Jump to content

நேசக்கர அமைப்பினூடு வன்னி மக்களின் கரங்களை பற்றுவோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

helpya6.gif

வன்னியில் சிறீலங்கா அரசின் கொடிய போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து அல்லல் படும் அப்பாவி தமிழ் மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்களும் கைவிடும் நிலை தோன்றி இருப்பதுடன்.. அந்த மக்களை பட்டினி போட்டு தங்கள் இராணுவ இலக்குகளை அடைய எதிரியும் அவனின் கூட்டு சர்வதேச சக்திகளும் முனைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் வன்னி மக்களின் கரங்களின் வலுவை அதிகரிக்கவும் அவர்களின் உயிர் வாழ்வுக்கான உதவிகளை அளிக்கவும் யாழ் கள உறவுகள் அனைவரும் நேசக்கர அமைப்பினூடு உடனடியாகப் பங்களிப்புக்களை வழங்க முன் வர வேண்டும்.

மேலும் வன்னியில் இருந்து உதவி கேட்டு வந்திருக்கும் குரல்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம்.

SEDOT இன் கோருக்கை.

http://www.sankathi.com/content/nikalvukal...mp;ucat=14&

செய்தி வீச்சு (10-08-08) புலிகளின் குரல்: http://www.pulikalinkural.com/

வடக்குக்கிழக்கு மனித உரிமைகள் அமைப்பு விடுத்திருக்கும் கோரிக்கை.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry436587

வன்னி நிலவரம் குறித்த ஐநாவின் அறிக்கை.

http://www.irinnews.org/report.aspx?ReportID=79721

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களுக்கு அரும்பணியாற்றும் பொருட்டு தமிழர் சமூகப் பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (SEDOT) புலம்பெயர்ந்து வாழும் மக்களுள்ளே இயங்கிவரும் ஆலய அறங்காவற்சபை உறுப்பினர்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அன்பான வேண்டுகையொன்றை விடுத்துள்ளது.

ஈழத்தமிழகத்திலிருந்து தம் வாழ்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் இடம்பெயர்ந்து இன்னலுற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மிக அவசரமாக இந்த வேண்டுகையை உங்கள் முன்னே சமர்ப்பிக்கின்றோம். கழியும் ஒவ்வொரு கணப்பொழுதும் எம்மக்களைச் சாவின் விளிம்புக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது.

நீங்கள் கைகொடுத்து அவர்களைக் கரையேற்றாதுவிடில் மாபெரும் மனித அவலத்துக்கு அவர்கள் உள்ளாக நேரும். தொடரும் எமது விடுதலைக்கான போராட்டத்தைத் தம் தோள்களிற் சுமந்து எம்தாயகம் அதிக விலைகொடுத்து நிற்கிறது. உயிரிழப்பு, உடமையிழப்பு, அவலமானவாழ்வு, நிர்க்கதியான இடப்பெயர்வின் நெருப்பு, பசி, பட்டினி, நோய்கள், மருத்துவ வசதியின்மை, ஆதரவற்ற நாளாந்தமென எம்மக்கள் படும் துயர் எடுத்துரைக்க முடியாத பெரும் அவலமாகிவிட்டது. சிங்கள - பௌத்த பேரினவாதிகள் தம் அரசயந்திரத்தை எம்மீது பாயவிட்டுக் குண்டுகளை வீசுகின்றனர். எறிகணைகளை எகிறுகின்றான்.

ஆக்கிரமிப்பை நோக்காகக்கொண்டு தன் படையினரை ஏவி எம்மக்களைக் கொன்று குவிக்கின்றான். இரவோடு இரவாக இடம்பெயரச் செய்கின்றான். எம்மக்கள் இப்போது படும் அவலமிருக்கிறதே இதனை எக்காலமும் எந்த அடக்குமுறை அரசுகளும் தன் மக்கள் மீது நடத்தியதில்லை. உலகம் இதற்கு முன்னறியாத வன்கொடுமைகளை எம் மக்கள் மீது பாயவிட்டு அவர்களைச் சொந்த ஊரிலிருந்தே அகதிகளாக வெளியேற்றுகிறது சிங்கள அரசு.

ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் போக்கிடமேதுமற்று மரநிழலிலும் மதவுகளுக்குக் கீழும் வீதியோரங்களிலும் படும் அவலமிருக்கிறதே அதையெப்படி உங்களுக்குப் புரியவைக்கமுடியும். இப்போது இங்கே கொடூர வெய்யிலெறிக்கிறது. அதனாற் கானலடிக்கிறது. அடுத்தமாதம் மழைபொழியப் போகிறது.

இன்னும் சில மாதங்களில் பனி பெய்யப்போகிறது. ஆனால் இடம்பெயர்ந்த எம்மக்கள் கோடைக்கோ அல்லது மாரிக்கோ தாக்குப்பிடிக்கக் கூடியதாக எந்தத் தரிப்பிடமுமற்றுத் தவிக்கின்றனர். சமைக்க அரிசியில்லை, சரிந்து படுக்கப் பாயில்லை, குளிக்கக் கிணறில்லை, குடியிருக்கக் கொட்டிலில்லை.. ஷஇல்லையே| நிறைந்திருக்கும் வாழ்வில் எம்மக்கள் இடருற்றுக்கிடக்கின்றனர். எங்கள் அவலமும் எம்மக்களின் அழுகையும் வெளியே தெரிந்துவிடுமென்றஞ்சி எதிரி எம்மை இராணுவ வேலிபோட்டு மூடியுள்ளான். எமது குரல்கள் உலகுக்குக் கேட்டுவிடுமோ என்றஞ்சிக் காற்றுக்குக்கூட அவன் கட்டளையிட்டுள்ளான்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பசித்த வயிற்றுக்குக் கூழ்கூடயின்றிக் குறண்டிப்போயுள்ளனர். அடர்காட்டுக்குள் தங்கள் இரவுகளைக் கழிக்கின்றனர். மருத்துவ வசதியின்றியே இங்கே மரணங்கள் மலிந்துவிட்டன. உங்கள் பிள்ளைகளையொத்த சிறுவர்கள் இங்கே கையேந்தி நிற்கின்றனர். உங்கள் தாயாரையொத்த தாயர் இங்கே தாங்குகொடியின்றித் தள்ளாடுகின்றனர். எவராவது வந்து எம்மை எடுக்கமாட்டார்களா என்று ஒவ்வொரு பொழுதுடனும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்புக்களை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்கள். எம் தேசமும் எம்மக்களும் இன்றுபடும் இந்த இன்னலிலிருந்து எங்களை நீங்களே கரையேற்ற வேண்டும்.

