Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள் இவை. யாழ் வாசகர்களுக்காகத் தருகிறேன்.

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க

அரக்கன் பிடியில் அகப்படாத நாளில்

அரைகுறை வயிறுதான் - ஆயினும்

அழியவில்லை எங்கள் அழியாச் சின்னங்கள்

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

வளம் கொழிக்கும் வன்னி மண்ணின்

வாசல் வரை வந்தான் அன்று

வாசமின்றி வாடுகின்றோம் நாமின்று

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

கடைசிவரை கலங்காத மக்கள் - தம்

கச்சையும் இழந்து இன்று கயவன் பிடியில்

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

பூசிக்க வேண்டியவர்களைப் பூவின்றிப் புதைத்தோம்

பார் போற்றியவரை பாதையில் கைவிட்டோம்

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

அழிந்து போன ஆத்மாக்களை அடக்கம் செய்ய யாருமில்லை

அழக்கூட ஆருமின்றி அழுதோம்

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

கருணை நிறுவனத்தின் காலை மாலை கஞ்சிக்காய்

தினம் தினம் கடைசி வரிசையில் கையேந்தினோம் கஞ்சிக்காக

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

அரிசிக்கு அலுத்து அப்பனுக்கு அடிவயிறு நோ

பிள்ளை பசி போக்க பாலின்றி பதைபதைத்தாள் பவளம்

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

அடுத்த வீட்டில் அடங்காத அழுகுரல்

கழுத்தை அறுத்து விட்டான் அக்கினிக் குண்டால்

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

செத்துக் கிடந்தன உயிர்கள் கொத்துக் குண்டுகளால்

அதைக் காவிச் செல்ல அன்று கனபேருக்குச் சக்தியில்லை

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

கூட்டுக்குடும்பமாகக் குலாவி வாழ்ந்தோம்

தினம் போட்டு வதைத்தான் பொல்லாதவன்

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல

மனதை அடக்கமுடியவில்லையே அரக்கன் செய்த அழிவுகளை

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

பட்டுச்சட்டை கட்டிய பருவமங்கைகள் வாழ்வில்

குங்குமப் பொட்டு வைக்கும் பாக்கியம்; புதைந்து போனது இன்று

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க....

அழித்து விட்டான் அன்னை தந்தை வாழ்வை

இங்கு அலைகின்றார் மழலையர் அன்பின்றி அனுதினமும்

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

எத்தனை இரவுகள் இங்கு நித்திரை இன்றிப் பலர்

தினம் பாதகன் செய்த வதைகளால் பலர் வாழ்வில் நிரந்தர நித்திரை

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

புத்துணர்வுகளைத் தந்த புலிகளின் குரலே

நீயும் கத்திக் கத்திச் சொன்னாய் எட்டவில்லை கடைசிவரை உலகத்துக்கு.....

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

வாழ்வாதாரம் தரவேண்டிய வணங்காமண் கப்பலே

உன்னை தத்தளிக்கும் நடுக்கடலில் தடுத்துவிட்டான் தயவின்றி....

நெஞ்சு வெடிக்சுது கவிதை வடிக்க....

புழுதி மண்ணில் பதைந்த பூக்கள் எத்தனை

உடல் செழிக்கவேண்டிய செங்குருதி

உடல் சிதைந்ததால் போனது செழுமை

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க....

பச்சிளம் குழந்தைகளின் பாதி வாழ்க்கை பறித்தான்

துயரைக் கத்திக் கத்தி அழ கண்ணீரும் இல்லை மண்ணில்

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க....

அழிந்து போகும் வேளையிலும் அணைத்துக் கொண்ணடது ஐ சி ஆர் சி

இனம் புதைக்கப்படவில்லை அங்கு விதைக்கப்பட்டுள்ளது.

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க....

கண்ட இடமும் பிணக்குவியல் கடற்கரையெங்கும் மலக்குவியல்

எம் மாதர் பட்டபாடோ மனம் சொல்ல மறுக்குது

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க....

சிறுநீர் கழிக்கக்கூட சிந்திக்கவேண்டிய நேரம்

எங்கும் மறைப்பின்றி மங்கையர் மனவேதனை எத்தனை எத்தனை

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க....

புலி போனதால் இனத்தின் விழி போனது அன்று

சிங்கப் படை வேண்டாம் என்றும் புலிவாடை போதும் எங்கும்.

பளையூரன்

05-05-2012

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :(

புலி போனதால் இனத்தின் விழி போனது அன்று

சிங்கப் படை வேண்டாம் என்றும் புலிவாடை போதும் எங்கும் ,

இனத்தின் இழநிலை போக்கப் போதும் எங்கும் ,

என்றும் , புலிவாடை போதும் ...............

  • கருத்துக்கள உறவுகள்

மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள் இவை. யாழ் வாசகர்களுக்காகத் தருகிறேன்.

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க

புத்துணர்வுகளைத் தந்த புலிகளின் குரலே

நீயும் கத்திக் கத்திச் சொன்னாய் எட்டவில்லை கடைசிவரை உலகத்துக்கு.....

நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க...

வாழ்வாதாரம் தரவேண்டிய வணங்காமண் கப்பலே

உன்னை தத்தளிக்கும் நடுக்கடலில் தடுத்துவிட்டான் தயவின்றி....

நெஞ்சு வெடிக்சுது கவிதை வடிக்க....

புலி போனதால் இனத்தின் விழி போனது அன்று

சிங்கப் படை வேண்டாம் என்றும் புலிவாடை போதும் எங்கும்.

புலம்பெயர் மக்களையும்

புரிந்து கொண்டீரே

நன்றி ஐயா

எதையும் நாமும் மறவோம்

என் பிள்ளைக்கும்;

அவன் பிள்ளைக்கம்

இந்தக்கோரத்தை விதைத்தே சாவேன்

  • கருத்துக்கள உறவுகள்

மகசீன் சிறையில் இருந்தபடி இப்படி ஒரு கவிதையை எழுதி வெளியுலகிற்கு அனுப்பிவைக்க முடிகிறதா?

அப்படியானால் சிறைச்சாலையில் அவர்களுக்கு எழுத்து சுதந்திரம் இருக்கிறதா?

இவரால் எழுதி வெளி உலகிற்கு தன் உணர்வுகளை அனுப்ப முடிகிறது என்றால் மற்றவர்களுக்கும் இந்த வசதி இருக்கும்தானே...

இவரின் கவிதையைப் பழிக்கவில்லை மிகுந்த உணர்வோடு ஒரு இனத்தின் வலியை வடித்திருக்கிறார். வாசிக்கும்போதுமனம் கனப்பதை மறுக்க முடியாது....ஆனால் சிறையில் இருந்து எழுதுகிறார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி சிங்களத்தின் சிறையில் இருந்து இத்தகைய கவிதையை எழுத முடியும்? அதுவும் எழுதிய கவிதையை சிறைக்கு வெளியே அனுப்பி வைக்க முடிகிறது? சிங்களச் சிறைச்சாலையில் தமிழர்கள் எழுதும் சுதந்திரத்தோடு வாழ அனுமதிக்கப்படுகிறார்களா? சாந்தி இதை வேண்டுமென்று கேட்கவில்லை...உண்மையிலேயே நிலவரம் புரியவில்லை அதனால்தான் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலோடு

காவல் தெய்வங்களை இழந்தோம்

எத்தனை நாட்களுக்கு

தீப்பற்றிய மனதுடன்

வாழ்ந்து முடிக்கப்போகிறோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகசீன் சிறையில் இருந்தபடி இப்படி ஒரு கவிதையை எழுதி வெளியுலகிற்கு அனுப்பிவைக்க முடிகிறதா?

அப்படியானால் சிறைச்சாலையில் அவர்களுக்கு எழுத்து சுதந்திரம் இருக்கிறதா?

இவரால் எழுதி வெளி உலகிற்கு தன் உணர்வுகளை அனுப்ப முடிகிறது என்றால் மற்றவர்களுக்கும் இந்த வசதி இருக்கும்தானே...

இவரின் கவிதையைப் பழிக்கவில்லை மிகுந்த உணர்வோடு ஒரு இனத்தின் வலியை வடித்திருக்கிறார். வாசிக்கும்போதுமனம் கனப்பதை மறுக்க முடியாது....ஆனால் சிறையில் இருந்து எழுதுகிறார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி சிங்களத்தின் சிறையில் இருந்து இத்தகைய கவிதையை எழுத முடியும்? அதுவும் எழுதிய கவிதையை சிறைக்கு வெளியே அனுப்பி வைக்க முடிகிறது? சிங்களச் சிறைச்சாலையில் தமிழர்கள் எழுதும் சுதந்திரத்தோடு வாழ அனுமதிக்கப்படுகிறார்களா? சாந்தி இதை வேண்டுமென்று கேட்கவில்லை...உண்மையிலேயே நிலவரம் புரியவில்லை அதனால்தான் கேட்கிறேன்.

இப்போதைய கணணியுகம் அன்னம் புறா தூதுவிடும் காலத்திலா இருக்கிறது ? சிறைச்சாலை விதிகளை மீறி எவ்வளவோ விடயங்கள் நடக்கிறது. அது இலங்கையில் மட்டுமல்ல உலகச் சிறைகளிலும் வினையென்று தெரிந்தும் விதிகளை மீறுகிறார்கள் கைதிகள்.

தனது உணர்வுகளை இந்தக்கவிஞன் (முன்னாள் போராளி) தனது சொந்தப்பெயரில் வெளியிட்டிருந்தால் நீங்கள் கேட்கிற எழுத்துச் சுதந்திரம் பற்றி பேசலாம்.

மன்னிக்கவும் சகாரா. நீங்கள் அன்னம் புறா தூதனுப்பிய காலத்தில் கேட்க வேண்டிய கேள்வியை இந்தக் கணணியுகத்தில் கேட்பது சற்று யோசிக்க வைக்கிறது.

