Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8910
    Posts
  2. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    53011
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87997
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20023
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/27/21 in all areas

  1. அத்துடன், வடக்கிலிருந்து கிழக்கினை முற்றாக பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை கருணாவையும் அவரது ஆதரவாளர்களையும் முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுவருகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் அனுசரணையுடன் இணைக்கப்பட்ட இம்மாகாணங்களை பிரிக்கும் முன்னர் இந்தியாவின் அனுமதி பெறப்படவேண்டும் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வடக்கிலிருந்து கிழக்கினை நிரந்தரமாகப் பிரிப்பதன் மூலம் கருணாவுக்கான அரசியல் பலத்தினை கிழக்கு மக்களிடையே அதிகரிக்கலாம் என்று கருதும் அரசு, இப்பிரிப்பினூடாக அதாவுள்ளாவுக்கு ஆதரவான முஸ்லீம் ஆயுதக் குழுக்களையும் தமது நடவடிக்கைக்குப் பயன்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கிறது. கிழக்கு மாகாணம் முற்றாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தனது பிணாமிகளான கருணா, டக்கிளஸ், வரதர் அணி, முஸ்லீம் அமைப்புக்கள் ஆகியவற்றின் மூலம் தனது சிங்கள பெளத்த அரச அதிகாரத்தை கிழக்கில் முற்றாக நிறுவிவிடலாம் என்று அரசு எதிர்பார்க்கிறது. கிழக்கில் தனது அதிகாரத்தை நிலைப்படுத்தும் ஒரு அங்கமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதும் அடங்கும். வடக்கில் மாகாணசபை சிறப்பாக இயங்காத போதும், கிழக்கில் அதன் செயற்பாடு சிறப்பானதாக இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆகவே, கிழக்கு தனித்து இயங்கவேண்டும் என்கிற கோஷத்தை கருணா போன்றவர்களைப் பாவித்து அரசு முன்வைக்கக் கூடும். பின்னர் வடக்கிலும் டக்கிளஸை முன்னிறுத்தி, மாகாணசபையினைக் கைப்பற்றுவதன் மூலம் தனது அதிகாரத்தை அங்கும் பரவலாக்கும் கைங்கரியத்தில் அரசு இறங்குவதற்கான சாத்தியமும் இருக்கிறது. அரசின் இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பரராஜசிங்கம் போன்றவர்கள் எப்போதுமே ஒரு தடைக்கல்லாகவே இருந்துவந்துள்ளனர். புலிகளின் தீவிர ஆதரவாளராக அவர் இருந்தது மட்டுமல்லாமல், வடக்குக் கிழக்கும் இணைந்த பிரதேசமே தமிழரின் பூர்வீக தாயகம் எனும் கோட்பாட்டில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்ததுடன், அதற்காகத் தொடர்ச்சியான பரப்புரைகளையும் அவர் முன்னெடுத்து வந்திருந்தார். இதனாலேயே அவர் கொல்லப்படவேண்டும் என்று அரசும் அரசுக்குச் சார்பான கருணா குழுவும் முடிவெடுத்தன. முற்றும் https://sangam.org/taraki/articles/2006/01-02_Real_Reasons_Behind_Murder_in_the_Cathedral.php?print=sangam
  2. பரராஜசிங்கம் அவர்கள் கொல்லப்பட்டமைக்கான ரெண்டாவது காரணம் மிகவும் பொதுவானது. ஆனால் இந்த அநியாயப் படுகொலையின் விளைவாக உருவாகியிருப்பது மிகவும் ஆபத்தான, விரும்பத் தகாத சூழ்நிலையென்றால் அது மிகையில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து, அதிலும் குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து இலங்கையில் அரசியல் ராணுவ அரங்கில் செயற்பட்டு வந்த சக்திகளின் கூட்டு முயற்சியாக இப்படுகொலை பார்க்கப்படவேண்டியதாகிறது. கடந்த சில வருடங்களாக சிங்கள அரசாங்கங்கள் தமது ராணுவத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன. ராணுவத்தினருக்கான சம்பளம் பற்றிய கவர்ச்சியான விளம்பரங்களோ அல்லது நாட்டைக் காக்கும் பணியென்கிற அறைகூவல்களோ சிங்கள இளைஞர் யுவதிகளை ராணுவத்தில் பெருமளவில் இணையும் விருப்பினை இதுவரை ஏற்படுத்தவில்லை. குறைந்தது அரசாங்கம் போரை உடனேயே ஆரம்பிப்பதற்குத் தேவையான குறைந்தளவு எண்ணிக்கையில் கூட அவர்கள் இணைய முன்வரவில்லை. வடக்குக் கிழக்கு மட்டுமல்லாமல் தலைநகர் கொழும்பு கூட போர்க்களமாக மாறலாம் என்கிற நிலையில், ராணுவப் பற்றாக்குறை என்பது அரசைப்பொறுத்தவரையில் பாரிய பிரச்சினையாகவே உருப்பெற்றிருக்கிறது. இதனால், தனக்குச் சாதகமான பிரதேசங்களில் ராணுவப் பிரசன்னத்தினை அதிகரித்து அப்பகுதிகளைப் பலப்படுத்தும் அதேவேளை, கண்மூடித்தனமாக பெருமளவு நிலப்பரப்பினை தனது உண்மையான கட்டுப்பாடின் கீழ் இல்லாமல் வெறுமனே காவல் செய்வதை அது தவிர்க்கவே விரும்புகிறது. இதன் ஒருபகுதியாகவே கிழக்கில் புலிகளுக்கு எதிராக இயங்கிவரும் கருணா குழுவினரின்மூலம், போராட்டம் கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே கடந்த இரு வருடங்களாக முடக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பார்க்கிறது. ஆனால், இந்த சாதகமான சூழ்நிலையென்பது வடக்கில் புலிகளின் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளாலும், தேர்தல் புறக்கணிப்புக்களாலும் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. இதனாலேயே, திருகோணமலையுட்பட கிழக்கு மாகாணத்திற்குள் தமது அரசியல் ராணுவச் செயற்பாடுகளை விரிவாக்குவதுடன், வடக்கு நோக்கிய தமது ராணுவ நடவடிக்கைகளை தற்போதைக்கு ஓரத்தில் போட்டுவிடலாம் என்று அரசாங்கம் நினைப்பதுபோலத் தெரிகிறது. இதன் ஒரு அங்கமாகவே கிழக்கு மாகாணத்தை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தனது அனைத்துச் சக்திகளையும் அரசாங்கம் முடுக்கிவிட்டிருக்கிறது. இதற்காக கருணாவையும், அவரது ஆதரவாளர்களையும் தனது ராணுவத்தினருடன் சேர்த்து கிழக்கு மாகாணம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் நடவடிக்கையில் அது தன்னை தீவிரமாக ஈடுபடுத்தியிருப்பது தெரிகிறது. இந்த நடவடிக்கைகளில் மட்டக்களப்பு வாவியின் மேற்கில் அமைந்திருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரையிலிருந்தும் புலிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் அடங்கும் என்பதும் தெரியவருகிறது. தற்போதைய நிலவரத்தின்படி மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் ராணுவத்தின் 23 ஆம் படைப்பிரிவே நிலைகொண்டிருக்கிறது. சில பிரதேசங்களில் ராணுவத்தினரின் பிரசன்னமே காணக் கிடைப்பதில்லையெனும் அளவிற்கு ராணுவத்தினரின் அளவு குறைவாகவே காணப்படுகிறது. இதேபோல திருகோணமலை - மணலாறு பகுதியினை 22 ஆவது டிவிஷன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், வடக்கிலோ விசேட படைகளின் 53 ஆவது டிவிஷன் அடங்கலாக 6 டிவிஷன்கள் நிலைவைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கினை முற்றாக மீட்கும் நடவடிக்கையில் வடக்கில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினரின் ஒரு பகுதியினர் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. வடக்கில் புலிகளுக்கெதிரான ராணுவத்தினரின் நடவடிக்கைகள் மந்தகரமான நிலையினை அடைந்திருக்கும் நிலையில், இவர்களை கிழக்கில் நகர்த்துவதன் மூலம் கிழக்கை முற்றாக மீட்கலாம் என்று அரசு எதிர்ப்பார்க்கிறது. இப்படியான எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் வெறுமனே ராணுவத்தினரால் மட்டுமே மேற்கொள்ளப்படக் கூடியதல்ல. கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக புலிகளுக்கெதிரான போரில் குறிப்பிடத் தக்களவு வெற்றிகளைப் பெற்றிராத ராணுவத்தைக் கொண்டு, கிழக்கினை முற்றாக மீட்கலாம் என்று அரசு நம்புவதாகத் தெரியவில்லை. அதனால், ஆப்கானிஸ்த்தான் ஈராக் ஆகிய நாடுகளில் பிரதேசங்களை மீட்க அந்நாடுகளில் பொம்மை அரசுகளை அமெரிக்கா உருவாக்கியது போல, கிழக்கில் தனது பொம்மை அரசொன்றை உருவாக்கி, அதன் உதவியுடன் கிழக்கினை மீட்கலாம் என்று அரசு கருதுவது தெரிகிறது. இதனாலேயே கருணாவையும் அவரது ஆதரவாளர்கலையும் முன்னிறுத்தி கிழக்கின் தலைவர்கள் என்று காட்டியும், மக்கள் ஆதரவுகொண்ட, செல்வாக்குள்ள, புலிகளுக்குச் சார்பான தலைவர்களைக் களையெடுத்தும், கிழக்கில் புலிகளின் பிரசன்னத்தை சிறிது சிறிதாக அழிக்க கங்கணம் கட்டியிருக்கிறது. இந்த களையெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஜோசேப் பரராஜசிங்கத்தின் படுகொலை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தவரை தமது உறுப்பினர்கள் கொல்லப்படப்போவது இதுவே முதலாவதாகவும் இறுதியானதாகவும் இருக்காது என்பது வெளிப்படை.
