Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினம் 2008: கவியரங்கம் - "காதலே வா!!"

Featured Replies

அனைவருக்கும் வணக்கம்,

காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு கவியரங்கம் செய்யலாம் என்று நினைத்து இந்தக்கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன்.

நீங்கள் எழுதிய உங்கள் புதிய, பழைய காதல் கவிதைகளை இங்கே இணையுங்கள். உடனடியாக கவிதை எழுதும் நிலமையில் இருப்பவர்கள் உங்கள் கவிதைகளையும் எழுதி இங்கு இணைத்துவிடுங்கள்..

நான் முன்பு சிலகாலம் முன்னம் எழுதிய கவிதை மாதிரி ஒன்றை இணைத்து கவியரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன். இதுவும் கவிதையோ எண்டு எல்லாம் கேட்கக்கூடாது. ஏதோ எங்களால முடியுமானதை தானே நாங்கள் செய்யலாம். :)

தொடந்து புதிதாக ஏதும் எழுதக்கூடியதாக இருந்தால் அவற்றையும் இங்கு இணைக்கின்றேன்.

உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!

3347.jpg

காதலே வா!!

காதலே வா..!!

நீ வராவிட்டால்

நான் சாவதை தவிர

வேறு வழிகளும்

என்னிடம் உள்ளன.. :huh:

உன்னைப் போல்

நானும் ஒரு அழகன் :P

ஆதலினால் அன்பே

என்னுடன் நீ

எப்போதும்

இணைந்து இரு!

முடியென்னடி முடியடி..

எனக்கு

மொட்டையே விழுந்தாலும்

நான் டோப் போட்டு

உன்முன்னால் இளமையுடன்

வருவேனடி.. ;)

வயிற்றுப் பசி போக்க

உனக்கு நான் பைவ் ஸ்டார்

ஹோட்டலில் பீசா

வாங்கித் தருவேனடி

லுமோசினில் உன்னை ஏற்றி

கனடா முழுவதும்

சுத்தியும் காட்டுவேனடி.. :blink:

மேலும்..

எனக்கு லொத்தரி அடித்தால்

ஜக் பொட் உனக்குத்தானடி.

இதைக்கொண்டு நான்

உனது பெயரில் ஒரு ஜெட்விமானம்

வாங்கித் தருவேனடி..

லைசன்ஸ் எப்படி

எடுப்பது என்று யோசிக்காதே...

நான் உன் அருலில் இருந்தால்

நீ எதையும் சாதிப்பாயடி.. :wub:

நான் இறந்துவிட்டால் நீ

தனித்துவிடுவாய் என்று

கவலைப் படாதே..

மாதம் இருநூறு

டொலர் காசு

உன்பெயரில் நான்போட்டு

ஒரு மில்லியன் இண்சுரன்ஸ் உனக்கு

நான் இறந்ததும் கிடைப்பதற்கு

வழி ஒன்று பண்ணுவேன்..

வேறு என்னடி உனக்கு வேணும்?

நீ பணம், பதவியை விரும்பவில்லை..

என் இதயத்தையே நேசிக்கின்றாய்

என்பது எனக்கு தெரியும்...

ஆனாலும்..

காதல் கிங் ஆகிய எனது

காதலி நீ காதலினால்

கஸ்டப்பட்டாய் என்று

மற்றவர் கூறக்கூடாதே!

இதனாலேயே இந்த ஏற்பாடுகள்.. :P

உனக்கு சமைக்கத்தெரியாது

என்று கவலைப்படாதே...

ஏனென்றால் எனக்கும்

சமைக்கத் தெரியாது..

காதல் செய்யும் அதேநேரம்

நாம் இருவரும் சமையல்பழகி

கனடா ஹைவே 401 இன் ஒருஓரமாக

இடியப்ப கடை ஒன்றை திறந்து

காதலில் ஒரு புதுவரலாறு எழுதுவோமடி

வாடி என் கைகளை கோர்த்தபடி.. :P

காதல நாளை செய்யலாம்

என்று தள்ளிப்போடாதே..

அதை இப்போதே இக்கணமே

என்னுடன் நீ செய்யடி..

ஏனென்றால் நாளை நான்

கனடாவின் பிரதமராகிவிட்டால்

பின்பு உனக்குத்தான் கஸ்டம்..

பத்திரிகையாளர்கள் நீ யார் நீ யார்

என்று கேள்விகள் பலகேட்டு

எனக்கும் உனக்கும் பெருஞ்

சிரமங்கள் தருவார்களடி.. :wub:

காதலே வா..!!

நீ வராவிட்டால்

நான் சாவதை தவிர

வேறு வழிகளும்

என்னிடம் உள்ளன.. :wub:

யாழ் காதல் கிங்

  • தொடங்கியவர்

sunforwebtf9.gif

எல்லாமே நீ தானடி!!

கவனக் குறைவாக நான்

எனது வாழ்க்கை காரை ஓட்டி

அக் சிடண்ட் பட்ட போது

உயிர்ப் பிச்சைதந்த Air Bag..

