Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    16477
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46818
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/05/21 in all areas

  1. அன்பின் ஸ்பரிசத்தில் தன் பசி மறந்தாள்.👌
  2. உண்மைதான்.... ஆண்ரிகளைப் பிடித்தால் அதற்கான காரணமும் புதிது புதிதாய் வரும்.....அத்தான்காரன் நேர வந்து அடிப்பானோ அல்லது ஒழிச்சு நின்று இருட்டடி தருவானா எதையென்று நினைப்பது......! 😁
  3. விலெஜ் இஞ்சினியர் தயாரிப்பு..💪🏽
  4. அண்ணை, அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களை தாங்களே முன்னின்று கொன்றும், கொல்லவும் உதவியதை எப்படி ஏற்றுக்கொள்வது? குடும்பிமலை (தொப்பிகல) பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தளத்தை அழிப்பதற்கு கருணாவே முதலில் தனது போராளிகளை தயார்ப்படுத்தி வந்தார். ஆனால், பிள்ளையான் இடையில் முறித்துக்கொண்டு ஓட, வெறும் 300 சிறுவர்களை மட்டுமே வைத்துக்கொண்டிருந்த கருணாவால் புலிகளின் தளத்தைக் கைப்பற்ற முடியாது என்று உணர்ந்த ராணுவம் அத்தாக்குதல் திட்டத்தினை பிள்ளையானிடமே வழங்கியிருந்தது. ஆனால், தன்னிடமே அந்தத் தாக்குதல் திட்டம் தரப்படவேண்டும் என்று கருணா மங்களன், இனியபாரதி போன்றவர்களை தூதுக்கு மேல் தூதாக அனுப்பி ராணுவத்தினரிடன் இரைஞ்சியதாக ராணுவம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும்தான்.
  5. பிரபாகரன், அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் பதினெட்டுப் புலிகளோடு கொல்லப்பட்டார் - கருணா ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ் மே 20, 2009 பிரபாகரனுக்கு மிகவும் நெருங்கியவரும், பல்லாண்டுகளாக அவரால் வளர்க்கப்பட்டவரும், பின்னர் புலிகளியக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவருமான கருணா, பிரபாகரனின் மரணம் பற்றித் தெரிவிக்கும்போது, பிரபாகரனும் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் 18 மெய்ப்பாதுகாவலர்களும் இராணுவத்தால் மடக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறினார். கொல்லப்பட்டது புலிகளியக்கத் தலைவர் பிரபாகரன் தான் என்பதை அடையாளங்கண்டு உறுதிப்படுத்திய வெகு சிலரில் கருணாவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. கருணாவினால் புலிகளின் தலைமைக்கு எதிராக 2004 இல் நடத்தப்பட்ட கிளர்ச்சியே புலிகளை முற்றாகப் பலவீனப்படுத்தி அழிக்கும் நிலைக்குக் கொண்டுவந்தது குறிப்பிடத் தக்கது. புலிகளின் தலைவரின் மரணம் பற்றி மேலும் பேசிய கருணா, "புலிகள் அமைப்பு இனி ஒருபோதுமே எழுந்துவரமுடியாது, அவர்களை முற்றாக அழித்துவிட்டோம்" என்றும் கூறினார். தற்போது இலங்கை அரசாங்கத்தில் தேசிய நீர்ப்பாசண அமைச்சராகவும், நல்லிணக்க அமைச்சராகவும் இருக்கும் கருணாவுக்கு நந்திக்கடல்ப் பகுதியில் கொல்லப்பட்டுக் கிடந்ததது ஒருகாலத்தில் தனது தலைவனாகவும் ஆசானாகவும் இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் என்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லையென்று தெரிகிறது. "முன்னர் நான் பார்த்த பிரபாகரனுடன் ஒப்பிடும்பொழுது, அவர் தற்போது சற்று மெலிந்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அவர் முன்பிருந்ததைப் போலவே இருந்தார். அவரது முகம், கண்கள், என்று எல்லாமே அவர் பிரபாகரன் தான் என்பதை எனக்குச் சொல்லியது" என்று தொலைபேசியூடாக எங்களுக்கு கருணா கூறினார். "பிரபாகரனைக் கொன்ற ராணூவ வீரர்கள் ஆச்சரியப்பட்டதாக அறிந்தேன். ஏனென்றால், பிரபாகரன் தன்னைத்தானே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். பிரபாகரனை அன்று அங்கே அவர்கள் காணுவார்கள் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை" என்று கருணா கூறினார். "பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களுக்கும், ராணூவத்தினருக்குமிடையிலான சண்டை காலை 4 மணிக்கு ஆரம்பமாகியதாகத் தெரிகிறது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற கடுமையான சண்டையினையடுத்து சுமார் கால்நூற்றாண்டாக இலங்கையினை ஆட்டிப்படைத்த தீவிரவாதி முல்லைத்தீவு வாவியோரத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தார்" என்று கருணா மேலும் கூறினார். பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆளும்கட்சியின் உப தலைவராகவும் இருக்கும் கருணா பிரபாகரனின் மரணம் தொடர்பாக மேலும் கூறுகையில் பிரபாகரனின் தலையின் மேற்பாகம் முற்றாகச் சிதைந்தோ அல்லது குண்டுகளால் வெடித்துச் சிதறப்பட்டோ தெரிந்ததாகக் கூறினார். அதேவேளை, ராணுவத்தினர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனியையும் அவரின் மூத்த தளபதிகளையும் கொன்றிருந்தார்கள். இன்று பிரபலமான அரசியல்வாதியாகத் திகழும் கருணா, புலிகளின் மீளுருவாக்கத்திற்கான சாத்தியப்பட்டுகள் குறித்து நாம் வினவியபோது, "சரணடைந்த புலிகளைக் கொண்டு வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர் புலிகளை மீளுருவாக்க நினைப்பார்கள் என்பது வெறும் கனவேயன்றி வேறில்லை" என்று கூறினார். "அது சாத்தியமேயில்லை. அதற்கான சூழ்நிலையோ அல்லது அவசியமோ இனிமேல் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. மக்களுக்கு யுத்தத்தின்மேல் வெறுப்பும், அயர்ப்பும் வந்துவிட்டது. இனிமேல் புலிகள் மீள வருவார்கள் என்பதற்கு எதுவிதமான சாத்தியப்பாடுகளும் நிச்சயமாக இல்லை" என்று மிகவும் உறுதியாகவும், ஆணித்தரமாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கருணா 1983 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதியில் முழுக் கிழக்கு மாகாணத்திற்குமான புலிகளின் தளபதியாக உயர்ந்திருந்தார். பல்லாண்டுகளாக பிரபாகரனின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவராக அவர் இருந்தார். 2002 - 2003 காலப்பகுதியில் அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட கருணா, 2002 இல் கிளிநொச்சி நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்தார். பிரபாகரனின் மரணத்திற்காக பிரபாகரனையே குற்றஞ்சாட்டிய கருணா, "பிரபாகரனுக்கு யுத்தம்பற்றிய தெளிவு இருந்திருந்தால் இராணூவம் கடந்த ஆண்டு யுத்தத்தை ஆரம்பித்தபோதே தனது போராளிகளையும், பல தளபதிகளையும் வேறு இடங்களுக்கு அனுப்பிவைத்திருக்கமுடியும், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை" என்று கருணா கூறினார். "ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. இது அவரது மடைமையினையே காட்டுகிறது. மக்களின் அவலங்களைக் கண்டவுடன் சர்வதேச அசமூகம் யுத்தநிறுத்தமொன்றினை ஏற்படுத்தும் என்றும், தான் தப்பிவிடலாம் என்றும் இறுதிவரை எதிர்பார்த்திருந்தார்" என்று அவர் கூறினார். "அவர் ஒரு உண்மையான தலைவராக இருந்திருந்தால், சுதந்திரமான தனிநாட்டுக்கான போராட்டத்தை இன்னமும் கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்திருக்க மாட்டார். அது ஒருபோதுமே சாத்தியமில்லை என்பதை அவர் தெரிந்திருக்க வேண்டும். யுத்தத்தில் ஈட்டிய வெற்றிகளை அரசியல் ரீதியாக அவர் பாவித்திருந்தால் இன்று தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை". "நான் பிரபாகரனிடமும், தமிழ்ச்செல்வனிடமும் மாறிவரும் உலக ஒழுங்கினை அவதானித்து, புலிகளியக்கமும் சில மாற்றங்களை உள்வாங்கிச் செயற்படவேண்டும் என்று கூறினேன், ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டார்கள்" என்று அவர் கூறினார். "இங்கே