Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:-

13 ஜனவரி 2011

சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:-

அண்மை நாட்களில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.அந்த மின்னஞ்சலில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் திரு.சுகி சிவம் அவர்கள் சன் தொலைகாட்சியில் ஆற்றிய சொற்பொழிவு இடம்பெற்றிருந்தது.

இந்தச் சொற்பொழிவில் திரு.சுகி சிவம் அவர்கள் இலங்கைக்கு சென்றுவந்ததாகவும், தான் இலக்கியங்களில் வாசித்த மணிபல்லவம் என்ற நயினா தீவிற்கு சென்றுவந்ததாகவும் குறிப்பிட்ட அவர் புலம்பெயர் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக உலகத்தமிழர்களை சாடியிருந்தார்.

அவர் பேச்சிலிருந்து, அவர் இப்படி பேசுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டாரா அல்லது அழைக்கப்பட்டாரா எனச் சந்தேகங் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு ஆன்மீகவாதி சொன்னால் அவையெல்லாம் உண்மைதான் என தமிழர்கள் நம்புவார்கள் என்ற திட்டத்திற்கமையவே இவர் ஆற்றிய சொற்பொழிவு இருந்தது.

இவர் என்ன ஆற்றியிருக்கிறார் என்றால், கடந்த காலங்களில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை மறந்து இலங்கை அரசை குறை சொல்வதை நிறுத்திவிட்டு, எதிரகாலத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும் எனக் கூறியிருப்பதுடன் புலம்பெயர் தமிழர்களும்; தமிழகத் தமிழர்களும் செய்து வரும் போராட்டங்கள் யாவும் வீண் வேலைகள் எனக் கூறியுமிருக்கின்றார்.

இவரின் சொற்பொழிவிற்குள் காணப்பட்ட கருத்துக்கள் யாவும் புலம்பெயர் தமிழர்களையும் தமிழகத் தமிழர்களையும் குறைகூறுவதாகவே அமைந்திருந்தன. இலங்கைத் தமிழர்கள் தமது உரிமைக்காக ஜனநாயக மரபுகளைத் தழுவிய அகிம்சா வழிப் போராட்டங்களை சுமார் 30 வருடங்களாக நடத்தி அதனால் அவர்கள் என்ன பலன்களைப் பெற்றார்கள் என்பதை திரு.சுகி சிவம் அவர்கள் அறிந்திருக்கிறாரா?.

இலங்கைத் தமிழர்கள் எவ்விதமான உரிமைகளையும் பெற்றுக் கொள்ளாது இரண்டாந்தர மனிதர்களாகவே அவர்கள் இலங்கையை ஆண்ட அரசுகளால் நடத்தப்பட்டார்கள் என்பது இவருக்குத் தெரியுமா?. ஈழத்து தந்தை என்று இலங்கைத் தமிழர்களால் அன்பு செலுத்தப்பட்டு வந்த அமரர் எஸ.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தமிழர்களின் உரிமைக்காக தமிழகத்திற்கு வந்து போயிருப்பதாவது இவருக்குத் தெரியுமா அல்லது அறிந்திருக்கிறாரா?. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எந்த வழியை அமரர் மகாத்மா காந்தி பின்பற்றினாரோ அதே வழியை உரிமை பெறுதலுக்காக பின்பற்றிய போது சத்தியாக்கிரகிகள் தாக்கப்பட்டனர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதாவது இவருக்குத் தெரியுமா?.

தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று கிருஸ்ண பகவான் கூறியிருந்த வழியிலேயேதான் இலங்கைத் தமிழர்கள் வேறு வழியின்றி தமது உரிமையை பெற்றுக் கொள்வதற்காக ஆயுதத்தை கையிலெடுத்தார்கள் என்பது எப்படித் தவறாகும். அப்படியானால் தன்னைக் கொல்ல வரும் பசுவைக் கொல் என்று சொன்ன கிருஸ்ண பகவான் பயங்கரவாதியா?.

