Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் பிரச்சினைகள் இங்கே தீர்த்து வைக்கப்படும்!!

Featured Replies

வணக்கம்,

உங்கள் பிரச்சனைகளை இங்கே எமக்கு அறிவித்தால் அதற்கு அனுபவம் வாய்ந்த குரு, மற்றும் சீடன்மூலம் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு, பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு உதவி செய்யப்படும். இதற்கு காசு ஒன்றும் அறவிடப்படமாட்டாது.

ஜெனரல் ஒன்று செய்வோமே உங்கள் பிரச்சினைகள் இங்கே தீர்த்து வைக்கபடும் என்று பெரிசா ஒரு போர்ட் ஒன்று போட்டு வாறவையின்ட பிரச்சினை எல்லாம் தீர்த்து வைப்போமே இதற்கும் நீங்கள் தான் குரு நான் வந்து சிஷ்யன் இதை பற்றி என்ன நினைக்கிறீங்க கிடைக்கிற அமோண்டில பாதி பாதி வெட்டி கொள்வோம் :(

இது சற்று நகைச்சுவையான பகுதிபோல் இருந்தாலும், உண்மையில் சீரியசாக ஏதாவது சிக்கல்கள், பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், அவற்றை எப்படி அணுகுவது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் தகுந்த ஆலோசனைகள் தரப்படும். தனிமடல் kalainjan@yarl.com (அட யாராவது வைரஸ் ஒண்டும் அனுப்பி போடாதிங்கோ.)

உங்கள் அந்தரங்கம் பேணப்படும். பிரச்சனைகள் எம்மால் தீர்க்கபட முடியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்தந்த துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முயற்சிசெய்வோம்.

பி/கு: எங்கள் நேரவசதியை பொறுத்தே எமது ஆலோசனைகள் வழங்கப்படும். உங்கள் பிரச்சனைகளிற்கு நாங்கள் உடனடியாக எப்படி தீர்ப்பது என்று விடைதருவோம் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. மேலும், நாம் தரும் ஆலோசனைகளை பின்பற்றுவதால் அதற்கு வரும் பின்விளைவுகளிற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. எனினும், எம்மால் முடியுமான அளவு சிறந்த ஆலோசனைகள் வழங்கப்படுவதற்கு முயற்சி செய்யப்படும்.

யாழ் கள உறவுகளும் உங்கள் பொதுவான கேள்விகள இஞ்ச கேளுங்கோ. யாழில்உருப்படியா ஒரு விசயம் செய்யமுயற்சிக்கிறம். யாரவது வந்து குழப்பி போடாதிங்கோ. :lol:

நல்லதொரு விடயம். உளவியல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு என்னால் உதவ முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரய்யா.. :lol: ஆனால் நல்ல விசயம்..

முதல் கேள்வியா இது இருக்கட்டுமே...

நான் கணினித் துறையில் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 12 மணி நேரம் கணினியில் செலவிடுகிறேன், வேலையில் உள்ளதையும் சேர்த்து. பாதிநேரம் பல களங்களில் கருத்தெழுதுவதும் வாசிப்பதுமே வேலையாக உள்ளது. இதனால் பல சமயம் உள்நாட்டுக் கலகம் ஏற்படுகிறது. இது நேர விரயமென்று தெரிந்தாலும்... முடியல.. :lol: ஏதாவது வழி..?

பி.கு.: இதற்கு முன்னால் VB கற்று பல புரோகிராம் எழுதி பொழுது போக்கினேன். :(

  • தொடங்கியவர்

நேரம் விரயமாகும் விடயங்களாக நீங்கள் எவற்றை நினைக்கின்றீர்கள்? இதை உங்கள் துணையிடமே கேளுங்கள்..

நேரம் விரயமாகின்றது என்பது ஒவ்வொருவர் மனதை பொறுத்து உள்ளது. சிலருக்கு கலியாணம் கட்டுவதுகூட நேரத்தை விரயமாக்கும் செயலாக தெரியும்.

தீர்வு என்ன?

உங்கள் துணையையும் நீங்கள் பொழுதுபோக்கும் விசயங்களில் ஆர்வத்தை ஏறபடுத்த முயற்சிக்கலாம். வீட்டில் இரண்டு கணணி இருந்தால் இருவரும் எம்.எஸ்.என் இல் சட் பண்ணி பார்க்கலாம். ஹாஹா. மேலும், உங்கள் துணையை யாழ் இணையத்தில் இணைத்து கருத்து எழுதுவதற்கு ஊக்குவிக்கலாம்.

இதேபோல், உங்கள் துணை விரும்புகின்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் நீங்கள் ஆர்வத்தை வரவழைக்க முயற்சி செய்யலாம்.

வாழ்வதற்காகவே வாழ்க்கை. நாம் எப்போதும் பணம் பண்ணும் விசயங்களை மட்டும் நேரத்தை விரயமாக்கும் செயல்களில் சேர்க்காது விடுகின்றோம். நீங்களும் பணம்பண்ணும் வழிகளில் கவனம் செலுத்துவதை மட்டுமே நேரத்தை பொன்னாக செலவளிக்கும் வழிமுறையாக நினைக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.

இன்னொரு விடயம். கொமியூனிகேசன். நீங்கள் இப்போது யாழில் அரட்டை அடித்து கருத்து எழுதும்போது வெளிஉலகுடன் நீங்கள் ஒரு தொடர்பை ஏற்படுத்தி கொள்கின்றீர்கள். மனம் சிறிதுநேரம் சந்தோசமாக இருக்கின்றது. நாம் வாழும் இடம் வெளிநாடு. பலருக்கு ஆக்களுடன் கதைக்காமல் மூஞ்சையை தொங்கப் போட்டுக்கொண்டு உம்மாண்டி மாதிரி இருப்பதால்தான் மேல்வீடு தட்டுகின்றது.

சில தினங்களிற்கு முன் கனடாவில் ஒரு பெண்ணை புருசன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவத்தை அறிந்து இருப்பீங்கள் என்று நினைக்கின்றேன். இப்படியெல்லாம் சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் என்ன?

நேரம் விரயமாகின்றது என்ற தத்துவத்தை பாதிக்கப்பட்ட இந்தக்குடும்பம் மீது பிரயோகித்து பாருங்கள். நீங்கள் யாழில் அரட்டை அடித்து கலகலப்பாக இருப்பது போல் குறிப்பிட்ட கொலையை செய்த நபரும் இருந்துஇருப்பாராக இருந்தால் இப்படியான விபரீதம் ஏற்பட்டு இருக்காது.

பொழுதுபோக்கு. நெகிழ்வுத்தன்மை மனிதவாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நீங்கள் இயந்திரமாக வாழவெளிக்கிட்டால் அது வாழ்க்கையில் விபத்துக்கள் ஏற்படுவதற்கே வழிசமைக்கும்.

கூஸ் நெக்ஸ்ட்?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞா.... வீடு வாசல்ல இருக்கிறவை பணம் சம்பாதிக்கிறதை பிரயோசமானது எண்டு சொல்லவில்லை. என்ர மனிசி சொல்றது உதில இருந்து யாழ் மீட்டாமல் சிங்குக்கை இருக்கிறதுகளை கழுவுங்கோ இல்லையெண்டால் வக்கியூம் பிடியுங்கோ இல்லையெண்டால் அந்த கறியை வையுங்கோ இல்லையெண்டால் பையனுக்கு டைய்ப்பர் மாத்தி விடுங்கோ உப்பிடியே சொல்லிகொண்டு போகலாம்....அதனால இந்த பிரச்சனையளுக்கு ஒரு வளி சொல்லுங்கோ பாப்போம்.... :lol:

நான் சிகரட் குடிப்பதை விடமாட்டேன்.... என்னை சிகரட் குடிக்கவேண்டாம் எண்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை!