ஆண்டவனை அகத்திலும் அன்புடமையைப் புறத்திலுமாகக்கொண்டவர்கள் நீங்கள். பன்றிக்குப் பால்கொடுத்துத் தாயுமானவன் எங்கள் இறைவன். மூன்றுவயதுப் பாலகன் அழுதபோது பால்கொடுத்துப் பசிதீர்த்தவள் எங்கள் உண்ணாமுலையம்மன். சூரர்படையழிக்கச் சூலாயுதம் எடுத்தவன் எங்கள் முருகன். வரண்ட நிலத்திற் காவிரியைப் பாயச்செய்யக் கமண்டலத்தைக் கவிழ்த்தவன் எங்கள் விநாயகன். இத்தனை அற்புதங்களை ஆற்றித் தம் மக்களைக் காப்பாற்றிய கடவுளரைக் கும்பிட்டெழும் வாழ்வைக் கொண்டவர்கள் நாங்கள். உழவாரத்திருப்பணி செய்த நாவுக்கரசரை நாயன்மார் வரிசையில் ஏற்றுக்கொண்டவர் நாங்கள்.

பெருகிவந்த ஆற்றின் அணையுடைந்தபோது கூலியாளாகச் சென்று பிட்டுக்கு மண்சுமந்தவன் எங்கள் பெருமான். இத்தனை மனிதாபிமானமிக்க மதத்தையும் நீண்ட வரலாறைக்கொண்ட இனத்தையும் இருகண்களாகக்கொண்ட நீங்கள், உங்கள் தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மனிதப்பேரவலத்துக்கு என்ன செய்யப்போகின்றீர்கள்? மிகவும் அவசரமாக, மிகவும் அத்தியாவசியமாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உங்கள் உதவிக்கரத்தை எதிர்பார்த்திருக்கும் உறவுகளுக்கு சைவாலயங்களின் சார்பாகவும் உங்கள் தனிப்பட்ட உதவியாகவும் ஏதாவது செய்யுங்கள். செய்ய முடிவெடுத்தால் அதை அவசரமாகச் செய்யுங்கள்.

சங்கதி.கொம்

Link to comment
Share on other sites

நான் இரண்டாவது நேசக்கரத்திட்டத்தின் பங்களிப்பினை அனுப்பிய பொழுது தர்சினி இதே வேண்டுகோளை நேசக்கரத்திடம் விடுத்திருந்தார் அதனை யாழ் களத்திலும் இணைத்திருந்தேன் கு.சா மற்ரது நெடுக்கு தவிர யாருமே அந்தப் பக்கத்தில் கருத்துக்கூட எழுதவில்லை ஆனால் தாக்குதலில் இராணுவம் பலி ஆயுதம் கைப்பற்றினதெண்ட செய்திகளிற்கு பலபேர் பக்கம்பக்கமாய் வெட்டிப்புடுங்குவினம். அதாலை பேசாமல் விட்டிட்டன்.நெடுக்கு இதை விட்டிட்டு பேசாமல் ஏதாவது வெற்றிச் செய்தி வரும் அதிலை ஓடியந்து புளுகி எழுதிப்போட்டு வேறை வேலையளை பாகக்வும்.தோல்வி செய்தி வந்தால் வந்து திட்டிப்போட்டு போகவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள உறவுகளே தயவுசெய்து வாருங்கள்.உங்கள் உதவிகளை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி நிலவரம் தொடர்பாக ஐநா தரப்பால் விடுக்கப்பட்டுள்ள செய்தியின் ஆங்கில வடிவம். இந்த இணைப்பில் சொல்லப்பட்ட விடயங்களை உதாரணமாக்கி.. தயவுசெய்து புலம்பெயர் வாழ் உலகத் தமிழ் மக்கள் இது தொடர்பில் அறிவூட்டுக்கள்..!

பசியை ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களை தனது இராணுவக் கேடயமாகப் பயன்படுத்த சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதை உதயநாணயக்காரவின் கடைசி வரிகள் தெளிவுறுத்துகின்றன. அத்தோடு உதவி நிறுவனங்கள் என்பவர்களும் அரசுக்கு உடந்தையாக இருந்து மக்களை அரச கட்டுப்பாட்டுக்குள் வரச் சொல்வது எவ்வகையில் அவர்களுக்கு (அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லும் மக்களுக்கு) பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் என்பதை சொல்லவில்லை. தங்களின் வசதிக்காக மக்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் அழைக்கின்றனர். இவ்வாறு அழைத்துத்தான் கிழக்கில் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலும் பல நூறு தமிழ் மக்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து கொன்று புதை குழிகளில் புதைத்தனர். ஐநா ஏன் அவற்றை முன்னர் தடுக்கவில்லை. இப்போது கூட அவற்றை தடுக்க உத்தரவாதம் அளிக்குமா..???! :wub::(

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இவர்கள் சொல்லும் காரணங்கள்.. சிங்கள மற்றும் சர்வதே அரசுகள் சிலவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ இவை முயல்கின்றன என்ற கேள்வியையே எழுப்புகிறது :):D

ஐநா சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புடன் வழங்கலை சீராக்கலாம் தானே. அந்தளவு அதிகாரம் கூடவா அதனிடம் இல்லை..!

