Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபாவளி தினம் அன்று பிந்துனுவேவ தடுப்புமுகாமில் சிங்களக் காடையர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் 7வது ஆண்டு நினைவு!

Featured Replies

தீபாவளி தினமன்று, திட்டமிட்ட முறையில் பிந்துனுவேவ தடுப்புமுகாமில் சிங்களக் காடையர்களால் அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன.

முகாம் அமைவிடம்

bindunuwewa-map.jpg

தடுத்து வைக்கப்பட்ட சிலர்

bindunuweva1.jpg

கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டவர்

massacre.jpg

மரணவீடு

bandarawela-victim_311000.jpg

காயப்பட்ட சிறுவன்

bindunuweva2.jpg

தாக்கப்பட்ட முகாம்

_39230730_sl_tam_cen2.jpg

கொலைப் பங்காளிகள்

Bindunuwewa1_26463_435.jpg

மேலதிக செய்தி:

பண்டாரவளையில் சிறீலங்கா காவல்துறையினராலும், சிங்கள காடையர்களாலும் படுகொலை செய்யப்பட்ட 27 தமிழர்கள் வெண்புறா அமைப்பினால் நினைவில் கொள்ளப்பட்டனர்.தென்கிழக்கு லண்டன் கிறீனிச் பகுதியிலுள்ள கிறீனிச் பல்கலைக்கழகத்தின் 300 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட புனித போல் (St. Paul), புனித பீற்றர் (St. Peter) தேவாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த நினைவுகூறலில் எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பிந்துனுவேவ படுகொலை உட்பட சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் தொடர்பாக நீதிக்கும், சமாதானத்திற்குமான அனைத்துலக மையத்தின் பணிப்பாளர் பிலிப் பவெல் (Phillip Powel) வென்புறாவின் ஐரோப்பியப் பொறுப்பாளர் மருத்துவர் என்.எஸ் மூர்த்தி ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் துரையின் தமிழ் மாணவர்கள் பிந்துனுவேவ படுகொலையைச் சித்தரிக்கும் உரை நடனமொன்றை வழங்கியதுடன், ஹர்ஸாவினால் தமிழ்-சிங்கள-ஆங்கிலப் பாடலொன்றும் பாடப்பட்டிருந்தது.

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இந்த நினைவுகூறல் நிகழ்விற்கு தனது இரங்கல் செய்தியினை அனுப்பியிருந்ததுடன், சிங்கள, ஆங்கில, மற்றும் கறுப்பினத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 25ஆம் திகதி பண்டாரவளையில் அமைந்திருந்த தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 14 அகவை முதல் 23 அகவைக்கு உட்பட்ட 29 அப்பாவித் தமிழ் இளைஞர்கள் அவ்வூர் சிங்கள காடையர்களாலும், சிறீலங்கா காவல்துறையினராலும் கொடூர ஆயுதங்களால் அடித்தும், வெட்டியும், குத்தியும், உயிருடன் கொழுத்தியும் அகோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்

செய்திமூலம்: http://www.tamilmann.net/?p=1280 நன்றி!

அன்று உயிரினை துறந்த அப்பாவிகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு இன்றைக்கு 20 வருடங்களுக்கு முந்திய தீபாவளி தினத்தன்று கொல்லப்பட்ட யாழ் வைத்தியசாலை உறவுகளுக்கும் என் 20வது ஆண்டு அஞ்சலிகள்

21/10/1987 அன்று நடைபெற்ற பாரதத்தின் யழ் வைத்தியசாலை கொலைகள் hospital5.jpg

அன்று தீபாவளி தினம் .இத் தினம் தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள்.பாரதம் தன் கொலை வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.அவ்நாட்களில் யாழ் மண்ணில் வைத்தியசாலைகள் இயங்காத ஒரு கரும் காலப்பகுதி.போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம்.அக்காலகட்டத்தில் யாழ் அப்பாவி மக்களுக்கு தன் சேவையை வழங்கிகொண்டுருந்தன்ர் யாழ் வைத்தியசாலை வைதியரும் ஊழியரும்.இச் சேவை அப்பாவி மக்களின் வைத்தியதெவையை ஓரளவாவது பூத்தி செய்தது.

