Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    88020
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38791
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/17/21 in all areas

  1. மாத்தி யோசி........! 😂
  2. ஈழப்பிரியன் என்றும் பதினாறு 😀 உங்கினை யாரோ சொல்ல கேட்டது🤣
  3. நிழலி.... விடுப்பு அறிவதில், சரியான விண்ணன் போலை இருக்குது. 😂 🤣
  4. கந்தையா அண்ணை.... நீங்கள் விரும்பிய தொழிலை, பிள்ளைகள் மூலம் நிறைவேற்றி விட்டது மகிழ்ச்சி.
  5. மிகவும் சிறப்பான கதை .... மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் அந்த கிழிந்த பக்கங்களில் என்ன இருந்திருக்கும் என்ற குடைச்சல் தான் ....
  6. உங்களின் அனுபவம் வாசிக்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.....ஆனாலும் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் கந்தையா வாழ்த்துக்கள்.....! 👍
  7. மிகச்சிறப்பான ஒரு திகில் கதையை தந்த அக்கினிக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்......! 🌹
  8. தமிழ் கடையளுக்கு... போயிட்டு வாற ஆக்களை, இதை வைச்சு... "டக்கெண்டு" கண்டு பிடித்து விடலாம்.
  9. சிங்கள புது வருசம், முடிஞ்ச பிறகும்... கிழவியின் கொண்டாட்டம், இன்னும், முடியேல்லை. 🤣
  10. சாந்தி அக்கா.... ஈழப்பிரியன் ஓடினால், ஆரையும் கூட்டிக் கொண்டு, ஒரே ஓட்டமாக.... ஓடி விடுவார் என்று, குமாராசாமி அண்ணை, பயப்பிடுகிறார் போலுள்ளது. 🤣
  11. எல்லாம் சரி எப்ப ஓடத்தொடங்கப் போறியள்? 😀
  12. என் வாழ்க்கையில் 1975/1976 ஆண்டளவில் ஒர் நாள்அதிகாலை ஆறுமணியளவில் பிரத்தியோக வகுப்புக்கு போய் திரும்பிவரும்போது என்னுடைய சைக்கிளை எனது நண்பஙனின் சைக்கிள். மோதியாதால் நடைபெற்ற விபத்தில் தலையின் பின் பகுதியை சீமெத்துகல்லுயென்று தாக்கிவிட்டது இரு கிழமைகள் யாழ் வைத்தியசாலையிலிருந்தேன்..இது O/L பரீட்ச்சைக்கு தாயாரகிக்கொண்டிருந்த காலம் .நான் படித்தது கிராமப்புறப் பாடசாலை. அங்கே பிரயோககணிதம் படிப்பிபாதில்லை பௌதிகவியல்...இராசயனவியல்...உயிரியல்...படிப்பிப்பார்கள்..எனது இலக்கு பொறியளாராக வர வேண்டுமென்பது. ஆனால். அதற்க்கு என்னென்ன பாடங்கள் படித்திருக்க வேணடுமென்பது தெரியாது. யாழ்...இந்து..மத்திய...வைத்திஸ்வர....வில்.படித்த நண்பர்கள் சொல்லியே பிரயோககணிதமும் தேவையென அறிந்தேன். நான் பரீட்சைக்கு பிரத்தியோகமாக விண்ணப்பம் செய்ய விரும்புவதைக் வகுப்பு ஆசிரியர் மூலம் அதிபருக்கு அறிவித்தேன்..அதிபர் என்னையழைத்துக்கூறினார். நீ. பாடசாலை மூலம் தான பரீட்சைக்கு தோற்றவேண்டும்.பிரயோககணிதமும் விண்ணப்பிக்கலாம்..அதற்கான நடவடிக்கையை தான் செய்வதாகக்கூறினார்.. பிரயோககணிதம். படிப்பிக்கமாட்டோம் நீயே. தனியார் வகுப்புகளில் படித்துக்கொள் என்றார்..