Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ் பி. பாலா Vs சு ப தமிழ்ச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இடி வீழ்ந்து நொறுங்கிய இதயத்தோடு ஒரு வாரம் போய்விட்டது. இன்னும் செல்வன் அண்ணா பற்றி வரும் செய்திகள் பார்க்கும்போது விம்மல் முட்டுகிறது. எல்லாமே வெறுமையாகி விட்டது போன்ற ஒரு உணர்வு.

சரி. இனி விசயத்துக்கு வருவோம். என்னுடன் வேலை பார்க்கும் இரண்டு யாழ்பாணத்து தமிழ் நண்பர்களை சென்ற திங்கட்கிழமை சந்தித்தேன். ஒருவரிடம் கண்டவுடன் கேட்ட கேள்வி, "என்னப்பா, எங்கட தமிழ்ச்செல்வனை கொண்டுட்டாங்கள்". அதற்கு அவர் கேட்ட கேள்வி, "எந்த தமிழ்ச்செல்வனை ?". எனக்கு தூக்கிவாரிப்போட்டுது. "அதுதானப்பா, எங்கட அரசியல் துறைப்பொறுப்பாளர்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர் கேட்ட கேள்வி," சண்டையிலயோ செத்தவர் ?". அதற்கு மேல் என்னத்தைச் சொல்ல ?

மற்றவரிடம், "என்னண்டப்பா இந்த வீகெண்ட் போச்சுதெண்டே தெரியவில்லை, வாழ்க்கையே வெறுத்துப் போச்சுது" எண்டு சொன்னேன். அதற்கு அவர், "சண்டே பாலசுப்ரமணியம் புரோக்ராம் அந்தமாதிரி,ஒவ்வொரு நிமிஷமும் அநுபவிச்சுப் பார்த்தேன்" எண்டு சொன்னார்.

எங்களுக்காக 20,000 பேர் உயிரக் குடுத்து விட்டு போயிருக்கிறாங்கள், ஒரு சந்ததியே தங்கட வாழ்வை அர்பணிச்சு களத்தில நிற்குது. இங்கு எங்களுக்கு ஆர் தமிழ்ச்செல்வன் எண்டு தெரியவில்லை, பாட்டுப்பாடுற ஒருவர் பெரிய ஆளாப் போட்டுது.

நாங்களும் தமிழர் !!! உருப்பட்டமாதிரித்தான்.

தலைப்பு தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது- யாழ்பாடி

Edited by yarlpaadi

இப்படி கனபேர் உள்ளனர்... புலத்திலும்.... நிலத்திலும்.... இவர்களை பற்றி நாம்கதைத்து பிரியோசனம் இல்லை... தாங்களே ஒருகாலம் உயிரோடு இருந்தால் உணர்ந்துகொள்வார்கள்... அல்லது உணர்தப்படுவார்கள்... :wub: அதற்கான தண்டனையையும் இந்தகாலத்திலையே பெற்றுக்கொள்வார்கள். :lol: இதை நாம் யாவரும் யதார்தத்துடன் அறிந்து கொள்ளவோண்டும். :)^_^

ரகுநாதன் அங்கிள் நீங்களும் அவுஸ்ரெலியாவோ :D இங்கே இருகிற ஆட்களை பற்றி தெரியாதோ :) !!பிரிகேடியர் தமிழ் செல்வன் யார் என்று தெரிந்தாலும் தெரியாத மாதிரி யார் என்று கேட்பார்கள் அவர்களிடம் கதைத்தா எமக்கு தான் விசர் வரும் :( !!அவர்களின் பேச்சு ஒன்று செயல் ஒன்றாக இருக்கும் இதற்கு எல்லாம் நீங்க பீல் பண்ண கூடாது ^_^ இன்னும் இப்படி பல கூத்து எல்லாம் நடக்கும் போறதிற்கு ஒவ்வொரு காரணமும் சொல்லுவீனம் :wub: !!போறது அவர்களின் சுகந்திரம் ஆனா கதைக்கும் போது பார்க்க வேண்டும் "தமிழ் தேசியம்" தலைவர் இப்ப அடிகிறார் இல்லை என்று அந்த மாதிரி கதைப்பார்கள் :( !!பிறகு பாலாவிற்கு கை தட்டி கொண்டு இருப்பார்கள் :lol: .........என்றாலும் நேற்றைய அஞ்சலி கூட்டத்தில் சனம்திரளாக வந்து அஞ்சலி செலுத்தி சென்றது மகிழ்வாக இருகிறது என்றே சொல்லலாம் :( !!!நீங்களும் வந்தனீங்களோ அஞ்சலி கூட்டதிற்கு!!ஆகவே நீங்க பீல் பண்ண வேண்டாம் அங்கிள்!! :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:wub: நீங்கள் சொல்வது சரிதான். இதையும் பாருங்கள்.

