Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுகளை அழைக்கின்றோம்

Featured Replies

கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

நலமறிய ஆவல். இந்த பதிவை ஒரு சகோதர நலம் விசாரித்து, வேற்றுமைகளை மறந்து, நாம் நாமாக இருக்கும் பதிவாக பாவியுங்கள்.

ஈழத்தை விட்டு தூர இருக்கும் நேரத்தில், எங்களை இணைத்த பெருமை யாழுக்கே. என்னை போல பலருக்கு தமிழ் கற்பித்து எழுத வைத்ததும் யாழே.

குடும்பத்தை விட்டு வந்து தனியே இருக்கும் பல சகோதரர்களுக்கு, அக்கா, தங்கை, நண்பர்கள் என நல்ல உள்ளங்களை அறிமுகப்படுத்தியதும் யாழ் தான்.

யாழில் அப்போ அப்போ சிறிய பிரச்சனைகள் வருவது சகஜம் தானே. எங்களில் யார் தான் இதில் சிக்கவில்லை?! தனி மனித தாக்குதல் சில நேரங்களில் நடப்பது தானே! முடிந்தால் பதில் சொல்லுங்கள், நிர்வாகத்திற்கு தெரிவுபடுத்துங்கள். அல்லது அப்படியே விட்டுவுடுங்கள். பதில் சொன்னால் தானே பிரச்சனை அதிகமாகும்.

ஒருவர் பேசுவது பிடிக்கவில்லை எனில், தனிமடலில் தெரிவியுங்கள். எழுதியவர் உடனே திருத்திவிடுவார் தானே!

இப்படி சின்ன பிரச்சனைகளால் நம்மிடையே இடைவெளி வருவதை என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை.

வாருங்கள்..... கை கோருங்கள்.... நாமெல்லாம் ஈழத்தாயின் பிள்ளைகள். ஒற்றுமையே பலம்.

கள உறுப்பினர்கள் அனைவரையும் இங்கு பதில் தந்து கை கோர்க்க அழைக்கின்றேன்.

அன்புடன்

தூயா

Edited by தூயா

  • Replies 58
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தூய்ஸ்

இதை்த தான் நானும் சொல்கின்றேன். தனிப்பட்ட பிரச்சனைகள் தனிப்பட்ட விதத்தில் தீர்க்கப்பட வேண்டியவை. அதை ஆண்பெண் பிரச்சனையாக மாற்றுவது எவ்வகையில் சரியானது?

உண்மையில் அதில் ஆண் என்ற வகையில் எனக்கும் ஏற்பட்ட பாதிப்பாகவே நம்புகின்றேன். யாராவது களச் சகோதரிகள், உங்களை நான் பெண் என்ற வேறுபாட்டை வைத்து தாக்கிப் பேசியிருப்பதாக நம்பினால் பகிரங்கமாகவே தெரிவியுங்கள்.

நன்றி.

தூயிஸ் எங்கே இருந்து சடினா அப்பியர் வாங்கோ நாம நலம், :P

நானும் எனது ஆயுதங்களை ஒப்படைக்காம ஒன்றிணைய தயார்........ B) தூயிஸ் எனக்கு ஒரு சந்தேகம் எப்படி கை கோர்கிறது கணணியில என்னவோ சொல்லுறீங்க சரி சரி நான் கை கோக்க தயார் என்ன நானும் நீங்களும் தூயவன் அண்ணாவுமோ கை கோர்கிறது ஆனா தூயவன் அண்னா என்னோட கை கோப்பாரோ தெறியாது............. <_<

வரட்டா Cool

:D

முரண்பாடுகள் மனிதர்களுக்குள் சகஜமானது.... அதை தீர்க்க முடியும், ஆனால் மரியாதை என்பது அப்படி அல்ல...! அதை வேண்டியவர் சம்பாதிக்க வேண்டும்...!!

