பொறுப்பு துறப்பு
இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள்.
நோக்கம்
யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம்.
அவர் இப்போ களத்துக்கு வருவது இல்லை என்பதால் - நான் இந்த திரியை திறக்கிறேன்.
@vasee @Kadancha @பிரபா சிதம்பரநாதன் @Elugnajiru போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கும் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் இருப்பதை உணர்த்துகிறது.
ஆகவே விடயங்களை பகிர்ந்து கொள்ளும், வினாக்களை எழுப்பும் ஒரு திரியாக இதில் நாம் ஒன்றிணைவது சாலப்பொருத்தம் என கருதி இந்த திரியை திறக்கிறேன்.
மேலே சொன்னோர் மட்டும் அல்ல இன்னும் பலர் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் உள்ளவர்கள் நிச்சயம் இருப்பீர்கள்.
ஆகவே,
பங்கு? வா பங்கு ஒரு கை பார்க்கலாம்.
பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்ட திரிகள் சில கீழே: