறிப்பிட்டளவு நேரம் தேவைப்படுகிறது. கண்ணை மூடிக்கொண்டு பதிலளிக்க முடியாது. நிர்வாகம் உணர்ச்சிவசப்பட்டு, கோபப்பட்டு பதில்களை வைக்கமுடியாது - பொறுப்புணர்வோடே ஒவ்வொரு கருத்துக்களும் எழுதப்படவேண்டிய தேவை உள்ளது.

கருத்துக்கள உறவுகள் மட்டும் பிறரால் சீண்டப்படுவதில்லை - நிர்வாகமும் சீண்டப்படுகிறது. நிர்வாகமும் அடிக்கடி வம்புக்கிழுக்கப்படுகிறது. அப்படியான - உண்மையான நோக்கோடு எழுதப்படாத தலைப்புகளுக்கு பொதுவிடத்தில் பதிலளிப்பதை நிர்வாகம் தவிர்த்துவந்துள்ளது.

பொதுவிடத்தில் இடப்படும் தலைப்புகள் பெரும்பாலும் தனியே நிர்வாகத்தின் விளக்கம் கேட்பதாக அல்லாமல் கருத்துக்கள உறவுகளின் கருத்தையும் கேட்பதற்காகவே இடப்படுகின்றன. எனவே அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்வதற்கான காலம் எமக்குத் தேவை.

யாழ் கருத்துக்களத்தில் பதவிகளை யாரும் வகிக்கவில்லை. கருத்துக்களம் சார்ந்த ஒழுங்கமைப்பிலும், தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களிலும், மட்டுறுத்தல் வேலைகளிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள் . "எங்கள்" யாழ் களம் என்ற உங்களின் இந்த உணர்வோடு எல்லோரும் செயற்படுவார்களெனின் புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் வளரும் - அதனூடாக யாழ் கருத்துக்களத்தின் வளர்ச்சியும் ஆக்கபூர்வமானதாக மாறும். :)

குறிப்பு: இத்தலைப்பில் தொடர்ந்து அநாவசியமற்ற - நிர்வாகத்தையோ, சக கள உறவுகளையோ சீண்டும் வகையிலான கருத்துக்களை இடுவதைத் தவிர்த்து - பொறுப்பான வகையில் கருத்துக்களை முன்வைக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

* கருத்துக்கள விதிமுறைகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அல்லது கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட விரும்பாதவர்கள் "கட்டாயம்" கருத்துக்களத்தில் கருத்துகள் எழுதவேண்டுமென கள நிர்வாகம் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. எனவே தயவுசெய்து!!!

  • களத்தின் விதிகளுக்கு அமைய கருத்துக்களை எழுதுங்கள்..
  • விதிகள் பிடிக்கவில்லை, களத்தின் நடைமுறைகள் பிடிக்கவில்லை என்றால், வேறிடம் பாருங்கள்..
  • வேறு போக்கிடம் இல்லையென்றால், இப்படியான தலைப்புக்களைத் தொடங்கி உங்கள் ஆதங்கங்களையும், எரிச்சல்களையும் அள்ளிக்கொட்டுங்கள்!

:)

நிர்வாகம் மீதான குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். அவை வரவேற்கப்படுகின்றன. அவற்றை பண்பான முறையிலும் நட்புரீதியிலும் சுட்டிக்காட்டுங்கள். கருத்துக்கள விதிமுறைகள் கருத்துக்களத்தை பண்பான, தரமான, ஆக்கபூர்வமான தளமாக கொண்டுசெல்வதற்கே. சில அடிப்படை விதிமுறைகளை பல தடவைகள் அறிவுறுத்திய பின்பும் தொடர்வது சிறந்ததல்ல. அடிப்படையான விதிமுறைகள் இறுக்கமாகவே கடைப்பிடிக்கப்படும்.

அவைதவிர்ந்த சில விதிமுறைகள் இருக்கின்றன - அவை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே, குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் - ஆனால், அதற்கான பண்போடு அதைச் செய்யுங்கள்.

வலைஞன்அண்ணா

இங்கு நான் குறிப்பாக சொல்வதானால் ஒரு விடயம்தான்.

மட்டுநிறுத்தினர் ஒருவர் கிடையாது. பலர். கட்டாயம் ஒவ்வொரு மட்டுநிறுத்தினருக்கும் தங்களின் தனிப்பட்ட கொள்கையும் பார்வையும் இருக்கும்.

