Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் அடுத்த பொறி சிக்கிய சிங்களமும் அனுசரனையாளரும்

Featured Replies

புலிகளின் அடுத்த பொறி சிக்கிய சிங்களமும் அனுசரனையாளரும்

'

இலங்கை அரச படைகள் தமது கைப்பேற்றிய பிரதேசங்களை

விட்டு வெளியேறும் வரை தாம் பேச்சுக்கு வர மாட்டோம் என

முழங்கிய புலிகள் இப்போ நிபந்தனை அற்ற பேச்சுக்கு வருகிறார்கள் என்றால்

அது சிங்கள அரசிற்கு வைக்;கும் பொறி என்பது இதில் இருந்து புலனாகிறது .

இலங்iகை அதிபர் சொன்னது போல் இப்போ பேச்சுக்கு இணங்கி உள்ளார்

ஆனால் முதல் இடம் பெற்ற சமதான உடன் படிக்கையின் படி அவர்கள்

நடந்து கொள்ள வேண்டும் அதுவே விதி .

அதை புலிகள் அரசை செய்யுமாறு சர்வதேசத்தின் ஊடாக சிங்கள

அரசுக்கு கூறியாகிற்று .

ஆனால் அரச படைகள் இன்னும் விலகவில்லை .

ஆனால் இனி நிகழப் போகும் பேச்சு மேசையில் இதை

முதல் தீர்வாக வைக்கப் போகிறார்கள் .

மக்களின் மனதாபிமான உடனடி மீள் குடியேற்றம் பொருளதாரம் .

இராணுவ நெருக்கடி . என்ற பல விடயங்கள் இதில் தலை தூக்கப் போகின்றன .

அதில் இவையாவும் நடை பெற வேண்டுமாயின் படை விலக்கல்

உடனடி தேவையாக இருக்கும் . படைகள் அங்கு நிலை கொள்ளும் பட்சத்தில்

இது சாத்தியமாகா .எனவே இங்கு பார்ப்போமேயானல் புலிகளின் பிடி இறுகுவதை காணலாம் .

நிபந்தனையற்ற பேச்சில் நிபந்தனை வருவதை காணலாம் .

அடுத்து போர் நிறுத்த விதியின் படி இன்னாருடைய பகுதியை இன்னார் தமது காட்டுப்பாட்டில்

கொண்டுவர முடியாது .

எனவே சம்புரை விட்டு படைகள் விலக வேண்டும் .

இது புலிகளின் அடுத்த கட்ட அழுங்கு பிடி சிங்களத';தின் கழுத்தை நெரிப்பதை காணலாம் .

ஆக மொத்தம் இப்போ புலிகளின்வியுக பொறிக்குள் அரசு சிக்கி உள்ளதை காணமுடிகிறது .

அது மட்டும் மல்லாது முதல் ஒஸ்லோவில் கூறப்பட் விடயங்கiளை மீண்டும்

இங்கு கிளறப் போகிறார்கள் இல்லை வடிவம் மாறப் போகிறது .

ஆனால் அதை அரசு தட்டி கழிக்கும் அதற்கு வியாக்கியானம் கூறும்

அப்போ மீண்டும் இங்கு விடாப் போட்டிகள் அரங்கேறப் போகிறது .

ஆனாலும் இப்போ புலிகளின் பக்கமே பந்துள்ளது ஏனெனில்

அவர்கள் வைக்கும் அல்லது சொல்ல போகும் நியாயப் பாடுகள் நியாயமாணவையே

அதை அரசு ஏற்றே ஆக வேண்டிய நிலை .

கொலைகள் நிறுத்தப் பட வேண்டும் .மக்கள் தமது அன்றாட நிகழ்வுகளை அச்சமின்றி செய்ய வேண்டும் .

இராணுவ நெருக்கடி தளர வேண்டும் . மனித உரிம காக்க வேண்டும் .கல்விகள் தொடரப்பட வேண்டும்

ஊரடங்கு விலக்கப் பட வேண்டும் ;

என பல கோரிக்கைகள் முன்

வைக்கப் படும் .இதை அரச படைகள் ஏற்று கொண்டேயாக வேண்டும் .

