Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. சண்டமாருதன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    9
    Points
    2554
    Posts
  2. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7401
    Posts
  3. மல்லையூரன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    4
    Points
    10836
    Posts
  4. ரதி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    14998
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/16/14 in all areas

  1. நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை. ஒரு இந்தியப் பார்ப்பனனுக்கு இஸ்லாத்தின் மீதிருக்கும் வெறுப்பை விட ஈழத்தவர் மீதான வெறுப்பு அதிகம் என்பது இவர்கள் மண்டையில் என்றும் ஏறப்போவதில்லை. இலங்கைத் தமிழன் இராவண வம்சம் என்ற வெறுப்பில் பார்க்கும் வடநாட்டவர்களே அதிகம். இந்திய அதிகாரவர்க்கம் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட சூழ்ச்சிகளி்ல் இந்த உள்ளீடும் தாராளமாக இருக்கின்றது. இன்றுவரை இலங்கைப்படைகள் தமிழக மீனவர்களை கொன்றுதள்ளுகின்றது. இந்திய அதிகாரவர்க்கம் எந்த வகையிலும் இந்த விசயத்தில் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கியது கிடையாது. இந்திய இந்துத்துவத்தை பொறுத்தமட்டில் தமிழ மீனவனை விட இலங்கைப் பவுத்தர்களின் நட்பே மேலானது. இந்திய இந்துத்துவம் பற்றிய புரிதல் யாழ்பாணத்தில் தம்மை இந்து என்று பிதற்றுபவர்களிடம் சற்றும் கிடையாது. இந்திய இந்துத்துவம் என்பது இந்தியாவை சாதிவாரியாக கூறுபோட்டு மதவாரியாக பிளவுகளை ஏற்படுத்தி மக்களை சிதைத்து சூட்சும அரசியலூடாக வெறும் இரண்டு மூன்று வீத பார்ப்பான் இந்திய மைய அரசியலை ஆழ்வதற்கான உத்திதான் இந்துத்துவம். இந்துத்துவம் என்பது சூட்சும அரசியல் தவிர ஆன்மீகம் கிடையாது. ஈழத்தவர்கள் தமது சைவத்தை அதன் குறைகளை கழைந்து தனித்துவத்துடன் நல்லதொரு ஆன்மீகமாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனால் தமது தலைகளை கொண்டுபோய் இந்துத்துவாக்களிடம் ஓட்டுவதில் குறியாய் உள்ளனர். இதற்கும் ஒரு காரணம் உண்டு அது இந்தியாவில் பார்ப்பான் சாதியில் மேலோங்கியிருப்பதைபோல் ஈழத்தில் இவர்கள் இந்துத்துவத்தை வைத்து சாதியின் மேன்மையில் உயர்வை காட்ட முற்படுவதே அதன் பிரதான காரணம். சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யவேண்டும் கங்கணம் கட்டுபவர்கள் இவர்கள். தமிழ்நாட்டுப் பிள்ளை மார்களும் ஆதீனங்களும் பபார்ப்பனனுக்க செம்பு தூக்கி சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இவர்களுக்கு பக்கபலமாய் கடிதங்களும் ஆலோசனை ஆதரவுகளும் வழங்குவதில் காலகாலமாக யாழ்ப்பாண பிள்ளைமார்கள் பின்நிற்பதில்லை. பின்னர் வெட்கமே இல்லாமல் தமிழும் சைவமும் இரு கண்கள் என்பார்கள். இந்த கூறுகெட்ட தனத்தை என்னவென்று சொல்வது!! http://eswaramoorthy.webs.com/naadumnaveenarum.html இந்தப் புத்தகத்தில் சைவருக்கும் நவீன சைவருக்கும் இடையிலான வாக்குவாதம் உள்ளது. நவீன சைவம் என்பது சோமசுந்தர நாயக்கர் தொட்டு வள்ளலார் மறைமலலையடிகள் என தொடர்ந்து சைவத்தை சீரமைக்கவும் தமிழ் மொழியை முதன்மையாக்கி தமிழ்த்தேசீயத்துக்கு அடிகோலவும் வழிவகுத்த ஒரு தரப்பு. எங்கே சாதி ஒழிந்துவிடுமோ என்று இது அத்தனைக்கும் முரணாக இருந்தது அடுத்த தரப்பு. சீர்திருத்தத்திற்கு முற்றுமுழுதாக எதிர்ப்பாளர்களாக இருந்ததில் நாவலரின் தலையாய பங்கில் இருந்து ஏராளமான யாழ்ப்பாண பிள்ளைமார்களின் பங்களிப்பு இருந்தது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இங்கே சிலர் இருக்கின்றர்கள் தடாலென தந்தை பெரியாரை தாக்குவதில் குறியாய் இருப்பவர்கள். இந்த நவீன சைவத்தின் அடுத்த கட்ட வடிவம் தான் பெரியாரின் எழுச்சி என்பது இவர்களுக்குப் புரியாது. இந்த சைவப் பிள்ளைமார்களை திருத்தவே முடியாத என்ற நூற்றாண்டுக்குமேற்பட்ட முயற்சியின் தோல்வியே கடவுளே இல்லை என்ற முடிவு நோக்கித் தள்ளியது. எனவே, சைவத்தையே அதன் சாதீய வர்க்க அடிப்படைகளில் இருந்து சீர்திருத்த முடியாதபோது அதுவே இப்போது இந்துத்துவவா என்று பலிபீடத்தில் கொண்டுபோய் தலையை வைக்கும் போது அதையா திருத்த முடியும்? திருத்த முடியாத இந்தக் குப்பையை தலைமுழுகுவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்பது எப்போதோ எடுக்கப்பட்ட முடிவு. ஆன்மீகத்துக்கு மதம் தேவையில்லை. நானும் நீயும் இந்து ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்ற இந்துமத நிலை உலகின் எந்த மூலையிலும் கிடையாது. எவன் எந்த மதத்துக்கு போனால் என்ன விட்டால் என்ன. மனிதாபிமானத்தை மனிதநேயத்தை விரும்புகின்றவன் இந்த மதத்தில் இருந்துகொண்டே அதை கருவறுக்க வேண்டும்.
