கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கண்ணீரும் செந்நீரும் கலந்திடும் கார்த்திகை இருபத்தியேழு சொல்லில் அடங்காச் சோகங்கள் சூழக் கண்சிமிடித் தமிழரை கைநீட்டி அழைக்கும் கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கார்த்திகை மைந்தர்கள் காவிய நாயகர் போர்க்களம் கண்டு புனிதர்கள் ஆகியே தூய்தமிழ் அன்னையின் தாய்மடித் தழுவித் தமிழர்தம் மனங்களில் தண்ணொளி வீசினர் கருத்தினில் தலைவன் கொள்கையை ஏற்றவர் கந்தக குப்பியைக் கழுத்தினில் சுமந்தவர் தரைப்படை கடற்படை தரணியில் கண்டவர் வையம் வியந்திட வான்படை அமைத்தவர் வரிப்புலி வடிவாகி வீரத்தில் திளைத்தவர் உணவு உறக்கம் உறைவிடம் மறந்தவர் காடுகள் களனிகள் கூடிடும் காப்பனர் வெடிகள் சுமந்தே வெந்தணல் ஆகினர் அன்னையும…
-
- 0 replies
- 189 views
-
-
ஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
AI திருட்டு - பஞ்ச பூதங்கள் என்று எனது AI செல்லதிடம் கேட்டபோது அவள் தந்த கவிதை😂 நிலம் எனும் தாய் தன் மார்பில் நம்மை தாங்கி, நீரின் ஓசையில் நம் உணர்வுகள் பாய்ந்து, காற்றின் சுவாசத்தில் நம் சிந்தனைகள் ஓடி, நெருப்பின் வெப்பத்தில் நம் உயிர் ஜொலித்து, ஆகாயத்தின் அமைதியில் நம் ஆன்மா பரவி... பூமியின் உறுதியால் நம் பாதங்கள் நிலைபெற்று, நீரின் நெகிழ்வால் நம் நெஞ்சங்கள் மெலிதாகி, வாயுவின் வேகத்தில் நம் கனவுகள் பறந்து, அக்னியின் ஆற்றலில் நம் ஆழங்கள் வெளிப்பட்டு, ஆகாசத்தின் அகலத்தில் நம் ஆத்மா ஒளிர்ந்தது. இவை ஐந்தும் நம்முள் ஒவ்வொரு நொடியும் இசைபோல் ஒலிக்கின்றன, உறுதி, உணர்வு, இயக்கம், ஒளி, அமைதி — இவை இல்லாமல் உயிர் இல்லை, இவை ஒன்றாகவே நம் ஆன்மாவின் மொழி.
-
-
- 2 replies
- 144 views
- 1 follower
-
-
அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒ…
-
-
- 4 replies
- 393 views
-
-
நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் யாரின் முகமூடி கிழிக்கவோ திறந்த முகத்தில் குத்தி கூர்பார்கவோ அல்ல எமக்கான விளையாட்டு காற்றில் கத்தி வீசுவது என் தூரம் அறிந்தே வீசுகிறேன் எல்லைக்கு உட்பட்டு மழுங்கிய கத்தி கொண்டே வீசுகிறேன் காற்றை கிழிக்கும் ஓசை எனக்கானது காற்றின் அறைகூவல் வீசட்டும் மணலில் கத்தி சொருகி நிலை கொண்டிருப்பேன் அது ஓயும்வரை ஒளி, ஒலி பிழை இருக்கலாம் காற்றை கிழிப்பதில் இருக்கிறது விளையாட்டின் வெற்றி எனக்கும் பிரிகையில் காற்றுக்கும் இதுவரை தோற்றாலும் இது ஒரு விளையாட்டு அவ்வளவே! http://pakkam5.blogspot.com/2006/05/blog-post…
-
-
- 338 replies
- 119.1k views
- 2 followers
-
-
அனுராவின் அலை இன்னும் வருகுதாம் அள்ளிப் போக வாக்கை கண்டீர் என்னென்னமோ தாறம் என்று ஏமாற்றும் வித்தை பாரும் வடக்கையும் கிழக்கையும் இரண்டா பிரிச்சுப் போட்ட வந்து இப்போ என்ன கதை சும்மா பொய்கள் சொல்ல வேண்டாம் அண்ணன் தம்பி என்று சொல்லி இப்ப என்ன சமத்துவக் கதை அப்போ எல்லாம் என்ன செய்தீர் நாங்கள் பட்ட துன்பம் கண்டும் கூட ஆமியோடு சேர்ந்து இருந்து எங்கள் இருப்பை எல்லாம் தொலைத்தனீங்கள் அகதியாக்கி எம்மை அலைந்து திரிய கலைத்தனீர்கள் இனவாதப் பேய்களோட நீங்கள் இருந்ததெல்லாம் உண்மை தானே சோசலிசம் கொம்யூனிசம் என்று கொள்கை எல்லாம் சொல்லிறியள் அங்க அது ஒன்றும் இல்லை என்று அறிந்தவனும் தெரிந்தவனும் அறிவர் உண்மையான சோஷலிசவாதி ஒடுக்கப்படுபவன் உரிமைக்காய் குரல் கொடுப்பான் …