  3. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே …/\… இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களின் தரைப்படையான தரைப்புலிகள் மரபுவழி படைத்துறையாக மாற்றம் பெறத் தொடங்கிய 1990 ஆம் அண்டில் இருந்து அவர்கள் தோற்கடிக்கப்பட்டு ஆய்தங்கள் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு வரை அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் பற்றியே. இச்சீருடைகள் பற்றிய பதிவில் 'பச்சை வரிப்புலி'யின் 4 விதமான விருத்துகள் பற்றியும் தரைப்புலி படையணிகளின் பல்வேறு விதமான சீருடைகள் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறேன். வாருங்கள் தாவுவோம், பதிவிற்குள்! தொப்பிகள் பற்றிய ஆவணம்: விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:- விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது... நீல வரி பச்சை வரி கறுப்பு வரி என்பர் அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர். வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள். இடது கையின் தோள்மூட்டிற்குக் கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும் (கீழே அதியரையர்(Brig./ பிரிகேடியர்) துர்க்கா அவர்களின் சீருடையினை நோக்குக). இது கட்டளையாளர்களின் வரிப்புலியில் அதுவும் சிலபேர் அணிந்ததில்தான் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை. குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும். நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும். பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர். → குறிப்பு: நான்காம் ஈழப்போர் வரை சமர்க்களங்களில் இச்சீருடையினை பலர் அணிவர்; சிலர் அணியார். அணியாதோர் குடிமை(Civil) உடைகளை அணிவர். ஆனால் நான்காம் ஈழப்போரில் 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இச்சீருடை அணிவதை புலிகளில் பெருமளவானோர் தவிர்த்தே வந்தனர் . '1998 | பிரிகேடியர் துர்க்கா அவர்களின் சீருடையில் தோளில் உள்ள தோள்மணைத் துண்டத்தில் குறுக்கா ஒரு துணி தைக்கப்பட்டுள்ளதை நோக்குக.' 1989 இறுதி - 1995 வரையிலான பச்சை வரிப்புலி இனி புலிகளின் பச்சை வரிப்புலியினைப் பற்றிக் பார்ப்போம். இச்சீருடையினை அணிந்து திருமதி அனிதாப் பிரதாப் அவர்களிற்கு 1990 ஆண்டின் மார்ச் மாத செவ்வி வழங்கினார், தவிபு தலைவர். மேலும் 1989 ஆம் ஆண்டைச் சேர்ந்த நிகழ்படம் ஒன்றில் மணலாறு காட்டில் புலிகளில் பயிற்சி பாசறையில் இச்சீருடை அணிந்த ஆண்பெண் போராளிகள் பயிற்சி எடுப்பதைக் கண்டுள்ளேன். எனவே இது 1990 ஆண்டிற்கு முன்னரே பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. இது தான் வரியுடைகளிலே வெளிவந்த முதலாவது சீருடையாகும். இதற்குத் தொப்பியாக கறுப்பு நிற வரைகவியினை அணிந்திருந்தனர், புலிவீரர். இதில் இருந்த நிறங்களாவன: பச்சை கபிலம் வெள்ளை இந்த சீருடையில் வெள்ளை நிறம் கொண்ட வரிகள் தடிப்பாக இருந்ததால் அந்நிறமே எடுப்பாக இருந்தது. '1989/12/24 | இதுதான் முதலாவது வரிப்புலிச் சீருடை' 'இடது பக்கத்தில் இருந்து முதலாவதாக நிற்பவர் சாள்ஸ் அன்ரனி போராளி கதிரவன் ஆவார் | ஆண்டு: 1994 என்கிறது Royalty Free Stock Photos, Illustrations, Vector Art, and Video Clips' (இதே சீருடையினைத்தான் பெண்களும் அணிந்திருந்தனர்) (இதே காலகட்டதில் உந்துகணை செலுத்தி அணியும் இந்தச் சீருடைதான் அணிந்திருந்தது) '1991 ஆம் ஆண்டு ஆ.க.வெ. நடவடிக்கையின் பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கிய முன்னேற்ற சமரின்போது கைப்பற்றப்பட்ட மண்ணரணில் உள்ள காவலரணிற்கு கீழே அமர்ந்திருக்கும் கட்டளையாளர்கள் கேணல் சூசை & 'சமர்க்கள நாயகன்' பிரிகேடியர் பால்ராஜ். இருவரும் அணிந்திருக்கும் சீருடையினை நோக்குக.' ஆனால் இதே காலத்தில் பெண்களின் 'மகளிர் படையணி'யின் ஒரு பிரிவு(unit) கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தது. '1993 ஆம் ஆண்டு வெளியான படம் | இந்தக் கால கட்டத்தில் ஆண்புலிவீரர் ஆரும் இது போன்ற சீருடை அணிந்ததில்லை' மேற்கண்ட சீருடைக்கான தொப்பியும் அதே நிறத்தில்தான் அணியப்பட்டிருந்தது. கீழ்க்கண்ட படத்தில் அதைக் காண்க:- ''1993 ஆம் ஆண்டு வெளியான படம் | நாளிதழில் இருந்து எடுத்த படம் என்பதால் படத்தின் நிறம் கொஞ்சம் மாறி விட்டது. மேலுள்ள படிமத்திலுள்ள நிறமே சரியான நிறமாகும் ' இதே கால கட்டத்தில் தொடங்கி 2002 ஆம் ஆண்டுவரை புலிகளின் படையணியினர் ஒரு விதமான சீருடை போன்ற உடை ஒன்றினை சமர்க்களங்களில் அணிந்து வந்தனர். அதன் படம்: நிறம்:- ஒரு வித பச்சை நிறம் ஒரு வித சாம்பல் நிறம் போன்ற நிறம் இவ்வுடையானது நான் மடலம் மூன்றில் குறிப்பிட்ட அந்த மஞ்சள் நிற மேற்சட்டை போன்றதே. ஆனால் இது அதனினிறு கொஞ்சம் மேம்பட்டது ஆகும். ஏனெனில் 1987 இல் வெறும் மேற்சட்டை மட்டுமே. ஆனால் இக்காலத்தில் மேற்சட்டையோடு அதற்குத் தகுந்த நீளக் காற்சட்டையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மேற்சட்டையில் இரு விதமான நிறங்களில் 4 விதமான தோரணிகள்(patterns) இருந்தன.. 'இவைதான் அந்த நாங்கு விதமான பாங்கங்கள் ஆகும் (முதல் படத்திற்கு நிறமூட்டப்பட்டுள்ளது. அதன் உண்மையான நிறம் அதற்கு அருகில் உள்ள படங்களில் உள்ள சீருடை நிறமே) ' மேலுள்ள நான்கு பாங்கங்களில் மூன்று பாங்கங்கள் கீழே உள்ளதை நோக்குக:- ஆனால் நீளக்காற்சட்டை ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே இருந்தது. அது ஒரு விதமான கடும் பச்சை ஆகும்(தெளிவான நிறத்திற்கு மேலே முதற் படிமத்தைக்(Image) காண்க) 'நான் மேற்கூறிய பச்சை நிறமும் சாம்பல் நிறமும் கொண்ட மேற்சட்டை இப்படிமத்தில் தெரிவதை நோக்குக' 'நான் மேற்கூறிய பச்சை நிறமும் சாம்பல் நிறமும் கொண்ட மேற்சட்டை இப்படத்தில் தெரிவதை நோக்குக' 'இப்படிமத்தில் உள்ள எல்லோரும் நான் மேற்கூறிய உடை அணிந்துள்ளதை நோகுக' 'இவர்கள் இருவரும் நான் மேற்கூறிய உடை அணிந்துள்ளதை நோக்குக' தவிபு தலைவரின் மெய்க்காவலரும் அச்சிருடையினை அணிந்திருப்பதை நோக்குக்கும் போது, இச்சீருடையானது கிட்டத்தட்ட ஒரு பொதுச் சீருடை போன்று எல்லோராலும் அணியப்பட்டிருப்பது தெரியவருகிறது. இதே போன்ற உடையினை கடற்புலிகளும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இக்கால கட்டத்தில் தென்தமிழீழத்தில் தரிபெற்றிருந்த புலிவீரர் வரிப்புலியோடு சிங்களத் தரைப்படையின் உருமறைப்புக் கொண்ட சீருடையினையும் தம் சீருடையாக அணிந்திருந்தனர். 1994 இன் இறுதி/1995 - 1996 வரையிலான பச்சை வரிப்புலி இவ்வரிப்புலிக்கும் முன்னைய வரிப்புலிக்குமான வேறுபாடு யாதெனில் முன்னைய வரிப்புலியில் இருந்த வெள்ளை நிறமானது இவ்வரிப்புலியில் ஒரு விதமான கடும் பழுப்பு நிறமாக காட்சியளித்தது. இச்சீருடைக்கு இவர்கள் அணிந்திருந்த சுற்றுக்காவல் தொப்பி கொஞ்சம் வேறுபாடானது. அது பற்றி நான் மேற் குறிப்பிட்டுள்ள தொப்பி பற்றிய பதிவில் கண்டுகொள்க. இவ்வாண்டில் ஆண்களும் பெண்களும் இந்நிறத்திலான சீருடையினையே அணிந்திருந்தனர். 'ஜெயந்தன் படையணியினர்' உந்துகணை செலுத்தி அணியினரும் இச்சீருடையே: இக்கால கட்டத்தில் தென்தமிழீழத்தில் தரிபெற்றிருந்த புலிவீரர் வரிப்புலியோடு சிங்களத் தரைப்படையின் உருமறைப்புக் கொண்ட சீருடையினையும் தம் சீருடையாக அணிந்திருந்தனர்:- 'படிமப்புரவு: 'விடுதலைப்புலிகள்' இதழ்' 'படிமப்புரவு: 'விடுதலைப்புலிகள்' இதழ்' 'படிமப்புரவு: 'விடுதலைப்புலிகள்' இதழ்' 1996 ஆம் ஆண்டு அணியப்பட்ட சீருடை இது முந்தைய சீருடையில் இருந்து நிறத்தால் மட்டும் வேறுபட்டது ஆகும். அதாவது முந்தைய சீருடையின் நீலம் மற்றும் பச்சை ஆகியவை நன்கு தேசுவாக்கப்பட்டிருக்கின்றன, இச்சீருடையில். இது ஓராண்டிற்கும் குறைவாகவே அணியப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் 1996 இற்குப் பின் இந்நிறத்திலான வரிப்புலிச் சீருடைப் படிமங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. இதே நேரம் இக்காலகட்டத்தில் நடந்த அணிவகுப்புகளின்போது, புலிவீரர்கள் தலையில் கறுப்புநிற வரைகவியினை(Berret) அணிந்திருந்தனர். 'ஓயாத அலைகள் ஒன்றின் போது வீ.சா. அடைந்த போராளிகளின் வித்துடல்கள் துயிலுமில்லம் நோக்கி எடுத்துச் செல்லப்படும் போது அணிவக்குப்பில் ஈடுபடும் புலிவீரர்கள். இவர்கள் தலையில் கறுப்பு வரைகவி அணிந்துள்ளதை நோக்குக. | திரைப்பிடிப்பு: ஓ. அ. - 1 ஆவண நிகழ்படத்தில் இருந்து' 1997 - 2002 வரையிலான பச்சை வரிப்புலி இக்கால கட்டத்தில் இவர்கள் அணிந்த சீருடையானது முன்னைய இரு சீருடை விருத்துகளைக் காட்டிலும் கொஞ்சம் வேறுபாடானது. இதில் பழுப்பு நிறம் இல்லை. அதற்குப் பகரமாக நன்கு மங்கிய வெள்ளை போன்ற நிறம் இருந்தது. இந்த நிறமே இதில் இருந்த மூன்று நிறங்களில் மிகவும் ஒடுங்கிய நிறமாகும். ஏனைய இரண்டும் இதை விட கொஞ்சம் தடிப்பானவை. மொத்தமாக இச்சீருடை பற்றிச் சொல்ல வேண்டுமானால் இச்சீருடையானது தோற்றத்தில் பார்வைக்கு மங்கியதாக காட்சியளிக்கிறது! ' ஓ.