இவ்வாறு 21/10/1987 வந்தது காடைத்தனமான ipkf இராணுவம் தன் கொலை வெறியை வைதியசாலையிலும் ஆரம்பித்தது சரமாரியான வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன x-ray அறையிலும்,வைத்தியரிகளின் ஓய்வு அறையிலும்,வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டதில் வைத்தியர்கள்,ஊழியர்கள்,நோயளி

??ள்,மக்கள் என் எம் உறவுகள்

Dr.C.K.கணெசரட்ணம்,Dr. Parimezhakar,தலமை தாதி Mrs.P.வடிவேல்,தாதி மங்கையகரசி,உழியர்களான செல்வரஜா,சீவரட்ணம்,நோயளர் காவு வண்டி ஓட்டுணர் சண்முகலிங்கம்,பீற்றர்,துரைரா

??ா போன்றோரும் இவ் வெறியாட்டத்தில் கொல்லப்பட்டவர்கள்

அதுமட்டும்மல்ல இவ் வெறியாட்டத்தை பார்ர்த்த குழந்தைகள் மனதளவில் மிக பாரிய அளவில் பாதிக்கப்பட்டர்.இவ் வெறியாட்டத்தை பார்த்த வயதான நேயாளிகள் இரத்த அழுத்தத்தால் உயிரைவிட்டனர்.நூற்றுக்கணக்க

இணைப்புக்கு நன்றி கலைஞன் மற்றும் ஈழவன். எனக்கு எமது உறவுகள் கொடுரமாக கொல்லப்பட்ட நினைவுநாளே முக்கியம.; அவர்கள் ஆத்மா சாந்தி பெற தியானிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய ராணுவத்தின் இந்த இழிவான செயலை இப்போது தான் நான் அறிந்துகொண்டேன். எம் என்னட்டு இராணுவம் செய்த செயலுக்காக கூனி குறுகி

நிற்கும் உங்கள் சகோதரனின் கண்ணீர் அஞ்சலியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தம் தோய்ந்த கைகளோடு ஜன நாயகம் பேசும் கொலை வெறியர்கள்.இழந்த தமிழ் உறவுகளின் குடும்பத்தின் துயரத்தில் பங்கு கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்ச சீலக் கொள்கை (?) கொண்ட நாட்டின் காட்டுமிராண்டிகளால் கொலையுண்ட இவ்வாத்மாக்களுக்கு எனது அஞ்சலிகள்.

அந்த நாளில் எங்கள் வீடு யாழ் நகரின் மாட்டீன் வீதியில் இருந்தது.ஷெல் தாக்குதலுக்கு அஞ்சி ஒரு மூன்று மாடி வீட்டின் அடித்தளத்தில் பல குடும்பங்கள் கூடியிருந்தோம்.ஒரு மின்கலத்தில் இயங்கும் வானொலிப் பெட்டியில் செய்திகளைக் கேட்டுத்தான் என்ன நடக்கிறது என்று அறிந்து கொண்டிருந்தோம். இந்தச் சம்பவம் மோதலில் புலிகள் கொல்லப்பட்டதாக இந்திய வானொலியில் சொல்லப் பட்டதாக ஞாபகம். இலங்கை வானொலி எதுவும் சொல்லவில்லை. இதற்கு அடுத்த நாள் என்று நினைக்கிறேன், நாம் பூட்டிய வீட்டுக்குள் மாட்டிக் கொள்ள மற்றைய அனைவரும் மாட்டீன் வீதியிலிருந்து அடைக்கல மாதா ஆலய அகதி முகாமுக்கு இந்தியப் படைகளால் விசாரணைக்காகக் கூட்டிச் செல்லப்பட்டார்கள். கூட்டிச் செல்லப்பட்டவர்களில் சிலர் நிரந்தரமாகக் காணாமல் போனார்கள்.இதில் ஒரு பொறியியலாளரும் அடக்கம்.ஒரு கடலை வண்டிக்காரர் மாட்டீன் வீதி ஆஸ்பத்திரி வீதிச் சந்தியில் வைத்து தனது வண்டியை மீட்கப் போன போது இதே நாட்களில் இந்தியப் படையால் சுடப் பட்டார். இறந்த அவரது உடலை அதே கடலை வண்டியில் வைத்து அவரது மனைவியும் இரண்டு சிறு குழந்தைகளும் கதறியழுதவாறு மாட்டீன் வீதியூடாகத் தள்ளிச் சென்றது இன்னும் என் மனதை உருக்கும் ஒரு நினைவு. அவர்களைப் போன்ற அப்பாவிகளின் கதறல் தான் இவை யாவற்றுக்கும் பொறுப்பான இந்தியத் தலைவரை சுக்கு நூறாக்கியது என நான் நம்புகிறேன்.