கயவர்கள் எனைப்பிடித்து

அதளபாதாளத்தில் தள்ளிவிடும்

அகால நேரங்களில்

என் சுவாசத்திற்கு உதவும்

ஒட்சிசன் சிலிண்டர்..

எனக்குள் இருக்கும்

வியாதிகளைக் கண்டுபிடித்து

சிகிச்சை தருகின்ற லேசர் கதிர்..

நான் சோர்வடையும் நிலையில்

instant ஆக

அன்பைப் பொழிகின்ற

ATM மிசீன்..

என் உடலை செழிப்புடன்

வைத்திருக்க ஊக்குவிக்கும்

Fitness கருவி..

டயல் அப் வேகத்தில்

உலகை பிரவுஸ் பண்ணிய என்னை

டிஜிட்டல் கேபிள் வேகத்திற்கு

மாற்றிவிட்ட Modem..

அடுத்து என்ன செய்யப் போறேன்

அடுத்து என்ன செய்யப் போறேன்

என்று வழி தெரியாது நான்

தனித்து நின்று தவித்தபோது..

ஸ்டெப் பை ஸ்டெப் ஆக

என்னை வழிநடத்திச் செல்லும்

ஓர் அழகிய Wizard Window..

என் வாழ்க்கையையும்

ஓர் சரித்திரமாக்கி

மற்றவர் முன்னால்

அழகிய முறையில்

பிரசண்டேசன் செய்யும்

Power point Slides..

உலகத்தில் உள்ள

கண்ட கண்ட குப்பைகள்

எனது மனதினை ஆக்கிரமித்து

சேதப்படுத்தாது இருக்க

என்னை கண்ணிமை போல்

காவல் செய்யும் Firewall..

நான் விரும்பும் நேரங்களில்

எனது இதயத்தில் இனிய

கீதங்களை ஒலிக்கின்ற

media player..

சமயத்திற்கு தகுந்தபடி

எல்லாருக்கும் விளங்கக்கூடிய

யுனிக்கோர்டில் என்

உள்ளத்தின் உணர்வுகளை

வெளிப்படுத்த உதவும் சுரதா Keyman..

விதம் விதமாக தினமும்

நல்ல பல நிகழ்ச்சிகளை

என்மனத்திரையில் காண்பிக்கும்

Satellite channels..

வாழ்வில் நான் செய்யும்

ஒவ்வொரு Transactionஇலும்

எனக்கு போனசாய் கிடைக்கின்ற

Air miles..

மொத்தத்தில்..

இந்த உலகத்தை

எனக்கு சுத்திக்காட்டும்

SAS விமானசேவை..

கண்ணே கண்மணியே காதலியே..

எல்லாமே எனக்கு நீ தானடி!!

எவர் சொன்னாலும்..

சொல்லாவிட்டாலும்..

நீ தானடி இவ்வுலகத்தின்

மொடேர்ன் காதலி!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞனின் காதல் கவிதைகள் நன்று :blink:

  • தொடங்கியவர்

நன்றி இன்னிசை.. புதுசா காதலர்தினத்துக்காக ஏதாவது கவிதை எழுதவேணும்.. ஆனா ஒண்டும் வருது இல்லை... உங்கட அண்ணாச்சி எழுதிய கவிதையையும் இணைக்கிறன். திரும்பவும் வாசிச்சு பாருங்கோ.

அழகு ரோஜாவே!!

avisse12le2.jpg

ரோஜாச்செடி போலவேதான்

உறவுகள் என்றெண்ணி

உறவுகளை விலத்தியிருந்த

என் வாழ்வில் நுழைந்தாய்

முட்களற்று வாசனை நிரம்பிய

அழகு ரோஜாவாக...

உனை கண்டநாள்முதல்

நான் ஆனந்தம்கொண்டு

தினமும் அலங்கரித்து

மனம் மிகமலர்ந்தேன்

அன்பே ரோஜா

உன்னை கையில்பற்றி

துடியிடை தொட

பலர் ஆசைபட

சிலர் சொந்தமாக்கி

முத்தமிட துடித்திட

நான் மட்டும் உனை

என் கண்களுக்குள்

பொத்தி வைத்து

அந்த முட்கள் நிரம்பிய

ரோஜாப்பூவாகவே பார்த்தேன்

ஏனெனில் நீயும் ஒருநாளில்

உதிர்ந்துவிடுவாயோ என்று

ஆனால்..

நீயோ உதிர்ந்திடாத ரோஜா

என் வாழ்வின் ஆயுள்ரோஜா

நிம்மதியை தந்திடும் ரோஜா

அன்பான அழகான ரோஜா

என்று நன்குணர்ந்தேன் நான்

போலியான உறவுகள் போலல்லாத

தோழியே என் அழகு ரோஜாவே

நீ என்றும் வேண்டும் என்னருகே

நீயின்றி நானில்லை ரோஜாவே..! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா அக்காவின் கவிதை