அ.-2 இல் (1997) திட்டத்தை விளக்கும் பிரிகேடியர் தீபன்(இ) & கட்டளை வழங்கும் பிரிகேடியர் ஜெயம்(வ) | நான் கூறிய பச்சை வரியினை இருவரும் அணிந்துள்ளதை நோக்குக' இக்கால கட்டத்தில் பெண்களும் இதே சீருடையினைத்தான் அணிந்திருந்தனர். இந்த காலகட்டத்தில் இச்சீருடை தவிர்த்து வேறு நிறத்திலான/ பாங்கத்திலான சீருடை அணிந்தோர்:- இம்ரான் - பாண்டியன் படையணியின்… → விக்டர் கவச எதிர்ப்புப் படையணி(1997–2002):- இவர்கள் விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையான நான் மேற் குறிப்பிட்டுள்ள கிடைமட்ட பச்சை வரி கொண்ட சீருடையில் இருந்து வேறுபட்டு நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். இவர்கள் தலையில் சூரியக் காப்பு தொப்பி அணிந்திருந்தனர். (தொப்பி பற்றிய மேலதிக விளக்கத்தை முதல் மடலத்தில் கண்டு கொள்க). இந்நிலைக்குத்தான வரியினை முதன் முதலில் அணிந்தது இப்படையணியினரே. 'ஆடவர் ' (இதே சீருடையினைத்தான் பெண்களும் அணிந்திருந்தனர்) → மயூரன் குறிசூட்டுப் பிரிவு(?-2009) இவர்களும் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். 'புலிகளின் குறிசூட்டுநரும்(Sniper) பொட்டுநரும்(Spotter)' → சிறப்பு உந்துருளி படையணி(?-2002) இக்காலத்தில் இவர்கள் கிடைமட்ட வரியினை அணிந்திருந்தனர். - - - - 2. இக்காலத்திய துணைப்படையின் சீருடை பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை! - - - - வண்ணாளன் உந்துருளி படையணி (?- 05-2004) இவர்கள் பச்சை நிற மட்டு. சீருடையினையே தங்களின் சீருடையாக அணிந்திருந்தனர். 2002 - 18.05.2009 வரையிலான பச்சை வரிப்புலி இது தான் புலிகளின் சீருடைகளின் செந்தரப்படுத்தப்பட்ட காலம் ஆகும். இக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பச்சை வரிப்புலி சீருடையில் மேற்கண்ட இரு வரிப்புலி விருத்துக்களிலும்(version) பயன்படுத்தப்பட்ட ஒரு விதமான நீல நிறம் விடுக்கப்பட்டு அதற்குப் பகரமாக கபில நிறமும், முன்னைய விருத்துக்களில் இருந்த வெள்ளை/மங்கிய வெள்ளை/ஒருவித கபிலம் போன்ற நிறம் விடுக்கப்பட்டு அதற்குப் பகரமாக ஒரு விதமான மஞ்சளும், முன்னைய விருத்துக்களில் இருந்த பச்சை விடுக்கப்பட்டு அதற்கும் பகரமாக இன்னொரு வித பச்சை நிறமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருந்த மஞ்சளானது 2006இற்குப் பிறகு கொஞ்சம் கடுமைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த வரிக்கோடுகளின் இரு மருங்குகளிலும் சிலும்பியது போன்றதான ஒரு தோரணி இருந்தது. மொத்தத்தில் ஒரு வீரனை நன்கு மிடுக்காக எழுப்பிக் காட்டக்கூடியவாறு இச்சீருடை விருத்து அமைந்திருந்தது. (கீழ்க்கண்ட படத்தில் சீருடையினைக் கண்டு கொள்க) 'ஜெனீவா ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியற்றுறை தலைமையகத்தில் வகை-81 துமுக்கியை(Rifle) ஏந்தி காவலிற்கு நிற்கும் தரைப்புலி வீரர் இருவர் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: Gettyimages'' கீழ்க்கண்ட படிமத்தினை வைத்து வரிப்புலி சீருடையினை அறிந்துகொள்க. → படிமத்தினை நன்கு அண்மையாக்கிப் பார்த்தால் சிலும்பிய தோரணி, வரிப்புலி சீருடை என்ன வகையிலான துணியில் செய்யப்பட்டது, அதன் நிறங்கள் என்னென்ன, தொப்பி எப்படிப்பட்டது, அதன் அளவுகள் என்னென்ன என்பது போன்ற தகவல்களை அறியலாம். 'பூநகரிப் படையணியின் பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணியின் பீகே சூட்டாளார்களில் ஒரு போராளி பயிற்சி நிறைவு நாளான சூலை 13, 2007 அன்று தன்னுடைய பயிற்சிப் பாசறையில் நிற்கின்றார்.' இச்சீருடை அணிந்திருந்த 'படையணி'கள்: → சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி → மாலதி படையணி → சோதியா படையணி → ஜெயந்தன் படையணி 'படிமப்புரவு: TamilNet' → பூநகரி படையணி:- 'படிமப்புரவு: அலாமி' → திலகா படையணி → பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி → இது 2008 ஆம் ஆண்டு வன்னியில் பயிற்சி முடித்து வெளியேறின படையணி. இதனது புய வில்லையினை நோக்கவும். இதன் பெயர் அறிந்தோர் கூறவும். மற்றும் பல வடதமிழீழத்தைத் தரிப்பிடமாகக் கொண்ட படையணிகள் இந்நிறச்சீருடையினை அணிந்திருந்தனர். குறிப்பு: 2004இற்குப் பின்னர் கீழ்க்கண்ட கடுஞ்சிவப்பு நிறத்திலாலான வரைகவியினை அணிநடை மற்றும் சில முக்கிய விழாக்களின்போது அணிந்திருந்தனர். அதில் வில்லையும் குத்தப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் இதே தோரணியிலான சீருடையினை வேறு தோற்றத்தில் அணிந்தோர்:- 1) கிட்டு பீரங்கிப் படையணி:- இவர்கள் கிடைமட்ட வரி அணிந்திருந்தனர். ஆனால் அதன் மேல் சிங்கள உருமறைப்புக் கொண்ட சன்னத் தகை கஞ்சுகம்(Bullet proof vest) அணிந்திருந்தனர். கஞ்சுகத்தின் முதுகுப் புறத்தில் ஒரு ஏ.கே - 47 அ ஏ.கே - 56 துமுக்கியினை கொளுவியிருந்தனர். காதில் காதடைப்பான்(earmuff) போட்டிருந்தனர். இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இருவரும் தெறொச்சியை(Howitzer) இயக்கினர். 'பெண்கள் பிரிவினர்' 'முன் தெறோச்சியை ஆண்களும் பின் தெறோச்சியை பெண்களும் இயக்குவதை நோக்குக | இருவரும் சன்னத் தகை கஞ்சுகம் அணிந்து காதடைப்பான் அணிந்துள்ளதை நோக்குக | படிமப்புரவு: viduthalaippulikaL' 'கீட்டு பீரங்கிப் படையணியினர் படைத்தகையின் போது' இவர்களும் படைத்தகையின்போது குட்டிசிறி படையணி அணியும் அதே நிறத்திலான துணியைத்தான் அணிவர். மேற்கண்ட படத்தினையும் கீழ்க்கண்ட படத்தினையும் ஒப்புநோக்குக. 2) ஜோன்சன் மோட்டார் படையணி இவர்கள் மட்டக்களப்பின் ஏனைய படையணிகள் போன்றே 'வெறும் பச்சை' நிறச் சீருடையினையே தம் சீருடையாக அணிந்திருந்தனர். 3) குட்டிசிறி மோட்டார் படையணி (விடுதலைப் புலிகளின் மோட்டார் பிரிவு கிட்டு பீரங்கிப் படையணி தொடங்கப்பட்ட காலத்தில்(1997) அதனுட்பட்ட ஒரு பிரிவாகவே தொழிற்பட்டது. அதன் பின்னர் ஒரு 2000 ஆம் ஆண்டு காலபகுதியில்தான் அது தனியாக ஒரு படையணியாக தொழிற்பட்டது என்பதை கவனத்தில்கொள்க.) கணையெக்கி பெண் போராளிகள் தொடக்க காலத்தில் கீழ்கண்டது போன்ற வெளிறிய பச்சை நிறத்திலான சீருடையினை அணிந்து தலையில் கறுப்பு நிறத் தொப்பியினை அணிந்திருந்தனர். ஆனால் இவர்களின் கட்டளையாளர்கள் பச்சை வரிப்புலியினையே அணிந்திருந்தனர். கணையெக்கிப் ஆண் போராளிகள் தொடக்க காலத்தில் வெளிறிய பச்சை நிறத்திலான சீருடை அணிந்தது குறைவு. பச்சை வரிப்புலியினையே பெரும்பாலும் அணிந்திருந்தனர். 'ஜெசிக்குறுயி எதிர் சமரின் போது கணையெக்கியை(Mortar) இயக்கும் ஆண் போராளிகள்' 'கணையெக்கியை(Mortar) இயக்கும் பெண் போராளிகள்' ஜெயசிக்குறுயிற்குப் பின்னரான காலத்தில்(ஒரு 2000 ஆம் ஆண்டுக்கு கிட்டவாக) பெண்போராளிகளும் ஆண்போராளிகளும் பச்சை வரிப்புலியினை அணியத் தொடங்கி விட்டனர். இயக்கும்போது அதன் மேல் சிங்கள உருமறைப்புக் கொண்ட சன்னத் தகை கஞ்சுகம்(Bullet proof vest) அணிந்திருந்தனர். காதில் காதடைப்பான்(earmuff) போட்டிருந்தனர். இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இருவரும் கணையெக்கியை(Mortar) இயக்கினர். → முன்னிலை நோக்குநர் அணி(FOT):- அனைத்து சேணேவிப் படையணிகளின்(Artillery Brigades) முன்னிலை நோக்குநரும் பச்சை வரிப்புலியே! இந்த காலகட்டத்தில் இச்சீருடை தவிர்த்து வேறு நிறத்திலான/ தோரணியிலான சீருடை அணிந்தோர்:- 1) இம்ரான் - பாண்டியன் படையணியின்… → விக்டர் கவச எதிர்ப்புப் படையணி(2002–2009) & சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி(2003–2009) :- இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். தலையில் சூரியக்காப்பு தொப்பி அணிந்திருந்தனர். 'படைத்தகையில்(parade) ஈடுபட்டிருக்கும் விக்டர் கவச எதிர்ப்புப் படையணி | படிமப்புரவு: Tamilnet.com'' → சூரன் கவச அணி இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்திருந்தனர். தலையில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருந்தனர். 2002 இற்கு முன்னர் இவர்கள் கிடைமட்ட வரியே அணிந்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 'படிமப்புரவு: Tamilnet.com' இதன் ஓட்டுநர் ஒரு சாதாரண தகரி ஓடுநர் என்னவெல்லாம் அணிவாரோ அதையே அணிந்திருந்தார். கீழ்க்கண்ட படத்தில் புலிகளின் வகை-55 முதன்மை சண்டைத் தகரியின்(Main battle tank) சூட்டாளர்(Gunner) அணிந்துள்ள தலைக் கவசத்தை காண்க:- → பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு - → சிறப்பு உந்துருளி படையணி (2002/2003–2009) இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் செவிமறை நெகிழ்வான மகுடக்கவி (earflap floppy hat) அணிந்திருந்தனர். இது இவர்களின் சீருடையாகும். → → அதிவேக உந்துருளி சிறப்பு அணி (2004 - 2009 ) இவர்கள் உந்துருளிப் படையணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்கள் ஆவர். இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் சுற்றுக்காவல் தொப்பி(Patrol cap) அணிந்திருந்தனர். 