எனது தாயகத்தை கேவலப்படுத்தியவர்கள், அதுக்காக ஊயிரை கொடை ஆக்குபவார்கள் பளித்தவர்கள் இங்கை இல்லை எண்டு சொல்ல முடியவில்லை, அதே மாதிரி என்னை பன்னாடை எண்டவர்கள் எல்லாரும் எனக்கு ஒரே மாதிரித்தான் தெரிவதால்... அவர்களோடை என்னால் எப்போது ஒன்றி நடக்க முடியாது....! மன்னிக்கவும்...!

தூயாவின் அழைப்பை ஏற்க்க முடியாததால் வருந்துகிறேன்... ( என்னை நீங்கள் அழைக்க வில்லை எண்று சொன்னால் மகிழ்ச்சி) <_<

தேவையில்லாத பிரச்சினை இன்று யாழ் சந்தித்தது .இப்படிபட்ட யாழில் குழப்பத்தை ஏற்படுத்தும் தலைப்புகள் தேவையற்றது அத்துடன் மட்டுறுத்துணர்கள் கருத்துகளை பக்கசார்பாக அகற்றியதும் கவலை அளிகின்றது

  • தொடங்கியவர்

அப்படி கை கோர்க்கவே முடியாதென்பவர்கள்...முடிந்தவ

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயகத்தை கேவலப்படுத்தியவர்கள், அதுக்காக ஊயிரை கொடை ஆக்குபவார்கள் பளித்தவர்கள் இங்கை இல்லை எண்டு சொல்ல முடியவில்லை, அதே மாதிரி என்னை பன்னாடை எண்டவர்கள் எல்லாரும் எனக்கு ஒரே மாதிரித்தான் தெரிவதால்... அவர்களோடை என்னால் எப்போது ஒன்றி நடக்க முடியாது....! மன்னிக்கவும்...!

எங்களின் தளபதிக்குள் இத்தனை சோகமா.....

கண்ணீர் வருதுப்பா... அதிலும் உங்களைப் பன்னாடை என்று இனம் கண்டவர்கள் யார்? ( கோவிக்காதீர்கள். நம்மையும் கண்டு பிடிச்சிருக்கின்றார்களாம். <_<)

தூயா, இந்த தலைப்பை ஆரம்பித்தமைக்கும் முதலில் நன்றி!

கருத்தாடல் செய்வதற்குத்தானே கருத்துக்களம் இருக்கின்றது? ஆனால், கருத்தாடலின் கடைசியில் நாம் டென்சன் ஆகி அவருடன் கதைக்க மாட்டேன், இவருடன் கதைக்க மாட்டேன் என்று கோபம் போடுவது சிறு பிள்ளைத்தனமாக இருக்கின்றது.

என்னுடன் இப்படிதான் ஒரு நண்பன் மூன்றாம் வகுப்பில் கோபம் போட்டார். பிறகு சுமார் 15 வருடங்களின் பின் மீண்டும் அவரை தெருவில் எங்கோ கண்டுவிட்டு, இருவருமாகவே ஆளையாள் பார்த்து சிரித்துவிட்டு பழையபடி நண்பர்களானோம். இன்னொருவருடன் நான்காம் வகுப்பில் கோபம் போட்டது. இன்றுவரை கதைப்பதில்லை. காரணம் வெட்கம், நான் அவரை வழிதெருவில் கண்டால் வெட்கப்படுவேன். அவர் என்னைப் பார்த்து வெட்கப்படுவார். யார் முதலில் திரும்பவும் கதைப்பது என்ற பிரச்சனை.

நீங்கள் யாராவது என்னுடன் கோபம் போட்டாலும் நான் உங்கள் எவருடனாவது கோபம் போடும் நிலமையில் தற்போது இல்லை என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கின்றேன். நான் ஏற்கனவே செல்வன் என்றொரு மெகா சீரியலை தொடங்கியாயிற்று. கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிக, நடிகைகளுடன் கோபித்துவிட்டு பின்பு எப்படி சீரியலை தொடர்ந்து எழுதுவது?