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் மாப்பிளை / கலைஞன்..

கல்யாணம் இன்னும் ஆகேல்ல எண்டு மட்டும் தெரியுது.. சபேஸ் எழுதின பதில்தான் எண்ட பதிலும்.. ஆக சொலூசன் இல்ல.. :lol:

  • தொடங்கியவர்

நல்லதொரு விடயம். உளவியல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு என்னால் உதவ முடியும்.

நன்றி தமிழச்சி, நேரம் கிடைக்கும்போது இங்கு கேட்கப்படும் கேள்விகளிற்கு நீங்களும் உங்கள் துறைசார் அனுபவங்களை கூறுங்கள்.

கலைஞா.... வீடு வாசல்ல இருக்கிறவை பணம் சம்பாதிக்கிறதை பிரயோசமானது எண்டு சொல்லவில்லை. என்ர மனிசி சொல்றது உதில இருந்து யாழ் மீட்டாமல் சிங்குக்கை இருக்கிறதுகளை கழுவுங்கோ இல்லையெண்டால் வக்கியூம் பிடியுங்கோ இல்லையெண்டால் அந்த கறியை வையுங்கோ இல்லையெண்டால் பையனுக்கு டைய்ப்பர் மாத்தி விடுங்கோ உப்பிடியே சொல்லிகொண்டு போகலாம்....அதனால இந்த பிரச்சனையளுக்கு ஒரு வளி சொல்லுங்கோ பாப்போம்.... :lol:

சபேஸ், நீங்கள் கூறுவதும் சரிதான். எல்லோரும் பணம் சம்பாதிப்பதை பிரயோசனமான ஒரு செயலாக நினைப்பதில்லை. சிலருக்கு பணம் என்பது ஒரு பொருட்டு அல்ல.

நீங்கள் உங்கள் மனைவி உங்களை அது செய், இது செய் என்று சொல்லி- போட்டு ஆட்டுவிப்பதாக எழுதி இருக்கிறீங்கள்.

குடும்ப வாழ்க்கை என்று போனால் கடமைகளை நாங்கள் தவிர்க்க முடியாது. நீங்கள் விடும் தவறுகளால் பாதிக்கப்படுவது நீங்கள் மாத்திரம் அல்ல. உங்கள் குழந்தைகளுமே.

நான் அடிக்கடி எனது பெற்றோரை முன்பு திட்டுவேன். ஏன் அவர்கள் முயற்சி செய்து வாழ்வில் முன்னுக்கு வராமல் நடுத்தரகுடும்பமாக இருந்து முடங்கிப்போனார்கள் என்று. முன்பு நான் அடிக்கடி எனது அப்பாவை கிண்டல் செய்வேன். அதாவது அவர் தனது இருபது வயதில் கச்சேரியில் கிளார்க் ஆக சேர்ந்து பின் ஐம்பது வயது சொச்சத்தில் கிளார்க்காகவே ஓய்வும் பெற்றார். வேலையில் முன்னேற்றத்தை, பதவி உயர்வுகளை பெறாது ஏன் சும்மா ஒரு பொன்னையன் மாதிரி இருந்தீங்கள் என்று கேட்டு அப்பாவை கோவித்து கொள்வேன். நீங்கள் வாழ்க்கையில் முன்னேறாது இருந்தபடியால்தான் எங்கட வாழ்க்கைகளும் முடங்கி உப்புச் சப்பு இல்லாமல் போய்விட்டது என்று கூறி அலுத்துக்கொள்வேன்.

அதாவது நான் சொல்ல வருவது என்ன என்றால் நீங்கள் உங்கள் குடும்பத்தை முன்னேற்றும் விசயங்களிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்கள் மனைவியை ஒரு தீவிரவாதியாக அல்லது அதிகாரம் செய்பவராக பார்க்காது ஒரு ஆலோசகராக நினைத்துக் கொள்ளுங்கள்.

எனது வீட்டை எடுத்துக்கொண்டால் எனக்கு அம்மாமீது அடிக்கடி சரியான கோவம் வரும். ஏன் என்றால் எனது அம்மா அப்படியே போட்டு உடைக்கிறமாதிரி பட் பட் என்று நான் செய்யும் பிழையான விசயங்களை கடுமையாக விமர்சிப்பார். நான் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். ஆனால் இறுதியில் என்ன நடக்கும் என்றால் எனது தாயார் ஆரம்பத்தில் சொன்னபடி விசயங்கள் நடக்கும். கடைசியில் நான் பிரச்சனைகளால் துன்பப்படும் போது எனது அம்மா சொல்லுவா "நான் உனக்கு அப்பவே சொன்னனான் தானே? நீ தான் ஒன்றும் கேட்கவில்லை" என்று.

நான் இப்போது எனது தாயாரை நச்சரிக்கும் ஒருவராக அல்லது அதிகாரபீடத்தில் இருக்கும் ஒருவராக பார்ப்பதில்லை. ஆனால் எப்போதும் ஒரு ஆலோசகராக நோக்குவேன். அவர்கூறும் விமர்சனங்களை சீர்தூக்கி பார்ப்பேன். அம்மா கூறும் வார்த்தைகள் கேட்டு முன்புபோல் கோபம் அடைவதும் இல்லை.

சில விசயங்கள் உண்மையாக இருந்தாலும், எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். ஆனால், உண்மைகள் உண்மைகளே! எமக்கு விருப்பம் இல்லை என்பதற்காக உண்மை ஒன்றை பொய் என்று கூறமுடியாது. அப்படி கூறினால் இறுதியில் பிரச்சனைப்படுவது நாங்களே!

எனவே, உங்கள் துணைகூறும் ஆலோசனைகளை கேட்டு நடவுங்கள். கேட்பதற்கு எரிச்சலாக இருந்தாலும், அல்லது சிலவேளைகளில் சகிக்க முடியாமல் இருந்தாலும் அவர்கூறுவதின்படி மனம் கோணாமல் செயற்பட்டு பாருங்கள்.

நீங்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடும்போது ஐபொட் கேக்கலாம். இல்லாவிட்டால் பாட்டுபெட்டியை போட்டு உங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டுக்கொண்டு வேலை செய்யலாம். இல்லாவிட்டால் குசினியினுள் சிறிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை வைத்து அதில் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு வேலை செய்யலாம். தொலைபேசியில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு வேலை செய்யலாம்.

நீங்கள் மாத்திரம்தான் இப்படி குடும்பத்துக்காக பாடுபடுவதாய் நினைக்காதிங்கோ. குடும்பம் உண்மையில் முன்னேறவேண்டும் என்று நினைக்கும் அனைவருமே கணவன், மனைவி என்று பாராது வேலை செய்து முன்னேறுகின்றார்கள்.

