Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களென்றால் பரவாயில்லை..பாவம் நாய்களைக் கொல்லாதீர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஞ்ஞானச் சொற்பொழிவில் பார்த்த வீடியோ காட்சி இது: ஒரு ஆபிரிக்கச் சிறுமி-பத்துப் பன்னிரண்டு வயதிருக்கலாம். சில கட்டில்கள் மட்டுமே கொண்ட ஒரு பின் தங்கிய மருத்துவ நிலையத்தில் சோர்ந்து கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளை எட்டத்திலிருந்து படம் பிடிக்கும் வீடியோவை நோக்கி தண்ணீர் எனச் சைகையில் கேட்கிறாள். தண்ணீர் வழங்கப் படுகிறது. ஆனால் ஒரு முறடு வாயில் வைத்ததுமே வேதனையில் முகம் கோண தண்ணீர் குவளையைத் தட்டி விடுகிறாள். தாதி மாரின் கரங்களை மெதுவாகக் கடிக்கவும் முயல்கிறாள். தாகமும் தண்ணீரின் வேதனைக்குப் பயப்படும் தவிப்பும் அவள் கண்களில் தெரிகின்றன. இவள் பாதிக்கப் பட்டிருக்கும் நோய் நிலைமைக்குப் பெயர் "நீர் வெறுப்பு நோய்" (hydrophobia) இந்த நிலைமைக்குக் காரணம் "விசர் நோய்" என அழைக்கப் படும் "றேபிஸ்" (Rabies) தொற்று.

ராப்டோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த றேபிஸ் வைரஸ் உலகம் பூராகவும் பரந்து காணப்படும் விலங்குகளிலும் மனிதனிலும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஒரு நுண்ணங்கி. ஆசிய நாடுகளில் பெரும்பாலும் வளர்ப்பு மற்றும் கட்டாக் காலி நாய்களில் காணப்படும் றேபிஸ் வைரஸ் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் காட்டு விலங்குகளில் பரந்து காணப்படுகிறது. தொற்று ஏற்பட்ட விலங்கு மனிதனைக் கடிக்கும் போது றேபிஸ் வைரஸ் மனிதனைத் தொற்றுகிறது. உடலின் எந்தப் பகுதியில் றேபிஸ் வைரஸ் உள்நுழைந்தாலும் அது உடனடியாக அருகில் இருக்கும் நரம்புகளை முதலில் தொற்றிக் கொள்கிறது. பின்னர் வைரசுகள் நரம்புகளினூடு நகர்ந்து மைய நரம்புத் தொகுதியின் பாகங்களில் ஒன்றான மூளையில் சென்று குடியேறும் போது அனேகமாக றேபிஸ் நோய் வெளித்தெரிய ஆரம்பிக்கிறது. உடலின் தசைகள் தங்கள் இயக்கங்களை இழக்க ஆரம்பிக்கின்றன. விழுங்குவதற்கு அவசியமான தசைகள் செயற்பட இயலாமல் தசை வலிப்புகளை (spasms) ஏற்படுத்தும் நிலைமையில் தான் தண்ணீரைக் கண்டதும் பயந்து ஓடும் "நீர் வெறுப்பு" நிலைமை ஏற்படுகிறது.

முக்கியமான தகவல் என்னவெனில் நோய் வெளித்தெரிய ஆரம்பித்த பின்னர் றேபிஸ் நோயைக் குணப்படுத்துவது அனேகமாக இயலாத காரியம். இங்கே "அனேகமாக" என்று சொல்லப் படுவதன் காரணம் என்னவெனில், நோயாளியை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் செயலிழக்கும் சுவாசத் தசைகளை இயந்திரங்களால் ஈடுகட்டி உயிரோடு வைத்திருக்க முடியுமாயின் உயிரைக் காப்பாற்ற இயலும்-ஆனால் சேதமடைந்த மூளை எவ்வளவு தூரம் முழுமையாகக் குணமடையும் என்பது ஒரு பாரிய கேள்வி. மருத்துவ வசதிகள் பின் தங்கிய ஆசிய நாடுகளில் இந்த மாதிரியான அதி தீவிர சிகிச்சைகளெல்லாம் எட்டாக் கனி என்பதால், அங்குள்ள நாடுகளில் றேபிஸ் நோய் வெளித்தெரிய ஆரம்பித்த ஒருவருக்கு சிகிச்சை எதுவும் இல்லாமல் இறப்பதே இறுதி முடிவு.