நேசக்கரம் வெப்சைற்றில் போய் பாருங்கோ எத்தனை கைதிகளின் கடிதங்கள் குரல்கள் பதிவுகள் இருக்கிறது என்பதனை. பார்த்து கேட்டுவிட்டு முடிவெடுங்கள் இலங்கைச் சிறைகளின் சுதந்திரம் எத்தகையது என்பதனை.

மற்றும் பிபீசி உட்பட அச்சு இலத்திரனியல் ஊடகங்களின் போன்ற ஊடகங்கள் யாவிலும் இலங்கைச் சிறையில் குரல்கள் மறுக்கப்பட்ட தமிழ் கைதிகளின் குரல்களும் கடிதங்களும் வந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு விடயம் கப்பல் ஏறி கனடா ஐரோப்பா அவுஸ்ரேலியா போகலாம் என்ற கனவுகளோடு கப்பலேறிய முன்னாள் போராளிகள் பலர் இன்று ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் பல சிறைகளில் கைதிகளாக இருக்கிறார்கள். அவர்களும் இந்தக்கணணி யுகத்தை பயன்படுத்துகிறார்கள். அங்கும் சுதந்திரமில்லை அத்துமீறிச் சிலவற்றை செய்கிறார்கள்.

கடந்தவாரம் ஆபிரிக்கா நாடொன்றின் சிறையில் இருக்கிற சில போராளிகளுக்கு அவசரமாக தொலைபேசிக்கு பணம் தேவைப்பட்டது. அதற்கான பணத்தை ஐரோப்பாவில் இருக்கிற நான் குறித்த சிறைச்சாலையில் பணிபுரியும் ஒரு அதிகாரியின் பெயருக்கு மணிகிராம் மூலம் அனுப்பி அந்த அதிகாரி தனக்கும் ஒருபகுதியை பிடித்துக் கொண்டு உரியவர்களுக்கு கொடுத்தார்.

இதேபோல வன்னிக்குள் யுத்தம் நிகழ்ந்த நேரம் வழிகள் எல்லாம் அடைத்து பிணங்கள் விழவிழ புலிகளின்குரலும் ஈழநாதமும் வெளிவந்து கொண்டுதானிருந்தது. செய்மதி தொலைபேசிகள் இயங்கிக்கொண்டுதானிருந்தது செய்திகள் பங்கரிலிருந்தும் சொல்லப்பட்டுக் கொண்டுதானிருந்தது.

எங்கள் சமகாலத்தை பதிவு செய்கிற தீபச்செல்வனும் சிங்கக்குகைக்குள் இருந்தபடிதான் எழுதிக்கொண்டிருக்கிறான். எத்தனையோ முறை தீபச்செல்வன் எத்தனையோ விசாரணைகள் தண்டனைகள் பெற்றும் தனது உணர்வுகளை எழுதிக்கொண்டேயிருக்கிறான். அங்கே எழுத்துச் சுதந்திரம் இருக்கிறபடியால் தீபச்செல்வன் எழுதவில்லை. தீபச்செல்வன் இருப்பது திறந்தவெளிச் சிறைச்சாலை பளையூரான் இருப்பது இரும்புக்கம்பிகளால் இறுக்கப்பட்டு 50அடி உயரத்தில் சுவர் எழுப்பப்பட்ட சிறைச்சாலை ஆக இரு கவிஞர்களும் இருப்பது சிறையில்.

பிற்குறிப்பு :-

பளையூரானை வெளியில் எடுக்க அதாவது வழக்கை நடாத்தி வெளியில் வர 50ஆயிரம் ருபா பணம் இருந்தால் பளையூரான் குடும்பத்தோடு இணையலாம். கருணையுள்ள கவிஞர்கள் யாராவது மனம் வைத்தால் கவிஞன் பளையூரானுக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பளையூரானின் கையெழுத்தில் வந்த கவிதை. அதனையே தட்டச்சி போட்டிருந்தேன்:

1-2.jpg

2-1.jpg

3-2.jpg

4-2.jpg

5-1.jpg

6-1.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளத்தில் நல்ல உள்ளம்......

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குக் கிடைத்த பிரதியை தட்டச்சுச் செய்து போட்டுள்ளீர்கள் நல்லது.

சாந்தி நீண்ட நாட்களாக ஒரு நெருடல் நீங்கள் இணைக்கும் கடிதங்கள் அநேகமாக கையால் எழுதப்படும் எழுத்துக்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றனவே..... எல்லோரும் ஒரேமாதிரியாக எழுதும் தன்மை உடையவர்களா? எழுத்துக்களில் வித்தியாசம் பிடிப்பது கடினமாக இருக்கிறது.