இதுவே அங்கு தலை தூக்கப் போகும் மனித நேய கோரிக்கைகள் ஆகும் .

அடுத் கட்டமாக செஞ்சோலை படு கொலைகள் தலை தூக்கும்

அதற்கு அரசு பேருந்து கொலையை நியாயப் படுத்தும் .

அதற்கு புலிகள் காணமல் போனோர் பட்டியலை கையளிப்பார்

படை விழி பிதுக்கும் .

அடுத்த அடியாய் அல்லப் பிட்டி . வரனி . கொலை என

தொடராய் தலை தூகு;கும் . ஆக எந்த பக்கம் பார்த்தாலும் புலிகள்

பந்தாடப் போகிறார்கள்.

இதில் சம்புர் ஏனைய பிரதேச மக்களின் புலம் பெயர் அறிக்கையும் சமர்;பணமாகும்

இவையாவும் நடக்க வேண்டுமாயின் படை விலகல் உடனடி தேவை

இது சாத்தியமா...?????????

ஆணையிறவை பிடிக்க முனையும் படைகள் அரை இஞ்சியும் நகராது

என்பது உறுதி . அப்போ பேச்சை அரசே குழப்புகிறது என புலிகள் சொல்வர் .

ஆக மொத்தம் பழையபடி வேதாளம் முருங்க மரத்தில் ஏறிய கதையே நிகழப் போகிறது .

எனவே சுத்தி வளைத்து இப்போ முற்றுகைக்குள் அரசை புலிகள்

முடக்கி உள்ளார்கள் அதற்கு அமைவாகவே முகமாலை

முன்னய நிலைகளுக்கு மீண்டும் புலிகள் பின் வாங்கிய தந்திரமாகும் .

உலக நாட்டின் அழுத்தத்திற்கு ஒத்தும் போகும்

அதே நேரம் தமது திட்டங்களையும் நிறைவேற்றல் .

அத்துடன் தாம் நீங்கள் சொன்னதற்கிணங்க பேச வந்தோம்

இப்போ ஏதும் நடை பெற வில்லையே என புலிகள் திருப்பி

அந்த நாடுகளை கேட்க போகிறார்கள்

இவை யாவும் இனி வரும் பேச்சு மேசையில் நிகழப் போகின்றன .

ஆக மொத்தம் இதில் இருந்து ஊகிக்க முடிகிறது . புலிகள்

இதில் வெற்றி கண்டு விட்டார்கள் என்பது .

ஆக மொத்தம் இப்போ இலங்கை அரசும்

அனுசரணையாளர்களுக்கும் புலிகள் வைத்த

பொறியில் சிக்கி உள்ளார்கள் என ஊகிக்க முடிகிறது .

- வன்னி மைந்தன் -

:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா வன்னி மைந்தன், புலிகள் அடித்தாலும், விட்டிட்டு ஓடினாலும், பேச்சுக்கு போனலும், போகமல் விட்டாலும் எல்லாத்தையும் அரசிற்கு வைத்த பொறி என்று சொல்லுறியல், கேட்டு அலுத்து போய் விட்டது. உங்களின் கற்பனை வளத்தை ஒரு புறம் மெச்சினாலும் மறுபுறத்தில் சகிக்க முடியவில்லை. உங்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

ரிசி அவர் சொன்னது தெளிவில்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த விவரணத்தைப் பாருங்கள் புலிகளின் ராஜதந்திர நகர்வுகள் பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.பேச்சுவார்த்தை, யுத்தம் எல்லாமே வழி முறைகள் தான், ஒன்று இன்னொன்றிற்கு மாற்றீடானாது இல்லை.எல்லாமே இறுதி இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள் தான். நாம் நம்ப வேண்டியது எமது தேசியத்தின் மன பலத்திலும் எமது ஒன்றுபட்ட அரசியற் சக்தியிலும் தான்.களங்கள் மாறலாம் முகங்கள் மாறலாம் யுக்திகள் மாறலாம் ஆயுதங்கள் மாறலாம் மாறாமல் இருக்க வேண்டியது எமது இலக்கு.

http://www.eelampress.com/?ucat=sirappu_paarvai

நிர்வாகத்திற்கு இந்த ஒளிப்பட விவரணத்தை பல் ஊடகப்பிரிவில் காட்சிகளுடன் இணைக்க முடியுமா? நன்றி.

