Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய அரசின் எதேச்சாதிகார கைதுகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியா ஸ்கொட்லண்ட் யாட் கைதுசெய்த பிரித்தானிய தமிழர் ஒன்றியம் BTA (British Tamil Association ) தலைவர் திரு ஏ சி சாந்தன், மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு TYO-UK (Tamil Youth Organisation) ஐக்கிய ராச்சியம் கிளையின் பொறுப்பாளர் திரு கோல்டன் லம்பேர்ட் என்பவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி லண்டன் தமிழர்கள் ஏதாவது உடன் செய்தாக வேண்டும். எமது மெளனம் அவர்களின் நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்துவிடும்

Edited by Nellai Poo. Peran

இது கள்ளன் நாடுதானே என்ன செய்ய கிடக்கு. இவைக்கு அவங்கள் தான் சரி படிப்பிப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

இது கள்ளன் நாடுதானே என்ன செய்ய கிடக்கு. இவைக்கு அவங்கள் தான் சரி படிப்பிப்பினம்

அது கள்ள நாடோ இல்லையோ வந்திருக்கிற தமிழர்கள் கள்ளர்..! அவங்க தானே எல்லாமே வாக்குமூலமா கொடுக்கிறாங்க அவங்க பிடிக்கிறாங்க..! :lol::lol:

தமிழன் சொல்லாட்டி அவனுக்கு ஒண்டும் தெரியாதுதானே. ...

இவனுக்கு செய்ய வேண்டிய நன்றி உபகாரம் உதவிபணம் எடுத்துக்கொண்டு தண்டச்சோற்றுக்கு எல்லா தமிழரும் இருக்க வேணும்.......

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே பிரித்தானியா கெட்டவனா நல்லவா என்பதல்ல பிரச்சனை. இதனால் பாதிக்கப்படப் போவது யார் என்பது தான் மூலப்பிரச்சனை.

இங்கே மேற்குறித்த இருவரின் கைதும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதனால் பாதிக்கப்படப்போவது நாங்கள் மட்டுமே. பிரித்தானியாவிற்கு ஒரு பாதிப்பும் கிடையாது. எனவே அந்தப் பாதிப்பில் இருந்து விடுபட நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பது குறித்தான கேள்விக்குத் தான் பதில் தேவைப்படுகின்றதே தவிர, அவர்களைக் கள்ளன், காடையன் என்று திட்டி நடக்கு என்ன ஆகப் போகின்றது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த காலங்களில் பல தமிழ் தேசிய ஆதரவு முன்னெடுப்புகளுக்கு கால்கோள் இட்ட யாழ் கருத்து களம்.

இது பற்றி ஒரு நாளையும் இடத்தையும் குறித்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு முன்கூட்டியே அறிவித்தால் அவர்கள் கலந்துகொள்ள வசதியாக இருக்கும். பிரித்தானிய அரசின் மிலேச்சத்தனமான கைது நடவடிக்கைக்கு எதிராக பரந்தளவு அணிதிரண்டு எமது எதிர்புணர்வை காட்டவேண்டும். .

நேசன்மற்றும் நெடுக்கால போவானின் ஆதங்கங்களை புரிந்து கொள்ள முடிகின்றது. குறைபாடுகள் நிறைய இருக்கத்தான் செய்கின்றது. எத்தனை கொலை செய்தாலும். எத்தனை பேர் கடத்தப்பட்டாலும். இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டாலும் மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்கும் தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தாய் மண்ணில் பற்றுக்கொண்டவர்கள் பிரித்தானியாவின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

காலனித்துவ காலத்துக்கு முன்னர் சிங்கள அரசின் கீழ் தமிழர்கள் வாழ்ந்ததில்லை. பிரித்தானிய அரசு தான் விலகும் போது சிங்களவனிடம் ஆட்சியை கொடுத்தது. இதுவே அடிப்படை பிரச்சனைக்கு காரணமானது யாவரும் அறிந்ததே. தற்போது சமதரப்பாக ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடந்த போது ஒரு தரப்பை தடை செய்து சமநிலையை குழப்பி போர்ச்சூழலை ஏற்படுத்தியதும் இவர்களே. இவர்கள் தடை செய்த பின்னர் தினமும் தமிழரை கொல்லும் துணிவை, இனச்சுத்திகரிப்பு செய்யும் துணிவை சிங்களத்தரப்புக்கு கொடுத்துள்ளது. கிழக்கை ஆக்கிரமித்து உயர்பாதுகாப்பு வலயமாக்கும் துணிவை கொடுத்தது. யாழ் பாதை மூடும் துணிவை கொடுத்தது. என்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