அதே வேலைத்தளத்தில் என்னுடன் பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழரும் வேலை செய்கிறார். அவரின் மாமனார் சமீபத்தில்தான் ஊறிலிருந்து வந்திருந்தார். அவர் தீவிர ஈழ ஆதரவாளர் என்றும் என்னை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு இருப்பதாகவும் எனது நண்பர் கூறினார். அதனால் ஒருமுறை அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

எமது சம்பாஷனை கர்னாடகத்தில் உள்ள தமிழர்களின் பிரச்சனைகளுடன் ஆரம்பமாகியது. தமிழ்நாட்டிலிருந்து பெங்களூர் தனியே பிரிக்கப்பட்டதும், 80 % பெரும்பான்மயாக இருந்த தமிழர் அங்கு சிறுபான்மையாக்கப்பட்டதும், தமிழரின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டதும் அவர் வாயிலாக சொல்லக்கேட்டேன். காவேரி ஆற்றுப்பிரச்சனையை ஒட்டி கர்நாடகத்தில் தமிழர் அடித்து நொருக்கப்பட்ட வரலாறு அங்கு விரிந்தது.

கர்நாடகத்தில் இருந்து மெதுவாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தோம். ஆரியப் பார்ப்பனியரால் திராவிடர் படும் அவலங்களும், தமிழரல்லாத முதலமைச்சர்களால் ஆழப்படும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரமும் எவ்வாறு திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது என்பதும் நான் அறிந்ததற்கும்மேல் அதிகமானது என்றும் தெரிந்து கொண்டேன். ராஜீவ் காந்தி என்ற ஆரிய மனிதரின் பதவித்திமிருக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய ஜவான்கள் செய்த அட்டூழியங்களில் இருந்து 1991 ஆம் ஆண்டு புலிகளல்லாத ஒரு குழுவினரால் ராஜீவ் கொல்லப்படும்வரை தமிழ்நாட்டில் நடந்தேறிய சம்பவங்களும் பிண்ணனிகளும் அங்கு அக்கு வேறு ஆணி வேறாக எனக்கு விளக்கப்பட்டது. நீறு பூத்த நெருப்பாக அங்கு இருக்கும் தமிழ் ஈழ ஆதரவும், அவ் ஆதரவை எப்படியாவது முளையிலேயே கிள்ளி எறிய கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் ஆரியப் பார்ப்பனிய ஊடகங்களினதும் சோ, ராம் மாணிக்கலிங்கம், சுப்ரமணியசுவாமி, நாராயணன், ஜெயலலிதா போன்ற தனி மனிதர்களினதும் செயற்பாடு பற்றியும் எனக்குக் கூறப்பட்டது.

ஒறுவாறாக ராமேஷ்வரமூடாக இலங்கயை அடைந்தோம். இப்போது எனது முறை என்று எண்ணி நான் ஆரம்பிக்கும்போது அவரே தொடர்ந்தார். எமது தேசியத்தலைவர் பற்றிய அவரின் புரிதலுடன் கதை ஆரம்பமாகியது. எடுத்த எடுப்பிலேயே பழந்தமிழ் கடவுளாகிய முருகனுடன் எம் தலைவர் ஒப்பிடப்பட்டார். ஒவ்வொரு முறையும் எம் தலைவர் பற்றி அவர் விழிக்கும்போதும்"மேதகுத் தமிழ்த் தலைவன்" என்று அவர் சொல்லக்கண்டு எனக்கே கண்கள் பனித்தன. "புலிகள் வெல்லப்படமுடியாத இலக்கிய காலத்து தமிழ் மறவர்கள்" என்றும் சோழப்பேரரசின் தொடர்ச்சியே இன்றய தமிழ் ஈழம் என்றும் அவர் சொல்லிக்கொண்டே போனார்.

தலைவர் பற்றியும் புலிகள் பற்றியும் பேசும்போதெல்லம் அவர் கண்களில் பிரகாசமும் குரலில் தழதழப்பும் கண்டேன்.