பி.எச்.டி செய்து விஞ்ஞானியாக இருக்கும் எனது சகோதரன் கூட பிள்ளைக்கு டயப்பர் மாத்துதல், பிராக்காட்டுதல், பால் கொடுத்தல், சமையல் செய்தல் என்று வீட்டு அலுவல்கள் சகலதும் செய்வார். குடும்பம் என்று வந்துவிட்டால் பிறகு நான் என்ன படித்தேன், எனது தகுதி என்ன, நான் இப்படி சில்லறை வேலைகள் எல்லாம் செய்யலாமா என்று எல்லாம் யோசிக்கக்கூடாது.

கணவன், மனைவி இருவரும் ஆளாளுக்கு உதவி குடும்பம் முன்னேற உழைப்பார்களானால் எதிர்காலத்தில் நீங்கள் மாத்திரமன்றி உங்கள் பிள்ளைகளும் சந்தோசமாக இருக்க உதவியாக இருக்கும்.

மற்றவர்களின் நக்கலை கேட்பதால்தான் பலவீடுகளில் பிரச்சனை வருகின்றது. அங்கபார் அவன் தான் வீட்டில சமையலாம்!, கலியாணம் கட்டினாப்பிறகு பெண்டாட்டிக்கு பயந்து பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனான்!.... இப்படி எல்லாம் சொல்வார்கள். இதுகள காதில் போடக்கூடாது. நீங்கள் வீட்டில் செய்யும் வேலைகளை அனுபவித்து மகிழுங்கள். நாங்கள் செய்யும் எதையும் விருப்பத்துடன் செய்தால் பிரச்சனைகள் இருக்காது.

நான் சிகரட் குடிப்பதை விடமாட்டேன்.... என்னை சிகரட் குடிக்கவேண்டாம் எண்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை!

:icon_mrgreen:

ஓ அப்படியா. அப்ப தாராளமா குடியுங்கோ. பிறகு ஒருகாலத்தில நீங்கள் சிகரெட் குடிச்சதால வியாதி ஏதாவது வந்தால் அதுக்குபிறகு உங்களிற்கு ஏதாவது உதவிகள், ஆலோசனைகள் தேவைப்பட்டால் சொல்லுங்கோ. தீர்த்து வைக்கிறம்.

யோவ் மாப்பிளை / கலைஞன்..

கல்யாணம் இன்னும் ஆகேல்ல எண்டு மட்டும் தெரியுது.. சபேஸ் எழுதின பதில்தான் எண்ட பதிலும்.. ஆக சொலூசன் இல்ல.. :(

ஹாஹா... கலியாணம் கட்டினால்தான் கலியாணம் கட்டினவர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்க முடியும் என்று இல்லை. இப்ப பாருங்கோ. ஆம்பளை டாக்டர்கள் பெண்களிற்கு மகப்பேறு பார்க்கின்றார்கள். ஆம்பளை டாக்டர்களினால் எப்படி பெண்களின் சிக்கல்களை தீர்க்கமுடிகின்றது? இதுமாதிரியே கலியாணம் கட்டாதவர்களால் கலியாணம் கட்டினவர்களின் பிரச்சனைகளை நிச்சயமாக தீர்த்துவைக்க முடியும்.

உங்களிற்கு நான் சொன்ன ஆலோசனைகளில் எவையாவது தெளிவு இல்லாமல் இருந்தால் அவற்றை திரும்பவும் கேளுங்கோ. விளங்கப்படுத்துகின்றேன். :icon_mrgreen::D

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,

நீங்கள் உங்கட அம்மாவை ஆலோசகராப் பாக்கிற மாதிரி. எண்ட மனிசி எனக்கு தான் ஆலோசகர் எண்டு சொல்லி களத்தில நேரத்தை வீணாக்காதையுங்கோ எண்டிறா.. :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,

நீங்கள் உங்கட அம்மாவை ஆலோசகராப் பாக்கிற மாதிரி. எண்ட மனிசி எனக்கு தான் ஆலோசகர் எண்டு சொல்லி களத்தில நேரத்தை வீணாக்காதையுங்கோ எண்டிறா.. :lol::icon_mrgreen:

கிகிகி... நானும் மனிசிக்கு அவாதான் ஆலோசகர் எண்டு சொல்ல அவாவின் முதலாவது ஆலோசனை யாழுக்கு போய் வேலை வில்லட்டி இல்லாதாக்கள் மாதிரி இருக்கிறதை நிறுத்துறது தானாம் அவாவின் முதலாவது ஆலோசனை.

அதுசரி உங்களுக்கு எப்ப திருமணம்? ஏநெண்டால் தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும். :icon_mrgreen:

கலைஞன், நீங்கள் கூறிய அறிவுரை மிகவும் ஏற்றதே. மற்றவர்களால் அறிவுரை மட்டும்தான் கூறமுடியும். அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர்கள் விருப்பம். ஆனால், நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் எம்மைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இல்லாதபோதுதான், அவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யத் தொடங்குவார்கள். உதாரணமாக, கணவன் மனைவிக்குள் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, நாளடைவில் ஓர் அந்நியோன்யம் ஏற்படும். ஒருவருக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்களை அறிந்து கொள்ள உதவும். சில வேலைகள் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அதைத் தவிர்த்து மற்ற வேலைகளைச் செய்யுங்கள். ஏதோ ஒருவகையில் உதவி செய்வதையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதோடு, அதிக நேரம் கணனியில் இருப்பதும் வாழ்க்கைக்கு நல்லதல்ல. வேலையும், கணனியுமல்ல வாழ்க்கை. குடும்பத்தோடும், நண்பர்களோடும் நேரத்தைச் செலவழிப்பதும் வாழ்க்கைதான். உதாரணமாக, கணவன், மனைவி இருவரும் வேலையால் வந்த பின்பு, இருவரும் சேர்ந்து சமைத்து விட்டு, இருவரும் சேர்ந்தே பொழுதைப் போக்கலாம். பிடித்த நிகழ்ச்சிகள், படங்கள் பார்ப்பது, சேர்ந்து விளையாடுவது, நடக்கப்போவது எனப் பல இருக்கின்றன. இவ்வாறு செய்யும்போது, மனஇறுக்கத்தைத் தளர்த்துவதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தரும். இந்தச் சூழ்நிலையில் வளரும் பிள்ளைகளும் மன ஆரோக்கியத்தோடு வளர்வார்கள். இப்படியான வாழ்க்கை வாழுபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது தானாக அமைவதில்லை. நாமாக ஏற்படுத்திக் கொள்வதே. எமது வாழ்க்கையும் அதன் சந்தோசமும் எம் கையிலேதான் உள்ளது.