தற்போதய கைதுகளால் சிங்களத்தரப்புக்கு என்னும் தமிழரை ஒடுக்கி அழிக்கும் விசயத்தில் உற்சாகம் வரத்தான் போகின்றது. தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. இந்த நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டிய கடமை புலம்பெயர் தமிழருக்கு உண்டு. இல்லையேல் எல்லாவற்றiயும் ஏற்றுக்கொண்டவர்களாக, தமது இனத்தின் அழிவை ஏற்றுக்கொண்டவராக ஆகிவிடுவோம்.

சிலர் மாற்று கருத்து என்ற முகமூடியுடன் தமிழர் கொலைகளை பகிரங்கமாக ஏற்று மகிந்தருக்கு வக்காலத்து வாங்குவதற்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் காண வேண்டும்.

ஒவ்வொரு தமிழர் கைது செய்யப்படும் போது ஆனந்தப்படுபவர்கள். மனித நேய உதவிப்பணியாளர்கள் தடைகளுக்குட்படும் போது ஆனந்தப்படுபவர்கள், அண்மையில் சிங்களத்தரப்பால் படுகொலை செய்யப்பட்ட செஞ்சிலுவைச்சங்க பணியாளர்கள் இருவர் கொலையும்யாவரும் அறிந்ததே. அவர்கள் இறுதிச்சடங்கிற்கு மகிந்தரே போனதும் யாவரும் அறிந்ததே. ஆனால் மாற்று கருத்து தளங்கள் இவர்கள் இருவரும் புலிகளுக்கு தொடர்பானவர்கள் என்று தெருவில் நிற்கும் சிறுவனுக்கும் தெரியும் ஆனால் அரச தரப்புக்கு தெரியாமல் போனது வியப்புக்குரியது என்று செய்தி வெளியிட்டது.

இப்படியான செய்திக்கு பின்னால் என்ன உள்ளது? முடிந்தவரை மனித நேய பணியாளர்களை கொல்லுங்கள். பணிகள் நிறுத்தப்படட்டும். மக்கள் அவலப்படட்டும் என்பதை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

செஞ்சோலையில் 50 சிறார்கள் கொல்லப்பட்டதை சர்வதேச நிறுவனங்கள் நேரில்பார்த்து உறுதிப்படுத்திய பின்னும் கொல்லப்பட்டது ஒன்பது பேர்தான் என்றும். கொல்லப்பட்டது புலிகள் என்றும் சாதித்துக்கொண்டிருந்த தமிழர்கள் பின்னால் என்ன உள்ளது? நாங்கள் முடிந்த வரை எண்ணிக்கையை குறைத்து சொல்வோம். செய்தியை திரித்து சொல்வோம் மகிந்தா நீர் தொடரும் என்பதை தவிர என்ன எதிர்பார்க்க முடியும்?

யாழ் பாதை மூடி இருப்பதே நல்லது என்று புலம்பெயர் மண்ணில் இருந்து மாற்று கருத்து சொன்னவர்கள் குடா நாட்டு மக்களின் அவலத்தையும் உறவுகள் துண்டிக்கப்பட்ட அம் மக்களின் சிறை வாழ்க்கையையும் ரசிக்கின்றனர் என்பதை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

கிழக்கில் சிங்களத்தரப்பின் வெற்றியை அல்லும் பகலும் எதிர்பார்து காத்திருக்கும் சில புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் அகதிகள் அவலத்தையும் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் நிரந்தரமாக இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்படும் மக்களையும் பற்றி கவலைப்பட ஒன்று மில்லை என்னும் நிலைப்பாட்டை வெளிப்படையாக உணர முடியும்.