'உண்ணோட்டமிடும்(inspection) தவிபு தலைவர் 'படிமப்புரவு: TamilNet' 'படைத்தகையில்(parade) ஈடுபடும் அதிவேக உந்துருளி அணியினர் 'படிமப்புரவு: TamilNet' ஆனால் வீதிகளில் சுற்றுக்காவலிற்கோ இல்லை களவேலைகளுக்குச் செல்லும் போது உந்துருளி படைஞர் தலையில் தலைச்சீரா அணிந்து உடலில் கறுப்பு Jacket அணிந்து செல்வார். 'ஆழிப்பேரலையின்போது' 2. ராதா வான்காப்புப் படையணி இவர்கள் நிலைக்குத்தான பச்சை வரி கொண்ட சீருடை அணிந்து தலையில் சுற்றுக்காவல் தொப்பி(Patrol cap) அணிந்திருந்தனர். அதன் வரியும் நிலைக்குத்தே. 'வான் எதிர்ப்பு ஏவுகணை அணியினன் | மேஜர் சுவர்ணன்' 'ZPU-2 வானூர்தி எதிர்ப்பு சுடுகலத்தால் குண்டுதாரியை(Bomber) சுட இலக்கு வைக்கும் வான்காப்பு வீரன்(Air defence soldier) | படிமப்புரவு: viduthalaippulikal' 3. கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! 1)இந்தப் பிரிவின் பெயர் எனக்குத் தெரியவில்லை இந்தப் புலிமகளின் வில்லையில் தனித்துவமான எந்தவொரு இலச்சினையும் இல்லாமல் விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. - - - - 4. தென் தமிழீழத்தில் இருந்த படையணிகள்:- தென் தமிழீழத்தில் இருந்த ஒருசில படையணிகளின் சீருடை பற்றிய எத்தகவலும் என்னிடம் இல்லை. → வினோதன் படையணி Sap Green நிற சீருடையும் நீல நிற வரைகவியும் அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன. 'வஞ்சகன் ஒருவன் இச்சீருடை அணிந்திருப்பதை காண்க. அவனது பக்கினையும் நோக்குக' - - - - → விசாலகன் & வினோதன் படையணி:- இச்சீருடையினைத்தான் 2005 இற்குப் பின்னாரான காலத்தில் இவ்விரு படையணியினரும் அணிந்திருந்தனர். 2005 முன்னர் இதே சீருடை அணிந்திருந்தாலும் தலையில் வரைகவி(beret) அணிந்திருந்தனர். 'படிமப்புரவு: viduthalaippulikal' - - - - →மதனா படையணி இச்சீருடையானது 2005 ஆம் ஆண்டு வரை அணியப்பட்டது. அதன் பிறகு தொப்பியில் மட்டும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது வரைகவி(beret) விடுத்து தொப்பிக்கு(கீழுள்ள இரண்டாவது படத்தைக் காண்க) மாறினர். ஆனால் உடை நிறத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன. → அன்பரசி படையணி இவர்கள் சாம்பல் நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. 'இப்படிமம் யாவும் ஒக்டோபர் 2002 ஆம் ஆண்டு மாலதி அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளன்று எடுக்கப்பட்டதாகும்' 'சிதைந்த படத்தினை புனரமைத்தபோது இந்த நிறத்தில் வந்தது..' 'மேற்படத்தில் உள்ளவர்களும் இப்படத்தில் உள்ளவர்களும் வெவ்வேறு நிறத்திலான இடுப்பு பட்டி கட்டியிருக்கின்றனர்.. எனவே இரு வேறு விதமான படையணியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்' தென் தமிழீழ போராளிகள் வடதமிழீழ போரளிகளிடம் இருந்து கொஞ்சம் வேறுபாட்டுடனான அணிநடை செய்வர். அதாவது இவர்கள் வட தமிழீழ போரளிகளைப் போன்று கையை நேரே விசுக்கினாலும் அதனுடன் கூடுதலாக கையை சத்தாராகவும் விசுக்குவர். (கீழ்க் கண்ட படத்தில் இருப்பது போன்று) 'மட்டு-அம்பாறை பெண்கள் படையணியின் அதிகாரிகள் படைத்தகையில்(parade) ஈடுபடுகின்றனர்' - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! மேலே உள்ள கடும் பச்சை நிறத்தோடு சேர்த்து Sap Green போன்ற நிறத்திலான சீருடையினை ஒரு படையணி அணிந்திருந்தது. 'துரோகி கருணாவின் பெண்கள்| கருணா பிரிந்த அன்றோ அடுத்த நாளோ எடுத்த படம் | இப்படத்தில் கறுப்பு மற்றும் கடும் பச்சை நிறத்தோடு Sap Green நிறத்திலான சீருடை அணிந்த இருவர் முன்னால் நிற்பதை நோக்குக' 'துரோகி கருணா & அவனது மெய்க்காவலன் & அவனது பெண்கள் | கருணா பிரிந்த பின்னர் எடுத்த படம் | இப்படத்தில் உள்ள் பெண்கள் நான்கு விதமான சீருடை(வரிப்புலி, கறுப்பு, கடும் பச்சை, Sap Green) அணிந்துள்ளனர் | இப்படத்தில் இடது பக்கத்தில் இருந்து முன்வரிசையில் இரண்டாமராக நிற்கும் பெண்ணின் சீருடையை நோக்குக. விதப்பாக(specific) நோக்க நான் அம்புக்குறியிட்டுள்ள இடத்தில் பார்க்கவும்.' - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! இப்படையணியில் ஆண்கள் மட்டுமே பணியாறினர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. இந்த படையணியைச் சேர்ந்தவர்கள் 2004 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கீழ்க்கண்ட நீல நிறத்திலான வரைகவியினை அணிந்திருந்தனர். 'இப்படம் ~2002/3 ஆண்டைச் சேர்ந்தது' 2004 இற்குப் பிறகு இப்படையணி பற்றி எந்தவொரு தகவலும் இல்லை! ஆனால் இவர்கள் துணைப்படையினர் என்றும் கூறப்படுகிறது. - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. 'கிழக்கில் இருந்த ஒரு உந்துகணை செலுத்தி படையணி படைத்தகையில் ஈடுபடும் காட்சி | இப்படம் 2004 ஆம் ஆண்டிற்கு முந்தையது' - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! இப்படையணியில் ஆண்களும் பெண்களும் இருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. 'படைத்தகையில் ஈடுபடும் ஆண் & பெண் போராளிகள்' மேற்கண்ட படையணியைச் சேர்ந்தவர்கள் 2004 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரை கீழ்க்கண்ட நிறத்திலான தொப்பியினை அணிந்திருந்தனர். ஆனால் உடை நிறத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. 'படைத்தகையில் ஈடுபடும் போராளிகள் | இப்படம் 2004 ஆம் ஆண்டிற்கு முந்தையது | இவர்கள் இக்காலத்தில் சிங்களத்தின் தரைப்படை உருமறைப்புக் கொண்ட செண்டாட்டத் தொப்பியினை(Baseball cap) அணிந்திருந்தனர்.' 'மேற்குறிப்பிட்டுள்ள சீருடையினை அணிந்துள்ள ஒரு புலிவீரன்ர். இப்படம் நான்காம் ஈழப்போரில் எடுக்கப்பட்டதாகும் | படிமப்புரவு: PULT' 'தலைவனோடு நிற்கும் இச்சீடை அணிந்தோர்' 'இப்படையணியைச் சேர்ந்தவர்களும் பச்சை நிறச்சீருடை அணிந்தோரும் ஒன்றாக நிற்கும் படிமம் | கருணா துரோகி ஆனதிற்குப் பின் எடுக்கப்பட்ட படிமம் | படிமப்புரவு: கூகிள்' - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! இப்படையணியைச் சார்ந்தவர்களின் சீருடையானது சிறீலங்கா தரைப்படையின் சீருடையினை ஒத்த தோரணியிலானதாக இருந்தது. தலையில் பச்சைநிற சுற்றுக்காவல் தொப்பியினை அணிந்திருந்தனர். இவர்களின் அதிகாரிகள் கடுஞ்சிவப்பு நிறத்திலான வரைகவியினை அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன. 'தென் தமிழீழத்தில் நடந்த நிகழ்வொன்றில் பெண்போராளிகள் இருவர் அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக' 'சிங்கள படைத்துறைச் சீருடையினை தம் படையணிச் சீருடையாக அணிந்த பெண்ணொருவர் நடுவில் நிற்பதை நோக்குக. | அவரைச் சுற்றி இருநிறங்களிலான சீருடை அணிந்தோர் கணையெக்கியுடன்(mortar) நிற்பதை நோக்குக ' 'நான் அம்புகுறியிட்டுள்ளோர அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக' 'இதில் நான் அம்புக்குறியிட்டுள்ளவர்கள் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக. | 55 வது பயிற்சி முகாமில் இருந்து 400 ஆண்கள் போராளிகள் மற்றும் மட்டக்களப்பின் 30 வது பயிற்சி முகாமில் இருந்து 300 பெண் போராளிகள் வெளியேறியதைக் குறிக்கும் விழா வியாழக்கிழமை தவிபு கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பிலுள்ள தரவை மத்திய பயிற்சி பாசறையில் நடைபெற்றதைக் காட்டும் படம். | படிமப்புரவு: தமிழ்நெட்' ''இடது பக்கத்திலிருந்து முதலாவதாக அமர்ந்திருப்பவர் - சிங்கள தரைப்படையின் சீருடை போன்ற சீருடை அணிந்துள்ளவர் - மட்டக்களப்பைச் சேர்ந்த படையணிப் போராளி. இவர் அணிந்துள்ளதுதான் மேற்கூறிய சீருடை ஆகும்.'' - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! - - - - → கீழ்க்கண்ட படையணியின் பெயர் எனக்குத் தெரியவில்லை! இவர்கள் அணிந்திருந்த சீருடையானது நான் மேலே கூறியிருக்கும் சிறீலங்காத் தரைப்படையின் சீருடையினை ஒத்ததாக இல்லாமல் அதிலிர்நுது கொஞ்சம் வேறுபட்டதாக காணப்படுகிறது. இதை அணிந்தவர்கள் பற்றிய விரிப்புகள் ஏதும் இல்லை. இவ்வகையிலான சீருடையின் சிதைந்த இரு படிமங்கள்தான் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். அதை வைத்து இதனது தோரணியினை அறியவும். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்கில் இருந்து வேறுபட்டிருந்தது. அதாவது பக்கின் மூடியானது வரிப்புலிக்கு நேராக எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருக்கும். ஆனால் இதனது மூடியின் தோற்றமானது ஒரு மழுவின் அலகினைப் போல இருந்தது. அதன் விளிம்புகள் மேல்நோக்கி சத்தார் கோணத்தில் வெட்டப்பட்டிருந்தன. 