Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த சிறீதரன் எம்.பி? பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை மிரட்டல்! மாவீரர் குடும்பம் ஒன்றின் சோகக்கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி மூலம் TAMIL CNN

புதன், 29 டிசம்பர் 2010 14:38

sritharan_mp.jpg

மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல்…, வெந்த புண்ணில் வேல் பாயச்சுவது போல்… என்றெல்லாம் பழமொழிகள் உள்ள நிலையில், இன்று நாம் அம்பலப்படுத்தப் போகும் விடயத்துக்காகப் புதிதாக ஒரு பழ மொழியைத் தேட வேண்டிய நிலையில் எமது தமிழ் இனம் உள்ளது.

அதாவது, எமது இனத்தையே விற்றுப் பிழைக்கும் சில்லறை வியாபாரி ஒருவரின் மொத்த வியாபாரத்தை நாம் இங்கு அம்பலப்படுத்த வேண்டியுள்ளதன் காரணமாகவே நாம் புதிய பழமொழி ஒன்றினையும் தேட வேண்டியுள்ளது.

தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இந்த வியாபாரி இன்று தமிழ்ப் பெண்களை இரத்தக் கண்ணீர் விட வைத்துள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தேடிய இலங்கைப் படையை விட யுத்தம் முடிந்தவுடன் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடுவதில்…அப்பாவிகளைத் தனது வலைக்குள் சிக்க வைப்பதில் இந்தத் தமிழன் இன்று கில்லாடி…

அப்பாவிப் பெண்களை, அபலைகளை ஏமாற்றலாம் என்பதில் நம்பிக்கை கொண்ட இவரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், தற்போது வெளிச்சத்துக்கு வந்தவர்கள் சிலரே. வர வேண்டியவர்கள் இன்னும் பலர் இருக்கலாம். வெளியில் தமிழ்த் தேசியம்.... உள்ளே அனைத்தும் வேஷமாகச் செயற்படும் இவர் யார்? என்ன செய்கிறார்?

தனது குடும்ப வறுமையைத் தனக்குத் தெரியாமலே விளம்பரப்படுத்தி தனது உறவுகளிடையே சிக்கல்களை உருவாக்கி தனக்கு இருந்த கொஞ்ச நிம்மதியும் இல்லாமல் செய்து விட்டார் என மனமுடைந்து போன இந்தத் தாய்… உதவியும் வேண்டாம்.

எனது பிள்ளைக்குச் சத்திர சிகிச்சையும் வேண்டாம். தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு மண்டியிட்டுக் கெஞ்சும் இந்தத் தாயின் வாழ்க்கையே இன்று மனிதாபிமானமற்றவர்களால் அழிக்கப்படும் நிலை…

கணவனையும் இழந்த நிலையில் வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை விளம்பர வியாபாரியாக்கி பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச் சென்றவர் யார்…?

வன்னி மண்ணில் சிங்களவர்களால் மனிதர்கள் தான் புதைக்கப்பட்டார்களென்ற செய்தியை இன்று மிஞ்சி நிற்கிறது ஒரு தமிழனால் புதைக்கப்பட்டுப் போன மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தைப் புதைத்த தமிழன் தான் யார்?

தமிழினத்தின் வாக்குக்களால் வென்று இத்தகைய பெண்களின் வறுமையை விளம்பரமாக்கும் மேன்மை தங்கிய மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தான். அது மட்டுமல்ல.. ஸ்ரீதரனின் செயலாளரான பொன்காந்தனால் இன்று அந்தப் பெண் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.

இணையத்தள வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சமான்யப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பிக் கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.

அந்தப் பெண் இன்று தன் நிலை அறிந்து எதுவும் செய்ய முடியாத நிலமையில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இவ்வளவுக்கும் ஆளான அந்தப் பெண் யார்..? அவளின் கதை என்ன படியுங்கள்..

இந்த விடயம் தொடர்பில் நேசக்கரம் அமைப்பினால் எமக்கு வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனின் கோரிக்கைககு இணங்க ஜெர்மனியில் இயங்கும் அமைப்பான உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு 22.12.2010 இல் தமிழ் வின் இணையத்தளத்தில் பிரபாகரன் கலாரஞ்சினி என்ற ஒரு பெண்ணின் கோரிக்கையொன்றை வெளியிடப்பட்டிருந்தது.

இந்தப் பெண்ணின் குடும்பத்திற்கான உதவிகள் அவரது பிள்ளைக்கான வைத்திய உதவிகள் மற்றும் ஆலோசனைகள் என்பன நேசக் கரம் அமைப்பினால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் மகன் தமிழன்பன் என்பவரின் சிகிச்சைக்காகக் கொழும்பில் சுமார் ஆறுமாதங்கள் முயற்சி செய்த பின்னர் தமிழ் நாட்டிலும் வைத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் நாட்டு வைத்தியர்களினாலும் அவரது குறைகள் என்பன பிறப்பில் இருந்தே இருப்பதால் அவருக்குக் காது கேட்பது கதைப்பது போன்ற குறைகளைச் சரி செய்ய முடியாதெனக் கூறி விட்டனர். ஏற்கனவே பணம் பிடுங்கிகள் சிலர் 25 லட்சரூபாய் தந்தால் குழந்தையை பேசவும் காது கேட்கும் வலுவையும் ஏற்படுத்துவோம் என இப்பெண்ணிடம் கேட்டிருந்தனர்.

இந்த விடயம் எம்மையும் எட்டியதால் எம்மிடம் வருகின்ற மருத்துவ உதவிகளுக்கான மிகப்பெரும் உதவியாக இருக்கும் மருத்துவருக்கு இதனைத் தெரியப்படுத்தியிருந்தோம். நேரடியாக உரிய மருத்துவர் இப்பெண்ணிடம் தொடர்பு கொண்டு பணம்பிடுங்கிகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

அத்தோடு துறைசார் மருத்துவர் ஒருவரையும் நியமித்து கலாரஞ்சனிக்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. குறித்த மருத்துவர் குழந்தை தமிழன்பனின் மருத்துவ அறிக்கைகளை தமிழ்நாடு வைத்தியர்களை நாடி மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் குழந்தையின் மருத்துவத்தில் அக்கறை கொண்டு பணியாற்றிய மருத்துவக் குழுவின் பிரதான மருத்துவரும் உடனுக்குடன் தகவல்களை எமக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

அதன் விளக்கங்களை ஏற்று நாமும் அந்தக் குடும்பத்தின் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கான உதவிகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் நேசக்கரம் அமைப்பு சேமித்து வைத்துள்ளது.

அப்படி அவரது தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இப்பெண்ணுக்கான உதவிகள் கோரி மீண்டும் தமிழ் வின் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து குழப்பமடைந்த நாம் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டபோது சிறிதரன் (பா.ம.உறுப்பினர்) பற்றியும் அவர் உரையாடிய உரையாடல்களும் மற்றும் கலாரஞ்சனி தெரிவித்த விடயங்களும் எம்மை அதிர்ச்சிக்கும் மிகுந்த கவலைக்கும் உள்ளாக்கின.