அச்சமயம் வடமாகணகல்வியாதிகாரியாகவிருந்த மாணிக்கவாசகரிடம் கதைத்து அனுமதியும் பெற்றார். அந்தப்பரீட்சையில் பௌதிகவியல்...தூயகணிதம்...பிரயோககணிதம்...மூன்றிலும் D. எடுத்தேன் ..யாழில். படித்த என் நண்பர்கள். என்னிடம் கேட்டார்கள். அஸ்சே...நாங்கள். இரண்டு ஆண்டுகள் படித்தும் பாஸ். பண்ணமுடியவில்லை நீ எப்படி எட்டு மாதங்களில் D. எடுத்தாய்? என்று...அவர்களுடைய நவூறு எவ்வளவு வலிமையானது என்பது இரண்டு ஆண்டுகளின் பின்பு தெரித்தது..விபத்தின்போது இரத்தம்கசித்து கட்டியாகி கதையடைத்து விட்டது..யாழ்ஆஸ்பத்திரியில் H.N.O. பிரிவில் பரிசோதித்து கட்டியையெடுத்தார்கள் அதன்பின். இன்றுவரை. காது கேட்கும் திறன் 10/15% குறைவு...இங்கு Dr மார். சிறந்த காது எனக் கூறுகிறார்கள் இயர்பேன் நான்கு போட்டும் பிரயோசணமில்லை ..நான் இப்போ போடுவதில்லை வேலை செய்கிறேன் கார் ஒடுகிறேன். .மகள். பக்கத்து City யில் தெருக்களுக்கு பெறுப்பான பொறியளார். மகன். ஆறு. மாதங்களில் எந்திரவியல் பொறியளார். படித்து முடியும்...கொரொனாவால். ஆறுமாதம் அதிகம். பான்ஸ்யண்ணை இந்தப்பிரச்சைனையால் நான்படம் பார்ப்பதில்லை அந்தக்கருத்து சும்மா பொழுது போக்காய் எழுதியது..உங்கள்கருத்துக்கு மிக்க நன்றி. நான் நன்றாகவேயிருக்கிறேன். வணக்கம்.
  13. நன்றி புத்தன். ஓடுங்கள். 'கலா' காலத்திலிருந்து நவீன காலத்துக்கு உங்கள் கற்பனைகள் வளரட்டும். 😀
  14. 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் அன்றும் பாடசாலைக்கு சுலக்சன் வரவில்லை, என்னவாக இருக்கும் ...? இரவில் படிக்கமட்டும் வருகிறான் சரி இன்று பாடசாலை முடிந்து போகும்போது ஒரு எட்டு அவனது வீடு சென்று ஏன் வரவில்லை என்று கேட்டு விட்டு வருவோம் என்று யோசித்தவாறே அன்றைய பொழுதை கடத்திக்கொண்டிருந்தான் அவன். மாணவத்தலைவன் என்பதால் பாடசாலை மாணவர்களை ஒழுங்குபடுத்தி பாடசாலையை விட்டு வெளியேறவைத்து சைக்கிள் பாதுகாப்பு பகுதியின் படலையை மூடி சாவியை அதிபரிடம் கொடுத்துவிட்டு வர போதும் போதுமென்றாகிவிட்டது, கையைத்திருப்பி கடிகாரத்தை பார்த்தான் நேரமோ மதியம் 2:20 சரி போய் சுலக்சனை பார்த்துவிட்டுவருவோம் என்று சைக்கிளை சுலக்சனின் வீட்டினை நோக்கி செலுத்தி சுலக்சனது மதில் வாசலை நெருங்கவும் வாசலடியிலிருந்து மைதிலி வெளியேறவும் சரியாக இருந்தது, இவனை கண்ட மைதிலி சிரித்துவிட்டு செல்ல, சைக்கிளை விட்டிறங்கிய அவன் படலையை திறந்துகொண்டு சுலக்சனை கூப்பிட்டவாறு வீட்டினுள் உள்நுழைந்தான், இவனது குரலை கேட்டு வெளியே வந்த சுலக்சனின் தாயார் "ஓ தம்பியா கொஞ்சம் பொறு மனே மைதிலி இப்பதான் வந்து அவனோட கதைச்சுப்போட்டு போறாள் இப்பதான் பாத்ரூம் பக்கம் நான் கொண்டுபோய் விட்டுப்போட்டு வாறன் முடிஞ்சதும் கூப்பிடுவான் நீ அங்க இரு" என்று விட்டு குசினிப்பக்கம் செல்ல சுலக்சனோ நன்றாக கெந்தி கெந்தி நடக்கிறான், இந்த மனிசி பாத்ரூமிற்கும் தான் தான் கொண்டுபோய் விடுறன் என்று சொல்லுது, என்ன கூத்தடா இது ..