'கருணாவின் மெய்க்காவலர் அச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக' - - - - - - - - - - - - - - - - → இளங்கோ படையணி மற்றும் திலகா படையணியின் படையணிச் சீருடை இப்படையணியின் பெயரையும் கீழ்க்கண்ட சீருடை அணிந்தோரே இப்படையணியினர் என்ற தகவலையும் நிதர்சனத்தின் திருகோணமலை பற்றிய ஒரு நிகழ்படக்(video) கோப்பில் இருந்தே எடுத்தேன். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. 'பெண்கள்' 'ஆண்கள்' 'மாவீரர் துயிலுமில்லம் ஒன்றில் பச்சை வரிப்புலி, கடும்பச்சை நிறச் சீருடை, ஈ ஒரு வித கறுத்த சீருடை ஆகியவற்றை அணிந்து செல்லும் போராளிகள்' - - - - - - - - - - - - - - - - --> சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் படையணிச் சீருடை: இச்சீருடையானது ஓயாத அலைகள் 2லிருந்து விடுதலைப்புலிகளால் இறுதிவரை அணியப்பட்டது ஆகும். 'குடாரப்பில் தரையிறங்கி இத்தாவிலில் உள்ள கண்டிவீதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்போகும் அணிகளிற்கு அறிவுரை புலற்றும் கட்டளையாளர் இள பேரரையர் ராஜசிங்கன் இச்சீருடையினை அணிந்துள்ளதை நோக்குக.' --> சோதியா படையணியின் படையணிச் சீருடை: இச்சீருடையானது ஓயாத அலைகள் மூன்றிலிருந்து விடுதலைப்புலிகளால் இறுதிவரை அணியப்பட்டது ஆகும். இச்சீருடையானது ஒரு விதமான பச்சை நிறத்தில் இருந்தது. 'வட போர்முனையில் சோதியா படையணியினர் இச்சீருடை அணிந்து கனவகை இயந்திரச் சுடுகலன் கொண்டு சமராடுவதை நோக்குக | 2006' --> மாலதி படையணியின் படையணிச் சீருடை: இச்சீருடையானது ஓயாத அலைகள் மூன்றிலிருந்து விடுதலைப்புலிகளால் இறுதிவரை அணியப்பட்டது ஆகும். இவர்களின் மற்ற சீருடையானது கறுப்பு நிறத்தில், ஆனால் சற்று வேறுபாடான தோரணியுடன் (சீருடையில் ஒருவிதமான வெளுறிய வெள்ளை - இக்கறுப்போடு இசைந்து போன நிறம் போன்று, கோடுகள் காணப்பட்டது ) காணப்பட்டது. ஆனால் இவர்கள் தை அணிந்து அணிநடைபோட்டதில்லை. அணிநடையின் போது வரிப்புலியே அணிந்திருந்தனர். ஆகையில் இது அலுவல்சாரில்லா சீருடை எனத் துணிபுகின்றேன். இதை அணிந்து இவர்கள் சமர்க்களத்திலும் ஆடினர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் இவர்கள் இதை அணிந்து எந்தவொரு அணிநடையிலும் தோன்றியதில்லை. 'மேற்கண்ட இரு படத்திலும் இருப்பது போன்ற சீருடை அணிந்தோர் இப்படத்திலும் உள்ளதைக் காண்க' '2008 இல் சமர்க்களத்தில் அமர்ந்து உணவுண்ணும் பெண் போராளிகள் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக' ஓ.அ-3இல் இத்தாவில் பெட்டியினுள் மகளீர் படையணிகளின் கட்டளையாளர்கள் மற்றும் தாக்குதல் கட்டளையாளர்களுடனான கலந்துரையாடலின் போது பிரிகேடியர் பால்ராயர் தவிர்த்து அனைவரும் தவிபு சீருடையில் நிற்கின்றனர். மாலதி படையணி மற்றும் சோதியா படையணி சிறப்புக் கட்டளையாளர்களான பிரிகேடியர் துர்க்கா மற்றும் பிரிகேடியர் விதுசா ஆகியோர் நான் குறிப்பிட்டுள்ள தத்தமது படையணியின் இன்னொரு விதமான சீருடையினை அணிந்துள்ளதை நோக்குக.' --> இம்ரான் பாண்டியன் படையணியின் படையணிச் சீருடை: இது மேற்குறிப்பிடப்பட்ட மூன்று சீருடையிலுமிருந்து வேறுபட்ட விதமான கொஞ்சம் கடும் பச்சை போன்ற நிறத்தைக் கொண்டிருந்தது. - - - - → பெயர் அறியில்லா படையணி... இப்படையணியைச் சேர்ந்தவர்கள் நான் கீழே சுட்டியுள்ளது போன்ற நிறத்திலான(ஒரு விதமான கபில நிறம்) சீருடையினை அணிந்திருந்தனர். இவர்கள் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இருந்தனர். இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. 'இடது முதலாவதாக நிற்கும் மேஜர் விதுரா அவர்களும் இந்நிறத்திலான சீருடையினையே அணிந்துள்ளதை நோக்குக' 'வஞ்சகன் கருணா பிரிந்த அன்று மட்டுவில் ஒரு தமிழ் வஞ்சகன் இந்நிறத்திலான சீருடை அணிந்து நிற்பதை நோக்குக.' 'மே 28, 2003 அன்று திருமலையில் இருந்த சூனியக் கோட்டத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம் | நான் அம்புக்குறியால் சுட்டியுள்ளவர் அந்நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக' 'மே 28, 2003 அன்று திருமலையில் இருந்த சூனியக் கோட்டத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம் | நான் அம்புக்குறியால் சுட்டியுள்ளவர் அந்நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக' 5. விடுதலைப்புலிகளின் ஆய்த ஆராச்சி மற்றும் விளைவிப்புத் தொழிற்சாலைகளில் பணி புரிவோர் அணியும் சீருடை. இதை ஆண்களும் பெண்களும் அணிவர். சாம்பலும் Pink கலந்த நிறம் போன்ற நிறத்திலான சீருடை இது! 6.பெயர் தெரியா படையணி இவ்வீரர் அணிந்துள்ள சீருடையினை நோக்குக. இது ஒரு விதமான நீலத்தில் உள்ளது. ஆனால் இப்படையணியின்/பிரிவின் பெயர் எனக்கு தெரியவில்லை. இவர்கள் அணிந்த சீருடையில் (மேற்சட்டை, நீளக் காற்சட்டை) இருந்த பக்கின் தோற்றமானது வரிப்புலி பக்குப் போல எந்தவொரு வடிவமைப்பும் இல்லாது சமதளமாக இருந்தது. இச்சீருடையினை அணிந்தோரின் படிமம் முதல் தடவையாக என்ற தொலைக்காட்சியில் 2006 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. 'வவுணதீவு முன்னரங்க நிலை | சூலை 8, 2006 ' 'இது 20-12-2008 அன்று வன்னிச் சமர்க்களத்தில் வகை - 85 12.7mm சுடுகலனை இயக்கும் இரு புலிவீரர்களும் இந்நீல நிறத்திலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக' 'அதே போன்ற நீலச் சீருடை அணிந்து ஒரு புலிவீரர் (கஞ்சுகம்(vest)அணியாமல் நிற்பவர்) நிற்பதை நோக்குக. | அவருக்கு அருகில் நிற்கும் இருவரும் (கஞ்சுகத்தோடு நிற்போர்) ஊரகத் தொண்டர் சிறப்புப் படையினர் ஆவர்' - - - - 7) வேவுப்புலிகள்: இவர்கள் ரெக்கி(வேவு) எடுப்பதற்காக செல்லும் போது மட்டும் சிங்கள தரைப்படையின் உருமறைப்பு ஆடை அணிந்து, காலில் நெடுஞ்சப்பாத்து(boots) அணிந்து, தலையில் விடுதலைப்புலிகளின் சடாய்மா முக்காடு(ghilie hood) அணிந்து செல்வர். இலக்கை நெருங்கியதும் குழைகள் கட்டிச் செல்வர். சில பேர் சடாய்மா உடுப்பும்(Ghilie suit) அணிவர். மற்றும்படி இவர்களின் சீருடைஒரு வித 'Palmer Green' நிறத்திலான சீருடை ஆகும். தலையில் அதே நிறத்திலான வாளிக்கவியினை அணிந்திருப்பர். 'வேவுப்புலி வீரர்கள் சீருடையில் இலைகுழையால் உருமறைப்பு செய்தபடி அமர்ந்திருப்பதை நோக்குக.' 'சிறீலங்கா தரைப்படையின் சீருடை அணிந்து ஊடுருவிச் செல்லும் வேவுப்புலிகள் | படிமப்புரவு: நிதர்சனம்' 'தலையில் விடுதலைப்புலிகளின் உருமறைப்பு கொண்ட சடாய்மா முக்காடு உள்ளதை நோக்குக | படிமப்புரவு: நிதர்சனம்' 'இலைமய சடாய்மா உடுப்பினை அணிந்துள்ள வேவுப்புலி வீரன்' - - - - 9)படப்பிடிப்பாளர்: இச்சீருடையானது ஒற்றை நிறத்திலானது ஆகும். இது ஒரு விதமான மங்கிப்போன கபில நிறம் ஆகும். இச்சீருடையினை அணிந்து படவத்தோடு படப்பிடிப்பாளர்கள் நிற்கும் படிமங்கள் கீழ்க்கண்டதொன்றைத் தவிர்த்து வேறேதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை. 'இந்நிழற்படமானது கேணல் ராஜு அவர்களின் வீரவணக்க நிகழ்வின்போது எடுக்கப்பட்டது ஆகும். 2002' உசாத்துணை: செ.சொ.பே.மு. முற்றுமுழுதாக எனக்குக் கிடைத்த படங்களின் காலங்களை வைத்தே இவற்றைக் கணித்து எழுதியுள்ளேன். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  4. மிக்க நன்றி அண்ணா!! நான் Acaiயை போட்டதால் எங்கள் ஊர் நாவற்பழம் பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.🙂 நீங்கள் கூறியது போல Acai அதிகவிலைதான்.. once in a blue moon விலையை குறைக்கும் பொழுது வாங்க நினைப்பதுண்டு.. அதே போல இவற்றின் பயன்களில் மென்மையான சருமம், உடல்நிறை குறைக்க உதவும் போன்ற சிலவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் பொதுவாக மற்றைய பழங்களை விட இனிப்பு சுவை மிக மிக குறைவு.. இவை பனை குடும்பத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் பெரும்பாலும் அமேசன் காடுகளை அண்டிய பிரதேசங்களில்தான் வளர்க்கப்படுகின்றன.. சதுப்பு நிலங்கள, floodplains ..இப்படியான இடங்கள். அத்துடன் இவை மரத்திலிருந்து ஆய்ந்து ஒன்றிரண்டு நாட்களுக்கு இலகுவில் பழுதாகிவிடுவதால் பழமாக ஏற்றுமதி செய்ய இயலாது என அறியமுடிந்தது.. அவுஸ்ரேலியாவில் இன்னமும் இவை வளர்க்கப்படவில்லை.. ஆனால் இவற்றின் விதைகள் online மூலம் வாங்கலாம், ஆனால் இணையவன் அண்ணா கூறியது போல அதன் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை🙂 Blackberry, Raspberryயை மறந்துவிட்டீர்களே💁🏻‍♀️
  5. சென்னையும் அழகுதான் - போரூர் .
  6. பதினாறும் நிறயாத பருவ மங்கை Yanai Paagan T. M. Soundararajan K. V. Mahadevan பதினாறும் நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை பதினாறும் நிறையாத பருவ மங்கை
  7. விவேக் மாதிரி இருக்கு.