சிறீதரன் உதவுவதாகக் கூறி இந்தப் பெண்ணை ஒருவர் சிறீதரனிடம் அழைத்துச் சென்றபோது, சிறீதரன் அவர்கள் தானும் போராளிகளுடனும் போராட்டத்துடனும் மிகவும் ஒன்றியிருந்ததாகவும் மனம் திறந்து தன்னிடம் அவரது குறைகளைக் கூறுமாறும் அந்தப் பெண்ணிடம் கேட்ட போது தனது குறைகளை அவர் சிறீதரனிடம் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு நிரந்தர அரச தொழில் வாய்ப்பை சிறீதரன் பெற்றுத் தருவார் என்று நம்பிப் போன காலரஞ்சினி சிறீதரனின் சாதுரியமான கதைகளை நம்பி தனது கணவர் குடும்பம் குழந்தையின் நிலமைகளையும் கூறியுள்ளார். சிறீதரனோ தனது நண்பர் ஒருவரின் குழந்தையும் இதே பிரச்சினையில் இருப்பதாகவும் பிறப்பிலுள்ள குறைபாட்டை 28 லட்சம் ரூபா செலவு செய்து மாற்றியுள்ளார்கள் எனவும் கூறி உங்கள் மகனை வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று சத்திர சிகிச்சை செய்து குறைகளைத் தீர்க்கலாமென வாக்குறுதியளித்து தான் உதவுவதாகவும் கூறியிருந்தார்.

அந்நேரம் கலாரஞ்சினியையும் அவரது குழந்தையையும் சிறீதரன் நிழற்படமும் எடுத்துள்ளார். ஒரு தாயாக தனது பிள்ளையின் குறைபாடு நீங்கி தனக்காக உள்ள ஒரே குழந்தை ஆரோக்கியமடையலாம் என்ற நப்பாசையில் தனது துயரங்களை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார். (நாம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருப்பின் இந்த வெளிப்பாடு இயல்பானது.)

இன்றைய இன்டெர் நெட் வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சாமானியப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பி கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.

தமிழ்வின், லங்காசிறி போன்ற இணையங்களில் சிறீதரன் அனுப்பிய செய்தியும் வீடியோப் பதிவும் வெளியாகிய அதேநேரம் யாழ் தினக்குரலில் கலாரஞ்சினியினதும் தமிழன்பனினதும் படத்தையும் பிரசுரித்து பண உதவி கோரிய விபரங்களைப் பார்த்தவர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போதே தனது விபரங்களை சிறீதரன் ஊடகங்களில் வெளியிட்டு பணம் சேகரிக்கும் விடயம் தெரியவந்தது.

ஏற்கனவே பல வகைகளில் பாதிக்கப்பட்டு கணவனையும் இழந்து வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்ற சிறீதரனை கண்டிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாத நிலமையில் எம்மிடம் மீண்டும் உதவி கோரியிருந்தார் கலாரஞ்சினி.

சிறீதரனின் பொறுப்பற்ற விளம்பரத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார் இந்தப்பெண். தனக்கு இத்தகையதொரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது பற்றி சிறீதரனுக்குத் தெரிவித்த போது சிறீதரன் பதவியில் இருக்கும் அதிகாரத்துடன் பதிலளித்தமை அவளை மேலும் துன்புறுத்தியுள்ளது.

தன்னிடம் உதவி கோரி வந்தால் இதுவெல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் இந்தச் செய்தியால் ஏற்பட்ட அசௌகரியம் சில நாட்களில் மாறி விடும் என்றும் அதுவரையில் வேறொரு தொலைபேசியைப் பாவிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தோடு காலரஞ்சனிக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குத் தான் பொறுப்பில்லையெனவும் தெரிவித்துள்ளார். தனது குடும்ப வறுமையை விளம்பரப்படுத்தி ஏனைய தனது குடும்ப அங்கத்தவர்களுக்கும் பல சிக்கல்களை உருவாக்கி இருந்த கொஞ்ச நிம்மதியையும் குலைத்த சிறீதரனால் ஏதாவது விபரீதம் வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர் கலாரஞ்சனியும் அவரது குடும்பத்தினரும்.

தன்னைப் பற்றிய விளம்பர வீடியோவையும் செய்தியையும் வெளியிட்ட சிறீதரனின் சகோதரரின் இணையங்களான லங்காசிறி, தமிழ்வின்னிலிருந்து அழிக்குமாறு வேண்டியும் இதுவரை சிறீதரன் எவ்வித அக்கறையும் எடுக்காதுள்ளார்.

இச்செய்தி தொடர்பாக உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் யேர்மனி கணேசலிங்கம் அவர்களிடம் கேட்டபோது சிறீதரன் சொன்னார் நாங்கள் செய்தியைப் போடச் சொன்னோம் என்றும் பொறுப்புமிக்க ஒரு பா.ம.உறுப்பினர் தரும் தகவல் உண்மையென்பதாலேயே தாம் தமது பெயரில் செய்தி போட ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி வீடியோவை பொன்காந்தன் (சிறீதரனின் செயலாளர்) தந்ததாகவும் கூறியிருந்தார்.

அடுத்து சிறீதரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது செய்தியாளர் இச்செய்தியை வெளியிட்டதாகவும் தன்னிடம் வரும்போது இப்படியெல்லாம் செய்தி வருமென்பதை அறியாதது கலாரஞ்சனியின் பிழையெனவும் இன்ரநெற் என்றால் என்ன ஊடகம் என்றால் என்ன என்பது பற்றி அறியாது இருப்பது கலாரஞ்சனியின் பிழையெனவும் கூறிய அதே நேரம் அவருக்கென சேகரிக்கப்பட்ட பணத்தை தாம் வேறு உதவி தேவைப்படுவோருக்குக் கொடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.

உதவியும் வேண்டாம் பிள்ளைக்கு சத்திர சிகிச்சையும் வேண்டாம் தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு கலாரஞ்சனியும் நாங்களும் சிறீதரனிடம் கேட்டும் அது செவிசாய்க்கப்படாதுள்ளது எம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் மட்டுமல்லாமல் சிறீதரன் பா.உறுப்பினர் மீது பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

தற்போதைய வன்னி நிலமைகளை அறிந்து கொண்டுள்ள சிறீதரன் அவர்கள் அதுவும் இந்தப்பெண் போன்ற நிலமையில் இருக்கும் ஒருவருக்கு இவரது இத்தகைய விளம்பரப்படுத்தல் நிதிசேகரிப்பு மூலம் எத்தகைய நெருக்கடிகள் வரும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத சாதாரணமான ஒருவரல்ல.

