Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19165
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  3. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7401
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/28/20 in all areas

  1. சில வாரங்கள் களத்திற்கு வரமுடியாத வேலை சூழல் உள்ளதால், களம் திரும்பும் வரை, நினைவுறுத்தும் வகையில், எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்றான இந்த பாடலை பதிவு செய்துவிட்டு செல்கிறேன்..! பிறிதொரு நாளில் சந்திப்போம்..!
  2. வாவ்...அருமை அருமை.....விஞ்ஞானமும் அறிவியலும் எவ்வளவு முன்னேறி விட்டது. அபாரம். என்ன ஒண்டு....கன சனத்துக்கு வேலையில்லை. சோத்துக்கே கஷ்டமாம்.😟
  3. வாவ்......சூப்பர் ரொமாண்டிக் தருணங்கள்.....! 💞
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, வைகாசி 2006 கருணா துணைப்படைக் குழுவினரை மீட்கவந்த சிங்கள ராணுவத்திற்கு இழப்பு வெலிக்கந்தைப் பகுதியில் அமைந்திருந்த கருணா துணைப்படைக் குழு முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் படையணிகள் கூறிய தகவல்களின்படி முகாம் தாக்குதல்களின்பொழுது கருணா குழுவினரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ராணுவப்பிரிவொன்றும் இழப்புக்களை சந்தித்ததாகக் கூறியுள்ளனர். கொல்லப்பட்ட ராணுவத்தினரின் சடலங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட தகவல்களின்படி கப்டன் தரத்திலுள்ள, குருநாகலை கல்வத்தைப் பகுதியைச் சேர்ந்த லொயிட் பர்ணாந்து மற்றும் உபுல், ஜெயக்கொடி, திசானாயக்க, அனுர ஆகியோர் அடங்கலாக ஐவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ராணுவ அணியினைச் சேர்ந்த ஏனையோர் காயப்பட்ட இன்னும் நான்கு வீரர்களை இழுத்துக்கொண்டு ஓடியதைப் புலிகள் அவதானித்துள்ளனர்.
  5. விலங்குகளுக்கு முதுகு சொறிய ஒரு மிசின்.....! 🤣
  6. ரிவர்ஸ் கியருடன் கூடிய மோட்டார் சைக்கிள்......! 👍
  7. கலர் பென்சிலால்... வரைந்த ஓவியங்கள். சசிகாந் டோற்றிக்கு வாழ்த்துக்கள்!!!!
  8. 1970 ம் ஆண்டுப் பகுதியில் துருக்கிநாட்டில் இருந்து ஜேர்மனியில் குடியேறிய குடும்பம். மஞ்சள் நிறத்திலான ரீ சேட்டுடன் காணப்படும் சிறுவன் இன்று கொரோனா தடுப்பு மருந்தை உலகத்திற்கு அளித்த விஞ்ஞானி!
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன் எனக்கு பிறந்த நாள் வாழ்த்தா ? ...எப்ப என் பிறந்த நாள்
  10. தோழர் ஏராளன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂
  11. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் (நிழலி ரதி ஆகியோருக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்துக்கள்,ஏராளனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்)
  12. என்ன பெரிய படிப்பு படித்திருந்தாலும், விஞ்ஞான வித்தகராக இருந்தாலும், மனதை ஒரு நிலை படுத்தும் தியானமே, உலகை ஆளும் சக்தியை தரும்.