டங்குவார், சபேசன், உங்கள் இருவரின் மனைவிகளும் சொல்வது மிகவும் சரியே. அவர்கள் சொல்வதைப் பின்பற்றினால் உங்கள் வாழ்வில் சந்தோசம் பொங்கும். :lol::icon_mrgreen:

அட...அட...அட குரு என்றா குரு தான் நேற்று தான் இதை பற்றி கதைத்தோம் இன்றைக்கு பார்த்தா அலுவலகமும் திறந்து இவ்வளவு கஸ்டமர்சும் வந்திருக்கிறார்கள் என்றா என்னால முடியல... :wub: (அது சரி ஒரு அபொயின்மென்டிற்கு எவ்வளவு துட்டு என்று சொல்லவில்லை காசு எல்லாம் வேண்டாம் என்று சொல்லி போட்டு தாறவை விருப்பம் இருந்தா இந்த உண்டியலில போட்டு விட்டு செல்லலாம் என்று போடுங்கோ :wub: ) வாற கலக்சனில எனக்கு 50% உங்களுக்கு 50% அக்ரிமன்ட் எப்படி இருக்கு.. :icon_mrgreen:

எல்லாம் சரி எனக்கும் ஒரு பிரச்சினை என்னும் பல பிரச்சினை இருக்கு இது தான் என்ட முதல் பிரச்சினை இதை ஒருக்கா தீர்த்துவையுங்கோ :( .....ஒரு பெண் நம்மளை காதலிக்கிறா என்று எப்படி கண்டுபிடிக்கிறது :icon_mrgreen: அத்தோட இவ்யூ டோன் மைன்ட் எனக்கு ஒரு லவ்லெட்டரும் எழுதி தாறியளொ ^_^ ...ஏன் கேட்கிறேன் என்றா இப்ப கொடுக்க தொடங்கினா தானே ஒன்றாவது மாட்டுபடும் எப்படி நம்ம ஜடியா :wub: ...சரி உந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கோ அடுத்த பிரச்சினையோட வாரேன் என்ன!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்கையில சுவாரசியமே பிரச்சினைகள் தான் பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை நீரில்லாத ஓடை" :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்பின் கலைஞா,

வாழ்த்துகள்..எப்படிப்பா உங்களூக்கு மட்டுமே இப்படி அறிவுபூர்வமான ஆக்கபூர்வமான சிந்தனைகள் தோன்றுகின்றன? யாழுக்கு தற்போது அடிக்கடி வரமுடியாத சூழல்..அதைத் தனிமடலிலேயே சொல்கின்றேன்..

தீர்வை எதிர்நோக்கி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை பிரச்சனை என்னவெண்டால் :lol::icon_mrgreen::icon_mrgreen:

உவர் வலைஞனை ..........:(:D இல்லை சோலி வேண்டாமப்பா ^_^

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

கலைஞன்,

நீங்கள் உங்கட அம்மாவை ஆலோசகராப் பாக்கிற மாதிரி. எண்ட மனிசி எனக்கு தான் ஆலோசகர் எண்டு சொல்லி களத்தில நேரத்தை வீணாக்காதையுங்கோ எண்டிறா..

அதுதான் அவர் ஆலோசனை என்றால் அவர் சொல்லிறமாதிரி கொஞ்சநாளைக்கு செய்து பாருங்கோ.

கிகிகி... நானும் மனிசிக்கு அவாதான் ஆலோசகர் எண்டு சொல்ல அவாவின் முதலாவது ஆலோசனை யாழுக்கு போய் வேலை வில்லட்டி இல்லாதாக்கள் மாதிரி இருக்கிறதை நிறுத்துறது தானாம் அவாவின் முதலாவது ஆலோசனை.

அதுசரி உங்களுக்கு எப்ப திருமணம்? ஏநெண்டால் தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும். :

எனக்கும் பலர் இப்படி ஆலோசனை கூறி உள்ளார்கள். யாழுக்கு போய் வேலைவெட்டி இல்லாத ஆள் மாதிரி இல்லாமல் உருபடியா ஏதாவது செய்து முன்னேறு எண்டு. நான் யாழுக்கு எனக்கு மனதுக்கு பிடித்து இருப்பதால் வருகின்றேன். இதனால் வேறு எவருக்காவது வீட்டில் பிரச்சனை இல்லை. ஆனால், நான் கலியாணம் கட்டி குடும்பமாக இருக்கும்போது நான் யாழுக்கு வருவது எனது துணைக்கு பிடிக்காது இருந்தால் அவ்வாறு வருவதை குறைப்பதையே நான் விரும்புவேன்.

உங்களை நம்பி இருப்பவரை கைவிட்டுவிட்டு நீங்கள் மட்டும் பொழுதை சந்தோசமாக போக்குவது என்பது ஒருவித துரோகத்தனம். உங்கள் துணை உங்களை மட்டுமே நம்பி இருக்கக்கூடும். ஊர் என்றாலும் பரவாயில்லை, நாலைஞ்சு பேரை தெரிஞ்சு இருக்கும். நாலைஞ்சு இடத்துக்கு போய்வரலாம். ஆனால்...

வெளிநாட்டில் இப்படி இல்லை. சிலருக்கு வீட்டுக்குள் சிறையினுள் இருப்பதுபோல் இருக்கவேண்டும். என்னதான் ரீவி, தொலைபேசி என்று இருந்தாலும், தனி ஆளாக பேச்சுத்துணை இன்றி இருப்பது கஸ்டமாக இருக்கக்கூடும். உங்கள் துணை எப்படியான நிலமையில் இருக்கின்றா என்று தெரியவில்லை.

நானாக இருந்தால், நிச்சயம் திருமணம் செய்தபின் (ஒரு காலத்தில் செய்தால்) எனது துணையும் என்னுடன் சேர்ந்து சந்தோசமாக இருக்கும் வகையிலேயே பொழுதுபோக்குகளில் ஈடுபடுவேன். துணையைப் பிரிந்து நானாக தனியாக ஒன்றை அனுபவித்து மகிழமாட்டேன் அல்லது அவ்வாறு தனித்து மகிழ்வதை இயலுமான அளவு குறைத்துக்கொள்வேன்.

சேர்ந்து வாழவேண்டும் என்று தானே கலியாணம் கட்டுறீங்கள்? பிறகு கலியாணம் கட்டிப்போட்டு ஆளாளுக்கு வேற, வேற அலுவல்களில, விசயங்களில மனத செலுத்துவதாய் இருந்தால் பிறகு ஏன் கலியாணம் எல்லாம்? பேசாமல் சிங்கிளாகவே இருக்கலாமே? இருமனம் சேர்ந்து கலியாணத்தில் ஒருமிப்பதாக சொல்லிறீனம். நீங்கள் இருவரும் ஒருமனமாக வாழமுயற்சித்து பார்க்கலாமே?

கலைஞன், நீங்கள் கூறிய அறிவுரை மிகவும் ஏற்றதே. மற்றவர்களால் அறிவுரை மட்டும்தான் கூறமுடியும். அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர்கள் விருப்பம். ஆனால், நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் எம்மைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இல்லாதபோதுதான், அவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யத் தொடங்குவார்கள். உதாரணமாக, கணவன் மனைவிக்குள் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, நாளடைவில் ஓர் அந்நியோன்யம் ஏற்படும். ஒருவருக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்களை அறிந்து கொள்ள உதவும். சில வேலைகள் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அதைத் தவிர்த்து மற்ற வேலைகளைச் செய்யுங்கள். ஏதோ ஒருவகையில் உதவி செய்வதையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதோடு, அதிக நேரம் கணனியில் இருப்பதும் வாழ்க்கைக்கு நல்லதல்ல. வேலையும், கணனியுமல்ல வாழ்க்கை. குடும்பத்தோடும், நண்பர்களோடும் நேரத்தைச் செலவழிப்பதும் வாழ்க்கைதான். உதாரணமாக, கணவன், மனைவி இருவரும் வேலையால் வந்த பின்பு, இருவரும் சேர்ந்து சமைத்து விட்டு, இருவரும் சேர்ந்தே பொழுதைப் போக்கலாம். பிடித்த நிகழ்ச்சிகள், படங்கள் பார்ப்பது, சேர்ந்து விளையாடுவது, நடக்கப்போவது எனப் பல இருக்கின்றன. இவ்வாறு செய்யும்போது, மனஇறுக்கத்தைத் தளர்த்துவதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தரும். இந்தச் சூழ்நிலையில் வளரும் பிள்ளைகளும் மன ஆரோக்கியத்தோடு வளர்வார்கள். இப்படியான வாழ்க்கை வாழுபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது தானாக அமைவதில்லை. நாமாக ஏற்படுத்திக் கொள்வதே. எமது வாழ்க்கையும் அதன் சந்தோசமும் எம் கையிலேதான் உள்ளது.