அதைவிடுத்து 4 இலட்சம் வன்னி மக்களையும் அரச கட்டுப்பாட்டுக்குள் போ என்பது ஐநாவே மக்களை அகதிகளாக விரட்டி அடிக்க முயல்கிறதா என்ற கேள்வியை எழுகிறது. இவ்வாறான செயற்பாடுகள்.. அரசுக்கு அதன் இராணுவ இலக்கை அடைய மட்டுமன்றி.. பிரச்சாரத்துக்கும் பலவழிகளில் உதவுவதாகவே அமையும். ஐநா மற்றும் சில சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உண்மையில் நடுநிலையோடா செயற்படுகின்றன என்ற கேள்வி இங்கிருந்து வலுவாக எழுகிறது..! :wub::D:(:o

ஆயர் தோமஸ் செளதரநாயகம் அவர்களே.. உங்களால் இலகுவாக மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அழைக்க முடிகிறது. ஆனால்.. அவர்களின் பாதுகாப்பை உங்களால் உறுதி செய்ய முடியுமா..??! அப்படி உறுதி செய்ய முடியும் எனில் உங்கள் கண் முன்னாலேயே செம்மணியில் எம் தமிழ் உறவுகளைக் கொன்று புதைக்க ஏன் அரச படைகளை அனுமதித்தீர்கள்..??! கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது ஆயரே..! :(

----------------------------

ஐ நா வெளியிட்ட அறிக்கையின் கீழ் அமைந்த மூலச் செய்தி..!

SRI LANKA: Access to newly displaced "critical"

COLOMBO, 8 August 2008 (IRIN) - Access to thousands of civilians who have fled fighting between government forces and the Tamil Tigers in the northwestern Mannar District between June and July was critical to prevent further hardship, according to UN officials.

About 12,000 familes have fled the fighting and moved farther north, closer to the town of Kilinochchi, under the control of the Tigers 300km north of Colombo, Gordon Weiss, UN spokesman in Sri Lanka, told IRIN.

"So far access to these IDPs has remained satisfactory ," he said. "But it is critical that we maintain these access levels to keep supplies moving. The situation in the areas is very fluid and UN supplies to these people are vital."

The World Food Programme (WFP) has already increased its caseload to supply the newly displaced and Weiss said there were at least 145,000 IDPs, including the newly displaced, in areas under the control of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in Sri Lanka's north, the Vanni.

"Over the past week, WFP transported 130MT of dhal and 10MT of vegetable oil from Vavuniya for its ongoing dry ration distribution in Kilinochchi and Mullaitivu districts [under Tiger control]," the Inter Agency Standing Committee (IASC) stated in a situation report released on 4 August.

"The general security situation in Kilinochchi and Mullaitivu Districts remains tense and unpredictable due to ongoing military operations and exchange of mortar/artillery shelling around the northern and southern Forward Defence Line areas, claymore mine attacks and air attacks deep inside the Vanni area," the report stated.

Tense environment

Most of the newly displaced fled the fighting in the northern areas of Mannar District to Kilinochchi in mid-July, according to IASC updates.

"These supplies [into Tiger-held areas] are vital if these civilians are to avoid further hardships," Thomas Saudranayagam, the Catholic Bishop of the northern town of Jaffna, 400km north of Colombo, told IRIN.

About 12,000 families are among the newly displaced near Kilinochchi

"Because of the security situation it is sometimes difficult for government agencies to maintain supplies and they need all the assistance [they can get]," he said. The government also released Rs2 million (US$20,000) to officials in the affected districts to meet the immediate needs of the newly displaced.

No access

Weiss said there were an unknown number of civilians still trapped in areas of fighting in the southwestern parts of Kilinochchi and Mullaitivu Districts and around 800 people had reached government-controlled areas by travelling south of the fighting. "We don't have access to these people still in the areas of the fighting and we don't have exact figures."

He told IRIN it was not clear what motivated the civilians to move farther north into Tiger-held areas and there was no indication whether they would begin to move south and cross into government-controlled areas where access to UN and other humanitarian agencies would be relatively easier.

Saudranayagam said that given the unpredictable security situation in areas under the Tigers, if the displaced could move back into their own villages, now under government control, their safety and supplies could be far better guaranteed.

"If we can provide a corridor for these people to move back into their villages or to areas south of the fighting it would make supplying [them with aid] easier. The rains will also come in the next two months and the situation could get bad."

If the civilians are to move into government areas, they would have to travel through the Omanthai crossover point that connects Tiger with government areas in the south, about 60km south of Kilinochchi where they remain now.

Sri Lankan military officials told IRIN the Omanthai crossover point was functioning smoothly. "They [the IDPs] can come to government areas if they want to through Omanthai," military spokesman Brig Udaya Nanayakkara told IRIN.

http://www.irinnews.org/report.aspx?ReportID=79721

Link to comment
Share on other sites

உங்களுடன் இந்த திட்டத்திற்கான என்னால முடிந்த பங்களிப்பு வழங்க தயார். விபரங்களை தனிமடலில் அனுப்புவீர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் இந்த திட்டத்திற்கான என்னால முடிந்த பங்களிப்பு வழங்க தயார். விபரங்களை தனிமடலில் அனுப்புவீர்களா

நன்றி நித்திலா... உங்கள் விருப்பை கீழ் உள்ள இணைப்பிலும் தெரிவித்து விடுங்கள். வழமை போலவே அனுப்பலாம். சம்பந்தப்பட்டவரின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் செய்ய முன்வருவார் என்பதால் தொடர்ந்து கீழுள்ள இணைப்பில் பரிமாறப்படும் கருத்துக்களை அவதானித்து வாருங்கள்.

சில கள உறவுகளுக்கு நேசக்கரக் குழுமத்துள் கருத்தெழுத முடிவதில்லை என்பதால்.. கீழ் தந்துள்ள இணைப்பில் கள உறவுகள் கருத்தெழுத வசதி செய்யப்பட்டுள்ளது. கள உறவுகள் அல்லாதோருக்காகவும் எல்லோருக்குமாகவும் இத்தலைப்பை இட்டுள்ளேன்.