எனக்கு ஒருவருடனும் கோபம் இல்லை, என்னுடன் முன்பு போல் சகஜமாகப் பழகுமாறு அனைத்து கள உறவுகளையும் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தூயா,

நலமே! எம் உறவுகள் யாவரும் நலம்தானே?

இங்கு யாரையும் எனக்கு தனிப்பட்டரீதியில் தெரியாது, முகம் கண்டதில்லை , அவரவர் எழுத்துக்களே அவர்களை அடையாளப்படுத்தும் ஆகவே 'கோவம் கொள்ளாது 'யமுனா"வைப்போல் அனைவரும் இருந்தால் நல்லது! பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். எதையும் இலகுவாக ஏற்றுக்கொள்ளும் தன்மை அவர்பால் ஓர் அன்புப்பிணைப்பை ஏற்படுத்தியது!. யமுனா, உங்கள் கையைக்கொடுங்கள் முதலில் வாழ்த்துச்சொல்ல அப்புறம் கோர்த்துக்கொள்ள! :(

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தயார்!

ஆனா எதுக்குள்ளால் கையைக் கோர்ப்பது. நானும் என் கணனியைத் சுத்திச் சுத்தி துவாரம் எதுக்குள்ளால் ஆவது கை தெரிகின்றதோ என்று பார்த்துக் கொண்டு நிற்கின்றேன்.

நானும் இணைகின்றேன். தனிப்பட்ட ரீதியில் கோபமில்லை. ஆனால் கருத்துக்கள் நியாயமற்று போனால் பாரபட்சமின்றி. பதில்கருத்தை முன்வைப்பேன். அதற்காகவே தான் இக்களம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரி தூயா!

இது ஒரு நல்ல முயற்சி...இதை நாம் ஒரு கோரிக்கையாக கருதவேனுமே ஒழிய...இந்தத் தலைப்பின் கீழ் அரட்டை வேண்டாம்..எங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தால் நல்லது.

அடுத்ததாக எனது கருத்து என்னவென்றால் சின்னச் சின்ன விடயத்திற்கெல்லாம் தலைப்புக்களை ஆரம்பிப்பது யாழ்த் தளத்திற்கு அழகல்ல.

பழகுவோம் பண்பாக, இருப்போம் ஒற்றுமையாக.....

இந்த திட்டத்திற்கு எல்லோரும் ஒத்துழைப்போமாக...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஒரு உள்ளத்தின் வேண்டுகோளுக்கு இனங்க நான் எழுதியதை அழிக்கிறேன்.

அதுக்காக எழுதியதுக்காக நான் மனம் வருந்தவில்லை நன்றி

Edited by தீபா

  • கருத்துக்கள உறவுகள்

நாம் நண்பர்களாக இருப்போம்.

Edited by Valvai Mainthan

எல்லாருக்கும் முதல் கண் என் வணக்கங்கள்(என்னை ஓவரா பில்டப் காட்டுறான் என்று பார்கிறீங்களோ சும்மா சும்மா )

தூயிஸ் உங்க கையில் இருகிற அண்ணாவின்ட கையை கொடுங்கோ பார்போம்.................கையில் மோதிரம் போட்டு இருந்தா கவனம்................நான் மோதிரம் எல்லாம் போடுறதில்லை பாருங்கோ..............மாப்பி நீங்களும் கையை தர போறீங்களா..............உங்க கையில மோதிரம் இருக்கோ???? இருந்தா என் பக்கம் தாங்கோ!!!!!! :P

தமிழ் தங்கை அக்கா மிக்க நன்றி................கையை தந்துவிட்டேன் வாழ்த்தை நீங்க வந்து ஆறுதலா சொல்லுங்கோ அப்படியே கையையும் தாங்கோ ஒன்றிணைய..............பயப்பிடவேண்டாம

அச்சாப்பிள்ளை தூயா அயந்தாக்காவயும் பறவைகளையும் கூட்டிக்கொண்டு வாங்கோ ...நான் அவைக்குத்தான் கைகுடுக்க வேணும்.