உங்கள் பதிலுக்கு நன்றி சாந்தி

எனக்கும் உங்களைப் போல் வேறுவகையில் பொறுப்புகள் இருக்கின்றன. அவற்றை செய்வதே திக்குமுக்காட்டமாக இருக்கிறது. ஆகவே அதிகளவில் இதற்கு என்னால் உதவி செய்யமுடியாது கனடாவில் நேசக்கரத்திற்கு உதவி செய்பவர்கள் யாராவது இருந்தால் தெரிவியுங்கள் அவர்களிடம் என்னால் முடிந்த உதவியைச் செய்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தில் நல்ல உள்ளம்......

லியோ இந்தப்பாடலை நேற்று இங்கு இணைக்க வேண்டுமென தொடுப்பு எடுத்து வைத்திருந்தேன். நன்றிகள் இணைப்பிற்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குக் கிடைத்த பிரதியை தட்டச்சுச் செய்து போட்டுள்ளீர்கள் நல்லது.

சாந்தி நீண்ட நாட்களாக ஒரு நெருடல் நீங்கள் இணைக்கும் கடிதங்கள் அநேகமாக கையால் எழுதப்படும் எழுத்துக்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றனவே..... எல்லோரும் ஒரேமாதிரியாக எழுதும் தன்மை உடையவர்களா? எழுத்துக்களில் வித்தியாசம் பிடிப்பது கடினமாக இருக்கிறது.

உங்களது எழுத்து வித்தியாசம் பிரித்தறியற முடியாமைக்கு எதையும் செய்ய முடியாது சகாரா. வேணுமானால் கடிதங்களை அனுப்புகிற கைதிகளுடன் நீங்கள் நேரடியாகவே உங்கள் சந்தேகத்தை கேட்டு தீர்த்துக்கொள்ள வழியை ஏற்படுத்தித்தர முடியும். அவர்களுடன் கதைத்து உங்கள் எழுத்து வித்தியாசங்களில் உள்ள ஒற்றுமையை அல்லது வேற்றுமையை அறிந்து கொள்ளலாம். தனிமடலில் பளையூரானுடன் பேசுவதற்கானதும் இதர கைதிகளுடன் பேசுவதற்குமான தொடர்புகளை அனுப்பிவிடவா ?

1988காலப்பகுதியில் எங்கள் ஊருக்குள் போராளிகள் வாழ்ந்த நேரம். றோய் என்றொரு அண்ணா இருந்தார். அவரது கையெழுத்து நல்ல அழகு. நான் உட்பட அவருடன் பழகிய பலபிள்ளைகள் அவரது எழுத்தின் சாயலைப் பழகிக்கொண்டோம். அது பின்னர் வளர்ந்து பெரிய வகுப்புகள் வந்தும் அதே எழுத்து சாயலில் தான் எழுதுவேன். என்னுடன் கற்ற மாணவர்கள் அனேகரிடத்தில் இருந்தது.

எனது எழுத்தை மாற்றக்காரணமாயிருந்த றோயண்ணா 1990இல் வீரச்சாவடைந்து கப்டன் றோயாகி இன்று 22வருடங்கள் ஆகப்போகிறது. இன்னும் அந்த எழுத்தை நான் மாற்றவேயில்லை. அப்படியே றோயண்ணாமாதிரியே எழுதுவேன். வவுனியனின் கையெழுத்தும் எனது எழுத்துப்போன்றே றோயண்ணாவின் எழுத்தைப்போலவே இருக்கிறது. இதனை பலமுறை நானும் யோசித்ததுண்டு. இதனைவிடவுடம் பல போராளிகளின் கையெழுத்துக்கள் றோயண்ணாவின் எழுத்துப்போலவே அமைந்ததையும் பார்த்திருக்கிறேன்.

சிலவேளை நான் றோயண்ணாவின் எழுத்தை இன்னும் மறக்காதிருப்பதால் அப்படியொரு எண்ணம் எனக்குள் இருக்கிறதோ தெரியாது.

உங்கள் பதிலுக்கு நன்றி சாந்தி

எனக்கும் உங்களைப் போல் வேறுவகையில் பொறுப்புகள் இருக்கின்றன. அவற்றை செய்வதே திக்குமுக்காட்டமாக இருக்கிறது. ஆகவே அதிகளவில் இதற்கு என்னால் உதவி செய்யமுடியாது கனடாவில் நேசக்கரத்திற்கு உதவி செய்பவர்கள் யாராவது இருந்தால் தெரிவியுங்கள் அவர்களிடம் என்னால் முடிந்த உதவியைச் செய்கின்றேன்.

தவறாக விளங்கியுள்ளீர்கள் சகாரா. நான் உங்களுக்கு பொறுப்பில்லையென்று கூறவரவில்லை. கனடாவில் யாரும் நேசக்கரத்திற்கு பணம் சேகரிப்பாளர்கள் இல்லை. உதவி செய்ய விரும்புகிறவர்கள் விபரங்களை பெற்று நேரடியாகவே செய்கிறார்கள். அப்படி நீங்களும் விரும்பின் தனிமடலில் ஒரு குடும்பத்தின் விபரத்தை தருகிறேன். நேரடியாகவே உதவியை வழங்குங்கள்.உங்களால் முடிந்த மனதைரியத்தையும் அக்குடும்பத்திற்கு கொடுத்தால் அது பேருதவியாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

shanthy

என்னுடன் கற்ற மாணவர்கள் அனேகரிடத்தில் இருந்தது.