சரி வரட்டும் கேட்போம் என்று யோசித்தவாறே சோபாவில் அமர்ந்தான் அவன். "அம்மா" என்று கொஞ்சநேரம் கழித்து சுலக்சனின் குரல் கேட்க சோபாவிலிருந்து எழுந்துகொண்டவன் "அன்ரி நீ ங்க வேலையை பாருங்கோ நான் போய் கூட்டிக்கொண்டுவாறன்" என்று சொல்லிவிட்டு எழுந்து பாத்ரூம்பக்கம் போக லுங்கியை அக்குளிற்குள் இடுக்கியவாறு சுலக்சன் வெளிப்பட்டான், காலை நிலத்தில் வைக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தவன் , போதாக்குறைக்கு தண்ணீர்படாமல் இருக்க காயத்தை சுற்றி ஒரு சிவப்பு பொலித்தீன் பையையும் இறுகக்கட்டியிருந்தான். கைலாகு கொடுத்து மெதுவாக தூக்கிக்கொண்டு சுலக்சனை சோபாவில் கிடத்தி விட்டு பேச ஆரம்பித்தனர் இருவரும் "ஏனடா பள்ளிக்கு இண்டைக்கும் வரலை" "நான் இருக்கும் நிலையை பார்த்தாய் தானே, ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவதிற்கே அம்மா கொண்டுபோய் விட வேண்டிக்கிடக்கு " "அப்போ நேற்று இரவு படிக்க வந்தது " "மச்சான் நானில்லாத நேரத்தில் எங்கேயும் கஞ்சாவை வாங்கி பள்ளிக்குள் இழுக்கியோ, நானெப்படா நேற்றுவந்தனான் விசரா உனக்கு " "மச்சான் விளையாடாதடா, நீ நேற்று என்னவெல்லாம் சொன்னாய் என்று யோசித்துப்பார் " "டேய் மனுசனுக்கு கடுப்பேத்தாத நானே வரவில்லை என்றன், இவரு பேசினாராம் " என்று விட்டு அம்மா என்று கூப்பிட்டான் சுலக்சன் , சுலக்சனுடைய குரலை கேட்டு அவன் தயார் எட்டிப்பார்க்கவும் "அம்மா நேற்று இரவு நான் என்னசெய்தனான்" என்று கேட்க சுலக்சனின் தாயாரோ பொரிந்துதள்ள துவங்கினார். "எடுத்தாலும் எடுத்தான் ஒரு காயத்தை எனக்கு தூக்கம் போச்சு, நேற்று இரவு மட்டும் ஆறுதடவை இவனை இழுத்துக்கொண்டு பாத்ரூம்பக்கம் போவதும் வருவதுமாக நித்திரையே போச்சு மனே " என்று அவர் முடிக்கவும்,அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த அவனுக்கு தலைக்குள் சுரீர்...சுரீர் என்று வலிக்கத்தொடங்கியிருந்தது மூளை கோணல் மாணலாக வேலை செய்துகொண்டிருந்தது அப்படியானால் இரவு என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார், பிரதர் wilheim ஆ இருக்குமோ, ஒவ்வொரு நாளும் மண்டபத்திற்குள் வருகிறேன் என்று நேற்று சொல்லியது சுலக்சன் உருவிலிருந்த Wilheim ஆ...? அப்போ அந்த கரிய உருவம் பிரதர் wilheim ஆ எதற்கு என்னை தெரிவுசெய்தார்...? இப்படி கேள்விகள் அவனுடைய மூளையில் குறுக்கும் நெடுக்குமாக ஓட விறைத்துப்போயிருந்த அவனை கவனிக்காது சுலக்சன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தொடர்ந்தான். "மச்சான் மைதிலியை கண்டனியோ " அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது " ம்ம்" என்றுமட்டும் முடித்துக்கொண்டான் அவன் "வாணியிடமிருந்து தகவல் எனக்கு கால் வெட்டப்பட்டதை தெரிந்து கொண்டு சுகம் விசாரிச்சு