(களத்தில் பதிவு செய்யாத ஆனால் பார்வையாளர்களாக இருந்து இதைப் பார்த்து பதிவு செய்து உதவ விரும்புவோருக்காக.. அதே தலைப்பை விசேடமாக இங்கு இட்டுள்ளேன்..!)

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry436718

Link to comment
Share on other sites

நான் இரண்டாவது நேசக்கரத்திட்டத்தின் பங்களிப்பினை அனுப்பிய பொழுது தர்சினி இதே வேண்டுகோளை நேசக்கரத்திடம் விடுத்திருந்தார் அதனை யாழ் களத்திலும் இணைத்திருந்தேன் கு.சா மற்ரது நெடுக்கு தவிர யாருமே அந்தப் பக்கத்தில் கருத்துக்கூட எழுதவில்லை ஆனால் தாக்குதலில் இராணுவம் பலி ஆயுதம் கைப்பற்றினதெண்ட செய்திகளிற்கு பலபேர் பக்கம்பக்கமாய் வெட்டிப்புடுங்குவினம். அதாலை பேசாமல் விட்டிட்டன்.நெடுக்கு இதை விட்டிட்டு பேசாமல் ஏதாவது வெற்றிச் செய்தி வரும் அதிலை ஓடியந்து புளுகி எழுதிப்போட்டு வேறை வேலையளை பாகக்வும்.தோல்வி செய்தி வந்தால் வந்து திட்டிப்போட்டு போகவும்.

சாத்திரி

நேசக்கரத் திட்டத்தினூடாக தமது பங்களிப்பைச் செய்யவில்லை என்பதற்காக யாழ் கள உறுப்பினர்கள் தாயகத்திலுள்ள உறவுகளுக்கு பொருளாதார ரீதியான பங்களிப்பைச் செய்யவில்லை என்று கருத வேண்டாம்.

ஏற்கனவே சில திட்டங்களினூடத் தமது பங்களிப்பைச் செய்து வருவதால் இந்த திட்டத்தில் பங்களிப்புச் செய்யாதவர்களும் இருக்கிறார்கள்.

நேசக்கரத்திட்டம் அறிமுகமாக முதலே ஆரம்பமான திட்டங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் பல வருடங்களாக தொடர்து மாதம் மாதம் ஐம்பது பவுண்களை தாயகத்திலுள்ள ஆதரவற்றவர்களுக்கு உதவும் அமைப்பினூடாக செலுத்தி வரும் உறவுகள் பலரை (யாழ் கள உறவுகள் உட்பட) நான் அறிவேன்.

எனவே முடிந்த வரை ஏதாவது ஒரு அமைப்பினூடாக உங்கள் உதவிகளைச் செய்யுங்கள்.

யாழ் கள உறவுகளுக்கு உடனடியாக உதவ ஒரு வாய்ப்பை அளிக்கும் முகமாக நாம் இதனை செய்ய கோரி இருக்கின்றோம்.

பிற வழிகளில் உதவி செய்பவர்கள்.. விரும்பினால் மேலதிகமாக யாழ் களத்தின் நேசக்கரத்தினூடும் உதவி செய்யலாம். எல்லா உதவியும் தாயக உறவுகளுக்காகத்தான் செய்யப்படுகிறது.

எனவே இதற்குள் பிரிவினைகள்.. பேதங்கள்.. "ஒருக்காச் செய்திட்டன் எனிச் செய்ய ஏலாது" என்ற மனிதாபிமானமற்ற கருத்துக்களை முன் வைப்பதை தயவுசெய்து தவிர்ப்பது நல்லம்.

நேசக்கரத்தில் இருக்கும் உறவுகளின் நோக்கம்.. யாழ் களத்தினூடும் யாழ் கள உறவுகளுக்கு உடனடியான ஒரு பங்களைப்பை செய்ய வாய்ப்பளிப்பதுதான். பல உறவுகளுக்கு உதவி செய்ய மனமிருந்தும்... உதவ வழி தெரிவதில்லை..! (இதே அனுபவத்தை நானும் சுனாமி காலத்தில் அனுபவித்திருக்கிறேன். லண்டனிலோ.. அதன் சுற்றயலிலோ அப்போது வாழாத காரணத்தால்.. எனது உதவியை சர்வதேசச் செஞ்சிலுவை மூலமே இறுதியாகச் செய்தேன். அது சிறீலங்கா அரசு ஊடுதான் அந்த உதவியை அனுப்பியது. அது உண்மையில் எமது மக்களை அடைந்ததா என்பது தெரியாது.)

எவரையும் உதவி செய்யுங்கள் என்று நாம் கட்டாயப்படுத்தவில்லை அல்லது பங்களிப்பை நேசக்கரத்துனூடு மட்டும் செய்யுங்கள் என்றும் சொல்லவில்லை.. உதவி போவதற்கு சாத்தியமான வழிகளில் ஒன்றாக இதனையும் அடையாளப்படுத்தியுள்ளோம். எனவே பங்களிப்புக்களை தாராளமாக நேசக்கரத்தினூடும்.. பிற வழிகளினூடும் செய்யலாம்.

இது மனிதாபிமான, அவசர உதவிக்கான வேண்டுகோள். எனவே உங்கள் உதவிகள் பல வழிமுறைகளினூடும் போய்ச் சேர்வதால்.. தாயக மக்களுக்குத்தான் நன்மை பிறக்குமே தவிர தீமை இல்லை.. என்பதைக் கருத்திற் கொண்டு செயற்படுங்கள்..! உறுப்பினர்கள் இடையே எழுந்த பழைய புதிய கசப்புணர்வுகளுக்கு மனிதாபிமானத்தின் முன் இடமளிக்காதீர்கள்..! :lol:

ஐயா நெடுக்காலை போவான்

இது பிரிவினைவாதமோ பயங்கர வாதமோ இல்லை.

