Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்10Points38791Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts -
அக்னியஷ்த்ரா
கருத்துக்கள உறவுகள்8Points1962Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points88026Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/14/21 in Posts
-
பாவத்தின் சம்பளம்
4 points2003 , இலங்கை கிழக்கு மாகாணம் சுலக்சனின் வரவை எதிர்நோக்கியவாறு கதவினை நோட்டம்விட்டுக்கொண்டிருந்தான் அவன், களஞ்சிய அறைக்குள் பாத்திரக்கடைக்குள் யானை புகுந்தது போல் ஒரே சத்தம், புகுந்திருப்பதும் ஒரு யானை தானே என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டு நொண்டிக்காலன் என்ன செய்கிறானோ ஒரு தடவை எட்டிப்பார்ப்போம் என்று கதவோரத்தை நெருங்கிய கணத்திலேயே சுலக்சன் கையில் ஒரு பொருளுடன் வெளிப்பட்டான், அது ஒரு நாட்குறிப்பு, 1962 என்று புழுதி படிந்த அட்டை முகப்பில் ஆண்டு தெளிவாகவே தெரிந்தது. என்ன மச்சான் இது ..? யாரோ ஒரு பழைய பிரதரின் டைரி போல... அதுசரி...அதெப்பிடி உனக்கு கிடைச்சுது ...? நான் தான் ஒவ்வொருநாளும் வாறனானெல்லோ என்று விட்டு அவனை பார்த்தான் சுலக்சன் போடா லூசு ஒவ்வொரு நாளும் வாறநீயோ...? என்று அவன் கேட்கவும் ,ஒற்றைக்கண்ணடித்து சிரித்துவிட்டு சுலக்சன் மேலும் தொடர்ந்தான், "அது டா ஒருநாள் அதிபரோடு வந்து ஒரு அட்டைப்பெட்டியை தோண்டும் போது கையில் அகப்பட்டது, திறந்து பார்ப்போம் என்று பார்த்தால் வெளியே அதிபர், வாய்ப்பு கிடைக்கும் போது உருவிவிடுவோம் என்று அகப்பட்ட ஒரு மரப்பலகைக்கு கீழே சொருகி விட்டு வந்தேன், இண்டைக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது,அடுத்தவர்களோட டயரியை வாசிப்பதே தனி சுகம் இது வேற பழைய டயரி வா சேர்ந்து வாசிக்கலாம் " அவனுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள இருவரும் அருகிலுள்ள மேசையை மின்விளக்கிற்கருகில் இழுத்து போட்டுக்கொண்டு ஒற்றைகளை திருப்ப துவங்கினர். முதல் ஒற்றையில் உரியவரின் பெயர் கறுப்பு ஆங்கில கூட்டெழுத்தில் Rev.Bro Felix Rodrigez என்று மினுமினுத்தது, பெயரை வாசித்துவிட்டு இந்தப்பெயரை இதற்க்கு முன் கேள்விப்பட்டிருக்கிறோமே என்று யோசித்து விட்டு சற்று தலையை உயர்த்திய அவனது கண்கள் மண்டபத்தினுள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்த ரெக்டர்களது புகைப்படங்களை வரிசையாக மேய்ந்தன, அவனுக்கு பிடித்தமான Wilheim பிரதரது புகைப்படத்திற்கு அடுத்ததாக இருந்த புகைப்படத்தில் இதே பெயர் இருந்தது, ஓ இவரது நாள்குறிப்பா என்று நினைத்தவாறு ,ஒற்றையை பிரிக்கமுன் சுலக்சனோ பத்து பதினைந்து ஒற்றைகளை கடந்து வேறு எதுவொன்றையோ தேடுவது போல் படு சீரியஸாக வாசித்துக்கொண்டிருந்தான், என்ன மச்சான் இப்பிடி வேகமாக பார்க்கிறாய் என்று கேட்கவும் சுலக்சனோ எழுதியிருக்கும் எல்லாமே ஒரேமாதியாகவே இருக்கு டா அதுதான் கொஞ்சம் வேகமாக வசிக்கிறேன் என்று விட்டு ஒற்றைகளை பிரட்டுவதிலேயே குறியாக இருந்தான். இப்படியே சிறிதுநேரம் போயிருக்கும் சுவாரசியமாக எதுவுமில்லை அப்போதுதான் அவன் ஒன்றை கவனித்தான் நாளேடு பெரிதாக தோன்றினாலும் பக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது, இனி அவர்கள் படிக்கப்போகும் பக்கத்திலிருந்து தொடர்ந்து வர வேண்டிய அனைத்து ஒற்றைகளும் கையினால் கோணல் மாணலாக அவசரமாக கிழிக்கப்பட்டிருந்தது. இருவருக்கும் ஆர்வம் பற்றிக்கொள்ள கிழிக்கப்பட்டிருக்கும் ஒற்றைகளுக்கு மேலிருக்கும் கடைசி பக்கத்தை கூர்ந்து படிக்க ஆரம்பித்தனர் "இன்று நான் செய்யப்போகும் செயல் எனது மனச்சாட்சிக்கும் சபைக்கு நான் கொடுத்திருக்கும் வார்த்தைப்பாடுகளுக்கும் எதிரானது, இருந்தும் எனது மானம்,மரியாதையை காத்துக்கொள்ள வேண்டுமென்றால் இதனை தவிர்க்கமுடியாது, அன்று மட்டும் Wilhem கண்ணில் நாங்கள் பட்டிருக்காவிடில் வரப்போகும் இரத்தப்பழி என்மீது இருக்கப்போவதில்லை, Wilheim என்றாவது ஒருநாள் உன்னிடம் மன்னிப்பு வேண்டும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமானால் அது அடுத்த பிறவி என்றாலும் அன்று நிச்சயம் உனது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வேண்டுவேன் " என்று முடிந்திருந்தது அந்த ஒற்றை இருவரும் ஆளை மாறி ஆள் விறைத்துப்போய் நோக்க , சுலக்சனோ அந்த ஒற்றையை திருப்பி பார்த்தான் அதன் பின் இருந்த ஒற்றைகள் முழுவதுமாக கிழிக்கப்பட்டிருந்தன, அப்போதுதான் அவன் கவனித்தான் கிழிக்கப்பட்ட ஒற்றையில் ஒன்று முழுவதுமாக கிழியாமல் ஒரு நூலிழையில் தொங்குவது போல் நாட்குறிப்பில் தொங்கிக்கொண்டிருந்தது, அவசரமாக கிழிக்கப்பட்டதால் கிழித்தவரும் அதனை கவனிக்கவில்லை போலும், நூலிழையில் தொங்குவது போல் இருந்தததால் அது ஒரு பக்கம் மடிந்து நாட்குறிப்பின் கடைசி மட்டையில் இருந்த உறையினுள் புகுந்து விட்டிருந்தது, அந்த பக்கத்தை உருவி எடுத்த அவனும் சுலக்சனும் ஆர்வம் தாங்காது