றேபிஸ் பற்றிய நல்ல செய்தியும் உண்டு: இது ஒரு 100 வீதம் தடுக்கப் படக்கூடிய வியாதி என்பது தான் அது. மனிதனிலும் வளர்ப்பு நாய்களிலும் சில நாடுகளில் காட்டு விலங்குகளிலும் கூட றேபிஸ் தடுப்புப் பற்றி ஏராளமான ஆய்வுகள் செய்து பல பயனுள்ள முடிவுகள் எட்டப் பட்டிருக்கின்றன. சுருக்கமாகக் சொன்னால்: வளர்ப்பு நாய்களுக்கும் கட்டாக் காலி நாய்களுக்கும் றேபிஸ் தடுப்பூசி ஏற்றுவது, கட்டாக் காலி நாய்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, நாய்க்கடி அல்லது வன விலங்குளின் தாக்குதலின் பின்னர் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது என்பன தான் றேபிஸ் தடுப்பின் பிரதான அங்கங்கள். இவற்றினுள் கட்டாக் காலி நாய்களின் தொகையைக் குறைத்தல் பற்றித் தான் ஒரு பெரிய சர்ச்சை இப்போது சிறி லங்காவில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. அது பற்றித் தான் இந்த பதிவு.

ஆசிய நாடுகளில் மனிதனுக்கு றேபிஸ் வைரசைப் பரப்புவது 90% மான சமயங்களில் நாய்கள் தான் என ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. மேலும் ஆசிய நாடுகளில் றேபிஸ் நோயினால் இறப்போரில் 99% மானோர் கட்டாக் காலி நாய்களால் கடியுண்ட வேளையிலேயே றேபிஸ் தொற்றுக்குள்ளாகிறார்கள் என இன்னொரு தகவல் சொல்கிறது. அப்படியானால் கட்டாக் காலி நாய்களைக் கட்டுப் படுத்தினால் றேபிஸ் ஒழிக்கப் பட இயலுமா? "ஆம்" என்பதற்குச் சாட்சியாக பிரிட்டன் உட்படப் பல மேற்கு நாடுகள் றேபிஸ் வைரசை நாய்களில் இருந்து முற்றாக ஒழித்துக் காட்டியிருக்கின்றன. "வளர்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி கட்டாக் காலி நாய்களுக்கு வலியில்லாத மரணம்" எனக் கிரமமாக நடைமுறைப்படுத்தப் பட்ட திட்டங்களால் இந்நாடுகளில் றேபிஸினால் இறக்கும் மனிதர்களின் தொகை மிகச்சொற்பமாக மாற்றப் பட்டிருக்கிறது.

சிறிலங்கா: இருபது மில்லியன் மக்கள்- ஏறக்குறைய அதே மில்லியன் கணக்கான நாய்கள், அவற்றில் பெரும்பாலானவை உரிமையாளர்கள் அற்ற கட்டாக் காலி நாய்கள். பல இடங்களில், இந்தக் கட்டாக் காலி நாய்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எஜமானர்களால் சோறு போட்டு வளர்க்கப் படும் "சமூக நாய்கள்" என அழைக்கப் படுகின்றன. பிரச்சினை என்னவெனில் தங்கள் சொந்த நாய்களுக்கே தடுப்பூசி போடத் தயங்கும் சிறி லங்காக் குடி மக்கள் இந்த சமூக நாய்களுக்கு தடுப்பூசி போடுவார்கள் என்பது நடக்காத காரியம்.

கட்டாக் காலி நாய்களின் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த மலடாக்கும் சத்திர சிகிச்சை முகாம்கள் நடாத்தி அவற்றின் தொகையைக் காலப் போக்கில் குறைக்கவும் முயற்சிகள் நடந்தன. எதைச் செய்தாலும் "எனக்கு எவ்வளவு வரும்?" என்று பார்க்கும் திருட்டுக் குணத்தினால் இப்படியான பல சிகிச்சை முகாம்கள் வியாபாரச் சந்தைகளாக மாறி விட்டன. மத்திய மாகாணத்தில் மிருக வைத்தியராக இருந்த ஒருவர், சுவிஸ் தொண்டர் அமைப்பொன்றின் நிதியுதவியில் மும்முரமாக கட்டாக் காலி நாய்களை மலடாக்கும் சத்திர சிகிச்சை முகாம்கள் நாடு தோறும் நடத்தினார். சம்பளம் எதுவும் இன்றி பயிற்சி மிருக வைத்தியர்களும் மாணவர்களும் பணியாற்றிய முகாம்களால் மிருக வைத்தியரின் கஜானா நிரம்பி வழிந்தது. சுவிஸ் நாட்டவர்களை வழியனுப்பி வைத்த கையோடு அவர்கள் அன்பளித்து விட்டுப் போன சத்திர சிகிச்சை உபகரணங்கள் மீள் பொதி செய்யப் பட்டு நூறு வீத லாபத்தில் (ஏனெனில் முதலீடு "0") விற்கப் பட்டன. சில மாதங்களில் கொழும்பில் ஒரு நவீன மிருக வைத்திய நிலையம் திறந்து இப்போது மில்லியனராகி விட்டனர் மிருக வைத்தியரும் அவர் வால்களும்.

