Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  3. நீர்வேலியான்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    538
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38777
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/06/22 in all areas

  1. "கொழும்பிற்கு வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது , மாதம் பதினைந்தாயிரம் ரூபாய்க்குள் வண்டியை ஓட்டவேண்டும். வேலைக்கு சேர்ந்த பின்னும் செலவிற்காக வீட்டில் தொங்கிக்கொண்டிருக்க முடியாது. மாமியின் வீடாக இருந்தாலும் வேண்டா விருந்தாளியாக மாறிவிடும் முன் நானாகவே வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிடுவது நல்லது....ம் பார்க்கலாம் மார்க்கஸ் என்ன சொல்கிறான் என்று" என்றவாறு மனதிற்குள் தன்னுடனேயே பேசிக்கொண்டு பாதையின் இருபுறமும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் அவன். மணிக்கட்டிலிருந்த கடிகாரமோ விநாடியை நிமிடங்களாக மாற்றிக்கொண்டிருக்க, இந்த மார்க்கஸை மட்டும் காணவில்லை. தொலைபேசியை சட்டைப்பையில் இருந்து உருவி உயிர்கொடுத்து மார்க்கஸ் எனும் பெயரை தேடி அழைப்பை ஏற்படுத்திய மறுகணமே அங்கு ......தொடரும் யாழ் 24 ம் அகவையை சிறப்பிக்கும் முகமாக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்
  2. நாங்கள் வாற வருசம் தொடக்கம் தான் ரஷ்ய காஸ்,எண்ணை,மண்ணெண்ணை ஒண்டும் வாங்கமாட்டம். அது வரைக்கும் வாங்குவம்.🤣 என்ன யோசைனையிலை உக்ரேன் சனாதிபதி ஐரோப்பிய நாடுகள் எல்லாம் உடனடியாய் ரஷ்யாவிட்ட இருந்து வாற எல்லாத்தையும் நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லுவார்? ரஷ்யாவிலை இருந்து வாற காஸ் நிண்டால் ஐரோப்பவிலை இருக்கிற பெரும்பாலான தொழிற்சாலைகள் உடனடியாக இழுத்து மூட வேண்டியதுதான். இப்ப உக்ரேனுக்கு போற ஆயுதங்கள் கூட ரஷ்ய எரிவாயுவின் உதவியினால் உருக்கி செய்யப்பட்டதே.இப்ப ஐரோப்பிய நாடுகளுக்கை தஞ்சம் புகுந்த உக்ரேன் மக்கள் கூட ரஷ்ய எரிவாயுவின் உதவியிலான வெப்பத்திலேயே நிம்மதியாக துயில் கொள்கின்றனர்.☹️
  3. சரித்திரம் - 2 சிறுவயதினில் இவனது வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவனை மடியில் தூக்கி வைத்து கொஞ்சி பாசத்தை பொழிந்த இவனது மாமியே இன்று இவனை நடத்தும் முறை அவனது மனதை பிழிந்தது. குளித்து முடிக்கமுன் பிரதான நீர்க்குழாயை மூடுவதும், இரவு 10 மணிக்குப்பின் இவனது அறைக்குரிய சுற்றுடைப்பானை அணைத்துவிடுவதும் இப்படி இவன் அனுபவிக்கும் கொடுமைகளை மனது அசைபோட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக "இந்த சனியன் எப்போது இங்கேயிருந்து வெளியேறுமோ" என்று இவன் காது படவே பேசிக்கொண்டது இவனால் தாங்கமுடியாத சம்பவமாகி அது ஒரு வடுவாகவே பதிந்தும் விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் இனி இந்த இடத்திலிருந்து வெளியேறுவதே நல்லது நமது குறைந்த பட்ச மரியாதையையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்று முடிவெடுத்ததன் வெளிப்பாடே இந்த தேடல். ஒருவாரியாக இன்றைய இலத்திரனியல் நேரத்தாளினை பூர்த்திசெய்தாகிவிட்டது, இனி மென்பொருள் ஒருங்கிணைப்பு சோதனையாளர் அவரது வழு கண்டுப்பிடிப்புகளை பதிவேற்றும் வரை அவனுக்கு சிறு நிம்மதி வேலையில் மூழ்கியிருந்தவன் சட்டென்று நினைவு வந்தவனாக மணிக்கட்டை திருப்பிப்பார்த்தான் கடிகார முள் மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. தனது கணனி மேசையிருந்து விடுபட்டு அவனது மேலாளரின் அறையின் கதவினை தட்டினான். வரலாம் என்ற ஆங்கில உச்சரிப்பு கதவின் சாரளம் ஊடே வரவும் திறந்து கொண்டு உள்ளே சென்றான். "எக்ஸ்கியூஸ் மீ சேர்" என்ற மெதுவான வார்த்தையை கேட்ட அவனது மேலாளர் கணணிக்குள் புதைத்திருந்த தலையை விடுவித்துக்கொண்டு நிமிர்ந்து பார்வையினாலேயே அவனை அளந்தார். சேர் ஒரு வன் அவர் பெர்மிசன் வேணும், புது ரூம் ரெண்டுக்கு பார்க்கிறேன் 5 மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். கேட்டுக்கொண்டிருந்த மேலாளர் "ஹவ் அபௌட் தி டாஸ்க் லிஸ்ட்" என்று வரவேண்டிய இடத்திற்கு தயக்கமே இல்லாமல் பாய்ந்தார். அவனும் அதுதானே பயலாவது கேட்டவுடன் தூக்கி கொடுப்பதாவது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே "ஐ ஹாவ் கொம்பிலீட்டட் இட் அண்ட் ரிலீஸ்ட் போர் கியூ ஏ டெஸ்டிங்: என்று முடித்தான். திருப்தியுடன் தலையை ஆட்டிய மேலாளர் "ஓகே யு கேன் டேக் தி பிரேக்" என்று முடித்துவிட்டு இவனது பதிலுக்கு காத்திராமல் கணனியினுள் மீண்டும் தலையை புதைத்தார். "தங் யூ சேர்" என்று விட்டு அறையை விட்டு வெளியே வந்த அவன் ஓட்டமும் நடையுமாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்து எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியை நோக்கி கையை நீட்டினான் தலையை வெளியே நீட்டிய சாரதி சேர் எங்க போகவேணும் என்று சிங்களத்தில் கேட்கவும். தெஹிவளை மேம்பாலம் அருகில் என்று முடித்தான் . சாரதி "சேர் மீட்டர் போடல ஒரு 300 ரூபாய் கொடுங்க" என்று அவன் தலையை சொறியவும், 300 அதிகம் 250 தாறன் ஆனால் இவ்வளவு விரைவாக கொண்டு செல்லமுடியுமோ அவ்வளவு விரைவாக போகவேண்டும் என்று இவன் சொல்லவும். ஏறுங்கோ சேர் என்று சிரித்துக்கொண்டே முச்சக்கரவண்டியின் இக்னிஷியனை உசுப்பினான், சற்றைக்கெல்லாம் டுப்ளிகேஷன் தெருவில் முச்சக்கரவண்டி சீறத்தொடங்கியது. பாம்பு போவதுபோல வளைந்து நெளிந்து முச்சக்கரவண்டி எடுத்த வேகத்தில் எதற்க்காக இவனிடம் வேகமாக செல்லச் சொன்னோமோ ..? பாவி நமக்கே பால் ஊத்திவிடுவான் போல என்று தன்னைத்தானே நொந்துகொண்டான் அவன். நேரம் 4:50 காலிவீதி போக்குவரத்து நெரிசலை முச்சக்கரவண்டியின் வேகத்தில் லாவகமாக கடந்து நெருங்கியிருந்தான் அவன். இன்னும் மார்க்கஸை காணோம் சரி கொஞ்சம் பொறுக்கலாம் என்று நினைத்த மாத்திரத்தில் கைபேசி கிறுகிறுத்தது மார்க்கஸிடமிருந்து ஒரு