ஏற்கனவே ஒப்பத்தந்தில் சொல்லப்பட்ட விடயங்கள் எதையும் சிறீலங்கா நிறைவேற்றவில்லை. அதைச் சர்வதேசமும், அனுசரணையாளர்களும், கண்காணிப்புக்குழுவும் வேடிக்கை பார்த்தார்கள். இனியும் இதுதான் நடக்கும்.பேசுவார்கள், நிறைவேற்றுவதாக உறுதிமொழி வழங்குவார்கள். இறுதியில் எதுவும் நடக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரிசி அவர் சொன்னது தெளிவில்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த விவரணத்தைப் பாருங்கள் புலிகளின் ராஜதந்திர நகர்வுகள் பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.பேச்சுவார்த்தை, யுத்தம் எல்லாமே வழி முறைகள் தான், ஒன்று இன்னொன்றிற்கு மாற்றீடானாது இல்லை.எல்லாமே இறுதி இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள் தான். நாம் நம்ப வேண்டியது எமது தேசியத்தின் மன பலத்திலும் எமது ஒன்றுபட்ட அரசியற் சக்தியிலும் தான்.களங்கள் மாறலாம் முகங்கள் மாறலாம் யுக்திகள் மாறலாம் ஆயுதங்கள் மாறலாம் மாறாமல் இருக்க வேண்டியது எமது இலக்கு.

http://www.eelampress.com/?ucat=sirappu_paarvai

நிர்வாகத்திற்கு இந்த ஒளிப்பட விவரணத்தை பல் ஊடகப்பிரிவில் காட்சிகளுடன் இணைக்க முடியுமா? நன்றி.

நாரதர்,

அதெல்லாம் சரி,

ஆனா ஒவ்வொரு கட்டத்திலயும் தங்களை புலிகளின் பேச்சாளராகக் கருதிக்கொண்டு இங்கு நர்த்தனமாடுபவர்களைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

இந்தா சிங்களவனுக்கு அடியைப்பார், இந்தா திருகோணமலை விழுகுது பார், இந்தா யாழ்ப்பாண அடியைப் பார், இனி பேச்சுக்கே இடமில்லை எண்டு யாழ்க்களத்தில பறைஞ்சு திரிஞ்சவை குறித்து என்ன சொல்லிறியள்?

இப்ப தாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக நடக்கேக்கயும் அதை வைத்து அடுத்த புலம்பல் தொடங்கீட்டினம்.

புலிகளின்ர நகர்வுக் இருக்கட்டும், சம்பூரைவிட்டு படையினர் விலக வேண்டுமென்பதை நோர்வேயில் போய்ச் சொல்வது இன்னும் பலன் தருமென்ற கணிப்பில் எனக்கு உடன்பாடே.

ஆனால் இவர் வன்னிமைந்தன் (இவர் போன்ற மற்றவர்களும்) கடந்த ஒரு மாதத்தில் எழுதியவைகளைப் பாருங்கள், இப்போது எழுதுவதைப் பாருங்கள்.

கண்டபடி இராணுவ அரசியல் ஆய்வுகளை எழுதுவதை நிறுத்துவது எல்லாருக்கும் நன்று.

நல்ல ஆய்வு Video...... நன்றி நாரதர்.

nallavan எழுதியது:

'''' :roll: சம்பூரைவிட்டு படையினர் விலக வேண்டுமென்பதை நோர்வேயில் போய்ச் சொல்வது இன்னும் பலன் தருமென்ற கணிப்பில் எனக்கு உடன்பாடே. :roll: '''

கண்டபடி எழுதுவதை நிறுத்துவது எல்லாருக்கும் நன்று. :idea:

அப்படித்தான் நானும் நினைகிறேன்

நாரதர்,

அதெல்லாம் சரி,

ஆனா ஒவ்வொரு கட்டத்திலயும் தங்களை புலிகளின் பேச்சாளராகக் கருதிக்கொண்டு இங்கு நர்த்தனமாடுபவர்களைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

இந்தா சிங்களவனுக்கு அடியைப்பார், இந்தா திருகோணமலை விழுகுது பார், இந்தா யாழ்ப்பாண அடியைப் பார், இனி பேச்சுக்கே இடமில்லை எண்டு யாழ்க்களத்தில பறைஞ்சு திரிஞ்சவை குறித்து என்ன சொல்லிறியள்?

