Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points88014Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்11Points46808Posts -
இணையவன்
கருத்துக்கள பொறுப்பாளர்கள்8Points7596Posts -
பெருமாள்
கருத்துக்கள உறவுகள்6Points15756Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/04/21 in all areas
-
ஐம்பதில் ஆசை
8 pointsஇந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் சொல்வார். பன்றி வேட்டையாடியது, வயலில் சூடு அடிக்கும்போது யானை வந்தது, சகோதரங்களுடன் முரன்பட்டு வேறு ஊர் சென்று கடின உழைப்பால் முன்னேறியது போன்ற பல கதைகள் சொல்வார். அன்று ஆவற்றைப் பெரிதாகக் காதில் வாங்கியதில்லை. அவர் சொன்னவற்றில் நினைவில் இருந்த சிலவற்றை பல வருடங்கள் கழித்து மீட்டபோது அவரைப்போல் எனக்கு சொல்லத்தக்கவாறு அனுபவங்கள் எதுவும் இல்லையே என்று தோன்றும். இப்போது அந்த ஏக்கம் இல்லை. இப்போது என்ன நிலையில் உள்ளேனோ அதைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டு அதனை மேம்படுத்தி எதிர்காலத்தைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்பதில் உறுதியாக உள்ளேன். வாழ்வதற்கு வாழ்க்கை இன்னும் ஏராளம் உள்ளது. அதற்கு எனது உடல் ஆரோக்கியம் முக்கியம். என்னுடைய உடலைக் கவனமாகப் பார்க்காவிட்டால் உள்ளத்தால் என்னை நிறைவாக உணர முடியாது. எனது இனம் நிலைக்க வேண்டுமானால் முதலில் நான் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனது இனத்தில் நானும் ஒரு அங்கம். *** முன்பு ஒரு திரியில் ஓட்டப் பயிற்சி செய்வதாக எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் - 2 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். ஓடி முடிந்ததும் மிகக் களைப்பாக இருக்கும். அதன்பின்னர் இன்னும் தூரம் ஓட வேண்டும் என்பதற்காக 3 கிலோமீற்றராக மாற்றிக் கொண்டேன். அது காலப்போக்கில் கடினமான பிரயத்தனத்துடன் 35-40 நிமிடங்களில் 5 கிலோமீற்றர்களாக ஆக மாறியது. அதுவே எனது அதி உச்ச எல்லை என்று நினைத்திருந்தேன். சில காலங்களின் பின்னர் படிப்படியாக நின்று ஓய்வெடுத்து ஒரு மணி நேரம் 7 கிமீ வரை ஓட முடிந்தது. இப்படியே சுமார் ஒரு வருடம் சென்றது. நான் இருக்கும் ஊரில் ஒரு உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஓட்டப் பயிற்சி செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று உற்சாகப் படுத்தினார்கள். அது நகரசபையால் நடத்தப்படுவதால் வருடத்துக்கு 75 யூரோ, முயற்சித்தும் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். வாரத்தில் 3 நாள் பயிற்சி. மாலை 6.30 க்கு ஆரம்பிக்கும். வேலை காரணமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே பங்குபற்ற முடியும். 6 மாதப் பயிற்சியின் பின் 10 கிமீ ஓட்டப் போட்டி ஒன்றில் பங்குபெற முடிந்தது மட்டுமல்லாது சில மாதங்களுக்குப் பின்னர் அரை மரதன் ஓடும் அளவுக்கு வந்துவிட்டேன். முதலாவது 10 கிமீ போட்டி சரி, 50 வயதாகிறது ஒரு தடவை மரதன் ஓடினால் என்ன என்று தோன்றியது. மரதன் ஓடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஓடியோ நடந்தோ தவழ்ந்தோ முடிவு எல்லை ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த எல்லையைத் தாண்டுவதென்பது விவரிக்க முடியாத இனிய அனுபவம் என்று ஓடி முடித்தவர்கள் கூறிக் கேட்டுள்ளேன். சிலர் எல்லையில் காத்திருக்கும் தமது பிள்ளைகள், மனைவி அல்லது உறவினர்களைக் கட்டி அணைத்துக் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் காணொலிகளில் கண்டிருக்கிறேன். ஆகவே கால்கள் சரியாக இயங்கும்போதே வாழ்க்கையில் ஒரு தடவை ஓடிப் பார்க்க முடிவு செய்தேன். எனக்குப் பயிற்சி தருபவராகிய ஸாஹிர் என்பவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியாக உற்சாகப்படுத்தினான். ஆனால் கடுமையான பயிற்சியைப் பின்பற்றினால் நான் நிர்ணயித்த இலக்கை விட நன்றாக ஓடலாம் என்றான். அதன்படி பரிசில் ஏப்ரல் 2020 இல் நடக்கவிருந்த சர்வதேச மரதன் போட்டியில் பதிவு செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இது மரதன் வரலாற்றில் உலகில் அதிகம் பேர் பங்குகொள்ளும் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்பட்டது. போட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடுமையான பயிற்சி ஆரம்பமாகியது. மழை குளிர் காற்று என்று எதையும் பார்க்க முடியாது. ஓட வெளிக்கிட்டால் ஓட வேண்டியதுதான். கிளப் உறுப்பினர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலாவது குழு முயல் வேகத்தில் ஓடக் கூடியது. நான் 3 ஆவது ஆமை வேகக் குழு. நான் ஒரு தடவை முதல் முழுவோடு சேர்ந்து ஓடி ஆவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால் அவர்களோடு சேர்வதில்லை. மழையிலும் பனி உறைந்த குளிரிலும் கொட்டும் வியர்வையுடன் அன்றொருநாள் மார்கழி மாதம் குளிர் மழை தூறிக்கொண்டிருந்தது, சிலர் பயிற்சிக்கு வரவில்லை. வேகமாக ஓடுபவர்களே அதிகமாக இருந்தனர். பழைய உறுப்பினர் ஒருவவன் அன்று வந்திருந்தான். அவன் பெயர் பிரெடெரிக், கரிபியன் தீவைச் சேர்ந்தவன். தனது ஊரில் சில காலம் தங்கிவிட்டு பிரான்சுக்குத் திரும்பியிருந்தான். அன்றைய இருளில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அதிகம் நின்று பேசிக் கொண்டிருந்தால் குளிரில் நடுங்கத் தொடங்கும் ஆகவே மெதுவாக ஓட்டத்தை ஆரம்பிப்போம் என ஸாஹிர் கூறிவிட்டு பிரெடெரிக்கை அறிமுகப்படுத்தி நீங்கள் இருவரும் மட்டுமே இரண்டாவது முழுவில் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று கூறி நாங்கள் ஓட வேண்டிய பாதையையும் வேக மாற்றங்களையும் அவசரமாக் விளக்கிவிட்டு முதல் குழுவுடம் பறந்துவிட்டான். நானும் பிரெடெரிக்கும் தனியே நின்றிருந்தோம். ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். வீதியின் மின் வெளிச்சத்தில் சில நிமிடங்கள் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தோம். பிரெடெரிக் மெதுவாக ஓடுவதற்கே சற்றுச் சிரமப் படுவதாகத் தோன்றியது. 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகத்தைச் சற்றே அதிகரிக்க வேண்டும் ஆனால் வேகம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. 30 நிமிடத்தின் பின் வேகம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். ஆனால் அவன் கொஞ்சம் மூச்சு வாங்குவது தெரிந்தது. பேசாமல் முதல் குழுவோடு ஓடியிருக்கலாம் என்று தோன்றியது. பேச்சு வாக்கில் உனக்கு எத்தனை வயது என்று கேட்டேன். 71 என்றான். ஒரு கணம் எனது நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து அதிர்ச்சியிலிருந்து மீழ சில வினாடிகள் ஆனது. வாயிலிருந்து அப்படியா, நன்றாக ஓருகிறாய் என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஓடுவதற்கு வயது எல்லை கிடையாது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். இன்றுவரை பிரெடெரிக் எனக்கு மரியாதைக்குரிய நண்பனாகவும் அறிவுரை கூறும் ஆசானாகவும் இருக்கிறான். படத்தில் இடது பக்கத்தில் பிரெடெரிக் பயிற்சி தொடர ஆர்வம் அதிகரிக்க இலக்குகளும் மாறிக்கொண்டிருந்தன. மரதன் ஆரம்பமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. *** ஓட்டப் பயிற்சியோ போட்டியோ ஏனைய விளையாட்டுகள் போல் போட்டி மனப்பான்மையுடன் அமைவதல்ல. ஒவ்வொருவரும் தமது தகமைக்கேற்ப தாங்களே ஒரு வரயறையை அல்லது தமது சொந்த இலக்கை வைத்து ஓடுவதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னொருவர்போல் ஓடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படாது. மரதன் போட்டியிலும் 50 ஆயிரம் பேர் ஓடினால் அதில் முதல் 100 பேருக்குள்தால் சரியான போட்டி இருக்கும். ஏனையவர்கள் தமது சொந்த இலக்கை வைத்தே ஓடுவார்கள். ஆகவே 5கிலோமீற்றர் ஓடும் ஒருவர் ஒருவர் தன்னால் 10 கிலோமீற்றர் ஓட முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை. உடல் அமைப்பும் இவ்வாறுதான். எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது. என்னை விட உயரம் மிகக் குறைந்த ஒருவர் என்னைவிட மிக வேகமாக ஓடுகிறார். அதேபோல் என்னைவிட எடை கூடிய ஒருவர் என்னைவிட வேகமாக ஓடுகிறார். அதற்காக நான் இந்த இருவரையும் விட வேகமாக ஓட முடியவில்லையே என்று ஏங்க முடியாது. ஓடுவதால் உள்ள நன்மைகளில் முக்கியமானவை சில வேக ஓட்டத்தின்போது இதயம் அதிகமான இரத்தத்தினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இதயத் தசைகள் வலுவடைந்து இதயம் விரிவடைந்து ஒரே இதயத்துடிப்பில் அதிகமான இரத்தைதை உடலுக்கு வழங்கம் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இதயத்துக்கும் வேலைப்பழு குறைந்து நீண்ட காலம் இயங்கும் ஓடும்போது கால்கள் தரையில் படும்போது ஏற்படும் மைக்க்ரோ அதிர்வுகளால் தசைகளும் எலும்பும் சிறிய