யாரிந்த மனிதர் ? எமது ஈழ மண் என்ன வர்ணம் என்று தெரியாது, எம் தலைவரயோ புலிகளையோ நேரில் பார்த்தது கூடக்கிடயாது. ஆனாலும் ஈழத்தமிழன் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையும் பாசமும் வைத்திருக்கிறார். "நீங்கள் வெல்வீர்கள்","பிரபாகரன் படை வெற்றி காணும்" என்று எனக்கே நம்பிக்கை ஊட்டுகிறார். இறுதியில்"எங்களை மன்னித்து விடுங்கள், எங்களை தமிழர்கள் என்று கூற நாங்கள் வெற்கப்படுகிறோம்" என்று நாத்தளதளக்கிறார்.

நான் வாயடைத்துப்போனேன். நான் கூற விழைந்தவற்றையெல்லாம் இந்த 60 வயது முதியவர் கூறிக்கொண்டு செல்கிறாரே என்ற வியப்பும் ஒரு ஈழத்தமிழனையாவது காணவேண்டும் என்ற ஆவலும், ஈழத்தமிழர் மேல் அவர் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் என்னைக் கட்டிப்போட்டு விட்டது. என்னால் பேச முடியவில்லை. ஒருகணம் அழுதே விட்டேன்.

நீண்ட மவுனத்தின் பின் நான் விடை பெற்றேன். " நன்றி ஐய்யா", "மறுமுறை உங்களைச்சந்திக்கும்போது நல்ல செய்தியுடன் வருகிறேன்"என்று கிளம்பி வந்தேன். வரும் வழியெல்லாம் அந்த முதியவரின் தெளிவும் தமிழ்பற்றும் எம்மில் பலருக்கு இருந்தால் தலைவர் இவ்வளவு இழப்புகளை தாங்க வேண்டி இருந்திருக்காது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

இவர்களும் தமிழர்கள்தான் !!!!!!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:wub: நன்றி யமுனா,

நானும் சிட்னிதான். புதனிரவு எனக்கு நயிட் ஷிfட் வேலை. மிகுந்த மனவருத்ததுடன் வேலைக்குப் போனேன். ஆனாலும் தமிழ்செல்வன் அண்ணாவினது நினைவுகள் என்னை விட்டு அகலாது. மாவீரர் தினத்துக்கு எப்படியாவது வருவேன். அன்று எனது தம்பியினது ஆறாவது

வீரவணக்க நாள்.

அன்புடன்

ரகுனாதன் அண்ணா.

மெல்பேனில் சனி இரவு எமது பல்கலை கழக மண்டபத்தில் நடந்தது படிப்பதற்காக பல்கலைகழகம் சென்றிருந்தேன் ஏராளமானவர்கள் ஒரு தலைவனை இழந்து விட்டோம் என்ற துக்கமில்லாது சென்றார்கள் இவர்களுக்கு அஸைலம் அடிக்கத்தான் புலிகள் தேவை அதற்கு பிறகு சுயநலவாதிகள்.

மெல்பேனில் தமிழ்செல்வன் அண்ணாவின் நினைவு நிகழ்வினை ஒழுங்கு படுத்தி இருந்திருகிரார்கள் ஆனால் நான் அறியவில்லை தமிழ்நாதத்தில் காண முடியவில்லை அதற்கு செல்ல முடியவில்லை என வருத்தமாக இருக்குது

Edited by மோகன்

அவுஸ்ரேலியத் தமிழர்கள் தேவையில்லாமல் அஞ்சி நடுங்கின்றார்கள் போல் தெரிகிறது.

அஞ்சலி நிகழ்வில் தமிழ்செல்வனுடன் மரணித்த மற்றைய போராளிகளின் சீருடைகள் பூக்களால் கிராபிக் செய்து மறைக்கப்பட்டிருந்தது.

சீருடையோடு உள்ள படத்திற்கு அஞ்சலி செய்வது அவுஸ்ரேலிய சட்டத்தின் எந்தப் பிரிவின் படி குற்றம்?

இது தேவையற்ற அர்த்தமற்ற அச்சம்!