  13. ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🌺
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன் & ஆதர்ஸ்........! 💐
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 30, சித்திரை 2006 அரச ராணுவப் புலநாய்வுத்துறையால் இயக்கப்படும் கருணா துணைராணுவக்குழுமுகாம் மீது தாக்குதல் - 18 கூலிகள் பலி! மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையில் அமைந்திருக்கும் வெலிக்கந்தைப் பகுதியில் திபுலான, கசன்குளம் ஆகிய ஊர்களில் அமைந்திருந்த அரச ராணுவ புலநாய்வுத்துறையினரால் இயக்கப்படும் கருணா துணைராணுவக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது புலிகளின் விசேட படையணிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 18 கூலிப்படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். புலிகளின் தளபதி பானு தலைமையில் நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில் கசன்குளம் துணைப்படை முகாம் முற்றாக அழித்து எரிக்கப்பட்டதுடன் பெருமளவு ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இத்தாக்குதலில் மேலும் 10 துணைப்படையினர் காயமடைந்ததோடு இன்னும் 5 பேர் புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டனர். இவர்களால் கடத்திச்செல்லப்பட்டு பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த வவுனியா வர்த்தகர் ஒருவரும் இதன்போது புலிகளால் விடுவிக்கப்பட்டார். இரண்டு பி கே எல் எம் ஜி துப்பாக்கிகள், ஒரு ஆர் பி ஜி, ஒரு 81 மி மீ மோட்டார், ஆறு ஏகே எல் எம் ஜி, 16 தானியங்கித் துப்பாக்கிகள், இரு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு ராணுவ தொலைத்தொடர்புச்சாதனம் ஆகியனவும் புலிகளால் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்டன. தாக்கப்பட்ட மூன்று முகாம்களில் ஒன்று கண்டக்காடு ராணுவ முகாமிற்கு மிக அருகிலும், இரண்டாவது கசன்குளம் பொலீஸ்நிலையத்திற்கு அருகிலும், மூன்றாவது இவ்விரு ராணுவ முகாம்களுக்கு மத்தியிலும் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தன. ராணுவத்தால் சூழப்பட்ட இப்பகுதியில் அதிகாலை 12:30 மணிக்கு ஆரம்பித்த புலிகளின் நடவடிக்கை சுமார் ஒருமணிநேரத்தில் பூர்த்தியடைந்தது. புலிகளின் தாக்குதல் நடந்துகொண்டிருக்கும்பொழுது அருகிலிருந்த ராணுவமுகாம்களிலிருந்து புலிகள்மீது கடுமையான ஷெல்வீச்சினை ராணுவம் நடத்தியது. மனிதநேயப் பணியாளர்களால் பயன்படுத்தப்பட்டு துணைப்படையினரால் கடத்தப்பட்ட இரு வாகனங்களும் புலிகளால் அம்முகாமில் அடையாலம் காணப்பட்டன. இவ்வாகனங்களிலிருந்து கடத்திச்செல்லப்பட்டு இதுவரை காணாமல்ப் போன 7 தமிழர் புனர்வாவுக் கழக உறுப்பினர்களின் கதிபற்றி இதுவரை எந்தச் செய்திகளும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதலின் பின்னர் இம்முகாம்கள் அமைந்திருந்த பகுதிக்கு விரைந்த சிங்கள ராணுவம் காயப்பட்டுக் கிடந்த துணைப்படையினரை பொலொன்னறுவை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றது. அங்கிருந்து ராணுவ உலங்குவானூர்திகளில் துணைப்படையினர் கொழும்பு வைத்தியசாலையொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் 10 நாட்களுக்கு முன்னர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் துணைப்படையினர் பகிரங்கமாக முகாம் அமைத்து நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்கிற செய்தி அவுஸ்த்திரேலிய தொலைக்காட்சியொன்றில் வெளிவந்திருந்த வேளையில் இத்தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துணைப்படைமுகாம்கள் இல்லயென்று ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் மீண்டும் மீண்டும் கூறிவந்தநிலையில் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றில், ராணுவ முகாம்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த துணைப்படைமுகாம்கள் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டிருப்பதானது அரசின் முகத்திரையினைக் கிழித்திருக்கிறது.
