Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு உதவினார் என சந்தேகத்தில் தடுப்புக் காவலில் இருந்த தமிழ் சிறைக் கைதி மரணமடைந்துள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு உதவினார் என சந்தேகத்தில் தடுப்புக் காவலில் இருந்த தமிழ் சிறைக் கைதி மரணமடைந்துள்ளார். 
- பீபீசீ சிங்களம் (சந்தேசய)
British Tamil prisoner's death in Magazine prison is 'suspicious' says TNA
-------------------------------------------------
நேற்று மரணமடைந்ததாகச் தெரிவிக்கப்படும் லண்டனைச் சேர்ந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் எனப்படும் இலங்கைத் தமிழரின் மரணம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஒரு வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம் மரணம் குறித்து சந்தேகம் எழுவதாக தமிழ் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

ළ සිරකරු බන්ධනාගාරයේදී මිය ගිහින්
අවසාන යාවත්කාලීන කිරීම :  2014 පෙබරවාරි 24 සඳුදා - 19:28 GMT
120704144548_mahara_prison_sri_lanka_304

සිරකරුගේ මරණය ගැන 'සැකයි'

කොටි සංවිධානයට සහාය දීමේ චෝදනාවට වැරදිකරු වී කොළඹ මැගසින් බන්ධනාගාරයේ රඳවා සිටි සිරකරුවකුගේ මල සිරුර අද උදෑසන හමු වූ බව බන්ධනාගාර බලධාරීහු පවසති.

බ්‍රිතාන්‍ය ජාතික විශ්වලිංගම් ගෝපිදාස් ගේ මරණයට හේතුව සොයා ගැනීම පිණිස අධිකරණ වෛද්‍ය නිලධාරියකු වෙත යොමු කොට ඇති බවද බන්ධනාගාර අමාත්‍යංශයේ මාධ්‍ය ප්‍රකාශක ගාමිණී කුලතුංග බීබීසී දෙමළ සේවයේ ජයප්‍රගාෂ් නල්ලුසාමි කළ විමසීමකදී සඳහන් කළේය.

කෙසේ නමුත් මරණය පිළිබඳව තමන්ට සැකයක් තිබෙන බවයි, දෙමළ ජාතික සන්ධානයේ සුරේෂ් ප්‍රේමචන්ද්‍රන් මන්ත්‍රීවරයා බීබීසී සංදේශයට කියා සිටියේ.

මරණ පරීක්ෂණයක් පැවැත්වෙන බැවින් එම චෝදනාව සම්බන්ධයෙන් දැනට ප්‍රතිචාරයක් පළ කළ නොහැකි බව පවසන ගාමිණී කුලතුංග, පශ්චාත් මරණ පරීක්ෂණයේදී සත්‍යය අනාවරණය වනු ඇති බවද සංදේශයට පැවසීය.

http://www.bbc.co.uk/sinhala/sri_lanka/2014/02/140224_tamil_prisoner_dies.shtml

 

இது தமிழர் UNHRC க்கு போனால் என்ன நடக்கும் என்று காட்ட செய்தது.

 

நமக்கு அபிவிருத்தி அல்ல, பாதுகாப்பும் சுதந்திரமுமே வேண்டும் என்று கேட்பது இதனாலேயே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

665947089Manoganesan.jpg

கோபிதாஸ் மரணம் ஒரு அரசியல் கொலை - மனோ கணேசன்

தமிழ் அரசியல் தடுப்பு கைதி விஸ்வலிங்கம் கோபிதாஸ் மரணத்துக்கு இலங்கை, இங்கிலாந்து அரசுகள் இரண்டும் பொறுப்பு கூற வேண்டும். 

2007ம் வருடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் ஒரு பிரித்தானிய பிரஜை. கடந்த ஏழு வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 2009ம் வருடமும், 2011ம் வருடமும் சிறைக்குள்ளே தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் இவர் தொடர்சியாக உடல் உபாதையால் அவதிப்பட்டுள்ளார். அதேவேளை லண்டனில் வசிக்கும் இவரது மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து வாழ்ந்ததும் இவருக்கு பாரிய மன உளைச்சலை தந்துள்ளது. 