தூயா யாழ்களம் பல நல்ல நண்பர்களை தந்தது என்பதில் மறு பேச்சுக்கு இடம் இல்லை. அதே போல பல நல்ல தகவல்களை பலருக்கும் வழங்கிவந்திருக்கிறது, வழங்கும்.

கருத்து முரண்பாடுகளை பகையாக கொண்டு...... தொடர்ந்து காழ்புணர்வை காவி திரிவதால் எந்த பலனும் இல்லை. அது தான் எனது கருத்து.

அனைவரும் நட்பாக இருப்பதெ நல்லது.

Edited by KULAKADDAN

தூயா..என்ர கையையும் கோருங்கோ..... :D

ஆமா என்னோட கண்ணைகட்டி கோவம் போட்ட வெண்ணிலாக்கா எங்க? வந்து மற்ற கையை கோருங்கோ :unsure:

ஜமுனா,

கைகோர்க்கும்போது எனக்கு மற்றவர்களிடம் இருந்து பிடுங்கித்தான் பழக்கம், கொடுத்து பழக்கம் இல்லை. மேலும், மோதிரம், மணிக்கூடு என்பன திருட்டு போகும் என்ற காரணத்தால் கைகோர்க்கும் நேரங்களில் அவற்றை போடுவதில்லை...

மற்றையது, உங்கள் எல்லாருடனும் கைகோர்ப்பதில் பிரச்சனை இல்லை, கையில் கிள்ளினாலும் பரவாயில்லை ஆனால் கையை நீட்டும் போது பழைய கோபத்தில் எனது கையில் பிளேடு போடாமல் இருந்தால் சரி.. :unsure:

நிலாஅக்கா நீங்களும் கையை தாறீங்கள் நிலா(மூண்) சுடுமா எனக்கு தெறியாது தொட்டு பார்கிறேன்...............நீங்க சொல்லுற மாதிரி கருத்தை வையுங்கோ............நாம மட்டும் என்னவாம் பாருங்கோ......................இது தான் சாட்டு என்றூ என்னை திட்டுறதில்லை நான் பாவம்...........
:P :P :P
ஆமா என்னோட கண்ணைகட்டி கோவம் போட்ட வெண்ணிலாக்கா எங்க? வந்து மற்ற கையை கோருங்கோ :unsure:
:P :P நாங்க தனிமடலில் தானே கோவப்பட்டோம். அதுவும் இப்ப நேசம் னு சொல்லி நேசக்கரம் நீட்டிட்டம் ல. அப்புறம் என்ன? :P :P :
  • கருத்துக்கள உறவுகள்

கை கோர்த்துட்டோமல...அது சரி யார் யாரோட கோபம் வேண்டும் என்றா அவுஸ்ரெலிய பிரதிநிதியா வந்து எரிக்சொல்கேய்ம் மாதிரி எரிக் புத்து என்று வரவோ (ஓ நீங்களோ எரிக் சொல்கேயிமோ இங்கே).........கையை கொடுகிறது முக்கியமில்லை கையை கொடுத்து காலை வாராம விட்டா சரி ஜம்மு உமக்கு தான் சொல்லுறேன் பாரும்..........

ஜம்மு அப்ப நானும் வரட்டா :P

handshakeprgt7.jpg

இப்படி தந்தா தான் கை கோர்பேன் பாருங்கோ அவுஸ்ரெலியன் டொலரும் எடுக்கபடும்.......

ஆஹா இலஞ்சமா?

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

இலஞ்சமா சீ சீ அன்பளிப்பு..நீங்க பப்பிளிக்காவே தரலாம்

B)

தலைப்பில் ஒன்றுபடாவிட்டாலும் அரட்டையில் ஒன்று பட்டு விடுகிறோம்...........

அப்படியென்றால் யாழ் களத்தின் முகப்பு படத்தில் லிசான் எழுதிய பொன்மொழியாகிய

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்!

என்பதை மாற்றி

அரட்டையால் இணைவோம் குரட்டைக்காய்!

என்று மாற்றி எழுதச் சொல்வோமா? :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.