கர்பிணியாக இருந்த எனது அம்மா பிரவசத்துக்கு வைத்திய சாலை செல்ல இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை வயிற்றிலேயே குழந்தை சொர்கத்தை கண்டது அதுமட்டுமல்ல அந்த இறந்த குழந்தையை 3 மாதம் சுமந்தார் .இதேபோல பிரச்சினையுடன் எனது நண்பர்கள் இருவர் தமது தாயையும் இழந்திருந்தனர்.அம்மாவுக்கு இருந்த அதிஸ்டத்தால் இன்றுஉயிருடன் இருகின்ரார்

கொக்குவில் என்னும் கிராமத்தின் இந்துக் கல்லூரியில் 3 மாடிக் கட்டடத்தின் வகுப்பறைகளில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான மக்களை மக்கள் என்று கண்டு கொண்டபின் சுமார் 50 மீட்டர் தொலைவில் டாங்கிகளை நிறுத்தி பீரங்கிகளால் குறிபார்த்து சிதறடித்தனர் இந்திய அமைதி தேவர்கள்.

மாண்ட மக்களின் உடல்கள் மைதானத்தில் நீண்ட குழியில் ஒன்றாக புதைக்கப்பட்டன. பாடசாலை மாணவர்கள் மைதானத்தை செப்பனிடுவதற்காக தொடர்ந்து பள்ளமாகிக் கொண்டிருந்த அந்தக் குழிகளுக்கு நீண்ட நாட்களாக மண்ணை கொட்டிக் கொண்டிருந்தனர்.

அதே கிராமத்தில் பிரம்படி என்ற பிரதேசத்தில் நிகழ்ந்த கோரத்தை அதிர்ஸ்டவசமாக நான் பார்க்கவில்லை கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்!

  • தொடங்கியவர்

சாணக்கியன்,

நல்ல காலம் அப்போது நாங்கள் கொக்குவில் சந்திக்கு அண்மையில் தான் இருந்தோம். இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் மெடிக்கல் பகல்டியில் தரை இறங்கிய முயற்சி தோல்வியில் முடிந்து, வானில் இருந்து குதித்த அனைத்து இந்திய கொமாண்டோக்களும் பலியான கோபத்தில் மறுநாள் அதிகாலையில் பிரம்படி லேனுக்கு கவசவாகனங்களில் ஏராளம் மக்களை சுட்டுக்கொன்று பின் கவசவாகனத்தாலேயே மிதித்தும் சென்றார்கள். இதன்பின் மாலையில் யுத்தவிமானங்கள் வந்து பிரம்படி லேன் பக்கமாக குண்டுகள் போட்டன. இதனால் நாங்கள் பயந்து அன்று பின்னேரம் சங்கானைக்கு ஓடிவிட்டோம்.

நல்லகாலம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் நாங்கள் தஞ்சம் புகவில்லை. கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சம் புகுந்த ஏராளமானோர் (எனக்கு சரியாக தொகை தெரியவில்லை) இந்திய இராணுவத்தின் பீரங்கி தாக்குதலிற்கு பலியானார்கள். பின்னர் எல்லாரையும் கொக்குவில் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் புதைத்ததாய்/ எரித்ததாய் அறிந்தேன். ஆனால், இந்த சம்பவம் தீபாவளி தினமன்றா நடந்தது என்று சரியாக தெரியவில்லை.

தீபாவளி என்றால் இப்படி பிந்துனுவேவ, யாழ் கொலைகள், கிறிஸ்துமஸ் தினம் என்றால் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் கொலைகள் என்று தமிழர் கொண்டாடும் எல்லா நாட்களிலும், அதாவது வருடத்தின் 365 நாட்களும் கரி நாளாக, துக்கதினமாக கொண்டாடும் வகையில் சிங்களப் பேரினவாதிகளும், அவர்களிற்கு துணைபோகும் அடிவருடிகளும் தமிழரின் வாழ்வை சின்னாபின்னமாக்கி விட்டார்கள்.

ஆனால், புத்தர் ஞானம் பெற்ற சித்திரா பெளர்ணமி - வெசாக் - பொசான் - கொசான் மிச்சம் எல்லா கொண்டாட்டங்களும் எதுவித பிரச்சனைகளும் இல்லாமல் நன்றாகவே நடைபெறுகின்றது.

