Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம்

[செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2009, 06:22 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.

மானிடம் பேணும் சட்டநெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்று முழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாயபூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.

வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போர் ஆயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக் குண்டுகளினாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்களும், அனைத்துலக அரச நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ். தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியல் சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாக உள்ளது.

சிறிலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்த நிகழ்வாக உள்ளது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணாமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமை வெளியும் அழிந்து போய் உள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். திரு யோசப் பரராசசிங்கம் (2005), திரு நடராசா ரவிராஜ் (2006), திரு க.ந.சிவநேசன் (2008) ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர்கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எண்ணுக்கணக்கில் குறுகச் செய்துள்ளது.

இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கி உள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தரு வகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை.

இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமே இல்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்பொழுதிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிக முக்கிய பணியெனக் கருதுகின்றார்கள்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும் சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க் குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ius cogens அடிப்படை சட்டநெறித்தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.

இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

1. 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003 இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய

- தமிழர் ஓர் தேசிய இனம்

- வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்

- ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை

போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது.

2. 2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

4. உலகு அனைத்தும் பரவி வாழும் ஈழத் தமிழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

5. ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

6. அரசுகளுடனும், பல் அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

7. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.

8. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக அனைத்துலக அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற அனைத்துலக நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத் தமிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திரவதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற்கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று லட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.

தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அமைப்புக்களுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச்செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவிய ரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உப குழுக்களை கொண்டு இயங்கும்.

இச் செயற்பாட்டுக் குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.

இச் செயற்பாட்டுக் குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா)

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)

பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா)

பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்)

கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா)

மருத்துவ கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா)

கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா)

சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)

திரு செல்வா சிவராசா (அவுஸ்திரேலியா)

திரு போல் வில்லியம்ஸ் (நெதர்லாந்து)

பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)

ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

இக்குழு 2009 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் நாள் வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக்குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும்.

இத்திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம்.

மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

எல்லாம் சரியுங்கோ. மெத்த சந்தோசம். ஆனால் உது புலிப்பயங்கரவாதிகளின் இன்னொரு பயங்கரவாத இயக்கம் எண்டு உந்த வெளிநாடுகள் தடைகள் போடாமல் இருந்தால் போதும். ஏற்கனவே கால்கட்டு போட்டு இருக்கிது. அடிடா பிடியடா எண்டு துவங்கி கையுக்கும் கட்டுபோட்டால் பிறகு அசையக்கூட ஏலாமல் போயிடும்.

நாளைக்கு எல்.டீ.டீ டெரரிஸ்ட் தமிழீழ தனியரசை வெளிநாட்டில அமைச்சு இருக்கிறாங்கள் எண்டு பிளேடுகள் போட்டாங்கள் எண்டால் பிறகு அதுவும் அழிவிலதான் போய் முடியும்.

Edited by கலைஞன்

சிந்திக்க வேண்டிய விடயம்தான்...

இவ்வாறு நடப்பதற்குத் தான் அதிகமான சந்தர்ப்பங்கள் உள்ளது. எமது முன்னெடுப்புகள் அரசு என்ற புள்ளியில் தொடங்குவதைக்காட்டிலும் மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்குமம் ஒரு அமைப்பாக வலுவாக இயங்கி அதனூடாகவே அரசு என்ற புள்ளியை நோக்கி நகரவேண்டும். இதுவே இந்த புதிய போட்டிநிலை உலக நடைமுறைக்கு ஊடாக எமது போராட்டத்தை தொடரச்செய்வதற்கான வழியாக அமையும்.