எனக்கு இந்தத் தமிழர்களை நினைத்தால் கோபமாக இருக்கிறது. அவர்கள் போடுகின்ற தடைகளுக்கு மேலால், எமக்கு நாமே தடைகளை போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

அரசியல் துறையை சார்ந்தவர்களாக காட்ட முற்பட்டிருக்கலாம் எனக்கு சரியாக தெரியாது சபேசன் பயப்பிட வேன்டிய அவசியம் இல்லை தேசிய கொடி ஏற்றப்பட்டுதானே இருக்குது சிலவேளை நான் சொன்னது காரனமாக இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: இடி வீழ்ந்து நொறுங்கிய இதயத்தோடு ஒரு வாரம் போய்விட்டது. இன்னும் செல்வன் அண்ணா பற்றி வரும் செய்திகள் பார்க்கும்போது விம்மல் முட்டுகிறது. எல்லாமே வெறுமையாகி விட்டது போன்ற ஒரு உணர்வு.

நாங்களும் தமிழர் !!! உருப்பட்டமாதிரித்தான்.

தலைப்பு தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது- யாழ்பாடி

விடுதலை உணர்வு உள்ள ஒவ்வொரு தமிழனும் நிலைகுலைந்து போன நாள் நவம்பர் 2ம் திகதி. காலை வேலைக்கு கிளம்ப முன்னர் சாமிப்படத்தடியில் கும்பிட்டுவிட்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு நிமிர்ந்த போது அப்பா சொன்னார் "தமிழ்ச்செல்வனையெல்லோ கொண்டுபோட்டாங்கள்'...!! அவர் சொல்லி முடிக்கவும் " என்ன? என்ற அதிர்வோடு கூடிய என் உணர்வலைகளோடு என் ஒட்டுமொத்த உடலுமே உறைந்துபோனது போன்ற உணர்வு.

தமிழ்ச்செல்வன் அண்ணா. சொல்லும் போதே அவர் உதட்டில் பூக்கின்ற புன்னகைதான் நெஞ்சை நிறைக்கும்!.

அன்றைய நாள் எனக்கு வேலை ஓடவே இல்லை!.ஓடிவந்து யாழையே பார்த்தேன். 'அண்ணா நிஜமாகவே இது உண்மையா அண்ணா? பொய்யாகிப்போகக்கூடாதோ இச்செய்தி!..என்று நெஞ்சு துடித்தபடியே இருந்தது!.

முத்தமிழ் என்ற குழுமத்தின் மூலம் பல இந்திய உறவுகள் எனக்கு உண்டு. அவர்கள் அனைவருமே மிகப் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். மஞ்சூரார் என்றொரு அண்ணன் குறிப்பிட்டார் நாங்கள் ஆழமாக நேசிக்கின்ற மனிதர்கள் எல்லாம் ஏன் இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவிக்கொள்கின்றார்கள்?

இன்னொருவர் எனக்குத் தொலைபேசினார். தங்கையே விடுதலைப்போராட்டத்தில் இணைந்தவர் உயிருக்கு உத்தரவாதமில்லை, உங்கள் தலைவர் நாம் வியந்து பார்க்கும் போற்றும் ஒரு நிறைமனிதர், நீங்கள் இப்படிக் கலங்குவதை உங்கள் தமிழ்ச்செல்வன் அண்ணாவும் சரி தலைவரும் சரி விரும்ப மாட்டார்கள்.

உங்கள் செயற்பாடு எல்லாம் ஈழத்தின் உண்மை நிலையை உலகமக்களூக்கு குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களுக்குப் புரிய வையுங்கள் தெளிய வையுங்கள். அவர்களுக்கு ஈழத்தில் என்ன நடக்குதென்ற உண்மையான செய்தி தெரியவே தெரியாது". ! உங்களைப் பயங்கரவாதி என்று சித்தரிக்கும் கூட்டம் தான் அங்கு நிறைய..அதைத் தெளிவுபடுத்துங்கள் என்றார்.

கலங்கி நிற்காமல் நமது கடமைகளை மிகத் துரிதப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதற்கான என் முயற்சியில் நான் இருக்கின்றேன்.

நன்றி!!..