தமது தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக தனது இனத்தை சிங்களவனைக் கொண்டு ஒழித்துக்கட்டி அதன் பின்னும் இதற்கு காரணம் புலிகள் என்று சொல்லத்துடிக்கும் சிங்களவனை விட மோசமான விசக்கிருமிகளான தமிழர்ளுக்கும் எனைய தமிழர்களுக்கும் வித்தியாசம் வேண்டும். புலம் பெயர் தேசங்களில் கைதாகும் ஒவ்வொரு தமிழன் பின்னாலும் அதற்கு காரணமாக ஒரு தமிழனாவது இருப்பான். அவனைப் பொறுத்தவரை சிங்களத்தின் எந்த விதமான இன அழிப்பும் பாதிக்காது. ஆனால் எல்லோரும் அப்படி இருக்க முடியாது.

மௌனமாக மக்கள் இருக்கும் போது இந்த விசக்கிருமிகள் மக்கள் தமது கருத்துக்கு வந்து விட்டதாக நினைக்கின்றான். அதற்காக திட்டமிட்டு செயற்படுகின்றன். புலம் பெயர் தமிழர்கள் குரல் கொடுப்பதானது அவர்கள் தங்கள் உறவுகளை காப்பற்ற செய்யும் கடமை என்றாகின்றது. மௌனமாக இருப்பது உறவுகளை கொல்ல அனுமதிப்பதாக மாற்றப்படுவதே மாற்று என்னும் பயங்கரம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிரித்தானியாவின் எதேச்சதிகாரப்போக்கிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து கௌ;ள வேண்டும். எமது இனத்துக்காக போரட வேண்டிய நிலை என்ற ஒன்று பிரதானமானது. அடுத்து அதற்கு ஆதரவு கொடுக்கும் நிலை என்பது. ஆனால் இப்போது ஏற்படும் நிலை எல்லவற்றையும் தாண்டி எமது இனத்தின் அழிவுக்கு நாம் துணை போகவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது. எனவே எமது இனத்துக்கான தார்மீக கடமையை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புரிதா பிரித்தனிய மற்றும் மேந்குலகின் இராஜதந்திரத்தை..அதாவது தமிழர்களுக்கு ஆதரவு nதிhவிப்பது போல தெரிவித்து இலங்கை அரசை கண்டிப்து போல கண்டித்து ஆப்பு வைச்சிட்டாங்க எம்மவர்களும் இந்தா பிரிட்டன் அப்படி பன்ன போது இப்படி பன்ன போதுன்னு எகிரி குதிச்சவைக்கு எங்க கை தான் எங்களுக்கு உதவி என்றது புரின்சிருக்கம்.....பிரித்தானி

  • கருத்துக்கள உறவுகள்

சும்ம இல்லை சுமந்துகிட்டு அதிருது......................... சுண்டல்

:lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்புக் குரலை வீட்டுக்குள் இருந்து தெரிவித்துப் பயனில்லை.. வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். யாராவது ஒழுங்கு பண்ணியுள்ளார்களா?? இல்லாவிட்டால் "கப் சிப்" என்று அமுங்கியுள்ளார்களா>

இப்ப புரிதா பிரித்தனிய மற்றும் மேந்குலகின் இராஜதந்திரத்தை..அதாவது தமிழர்களுக்கு ஆதரவு nதிhவிப்பது போல தெரிவித்து இலங்கை அரசை கண்டிப்து போல கண்டித்து ஆப்பு வைச்சிட்டாங்க எம்மவர்களும் இந்தா பிரிட்டன் அப்படி பன்ன போது இப்படி பன்ன போதுன்னு எகிரி குதிச்சவைக்கு எங்க கை தான் எங்களுக்கு உதவி என்றது புரின்சிருக்கம்.....பிரித்தானி

��ாவல் எழுப்பப்பட்ட குரல்கள் எல்லாம் இந்த கைதுக்கு முன்னேற்பாடே...தொட்டில ஆட்டிறமாதிரி ஆட்டி அப்படியே பில்லையை கிள்ளிட்டுது..