சிதைவுகளுக்குள்ளாகொன்றன. பின்னை ஓய்வின்போது சிதைவுகள் மறுசீரமைக்கப்பட்டு தசைகளும் எலும்புகளிம் புத்துயிர் பெறுகின்றன இரத்தத்தில் மேலதிக சீனியும் கொலஸ்ரரோலும் சக்தியாக எரிக்கப்படும் போட்டி மனப்பான்மையற்ற பயிற்சியாதலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடும்போது ஏற்படும் களைப்பு சோர்வு ஏக்கம் தளர்வு அவஸ்தை எல்லாவற்றையும் ஓட்ட முடிவில் மறந்து வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை உணர முடியும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல உடலை அசைத்து அதிக நேரம் வேலை செய்கிறேன், ஆகவே உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைப்பது தவறு. இரண்டும் ஒன்றல்ல. 1 மணி நேர உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் உடலை வருத்திச் செய்யும் வேலையால் கிடைக்காது. *** ஆரம்ப ஓட்டப் பயிற்சி இது ஓட விருப்பம் இருந்தாலும் தயங்குபவர்களுக்கும் நாளைக்கு ஓடலாம் என்று இன்றுவர ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கும். முக்கிய குறிப்பு : உடல், இதயம் பலவீனமானவர்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னர் இதனைப் பின்பற்ற வேண்டும். சரியான சப்பாத்து உடை மற்றும் இதர உபகரணங்கள் இருந்தால்தான் ஓடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். முதலில் இருப்பவற்றை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். எப்போது உங்கள் வயது, உயரம், நிறை, உருவம் எல்லாவற்றையும் விட்டு ஓட முன்வருகிறீர்களோ அதுவே உங்களது முதல் வெற்றி. உங்கள் உடையையோ உடலையோ ஓட்டத்தையோ பார்த்து யாராவது சிரிப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம். எல்லா அனுகூலங்களும் இருந்தும் ஓட்டத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் புறக்கணித்து ஓடாதிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நீங்கள் ஓட முன்வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எடுத்த உடனேயே ஓட முயற்சிக்க வேண்டாம். தசைகளையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். படிப்படியாகப் பயிற்சியை ஆரம்பிப்போம். நாள் 1 15 நிமிட வேக நடை அதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு மெதுவாக ஓட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓடுங்கள். அது வேகமாக நடப்பதை விட வேகம் குறைந்ததாகக் கூட இருக்கலாம். இந்த 10 நிமிடங்களை எட்ட முடியாமல் போனல் நீங்கள் மெதுவாக ஓடவில்லை என்று அர்த்தம். 10 நிமிடம் சாதாரண நடை நன்றாகச் சாப்பிட்டு நிறைய நீர் அருந்தி நன்றாகத் தூங்குங்கள். நாள் 2 பயிற்சி இல்லை நாள்3 1 மணி நேர வேக நடை நாள் 4 பயிற்சி இல்லை நாள் 5 15 நிமிட வேக நடை 30 நிமிட ஓட்டமும் நடையும். 1நிமிட மெதுவான ஓட்டம், 30 விநாடிகள் நடை என்பதைச் சுழற்சியாகச் செய்யுங்கள் 15 நிமிட நடை நாள் 6 பயிற்சி இல்லை நாள் 7 10 நிமிட வேக நடை விரும்பிய அளவு நேரம் மெதுவான ஓட்டம். கடைசி 1 நிமிடத்தை உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுங்கள். 10 நிமிட நடை மெதுவாக ஓடும்படி வற்புறுத்தக் காரணம் அதிகமாகக் களைத்து அரைவாசியில் பயிற்சியை முடிக்கக் கூடாது என்பதற்காக. அத்துடன் மெதுவான ஓட்டம் என்பது ஓட்டப் பயிற்சியில் முக்கியமான அங்கம். மெதுவாக ஆரம்பிப்பது படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கு. சடுதியாக ஆரம்பித்தால் 10 நிமிடத்தில் களைப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடர முடியாமல் போய்விடும். தொடரும் நாட்களில் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். *** வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி இதும் ஏற்கனவே ஓரளவு ஓட முடியுமானவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் ஓடுபவர்களும் தாராளமாகச் செய்யலாம். பயிற்சியின் அங்கங்கள். A. Warm up : மிக மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரித்து அதிக வேகம் எடுக்காமல் அதிக களைப்பு இல்லாமல் ஓடுவது. இது இதயத்தை சாதாரண நிலையில் இருந்து வேகத் துடிப்பிற்குத் தயார் படுத்துவது மட்டுமே. உங்கள் அதிகபட்ச வலுவில் 50-60% போதுமானது. B. மெதுவான ஓட்டம் : ஓட்டப் பயிற்சியில் இதுவும் மிக முக்கியமானது. இதயத் துடிப்பைக் குறைத்து தொடர்ச்சியாக சக்தியை உடலுக்கு வழங்குவது. மெதுவான ஓட்டத்தின் இறுதியில் களைப்பு உண்டாகக் கூடாது. C. தயார்படுத்தல் 1 - கால்களைப் பின்னால் மடித்து ஓடுதல். முன்னர் குறிப்பிட்டது போல இந்தத் தடவை கால்களை எந்த அளவு பின்னால் மடிக்க முடியுமோ அவ்வளவு மடித்து வேகமாகக் கால்கள அசைக்க வேண்டும். ஒவ்வொர அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். D. தயார்படுத்தல் 2 - முழங்கால்களை உயர்த்தி ஓடுதல். முழங்கால்களைச் சமாந்தரமாக மேலே தூக்கி வேகமாக ஓடுதல். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். ஏறத்தாள நின்ற இடத்திலேயே ஓடுவது போன்றது. E. தயார்படுத்தல் 3 - கால்களை மடிக்காமல் ஓடுதல். முழங்கால்களை மடிக்காமல் கால்களை முன்னே மட்டும் உயர்த்தி வேகமாக ஓட வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். கிட்டத்தட்ட நின்ற இடத்திலேயே ஓடுவது போன்று இருக்கும். இந்த 3 பயிற்சிகளும் (C, D, E) இந்த வீடியோவில் 1:22 முதல் 2:18 வரை உள்ளது. F. Jamping jack - இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். G. ஓய்வு : கை கால்களைத் தளர விட்டு ஆழமாகச் சுவாசித்தல். நீர் அருந்தலாம். H. Stretching - அவசியமில்லை. செய்வதாக இருந்தால் 2 மணி நேரத்துக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் செய்யலாம். இனி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாக ஓடுவதால் நேரடியாகவே இரண்டாவது நிலை பயிற்சிக்கே போகலாம். 1 வாரத்தில் 4 நாட்கள் செய்ய வேண்டியவை. பயிற்சி 1 15 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் C 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் D 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் E 30 வினாடிகள் ஓய்வு. நீர் அருந்தலாம். மேலே குறிப்பிட்ட 15 வினாடிப் பயிற்சிகளை மீண்டும் 2 தடவை செய்யுங்கள் மிகவும் களைப்பாக இருக்கும். 15 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் கால்களில் வலி இருக்கும். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 2 10 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 30 நிமிட ஓட்டம். முதல் 10 நிமிடங்கள் உங்கள் உச்ச வலுவில் 60 வீதமாக இருக்க வேண்டும். அடுத்த 7 நிமிடங்கள் 70 வீதமாக அதிகரியுங்கள். அதற்கடுத்த 7 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓட வேண்டும் ஆனால் களைத்து ஓட்டத்தைக் கைவிடும்படியாக ஓடக் கூடாது. மீதி நேரத்தை மெதுவாக ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 3 interval running 20 நிமிட Warm up (A) 30 வினாடிகள் ஓய்வு. 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். வேகமான ஓட்டத்தின்போது 80-90 வீதமான உச்ச வலுவுடன் ஓடலாம். 10 தவடவை ஓடி முடிக்க முடியாது போனால் நீங்கள் 90 வீதத்துக்கு மேலான வலுவுடன் ஓடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடி இன்னொரு தடவை 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். 5 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. மிகவும் களைப்பாக இருக்கும், அடுத்த 1 அல்லது 2 நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 4 விரும்பியபடி ஓட்டம் உங்க விருப்பத்திற்கேற்ப நேர எல்லை வைத்தோ தூர எல்லை வைத்தோ விரும்பிய வேகத்தில் ஓடலாம். இந்த 4 பயிற்சிகளையும் சுழற்சியாகச் செய்யுங்கள். *** ஐம்பதுக்கு வருவோம். பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். ஊரில் இருந்திருந்தால் பிள்ளைகளின் படிப்பு முடிந்தால் அவர்களுக்கான வேலை, திருமணம், செலவு பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும். இங்கு அதொன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக சாதாரனமாக வாழ்வதற்கான தன்நிறைவை அடைந்துவிட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் எல்லை தொலைவில் தெரிகிறது. எனக்கான எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட்டேன். என்மேலுள்ல அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் உணர்வு. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மனதில் இளமையுடனும் வாழ்க்கையைத் தொடர இதுவே பொற்காலம். நீங்களும் வாருங்கள் ஓடி வாழ்ந்திடலாம்.8 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
- ஆண்டகைக்கு அஞ்சலி.!