எமது தனியரசுக் கனவு கலையாமல் அப்படியே இருக்கின்றது. அது குற்றமும் இல்லை. ஆனால் அரசு என்பது மக்களால் இயக்கப்படும் ஒன்று. இதை அறிந்தே மக்களை முடமாக்கியுள்ளது சிங்கள அரசு. தாயகத்தில் மக்கள் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே ஒரு அரசை இயக்கும் சிந்தனைக்கு மக்கள் நகர்வார்கள். நாம் மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவதற்கு இப்போது குரல்கொடுப்பது இன்றி அமையாதது. எமது மக்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் பாதுகாப்பாக இருப்பதற்கு போராட வேண்டும். அப்போது தான் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புவார்கள். சிங்களத்தின் சிறைக்குள் இருக்கும் வரை மக்கள் இயல்பாக வாழப்போவதில்லை. எமது கனவும் சாத்தியப்படப்போவதில்லை. எனவே படிப்படியாக நகர்ந்தே அரசு என்ற புள்ளியை எட்ட வேண்டிய அவசியம் இருக்கின்றது. இல்லாத பட்சத்தில் தாயக மக்களே இந்த புறநிலை அரசை எதிர்க்கும் அளவுக்கு நிலைமை சிங்களத்தால் மாற்றப்படும்.

இலங்கைத் தீவில் புலிகள் அரசு என்ற அடிப்படையில் அரசு மிகப்பெரும் பயங்கரவாதம் புரிகின்றது. இது உலகத்திற்கு நன்கு தெரிந்தும் போட்டி நிலைச் சதிகளில் இந்த பிரச்சனை முடங்கிப்போகின்றது. அரசின் பயங்கரவாதச் செயலை துணிந்து பேசுவது ஒன்றே தொடர்ச்சியாகும். ஒன்றுபட்டு பேசுவது ஒன்றே தொடர்ச்சியாகும். பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு விட்டதாக மிகப்பெரும் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப்போராடாமல் அரசு ஒன்றை அமைப்பதில் குறியாய் இருந்தால் புலிகளின் நடவடிக்கை இன்னமும் உள்ளது என்று அரச பயங்கரவாதம் தொடரவும் நியாயப்படுத்தப்படவும் வழிவகுக்கும்.

சிறுபான்மை இனம் என்ற சொல்லையே அகராதியில் இருந்து நீக்குவதாக இலங்கை அரசு கூறுகின்றது. எல்லோரும் இலங்கையர் என்ற அடிப்படையில் தமிழர்களின் இடங்களில் சிங்களவர்களும் சிங்களவர்களின் இடங்களில் தமிழர்களுமாக கலப்படம் செய்யப்படுகின்றது. தமிழர்களுக்கான தனித்துவமே அனைத்துக் கூறுகளிலும் சிதைக்கப்படுகின்றது. பிரிவினைக்கோ தனியாக சுய அதிகாரத்துடன் வாழும் தன்மையோ அடிப்படையில் நிர்மூலமாக்கப்படுகின்றது. இந்த நிலையில் புறநிலை அரசு என்பது நாளை தாயகத்தில் ஒரு அரசு அமைப்பதற்கான சநந்தர்பத்தை இழந்து விட அதிக சந்தர்ப்பங்கள் உள்ளது. தூரநோக்கில் நிறைய சிக்கல்கள் இருக்கவே செய்கின்றது. தற்போது நாம் ஒரு அமைப்பாக ஒன்றாகி எமது மக்களின் பாதுகாப்பு உலக நிறுவனங்களின் தலையீடு கண்காணிப்பு அதனூடாக மக்கள் இயல்பாக வாழ வழி செய்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரியுங்கோ. மெத்த சந்தோசம். ஆனால் உது புலிப்பயங்கரவாதிகளின் இன்னொரு பயங்கரவாத இயக்கம் எண்டு உந்த வெளிநாடுகள் தடைகள் போடாமல் இருந்தால் போதும். ஏற்கனவே கால்கட்டு போட்டு இருக்கிது. அடிடா பிடியடா எண்டு துவங்கி கையுக்கும் கட்டுபோட்டால் பிறகு அசையக்கூட ஏலாமல் போயிடும்.

நாளைக்கு எல்.டீ.டீ டெரரிஸ்ட் தமிழீழ தனியரசை வெளிநாட்டில அமைச்சு இருக்கிறாங்கள் எண்டு பிளேடுகள் போட்டாங்கள் எண்டால் பிறகு அதுவும் அழிவிலதான் போய் முடியும்.