பஞ்சபாண்டவருக்கும் நூற்றியொருவருக்குமிடையில் நடந்த போருக்கு இரண்டு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பகையே. துரியோதனனுக்கு பஞ்சபாண்டவர் மீது எற்பட்ட காழ்பு;பணர்ச்சியினால் ஏற்பட்டதே இந்தப் போர். அநீதிக்கும் நீதிக்கும் இடையில் எற்பட்டதே இந்தப் போரென்று அடையாளப்படுத்தப்படுமானால் அதே அநீதிக்கம் நீதிக்கும் இடையில் நடந்த போரே இலங்கைத் தமிழரின் விடுதலைப் போர். ஆனால் அதற்கு பயங்காரவாதம் என முத்திரை குத்தி ஒரு சிறுபான்மையினத்தின் உணர்வுகளை அழித்தமை எப்படி நியாயமாகும்?.

திரு.சுகி சிவம் அவர்களே! ஆன்மீக தளத்தில் நின்று ஆற்றிவரும் கருத்துக்களின் அடிப்படையிலேயே தங்களிடம் எமது உணர்வுகளையும் கேள்விகளையும் கருத்துக்களையும் முன் வைக்கின்றோம். ஆன்மீகம் என்றாலே ஆன்மாவின் ஈகம் என்பது பொருள்படுமே. ஈகம் என்பது கருணையாகும். கருணையின் ஊற்றே உயிர்களை மதிப்பதாகும். உயிர்களை மதிப்பது என்பது அவரவருக்கு இந்த உலகில் வாழும் தனிமனித உரிமையை எற்றுக் கொள்வதாகும்.

இதனை தாங்கள் தங்கள் சொற்பொழிவுகளில் சொல்லியதை நான் பலமுறை கேட்டிருக்கின்றேன். இலங்கையில் தமிழர்களின் வாழும் உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றதா?. அவர்கள் ஒவ்வொரு விநாடிப் பொழுதுகளையும் அச்சத்துடனேயே கழிக்கிறார்கள் என்பதை தங்களால் உணரவே முடியாது. அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும. சுற்றுலா ரீதியில் போய் வரும் தங்களுக்கு அதனைப் புரிந்து கொள்ள முடியாது. தங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்புகளை கணக்கில் வைத்து தமிழர்களின் வாழ்க்கையும் இவ்வாறுதான் இருக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டிருக்கின்றீர்கள்.

கடந்த காலங்களில் நடந்தவற்றை மறந்துவிட்டு எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பதால் எவ்வித பலனும் இல்லையெனவும் சொல்லிருக்கின்றீர்கள். இன்று என்பது இல்லாவிட்டால் நேற்று என்பது கிடையாது. நேற்றாகிய இன்றைய பொழுது நடந்த வலிகளே தமிழர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன என்பதை ஆன்மீகவாதியாகிய தாங்கள் ஏன் உணர்ந்து கொள்ளவில்லை அறிந்து கொள்ளவில்லை?.

இனக்கலவரங்கள் தொடங்கி 2009 ஆண்டுவரை தமிழர்கள் தமது உரிமைக்காக உயிரையே விட்டிருக்கிறார்கள். இலங்கையரசுகள் தமிழர்களின் உயிர்களை பறித்திருக்கின்றன. முள்ளிவாய்க்கால் என்ற படுகொலைக்களத்தில் 40,000 மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு எல்லாமாக ஒரு இலட்சம் பேர் போரினால் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதுவரை 90,000 தமிழ்ப் பெண்கள் விதவையாக்கப்பட் டிருக்கிறார்கள். 25,0000N மற்பட்டவர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

பார்த்துப் பார்த்துக் கட்டிய தமிழர்களின் வீடுகள் இலங்கையரசினால் தகர்த்து எறியப்பட்டிருக்கின்றன. முள்கம்பி வேலிகளுக்குள் மந்தைகளாக தமிழர்கள் அடைக்கப்படடு இருக்கின்றார்கள். தமிழர்கள் அழகாக வாழ்ந்த வீடுகள் புதர்மண்டிக் கிடக்கின்றன, இவ்வாறு தமிழர்களின் அவலங்கள் தொடர்கின்றன.

