நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.
நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.
எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும் அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?
தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா?
நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈
அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி?
விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்
அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது.
மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?
அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது.
எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.