இப்ப தாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக நடக்கேக்கயும் அதை வைத்து அடுத்த புலம்பல் தொடங்கீட்டினம்.

புலிகளின்ர நகர்வுக் இருக்கட்டும், சம்பூரைவிட்டு படையினர் விலக வேண்டுமென்பதை நோர்வேயில் போய்ச் சொல்வது இன்னும் பலன் தருமென்ற கணிப்பில் எனக்கு உடன்பாடே.

ஆனால் இவர் வன்னிமைந்தன் (இவர் போன்ற மற்றவர்களும்) கடந்த ஒரு மாதத்தில் எழுதியவைகளைப் பாருங்கள், இப்போது எழுதுவதைப் பாருங்கள்.

கண்டபடி இராணுவ அரசியல் ஆய்வுகளை எழுதுவதை நிறுத்துவது எல்லாருக்கும் நன்று.

இது அவரது கருத்து முடிந்தால் இதை மறுத்து உமது கருத்தை வையும் இல்லாவிட்டால் மூடிக்கொண்டு போம். :twisted: :twisted: :twisted:

தாய் தோற்ற பிள்ளைக்கு வேறாகவும் வென்ற பிள்ளைக்கு வேறாகவும் அன்பு செலுத்துவதில்லை. அதைப்போல களத்திலிருந்து வெற்றிச்செய்தி வரும்போது எமது வெற்றியாக கொண்டாடி மகிழும் நாம், அதுவே அவ்வாறில்லாதபோது இகழ்ந்து கைவிடுவது நியாயமற்றது.

போர்களத்தில் முன்னரங்கிற்கு செல்லும் போராளிக்கே தனது தளபதியின் முழுத்திட்டமும் தெரியாது. அவ்வாறு முழுவதும் அறிந்து திருப்தியடைந்த பின்னரே போருக்குப் போவேன் என அவன் அடம்பிடிக்கவும் முடியாது. தளபதியில் நம்பிக்கை கொண்டு போருக்குப் போகுமவன் தன் இறுதிக் கணத்தில் "ஐயோ சாகப்போகிறேனே" என்றா எண்ணியிருப்பான்? நிச்சயமில்லை "ஐயோ வெல்ல வேண்டுமே" என்றே அவன் எண்ணியிருப்பான்.

அவர்கள் வீரத்தில் எங்களைக் காணும் நாமும் அவ்வாறே இத்தருணத்தில் முன்னரிலும் அதிக நம்பிக்கையோடு இருப்பதே சிறந்தது. அந்த வகையில் இந்தக் கட்டுரை நன்மையே செய்கிறது.

இப்படிக்கு இவன் சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவை கதைக்கினம் கேட்டிட்டு இருங்க!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகள் எழுதியது

தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவை கதைக்கினம் கேட்டிட்டு இருங்க!

_________________

துரோகத்தனத்தை குத்தகைக்கு எடுத்தவர்களை விடவா இவை களத்துக்கு பாதிப்பு பறவைகளே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி, பிருந்தன் அண்ணை, பொத்திக் கொண்டு போறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகள் எழுதியது

தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவை கதைக்கினம் கேட்டிட்டு இருங்க!

_________________

துரோகத்தனத்தை குத்தகைக்கு எடுத்தவர்களை விடவா இவை களத்துக்கு பாதிப்பு பறவைகளே!