  2. http://tamizl.com/?p=61871 இராவணன் தமிழ் மன்னன் என்கின்றார்கள். நீங்களோ இராவணனை சிங்களவர்களுடன் சம்மந்தப்படுத்தி இந்துத்தவா ராமனுடன் ஐக்கியமாகின்றீர்கள். இது ஏன்? இராவணன் எமது பரம்பரை சிவனை வழிபடுகின்றவன் என்று சொல்லவேண்டியதுதானே? அதில் ஏதேனும் கௌரவப்பிரச்சனை உண்டோ? கம்பன் கழக ஜெயராசு ஏதாவது சொன்னாரோ? அப்படியானால் இதுவரை காலமும் இந்திய சிங்கள பேரினவாதத்திற்கு உதவியதும் தமிழர்களை அழித்ததும் அழிக்க உற்றதுணையாய் நின்றதும் ராஜீவ் சோனியா செய்த தவறு மற்றபடி ஈழத்து இந்தூக்கள் மீது இந்திய இந்தூக்கள் அளவு கடந்த பாசத்துடன் இருக்கின்றார்கள்? . வடநாட்டவன் எவனோ அவனுக்கு தெரிந்த மொழியில் பூசையை செய்யட்டும் தமிழன் ஏன் தனக்குத் தெரியாத பாசையில் ஏன் பூசை செய்யவேணும்? இதைத்தானே நூறு வருடங்களுக்கு மேலா கேக்கிறாங்கள். என்ர தாய்மொழியில் பாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க அவன் யார்? உங்கட மதத்தில உள்ள சாதீயத்தை களைவதைப்பற்றி கதைக்கேக்க ஏன் அதைவிட்ட பௌத்தத்திலும் இஸ்லாத்திலும் சாதி இருக்கு என்று வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போகின்றீர்கள்? ஆக உங்கட மத்தில உள்ள கோளாறுகளை திருத்த முன்வர மாட்டீர்கள் அங்கயும் இருக்கு இங்கயும் இருக்க என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள் இதைத்தான் சுருக்கமாக சொல்லியாச்சு. நீங்கள் நாவலர் பிள்ளைமாரின் மிச்ச சொச்சம். உங்ளை திருத்த அந்த சிவனாலும் முடியாது. கடசியா நாலு தமிழன் மிச்சமிருந்து சிங்களவன் அவர்களைக் கொல்ல வரும்போதும் நான் அந்தச் சாதி நீ அந்தச் சாதி என்று கத்திக்கொண்டே சாவீர்கள்.
  3. 33 கோடி தேவர்கள் இருப்பதாக கூறப்படும் இந்து-சைவ மதத்திலிருந்து பிரிந்து சென்று இன்னொரு கடவுளை வழிபட ஆன்மீக தேவை எழுவதற்கிடமில்லை. இது 33 கோடி + 1 ஒன்றாக் அமைந்தாலும், சனாதன மதமான இந்து மதத்தில் அந்த தத்துவமும் உள்ளடங்கியிருக்கு. சகல மத தத்துவங்களை மட்டும் அல்ல மதமில்லா தத்துவங்களையும் நாஸ்திகஸ்தையும் உள்ளடக்கியது இந்துமதம். நம்பிக்கைதான் மதம் என்பதால் கடவுள் இல்லை என்று நம்புவானின் நமபிக்கையையும் ஏற்று அவனையும் இந்துவாக வைத்துக் கணித்துக்கொள்வது இந்துமதம் மட்டுமே. மற்ற எந்த மதத்திலும் நாஸ்திகன் ஒரு பாகமாக இருக்க முடியது. இளங்கோ, வள்ளுவன், திருநாவுக்கரசர், ஜே.கிருஸ்ணமூர்த்தி, தமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவ்லர், விபுலானந்தர் போன்று இளமையில் மதம் மாற்றப்பட்டு பின்னர் திரும்பி வந்தோர் மற்றையைய மதங்களை தெரிந்துதான் திரும்பி வந்தனர். இவர்களின் அகன்ற கண்களில் கண்டது, எல்லோருக்கும் அவர் அவர் மதங்களை பின்பற்ற அரசியல் உரிமை இருக்க வேண்டும் என்ற வறட்டு சட்டவிவாதம் மட்டும் அல்ல, எந்த மதத்தில் இருப்பவனுக்கும் எல்லா மதத்தையும் பின் பற்றவும் உரிமை வேண்டும் என்ற தனி மதம்னித உரிமையையை போதிக்கும் சனாதனதர்ம மான இந்து மதமே. பரம் கம்சர் சில் காலங்களில் பெண்களை போல உடுத்துவார். அன்னை சாராதவை மத்தியில் நிறுத்தி பூசை செய்வார். பாதிரிகள் போல நடந்து கொள்வார். குல்லா கூட போடுவார். தான் முகமதியத்தை,கிறிஸ்தவத்தை பின்பற்றி அந்த அந்த கடவுள்களை கண்டத்தாக சீஸ்சர்களுக்கு கூறின்னர். (இன்று ஆராச்சிகளால் கூறப்படும், வெள்ளையான, மூக்கு நீண்ட, நேர்த்தலைமயிர் உருவம் யேசுபிரானது அல்ல என்றதை பரம கம்சர் தான் கண்ட ஜேசு, சுருள்தலையரும், சப்பை மூக்கும் உள்ளவர் என்று-சரியான ஜேசு காலத்து மத்திய கிழக்காரின் உருவம்-சொன்னத்தை மகாநாத குப்த்தா 100 வருடங்களுக்கு முன்னர் தனது வரலாற்றில் காட்டியுள்ளார்).எந்த கடவுளையும் இந்து மதத்திலிருந்தே இராமகிருஸ்னர் தேடிக்காண்பித்திருக்க மதம் மாறிக் கடவுளை தேடுவதென்பது இராமகிருஸ்னரை விட ஆன்மிகதேவை உள்ளவராக தன்னைத்தான் காட்டும் முயற்சி. இந்து மதத்திற்குள் சாதியை திணித்தவர்கள் ஆரிய மேற்கத்தியர் பின்பற்றும் மதங்களும், ஆரியருமே. அது அவவாறு இருக்க இந்து மதத்திலிருந்து மதம் மாறி ஆன்மிகத்தை காண்போம் என்று கூறுவோரின் கதை குடிசை வீட்டில் ரோச்சை தொலைத்த கிழவியின் கதை போன்றது. வீட்டுக்காறி இரவில் குழந்தைகளின் தேவைக்காக ரோச்சை எப்போதும் ஒரே இடத்தில் வைப்பாள். கிழவிக்கு பகலிலும் சரியாக கண் தெரியாது. இரவு எங்கோவோ ரோச்சை எடுத்து சென்ற கிழவி தடுமாற்றத்தால் ரோச்சை விட்டு விட்டு வந்து விட்டது. மறுநாள் பகல் ரோச்சை வைத்த இடத்தில் இடத்தில் காணாததால் வீட்டுக்காறி கிழவி மீது பாய்ந்தாள். கிழவி "இப்போது வெளிச்சமாக இருக்கிறது, எனக்கு கண் தெரியாது, இரவு வந்தால் நான் அந்த இடத்துக்கு நேராக போய் எடுத்து வந்துவிடுவேன் என்றதாம். ஆனால் தான் ஏன் ரோச்சை