வாசிக்கத்தொடங்கினர். அதுவரை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் இந்த பக்கத்தில் இலகுவில் வாசிக்க முடியாதவாறு மிகவும் அலங்கோலமாக எழுதப்பட்டிருந்தது. இனிமேலும் என்னால் முடியாது, உயிருடன் இந்த வேதனையை அனுபவிப்பதை விட நரக வேதனை எவ்வளவோ மேல், நீ என்னை விடப்போவதில்லை என்று தெரிந்து கொண்டேன் Wilheim, எனக்கு அடிக்கடி அறிவுரை தரும் வேளையில் பாவத்தின் சம்பளம் என்ற வசனத்தை நீ பாவிப்பாய், அது உனக்கு பைபிளில் பிடித்த வசனமும் கூட எந்த பாவமும் அறியா உனக்கு அந்த சம்பளத்தை அளித்த அந்த பாவத்திற்காக இன்று இரவு எனது பாவத்தின் சம்பளத்தை தேடிக்கொள்கிறேன், இதுவே இந்த ஜென்மத்தில் நான் எழுதும் இறுதி வாக்கியம் என்று முடிந்த அந்த ஒற்றையை இறுதிவரியின் பின் பேனா குத்திக்கிழித்திருந்தது. வாசித்து முடிந்து விட்டு நிமிர்ந்தான் அவன் அருகில் இருந்த சுலக்சனோ காணாமல் போயிருக்க, மண்டபத்திற்கு வெளியே சுலக்சனின் காலடியோசை கேட்டது, மெதுவாக எழுந்த அவன் மண்டபத்திற்கு வெளியே செல்ல சுலக்சனோ மண்டபத்தின் சுவற்றில் ஒருக்களித்தவாறு தனது இருகைகளையும் அவனது காட்சட்டை பையினுள் விட்டவாறு நிலவினை பார்த்துக்கொண்டிருந்தான், அவனது தோரணையே அன்று வித்தியாசமாக இருந்தது மெதுவாக அருகில் சென்ற அவன், சுலக்சன் தோளில் கையை வைத்து "மச்சான் wilheim பிரதருக்கு என்னடா நடந்திருக்கும்...? எதுவோ விவகாரமாக நடந்திருக்கிறது, முழுவிடயமும் அந்த டயரியில இருந்திருக்கு யாரோ ஒருத்தன் சபையை காப்பாற்றவோ அல்லது பிலீக்சின் பெயரை காப்பாற்ற ஒற்றைகளை கிழித்திருக்கிறான் " என்று முடித்தான் சற்று நேரம் அதனை காதில்வாங்காதவன் போல் நிலவையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் அவனை நோக்கி திரும்பினான், அவனது கண்ணில் அப்படியொரு தெளிவும் ஈர்ப்பும் இதுவரைக்கும் சுலக்சனின் கண்ணில் அப்படியொரு காந்தவிசையை அவன் கண்டதில்லை, இன்று என்னவோ சுலக்சன் அவனுக்கு வித்தியாசமாக தெரிந்துகொண்டேயிருக்கிறான், திரும்பிய சுலக்சன் அவன் தோளில் கையைவைத்து "உண்மை எப்போதாவது வெளிவந்தே தீரும் மச்சான் , இன்று இல்லாவிடினும் என்றாவது" என்று சொல்லிவிட்டு "அந்த பாவத்தின் சம்பளம் என்ற வசனம் நல்லாயிருக்கில்ல' என்று அவனது கன்னத்தை தட்டிவிட்டு மண்டபம் உள்ளே சென்றுவிட்டான், சற்று நேரத்தில் இருவரும் கண்ணயர , சிறிதுநேரம் கழித்து, "மச்சான் விடிஞ்சுபோட்டு பள்ளிக்கு பிள்ளைகள் வரப்போகினம் வா போவோம்" என்று அவனை உலுப்பினான் சுலக்சன், கண்முழித்து நேரத்தைப்பார்த்தான் அதிகாலை 5:45 சரி வா போவோம் என்று இருவரும் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற, சுலக்சனும் வீட்டைநோக்கி கெந்தி கெந்தி நடக்கும் பரிதாபம் பார்க்கமுடியாது அவனும் "சைக்கிளில் ஏறு டா கொண்டு போய் வீட்ட விடுறன்" என்று சொல்ல அவனோ "ஓ இவ்விடத்தில் இருக்கும் வீட்டிற்கு சைக்கிள் ஒரு கேடு" என்று சிரித்துவிட்டு "நீ வீட்டை போ கொஞ்சநேரத்தில் பள்ளியில் சந்திப்போம் " என்று விட்டு மெதுவாக நடந்து அவனது பார்வையில் இருந்து மறைந்து போக, சிறிது நேரம் அவனை பார்த்துக்கொண்டிருந்தவன் மெதுவாக வீட்டை நோக்கி சைக்கிளை விரட்டினான் (தொடரும்)4 points
-
சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!
3 pointsசித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக! ******************************* நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீழ் துயர் எமை விட்டு அகலவேண்டும் உலகத்து நாடனைத்தும் உயர வேண்டும் உயர்வான எண்ணங்கள் தோன்ற வேண்டும். அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம் அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும் உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும் ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும். விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். விண் மேகம் கடலோடு உரச வேண்டும்-பூமி விளைநிலத்தில் தென்றலது பாடவேண்டும் இருள் வெளுக்க சூரியனும் ஒளிர வேண்டும் இயற்கையவள் எமைச் சேர்த்து வாழவேண்டும். அவளிடத்தில் எங்களுக்கு பணிவு வேண்டும் அனைத்துயிரும் எமைப்போல காக்கவேண்டும் அண்டவெளி பிரபஞ்சம் நாம் அறிய வேண்டும் அறிந்த பின்பு எம்மையவன்அழைக்கவேண்டும். அன்புடன் -பசுவூர்க்கோபி- 13.04.20213 points
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
யாழ்கள உறவுகள், பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால் பிளேன் ஓடாததால் சாத்திய படாது .. கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே ? விரும்பினார்கள் ஆனால் நிலமை சரியில்லை என கை விட்டுவிட்டார்கள். ஒரு வேளைகொரோனா முடிந்த பின் இது பற்றி யோசிக்கலாம். அப்படியானால் ஜெனிலியாவை வர வைத்து பரிசளிக்கலாம் , என்பது என கருத்து மற்ற கள உறவுகளையும் கலந்து பேசி முடிவெடுக்கலாம். எல்லாம் கால நேரம் கூடி வரட்டும். 😀3 points
-
கொஞ்சம் சிரிக்க ....
3 pointsசெல்போனால் ஒரே தொல்லை.அப்பாவுடன் ஆசையாய் கதைக்கக் கூட முடியவில்லை........! 🤣3 points
-
பாவத்தின் சம்பளம்
2 points2003 , இலங்கை கிழக்கு மாகாணம் அன்றும் பாடசாலைக்கு சுலக்சன் வரவில்லை, என்னவாக இருக்கும் ...? இரவில் படிக்கமட்டும் வருகிறான் சரி இன்று பாடசாலை முடிந்து போகும்போது ஒரு எட்டு அவனது வீடு சென்று ஏன் வரவில்லை என்று கேட்டு விட்டு வருவோம் என்று யோசித்தவாறே அன்றைய பொழுதை கடத்திக்கொண்டிருந்தான் அவன். மாணவத்தலைவன் என்பதால் பாடசாலை மாணவர்களை ஒழுங்குபடுத்தி பாடசாலையை விட்டு வெளியேறவைத்து சைக்கிள் பாதுகாப்பு பகுதியின் படலையை மூடி சாவியை அதிபரிடம் கொடுத்துவிட்டு வர போதும் போதுமென்றாகிவிட்டது, கையைத்திருப்பி கடிகாரத்தை பார்த்தான் நேரமோ மதியம் 2:20 சரி போய் சுலக்சனை பார்த்துவிட்டுவருவோம் என்று சைக்கிளை சுலக்சனின் வீட்டினை நோக்கி செலுத்தி சுலக்சனது மதில் வாசலை நெருங்கவும் வாசலடியிலிருந்து மைதிலி வெளியேறவும் சரியாக இருந்தது, இவனை கண்ட மைதிலி சிரித்துவிட்டு செல்ல, சைக்கிளை விட்டிறங்கிய அவன் படலையை திறந்துகொண்டு சுலக்சனை கூப்பிட்டவாறு வீட்டினுள் உள்நுழைந்தான், இவனது குரலை கேட்டு வெளியே வந்த சுலக்சனின் தாயார் "ஓ தம்பியா கொஞ்சம் பொறு மனே மைதிலி இப்பதான் வந்து அவனோட கதைச்சுப்போட்டு போறாள் இப்பதான் பாத்ரூம் பக்கம் நான் கொண்டுபோய் விட்டுப்போட்டு வாறன் முடிஞ்சதும் கூப்பிடுவான் நீ அங்க இரு" என்று விட்டு குசினிப்பக்கம் செல்ல சுலக்சனோ நன்றாக கெந்தி கெந்தி நடக்கிறான், இந்த மனிசி பாத்ரூமிற்கும் தான் தான் கொண்டுபோய் விடுறன் என்று சொல்லுது, என்ன கூத்தடா இது ..சரி வரட்டும் கேட்போம் என்று யோசித்தவாறே சோபாவில் அமர்ந்தான் அவன். "அம்மா" என்று கொஞ்சநேரம் கழித்து சுலக்சனின் குரல் கேட்க சோபாவிலிருந்து எழுந்துகொண்டவன் "அன்ரி நீ ங்க வேலையை பாருங்கோ நான் போய் கூட்டிக்கொண்டுவாறன்" என்று சொல்லிவிட்டு எழுந்து பாத்ரூம்பக்கம் போக லுங்கியை அக்குளிற்குள் இடுக்கியவாறு சுலக்சன் வெளிப்பட்டான், காலை நிலத்தில் வைக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தவன் , போதாக்குறைக்கு தண்ணீர்படாமல் இருக்க காயத்தை சுற்றி ஒரு சிவப்பு பொலித்தீன் பையையும் இறுகக்கட்டியிருந்தான். கைலாகு கொடுத்து மெதுவாக தூக்கிக்கொண்டு சுலக்சனை சோபாவில் கிடத்தி விட்டு பேச ஆரம்பித்தனர் இருவரும் "ஏனடா பள்ளிக்கு இண்டைக்கும் வரலை" "நான் இருக்கும் நிலையை பார்த்தாய் தானே, ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவதிற்கே அம்மா கொண்டுபோய் விட வேண்டிக்கிடக்கு " "அப்போ நேற்று இரவு படிக்க வந்தது " "மச்சான் நானில்லாத நேரத்தில் எங்கேயும் கஞ்சாவை வாங்கி பள்ளிக்குள் இழுக்கியோ, நானெப்படா நேற்றுவந்தனான் விசரா உனக்கு " "மச்சான் விளையாடாதடா, நீ நேற்று என்னவெல்லாம் சொன்னாய் என்று யோசித்துப்பார் " "டேய் மனுசனுக்கு கடுப்பேத்தாத நானே வரவில்லை என்றன், இவரு பேசினாராம் " என்று விட்டு அம்மா என்று கூப்பிட்டான் சுலக்சன் , சுலக்சனுடைய குரலை கேட்டு அவன் தயார் எட்டிப்பார்க்கவும் "அம்மா நேற்று இரவு நான் என்னசெய்தனான்" என்று கேட்க சுலக்சனின் தாயாரோ பொரிந்துதள்ள துவங்கினார். "எடுத்தாலும் எடுத்தான் ஒரு காயத்தை எனக்கு தூக்கம் போச்சு, நேற்று இரவு மட்டும் ஆறுதடவை இவனை இழுத்துக்கொண்டு பாத்ரூம்பக்கம் போவதும் வருவதுமாக நித்திரையே போச்சு மனே " என்று அவர் முடிக்கவும்,அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த அவனுக்கு தலைக்குள் சுரீர்...சுரீர் என்று வலிக்கத்தொடங்கியிருந்தது மூளை கோணல் மாணலாக வேலை செய்துகொண்டிருந்தது அப்படியானால் இரவு என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார், பிரதர் wilheim ஆ இருக்குமோ, ஒவ்வொரு நாளும் மண்டபத்திற்குள் வருகிறேன் என்று நேற்று சொல்லியது சுலக்சன் உருவிலிருந்த Wilheim ஆ...? அப்போ அந்த கரிய உருவம் பிரதர் wilheim ஆ எதற்கு என்னை தெரிவுசெய்தார்...? இப்படி கேள்விகள் அவனுடைய மூளையில் குறுக்கும் நெடுக்குமாக ஓட விறைத்துப்போயிருந்த அவனை கவனிக்காது சுலக்சன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தொடர்ந்தான். "மச்சான் மைதிலியை கண்டனியோ " அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது " ம்ம்" என்றுமட்டும் முடித்துக்கொண்டான் அவன் "வாணியிடமிருந்து தகவல் எனக்கு கால் வெட்டப்பட்டதை தெரிந்து கொண்டு சுகம் விசாரிச்சு கேட்டனுப்பியிருக்கிறாள் " என்று தொடர்ந்து நேற்று இரவு அவன் வாயினால் விபரித்த அனைத்தையும் மீண்டும் ஒன்றும் விடாமல் புதிதாக சொல்வதுபோல் தொடர்ந்து விபரித்துக்கொண்டிருந்தான் சுலக்சன் அவனது மூளை ஏற்கனவே கொள்ளளவுக்கு அதிகமாக அதிர்ச்சியினை உள்வாங்கிக்கொண்டு தளர்ந்து போயிருந்ததால் சுலக்சன் விபரித்த அனைத்தையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டது, புள்ளிகள் எல்லாம் நேர்கோடுகளால் இணைய அவன் ஆழ்மனதில் Wilheim இன் புகைப்படம் தோன்றி தோன்றி மறைந்தது. எந்த சலனமும் இன்றி இருக்கையை விட்டு எழும்பியவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் கேட்டான் "என்னடா ஒரு பதிலும் சொல்றாயில்லை " "மச்சான் எனக்கு தலை சரியாக இடிக்கிது, உதைப்பற்றி நாளைக்கு கதைப்போம்" என்று விட்டு அவனது பதிலையே எதிர்பாராதவனாக வெளியே வந்து சைக்கிளை எடுத்து வீட்டை நோக்கி விரட்டினான், இந்த சம்பவம் நடந்து நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக இந்த அமானுஷ்யம் அவனது வாழ்வில் ஒரு இனிமையான நினைவாக மட்டும் மாறிப்போனது. 