ஒரு மட்டுநிறுத்தினர் ஒரு செய்தியையோ அல்லது எதாவது ஒரு பகுதியையோ தணிக்கை செய்யும் போது அதை எதற்காக செய்கின்றோம் என்பது அவருக்கு கட்டாயம் தெரிந்தே இருக்கும்.

அதன் பொருட்டு கேள்வி பொதுவில் வரும் போது அதை தணிக்கை செய்தவரே எந்த விதியில் தணிக்கை செய்தோம் ஏன் தணிக்கை செய்தோம் என்று தெளிவுபடுத்த கூடியவராக இருக்க வேண்டும். அது முடியாதவர் வேறு வேலை பார்கலாம் என்பதுதான் என் கருத்து.

நண்பர் தூயவன் சொன்ன மாதிரி மட்டுநிறுத்தினர் கண்டவருக்கும் பதிலளிக்க வேண்டாம். சுயபரிசோதனை அவசியப்படுகிறது.

ஒட்டுகுழு நண்பர்க்கு:

இதில் குளிர் காய நினைக்க வேண்டாம். எப்படி சண்டை பிடித்தாலும் நாங்கள் ஒன்று. நாங்கள் தமிழர் எமது தாயகம் தமிழ்ஈழம் எமது ஒரே தலைவர் பிரபாகரன்.

ஆரம்பத்திலேயே நிர்வாகத்தால் நேரடியாக கருத்து பதிக்கும் வாய்ப்பை இழைந்தேன் பிறகு இழந்த உரிமையை மீட்டெடுத்தேன் .

நிர்வாகியின் வேலை மிகவும் கடினமானது, நான் எழுதிய தனி மடல்களுக்கு உடனுக்குடன் பதில் அளித்துள்ளனர் நிர்வாகிகள். வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

வலைஞன் அண்ணா!

உங்கள் பதிலை படித்தேன் மிக்க மகிழச்சி! உங்கள் பதில்களை ஆக்கபூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்! எனது கருத்தும் இதேதான்! உங்களால் இயன்றளவு வெளிப்படையாக கள உறவுகளுடன் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். அப்படி செய்யும் போது உறவுகளும் உங்களிற்க்கும் உறவு நெருக்கமடையும். மற்றவர்களும் உங்கள் பணியை உணர்ந்து கொள்வார்கள். அதனால் உங்கள் பணிகூடா சிரமமன்றை இருக்கும். இதைதான் நான் முன்னர் மட்டுறுத்தினர்கள் களஉறவுகளுடன் கருத்தாட வேண்டுமா? பகுதியில் போட்டிருந்தேன். அதை புரிந்து கொள்ளமல் பலர் தவறாக புரிந்து கொண்டு எங்களை தாக்கிணார்கள்.

நாங்களும் விதிமுறைகள் தாண்டாமல் எங்கள் கருத்துக்களை எழுதுகிறோம். நீங்களும் உங்கள் பணியை தொடருங்கள். அவப்போது உறவுகளுடன் கருத்துக்களை பரிமாருங்கள். உறவுகள் நெருக்கமாகும். உங்கள் கடமைகள் பணிகள் இலகுவாகும். இதுதான் எனது கருத்து.

உங்கள் பணிகள் இலகுவாகவும் சுமைகுறையவும் எனது வாழ்த்துக்கள்.

1.)

கருத்துக்கள விவாதங்களில் மட்டுறுத்துனர்கள் பங்குகொள்வதும், தம்முடைய கருத்துக்களை அவர்கள் முன்வைப்பதுவும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விடயம். எனவே, இது சார்ந்த முடிவை மட்டுறுத்துனர்களிடமே விட்டுவிடுவோம். எனது கருத்தின் அடிப்படையில், கருத்துக்கள விவாதங்களில் மட்டுறுத்துனர்கள் அல்லது பொறுப்பாளர் பங்குபற்றுவதும் கருத்துக்கள் எழுதுவதும் மட்டுறுத்தலின்போது சிக்கல்களை ஏற்படுத்தும். அனைத்துக் கருத்துக்கள உறவுகளும் ஒரே போன்று சிந்திக்கமாட்டார்கள். இவ்விடயத்தை அணுகும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் அணுகுவார்கள். மட்டுறுத்தல் மீதான நம்பிக்கையின்மையையும், சார்புத் தன்மையுள்ள தோற்றத்தையுமே இது உண்டாக்கும். இருப்பினும், இது தொடர்பாக அந்தந்த மட்டுறுத்துனர்களே முடிவெடுக்கலாம்.