  8. புலிகளாலும் தமிழ் மக்களாலும் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை முயற்சிகள் சித்திரை 2003 இல் புலிகள் பேச்சுவார்த்திகளிலிருந்து வெளியேறியதன் பின்னர், அரசுக்கெதிரான பிரச்சார நடவடிக்கைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தன. அரசாங்கத்தின் தூதுவரலாயங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கெதிராகவும் புலிகளுக்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை சர்வதேசத்துடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலமும், புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த பரப்புரைகள் மூலமும் புலிகளும் மக்களும் மழுங்கடித்து வந்தனர். புலிகளின் பரப்புரையின் வெற்றியாக இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் போராட்ட அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட சட்டரீதியான அழுத்தங்களை புலிகள் தொடர்பில் தளர்த்தவும் சர்வதேசம் தலைப்பட்டிருந்தது. புலிகள் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்குப் பயணிக்கவும், சர்வதேச ராஜதந்திரிகளைச் சந்தித்து தமது பக்க நியாயங்களைக் கூறவும் அனுமதியளிக்கப்படும்வரை தமது பிரச்சார உத்திகள் வெற்றியளிக்கப்போவதில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்துகொண்டது. புலிகளின் இந்த வெற்றிகரமான சர்வதேச பரப்புரைகளை முறியடிக்க அரசாங்கம் இருவகையான நகர்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்தது. 1. கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்குப் புலிகள் பயணிப்பதற்கான பயண ஒழுங்குகளில் தடைகளை ஏற்படுத்துவது. இதன்மூலம் கொழும்பினூடாக வெளிநாடு செல்லும் புலிகளைத் தடுப்பது. 2. புலிகளை சர்வதேசத்தில் வேண்டப்படாதவர்கள் எனும் நிலையினை உருவாக்கும் வகையில் தனது பிரச்சார உத்திகளை புதிப்பித்தல். இதில் முதலவாது இலக்கினை அடைய கிளிநொச்சிக்கும் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான உலங்குவானூர்தி வசதியினை அரசு மறுக்கத் தொடங்கியது. சர்வதேச மத்தியஸ்த்தர்களின் அழுத்தத்தினால் வேண்டாவெறுப்பாக சில நேரங்களில் இந்த பயண ஒழுங்குகளைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. ஆனால், அண்மையில் புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட சில மோதல்களையடுத்து புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தை அணி வெளிநாடு செல்லும் பயண ஒழுங்குகளை அடியோடு துண்டித்துக்கொண்ட அரசு, தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கூடாக புலிகளின் போராளிகள் பயணிப்பதையும் தடுத்து விட்டது. இரண்டாவது இலக்கினை அடைய சர்வதேசத்தில், குறிப்பாக மேற்குலகில் புலிகளைத் தடைசெய்வதன் மூலம் அந்நாடுகளில் புலிகளோ அல்லது தமிழர்களோ அரசுக்கெதிராகவும், தமது பக்க நியாயத்தினை முன்வைத்தும் செய்யும் பரப்புரைகளை தடுத்து நிறுத்துவது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாளிலிருந்தே இதற்கான முஸ்த்தீபுகளை அரசு எடுத்து வந்தாலும் முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமரின் கொலையோடு இது முனைப்புப் பெற்றது. இலங்கை அரசு சார்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட ஜயந்த தனபால அவர்களின் கடுமையான பிரச்சாரத்தினாலும், அழுத்தத்தினாலும் புலிகளின் சர்வதேச பயணங்களுக்குத் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டது. அதேபோல இலங்கைக்குள்ளும் நோர்வேயின் சமாதானக் குழுவினர் தவிர்ந்த ஏனைய சர்வதேச ராஜதந்திரிகள் கிளிநொச்சிக்குச் செல்வதற்கு இலங்கையரசாங்கம் தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல், கிளிநொச்சிக்குப் போக எத்தனித்த வெளிநாட்டவர்கள் அனைவரும் அரச அனுமதியுடனேயே செல்லமுடியும் எனும் கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது. இந்த நடவடிக்கைகள் அனைத்துமே புலிகளைத் தனிமைப்படுத்த உதவியிருந்தன. அரசாங்கமும், சர்வதேச சமூகமும் புலிகள் மீதான தடைகளை மாறி மாறி விதித்துக்கொண்டு வந்த வேளையில், இத்தடைகளினால் கட்டுப்படாத பரராஜசிங்கம் போன்றவர்கள் புலிகளின் தலைவர்களால் செல்லமுடியாது போன சர்வதேச மேடைகளுக்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தமது பக்க நியாயங்கள் குறித்தும் தொடர்ச்சியாகப் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர். கனடா நாட்டிற்கு அவர் செல்ல எடுத்த முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்த நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ஏனைய மேற்குலக நாடுகளுக்குச் சென்று பரப்புரைகளை மேற்கொண்டே வந்தார். பரராஜசிங்கம் போன்றவர்கள், சுயமாக சர்வதேச நாடுகளுக்குச் சென்று, தமிழரின் நியாயங்களையும், சிங்கள அரசின் அக்கிரமங்களையுன் தொடர்ச்சியாக வெளிக்கொன்டுவருவது, புலிகள் மீதான தடையின் வீரியத்தை வெகுவாகப் பாதித்துவிடும் என்று அஞ்சிய அரசாங்கம் பரராஜசிங்கத்தைக் கொல்வதன் மூலம் தமிழருக்குச் சார்பான பரப்புரைகளை நிறுத்துவதுடன், பரராஜசிங்கம் போன்ற ஏனையவர்களுக்கும் ஒரு பாடத்தினைப் புகட்ட நினைத்தது. இதனாலேயே பரராஜசிங்கம் ஆலய ஆராதனையில் ஈடுபட்டிருந்தவேளையில் அரச ஆதரவு கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  9. ஆலயப் படுகொலை நடத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் ஆக்கம் : தி நோத் ஈஸ்டேன் மந்த்லி நிருபர், தை 2006 ஆங்கிலத்திலும் தமிழிலும் திரு பரராஜசிங்கத்திற்கு இருந்த புலமையின் நிமித்தம், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விஜயம் செய்யும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துச் சந்திப்புக்களிலும், ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தவிர்க்கப்படமுடியாதவராகக் கலந்துகொண்டுவந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் தீவிர விசுவாசியாக அவர் அறியப்பட்டு வந்தது மட்டுமல்லாமல், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்கவேண்டும் என்றும் அவர் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்தார். இவ்விரண்டு காரணங்களில் இரண்டாவதான "வடக்கும் கிழக்கும் இணைந்திருத்தல்" எனும் காரணத்திற்காகவே அவரது எதிரிகள் அவரைக் கொல்லவேண்டும் என்று முடிவெடுத்ததாகக் கருதப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் நத்தார் ஆராதனையின்பொழுது மட்டக்களப்பு மரியன்னை பேராலயத்தில் அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் யாரென்பது பற்றி ஆரம்பத்தில் பல குழப்பங்கள் நிலவின. இவற்றிற்கும் மேலாக, இலங்கையரச பத்திரிக்கைகள் பரராஜசிங்கத்தின் கொலையினை புலிகளே மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டன. அண்மையில் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் கேட்டுக்கொண்ட நிலையில், பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு வாக்காளர்களை வாக்களிப்பில் பங்குகொள்ளக் கேட்டிருந்தார் என்னும் பொய்யினை தமது செய்திக்கான ஆதாரமாக அவை வெளியிட்டன. ஆனால், பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை பரராஜசிங்கத்தைக் கொன்றவர்கள் ஒன்றில் கருணா குழுவினர் அல்லது ராணுவத்தினராக இருக்கலாம் என்று நம்புகின்றனர். சிலவேளை இப்படுகொலை இவ்விரு பிரிவினரையும் கொண்ட ஒரு குழுவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பரராஜசிங்கம் அவர்கள், கிழக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு முழுமையான ஆதரவினை வழங்கியவர். கிழக்கு மக்களை "வடக்கு எதேச்சாதிகாரத்திற்கு" எதிராக தான் ஒன்றுதிரட்டுவதாக கருணா கூறிவந்த நிலையில், பரராஜசிங்கமோ தொடர்ந்தும் புலிகளின் தலைமைக்கு தனது விசுவாசத்தினையும் காட்டி வந்தார். பரராஜசிங்கத்தின் படுகொலையின் மூலம் கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்திருந்த ஏனைய சில தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் பார்க்கப்படமுடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதைவிடவும் இன்னும் இரு காரணங்களுக்காக கருணாவும், அவரை இயக்குவிக்கும் அரசாங்கமும் பரராஜசிங்கம் கொல்லப்படவேண்டும் என்று விரும்பியதாகக் கருதப்படுகிறது. 2004 சித்திரை பொதுதேர்தல்களுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம்பெற்று வருவதாகக் கணிக்கப்பட்டதுடன், புலிகளினால் சமாதானப் பேச்சுக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் பல்வேறுபட்ட அரசியல் தலங்கலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி புலிகளால் களமிறக்கப்படும் சாத்தியம் தோன்றியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யக்கூடிய செயற்பாடுகளாக பாராளுமன்றத்தில் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்திய அரசியல் முன்னெடுப்புக்கள். இலங்கையின் தெற்கை மையமாகக் கொண்டியங்கும் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்புகள், இலங்கையினுள்ளும், வெளியேயும் தமிழ் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திகளை வெளிக்கொண்டுவருதல் ஆகியவை அடங்கியிருந்தன. ஆக, இதனடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேச மயப்படுத்துதலில் முன்னின்று செயற்பட்டு வந்தவர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். கூட்டமைப்பின் மிக மூத்த உறுப்பினராக அவர் இருந்தாலும்கூட, கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு, புலிகளின் தலைமைக்கு மிகவும் விசுவாசமாக அவர் இருந்தமையினால் அவர் மற்றைய உறுப்பினர்களைக் காட்டிலும் தனித்தன்மையுடையவராக விளங்கினார். மட்டக்களப்பை மையப்படுத்திய கருணாவின் ஆதரவாளர்களால் கூறப்பட்டு வந்த "வடக்கின் மேலாதிக்கத்திற்கு எதிராக செயற்படுதல்" எனும் வாதத்தினை பரராஜசிங்கம் பல அரசியல் தளங்களில் கடுமையாக விமர்சித்து வலுவற்றதாக்கி வந்தார். பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்பொழுதே, முதலில் ஐக்கிய தேசியக் கட்சியும் பின்னர் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசும் சர்வதேச வலைப்பின்னல் ஒன்றுக்குள் புலிகளை முடக்கி, சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் எனும் பட்டத்தையும், சர்வதேசத் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை உணர்ந்துகொண்ட புலிகளும், தமிழ் மக்களும் இந்த நாசகார நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கத் தலைப்பட்டனர். பேச்சுவார்த்தைக் காலத்தினைப் பாவித்து தம்மை சர்வதேசத்தில் தனிமைப்படுத்த சிங்களம் எடுத்துவந்த முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலேயே சர்வதேசத்திற்கு தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கக் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முழுமையாக உபயோகிக்கத் தொடங்கினர். புலிகளினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அயராத இந்த முயற்சியினாலேயே சர்வதேசத்தில் சிங்கள அரசாங்கம் செய்துவந்த தமிழருக்கெதிரான பலமான பரப்புரைகளின் முனை மழுங்கடிக்கப்பட்டு, இருபக்க நியாயங்களையும் சர்வதேசம் செவிமடுக்கும் நிலை உருவாக்கப்பட்டது. போர்நிறுத்த மீறல்கள், வடக்குக் கிழக்கின் ராணுவப் பிரசன்னம் , உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து விலகப்போவதில்லை என்கிற அரசின் பிடிவாதம், அரசியல் ரீதியிலான அழுத்தங்கள், சுனாமி நிவாரணத்தில் பாகுபாடு என்று பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக சர்வதேசத்திற்கு தமிழர் தரப்பின் நியாயங்களை புலிகளும் கூட்டமைப்பும் முன்வைத்து வந்தன. இவ்வாறான தொடர்ச்சியான பரப்புரைகளினூடாக தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்தான் என்கிற நிலைப்பாடும் சர்வதேசத்தில் மெது மெதுவாக உருப்பெறத் தொடங்கியிருந்தது. பரராஜசிங்கம் அவர்களின் இரு மொழிப்புலமையும், சரளமான பேச்சும் அவரை பல சர்வதேச ராஜதந்திரிகள் சந்தித்துக் கலந்தாலோசிக்கவும், சர்வதேச தூதரக அதிகாரிகள் சந்திக்கவும் ஏதுவாக்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளில் புலிகளாலும், புலம்பெயர் தமிழர்களாலும் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கலந்துகொண்டு தமிழர் தரப்பின் நியாயங்களையும், அரச பிரச்சாரத்திற்கெதிரான பதிலையும் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்தார்.