டங்குவார், சபேசன், உங்கள் இருவரின் மனைவிகளும் சொல்வது மிகவும் சரியே. அவர்கள் சொல்வதைப் பின்பற்றினால் உங்கள் வாழ்வில் சந்தோசம் பொங்கும்.

ஓம் தமிழச்சி, கணவன், மனைவி இருவரும் பொழுதை ஒன்றாக கழிப்பதே மிகவும் நல்லது.

அட...அட...அட குரு என்றா குரு தான் நேற்று தான் இதை பற்றி கதைத்தோம் இன்றைக்கு பார்த்தா அலுவலகமும் திறந்து இவ்வளவு கஸ்டமர்சும் வந்திருக்கிறார்கள் என்றா என்னால முடியல... அது சரி ஒரு அபொயின்மென்டிற்கு எவ்வளவு துட்டு என்று சொல்லவில்லை காசு எல்லாம் வேண்டாம் என்று சொல்லி போட்டு தாறவை விருப்பம் இருந்தா இந்த உண்டியலில போட்டு விட்டு செல்லலாம் என்று போடுங்கோ வாற கலக்சனில எனக்கு 50% உங்களுக்கு 50% அக்ரிமன்ட் எப்படி இருக்கு.. :wub:

எல்லாம் சரி எனக்கும் ஒரு பிரச்சினை என்னும் பல பிரச்சினை இருக்கு இது தான் என்ட முதல் பிரச்சினை இதை ஒருக்கா தீர்த்துவையுங்கோ :wub: .....ஒரு பெண் நம்மளை காதலிக்கிறா என்று எப்படி கண்டுபிடிக்கிறது :huh: அத்தோட இவ்யூ டோன் மைன்ட் எனக்கு ஒரு லவ்லெட்டரும் எழுதி தாறியளொ :lol: ...ஏன் கேட்கிறேன் என்றா இப்ப கொடுக்க தொடங்கினா தானே ஒன்றாவது மாட்டுபடும் எப்படி நம்ம ஜடியா :lol: ...சரி உந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கோ அடுத்த பிரச்சினையோட வாரேன் என்ன!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்கையில சுவாரசியமே பிரச்சினைகள் தான் பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை நீரில்லாத ஓடை"

இதற்குரிய பதிலை நாளை சொல்கின்றேன். நன்றி!

நட்பின் கலைஞா,

வாழ்த்துகள்..எப்படிப்பா உங்களூக்கு மட்டுமே இப்படி அறிவுபூர்வமான ஆக்கபூர்வமான சிந்தனைகள் தோன்றுகின்றன? யாழுக்கு தற்போது அடிக்கடி வரமுடியாத சூழல்..அதைத் தனிமடலிலேயே சொல்கின்றேன்..

தீர்வை எதிர்நோக்கி..

தமிழ்தங்கை உங்கள் பிரச்சனையை சொல்லுங்கள். எனது அறிவுக்கு எட்டிய ஆக்கபூர்வமான அனுபவத்தை சொல்கின்றேன்.

என்ரை பிரச்சனை என்னவெண்டால்

உவர் வலைஞனை ..........:mellow::huh: இல்லை சோலி வேண்டாமப்பா :(

ஓ அப்படியா.. அதுக்கு என்ன செய்யவேண்டுமென்றால்...

---------------------------------------------------------------------------------------------

தனிமடலில் இதுபற்றி கருத்து எழுதி அனுப்பியவர்களிற்கு நன்றி!

உங்கள் பிரச்சனைகளை, இந்தக் கருத்தாடல் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை நீங்கள் kalainjan@yarl.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கமுடியும். அந்தரங்கம் பேணப்படும்.

கேட்கப்பட்டும் கேள்விகளிற்கான பதில்கள் கேள்விகள் கேட்கப்பட்ட வரிசைக்கிரமத்தில் அளிக்கப்படும். நன்றி!

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

எல்லாம் சரி எனக்கும் ஒரு பிரச்சினை என்னும் பல பிரச்சினை இருக்கு இது தான் என்ட முதல் பிரச்சினை இதை ஒருக்கா தீர்த்துவையுங்கோ :huh: .....ஒரு பெண் நம்மளை காதலிக்கிறா என்று எப்படி கண்டுபிடிக்கிறது :mellow: அத்தோட இவ்யூ டோன் மைன்ட் எனக்கு ஒரு லவ்லெட்டரும் எழுதி தாறியளொ :wub: ...ஏன் கேட்கிறேன் என்றா இப்ப கொடுக்க தொடங்கினா தானே ஒன்றாவது மாட்டுபடும் எப்படி நம்ம ஜடியா :wub: ...சரி உந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கோ அடுத்த பிரச்சினையோட வாரேன் என்ன!! :huh:

1. உங்களுக்கு ஒண்டு இல்ல, பல பிரச்சனைகள் இருக்கிதோ? அப்ப அது நல்லது, வரவேற்கத்தக்க விடயம்.

பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தால், அல்லது பிரச்சனை எதுவும் இருப்பதாக நீங்கள் ஒன்றும் நினைக்காமல் இருந்தால் விசயம் எங்கையோ பிழைக்கின்றது என்று அர்த்தம். இது எதிர்காலத்தில் வரப்போகும் பேராபத்து ஒன்றிற்கான எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். எனவே, பல பிரச்சனைகள் உங்களிற்கு இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

பெரிய, பெரிய ஆக்களுக்குத்தான் பல பெரிய, பெரிய பிரச்சனைகள் எல்லாம் இருக்கும். சின்ன ஆக்களுக்கு பிரச்சனை என்று ஒன்றும் தெரியாமல் இருக்கும். அல்லது பிரச்சனையில் இருந்து நழுவி இருப்பார்கள்.

2. ஒரு பெண் உங்கள காதலிக்கிறாவா இல்லையா எண்டு கண்டுபிடிச்சு என்ன செய்யப்போறீங்கள்? அவ அப்படி உங்களை காதலிப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பீங்கள்? அத முதலில ஒருக்கால் சொல்லுங்கோ.

3. ஓம் லவ் லெட்டர் எழுதித்தரலாம். ஆனா அவவுக்கு லவ் லெட்டர் பிடிக்குமா, பிடிக்காதா எண்டு முதலில உங்களுக்கு தெரியவேணுமே? மேலும், லவ் லெட்டர் குடுக்கும் முன்னம், பெண்கள் எப்படியானவர்களை காதலிக்கின்றார்கள் என்று சிறிது ஆராய்ச்சி அல்லது யோசனை செய்து பாருங்கள். வெறும் லவ் லெட்டர் மூலம் ஒரு பெண் - அதுவும் இந்தக்காலத்து பெண் தனது இதயத்தை பறிகொடுப்பாளா என்பது கேள்விக்குறியே!

எனக்கு பலர் சொன்ன அறிவுரையை உங்களுக்கும் கூறுகின்றேன்..