நேசக்கரம் ஊடாகச் செய்வத மட்டும் தான் உதவி. மற்றவர்கள் ஒன்றுக்கும் பிரயோசனமில்லாதவர்கள் என்ற கருத்தைத் தவிருங்கள் என்று தான் சொன்னேன். அதைச் சாத்திரியும் புரிந்து கொண்டிருப்பார். ஏனென்றால் அவரோடு பழகியதில் அவரால் சிந்தித்து அடுத்தவரின் கருத்தைச் சீர்தூக்கிப் பார்த்து தெளிவு பெறும் அறிவு இருக்கிறது என்பது தெரியும். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடுபவர்களின் பதிலை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை

ஒருக்கால் செய்திட்டன் இனிச் செய்ய மாட்டன் என்று யாரும் அடம் பிடிக்கவில்லை. எமக்கு முடிந்ததை நாம் செய்து கொண்டிருப்போம். அதை உங்களுக்குச் சொல்லிச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுக்காலை போவான்

இது பிரிவினைவாதமோ பயங்கர வாதமோ இல்லை.

நேசக்கரம் ஊடாகச் செய்வத மட்டும் தான் உதவி. மற்றவர்கள் ஒன்றுக்கும் பிரயோசனமில்லாதவர்கள் என்ற கருத்தைத் தவிருங்கள் என்று தான் சொன்னேன்.

அதைச் சாத்திரியும் புரிந்து கொண்டிருப்பார். ஏனென்றால் அவரோடு பழகியதில் அவரால் சிந்தித்து அடுத்தவரின் கருத்தைச் சீர்தூக்கிப் பார்த்து தெளிவு பெறும் அறிவு இருக்கிறது என்பது தெரியும். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடுபவர்களின் பதிலை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை

ஒருக்கால் செய்திட்டன் இனிச் செய்ய மாட்டன் என்று யாரும் அடம் பிடிக்கவில்லை. எமக்கு முடிந்ததை நாம் செய்து கொண்டிருப்போம். அதை உங்களுக்குச் சொல்லிச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நேசக்கரத்தினூடு செய்வதுதான் பிரயோசனம்.. பிற உதவிகள் பிரயோசனம் அல்ல என்று நான் எங்கு குறிப்பிட்டுள்ளேன்.

தயவுசெய்து.. நீங்கள் கருத்துக்களத்தில் முரண்பட்டுக் கொண்ட விடயங்களின் அடிப்படையில் மனிதாபிமான உதவிக்கான நேரத்தையும் முயற்சிகளையும் வீணடிக்காதீர்கள்.

மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன்.. நேசக்கரத்தினூடுதான் பங்களிக்க வேண்டும் என்றில்லை. யாழ் களத்தில் நேசக்கரத்தின் மூலமும் பங்களிப்பை அனுப்ப ஒரு வழி இருக்கிறது என்பதை நாம் இங்கு இனங்காட்ட விரும்புகிறோம் என்ற தகவல் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.

நாங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் என்று நிற்கவில்லை. நான் செய்தால் செய்யுற இடத்தால தான் செய்வன்.. வேற செய்யமாட்டன் என்று சொல்லி கள உறவுகள் மத்தியில் இங்கு ஏதோ பிரச்சனை இருக்குது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதுதான்.. முற்றிலும் மனிதாபிமானமற்ற தன்மையை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. எனவே தயவுசெய்து. நேசக்கரத்தினூடு பங்களிக்க விருப்பமில்லை என்றால் அமைதியாக இருந்துவிடுங்கள். உங்களை நாம் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் உதவி செய்தீர்களா இல்லையா என்றும் கேட்கப்போவதில்லை. மனிதாபிமானம் இருந்தால் உதவி செய்வீர்கள் தானே.

நேசக்கரம் மனிதாபிமான பங்களிப்பை தாயகத்துக்குக் கொண்டு செல்ல உள்ள பல மார்க்கங்களில் ஒன்று. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். பிறவற்றையும் பயன்படுத்திக் கொள்வோம். எனவே இதற்குள் குழப்பகரமான கருத்துக்களை விதைக்க முற்படாதீர்கள். தயவுசெய்து.

பொறுப்பு வாய்ந்து மக்களுக்காக குரல் எழுப்புவதாக சொல்பவர்களே மக்களின் நலனை முன்னிறுத்தாது தன்னை பங்களிக்காதவன் என்று அடையாளம் கண்றிடுவார்களோ என்ற பயத்தில் கருத்துரைப்பது அழக்கல்ல. நீங்கள் பங்களிக்க வேண்டியது (எவ்வழியில் என்றாலும்) உங்கள் கடமை.

நேசக்கரத்தினூடு பங்களித்தால் சான்றிதழை நாம் தரப்போறதில்லை. மக்கள் தான் இன்னொரு வேளை சோறு உண்பார்கள். ஒரு துளி இரத்ததை மேலதிகமாகப் பெறுவார்கள். :lol::lol:

Link to comment
Share on other sites

மனிதாபிமான உதவியை வாதப் பொருளாக்க வேண்டிய தேவை இல்லை.

'ஆனால் ஒருக்கால் செய்து விட்டேன். இனிச் செய்ய மாட்டேன்' என்று என் கருத்துக்கு விளக்கம் கண்டுபிடித்தவர் நீங்கள் தான். அதற்கான பதில் விளக்கத்தை தர வேண்டிய தேவை எனக்கு இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான உதவியை வாதப் பொருளாக்க வேண்டிய தேவை இல்லை.

'ஆனால் ஒருக்கால் செய்து விட்டேன். இனிச் செய்ய மாட்டேன்' என்று என் கருத்துக்கு விளக்கம் கண்டுபிடித்தவர் நீங்கள் தான். அதற்கான பதில் விளக்கத்தை தர வேண்டிய தேவை எனக்கு இருந்தது.

