I
இந்த கேள்விகளை நான் இங்கே முன் வைத்தமைக்கு ஒரு காரணம் இருக்கிறது.
நாம் ஒரு பெரும் போராட்டத்தை தேசியத்தின் பால் நடத்தி இருப்பினும் உண்மையில் 1977 வரை தமிழ் தேசிய சிந்த்தனை தமிழர் மத்தியில் எழுச்சி பெறவில்லை என்பதே உண்மை.
இத்தாலிய, பிரெஞ்சு, அரபிக், சிங்கள, தேசியங்கள் எல்லாம் வீறு கொண்டு எழுந்த்து பல காலத்தின் பின்பே தமிழ் தேசியம் தமிழர் மத்தியில் அதுவும் இலங்கையில் மட்டும் தளிர் விட்டது.
ஆகவேதான் ஜின்ன்னாவுடன் பொன் ராமநாதனை ஒப்பிடலில் எனக்கு பெரிதும் உடன் பாடில்லை.
ஆயுத போராட்டம் கூட முதலில், வன்முறைக்கு எதிரான எதிர்வினை, வர்க்க புரட்சி என்ற பல படிகளை தாண்டியே, திம்புவில் தமிழ் தேசியத்தில் மையம் கொள்கிறது.
இதனாலேயோ என்னமோ -பிரபாகரன், பாலசிங்கம், போன்ற மிக சிலரைத்தவிர எம் அரசியல் தலைவர்கள் பலருக்கும் தமிழ் தேசியம் என்றால் மேடை ஏறி இனப்பெருமை பேசுவது, உரிமைக்காக குரல் கொடுப்பது என்பதுக்கு அப்பால் நகர முடியாமல் இருக்கிறது.
யாழ் களத்தில் கூட இப்படி எழுதினால்- "பாரேன் இவர் எமக்கே வகுப்பெடுக்கிறார், நாம் போராட்டட்துக்கு எவ்வளவு செய்தோம்" என்பதாக எழுதுவார்கள்.
ஆனால் உண்மையில் நம்மில் எத்தனை பேர் இந்த கேள்விகளை நம்மை நாமே கேட்டு தெளிவாகியுள்ளோம்?
இது இப்படி இருக்க "கிழக்கு தேசியம்" "அபிவிருத்தி சேர் தேசியம்" என்ற பதங்களுக்குள் எம்மக்கள் சிக்குண்டு போவதை நொந்து பலனேதும் இல்லை.
மக்கள் ஒவ்வொரு மட்டத்திலும் தேசிய அரசியலுக்குள் ஈர்க்கபடவேண்டும், மாணவர்களை ஈர்க்க வேன்டும் என்பததெல்லாம் சரியே, ஆனால் முதலில் அத்திவாரம் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த அத்திவாரம்தான் தமிழ் தேசியம் பற்றிய தெளிவான புரிதலும், வராலாற்று பற்றிய விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையும்.
இவையின்றி நாம் ஒரு அரசியல் சித்தாந்ததை கட்டி எழுப்பினால் அது மூன்று வகையான மக்களையே பிரசவிக்கும்.
1. வெற்று இனப் பெருமை பேசும் மூடர்கள்
2. சந்தர்பவாதிகள்
3. ஒரு கட்டட்டுக்கு மேல் இது "முழுதும் பொய்" என முடிவு கட்டி பாதை மாறுபவர்கள்
ஆகவேதான் இந்த அடிப்படை சித்தாந்த கேள்விகளுக்கு விடை சொல்லாமல்- ஒரு ஜனரஞ்சக (populist) அரசியலாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க முடியாது.
ஆயுத போராட்டம் இருந்த காலத்தில் தமிழ் தேசியத்தை ஜனரஞ்ச வழியில் எவ்வளோ தூரம் கடத்தி வந்த போதும், அடுத்த 10 வருடட்தில், அங்கயனும், வியாழேந்திரனும் வெல்லும் நிலை வந்து, தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலமே கேள்வி குறியாகி நிற்கிறதென்றால் அதன் காரணம் யாது?
சித்தாந்த தெளிவின்மையே.
ஆகவே இந்த திரியில் சில கேள்விகளை கேட்டு, நானும் வாசிப்பவர்களும் விளக்கம் அடைய முடியுமா என பரீட்சிக்க விழைகிறேன்.
இனம் என்றால் என்ன?
ஆங்கில ரேஸ் (race), எத்தினிசிட்டி (ethnicity), நேசன் (nation) என்ற மூன்று பதங்களும் தமிழில் இனம் என்றே அழைக்கப்படுகிறன.
ஆங்கிலத்திலும் கூட இவற்றுக்கு பல அர்தங்கள் உண்டு.
இப்போதைக்கு நேசன்,எத்னிசிட்டி என்ற பதங்களை விடுவோம். ரேசை (race) மட்டும் பார்ப்போம்.
பொதுவாக ஒரு ஐரொப்பியரை அல்லது அமெரிக்கரை கேட்டால் தாம் காக்கேசியன் (Caucasian) ரேஸ், ஆங்கில/ஜேர்மன்/பிரென்சு எத்னிசிட்டி என்பார்கள்.
நாம் எப்படி?
உலகளாவிய தமிழர்களின் ரேஸ் என்ன?
ரேஸ் என்ற பகுப்பு ஒரு உயிரியல் பகுப்பு அல்ல. அது ஒரு சமூக படைப்பு (social construct). மனித மரபணுவில் வேறுபட்ட இனங்களை பகுத்தரிய முடியாது என்கிறது இக்கட்டுரை.
https://www.nationalgeographic.co.uk/history/2019/02/race-and-ethnicity-explained
சரி இந்த ரேஸ் எனும் பகுப்பு ஒரு சமூக கட்டமைவாகவே இருக்கட்டும். அப்படியானாலும்
காக்கசோயிட், நீக்ரோயிட், மொங்கலோயிட், ஒஸ்ரலோயிட் இதில் நாம் யார்?
அல்லது நாம் இன்னொரு தனி ரேஸ்சா?
பிகு: என்னடா இதுக்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன தொடர்பு? என மண்டையை பிய்க வேண்டாம். நாம் ஒரு கட்டிடத்தின் அத்திவார செங்கல்லை பற்றி கதைக்கிறோம். மேலே உள்ள விதானத்தை பற்றி அல்ல என்பதை மறக்க வேண்டாம்.