உறங்கிய காதல்

avisse14cf0.jpg

பார்த்ததும் உன்மேல்

பூத்தது காதல் என்னில்

பழகாமலே ருசித்தேன்

விலகியே நடந்தேன்

விண்ணில் இருந்தே

மண்ணில் இருக்குமுனை

தொட நினைத்து

நீட்டினேன் கைகளை

முடியாமல் தவித்தேன்

சிட்டாக மாறியுனை

கட்டியணைக்க எண்ணி

சட்டென வந்தேன் மண்மீது

அருகிருந்தே உனை நான்

அளந்தேன் பார்வைகளால்

இதமாக இருந்த போதிலும்

இமைகள் படபடத்தன பயத்தில்

பூவான நான் காதலை இயம்ப

புயலாக நீ மாறி எனை காயமாக்கி

அனலான பார்வையால் எனை

தகனம் செய்துவிடுவாய் என்று

சொல்ல நினைத்த காதலை

சொல்லாமலே புதைத்தேன்

இன்றுதான் தெரிந்துகொண்டேன்

அன்று நீயும் எனைபோலவே.....

ம்ம்ம்ம்ம்...!

உன்மீதான என் காதலும்

என்மீதான உன் காதலும்

உச்சரிக்கப்படாமல் உரசாமல்

உறங்கியது மனக்கல்லறைகளில்

ஜம்முவின் இன்னொரு கவிதை

image10hw4.jpg

இன்றைய விடியல் என் வாழ்வு

என்று நான் அறியவில்லை!

மனம் என்னை விட்டு போகுமென

கணப்பொழுதும் நினைக்கவில்லை!

கண்ணில் விழுந்த தூசு போல் என்

கண்மணியினுள் விழுந்தாள்!

விழுந்த நீ கண்ணிற்கு இதமானதால்

எடுக்க நான் விரும்பவில்லை!!

கண்மணிக்குள் விழுந்தவள் கண்மணி ஆவாளா

என் கரும்விழிகளை நீ கேட்கையில்

என் கண்மணிபட்ட பாட்டை

கண்ணே உன் விழிகள் அறியுமா!

இருவரின் கண்கள் பேசுகையில்

உதடுகள் பேச மறுத்தன

உதடுகள் பேச எத்தணித்த போது

கண்களிள் ஒரு ஏக்கம்!

கண்களின் ஏக்கம் காதலின் தாகம்!

கண்மணியின் மெளனம் காதலின் நெருக்கம்

விழிகளின் இருந்து வரும் கண்ணீர் - நம்

கண்கள் மோதியதால் கிடைத்த காதல்சின்னம்!

கண்கள் கூடியதால் இமை மூட மறுக்கின்றன

இமைகள் மூட எத்தணிக்க கண்மணி விடவில்லை!

கண்மணி மூட முயன்றால்

என் பொண்மணி விடுவதில்லை!

கண்களால் பரிமாறிய நம் காதல்விதை

இதயத்தில் விழுந்து விருட்சமானது!

கண்களால் காதல் மொழி கற்பித்தாள்

அம்மொழிகளை என் விழிகள் அறிந்தன!

அன்றிலிருந்து ,

என் பொண்மணியிடம்

என் கண்மணி தினமும்

கற்றது காதல் மொழி

வென்றது புனிதக் காதலில்!

ஆகா....!!!

என் விழிகள் அவளிடம் காதல் மொழி கற்க

ஓயாமல் துடித்த என் விழிகள் கூட

அவளை நேசிக்கிறது என அறிந்தேன்

வெட்கத்தில் முகம் சிவந்தேன்!

பல இரவுகள் மூடாத என் விழிகள்

இன்று அமைதியாக நிம்மதியாக

என் காதலியின் கண்களுக்குள்

உறங்குகிறது சந்தோசமாக!!

  • தொடங்கியவர்

இதயநாதம் கதையில தமிழ்தங்கை அக்காச்சி எழுதிய சில காதல் துளிகள்...

காதல்" சொல்லிய காதல்

" என் நெஞ்சிலே முள் தைத்தது

நீயா? காதல் கொள்வதே!

தினம் சாகத்தானா?!

என் பார்வையின் மொழி

தெரியாதா? இந்தப்பாவையின்

மெளனம் அறியாயா?!

" என் நெஞ்சிலே முள் தைத்தது

நீயா? காதல் கொள்வதே!

தினம் சாகத்தானா?!(2)

------------------------------------------------------------------

"இது என்ன போராட்டமா? நெஞ்சோடு

காதல் வெள்ளோட்டமா?! ஆசை

வைத்தால் துன்பம் தானா?

ஆண்டாண்டு காலமா? (2)

தள்ளித் தள்ளிப்போகவும்

நெருங்குகின்றாய் -இந்த

தகரத்தை தங்கம் என்றேன்

புலம்புகின்றாய்? (2)

உன் உண்மைக் காதல்

ஏற்கும் சக்தி எனக்கு இல்லை

அன்பனே உன் உயர்வுக்கு

முன் யாரும் இல்லை (2)

ஒன்றே "காதல்" என்று

வாழும் சிறந்தவனே என்

உள்ளத்தில் என்றும் நீ

உயர்ந்தவனே!(2)

-----------------------------------------------------

அன்பே! என் அன்பே!