சாத்திரி

நேசக்கரத் திட்டத்தினூடாக தமது பங்களிப்பைச் செய்யவில்லை என்பதற்காக யாழ் கள உறுப்பினர்கள் தாயகத்திலுள்ள உறவுகளுக்கு பொருளாதார ரீதியான பங்களிப்பைச் செய்யவில்லை என்று கருத வேண்டாம்.

ஏற்கனவே சில திட்டங்களினூடத் தமது பங்களிப்பைச் செய்து வருவதால் இந்த திட்டத்தில் பங்களிப்புச் செய்யாதவர்களும் இருக்கிறார்கள்.

நேசக்கரத்திட்டம் அறிமுகமாக முதலே ஆரம்பமான திட்டங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் பல வருடங்களாக தொடர்து மாதம் மாதம் ஐம்பது பவுண்களை தாயகத்திலுள்ள ஆதரவற்றவர்களுக்கு உதவும் அமைப்பினூடாக செலுத்தி வரும் உறவுகள் பலரை (யாழ் கள உறவுகள் உட்பட) நான் அறிவேன்.

எனவே முடிந்த வரை ஏதாவது ஒரு அமைப்பினூடாக உங்கள் உதவிகளைச் செய்யுங்கள்.

நானாகச் சொல்லவில்லை. நீங்கள் சாத்திரிக்கு எழுதிய உங்கள் பதிலில் சொல்லிக் கொண்டது அது. யார் எதனூடக செய்கிறார்கள் என்பதற்காக அல்ல இத்தலைப்பு. உதவுங்கள் என்பதுதான் தலைப்பு..! நீங்கள் இந்த மனிதாபிமான உதவி வேண்டிய சூழலுக்குள் உங்களின் முன்னைய முடிவை நியாயப்படுத்த கங்கணம் கட்டி நிற்பதன் அர்த்தம் தான் எனக்குப் புரியவில்லை..! தயவுசெய்து.. உதவுபவனை தடுக்காதீர்கள். அவன் எவ்வழியிலும் உதவட்டும். நேசக்கரம் ஒன்றும்.. சிங்கள அரசுக்கு உதவி செய்யவில்லையே..! நேசக்கரம் ஒன்றும் தீண்டத்தகாத கரமல்லவே..! :lol:

Link to comment
Share on other sites

அந்தப் பதிலில் எந்த இடத்தில் நான் ஒருக்கால் செய்திட்டன். இப்போது செய்வதில்லை. இனிச் செய்ய மாட்டேன். என்ற கருரத்தை எழுதியுள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பதிலில் எந்த இடத்தில் நான் ஒருக்கால் செய்திட்டன். இப்போது செய்வதில்லை. இனிச் செய்ய மாட்டேன். என்ற கருரத்தை எழுதியுள்ளேன்

பிறகு எதற்காக அந்தக் கருத்தை இங்கு பதிவு செய்தீர்கள். ஏலவே நீங்கள் நேசக்கரத்திட்டங்களில் பங்கெடுக்கப்பதைத் தவிர்த்துக் கொண்டவர் தானே. அதற்கும் நீங்கள் முன்வைத்த காரணங்கள் இதுவே. நான் பிறவழிகளில் உதவி செய்கிறேன்.. இதனூடு செய்ய வேண்டியதில்லை என்று.. அங்கே உங்கள் நிலைப்பாட்டைச் சொல்லிவிட்டீர்கள் தானே. பின்பு மீண்டும் ஏன்.. ஒரு அநாவசிய விளக்கம்..???! சாத்திரிக்கு உங்கள் நிலைப்பாடு தெளிவாகத் தெரியும் தானே..!

தயவுசெய்து குழப்பம் பண்ண என்றே கருத்தெழுத்தாதீர்கள். நாங்கள் தெளிவாக இருக்கிறோம் எப்படி உதவ வேண்டும் என்பதில். ஆனால் மற்றைய உறவுகளையும் இப்படியான கருத்துக்களால்.. உங்களின் சுயநிலைப்பாடுகளை முன்னிறுத்த வைக்கும் கருத்துக்களால் குழப்பி அடிக்காதீர்கள்.

சிறிய பங்களிப்பு என்றாலும் 4 திசைகளூடு ஒரே இடத்தைத்தான் போய் சேரப்போகிறது. எனவே அர்த்தமற்ற கருத்துக்களை பதிவு செய்வதைத் தவிருங்கள். இவ்விக்கட்டான வேளையில்.

நீங்கள் தொடர்ந்து இவ்வாறு பதிவு செய்வதால்.. வெறுப்புத்தான் அதிகரிக்கும்..! :lol::lol:

நேசக்கரம் அமைப்பினூடக உதவி செய்யாதவர்கள் போர்ச் செய்திகளை அதிலும் வெற்றிச் செய்திகளைப் பார்க்க மட்டுமே வருகிறார்கள் என்ற கருத்தைத் தரும் வகையில் சாத்திரி எழுதிய கருத்தக்கு அவர் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு நான் பதில் எழுதியிருந்தேன். அதற்கள் நீங்கள் தான் மூக்கை நுழைத்தீர்கள். உங்கள் விதண்டாவாதங்களுக்குப் பதிலளிப்பதை நான் பல காலமாகவே தவிர்த்து வந்திருக்கிறேன். இப்போது நீங்களெ பதிலெழுதி விட்டு குழப்பதே என்று ஆலோசனை கூறுவது வேடிக்கையாக இரக்கிறது.

நேசக்கரம் ஊடாக உதவி செய்வது அவரவர் விருப்பம். அதற்காக நேசக்கரம் ஊடாக உதவி செய்யாதவர்கள் கொச்சைப்படுத்தப்படும் போது அதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது.

