Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46808
    Posts
  2. யாழிணையம்

    கருத்துக்கள நிர்வாகம்
    10
    Points
    40
    Posts
  3. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    4043
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    15756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/30/21 in all areas

  1. நெடுந்தீவு கள்ளுடன் கனேடியத் தூதுவர்! Top News [Monday 2021-03-29 06:00] யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். கனடா தூதுவர் வேணுமெண்டே வெறுப்பேத்துறார் மை லார்ட்.....
  2. சப்தம் வந்த பாடசாலை குப்பைமேட்டு திசையை நோக்கி ஓடினர் நால்வரும், ஐடியா மணியோ "மச்சான் சுலக்சனை நாய் முழுதும் குதறிப்போட்டுதோ தெரியாது, இண்டைக்கு நாய்க்கு வேட்டை தான் " என்று திகில்களத்திலும் கிளுகிளுப்பேற்றினான், அவனை முறைத்துவிட்டு நான்குபேருமாக டார்ச் ஒளியில் குப்பை மேட்டை நோட்டமிட துவங்கினர், அந்த இடத்தில் சுலக்சன் இருந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை, அப்போதுதான் குப்பை மேட்டை கூர்ந்து கவனித்தான் அவன் , ஓரிடத்தில் அழுத்தமாக இரத்த திட்டு தென்பட அந்த திசைவழியே நால்வரும் வெளிச்சத்தை பாய்ச்சினர் கொஞ்சம் தள்ளி இரத்தத்தடம் சற்று அதிகமாக காணப்பட்டது, இரத்தத்தடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்க ஆரம்பித்தது, இரத்தத்தடத்தில் இரத்தத்தின் அடர்த்தியும் மெதுவாக மெதுவாக அதிகரித்திருந்தது, நால்வருக்கும் விளங்கிவிட்டது எதுவுமே சரியாக்கப்படவில்லை. இரத்ததடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்கத்தொடங்கியது, இவர்கள் சென்ற வழி ஆண்கள் மலசல கூடத்திற்கு செல்லும்வழி அந்த வழியிலிருந்த ஒரு சிறிய வகுப்பறையின் மூலையில் முனகல் சத்தம் அதிகமாக கேட்க தமது டார்ச் வெளிச்சத்தை பாய்ச்சினர், அங்கே இடது காலில் குருதி பெருக்கெடுக்க வலியில் முனகியவாறு சுலக்சன் சுவருடன் குந்ததவைத்து உட்காந்திருந்தான்,பெருக்கெடுத்த குருதியின் அளவிலேயே விளங்கிவிட்டது இது நாய் கடித்த காயத்தால் வந்ததல்ல பயபிள்ளை நாய் விரட்டியதும் தலைதெறிக்க ஓடிய ஓட்டத்தில் குப்பை மேட்டில் நீட்டிக்கொண்டிருந்த போத்தல் ஓடு ஒன்றின் மீது காலை வைக்க தயாராக இருந்த ஓடு பாட்டா செருப்பை துளைத்துக்கொண்டு தம்பியுடைய காலை பதம் பார்த்து விட்டது , தரமான கீறல் , இடது பாதத்தில் தசை கிழிந்து தொங்கியது, "இப்படியே பார்த்து கொண்டு நிக்காமலுக்கு தூக்குங்கடா, இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் இரத்தப்போக்கில் மயங்கிருவான் " எல்லோரும் சேர்ந்து கைலாகு கொடுத்து சுலக்சனை தூக்க இவனோ ஐடியா மணியை பார்த்து சுலக்சனின் அப்பாவை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டுவருமாறு தகவல் அனுப்பிவிட்டு, சுலக்சனுடன் பாடசாலையிலிருந்து நடைதூரத்திலிருந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை நோக்கி நடந்தனர் இவர்கள் வைத்தியசாலையை அடையவும் சுலக்சனுடயை அப்பா மோட்டார் சைக்கிளில் வரவும் சரியாக இருந்தது, வந்தவர் இவர்களை பார்த்து முறைத்துவிட்டு சுலக்சனுடன் வைத்தியரை நோக்கி சென்றுவிட. நால்வரும் வெளிச்சத்தில் வெளி