தமிழர்களின் மீது கொடுமைகள் புரிந்த இராணுவத்திற்கு யார் பொறுப்பு?. இலங்கை ஜனாதிபதியேதான் பொறுப்பு என்பதே அரசியல் உண்மை. எனவே தமிழர்களைக் கொன்றவர் அவரேதான். அவரேதான் போர்க் குற்றவாளி. அந்த குற்றவாளிக்கு எதிராக தமிழர்கள் தமது எதிர்ப்பை காட்டியிருந்தார்கள். இதிலென்ன தவறு?.

ஒரு நாளல்ல இரு நாளல்ல இலங்கைத் தமிழர்கள் சுமார் 60 ஆண்டுகாலமாக வேதனையுடன் வாழ்பவர்கள். கருணையின் வடிவான கௌதம புத்தரின் சமயநெறிக் கொள்கையை தழுவிய மண்ணில்,மணிமேகலை கோயில் அமைத்து வாழ்ந்த தாங்கள் சொல்லும் மணிபல்லவத் தீவை வைத்திருக்கும் இலங்கைத் தீவில்தான் தமிழர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.

எறும்புகூட தங்கள் கால்களில் மிதிபட்டு இறந்துவிடக் கூடாதே என்பதற்காக மயில்பீலி கொண்டு தாங்கள் போகும் பாதையில் காணப்படும் எறும்புகளை மெதுவாக ஒதுக்கிவிட்டு செல்வதாக சொல்லப்படுகின்ற புத்த தருமம் வாழும் நாட்டிலேதான் தமிழர்மீதான கொடுமைகள் இடம்பெறுகின்றன.

தமிழர்கள் மீது கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை மறக்கச் சொன்ன தங்களிடம் சில கேள்விகள்.

ஆன்மீகவாதி திரு.சுகி சிவம் அவர்களே!,

இனக்கலவரங்களின் போதெல்லாம் எரியும் நெருப்பிற்குள் உயிருடன் தூக்கியெறியப்பட்ட தமிழர்களை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

தமிழ்ப பெண்களின் மார்புத்துணியை கிழித்தெறிந்து அதிலே சுடுதாரால் சிங்களச் சிறீ எழுதியதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?. தமிழப் பெண்களை நடுவீதியில் வைத்து பாலியல் கொடுமை செய்தார்களே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

தமிழர்களின் வீடுகள் கடைகள் என இனக்கலவரங்களின் போது தீக்கிரையாக்கப்பட்டனவே அவற்றை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

போர்க் காலங்களில்கணவனுக்கு முன்னால் மனைவியும் பெற்றோருக்கு முன்னால் பெண்பிள்ளைகளும் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனரே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

மனைவிக்கு முன்னால் கணவனும் பெற்றோருக்கு முன்னால் பிள்ளைகளும் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனரே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

கைதுசெய்யப்பட்டட ஆண்களும் பெண்களும் போர் விதிமுறைகளுக்கப்பால் கைகள் பின்னால் கட்டப்பட்டு தலையில் சுட்டுக் கொன்றார்களே அதை மறககச் சொல்லுகின்றீர்களா?

கைது செய்யப்பட்ட இளம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு சுட்டுக் கொன்றார்களே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போய் வருடக் கணக்காகியும் வருவார்களா வரமாட்டார்களா என ஏங்கித் தவித்து நிற்கும் கணவன் மனைவி பெற்றோர் எனக் கண்ணீருடன் காத்திருப்பதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?.