  17. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, சித்திரை 2006 கிழக்கில் துணைராணுவக்குழுவின் பிரச்சன்னத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த அவுஸ்த்திரேலிய எஸ் பி எஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி அவுஸ்த்திரேலிய விசேட ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் டேட்லயின் எனப்படும் பிரபல அரசியல் நிகழ்ச்சியில் மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கிவரும் கருணா துணை ராணுவக்குழு தொடர்பான விரிவான பதிவொன்றினை வெளியிட்டது. அதே காணொளியில், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதி மகிந்தவின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ஷவின் துணைராணுவக்குழுவின் பிரசன்னம் தொடர்பான முற்றான மறுதலிப்பினையும் அத்தொலைக்காட்சி வெளியிட்டது. இதே காலப்பகுதியில் கருணாவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை அழிப்போம் என்று இதே பாதுகாப்புச் செயலாளர் வெளிப்படையாகப் பேசியதையும் இப்பதிவு நினைவுகூர்ந்தது. எஸ் பி எஸ் இன் செய்தியாளர் ஆரன் லெவிங் மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வெளிப்படையாக இயங்கிவரும் கருணா துணைராணுவக்குழுவின் முகாமிற்குச் சென்றிருந்தார். அங்கு சுமார் 30 ஆயுதம் தரித்த கருணா துணைராணுவக்குழுவினர் பயிற்சிகளில் ஈடுபடுவதை அவர் தனது ஒளிப்படத்தில் பதிவுசெய்தார். "அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளரோ அங்கே துணை ராணுவக்குழுவொன்று இயங்குவதையே நம்ப மறுக்கிறார். ஆனால், அவரது ராணுவ முகாமிற்கு மிக அருகிலேயே பாரிய பயிற்சிமுகாம் ஒன்றினை கருணா குழு எனப்படும் ராணுவப் புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் ஆயுதக்குழு நடத்திவருவதுடன், வெளிப்படையாகவே பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது". நான் அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "இங்கே துணைராணுவக் குழுக்கள் செயற்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறினால், அக்குழுக்கள் எங்கே, எந்தப்பகுதியில், எவ்வாறு செயற்படுகின்றன என்பதையும், அதுபற்றி உங்களுக்கு அறியத் தந்தவர்கள் யாரென்பதையும் என்னிடம் கூறுங்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். ஏனென்றால், நாங்கள் இவ்வாறான எந்தக் குழுவும் எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவதை முற்றாகத் தடுத்து விட்டோம்" என்று என்னிடம் கூறினார். உங்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் துணைராணுவக்குழுக்கள் இயகுகின்றன என்பதை நம்புகிறீர்களா என்று நான் கேட்டபோது சினங்கொண்ட அவர், "இல்லை, நிச்சயமாக இல்லை, நிச்சயமாக " இல்லை என்று அடித்துக் கூறினார். நான் கருணா துணைராணுவக் குழுவினர்களை நான் நேரில்க் கண்டேனே என்று கேட்டபோது நகைத்தவாறே அவர் பின்வருமாறு பதிலளித்தார்," புலிகள் கூட அப்படிச் செய்யலாம், உங்களை தங்களின் முகாமிற்கு அழைத்துச் சென்று கருணாவின் முகாம் என்றுகூட அவர்கள் காட்டலாம்" . "இவர்கள் ராணுவப் புலநாய்வுத்துறையின் கீழ் இயங்குபவர்களா அல்லது கூலிப்படையா என்று தெரியவில்லை, ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரியவிடயமாக எனக்குப் படவில்லை. சில பிரபலங்களின் உதவியின்மூலம் அவர்களின் முகாமிற்கே என்னால் வெளிப்படையாகப் போகமுடிந்தது" என்று ஆரன் கூறினார். இந்த ஒளிப்படத்தில் துணைராணுவக்குழுவின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் என்று தன்னை அடையாலப்படுத்திக்கொண்ட பிரதீப் எனும் ஆயுததாரி, தமது குழு அரசியல், நிதி, ராணுவம் மற்றும் புலநாய்வுத்துறைகளைக் கொண்டிருப்பதாகவும், ஆனால் பெருமளவான உறுப்பினர்கள் ராணுவப்பிரிவிலேயே அங்கம் வகிப்பதாகவும் கூறினார். அவருடன் அக்காணொளியில் சுமார் 30 உறுப்பினர்கள் ஆர் பி ஜீ க்கள், ஏ கே 47 ரகத் துப்பாக்கிகள் சகிதம் அணிவகுத்து நிற்பது கட்டப்பட்டுகிறது. வாகரை மற்றும் வெலிகந்தைப் பகுதிகளில் புலிகள் மீதான தாக்குதல்களை தாமே மேற்கொண்டுவருவதாக கூறிய பிரதீப், புலிகளுக்கெதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறினார். "என்னைப்பொறுத்தவரை இன்றுள்ள சமாதான நிலமைக்கு இந்த துணைராணுவக்குழு அல்லது கூலிப்படையின் பிரசன்னம் மிகவும் ஆபத்தானது, இப்பேச்சுவார்த்தைகளை குழப்பக்கூடிய மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. இவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நாசகார செயற்பாடுகள் ஏற்கனவே நலிவடைந்துபோயிருக்கும் சமாதானப் பேச்சுக்களை முற்றாக தடம்புரளவைக்கப் போகின்றன. அரசாங்கமும் ராணுவம் என்னதான் சொன்னாலும், நாட்டில் வந்திறங்கிய சில மணிநேரங்களிலேயே கருணா துணை ராணுவக்குழுவின் பிரச்சன்னத்தையும், அரசுடனான அதன் நெருக்கத்தையும் என்னால் உடனடியாகவே புரிந்துகொள்ள முடிந்தது" என்றும் அவர் கூறினார்.