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு அசைலம் அடிக்கத்தான் நாட்டில புலியும் பிரச்சனையும் இருக்க வேணும் எண்டு நினைக்கினம். தங்களுக்கு அசைலம் அல்லது வதிவிட வாசாக் கிடைச்சிட்டாக் காணும்.. போராட்டமென்ன புலியென்ன...அப்படித்தான் பலர் புகலிடத்தில். :lol::o

கடைசியாகவந்த சிறப்புப்பார்வையை பாருங்கள்

யதார்தத்தை விழங்கிக்கொள்ழுங்கள். பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மறைவுகுறித்து கவலைப்பட்டு ஒன்றையும் காணோம்.. ஆனால்.... (அந்த மறைமுக.... உலகஅரசியல்மொழியில்.... உலகுக்கும்.... உரியவருக்கும்.... சொல்லி உள்ளனர் விளங்கினால் சரி....) :lol: அவர்கள்.... எமதுதாகம்... என்றும் ஒன்றாகவே இருக்கும்.... அது தமிமீழத்தாயகம். :o

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சிட்னி அஞ்சலி நிகழ்விற்க்கு வந்திருந்தோர் தொகை மிக மிக அதிகமாக இருந்ததது ம்ண்டபம் கீழ் மாடி மேல் மாடி என நிறம்பி வழிந்திருந்தது மக்கள் வந்து வந்து சென்று கெர்ண்டிருந்தார்கள்.. ஆகவே இது மனதுக்கு சற்று ஆறுதல் தர கூடியதாக இருந்தாலும் இப்படியான பேரிழப்புகளின் ழூலம் தான் சிட்னியில் ஒரு எழுச்சியை உணர்சிகளை பார்க்க கூடியதாக இருக்கின்றது என்பது சற்று மனதை கலங்க செய்கின்றது....

எது எப்படி இருப்பினும் ஒரு குறுகிய கால இடைவேளையில் மக்கள் ஆயிரக்கனக்கில் வந்திருந்தது சிறப்பே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: நீங்கள் சொல்வதில் எனக்கும் பூரண சம்மதம். தமிழ்செல்வன் என்னும் சாகரம் எம்மிடம் எதிர்பார்ப்பதுவெல்லாம் தனக்காக துக்கம் கொண்டாடிக் கொண்டு இருப்பதையல்ல. தான் விட்டுச் சென்ற பணியை தொடர தலைவருக்குப் பின்னால் அணி திரள வேண்டும் என்பதைத்தான்.

புலத்தில் இருக்கும் எமக்கு இதில் பெரும் கடமையொன்று இருக்கிறது. எமது போராட்டம் விரைவு பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவில் தீர்மாணிக்க வேண்டும். இலத்திரணியல் சாதனங்கள் இதில் எமக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக யூ டீயூப் போன்ற இணயத் தளங்களில் தர்க்க ரீதியான பிரச்சாரங்களின் மூலம் எமது விடுதலைக்கான தேவயை நியாயப்படுத்தலாம். சிங்கள ஆக்கிரமிப்பின் அட்டூழியங்களை புகைப்படம் மற்றும் ஒளிப்படம் மூலம் அம்பலப்படுத்தலாம். மேலதிகமாக சிங்கள கோமாளி அமைச்சர்களின் தமிழ்க் காழ்புணர்ச்சி சொற்பொழிவுகளை தகுந்த தலைப்புகளின் கீழ் அம்பலப்படுத்தலாம்.

எல்லாவற்றயும் விட தமிழீழ வெற்றிக்காக இங்கு பாடுபடும் நம்மவர்களை ஊகுவிப்பதுடன் அவர்களுக்கு தேவயான உதவிகளயும் செய்யலாம்.

எங்களில் எத்தனை பேர் நிதி கேட்டு வரும் தமிழீழ ஆதரவாளர்களை இன்முகத்துடன் வரவேற்று இருக்கிறோம் ? இந்த நிதியில்லாமல் தானே எங்களால் செல்வனை கொன்ற அந்த கிfஈரை சுட்டு வீழ்த்த முடியவில்லை ?

சிந்திப்போம்.....

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட அப்பு சிட்னிவிடயம் என்றால் எதாவது எழுதுவார் .சத்தத்தை கானவில்லை என்ன விசயம்?

இவற்றைப் போல தான் இஞ்கும் சிலரின் செயற்பாடுகளை நிளைக்கும் போது கவலையல்ல இவர்களிற்கு

இவ்வாறு நடைபெறும் போது நாமும் பதிலுக்க இவ்வாறே செய்ய வேண்டம்

உதாரணத்திற்கு ஒன்ளை தெரிவிக்க விரும்புகின்றேன்.