எடுத்து சென்றது என்ற சின்ன விளக்கம் கிழவிக்கு இல்லை. அதாவது இந்து மத்த்தில் இருந்த போதே குருடர்களாக வாழ்ந்து இந்து மதத்தை தெரிந்து கொள்ளாத முட்டாள்கள் மற்றைய மதத்தையும் அறிந்து ஒப்புவமைகண்டு விட்டதாக துள்ளிக்குதிப்பது கோணங்கித்தனம். இருட்டின் போது வெளிசசத்திற்காக ரோச்சை எடுத்து சென்று தொலைத்த தடுமாற்றம் பிடித்த கிழவி இருட்டுவந்தால் ரோச்சை கண்டு பிடித்துவிடலாம் என்று போதிப்பது நகைச்சுவை. , இந்து மதத்தில் இருந்து மதம் மாறுவது தமது சட்டப்படியான உரிமை என்றதை நிர்ணயம் செய்துகொள்ள மாறுகிறார்களாயின் அது வேறு. சாதிப் பாகுபாடு இருப்பதால் இந்து மதத்தில் கடவுள் இல்லை என்று விதண்டவாதம் வைக்க முயல்வது வேறு. அதிலும் சாதிப்பகுபாட்டு ஏற்பட காரணமாக் இருந்த மதத்தினர் அதை வைப்பது துரோகம். முகமதிய, கிறிஸ்துவ, யூத மதங்களை பின்பற்றும் ஆரியரால் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருக்குள் திணிக்கப்பட்டது தான் சாதியம். அதை அறியாதவர்கள் போல அந்த இருட்டுக்குள் திரும்ப சென்றால் தொலைத்த ரோச்சை கண்டுவிடுவோம் என்று தடுமாற்றக்கார கிழவி மாதிரி பேசுவது ஏமாற்றுத்தந்திரம். அமெரிக்காவில் படித்தவர்கள் மதம் சாரா அரசியல் அமைப்பை உலகத்திற்கு ஆக்கி காட்டி சாதனை ஏற்படுத்தியது, அவர்கள் கிறிஸ்த்தவ மதம் ஆட்சி பீடம் ஏறாமல் இருக்க செய்த மாபெரும் சாதனையே அது. அமெரிக்க கிறிஸ்தவத்தில் கறுப்பர்கள், செவ்விந்தியர்கள் அடிமைகளாக காணபட்டமையாலேயே அவர்கள் அதை செய்தார்கள். இந்தியாவில் மட்டு மல்ல முகமதியர் ஆண்ட இடமெங்கும் இஸ்லாமியர் வரி கொடுக்காதிருக்கும் போது ஆளப்படும் மதங்கள் மட்டும் வரி கொடுக்க வேண்டும் என்று தண்டம் இறுத்தமைதான் இஸ்லாமியரின் சரித்திரம். மதத்தை திருத்த முடியாவிட்டாலும் மேற்கு நாட்டு கிறிஸ்த்தவர்கள் ஜனநாயக முறைகளை ஆட்சி முறையில் ஏற்றுக்கொண்டுவிட்டதால் பணம், இருப்பிடம், வேலை கொடுத்து மதம் மாற்றுவதுதான் அவர்களின் நடத்தை. ஆனால் மத்திய கிழக்கில் இந்து பெண் மொட்டாக்கு போடாமல் பொட்டு வைத்து செல்ல முடியாது. அந்த மத்தை பின்பற்றுவோர் இந்து மத்தை பற்றி பேசும் பேசுவது தடுமாற்ற கிழவின் பேச்சை விட நகைப்பானது. சுத்த மத வெறியர்கள் சனாதன மத்தினரான இந்துக்களின் அடிப்படை சைவ சித்தாங்கள் என்ன மாதிரியான மதமொன்றை பற்றி சொல்கின்றான என்ற எள்ளவும் தெரியாத தங்களை அறிவை காட்டுவதுதான் இந்துக்களில் ஏர்ஹு ஒருவைகை இனம் காணமுடியாத ஒரு வெறி இருப்பதாக காட்ட முயலும் குதர்க்க கதை. அப்படி இனம் காண முடியாத உண்மை வெறி இங்கே என்ன என்றால் மதம் மாறாவிட்டால் பெண் கொடுக்க மறுக்கும் மதம் மீது குற்றம் காண முடியாமல் பொய் சொல்லி தன் மதத்தை இழிவு படுத்துவோரை ஏற்கமறுப்போறை வெறியகளாக காட்ட முயலும், தனினத்தை தூற்றும் ஒரு துரோகத்தன வெறிதான் அவர்களால் தங்களுக்குள் இனம் காண முடியாமல் இருக்கிறது.
  4. முரண்பாட்டை வளர்ப்பது நீங்கள். நான் ஆடுத்த மதத்தில் குறை கண்டுபிடிக்கவோ மூக்கை நுழைக்கவோ எந்தக் கருத்திலும் செய்யவில்லை. என் சார்ந்த மதத்தில் என்ன பிழையோ அதிலேயே எனது விமர்சனம் நிற்கின்றது. வேறு மதங்களில் உள்ள பிரச்சனை பற்றி கதைக்கவேண்டியது அவர்கள் தவிர நானில்லை. அவ்வாறு நான் கதைத்தால்தான் அது மதப்பிரச்சனை. மத முரண்பாட்டை வளர்பதில் கங்கணம் கட்டி நிற்பது நீங்கள். எங்காவது நான் கிருத்துவத்தில் அந்தப் பிழை இருக்கின்றது இஸ்லாத்தில் இந்தப் பிழை இருக்கின்றது என்று சொல்லியுள்னோ? சொன்னால் அது மதப்பிரச்சனை. அதை நீங்கள் எப்படித்தான் தூண்டினாலும் நான் செய்யப்போவதில்லை. ஏனெனில் நான் மத முரண்பாட்டிற்று எதிரானவன். சைவம் இந்துத்துவம் தனது சாதீய மத வெறியால் தமிழர்கள் வாழ்வை சுடுகாடாக்குவதில் பெரும் பங்கு வகித்தது. இன்னும் வகித்துக்கொண்டிருக்கின்றது. அது சார்ந்த விமர்சனத்தை நான் எப்போதும் செய்வேன். பிழை இருக்கும் வரை அதை திருத்த மறுக்கும் உங்கள் போன்றோர் இருக்கும் வரை விமர்சனம் என்பது இருக்கும் தவிர மத வேற்றுமைகளை வளர்க்கும் உங்கள் எண்ணம் எனது கருத்தில் இருக்கப்போவதில்லை. அதனால் ஏற்பட்ட அழிவுகள் வெளிப்படையானது. எனது எல்லை இந்து சைவம் போன்றவற்றுக்குள்ளானது என்பதில் நான் தெளிவாய் இருக்கின்றேன். இங்கு சிலர் என்னை கிருத்துவத்தில் கொண்டுபேய் செருகினாலும் சரி இஸ்லாத்தில் கொண்டுபோய் செருகினாலும் சரி இல்லை பௌத்தத்தில் கொண்டுபோய் செருகினாலும் சரி நான் யார் என்பதில் எனக்குத் போதிய தெளிவுண்டு. எக்காலத்திலும் சொந்த மதத்தில் உள்ள குறைகளை கழைய மறுக்கும் உங்களுக்கு அடுத்த மதத்திலும் அப்படித்தான் அங்கேயும் இப்படித்தான் இங்கேயும் இப்படித்தான் என்ற சாக்குப் போக்கும் விரோதமும் அவசியம் தவிர எனக்கில்லை.