  18. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, கார்த்திகை 2006 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜைக் கொல்ல கருணாவுக்கு 50 மில்லியன்களை கோத்தாபய வழங்கினார் - பொலீஸ் விசாரணையாளர் தெரிவிப்பு 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கின் பதிவொன்று..... முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜைக் கொல்வதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கருணாவுக்கு 50 மில்லியன் ரூபாய்களை வழங்கினார் என்று முன்னாள் அரச புலநாய்வுத்துறையின் உத்தியோகஸ்த்தர் லியனராச்சி அபேரட்ன கொழும்பு மேலதிக நீதியரசர் திலின கமகேயிடம் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கும்பொழுது, பாதுகாப்பு அமைச்சில் அதிகாரியாகவிருந்த வசந்த என்பவர் மூலமே இந்தப் பணம் கருணாவுக்கு வழங்கப்பட்டதென்றும் கூறினார். பிரதி பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்கவும் இந்தக் கொலைதொடர்பாக அறிந்திருந்தார் என்றும் தெரிவித்தார். வழக்குத் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில், இக்கொலைக்கான கண்ணால் கண்ட சாட்சியான அஞ்செலோ ரோய் என்பவரை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு அறிவுருத்தப்பட்டிருக்கிறது. ரவிராஜ் கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் கருணா துணைராணுவக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகிந்த அரசின் கீழ் இயங்கும் கருணா குழுவே இக்கொலையில் ஈடுபட்டதாக கூட்டமைப்பு பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தபோதிலும், அப்படியொரு குழு தம்முடன் இல்லையென்று அரசு மறுத்திருந்தது.
  19. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, சித்திரை 2006 கருணாவுடன் இணைந்து இலங்கை ராணுவம் புலிகளை வெற்றிகொள்ளும் - பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச டெயிலி மிரர் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினருடன் கலந்துரையாடிய இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், இலங்கை ராணுவம் கருணாவுடன் இணைந்து புலிகளை இலகுவாக வெற்றிகொள்ளும் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு இவர் கூறுவதற்கு வெறும் இருவாரங்களுக்கு முன்னர் இதே கண்காணிப்புக் குழுவினருடனான சந்திப்பொன்றில், "கருணா குழு என்று எந்த துணைராணுவக்குழுவும் எம்மிடம் இல்லை" என்று பல குற்றச்சாட்டுக்களை மறுத்துப் பேசியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. கண்காணிப்புக் குழுவினருடன் மிகவும் காரசாரமான விவாதங்களில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வரும் கோத்தாபய, புலிகளை விடுதலைப் போராளிகள் என்று கண்காணிப்புக் குழுவின் தலைவர் விழித்ததனை மிகவும் கடுமையாகச் சாடியிருந்தார். இப்பத்திரிக்கைச் செய்தியின்படி கோத்தாபயவின் "எம்முடன் கருணா குழு என்று ஒன்றில்லை" என்ற பேச்சிற்கும் இன்றைய "கருணாவுடன் சேர்ந்து புலிகளை ராணுவம் அழிக்கும்" என்கிற பேச்சிற்குமான தனது கடுமையான கண்டனத்தை கண்காணிப்புக்குழு முன்வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இதுபற்றிப் பத்திரிக்கையாளர் யுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் வினவியபோது, கோத்தாவின் பேச்சுத்தொடர்பாக கருத்துவெளியிட மறுத்ததோடு, புலிகளை தாம் ஒருபோது விடுதலைப் போராளிகளாக மேற்கோள் காட்டவில்லை என்றும் மறுதலித்தார். "எம்மால் ராணுவத்திற்குச் சார்பாகவோ அல்லது புலிகளுக்குச் சார்பாகவோ கருத்து வெளியிட முடியாது, இருபக்கத்திலிருந்தும் வரும் தகவல்களைப் பரிமாறுகிறோமே தவிர. இதில் எமது நிலைப்பாட்டினை நாம் தெரிவிப்பதில்லை" என்றும் அவர் கூறினார்.