வன்னிக்குள் எத்தனையோ விரும்பத்தகாத முறைகேடுகள் பெண்கள் மீதான அத்துமீறல்கள் துன்புறுத்தல் நடப்பது சிங்களவர்களால் மட்டுமல்ல சிறீதரன் போன்றவர்களாலும் என்பதனையும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

பல பெண்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கடிதங்கள் தொலைபேசி அழைப்புக்களிலிருந்து பலரது கோர முகங்களும் அவர்கள் எவ்வாறு சிதைக்கப்படுகிறார்கள் என்பதனையும் உணர முடிகிறது.

ஆனால் இத்தகைய செல்வாக்கு மிக்கவர்களுடன் சமானமாக நின்று போராடும் வலுவை நாம் இழந்து போனோம் என்பதனையும் வேதனையுடன் கூறிக்கொள்கிறோம். இதேவேளை, இந்த அப்பாவிப் பெண் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை, தான் விற்றுப் பிழைக்கப்பட்டுள்ளதனை தாங்க முடியாத நிலையில் தற்கொலைக்கும் தயாரானாதாகவும் நெஞ்சை நெருடும் தகவல் ஒன்றும் தற்போது கிடைத்துள்ளது.

http://www.youtube.com/watch?v=JC6EsXyv3i8&feature=player_embedded

பிற்குறிப்பு :-

மேலே இணைக்கப்பட்டுள்ள உரையாடல் சிறிதரன் எம் பியின் உதவியாளர் பொன் காந்தனிற்கும் நேசக்கரம் சாந்தி ரமேசிற்கும் இடையில் நடந்ததாகும்.

கலாரஞ்சனி விடயத்தைக் கையண்டவர்களுடனான ஒலிப்பதிவுகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் யாவும் உள்ளன. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடுவோம் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

மேலும் உதவிக் கரம் நீட்டும் தர்மக் கரங்களும் உதவி கோரும் எமது உறவுகளும் இவ்வாறான இடைத் தரகர்களையும் விற்றுப் பிழைப்போரையும் நம்பி ஏமாற வேணடாம் என்ற ஒரு செய்தியினையும் இங்கு சொல்லி வைக்க விரும்புகிறோம்..

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சிவசக்தி ஆனந்தன், தற்போது சிறிதரன் என்று எல்லோரையும் பகைப்பதால் என்ன நன்மை என்பதையும் விளங்கப்படுத்தினால் நல்லது..

தமிழர்களுக்கு "அலுவல்" பார்ப்பது பிறவிக்குணம். எனவே இத்தகைய செயற்பாடுகளை அம்பலப்படுத்துவதன் மூலம் மாற்றங்களைக் காணலாம் என்று நம்புவது நகைப்புக்குரியது. ஆகவே, நெளிவு, சுழிவுகளோடு மக்களுக்கு உதவுவதற்கு தமிழ் எம்பிக்களைப் பாவிப்பதில்தான் கெட்டித்தனம் இருக்கின்றது.

இந்தப் பெண்ணின் குடும்பத்திற்கான உதவிகள் அவரது பிள்ளைக்கான வைத்திய உதவிகள் மற்றும் ஆலோசனைகள் என்பன நேசக் கரம் அமைப்பினால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் மகன் தமிழன்பன் என்பவரின் சிகிச்சைக்காகக் கொழும்பில் சுமார் ஆறுமாதங்கள் முயற்சி செய்த பின்னர் தமிழ் நாட்டிலும் வைத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சிவசக்தி ஆனந்தன், தற்போது சிறிதரன் என்று எல்லோரையும் பகைப்பதால் என்ன நன்மை என்பதையும் விளங்கப்படுத்தினால் நல்லது..

தமிழர்களுக்கு "அலுவல்" பார்ப்பது பிறவிக்குணம். எனவே இத்தகைய செயற்பாடுகளை அம்பலப்படுத்துவதன் மூலம் மாற்றங்களைக் காணலாம் என்று நம்புவது நகைப்புக்குரியது. ஆகவே, நெளிவு, சுழிவுகளோடு மக்களுக்கு உதவுவதற்கு தமிழ் எம்பிக்களைப் பாவிப்பதில்தான் கெட்டித்தனம் இருக்கின்றது.

கிருபன் முன்னர் சிவ சக்தி ஆனந்தனுடனும் ஒன்றரை மாதங்களாக நீங்கள் சொன்னது போல நெளிவு சுழிவுகளாகத்தான் தொடர்ந்து தன்மையோடு பேசிப்பார்த்தோம் அவர் அடம் பிடித்ததால்தான் அவரைப் பற்றி அம்பலப் படுத்தவேண்டி வந்தது..அதன் பின்னர் அவர் எமது செயற் பாடுகளில் குறுக்கிடுவதில்லை..அதே பேலத்தான் சிறிதரன் எம்பியிடமும் தமிழ் வின்னில் செய்தி வெளியான நாள் முதல் தாழ்மையாகத்தான் பேசிப் பார்த்தோம்.அந்த செய்தியையும் வீடியோவையும் நீக்கி விடும்படி சம்பத்தப் பட்ட பெண்மணியே நேரில் சென்று கடிதமும் கொடுத்து மன்றாடியிருந்தார். ஆனால் சிறிதரனின் உதவியாளர் பொன் காந்தன் அந்தப் பெண்ணை மிரட்டியதைத் தொடர்ந்து அவரை எமது மேற்பார்வையில் நாம் ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துவிட்டுத்தான். சிறிதரன் பற்றிய செய்தியையும் வெளியே கொண்டு வந்தோம்.

சிறிதரன் பற்றிய வேறு பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும். அவர் எமது செயற்பாடுகளில் குறுக்கிட்டு தனியே உதவிகளற்று வாழும் ஒரு பெண்ணிற்கு இத்தனை மோசமாக ஏமாற்றியது மட்டுமல்லாமல் மிரட்டலும் விடுத்த பின்னர் நாமும் பலதடைவை தொடர்பு கொண்டு கதைத்தபின்னரும் தான் எம்.பி எதுவும் செய்வேன் என திமிருடன் செயற்பட்ட பின்னர். எம்மால் வாழாவிருக்க முடியாது... இதே பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் ஓட்டில்தான் இவர் பாராளுமன்றத்தை பார்த்தார் என்பதனையும் மறந்துவிடக்கூடாது.யாராவது ஒருவர் துணிந்து கேட்டால் தான் இவர்கள் திருந்துவார்கள். எனவேதான் கேட்டிருக்கின்றோம் திருந்துவாரா????????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea:

தமிழ் நாட்டு வைத்தியர்களினாலும் அவரது குறைகள் என்பன பிறப்பில் இருந்தே இருப்பதால் அவருக்குக் காது கேட்பது கதைப்பது போன்ற குறைகளைச் சரி செய்ய முடியாதெனக் கூறி விட்டனர். ஏற்கனவே பணம் பிடுங்கிகள் சிலர் 25 லட்சரூபாய் தந்தால் குழந்தையை பேசவும் காது கேட்கும் வலுவையும் ஏற்படுத்துவோம் என இப்பெண்ணிடம் கேட்டிருந்தனர்.