கேட்டனுப்பியிருக்கிறாள் " என்று தொடர்ந்து நேற்று இரவு அவன் வாயினால் விபரித்த அனைத்தையும் மீண்டும் ஒன்றும் விடாமல் புதிதாக சொல்வதுபோல் தொடர்ந்து விபரித்துக்கொண்டிருந்தான் சுலக்சன் அவனது மூளை ஏற்கனவே கொள்ளளவுக்கு அதிகமாக அதிர்ச்சியினை உள்வாங்கிக்கொண்டு தளர்ந்து போயிருந்ததால் சுலக்சன் விபரித்த அனைத்தையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டது, புள்ளிகள் எல்லாம் நேர்கோடுகளால் இணைய அவன் ஆழ்மனதில் Wilheim இன் புகைப்படம் தோன்றி தோன்றி மறைந்தது. எந்த சலனமும் இன்றி இருக்கையை விட்டு எழும்பியவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் கேட்டான் "என்னடா ஒரு பதிலும் சொல்றாயில்லை " "மச்சான் எனக்கு தலை சரியாக இடிக்கிது, உதைப்பற்றி நாளைக்கு கதைப்போம்" என்று விட்டு அவனது பதிலையே எதிர்பாராதவனாக வெளியே வந்து சைக்கிளை எடுத்து வீட்டை நோக்கி விரட்டினான், இந்த சம்பவம் நடந்து நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக இந்த அமானுஷ்யம் அவனது வாழ்வில் ஒரு இனிமையான நினைவாக மட்டும் மாறிப்போனது. 2020 , இலங்கை கிழக்கு மாகாணம் "தம்பி வாங்கோ", பாடசாலையின் தற்போதைய அதிபர் அவனை இன்முகத்துடன் வரவேற்றார், "தம்பிகள் பழைய மாணவர் சங்கத்தினால் செய்யும் உதவிகளுக்கு பாடசாலை பெருமளவில் கடமைப்பட்டிருக்கிறது, கனநாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள் பள்ளியை சுற்றிப்பாருங்கோ நான் ஒரு இருபது நிமிஷத்தில் வாறன் " என்று விட்டு அதிபரும் நகர பதினைந்து வருடங்களுக்கு பிறகு கால்வைக்கும் அவனது பாடசாலை இஷ்டத்திற்கு முற்றுமுழுதாக மாறியிருந்தது, உயர்தரத்தில் அவன் படித்த வகுப்பறையை தவிர மற்றயதெல்லாம் இடிக்கப்பட்டு மாடிக்கட்டிடங்களாக மாறியிருந்தன, மெதுவாக பழைய விடயங்களை அசைபோட்டவனுக்கு அப்போதுதான் அந்த சம்பவமும் ஞாபகம் வர, அவனது கால்கள் அந்த குடவுன் இருந்த திசையை நோக்கி தானாகவே நடந்தது, அங்கே அந்த கூடவுன் இருந்த அடையாளமே தெரியாமல் அந்த இடத்தில் இரண்டுமாடி கட்டிடமொன்று முளைத்திருந்தது, இந்த குடவுனுக்கு என்ன ஆனது என அறியும் நோக்கத்தில், அந்த வழியால் சென்றுகொண்டிருந்த சிறுவனொருவனை கூப்பிட்டான் அவன், இவனது தோற்றத்தை பார்த்த சிறுவனும் பம்மிக்கொண்டு தயங்கி தயங்கி அவனருகில் வந்தான் "சேர்" "தம்பி சேர் எல்லாம் இல்ல அண்ணன் என்றே கூப்பிடும், இந்த இடத்தில் ஒரு பாழடைந்த குடவுன் ஒன்று இருந்ததே அதை எப்ப இடிச்சவைங்க" இவனை மேலேயும் கீழேயும் பார்த்த அவன் " அண்ணன் கனகாலத்திற்க்கு இங்கால வரலை என்ன, அதை இடித்து பத்து வருடத்திற்கு கூட இருக்கும் நான் பள்ளியில் சேர்ந்த காலத்தில் தான் இடித்தவை, இடித்துப்போட்டுத்தான் அந்த பெரிய கட்டிடத்தை கட்டினவங்கள் " என்று முடித்தான். "அப்போ ஏன் அந்த கட்டிடம் பூட்டியிருக்கு யாரும் பாவிக்கறதில்லயா...?" "அது