  20. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 07, சித்திரை 2006 திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் துணைராணுவக்குழுவினரால் படுகொலை திருகோணமலை உயர்பாதுகாப்பு வலயத்தில், பொலீஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அருகில், மக்கள் வங்கி வாயிலில் வைத்து திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவரான வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் துணைராணுவக்குழுவான கருணா குழு ஆயுததாரியினால் சுட்டுக் கொல்லப்பட்டார். மட்டக்களப்பில் 2004 நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்தவேளை பிள்ளையான் மற்றும் சிந்துஜன் ஆகிய ராணுவ புலநாய்வுத்துறையினால் இயக்கப்படும் துணை ராணுவக்குழு உறுப்பினர்களால் அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தின் இடத்திற்கு தேசியப் பட்டியலின் மூலம் வரவிருந்த விக்னேஸ்வரனே இவ்வாறு அதே துணைராணுவக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ராணுவ உயர் பாதுகாப்பு வலயமான திருகோணமலை துறைமுகப்பகுதியில், இரு ராணுவ காப்பரண்களுக்கு இடையில் அமைந்திருந்த வங்கியின் முகப்பிலேயே இவரை கருணா துணை ராணுவக் குழுவினர் படுகொலை செய்துள்ளனர். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை திருகோணமலை நகர பஸ்தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டு வந்த பாரிய புத்தர் சிலைக்கெதிரான போராட்டம் உடபட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்ததென்பதும் குறிப்பிடத் தக்கது. இதற்கு முன்னரும் படுகொலை முயற்சியொன்று இவர் மீது 2005 இல் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டபோதும், அவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
  21. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, பங்குனி 2006 இலங்கை ராணுவத்துடன் இணைந்து கிராமங்களைச் சுற்றிவளைத்த கருணா துணைராணுவக்குழு கருணா துணை ராணுவக்குழு உட்பட இன்னும் இரு துணை ராணுவக் குழுக்களைச் சேர்ந்த 50 பேரும் குறைந்தது 150 இலங்கை ராணுவத்தினரும் இணைந்து வாழைச்சேனைப்பகுதியில் சில கிராமங்களைச் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டனர். காலை 5 மணியளவில் இலங்கை ராணுவத்தினரின் கவச வாகனங்களில் வந்திறங்கிய கருணா குழுவினர் மக்களை பேச்சியம்மன் கோயிலில் ஒன்றுகூடுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்ததுடன், துணைராணுவக்குழு முக்கியஸ்த்தரும் கருணாவின் நெருங்கிய சகாவுமான மார்க்கன் புலிகளுக்கு உதவினால் கொல்லப்படுவீர்கள் என்று பகிரங்கமாக மக்களை எச்சரித்தார். கருணா துணை ராணுவக்குழுவுடன் ஈ என் டி எல் எப் குழுவின் நால்வரும் ஈ பி டீ பீ குழுவின் முக்கியஸ்த்தர் ஒருவரும் இந்தச் சுற்றிவளைப்பில் ராணுவத்தின் சார்பாகக் இந்த வெளிப்படையான துணைராணுவக்குழுக்களால் ஒழுங்குசெய்யப்பட்ட சுற்றிவளைப்பில் கலந்துகொண்டிருந்தனர். கனரக ஆயுதம் தரித்த இலங்கை ராணுவத்தினர் கண்ணன் கிராமம், விநாயகபுரம், கண்ணகிபுரம் பேத்தாளை, புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் ரோந்துவந்ததுடன், ராணுவத்துணைக்குழுவினால் பேச்சியம்மண் கோயிலில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்திற்கும் பாதுகாப்பளித்தனர். கிராமங்களில் சுற்றிவளைத்து அழைத்துவரப்பட்ட சுமார் 250 முதல் 300 வரையான மக்களிடம் கருணா குழுவின் உறுப்பினர்களான பிரதீபன், ஜெயந்தன், அஜித், ரஞ்சித் ஆகியோர் பேசுகையில் புலிகளுடனான உறவினை மக்கள் கைவிடவேண்டும் அல்லது தாக்கப்படுவீர்கள் என்று பகிரங்கமாக மிரட்டும் தொணியில் பேசினர். ஜோன்சன் ஜெயகாந்தன் எனப்படும் பிரதீபன் எனும் துணைராணுவக்குழு உறுப்பினர் புலிகளின் அரசியல் போராளி குவேனி மீதான கொலை முயற்சியின்போது சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் ராணுவ புலநாய்வுத்துறையின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டவரென்பதும், மார்க்கனின் வலதுகையாக விளங்கும் இவரே ராணுவத்தினருக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. புலிகளின் போராளியாக