  5. இரு நிறுவனங்கள் உள்ளதாக கற்பனை செய்துகொள்வோம். ஒன்று நிறுவனம் "அ". மற்றையது நிறுவனம் "ஆ". நிறுவனம் "ஆ"வுடன் ஒரு ஒப்பந்தம் போட முன்வருகிறது நிறுவனம் "அ". ஆனால் விலை நிர்ணயம் நிறுவனம் "ஆ"வுக்கு கட்டுப்படியாகவில்லை. அதனால் மறுத்துவிடுகிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பின்வரும் காலங்களில் வேறு எந்த ஒப்பந்தங்களும் எங்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்காது என்கிறது நிறுவனம் "அ". வருங்காலத்தை எண்ணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது நிறுவனம் "ஆ". இந்த நடைமுறை சட்டப்படி தவறு. பொருளாதாரத்தைக் காட்டி பணியவைத்தல் தவறு. இது Economic Duress எனப்படும். கையெழுத்துப் போடும்போது யோசித்திருக்க வேண்டியதுதானே என்று நிறுவனம் "ஆ" வைப்பார்த்து நீதிமன்றம் கேள்வி கேட்காது. அதுபோல, பொருளாதார தாழ்வு நிலையால் அல்லது திருமண நிமிர்த்தத்தால் அல்லது காதலால் மதம் மாறுபவர்களை குற்றம் சொல்ல முடியாது. மாற்றுபவர்கள்தான் அந்தக் குற்றத்தை ஏற்க வேண்டும்.
  6. இல்லை தூயவன் சாண்டம்ருதன் இஸ்லாமிய பின்னனி கொண்டவர் அவரது கருத்துக்களை வாசித்தால் தெரியும், அதே போல் ரகுநாதன் மேலான விமர்சனமும் ஏற்க முடியாது நீங்களும் நானும் எப்படி சைவ மதத்தை நேசிக்கிறொமோ அதே போல் தான் அவரும், நீங்கள் கத்தொலிக்க மதம் சம்பந்தமான மத மாற்றத்தையும் ஜெனொவா, அலுலொயா போன்றவற்றிக்கான மத மாற்றத்தையும் கலந்து குழப்புகிறீர்கள் ஒரு சைவ மததவன் கத்தோலிக்க மதம் மாறுகிறார் என்றால் அது சைவ மதத்தின் தவறு உதாரணமாக அது திருமணத்துக்காக என்றால் அது அந்த ஆணின் தவறு ஒரு கிறிஸ்த்தவ பெண்ணை காதலித்துவிட்டு திரும்ணம் முடிக்கும் போது அவர் நீர் மதம் மாறினால் தான் நான் திருமணம் செய்வேன் என்று கூறினால் அதையே ஏன் சைவ மதத்தவராலும் கூறமுடியாத் உள்ளது, இங்கே தவறு சைவ மதம் மேல் தான். அதே போல் ரகுனாதனே கூறினார் ஊரில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கு கத்தோலிக்க் குடும்பம் உத்வி செய்து இறுதியில் அந்த பெண் மட்டுமல்ல அவரின் குடும்பமே கத்தொலிக்க மத்திற்கு மாறி விட்டது, இங்கே உது யாருடைய தவறு அதுவும் சைவ மத்தவ்ரின் தவறு தான், அந்த பெண் அவுஸ்திரெலியா வந்த போது சைவ மதத்தவர் எல்லாம் எங்கே சென்றார்கள் அவருக்கு உதவி செய்து இருக்கலாமே அப்படி செய்து இருதால் ஒரு குடும்பத்தை சைவ மதம் இழக்க வேண்டி இருக்காதே, ஆனால் சும்மா இருது விட்டு அவர்கள் மதம் மாறினால் பிற்கு கூக்குரல் இட்டு பிரியோசனம் இல்லை,
  7. நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் தமிழ் ஈழம் அடைத்தே தீரப்படும், உங்களுடைய ஆட்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் சைவர்களும், கிறிஸ்த்தவர்களும் தமக்குள் சண்டை பிடிக்க வேண்டியது இல்லை, போவதும் இல்லை அண்மைக்கலமாக இரணைமடு நீரை வைத்து யாழ்-வன்னி ப்ரச்சனையை ஆரம்பித்தீர்கள் அது பலிக்கவில்லை ,அதுக்கு முன்னர் உதயன் பத்திரிகையை கவிதையை வைத்து பிரச்ச்னையை ஆரம்பித்தீர்கள் அதுவும் நடக்கவில்லை இப்போது புதிதாக சைவம்-கிறிஸ்த்தவ பிரச்சனையை ஆரம்பித்துளீர்கள், இது என்னத்தை காட்டுகிறது என்றால் தமிழ் ஈழம் என்ற இலக்கு நெருங்குகின்றது வெகு தொலைவில் இல்லை என்பதே அதான் பிரச்சனையை கிளப்பி அதை குழப்ப முயற்சி செய்கிறீர்கள், ஆனால் தமிழ் ஈழம் நிறுவப்பட்டு அதன் பின் தமிழர் அல்லாதோர் எல்லம் வெளியேற்ற்பபடுவார்கள் அல்லது மலேசியா போல் இரண்டாம் தர பிரஜை ஆக்கப்படுவார்கள், தமிழ்ருக்கு உரிய மதம் என்றால் அது சைவம்,கிறிஸ்த்தவம்,புத்த மதம் மூன்றும் மட்டுமே.
  8. ஆம் பாதிரிக்கு காசு. உங்களுக்கு வாழ்வு. வின், வின், சிச்சுவேஸன்னு.. கிறிஸ்தவர்களாக மாறுங்கள். மனிதர்களாக வாழுங்கள். ஆளை ஆள் காட்டிகொடுத்து வாறவன் போறவனிடம் எல்லாம் தர்மஅடி வாங்கியதை தவிர இந்துவா இருந்து என்னத கிழித்தீர்கள்.