இந்நிலையில் இவர் தற்போது கழிவறையில் இறந்துகிடக்க காணப்பட்டுள்ளார். இவரது மரணத்துக்கு உடனடி காரணம் எதுவாக இனிமேல் சொல்லப்பட்டாலும்கூட, இந்த மரணம் ஒரு அரசியல் கொலை என்பதை இலங்கை அரசு மறுக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கமும் பொறுப்பு கூற கடமைபட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய அரசு இலங்கை அரசிடம் இப்போதாவது கேள்வி எழுப்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

கோபிதாஸ் என்ற அரசியல் கைதியின் மரணம் தொடர்பாக மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, 

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும்படி இலங்கை அரசின் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் செய்ய இந்த அரசு தவறியுள்ளது. தமிழ் கைதிகள் ஒன்றில் உடல், உள உபாதைகளால் கொல்லப்படுகிறார்கள். அல்லது அடித்து கொல்லப்படுகிறார்கள். 

தமது பிரஜையின் மரணம் தொடர்பாகவும், அவர் மீது கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும், இவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்ட விசாரணை விவகாரங்கள் தொடர்பாகவும் பிரித்தானிய அரசு இலங்கை அரசிடம் இப்போதாவது கேள்வி எழுப்ப வேண்டும் என கேட்டுகொள்கிறேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்

மகஸீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த பிரித்தானிய குடியுரிமை பெற்ற தமிழ் அரசியல் கைதியான 43 வயதுடைய விசுவலிங்கம் கோபிதாஸின் இறுதி கிரியைகள் நீதிமன்ற உத்தரவிற்கமைய எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.03.14)  வடமராட்சி புலோலி வடக்கிலுள்ள அவரது சொந்த இல்லத்தில் நடைபெறவுள்ளது.

கோபிதாஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை சென்ற போது, விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக பிரித்தானியாவில் நிதிசேகரித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து 4 ஆம் மாடியில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு மகஸீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

மகஸீன் சிறைச்சாலையில் இரண்டு தடவைகள் ஏற்பட்ட கலவரத்தில் அங்கிருந்த சக கைதிகள் இவரைக் கொலைசெய்ய முற்பட்ட போதும் இவர் உயிர்தப்பியிருந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (24.02.14) திகதி சிறைச்சாலை மலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது மரணம் தொடர்பில் அவரது மனைவியின் சகோதரன் தெரிவிக்கையில்,

'அவரது மனைவி மற்றும் 14, 10 வயதுடைய இரு மகள்மாரும் பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்தடைந்துள்ளனர்.  தமது தந்தை இறந்த செய்தியை மகள்மார் இருவரும் இலங்கை வரும் வரையிலும் அறிந்திருக்கவில்லை.

 

'எனது சகோதரியின் கணவர் இலங்கையில் பிடிபட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற விடயம் அவரது பிள்ளைகளுக்குத் தெரியாது. தந்தை கொழும்பில் வியாபாரம் செய்து வருகிறார் என்று கூறியே எனது சகோதரி தனது பிள்ளைகளை வளர்த்து வந்தார.

தனது கணவனை விடுவிப்பதற்காக சகோதரி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டவல்லுநர்கள் உள்ளிட்ட பலரின் ஊடாக பல்வேறு  முயற்சிகளை எடுத்தபோதும் அது பலனளிக்கவில்லை. 

அவரது மூத்த மகளின் பூப்பூனித நீராட்டு விழாவிற்காக தந்தையினை விடுதலை செய்யும்படி நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம். இருந்தும் அதற்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை' எனத் தெரிவித்தார்.