இதில் எந்தக் கொடுமையை தாங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள். இந்தக் கொடுமையை அனுபவித்தவர்கள் அப்பாவாய், அம்மாவாய், அண்ணனாய், தம்பியாய், அக்காவாய், தங்கையாய், கணவனாய், மனைவியாய், மாமனாய், மச்சானாய் நண்பனாய் நண்பியாய் உள்ள புலம்பெயர் தமிழர்களின் தொபு;புள் கொடி உறவுகளே.

தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்களே அதைப்போலத்தான் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.

ஆன்மீகவாதி திரு.சுகி சிவம் அவர்களே! இலங்கைத் தமிழனின் அவல வாழ்வை ஒரு முறை வாழந்து பாருங்கள். அறிவுரை சொல்வது எவ்வளவு எளிது என்பதை புரிந்து கொள்வீர்கள். இந்த அறிவுரையை இலங்கை ஜனாதிபதியிடமும் புத்த குருமாரிடமும்ஏன் தமிழர்களுக்கு இப்படிக் கொடுமைகளைச் செய்கிறீர்கள் எனத் தங்களால் சொல்ல முடியுமா?.

gtn

தமிழ் கடவுள் முருகன் என்று சொல்லிக் காசு பார்ப்பவர் .கோவில்களில் வயிற்றைக் கழுவிக்கொள்ளும் சோம்பேறிகளில் இவரும் ஒருவர். விட்டுவிடுங்கள்.

இந்தப் பன்னாடையை அழைக்காதீர்கள் என்று எவ்வளவு சொன்னோம், லண்டன் கோவில் காறர் கொடுத்த பவுண்ச்கள் எத்தினை ஆயிரம்? ஈழத் தமிழனின் காசில் வாழ்க்கை ஒட்டும் இந்த ஆன்மிக வாதியை வளர்த்தவர்க்ளைச் செருப்பால் அடிக்க வேணும்.இனியாவது திருந்துங்க.

  • கருத்துக்கள உறவுகள்

காசுக்காக பேசும் ஒருவரிடம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இருக்குமா?

அதை எதிர்பார்க்கலாமா....? :(

Edited by விசுகு

விசுகு அதனால் தான் சொன்னேன் இப்படியானவர்களை வளர்த்து விட்ட லண்டன் கோவில் காரரை செருப்பால் அடிக்க வேணும் எண்டு.காசு கொடுப்பதனால் தான் இவன் போன்றோர் வளர்ந்தார்கள், இவனைப் பற்றிச் சொல்லவில்லை.

இன்னொன்றையும் சொல்ல வேணும் தலித்தியம் கதைத்தவர்களும் ஆன்மீகம் கதைதவர்களும் இன்று ஒருங்கு படும் புள்ளி இது தான்.இனி அரசியல் பேசாதீர்கள். நாங்கள் போரின் மூலம் உங்கள் அரசியலைப் புதைத்து விட்டோம்.இனி புனருத்தாணம் சமூக சேவை என்று நாம் உருவாக்கி உள்ள அரசியல் யதார்த்ததை நிலைப் படுத்துங்கள் என்பதே.இந்தப் போர் யாரால் எதற்காக நடத்தப் பட்டதோ அதை மறந்து விடுங்கள்.போரின் முன்னர் எவ்வாறு நீங்கள் அடங்கி வாழ்ந்தீர்களோ அவ்வாறே இருங்கள்.

கடைந்தெடுத்த காடையன், களிமண் மூளையன், "சொறி சவத்தையும்" ஈழமண்ணுக்கு வந்து பார்க்கும்படி அழைக்குமளவுக்கு அறிவு மங்கிவிட்டதா?