ம்... அப்ப பள்ளிக்கூட பக்கம் போயிருக்கிறியள் எண்டு விளங்கிது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றோய் தொண்ணூறாம் ஆண்டு தலைக்

காயத்தால் கோமா நிலையிலிருந்து

சில நாட்களின் பின் கப்டன் றோயாய்

வீரச்சாவு அடைந்தான்.அவனது

எழுத்துக்கள் அழகானவை

அவனது மனதைப்போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றோய் தொண்ணூறாம் ஆண்டு தலைக்

காயத்தால் கோமா நிலையிலிருந்து

சில நாட்களின் பின் கப்டன் றோயாய்

வீரச்சாவு அடைந்தான்.அவனது

எழுத்துக்கள் அழகானவை

அவனது மனதைப்போல

றோயண்ணா 1990தீபாவழியன்று காயமடைந்து மானிப்பாய், பின்னர் யாழ் மருத்துவமனையில் கோமா நிலமையில் இருந்து பின்னர் இந்தியாவிற்கு மருத்துவத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே 1990டிசம்பர் வீரச்சாவடைந்தார். அந்த மரணத்தை புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பில் கேட்டோம். றோயண்ணாவைப்போல றோயண்ணாவின் எழுத்தை பாதுகாத்து பத்திரப்படுத்திய கொப்பிகளில் எனதும் ஒன்று லியோ.

இன்றும் றோயண்ணா பாடும் *வானுயர்ந்த காட்டிடையே* பாடலும் அந்தச் சிரிப்பும் கதையும் நினைவில் நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது எழுத்து வித்தியாசம் பிரித்தறியற முடியாமைக்கு எதையும் செய்ய முடியாது சகாரா. வேணுமானால் கடிதங்களை அனுப்புகிற கைதிகளுடன் நீங்கள் நேரடியாகவே உங்கள் சந்தேகத்தை கேட்டு தீர்த்துக்கொள்ள வழியை ஏற்படுத்தித்தர முடியும். அவர்களுடன் கதைத்து உங்கள் எழுத்து வித்தியாசங்களில் உள்ள ஒற்றுமையை அல்லது வேற்றுமையை அறிந்து கொள்ளலாம். தனிமடலில் பளையூரானுடன் பேசுவதற்கானதும் இதர கைதிகளுடன் பேசுவதற்குமான தொடர்புகளை அனுப்பிவிடவா ?

1988காலப்பகுதியில் எங்கள் ஊருக்குள் போராளிகள் வாழ்ந்த நேரம். றோய் என்றொரு அண்ணா இருந்தார். அவரது கையெழுத்து நல்ல அழகு. நான் உட்பட அவருடன் பழகிய பலபிள்ளைகள் அவரது எழுத்தின் சாயலைப் பழகிக்கொண்டோம். அது பின்னர் வளர்ந்து பெரிய வகுப்புகள் வந்தும் அதே எழுத்து சாயலில் தான் எழுதுவேன். என்னுடன் கற்ற மாணவர்கள் அனேகரிடத்தில் இருந்தது.

எனது எழுத்தை மாற்றக்காரணமாயிருந்த றோயண்ணா 1990இல் வீரச்சாவடைந்து கப்டன் றோயாகி இன்று 22வருடங்கள் ஆகப்போகிறது. இன்னும் அந்த எழுத்தை நான் மாற்றவேயில்லை. அப்படியே றோயண்ணாமாதிரியே எழுதுவேன். வவுனியனின் கையெழுத்தும் எனது எழுத்துப்போன்றே றோயண்ணாவின் எழுத்தைப்போலவே இருக்கிறது. இதனை பலமுறை நானும் யோசித்ததுண்டு. இதனைவிடவுடம் பல போராளிகளின் கையெழுத்துக்கள் றோயண்ணாவின் எழுத்துப்போலவே அமைந்ததையும் பார்த்திருக்கிறேன்.

சிலவேளை நான் றோயண்ணாவின் எழுத்தை இன்னும் மறக்காதிருப்பதால் அப்படியொரு எண்ணம் எனக்குள் இருக்கிறதோ தெரியாது.

தவறாக விளங்கியுள்ளீர்கள் சகாரா. நான் உங்களுக்கு பொறுப்பில்லையென்று கூறவரவில்லை. கனடாவில் யாரும் நேசக்கரத்திற்கு பணம் சேகரிப்பாளர்கள் இல்லை. உதவி செய்ய விரும்புகிறவர்கள் விபரங்களை பெற்று நேரடியாகவே செய்கிறார்கள். அப்படி நீங்களும் விரும்பின் தனிமடலில் ஒரு குடும்பத்தின் விபரத்தை தருகிறேன். நேரடியாகவே உதவியை வழங்குங்கள்.உங்களால் முடிந்த மனதைரியத்தையும் அக்குடும்பத்திற்கு கொடுத்தால் அது பேருதவியாக அமையும்.