நீங்கள் சொல்வது மிகவும் புத்திசாலிதனமானது..... இது எத்தனை பேருக்கு விழங்குதோ இல்லையோ எனக்கு நன்றாக விளங்குது. இதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். இதற்காள செலவழிக்கும் ஒவ்வொரு வினாடியும் வீணானது. பயங்கரவாத வழியில் இனியும் தொடராது..... கொழும்பில் இருக்கும் மக்கள் நாயகள் ஆனந்த சங்கரி ஜனநாயக தேவர் போன்றோர் பின்மக்கள் செல்ல வேண்டும் அவர்கள்தான் தமிழ்மக்களை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மாண்மிகு மகிந்த ரஜபக்சேயிடம் அழைத்து சென்று மக்களின் துயரத்தை அவருக்கு சொல்ல கூடிய துணிச்சலுடனும் பலத்துடனும் இருக்கிறார்கள். இதுவே மக்களுக்கு நல்ல விடிவை தரும். .ம்முயற்சியானது ஈழதமிழ் மக்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் நில்லாது புலம்பெயர் தமிழர் என்ற புடவையையும் உரித்து தமிழக மக்கiளுக்கே வாழவழிக்கும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் உறவுகளே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தில் எந்த நாடும் விடுதலைப்புலிகளை அங்கிகரிக்காத நிலையில் தனி தமிழ் ஈழம் என்ற கருத்தை ஏற்காத நிலையில் திரு. பத்மநாபனின் நாடு கடந்த தமிழ் ஈழம் என்ற கோரிக்கை எவ்வாறு சாத்தியமாகும்...?

இது போராட்டத்தை திசை திருப்பும் வேலையோ என்ற சந்தேகம் எழுகிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் நல்லா கண்டுகிடிச்சிட்டீங்கள் கலைஞன் இதை அப்பிடியே உருத்திரகுமார் அண்ணாக்கு மெயில் பண்ணுங்க.....

பாவம் அவர் உதுகளை பற்றிய விவரங்களை தெரியாமல் முடிவெடுத்திட்டார் போல....

முடிஞ்சா மகிந்தவின்ர அல்லது மன்மோகன்சிங்கின்ர அனுமதியை பெற்று இந்த அரசாங்கத்தை அமைச்சிருக்கலாம். மனி உரிமைக்காய் குரல் கொடுக்குற கீயு_மன்றைட் வாச்சுக்கோ... அதர தன்னார்வ தொண்டர்களாக இருக்கின்ற மனித உரிமை அமைப்புக்குக்களுக்கோ மரியாதை இல்லாத போது அதைப்பற்றி எங்க பேசுறது.... :)

இது கண்டுபிடிப்பு அல்ல... பாமரனும் அறிந்த உண்மை... பத்மநாபன் தாயகத்தோடு தொடர்பில் இருக்கிறாரா...?

கூட்டமைப்பு அது இது என்று பேசுகிறார் தவிர தாயகத்தில் இயக்கத்தை அரசியல் ரீதியாக மீழ் கட்டமைக்கும் முயற்சி ஏதும் உள்ளதா...?

தாயகத்தில் ஒரு காத்திரமான அரசியல் இயக்கம் போராட்டம் ஏதுமில்லாமல் இது போன்ற திட்டங்கள் பலன் தருமா என்ற சந்தேகம் உள்ளது.

இது போராட்டத்தை திசை திருப்பும் வேலையோ என்ற சந்தேகம் எழுகிறது...

போராட்டத்தை ஏற்கனவே மகிந்த கோஷ்டி திசை திருப்பிட்டுங்கோ,பத்மநாதன் திருப்ப வேண்டிய அவசியமில்லை,ஜனநாயகமுறையில் சட்டபூர்வமான முறையில் தானே செய்யினம்

நண்பர்களே...

இந்த புதியவன் சொல்வதையும் கேளுங்கள்.....

தமிழீழ அரசு ஏற்படுத்துவதுதான் தமிழீழ மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையை உலகம் அங்கீகரிக்க ஒரே வழி!!