  10. பகிர்விற்கு நன்றி பிரபா. Acai விலை அதிகமாக இருப்பதால் போலியான உணவுகளும் உலாவுவதாகச் சொல்லப்படுகிறது. இதிலுள்ள Antioxidants தொடர்பான சில மாற்றுக் கருத்துக்களும் உள்ளன. Acai, Blueberry போன்றவை எங்கள் ஊர் நாவற்பழ வடிவில் இருப்பதால் அதிலும் அதிக Antioxidants இருக்கலாம் என்று தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். நாவற்பழம் Super Food வரிசையில் வராவிட்டாலும் இதன் தரவுகள் யாருக்காவது பயனுள்ளதாக இருக்கலாமென்பதால் இணைக்கிறேன். Jambul Fruit - Nutritional value per 100 g Thiamine (B1) (2%) 0.019 mg Riboflavin (B2) (1%) 0.009 mg Niacin (B3) (2%) 0.245 mg Vitamin B6 (3%) 0.038 mg Vitamin C (14%) 11.85 mg Trace metals Calcium (1%) 11.65 mg Iron (11%) 1.41 mg Magnesium (10%) 35 mg Phosphorus (2%) 15.6 mg Potassium (1%) 55 mg Sodium (2%) 26.2 mg மேலும் தகவல்களுக்கு : https://www.netmeds.com/health-library/post/jamun-medicinal-uses-therapeutic-benefits-for-skin-diabetes-and-supplements
  11. கருணா இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த நாடகம் தொடர்பாக இலங்கையரசோ அல்லது பிரித்தானிய அரசோ சொல்லும் நாடகபாணியிலான விளக்கங்களை அபடியே நம்புமளவிற்கு தமிழர்கள் ஒன்றும் மூடர்கள் கிடையாது. ஆனாலும்கூட, தமிழர்களின் "அரசுகளை நம்பி ஏமாறும் " தன்மையே இவ்வாறான புரட்டுக்களை அவர்கள் நம்பும் நிலைமைக்கு இட்டுச் செல்கிறது. தம்மை ஒடுக்கிவரும் சிங்கள அரசும், அதற்குத் துணைபோகும் முன்னாள் ஆக்கிரமிப்பு இங்கிலாந்து அரசும் இந்நாடகம் தொடர்பாக செய்திச்சேவைகளில் வெளியிட்டுவரும் செய்திகளை அப்படியே நம்பும் அளவில் பெரும்பாலான தமிழர்கள் இருப்பதும், இச்செய்திகளின் நம்பகத்தன்மைபற்றி கேள்வியெழுப்பாமலேயே அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஒரு சசாபக்கேடுதான். கருணா விடயத்தில் பிரித்தானிய - இலங்கை அரசுகள் ஆடிய நாடகமும், அதனை தமிழர்கள் நம்பிய விதமும் தமிழர்களுக்குப் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை அன்று அவர்கள் உணரவில்ல என்பதையே காட்டுகின்றது. தமிழர்களை முட்டாள்களாக்கி, அவர்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளரை இலக்குவைத்துக் கொல்லும் நடவடிக்கை உட்பட பல நாசகார செயற்பாடுகளுக்காகவே கருணா லண்டனுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார் என்பது தமிழருக்கு அன்று தெரியாமல்ப் போய்விட்டது. ஆனால், புலிகளை நன்கு அறிந்துகொண்ட பலருக்கு, செய்மதி தொழிநுட்பத்தினைப்பாவித்து இலக்குவைக்கும் செயற்பாடுகளை முறியடிக்கும் செயற்பாடுகளை புலிகள் நிச்சயமாகத் தமது தளப்பகுதிகளில் ஆரம்பித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்கும். இதன் ஒருபடியாக, புலிகள் தமது உயர் தளபதிகளின் பெயர்களைத் தொலைத் தொடர்புகளின்போது பாவிப்பதனை நிறுத்திவிட்டார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. கருணாவின் பிரித்தானிய நாடகத்தில் இன்னொரு பாகமும் இருக்கிறது. அதாவது, ஏற்படப்போகும் போரில், புலிகள் வென்று, தனியீழத்தினைப் பிரகடணம் செய்யும் நிலை உருவானால், கருணாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அவருக்கெதிரான மனிதவுரிமை மீறல்களைத் தாக்கல் செய்வதென்றும், அவ்வழக்கில் தோன்றும் கருணா, தனது வாதமாக புலிகளின் தலைமையினால் நிகழ்த்தப்பட்டதாகப் பட்டியலிடும் மனிதவுரிமை மீறல்களைக் கொண்டு புலிகளின் தலைமையினை இலக்குவைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடலாம் என்பது. புதிதாக பிறக்கும் தமிழரின் நாட்டின் தலைமை மீதான சர்வதேசத்து பிடிவிராந்து என்பதை இந்திய ஹிந்து முதற்கொண்டு பல சர்வதேச பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்யும் என்பதும் , இதன்மூலம், ஐ நா வின் படையொன்றின் தமிழர் பகுதிமீதான கட்டாய பிரசன்னம் தமிழருக்கு நிச்சயம் சாதகாமனாதாக இருக்காதென்பதும் இத்திட்டத்தின் இன்னொரு அங்கமாக இருக்கலாம். போர்க்குற்ரவாளிகளின் அரசின் நாசகார செயற்திட்டத்திற்கான தனது ஆசீரினை இன்று வழங்கிவரும் ஐ நாவின், "கருணாவை சர்வதேச நீதிமன்றில் ஏற்றும்" நாடகத்திற்கு அப்பாவித்தமிழர்களின் ஆதரவும் நிச்சயம் இருக்கும். தான் அங்கத்துவம் வகிக்க விரும்பாத சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் தம்முடன் ஒத்துழைக்காத மக்கள் தலைவர்களை தண்டித்துவரும் போலி மனிதவுரிமைவாதிகளான அமெரிக்க - பிரித்தானியர்களின் உண்மையான மனிதநேயம் எபது நகைப்பிற்கிடமானது. தமிழர்களைப் பொறுத்தவரை கருணாவின் பிரித்தானிய நாடகத்தினை தமக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்ப்பதைவிடுத்து, அதனைத் தமது புறங்கையினால் தட்டிவிட்டு கடந்துசெல்வதே சரியானதாக இருக்கும். முற்றும் https://www.sangam.org/2008/01/High_Definition.php?uid=2719 சரியாகத்தான் கஸ்ட்டப்படுகிறீர்கள் போலத் தெரிகிறது. தொடர்ந்து முயலுங்கள்.
  12. தொழிநுட்பம் குன்றிய செய்மதியூடான ஒளிப்படங்கள் தரையில் பயணிக்கும் வாகனங்களைத் துல்லியமாகப் படம்பிடிக்க முடியும் என்றால், இன்றிருக்கும் அதி தெளிவுகொண்ட செய்மதிகளினால் எடுக்கப்படும் படங்களின் தெளிவுபற்றி நாம் சந்தேகப்படத் தேவையில்லை. பலம்பொருந்திய நாடுகளின் பாதுகாப்பு உளவுத்துறைகளில் செய்மதியூடான ஒளிப்படங்களின் பாவனையென்பது பாரிய பங்கினைச் செலுத்திவருகிறது என்றால் அது மிகையில்லை. அமெரிக்கா தனது பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கிவரும் வருடாந்த செலவீனத்தில் 43 பில்லியன் டாலர்களை அதிதொழிநுட்ப செய்மதி உளவுக்காக ஒதுக்கியிருப்பதுடன், இதற்கென்று தனியான படையமைப்பினையும் இயக்கிவருகிறது. ஆனால், இதிலுள்ள பலவீனம் என்னவென்றால், எதிரிகள்கூட இந்த தொழிநுட்பத்தினை பாவிக்கமுடியும் என்பதுதான். இதற்காக பலநாடுகள் எதிரிகளின் செய்மதிகளைக் குருடாக்குவதற்காக லேசர் கதிர்களை பாய்ச்சிவருகிறார்கள். மிக அண்மையில் சீனா பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளை அழிக்கும் ஏவுகனையொன்றினை வெற்றிகரமாக ஏவியதும் இங்கு குறிப்பிடத் தக்கது. தமிழ்ச்செல்வனின் படுகொலையினை நாம் நோக்கினால், தமிழ்ச்செல்வன் உபயோகிக்கும் அவரது கைத்தடியினை துல்லியமாக இனங்கண்டு கொள்ளும் எந்தவொரு செய்மதியும், அவரை இலக்காக்கியிருக்கலாம் என்பது திண்ணம். அதுமட்டுமல்லாமல் தமிழ்ச்செல்வன் வழமையாக ஏனைய அதிகாரிகளைச் சந்திக்கும் அவரது வாசஸ்த்தலத்தின் அமைவிடம் கூட பரம ரகசியம் கிடையாது. தமிழ்ச்செல்வன் பாவித்துவந்த அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தினை அமெரிக்க செய்மதியூடான புலநாய்வுத்துறையோ, அல்லது பிரித்தானிய புலநாய்வுத்துறையின் செய்மதிப் பிரிவோ அல்லது இந்தியாவினால் அண்மையில் உருவாக்கப்பட்ட செய்மதி உளவுப்பிரிவான ஐ ஆர் எஸ் பிரிவோ தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்திருக்கலாம் என்று தற்போது தெரியவந்திருக்கிறது. இவற்றிற்கு மேலாக தமிழ்ச்செல்வன் தான் கொல்லப்படும் தருணத்திற்குச் சற்று முன்னர் செய்மதியூடான தொலைத்தொடர்பிற்காக அவர் பாவிக்கும் தொலைபேசியினை உபயோகப்படுத்தியிருந்தால் அதுகூட நிச்சயமாக அவரை இலக்காக மாற்ற உதவியிருக்கலாம். ஆனால், இந்த உயர் தொழிநுட்பங்கள் எல்லாம், செல்வனின் இருப்பிடத்தை அவதானிக்கவும், அவர் அருகில் இருக்கும்போது இலக்குவைக்கவுமே உதவக்கூடியவை என்பதும் தெளிவானவது. அதற்குமேல் இவற்றால் கிடைக்கக் கூடிய பயன்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. குறிப்பிட்ட ஒரு மனிதரின் இருப்பிடம், அவர் அப்பகுதிக்கு வரும் நேரம் என்பன அவ்விடத்தினை மிகவும் துல்லியமாக அறிந்துவைத்திருக்கும் ஒருவரினால் மட்டுமே அடையாளம் காட்டமுடியும் . இங்கிருந்துதான் கருணாவின் பங்களிப்பு இப்படுகொலையில் உள்நுழைந்திருக்கிறது. பிரித்தானியாவிற்கு போலியான கடவுச் சீட்டுடன் சென்றிறங்கிய கருணாவை வெறுமனே தடுத்துவைத்து, அவரின் மனிதவுரிமைகளை விசாரிக்க விரும்பாத பிரித்தானிய அரசு, கருணாவை பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திவைத்திருந்த 9 மாதகாலப் பகுதியில் புலிகளின் உள்வீட்டு ரகசியங்களை நிச்சயமாக அறிந்திருக்கும் என்பது திண்ணம். இந்த 9 மாத காலப்பகுதியில் நான் எல்லோரும் நினைத்திருந்த "பிரித்தானியாவின் கைதி"என்பதைவிடவும் "பிரித்தானிய உளவுத்துறையின் செயற்ப்பாட்டாளர் கருணா" என்பதே அவருக்குப் பொருத்தமான பெயராக இருந்திருக்கும். அவருக்கு வழங்கப்பட்ட உடனடிப் பணியாக புலிகளின் பிரமுகர்களின் முக்கிய வாசஸ்த்தலங்கள், கூடும் இடங்கள், தங்குமிடங்கள் ஆகியவற்றினைப் பட்டியலிடுதல் அமைந்திருக்கிறது. இவ்வாறு கருணாவிடமிருந்து பெறப்பட்ட மிக முக்கியமான புலிகள் பற்றீய ரகசியத் தகவல்கள் பிரித்தானிய அரசினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியது. பிரித்தானியாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகளினால் நடத்தப்பட்ட கீனி மீனி கூலிப்படைகளின் இலங்கை ராணுவத்திற்கான உதவிகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவருக்கு, கருணாவைப் பாவித்து பிரித்தானியா இலங்கைக்கு உதவியதென்பதை புரிந்துகொள்வது கடிணமாக இருக்கப்போவதில்லை.