2020 , இலங்கை கிழக்கு மாகாணம் "தம்பி வாங்கோ", பாடசாலையின் தற்போதைய அதிபர் அவனை இன்முகத்துடன் வரவேற்றார், "தம்பிகள் பழைய மாணவர் சங்கத்தினால் செய்யும் உதவிகளுக்கு பாடசாலை பெருமளவில் கடமைப்பட்டிருக்கிறது, கனநாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள் பள்ளியை சுற்றிப்பாருங்கோ நான் ஒரு இருபது நிமிஷத்தில் வாறன் " என்று விட்டு அதிபரும் நகர பதினைந்து வருடங்களுக்கு பிறகு கால்வைக்கும் அவனது பாடசாலை இஷ்டத்திற்கு முற்றுமுழுதாக மாறியிருந்தது, உயர்தரத்தில் அவன் படித்த வகுப்பறையை தவிர மற்றயதெல்லாம் இடிக்கப்பட்டு மாடிக்கட்டிடங்களாக மாறியிருந்தன, மெதுவாக பழைய விடயங்களை அசைபோட்டவனுக்கு அப்போதுதான் அந்த சம்பவமும் ஞாபகம் வர, அவனது கால்கள் அந்த குடவுன் இருந்த திசையை நோக்கி தானாகவே நடந்தது, அங்கே அந்த கூடவுன் இருந்த அடையாளமே தெரியாமல் அந்த இடத்தில் இரண்டுமாடி கட்டிடமொன்று முளைத்திருந்தது, இந்த குடவுனுக்கு என்ன ஆனது என அறியும் நோக்கத்தில், அந்த வழியால் சென்றுகொண்டிருந்த சிறுவனொருவனை கூப்பிட்டான் அவன், இவனது தோற்றத்தை பார்த்த சிறுவனும் பம்மிக்கொண்டு தயங்கி தயங்கி அவனருகில் வந்தான் "சேர்" "தம்பி சேர் எல்லாம் இல்ல அண்ணன் என்றே கூப்பிடும், இந்த இடத்தில் ஒரு பாழடைந்த குடவுன் ஒன்று இருந்ததே அதை எப்ப இடிச்சவைங்க" இவனை மேலேயும் கீழேயும் பார்த்த அவன் " அண்ணன் கனகாலத்திற்க்கு இங்கால வரலை என்ன, அதை இடித்து பத்து வருடத்திற்கு கூட இருக்கும் நான் பள்ளியில் சேர்ந்த காலத்தில் தான் இடித்தவை, இடித்துப்போட்டுத்தான் அந்த பெரிய கட்டிடத்தை கட்டினவங்கள் " என்று முடித்தான். "அப்போ ஏன் அந்த கட்டிடம் பூட்டியிருக்கு யாரும் பாவிக்கறதில்லயா...?" "அது இரவில் யாரும் அங்காலைப்பக்கம் போறதில்லை, அடிக்கடி லையிட் தானாக எரியுறதும், மெஷின் இரைச்சல் வாறதுமென்று ஒருவரும் போறதில்ல,அப்படி துணிஞ்சும் போன நாலைஞ்சுபேர் நாய்க்கடியும் வாங்கியிருக்கினம் " "சுற்றி மதில் போட்டிருக்கே நாய் எங்கயிருந்து வருகிறது " "தெரியாது அண்ணன், ஏழடி மதில் அப்படியிருந்தும் அந்தப்பக்கம் நாய்கள் ஏறி வருகிறது,பகலிலே மட்டும் எதாவது தேவைக்கு பாவித்துவிட்டு பொழுதுபட பூட்டிவிட்டு வந்துவிடுவோம் " என்று முடிக்க "என்ன தம்பி நம்மடை பாடசாலை எப்படியிருக்கிறது...?" என்று கேட்டுக்கொண்டே அதிபர்வரவும் அதிபரை கண்ட பயத்தில் இவனை பார்த்து சிரித்துவிட்டு நொடிப்பொழுதில் சீட்டாய்ப்பறந்துவிட்டான் அந்த சிறுவன், அதிபரை நோக்கி திரும்பிய அவனும் வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான், சற்றைக்கெல்லாம் அவனது வேலை முடிந்துவிட அதிபரிடம் விடை பெற்றுக்கொண்டு அதிபரின் காரியாலயத்தில் இருந்து வெளியேறி தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்துகொண்டிருக்க அவனது சிந்தனையோ அந்த சிறுவன் சொன்ன விடயங்களை சுற்றியே சுழன்றது, உண்மை என்றாவது ஒருநாள் வெளியே வரும்வரை பிரதர் Wilheim அமைதியாக இருக்கமாட்டார் என்று தோணியது ,அந்த உண்மைகள் கிழிக்கப்பட்ட பிரதிகளாக எங்கே ஒழிந்துகொண்டிருக்கின்றனவோ என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய வாகனத்தில் ஏறி இக்னீஷியனை உசுப்பினான், சிறிய கனைப்புடன் உயிர்பெற்ற வாகனம் மெதுவாக வேகமெடுத்தது அவனது வாகன பக்ககண்ணாடியில் பாடசாலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்க அவனது நாவோ ஒரு வசனத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது அது பைபிளில் பிரசித்தமான ஒரு வசனமான "பாவத்தின் சம்பளம் மரணம்" (முற்றும் )2 points
-
பாவத்தின் சம்பளம்
2 pointsநாளைய பாகத்துடன் முடியும். வேலைப்பளுவிற்கு மத்தியில் எழுதுவதால் தான் இந்த சுணக்கம், வாசக உள்ளங்களிடம் வருந்துகிறேன்2 points
-
கொஞ்சம் சிரிக்க ....
2 points
-
ஐம்பதில் ஆசை
1 pointஇந்தக் கட்டுரையை சென்ற வருடம் இதே நாளில் எழுதியிருக்க வேண்டியது, கொரோனா வந்து திசைமாற்றி விட்டது. எழுத நினைத்த கட்டுரையை ஒரு வருடத்தின் பின்னர் வேறு விதமாக எழுதுகிறேன். ஐம்பதிலும் ஆசை என்பதில் எனக்கு உடைபாடில்லை. சென்ற வருடம் ஐம்பதாவது வயதை எட்டியிருந்தேன். முன்பெல்லாம் ஒவ்வொரு பத்தை எட்டும்போதும் வயதாகிக் கொண்டே போகிறதே எதையும் சாதிக்கவில்லையே என்ற விரக்தியும் எதிர்பார்த் இலக்குகளை எட்டவில்லையே என்ற கவலையும் தோன்றும். இப்போது ஆறுதலாக நான் கடந்துவந்த பாதையை யோசித்துப் பார்க்கும்போது பரவாயில்லையே என்று தோன்றுகிறது. எனது பாட்டனார் எனக்குச் சின்ன வயதில் தனது அனுபவங்களைக கதை போல் சொல்வார். பன்றி வேட்டையாடியது, வயலில் சூடு அடிக்கும்போது யானை வந்தது, சகோதரங்களுடன் முரன்பட்டு வேறு ஊர் சென்று கடின உழைப்பால் முன்னேறியது போன்ற பல கதைகள் சொல்வார். அன்று ஆவற்றைப் பெரிதாகக் காதில் வாங்கியதில்லை. அவர் சொன்னவற்றில் நினைவில் இருந்த சிலவற்றை பல வருடங்கள் கழித்து மீட்டபோது அவரைப்போல் எனக்கு சொல்லத்தக்கவாறு அனுபவங்கள் எதுவும் இல்லையே என்று தோன்றும். இப்போது அந்த ஏக்கம் இல்லை. இப்போது என்ன நிலையில் உள்ளேனோ அதைத் திருப்தியாக ஏற்றுக் கொண்டு அதனை மேம்படுத்தி எதிர்காலத்தைத் திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்பதில் உறுதியாக உள்ளேன். வாழ்வதற்கு வாழ்க்கை இன்னும் ஏராளம் உள்ளது. அதற்கு எனது உடல் ஆரோக்கியம் முக்கியம். என்னுடைய உடலைக் கவனமாகப் பார்க்காவிட்டால் உள்ளத்தால் என்னை நிறைவாக உணர முடியாது. எனது இனம் நிலைக்க வேண்டுமானால் முதலில் நான் நன்றாக இருக்க வேண்டும். ஏனென்றால் எனது இனத்தில் நானும் ஒரு அங்கம். *** முன்பு ஒரு திரியில் ஓட்டப் பயிற்சி செய்வதாக எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் 15 நிமிடங்கள் - 2 கிலோமீற்றர் தூரம் ஓடினேன். ஓடி முடிந்ததும் மிகக் களைப்பாக இருக்கும். அதன்பின்னர் இன்னும் தூரம் ஓட வேண்டும் என்பதற்காக 3 கிலோமீற்றராக மாற்றிக் கொண்டேன். அது காலப்போக்கில் கடினமான பிரயத்தனத்துடன் 35-40 நிமிடங்களில் 5 கிலோமீற்றர்களாக ஆக மாறியது. அதுவே எனது அதி உச்ச எல்லை என்று நினைத்திருந்தேன். சில காலங்களின் பின்னர் படிப்படியாக நின்று ஓய்வெடுத்து ஒரு மணி நேரம் 7 கிமீ வரை ஓட முடிந்தது. இப்படியே சுமார் ஒரு வருடம் சென்றது. நான் இருக்கும் ஊரில் ஒரு உடற்பயிற்சி நிலைய உறுப்பினர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. ஓட்டப் பயிற்சி செய்தால் இன்னும் முன்னேறலாம் என்று உற்சாகப் படுத்தினார்கள். அது நகரசபையால் நடத்தப்படுவதால் வருடத்துக்கு 75 யூரோ, முயற்சித்தும் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன். வாரத்தில் 3 நாள் பயிற்சி. மாலை 6.30 க்கு ஆரம்பிக்கும். வேலை காரணமாக வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மட்டுமே பங்குபற்ற முடியும். 