உயிர் கொஞ்சும்

தென்றலே! (2)

"மனசில் காயம் கொடுத்தேன்

மன்னித்தாய்! உடல் காயம்

வலி கூட சகித்தாய்!(2)

குழந்தையாய் என்னை ஏந்தும்

அன்பனே நீயும் எனக்கொரு தாய்!

'காயமோ உன் கைகளில்

இரத்தமோ என் நெஞ்சினில்"

வார்த்தைகள் சொல்ல வந்தவள்!

மெளனத்தை விட்டுச் செல்கிறேன்!.

காதலால் தத்தளிக்கின்றேன்!.

அன்பே! என் அன்பே!

உயிர் கொஞ்சும்

தென்றலே!(2)

சிறுகதையா இது தொடர்கதையா

இந்த விடுகதைக்கு ஒரு

விடை வருமா?!அது

சுகம் தருமா?!

அன்பே! என் அன்பே!

உயிர் கொஞ்சும்

தென்றலே!(2)

--------------------------------------------------

போதும் என் அன்பே இந்த

ஏக்கம் போதும் போதும்! தூக்கம்

கெட்டு நானும் ஏங்கும்

நிலை போதும்!

எனக்கென வாழும் உனக்காக

நானும் வாழ்தல் வரமன்றோ!

என் உணர்வினை மதிக்கும்

உனக்காக! வாழ்தலே சுகமன்றோ!

போதும் என் அன்பே இந்த

ஏக்கம் போதும் போதும் (2)

-------------------------------------------------------

"உந்தன் பார்வை என்ன சொல்லுது

என் காதலா! காதலா?!.(2)

விரல்கள் படாமல் என்னை

உன் நெஞ்சிலே தாங்கினாய்!

உனக்கே பெண்ணே நான் என்று

உன் இதயத்தில் ஏந்தினாய்!.

"உந்தன் பார்வை என்ன சொல்லுது

என் காதலா! காதலா?!.(2)

'காதல் தந்து எந்தன் புன்னகை

யாசித்தாய்! எனக்கெனத்தானே

அன்பே நீ உன்னையே

சேமித்தாய்!.

உன் விழிகள் சொன்ன

விதிகள்! அறிந்தேன்

நியூட்டன் விதிகள்! விரிந்தன

சூரியக் கதிர்கள்! மலர்ந்தன

தாமரை இதழ்கள்!.

"உந்தன் பார்வை என்ன சொல்லுது

என் காதலா! காதலா?!.(2)

--------------------------------------------------------

கதாநாயகனே! என் கதாநாயகனே!

தொடாமலே தொட்டுச்சென்றாய்

இதயம்! கைகள் படாமலே!

உணரச்செய்தாய் காதல்! (2)

விழிகள் மூடிப்பார்க்கின்றேன்

நிறைந்தே நிற்கிறாய்!.இமைகள்

திறந்தும் பார்க்கின்றேன்!எங்கும்

தெரிகின்றாய்!

நீயே நீயே என்

காதல் தீவே!.என்னை

மறைத்துப்பார்த்தேன்

அங்கும் நீயே!. (2)

போ! போ! என்றேன்!

வந்து சேர்ந்தது காதல்

என்னிடம்!.வா! வா!

என்றேன் காதல்

ஏந்திச்செல்லுதே....உன்னிடம்

உன்னிடம்! உன்னிடம்!!.

நீயே நீயே என்

காதல் தீவே!.என்னை

மறைத்துப்பார்த்தேன்

அங்கும் நீயே!. (2)

ஜெனரல்...

கவிதை எல்லாம் அசத்தல் :D ..அட என்ட கவிதையும் இருக்கோ அதையும் கவிதை என்று இணைத்ததிற்கு ரொம்ப தாங்ஸ் :o ..தங்காவும் இணைத்திருக்கா நான் எழுதினதை கவிதை என்று இணைத்ததிற்கு தாங்ஸ் தங்கா :) ...என்ன குருவே புதுசா கவிதை எழுத வருதில்லையோ நேக்கும் இப்ப மூட் இல்லை புதுசா எழுத பிறகு மூட் வந்தா எழுதி தாரேன் கவிதை மாதிரி இருக்கோ இல்லையோ அது நேக்கு தெரியாது... :o

அப்ப நானும் ஒரு கவிதையை இணைக்கிறேன் அதாவது நான் எழுதின முதல் கவிதை.....அதை என்னால மறக்க ஏலாது :o அந்த கவிதையை யாருக்கு பரிசா கொடுப்போம் என்று பார்த்தா யாருக்கும் கொடுத்து ஏச்சு வாங்கிற நேரம் அதை தங்காவிற்கே கொடுத்தா பிரச்சினை இல்லை :wub: சோ அவாவிற்கே கொடுப்போம் குருவே நீங்க யாருக்கு கொடுக்க போறியள் நீங்களும் உங்க அக்கா,தங்கைச்சிக்கோ அல்லது வேற யாருக்குமோ....!! :lol:

அப்ப நான் வரட்டா!!

c314pz9.jpg

விழி மூட முடியவில்லை

விடியும் வரை கண்ணே!!