இப்போது எஞ்சியிருக்கும் ஒரே தெரிவான கட்டாக் காலி நாய்களைக் கொன்றொழிக்கும் முறையை நடை முறைப்படுத்தப் போவதாக சிறிலங்கா அரசு அறிவித்திருக்கிறது. இதற்குப் பல தரப்புகளிலும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. முக நூலில் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்புத் தெரிவித்தும் சிறிலங்கா மிருக வைத்தியர்கள் கருத்துப் போர் நடத்தி வருகிறார்கள். சரியாக மூன்று வருடங்கள் முன்பு இன்று கட்டாக் காலி நாய்களின் உயிர்களுக்காக வாதிடும் சிங்கள மிருக வைத்தியர்கள் இதே முக நூலில் "தமிழர்களின் உயிரை விட நாட்டின் பாதுகாப்பும் இறைமையும் முக்கியம்" என்று வாதிட்டது எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. அதனால் தான் இப்பதிவுக்கு இப்படியொரு தலைப்பிட்டேன்.

ஒரு மிருக வைத்தியராக இருந்தும் நாய்களைக் கொல்வதை நான் ஆதரிப்பதாக நீங்கள் நினைக்கக் கூடும். ஒரு மிருக வைத்தியரின் சத்தியப் பிரமாணத்தின் படி நாங்கள் விலங்குகள் தேவையின்றித் துன்புறுவதைத் தடுக்க வேண்டும். அத்தோடு பொதுச் சுகாதாரம் குறித்த விடயத்தில் உணர்ச்சி பூர்வமாக அன்றி விஞ்ஞான ரீதியாக முடிவுகளை எடுக்க வேண்டும். பலருக்கு வியாபாரம் செய்ய வசதியாக சில மில்லியன் நாய்கள் தெரிவில் அலைவதும் அந்த நாய்களில் இருந்து தொற்றும் றேபிஸ் வைரசினால் வருடாந்தம் 150 பேர் வரை (2000 ஆண்டுக் கணக்கெடுப்பின் படி) சிறி லங்காவில் நரக வேதனை அனுபவித்துச் சாவதும் மிருகாபிமான, மனிதாபிமான ரீதியில் மட்டுமன்றி விஞ்ஞான ரீதியிலும் கூட ஏற்றுக் கொள்ளக் கூடியவையல்ல என்பது என் கருத்து.

இனி உங்கள் கருத்துகளுக்காக மௌனமாகிறேன்!

- ஜஸ்ரின்

Edited by Justin

இங்கு அவுஸ் இல் மிக முரட்டு இன‌ நாய்கள் உள்ளன. எப்படியோ அவைகள் எஜமானர்களின் பிடியில் இருந்து தப்பிப்போய் ஒவ்வொரு வருடமும் சிறுவர்களை கடித்துக் குதறி கொன்றுள்ளன. இவற்றை இம்மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என்று பலத்த அபிப்பிராயம் நிழவுகின்றது.

நாய்களை எனக்குப் பிடிப்பதில்லை. அவை வீதிகளை அசிங்கப்படுத்துவது சகிக்கமுடியாது.

அவற்றை இனம்பெருக விடாமல் செய்தால் நல்லது.

பூங்காக‌ளினுள் நாய்களைக் கொண்டுவருவதற்குத் தடை உள்ளது. சில பேர் நடக்க வருவது போல் நாயுடன் வந்து பூங்காவினுள் நாய்களின் காலை / மாலைக் கடன்களை சுவாத்தியமாகச் செய்யவிடுவார்கள் - ‍ தம் வீட்டு வளவை சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.

< சிறிலங்கா: இருபது மில்லியன் மக்கள்- ஏறக்குறைய அதே மில்லியன் கணக்கான நாய்கள், அவற்றில் பெரும்பாலானவை உரிமையாளர்கள் அற்ற கட்டாக் காலி நாய்கள். பல இடங்களில், இந்தக் கட்டாக் காலி நாய்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எஜமானர்களால் சோறு போட்டு வளர்க்கப் படும் "சமூக நாய்கள்" என அழைக்கப் படுகின்றன. பிரச்சினை என்னவெனில் தங்கள் சொந்த நாய்களுக்கே தடுப்பூசி போடத் தயங்கும் சிறி லங்காக் குடி மக்கள் இந்த சமூக நாய்களுக்கு தடுப்பூசி போடுவார்கள் என்பது நடக்காத காரியம்.>