6 மாதப் பயிற்சியின் பின் 10 கிமீ ஓட்டப் போட்டி ஒன்றில் பங்குபெற முடிந்தது மட்டுமல்லாது சில மாதங்களுக்குப் பின்னர் அரை மரதன் ஓடும் அளவுக்கு வந்துவிட்டேன். முதலாவது 10 கிமீ போட்டி சரி, 50 வயதாகிறது ஒரு தடவை மரதன் ஓடினால் என்ன என்று தோன்றியது. மரதன் ஓடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஓடியோ நடந்தோ தவழ்ந்தோ முடிவு எல்லை ஓட வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்த எல்லையைத் தாண்டுவதென்பது விவரிக்க முடியாத இனிய அனுபவம் என்று ஓடி முடித்தவர்கள் கூறிக் கேட்டுள்ளேன். சிலர் எல்லையில் காத்திருக்கும் தமது பிள்ளைகள், மனைவி அல்லது உறவினர்களைக் கட்டி அணைத்துக் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைக் காணொலிகளில் கண்டிருக்கிறேன். ஆகவே கால்கள் சரியாக இயங்கும்போதே வாழ்க்கையில் ஒரு தடவை ஓடிப் பார்க்க முடிவு செய்தேன். எனக்குப் பயிற்சி தருபவராகிய ஸாஹிர் என்பவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியாக உற்சாகப்படுத்தினான். ஆனால் கடுமையான பயிற்சியைப் பின்பற்றினால் நான் நிர்ணயித்த இலக்கை விட நன்றாக ஓடலாம் என்றான். அதன்படி பரிசில் ஏப்ரல் 2020 இல் நடக்கவிருந்த சர்வதேச மரதன் போட்டியில் பதிவு செய்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 65 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இது மரதன் வரலாற்றில் உலகில் அதிகம் பேர் பங்குகொள்ளும் மிகப் பெரிய போட்டியாகக் கருதப்பட்டது. போட்டிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடுமையான பயிற்சி ஆரம்பமாகியது. மழை குளிர் காற்று என்று எதையும் பார்க்க முடியாது. ஓட வெளிக்கிட்டால் ஓட வேண்டியதுதான். கிளப் உறுப்பினர்கள் 3 குழுவாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். முதலாவது குழு முயல் வேகத்தில் ஓடக் கூடியது. நான் 3 ஆவது ஆமை வேகக் குழு. நான் ஒரு தடவை முதல் முழுவோடு சேர்ந்து ஓடி ஆவஸ்தைப்பட்ட அனுபவம் இருந்ததால் அவர்களோடு சேர்வதில்லை. மழையிலும் பனி உறைந்த குளிரிலும் கொட்டும் வியர்வையுடன் அன்றொருநாள் மார்கழி மாதம் குளிர் மழை தூறிக்கொண்டிருந்தது, சிலர் பயிற்சிக்கு வரவில்லை. வேகமாக ஓடுபவர்களே அதிகமாக இருந்தனர். பழைய உறுப்பினர் ஒருவவன் அன்று வந்திருந்தான். அவன் பெயர் பிரெடெரிக், கரிபியன் தீவைச் சேர்ந்தவன். தனது ஊரில் சில காலம் தங்கிவிட்டு பிரான்சுக்குத் திரும்பியிருந்தான். அன்றைய இருளில் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை. அதிகம் நின்று பேசிக் கொண்டிருந்தால் குளிரில் நடுங்கத் தொடங்கும் ஆகவே மெதுவாக ஓட்டத்தை ஆரம்பிப்போம் என ஸாஹிர் கூறிவிட்டு பிரெடெரிக்கை அறிமுகப்படுத்தி நீங்கள் இருவரும் மட்டுமே இரண்டாவது முழுவில் பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்று கூறி நாங்கள் ஓட வேண்டிய பாதையையும் வேக மாற்றங்களையும் அவசரமாக் விளக்கிவிட்டு முதல் குழுவுடம் பறந்துவிட்டான். நானும் பிரெடெரிக்கும் தனியே நின்றிருந்தோம். ஓரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். வீதியின் மின் வெளிச்சத்தில் சில நிமிடங்கள் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தோம். பிரெடெரிக் மெதுவாக ஓடுவதற்கே சற்றுச் சிரமப் படுவதாகத் தோன்றியது. 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகத்தைச் சற்றே அதிகரிக்க வேண்டும் ஆனால் வேகம் அதிகரித்ததாகத் தெரியவில்லை. 30 நிமிடத்தின் பின் வேகம் அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். ஆனால் அவன் கொஞ்சம் மூச்சு வாங்குவது தெரிந்தது. பேசாமல் முதல் குழுவோடு ஓடியிருக்கலாம் என்று தோன்றியது. பேச்சு வாக்கில் உனக்கு எத்தனை வயது என்று கேட்டேன். 71 என்றான். ஒரு கணம் எனது நாடி நரம்புகள் எல்லாம் செயலிழந்து அதிர்ச்சியிலிருந்து மீழ சில வினாடிகள் ஆனது. வாயிலிருந்து அப்படியா, நன்றாக ஓருகிறாய் என்ற வார்த்தைகள் மட்டுமே வந்தது. ஓடுவதற்கு வயது எல்லை கிடையாது என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். இன்றுவரை பிரெடெரிக் எனக்கு மரியாதைக்குரிய நண்பனாகவும் அறிவுரை கூறும் ஆசானாகவும் இருக்கிறான். படத்தில் இடது பக்கத்தில் பிரெடெரிக் பயிற்சி தொடர ஆர்வம் அதிகரிக்க இலக்குகளும் மாறிக்கொண்டிருந்தன. மரதன் ஆரம்பமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. *** ஓட்டப் பயிற்சியோ போட்டியோ ஏனைய விளையாட்டுகள் போல் போட்டி மனப்பான்மையுடன் அமைவதல்ல. ஒவ்வொருவரும் தமது தகமைக்கேற்ப தாங்களே ஒரு வரயறையை அல்லது தமது சொந்த இலக்கை வைத்து ஓடுவதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னொருவர்போல் ஓடவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படாது. மரதன் போட்டியிலும் 50 ஆயிரம் பேர் ஓடினால் அதில் முதல் 100 பேருக்குள்தால் சரியான போட்டி இருக்கும். ஏனையவர்கள் தமது சொந்த இலக்கை வைத்தே ஓடுவார்கள். ஆகவே 5கிலோமீற்றர் ஓடும் ஒருவர் ஒருவர் தன்னால் 10 கிலோமீற்றர் ஓட முடியவில்லையே என்ற கவலை தேவையில்லை. உடல் அமைப்பும் இவ்வாறுதான். எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது. என்னை விட உயரம் மிகக் குறைந்த ஒருவர் என்னைவிட மிக வேகமாக ஓடுகிறார். அதேபோல் என்னைவிட எடை கூடிய ஒருவர் என்னைவிட வேகமாக ஓடுகிறார். அதற்காக நான் இந்த இருவரையும் விட வேகமாக ஓட முடியவில்லையே என்று ஏங்க முடியாது. ஓடுவதால் உள்ள நன்மைகளில் முக்கியமானவை சில வேக ஓட்டத்தின்போது இதயம் அதிகமான இரத்தத்தினை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் இதயத் தசைகள் வலுவடைந்து இதயம் விரிவடைந்து ஒரே இதயத்துடிப்பில் அதிகமான இரத்தைதை உடலுக்கு வழங்கம் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இதயத்துக்கும் வேலைப்பழு குறைந்து நீண்ட காலம் இயங்கும் ஓடும்போது கால்கள் தரையில் படும்போது ஏற்படும் மைக்க்ரோ அதிர்வுகளால் தசைகளும் எலும்பும் சிறிய சிதைவுகளுக்குள்ளாகொன்றன. பின்னை ஓய்வின்போது சிதைவுகள் மறுசீரமைக்கப்பட்டு தசைகளும் எலும்புகளிம் புத்துயிர் பெறுகின்றன இரத்தத்தில் மேலதிக சீனியும் கொலஸ்ரரோலும் சக்தியாக எரிக்கப்படும் போட்டி மனப்பான்மையற்ற பயிற்சியாதலால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடும்போது ஏற்படும் களைப்பு சோர்வு ஏக்கம் தளர்வு அவஸ்தை எல்லாவற்றையும் ஓட்ட முடிவில் மறந்து வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியை உணர முடியும் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். இன்னும் பல உடலை அசைத்து அதிக நேரம் வேலை செய்கிறேன், ஆகவே உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைப்பது தவறு. இரண்டும் ஒன்றல்ல. 1 மணி நேர உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள் உடலை வருத்திச் செய்யும் வேலையால் கிடைக்காது. *** ஆரம்ப