யார் உண்மையான பயங்கரவாதிகள் என்று சர்வதேசம் இன்னும் சரியாக இனங்கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் நகைச்சுவையாக உள்ளது.

ஆனால், இந்த சம்பவம் தீபாவளி தினமன்றா நடந்தது என்று சரியாக தெரியவில்லை.

அது சரியாக எந்தத் தினத்தில் அல்லது திகதியில் நடைபெற்றது என்று எனக்கு தெரியாது! இந்திய அமைதித் தெய்வங்களின் சாதனைகளை பட்டியலிடும் ஒரு முயற்சியில் ஒரு சாட்சியாக எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்!

ஆனால் பெளர்ணமி தினங்களில் பல சம்பவங்கள் தங்களுக்கு நடந்ததாக ஒரு சிங்கள நண்பர் பலவற்றை அடுக்கினார். ஆனால் அவை எவை என எனக்கு இப்போது ஞாபகம் இல்லை!

  • தொடங்கியவர்

ஆனால் பெளர்ணமி தினங்களில் பல சம்பவங்கள் தங்களுக்கு நடந்ததாக ஒரு சிங்கள நண்பர் பலவற்றை அடுக்கினார். ஆனால் அவை எவை என எனக்கு இப்போது ஞாபகம் இல்லை!

பெளர்ணமி தினங்களில் பல சம்பவங்கள் அவேக்கு நடந்ததாமோ? என்ன சம்பவமாம்? கேட்டுச் சொல்லுங்கோ. வருசத்தில் 12 பெளர்ணமி வருது. ஆனா தீபாவளி, கிறிஸ்துமஸ் ஒருக்கால் தானே வரும்?

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆணிவேர் படம்பார்த்தபோது காட்சிகள் (கவச வாகனங்களால் நெரித்தது, தொகை சனங்களை ஒரேயடியக கொன்றது போன்ற காட்சிகள்) மிகைபடுத்தப்பட்டுள்ளதாக நினைத்தேன். உங்களது அனுபவங்களை வாசிக்கும் போதுதான் உணர முடிகிறது. :wub:

எம்மைவிட்டு நீங்கி சென்ற உறவுகளின் ஆத்மாசாந்தியடைய பிரார்திகிறேன்!!

  • தொடங்கியவர்

ஓ ஆணிவேர் படத்திலையும் இதுகள பற்றி வந்ததோ? நான் ஆணிவேர் பார்க்கவில்லை.

பிரம்படியில் இந்திய இராணுவம் செய்த கொலைகள் மிக மோசமானவை. அவர்கள் எந்த வழியால் வந்து எந்த வழியால் போனார்கள் என்று சரியாகத் தெரியாது. ஆனால், இந்தக் கொலைவெறியில் ஈடுபட்ட கவச வாகனப்படை யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் இருந்து புகையிரதப் பாதை வழியாக வந்து பிரம்படி லேனுக்குள் நுழைந்ததாகவும் போகும்போது காங்கேசன்துறை வீதி வழியாக போனதாகவும் சிலர் சொல்லுறீனம்.

கொக்குவில் சந்தியில இருந்து காங்கேசன்துறை வீதி வழியாக யாழ்ப்பாணம் பக்கமா போகேக்க வாற முதலாவது திருப்பத்தில - முடக்கில பெரிய மரங்கள் எல்லாம் நிற்கிது. அது நாலு சந்தி. இஞ்சாலையும் அங்ககலையுமா கே.கே.எஸ் றோட்டில இருந்து ஒழுங்கைகள் போகிது. அந்த றோடுகளிண்ட பெயர் எனக்கு மறந்துபோச்சிது.

அந்த முடக்கில இருக்கிற சந்திவீட்டில இருக்கிற ஒரு அக்கா ஒவ்வொரு நாளும் பின்னேரம் றோட்டில நிண்டு விடுப்புப் பார்த்துக்கொண்டு இருப்பா. அவவுக்கு உடல்நலம் சற்று குறைவு. சற்று உயரம் குறைஞ்சவ. அந்த அக்காவையும் பாவம் இந்தியன் ஆமிக்காரங்கள் அண்டைக்கு அதிகாலை சாக்காட்டிப் போட்டாங்கள். அந்த அக்காவிண்ட முகம் இப்பவும் படமா எண்ட மனதில தெரியுது.