இந்த விடயம் எம்மையும் எட்டியதால் எம்மிடம் வருகின்ற மருத்துவ உதவிகளுக்கான மிகப்பெரும் உதவியாக இருக்கும் மருத்துவருக்கு இதனைத் தெரியப்படுத்தியிருந்தோம். நேரடியாக உரிய மருத்துவர் இப்பெண்ணிடம் தொடர்பு கொண்டு பணம்பிடுங்கிகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

அத்தோடு துறைசார் மருத்துவர் ஒருவரையும் நியமித்து கலாரஞ்சனிக்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. குறித்த மருத்துவர் குழந்தை தமிழன்பனின் மருத்துவ அறிக்கைகளை தமிழ்நாடு வைத்தியர்களை நாடி மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் குழந்தையின் மருத்துவத்தில் அக்கறை கொண்டு பணியாற்றிய மருத்துவக் குழுவின் பிரதான மருத்துவரும் உடனுக்குடன் தகவல்களை எமக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.

:unsure::lol:
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வளர்ச்சி அல்ல இது.

சிறிதரன் அவர்களது கருத்தையும் இணைக்கவும்.

நானும் இது போல் ஒரு உதவி செய்தபோது சம்பந்தப்படடவரிடமிருந்து ஒரு கடிதம் கேட்டிருந்தேன்.

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் முழுவதும் தரப்படும். ஆனால் இனிமேல் இது போன்று எவரிடமும் உதவிகள்கேட்கக்கூடாது என்று.

அது எனக்கு சில மனச்சங்கடங்களை ஏற்படுத்தினாலும் அந்த திட்டத்தை செய்யவும் அது ஒரு முன்னுதாரணமாக மற்றவர்களுக்கு இருக்கவும் உதவியது. அதேபோல் உதவிகள் செய்பவர்களும் சேவையைப்பெறுகின்றவர்களும் சில ஒப்பந்தங்களைச்செய்து கொள்வது நல்லது என்றே படுகிறது.

இதன் மூலம் இது போன்ற சிக்கல்களைத்தடுப்பதுடன் உதவுவோருக்கு ஏற்படுகின்ற அவநம்பிக்கைகளை குறைக்கலாம்.

இன்றைய தமிழரதுநிலையில் இந்த நம்பிக்கை கட்டி எழுப்பப்படவேண்டுமே தவிர உடைக்கப்படக்கூடாது.

அந்த வகையில் நேசக்கரம் அவசரப்பட்டு விட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

... ஆட்டைக் கடித்து, பின் மாட்டை ... இறுதியில் ...???????????????

...

... ஒருவரை நோக்கி விரலை நீட்ட முன் பாருங்கள், உங்களை நோக்கி நான்கு விரல்கள் நீட்டிக் கொண்டிருக்கும் ...

Edited by Nellaiyan

... நானும் பலரைப் பற்றி பல செய்திகள் ஒவ்வொருநாளும் கேள்விப்படுகிறேன், சில யாழ்கள/கலக வீரர்கள் உட்பட!!!! .... அவைகள் எல்லாவற்றையும் இங்கு கொட்ட யாழ்கள/கலகம் இடம் தருமா????? ..

... ஒருவரை நோக்கி விரலை நீட்ட முன் பாருங்கள், உங்களை நோக்கி நன்கு விரல்கள் நீட்டிக் கொண்டிருக்கும் ...

இப்போதைய சூழலில்.. இருப்பவர்களை வைத்துத்தான் சில வேலைகளை செய்ய முடியும்.. ஆனாலும் ஒருவரைப்பற்றி பிரசுரிக்கும் போது அவரின் அனுமதி பெறாமல் செய்வது என்பது தவறுதான்..

அடுத்ததாக மக்களுக்கு பணி செய்வது என்பது.. அதனை பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாது... மக்களுடன் நீண்டகாலம் பணி செய்துதான் அந்த அறிவை பெறவேண்டும்.

மக்களிடம் பேசும் போதும் , கதைக்கும் போதும்..இது முக்கியம்..

மன்னார் மாவட்டத்தில் ஓர் சம்பவம்... இப்போ அல்ல.

ஒரு போராளி ஒரு பாலர் பாடசாலையினை ஒரு கிராமத்திற்கு தன்ர பாட்டில் கட்டி முடித்தான்... முடித்துவிட்டு தனது அலுவலகத்திற்கு மக்களை அழைத்து பேசினான்.. நான் எவ்வளவு கஸ்டப்பட்டு எல்லாம் செய்திருக்கிறேன்.. இனிமேல் உங்கள் பாட்டில் தான் எல்லாம் செய்யவேண்டும் .எல்லாத்திற்கும் எங்கள எதிர்பார்க்க கூடாது என்றான்.. இப்பிடியே அவரது வேலைத்திட்டம் அதிகாரி தோரணையில் நடந்தது..

இன்னொரு கிராமம்.. அது பெரிய மடுவிற்கு அண்மையில்.. அங்கே ஒரு போராளி சைக்கிளில்தான் அரசியல் பணி செய்தான்.. அவன் ஒன்றுமே கட்டிக்கொடுக்கவில்லை. அவனுடைய வேலை... வீடு வீடாக செல்வான் .. அவர்கள் வீட்டில் இருப்பதை கேட்டு வாங்கி சாப்பிடுவான்.. கிணறு இறைத்துக்கொடுப்பான், வீடு வேய்ந்து கொடுப்பான். வயல் வெட்டிக்கொடுக்க ஆட்களுடன் தானும் சென்று வெட்டிக்கொடுப்பான்.. வயசு போன ஆட்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோவான்.. பள்ளிக்கூடம் போகாட்டி கையில் பிரம்புடன் கலைச்சு கலைச்சு பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்புவான் அவனது பெயர் ரஞ்சன்..

தேவையான நேரம் பழசுகளுடன் அரசியல் சம்பாசணை... ஆளைப்பார்த்தால் ஒரு இழிச்ச வாயன் என்று பகிடி விடுவார்கள் சில போராளிகள்..

ஆனால் துணைப்படைக்கு ஆட்கள் சேர்க்கும் போது.. ரஞ்சனுக்கு அந்த கிராமத்து மக்கள் எல்லோரும் கை கொடுத்தார்கள்.. எங்கள் பிள்ளை கூப்பிட்டால் நாங்கள் செல்வோம் என சொன்னார்கள்..

பாலர் பாடசாலை கட்டிக்கொடுத்து அலுவலகம் வைத்து மக்கள் சந்திப்புக்களை செய்தவருக்கு ஆட்கள் சேரவில்லை..

ரஞ்சன் உயிருடன் இருந்தால் அவரை சந்திக்க எனக்கு ஆசை

இது உண்மை நிகழ்வு...