இரண்டாலும் யாழ் களத்துக்கு பாதிப்பு அல்ல, ஏனென்றால் இரண்டும் களத்தை வளர்க்கும்,

ஆனால், போர் களத்தில் பாதிப்பு உண்டு, அதிமேதாவி ஆய்வுகளால்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.... இந்த விவரணத்தைப் பாருங்கள் புலிகளின் ராஜதந்திர நகர்வுகள் பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.பேச்சுவார்த்தை, யுத்தம் எல்லாமே வழி முறைகள் தான், ஒன்று இன்னொன்றிற்கு மாற்றீடானாது இல்லை.எல்லாமே இறுதி இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள் தான். நாம் நம்ப வேண்டியது எமது தேசியத்தின் மன பலத்திலும் எமது ஒன்றுபட்ட அரசியற் சக்தியிலும் தான்.களங்கள் மாறலாம் முகங்கள் மாறலாம் யுக்திகள் மாறலாம் ஆயுதங்கள் மாறலாம் மாறாமல் இருக்க வேண்டியது எமது இலக்கு.

http://www.eelampress.com/?ucat=sirappu_paarvai

நிர்வாகத்திற்கு இந்த ஒளிப்பட விவரணத்தை பல் ஊடகப்பிரிவில் காட்சிகளுடன் இணைக்க முடியுமா? நன்றி

.

--------------------------------------

நன்றி நாரதர்,

இங்கு HTMள் செயல்படுத்த முடியுமா?

முடிந்தால் இங்கேயே அதை அழுத்திப் பார்க்க கூடியதாக வழி செய்யலாம்

நிர்வாகக் குழுவினர் HTMள் யை செயல்படுத்த வழி பார்ப்பார்களா?

நன்றி

புலிகளின் அடுத்த பொறி சிக்கிய சிங்களமும் அனுசரனையாளரும்

'

- வன்னி மைந்தன் -

:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

வன்னி மைந்தன் அவர்களே இந்த ஒஸ்லோ பேச்செல்லாம் நடக்காது.

நிபந்தனையற்ற பேச்சுக்களிற்கு அரசும் புலிகளும் தயாரென அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அரசு தயாரில்லையென ரம்புக்வல காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து காடுகளிலும் பாடசாலைக் கட்டடங்களிலும் தஞ்சம் புகுந்து அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேவேளை அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் உச்சமடைந்து சென்று கொண்டிருக்கின்றன. வான் தாக்குதல்கள் தொடருகின்றது. இராணுவ நடவடிக்கைகள் தொடருகின்றன. இவை தணிந்து பேச்சுக்கான புறச்சூழல் ஏற்படும்வரை அதாவது ஆக்கிரமித்த சம்புூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேறி தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்வரை புலிகள் பேச்சுக்குச் செல்ல மாட்டார்கள்.

அப்படி ஒருவேளை புலிகள் பேச்சுக்குச் செல்வதானால் நீங்கள் சொல்வது போன்று புலிகளின் பொறிக்குள் சிங்களமும் அனுசரணையாளர்களும் விழமாட்டார்கள். மாறாக அனுசரணையாளர்களின் பொறிக்குள் புலிகளே வீழ்வார்கள்.

சர்வதேசமும் அனுசரணையாளர்களும் எதிர்பார்ப்பது ஒன்று மட்டுமே. தீர்வு வருகிறதோ இல்லையோ இரு தரப்பும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.

சம்புhர் மீதான ஆக்கிரப்பைத் தொடர்ந்து இணைத் தலைமை நாடுகளின் அறிக்கைக்காக காத்திருந்த தமிழர் தலைமை தனது நிலைப்பாட்டையும் இணைத் தலைமை நாடுகளின் பேச்சுக்கான அறிவிப்புப் பற்றியும் விரைவில் அறிவிக்கும்.

அதுவரை பொறுத்திருப்போம்.

சம்பூரைவிட்டு படையினர் விலக வேண்டுமென்பதை நோர்வேயில் போய்ச் சொல்வது இன்னும் பலன் தருமென்ற கணிப்பில் எனக்கு உடன்பாடே.

நல்லவன்

ஜெனிவாவிலை துணைக்குழுக்களின் ஆயுதங்களைக் களையுறம் எண்டு ஒத்துக்கொண்ட அரசு ஈபிடிபி, புளட் கருணா கும்பல் போன்ற வற்றின் ஆயுதங்களைக் களைந்து விட்டது. அயுதங்களைக் களைய சர்வதேச சமூகம் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்து பேச்சில் ஒப்புக்கொண்டபடி அரசை செய்ய வைத்து விட்டது.

அதேபோல ஆக்கிரமிக்கப்பட்ட சம்புூரையும் விடுவிக்குமாறு ஒஸ்லோவில் போய் சொல்ல இராணுவம் விட்டுட்டுப் போய் விடுமாக்கும். அதனைச் செய்ய சர்வதேச நாடுகள் அணிதிரண்டு வந்து அழுத்தம் கொடுக்குமாக்கும். :?:

சர்வதேசத்தின் மீதான நம்பிக்கையை தமிழ்மக்கள் இன்னும் இழக்கவில்லை

ஸ்ரீலங்கா அரசின்மீது தடை, அழுத்தம் தேவை

ஸ்ரீலங்கா அரசும் அதன் படைகளும் மனித உரிமைகளை மதிக்காது, சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணாக தொடர்ந்தும் அப்பாவி மக்களைக் கொலைசெய்கின்றனர்.

இதனை இனியும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் இணைத்தலைமை நாடுகளும் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்காமல் ஸ்ரீலங்கா அரசின்மீது தடைகளையும் அழுத்தங்களையும் விதிக்கவேண்டும்.

தமிழ் மக்கள் சர்வதேசத்தின் மீதான நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை என்பதால் அதனைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உண்டு.

யாழ். மாவட்டப் பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

யாழ்ப்பாணக் குடாநாட்டில் என்றுமில்லாத, போருடன் சம்பந்தப்படாத அப்பாவிப் பொதுமக்கள் தினமும் படுகொலை செய்யப்படுகின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மூலை முடுக்கெல்லாம் இராணு வத்தினர் நிறுத்தப்பட்டு ஊரடங்குச் சட்டம் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டபோதும், மக்கள் கடத்தப்படுவதும் பின்னர் இவர்கள் கொலைசெய்யப்பட்டு வீதிகளில் வீசப்படுவதும் நாளாந்தச் செயற்பாடாகிவிட்டது.

இராணுவத்தினர் செறிவாக உள்ள யாழ்ப் பாணக் குடாநாட்டில் இராணுவ ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரங்களில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் வெள்ளை வான் கடத்தல்களையும் கொலைகளையும் எவராலும் செய்யமுடியாது. எனவே, யாழ். குடாநாட்டில் தொடரும் ஆள் கடத்தல்களுக்கும் காணாமல் போதல்களுக்கும், படுகொலைகளுக்கும் இலங்கை அரசும் அதன் படைகளுமே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த ஒன்பது மாதத்தில் மாத்திரம் யாழ். குடாவில் 419இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற்போனதாக அவர்களது பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானோர் படையினரால் கைதுசெய்யப்பட்டதாகவே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த நான்கரை வருட சமாதான காலத்தில் ஸ்ரீலங்கா அரசுகள் தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கவில்லை என்ற கசப்பான உண்மையினை குறிப்பாக சிரான் கட்டமைப்பு தொடங்கி இடைக்கால திட்டவரைபு, (ஐகுஎஅ) சுனாமி பொதுக்கட்டமைப்பு அனைத்திற்குமே தடைபோட்டன என்ற யதார்த்தத்தினை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்தும் சர்வதேசம் மௌனமாக இருக்குமானால், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும் விதிகளும் பொய்யாகிப்போகும். ஐக்கியநாடுகள் சபை ஏன் என்ற கேள்வி எழும். எனவே, சர்வதேசம் தமிழ் மக்கள் பிரச்சினையில் உறுதியான முடிவை எடுத்து தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவேண்டுமென உருக்கமாக வேண்டுகின்றோம் என்றுள்ளது.

http://www.uthayan.com/Pages/news/today/16.htm

என்னவெண்டாலும் வன்னிமைந்தனின் கருத்துக்கு குறைந்தது 3 பக்க பதிலாவது கிடைக்குது :lol::lol::D:D

காலம்தான் கடவுள்,

அதுவே அனைததையும் தீர்மாணிக்கின்றது,

நேரம் வர காட்சிகள் மாறும்,

பலமே பிரதானம்,

பலமுள்ளவன் சொல்வதே நீதியும் நியாயமும் ஜனநாயகமும் கூட.