ஒவ்வொரு நாளும் பின்னேரம் அந்த அக்கா றோட்டில வீட்டு வாசலில நிண்டு போற வாற ஆக்களை பார்த்து இரசிக்கின்ற காட்சி இப்பவும் எண்ட கண்களுக்கில நிற்கிது. அவ எப்படி பிரம்படி லேனுக்க போய் இந்திய இராணுவத்திடம் மாட்டுப்பட்டா எண்டு தெரியல. ஏனெண்டா அவவிண்ட வீடு காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வீதியில இருக்கிது. சிலது பிரம்படி லேனுக்க இருக்கிற யாரும் சொந்தக்கார வீட்ட அண்டைக்கு கஸ்டகாலத்துக்கு போனாவோ இல்லாட்டி இந்திய இராணுவம் திரும்பிப் போகும்போது அந்த அக்காவை கொலைசெய்துவிட்டு கே.கே.எஸ் வீதி வழியாக யாழ்ப்பாணம் போனாங்களோ தெரியாது.

இந்திய இராணுவம் மெடிக்கல் பகல்டியுக்க குதிச்சு எல்லாரும் செத்தாப்பிறகு காலம்பற சீக்கிய இராணுவத்தின் தலைப்பாகைகள் சிலவற்றை இயக்கம் தூக்கிக் காட்டி வெற்றிக்களிப்புடன் சென்றது. அண்டைக்கு இரவு இந்திய இராணுவம் பிரம்படி லேனுக்க வந்து தண்ட புத்தியைக் காட்டி அப்பாவி மக்கள் மீது பழி தீர்த்துக்கொண்டது. மெடிக்கல் பகல்டி மைதானத்தில குதிச்ச சுமார் 22 இந்தியா கமாண்டோக்கள் இயக்கத்தால சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று நினைக்கிறன்.

அந்தப்பகுதியில் அப்போது தங்கியிருந்த தலைவரை அண்டைக்கு கொமாண்டோ தாக்குதல் மூலம்இப்படி பிடிக்கலாம் எண்டு முயற்சி செய்து பார்த்துச்சீனம். கடைசியில் அவர்களின் தலைப்பாகை போய்விட்டது.

Edited by கலைஞன்

கொக்குவில் சந்தியில இருந்து காங்கேசன்துறை வீதி வழியாக யாழ்ப்பாணம் பக்கமா போகேக்க வாற முதலாவது திருப்பத்தில - முடக்கில பெரிய மரங்கள் எல்லாம் நிற்கிது. அது நாலு சந்தி. இஞ்சாலையும் அங்ககலையுமா கே.கே.எஸ் றோட்டில இருந்து ஒழுங்கைகள் போகிது. அந்த றோடுகளிண்ட பெயர் எனக்கு மறந்துபோச்சிது.

அதற்கு பெயர் பூநாறிமடம் சந்தி. அந்த சந்தியில் இருந்து இடப்பக்கம் செல்லும் (நீங்கள் கூறும் மூலைவீட்டுடன் போகும்) ஒழுங்கை பிரம்படி ஒழுங்கையை சொற்ப தூரத்தில் சந்திக்கின்றது.

பிரம்படியில் நடந்த சம்பங்களில் பாதிக்கப்பட்ட அல்லது அறிந்த களஉறவுகள் யாரும் இங்கு இல்லையோ?

87ல் திபாவளி தினத்தில் அகதியாக இருந்த சிலர் விடுகளுக்கு விளக்கேற்ற சென்றார்கள். அவர்களில் சிலர் இந்தியப்படைகளினால் கொல்லப்பட்டு, உடலங்கள் பிறகு இணுவில் கந்தசுவாமி கோவிலின் பின்விதியிற்கு பக்கத்தில் இருந்த விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டது. பிரேத வாசனையுடன் அன்றைய பொழுதினை அக்கோவிலில் கழித்தவர்களில் நானும் ஒருவர். அக்கோவிலில் மேற்கு இணுவிலைச் சேர்ந்தவர்களில் பலர் அப்பொழுது அகதியாக இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் பதறச் செய்யும் சோக கதைகள் ,

இவை அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் , கள உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு தெரிந்த சம்பவங்கள் அனைத்தையும் தயவுசெய்து பதிவு செய்யுங்கள் .