  13. தமிழ்ச்செல்வனின் படுகொலையில் கருணாவின் பங்கு மூலம் : அமெரிக்க இலங்கைத் தமிழர் ஒன்றியம் தம்மீதான இனக்கொலையினை முளையிலிருந்தே அனுபவித்துவரும் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதத்தின் உளவுத்துறையின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் பற்றிச் சிறிதளவேனும் சந்தேகம் இருக்கப்போவதில்லையென்பது திண்ணம். ஆகவே அவர்களின் மனதில் இன்று இருக்கும் ஒரே கேள்வி, "இவ்வளவு கையாலாகாத்தனமான சிங்கள உளவுத்துறையினால் தமிழ்ச்செல்வனின் இடத்தினைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது எப்படி?" என்பதுதான். இதற்கான பதில் அமெரிக்க, பிரித்தானிய, இந்திய செய்மதிகளினால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுகொண்ட ஒளிப்படங்கள் சிங்கள விமானப்படைக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கிறது. தமிழ்ச்செல்வனின் படுகொலை தமிழர்களின் அரசியல்த்துறைப்பொறுப்பாளரின் படுகொலை என்பது இலங்கையின் பல்வேறு தரப்பினரிடையேயும் வேறுபாடான உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனது முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தில் கிடைத்த வெற்றிக்கு நிகராக கொழும்பில் சிங்கள அரசும், சாதாரண சிங்களர்களும் தமிழ்ச்செல்வனின் படுகொலையினைக் கொண்டாடுகிறார்கள். சில பிராமணர்களைத் தவிர மொத்தத் தமிழினமுமே தமிழ்ச்செல்வனின் படுகொலைக்காக இரங்கி அழுகிறது. ஆனால், இருபக்க உணர்வுகள் எப்படியானவையாக இருந்தாலும்கூட, இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டுவரும் பல நடுநிலையாளர்களைப் பொறுத்தவரை செல்வனின் படுகொலையென்பது சமாதான முயற்சிகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிக்கப் பெரியது என்பது தெளிவு. இப்படுகொலையின் பின்னர் சமாதான முயற்சிகள் எவ்வழியில் பயணிக்கப்போகின்றன எனும் ஐயம் தமிழர்களை மட்டுமல்லாமல் சிங்களவர்களையும் ஆட்கொண்டிருப்பது தெரிகிறது. உடனடி அதிர்ச்சியிலிருந்தும், தாங்கொணாத் துயரிலிருந்தும் தன்னைச் சிறுகச் சிறுக விடுவித்துக்கொண்டு சுதாரித்துவரும் தமிழினத்தின் மனதில் எழுந்துவரும் ஒரு கேள்வியென்னவென்றால், தமிழ்ச் செல்வனைப் படுகொலை செய்யுமுன்னர் அவரது ரகசிய வாசஸ்த்தலத்தினை சிங்கள விமானப்படை அறிந்துகொண்டது எவ்வாறு என்பதுதான். தமிழ்ச் செல்வனின் படுகொலையினை பாரிய வெற்றியாகக் கொண்டாடிவரும் சிங்கள அரசியல்வாதிகள் அவ்வப்போது வெளியிட்டுவரும் அறிக்கைகளைப் பார்க்கும்போது நிச்சயமாக இந்த படுகொலை நடவடிக்கையில் வெளிநாட்டு உதவிகள் அவர்களுக்குக் கிடைத்திருப்பதைக் காட்டுகின்றது. தமிழரின் போராட்டங்களை ஒத்த சுதந்திரப் போராட்டங்களின் சரித்திரத்தினைப் பார்க்கும்போது மனிதநேயத்திற்குப் புறம்பான, அப்பாவிகளின் அவலங்களை தமது வெளியுறவுக்கொள்கையின் பலன்களுக்காகப் பாவித்துவரும் அமெரிக்க பிரித்தானிய ராஜதந்திரங்களின் கைவண்ணம் இப்படுகொலையிலும் இருப்பது புலனாவதுடன், இந்தியாவின் ஆசீரும், தொழிநுட்ப உதவியும் இப்படுகொலையில் பங்குகொண்டிருப்பதும் தெரிகிரது. சந்திரிக்கா குமாரதுங்க அதிபராக இருந்த காலத்தில் புலிகளின் கட்டுமானங்கள் பற்றியும், அவை நீண்டகால அடிப்படையில் இலங்கையின் பாதுகாப்பிற்கு விளைவிக்கக் கூடிய ஆபத்துக்கள் குறித்தும் அமெரிக்காவின் கொழும்புத் தூதரகம் தொடர்ச்சியான எச்சரிக்கைகளையும், பாதுகாப்பு அறிக்கைகளையும் வெளியிட்டுவந்தது பலருக்கும் நினவிலிருக்கலாம். இவ்வாறான பல பாதுகாப்பு அறிக்கைகளில் அமெரிக்கா புலிகள் தொடர்பான பல உயர் தெளிவுகொண்ட செய்மதிப் படங்களினூடாக சேகரித்த தகவல்களையே இலங்கை அரசுக்கு வழங்கி வந்திருந்தது. அக்காலப்பகுதியில் அமெரிக்காவினால் எடுக்கப்பட்ட செய்மதிப் புகைப்படங்கள் தரையில், கூட்டமாகவும், தனியாகவும் நடமாடும் மனிதர்களைத் துல்லியமாக இனங்காணும் ஆற்றலினை அன்றே பெற்றிருந்ததாக அறியமுடிகிறது. ஆனால், இன்றோ நிலைமை வேறு. இன்றிருக்கும் செய்மதிப் புகைப்படக் கருவிகள் தரையில் நடமாடும் ஒருவரை மிகவும் துல்லியமாக அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர் கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் வகை மற்றும் அதில் காணப்படும் நேரம் முதற்கொண்டு பல நுண்ணிய தகவல்களை படம்பிடிக்கும் ஆற்றலினைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத் தகது. அண்மையில் கூகிள் நிறுவனத்திற்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான செய்மதிப் புகைப்பட சிக்கலொன்றில், கூகிள் நிறுவனம் பாவிக்க எத்தனித்த, அமெரிக்க அரசின் செய்மதி ஒளிப்படத் தரத்தினை மிஞ்சும் உயர் தெளிவுகொண்ட புகைப்படங்களை அனுமதிப்பதில்லையென்று அமெரிக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது. இதுதொடர்பாக கருத்துவெளிட்ட அமெரிக்காவின் தேசிய செய்மதிமூல புலநாய்வுத்துறையின் தளபதி வைஸ் அட்மிரல் ரொபெட் முர்ரெட், அதி தெளிவுகொண்ட செய்மதி ஒளிப்படங்கள் இணையத்தில் பரவுவதை முற்றாகத் தடைசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத் தக்கது. இதன் விளைவாகவே நாம் இன்றிருக்கும் கூகிளின் தெளிவு குறைந்த செய்மதி ஒளிப்படங்களைக் காணவேண்டியேற்பட்டிருக்கிறது. 1999 ஆம் ஆண்டு ஒளிப்படங்களை எடுக்கவென விண்ணிற்கு அனுப்பப்பட்ட செய்மதியான இகோனோஸ் - 2 எனும் செய்மதியூடாகக் கிடைக்கும் தரங்குன்றிய ஒளிப்படங்களே இன்றுவரை எமக்குக் கிடைத்து வருகின்றன.
  14. ஒருக்கா ஒரு பொடியன் சண்டை கட்டம் வரேக்க எழுப்பி விடு எண்டு பக்கத்த இருந்த பொடியனிட்ட சொல்லீட்டு நித்திரையாபோனான்.. அவன்ர குஞ்சில சணல் நூல கட்டி பக்கத்துல இருந்த தேமாவில சணலின்ர மற்றபக்கத்தை நல்லா இழுத்து கட்டி விட்டுட்டு சண்டை வந்திட்டு எழும்புடா எண்டு கத்தி எழுப்பி அவனுக்கு சூ அறுந்துபோகப்பாத்திச்சு.. 😅 ஓம் பூவரசம் நெட்டும் சொன்ன சாமான்..
  15. காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.." கலெக்டர் தலை குனிந்தார்... நமது அப்பனும் பாட்டனும் இந்த நல்ல மனிதரைத் தோற் கடித்த பாவத்துக்கு தான் நாம் இப்போது இந்த பாவிகளிடம் சிக்கிச் சீரழிகிறோம் ( முன்னோர் செய்த பாவம் பிள்ளைகளைத் தானே சேரும்)?
  16. நாம் இருக்கும் இடங்களில் சுனாமியாவது சுண்டைக்காயாவது என எள்ளி நகையாடியவர்களின் வாயில் மண்ணை போட்டது அண்மையில் நடந்த ஜேர்மனி இயற்கை அழிவுகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.