நோயாளர் பிரிவு இருக்கைகளில் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு உட்கார்ந்துகொண்டு நடந்தவைகளை அலச ஆரம்பித்தனர், அண்ணளவாக 15 நிமிடங்கள் கரைந்தித்திருக்கும், சுலக்சனை கொண்டு சென்ற அறையிலிருந்து வெளிப்பட்டார் அவனுடைய அப்பா, மெதுவாக நடந்து இவர்களை நோக்கி வந்தவர் அருகிலிருந்த இருக்கையில் உட்கார்ந்தவாறே கேட்டார், "டேய் நீங்களெல்லாம் படிக்கிறம் எண்டுபோட்டு இரவில் குப்பை மேட்டுப்பக்கம் என்ன செய்றிங்கள் , ஒண்ணுக்கு ஒதுங்குவது என்றால் பார்த்து ஒதுங்குறதில்லையா,ஆளுக்கு கால் நன்றாக கிழிஞ்சுபோட்டு எப்படியும் 15 தையலுக்கு மேல விழும் போல" என்று விட்டு இவர்கள் முகத்தை பார்த்தார், நால்வரும் நடந்தவற்றை சொல்லவா முடியும்.? ஆளாளுக்கு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு தலையை குனிந்து கொண்டு உடகார்ந்திருந்தனர். சற்றைக்கெல்லாம் சுலக்சனுக்கு சிகிச்சை முடிந்துவிட்டது, காலை கெந்தியவாறே வெளிநோயாளர் பிரிவிலிருந்து வெளிப்பட்டான் சுலக்சன். நால்வரும் சுலக்சனை நோக்கிச்செல்ல, சுலக்சனின் அப்பாவோ நிறுத்திவிட்டு வந்த மோட்டார்சைக்கிளை எடுக்க சென்றுவிட்டார், சுலக்சன் மெதுவாக "நடந்த ஒன்றையும் சொல்லவில்லை தானே ...?" என்று கேட்க நால்வரும் ஏக காலத்தில் இல்லை என்று தலையை ஆட்டினர், சுலக்சன் மெதுவான குரலில் "நான் உனக்கு பின்னால தான் ஓடிவந்து கொண்டிருந்தன் திடீரென்று பார்த்தால் முன்னாள் அதே நாய் மச்சான் , இரண்டி அடி முன்னாலே வைத்து பாய தயாராக நானும் திரும்பி குப்பை மேட்டுப்பக்கம் ஓட்டமெடுத்தேன் போத்தல் ஓடும் காலை பதம் பார்த்து விட்டது" என்றான் அவனோ "நான் திரத்திய கறுப்புருவத்தை கண்டனியோ...? என்று கேட்க "ஓமடா உனக்கு முன்னால சில அடிதூரத்தில் தானே ஓடிக்கொண்டிருந்தவன், பிடிச்சிட்டீங்களோ" என்று கேட்க "இல்லடா மண்டப மூலையில் திரும்பினான் திடீரெண்டு ஆளை காணோம் ", "என்னடா சொல்றாய்...?" கால் வலியிலும் விறைத்து போய் நின்றிருந்தான் சுலக்சன், எல்லோரும் முழித்துக்கொண்டிருந்த தருணத்தில் சுலக்சனின் அப்பாவும் மோட்டார்சைக்கிளுடன் வந்துவிட அவருடன் போய் தொற்றிக்கொண்டான் சுலக்சன். சுலக்சனையும் அவனது தந்தையையும் அனுப்பிவிட்டு திரும்பிய அவன் இன்றைக்கு படித்தது போதும் எல்லோரும் வீட்டுக்கு கிளம்புவோம் என்று சொல்லிமுடிக்க முதல் ஐடியா மணியோ "வேற இனி இந்த விளையாட்டே வேணாம் நான் இனி இரவில் படிக்க வரமாட்டேன்" என்று சொல்லவும் மற்ற இருவரும் அதனை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டினர் , நால்வரும் பாடசாலைக்கு திரும்பி தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஆளை விட்டால் போதும் என்றவாறு ஓட்டமெடுத்தனர் 1962, இலங்கை கிழக்கு மாகாணம் வில் ......காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது, சமையல்காரியின் கூக்குரல், சற்று நிமிடத்தில் செய்தி தீயை போல் பரவ முழு பாடசாலை ஆசிரியர்களும், ஊர் மக்களும் சகோதர்களது இல்லத்தில் முன் கூடிவிட்டனர், சகல சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு வில்லியின் உயிரற்ற உடலை சவப்பெட்டியில் கிடத்தி மக்கள் பார்வைக்கு வைத்தனர், பீலிக்ஸோ வியர்த்து விறுவிறுத்து காணப்பட்டார், கொரோனரிடம் வில்லியின் உடல் சென்றுவிடாமல் இருக்க