சாந்தி,

உங்களுடைய பணி அளப்பரியது, அத்தகைய பணியில் குற்றம் காண்பது என் நோக்கமல்ல...

நான் புராணகாலத் தூதுபற்றி தமிழும் நயமும் பகுதியில் தேடல்செய்து பதிந்த, பஞ்ச தூதுக்களை இவ்விடம் எடுத்துவந்து மொட்டந்தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போடவேண்டாமே...

மகசின் சிறையில் இருந்து விடுதலை நோக்கிய பாடலை எழுதும் ஒரு போராளி விடுதலை வேணவா மிகுந்த கவிதையினை அங்கிருந்து எழுதி அதனை வெளியுலகிற்கு கொண்டு வரமுடியுமென்றால் அங்கு அவர் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார் என்றுதானே எண்ணத்தோன்றுகிறது. ஒரு சிறைக்கைதியாக இருந்துகொண்டு வேறு எதையாவது அவர் எழுதியிருந்தால் அதனை அங்கு அவர் சுதந்திரமாக எழுதலாம் ஆனால் இக்கவிதையை அங்கு எழுதியது என்பதுதான் பெருவியப்பிற்குரியதாக இருக்கிறது. சரி விடுவோம்... நீங்கள் நேசக்கரத் திரிகளில் இணைக்கும் மடல்கள் சிறைக்கடிதங்கள் மட்டுமல்ல வெளியிலிருந்து கேட்கும் உதவிகளுக்கும் ஒரே மாதிரியான எழுத்துக்களைக் கொண்டவையாக அமைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.....

உங்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.நீங்கள் அப்படியான ஒரு பழக்கத்தை வைத்திருப்பது உங்களுக்குச் சாத்தியமாக இருக்கலாம் ஆனால் பலருக்கு ஒரே மாதிரியான பழக்கம் இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளத் தோன்றவில்லை....

ஒருவேளை இது எனது பார்வைக் கோளாறாகவும் இருக்கலாம்.

சாந்தி என்னுடைய பொறுப்பில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். மேற்கொண்டு என்னால் பொறுப்பெடுக்க முடியாது மன்னிக்கவும்.

தனிமடலில் நீங்கள் அனுப்பவேண்டிய தேவை எனக்கு இல்லை மன்னிக்கவும். என்னுடைய இயங்குதளத்தில் இருந்தே நான் இயங்க விரும்புகின்றேன். உதவி செய்கிறேன் என்று உங்களுக்கு வாக்களித்துள்ளேன் அவ்வுதவியும் முன்னரைப் போலல்லாது மிக குறைந்த அளவிலேயே என்னால்' செய்யமுடியும் யாழ்க்கள உறவுகள் யாராவது கனடாவில் இருந்து உதவி செய்வார்கள்தானே அவர்கள் யாரிடமாவது எனது உதவியைச் சேர்ப்பித்துவிடுகிறேன்.

தட்டிக்கழிக்கிறேன் என்று உடனடியாக பதிலவரைவிடவேண்டாம். இப்போது செய்யும் உதவிகளே என் சக்திக்கு மீறியதாக இருக்கிறது. அவ்வுதவிகள் அந்தப்பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் இன்றி தொடர்ந்தும் கிடைக்கவேண்டும் என்பதற்காக.... இன்னொரு இடத்தில் நம்பிக்கை கொடுத்து நட்டாற்றில் விடக்கூடாது அல்லவா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை இது எனது பார்வைக் கோளாறாகவும் இருக்கலாம்.

என்ன கோளாறென்பது எனக்குத் தெரியவில்லை.

நான் புராணகாலத் தூதுபற்றி தமிழும் நயமும் பகுதியில் தேடல்செய்து பதிந்த, பஞ்ச தூதுக்களை இவ்விடம் எடுத்துவந்து மொட்டந்தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போடவேண்டாமே...

நீங்களாக போட்ட முடிச்சன்றி எதுவும் யானறியேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகசின் சிறையில் இருந்து விடுதலை நோக்கிய பாடலை எழுதும் ஒரு போராளி விடுதலை வேணவா மிகுந்த கவிதையினை அங்கிருந்து எழுதி அதனை வெளியுலகிற்கு கொண்டு வரமுடியுமென்றால் அங்கு அவர் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார் என்றுதானே எண்ணத்தோன்றுகிறது. சரி விடுவோம்...