பிரச்சினையென்னவென்றால், பிரபாகரனைச் சுற்றியிருந்த சிலர் அவரை ஏதோ பெரிய தலைவராகக் கொண்டாடத் தொடங்கியிருந்தார்கள், இதனால் அவரும் தான் பற்றிய அதீத கற்பனைகளை வளர்க்கத் தொடங்கிவிட்டார். அவரை ஒருபோதுமே தோற்கடிக்க முடியாத மாவீரனாக அவர்கள் போற்றத்தொடங்கிவிட்டார்கள். அவர்கள் கூறுவதை நம்பிய அவர் அதே சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டார்" என்று தான் இயக்கத்தில் இருந்த காலத்தில் நடந்தவைபற்றிப் பேசும்போது கருணா கூறினார். "தமிழர்களுக்கு இனியிருக்கும் ஒரே வழி ஜனநாயக ரீதியிலான அரசியல்தான். அதைவிட வேறு தெரிவுகள் அவர்களுக்கு இல்லை. எம்மிடம் பலமான பாராளுமன்றக் குழு ஒன்று இருந்திருந்தால் நாம் பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கலாம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு பிரியோசனமும் அற்றது" என்றும் அவர் மேலும் கூறினார். "90,000 தமிழர்களையும், 24,000 இற்கும் மேற்பட்ட புலிப் போராளிகளையும் 1983 ஆம் ஆண்டிலிருந்து போராட்டத்தில் பலிகொடுத்தபின்னரும் கூட தமிழினம் இன்னும் நடுரோட்டிலேயே நிற்கிறது" என்று கருணா கூறினார். "இந்தளவு இரத்தக்களறியின் பின்னரும் தமிழர்கள் கண்டது என்ன, வெறும் அழிவுகள்தானே?" என்று கருணா பதிலளித்தார். https://www.hindustantimes.com/world/prabhakaran-was-with-18-men-when-he-was-killed-karuna/story-UfaVjat36kCwDhBclaajfL.html
  6. வந்தான் பிடித்தான் சென்றான்.......! 👍
  7. மின்சாரமும் கலப்படம்தான் அதுவும் நின்று நின்றுதான் வருகுது........சந்தேகமென்றால் அது நிக்கிற நேரம் நக்கிப் பார்க்கவும்......! 😂
  8. நான் : உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் ? நண்பன் ..நான் என் மனைவியை டீ ..போட்டு (அ )டீ அழைப்பேன் ... நான் : அப்படியா ? நண்பன் : இல்ல மச்சான் டீ ( Tea ) போடட பின் அழைப்பேன் . குறும்பன் 1. சிரி ப்பு வந்தால் ...சிரிக்கலாம், குறும்பன் 2. அழுகை வந்தால் ..அழு துவிடலாம் குறும்பன் 1 : சின்ன வீடு வந்தால் ? குறும்பன் 2 :: ஹா ஹா ..குஜால் பண்ணலாம். சார் : என்னடா ? பையன் ...அடுத்த மாதம் பரீடசை யில் இல் 0 (முடடை ) போடாதீங்க சார் சார் : ஏண்டா ? பையன் : அடுத்த மாதம் புரட்டாதி சார் விரதம் பையன்: அடுத்த வா ரம் ஸ்கூல் போக மாடடேன் அம்மா : ஏண்டா கண்ணு ? பையன் நம்ம சார் ஆல் இந்தியா ரேடியோ ...போல முழு ஸ்கூல் க்கும் கேட்க சவுண்டு விடுகிறார். அம்மா : ????? என் சுய முயற்சி வந்தவர்கள் ஒரு பச்சையை போட்டு விடுங்கப்பா 😀
  9. புலிகள் அமைப்பு இனி ஒருபோதுமே எழுந்துவரமுடியாது, அவர்களை முற்றாக அழித்துவிட்டோம்" என்றும் கூறினார். இங்க கொஞ்சபேர் அவர் தங்கம் புலிகளை அவர் என்றும் காட்டிக்கொடுக்கவில்லை அவர்களுக்கெதிரான யுத்தத்தில் பங்களிக்கவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்கள்
  10. பிரபாகரன் ஒரு மனநோய் பிடித்த சர்வாதிகாரி, ஒரு துரோகி - கருணா தெரிவிப்பு செய்தி :கல்ப் நியூஸ் பத்திரிக்கை திகதி : ஐப்பசி 8, 2004 தனது பரம வைரியான புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு மதம்பிடித்த சர்வாதிகாரியென்றும், துரோகியென்றும் கருணா தெரிவித்திருக்கிறார். சுமார் ஒருவாரத்திற்கு முன்னர் புலிகளின் பிஸ்ட்டல் குழுவினரால் தனது சகோதரரான ரெஜி கொல்லப்பட்டத்தை உறுதிப்படுத்திய கருணா, தனது சகோதரர் பிரபாகரனின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராகவும், அவரது ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் போராடி வீரமரணம் எய்தியிருப்பதாக கூறினார். லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலியொன்றிற்குப் பேட்டியளித்த கருணா, தான் இன்னமும் இலங்கையிலேயே தங்கியிருப்பதாகவும், தனது