2 pointsவண பிதா வுக்கு கண்ணீரால் எழுதுகின்றேன். ********************* வண பிதாவே.. நீங்கள் பிறந்ததாலே நெடுந்தீவு தாய்க்கு மகிழ்ச்சி நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்தோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி நீங்கள் இறைபணித்தூதராய் துறவறம் பூண்டு செய்த சேவைகள் இலங்கை மக்களுக்கே மகிழ்ச்சி தமிழ் உணர்வாளராய் தமிழை தலைநிமிர வைத்தது-உலக தமிழினத்துக்கே மகிழ்ச்சி. மனித நேயம் கலந்து.. இத்தனை மகிழ்சிகள் எமக்குத்தந்த பிதாவே இன்று(1.04.21) எமைவிட்டு பிரிந்த செய்தி அறிந்து அகிலமே கண்ணீரால் கரையுதையா. இறைவனோடு இறைவனாய் என்றும் எம்மனதில் நிலைத்திருப்பீர்கள். போய் வாருங்கள் ஆண்டகையே.🙏 அன்புடன் -பசுவூர்க்கோபி-2 points- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points- கொஞ்சம் சிரிக்க ....
1 point1 point- உங்களுக்கு தெரியுமா?
1 pointதமிழில் எழுதப்படும் துணையெழுத்துகள், எழுத்துருக்கள் ஆகியவற்றை விளக்கும் படம் இது. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை அறிந்திருக்கும் நம்மில் பலர்க்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்றால் என்னென்று தெரியாது. தமிழில் எழுதப்படும் ஒவ்வோர் எழுத்தும் எத்தகைய சேர்ப்பு வடிவத்தினால் அதன் வரிசையில் இன்னோர் எழுத்தாகிறது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு வரைவுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அவற்றையும் அறிந்திருக்க வேண்டும். மூத்த தமிழாசிரியர்களிடையே அறியப்பட்டிருக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்கள் புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களிடையே பரவலாகாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கும் நம் மாணாக்கர்களுக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்களின் பட்டியல் உதவும். துணையெழுத்துகளை விளக்கி எழுதப்பட்ட கட்டுரை நக்கீரன் இணையத்தில் சொல்லேர் உழவு பகுதியில் வெளியாகியிருக்கிறது. அதனையும் படித்துத் தெளிவுறுக1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உடலை... மயானத்திற்கு, அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது... வெடி கொளுத்தி வீசியதில், அது குளவிக் கூட்டில், பட்டு... குளவி குத்தி பலர் வைத்தியசாலையில் அனுமதி.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- வெளியேறுங்கள் அண்ணா! – தலைவருக்கு எழுதிய கடைசிக் கடிதம்! – பிரிகேடியர் துர்க்கா
வெளியேறுங்கள் அண்ணா! – தலைவருக்கு எழுதிய கடைசிக் கடிதம்! – பிரிகேடியர் துர்க்கா “அண்ணா! எங்களை நம்புங்கள், நீங்கள் வெளியே இருந்து கட்டளை இடுங்கள். நாங்கள் அதனைச் செயற்படுத்துகின்றோம். நீங்கள் எங்களுக்கு மட்டுமல்ல எங்கட மக்களுக்குக் கட்டாயம் தேவை. அதனால் தயவு செய்து ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுங்கள் அண்ணா இதனை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எங்களுடைய தமிழ்மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.” இதுதான் அவள் தலைவருக்கு எழுதிய கடைசிக் கடிதம். உண்மையிலேயே ஆனந்தபுரத்திலிருந்து வெளியேறுவது என்ற எண்ணம் தலைவர் அவர்களிடம் ஒருதுளியும் இருக்கவில்லை. இறுதிவரை நின்று போராடுவது என்றே தலைவர் முடிவெடுத்திருந்தார். ஆனாலும், அந்தக் கடிதத்தில் இருந்த “மக்கள் என்கின்ற சொல் தலைவரை மிகவும் நெகிழச்செய்தது. அதுவே தலைவரை ஆனந்தபுரத்திலிருந்து வெளியேற்றியது. அந்தக் கடிதத்தை தலைவர் அவர்களுக்கு எழுதியது வேறுயாருமல்ல சோதியா படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் துர்க்கா. உண்மையிலேயே அவளது தோற்றத்துக்கும் ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இருக்கவில்லை. மெலிந்த சிறிய உருவம். எப்போதும் புன்னகை மாறாத முகம். துள்ளித்துள்ளி ஓடும் மான்குட்டி போல அவள் நடையின் வேகம். முடியாது என்பது அவரது அகராதியில் எப்போதும் இருந்ததில்லை. தெரியாது என்று எதனையும் விட்டுவிட்டு அவள் ஒதுங்கியதும் இல்லை. எல்லாப் போராளிகளையும் புதியவர், பழையவர் , பெரியவர், சிறியவர் என்ற பேதமின்றிப் பார்க்கும் அவரது குணம், கடுமையாகப் பேசவோ, கண்டிக்கவோ தெரியாத அன்பு நிறைந்த அவளது பேச்சு எல்லாப் போராளிகளுக்குமே அவள்மீது பிடிப்பினை ஏற்படுத்தியது. “என்னடாப்பா… நீங்கள்….” இந்த வார்த்தை அவரது வாயிலிருந்து வருகின்றது என்றால் அவர் கடுமையான கோபத்தில் இருக்கின்றார் என்பது அர்த்தம். கோபத்தில் கூட கடிந்து பேசத் தெரியாத போராளி. தலைவர் அவர்கள் பயிற்சியின்போது ஒவ்வொரு போராளிகளையும் நன்கு இனங்கண்டு பயிற்சி நிறைவடைந்தபோது அனைவரையும் ஒவ்வொரு பிரிவுக்குப் பிரித்துவிடுகின்றபோது துர்க்காவுக்கு வழங்கப்பட்டபணி மருத்துவப்பணி. ஒரு மருத்துவப் போராளிக்கு இருக்கவேண்டிய அனைத்துத் தகுதியுமே அவளிடம் நிறையவே இருந்தது. அதேபோல் காலப்போக்கில் புதிய போராளிகளுக்கான பயிற்சிகளை வழங்குகின்ற பாசறைகளை வழிப்படுத்துகின்ற பொறுப்பு அவளுக்கு வழங்கப்படுகின்றது. அதுவும் அவளுக்கு மிகவும் பொருத்தமான பணியாக இருந்தது. தலைவர் அவர்கள் சோதியா படையணியை உருவாக்கி அதனுடைய சிறப்புத் தளபதியாக துர்க்காவை நியமித்தபோது உண்மையிலேயே பலரிடம் பலகேள்வி இருந்தது. ஏனெனில் இந்தப் பெரும்பணியை ஒப்படைக்கும்போது அவள் ஒன்பது பேர் கொண்ட அணிக்குத் தலைவியாக இருந்தாள். படையணிப்பொறுப்பை எடுத்தபோது உண்மையிலேயே அவளுக்குக் குறிபார்த்துச் சுடுவது என்பது சரியாக வராது. படையணிக்கான பயிற்சிகள் நடைபெறும்போது சளைக்காமல் ஓய்வு என்பதே எடுக்காது தான் அந்தப் படையணியின் சிறப்புத் தளபதி என்ற எண்ணம் ஒருதுளிகூட இன்றி, போராளிகளோடு போராளியாக நின்று, ஒவ்வொரு அணியணியாகப் பிரித்து சூட்டுப்பயிற்சிகள் வழங்கப்படும் போது, ஒவ்வொரு அணியோடும் சென்று ஓய்வோ சோர்வோ இன்றி சூட்டுப்பயிற்சியை எடுத்தார். எல்லோருக்கும் ஓய்வு வழங்கப்படும்போது கூட துப்பாக்கியை எடுத்து குறிபார்பதிலேயே அவர் குறியாக இருந்தார். எப்போது பார்த்தாலும் அவளது கை நீட்டிக் குறிபார்த்தபடியே இருக்கும். கடின உழைப்பு, விடாத முயற்சி விரைவிலேயே சிறந்த சூட்டாளராக அவளை மாற்றியது. ஈருந்து ஓடிக்கொண்டே மிகநேர்த்தியாகக் குறிபார்த்துச்சுடும் வல்லமையை அவளுக்குள் உருவாக்கியது. இதுவே விடுதலைப் போராட்டத்துக்குப் புதிய பதிய ஆயுதங்கள் வரும்போது அந்த ஆயுதங்களின் சூட்டுவலுவைச் சீர்செய்து பரீட்சித்துப் பாரக்கும் அளவுக்கு பிரிகேடியர் துர்க்காவை உயர்த்தியது. எத்தனையோ ஈக வரலாறுகளையும், அர்பணிப்புகளையும் தாங்கி நிற்கும் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே இவள் ஒரு மைல்கல். இறுதிக் கட்டப் போர் மிக இறுக்கமடைந்திருந்த காலப்பகுதி. களமுனைகளோ நாளுக்கு நாள் விரிந்து கொண்டே சென்றது. அவளுடன் நின்ற தோழிகள், அணித்தலைவர்கள் எனப் போராளிகள் ஓர்மத்துடன் நின்று களமுனைகளை எதிர் கொண்டு நின்றனர். போரியலில் நல்ல ஆளுமையைப் போரிடும் பேராற்றலை தனக்குள்ளே வளர்த்துக் கொண்ட துர்க்கா சமர்க்களங்களில் நாயகியாய், களமுனைகளில் போராளிகளை வழிப்படுத்தும் நல்ல தளபதியாய் வெற்றிகள் பலதைப் படைத்துவிட்டு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே மீண்டும் விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை உலகமே விழிநிமிர்த்திப் பார்க்கவைத்த ஆனந்தபுர முற்றுகைச் சமரில் இறுதிவரை போராடி, எம் தேசத் தலைவனை பத்திரமாகக் காப்பாற்றி விட்ட மனநிறைவுடன் ஆனந்தபுர மண்ணில் வரலாறாகிப் போனாள். தாரகம் இணையத்திற்க்காக அபிராமி பிரிகேடியர் துர்க்கா அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பணிவாகக் கட்டளைக் கடிதம் எழுதியது கூட எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா என்றும் சிலர் அக்காவின் வீரச்சாவின் பின்னர் கூறினர். வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் மணிவண்ணன், மகளிர் பொறுப்பாளரும் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியுமான பிரிகேடியர் விதுசா ஆகியோருடன் பிரிகேடியர் துர்க்காவும் வீரச்சாவு என்ற செய்தி அங்கு இருந்த எங்களின் இதயங்களைக் கிழித்தது. மனம் அதை நம்ப மறுத்தது. அனைத்துப் பெண் போராளிகளும் கண்ணீர்விட்டு ஓலமிட்டு அழுதனர். பெண் போராளிகளுக்கு இனி ஒரு தலைமை கிடைக்குமா என அனைத்து உள்ளங்களும் ஏங்கியது. 