இங்கு விதண்டாவதம் செய்வது நானல்ல. நானும் உங்களின் பல அர்த்தமற்ற கருத்துக்களை ஆக்கங்களைப் புறக்கணித்தே வருகிறேன். அதைச் சொல்வதற்காக அல்ல இத்தலைப்பை இட்டுக் கொண்டேன். அதை வெளியில் சொல்லித் திரிய வேண்டிய தேவையும் எனக்கில்லை.

சாத்திரி பொதுவாகச் சொன்னார். நீங்கள் தான் உங்கள் நிலைப்பாட்டை முன்னர் தெளிவாகச் சொல்லிவிட்டீர்களே. எத்தனை தடவைதான் தலைப்புகளை குழப்பி அடிக்க என்று.. அதே கருத்தைச் சொல்வீர்கள்.

நீங்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதால்.. என்ன பயன்..??! அதைக் கொஞ்சம் சொல்லுங்கள்.

சாத்திரிக்கு நீங்கள் பிற வழியில் உதவி செய்கிறீர்கள் என்பதை நிரூபிப்பதன் ஊடாக.. நான் மனிதாபிமான உதவி கேட்டு குரல் எழுகிறது.. உதவுங்கள் என்று போட்ட இத்தலைப்புக்கு என்ன பயன் கிட்டும்.

தயவுசெய்து உங்களை விளம்பரப்படுத்த முன்னிற்காதீர்கள். மனிதாபிமானத்தை முன்னிறுத்துங்கள்.

சேன்ஸ்பரில 100 பவுன் கொடுத்து உதவினால் ரெஸ்கோவில் 100 பவுன் கொடுக்கக் கூடாது என்பதில் என்ன மனிதாபிமானம் இருக்கிறது. அப்படி ஒரு மனிதாபிமானம் உள்ளவன் சொல்லிக் கொண்டு திரியமாட்டான். இல்ல சேன்ஸ்பரில 100 பவுன் கொடுத்திட்டன் எனவே என்னை உதவி செய்யாதவன் என்று சொல்ல்லாதீர்கள் என்று மனிதாபிமானத்தை முன்னிறுத்திறவன் சொல்லித் திரியமாட்டான். அவன் அடுத்ததா தனக்கு எங்க உதவி செய்ய வாய்ப்பிருக்கு என்றுதான் தேடுவான்..! (நாங்களும் தான் பல வெண்புறா.. மற்றும் துர்க்கை அம்மன்.. புனர்வாழ்வுக் கழகம் என்று உதவி செய்யுறம். சொல்லிட்டா திரியுறம்..! தேவையில்லாததுகளை தவிர்த்து.. பயனுள்ளதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.)

Link to comment
Share on other sites

சேன்ஸ்பரில 100 பவுன் கொடுத்து உதவினால் ரெஸ்கோவில் 100 பவுன் கொடுக்கக் கூடாது என்பதில் என்ன மனிதாபிமானம் இருக்கிறது.

அதைத் தான் நானும் சொல்கிறேன்

.உதவி செய்பவர்கள் சேன்ஸ்பரியிலும் செ;யவார்கள். ரெஸ்கோவிலும் செய்வார்கள்.

அதற்காக சேன்ஸ்பரியில் செய்பவர்கள் தான் கொடை வள்ளல்கள். மற்றவர்கள் சும்மா வெறும் செய்திகளை அதிலும் வெற்றிச் செய்திகளை வாசிக்க மட்டும் வருகிறார்கள் என்பது தவறான கருத்து.

முடிவில்லாமல் உங்களுடன் விவாதம் செய்வதில் எந்தப் பிரயோசனமுமில்லை என்பதால் இனிப் பதிலெழுதப் போவதில்லை.

எந்தவிதத்திலும் உதவி போய்சசேர்ந்தால் சரி அது நேசக்கரமாக இருந்தாலும் சரி அல்லது வேறுவழியாக இருந்தாலும் சரி .துன்பப்படும் மக்களுக்கு வழிகிடைக்கவேண்டும் . அதை விடுத்து இங்கு நான் பெரிது நீ பெரிது என்று வாதிடுவதில் பயனில்லை.

என்னுடைய ஒரு அனுபவம் நான் ஒரு நண்பரை(ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்) கேட்டேன் வன்னியிலுள்ள ஒரு குழந்தையை தத்தெடுக்க உதவி புரியும்படி . அவர் கூறினார் பிரச்சனையில்லை ஆனால் அந்த விண்ணப்ப படிவம் தனது பெயரில்தான் பதியப்பட்டிருக்கும் என்று இப்படி தம்பட்டம் அடிப்பவர்கள்தான் அதிகம். நானும் என்னால் முடிந்தத செய்வதற்கு ஒரு அமைப்பினூடாக முயல்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைத் தான் நானும் சொல்கிறேன்

.உதவி செய்பவர்கள் சேன்ஸ்பரியிலும் செ;யவார்கள். ரெஸ்கோவிலும் செய்வார்கள்.

அதற்காக சேன்ஸ்பரியில் செய்பவர்கள் தான் கொடை வள்ளல்கள். மற்றவர்கள் சும்மா வெறும் செய்திகளை அதிலும் வெற்றிச் செய்திகளை வாசிக்க மட்டும் வருகிறார்கள் என்பது தவறான கருத்து.

முடிவில்லாமல் உங்களுடன் விவாதம் செய்வதில் எந்தப் பிரயோசனமுமில்லை என்பதால் இனிப் பதிலெழுதப் போவதில்லை.

நீங்கள் சொல்வதற்கும் நாம் சொல்வதற்கும் இடையில் தெளிவான வேறுபாடு இருக்கிறது.

நீங்கள் சொல்கிறீர்கள்.. ரெஸ்கோ ஊடு உதவுறவனையும்.. சேன்ஸ்பரி ஊடு உதவிறவனைப் போல கருதுங்கள் என்று.

நாம் கோருவது அதையல்ல. எவ்வழியில் எல்லாம் சாத்தியமோ அவ்வழியில் எல்லாம் உதவுங்கள். எவ்வழியில் உதவுவதால் உங்களின் அந்தஸ்து கெளரவம் விளம்பரம் காக்கப்படும் என்பதையல்ல.