எமது தகுதி, தரத்தை நாம் உயர்த்திக்கொண்டால் மிச்சம் எல்லாம் தானாகவே எம்மைத்தேடி வரும்!

4. ஓம் மிச்ச பிரச்சனைகளையும் சொல்லுங்கோ. கதைச்சுப்பேசி... ஒரு தீர்வு காணுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்களை அறிந்து கொள்ள உதவும்.

என்ன இப்பிடி சொல்லி போட்டிங்கள்... பிடிச்சது பிடிக்காதது தெரிஞ்சா, அதுக்கப்புறம் அப்பிடியில்லோ செய்யவேணும். அதை அறியாமல் விட்டால், அவாக்கு பிடிக்காததை செய்தாலே, இல்லை பிடிச்சதை செய்யாட்டிலோ அவா என்ன செய்யிறது எண்டு சமாளிச்சு போவா. இல்லையெண்டால் தெரிஞ்சும் செய்ததெண்டு கோவிப்பா. தீர்வுக்கு வளி கேட்டால் பிரச்சனைக்கு வளி சொல்றிங்கள். :wub:

ஒரு பெண் நம்மளை காதலிக்கிறா என்று எப்படி கண்டுபிடிக்கிறது :mellow:

இதென்ன பெரிய பிரச்சனை.... அவாவிடம் கதைக்கும் போது வணக்கம் அக்கா எண்டு செல்லுங்கோ... அவா கோவிச்சா உங்களை லவ் பண்றா... இல்லையெண்டால் வேற ஒராளை பாருங்கோ. :huh:

எனக்கும் பலர் இப்படி ஆலோசனை கூறி உள்ளார்கள். யாழுக்கு போய் வேலைவெட்டி இல்லாத ஆள் மாதிரி இல்லாமல் உருபடியா ஏதாவது செய்து முன்னேறு எண்டு. நான் யாழுக்கு எனக்கு மனதுக்கு பிடித்து இருப்பதால் வருகின்றேன். இதனால் வேறு எவருக்காவது வீட்டில் பிரச்சனை இல்லை. ஆனால், நான் கலியாணம் கட்டி குடும்பமாக இருக்கும்போது நான் யாழுக்கு வருவது எனது துணைக்கு பிடிக்காது இருந்தால் அவ்வாறு வருவதை குறைப்பதையே நான் விரும்புவேன்.

உங்களை நம்பி இருப்பவரை கைவிட்டுவிட்டு நீங்கள் மட்டும் பொழுதை சந்தோசமாக போக்குவது என்பது ஒருவித துரோகத்தனம். உங்கள் துணை உங்களை மட்டுமே நம்பி இருக்கக்கூடும். ஊர் என்றாலும் பரவாயில்லை, நாலைஞ்சு பேரை தெரிஞ்சு இருக்கும். நாலைஞ்சு இடத்துக்கு போய்வரலாம். ஆனால்...

வெளிநாட்டில் இப்படி இல்லை. சிலருக்கு வீட்டுக்குள் சிறையினுள் இருப்பதுபோல் இருக்கவேண்டும். என்னதான் ரீவி, தொலைபேசி என்று இருந்தாலும், தனி ஆளாக பேச்சுத்துணை இன்றி இருப்பது கஸ்டமாக இருக்கக்கூடும். உங்கள் துணை எப்படியான நிலமையில் இருக்கின்றா என்று தெரியவில்லை.

நானாக இருந்தால், நிச்சயம் திருமணம் செய்தபின் (ஒரு காலத்தில் செய்தால்) எனது துணையும் என்னுடன் சேர்ந்து சந்தோசமாக இருக்கும் வகையிலேயே பொழுதுபோக்குகளில் ஈடுபடுவேன். துணையைப் பிரிந்து நானாக தனியாக ஒன்றை அனுபவித்து மகிழமாட்டேன் அல்லது அவ்வாறு தனித்து மகிழ்வதை இயலுமான அளவு குறைத்துக்கொள்வேன்.

சேர்ந்து வாழவேண்டும் என்று தானே கலியாணம் கட்டுறீங்கள்? பிறகு கலியாணம் கட்டிப்போட்டு ஆளாளுக்கு வேற, வேற அலுவல்களில, விசயங்களில மனத செலுத்துவதாய் இருந்தால் பிறகு ஏன் கலியாணம் எல்லாம்? பேசாமல் சிங்கிளாகவே இருக்கலாமே? இருமனம் சேர்ந்து கலியாணத்தில் ஒருமிப்பதாக சொல்லிறீனம். நீங்கள் இருவரும் ஒருமனமாக வாழமுயற்சித்து பார்க்கலாமே?

நீங்கள் பிரச்சனையான ஆளா இருக்கிறிங்கள். நீங்கள் இப்பிடியெல்லாம் செய்வேண் எண்டு இங்கை எழுதிறதை தற்செயலா என்ர மனிசி பார்த்தா "பாத்திங்களே மற்றாக்கள் எல்லா தங்கட மனிசி மாரை எப்படியெல்லாம் வைச்சிருப்பினமாம் நீங்கள் தான் இப்பிடி இருக்கிறிங்கள் எண்டு" கோவிப்பா. முதலாவதா மனிசியை இந்தபக்கம் வரவேண்டாம் எண்டு சொல்லவேணும். :huh:

  • தொடங்கியவர்

என்ன இப்பிடி சொல்லி போட்டிங்கள்... பிடிச்சது பிடிக்காதது தெரிஞ்சா, அதுக்கப்புறம் அப்பிடியில்லோ செய்யவேணும். அதை அறியாமல் விட்டால், அவாக்கு பிடிக்காததை செய்தாலே, இல்லை பிடிச்சதை செய்யாட்டிலோ அவா என்ன செய்யிறது எண்டு சமாளிச்சு போவா. இல்லையெண்டால் தெரிஞ்சும் செய்ததெண்டு கோவிப்பா. தீர்வுக்கு வளி கேட்டால் பிரச்சனைக்கு வளி சொல்றிங்கள். :huh:

இதென்ன பெரிய பிரச்சனை.... அவாவிடம் கதைக்கும் போது வணக்கம் அக்கா எண்டு செல்லுங்கோ... அவா கோவிச்சா உங்களை லவ் பண்றா... இல்லையெண்டால் வேற ஒராளை பாருங்கோ. :mellow:

நீங்கள் பிரச்சனையான ஆளா இருக்கிறிங்கள். நீங்கள் இப்பிடியெல்லாம் செய்வேண் எண்டு இங்கை எழுதிறதை தற்செயலா என்ர மனிசி பார்த்தா "பாத்திங்களே மற்றாக்கள் எல்லா தங்கட மனிசி மாரை எப்படியெல்லாம் வைச்சிருப்பினமாம் நீங்கள் தான் இப்பிடி இருக்கிறிங்கள் எண்டு" கோவிப்பா. முதலாவதா மனிசியை இந்தபக்கம் வரவேண்டாம் எண்டு சொல்லவேணும். :huh:

சபேஸ் முதலாவது நல்ல விசயம் என்ன எண்டால் ஓப்பின் டிஸ்கஸன். பிரச்சனைப்படுபவர்கள் மனம்திறந்து ஒருவருடன் ஒருவர் கதைத்தாலே பலபிரச்சனைகளிற்கு தீர்வு கண்டுவிடமுடியும். நீங்கள் தொடர்ந்து உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு மிகவும் நன்றி!