அதானே என்னத்துக்கு கையைத்தூக்கீட்டு கவிதையெழுதுவான் ? ஒரு போராளி எப்போதும் போர்க்குணத்தோடு இருப்பானென்று இங்கே களத்தில் யாரோ முன்பு இடித்துரைத்ததாக ஞாபகம். அதையும் விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய கணணியுகம் அன்னம் புறா தூதுவிடும் காலத்திலா இருக்கிறது ? சிறைச்சாலை விதிகளை மீறி எவ்வளவோ விடயங்கள் நடக்கிறது. அது இலங்கையில் மட்டுமல்ல உலகச் சிறைகளிலும் வினையென்று தெரிந்தும் விதிகளை மீறுகிறார்கள் கைதிகள்.

தனது உணர்வுகளை இந்தக்கவிஞன் (முன்னாள் போராளி) தனது சொந்தப்பெயரில் வெளியிட்டிருந்தால் நீங்கள் கேட்கிற எழுத்துச் சுதந்திரம் பற்றி பேசலாம்.

மன்னிக்கவும் சகாரா. நீங்கள் அன்னம் புறா தூதனுப்பிய காலத்தில் கேட்க வேண்டிய கேள்வியை இந்தக் கணணியுகத்தில் கேட்பது சற்று யோசிக்க வைக்கிறது.

நேசக்கரம் வெப்சைற்றில் போய் பாருங்கோ எத்தனை கைதிகளின் கடிதங்கள் குரல்கள் பதிவுகள் இருக்கிறது என்பதனை. பார்த்து கேட்டுவிட்டு முடிவெடுங்கள் இலங்கைச் சிறைகளின் சுதந்திரம் எத்தகையது என்பதனை.

மற்றும் பிபீசி உட்பட அச்சு இலத்திரனியல் ஊடகங்களின் போன்ற ஊடகங்கள் யாவிலும் இலங்கைச் சிறையில் குரல்கள் மறுக்கப்பட்ட தமிழ் கைதிகளின் குரல்களும் கடிதங்களும் வந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு விடயம் கப்பல் ஏறி கனடா ஐரோப்பா அவுஸ்ரேலியா போகலாம் என்ற கனவுகளோடு கப்பலேறிய முன்னாள் போராளிகள் பலர் இன்று ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் பல சிறைகளில் கைதிகளாக இருக்கிறார்கள். அவர்களும் இந்தக்கணணி யுகத்தை பயன்படுத்துகிறார்கள். அங்கும் சுதந்திரமில்லை அத்துமீறிச் சிலவற்றை செய்கிறார்கள்.

கடந்தவாரம் ஆபிரிக்கா நாடொன்றின் சிறையில் இருக்கிற சில போராளிகளுக்கு அவசரமாக தொலைபேசிக்கு பணம் தேவைப்பட்டது. அதற்கான பணத்தை ஐரோப்பாவில் இருக்கிற நான் குறித்த சிறைச்சாலையில் பணிபுரியும் ஒரு அதிகாரியின் பெயருக்கு மணிகிராம் மூலம் அனுப்பி அந்த அதிகாரி தனக்கும் ஒருபகுதியை பிடித்துக் கொண்டு உரியவர்களுக்கு கொடுத்தார்.

இதேபோல வன்னிக்குள் யுத்தம் நிகழ்ந்த நேரம் வழிகள் எல்லாம் அடைத்து பிணங்கள் விழவிழ புலிகளின்குரலும் ஈழநாதமும் வெளிவந்து கொண்டுதானிருந்தது. செய்மதி தொலைபேசிகள் இயங்கிக்கொண்டுதானிருந்தது செய்திகள் பங்கரிலிருந்தும் சொல்லப்பட்டுக் கொண்டுதானிருந்தது.

எங்கள் சமகாலத்தை பதிவு செய்கிற தீபச்செல்வனும் சிங்கக்குகைக்குள் இருந்தபடிதான் எழுதிக்கொண்டிருக்கிறான். எத்தனையோ முறை தீபச்செல்வன் எத்தனையோ விசாரணைகள் தண்டனைகள் பெற்றும் தனது உணர்வுகளை எழுதிக்கொண்டேயிருக்கிறான். அங்கே எழுத்துச் சுதந்திரம் இருக்கிறபடியால் தீபச்செல்வன் எழுதவில்லை. தீபச்செல்வன் இருப்பது திறந்தவெளிச் சிறைச்சாலை பளையூரான் இருப்பது இரும்புக்கம்பிகளால் இறுக்கப்பட்டு 50அடி உயரத்தில் சுவர் எழுப்பப்பட்ட சிறைச்சாலை ஆக இரு கவிஞர்களும் இருப்பது சிறையில்.

பிற்குறிப்பு :-

பளையூரானை வெளியில் எடுக்க அதாவது வழக்கை நடாத்தி வெளியில் வர 50ஆயிரம் ருபா பணம் இருந்தால் பளையூரான் குடும்பத்தோடு இணையலாம். கருணையுள்ள கவிஞர்கள் யாராவது மனம் வைத்தால் கவிஞன் பளையூரானுக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

என்ன கோளாறென்பது எனக்குத் தெரியவில்லை.