சகோதரரின் மரணத்தினையடுத்து தனது ஆதரவாளர்கள் எவரும் துவண்டுபோய், பிரபாகரனுக்கெதிரான தமது எழுச்சிமிகு போராட்டத்தைக் கைவிடக் கூடாதென்றும் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமக்கு சவாலாக மற்றிவிடுவார்கள் என்கிற காரணத்தினால் கருணா குழுமீதான தமது நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்திவருவதாகத் தெரிகிறது. "பிரபாகரனின் சர்வாதிகாரத்திற்கெதிராகவும், பாஸிச வெறிக்கெதிராகவும் போராடும்படி நாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். அதனாலேயே நாம் பலத்துடனும், தீரத்துடனும் போராடி வருகிறோம். எனது சகோதரரின் இழப்பினையடுத்து நாம் பின்வாங்கிவிடப்போவதில்லை" என்று அவர் கூறினார். "நான் எனது மக்களிடம் பிரபாகரனின் பயங்கரவாதப் படைகளுக்கெதிராகப் போராட ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரபாகரனினால் செய்யப்பட்டுவரும் பாரிய படுகொலைகளையும், மனிதவினத்திற்கெதிரான குற்றங்களையும் தடுத்தி நிறுத்திட தமிழ் இளைஞர்கள் என்னுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று நான் அறைகூவல் விடுக்கிறேன்" என்றும் அவர் மேலும் கூறினார். "நிச்சயமாக பிரபாகரனினால் எமது மக்களுக்கு தேவையான தீர்வினைப் பெற்றுத்தரமுடியாது என்பது எனக்குத் தெரியும். அவரைப்பொறுத்தவரை அவரது பெயரும் புகழும் மக்களின் நலனைக் காட்டிலும் முக்கியமானது. அவர் தன்னை ஒரு பெரிய தலைவராகவும், தேசியத் தலைவராகவும் பிரகடனப்படுத்தியிருப்பதோடு, தன்னை தமிழர்கள் எல்லோரும் தமிழினத்திற்குக் கிடைத்த ஒப்பற்ற தலைவராகப் போற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தனது இனத்திலேயே பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலைசெய்துவரும் ஒரு பயங்கரவாதி தன்னை எப்படி அவ்வினத்தின் தேசியத் தலைவர் என்று உரிமை கோரமுடியும்?" என்றும் அவர் கேள்வியெழுப்பினார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான விசுவாசியாக பல்லாண்டுகள் இருந்துவந்த கருணா, புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவிலும் ராணுவத் தளபதி என்கிற என்கிற ஸ்தானத்துடனேயே பங்குகொண்டிருந்தார். ஆனால், கடந்த பங்குனி மாதம் கிழக்கு மாகாணப் போராளிகள் புலிகளால் சமமாக மதிக்கப்படுவதில்லையெனும் குற்றச்சாட்டை முன்வைத்து பிரபாகரனின் தலைமைத்துவத்தை ஏற்கமறுத்து கருணா செயற்பட ஆரம்பித்ததையடுத்து அவரும் அவரது சகபாடிகளும் புலிகளியக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். கருணா மேலும் கூறும்போது, "தமிழினத்தில் பல அரசியல்த் தலைவர்களையும், கல்விமான்களையும் கொன்றிருக்கும் பிரபாகரன் அவ்வினத்தின் தலைவர் என்று தன்னை எப்படி அழைத்துக்கொள்ளமுடியும்" என்றும் வினவினார். https://gulfnews.com/world/asia/karuna-calls-prabhakaran-a-mad-dictator-and-a-traitor-1.334990
  11. படம் : கொடிமலர்(1966) இசை : MSV பாடியவர் : PB சீனிவாஸ் வரிகள் : கண்ணதாசன்
  12. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன் ஐயா. வாழ்க நலமுடன். மற்றும் இதுவரை பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிந்திய நல் வாழ்த்துக்கள்❤️
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபர்
  15. கிருபனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்!
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ கிருபன். நோய் நொடி இன்றி நூறாண்டுகள் மேல் வாழ்க.
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் கிருபன்
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்..
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்.!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.