சரியாக சொன்னீங்கள்....

பிரித்தானியா மத்தியஸ்தத்துக்கு வர முடியாது......! எண்டதும், தமிழருக்கு ஏக பிரிதி நிதிகள் இருக்கினம், அது விடுதலைப்புலிகள் என்பதையும், பிரித்தானியா ஏற்றுக்கொள்ள இல்லை... அதன் உதரணமாய் விடுதலைப்புலிகளை தடை பட்டியலில் போட்டிருக்கு...! அதனால பிரித்தானியா சமரசத்துக்கு நடுநிலையாளராக உள்நுளைய முடியாது எண்று தமிழர் தரப்பால் பூர்வாங்கமாய் சொல்லப்பட்டு விட்டுது....

பிடிக்கப்பட்டவர் யார் என்பதை பிரித்தானிய பொலீசார் வெளியிடவில்லை... எல்லா செய்திகளும் இலங்கை ஊடகங்களை மேற்கொள் காட்டியே வெளியிடப்படுகிறது... சரியான வகையில் குற்றவாளி எண்று அறிந்த பின்னர் இங்கிலாந்து பொலீசார் கைது செய்து இருந்தால், கட்டாயம் தம்பட்டம் அடித்து இருப்பார்கள்... அதுதான் வெள்ளைக்காறனின் சுபாவம்....!! ஆனால் ஆள் யார் என்பதை இன்னும் வெளியிடப்பட வில்லை... அவர்கள் வெளியிட விரும்பவில்லை...! அவர்களை குற்றமறவர் எண்று வெளியே விட வேண்டி வரலாம் என்னும் போதுதான்( சந்தேகம், ஆதாரங்கள் போதாமை) இங்கிலாந்தில் பெயர்களை வெளியிடுவதில்லை.... இங்கிலாந்தின் பயங்கரவாத சட்டம் இப்படியான கைதுகளை அனுமதிப்பதோடு 14 நாள் விசாரனை கைதியாக யாரை வேண்டுமானாலும் வைத்திருக்கவும் பொலீசாருக்கு அனுமதிக்கிறது... குற்றம் நிரூபிப்பதுக்காக அத்து மீறிய தேடுதலுக்கும் அனுமதி உண்டு...!

புலிகளை படிய வைக்க பிரித்தானிய அரசால் மேற்கொள்ளப்படும் புலிக்கள் மீதான ஒரு அழுத்தமாக இதை பார்க்க முடியும்... ஒருவேளை இங்கே பெயர் குற்றிப்பிடப்பட்டு சொல்லும் இருவர் கைது செய்யப்பட்டு இருந்தால்.... அதை யாருமே இங்கிலாந்து பொலீசாருக்கு சொல்லிக்குடுக்க தேவை இல்லை...! பலதரப்பட்ட மேடைகளில் தமிழருகான சரியான தலைமை என்பதை இட்டு புலிகளுக்கு ஆதவாகவும் பேசியவர் ஒருவர் இதில் அடக்கம்....

Edited by தயா

எமது இருப்பை அங்கீகரிக்காமல் UK உள்ளே நுளைய முற்படுகின்றது.......

Edited by Panangkai

நாங்கள் பயந்து பதுங்கி எங்கள் வேலைகளை செய்வதனால் தான் எங்களை வெள்ளையனும் ஏறி மிதிக்கிறான்

தமிழ்தேசிய கொடியுடன் அனைவரும் பாராளுமன்றம் முன் நின்று எங்களையும் சிறையில் அடைக்கும் படி போராட்டம் நடத்து வோம் நாங்கள் தான் புலிகள் என்றும் நாங்கள் தான் தமிழர் என்றும் சிறை நிரம்பும் வரை பிரித்தானிய குடியுரிமை உள்ள தமிழர்களே ஒன்று சேருவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் மீதான பிரித்தானிய பொலிசாரின் அடாவடிதனம் இடைவிடாது தொடர்ச்சியாக செல்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் அணி திரள காத்திருக்கிறார்கள். இது குறித்து முயற்சிகள் எதுவும் எடுக்கப்படுகிறதா? விவரம் தெரிந்தவர்கள் யாழ் களத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் நாள் ஆடி 5 வருகின்றது. கறுப்பு ஆடி 23ம் திகதி வருகின்றது. இரண்டில் ஒரு தினத்தைப் பாவித்து ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தலாம். மக்களும் கலந்து கொள்ள அதிக வாய்ப்பாக இருக்கும்.