  9. ராஜீவ் காந்தி ஒரு இந்து அல்ல. இந்துக்களை ஏமாற்ற இந்துவாக நடித்த ஒரு வேடதாரி. காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி வரை உள்ள எந்த ஒரு இந்துக் குழந்தையும் சூலம் இந்து அடையாளம் என்று சொல்லும். அது சிவனின் ஆயுதம். காளியின் ஆயுதமும் கூட‌. இந்திய இராணுவம் அன்று வந்திருக்காவிட்டால் யாழ்ப்பாணம் சுடுகாடாகி, ஈழப்போராட்டம் 86ம் ஆண்டு முற்றுப்பெற்றிருக்கும். பல் ஆயிரம் யாழ்ப்பாணத்து இளைஞ்ஞ‌ர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். இன்னும் பல்லாயிரம் பூசாவில் இன்றும் அடைபட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 86ம் ஆண்டு கிழக்கு மாகாணம் பலத்த இனப்படுகொலைக்கு ஆளாகி அங்கு போராட்டம் ஒரு முடிவிற்கு வந்திருந்தது. மக்கள் அனுபவித்த இன்னல்களுக்கு அங்கு ஒரு எல்லையோ அல்லது ஒரு அடிப்படை மனித கௌரவமோ அங்கு இருக்கவில்லை. அத்துலத் முதலி அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இதைச் செய்தான். இதன் பின் வவுனியாவில் இருந்து இன அழிப்பை தொடங்கி ஆனையிறவை அடைந்தான். முல்லைத்தீவையும் மன்னாரையும் "துப்பரவு" செய்து அந்த இரண்டு மாகாணங்களிலும் விமான இறங்கு பாதைகளை போடும் முயற்சியிலும் இறங்கினான். அந்த சமயத்தில் ஈழப்போராட்டம் பளைக்கும் மூளாய்க்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்தது. சிங்களப்படை உச்ச பலத்தில். குறுகிய ஒரு காலத்தில் வடமராட்சி வீழ்ந்தது. நாலா பக்கத்தில் இருந்தும் முன்னேறும் சிங்களப்படை யாழ்நகரை நோக்கி முன்னேறி யாழ்நகரை, அண்மைய முள்ளிவாய்க்கால் நிலைக்கு கொண்டுவருவதே அத்துலத் முதலியின் திட்டம். யாழ்ப்பாண நகரம் முள்ளிவாய்க்கால் ஆகியிருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும் ? சிங்களப்படையை நிறுத்தக் கூடிய சக்தி புலிகள் அமைப்பிடம் இருக்கவேயில்லை. இந்திய இராணுவம் வந்ததால் யாழ்மக்கள் தப்பினார்கள். போராட்டமும் தப்பியது. அப்போது பிரபாகரனுக்கு 32 வயது. 32 வயதில் பூகோள அரசியல் தெளிவு இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் பிரபாகரனுக்கு இந்தியாவிற்கு எதிராக யுத்தமொன்றைத் தொடங்க ஆலோசனை யார் கூறியது ? பிராந்திய வல்லரசு ஒன்றிற்கு எதிராக யுத்தமொன்றைத்தொடங்கி வெல்லலாம் என்று அரசியல் ஆலோசனை யார் கூறியது ? சிங்களப்படையிடமே பெருத்த இன அழிப்பை சந்தித்து அழிய இருந்த போராட்டத்தை பிராந்திய வல்லரசை எதிர்த்து நிற்க ஆலோசனை யார் கூறியது ? எம்மக்களையும் இந்தியாவையும் பிரிக்க யார் ஆலோசனை கூறியது ? எம்மக்களின் அழிவைக் கூடப் பொருட்படுத்தாமல், வெல்வதற்கான சாத்தியக் கூறுக‌ள் அறவே இல்லாத ஒரு சூழ்நிலையில் 12 லட்சம் இராணுவத்திற்கு எதிராக எம்மக்களை நிற்கவைக்க பிரபாகரனுக்கு யார் ஆலோசனை கூறியது ? இந்த ஆலோசனையின் அடிப்படை நோக்கம் ஈழமா இல்லை இந்திய எதிர்ப்பு வாதமா ? இந்தியாவை பலவீனப் படுத்துவதே அப்போதைய அமெரிக்காவின் திட்டம். அப்படியானால் இந்தியவிற்கு எதிரான போர் அமெரிக்கத் திட்டத்தின் ஓர் அங்கமா ? அப்படியானால் அதுவரை இன அழிப்பில் அழிந்துபோன எம்மக்கள்.. ??? இந்தியவிற்கு எதிரான யுத்தத்தில் அழிய இருக்கும் எம்மக்கள்.. ?? இந்த இந்திய எதிர்ப்பு யுத்த ஆலோசனை வளங்கிய ஆலோசகர் பிரபாகரனின் ஈழலட்சியத்தை "பாவித்து", எம்மக்களை பலிகடாக்களாக்கி, அமெரிக்காவின் இந்திய எதிர் திட்டத்தை நுணுக்கமாக கொண்டு போயுள்ளார். அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் ?? (தொடரும்) .
  10. இந்து சமயம் (சைவம்) மிகவும் சுயாதீனமான போக்குடைய ஒரு மார்க்கம். எவரையும் அது கட்டாயப்படுத்துவதும் இல்லை மற்றைய மதங்களை அது அவமதிப்பதும் இல்லை. அதேபோல் மத மற்றவர்களுக்கும் கடவுள் இல்லை என்பவர்களுக்கும் கூட.. அது ஆன்மீக வழிகாட்டுகிறது. இந்து மதத்தில் தான் சாதி.. என்று சொல்கிறவர்கள் இருக்கலாம். அவர்கள் கண்மூடிக் குருடர்கள். சாதிய அமைப்பு முறை தொழில்சார் நிலபிரபுத்துவம் சார் எழுந்து நிற்கிறதே அன்றி மதத்தால் என்பது சில மதவிரோத சிந்தனை உள்ளோரின் எண்ணப்பாடு. கீழைத்தேய நாடுகளில்.. கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தொழில்சார்.. நில பிரபுத்துவ சாதி அமைப்புக்கள் இருந்தன. இப்பவும் அவற்றின் எச்சங்கள் உள்ளன. அது இஸ்லாத்திலும் உள்ளது. வகுப்புவாதம்.. எல்லா மதங்களை பின்பற்றுவோர் மத்தியிலும் மதம் அற்றோர் என்போர் மத்தியிலும் கூட உள்ளது. உயர் வகுப்பு.. மத்திம வகுப்பு.. கீழ் வகுப்பு என்று.. பொருண்மிய மனித இயற்றுகை வசதி அடிப்படையிலான பாகுபாடுகளும் உள. பாலியல் என்று நோக்கினால்.. எந்த மதமும் மனித இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வழிகாட்டுவதாக இல்லை. எல்லா மதமும் மனித இருப்பை இப்பூமிப்பந்தில் சாத்தியப்படுத்தி.. அதன் சமூக வாழ்வை.. சீராக்குவது பற்றியே சொல்கின்றன. அந்த வகையில்.. பாலியல் என்பது மதங்களில் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசப்படுகின்றன. அதில் இருந்து இந்து மதமும் விலகி நிற்கவில்லை. அதேவேளை பிரமச்சாரியம் பற்றியும் பேசுகிறது. அது எல்லா மதத்திலும் பேசப்படுகின்ற ஒன்று தான். தனிமனிதர் எந்தப் பாதையை விரும்பினமோ அதில் அவர்கள் பயணிக்க வழிகாட்டுவதே மதங்களின் இருப்பு. மதமற்றவர்கள் என்போர் கூட மதமுள்ளவனின் வழியில் தான் பாதி தூரமோ..முக்கால்வாசி தூரமோ.. வருகின்றனர். மேலும்.. இந்து மதம்.. மதமாற்றங்களால் அழிந்து விடும் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கென்று தெரியவில்லை. இந்து மதம் காலணித்துவ ஆட்சியில் சந்தித்த மதமாற்ற தீவிரத்தை இன்று சந்திக்கவில்லை. இன்று எப்படி ஈழ தேசம் சிங்கள பெளத்த பேரினவாத காலணித்துவத்தில் பெளத்த நிலமாக மாற்றி காட்டப்படுகிறதோ இதையே போர்த்துக்கீசர்களும்.. ஒல்லாந்தர்களும்.. ஆங்கிலேயர்களும் மிசனரிகள் மூலம் செய்தனர். ஆக ஆக்கிரமிப்பாளர்கள் எல்லோரும் ஒரே வகையினர் தான். ஆனால்.. இன்றைய நவீனத்துவ உலகில்.. மக்கள் சுயாதீனமான.. கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்காத.. மத மார்க்கத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில்.. இந்து மதம்.. பெரும்பான்மை மக்களின் எண்ணத்தைக் கவர்கிறது. இஸ்லாமிய கடும் போக்கு அதன் இருப்பிற்கு ஆதாரமாக உள்ள அதேவேளை அதன் அழிவிற்கும் அதுவே காரணமாக உள்ளது. மக்கள் வெறுப்பிற்கும் அதுவே காரணம். கிறிஸ்தவம்.. இன்று மோசடிகள் நிறைந்த ஒன்றாக.. மாறி அதன் சமூகத் தேவை என்ன என்பதை இழந்து வருகிறது. இன்று பல முன்னைய கிறிஸ்தவ நாடுகள்.. கிறிஸ்தவதத்தில் இருந்து விலகிக் கொண்டு வருகின்றன. பிரிட்டனை எடுத்துக் கொண்டால்.. கடைசிக் கணக்கெடுப்பில்.. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியும் மதமற்றவர்களின் எண்ணிக்கையில்.. பல மடங்கு உயர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. பெளத்தம் அதன் வெறி காரணமாக செல்வாக்கிழந்து வருகிறது. சீனாவில் பெளத்தத்தை தழுவுவோரின் எண்ணிக்கை குறிப்பாக இளைய சமூகத்தில் பலமான வீழ்ச்சியை சந்தித்துள்ளதோடு.. அங்கும் மதமற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது..! இன்றை மனித சமூகம்.. கூடிய அளவு கட்டுப்பாடற்ற.. சுயாதீன சிந்தனைக்கும் செயற்பாட்டுக்கும் இடம் தேடும் நிலையில்.. இறுக்கமான மதங்களை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில்... இந்து மதத்திலும் சில மார்க்கங்களில் இருந்த இறுக்கங்கள் தளர்ந்துள்ளன... அல்லது தளர்த்தப்பட்டு வருகின்றன. ஒப்பீட்டளவில் இந்து மதம் கூடிய அளவு சுயாதீனமானது என்ற வகையில்.. நவ கால மக்களின் கூடிய தெரிவாக இந்து மதம் மாறும் நிலையே உள்ளது. சாதியம்.. வகுப்புவாதம்.. மையவாதம்..பொருண்மிய வாதம்.. ஆட்சியவாதம் என்பவை.. ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்து கட்டி எழுப்பட்டுதல் உண்மையில்.. இவ்வாறான வாதங்களை முன்வைப்போருக்கு.. மக்களை குழப்பி விட ஒரு வழியாக உள்ளதே அன்றி.. இவற்றின் பின்னால் உள்ள யதார்த்தச் சூழல் என்பது வேறெங்கோ முளைவிட்டு.. விருட்சமாகி உள்ளதை சரியான ஆழமான பார்வையால் மிக எளிதாகக் கண்டுவிடலாம். இதற்கு மேல்.. இத்தலைப்பில் சொல்ல எதுவுமில்லை.
  11. தேவதைகள் வாழும் தேசங்களில் வாழ்கின்ற, நம்மவரின் பார்வை மாதிரிக்கிடக்கு!
  12. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்திய மத்திய அரசும், தமிழ் நாடு அரசும் இணைந்த கூட்டு நிறுவனமாகும். இருவருக்கும் இதில் சம பங்குண்டு. நடத்தப் போவது மத்திய அரசின் வழிகாட்டலில் தமிழக அரசு திறம்பட நடத்தும். (ஒரு நம்பிக்கைதான் ) இத்திட்டப் பணி நடக்குமிடத்தில் சில விபத்துக்கள் நடந்துள்ளன. ஆனால் இறந்த/காயம்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தகாரர்களின் அனுசரனையில் வேலை பார்த்தவர்கள். அவர்களின் ஆயுள் இழப்பீட்டுத் தொகைக்கு அந்நிறுவனமே பொறுப்பு. அரசாங்கமும் கருணைத் தொகை அளித்தது போக, இழப்பீட்டுத் தொகையை சீக்கிரம் வழங்க உரிய அழுத்தமும் , நடவடிக்கையும் அவ்வப்பொழுது எடுத்தே வருகிறது.
  13. இதுபோதும் எனக்கு. ஏனென்றால் நானும் எனது ஒரே அடையாளம் ஆகிய "தமிழன்" என்பதை எவருக்ககவும் விட்டுக்கொடுக்கவும் தயாரில்லை. முதலில் நான் தமிழன், பிரபாகரன் இனத்தில் பிறந்தவன். அதன் பிறகே இந்தக் கத்தோலிக்கம் மதம் எல்லாம். உங்களுக்கு நன்றி !
  14. சார் எல்லாம் விபரமாக் முதல் கருத்துக்களில் எழுதியுள்ளேன் ..........படியுங்கள் ....முதலில் தலையங்கம் என்ன என்று படியுங்கள் .ப்ளீஸ் ............. நீங்கள் கேட்பது நியாயம் ..............ஆனால் பிழையான நபரிடம் கேட்டு விட்டீர்கள் அன்பே
  15. எங்கள் அனைவரினதும் உட்கிடக்கை மெள்ளமெள்ள வெளியே வருது. மதங்களை பற்றியோ கடவுளை பற்றியோ விவாதிப்பதர்ற்கு விருப்பந்தான். ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது இந்த பிரசுரம் எதுக்காக வெளியிடப்பட்டது என்பதுதான். இஸ்லாத்தையும் ஏனைய தமிழ் மக்களையும் பிரித்தாயிற்று இனி இந்துக்களையும் கிரிச்த்தவர்களையும் பிரிக்கவேண்டியிருக்கு. அதனூடே ஆயர்களின் அதீத அரசியல் செயற்பாட்டை வீரியம் குறைய செய்யமுடியும். என்னதான் பெரும்பான்மை இந்துக்களாக இருந்தாலும் புத்தத்துக்கு முன்னால் சிறுபாண்மை தான்.
  16. இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்தக் கதையைச் சொல்ல முடியும் என்று நினைக்கின்றேன். நான் இரண்டு குழந்தைகளை 2009ம் ஆண்டு யுத்தத்தின் பிற்பாடு தத்தெடுப்பாக உறுதி செய்து, ஒரு தேவாலயம் ஊடாகச செய்து வந்தேன். இரண்டு குழந்தையில் ஒன்றுக்கு பெற்றோர் உறவினர் இல்லை. மற்றவரின் தாய் போராளி என்பதால் சிங்கள அரசு புனர்வாழ்வு என்ற பெயரில் வைத்திருந்தது. எனக்கு அவர்களின் மீதான அன்பு ஏதோ என் குழந்தைகளாகவோ, சகோதரங்களாக இருந்தால் எப்படி ஒரு உணர்வைத் தருமோ, அது போன்றதொரு பாசத்தை உருவாக்கியது. எனக்குத் திருமணம் ஆகாததால் தத்தெடுக்கமுடியாது, மற்றும் கனடா கொண்டு வரமுடியாது என்பதாலும், குழந்தைப் பாக்கியம் இல்லாத உறவினர் ஊடாக அவர்களிருவரையும் வளர்ப்பதற்காக முயன்றபோது, அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. விசாரித்தபோது இரு குழந்தைகளும் மதம் மாற்றப்பட்டிருந்தனர். எனக்கு உள்ள வருத்தம் என்னவெனில், குழந்தைகளிடம் ஏன் மதமாற்றத்தைத் திணிக்க வேண்டும்? அதற்கான வயதா அவர்கள்? இத்தனைக்கும் என்னிடம் இருந்து உதவி பெறும்போதாகட்டும், அந்தக் குழந்தைளாகட்டும், இடையில் நின்ற தரகர்கள் அவர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும்போது சுயநலவாதிகளாகவே என் கண்ணில் தெரிந்தார்கள். இப்படி நான் தத்தெடுக்கும் விடயம் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தியதுடன், என்னிடமான தொடர்பு தூண்டித்தார்கள். உண்மையில் சொல்கின்றேன். ஒரு காலத்தில் அன்னை திரேசா மீது நான் கொண்டிருந்த மரியாதை இதற்குப் பிற்பாடு உடைந்து போனது. அவர் தொழுநோயாளர்களைக் கவனித்த சேவை பெரிதாயினும், அதன் பின்ணனியில் மதமாற்றம் என்ற ஒரு வியாபாரமும் இல்லாமல் இருந்திருந்தால் உயர்வாகவே இருந்திருப்பார்கள். ஆனால் அவர் கடவுள் என்பதைப் பண்டமாற்றுச் செய்து தானே அவர்களைப் பார்த்துக் கொண்டார்....