நீங்களாக போட்ட முடிச்சன்றி எதுவும் யானறியேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறைக்கைதியாக இருந்துகொண்டு வேறு எதையாவது அவர் எழுதியிருந்தால் அதனை அங்கு அவர் சுதந்திரமாக எழுதலாம் ஆனால் இக்கவிதையை அங்கு எழுதியது என்பதுதான் பெருவியப்பிற்குரியதாக இருக்கிறது. சரி விடுவோம்...

நாங்கள் சுகமாக வெளியில் இருந்து கொண்டு சிதையை மூட்டினோம் சிதையில் ஏறி சாம்பரான அந்தப்போராளியும் அவன் போன்றவர்களும் தனது சிதையனுபவத்தையும் விடுதலையின் கனத்தையும் எழுதியது மட்டும் ஏனோ வியப்பாகியது எனக்கும் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதானே என்னத்துக்கு கையைத்தூக்கீட்டு கவிதையெழுதுவான் ? ஒரு போராளி எப்போதும் போர்க்குணத்தோடு இருப்பானென்று இங்கே களத்தில் யாரோ முன்பு இடித்துரைத்ததாக ஞாபகம். அதையும் விடுவோம்.

உங்கள் ஞாபகசக்திக்குத் தலை வணக்குகின்றேன். போர்க்குணத்தோடு இருக்கும் போராளிகள் உயிரோடு இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய இயங்குதளத்தில் இருந்தே நான் இயங்க விரும்புகின்றேன்.

இதென்ன கரைச்சல் சாமி. உங்கள் இயங்குதளத்தை விட்டு எங்கப்பா வெளியில வரச்சொன்னேன் ?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சுகமாக வெளியில் இருந்து கொண்டு சிதையை மூட்டினோம் சிதையில் ஏறி சாம்பரான அந்தப்போராளியும் அவன் போன்றவர்களும் தனது சிதையனுபவத்தையும் விடுதலையின் கனத்தையும் எழுதியது மட்டும் ஏனோ வியப்பாகியது எனக்கும் புரியவில்லை.

சாந்தி மீண்டும் சொல்கிறேன் அப்போராளி மகசீன் சிறையில் இருந்து இக்கவிதையை எழுதியதுதான் வியப்பாக இருக்கிறது என்று கூறுகின்றேன் புரிந்து கொள்ளுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தட்டிக்கழிக்கிறேன் என்று உடனடியாக பதிலவரைவிடவேண்டாம்.

அப்படியெல்லாம் நினைக்கமாட்டேன். பளையூரானின் விடுதலைக்கு யாராவது கவிஞர்கள் உதவினால் அவர் விடுதலையடைவார் என்றே எழுதினேன் தவிர. நீங்கள் செய்ய வேண்டுமென்ற கட்டாயமென்றல்ல. இங்கு களத்தில் எத்தனையோ கவிஞர்கள் இருக்கிறார்கள் அவர்களையெல்லாம் நோக்கித்தான் எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது எழுத்து வித்தியாசம் பிரித்தறியற முடியாமைக்கு எதையும் செய்ய முடியாது சகாரா. வேணுமானால் கடிதங்களை அனுப்புகிற கைதிகளுடன் நீங்கள் நேரடியாகவே உங்கள் சந்தேகத்தை கேட்டு தீர்த்துக்கொள்ள வழியை ஏற்படுத்தித்தர முடியும். அவர்களுடன் கதைத்து உங்கள் எழுத்து வித்தியாசங்களில் உள்ள ஒற்றுமையை அல்லது வேற்றுமையை அறிந்து கொள்ளலாம். தனிமடலில் பளையூரானுடன் பேசுவதற்கானதும் இதர கைதிகளுடன் பேசுவதற்குமான தொடர்புகளை அனுப்பிவிடவா ?

தவறாக விளங்கியுள்ளீர்கள் சகாரா. நான் உங்களுக்கு பொறுப்பில்லையென்று கூறவரவில்லை. கனடாவில் யாரும் நேசக்கரத்திற்கு பணம் சேகரிப்பாளர்கள் இல்லை. உதவி செய்ய விரும்புகிறவர்கள் விபரங்களை பெற்று நேரடியாகவே செய்கிறார்கள். அப்படி நீங்களும் விரும்பின் தனிமடலில் ஒரு குடும்பத்தின் விபரத்தை தருகிறேன். நேரடியாகவே உதவியை வழங்குங்கள்.உங்களால் முடிந்த மனதைரியத்தையும் அக்குடும்பத்திற்கு கொடுத்தால் அது பேருதவியாக அமையும்.

அப்படியெல்லாம் நினைக்கமாட்டேன். பளையூரானின் விடுதலைக்கு யாராவது கவிஞர்கள் உதவினால் அவர் விடுதலையடைவார் என்றே எழுதினேன் தவிர. நீங்கள் செய்ய வேண்டுமென்ற கட்டாயமென்றல்ல. இங்கு களத்தில் எத்தனையோ கவிஞர்கள் இருக்கிறார்கள் அவர்களையெல்லாம் நோக்கித்தான் எழுதினேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.