1971ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி கலைச்செல்வி பொன்னுத்துரை என்னும் பெயர் சூட்டி நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த பெண் பிள்ளை தான் எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா. யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் நான்காவது மகளிர் பயிற்சிப் பாசறையில் 1989ம் ஆண்டு தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். தலைவனின் நிழலில் மணலாற்றுக் காட்டில் தலைவரே நேரடியாக பயிற்சியை வழிநடத்திய காலத்தில் வளர்ந்தவர்தான் இவர். கடற்புலி லெப்.கேணல் மாதவி, கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி, கப்டன் வானதி, மேஜர் கஸ்தூரி, கப்டன் பாரதி போன்ற ஒப்பற்ற பெண் போராளிகளும் இதே பாசறையில்தான் தங்களின் பயிற்சியை ஆரம்பித்திருந்தனர். இவரது போராட்டப் பற்றையும், துணிவான கள ஆற்றலையும் கண்ட தேசியத் தலைவர் 1991ம் ஆண்டு மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட வைத்தார். இவர் அடிக்கடி மகளிர் பிரிவின் முதல் படைத் தளபதியாக இருந்த மேஜர் சோதியா அக்கா அவர்களை நினைவு கூறுவதோடு அவரில் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவர் காட்டிய அன்பும், இறுக்கமான பண்புமே தங்களை தலைவனை அறிந்து கொள்ளவும் போராட்டத்தின்பால் பற்று மிக்கவராக மாற்றவும் உந்து கோலாக இருந்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவார். உருவத்தில் மிகவும் சிறிய தோற்றம் கொண்டவராக இவர் இருந்தாலும் சிறப்புத் தளபதியாகத் தனது ஆயுத உறையில் கைச்சுடுகலனைக் கட்டிக் கொண்டு வலம் வரும்போது மிகவும் கம்பீரமாகவே இருக்கும். 1996 க்கு முன்னர் பல சிறிய களமுனைகளைச் சந்தித்து இருந்தாலும் 1996ம் ஆண்டு ஜுன் மாதம் மேஜர் சோதியா படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டு 450 வரையிலான போராளிகளுடன் மூன்று கம்பனிகளுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓயாத அலைகள் 1, 2, 3 ஆகிய நடவடிக்கைகளுடன் ஜெயசுக்குறு எதிர்ச்சமர் மற்றும் தீச்சுவாலை நடவடிக்கை ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு அணிகளை வழிநடத்தி வந்தார் பிரிகேடியர் துர்க்கா. தீச்சுவாலை நடவடிக்கையின் போது வயிற்றில் விழுப்புண் அடைந்த நிலையில் களத்தில் எதிரியின் முற்றுகையில் நின்றபடி ‘எங்களைப் பாக்காதீங்க..எங்கட இடத்துக்கு செல்லை அடியுங்க’ என்று மிகவும் துணிச்சலாக அவர் கூறிய பாங்கை பல வருடங்களுக்குப் பின்னரும் இயக்கத்தில் பலரும் பெருமையாகக் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கும். எப்பொழுதும் சிரித்த முகம். எந்த ஒரு தரத்தில் உள்ள போராளியையும் எழுந்து நின்று வரவேற்று அமர வைக்கும் பணிவான குணம். அந்த முகத்தை நாங்கள் இனிக் காண மாட்டோம் என்பது இன்னமும் எங்களால் நம்ப இயலாத ஒன்று. வீரர்கள் நிச்சயமாக வீழ்வதில்லை. அவரின் உணர்வும் உருவமும் அப்படித்தான் இன்னமும் எங்களை ஆக்கிரமிக்கின்றது. காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் யோகா செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. பயங்கரவாதி என்று எங்களை வர்ணிக்கும் பாதகர்கள் துர்க்கா அக்காவுடன் ஒருநாள் அமர்ந்து கதைத்திருக்க வேண்டும் என நாங்கள் எண்ணிய நாட்கள் பல உண்டு. 2006ம் ஆண்டு சமரில் கம்பனியை வழிநடத்திச் சென்ற லெப். கேணல் ஆர்த்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார். ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு சிறந்த புகைப்படவியலாளர், அமைப்புக்குத் தேவையான ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்க்கும் ஒருவர், கராத்தே மற்றும் யோகாக் கலையை விரும்பிப் பயின்ற ஒரு அன்பான உள்ளம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெண்புலிகளின் ஒரு படையணியை வழிநடத்திச் சென்ற ஒரு சிறந்த தலைவி. உலகில் எந்த மூலையிலும் எந்தப் பெண்களாலும் செய்ய இயலாத ஒரு செயல் அது. உலகப் போர்களின் போதும் ஏனைய உள்நாட்டு யுத்தங்களின் போதும் முயன்று முயன்று தோற்றுப் போன ஒரு எண்ணக்கரு. முழுவதுமாக, எந்த வித ஆண்களின் தலையீடும் இன்றி, பயிற்சி தொடக்கம், நிர்வாகம், தொழில்நுட்பம், மற்றும் களமுனை வரை பெண்களை மட்டுமே வழிநடத்திச் செய்து முடித்த, செய்து வெற்றி கண்ட பெருமை எங்கள் பிரிகேடியர்களான விதுசா அக்கா மற்றும் துர்க்கா அக்கா ஆகியோரை மட்டுமே சாரும். எந்த ஒரு விடயத்தையும் அக்காவிட்டைக் கேட்டுச் செய்ய வேணும் என்று சொல்லிவிட்டு விதுசா அக்காவின் கருத்தை நாடி கலந்து ஆலோசித்து செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. வீரச்சாவிலும் இருவரும் பிரியாமல் சென்றது ஈழப் பெண்களுக்குரிய தலைமைக்கு ஒரு பாரிய இழப்பென்றே சொல்ல வேண்டும். தனக்கென தலைவன் கொடுத்த படையணியை அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவர்களாக, அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை நோக்கியே பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களின் செயற்பாடுகள் இருக்கும். போர்களில் பெண்கள் என்னென்ன வழிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு பல ஆங்கில பொத்தகங்கள் மற்றும் ஒளிநாடாக்களை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பார். 2001ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் துர்க்கா அக்காவுக்கு கேணல் தரத்தை வழங்கியிருந்தார். விழுப்புண் அடைந்த நிலையிலும் அவரது வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். அவருடன் நிற்கும் போராளிகள், அக்கா பாவம் என்று சொல்லிவிட்டு அவருக்கு கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு உதவினால் கூட ‘ஏன் எனக்கு எடுக்க இயலாதா… நீங்கள் போய் உங்கட கடமைகளைச் செய்யுங்கள்’ என அன்பாகக் கடிந்து கொள்வார். விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் கீழ் இயங்கி வந்த போர்ப்பயிற்சி, தொலைத்தொடர்புப் பிரிவு, கணினிப் பிரிவு, படையப் புலனாய்வுப் பிரிவு, அரசியல்துறை, புலனாய்வுத்துறை, படையத்தொடக்கப் பயிற்சிக் கல்லூரி, படையறிவியல் கல்லூரி, புகைப்படப் பிரிவு, திரைப்படப் பிரிவு, காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றினதும் மகளிர் பொறுப்பாளர்களுக்கான மகளிர் பேரவைக் கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று பெண் புலிகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படும். இதற்கு பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா ஆகியோரே தலைமை வகித்தனர். பெண்கள் தொடர்பில் எந்த ஒரு முடிவையும் தாமாகவே எடுக்கும் அதிகாரத்தை தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுக்கு வழங்கியிருந்தார். காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்கள் ஒரு மணி நேரம் யோகா செய்ததன் பின்னர் மேஜர் சோதியா அவர்களின் படத்துக்கு மெழுகுதிரி கொழுத்தி கைகூப்பி வணங்குவார். அதன்பின்னர் தனது கடமைக்குத் தயாராகி விடுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளமாகச் சென்று போராளிகளுடன் அவர்களின் இன்ப துன்பங்களைக் கதைத்து அறிந்து கொள்வார். 2008ம் ஆண்டு மே மாதம் சோதிய படையணிப் போராளிகள் ஓமந்தைப் பகுதியில் லெப்.கேணல் வரதா தலைமையிலும் மன்னாரில் லெப்.கேணல் செல்வி தலைமையிலும், மணலாற்றில் லெப்.கேணல் தர்மா தலைமையிலும் முகமாலையில் மணிமொழி தலைமையிலும் களத்தில் நின்றிருந்தனர். பிரிகேடியர் துர்க்கா அவர்கள் ஒவ்வொரு களமுனையாக மாறி மாறிச் சென்று அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து களமுனைக்கு அவர்களைத் தயார் படுத்தி விட்டு வருவார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பலரும் அவருக்கு இட்ட பெயர் ‘காட்டுக் கோழி’. காடுகளில் தனி பிரியத்தோடு வாழும் அவர் தனது முக்கியமான முகாமை காட்டின் நடுவே வைத்திருந்தார். 1996ம் ஆண்டு வரை தலைவனின் பாசறையாக இருந்த அந்த முகாமை அதற்குப் பின்னர் சோதியா படையணிப் போராளிகள் நிர்வாகம் செய்து வந்தனர். 