 

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103548/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
கொழும்பு சிறையில் பிரிட்டிஷ் தமிழர் கோபிதாஸ் மர்ம முறையில் தீர்த்துக் கட்டப்பட்டது கனடியப் பிரஜை ராய் சமாதானம் ஐநா வில் தொடுத்த புகார் எதிரொலியா – குருவி சிறப்புப் பார்வை !!

 

விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2009 இல் நடந்த இறுதிக்கட்டப் போரில் சூறையாடிய சிறிலங்கா அரசாங்கம் அதற்கு முன்னரே தெளிவாகத் திட்டமிட்டு அனைவரையும் ஒரு புள்ளியில் சிக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது என்பதையே பின்னர் ஒவ்வொன்றாக நடந்த அசம்பாவிதங்களும் தமிழினப் பேரழிவும் நமக்கு இன்றும் எடுத்துக் காட்டி வருகின்றன.

2007 இல் விடுதலைப்புலிகளுக்கு உதவியாக செயல்பட்டதாக கனடா, பிரித்தானியா , மற்றும் அயர்லாந்து நாடுகளின் பிரஜைகள் மூவர் சிறிலங்கா சென்ற போது சிறிலங்கா அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
 

குணசுந்தரம் ஜெயசுந்தரம் , ராய் மனோஜ்குமார் சமாதானம் ,கோபிதாஸ் ஆகியோரே இந்த மூவர். இவர்களில் குணசுந்தரம் ஜெயசுந்தரம் அயர்லாந்து நாட்டுக் குடியுரிமையும் , ராய் மனோஜ்குமார் சமாதானம்கனடிய குடியுரிமையும் பெற்றவர்கள். தற்போது சிறையில் மர்மமான முறையில் தீர்த்துக்கட்டப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கோபிதாஸ் பிரித்தானிய பிரஜை ஆவார்.
 

 

கனடிய அரசின் தொடர்ந்த முயற்சி மற்றும் தலையீட்டினால் ராய் மனோஜ்குமார் சமாதானம் கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டு கனடா வந்தடைந்தார். கனடா வந்தடைந்த கையோடு சிறிலங்கச் சிறையில் மனித உரிமைகளை மீறி தான் அனுபவித்த சித்திரவதைகளை கனடியத் தமிழ்  ஊடகங்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டியதுடன் , இதற்கான இழப்பீட்டினையும் , நீதியையும் பெற்றுத் தரக் கோரி ஐ.நா விடம் முறைப்பாடு செய்திருந்தார்.ராய் மனோஜ்குமார் சமாதானம் ஐ.நாவிடம் முறைப்பாடு செய்த அன்றைய தினத்தில் அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் உடனிருந்து ஒத்துழைப்பு நல்கியதுடன் , இந்த செய்தியினை குருவியிலும் சிறப்பு செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
 

 

தொடர்பான செய்திகள்
 

 

ராய் மனோஜ்குமார் சமாதானம் சிறிலங்கச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அங்கு சிறை வைக்கப் பட்டிருந்த குணசுந்தரம் ஜெயசுந்தரம் , கோபிதாஸ் ஆகிய இருவரில் கோபிதாஸுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவரும் மனித உரிமைகளுக்கு எதிராக தான் துன்புறுத்தப்பட்டு வருவதாக மனித உரிமை ஆணையத்திடம் புகாரளித்து, எஞ்சியுள்ள தண்டனை காலத்தை பிரித்தானியாவில் அனுபவிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்த கோரிக்கைக்கு பிரித்தானிய அரசும் செவி சாய்த்து , கோபிதாஸ் எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை அங்கு அனுபவித்துக் கொள்ளலாம் எனக் கூறிய பின்னரே இந்த மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது.
 