பிடிக்கப்ப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பொலிசார் கண்ணியமாகவே நடந்து கொண்டதாகவே சொல்கிறார்கள்.

ஆனால் செய்தியை சிங்களவனும், ரி.பி.சி தமிழோசையும் தான் ஊதி தள்ளுகிறார்கள்

Edited by நேசன்

அவர்களை விடுதலை செய்திருந்தால் மகிழ்ச்சிக்குரிய விடயம். பிரித்தானியா மத்தியஸ்தம் வகிக்கப்போவதாகச் சொல்லிக்கொன்டே இப்படிச்செய்து போட்டுது. வருகிற கிழமை நடக்க இருக்கிற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் நடக்க இருக்குது. அங்கு சிரி லங்காவுக்கு அழுத்தம் போடவேண்டியேற்படலாம் என்றும் அதற்க்கு முன்னோடியாகவே விடுதலைப் புலித்தரப்புக்கும் இப்பிடியொரு அழுத்தம் கொடுத்ததாக சிரிலங்காவுக்கு காட்டிக் கொள்வதற்க்காகவும் இப்படியொரு நாடகம் ஆடியிருக்கலாம். ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட ஊகமே. இதில் உண்மை இல்லாமலுமிருக்கலாம். அதற்க்காக என்னதான் காரணம் கூறினாலும் பிரித்தானிய மத்தியஸ்த முயற்சிக்கு இது ஒரு முதற் கோணல். ஒரு பிழையான ஆரம்பம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

மற்றும்படி இந்த வருடம் கருப்பு யூலை நினைவு நாளோடு ஊர்வலம் வைப்பது நல்லது. லண்டனில் வாழும் நிறைய தமிழ்ச் சனங்கள் ஊரிலும் உலகிலும் தமிழர்க்கு எதிராக நடக்கும் கொடுமைகளைக் கண்டு உள்ளுக்குள் கொதித்துப் போய் மனம் புழுங்கி உள்ளனர். வீதியில் இறங்கி உரக்கக் குரல் கொடுத்தால்தான் மனச் சுமை இறங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிற்கான ஒரு நாடகம் என்றால் ஏன் பயங்கவாதச் சட்டத்தின் மூலம் கைது செய்ய வேண்டும். இதில் ஏதோ சூழ்ச்சியிருக்க வேண்டும்.

யூலை 23ம் திகதி பேரளி நடத்துவது என்றால் என்னும் ஒரு மாதம் வரை இருக்கின்றது. இதற்குள் குறித்த விடயத்தின் சூடு ஆறிவிடாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும்படி இந்த வருடம் கருப்பு யூலை நினைவு நாளோடு ஊர்வலம் வைப்பது நல்லது. லண்டனில் வாழும் நிறைய தமிழ்ச் சனங்கள் ஊரிலும் உலகிலும் தமிழர்க்கு எதிராக நடக்கும் கொடுமைகளைக் கண்டு உள்ளுக்குள் கொதித்துப் போய் மனம் புழுங்கி உள்ளனர். வீதியில் இறங்கி உரக்கக் குரல் கொடுத்தால்தான் மனச் சுமை இறங்கும்

அட லண்டனில உள்ள தமிழர்கள் இப்படியா இருக்கினம்.. பார்த்தா தெரியல்லையே...!