தமிழ் நாட்டு இளையோர்களில் பலர் ஈழப் போராட்டத்தை பற்றி சரியான தெளிவு இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இது போன்ற பதிவுகள் எம் இளையோரை ஈழப் போராட்டத்தில் தெளிவு பெற பெரிதும் உதவும் என நம்புகிறேன்.

தயைகூர்ந்து உங்களுக்கு தெரிந்த சம்பவங்களை பதிவு செய்யுங்கள்.

எம் நண்பர்களிடையே இது குறித்து ஓர் தெளிவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றேன். இதுகுறித்து ஏற்கனவே நான் ஓர் வேண்டுகோளையும் யாழ் களத்தில் வைத்துள்ளேன். இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=357380

நான் 4 வயதிருக்கும் போது அப்பாவுடன் சைக்கிளில் செம்மணியால் ஒரு இரவு 8 மணியளவில் வந்து கொண்டிருக்கும் போது இந்திய இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று எம்மை துரத்தி துரத்தி சுடத்தொடங்கியது அப்பாவோ தனக்கிருந்த எல்லா சக்தியையும் திரட்டி சைக்கிளை மிதித்து கடைசியில் செம்மணி சுடலையில்[மயானம்] இருக்கும் கொங்கிரீட் கட்டிடத்தில் கவர் எடுத்தோம் ஆனால் கட்டடத்துக்கும் மேல் எல்லாம் ரவைகள் விழ அங்கிருந்து தப்பி உடல்கள் எரிக்கும் இடத்தில் படுத்திருந்தோம் இது எனது முதலாவது அனுபவம் அதேபோல‌ இந்த சம்பவம் நடந்து ஒரு 3 மாதத்தில் எமது ஊரில் இருந்த வீட்டில் இந்தியன் ஆமியின் பிரச்சினை காரணமாக எமது அம்மாவின் தங்கையின் குடும்பம் அப்பாவின் சகோதரர்கள் என ஒரு 5 குடும்பம் வரையில் தங்கி இருந்தோம் ஒரு நாள் புலிகள் வைத்த கண்ணிவெடியில் கடுப்பான இந்தியன் ஆமி வீட்டை சுற்றிவளைத்து எம் அனைவரையும் வெளியே வரச்சொல்லி வீட்டு முற்றத்தில் லைனில நிக்க வச்சு சுடுவதற்கு ஆயத்தமாகினர் அந்த நேரத்தில் நாய் ஒன்று அவங்களை பார்த்து குரைக்க ஏற்க‌னவே கடுப்பில் இருந்த இந்தியன் ஆமி நாயை துரத்தி துரத்தி வெடி வைக்கும் போது அந்த சத்தத்தில் எமது ஊரின் இந்தியன் ஆமியின் கமாண்டராக இருந்த மல்கோத்திரா என்னும் இந்திய இராணுவ அதிகாரி அவ்விடத்துக்கு வர அவனே மற்றைய இராணுவத்தினரை சமாதானப்படுத்தி எம் அனைவரையும் காப்பாற்றினான் இல்லாவிட்டால் வல்வெட்டிதுறை படுகொலையை எப்படி நினைவு கூறுகின்றோமோ அப்படி கைதடி படுகொலை என ஒன்றை நினைவுகூர்ந்திருக்கும் தேவை இருந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், புத்தர் ஞானம் பெற்ற சித்திரா பெளர்ணமி - வெசாக் - பொசான் - கொசான் மிச்சம் எல்லா கொண்டாட்டங்களும் எதுவித பிரச்சனைகளும் இல்லாமல் நன்றாகவே நடைபெறுகின்றது.

சிங்களவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் தமிழர்களுக்கு 2006ம் ஆண்டு வெசாக் தினத்தில் அல்லைப்பிட்டியில் இராணுவத்தினாலும் ஈபிடிபி ஒட்டுப்படைகளினாலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் ஞானம் பெற்றதால் புத்தருக்குதான் அமைதி கிடைத்தது.அவரை தூக்கிபிடித்தமக்களுக்கு இல்லை.....

இழந்த எம் மக்களுக்காக அஞ்சலி செலுத்தும் வேளையில் இனி இழக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்றும் யோசிப்போம். ஈழ மண்ணில் ஒவ்வோரு வீட்டிலும் ஒரு சோகம் உண்டு.

ஜானா

Edited by Janarthanan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.