50 அடி ஆளமான கிணற்றில் தண்ணீர் அள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் குளித்து. காட்டுப் பயிற்சி பெற்று, காட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய காட்டு நகர்வுகளுக்குச் சென்று களைப்புடன் திரும்புவார்கள். அங்கே ஒரு சிறிய அறையில் தனக்குத் தேவையான அரசியல், விஞ்ஞானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார் துர்க்கா அக்கா. போராளிகளின் கதைத்து, பயிற்சி அளிக்கும் நேரம் போக மிகுதி இருக்கும் நேரங்களில் அந்தப் புத்தகங்களும் அவரின் உடன் பிறந்த சகோதரன் அவருக்குக் கொடுத்த கணினியும்தான் அவரின் நண்பர்கள். காட்டுக்குள் சென்று அங்குள் மரங்கள், இலைகள், பூக்கள், விலங்குகள், பழங்கள், போராளிகள் அனைத்தையும் படமெடுத்து தனது கணினித் திரையை அலங்கரிப்பார். அங்குள்ள காடுகளின் தன்மையை அறிந்து கொள்வதிலும் அதை ஏனைய போராளிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறை கொண்டு செயற்படுவார். சமாதான காலத்தில் இங்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்தக் காடுகள் மிகவும் வேறுபட்ட தன்மை உடையதாகவும் மிகவும் குறுகிய தூரத்திற்கும் இவற்றின் தன்மை வேறுபடுவதாகவும் கூறியிருந்தது இவருக்கும் மிகவும் ஆர்வமான விடயமாக இருந்தது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படியான காடுகளைக் காண்பது அரிது என்றும் தமிழீழத்தில் மூன்றில் இரண்டு பகுதி காடாக இருப்பது நாட்டின் சூழலுக்கு நன்மை தரும் என்றும் அடிக்கடி குறிப்பிடுவார். இரவு நேரங்களில் பெண் பிள்ளைகள் வெளியில் செல்லக் கூடாது என்று வளர்ந்த சமூகங்களில் இருந்து வந்த பெண்புலிகள் காட்டைப் பாதுகாக்க இரவு நேரக் காவற்கடமைகளில் துணிச்சலாக நின்று பல எதிரியின் வேவுக் காரர்களைப் பிடித்து அடைத்தார்கள் என்பது பல சமயங்களில் வெளியில் தெரிய வராமல் போன உண்மை. களமுனையில் நிற்கும் போராளிகளுக்கு சிற்றுண்டிகள் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முறைகள் தானே வேறு போராளிகளுடன் சேர்ந்து நின்று சிற்றுண்டி வகைகள் செய்து கொண்டு செல்வார். களமுனையில் நிற்கும் ஆண்போராளிகள் கூட ‘அக்கா வந்து போனவா..கட்டாயம் ஏதாவது கொண்டு வந்திருப்பா… மறைக்காமல் எடுங்கோ..’ என்று உரிமையோடு கேட்கும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தார் அவர். கராத்தே கலையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அதை பெண் போராளிகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடனும் இருந்த அவர் மேஜர் சோதியா அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேஜர் சோதியா அவர்களின் நினைவு தினத்தன்று பெண்களுக்கான கராத்தே சுற்றுப் போட்டியைத் தனது நண்பரும். கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்று கடற்புலிகளில் தளபதியாக இருந்த கெங்கா அக்காவுடன் இணைந்து நடத்தி வந்தார். கரும்புலிப் பயிற்சி பெற்றிருந்த கெங்கா அக்கா அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி நாட்களில் நடந்த கடற்சமரில் கரும்புலியாகச் சென்று எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். பிரிகேடியர் துர்க்கா அக்காவுக்கு குழந்தைகளில் அதிகப் பிரியம். செஞ்சோலை நிகழ்வுகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் அளவளாவிக் கொள்வதிலும் அவர்களை விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுப்பதிலும் எப்போதுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். திருமணமான பெண் போராளிகளின் குழந்தைகளை விதம் விதமாகப் படங்கள் எடுத்துத் தனது கணினியில் அவர்களை அலங்கரித்துக் கொள்வார். வீரச்சாவைத் தழுவிக் கொள்வதற்கு முன்னர் இறுதியாக களமுனைக்கு வெளியில் நின்ற போராளிகளை அவர் சந்தித்தது மார்ச் மாதம் 21ம் திகதி. புதிதாக போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்கு எதிரியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் எழ வேண்டிய கட்டாயத்தை அன்று அவர் அன்போடு கூறி விளங்க வைத்தார். களமுனையில் எறிகணைகள் மழை போல் பொழியும் நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அடிப்படைப் பயிற்சி முகாமை வந்து சேர்ந்தார். மிகவும் களைப்புடன் இருந்தார். எங்கும் எறிகணைகள் மழை போல் பொழிந்த வண்ணம் இருந்தன. முள்ளிவாய்க்கால் கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பெண்களுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையில் இருந்த பனங்கூடலுக்கு இடையில் ஒரு கொட்டகைக்குள் படுத்திருந்தார். களமுனையில் நித்திரையின்றி அவர் உழைத்தது அவரின் உடலில்தான் தெரிந்தது. உணர்வும் உத்வேகமும் இன்னமும் எந்த மாற்றமும் அடையவில்லை. ‘என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்?’ ஒரு இராணுவ வீரன் என்றவன் கடைசி வரைக்கும் எதிரிக்கு எதிராகப் போராடி வீரச்சாவை அடைய வேணும். அதுதான் அவனுக்கு அழகு அப்படித்தான் அண்ணா நினைக்கிறார். எவனிடமும் பணிந்து போயோ அல்லது கைப் பொம்மைகளாகவோ அண்ணா இருக்க விரும்ப மாட்டார்’ என்று கூறிவிட்டு நாங்கள் அனைவருமே இரண்டு மாதங்களாகக் குடித்துக் கொண்டிருந்த அதே அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டு எறிகணைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்க சற்று நேரம் பாயை விரித்து சாய்ந்து கொண்டார். களமுனையில் பல மணிநேரங்கள் நித்திரை கொள்ளாமல் எதிரியின் எறிகணைக்குள் மாட்டியிருந்து கண்விழித்து எங்களைக் காத்த அந்த உயிர் உறங்குவதை அன்றுதான் நாங்கள் கடைசியாகக் காணப் போகின்றோம் என்பது எங்களுக்கு நிச்சயம் தெரியாது. குறிசூட்டுத் திறனில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுத் தளபதிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடிக்கடி தேசியத் தலைவரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொண்டு வந்தார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. தனக்குக் கீழுள்ள போராளிகள் வேவுத் திறன், மறைந்திருந்து தாக்கும் பயிற்சி, வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல், பாதுகாப்புச் சமர் ஆகிய அனைத்திலும் ஆண் போராளிகளுக்கு சமமாக தங்களால் எல்லா விதத்திலும் களமுனையில் காட்ட முடியும் என உறுதியோடு நின்று நிரூபித்துச் சென்று விட்டுள்ளார் பிரிகேடியர் துர்க்கா. தலைவனின் ஆணையை அப்படியே ஏற்று நடத்தி வந்த அவரைப் பற்றி அவரின் வீரச்சாவின் பின்னர் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிடும்போது ‘எனக்கு விசுவாசமான தளபதிகளை நான் இழந்திட்டன்’ என்று குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவனின் தங்கையாக, பெண்புலிகளின் தளபதியாக, தன்னிகரற்ற ஒரு தலைவியாக விளங்கிய எங்களின் துர்க்கா அக்கா பிரிகேடியர் துர்க்காவாக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி அதிகாலை வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அவரின் வழிகாட்டுதலை ஏற்றுநின்று இறுதிச் சமரின் நான்கு மாதங்களில் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய சோதியா படையணிப் போராளிகளான லெப். கேணல் அகநிலா, லெப்.கேணல் மோகனா, லெப்.கேணல் செங்கையாழினி, லெப்.கேணல் அரசலா, லெப்.கேணல் அறிவு, லெப்.கேணல் சோழநிலா, லெப். கேணல் வரதா, லெப்.கேணல் மொழி, மேஜர் அகல்மதி, மேஜர் விதுரா, மேஜர் செஞ்சுரபி, மேஜர் ஈழக்கனி, மேஜர் இசைபாடினி, மேஜர் இசையறிவு, மேஜர் கலைமகள், மேஜர் ஈழநிலா, கப்டன் அலையரசி ஆகியோருக்கும் புதிதாக இணைந்து மிகவும் தீர்க்கமாகத் துணிவுடன் செயற்பட்டு இறுதியாக பிரிகேடியர் துர்க்கா அவர்களினால் 2ம் லெப் தரம் வழங்கப்பட்டு வீரச்சாவடைந்த 2ம் லெப் தர்சினி மற்றும் மே மாதம் 15ம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மூத்த போராளிகளான நயவாணி, கௌசலா மற்றும் இன்னமும் பெயர் குறிப்பிடப்படாத பல நூறு மாவீரர்களதும் கனவும் எங்கள் ஆன்மாவில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாடு விடுதலை அடையும் நாளில் அவர்களின் துயிலறைகளை அழகுபடுத்தி அலங்கரிக்கும் அந்த நாட்களே எங்களுக்கு வரக்கூடிய பொன்னான நாட்கள். கலை – https://www.thaarakam.com/news/602541 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointபார்வதி மைந்தா பாலகுமாரா சிங்காரவேலா செந்தில்நாதா பைந்தமிழ் தந்த எங்களின் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா கூர்மதியோனே குன்றுறை தீரா சிங்காரவேலா செந்தில்நாதா குரவள்ளியோடு நின்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா மாமயிலேறி வந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா மங்களம் என்றும் சேர்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா சேவற்கொடியைத் தாங்கிய தேவா சிங்காரவேலா செந்தில்நாதா சிந்தையில் வந்து நின்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா ஓமென்றுரைத்த ஓங்கார நாதா