எங்க ஓசிக் காசு வரும்.. எப்படிடா அகதி விண்ணப்பத்தை புலியைப் பற்றி அள்ளி வைச்சு பொய் சொல்லி புதிசா கோட்டுக்கு கொண்டு வரலாம்.. ஊரில பிரச்சனை எங்க கொலிடே போகலாம்... என்றொல்லோ இருக்கினம்..??! நீங்க என்னடான்னா.. பெரிசா... ஓஓஓ.. இதைத்தான் ஊரில உள்ள சனங்களுக்கு அங்க வந்தும் பெரிசா படம் காட்டிறது என்றதோ..??! இங்க எல்லாம் பூச்சியமா இருக்குது..! :blink: :P :)

தூயவன், வேறெந்த சட்டங்களை விடவும் இந்தப்பயங்கரவாத தடைச் சட்டம் "சந்தேகத்தின்பேரில் யாரையும் கைது செய்யலாம்; நீதிமன்றில் வழக்குப் போடமல் 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்திருக்கலாம்." இப்படியான காரணங்களாகவும் இருக்கலாம். அடுத்து எத்தகைய போராட்டம் எப்போது நடத்துவது என்பதை இதனை ஒழுங்குசெய்பவர்கள் கூடி ஆராய்ந்து தெரியப்ப்படுத்துவதுதான் சிறந்தது. ஏனென்றால் அவர்களால்தான் "எல்லாவிடயங்களையும்" கவனத்தில் எடுத்து ஒரு முடிவுக்கு வர முடியும்.

அடுத்து நெடுக்காலபோவான் சொன்ன கருத்திலிருந்து....நீங்கள் குறிப்பிட்ட சனங்களும் லண்டனில் இருக்கிறர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன். நித்திரையிலிருப்பது போல் நடிக்கும் அவர்களை எழுப்புவது கடினம். அதேநேரத்தில் உண்மையாகவே உணர்வுள்ளவர்கள் நிறையப்பேர் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்குது. முன்னரைவிடவும் தற்போது பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து உணர்வுள்ள தமிழர்கள் இங்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். பொசிற்றிவாக எதிர்பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத்தை நேசித்ததால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் இருக்கும் திரு சாந்தன் மற்றும் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி லண்டன் தமிழர் மத்தியில் வலுவான குரல்கள் எதுவும் ஒலிக்காதது ஈழத்தவர் பலருக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையும் தந்துள்ளது. இது குறித்து உரியவர்கள் முன்வந்து தமது தேவையான உதவியை கோரினால் பலர் வழங்க தயாராக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் புலிகளுக்கு உதவியதாகக் குற்றங்கள் சுமத்தப்பட்டு இன்று நீதிமன்றத்துக்கு கொண்டுபோகவுள்ளனராம். தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் வழக்கு நடைபெற உள்ளது..

தமிழர்கள் பலர் இதைப்பற்றிக் கதைத்தாலே தங்களையும் உள்ளே போட்டுவிடுவாங்கள் என்று பயந்துபோய் உள்ளமாதிரித் தெரியுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Chrishanthakumar is charged with five counts as follows:

1. For that you between the 1st day of June 2006 and the 26th day of July 2006 within the Greater London area assisted in the arrangement of a meeting which you knew was to support a proscribed organisation namely the Liberation Tigers of Tamil Eelam

Contrary to Section 12(2)a and (6) of the Terrorism Act 2000

2. For that you on the 25th day of July 2006 in a public place, namely Hyde Park London, addressed a meeting and the purpose of the address was to encourage support for a proscribed organisation, namely the Liberation Tigers of Tamil Eelam

Contrary to Section 12(3) and (6) of the Terrorism Act 2000

3. For that you on or about the 24th day of January 2005 within the Greater London Area received £1500 intending that it be used or having reasonable cause to suspect that it may be used for the purposes of terrorism

Contrary to Section 15(2) and Section 22 of the Terrorism Act 2000

4. For that you between the 17th day of January 2006 and the 22nd June 2007 within the Greater London Area received a quantity of literature and manuals including Underwater Warfare Systems, Explosive Ordnance Disposal and Naval Weapons Systems, six trenching spades, thirty nine compasses and a piece of ballistic body armour intending that they be used or having reasonable cause to suspect that they may be used for the purposes of terrorism

Contrary to Section 15(2) and Section 22 of the Terrorism Act 2000

5. For that you between the 23rd day of January 2005 and the 22nd day of June 2007 within the Greater London Area belonged or professed to belong to a proscribed organisation, namely the Liberation Tigers of Tamil Eelam

Contrary to Section 11(1) and (3) of the Terrorism Act 2000

Lambert is charged with one count:

1. For that you on the 25th day of July 2006 at Hyde Park London assisted in managing a meeting which you knew was to support a proscribed organisation, namely the Liberation Tigers of Tamil Eelam

Contrary to Section 12(2)a and (6) of the Terrorism Act 2000

NOT FOR PUBLICATION: TO RECAP: At approx. 15:45 on 21.6.07 two men [A/B] were arrested on suspicion of providing support to a proscribed organisation, contrary to Sect. 12 of the Terrorism Act 2000.