கடந்த வெள்ளிக்கிமை தமிழ்ச்செல்வன் அண்ணா வீரச்சாவு என்றதும் பெரும்பாலன கொழும்பு வாழ் உணர்வுள்ள தமிழர்கள் மிகக் கவலையடைந்நத பொழுதும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாது மெனமாக இருந்தனர். ஆனால் சில கேவலம் கெட்ட பிறவிகள் முக்கியமாக வெள்ளவத்தை பகுதியில் உள்ள சில வாத்த நிலையங்களில் சினிமாப் பாடல்கள் வானோலியில் ஒலிபரப்பிக் கொண்டிருந்தமை மிக வேதனையான விடயம்

அதாவது தமக்கும் தமிழ் தமிழிழம் என்பவற்றிக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்ற வகையில் இருக்கிற்னார்ளக் .

இதைவிட இன்னொன்று தமிழ்ச்செல்வன் அண்ணையின்ர வீரச்சாவு பற்றி ஓருவருடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது அவர் சொன்னார் தமிழ்ச்செல்வனை இழந்தது பெரிய விடயமல்லாவாம் ஏன் என்றால் அவர் படிக்கவில்லையாம் ஆனால் இதிலர் கேவலம் என்னவென்றால் இதை சொன்வருக்கோ சாதராரண தரத்ததை தவிர வேறதுவும் இல்லை அதுமட்டுமல்ல அவர் கொழும்பில் வாழ்வதும் புலம்பெயர் நாட்டில் இருந்து கிடைக்கும் பிச்சை யில் அதற்குள் கதைக்கள் வேறு.

இன்னொரு சம்பவம் ஓரளவு வயதானவருடன் கதைக்கும் போது சொன்னார் " உங்கட ஆளை போட்டுட்டாங்காங்களாம்" என்று அப்ப அவருக்கு நான் சொன்ன பதில் பேச்சுவாhத்தைக்கு போகேக்க மட்டும் எங்கட பொடியள் எங்கட இயக்கம் எங்கட் தம்பி எங்கட அண்ணi எண்டு நொடிப்பியள் சண்டை என்றவுடன் படிக்காதவர் இயக்கத்திற்கு .ழப்பில்லை என்ற நாடகங்களை நடியாதேங்கோ எப்பவாவது சிங்களவன் கொழும்பலி இருக்கிற ஈடகளை போட வெளிக்கிட்டால் முதல்ல உங்கள போல ஆட்களை காட்டிக் கொடுக்கிறது நான் தான் என்று இதைவிட இப்பிடியானதுகளிற்கு வேற பதில்லை.

உதென்ன தலைப்பு??????????

சமுதாயத்தில இப்படிப்பட்ட பலர் இருக்கத்தான் செய்வார்கள். இது இயல்புதான். இவர்களை மாற்றவும் முடியாது இவர்கள் ஆதரவாக கதைப்பதால் விடிவும் வந்துவிடாது. சமுதாயத்தில இருக்கிற 10 முதல் 20 வீதமானவர்களால்த்தான் மாற்றம் ஏற்படுகிறது. அவர்கள்தான் ஆணிவேர். அவர்கள் தான் செயல்வீரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று நடந்த எஸ்.பி பாலாவின் நிகழ்ச்சிக்கு ஈழ ஆதரவு பேசும் மக்கள் போகாம தங்களது ஆதங்களை காட்டி இருந்தா அன்று நிகழ்ச்சி நடத்த தென்னிந்தியாவில் இருந்து வந்திருந்த சகல கலைஞர்களுக்கும் ஈழதமிழர்கள் ஒரு உன்னதமான இலட்சியதிற்காக தான் போராடுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமா விளங்கி இருக்கும் அதற்கு போகாம விட்டிருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பண நட்டம் நிச்சயமாக ஏற்பட்டிருகாது ஏனேனில் முன்கூட்டியே பணம் கொடுத்து டிக்கேட் வாங்கி விட்டார்கள்.தமிழ் செல்வனின் பூதவுடல் விதைக்கபட முன்னரே நாம் அதில் கலந்து கொள்கிறோம் இதில் இருந்து நாம் ஈழ ஆதரவு பேச்சளவிள் தான் செயலில் ஒரு இசை நிகழ்ச்சியை கூட புறகணிக்க முடியவில்லை ஆனால் உயிர்தியாகம் செய்து இராணுவ தளங்களை தாக்கும் போது சந்தோசபடமட்டும் நாம் தயங்குவதில்லை.

இதையும் ஒருக்கா பாருங்கோ

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=357167

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.