சிங்காரவேலா செந்தில்நாதா அள்ளித்தருவாய் ஆனந்தம் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா நீயிருந்தாலே நெஞ்சினில் வீரம் சிங்காரவேலா செந்தில்நாதா ஊரிடுமய்யா உமையின் பாலா சிங்காரவேலா செந்தில்நாதா ஞாயிறும் நீயே திங்களும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா நாளும் உன்னை பணிந்திடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா வேலவன் நீயே வேண்டுதல் கேட்டு சிங்காரவேலா செந்தில்நாதா பேரருள் தன்னை தந்திடுவாய் சிங்காரவேலா செந்தில்நாதா மாலவன் மருகா மயில்வாகனனே சிங்காரவேலா செந்தில்நாதா சங்கடம் தீர்க்கும் சண்முகவேலா சிங்காரவேலா செந்தில்நாதா கண்டவர்ப் போற்றும் கதிர்வேலவனே சிங்காரவேலா செந்தில்நாதா உன்பதம்நாடி வந்தோமய்யா சிங்காரவேலா செந்தில்நாதா அறுமுகன் நீயே அழகனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா அன்பரின் உள்ளம் அறிந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா திருமுகம் காட்டி அருள்செய்வாயே சிங்காரவேலா செந்தில்நாதா தீந்தமிழ் பாடல் நீ தருவாயே சிங்காரவேலா செந்தில்நாதா கரும்பாய் வாழ்வை மாற்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா கருணை என்மேல் காட்டிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா பிரம்மனும் போற்றும் பிள்ளையும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பேரறிவாளன் செல்வனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா ஒளவையின் முன்னே வந்தான் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா அருந்தமிழ் அள்ளித் தந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா கங்கையின் மைந்தா கார்த்திகை பாலா சிங்காரவேலா செந்தில்நாதா காத்தருள்வாயே செந்தமிழ் வேலா சிங்காரவேலா செந்தில்நாதா சங்கரன் ஈன்ற சரவணபவனே சிங்காரவேலா செந்தில்நாதா சகலரும் போற்றும் சண்முகநாதா சிங்காரவேலா செந்தில்நாதா பங்கயப் பூவில் கண்மலர்தோனே சிங்காரவேலா செந்தில்நாதா பக்தருக்கென்றும் அருள்செய்வோனே சிங்காரவேலா செந்தில்நாதா சுப்ரமணியன் சூரனை வென்றோன் சிங்காரவேலா செந்தில்நாதா சோதனையாவும் தீர்ப்பவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா செப்பிடவந்தோம் உந்தன் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா செப்பிடும்போதே செந்தேன் ஊரும் சிங்காரவேலா செந்தில்நாதா வேழவன் தம்பி வேலவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா வேண்டியதெல்லாம் தந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா அறுபடையில் வீற்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா அன்பரின் நெஞ்சில் வாழ்ந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா காரிருள் தன்னை நீக்கிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா காவல் தந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா வீறுடன் நின்ற வீரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா வெற்றியளிக்கும் சூரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பாடிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா பாடிட வைத்த தெய்வமும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பன்னிருக்கண்கள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பாவம் தீர்க்கும் பாலனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பன்னிருக்கைகள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா பணிந்தோமய்யா காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா எண்ணியதெல்லாம் ஈடேறவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா இதயம் தானே குளிர்ந்திடவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா மண்ணிடை வாழ்க்கை சிறந்திட வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா மால்மருகா உன் கருணை வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா உன்வடிவழகைப் பார்த்திருப்போமே சிங்காரவேலா செந்தில்நாதா உன்னடியென்றும் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா சேனாபதியே செவ்வேல் கோவே சிங்காரவேலா செந்தில்நாதா சீருடன் வாழ செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா வீணாய் போகும் வாழ்நாள் தன்னில் சிங்காரவேலா செந்தில்நாதா வெற்றிகள் காண செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா தேனாய் எங்கள் நாவில் ஊறும் சிங்காரவேலா செந்தில்நாதா திருமுருகா உன் இனிக்கும் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா தானாய் வந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா தயவுடன் எம்மைப் பார்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா ஏனோ இன்னும் மௌனம் அய்யா சிங்காரவேலா செந்தில்நாதா என்றும் உன்னைப் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா பிள்ளைத்தமிழில் வாழும் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா பிணிகள்த் தீர்க்கும் வல்லமையோனே சிங்காரவேலா செந்தில்நாதா கன்னித்தமிழில் கலந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா கதிராய் வந்து ஒளி தருவோனே சிங்காரவேலா செந்தில்நாதா தீவினையாவும் தீர்த்திடுவோனே சிங்காரவேலா செந்தில்நாதா தெள்ளுத் தமிழின் உள்ளிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா சோர்வினை நீக்கும் சுந்தர பாலா சிங்காரவேலா செந்தில்நாதா சொல்லிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா ஆறுமுகத்தோன் நீயிருந்தாதாலே சிங்காரவேலா செந்தில்நாதா1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எட்டடுக்கு மாளிகையில் என்ன1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointகருணா சிறுவர்களைக் கடத்துவதற்காக பாவித்த உத்திகள் !................. சிறுவர்களையும், பதின்ம வயது இளைஞர்களையும் கடத்திச் சென்ற கருணா குழு, அவர்களை கடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் தமது அரசியல் அலுவலகத்திலேயே தற்காலிகமாக அடைத்து வைத்தது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடிச் சென்ற பெற்றோர்கள் தமது கிராமங்களுக்கு அருகிலிருந்த கருணா குழுவின் அரசியல் அலுவலகங்களில் தமது பிள்ளைகள் கருணா குழுவால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாகவும், குறைந்தது தமது பிள்ளைகள் அந்த அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்று கருணாவின் அரசியல்க்த்துறை தம்மிடம் உறுதிப்படுத்தியிருந்ததாகவும் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் மனிதவுரிமை அமைப்பு ஒன்றின் அதிகாரி தெரிவிக்கையில் கருணா குழுவின் அரசியல் அலுவலகத்தில் சிறுவர்கள் ஆயுதங்களுடன் நிற்பதைத் தான் கண்டதாகக் கூறுகிறார். "அவர்களில் ஒரு சிறுவனின் இடது கையில் காயமேற்பட்டிருந்தது, வலது கையில் வாக்கி டோக்கியொன்றை அவன் வைத்திருந்தான். அவனுடன் இன்னும் குறைந்தது 10 அல்லது 12 சிறுவர்களைக் கண்டேன். எல்லோரும் 14 அல்லது 15 வயதுடையவர்களாகத்தான் இருப்பார்கள். சிலரைப் பார்க்க அவர்களின் பெற்றோர்கள் அங்கே காத்துநின்றது தெரிந்தது" என்று அவர் மேலும் தெரிவிக்கிறார். மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி மட்டக்களப்பு நகரில் அமைந்திருந்த கருணாவின் முகாமிற்குச் சென்ற பெற்றோரும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் அம்முகாம்களில் கருணா மிகக் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஆயுதங்களுடன் காவலுக்கு அமர்த்தியிருந்ததாகத் தெரிவிக்கின்றனர். 