செய்த பகீரத பிரயத்தனங்கள் அவரை அப்படி வியர்க்கவைத்துவிட்டது, வில்லியின் ஈமச்சடங்கில் முழு பாடசாலையும்,ஊரும் கதறியழுதது, ஒருவாறாக வில்லியை நல்லடக்கம் செய்துவிட்டு வந்த சகோதரர்கள் தங்களது முழு இல்லத்தையும் சுத்தம் செய்துவிட்டு களைத்து போய் தூங்கச்சென்றார்கள், பீலீக்ஸும் களைத்துப்போய் வந்து கட்டிலில் சரிந்தார் அப்படியே தூங்கிப்போனார், திடிரென்று திடுக்கிட்டு முழித்த பீலீக்சிற்கு கொஞ்சம் தண்ணீர் சாப்பிடலாம் போல தோன்றவும் , ஒரு குவளையில் நீரை நிரப்பிகுடித்துக்கொண்டே மொட்டை மாடியில் நின்று நோட்டம் விட்டார், அங்கெ அவர்கண்ட காட்சியால் அவர் கை நடுநடுங்க கையிலிருந்த குவளை தவறி விழுந்து உடைய அதனுள்ளிருந்த நீர் அவர் முகத்தில் தெறித்தது. (தொடரும் )
  3. உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா, ஈழப்பிரியன்! நாங்கள் கஸ்தூரியார் வீதியால, இரவில மதில் பாய்ஞ்சு படம் பாத்திட்டு வாற நேரம்...அவ்வளவு நாய்களும் எங்களைப் பத்திரமாய்க் கூட்டிக் கொண்டு வந்து ஹொஸ்டலிலை விடுவினம்! பிரச்சனை என்னவெண்டால்....மாணவ மேற்பார்வையாளரையும் எழுப்பி விட்டிருவினம்! நாங்கள் மதில் பாய...அவர் நாங்கள் கீழே விழுந்து விடாத படி...பத்திரமாய் இறக்கி விடுவார்! நாங்கள் சும்மா ஆக்களா? அவரின்ர தம்பிக்கும் ரிக்கற் எடுத்துக் கொடுத்து. எங்களோட கொண்டு போற ஆக்களெல்லோ!😀 பெரிசுகளைச் சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்..! புங்கையிரின் சொந்தக் கதை....ஒரு சோகக் கதை...! யாழின் இருபத்தி நாலாவது பிறந்த நாளுக்கு அவிட்டு விட யோசிக்கிறன்...!
  4. வடிவேலும் மயிலும் துணை.......! 🌹
  5. நல்லாருங்க மக்கா#வீட்டில்_பார்த்த_மாப்பிள்ளைய_பிடிக்கல.பல்லடம் நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா மாணிக்கவேல்.BBM பட்டதாரி.இவர்க்கு மண முடிக்கும் எண்ணத்தில் வீட்டார் வரன் தேடி வந்தனர்.இவரது தாய்மாமன் மகன் சந்திரசேகரன்.இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.வருமானம் அதிகமில்லை என்பதாலும்,இவர் அதிகம் படிக்காத பட்சத்தில் இவருக்கு வரும் வரன்கள் தடங்கலாகிக் கொண்டேஇருந்ததால் மனமுடைந்த இவர் திருமணமே வேண்டாம் என்று முடிவுசெய்தார்.உறவினர் வீட்டு எந்த விஷேசங்களுக்கும் செல்வதில்லை.இந்நிலையில் சரண்யா தனது மாமா மகனையே திருமணம் செய்து கொள்ள போகிறேன் என வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்."வருமானம் அதிகமில்லை.படிக்காதவனை கட்டி நீதா சீரழியப் போற"" என வீட்டார் சொல்லியும் கேட்காமல் மாமாவின் கரம் பிடித்தார் சரண்யா.இதற்கு சரண்யா சொன்ன காரணம் நெஞ்சை நெகிழ வைத்தது.""விவசாயிக்கு பெண் கொடுக்கவே பலரும் தயங்குகின்றனர்.ஏன்னு தெரியல. நான் அதிகம் படித்த காரணத்தாலேயே என்னைப் பெண் கேக்க மாமா தயங்கினார்.ஊருக்கு சோறு போடும் தொழில் செய்பவர்களுக்கு படித்த பெண்கள் தரும் மரியாதை பாருங்கள்.இதை மனதில் வைத்தே என் மாமாவை மணந்தேன்.நானும் அவருடன் விவசாயத்திற்கு உதவியாக இருப்பேன்.விவசாயிய கலியாணம் பண்ணா வாழ்க்கை நன்றாக இருக்கும் என காட்ட போறேன்""ஷேர் செஞ்சு சரண்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். முகநூலில் இருந்து.....