விடிவெள்ளி பார்பதிற்கில்லை பெண்ணே

விடியலுக்காய் உன்னை தேடி...........

வில்லங்கங்கள் பல உண்டு

வில்லன்ளும் பல உண்டு

விடயம் அறிந்த பெற்றோர் உண்டு

விட்டு வைப்பார்களா எம்மை...........

விதி விட்ட வழி என்று கண் கலங்காதே

வியாக்கியானங்கள் பேசாதே

விகடமாக என்னிடம் பேசிய நீயா-இன்று!!

விரக்தியாக பேசி என்னை கொல்கிறாய்!!

விரியத் துடிக்கு பூவே நீ

விருப்பத்தோடு காத்திரு

வீரத்தோடு நான் வருவேன்

விரைவில் உனைக் கைப்பிடிக்க.............

எல்லா கவிஞர்களுக்கு வணக்கமுங்கோ..........நாமளும் ஒன்றை எழுதி பார்தோம் இதில போடுறேன் பேபி பென்சில் பிடித்து எழுதின முதல் கவி ஒருத்தரும் ஏசி போடாதையுங்கோ........கவியா தெரியாட்டி வெறி சொறி............ :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லாத காதல்

Posted in கவிதைகள் on Feb 27th, 2006

என் மோனம் சொல்லாத

காதலையா

என் வார்த்தைகள்

சொல்லி விடப் போகின்றன?

வார்த்தைகள் மட்டுமல்ல

அன்று புதிதாய்க் கொய்த

வண்ண மலர்கள் கூடச்

சொல்ல உதவாது

என் காதலை.

கருகும்

நீரின்றித் துவளும்

நாட்பட உலரும்

ஒரு மலரைப் போன்றதல்ல

என் காதல்.

மலர்கள் சுமக்கும்

நுரை ததும்பியோடும்

நதிநீர்க் கடியில்

நிரந்தரமாய் ஆழக் கிடக்கும்

கறுவெண் மணல் போன்றது.

கங்குப்பொறியல்ல தோழி

அது ஒரு

கால நிகழ்ப்பு.

சுட்டதுங்க...http://blog.selvaraj.us/archives/category/poems

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் எல்லாம் காதல் கொள்ள வைக்கிறது. :mellow::D

அடடடா வெண்ணி எழுதிய "உறங்கிய காதல் வந்திருக்கு. நன்றிகள் இன்னிசை.

:lol:

காளையே

பழனியில் உனை

சந்தித்தேன்

பிடிச்சிருக்கு

ஆனாலும் விதியால்

இருவரும்

பிரிவோம் சந்திப்போம் :lol::lol:

Edited by வெண்ணிலா

பிரிவோம் சந்திப்போம்

இந்திரவோகத்தில் அழகப்பனை..

பீமா வராவிடில்...

காளையே

பழனியில் உனை

சந்தித்தேன்

பிடிச்சிருக்கு

ஆனாலும் விதியால்

இருவரும்

பிரிவோம் சந்திப்போம் :lol::lol:

நிலா அக்கா என்ன ஆச்சு ஒகேயா என்ன பட பெயரில எல்லாம் கவிதை சொல்லுறியள் நல்லா இருக்கு நிலா அக்கா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

யாழ் இணையத்து ரோமியோவின் ஒரு சூப்பரான கவிதை. எனக்கு மிகவும் பிடிச்சது...

வசந்தத்தைத் தருவாயா

காலக் களத்தினிலே

கடுங்காயம் பட்டவனாய்

உடலெல்லாம் புண்ணாகி

உயிர்போகக் கிடந்தவனை

பத்திரமாய் அணைத்தெடுத்துப்

பாச மருந்திட்டுக்

காதற் துணிகொண்டு

காயத்தைக் களைந்தவளே

அழகிழந்த சித்திரமாய்

அடிவளவில் கிடந்தவனை

கனிவுடனே கரமெடுத்துக்

கறையானைத் தட்டி

அன்பு நீர்கொண்டு

அழுக்கெல்லாம் களைந்தகற்றி

அழகாய் முன்னறையில்

அமர்ந்திருக்கச் செய்தவளே

வாழ்க்கைப் படகிழுக்க

வழியெதுவும் தெரியாமல்

துன்பப் பெருங்கடலில்

துடுப்பிழந்து நின்றவனை

மூர்ச்சித்து மெல்லமெல்ல

மூச்சிழந்து போனவனை

கைப்பற்றி மெல்லமெல்ல

கரையிழுத்து வந்தவளே

வெறுமைக் கோடையெனும்

வெந்தணலில் சிக்கியதால்

வெந்து தினங்கருகி

வெளிறிப் போகையிலே

நட்பென்னும் நீர்தேடி

நாள்தோறும் அலைகையிலே

நிழல்தழையும் மரத்தின்கீழ்

நீர்க்குடமாய் வந்தவளே

யாசித்துக் கேட்காமல்

யோசித்துச் செய்தவுந்தன்;

இதயத்தில் உட்கார

இடமொன்று தருவாயா

இல்லையென்னும் சொல்லறியா

இதமான பெண்ணேநீ

வசந்தத்தை என்வாழ்வில்

வருவித்துத் தருவாயா

மணிவாசகன்

சூப்பரான கவிதை. அந்தப்பெண் இந்தப்பெண்..