1. இலங்கை அரசியலில் இருந்து கொண்டு மக்களின் உரிமையைப் பற்றி பேச முடியாது.ஏனென்றால்,,, அந்த அரசியல் அமைப்பில் இணைந்து கொள்வதின் மூலம் மக்களின் உரிமைகள் அவ்வரசிடம் அடகு வைக்கப்படுகின்றன...எனவே அரசியல் முறை என்று சொல்லி கொண்டு இலங்கை அரசுடன் இணைவது.வேலில போற ஓணான எடுத்து சட்டைக்குள்ளேயே விடுவது மாதிரி.............அதாவது .Complete Non-sense..

2. எனவேதான் உரிமையை வென்றெடுக்க ஆயுத போர் வழியில் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது... அது ஒரு அரசை நடைமுறைப் படுத்தியது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவ்வரசு இலங்கை அரசால் கொடுமையான முறையில் மக்களைக் கேடயமாகப் பயன்ப்டுத்தி, அழித்து, ஒடுக்கப்பட்டுள்ளது.

3. எனவே,. தமிழீழ அரசை உலகம் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால்., அரசியல் தலைமை வேண்டும் ...இது தமிழீழ அரசை ஏற்படுத்துவதன் மூல்ம் உலகத்தால் அங்கீகரிக்கப்படும்.. ஏனெனில் இது மக்களால் தான் அமைக்கப்பட போகின்றன..

மக்கள் தேர்தல் மூலம்தான் தலைமைகளை தேர்ந்தெடுக்கப்போகின்றனர்..இ

து நடைமுறை சிக்கல்கள் களையப்பட்டு சாத்தியப்ப்டும் போது அது தானாகவே உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படும்.. :)

மக்களுக்கு தேவை தங்களுக்குள் ஒற்றுமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியானால் உங்களிடம் இருக்கும் திட்டத்தை முன் வையுங்கள், துடுப்பற்று கிடக்கும் போது டக்கிளஸ் ஆனந்த சங்கரி என்று அவனவன் தலைமை ஏற்று உருப்படாமல் தமிழினம் போகனும் என்று நீங்கள் நினைக்கிறீங்க போல.!

தாயகத்தில இப்ப இருக்கிற கூ+ழல்ல த.வி.புகளை அரசியல் மயப்படுத்த முடியுமா? அல்லது வேறு பெயர்களில் அமைப்பை உருவாக்கலாமா?

இது யாழ் இணையம் இல்லை கண்டியளோ ஆளாலுக்கு நினைச்ச உடக பெயரை மாற்றி திட்டங்களை கொள்கைகளை மாற்ற.. உயிர்கொடுத்து நாம் வளர்த்த போராட்டம்.

உலகத்தில் எந்த நாடும் விடுதலைப்புலிகளை அங்கிகரிக்காத நிலையில் தனி தமிழ் ஈழம் என்ற கருத்தை ஏற்காத நிலையில் திரு. பத்மநாபனின் நாடு கடந்த தமிழ் ஈழம் என்ற கோரிக்கை எவ்வாறு சாத்தியமாகும்...?

இது போராட்டத்தை திசை திருப்பும் வேலையோ என்ற சந்தேகம் எழுகிறது...

தனி ஈழத்தை தமிழர்கள்தான் கேட்டார்கள்.... புலிகள் அதுக்காக போராடினார்கள்.

இப்போது இதை புலிகள்தான் செய்வதாக உங்களுக்கு யார் சொன்னது?

அனைத்துத் தரப்பினரையும் சேர்த்த ஒரு கட்டமைப்புத்தான்.

உங்களின் கேள்விகள் பல உங்களின் கருத்துக்களில் உள்ள குழப்பங்களை உவாக்குது.

புலிகளை அங்கிகரிக்காத நிலையில் இது சரிவருமா என்று ஒரு இடத்தில் கேட்கிறீகள்?

தாயகத்தில் இயக்கத்தை அரசியல் ரீதியாக மீழ் கட்டமைக்கும் முயற்சி ஏதும் உள்ளதா...?

தாயகத்தில் ஒரு காத்திரமான அரசியல் இயக்கம் போராட்டம் ஏதுமில்லாமல் இது போன்ற திட்டங்கள் பலன் தருமா என்ற சந்தேகம் உள்ளது.

இன்னொரு இடத்தில் தாயகத்தில் நீங்களே சொன்ன அந்த அங்கிகரிக்காத புலிகளை மீளக்கட்டமைக்கவில்லையா என்றும் கேட்கிறீகள்?