  6. எமக்குப் பக்கத்து நகரத்தில் வசிக்கும் ஒரு வைத்தியர் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு காணொளி வெளியீட்டிருந்தார். அதில் கூட அவர் கூறுகிறார். நீங்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருக்கப் பாருங்கள் என்று. நான் வெளிப்படையாக எதையும் கூற முடியாதுள்ளது என. நான் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் என் அம்மாவை நாம் இழந்தது யேர்மன் மருத்துவத்துறையின் கவனமின்மையால். யேர்மனியிலும் இப்போது வைத்தியசாலைகளை அமெரிக்கத் தனியார் நிறுவனங்களே நடத்துகின்றனவாம். எங்கும் எல்லாம் இப்போ பணம் மட்டுமே குறிக்கோள். எலும்பு தொடர்பான நோய்களுக்கு இன்னும் யேர்மனியில் நல்ல வைத்தியம் தான். அதற்காக எடுத்ததுக்கெல்லாம் அங்கு ஓட முடியுமா???
  7. யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி...💐
  9. யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.
  11. யாயினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  12. முள்ளியவளை சுதர்சன் (32 years old) யாயினி (153 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழ் இணையம், யாயினி, முள்ளியவளை சுதர்சன்.......! 💐
  13. நல்லூர் திருவிழாவுக்கு வரும் வெளிநாட்டு மக்களை குறி வைத்து... பலரும் விடுதிகள் கட்டுவதற்காக... காணிகளை வாங்குகின்றார்கள். ஒரு கோடி... கொடுத்து, வாங்குபவர்களும் வெளிநாட்டவர்கள் தான். சிலர் "சூப்பர் மாக்கெற்றும்" கட்டியுள்ளார்கள். சென்ற வருடம் கொரோனா இருந்ததால்... ஆட்கள் வரவு குறைவு. அதற்கு முதல் வருடம், நல்லூர் திருவிழா நேரம்.... அயலில் உள்ள விடுதி அறை ஒன்றின்... ஒரு நாள் வாடகை 50 பவுண்ஸ். ஆவணி மாதம் நடக்க இருக்கும் திருவிழாவிற்கு... பங்குனி மாதமே.... அறைகள் யாவும், பதிவு செய்யப் பட்டு விட்டன. ஐரோப்பாவில் .... 50 பவுண்சிற்கு, நான்கு, அல்லது ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகள் உள்ளன. ஐரோப்பா விடுதிகளின் வாடகை கொடுத்து, வெளிநாட்டு பக்தர்கள்.... நல்லூர் திருவிழாவை பார்க்க வருகிறார்கள்.
  14. உயிரை காலில் பிடித்து கொண்டு தாவி ஓடும் மலை ஆடுகள்........! 👏
  15. யதார்த்தத்தை சொல்லும் கவிதை... வலிசுமந்த வரிகள். பகிர்வுக்கு நன்றி
  16. இப்ப நீங்கள் சொன்னதைத்தான் அங்கு குடிக்கிறார்கள்.என்னெனில் கிணறும் மலசலகூடமும் மிகயருகிலேயுண்டு. இல்லை அவரது கொள்ளுப் பாட்டி வளர்த்து இருக்கலாம்.நாம் எல்லோரும் அவர சொன்னபடி தான் போகப்போகிறோம் .
  17. கிரேக்க நாகரீகம் தங்களின் பொதுகூட கழிப்பறையில் இருந்து நேரே தோட்டங்களுக்கு கழிவு வாய்க்காலை திருப்பி விட்டு அதிகூடிய விளைச்சலை முதல்வரும் வருடங்களில் பெற்றுக்கொண்டனர் அதன்பின் அந்த சூழல் முறை விவசாயம் பல வியாதிகளையும் கொண்டுவந்து அவர்களை அழித்தது வரலாறு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.