அந்தப் பெண் உங்கள் வாழ்வில் வசந்தத்தை தர எனது வாழ்த்துக்கள். கவிதை அருமை.

அந்தப்பெண் இந்தப்பெண்ணாய் இருப்பதில் சந்தோசம்... :icon_mrgreen:

காதலிக்கத் தெரிந்தவர்களே!

எனக்கொரு வழிசொல்லுங்கள்.

காதலர்தினம் வருகின்றது

என் காதலின் காதலியார்?

கண்டவுடன் வரும் காதலெல்லாம்

எனைக் கண்டுவிலகி நிற்பதென்ன?

காதலிக்கத் தெரியாது என்ற பழி

எனைக் காலமெல்லாம் வாட்டிடுமோ?

காதலிக்கிறேன், காதலிக்கிறேன்,

காதலை நான் காதலிக்கிறேன்.

காதல் எனைக் காதலிக்கிறதா?

கண்டு சொல்லுங்கள் காதலிடம்.

  • தொடங்கியவர்

இறைவன் அண்ணை, கவிதை நல்லா இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

அட எல்லாரும் பின்னீட்டிங்கள் :wub: இதைத்தான் சொல்வதோ காதலிக்கும் ஆக்கள் போல கவிஞர்கள் கிடையாது என்று. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு பொய்யே அழகு

காதலுக்கு அழகு கவிதையே

ஒன்றோடு ஒன்று

உரையாடவென்றால்

மொழியொன்று வேண்டும்

விழியாலே மட்டும்

மனம் பரிமாறி

கொண்டோம்

-இது தான் காதலா..............

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது

ஒரு காட்டாறு..!

கண நேரத்தில்

வாழ்க்கை எனும் காட்டையே

வெள்ளக் காடாக்கி

அழித்து நாசம் செய்திடும்...!

காதலில்...

பெண்கள் என்போர்

கானகத்தே காட்டாறாய் ஓடும்

கருமுகில் கண்டாடும்

மயில் போன்றோர்.!

ஆண்கள் என்போர்

சுயத்தைத் தொலைத்துவிட்டு

காகத்தின் கூட்டுக்காய்

கானகத்தே அலையும்

குயில் போன்றோர்..! :wub::wub:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

காதல் என்பது

ஒரு காட்டாறு..!

கண நேரத்தில்

வாழ்க்கை எனும் காட்டையே

வெள்ளக் காடாக்கி

அழித்து நாசம் செய்திடும்...!

காதலில்...

பெண்கள் என்போர்

கானகத்தே காட்டாறாய் ஓடும்

கருமுகில் கண்டாடும்

மயில் போன்றோர்.!

ஆண்கள் என்போர்

சுயத்தைத் தொலைத்துவிட்டு

காகத்தின் கூட்டுக்காய்

கானகத்தே அலையும்

குயில் போன்றோர்..! :wub::wub:

கவிதை நல்லா இருக்கிது நெடுக்காலபோவான். நீங்கள் சொல்வதும் எல்லாம் பொய் எண்டு சொல்வதற்கில்லை. ஆனால், ஒவ்வொருத்தருக்கும் அனுபவம் வித்தியாசமா இருக்கும். Collective Experience என்ன எண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால்தான் தெரியும். புள்ளிவிபரம் தேவை.

Edited by கலைஞன்

என்னை புரியமறுப்பதேனம்மா ?

கரவை பரணீ 16,01,2003

அழகிய தீயே

பற்றிக்கொண்டுவிட்டாய்

இனி ஏன் பதறுகின்றாய்

பாதி கருக்கி

மீதி விட்டுவிடாதே

முழவதையும் அழித்துவிடு

எச்சம் உண்டெனில் அது

என்றும் உன்னையே எண்ணும்

அமைதியாக அன்பினுள்

திளைத்த உள்ளத்தை

காதல் என்னும் கல்லெறிந்து

கலக்கிவிட்டாய் இனி

வெள்ளை நிலாவினை

விம்பமாக எப்படி பார்ப்பாய்

ஆசைகள் கற்பனைகளை

தேனீர்போல சிறுகசிறுக

சேர்த்தேனே சீரூட்டிப் பார்த்தேனே

அதை சின்னாபின்னமாக்கிவிட்டாயே

இனி எரிப்பதற்கு

என்னுள் என்ன இருக்கின்றது

கலக்குவதற்கு

எங்குள்ளது அமைதிஉள்ளம்

சிதைப்பதற்கு

எங்கு தேடுவாய்

சின்ன உள்ளங்களை

யோசித்துப்பார்

ஓரு நிமிடம் நீ

உனக்காகவல்லாமல்

எனக்காக சிந்தி

என்னை முழுதாய் உணர்வாய்

_________________

ஈழத்திற்காக எதையும் விட்டுக்கொடுப்போம்.