தாயகத்தில் உள்ள த.தே.கூ ஒரு பலமான கட்டமைப்பாக உங்களுக்குப்படவில்லையோ?

அப்படிப்பட்டால் அவர்களையும் செர்த்துத்தான் இந்தக்கட்டமைப்பு

அப்படி இல்லை என்று வாதிட்டால் நீங்களே சொல்லுங்கள் உங்காளாலேயே கூட்டமைப்பை

ஒரு கட்டமைப்பாக கருத முடியாத போது சிங்களவன் என்னவென்று கருதுவான்?

உலகம் என்ன கருதும்?

உங்களின் குழப்பம் இத்தோடு நிட்கட்டும்.

எனது தனிப்பட்ட ஒரு கருத்து

ஏனோ தெரியாது புதுசாவாற உறுப்பினர்கள்

புறநிலை தமிழர் கட்டமைப்பை எதிர்த்தே கருத்து கூருவதேன்?

கருத்தை கூறவா? அல்லது கருத்தை குலைக்கவா?

அல்லது இதுக்கென்றே கிழம்பிட்டாங்களா?

ஆயுத ரீதியாக போரடின புலிகள் மாற்று வடிவம் கொண்டு அரசியல் ரீதியாக ப்போராடுவதை யாரும் எதிர்க்கமாட்டார்கள்.

இது சனநாயக வழியில் வைக்கும் கோரிக்கை. அப்படி நாங்கள் தமிழீழ அரசு எனும் போது சிங்களவன் சுயாட்சிக்கு கூடவாவது இறங்கி வரமாட்டானா?

இவ்வளவு ரண காயத்தை ஏற்படுத்தியவன் உடன் எப்படி அரசியல் பாதுகாப்பு இல்லாமல் சேர்ந்து வாழ்வது.

சுதந்திரம் ,உரிமை கேட்பது தவறில்லை. சரி சில வேளை இன்றைய முதலாளித்துவ உலகின் போக்கிற்கு எமது பாதை பிழையாக பட்டிருக்கலாம்.

சரி மாற்று வழியில் எமது பிரச்சனையை தீர்வுக்காக கொண்டு செல்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோசித்து செய்தால் நல்லது ஆனால் இப்படியொரு கட்டமைப்பு அவசியம் தேவையான ஒண்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியானால் உங்களிடம் இருக்கும் திட்டத்தை முன் வையுங்கள், துடுப்பற்று கிடக்கும் போது டக்கிளஸ் ஆனந்த சங்கரி என்று அவனவன் தலைமை ஏற்று உருப்படாமல் தமிழினம் போகனும் என்று நீங்கள் நினைக்கிறீங்க போல.!

தாயகத்தில இப்ப இருக்கிற கூ+ழல்ல த.வி.புகளை அரசியல் மயப்படுத்த முடியுமா? அல்லது வேறு பெயர்களில் அமைப்பை உருவாக்கலாமா?

இது யாழ் இணையம் இல்லை கண்டியளோ ஆளாலுக்கு நினைச்ச உடக பெயரை மாற்றி திட்டங்களை கொள்கைகளை மாற்ற.. உயிர்கொடுத்து நாம் வளர்த்த போராட்டம்.

நீங்க ஊர்ப்புதினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன... படிசீங்களா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகத்தில் உள்ள த.தே.கூ ஒரு பலமான கட்டமைப்பாக உங்களுக்குப்படவில்லையோ?

அப்படிப்பட்டால் அவர்களையும் செர்த்துத்தான் இந்தக்கட்டமைப்பு

அப்படி இல்லை என்று வாதிட்டால் நீங்களே சொல்லுங்கள் உங்காளாலேயே கூட்டமைப்பை

ஒரு கட்டமைப்பாக கருத முடியாத போது சிங்களவன் என்னவென்று கருதுவான்?

உலகம் என்ன கருதும்?

உங்களின் குழப்பம் இத்தோடு நிட்கட்டும்.

எனது தனிப்பட்ட ஒரு கருத்து

ஏனோ தெரியாது புதுசாவாற உறுப்பினர்கள்

புறநிலை தமிழர் கட்டமைப்பை எதிர்த்தே கருத்து கூருவதேன்?