  17. இலங்கையில் தமிழரை அழிக்க இரவு பகலாக தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் ஆப்பிறுக்களில் இறங்கி முஸ்லீம்களை வெற்றிகரமாக ஒதுங்க வைத்தவர்கள் இலங்கையில் இந்து மதம் அழிக்கபடும் போது அதை காக்க இந்திய மதவெறியர்கள் வருவார்களா என்று கேட்கிறார்கள். கொமேடிதான். ஒநாய் ஒன்று ஆட்டுக்காக அழுததைவிட கண்ணிர் மலகத்தக்க துன்பியல் கதை. புத்தமதம் இலங்கையில் பரவேண்டும் என்ற இந்த கூட்டம் யாழில் வாதிட்ட போது ஆங்கில பத்திரிகைக்களில் இலங்கையின் மகாநாம புத்தத்தால்தான் அழிவு; அதை சிங்கள மக்கள் கைவிட வேண்டும் எறு விவாத்திதார்கள். (இலங்கையில் சிங்கத்தை புணர்ந்ததால் தமக்கு தொடர்ந்து இரத்தம் வேண்டும் என்று மகா வம்சத்தில் எழுதி வைத்துக்கொண்டு தமிழ நாட்டு சரித்திரம் தெரியாமல் கதை எழுதுகிறார்கள். இலங்கையின் மகாவம்சத்தை தன்னும் படித்திருந்தால் பண்டியனின் அரன்மனையில் திருஞான சம்பந்தருக்கு நடந்தது தெரிந்திருக்க வேண்டியதேவை இல்லை. மாகாவம்சத்தில் புத்தர் இலங்கையை புத்தமத நாடாக்க வேண்டும் என்று கேட்டதற்காக இலங்கையை புத்தமாக்கும் போது கக்கீமும் அசாத்சாலியும் பிளாடிக் சேஜறிக்குத்தான் போக வேண்டும் ) இதை வட மாகாண முதல்வரே பார்த்துவிட்டு படித்த சிங்களவர்கள் சொலவது போல இங்கையின் சரித்திரம் மதவெறியர்களால் அல்லாமல் அறிஞர்களால் திருமப எழுத பட வேண்டும் என்று கோரிக்கை விட்டார். அதற்கு கூடத்தான் படித்தவர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அழியப் போவது இந்துமதம் அல்ல. இப்போது அவலப்படுவது தமிழரல்ல. கோத்தாவின் கூத்துக்கள் தமக்கு போக இடம் கிடையாமல் போக போகிறதே என்ற்தை உணர்ந்து பலதடவைகள் தங்கள் தமிழ் மக்களுக்கிடயிலான ஆப்பிறுகளை திசை மாற்றுகிறார்கள். ஈழத்தமிழரின் தாலித்துக்கள், இந்த ஆப்பிறுக்கல்களின் கதை கேட்டு ஏமாந்து கூட்டமைப்பிடம் கொழுவிகொண்ட மு.கா மாதிரி இல்லாமல் விக்கிலேஸ்வரனுக்கு 95% தொடக்கம் 100 % வாகுக்களையும் போட்டுவிட்டு வடமாகாண அதிகாரத்தை கைப்பற்றி வந்து தமக்கு நீதி பெற்றுத்தரட்டும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின் தேர்தல் சரித்திரத்தில் என்றுமே குலம் குறைந்த மக்கள் ஆபிறுக்கல்களை கேட்டு தமிழரசுக்கட்சியையோ கூட்டணியையோ, கூட்டமைப்ப்யோ விட்டு பிரிந்து போனது கிடையாது. ஆப்பிறுகல்களை கேட்டு அதன் படி ஒழுகிய முஸ்லீம் தலைமைகள் இன்று காலில் விழ பொதுபல சேனா கூட இல்லாமல் தவிக்கிறார்கள். பௌசி என்ற கோமாளி மத்தியகிழக்கில் பிச்சைக்கு போய் நிற்கிறது. கக்கீம் என்ற தறுதலை "மகிந்தாவை விழுத்த மட்டும்தான் போர்க்குற்ற விசாரணை அமெரிக்கா கேட்கிறது" என்று ரஸ்சிய வெளிவிவகார ராஜதந்திரிக்கு சொல்கிறது. (இது எந்த ஆங்கில செய்தியிலும் வந்ததையும் நான் காணவில்லை.) அவமானகரமாக அசாத் சாலி மகிந்தாவிடம் காலில் விழாத குறையாக 20,000 முஸ்லீம்களை கொன்றிருக்கிறார்கள் புலிகள்; எங்களுக்கு நீதி வேண்டும் என்று புலம்பியிருக்கிருக்கிறார்.(இதை தமிழில் காணவில்லை). இந்த கக்கீம் தான் சாதி திமிர் பிடித்த இராமாயன கதையை தமிழருக்கு படிப்பிக்க கனடா வர முயன்றார் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். இருந்த எதிர்ப்பால் தான் அங்கேயே நின்றார். 1915 ல் முதலாம் உலகமாக யுத்ததில் தன் உயிரை பணயம் வைத்து இராமநாதன் இங்கிலாந்து சென்றது சிங்கள் மக்கள காப்பாற்ற என்றில்லை. முஸ்லீம்கள் இலகுவில் ஆப்பிறுக்கல் சங்கீதங்களுக்கு காவடி ஆடுபவர்கள் என்பதாலேயே. அன்று அவர்கள் வெள்ளைகளுடன் சேர்ந்து சிங்கள்வர்களை அடித்தார்கள். இராமநாதன்தான் உயிரை பணயம் வைத்து தலையிட்டு இன ஐக்கியத்தை கொண்டுவந்தார். ஆனால் அவர் தலையிடாமல், முஸ்லீம்கள் வெள்ளைகளின் அனுசரனையுடன் தொடர்ந்து சிங்களவர்களை தாக்கியிருந்திருந்தால், சுதந்திரம் கிடத்தவுடன் முஸ்லீம்கள் ஓடிப்போய் பாய இந்து சமுத்திரத்தை கூட சிங்களவர்கள் மிச்சம் விட்டிருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அன்று இன ஐக்கியத்துக்கு இராமநாதன் பாடுபட்டதால், முஸ்லீம்களின் இருப்பை வரும் மார்சு வரையும் அவர் உறுதி செய்தார். அதன் பிறகு அவர்களை காக்க யாரும் இருக்கப் போவதில்லை. தனியத்தான் சிங்களவர்களிடம் அலகில் வாங்குவார்கள். அவர்தான் எழுப்ப வேண்டுமா? அப்படி எழுப்புவது சரியாயின் நீங்கள் அதை செய்தால் உங்களுக்கு தோசமா?