2006, புரட்டாதி மாதம் செங்கலடிப்பகுதியில் கருணாவால் கடத்தப்பட்ட தனது மகனைத் தேடி அங்கிருந்த கருணா குழுவின் முகாமிற்குச் சென்ற தாயிற்கு அவரது மகன் மட்டக்களப்பு முகாமில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தன்னுடன், இன்னும் கடத்தப்பட்ட பிள்ளைகளின் தாய்மாரையும் கூட்டிக்கொண்டு மட்டக்களப்பில் அமைந்திருந்த கருணாவின் முகாமுக்குச் சென்றிருந்த அத்தாய் மனிதவுரிமைக் காப்பகத்திடம் பின்வருமாறு கூறுகிறார், " எமது பிள்ளைகளை அவர்கள் மேல்மாடியில் அடைத்து வைத்திருந்தனர். எம்மைக் கண்டவுடன், இங்கே நிற்கவேண்டாம், உங்களைக் கண்டால் எங்களை அடித்துத் துன்புறுத்துவார்கள், நீங்கள் போய்விடுங்கள் என்று சைகை காட்டினார்கள்" என்று கூறுகிறார். சில நாட்களின் பின்னர் கடத்தப்பட்ட சிறுவர்களையும் இளைஞர்களையும் மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர்கள் வடமேற்கே பொலொன்னறுவை மாவட்டத்தில் இருக்கும் வெலிக்கந்தைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தமது முகாம்களுக்கு கருணா குழு இழுத்துச் சென்றது. இம்முகாம்களுக்குச் சென்ற பெற்றோர்கள் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி ஏ 11 நெடுஞ்சாலைக்கு வடக்கே குறைந்தது 5 முகாம்களை கருணா ராணுவத்தின் துணையுடன் அமைத்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் பரிபூரண கட்டுப்பாட்டில் இருக்கும் ராணுவமயப்படுத்தப்பட்ட இப்பிரதேசத்தில் குறைந்தது 5 முகாம்களை ராணுவத்தின் துணையில்லாமலும், அவர்களுக்குத் தெரியாமலும் கருணா நடத்திவருவதென்பது இயலாத காரியம் என்றும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு நகரில் அமைந்திருக்கும் கருணா குழுவின் அலுவலகத்தின் முன்னால் நபர் ஒருவர் - இம்முகாமைச் சூழவுள்ள மூன்று வீடுகளிலும் ராணுவமும் பொலீஸாரும் கருணா குழுவுக்குப் பாதுகாப்பு வழங்கிவருவதாகவும் நகர் வாசிகள் தெரிவிக்கின்றனர். மனிதநேய அமைப்பொன்றில் ஊழியராகப் பணியாற்றும் தமிழர் ஒருவர் வெலிக்கந்தைப் பகுதியில் இயங்கிவரும் கருணா குழுவின் ஐந்து முகாம்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணர்ந்தார். இந்த ஐந்து முகாம்களில் மூன்று முத்துகல பகுதியிலும், ஒன்று கிராமத்திற்குள்ளும், மற்றையது, கிராமத்திற்குச் சற்று வெளியேயும் அமைந்திருந்ததாக அவர் கூறுகிறார். அனைத்து முகாம்களும் பூரணமாக மறைக்கப்பட்ட உயர்ந்த வேலிகளைக் கொண்டிருந்ததாக அவர் மேலும் கூறுகிறார். அவரின் கூற்றுப்படி முதுகல ராணுவ முகாமின் வேலியோடு ஒரு கருணா முகாமும், ஏனையவை இரண்டும் மிக அருகிலும், நான்காவது முகாமும் அதனுடன் இணைந்த போர் வைத்தியசாலையும் மதுரங்கலப் பகுதியிலும், ஐந்தாவது முகாம் கரபொல பொலீஸ் நிலையத்துடனும் சேர்த்து அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointமனிதவுரிமைக் கண்காணிப்பகத்தின் 2006 ஆம் ஆண்டு அறிக்கையின்படி கிழக்கில் கருணா குழுவினரின் கடத்தல்கள் பற்றிய செய்தித் தொகுப்பு : பாகம் 2 கருணா சிறுவர்களைக் கடத்துவதற்காக பாவித்த உத்திகள் ! கருணா குழுவினரின் கடத்தல்களைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் அனைவருமே, இக்குழு தமது கடத்தல்களின்போது ஒரேவகையான உத்தியையே பாவித்ததாகக் கூறுகின்றனர். குறைந்தது 6 ஆயுதம் தரித்த கருணா துணைராணுவக்குழு உறுப்பினர்கள் கிராமத்திற்கு வருவர். பெரும்பாலான நேரங்களில் இலங்கை ராணுவத்தினரின் சீருடையில் கருணா துணைராணுவக் குழு உறுப்பினர்கள் கடத்தல்களில் ஈடுபட்டாலும்கூட, சிலவேளைகளில் கறுப்புநிற நீளக் காட்சட்டையும், சேர்ட்டும் அணிந்திருந்தனர். சிலவேளைகளில் தமது முகத்தைத் துணியினால் மூடிக் கட்டியிருந்தாலும்கூட, பெரும்பாலான வேளைகளில் பகிரங்கமாகவே கடத்தல்களில் இவர்கள் ஈடுபட்டனர். பல சந்தர்ப்பங்களில் கடத்தல்களில் ஈடுபட்ட கருணா குழு உறுப்பினர்களை கிராமத்தவர்கள் அடையாளம் கண்டிருந்தனர். மிகச் சரளமாகவும், கிழக்கு மாகாணத் தமிழிலும் பேசிய இக்கடத்தல்காரர்கள், தாம் தேடிவந்தவர் பற்றிய துல்லியமான தகவல்களைக் கொண்டிருந்தனர். தம்மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களால் சினமடைந்த கருணா, இக்கடத்தல்களுக்கும் தனக்கும் தொடர்பில்லையென்று கூறியிருந்ததுடன், இக்கடத்தல்களை புலிகளே செய்வதாக கூறத்தொடங்கியிருந்தார். ஆனால், கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், கண்ணால் கண்ட சாட்சிகள், உள்ளூர் மனிதவுரிமை அமைக்குக்கள் மற்றும் அரச சார்பற்ற சர்வதேச நிறுவனக்களின் ஊழியர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இக்கடத்தல்களை கருணா குழுவே செய்ததாக உறுதிபடக் கூறுகின்றனர். சில நூறு மீட்டர்கள் இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் ராணுவச் சாவடிகளினூடாக பூரண ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளால் சிறுவர்களைக் கடத்துவது எப்படிச் சாத்தியம் என்று இவர்கள் மேலும் கேட்கின்றனர். பொதுவாகவே சிறுவர்களைக் கடத்தவரும் கருணா குழு உறுப்பினர்களுடன் ராணுவமும் பாதுகாப்பிற்கு வருவதுடன், தாம் கருணா குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறியே சிறுவர்களையும் இளைஞர்களையும் இக்குழு சுற்றிவளைக்கிறது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். உள்ளூரில் இருந்து கருணா குழுவிற்குச் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் பின்னர் தாமே கடத்தல்களை முன்னின்று நடத்துவதாகவும், பல சந்தர்ப்பங்களில் இந்த இளைஞர்களை ஊர்மக்கள் தெளிவாகவே அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, கடத்தப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி அருகிலுள்ள கருணா குழுவின் முகாமிற்கு பெற்றோர்கள் சென்றவேளை தமது பிள்ளைகள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதையும், கடத்திச் சென்றவர்கள் அங்கே நிற்பதையும் கண்டிருக்கின்றனர். சிறுவர்களைக் கடத்திச் சென்று அடைத்துவைக்கப் பாவிக்கப்பட்ட கருணா துணைராணுவக் குழுவின் அலுவலகம் ஒன்று 2006 ஆம் ஆண்டு முழுவதும் கருணா துணைராணுவக் குழு 15 வயதில் இருந்து 30 வரையான ஆண்களை மட்டுமே கடத்தி வந்தது. இக்காலப்பகுதியில் 11 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் உட்பட பல பதின்மவயதுச் சிறுவர்களைக் கருணா குழு கடத்தியிருந்தது. திருமணமான இளைஞர்களையும் பள்ளிச் சிறுவர்களையும் கடத்திச் செல்வதைக் குறைத்திருந்தபோதும், அவ்வபோது பள்ளிச் சிறார்களும் இக்குழுவினரால் லடத்தப்பட்டிருக்கின்றனர் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆனால், இதே காலப்பகுதியில் இரு சிறுமிகளையும் கருணா குழு கடத்திச் சென்றிருப்பதாக தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாக மனிதவுரிமைக் காப்பகம் அறிவித்திருக்கிறது. கடத்தப்பட்ட பெரும்பாலான சிறுவர்கள் கிராமப்புரங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். கல்விகற்பதற்கான வசதிகள் குறைவாகவும், தம்மைக் கடத்தல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் திராணியுமற்ற இவ்வறிய குடும்பங்களே கருணா குழுவினரால் இலக்குவைக்கப்பட்டனர். மேலும் புலிகள் இயக்கத்தில் சகோதரனையோ அல்லது சகோதரியையோ கொண்ட பல போராளிகளின் குடும்பங்களைக் கருணா குழு இலக்குவைத்துக் கடத்தியது. சிலசந்தர்ப்பங்களில் ஒரே வீட்டில் புலிகள் இயக்கத்தில் ஒரு பிள்ளையும், கருணா துணைராணுவக் குழுவில் இன்னொரு பிள்ளையும் இருந்த சந்தர்ப்பங்களும் இருந்திருக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் தனது மகனைக் கடத்திச்சென்ற கருணா குழு அத்தாயிடம், "உனது ஒருபிள்ளை புலிகள் இயக்கத்தில்த்தானே இருக்கிறான், இவனை கருணாவுக்குத் தா" என்று கூறி இழுத்துச் சென்றதாகவும், "மூத்தவனைப் புலிகள் பலவந்தமாகத்தான் இணைத்தார்கள்" என்று தான் கூறியதை கருணா குழு ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் அவர் கூறினார். அடுத்ததாக, கருணா குழுவினரால் இலக்குவைக்கப்பட்ட இளைஞர் அணியானது புலிகளியக்கத்தின் முன்னாள்ப் போராளிகளாக இணைந்து கருணா ராணுவத்துடன் சேர்ந்தபோது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள். கிழக்கு மாகாணத்தில் கருணா புலிகள் இயக்கத்திற்கென்று இணைத்துக்கொண்ட சுமார் 1800 ஆண் மற்றும் பெண்போராளிகளை தான் பிரிந்துசென்றபோது கருணா வீடுகளுக்கு அனுப்பியிருந்ததாதகத் தெரியவருகிறது. கருணாவுக்கெதிரான புலிகளின் ராணுவ நடவடிக்கையின் பின்னர் இந்த முன்னாள்ப் போராளிகளில் ஒருபகுதியினர் புலிகளுடன் மீண்டும் சேர்ந்துகொண்டனர். மீதமிருந்த பலபோராளிகளை கருணா குழு பலவந்தமாக கடத்தத் தொடங்கியது. ஐ நா சிறுவர் பாதுகாப்பு அமைப்பின்படி 2006 ஆம் ஆண்டின் குறிப்பிட்ட காலப்பகுதியொன்றில் குறைந்தது 208 முன்னாள்ப் போராளிகளைக் கருணா குழு கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவர்களுள் 15 போராளிகள் கருணா தனித்து இயங்க முடிவுசெய்தபோது தனது அணியைப் பலப்படுத்த பலவந்தமாக இணைக்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் 2006 இல் கருணாவினால் பலவந்தமாக இணைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நெடுந்தீவு கள்ளுடன் கனேடியத் தூதுவர்! Top News [Monday 2021-03-29 06:00] யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். கனடா தூதுவர் வேணுமெண்டே வெறுப்பேத்துறார் மை லார்ட்.....1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்லாருங்க மக்கா#வீட்டில்_பார்த்த_மாப்பிள்ளைய_பிடிக்கல.