2.)

கருத்துக்கள உறவுகளோடு மட்டுறுத்துனர்கள் பொது இடத்தில் கருத்தாடுவது குறைந்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. சில காலங்களுக்கு முன்னர் இந்த நிலை இருக்கவில்லை. மட்டுறுத்துனர்கள் கருத்துக்கள உறவுகளோடு வரவேற்புப் பகுதியிலும் ஏனைய சில பகுதிகளிலும் கருத்தாடினார்கள். இப்பொழுது அது குறைந்ததற்கான(அல்லது இல்லாது போனதற்கான) காரணம் ஒருபுறம் கருத்துக்களத்தில் மட்டுறுத்தும் வேலைகள் அதிகமானது ஆகும். மறுபுறம் மட்டுறுத்துனர்களின் தனிப்பட்ட வேலைகளும் ஒரு காரணம்.

3.)

மட்டுறுத்துனர்கள் உங்களை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று எண்ணவேண்டியதில்லை. அவர்களும் கருத்துகள உறுப்பினர்களே. உண்மையைச் சொல்லப்போனால், மட்டுறுத்துனர்கள் பலசந்தர்ப்பங்களில் உதாசீனப்படுத்தப்படுகிறார்க

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் சார் கொடுத்துள்ள விளக்கங்கள் இயன்ற அளவுக்கு கள உறவுகள் மத்தியில் நிலவிய நிர்வாகம் தொடர்பான குழப்பங்களுக்கு விடை தந்திருக்கும்.

குறைகளை அனைவரும் நிவர்த்தித்து அனைவரும் வழிநடப்போமாக..!

அதேபோல் இங்கு கண்ணை மூடிக்கொண்டு.. போறவை போகலாம்.. போக்கிட்டமில்லாம இருக்கிறவை.. ஒட்டுக்குழு நண்பர்கள்.. இப்படியான பதப்பிரயோகங்களை தடுக்கவும்.. கள நிர்வாக முயற்சிக்கனும்..! இவை மறைமுகமாக கள உறவுகளைத் தாக்குதலாகும். இவை நிச்சயம் கள உறவுகளுக்கிடையே நட்புறவை வளர்ப்பதற்குப் பதில்.. அநாவசிய சந்தேகங்களையும் பிரிவுகளையும் பரிக்கரிக்கவே உதவும். அது களத்தின் வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை..! பிரச்சனைகள் பிரிவினைகள் தொடர்வதையே செய்யும்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

  • களத்தின் விதிகளுக்கு அமைய கருத்துக்களை எழுதுங்கள்..
  • விதிகள் பிடிக்கவில்லை, களத்தின் நடைமுறைகள் பிடிக்கவில்லை என்றால், வேறிடம் பாருங்கள்..
  • வேறு போக்கிடம் இல்லையென்றால், இப்படியான தலைப்புக்களைத் தொடங்கி உங்கள் ஆதங்கங்களையும், எரிச்சல்களையும் அள்ளிக்கொட்டுங்கள்!

இப்படி சோட் அண்ட் சுவீட்டாக என்னால் எழுத முடியாமையால் சில நேரங்களி உங்கள் கருத்துக்களின் மேல் எனக்கு பொறாமை வருவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் சார் கொடுத்துள்ள விளக்கங்கள் இயன்ற அளவுக்கு கள உறவுகள் மத்தியில் நிலவிய நிர்வாகம் தொடர்பான குழப்பங்களுக்கு விடை தந்திருக்கும்.

குறைகளை அனைவரும் நிவர்த்தித்து அனைவரும் வழிநடப்போமாக..!

அதேபோல் இங்கு கண்ணை மூடிக்கொண்டு.. போறவை போகலாம்.. போக்கிட்டமில்லாம இருக்கிறவை.. ஒட்டுக்குழு நண்பர்கள்.. இப்படியான பதப்பிரயோகங்களை தடுக்கவும்.. கள நிர்வாக முயற்சிக்கனும்..! இவை மறைமுகமாக கள உறவுகளைத் தாக்குதலாகும். இவை நிச்சயம் கள உறவுகளுக்கிடையே நட்புறவை வளர்ப்பதற்குப் பதில்.. அநாவசிய சந்தேகங்களையும் பிரிவுகளையும் பரிக்கரிக்கவே உதவும். அது களத்தின் வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை..! பிரச்சனைகள் பிரிவினைகள் தொடர்வதையே செய்யும்..! :)