ஓ ஒருவ, லவ் பண்ணுறாவா இல்லையா எண்டு கண்டுபிடிக்க "அக்கா" எண்டு சொல்லிப்பாத்து டெஸ்ட் பண்ணலாமோ? இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. சிலது உண்மையாக இருக்கக்கூடும். யாராவது டிரை செய்துவிட்டு முடிவுகளை சொல்லுங்கோ. மேலும்..

ஒருவன் தன்னை லவ் பண்ணுறானா என்று கண்டுபிடிக்க இதேமாதிரி பெண்கள் - அதாவது ஒருத்தி "அண்ணை" எண்டு அவனிடம் சொல்லிப்பார்த்து டெஸ்ட் பண்ணமுடியுமா? அண்ணா என்று அவனிடம் ஒரு பெண் சொல்லும்போது அவன் அவளிடம் கோபப்பட்டால் அவன் அவளை காதலிப்பதாக கருத்தில் கொள்ளலாமா?

சிலர் ஒருவனை அல்லது ஒருத்தியை காதலித்தபின் கடைசியில் அண்ணா அல்லது அக்கா என்று சொல்லிபோட்டு டாட்டா காட்டிவிடுறீனமே இதுபற்றி என்ன சொல்லுறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் லவ் பண்ணீனமா எண்டு கண்டுபிடிக்கிறது ஈசி.

லெட்டெர் குடுக்க முன்ன தனியான ஒரு இடத்தில வச்சு உம்மா குடுத்துப் பாக்க வேணும். பளார் எண்டு சத்தம் வந்தா, "டேய் சூனா பானா, நீ போய்க்கிட்டே இருடா" எண்டு வெளிக்கிட வேண்டியதுதான். :mellow: ஏதாவது ஏச்சுப் பேச்சு விழுந்தா உங்களுக்கு நல்ல சான்ஸ் இருக்கு.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

கலை, எனக்கும் ரீமில ஒரு இடம் கிடைக்குமா? மதம் சம்பிரதாய எதிர்ப்பு எண்டு மல்லுக் கட்டி அலுத்துப் போச்சு. பிரயோசனமா ஏதாவது செய்தால் இந்த மாதிரி பெறுமதியில்லா விடயங்களில இருந்து ஒதுங்கியிருக்கலாம் எண்டு நினைக்கிறன். அவ்வளவு தொழில் முறை அனுபவமெல்லாம் இல்ல, ஒரு சின்னச் சஞ்சிகையில மனோதத்துவத் தொடர் எழுதின அனுபவம் மட்டும் இருக்கு. எனக்குத் தெரிஞ்சதப் பகிரலாம். மற்றபடி கள உறவுகள் யாராவது தங்கட செல்ல வளர்ப்புப் பிராணிகளின்ர பிரச்சினை பற்றிக் கேட்டாலும் பதில் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='கலைஞன்' date='Jan 28 2008, 04:46 AM' post='377627'

ஓ ஒருவ, லவ் பண்ணுறாவா இல்லையா எண்டு கண்டுபிடிக்க "அக்கா" எண்டு சொல்லிப்பாத்து டெஸ்ட் பண்ணலாமோ? இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. சிலது உண்மையாக இருக்கக்கூடும். யாராவது டிரை செய்துவிட்டு முடிவுகளை சொல்லுங்கோ. மேலும்..

ஒருவன் தன்னை லவ் பண்ணுறானா என்று கண்டுபிடிக்க இதேமாதிரி பெண்கள் - அதாவது ஒருத்தி "அண்ணை" எண்டு அவனிடம் சொல்லிப்பார்த்து டெஸ்ட் பண்ணமுடியுமா? அண்ணா என்று அவனிடம் ஒரு பெண் சொல்லும்போது அவன் அவளிடம் கோபப்பட்டால் அவன் அவளை காதலிப்பதாக கருத்தில் கொள்ளலாமா?

Edited by Justin

என்னையா எல்லாமே பிரச்சனையா இருக்கு? கேள்வியும் அப்படித்தான் பதிலும் அப்படித்தான். இதெல்லாம் விளங்காததுதான் எனக்குப் பிரச்சனை போல கிடக்கு.

  • தொடங்கியவர்

பெண்கள் லவ் பண்ணீனமா எண்டு கண்டுபிடிக்கிறது ஈசி.

லெட்டெர் குடுக்க முன்ன தனியான ஒரு இடத்தில வச்சு உம்மா குடுத்துப் பாக்க வேணும். பளார் எண்டு சத்தம் வந்தா, "டேய் சூனா பானா, நீ போய்க்கிட்டே இருடா" எண்டு வெளிக்கிட வேண்டியதுதான். :icon_mrgreen: ஏதாவது ஏச்சுப் பேச்சு விழுந்தா உங்களுக்கு நல்ல சான்ஸ் இருக்கு.. :lol:

உதுதான் இந்தியாவில இருந்து நீங்கள் படிச்சதோ? :lol:

கலை, எனக்கும் ரீமில ஒரு இடம் கிடைக்குமா? மதம் சம்பிரதாய எதிர்ப்பு எண்டு மல்லுக் கட்டி அலுத்துப் போச்சு. பிரயோசனமா ஏதாவது செய்தால் இந்த மாதிரி பெறுமதியில்லா விடயங்களில இருந்து ஒதுங்கியிருக்கலாம் எண்டு நினைக்கிறன். அவ்வளவு தொழில் முறை அனுபவமெல்லாம் இல்ல, ஒரு சின்னச் சஞ்சிகையில மனோதத்துவத் தொடர் எழுதின அனுபவம் மட்டும் இருக்கு. எனக்குத் தெரிஞ்சதப் பகிரலாம். மற்றபடி கள உறவுகள் யாராவது தங்கட செல்ல வளர்ப்புப் பிராணிகளின்ர பிரச்சினை பற்றிக் கேட்டாலும் பதில் சொல்லலாம்.

ஓம் ஜஸ்ரின் தாராளமா இணைஞ்சுகொள்ளுங்கோ..

ஓ ஒருவ, லவ் பண்ணுறாவா இல்லையா எண்டு கண்டுபிடிக்க "அக்கா" எண்டு சொல்லிப்பாத்து டெஸ்ட் பண்ணலாமோ? இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. சிலது உண்மையாக இருக்கக்கூடும். யாராவது டிரை செய்துவிட்டு முடிவுகளை சொல்லுங்கோ. மேலும்..

ஒருவன் தன்னை லவ் பண்ணுறானா என்று கண்டுபிடிக்க இதேமாதிரி பெண்கள் - அதாவது ஒருத்தி "அண்ணை" எண்டு அவனிடம் சொல்லிப்பார்த்து டெஸ்ட் பண்ணமுடியுமா? அண்ணா என்று அவனிடம் ஒரு பெண் சொல்லும்போது அவன் அவளிடம் கோபப்பட்டால் அவன் அவளை காதலிப்பதாக கருத்தில் கொள்ளலாமா?