ஓட்டப் பயிற்சி இது ஓட விருப்பம் இருந்தாலும் தயங்குபவர்களுக்கும் நாளைக்கு ஓடலாம் என்று இன்றுவர ஆரம்பிக்காமல் இருப்பவர்களுக்கும். முக்கிய குறிப்பு : உடல், இதயம் பலவீனமானவர்கள் உங்களது வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னர் இதனைப் பின்பற்ற வேண்டும். சரியான சப்பாத்து உடை மற்றும் இதர உபகரணங்கள் இருந்தால்தான் ஓடுவேன் என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் பின்னர் பார்க்கலாம். முதலில் இருப்பவற்றை அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். எப்போது உங்கள் வயது, உயரம், நிறை, உருவம் எல்லாவற்றையும் விட்டு ஓட முன்வருகிறீர்களோ அதுவே உங்களது முதல் வெற்றி. உங்கள் உடையையோ உடலையோ ஓட்டத்தையோ பார்த்து யாராவது சிரிப்பார்களோ என்ற தயக்கம் சிறிதும் வேண்டாம். எல்லா அனுகூலங்களும் இருந்தும் ஓட்டத்தால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் புறக்கணித்து ஓடாதிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் நீங்கள் ஓட முன்வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எடுத்த உடனேயே ஓட முயற்சிக்க வேண்டாம். தசைகளையும் இதயத்தையும் தயார்படுத்த வேண்டும். படிப்படியாகப் பயிற்சியை ஆரம்பிப்போம். நாள் 1 15 நிமிட வேக நடை அதைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு மெதுவாக ஓட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓடுங்கள். அது வேகமாக நடப்பதை விட வேகம் குறைந்ததாகக் கூட இருக்கலாம். இந்த 10 நிமிடங்களை எட்ட முடியாமல் போனல் நீங்கள் மெதுவாக ஓடவில்லை என்று அர்த்தம். 10 நிமிடம் சாதாரண நடை நன்றாகச் சாப்பிட்டு நிறைய நீர் அருந்தி நன்றாகத் தூங்குங்கள். நாள் 2 பயிற்சி இல்லை நாள்3 1 மணி நேர வேக நடை நாள் 4 பயிற்சி இல்லை நாள் 5 15 நிமிட வேக நடை 30 நிமிட ஓட்டமும் நடையும். 1நிமிட மெதுவான ஓட்டம், 30 விநாடிகள் நடை என்பதைச் சுழற்சியாகச் செய்யுங்கள் 15 நிமிட நடை நாள் 6 பயிற்சி இல்லை நாள் 7 10 நிமிட வேக நடை விரும்பிய அளவு நேரம் மெதுவான ஓட்டம். கடைசி 1 நிமிடத்தை உங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுங்கள். 10 நிமிட நடை மெதுவாக ஓடும்படி வற்புறுத்தக் காரணம் அதிகமாகக் களைத்து அரைவாசியில் பயிற்சியை முடிக்கக் கூடாது என்பதற்காக. அத்துடன் மெதுவான ஓட்டம் என்பது ஓட்டப் பயிற்சியில் முக்கியமான அங்கம். மெதுவாக ஆரம்பிப்பது படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரிப்பதற்கு. சடுதியாக ஆரம்பித்தால் 10 நிமிடத்தில் களைப்பு ஏற்பட்டு பயிற்சியைத் தொடர முடியாமல் போய்விடும். தொடரும் நாட்களில் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். *** வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சி இதும் ஏற்கனவே ஓரளவு ஓட முடியுமானவர்களுக்கானது. ஆரம்ப நிலையில் ஓடுபவர்களும் தாராளமாகச் செய்யலாம். பயிற்சியின் அங்கங்கள். A. Warm up : மிக மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக இதயத் துடிப்பை அதிகரித்து அதிக வேகம் எடுக்காமல் அதிக களைப்பு இல்லாமல் ஓடுவது. இது இதயத்தை சாதாரண நிலையில் இருந்து வேகத் துடிப்பிற்குத் தயார் படுத்துவது மட்டுமே. உங்கள் அதிகபட்ச வலுவில் 50-60% போதுமானது. B. மெதுவான ஓட்டம் : ஓட்டப் பயிற்சியில் இதுவும் மிக முக்கியமானது. இதயத் துடிப்பைக் குறைத்து தொடர்ச்சியாக சக்தியை உடலுக்கு வழங்குவது. மெதுவான ஓட்டத்தின் இறுதியில் களைப்பு உண்டாகக் கூடாது. C. தயார்படுத்தல் 1 - கால்களைப் பின்னால் மடித்து ஓடுதல். முன்னர் குறிப்பிட்டது போல இந்தத் தடவை கால்களை எந்த அளவு பின்னால் மடிக்க முடியுமோ அவ்வளவு மடித்து வேகமாகக் கால்கள அசைக்க வேண்டும். ஒவ்வொர அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். D. தயார்படுத்தல் 2 - முழங்கால்களை உயர்த்தி ஓடுதல். முழங்கால்களைச் சமாந்தரமாக மேலே தூக்கி வேகமாக ஓடுதல். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். ஏறத்தாள நின்ற இடத்திலேயே ஓடுவது போன்றது. E. தயார்படுத்தல் 3 - கால்களை மடிக்காமல் ஓடுதல். முழங்கால்களை மடிக்காமல் கால்களை முன்னே மட்டும் உயர்த்தி வேகமாக ஓட வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் (steps) 20 - 30 cm அளவான தூரம் நகர வேண்டும். கிட்டத்தட்ட நின்ற இடத்திலேயே ஓடுவது போன்று இருக்கும். இந்த 3 பயிற்சிகளும் (C, D, E) இந்த வீடியோவில் 1:22 முதல் 2:18 வரை உள்ளது. F. Jamping jack - இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். G. ஓய்வு : கை கால்களைத் தளர விட்டு ஆழமாகச் சுவாசித்தல். நீர் அருந்தலாம். H. Stretching - அவசியமில்லை. செய்வதாக இருந்தால் 2 மணி நேரத்துக்குப் பிறகு அல்லது அடுத்த நாள் செய்யலாம். இனி பயிற்சியை ஆரம்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாக ஓடுவதால் நேரடியாகவே இரண்டாவது நிலை பயிற்சிக்கே போகலாம். 1 வாரத்தில் 4 நாட்கள் செய்ய வேண்டியவை. பயிற்சி 1 15 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் C 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் D 15 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 15 வினாடிகள் E 30 வினாடிகள் ஓய்வு. நீர் அருந்தலாம். மேலே குறிப்பிட்ட 15 வினாடிப் பயிற்சிகளை மீண்டும் 2 தடவை செய்யுங்கள் மிகவும் களைப்பாக இருக்கும். 15 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் கால்களில் வலி இருக்கும். ஒரு நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 2 10 நிமிட Warm up (A) 1 நிமிட ஓய்வு 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 1 நிமிட Jamping jack F 1 நிமிட மெதுவான ஓட்டம் B 30 நிமிட ஓட்டம். முதல் 10 நிமிடங்கள் உங்கள் உச்ச வலுவில் 60 வீதமாக இருக்க வேண்டும். அடுத்த 7 நிமிடங்கள் 70 வீதமாக அதிகரியுங்கள். அதற்கடுத்த 7 நிமிடங்கள் உங்களால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு ஓட வேண்டும் ஆனால் களைத்து ஓட்டத்தைக் கைவிடும்படியாக ஓடக் கூடாது. மீதி நேரத்தை மெதுவாக ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி முடிவடைகிறது. அடுத்த நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 3 interval running 20 நிமிட Warm up (A) 30 வினாடிகள் ஓய்வு. 