திருமலையை பிடியுங்கள் தடைகள் விலகும்.

சாணக்கியன்

இன்று நடப்பவைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வியாக்கியானம் சொல்லலாம்,எதிர்காலத்தில் என்ன நடக்கும் நடக்காது என்று சொல்லலாம், அது அது அவர் அவர் பார்வை.இங்கே அவ்வாறு தமது பார்வைகளை தேசியம் சம்பந்தமாக் எழுத வேண்டாம் என்று எழுத எவருக்கும் உரிமை இல்லை.இங்கே எவரும் தேசிய விடுதலைப் போராட்டத்தைக் குதைகைக்கு எடுக்கவில்லை.தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அனைத்து மக்களுக்கும் ஆனாது ஆகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும்.

புலிகள் தேசிய விடுதலைப்போராட்டத்தின் தலமைச் சக்தியாக ஏன் உருவெடுத்தார்கள்? ஏன் புலிகளின் தலைவர் பிரபாகரன் மேல் போராளிகளும் தமிழ் மக்களும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துப் போராடுகிறார்கள்? இவை பற்றிக் கொஞ்சம் சிந்தித்தீர்களே ஆனால் உண்மை விளங்கும்.புலிகளின் தலமை என்றுமே தமிழ் மக்களின் அரசியல் இலக்கை விட்டு நழுவி காய்களை நகர்த்தியது கிடையாது.அதன் அடிப்படையிலயே மக்கள் புலிகளின் ஒவ்வோரு நகர்வையும் நோக்குகின்றனர்.அத்தோடு புலிகளின் தலமை இலக்கை நோக்கி அனைத்து சாத்தியமான் வழி முறைகளாலும் சர்வதேசத்தையும் சிங்கள அரசையும் நகர்த்தி வருகிறது என்பது தான் உண்மையான விடயம்.இவாறான நகர்வுகளில் சிலது வெற்றி அடைந்துள்லது சிலது தோல்வி அடைந்துள்ளது.எந்த விடயத்திலும் இவை நிகழக் கூடியது தான்.இங்கே வெறுமனே இராணுவக் கண்ணோட்டங்களோ அன்றி பேச்சுவார்த்தை சமாதானம் என்ற வெற்றுக் கோசங்களோ ஒன்றையும் பெற்றுத் தரப் போவதில்லை.

எமக்கான போராட்டத்தை நாம் தான் நடாத்த முடியும் என்பதிலும் எமது விடுதலையை தமிழ் ஈழத் தனி அரசை நிறுவுவதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்பதிலும் அதற்கான அடிப்படை நில மீட்பு என்பதிலும் எந்த வித விட்டு கொடுப்புக்களோ ஐயங்களோ இருக்கக் கூடாது. இதனை பல முறை புலிகள் தெளிவு படுத்தி இருகின்றனர்.

இராணுவத் தந்திரோபாயங்களை அத் துறையில் விற்பன்னர்களானவர்களிடம் விட்டு விட்டு புலத் தமிழர்கள் தமிழ் மக்களின் படுகொலைகளை எமது போராட்டத்தின் நியாயங்களை புலத்தில் உள்ள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.எமது பலத்தை வளர்க்கக் கூடிய பொருளாதார, தொழில் நுட்ப உதவிகளை வழங்க வேண்டும்.அதை விடுத்து தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னணிச் சக்திகளுக்கு இராணுவ உபாயங்களைப் படிபிப்பதிலும், அரசியல் படிப்பதிலும் தமது காலத்தை விரயம் செய்வது எவருக்குமே பயனற்ற ஒரு காரியம். நீங்கள் இந்துறைகளில் விற்பன்னர்களாயின் அது பற்றி எழுதலாம்.அதை விடுத்து அரை குறை அறிவுடன் பரிந்துரைகளை எழுதுவது நியாயமானதாகப்படவில்லை.

இன்று நோர்வே மிக திடமாக கூறியுள்ளது. இரு தரப்பையும் மேசைக்கு கொண்டுவர தமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தள்ளதாகவும் இது இலங்கை அரசிற்கும் புலிகளுக்கம் பொதுவாக விடப்பட்ட ஒன்றே.

