திரி அழகாக நகர்கின்றது! பல விடயங்கள், வரலாறுகள் அனைத்தும் அலசப்படுகின்றன! பலவற்றை அறியக்கூடியதாகவும் உள்ளது!
எல்லா மதங்களிலும், பலங்களும், பலவீனங்களும் உண்டு!
ஏனெனில் அனைத்து மதங்களுமே, மனித வாழ்வை ஒழுங்கு படுத்தும் நோக்கில் ஏற்பட்டவையே!
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளைப் போதித்தது எனது மதம்! அது எனது மனதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் போதிக்கப்பட்டது!
பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நான்கு நிலைகளைப் போதித்தது எனது மதம். அது எனது வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் போதிக்கப்பட்டது!
எம்மில் எத்தனை பேர், சரியையும், கிரியையும் தாண்டியிருக்கிறோம்? எம்மில் எத்தனை பேர் பிரமச்சரிய நெறியில் வாழ்ந்திருக்கிறோம்?
எனவே மதம் தனது நோக்கத்தை நிறைவேற்றவில்லை! வெறும் சுயநலவாதிகளை மட்டும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றது! இதற்கு, சமீபகால சங்கராச்சாரியார்களும், நித்தியானந்தாக்களுமே சாட்சியாக உள்ளனர்! இந்த மதத்தின் பெயரால் தானே, எமது மக்கள் அழிக்கப்பட்டனர்!
இதற்கு உதாரணங்கள், சோ. ராமசாமி, இந்து ராம், அமைச்சர் சிதம்பரம், சிவசங்கர் மேனன்,தீக்சித், நாராயணசாமி, நம்பியார், ஜெயலலிதா,..........நீண்டுகொண்டே போகின்றது!
இவர்கள் அனைவருமே ஐயர், ஐயங்கார், நம்பூதிரிகள்,... என்ற வரிசையில் நகர்கின்றன! இதை ஏன் ஒருவரும் பெரிது படுத்துவதில்லை?
நான் ஒரு சைவன் என்பதில் எனக்குப் பெருமை! முருகன் எனது கடவுள். அவன் முருகனாக வள்ளியுடன் இருக்கும் போது என்னால் அவனை ஏற்க முடிகின்றது! ஆனால் அவன், கந்தனாக, தேவயானை சமேதனாக வரும்போது, என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இதே போல, சிவன், சிவனாக இருக்கும் போது, லிங்கமாக இருக்கும்போது என்னால் வணங்க முடிகின்றது! அழகிய அர்த்தநாரீச்வர தத்துவத்தின் பெருமையையும் உணர முடிகின்றது! அதற்கு மேல், ஐயப்பனாக,அவனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஏனெனில் ஐயப்பன், பிறப்பில், விஷ்ணுவுடன் சைவம் கலந்து இந்து மதத்தினுள் போய் விடுகின்றது. இதே நிலையே. இராமர், லட்சுமணன்,என வரும்போதும் ஏற்படுகின்றது! சிவபக்தனான இராவணனை அழித்து வெற்றிவாகை சூடிய இராமனை வணங்கும் மனம் எனக்கு வருவதில்லை! இது தான் மதத்தைப்பற்றிய எனது நிலைப்பாடு!
இன்னொருவருடைய கலாச்சாரத்தைத் தமிழன் வளர்த்துக்கொண்டு திரிகின்றான்! காஞ்சீபுரம் புடவைகளும், பரதநாட்டிய அரங்கேற்றங்களும் என்னைக் கவர்ந்திழுக்கவில்லை! ஏனெனில் அவை எமது கலாச்சாரத்துக்குள் திணிக்கப்பட்டவை!
ராஜ ராஜ சோழன் ஈட்டிய வெற்றிகளினால், அவனிலும் பார்க்கப் பலமடைந்தது, அவனுடன் தொங்கிகொண்டிருந்த பிராமணர்களே! வேர்வை சிந்தாது, இரத்தம் சிந்தாது வெற்றி பெற்றவர்கள் அவர்களே! தாய்லாந்தின் அரச முடிசூட்டு விழாக்களில், 'சிவபுராணம்' இன்னும் ஒலிக்கின்றது! ஆனால், அதைத் தமிழர்கள் ஒலிப்பதில்லை! பிராமண வம்சாவளியினர்கள் தான் இன்னும் ஒலிக்கின்றார்கள்! தஞ்சைப் பெரிய கோவில் கட்டியவன், வென்றெடுத்த பூமியில், அரசர்களின் பெயர்களில், வீதிகளின் பெயர்களில் இருப்பது ' ராம்' என்பதே தவிர 'சிவா' இல்லை! அது மட்டுமில்லை, தமிழனைக் குறிக்கும் 'தாய்லாந்து மொழியில்' உள்ள சொல்லானது மிகவும் கீழ்த்தரமானது! இதற்குக் காரணம், யாராக இருக்கமுடியும்?
தமிழ் மன்னன் வென்றெடுத்த பூமியின் விமான நிலையத்தில் இருக்கும் சிலைகள் முன்னிலைப்படுத்துவது, தேவர்கள் பாற்கடலைக் கடைவது தான்! சிவன் முட்டாளைப் போல, நஞ்சை விழுங்கியதைத் தவிரச் சைவம் இதில் காணப்படவில்லை. இந்து மதம் தான் அங்கே முன்னிலைப்படுத்தப்படுகின்றது! அந்த விமான நிலையத்தின் பெயர் கூட, 'ஸ்வர்ண பூமி'!
தமிழன் வென்ற நிலம்!