-
- 0 replies
- 280 views
-
-
சமூகச் சிந்தனையாளர் பெரியார் பற்றிப் பிரலாபம் செய்பவர்கள் யாராகினும், அவரின் வழியொற்றி நீங்கள் வாழாதிருப்பின் உங்களுக்கு ஒன்று சொல்வேன் உங்களது வேலிக்குள் உங்களது ஆட்டைக் கட்டிவைத்துவிட்டு எல்லா ஆடுகளுக்கும் சுதந்திரம் வேண்டி நீங்கள் ஆர்ப்பரிப்பதன் வஞ்சகம் எதுவென்பதை நானறிவேன். அவிழ்த்து விட்டேன் என் ஆட்டை அதுதான் அடைந்து கிடக்கிறது நான் என் செய்வேன் என்பவர்க்கு நானின்றொன்று சொல்வேன் உன் சொந்தப்பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் உன் ஆட்டுக்கு விடுதலை பற்றிய உபதேசம் நீ செய்யவில்லையெனில் வேறெந்த ஆட்டுக்கும் நீ விடுதலை உபதேசம் செய்யாதே. விடுதலை பெற எண்ணும் ஆடுகளை வேட்டையாடும் நோக்கம் மட்டுமே உன்னுடையது என்பதை எவரும் கண்டு கொள்வார்கள். . முதலில் உன்பட்டியின் ஆட்டை, ஆட…
-
-
- 11 replies
- 502 views
- 1 follower
-
-
வருமானம் தருகின்ற உணவுகளில் செரிமானம் தராத பரோட்டாவே முதலிடம்! சிலர் பரோட்டா என்பர் சிலர் புரோட்டா என்பர் இதில் எது சரியென்று தெரியாது ஆனால் இவ்வுணவே சரியில்லை என்பதுதான் உண்மை! இது பண்டை காலத்து உணவல்ல... அண்டை நாட்டு உணவு! வயிற்றை நிரப்பி வாழ் நாளை குறைக்கும்! சுண்டி இழுக்கும் அண்டிப் போகாதே! இப்போதெல்லாம் எமதர்மன் மாடு மீது வராமல் மைதா மாவுமீது வருகிறான்... எச்சரிக்கை!!! 😋 😋.... 🙂 படித்ததில் பிடித்தது.
-
- 1 reply
- 271 views
-
-
1. "ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது.... எடை குறைவாக...!" 2. "வராந்தாவிலேயே இருந்த வயதான தந்தை.... இறந்த பின் ஹாலுக்குள் வந்தார் புகைப்படமாய்...!" 3. “வீட்டின் பெயரோ அன்னை இல்லம்..! அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்..!” 4. " புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை...." - நா. முத்துக்குமார். 5. " பறித்த மலரை ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன? கல்லறையில் வைத்தாலென்ன? மலருக்கென்னவோ பறித்ததுமே வந்துவிட்டது மரணம் ! " 6. “சர்க்கரை இல்லை... கொழுப்பு இல்லை... எஜமானரோடு வாக்கிங் போகுது ஜிம்மி...!” 7. "வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட…
-
- 0 replies
- 334 views
-
-
காத்திருப்பேன் மச்சான் கண் உறங்காமல் -பா.உதயன் 🌺 வழி நெடுக மல்லிகைப் பூக்கள் மச்சாள் உனக்கு பறிச்சு வரவா பார்த்து பல பூவாய் பறிச்சு வாடா பவளம் உனக்காக பார்த்து இருப்பாள் கடைகள் முழுக்க காப்பு வளையல் கண்ணம்மா ஒரு சோடி வேண்டி வரவா கைக்கு அளவாக வேண்டிவா மச்சான் காஞ்சிபுர சேலைக்கு சோடாய் இரண்டு காலுக்கு இரண்டு கால் சலங்கை கண்ணம்மா உந்தன் காலுக்கு அளவாய் மேளத்தின் தாளத்துக்கு ஆடும் உன் அழகுக்கு வெள்ளிக் கொலுசு கொண்டு நான் வாறேன் மச்சான் உனக்காய் பார்த்து இருப்பேன் பனம் பலகாரம் சுட்டு நான் வைப்பேன் அடுத்த வீட்டு மாமிக்கு மணக்க மணக்க ஆறு ஏழு கறியோட சோறும் சமைப்பேன் பச்சை நிறத்தில சேலை இரண்டு பவளம் உனக்காய் கொண்டு…
-
- 0 replies
- 342 views
-
-
-
-
- 5 replies
- 574 views
-
-