ஜஸ்ரின் இந்தமுறையும் ஒரு நல்ல மிருகக் கதை சொல்லியிருக்கின்றார் என்று விழுந்தடிச்சு வந்து பாத்தால், விசர்நாயும் அதுகளை கொல்லவேணுமா ? இல்லையா ? அதுகள் கடிச்சால் என்ன எதிர்விளைவுகள் எல்லாம் வருமெண்டு ? விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார் . ஆனால் இது சத்தியமாக கதைகதையாம் பகுதிக்குள் வராது :unsure: . ஒன்றில் அறிவியல் தடாகம் அல்லது , நலமோடு நாம் வாழ்வோம் பகுதிக்குள் வரவேண்டியது. மற்றும்படி ஆக்கம் மிகவும் நன்றாக உள்ளது. என்னைக் கேட்டால் கட்டாக்காலி நாய்க்கு விசர்ப்பிடிச்சால் போச்சி வைத்துப் பால் குடுக்கமுடியாது . காரணம் , அப்பொழுது அந்தநாய் ஓர் உயிரி என்ற நிலைக்கு மேல்போய் நோய்க்கிருமிகளின் காவியாகச் செயல்படுகின்றது . எனவே கருணைக்கொலை தான் வழி . தொடருங்கள் ஜஸ்ரின் உங்கள் தரமான படைப்புகளைக் காத்திருக்கின்றோம் :):):) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கோ. யாராவது மட்டூஸ் உரிய பகுதிக்கு இதை நகர்த்தி உதவினால் நன்றி. மேலும் இது விஞ்ஞானம் மட்டுமல்ல-"என்னுடைய "சற்றே நீண்ட சமூகவியல் துண்டுப் பிரசுரமும்" ஆகும் <_< -எனவே கதை கதையாம் பகுதியும் கூடப் பொருத்தமானது தான்!

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காக‌ளினுள் நாய்களைக் கொண்டுவருவதற்குத் தடை உள்ளது. சில பேர் நடக்க வருவது போல் நாயுடன் வந்து பூங்காவினுள் நாய்களின் காலை / மாலைக் கடன்களை சுவாத்தியமாகச் செய்யவிடுவார்கள் - ‍ தம் வீட்டு வளவை சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.

கனடாவில் உள்ளதுபோல காலைக்கடனைப் பொறுக்கி எடுக்க வேண்டும் என்று அங்கே சட்டம் இல்லையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பகுதியிலுள்ள கட்டாக்காலி நாய்களைக் கொல்லாமல்... வடபகுதியில் கொண்டுவந்து விட திட்டமிடுவதாக செய்தி ஒன்று வாசித்தேன். அதன் தாக்கமே... ஜஸ்ரின் இந்தக் கட்டுரையை, எழுதத் தூண்டியது என நினைக்கின்றேன்.

தமிழனை, ரேபிஸ்நோய் தாக்கி அழியட்டும் என்று சிங்களவன் அடுத்த திட்டம் போடுகின்றான்.

கனடாவில் உள்ளதுபோல காலைக்கடனைப் பொறுக்கி எடுக்க வேண்டும் என்று அங்கே சட்டம் இல்லையா? :lol:

பொறுக்கி எடுக்கிறதா....? ஒண்டு போட்டதை, மற்றது சாப்பிட்டு போயிடும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயும் பூங்காக்களுக்குள் போக முடியாது புற்தரையெல்லாம் அவ்வளவு நாற்றமாக இருக்கும்...ஜஸ்டின் நல்லதொரு ஆக்கம் தொட‌ர்ந்தும் இப்படியான ஆக்கங்களை தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பொறுக்கி எடுக்கிறதா....? ஒண்டு போட்டதை, மற்றது சாப்பிட்டு போயிடும். :rolleyes:

ஒருசில பழசுகள் பொலித்தீன் பையுடன் திரிவார்கள்.யாராவது பார்த்தால் மட்டுமே எடுத்துச் செல்வார்கள். :lol: 

கனடாவில் உள்ளதுபோல காலைக்கடனைப் பொறுக்கி எடுக்க வேண்டும் என்று அங்கே சட்டம் இல்லையா? :lol:

உரிமையாளர்களே அகற்ற வேண்டும் என்ற நியதி பல கவுன்சில்களில் உள்ளன. பூங்காக்களிற்கு வெளியே வீதியில் இதற்கென்றே ரோல்களில் பிளாஸ்ரிக் பைகளை இரும்புத்தூண்களில் வைத்துள்ளார்கள். ஆனால் இவர்கள் இதையெல்லாம் எங்கே செய்கிறார்கள். நாய்களை தங்கள் வீட்டை விட்டு வெளியே எடுத்துச் சென்று கடன் கழிக்க வைப்பது தப்பு என்பது கலாச்சார ரீதியாக அவர்கள் உணரவேண்டும். ஆனால், நாய்களின் உடல் உள ஆரோக்கியத்திற்கு வெளியே கூட்டிசெல்ல வேண்டும் என்று இவர்கள் இதற்கு சாக்குச் சொல்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.