எதற்காகவும் ஈழத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் - புதியது

அன்பிற்கினியவளே ! 19,01,2003

கரவை பரணீ

என் இதயத்தின்

வேர்வரை வியாபித்திருப்பவளே

உன்னை விலைக்கு கேட்டால்

எப்படி கொடுப்பேன்

முதலாம் சந்திப்பிலேயே

எனக்குள் முழுதாய் நிறைந்தவள் நீ

இன்றுவரை

அசைவது நடப்பது

நிற்பது இருப்பது

எல்லாமே நீதான் நானில்லை

உன்னை விற்றுவிட்டு

என்னை நான் எங்கு தேடுவேன்

உன்னை என்னில் பிரித்துவிட்டால்

காற்றில்லாத பலூனாக வாழ

என்னால் முடியாதடி

சிறு நகம் வெட்டும்போதே

சிந்திப்பவன் உன்னை

விலக்கிக்கொள்ள விட்டுக்கொடுப்பேனா ?

சிந்திவிழும் வேர்வையையே

சேமித்து வைப்பவன்

உன்னை சிறையெடுக்க நினைத்தால்

சீறிவிட மாட்டேனா ?

சொல்லிவை

உன் பெற்றோரிடம்

நான் சோர்ந்துபோகவில்லை

சிந்திக்கின்றேன் - நீ

என்னுடன் வாழ எல்லாத் தகுதியும் உண்டு

எதிர்காலம் எம்மை வரவேற்க

இருகைகூப்புகின்றது

இருந்தும் நிதிவசதி வேண்டும்

நீடூழி நாம்வாழ

நிலையான சொத்துவேண்டும்

பொறுத்துக்கொள் சிலகாலம்

என்கரம் சேர்பவை எல்லாம்

சேர்ந்தபின் உன்னை நானே

சிறையெடுப்பேன். .

அன்புடன் உன்னவன்

_________________

ஈழத்திற்காக எதையும் விட்டுக்கொடுப்போம்.

எதற்காகவும் ஈழத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் - புதியது

நேற்றைய பொழுது 07-01-2003

என்னை கடற்கரையோரம் அரைமணிநேரம் அமைதியை தந்தது. அந்த அமைதியின் அரவணைப்பில் எனக்குள் வந்தமர்ந்த வார்த்தைகளை கோர்வையாக்கி இங்கே இட்டிருக்கின்றேன்.

இது கவிதைகளின் சிதறல் அல்ல

என் கனவுகளின் முகவரிகள்....

ஆசைஆசையாய்

விழிகண்டு விலகிச்செல்ல ஆசை

விரல்கொண்டே இதழ் ;தடவ ஆசை

இரவெல்லாம் இறுக்கமாக ஆசை

பகலெல்லாம் பார்த்தவண்ணம் இருக்க ஆசை

கூந்தலில் விரல் கோதி

கூதல்காய ஆசை

முகப்பருவில் முத்தமிட ஆசை

பாதம்தூக்கி மடியில் வைத்து

விரல்சொடுக்கெடுக்க ஆசை

இடுப்பு மடிப்பில் பூச்செருக ஆசை

இத்தனை ஆசைகளும் எனக்குள்ளே

கனவாகிப்போகும் வேதனையில்

ஆசைகளை நிராசையாக்கிவிட்டேன்

காதல் பைத்தியம்

கண்டவுடன் காதல்கொண்டேன்

பைத்தியம் என்றார்கள்

கண்ணைமூடிக் காதலித்தேன் அன்றும்

பைத்தியம் என்றார்கள்

கனவெல்லாம் உன்நினைவால்

உறக்கமெல்லாம் உன்பெயர் உளறினேன்

அங்கும் பைத்தியம் என்பார்கள்

கைநழுவி நீ போகும்போது எனக்காய்

அழாமல் உனக்காய் அழுதேன்

இங்கும் பைத்தியம் என்கின்றார்கள்

உண்மையில் பைத்தியத்தின்

வரைவிலக்கணம்தான் என்ன ?

உனக்காவது தெரியுமா ?