 

இம்மரணத்திற்கான காரணம் மார்படைப்பே என அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ள போதிலும் கூட நிச்சயமாக திட்டமிட்ட கொலையே என்ற சந்தேகங்களும் வலுத்து வருகின்றன. இதன் பின்னணியை அலசி ஆராய்ந்ததில் எமக்குப் புலப்படும் சில  விடயங்கள் என்னவென்றால்,
 

 

முதலாவதாக கோபிதாஸ் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பபப்டும் பட்சத்தில் ஏற்கனவே அனுப்பப்பட்ட கனடிய பிரஜை போன்று இவரும் சிறிலங்க அரசுக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு செய்யவோ அல்லது சிறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அப்பட்டமாக வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டவோ முடியும்.
 

 

இரண்டாவதாக சேனல் 4 வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக சிறிலங்க அரசின் போர்க்குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது. இதனை சிறிலங்காவிலும் , இந்தியாவிலும்  ஊடகங்களில் காண முடியாமல் செய்யும் அரசின் ராஜ தந்திர நடவடிக்கைகளுக்கு ஆப்பு வைப்பது போல யூடியூப்பிலும் இந்தக் குற்றங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருவதினால் ராஜபக்சே அரசின் முகத்திரை கிழியத் தொடங்கி விட்டது.
 

 

மூன்றாவதாக சமீபத்தில் சிறிலங்கா சென்று வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உட்பட பலரும் இறுதிக்கட்டப் போர் குறித்தான விவகாரங்களில் சர்வதேச விசாரணை வேண்டும் என உரத்த குரலில் கோரிக்கை விடுத்து வருவமையும் , அண்மையில் கனடியத் தமிழர் பேரவையின் மீது அடுக்கடுக்காய் பொய்க் குற்றச்சாட்டுக்களை கட்டவிழ்த்து விட்ட ரோகன் குணரத்தினம் ஆகியோருக்கு எதிராக சாட்டையடி போன்ற தீர்ப்புக்கள் நீதிமன்றிலிருந்து வந்திருப்பதும் சிறிலங்க அரசின் ராஜ தந்திர நடவடிக்கைகளை சற்றே ஆட்டம் காணச்  செய்துள்ளன.
 

 

வட மாகணத்தில் முறைப்படியான தேர்தலை நடத்தி தமிழ் கட்சிகளை ஆட்சியமைக்க அனுமதித்த பின்னர் சர்வதேச அளவில் தங்களுக்கு இருக்கும் அவப்பெயர் மறையத் தொடங்கும் என தப்புக் கணக்கு போட்ட சிறிலங்க அரசுக்கு தங்கள் காய் நகர்த்தல்கள் திட்டமிட்டபடி விளைவுகளை ஏற்படுத்திக் கொடுக்காததால் இன்னும் கோபிதாஸையும் பிரிட்டனுக்கு அனுப்பினால் என்னென்ன பாதகமான விளைவுகள் நேருமோ என்ற அச்சத்தினையும் உண்டாக்கியுள்ளது.

 
அதன் விளைவாகவே மர்மமான முறையில் கோபிதாஸ் தீர்த்துக் கட்டப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. மூன்றாவது நபரான குணசுந்தரம் ஜெயசுந்தரம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுபப்பபட்டுள்ளார் என்பதால் அவர் அரசின் நேரடிக் கண்காணிப்பிலேயே இருப்பார். அவர் மூலமாக எந்த விடயமும் வெளியில் தற்போது கசிய வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொண்டே கோபிதாசை மர்மமான முறையில் கொன்று விட்டு மார்படைப்பு என நாடகம் போடுகின்றனரோ என்ற சந்தேகங்கள் அங்கு இருக்கும் தமிழ் அமைப்புக்களிடையேயும் எழத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பிலான குற்றச்சாட்டு ஒன்றினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள்  பி.பி.சி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
கடந்த நவம்பரில் ராய் சமாதானம் ஐநாவில் முறைப்பாடு செய்த போது அவரிடம் எடுக்கப்பட்ட குருவி பிரத்யேக நேர்காணலையும் இணைத்துள்ளோம்