இன்று நடப்பவைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வியாக்கியானம் சொல்லலாம்' date='எதிர்காலத்தில் என்ன நடக்கும் நடக்காது என்று சொல்லலாம், அது அது அவர் அவர் பார்வை.[b']இங்கே அவ்வாறு தமது பார்வைகளை தேசியம் சம்பந்தமாக் எழுத வேண்டாம் என்று எழுத எவருக்கும் உரிமை இல்லை

புலிகள் தேசிய விடுதலைப்போராட்டத்தின் தலமைச் சக்தியாக ஏன் உருவெடுத்தார்கள்? ஏன் புலிகளின் தலைவர் பிரபாகரன் மேல் போராளிகளும் தமிழ் மக்களும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துப் போராடுகிறார்கள்? இவை பற்றிக் கொஞ்சம் சிந்தித்தீர்களே ஆனால் உண்மை விளங்கும்.புலிகளின் தலமை என்றுமே தமிழ் மக்களின் அரசியல் இலக்கை விட்டு நழுவி காய்களை நகர்த்தியது கிடையாது.அதன் அடிப்படையிலயே மக்கள் புலிகளின் ஒவ்வோரு நகர்வையும் நோக்குகின்றனர்.அத்தோடு புலிகளின் தலமை இலக்கை நோக்கி அனைத்து சாத்தியமான் வழி முறைகளாலும் சர்வதேசத்தையும் சிங்கள அரசையும் நகர்த்தி வருகிறது என்பது தான் உண்மையான விடயம்.இவாறான நகர்வுகளில் சிலது வெற்றி அடைந்துள்லது சிலது தோல்வி அடைந்துள்ளது.எந்த விடயத்திலும் இவை நிகழக் கூடியது தான்.இங்கே வெறுமனே இராணுவக் கண்ணோட்டங்களோ அன்றி பேச்சுவார்த்தை சமாதானம் என்ற வெற்றுக் கோசங்களோ ஒன்றையும் பெற்றுத் தரப் போவதில்லை.

எமக்கான போராட்டத்தை நாம் தான் நடாத்த முடியும் என்பதிலும் எமது விடுதலையை தமிழ் ஈழத் தனி அரசை நிறுவுவதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்பதிலும் அதற்கான அடிப்படை நில மீட்பு என்பதிலும் எந்த வித விட்டு கொடுப்புக்களோ ஐயங்களோ இருக்கக் கூடாது. இதனை பல முறை புலிகள் தெளிவு படுத்தி இருகின்றனர்.

இராணுவத் தந்திரோபாயங்களை அத் துறையில் விற்பன்னர்களானவர்களிடம் விட்டு விட்டு புலத் தமிழர்கள் தமிழ் மக்களின் படுகொலைகளை எமது போராட்டத்தின் நியாயங்களை புலத்தில் உள்ள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.எமது பலத்தை வளர்க்கக் கூடிய பொருளாதார, தொழில் நுட்ப உதவிகளை வழங்க வேண்டும்.அதை விடுத்து தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னணிச் சக்திகளுக்கு இராணுவ உபாயங்களைப் படிபிப்பதிலும், அரசியல் படிப்பதிலும் தமது காலத்தை விரயம் செய்வது எவருக்குமே பயனற்ற ஒரு காரியம்

கருத்து சொல்லும் உரிமைக்கு தடை இல்லை என்று தொடங்கி அதனால் பயன் ஒன்றும் ஆகிவிடாது என்று முடித்திருக்கப்பட்டிருக்கி

இங்கே அவ்வாறு தமது பார்வைகளை தேசியம் சம்பந்தமாக் எழுத வேண்டாம் என்று எழுத எவருக்கும் உரிமை இல்லை

அதை விடுத்து தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னணிச் சக்திகளுக்கு இராணுவ உபாயங்களைப் படிபிப்பதிலும், அரசியல் படிப்பதிலும் தமது காலத்தை விரயம் செய்வது எவருக்குமே பயனற்ற ஒரு காரியம்

கருத்து சொல்லும் உரிமைக்கு தடை இல்லை என்று தொடங்கி அதனால் பயன் ஒன்றும் ஆகிவிடாது என்று முடித்திருக்கப்பட்டிருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.