பல்லடம் நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா மாணிக்கவேல்.BBM பட்டதாரி.இவர்க்கு மண முடிக்கும் எண்ணத்தில் வீட்டார் வரன் தேடி வந்தனர்.இவரது தாய்மாமன் மகன் சந்திரசேகரன்.இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.வருமானம் அதிகமில்லை என்பதாலும்,இவர் அதிகம் படிக்காத பட்சத்தில் இவருக்கு வரும் வரன்கள் தடங்கலாகிக் கொண்டேஇருந்ததால் மனமுடைந்த இவர் திருமணமே வேண்டாம் என்று முடிவுசெய்தார்.உறவினர் வீட்டு எந்த விஷேசங்களுக்கும் செல்வதில்லை.இந்நிலையில் சரண்யா தனது மாமா மகனையே திருமணம் செய்து கொள்ள போகிறேன் என வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்."வருமானம் அதிகமில்லை.படிக்காதவனை கட்டி நீதா சீரழியப் போற"" என வீட்டார் சொல்லியும் கேட்காமல் மாமாவின் கரம் பிடித்தார் சரண்யா.இதற்கு சரண்யா சொன்ன காரணம் நெஞ்சை நெகிழ வைத்தது.""விவசாயிக்கு பெண் கொடுக்கவே பலரும் தயங்குகின்றனர்.ஏன்னு தெரியல. நான் அதிகம் படித்த காரணத்தாலேயே என்னைப் பெண் கேக்க மாமா தயங்கினார்.ஊருக்கு சோறு போடும் தொழில் செய்பவர்களுக்கு படித்த பெண்கள் தரும் மரியாதை பாருங்கள்.இதை மனதில் வைத்தே என் மாமாவை மணந்தேன்.நானும் அவருடன் விவசாயத்திற்கு உதவியாக இருப்பேன்.விவசாயிய கலியாணம் பண்ணா வாழ்க்கை நன்றாக இருக்கும் என காட்ட போறேன்""ஷேர் செஞ்சு சரண்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். முகநூலில் இருந்து.....1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலக விஞ்ஞானிகளுக்கே சவால் விடும் நம்ம விஞ்ஞானிகள் .......சும்மா மிரட்டுகிறார்கள்.....! 👏1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பானை அடியில் ஓட்டை யாக இருக்கிறது , தண்ணீர் ஒழுகாதா......! 🤔1 point- போர் + ஆட்டம் (போராட்டம்)
1 pointபோராட்டம் பற்றிய புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்கும், போர்க்களத்தில் நேரடியாக நின்றவர்கள் கருத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன! எமது மாணவப் பருவக் காலங்களில்...நாம் தனி நாடு கோரிப் போராடுவது சாத்தியாமனதா, னாம் தனியாகப் போகும் சந்தர்ப்பம் ஏற்படும் போது எம்மால் பொருளதார ரீதியில் தாக்குப் பிடிக்க முடியுமா, எமது சிறிய நாட்டை எத்தனை உலக நாடுகள் அங்கீகரிக்கக் கூடும், இந்திய தேசத்திந் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று பல கேள்விகளும் பதில்களும் பொதுவான சந்திப்புக்களில் எப்போதுமே அலசப் பட்டுக் கொண்டுமிருக்கும்! அந்தக் காலத்தில் பி.பி.சி போன்ற செய்திகளில் ஏதாவது ஒரு செய்தி வந்தாலே, அது மிக முக்கிய செய்தியாகவும், சர்வ தேச அளவில்..எமதினத்தின் சிறு வெற்றியாகவும் பார்க்கப் பட்டது! நீங்கள் நம்பினால் நம்புங்கள்...மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்ற பேதமானது எனக்குத் தெரிந்து அப்போது இருந்தது இல்லை! அப்போதைய விடுதி கல்லூரி நண்பர்களுடன் ஒரே தட்டில் சாப்பிட்டும், ஒரே கட்டிலில் படுத்து உறங்கியும் உள்ளோம் என்பதை,இப்போது வெளிவரும் கருத்துக்களைப் பார்த்து நம்ப முடியவில்லை! ஆக மட்டக்களப்பு ஆக்கள் மந்திரம் போட்டுப் பாய்களில் ஒட்ட வைத்து விடுவார்கள் என்று பகிடியாகக் கூறுவார்கள்! இதன் உண்மையான கருத்தானது மட்டக்களப்பு மான் வளமும், மீன் வளமும் நிறைந்த மண்! மட்டக்களப்புப் பெண்கள் கொஞ்சம் குளுமையாக இருப்பார்கள்! அதனால் மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் தொழிலின் நிமித்தமாகச் செல்லும் யாழ் இளைஞர்கள் அங்கேயே திருமணம் செய்து செட்டிலாகி விடுவதால்,அந்தப் பாயோடு ஒட்ட வைக்கும் சொல்லடை ஏற்பட்டதாக மட்டக்களப்பு நண்பனே என்னிடம் விளங்கப் படுத்தியிருக்கிறான்! உங்கள் கதையின் ஆரம்பத்தில்....தமிழர்களைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மையானவை தான் எனினும் அதற்கும் பின்னணனியான காரணங்கள் உண்டு தான்! ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரந்திருந்த ஒரு இனம், நகரமைப்பு, கட்டிடக்கலை, யோகக் கலை, பரதக் கலை, வானியல் சாத்திரம் போன்ற துறைகளில் அதிகமான நிபுணத்துவம் கொண்டு வாழ்ந்த ஒரு இனம் எந்தத் தனித்துவமான மதத்தையும் தனது மதமாக ஏற்றுக்கொள்ளாது ஒரு சமாதானமான வாழ்வை வாழ்ந்திருந்தது! சமாதனமே நீண்ட காலங்கள் நிலவியதால்...போருக்கான ஒரு பெரும்படையையோ, பெரும் ஆயுதங்களையோ அது தன்னிடம் கொண்டிருக்கவில்லை! பெரிதாக எதிரிகளும் பெரிதாக இருந்திருக்க நியாயமில்லை! வட திசையிலிருந்து பட்டுப் பாதை வழியாக முதலில் உள் நுழைந்தவர்களால் , அந்த இனக்குழுமம் ஓரளவுக்கு அழிக்கப் பட்டதுடன் தெற்கு நோக்கிய அதன் புலம் பெயர்வும் ஆரம்பித்தது! ஓட,ஓடத் துரத்தப் பட்ட அந்த இனம் ஓட இடமில்லாமல்.....கடலணை மூலம் இலங்கை வந்து சேர்ந்து ஒரு வரண்ட பூமியில் வாழத் துவங்கியது! அதனிடம் வேறு என்ன குணாதிசங்களை எதிர் பார்க்கலாம்! உங்கள் கதையில் ஒரு வரலாறே பொதிந்து போய் இருந்ததால் ..சிறியதாக நான் எழுத நினைத்த கருத்து ஒரு கதயாக நீண்டு போனது! நன்றி...!1 point- நதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...!
31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ? நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ? இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ? ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது. அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது. அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான். அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ? பிள்ளைகள் கொண்டு வந்து தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம். அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது. எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன். கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி. நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக. நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ? இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம். இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம். நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான். என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன். தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன். ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான். என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது. அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன். பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான். ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது. மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான். எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி. 2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது. என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது. அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும். ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ? அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா. என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது. எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது. கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில் இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன். என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47. அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான். இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான். கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை. 08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம். காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன். அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன். 02.05.2020 சாந்தி நேசக்கரம்1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- ஆண்டகைக்கு அஞ்சலி.!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.