Edited by உமை

சாந்தி, சாத்திரி! - சமூகத்தை, அரசியல்வாதிகளை சீர்படுத்த, ஓர் கட்டுக்கோப்பை ஏற்படுத்த, நேர்மையை நிலை நிறுத்த உங்கள் முயற்சி உதவும் என்பதால் முழுமையாக பாராட்டுகிறேன்.

ஆனாலும், ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் என்ற வகையில், விசுகு சொன்னது போல் சிறிதரனின் கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கலாம். மேலும் இந்த சம்பவங்கள், குறித்த குழந்தையின் நிலை பற்றி எனது நண்பர் ஒருவர் மூலம் அவ்வப்போது அறிந்து வந்துள்ளேன். சிறந்த வைத்திய நிபுணர்களின் கருத்தின்படி அந்தப் பிள்ளைக்கு அக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியங்கள் மிக மிக அரிது - மாற்றுப் பயிற்சிகள் மூலம் அந்தப் பிள்ளை உலகத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியும் எனக் கேள்விப்படுகிறேன்.

பிள்ளையை கேட்க - பேச வைக்க தாய் பலரிடம் மன்றாடி படும்பாட்டையும், பாசமிக்க தாயின் மனநிலையில் பார்ப்பவர்கள் தவறென கூற முடியாது. அது போல சிறிதரன் குழுவினரின் அறியாமையா, அரசியல் பிரச்சார யுக்தியா, கொள்ளை முயற்சியா அல்லது உதவவேண்டும் என்ற உண்மையான ஆர்வமா இந்த சிக்கலுக்கு காரணம் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதை ஓரிரு நாட்களில் அறிந்துவிட முடியும்.

சாந்தி, சாத்திரி! - சமூகத்தை, அரசியல்வாதிகளை சீர்படுத்த, ஓர் கட்டுக்கோப்பை ஏற்படுத்த, நேர்மையை நிலைநிறுத்த , சீரழிக்கப்பட்ட மண்ணில் வாழும் மக்களின் அங்கலாய்ப்புக்களை, உதவி செய்பவர்கள் கள யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள உங்கள் முயற்சி உதவும் என்பதால் மீண்டும் முழுமையாக பாராட்டுகிறேன். வரும் காலத்தில் உங்கள் முயற்சி மேலும் நேர்த்தியாக நடக்க வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சிறீலங்காவினது நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில், தற்போதைய பா.உ சிறிதரன் அவர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டபோது, தமிழ்மக்கள் தேசிய முண்ணணியது (சிலவேளை கட்சியது பெயர் தவறாக இருக்கலாம்) சார்பில் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரன் அவர்களை விமர்சித்து வீரகாவியமான பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வனது கடந்தகால நடவடிக்கைகளை விமர்சித்து லங்கசிறி இணையத்தளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தபோதே இவர் தமிழர்க்கு நன்மைசெய்ய மாட்டார் என நான் யாழ் களத்தில் கூறியிருந்தேன்.

......? ....

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சிவசக்தி ஆனந்தன், தற்போது சிறிதரன் என்று எல்லோரையும் பகைப்பதால் என்ன நன்மை என்பதையும் விளங்கப்படுத்தினால் நல்லது..

தமிழர்களுக்கு "அலுவல்" பார்ப்பது பிறவிக்குணம். எனவே இத்தகைய செயற்பாடுகளை அம்பலப்படுத்துவதன் மூலம் மாற்றங்களைக் காணலாம் என்று நம்புவது நகைப்புக்குரியது. ஆகவே, நெளிவு, சுழிவுகளோடு மக்களுக்கு உதவுவதற்கு தமிழ் எம்பிக்களைப் பாவிப்பதில்தான் கெட்டித்தனம் இருக்கின்றது.

கிருபன்,

ஆளாளுக்கு சில எம்பிக்கள் ஏற்கனவே நொந்து போனவர்களை மீளவும் நோகடித்துச் சாகடிக்கும் நிலமையில் இவர்களை நாங்கள் எந்த வகையில் சேர்க்க ?

இதில் இவர்கள் யாரையும் நாங்கள் பகைக்கவில்லை. பதவிகள் உள்ள துணிச்சலில் பாதிக்கப்பட்டவர்களை பகடையாக்க வேண்டாமென்றே இவர்களை வேண்டுகிறோம். வேண்டினோம்.

இந்த எம்பிக்களுடன் வேண்டுமென்று நாங்கள் வம்புக்கு போகவில்லை. நீங்கள் சொல்வது போல நெளிவு சுழிவுகளோடு போய்த்தான் பலதை செய்ய முடிகிறது தற்கால அரசியல் தளம். ஆனால் சிலர் தங்களிடம் அதிகாரம் பலம் உள்ளதை தமது பலமாக வைத்து அரசியல் செய்ய விளைவது பயன்படுத்துவதை பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

இத்தகையதொரு செய்தியை வெளியில் கொண்டுவருவதை நாங்கள் தவிர்த்தோம். ஆனால் ஏலுமானால் செய்து பார் என்ற பொன்காந்தனின் சண்டித்தனம் , இந்த விளம்பரம் வேண்டாம் சம்பந்தப்பட்ட பெண்ணை விட்டுவிடுங்கள் என்ற எங்கள் கெஞ்சுதலுக்கு தனது அததிகாரத்தை எம்மீது பயன்படுத்தி நம்மை ஒடுக்க நினைதத்த சிறீதரன் எம்பியின் அதிகாரமும் தான் இத்தகையதொரு நிலமைக்கு எம்மை இட்டுச் சென்றுள்ளது.

எல்லா வளிகளாலும் பாதிக்கப்பட்ட ஒருவர் உதவிதான் கேட்டார் அதனை உள்நாட்டுப் பத்திரிகை அனைத்துலக இணையம் வரை பரபரபாக்கி உரியவளை ஊரில் தலைநிமிர விடாத விளம்பரம் எத்தகைய மனவுளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கும் என்பதனையும் யோசித்துப் பார்ப்போமே.

சிறீதரன் எம்பி மீது எமக்கிருந்த மதிப்பு நம்பிக்கை எல்லாவற்றையும் உடைத்து அவர் தனது முகம் இதுதான் என எம்மிடம் காட்டியபின்னர் மெளனம்தான் சரியென்கிறீர்களா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி, சாத்திரி,

பூனைக்கு மணி கட்டியிருக்கிறியள். நல்லது. சிறிதரன் மீது புலத்திலிருந்து அதிக அழுத்தங்கள் போகவேண்டிய காலமிது. அவரின் சுத்துமாத்துக்கள் என்பதையும்தாண்டி, புலத்து மக்களின் பணத்தைக் கொண்டு அங்கே உதவி அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர் மீது புலத்து மக்கள் தமது அழுத்தத்தைப் பிரயோகித்து அவரைச் சரியான வழியில் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது அவசியம்.

இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சி வண்டிலை ஓட்ட எல்லோரையும்விட மிகத்தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் சிறிதரனேதான். சம்பந்தன், மாவை ஆட்களைவிடவும் மிகவும் ஆபத்தானவர் இதே சிறிதரன்தான் என்பதை யாவரும் அறிவர். இந்த உதவி அரசியல் என்பது கடாவை வளர்த்து மார்பில் பாயவிடும் வழிக்கே இன்று போய்க்கொண்டிருக்கிறது. சரி, செய்யப்படும் உதவிகள்தான் சரியாகப் போகின்றனவா என்றால் அங்கேயும் இடித்துக்கொண்டுதான் இருக்கிறது. பல்வேறு கருத்துமோதல்கள் இருந்தாலும் சிறிதரனைவிடவும் சிவசக்தி ஆனந்தன் பரவாயில்லை என்பதே எம்போன்றோரின் இன்றைய நிலை.

அதுசரி சாத்திரி, சிறிதரன், லங்காசிறி, தமிழ்வின் குடும்ப அரசியலையும் கூட்டுக்கொள்ளையையும் வெளிப்படுத்துவது போல், இந்தக்கூட்டத்துக்கு எதிர்ப்பணியான இரண்டு செய்தி வலைத்தளக் கூட்டத்தின் களவாணித்தனத்தையும் வெளிப்படுத்துவீர்களா? ஐந்து கிலோ அரிசி கொடுத்தால் தாம் சொல்கிறபடி மக்கள் வீடியோ முன்பு பேட்டி கொடுக்கிறார்கள் என ஏளனமாகச் சொல்லியபடியே பேட்டியெடுத்து தளம் நிரப்பிக் காசுபார்ப்பவர்களைப் பற்றியும் கட்டுடைக்கப்படுமா? வீடியோவைப் பார்த்து உதவிசெய்ய வரும் மக்கள் நேரடியாகச் செய்யமுடியாது, எமக்குத் தாருங்கள் நாம் அவர்களுக்குச் செய்வோம் என்று சொல்லிக் காசுபார்க்கும் கூட்டம் சந்திக்கு வருமா? உதவி தேவைப்படுவோரின் தொலைபேசி இலக்கத்தைக்கூடத் தரமறுத்து இருட்டறையில் உதவித் தொகை திரட்டுவது வெளிச்சத்துக்கு வருமா?

என்னைப்போலவே நீங்களும் கதைகளைக் கேள்விப்படுவீர்கள் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன்,

நீங்கள் என்னுடன் அரசியல் முதல் சமகால முரண்பாடுகள் வரை நல்ல நட்புறவுடன் கருத்தாடிய தொலைபேசி தொடர்பாடல்களை வைத்திருந்த காலங்களில் (இவ்வருடம் ஏப்றல் மாதம்) இந்தக் குடும்பம் பற்றி உங்களுக்குச் சொல்லியிருந்தேன். இந்தக் குழந்தைக்கு புற்றுநோய் இருப்பதாகக்கூடக்கூறி காசு பறிக்க பலர் முயன்றது பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தக் குழந்தைக்கு மேலதிக மருத்துவ தேவைக்காக உதவியை பலரிடம் கேட்டது பற்றி உங்களுக்குச் சொன்னவுடன் உடனடியாகவே இக்குழந்தைக்கு நீங்கள் 200€ பேபால் ஊடாக அனுப்பியிருந்தீங்கள்.

இந்த இணைப்பில் நீங்கள் உதவிய விபரம் இருக்கிறது பாருங்கோ -http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/fotos/April%20bis%20Juni.pdf

உங்களுக்கு இக்குடும்பத்தின் தொடர்பிலக்கம் மற்றும் விபரங்கள் கூட தந்திருந்தேன். மன்னித்துக் கொள்ளுங்கள் நெல்லையன். எங்களுக்கு யார் மீதும் எந்தவித பிரச்சனையுமில்லை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வளர்ச்சி அல்ல இது.

சிறிதரன் அவர்களது கருத்தையும் இணைக்கவும்.

நானும் இது போல் ஒரு உதவி செய்தபோது சம்பந்தப்படடவரிடமிருந்து ஒரு கடிதம் கேட்டிருந்தேன்.

நீங்கள் எதிர்பார்க்கும் பணம் முழுவதும் தரப்படும். ஆனால் இனிமேல் இது போன்று எவரிடமும் உதவிகள்கேட்கக்கூடாது என்று.

அது எனக்கு சில மனச்சங்கடங்களை ஏற்படுத்தினாலும் அந்த திட்டத்தை செய்யவும் அது ஒரு முன்னுதாரணமாக மற்றவர்களுக்கு இருக்கவும் உதவியது. அதேபோல் உதவிகள் செய்பவர்களும் சேவையைப்பெறுகின்றவர்களும் சில ஒப்பந்தங்களைச்செய்து கொள்வது நல்லது என்றே படுகிறது.

இதன் மூலம் இது போன்ற சிக்கல்களைத்தடுப்பதுடன் உதவுவோருக்கு ஏற்படுகின்ற அவநம்பிக்கைகளை குறைக்கலாம்.

இன்றைய தமிழரதுநிலையில் இந்த நம்பிக்கை கட்டி எழுப்பப்படவேண்டுமே தவிர உடைக்கப்படக்கூடாது.

அந்த வகையில் நேசக்கரம் அவசரப்பட்டு விட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

விசுகுஅண்ணா கடந்த இரண்டு நாட்களிற்கு முன்னரும் உங்களுடன் தொ.பே சியில் கதைக்கும் பொழுது இது சம்பதமாக உரையாடி விட்டு சிறிதரன் அடம் பிடிக்கிறார் பார்க்கலாமென கூறியிருந்தேன். அவர் அடம் பிடித்தனால்தான் இங்கு இதனை எழுத வேண்டியும் வந்தது.அதே நேரம் சிறிதரனின் உரையாடலை இங்கு இணைக்கும்படி கேட்டிருக்கிறீர்கள்..அதனை இணைப்பதில் எமக்கு எவ்வித பிரச்சனையுமில்லை...ஆனால் ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒரு மக்கள் பிரதி (நிதியின் ) பண்பாளரின் தரக்குறைவான பொறுப்பற்ற வார்த்தை பிரயோகங்கள் அடங்கிய ஒரு ஒலிப்பதிவினை வெளியிடுவது அவரைத்தான் தரம் தாழ்த்தும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கும் என்பதால் தான் நாம் அதனை வெளியிடாது அவரது உதவியாளர் பொன்காந்தனின் பதிவை மட்டும் வெளியிட்டிருந்தோம்..பொன் காந்தன் என்பவர் யார் எங்கிருந்தவர் என்பதனை முள்ளிவாய்க்கால் முடிவுகளை தெரிந்:தவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் சிறிதரனின் ஒலிப்பதிவினை வெளியிடத்தான் வேண்டும் என்கிற கட்டாயம் வருமானால் நான் அதனையும் வெயிடத் தாயார்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி விடயத்தை நாம் வெளிக்கொணர்ந்ததன் நோக்கம் , இத்தகைய தான்தோன்றிகளால் பாதிக்கப்பட்ட பலரது துயரங்கள் இனியும் தொடரக்கூடாது என்பதற்காகவே. பல த.தே.கூ உறுப்பினர்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் பாதிப்புக்கு உள்ளான குரல்கள் மெளனமாக்கப்பட்டனர். குடும்ப கெளரவம் உறவுகளின் அழுத்தங்கள் என பல உண்மைகள் மறைக்கப்பட நாங்களும் பெண்களாக இருந்து சகித்துக் கொண்டோம்.