உங்களை வீணாக வம்பக்கிழுக்கிறேனோ என்று யோசித்து கொண்டே இதை எழுதுகிறேன்.................. உங்களின் கருத்தில் நியாயமிருப்பதாக படுகின்றதே தவிர அதில் நியாயமில்லை. நீங்கள் வேறொருவருக்காக எழுதும் பதிலை பல வேறு பேர்கள் வந்து பார்கிறார்கள் உங்களை பொறுத்த வரையில் அது உங்கள் இருவருக்கிடைணிலான கருத்தாடல். ஆனால் மட்டுறுத்தினருக்கு அது நாகரிகாமானதாக இருக்க வேண்டுமென்ற எத்தணிப்பு அதனால் பல வெட்டுக்கள்....

வேண்டியவரின் நெஞ்சில் காயங்கள் அதன் தாக்கங்களை மேலே நீங்கள் எழுதி விட்டதில் பார்க்க கூடியாதாக இருக்கின்றது. உண்மையென்பது நிருபிக்கப்டுவதல்ல......... நிருபிக்க முடியாதது! காரணம் நிருபிக்க எடுக்கும் முயற்சிலேயே உண்மை கறைபடிந்து விடுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆளுக்கொரு கட்சி.அவவருக்கு ஒரு கொள்கை.அவையவைக்கு பின்னுக்கு நிண்டு தாளம் போடுறதுக்கு ஒரு சிங்சக் கூட்டம். :)

வணக்கம் வலைஞன் அண்ணா,

உங்களின் கருத்தை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன்,நாங்கள் கேட்டதும் இதுவே தான் மட்டுநுறுத்தினர்கள் உறவுகளுடன் ஒன்று சேரும் போது பிரச்சினைகளை குறைக்கலாம்,யாழையும் மேலும் முன்னேற்றலாம்,அந்த வகையில் எங்கள் கருத்தை ஏற்று பதில் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.எனி வரும் காலங்களில் உங்களுடன் ஒத்துழைக்க நாங்களும் தயார்.

ஒன்று சொன்னீங்கள் பேருந்தில் ஏறுற ஒவ்வொரு முறையும் டிக்கட் எடுக்க சொல்லி கொண்டு இருக்க ஏலாது என்று நன்றாக இருந்தது அந்த வசனம் நீங்கள் இப்படி கதைபீர்களா என்று நினைகும் போது கொஞ்சம் சந்தோசமாக இருகிறது. :(

நன்றி

யாழ்களம் இறுக்கங்கள் களைந்து, புரிந்துணர்வுடன் சகஜமான நிலைக்கு மீளுவதாக தோன்றுகின்றது ...

.... அது மேலும் தொடர வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா!

எனி வரும் காலங்களில் எல்லோரும் திருந்திக் கொள்ள இது வழி சமைக்கும் என்று நம்புவோம்.; புரிந்துணர்வு கொண்டு எழுதினாலே மட்டறுத்தினர் தேவைப்படாது என்ற நிலையை உருவாக்கலாம்.

  • தொடங்கியவர்

போங்கப்பா இந்த கருத்த ஆரம்பிச்சு வாங்கிகட்டினது போதும். :D:( எப்படியோ எல்லோரும் புரிந்துனர்வு ஏற்பட்டு (அதுக்காக விடுதலைபுலிகள் இராணுவம் புரிந்துணர்வு என்று எடுத்துக்காதிங்க :P ) ஒற்றுமையா கருத்துக்களை முன்வைத்தால் போதும். B) :(

இதுக்கு தான் எங்கள் முன்னேர் நிதானமாக இருந்தார்கள்

அனைத்தையும் நிதானமாகவும் ,சிந்திச்சு பெசவேண்டும் என்று!!!

அதை விட்டுட்டு ஒருவர் ஒருவறைதாக்குவது.............................(ம

Edited by இனியவள்

எலாரும் சேர்ந்து வலைஞன் மாமாவுக்கு ஒரு ஓ போடுங்கோ அதோட எலாரிட்டையும் ஏச்சு வாங்கின என்க்கும் வான்வில்லுக்கு ஒரு ஓ போடுங்கோ.

நன்றி

:( ;)

இந்த அம்மணி யாரையும் முறை வைத்தே அழைக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.