இரவில் யாரும் அங்காலைப்பக்கம் போறதில்லை, அடிக்கடி லையிட் தானாக எரியுறதும், மெஷின் இரைச்சல் வாறதுமென்று ஒருவரும் போறதில்ல,அப்படி துணிஞ்சும் போன நாலைஞ்சுபேர் நாய்க்கடியும் வாங்கியிருக்கினம் " "சுற்றி மதில் போட்டிருக்கே நாய் எங்கயிருந்து வருகிறது " "தெரியாது அண்ணன், ஏழடி மதில் அப்படியிருந்தும் அந்தப்பக்கம் நாய்கள் ஏறி வருகிறது,பகலிலே மட்டும் எதாவது தேவைக்கு பாவித்துவிட்டு பொழுதுபட பூட்டிவிட்டு வந்துவிடுவோம் " என்று முடிக்க "என்ன தம்பி நம்மடை பாடசாலை எப்படியிருக்கிறது...?" என்று கேட்டுக்கொண்டே அதிபர்வரவும் அதிபரை கண்ட பயத்தில் இவனை பார்த்து சிரித்துவிட்டு நொடிப்பொழுதில் சீட்டாய்ப்பறந்துவிட்டான் அந்த சிறுவன், அதிபரை நோக்கி திரும்பிய அவனும் வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான், சற்றைக்கெல்லாம் அவனது வேலை முடிந்துவிட அதிபரிடம் விடை பெற்றுக்கொண்டு அதிபரின் காரியாலயத்தில் இருந்து வெளியேறி தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்துகொண்டிருக்க அவனது சிந்தனையோ அந்த சிறுவன் சொன்ன விடயங்களை சுற்றியே சுழன்றது, உண்மை என்றாவது ஒருநாள் வெளியே வரும்வரை பிரதர் Wilheim அமைதியாக இருக்கமாட்டார் என்று தோணியது ,அந்த உண்மைகள் கிழிக்கப்பட்ட பிரதிகளாக எங்கே ஒழிந்துகொண்டிருக்கின்றனவோ என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய வாகனத்தில் ஏறி இக்னீஷியனை உசுப்பினான், சிறிய கனைப்புடன் உயிர்பெற்ற வாகனம் மெதுவாக வேகமெடுத்தது அவனது வாகன பக்ககண்ணாடியில் பாடசாலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்க அவனது நாவோ ஒரு வசனத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது அது பைபிளில் பிரசித்தமான ஒரு வசனமான "பாவத்தின் சம்பளம் மரணம்" (முற்றும் )
  15. உங்களுக்கு ஆஸ்மா இல்லாவிட்டால் ஸ்ப்ரே பாவிப்பதை முற்றாக விடுங்கள். பழக்கமில்லாமல் ஓடும்போது மூச்சு வாங்குவது இயல்பு. இதற்குக் காரணம் ஓடும்போது உடலுக்குத் தேவையான அதிகமான ஒட்சிஜனை வழங்க உங்கள் சுவாசப்பை பழக்கப்படவில்லை. அத்துடன் ஒட்சிஜனைக் காவிச் செல்வதற்கான இரத்த ஓட்டத்தை வழங்க இதயம் தயாராக இல்லை. அதனால்தான் பயிற்சியை மிக மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். 2 மாத பயிற்சிக்குப் பின் ஓரளவு சாதாரணமாக ஓட முடியும். பொறுமையாக முயன்று பாருங்கள். கொலஸ்ரரோல், கலோரிகள் தவிர வேறெதையும் இழக்கப் போவதில்லை. 🙂