 

http://ekuruvi.com/viswalingam-gopithas-vs-government-of-sri-lanka/

கந்தக மணம் வீசாவிட்டால் என்ன, பிணவாடை வீசிக்கொண்டுதான் இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபிதாஸ் மர்ம மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

tnpf.jpgகொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ், மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இம்மரணத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது குறித்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“பருத்தித்துறை மந்திகையை பிறப்பிடமாகக் கொண்டவரும், பிரித்தானிய பிரஜையுமான இவர் கடந்த 24ம் தேதி திங்கட்கிழமை கொழும்பு மகசீன் சிறைச்சாலை மலசல கூடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டபோது அங்குவைத்து சிறைக்காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறையில் இருந்த காலப்பகுதியில் சித்திரவதைகளால் ஏற்பட்ட உட்காயங்களால் கடுமையான உபாதைகளை அனுபவித்திருக்கின்றார். அவருக்கு சுகயீனம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்காளால் ஏற்பட்ட உட்காயங்களும், அதற்கு உரிய சிகிச்சையளிக்கப்படாமையும், இவருக்கு மரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

அத்துடன் மரணமடைவதற்கு முதல்நாள் தமிழ் சிறைக்கைதிகள் மீது சிறைக் காவலர்களும், சிங்களக் கைதிகளும் கூட்டாக மேற்கொண்ட தாக்குதலில் ஒரு தமிழ் அரசியல்கைதி படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனாலும் இம் மரணம் தொடர்பாகவும், பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர், மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு பின்னரும், நீதிமன்ற விசாரணையின்றி 7 வருடங்களாக சிறையில் இருந்துள்ளார். இவர் ஒரு பிரித்தானிய பிரஜை என்ற வகையில், பிரித்தானிய அரசு அவரது நீண்டகால சிறை பற்றியும், விடுதலை பற்றியும் போதிய அக்கறை எடுத்துச் செயற்பட்டதாக தெரியவில்லை.

தற்போது நிகழ்ந்துள்ள அவரது மர்ம மரணம் தெடர்பில் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இலங்கை அரசு போலவே தமிழர்கள் விடயத்தில் பிரித்தானிய அரசம் நடந்துகொள்கின்றதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எற்கனவே சிறைகளில் பல தமிழ் அரசியல் கைதிகளின் கொலைகளும், மர்ம மரணங்களும் நடந்தேறியுள்ளன. அவை பற்றி சர்வதேச சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருப்பின், கோபிதாஸின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும். தொடர்ச்சியாக இடம்பெறும் இச்சிறை மரணங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இத்தகைய சம்பவங்ளுக்கு சர்வதேச விசாரணை நடத்துவதன் மூலமும், அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதன் மூலமுமே இவற்றைத் தடுக்க முடியும்.

தமிழர்கள் என்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறான மிகப் பெரும் அவலங்ளைச் சந்திக்கின்றனர். எனவே, அரசியல் கைதிகளின் நலன்களை பேணுவதும், அவர்களது விடுதலைக்காக செயற்படுவதும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும். நாம் அனைவரும் இக் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயற்படல் வேண்டும்.

கோபிதாஸின் மர்ம மரணம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் எமது கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மரணச் சடங்கில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு கோபிதாஸின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவிக்குமாறு வேண்டுகின்றோம்.

http://www.radarnews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/

  • கருத்துக்கள உறவுகள்

இவர், பிரித்தானிய பிரஜை ஆக இருந்தும், 2007´ம் ஆண்டிலிருந்து சிறை வாசத்தை அனுபவித்திருந்தும்...
இவரை மீட்க, பிரித்தானியத் தூதரகம் எதுவித முயற்சியும்... எடுக்காதது கண்டனத்துக்குரியது.
வெள்ளைக்காரர் மட்டும் தான்... பிரித்தானிய பிரஜை என்றால், மற்றவர்களுக்கு... அந்தப் பிராஜாவுரிமையை கொடுப்பது ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.