எனது நண்பன் ஒருவன் பாவித்த ரெக்னிக்கக் குறுங்கதையாச் சொல்லுறன் கேளுங்கோ. காமாட்சி என்கிற அழகு தேவதை தன்னை மெய்யாலுமே விரும்புறாளா எண்டு மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தான் மாரிமுத்து (அதானப்பா நம் ஹீரோ, நண்பன்) மாரிமுத்து முதலில் காமாட்சிக்கு ஒரு தடவை அவளது பிறந்த நாளுக்கு வாழ்த்து மடலெல்லாம் போட்டு அசத்தியிருந்தான். காதலா எண்டு சந்தேகம் கிளம்பின பிறகு வேணுமெண்டு அடுத்த பிறந்த நாள் அன்று கண்டும் காணாதது போல நடந்து கொண்டான். காமாட்சி எதிர் கொண்டு இதைப் பற்றிக் கேட்ட போது தான் மறந்து விட்டதாக நடிக்கவும் காமாட்சிக்கு வந்ததே கோபம். இது முதல் "சைன்" என்று மாரிமுத்து என்னிடம் சொன்னான்.ஒரு பியரோடு பிதற்ற ஆரம்பிக்கும் "தில்" கொண்ட மாரிமுத்து, காமாட்சி பிரசன்னமாயிருந்த ஒரு விருந்தில் "ரீச்சர்ஸ்" சோடா கலக்காமல் குடிக்கும் நம்மோடு ஒரே மேசையில் அமர்ந்து ஒரு கிளாசை நிரப்பி அங்கும் இங்கும் அசைத்து அதை நாலு கிளாசாகக் காட்டி அந்த ஒரு கிளாசையும் நமக்கே கொடுத்து விட்டு விஸ்கி வாசனை மட்டும் கொஞ்சம் சேட்டில் தெளித்துக் கொண்டான். அடுத்த நாள் தனியாகச் சந்தித்த போது காமாட்சி நம் போன்ற "நல்ல" நண்பர்களிடமிருந்து தள்ளியிருக்கும் படி அன்போடு கேட்டுக் கொண்டாளாம்.இப்படி இன்னும் சில 'ரெஸ்ற்"கள் செய்த பிறகு மாரிமுத்து ஒரு நாள் ஒரு கிளாஸ் தண்ணியை (குடி தண்ணி தான்) மட மடவெண்டு குடித்து தொண்டையை ஈரமாக்கிக் கொண்டு மேட்டரைச் சொல்லி விட்டான் காமாட்சியிடம். வேறென்ன பச்சைக் கொடி தான்! they lived happily ever after! :)

உங்கட நண்பர் இவ்வளவு கஸ்டப்பட்டு இருக்கிறாரா?

என்னையா எல்லாமே பிரச்சனையா இருக்கு? கேள்வியும் அப்படித்தான் பதிலும் அப்படித்தான். இதெல்லாம் விளங்காததுதான் எனக்குப் பிரச்சனை போல கிடக்கு.

ஓம் இறைவன் அண்ணை, இது சின்னப்பெடியங்களிண்ட விசயம். வயசு போன ஆக்கள் விளங்கிக்கொள்ளூறது கொஞ்சம் கஸ்டமா இருக்கும்.

பாருங்கோ, பெடியிண்ட கேள்விய... ஒரு பெண் தன்ன லவ் பண்ணுறாவோ இல்லையோ எண்டு எப்பிடி கண்டிபிடிக்கிறதாம் எண்டு ஒருவர் கேட்க..

அதுக்கு இன்னொருத்தர் சொல்லுறார் உம்மா குடுத்து டெஸ்ட் பண்ணி பார்க்கலாமாம்! :lol:

---------------------------------------------------------------------------------------------------------------

என்னைப் பொறுத்தவரையில் சுருக்கமா இதுக்கு நான் கூறக்கூடிய பதில் என்ன எண்டால்...

ஒரு பெண் உங்கள காதலிக்கிறாவா இல்லாட்டி இல்லையா எண்டு இவ்வளவு தீவிரமா அறிவைப் பாவிச்சு நீங்கள் வாழ்வீர்களாக இருந்தால் பரிசோதனைகள் செய்வீர்களாக இருந்தால் நிச்சயம் அவள் காதலிப்பது, அல்லது காதலிக்காதது உங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை.

ஆனால், ஒரு பெண் உங்களை காதலிக்கிறா அல்லது இல்லையா எண்டு நீங்கள் சிந்திக்கும் நிலையில், உங்கள் அறிவை விட உங்கள் உணர்வுகளே உங்களை வழிநடத்துமாக இருந்தால், அந்தப்பெண், காதலித்தாலும், காதலிக்காவிட்டாலும் அந்தப்பெண் உங்கள் மீது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவாள்.

நீங்கள் அறிவுபூர்வமாக வாழ்பவரா? இல்லாட்ட்டி உணர்வுபூர்வமாக வாழ்பவரா? உங்கள் அறிவா அல்லது உணர்வா உங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றது?

பொதுவா எல்லோரும் அறிவுமூலமே தாம் வாழ்வதாக நினைப்பீனம், அல்லது விரும்புவீனம். ஆனா, உணர்வுகள் அறிவை எப்போதும் முந்திக்கொள்ளும் என்பதுதான் நடைமுறை உண்மை.

முடிவாக, நீங்கள் ஒரு பெண் உங்களை காதலிக்கிறாளா அல்லது இல்லையா ஏண்டெல்லாம் ஆராய்ச்சி செய்யவெளிக்கிடுறீங்கள் எண்டால், உண்மையில் நீங்கள் அந்தப்பெண்ணை காதலிக்கின்றீர்கள் என்று அர்த்தம். :lol::lol::D

காதலிக்கிறதுக்கு உவ்வளவு விசயம் கிடக்கே. அட தம்பி ஒருக்கால் இதுக்கு என்ன செய்யலாம் எண்டு சொல்லு பாப்பம். நான் ஒரு பெடடைய காதலிச்சனான். பக்கத்தில இருக்கிற பெடியிற்றதான் கடிதம் குடுத்தனான். அவன் படுபாவி பக்கத்தில இருந்த பெட்டையிற்ற கடிதத்த குடுத்திற்றான். ஒவ்வொரு தடவையும் உப்படியே நடந்திற்று. பிறகுதான் தெரிஞ்சுது பக்கத்தில இருந்த பெட்டைதான் என்னக் காதலிக்கிறாளெண்டு. உதுல ஆரத் தம்பி நான் காதலிக்கிறது.

இறைவன் அண்ணை,

நீங்கள் லவ் லெட்டர குடுக்கச்சொல்லி நண்பனிட்ட சொல்ல, அவன் மாறி வேறயாருட்டையோ குடுத்து, பிறகு காதலிக்கவேண்டிய பொண்ணுக்கு பதிலாக வேறு ஒரு பெண் உங்கள லவ் பண்ண துவங்கீட்டாவோ?

ஏன் நீங்கள் லவ் லெட்டர் எழுதேக்க அதில அவவிண்ட பெயர எழுத இல்லையே? பெயரில்லாமல்... வெறும் அன்பே, செல்லமே எண்டு துவங்கி ஏதும் எழுதிகுடுத்தீங்களே?

சரி உதுக்கு என்ன செய்து இருக்கலாம்?

இது உங்கட தனிப்பட்ட விருப்பம்..

நானாக இருந்தால், நானாக விரும்புபவளைதான் காதலித்து இருப்பன்.

சிலர் நீ விரும்புபவளை விட, உன்னை விரும்புபவளை காதலி எண்டு அறிவுரை சொல்லுவீனம்.

சரி, எப்பவோ நடந்ததுக்கு இனி என்ன செய்யப்போறீங்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.