A, 29 ys, arrested in west London and B, 50 ys, arrested in SW16

They were taken to a central London police station where they remain in custody.

Some addresses at various locations in London were searched in connection with the inquiry.

மேற்படி அறிக்கையை லண்டனில் இயங்கும் தமிழர் தகவல் நடுவம் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் வந்தது.

லண்டன் பொலிஸ் வெளியீட்டில் வந்த இந்த அறிக்கையின் பிரகாரம் திரு சாந்தனுக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளும், திரு லம்பேர்ட்க்கு எதிராக ஒரு குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது. இதில் எதுவும் பாரதூரமான விடயங்கள் இல்லை. முறையான சட்ட வல்லுனர்களை வைத்து வாதாடினால் பொலிஸ் தரப்பு குற்றச்சாட்டுளை முறியடித்து அவர்களுக்கு எதிரான நட்ட ஈடு கோரியும் வழக்கை கொண்டுசெல்ல முடியும்.

ஆனால், தமிழ் மக்களின் தார்மீக ஆதரவுக்குரல்கள் வழக்கின் போக்கை அதிகம் தீர்மானிக்கும் என்பதை உணர்ந்து கொள்ளத்தவற வேண்டாம்.

Edited by Nellai Poo. Peran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு லம்பேட்டுக்கு ரொக்கப்பிணை கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த ரொக்கம் செலுத்தப்படாததால் தடுப்புக்காவல் நீடிப்பதாகவும், திரு சாந்தனுக்கு பிணை மறுக்கப்பட்டதாகவும் பி. பி. சி செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வழக்கு தவணை ஜீலை 5ஆம் திகதி தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்த கைதுகளுக்கு எதிராக ஒரு அடையாள எதிர்ப்பை தெரிவிக்கும் பேரணி ஒன்றை நடாத்த திரு இராஜமனோகரன் முயற்சிகள் எடுத்து வருவதாக அறிய முடிகிறது. விரும்பியவர்கள் அவருடன் இணைந்து கொள்ளவும்.

தேசியத்தை நேசித்ததால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் இருக்கும் திரு சாந்தன் மற்றும் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி லண்டன் தமிழர் மத்தியில் வலுவான குரல்கள் எதுவும் ஒலிக்காதது ஈழத்தவர் பலருக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையும் தந்துள்ளது. இது குறித்து உரியவர்கள் முன்வந்து தமது தேவையான உதவியை கோரினால் பலர் வழங்க தயாராக இருக்கிறார்கள்.
சிவாஜியை எதிர்க்க சொல்லும் அமைப்புகள் ஏன் இந்த கைது தொடர்பாக குரல் எழுப்பவில்லை? :(
திரு லம்பேட்டுக்கு ரொக்கப்பிணை கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த ரொக்கம் செலுத்தப்படாததால் தடுப்புக்காவல் நீடிப்பதாகவும், திரு சாந்தனுக்கு பிணை மறுக்கப்பட்டதாகவும் பி. பி. சி செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வழக்கு தவணை ஜீலை 5ஆம் திகதி தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்த கைதுகளுக்கு எதிராக ஒரு அடையாள எதிர்ப்பை தெரிவிக்கும் பேரணி ஒன்றை நடாத்த திரு இராஜமனோகரன் முயற்சிகள் எடுத்து வருவதாக அறிய முடிகிறது. விரும்பியவர்கள் அவருடன் இணைந்து கொள்ளவும்.
கைதுகளை பார்க்கும் போது இது வெருட்டுவதுக்கு போல் இருக்கே??????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.