நாங்கள் நம்புகிற கூட்டமைப்பு மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்கக்கூடாது என்பதற்காக பல பா.உ.களின் அடாவடிகளை பொறுத்திருந்தோம். ஆனால் மெளனம் பலரது வாழ்வு மறைமுகமாக அச்சுறுத்தப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்பதற்காக வெளியில் இதனை சொல்லியிருக்கிறோம்.

நேற்று மாலை 6மணிவரை இச்செய்தியை வெளியிடும் எண்ணமேயில்லை. அப்பெண்ணின் விளம்பரச்செய்தியை அழித்துவிடுங்கள் வேறெந்த உதவியும் வேண்டாமென்றே கேட்டிருந்தோம். செய்யிறதை செய்து பாரும் என்ற மமதையில் இருந்தவர்களாலேயே இச்செய்தியை வெளியில் சொல்ல வேண்டி வந்தது.

இச்செய்தியை மூலமாகக் கொண்டு வேறொரு இணையம் சினிமாப்பாணியில் தங்கள் கற்பனைக்கேற்றபடி செய்தி வெளியிட்டுள்ளார்கள். தயவுசெய்து உங்களைக் கெஞ்சிக்கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கும் லங்காசிறி தமிழ்வின் இணையங்களுக்கிடையிலான தனிப்பட்ட கசப்புணர்வுகளை நீங்களே பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள் இவ்விடயத்தில் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை கொட்ட வேண்டாமென்பதை தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

லங்காசிறி தமிழ்வின் இணையங்களுடன் எமக்கு எதுவித முரண்பாடுகளுமில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பா.உறுப்பினரான மேன்மைதங்கிய சிறீதரன் அவர்களது பொறுப்பற்ற செயலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக எமது குரலைக் கொடுத்துள்ளோம். இனிமேல் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரையும் இப்படி விளம்பரப்படுத்தி துன்பப்படுத்தக் கூடாது என்பதற்காகவே எமது தரப்பு நியாயத்தையும் சம்பந்தப்பட்ட பெண்ணின் தரப்பு நியாயத்தையும் வெளிக் கொண்டு வந்துள்ளோம் என்பதனை பரபரப்புச் செய்தி வெளியிடும் இணையத்தளங்கள் புரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இச்செய்திவிடயத்தில் Tamilcnnகடைப்பிடித்துள்ள செய்தி நாகரீகத்தை மற்ற இணையங்களும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதுவரை காலமும் நியாயமாக கேட்டகப்பட்ட விடயங்களுக்கு அதிரடி எழுத்துக்களால் இளைத்த அநீதியை இனிமேலும் எங்களது இணையங்கள் செய்யாதீர்கள். தயவுடனும் தாழ்மையுடனும் வேண்டுகிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி, சாத்திரி,

பூனைக்கு மணி கட்டியிருக்கிறியள். நல்லது. சிறிதரன் மீது புலத்திலிருந்து அதிக அழுத்தங்கள் போகவேண்டிய காலமிது. அவரின் சுத்துமாத்துக்கள் என்பதையும்தாண்டி, புலத்து மக்களின் பணத்தைக் கொண்டு அங்கே உதவி அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர் மீது புலத்து மக்கள் தமது அழுத்தத்தைப் பிரயோகித்து அவரைச் சரியான வழியில் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது அவசியம்.

இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சி வண்டிலை ஓட்ட எல்லோரையும்விட மிகத்தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் சிறிதரனேதான். சம்பந்தன், மாவை ஆட்களைவிடவும் மிகவும் ஆபத்தானவர் இதே சிறிதரன்தான் என்பதை யாவரும் அறிவர். இந்த உதவி அரசியல் என்பது கடாவை வளர்த்து மார்பில் பாயவிடும் வழிக்கே இன்று போய்க்கொண்டிருக்கிறது. சரி, செய்யப்படும் உதவிகள்தான் சரியாகப் போகின்றனவா என்றால் அங்கேயும் இடித்துக்கொண்டுதான் இருக்கிறது. பல்வேறு கருத்துமோதல்கள் இருந்தாலும் சிறிதரனைவிடவும் சிவசக்தி ஆனந்தன் பரவாயில்லை என்பதே எம்போன்றோரின் இன்றைய நிலை.

அதுசரி சாத்திரி, சிறிதரன், லங்காசிறி, தமிழ்வின் குடும்ப அரசியலையும் கூட்டுக்கொள்ளையையும் வெளிப்படுத்துவது போல், இந்தக்கூட்டத்துக்கு எதிர்ப்பணியான இரண்டு செய்தி வலைத்தளக் கூட்டத்தின் களவாணித்தனத்தையும் வெளிப்படுத்துவீர்களா? ஐந்து கிலோ அரிசி கொடுத்தால் தாம் சொல்கிறபடி மக்கள் வீடியோ முன்பு பேட்டி கொடுக்கிறார்கள் என ஏளனமாகச் சொல்லியபடியே பேட்டியெடுத்து தளம் நிரப்பிக் காசுபார்ப்பவர்களைப் பற்றியும் கட்டுடைக்கப்படுமா? வீடியோவைப் பார்த்து உதவிசெய்ய வரும் மக்கள் நேரடியாகச் செய்யமுடியாது, எமக்குத் தாருங்கள் நாம் அவர்களுக்குச் செய்வோம் என்று சொல்லிக் காசுபார்க்கும் கூட்டம் சந்திக்கு வருமா? உதவி தேவைப்படுவோரின் தொலைபேசி இலக்கத்தைக்கூடத் தரமறுத்து இருட்டறையில் உதவித் தொகை திரட்டுவது வெளிச்சத்துக்கு வருமா?

என்னைப்போலவே நீங்களும் கதைகளைக் கேள்விப்படுவீர்கள் தானே?