சொறி சவம் = சுகி சிவம்

  • கருத்துக்கள உறவுகள்

அவனை சொல்லி குத்தமில்லை.. ஏதோ "அரிஸ்டாட்டில்" "சாக்ரட்ஸ்" பேரன் போல இவன் சன் டிவில உடுகிற பீலீமில் மயங்கி அழைத்தவர்களை முதலில் கவணிக்கணும்... :(

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் சொல்வேந்தர் சுகி சிவம், சிட்னி, மெல்பேன் வருகைக்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம்.

சுகி சிவம் என்று அழைக்கப்படுவதுடன் “சொல்வேந்தர்” என்ற பட்டத்தினை பயன் படுத்தி சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுகின்றார்.

இவருடைய கருத்து “வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் வீர வசனம் பேசி அரசியல் பேசவேண்டாம் அங்கு பாதுகாப்பு குறைகிறது” “சீனா இலங்கையுடன் நட்பு கொண்டுள்ளது, அதனால் இந்தியா சிறிலங்காவுடன் நட்பாகிறது, அதே போல் சிங்களவர்களுடனும் தமிழர்கள் நட்புடன் வாழவேண்டும்” என்று கூறுகின்ற இவரை நீங்கள் பணம் செலவு செய்து பயண அனுமதி கொடுத்து இங்கு வந்து இதை சொல்ல விடுவீர்களா!

நடந்தது நடந்து முடிந்து விட்டது அதைப் பற்றி கதைக்க வேண்டாம் என்று கூறும் இவர,; தமிழர்களுக்கு ஒரு துரோகியாக செய்படுகின்றார்.

தமிழ் மக்களின் விடிவிற்காய் மரணித்த மாவீரர்களையே இவர் மறக்க சொல்லுகிறார்.

சுகி சிவம் நினைத்து பார்க்க வேண்டும், புலத்தில் தமிழர்கள் குரல் கொடுக்காமல் விட்டால், சிங்கள அரசு தமிழினத்தை அடி சுவடு இல்லாமல் அழித்துவிடும்.

சிங்கள இராணுவத்தின் கட்டுப்பட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் மாவீரர்நாள் நினைவுகள் நடைபெற்றது. புலத்தில் தமிழர்கள் வீரவசனம் பேசுவதால் அங்கு இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையாம் என்று சொன்னவர், இதற்கு என்ன பதில்! சொல்லப்போகிறார்!

சுகி சிவம் போன்று சிங்கள அரசுடன் இணைந்து செயற்படும் குழப்பவாதிகளை அனைத்துத் தமிழ் மக்களும் தெளிவாக புறக்கனிக்க வேண்டும்.

போர் முடிந்து மூன்று வருடங்களாகியும் எமது இனம் சிங்களிவனின் பல துன்பங்களும் இன்னல்களுக் இடையயே வாழந்து கொண்டிருக்கிறது.

பல கலாச்சார சீரழிவுகள், துஸ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதெல்லாம். அவருக்கு தெரியவில்லையா???

வீடு மட்டும் கொடுத்தால் சரி என்று கூறுகிறார். இதில் இருந்து எமக்கு எல்லோருக்கும் தெரிகின்றது. சிறிலங்கா அரசை காப்பாற்றும் நடவடிக்கையில் முழுமையாக செயற்படுகின்றனார் என்று.

அவர் உரையாற்றியுள்ள பல வீடியேர் இணைப்புக்களை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது இதனை பாருங்கள்.

- eelampress

  • கருத்துக்கள உறவுகள்

அடே அடே ஏங்களுக்கு தெரியும் நீ உன்ட வேலையை பார்.....நல்லாய்தான் மாற்றுக்கறுத்து மாணிக்கங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கடவுள் முருகன் என்று சொல்லிக் காசு பார்ப்பவர் .கோவில்களில் வயிற்றைக் கழுவிக்கொள்ளும் சோம்பேறிகளில் இவரும் ஒருவர். விட்டுவிடுங்கள்.

ஆட்டு மந்தைகளை துறக்க சொல்லி தான் அள்ளும் ஆன்மீக பிசினஸ்மான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.