  16. வணக்கம், தானா சீனா! புத்தரினது மரணமானது 'குஷினகர்" என்னும் இடத்தில் நிகழ்ந்தது! மரணிக்கும் போது அவரது வயது எண்பது எனக் கூறப்படுகின்றது! மகாயானம், தேரவாதம் ஆகிய பிரிவுகளின் கருத்துப் படி, இரு விதமான கருத்துக்கள் பகிரப்படுகின்றன! மகாயானத்தினரின் கருத்துப் படி, புத்தர் நஞ்சாகிய காளானை உண்டதால் மரணித்தார் என்று கூறப்படுகின்றது! தேர வாதத்தினரின் கருத்துப்படி...புத்தர் நஞ்சாகிப் போன பன்றி இறைச்சியை உண்டதால் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்! அதே போல தேர வாதத்தினரின் கருத்துப் படி...புத்தர் விசாகப் பௌர்ணமியில் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்..! எனினும் புத்தர் புரட்டாதி, ஐப்பசி போன்ற மாரி காலத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகின்றது! எவ்வாறு இருப்பினும் மரணத் தெய்வமான 'மாரா' புத்தருக்கு இன்விற்றேசன் அனுப்பியதாகவும், புத்தர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது! இதிலிருந்து புத்தர் அந்தக் கால கட்டத்தில், மரணத்தை எதிர் பார்த்திருக்கவில்லை என்று அறியப் படுகின்றது! புத்தருக்கு நிறைய எதிரிகள் இருந்தார்கள்..! முக்கியமாகப் புத்தரது கருத்துக்கள் வருணாச்சிர தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்களுக்கு எதிராகவேயிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது! உயிருள்ள மிருகங்களை வேள்வித் தீயில் போட்டு..அந்த ஊணவை, வேதாந்திகள் உண்டார்கள். அப்போது கொல்லாமையைப் போதித்த புத்தர் அவர்களிடம்...எதற்காக மிருகங்களைப் பலியிடுகிறீர்கள் எனக் கேட்டார்! அப்போது வேதாந்திகள், நாங்கள் அவற்றைக் கொல்லவில்லை...அவற்றை மோட்சத்துக்கு அனுப்பிகின்றோம் என்று பதில் கூறினார்கள்! அவர்களை நோக்கிய புத்தர் அப்ப்டியானால், நீங்கள் எதற்காகப் பூசை புனஸ்காரம் என்று மினக்கடுகிறீர்கள்? மிருகங்களைப் போலவே, நீங்களும் வேள்வித் தீயில் விழலாமே என்று கூறவும்....மிருகங்கள் மட்டும் தான் அவ்வாறு செய்ய முடியும் என்று வேதாந்திகள் வாதிட்டார்கள்! இறுதியில் புத்த மதம் இந்தியாவில் வேரூன்றாதவாறு பார்த்துக் கொண்டார்கள்! இருப்பினும், புத்தரின் சில திரிபிடகங்கள் இலங்கைக்குக் களவாகக் கொண்டு வரப்பட்டு, அவை தப்பிப்பிழைத்தன! இலங்கையிலிருந்து தான் சீன யாத்திரிகர் மூலம் புத்தம், ஆசியாவின் மற்றைய பகுதிகளுக்குப் பரவியது! அதனால் தான் புத்த மதம் தப்பிப் பிழைத்ததில்..இலங்கைக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளதாகக் கூறுகின்றார்கள்!
  17. கொரோனா நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகின்றது. இதனால் தான் ஒவ்வொரு நாடும் அரசுகளும் முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுகின்றன. இதில் வீராவேசமோ அல்லது நான் சொல்வது சரி செய்தது சரி என எவராலும் முடிவெடுக்க முடியாது. கொரோனா வைரசு புதிசு கண்ணா புதிசு...😁
  18. 10 ம் கிகதி அவர்களால் வெருகல் படுகொலை நிகழ்வும் நினைவு கூரப்பட்டது அழிந்தது மட்டுமே மிஞ்சியும் எஞ்சியும் நிற்கிறது இன்றுவரைக்கும்
  19. வேண்டாம் தாயே, நடையே போதும், கொரோணா அதிர்விலிருந்து இன்னும் லண்டன் மீளவில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.