  18. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் இதை இங்கு எழுதுகிறேன். சில சைவ சமயத்தவர்கள் கிறிஸ்தவர்களை திருமணம் செய்யும் போது திருமணத்துக்காக மதம் மாறியுள்ளார்கள். (மாற்ற வைக்கப்பட்டுள்ளார்கள்). அதிகளவில் காதல் திருமணத்தில் தான் இது நடைபெறும். காதலித்து விட்டு மதம் மாறினால் தான் திருமணம் செய்வேன் என கூறி மதம் மாற்றி திருமணம் செய்தவர்கள் பலர் உள்ளார்கள். அண்மையில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு பெண் பார்த்தார்கள். பெண் சைவ சமயம். இருவருக்கும் திருமணம் செய்வதற்கு எல்லாம் பேசி ஓகே என்றாகி விட்டது. உறவினர்களுக்கும் சொல்லியாயிற்று. கடைசியில் அப்பெண்ணை கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறு கேட்டார்கள். அதற்கு பெண் மறுத்து விட்டார். கிறிஸ்தவரை திருமணம் செய்வதில் தனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் மதம் மாற மாட்டேன் என குறிப்பிட்டார். பின்னர் அப்பெண்ணை வேண்டாம் என கூறி விட்டு வேறு பெண்ணை பார்க்கிறார்கள். அவர்கள் கூறிய காரணம் தாம் கத்தோலிக்க மதமாம். அதனால் வேறு மதத்தவர் என்றால் தமது மதத்துக்கு மாற வேண்டுமாம். (ஆண் பிரான்சிலுள்ளார். பெண் இலங்கையிலா பிரான்சிலா என தெரியவில்லை.) இது சரியான செயலா? (இந்த பெண் மதம் மாற மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் பேசியாயிற்று. உறவினர்கள் பலருக்கு கூறியாயிற்று. இனி என்ன செய்வது, திருமணத்தை குழப்ப கூடாது என்பதற்காக வேறு வழியில்லாமல் மதம் மாறுபவர்களும் உண்டு.) பத்தாக்குறைக்கு இன்னுமொரு வீட்டில் தமது சொந்தத்திலுள்ள ஒரு ஆணை நான் தமது மதத்துக்கு மாறி திருமணம் செய்வேனா என என்னிடம் கேட்டார்கள். (கொடுமை ) எனக்கு தான் கடவுள் பக்தியே இல்லையே. மதம் மாறுவதில் பிரச்சினை இல்லை தானே எனவும் கூறி கேட்டார்கள். நான் அந்த நபரை திருமணம் செய்ய போறதில்லை. ஆனால் அவர்கள் கேட்டது பிழை என்பதை குறிப்பிடவே இங்கு இச்சம்பவத்தை கூறுகிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட மதம் மாற வேண்டும் என கேட்பது சரியா? இஸ்லாமியர்களும் திருமணம் செய்வதானால் தமது மதத்துக்கு மாற வேண்டும் என கூறுவதுண்டு. மத ஒற்றுமையை குலைப்பது போலிருந்தால் நிர்வாகம் இக்கருத்தை நீக்கி விடுங்கள்.
  19. சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூறு தான் போக வழியைக் காணாதபோது விழக்குமாத்தை காவிக்கொண்ட போக நினைப்பதுபோல் தமிழர்கள் சிங்கள அடிமைத்தனத்தில் இருந்த விடுபட முடியாத நிலையில் மத எழுச்சி ஒரு கேடா? சிங்களம் அடுத்த கட்ட இனவழிப்புக்கும் சுத்திகரிப்பிற்கும் பிரிவினைவாதத்திற்கும் வழிகோலுகின்றது. மதவெறியை தூண்டிவிட்டு இஸ்லாமியர் கிறிஸ்த்தவர் இருந்து என்று மோதலை ஏற்படுத்தி எஞ்சியுள்ள தமிழர்களை காவுவாங்க நினைப்பதற்கு இந்து மத வெறியர்களும் காரணமாகின்றனர். புலிக்கு விசிலடித்ததுபோல் இந்து மத எழுச்சிக்கு புலம்பெயர் நாட்டில் இருந்த விசிலடிக்கட்டும். வறுமைப்பட்ட மக்கள் கழுத்தறுபட்ட சாகநேரிடும். என்னுமொரு முள்ளிவாய்க்கால் மத அடிப்படையில் உருவானால் அது ஆச்சரியமான விசயம் கிடையாது. ஒருவேளை மதவெறியின் பிரகாரம் இலங்கையில் இந்துக்கள் அழிக்கப்பட்டால் இந்திய இந்துத்தவம் ஒருபோதும் காப்பாற்ற வராது. கடந்த காலத்தில் சிங்களப்பேரினவாதத்தை ஊக்குவித்ததுபோல் தமிழர்களின் அழிவுக்கு அது என்னும் வழிகோலும். எந்த ஒருவன் இந்துதுவா என்று ஈழத்தில் ஆரம்பிக்கின்றானோ அவன் தமிழர்களை அழிக்கக் கங்கணம் கட்டுகின்றான் என்று பொருள். உனது மதம் சதி பேதங்களற்று நன்னெறியுடனும் மனிதாபிமானத்துடனும் இருந்தால் ஏன் அடுத்த மதத்திற்கு போகப்போகின்றார்க்கள்? நீங்களே சமண பௌத்த மதங்களில் இருந்து சைவத்துக்கும் சைவத்தில் இருந்த இந்துவுக்கு மதம் மாறியவர்கள்தான். உங்களுக்கே நீங்கள் யார் என்ற அடிப்படைக்கு அர்த்தம் தெரியாதநிலையில் மத மாற்றத்திற்கு குய்யோ முறையோ என்று கூச்சலிடுகின்றீர்கள். திருவள்ளுவர் சமண மதத்தவர். அவர் ஒருபோதும் மதத்தை தமது எழுத்தில் முன்வைத்ததில்லை. இளங்கோ அடிகள் பௌத்தத்தை சார்ந்தவர்.அவர் படைத்த இலக்கியங்கள் அது சார்ந்தது. தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த திருவள்ளுவருக்கு புனூலைப்போட்டு இந்துவாக்கிவிட்டீர்கள். அதற்கு நியாயப்படுத்தல்கள் வேறு ! அயிரக்கணக்கான பௌத்த சமணர்களை கழுவேற்றிய கிரிமினல்கள் பின்னர் நாயன்மார்களாகிவிட்டனர். சைவ இந்து மத வரலாற்றில் எந்த உண்மையோ நியாயமோ அறமோ மனிதாபிமானமோ கிடையாது. அதை கிண்டக் கிண்ட நாறும். இரத்தம் மணக்கும். அதற்கு வக்காலத்து வாங்க முடியாது.
  20. இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும் மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.