நன்றிகள் நல்லவன். நீங்கள் சொல்வது போல வீடியோ போட்டுக்காட்டி பணம் சேகரிக்கும் விடயம் சிலரால் நடந்துகொண்டுதானிருக்கின்றது.உதவிகிடைக்குமென நம்பி வீடியோவில் முகம் காட்டியவர்கள்பின்னர் தங்களிற்கு எந்த உதவியும் கிடைக்கவிலையென எம்மிடம் தொடர்புகொண்டு உதவிகோரிய சம்பவங்கள் நிறையவே உள்ளன. பின்னர் நாம் அவர்களிற்கான உதவிகளை கொடுத்தோம்.அதற்கான ஆதாரங்களும் உள்ளது. ஆனால் இங்கு என்மீதும் சாந்திமீதும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது எப்பொழுது பார்த்தாலும் எல்லா விடயங்களிலும் மூக்கை நுளைக்கிறோம் என்று பலரிற்கு எம்மீது கோபம்.எனவேதான் எங்கள் எழுத்துக்களை இயன்றளவு குறைத்துள்ளோம்..இல்லாவிடில் நேசக்கரத்தினை கொண்டு நடாத்த முடியாது. இடைஞ்சல்கள் கொடுப்பார்கள். அதே நேரம் எமது நேசககரம் அமைப்பின் வேலைத்திட்டங்களிற்கு யார் இடைஞ்சல் கொடுத்தாலும் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும். தகுந்த ஆதாரங்களுடன் அவர்ரது செயற்பாடுகளை வெளிக்கொண்டு வருவோம் நன்றிகள்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவனும்,நூணாவிலானும் ஓரே ஆட்களா?...நல்லவன் எழுதிய கருத்துக்கு சாஸ்திரி அண்ணா பதில் சொல்லும் போது நூணாவிலான் எனக் குறிப்பிட்டு சொல்கிறார் அது தான் கேட்டேன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லவனும்,நூணாவிலானும் ஓரே ஆட்களா?...நல்லவன் எழுதிய கருத்துக்கு சாஸ்திரி அண்ணா பதில் சொல்லும் போது நூணாவிலான் எனக் குறிப்பிட்டு சொல்கிறார் அது தான் கேட்டேன் :lol:

ரதி நான்தான் மாற்றி எழுதிவிட்டேன் திருத்தியுள்ளேன்

கடந்த சிறீலங்காவினது நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில், தற்போதைய பா.உ சிறிதரன் அவர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டபோது, தமிழ்மக்கள் தேசிய முண்ணணியது (சிலவேளை கட்சியது பெயர் தவறாக இருக்கலாம்) சார்பில் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரன் அவர்களை விமர்சித்து வீரகாவியமான பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வனது கடந்தகால நடவடிக்கைகளை விமர்சித்து லங்கசிறி இணையத்தளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தபோதே இவர் தமிழர்க்கு நன்மைசெய்ய மாட்டார் என நான் யாழ் களத்தில் கூறியிருந்தேன்.

36_1_72.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த எம்பிக்களை ஏன் எங்கடை ஆக்கள் நம்பி போயினம் ? எப்பவும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்தான். அதை எங்கள் மக்கள் புரிந்து கொள்ளாது இருக்கிறது கவலைதரும் விசயம். கி்ட்டத்தட்ட எனது மைத்துனனின் மனைவியும் ஒரு அரசியல்வாதியினால் பாதிக்கப்பட்டுள்ளாள். அவளது படமும் ஒரு பத்திரிகையில் வந்தது ஆனால் குடும்ப மரியாதையை காரணம் சொல்லி எனது மனைவியும் குடும்பத்தினரும் பேசாது இருந்துவிட்டார்கள். பொன்காந்தன் முகாமில் கைவைத்து கூப்பிட்டுக் கொடுத்தவர்களில் எனது மனைவியின் உறவினரும் இருக்கிறார்.போனகதைகளை திரும்பி கதைத்து என்ன செய்வதென நாங்கள் பேசாமல் இருந்துவிட்டோம். கடவுள் இந்தக் கள்வர்களை இனங்காட்டியுள்ளான்.

  • கருத்துக்கள உறவுகள்

மேன்மை தங்கிய பா.உ.சிவஞானம் சிறீதரன் அவர்கள் மீது எப்படி இத்தகையதொரு குற்றச்சாட்டை முன் வைப்பீர்கள் எனப்பலர் கேட்டிருந்தது மட்டுமல்லாமல் அவருடன் விட்டுக்கொடுத்துப் போகுமாறும் சில வேண்டுதல்கள் வந்திருந்தது.

நாம் பா.உ.சிறீதரன் அவர்கள் மீது எவ்வித குறைகளையும் சொல்ல வரவில்லை. அவரால் அனுமதியில்லாமல் ஒருபெண்ணின் வீடியோ குரல் பதிவினைப் போட்ட செய்தியைத் தான் நீக்குமாறு கேட்டிருந்தோம். ஆனால் இந்த நிமிடம்வரையும் தொடர்புபட்ட செய்தி நீக்கப்படவில்லை தமிழ்வின்னிலிருந்து. அதுமட்டுமல்லாமல் குறித்த பெண் தனது கைப்பட எழுதிய கடிதத்திற்குப் பின்னரும் சிறீதரன் அவர்கள் அச்செய்தி தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காதிருப்பதிலிருந்து அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாக எம்முன் அதிகாரம் மிக்கவராக நிற்பதையே உணர்கிறோம்.

அச்செய்தியின் இணைப்பு - http://www.tamilwin.org/view.php?22ipXdc2PI34bi2F202HQMcd2ojZ2eZ982e2SLL4b31GQ0

22.12.10 அன்று செய்தி வெளியாகியது. 27.12.10ம் திகதி பாதிக்கப்பட்ட பெண் தனது கைப்பட கடிதம் ஒன்றினையும் எழுதிக் கொடுத்தார். 29ம் திகதி வரையும் அச்செய்தியை நீக்கக்கோரி நாம் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பயனளிக்காத நிலமையில் அது தொடர்பில் எமது தரப்பு விளக்கத்தினை வெளிப்படுத்தினோம். இன்று 01.01.2011 இந்த நிமிடம் வரை உரிய பெண்ணுக்கு பணம் சேகரிக்கக்கோரிய செய்தி அப்படியே தமிழ்வின் செய்தித்தளத்தில் இருக்கிறது.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொறுப்பு மிக்க பா.உ.சிறீதரனின் மனிதாபிமானம் மற்றவர்களின் வலிகளை எப்படிப் புரிந்து கொள்கிறார் அல்லது கரிசனையுடன் உள்ளார் என்பதனை எவ்வாறு உணர்த்துகிறார் என்பதற்கு இச்செய்தி சாட்சியம் கூறி நிற்கிறது.

சிறீதரன் அவர்களுக்காக அக்கறைப்படுகின்ற யாவரும் இந்தப் பெண்ணுக்கான நீதியைக் கொடுப்பார்களா ?

அடுத்ததாக நாளை இன்னும் சில ஒலிப்பதிவுகளை வெளியிடவுள்ளோம் என்பதனையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

....

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.