முன்னர் இருந்து, வாழைச்சேனையில் சிறுமியொருத்தியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக இயக்கத்திலிருந்து 1992 இல் விரட்டப்பட்ட பிரதீபன், கருணா புலிகளிடமிருந்து பிரிந்ததன் பின்னர் அவருடன் வந்து இணைந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. கருணாவுக்கு மக்கள் முற்றான ஆதரவினை வழங்கவேண்டும் என்று எச்சரித்த பிரதீபன், அப்படி ஆதரவு தரத் தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையின் ஒரு அங்கமாகச் செயற்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் துணைராணுவக்குழுவின் அரசியல் போராளி என்று தன்னை அறிமுகம் செய்த பிரதீபன், தம்முடன் சேர்ந்து இன்னும் 300 துணை ராணுவக் குழுவினர் இந்தச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனது பேச்சினை முடிக்கும் போது தனக்கும் தனது சகபாடிகளுக்கு உடனடியாக 150 உணவுப் பொட்டலங்களை அக்கிராம மக்கள் தயாரித்துத் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். கண்ணன் கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு துணை ராணுவக் குழு உறுப்பினரான கார்த்திகைத் தம்பி ஜெயசீலனும் கருணா குழுவின் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விளக்கம் அளித்ததுடன் புலிகளுடனான தொடர்புகளைப் பேணவேண்டாம் என்றும் மக்களை எச்சரித்தார். கருணா துணைராணுவக்குழுவின் மற்றொரு முக்கியஸ்த்தரான ரஞ்சித் மாஸ்ட்டர் என்பவர், தமிழகத்தில் தான் கைதுசெய்யப்பட்டுக் காவலில் இருந்ததாகவும், கருணாவின் விசேட வேண்டுகோளின்பின்னர் தமிழக அரசு தன்னை விடுவித்து கருணாவுடன் சேர்ந்து வேலைசெய்ய அனுப்பிவைத்ததாகவும் குறிப்பிட்டார். "உங்களுக்கு எந்தவிதமான சந்தேகங்கள் இருந்தாலும் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள், அங்கே நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார். வாழைச்சேனைப் பகுதியில் தமது அலுவலகங்கள் நிறுவப்படப்போவதாகவும் கூறிய ரஞ்சித் மாஸ்ட்டர், தாமும் தமது உறுப்பினர்களும் வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தங்கியிருப்பதாகவும் கூறினார். இவர்களுடன் வாழைச்சேனை துறைமுக ராணுவ முகாமில் இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத் துறையினருடன் வேலை செய்யும் ஈ பீ டி பீ உறுப்பினர் சிவாவும் பிரச்சன்னமாகியிருந்தார்.
  22. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, தை 2006 ராணுவத் துணைக் குழுக்கள் பற்றி எழுதியதால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜன் - பிரெஞ்சு செய்தி நிறுவனம் ரிப்போட்டர்ஸ் சன்ஸ் புரொன்டிரெர்ஸ் எனும் பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச சுயாதீன செய்திச் சேவை தனது அறிக்கையில் இலங்கையில் ராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை ராணுவக் குழுக்களின் மனிதவுரிமை மீறல்கள் பற்றித் தொடர்ச்சியாக எழுதிவந்ததனாலேயே சுகிர்தராஜன் கருணா துணை ராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார் என்று கூறியிருக்கிறது. தமிழ்த் தினசரியான சுடர் ஒளியில் எழுதிவரும் சுகிர்தன், தமிழ் துணை ராணுவக்குழுக்களின் படுகொலைகள் பற்றியும், அரசாலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் ஆதரவு மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளை செய்யும் அனுமதி ஆகியவற்றினால் பெருமளவு தமிழர்கள் இக்குழுக்களால் கொல்லப்பட்டு வருவதுபற்றித் தொடர்ச்சியாக எழுதுவந்தார். திருகோணமலை மாவட்டத்தில் இக்குழுக்களால் நடத்தப்பட்டுவந்த படுகொலைகள் பற்றி திங்கள், 23/01/2006 அன்று அவர் எழுதிய கட்டுரைக்காகவே அவர் மறுநாள் காலை பணிநிமித்தம் போக்குவரத்திற்கான காத்திருந்தபொழுது உந்துருளிகளில் வந்த இரு ராணுவ புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்பட்ட இரு தமிழ் துணை ராணுவக்குழு உறுப்பினர்களால் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  23. கடைசி வரி வரையில் .. பரிட்சை அழகா எழுதின பெருமக்கள் மட்டும் கையை தூக்குக ..☺️..😊
  24. சகோதரம்! வாழைக்குலை முக்கியம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.