மனிதாபிமானம்.. உதவும் வழிகள் பார்த்தோ.. எத்தனை தடவை உதவிறன் என்று பார்த்தோ எழுவதல்ல. மக்களின் தேவைகளை எவ்வளவு வீதம் பூர்த்தி செய்கிறோம் என்பதைப் பார்த்தே அமைகிறது. எனவே சாத்தியமான வழிகளில் எல்லாம் உதவுங்கள். அது ரெஸ்கோவோ.. சேன்ஸ்பரியோ.. அல்லது இரண்டினூடோ என்பதல்ல பிரச்சனை. உதவுவது மக்களைப் போய் சேர சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவுங்கள் என்பதே அது.

இப்போ எனது கருத்துத் தொனிக்கும் தெளிவான வேறுபாட்டை உணர்ந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். நீங்கள் சொல்ல விளைவது போல.. உங்களின் உதவி செய்யும் வழிமுறையை வைத்து இன்னொரு வழிமுறையைப் புறக்கணிப்பதை ஏற்றுக் கொள்வதாக எனது கருத்து அமையவில்லை..! :lol::lol:

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுகள் மன்னிக்கவும் பழைய அனுபவங்கள் என்னை அப்படி எழுத வைத்துவிட்டது. நானும் என்னாலான பங்களிப்பை வழங்குகிறேன்.யாராவது பொறுப்பெடுத்து செய்யவும் பணத்தினை யாருக்கு எந்த அமைப்பிடம் கொடுக்கப் போறீங்கள் எண்டதையும் தெளிவாய சொன்னால் அது போய் சேர வேண்டி இடத்திறகு அனுப்பி வைக்க ஒழுங்குகள் செய்துதாறன்.மணியும் நெடுக்கும் நிப்பாட்டிப்போட்டு அடுத்த அலுவலைப்பாருங்கோ. நன்றி. : :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், தொடர்ந்தும் என்னால் முடிந்த சிறு பங்களிப்புத்தொடரும்.

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?s=&am...p;p=352111QUOTE (வாசகன் @ Sep 26 2007, 10:43 PM)

வணக்கம் எல்லோருக்கும் நல்ல திட்டம். நானும் முடிந்ததை செய்கிறேன். சிலகாலம் நாட்டில் இல்லாததும் பெரும்பாலும் செய்திபகுதிகளிற்கு மட்டும் வந்து விட்டு போவதால் இந்த பகுதியை நான் கவனிக்கவில்லை. உதவி செய்வதற்கு நான் சாத்திரியையா அல்லது டன் னையா தொடர்பு கொள்ள வேண்டும்? முடிந்தால் தயவுசெய்து தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.

QUOTE (Danklas @ Sep 27 2007, 12:46 AM)

நன்றி வாசகன்.

நோர்வேயில் இருந்து பலர் தொடர்பு கொண்டார்கள். ஆகவே உங்களுக்கென ஒரு பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று நினைக்கின்றோம் (ஜேர்மனி, இங்கிலாந்த், அவுஸ்ரேலியா மாதிரி). எதற்கும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள் உங்களுக்கு விபரம் தனிமடல் ஊடகா அனுப்பிவைக்கிறேன்.

QUOTE (வாசகன் @ Sep 27 2007, 01:10 AM)

தொடர்பு கொள்ளுங்கள் டன். நிச்சயமாக முடிந்ததை செய்கிறேன்.

QUOTE (வாசகன் @ Oct 10 2007, 08:56 PM)

இதுவரை டன் னோ அல்லது அவர் சார்பில் எவருமே என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை. ஏன்????

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=352142

வாசகன் முதலில் தொடர்பு கொள்ளாதமைப்புக்காக மன்னிக்கவும்.

வெளிப்படையாக தொடர்பு கொள்ளாத போதும் தனிமடல் ஊடாக பலரை தொடர்பு கொள்கிறோம். நோர்வேயிலிருந்து 3வர் (உங்களுடன் சேர்த்து) பங்களிக்கிறம் எண்டு சொன்னார்கள், ஆனால் பின் இருவரின் சவுண்டை காணவில்லை. ஒரு நாட்டிலிருந்து என்னொரு நாட்டுக்கு பணம் அனுப்புவது என்பது கடினமான விடயம் அல்ல. ஆனால் அப்படி அனுப்பும் பொழுது பங்களிப்பு செய்பவருக்கு மேலதிக செலவும் ஏற்பட வாய்புக்கள் நிச்சயமாக இருக்கும். அதனால்த்தான் ஜேர்மனி, இங்கிலாந்து உறவுகள் செய்தமாதிரி ஒருவரை நியமித்து அவரிடம் நோர்வே உறவுகள் (இங்கே பலர் இருக்கிறார்கள், ஆனால் படி படியாக தொடர்பு கொண்டு வருகிறேன்)பங்களிப்பு செய்தபின் அந்த பொறுப்பை ஏற்பவர் ஒரே தடவையில் அந்த பணத்தை வெஸ்ரன் யூனியனால் அனுப்புவது சுலபம். ஒவ்வொருக்காலும் ஒவ்வொரு உறுப்பினர்களும் பணத்தை வெஸ்ரன் யூனியன் மூலமோ, அல்லது வங்கி மூலமோ வேறு நாடு ஒண்டுக்கு அனுப்புவது என்பது கடினமான ஒன்று. அதானால்த்தான் ஒரு பொறுப்பை ஒப்படைக்க முயன்றோம், ஆனால் முடியவில்லை. அதனால்த்தான் தாமதம்.

பறவாயில்லை உங்கள் ஆதரவுக்கு நன்றி. ஒரு முடிவெடுத்ததும் அறியத்தருவோம். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதில் பங்குகொள்ள ஆர்வமாகவுள்ளேன். மேலதிக விபரங்களை அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.