உனக்குள் இல்லையா

ஜன்னலோரம் சின்ன சிட்டுக்குருவிகள்

ஜோடியாய் குலாவுகின்றன

குசலம் விசாரிக்கின்றன

மழையின் பின்னிசையில்

வானத்தின் மங்கல் வெளிச்சத்தில்

கீச் கீச் என்று செல்லச் சினுங்கலாய்

உதட்டோடு உதடடித்து

உல்லாசமாய் ஊடல்கொள்கின்றன

ஜந்தறிவு ஜீவனிற்கே காதல்வந்தபோது

ஆறறிவு உனக்கு ஏனம்மா

ஏன்மீது இன்னும் இரக்கம் வரவில்லை

காதல் பிறக்கவில்லை

புரியவில்லை

இருபெரும் ராஜ்ஜியங்கள்

இருபெரும் துருவங்கள்

ஓன்றாய் ஓரேமேசையில்

கூடிக்கதைக்கின்றனர்

குறைநிறை ஆராய்கின்றனர்

போர்ப்பறை முழங்க

இக்கரையிலும் அக்கரையிலும்

எதிரெதிரே யுத்தம் புரிந்தவர்கள்

கைகுலுக்கி கலந்துவிட்டனர்

வருடங்களையெல்லாம் நிமிடங்களாக்கி

கொந்தளித்த தேசத்தினுள் என்னை

குளிரவைத்து அமைதியாக்கியவள் நீ

ஏன்தன் பாதைகளை நேராக்கி

பருவங்களையெல்லாம் சீராக்கி

பால்நிலா காட்டிய நீமட்டும் ஏன்

இன்று விலகி ஓடுகின்றாய்

விரட்டி அடிக்கின்றாய்

புயலுக்குப்பின் அமைதி அங்கே

அமைதிக்குப்பின் புயல் அல்ல அல்ல

பூகம்பம் இங்கே

புரியாத புதிராக இருக்கின்றாய் நீ

வீழ்ந்த விருட்சமாய்

காக்க காக்க கனகவேள் காக்க

நோக்க நோக்க நொடியினுள் நோக்க

என்று கந்தசஸ்டி பாடிய என்னை

குண்ணே மொழிவேண்டாம்

என்தன் விழிமட்டும் போதும்

என்று காதல்கீதம் பாடவைத்தவளே

கணபதி முருகள் என

காவடி எடுத்தாடிய என்னை

லைலா மஜ்னு

சாஜஹான் மும்தாஜ் என

காதல் தெய்வங்களின்

சரித்திரம் படிக்கவைத்தவளே

இந்தியா இலங்கை என

அரசியல்பேசிய என் இதழ்களை

டயானா மடோனா என

பித்துப்பிடித்து அலைய வைத்தவளே

இன்று நீமட்டும் அங்கே எப்படி

தினம் ஒரு ஆலயமாய்

தெய்வதரிசனம் வேண்டுகின்றாய்

என் விழுதுகளைமட்டும் நீ

வெட்டவில்லை என்னை

வேருடனேயே சாய்த்துவிட்டாய்

வீழ்ந்த விருட்சம் மீண்டும்

எழுந்த சரித்திரம் இல்லை

ஆசையலைகளாய்

கரைகண்டு மீளும் அலைபோல்

கனவுகண்டு வாழும் ஜீவன் நான்

விழகளின் நச்சரிப்பால் உன்னை

தினம் தினம் இரைமீட்கின்றேன்

விழிமடல் கவசத்தினுள் நீ

விலகமுடியாது இறுக்கமாகின்றாய்

அன்று நடந்தவைகள் எல்லாம்

இந்தநொடி நடந்ததுபோல்

உயிர்ப்பான நினைவுகள்

நிலாவொளி வெளிச்சத்தில் உன்

பாதம்தேடி அன்று நான் அலைந்தது

இன்றுபோல் இனிக்கின்றது

தினமும் திரைப்படம்போல்

காட்சிகள் நீட்சியடைகின்றது

நிற்பதற்கும் இருப்பதற்குமிடையில்

நீ எடுக்கும் நேரம் அப்பப்பா

நான் இவ்வுலகையே சுற்றிவந்துவிடுவேன்

உன் பார்வையில் உள்ளவேகம்

பாவனையில் இல்லையே

உன் பாதம்படும் பூமி புண்ணியம் செய்ததடி

தினமும் பூக்களால் வருடிய உணர்வை

இலவசமாய் பெறுகின்றதே

உன் சுவாசத்தினால் என்

சூழலே சுத்தம் பெறுகின்றது

சூடான என் தேகம்கூட

உன் பெயர்சொன்னதும் சுகமாகின்றது

கடைக்கண் பார்வைபட்டால் என்

கல்லறைகூட கனவுகாணும் அன்பே

அலையாய் வாழும் நான்

உன்னை ஆசையாய் அணைப்பது

எப்போது ?

கிடைக்காத ஓன்றிற்காய்

மனமே

இருக்கின்ற உறவுகளை

அசட்டை செய்துவிட்டு

இழந்துவிட்ட உறவைத்தேடி

எங்கே போகின்றாய் ?

கிடைத்துவந்த சுகங்களை

கீழேபோட்டுவிட்டு

கிடைக்காத ஓன்றிற்காய்

எங்Nகு நீ பறக்கின்றாய் ?

உருவமுள்ள எம்மையெல்லாம்

உதறித்தள்ளிவிட்டு அருவமான

அவ்உறவிற்கு ஏன் நீ

அங்கீகாரம் தேடுகின்றாய் ?

போ போ

காதல் என்ற மாயை

கண்களை மறைக்கும்போது

கடவுள்கூட உன்னிடம்

தோற்றுப்போவான் . .

கரவைபரணீ

07-01-2003

  • தொடங்கியவர்

பரணி அண்ணை கவிதைகள் நல்லா இருக்கிது. நான் உங்கட புரபைலுக்க போய் நீங்கள் முன்பு எழுதிய கவிதைகளை வெட்டி இங்கு ஒட்டுவதற்கு முயன்றேன். அதுக்கு முன் நீங்களே இணைச்சு விட்டீங்கள்.

கவிதைகள் காதல் கடிதங்கள் போல லவ்வோ லவ்வெண்டு லவ்லியா இருக்கிது. :lol:

நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.