உலகம் இன்று நீதி தர்மம் அறம் அத்தனையும் தொலைந்து சுழல்கிறது எங்குமே யுத்த சத்தங்களும் மனிதப் பேரழிவுமாய் பசி பட்டினியுமாய் மனிதத் துன்பங்களுமாய் கிடக்கிறது. இனி பிறக்கும் வருடத்தில் எங்கும் மனிதாபிமானமும் அமைதியும் சமாதானமும் நிலவி இருள் கடந்து ஒளி பிறக்கட்டும். -பா.உதயன் செந்தமிழாய் எங்கும் இசை- காலை புலரும் நேரம் கடல் கரையில் ஒரு ஓரம் தானாய் வந்த பறவை எல்லாம் ஏதோ சொல்லிப் பாடுது ஏழு கடல் ஓடி வந்து எத்தனையோ வர்ணம் தீட்டும் காடு எல்லாம் ஆடி ஆடி கவிதை பல பேசும் ஆலமரம் செழித்து நிற்கும் அன்னைத் தமிழ் இசை பாடும் பாடி வரும் தென்றல் காற்று பண் இசைத்து ஓடி வரும் வசந்தம் எல்லாம் பூத்திருக்கும் வானம் எங்கும் கவி பாடும் பச்சை கிளி பறந்து …
-
-
- 3 replies
- 400 views
-
-
உலகே மாந்தநேயம் இழந்தாயே!-மா.பு.பாஸ்கரன் – யேர்மனி. Posted on December 29, 2024 by சமர்வீரன் 33 0 அன்பின் மொழியில் பேசுங்கள் ஆண்டவன் மொழியில் சிந்தியுங்கள் என்று கூறிடும் மேற்கும் கிழக்கும் உன் வசதிக்கேற்ப நியாயங்களை நினைத்தவாறு வளைத்தபடி நீள்வளமாகக் கிடப்பதுமேன்? காஸா மனித வேட்டையை வேடிக்கைபார்க்கின்ற சிந்தனையை மாற்றிடும் போக்கைக் காண்பாயா மூன்று வாரமேயான குழந்தை சிலா(SILA) குளிரில் வாடியே இறந்ததை அறியாது மருத்துவமனைக்கு கொண்டு போனதும் மரணம் பற்றி அறிந்து கொண்டதும் தாயின் மனதையும்; தந்தையின் நிலையையும் விபரிக்க வார்த்தைகள் ஏதும் உண்டா? உலகுக்கென்ன ஆறாந்தலைமுறை ஆயுதங்களுக்…
-
- 0 replies
- 297 views
-
-
கே. சச்சிதானந்தனின் கவிதை ஒன்று. இதை ஜெயமோகன் அவரது தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். எங்கும் போரால் நிறைந்திருக்கும், அப்பாவி மக்களை ஆதரவற்றவர்களை பலவீனமானவர்களை கொன்று குவிக்கும் இன்றைய உலகிற்கு ஏற்ற ஒரு கவிதை இது வென்றோம் என்றவர்களே தோற்றவர்கள் ஆகின்றனர். https://www.jeyamohan.in/208930/ ********************************************************** இறுதிவிருப்பம் ---------------------- நான் அசோகன் பிணக்குவியல்களின் துயரம் நிறைந்த காவல்காரன் சகோதரர்களின் தலைகளை மிதித்து ரத்தநதியை கடக்கும் துரியோதனன் குருதிகலசத்தை கிரீடமாக்கிக்கொண்ட வெறும் ஊன்தடி என் கழிவிரக்கம் …
-
- 0 replies
- 613 views
-
-
தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன் தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் சோக்காய் தான் வாச்சுப்போச்சு இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு சுத்தி அடிச்சு கதை பேசி சும்மா எல்லாம் உசுப்பேத்தி நாளுக்கு ஒரு கதை சொல்லி ஆளுக்கு ஒரு அரசியல் ஆய்வாளர் போல காலை ஒரு காணொளி மாலை ஒரு காணொளியாய் கனக்கவெல்லோ வருகுதிப்போ புலத்திலும் தான் நிலத்திலும் தான் சிங்கம் தனியா சிங்குலா வருகுது கோட்டைக்கு என்று வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்லி அரசியல் வகுப்பு எடுக்கினம் யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே கனக்க எல்லாம் புழுகியடிச்சு பணத்தை மட்டும் பார்கிறார்கள் சொந்த இனத்தை எண்ண…
-
-
- 15 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 573 views
-
-
கவிஞர் வீரா அவர்களின் கவிதைகளில் ஒன்று..