கருத்தை கூறவா? அல்லது கருத்தை குலைக்கவா?

அல்லது இதுக்கென்றே கிழம்பிட்டாங்களா?

நீங்கள் என்னோட நாம் செய்ய வேண்டியது என்ன... என்றதை படித்தீர்களா...

தமிழன் எப்பவுமே வைக்கலப்பட்டடை நாய்தான்

தானும் நக்க மாட்டான் நக்க வாறவனையும் விடமாட்டான். உருத்திர குமார் போன்ற கலாநிதிகளை விட நீங்கள் படிச்சவங்கள் என்ட நினைப்பு இங்கை கனபேருக்கு

அப்படியானால் உங்களிடம் இருக்கும் திட்டத்தை முன் வையுங்கள், துடுப்பற்று கிடக்கும் போது டக்கிளஸ் ஆனந்த சங்கரி என்று அவனவன் தலைமை ஏற்று உருப்படாமல் தமிழினம் போகனும் என்று நீங்கள் நினைக்கிறீங்க போல.!

தாயகத்தில இப்ப இருக்கிற கூ+ழல்ல த.வி.புகளை அரசியல் மயப்படுத்த முடியுமா? அல்லது வேறு பெயர்களில் அமைப்பை உருவாக்கலாமா?

இது யாழ் இணையம் இல்லை கண்டியளோ ஆளாலுக்கு நினைச்ச உடக பெயரை மாற்றி திட்டங்களை கொள்கைகளை மாற்ற.. உயிர்கொடுத்து நாம் வளர்த்த போராட்டம்.

நண்பரே..,,

என்னிடமா கேட்கிறீர்கள்??? :)

தமிழீழ மக்கள், தமிழீழத்துக்கென்று ஒரு “அரசியல் சாசனம்” என்பதனை சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பேரில் உருவாக்கப்பட வேண்டும்.. தமிழீழ தேசியக் கொடி உருவாக்கப்பட வேண்டும் (ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது)…. நாம் அனைத்துலத்தின் முன்னால் நம் சுதந்திர நாட்டைப் பிரகடனப்படுத்த வேண்டும்…. தமிழீழ அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும்……… இதற்குத்தான் இந்த தமிழீழ அரசை நிறுவ வேண்டும்... அதற்குத்தான் அடித்தளம் இடப்பட்டுள்ளது

முதலில் தமிழீழ மக்களுக்கென்று ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர்… அவர்கள் தேர்வு செய்யும் நபர் நாடாளுமன்ற தலைவராக ஆக்கப்படுவார்………..

குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) , தலைமை அமைச்சர் (பிரதமர்), மற்றும் கேபினட அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர்…

இவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் அவர்களுட்ய அங்கீகாரம் தானாகவே கிடைத்து விடும்....

000000voting.jpg

நீங்கள் என்னோட நாம் செய்ய வேண்டியது என்ன... என்றதை படித்தீர்களா...

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தொடங்கியபின்பு தான் நானும் பிறந்தேன், அதனால் அதன் வரலாற்றையும் அறிந்து கொண்டேன்.

அனைவருடனும் எங்கள் தலைவரும் இருப்பதையும் கண்டேன் தலைவரின் பாதை தனியெனக்கண்டேன். அவரின் பின்

என்னினம் நடப்பதைக்கண்டேன். அவ்வளியின் புனிதமும் கண்டேன். ஆசைகளற்ற எம்முறவுகள் களப்பலியானதைம் கண்டேன்.

அதனால் வெருண்டெளுந்து ஆனதையும் கண்டேன். எம்மினம் என்முன்னே மடிவதையும் கண்டேன்..

என்னும் சொல்ல உண்டே என்பேன்...

அதனால் எவன் சொன்ன என்ன செய்யவேண்டும் என்பதை நான் கண்டென்னபயன்?

எத்தனை சொன்னாலும் அத்தனையும் சொத்தையென பொய்யுரைகும் பாவிகள் சொல்லி

நாமறியவேண்டுமா?

நீங்கள் படித்து எழுதினீர்களா ... படிக்காமலே எழுதினீங்களா...