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். வேகமான ஓட்டத்தின்போது 80-90 வீதமான உச்ச வலுவுடன் ஓடலாம். 10 தவடவை ஓடி முடிக்க முடியாது போனால் நீங்கள் 90 வீதத்துக்கு மேலான வலுவுடன் ஓடியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடி இன்னொரு தடவை 30 வினாடிகள் மெதுவான ஓட்டம் B 30 வினாடிகள் வேகமான ஓட்டம். இந்த 30 விநாடி ஓட்டங்கள் இரண்டையும் 10 தடவைகள் நிற்காமல் மாறி மாறிச் செய்ய வேண்டும். 5 நிமிட மெதுவான ஓட்டம் B. பயிற்சி முடிவடைகிறது. மிகவும் களைப்பாக இருக்கும், அடுத்த 1 அல்லது 2 நாள் ஓய்வெடுக்கலாம். பயிற்சி 4 விரும்பியபடி ஓட்டம் உங்க விருப்பத்திற்கேற்ப நேர எல்லை வைத்தோ தூர எல்லை வைத்தோ விரும்பிய வேகத்தில் ஓடலாம். இந்த 4 பயிற்சிகளையும் சுழற்சியாகச் செய்யுங்கள். *** ஐம்பதுக்கு வருவோம். பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். ஊரில் இருந்திருந்தால் பிள்ளைகளின் படிப்பு முடிந்தால் அவர்களுக்கான வேலை, திருமணம், செலவு பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட வேண்டும். இங்கு அதொன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக சாதாரனமாக வாழ்வதற்கான தன்நிறைவை அடைந்துவிட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் எல்லை தொலைவில் தெரிகிறது. எனக்கான எதிர்காலத்தைத் திட்டமிட்டு விட்டேன். என்மேலுள்ல அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதுபோல் உணர்வு. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் மனதில் இளமையுடனும் வாழ்க்கையைத் தொடர இதுவே பொற்காலம். நீங்களும் வாருங்கள் ஓடி வாழ்ந்திடலாம்.1 point
-
புது வருட சிரிப்புகள்.
1 point1 point
- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
கந்தையாண்ணை நீங்கள் பேராண்மை திரைப்படம் இன்னமும் பார்காவிட்டால் ஒருமுறை எடுத்துப் பார்க்கவும், அந்தப் படக்கதைதான் உங்கள் பின்னூட்டத்தில் ஓடுதண்ணை.😩1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointஇலங்கையில் சிறுவர்கள் கடத்தப்பட்டுவருவது தொடர்பான ஐ நா வின் கண்டனம் 2006 கார்த்திகை மாதத்தில் யுத்தத்தால் பாதிக்கப்படும் சிறுவர்களின் நலன்களுக்கான ஐ நா வின் விசேட பிரதிநிதி அலன் ரொக் இக்கடத்தல்கள்பற்றி விசாரணைகளை மேற்கொள்ள இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 2003 ஆம் ஆண்டு ஐ நா வுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட சிறுவர் நலன் தொடர்பான இணக்கப்பாடு குறித்து மீள் உறுதிப்படுத்துவதே அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. யுனிசெப் அமைப்புடன் ஒத்துழைத்து வேலை செய்வதாக அரசும், புலிகளும் இணங்கியிருந்ததுடன் தமது படைகளில் இருக்கும் சிறுவர்களை நீக்கிவிடுவதாகவும் ஒத்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. தனது 10 நாள் விஜயத்தின் இறுதியில் நாட்டின் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்த அலன், ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில் தனது விசாரணைகள்பற்றித் தெரியப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின்படி தமது படைகளிலிருந்து சிறுவர்களை நீக்குவதை புலிகள் முற்றாகக்ச் செய்யவில்லையென்று கடிந்துகொண்ட அலன், கருணா குழு தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களைக் கடத்திச் செல்வதாகக் கடுமையாகச் சாடினார். தொடர்ந்துபேசிய அவர் 2006 இன் இறுதி 6 மாதங்களில் மட்டும் கருணா 135 சிறுவர்களைக் கடத்திச் சென்றிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், கடத்தல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். கருணாவின் சிறுவர் கடத்தல்களுக்குத் துணைபோவதாக அரச ராணுவத்தைச் சாடிய அலன் ரொக், கருணாவுக்கான பாதுகாப்பினையும், அவ்வப்போது கருணாவின் கடத்தல்களில் பங்களிப்பினையும் அரச ராணுவம் செய்துவருவதாக மேலும் கூறினார். அலன் ரொக் தலைமையிலான குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட பல சிறுவர்களின் பெற்றோருடன் உரையாடியிருந்தது. இக்கலந்துரையாடல்களிலிருந்து கருணா குழுவின் கடத்தல்களில் அரச ராணுவம் பெருமளவு பங்களிப்பினை வழங்கியிருந்ததாக அலன் ரொக் கூறுகிறார். அரச ராணுவத்தின் படைப்பிரிவுகள் கருணா குழுவினருடன் கடத்தல்களில் நேரடியாகவே பங்குகொண்டிருந்ததை சாட்சிகள் வாயிலாக இக்குழு அறிந்துகொண்டது. பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அலன் ரொக், அரசும் கருணா குழுவும் யுனிசெப் அமைப்பின் ஆலோசனைப்படி சிறுவர்களை தமது படைகளிலிருந்து விடுவிப்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினார். அத்துடன் அரச ராணுவத்தினர் கருணா குழுவுக்காக சிறுவர்களைக் கடத்துவது தொடர்பான விசாரணைகளை உடனடியாகவே ஆரம்பிக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக அலன் ரொக் கூறினார். அரச ராணுவத்தினர் கடத்தல்களில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டால் தாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மகிந்த தன்னிடம் கூறினார் என்று அவர் மேலும் கூறினார்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 பல்லாக்கு தம்பி எனும் பல்லாக்கு வலியுல்லாஹ் பகர்ந்த அல்லாஹ் முனாஜாத்1 point- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
இதென்ன கதை வேறை றூட்டில போக வெளிக்கிடுது?1 point- ஐம்பதில் ஆசை
1 pointஉங்களுக்கு ஆஸ்மா இல்லாவிட்டால் ஸ்ப்ரே பாவிப்பதை முற்றாக விடுங்கள். பழக்கமில்லாமல் ஓடும்போது மூச்சு வாங்குவது இயல்பு. இதற்குக் காரணம் ஓடும்போது உடலுக்குத் தேவையான அதிகமான ஒட்சிஜனை வழங்க உங்கள் சுவாசப்பை பழக்கப்படவில்லை. அத்துடன் ஒட்சிஜனைக் காவிச் செல்வதற்கான இரத்த ஓட்டத்தை வழங்க இதயம் தயாராக இல்லை. அதனால்தான் பயிற்சியை மிக மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். 2 மாத பயிற்சிக்குப் பின் ஓரளவு சாதாரணமாக ஓட முடியும். பொறுமையாக முயன்று பாருங்கள். கொலஸ்ரரோல், கலோரிகள் தவிர வேறெதையும் இழக்கப் போவதில்லை. 🙂1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குடிகாரனுடன் கூட வாழ்ந்திடலாம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் கூட வாழ்வது நரக்கத்தை விட மோசமானது. சொன்னாங்க...சொன்னாங்க..😁1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point1 point- சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!
அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம் அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும் உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும் ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும்.....! நிஜமாகவே இப்படி ஒரு காலம் வரவேண்டும் என மனசு கிடந்தது அடிக்குது......! பாராட்டுக்கள் கோபி......! 👏1 point- சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!
நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீள் துயர் துயர் எமை விட்டு அகலவேண்டும் விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். அழகான வரிகள் எம் விருப்புகளை எல்லாம் நிறைவேற்ற அந்த பரம் பொருளை வேண்டுவோம். பாராட்டுக்கள் கோபி1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
பெட்டிக்கை சுடாமல் கடகத்துக்கை சுட்டு இருக்கிறார் 😉1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- ஐம்பதில் ஆசை
1 point- ஐம்பதில் ஆசை
1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointகடவுளுக்கும் மேலான "கெளரவ" கருணா அம்மாண்........................... கொழும்பு டெலிகிராப் கட்டுரை : ஆவணி 25, 2015 "நான் இந்த நாட்டில், சாதாரண கல்வித்தரத்தினைக் கொண்ட சாதாரண குடிமகன்.என்னைப்பொறுத்தவரை இந்த நாட்டின் சமூகவியல், சமூக விழுமியங்கள் தொடர்பாக தெளிவான பார்வை எப்போதுமே இருந்ததில்லை, குறிப்பாக இந்த நாட்டின் நீதித்துறை பற்றி மிகவும் குழப்பகரமான பார்வையே எனக்கு இருக்கிறது. உதாரணத்திற்கு விபச்சார விடுதிகளில் தொழில்புரியும் பெண்களை கண்ணிமைக்கும் நேரத்தில் கைதுசெய்து இழுத்துச் செல்லும் பொலீஸார் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதள்ளி, அப்பாவிகளை வலிந்து கடத்திச் சென்று காணாமலாக்கிய ஆயுததாரியான கருணாவை கைதுசெய்யாது, அவரைப் பாதுகாத்து, கெளரவப்படுத்தி அன்புடன் "சேர்" என்று அழைக்கக் காரணமென்ன? " "இந்த நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கெதிராக கொடுமைகளை நிகழ்த்திவரும் சட்டத்திற்கும் மேலான அரச ராணுவத்தை ஒருவர் நீதியின் முன்னால் நிறுத்துவதென்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதது. போர் வெற்றி நாயகர்களாக அலங்கரிக்கப்பட்டு, கடவுள்களுக்குச் சமமாக பூசிக்கப்படும் இந்த வெற்றி நாயகர்கள் தமிழினத்திற்கெதிராகச் செய்த அக்கிரமங்கள் எல்லாம் "விடுதலைப் புலிகளை அழித்தல் எனும் முக்கிய நோக்கத்திற்காக" பெரும்பான்மையினச் சிங்களவர்களால் "அவசியமான நடவடிக்கைகள் தான்" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது". "கடந்த காலங்களில் இந்தக் கருணா அம்மாண் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்களுக்கு நிகராக சிங்களவர்களையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்றுவரை சிங்களத் தலைமைகள் இவருக்கெதிராக நடவடிக்கை எதனையும் எடுக்க விரும்பவில்லையே, அது ஏன்? கருணாவுக்கெதிராகக் எடுக்கும் நடவடிக்கைகள் சங்கிலித் தொடர்போல மீண்டும் தமது காலடியிலேயே வந்து நிற்கும் என்கிற பயம் இருக்கிறதா அவர்களுக்கு ? இதன்மூலம் தெளிவாவது என்னவெனில், சிங்கள ராணுவ வீரர்கள் கடவுள்களுக்குச் சமமானவர்கள் என்றால் கருணா அம்மாண் கடவுளுக்கும் மேலானவர் என்பதுதானே?" "மைத்திரி ரணில் நல்லிணக்க அரசாங்கத்தில்க்கூட இந்த நிலைமை மாறும் என்று நான் நம்பவில்லை. மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன, இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை. இலங்கையின் மக்களுக்கெதிராக மிகக் கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன்னால் நிறுத்தும் முயற்சியில் இந்த அரசாங்கம் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது. இத்தனை தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் பின்னரும்கூட தான் கொடுத்த நீதியை நிலைநாட்டும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அது மீண்டும் மீண்டும் கூறி வருகிறது". "இந்த அக்கிரமங்களைச் செய்தது யாரென்று எங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தே இருக்கிறது. ஆனாலும், எமக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல நாம் பாசாங்குசெய்துகொண்டு ஏதோவொருநாள் விசாரணைகள் நடைபெறும் என்று எங்களை நாங்களே எமாற்றிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறோம்? இன்றுவரை காணாமல்ப்போன தமது பிள்ளைகள் வருவார்கள் என்று நம்பித் தவமிருக்கும் அந்த அப்பாவித் தாய்மார்களையா? அல்லது மனிதவுரிமைகளுக்காக வேலைசெய்வதாகக் கூறும் அமைப்புக்களையா? அல்லது எமது குடும்பத்தில் எவருக்கு இந்த அக்கிரமங்கள் நிகழும்வரை எது நடந்தால் எனக்கென்ன என்று இருந்துவிடும் மனோநிலைக்கு வந்துவிட்டோமா? "இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எமது சக இன மக்களைக் கொன்று, பாலியல் வன்கொடுமை புரிந்து, கடத்திச்சென்று காணாமலாக்கிய ஒரு இரத்தவெறிபிடித்த கயவனை இன்னும் "சேர், ஐய்யா" என்று அழைத்து மகிழப்போகிறோம்?" ஆங்கில மூலம் : வி. கந்தைய்யா1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)