-
-
- 1 reply
- 1.6k views
-
-
வழுவழுப்பான யுத்த வீதியின் சலனமில்லா சதுரங்களில் சாம்ராஜ்ய சண்டைகளில் சமத்துவம் தேடி.......... கறுப்பன் வீழ்த்திய வெள்ளையனின் சிரசுகள் களத்தின் ஒரத்தில் கதியின்றி.... துண்டாடிய சிரசுகளில் சிப்பாய்க்கு சில்லறைகள். அரசிக்கு ஏன் ஆயிரங்கள் கட்டங்களில் முன்னேறி வெள்ளை ராஜாவின் கதைமுடித்து களம் இப்போ கறுப்பர் கையில் அளிவிலா பலம் பெற்றும் அரசனவன் போனபின்பு ஏன் ஆளாது அடங்கிப்போனாள் அரசியவள் ஆட்டம் ஓய்ந்து போச்சு மேசை மீதான வன்முறைகள் பலகை மேல் மரண வாடை உணர்வதில்லை குப்புறக் கவிழ்ந்த முகங்கள். …
-
-
- 1 reply
- 917 views
- 1 follower
-
-
பிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்…
-
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
'அகழ்' இணைய இதழில் ஹால் சிரோவிட்ஸின் கவிதைகள் சிலவற்றை க.மோகனரங்கன் மொழியாக்கம் செய்துள்ளார். நாங்கள் சாதாரணமாக சொல்லிக் கொள்ளும் சில பகிடிகளை கவிதையாக எழுதியது போன்றுள்ளது. இலகுவான வாசிப்புக்கு ஏற்ற இந்தக் கவிதைகள் வாசிக்கும் போது புன்னகைக்க வைக்கின்றன. அங்கிருந்த இரண்டு கவிதைகளை இங்கு இணைத்துள்ளேன். மிகுதிக்கான இணைய இணைப்பு அடியில் உள்ளது. ************************************************************************* 1. புகழ் விளையாட்டு ------------------- உங்களுக்கு பிரபலமாக இருக்க வேண்டும் என்கிற தேவை உள்ளது என் சிகிச்சையாளர் கூறினார், ஆனால் முதலில் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன் எல்லா பிரபலமான நபர்களையும் நீங்கள் பார்த…
-
-
- 3 replies
- 674 views
-
-
https://fb.watch/sMOjOYe7Et/?mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V கேட்டுப் பாருங்கள்
-
-
- 1 reply
- 622 views
- 1 follower
-
-
"எரியுண்ட நூலகம் / முருகேசு மயில்வாகனன்" யூத கவிஞரான ஹெயினின் வார்த்தைகள் இவை. “எங்கே புத்தகங்களை எரிக்கிறார்களோ, அங்கே ஈற்றில் மனிதர்களையும் எரிப்பார்கள்” எவ்வளவு உண்மை. Quoting from the Jewish poet Heinrich Heine. “Where they burn books, at the end they also burn people” How true is it.
-
-
- 2 replies
- 472 views
-
-
"ராமன் எத்தனை வஞ்சகனடி?" "தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய சொற்களால் சீதைக்கு எய்தவனை நங்கையர் மூக்கு அறுத்தவனை தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!" "தீர மிக்க வாலியை வஞ்சித்து குரங்கின் உதவி பெற்றவனை தீவின் சிறையில் நிமிர்ந்து நின்றவளை இரக்கமின்றி தீயில் இறக்கியவனை தீதோ நன்றோ ஒன்றாய் வாழ்ந்தவளை இரக்கமற்று காடு அனுப்பியவனை தீபம் ஏற்றி 'ராம-சீதை'யாக வாழ உரத்த குரலில் தொழுகின்றனர்!!" [கந்தையா தில…
-
-
- 3 replies
- 668 views
- 1 follower
-
-
தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை. வட்ஸ்அப்பில் எனக்கு ஒரு அன்பர் பகிர்ந்ததை யாழ்க்கள உறவுகளோடு பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி
-
-
- 2 replies
- 403 views
-