ஆக்கப்பூர்வமான விவாதம்தான் தேவை...

தனிப்பட்ட ஒருவருடன் விவாதிப்பது எனது நோக்கமில்லை அதனால் எந்த பிரயோசனமும் இல்லை.

உங்களின் கருத்துக்கள் முரன் பாடானது.... முரன்பாட்டை மறைப்பதுக்கு நீங்கள் கொடுத்த உங்களின் பதிவும்

உங்கள் கருத்தின் மேல் உள்ள நம்பிக்கைமீது மேலும் கேள்வியையே எழுப்புகின்றது.

இதற்குமேல் உங்களுக்கு பதில் எழுதுவதால் எனக்கோ உங்களுக்கோ எந்த நன்மையும் இல்லை.

நீங்கள் சொல்ல வருவதை ஆதாரத்துடன் சொல்லுங்கள் அதை பரிசீலிப்பதற்கு எங்கள் கள உறவுகள்

என்றுமே தயாராகவே உள்ளார்கள். முக்கியமான நேரத்தில் முரபாடுகள் தவிக்கப்படவேண்டும் அதிலும் ஒரே மனிதரின்

கருத்துக்கள் முரன்படுவது தவிர்க்கப்படவேண்டும்.

பிகுறிப்பு: நீக்கள் சொல்லவந்தது மீண்டுமொரு ஆயுதப்போராட்டமா?

நீங்கள் அதுக்கு தயாரா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=60390

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மக்கள், தமிழீழத்துக்கென்று ஒரு “அரசியல் சாசனம்” என்பதனை சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பேரில் உருவாக்கப்பட வேண்டும்.. தமிழீழ தேசியக் கொடி உருவாக்கப்பட வேண்டும் (ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது)…. நாம் அனைத்துலத்தின் முன்னால் நம் சுதந்திர நாட்டைப் பிரகடனப்படுத்த வேண்டும்…. தமிழீழ அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும்……… இதற்குத்தான் இந்த தமிழீழ அரசை நிறுவ வேண்டும்... அதற்குத்தான் அடித்தளம் இடப்பட்டுள்ளது

முதலில் தமிழீழ மக்களுக்கென்று ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர்… அவர்கள் தேர்வு செய்யும் நபர் நாடாளுமன்ற தலைவராக ஆக்கப்படுவார்………..

குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) , தலைமை அமைச்சர் (பிரதமர்), மற்றும் கேபினட அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர்…

இவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் அவர்களுட்ய அங்கீகாரம் தானாகவே கிடைத்து விடும்....

000000voting.jpg

நன்றி நண்பரே. இதை தான் பெலரூஸ்(belarus) என்ற நாடு கனடாவில் (ரொரண்டோவில்) தளமாக கொண்டு இயங்கியதாக பெலரூஸ் நண்பர் ஒருவர் சொன்னார்.

http://en.wikipedia.org/wiki/History_of_Belarus

Edited by nunavilan

எல்லாம் சரியுங்கோ. மெத்த சந்தோசம். ஆனால் உது புலிப்பயங்கரவாதிகளின் இன்னொரு பயங்கரவாத இயக்கம் எண்டு உந்த வெளிநாடுகள் தடைகள் போடாமல் இருந்தால் போதும். ஏற்கனவே கால்கட்டு போட்டு இருக்கிது. அடிடா பிடியடா எண்டு துவங்கி கையுக்கும் கட்டுபோட்டால் பிறகு அசையக்கூட ஏலாமல் போயிடும்.

நாளைக்கு எல்.டீ.டீ டெரரிஸ்ட் தமிழீழ தனியரசை வெளிநாட்டில அமைச்சு இருக்கிறாங்கள் எண்டு பிளேடுகள் போட்டாங்கள் எண்டால் பிறகு அதுவும் அழிவிலதான் போய் முடியும்.

The remnants of the Tamil Tigers have vowed to form a government in exile to push their separatist cause, which Sri Lanka on Wednesday called an "hallucination" and another illegal attempt to violate its unitary status.

தொடர்ந்து வாசிக்க -

http://news.yahoo.com/s/nm/20090617/wl_nm/us_srilanka_war_1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.