குறுந்தகவல், வந்துகொண்டேயிருக்கிறேன் இன்னும் 5 நிமிடத்தில் நெருங்கிவிடுவேன் என்று இருந்தது. சரியாக சொன்ன நேரத்தில் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளிப்பட்டான் மார்க்கஸ், கையை அசைத்தவாறே நெருங்கியவன் "என்ன மச்சி ரெடியா வா போகலாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன், இரண்டு அறைகளில் இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கிறதாம், ஒன்று முதலாம் மாடியிலும் மற்றயது அதே தளத்திலும் தான் இருக்கிறதாம். இரண்டிலும் ஒவ்வொரொருவர் வீதம் இருப்பதால் நீ சேர்ந்துதான் தங்கவேண்டும் உனக்கு சம்மதம் தானே என்று கேட்டான். இவனோ தனது நிலையை முழுவதுமாக மார்க்கசிடம் சொல்லவில்லையென்பதால் மார்க்கசும் பயல் எதற்கும் தயார் என்பதை அறியவில்லை. சிரித்துக்கொண்டே அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை மச்சி என்று சொல்லிவிட்டு இன்னுமோர் முச்சக்கரவண்டியை இடை மறித்து மார்க்கசுடன் அதில் ஏறிக்கொண்டான் முகவரியை முச்சக்கரவண்டி சாரதியிடம் சொல்லவும் அவனும் கல்கிஸ்ஸை பக்கம் முச்சக்கரவண்டியை விரட்டத்தொடங்கினான், சரியாக ஒரு 15 நிமிட பயணத்தில் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக கடற்கரையை அண்டியாதாக ஒரு பெரிய கட்டிடம் தெரியத்தொடங்கியது, மார்க்கஸ் இவனை உசுப்பி அந்த கட்டிடத்தை காட்டினான். கொஞ்சம் வெளிறிப்போய் அழுக்குப்படிந்திருந்த அந்த கட்டிடம் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பழைய கட்டிடம் என்று மிக இலகுவாக வெளிக்காட்டிக்கொண்டது. கட்டிடத்தின் முன்னே இறங்கிய இருவரும் இறங்கவும் காவலாளி வெளிப்படவும் சரியாக இருந்தது, நாணயத்தாள்களை எண்ணி இவன் முச்சக்கரவண்டி சாரதியிடம் கொடுத்துக்கொண்டிருக்க மார்க்ஸோ காவலாளியுடன் எதுவோ பேசிக்கொண்டிருந்தான். சரியாக இவன் திரும்ப மார்கசோ உரிமையாளர் உள்ளே தான் இருக்கிறாராம் முதலாம் மாடியில் ஏறி போகட்டுமாம் என்று கையை வாயிலை நோக்கிகாட்டினான். காவலாளியும் ஒரு முறைப்புடன் இருவரையும் ஏறியிறங்க பார்த்துக்கொண்டே கதவை திறந்து விட இருவரும் உள்நுழைந்தனர் ....(தொடரும்)
  4. கொரோனா வந்து உயிரை வாங்குது.. ஒருக்கால் ஊர் போய் உறவுகளைப் பார்த்திட்டு வருவம்.. என்று வெளிக்கிட்டால்.. ரிக்கெட் போட.. ஒரு மாதம்.. ஒவ்வொரு நாளும்.. kayak க்கோடு கட்டிக்கிடந்தாலும்.. விலை ஏறுவதும் இறங்குவதும்.. கோவிட் கேஸுக்கு ஏற்றமாதிரி இருக்க.. வந்த கடுப்பில்.. இண்டைக்கு புக் பண்ணியே தீருவது என்று முடிவுகட்டி.. 575 பவுனுக்கு ரிக்கெட் போட்டாலும்.. காசு கட்டும் போது விசா கிரடிட் காட்டால பணம் செலுத்தினால் பாதுகாப்புன்னு சொல்லக் கேட்டு அதை பயன்படுத்தினால்.. அவனோ.. விசா டெபிட் காட்டுக்குரிய 25 பவுன் கழிவை கட் பண்ணிட்டு..25 பவுனைக் கூட்டி எடுத்திட்டான். முதற்கோணல் முற்றிலும் கோணல்.. என்ற எங்கட ஆக்களின் பழமொழி ஞாபகத்திற்கு வந்து தொலைச்சாலும்.. அதெல்லாம்.. தாழ்புச் சிக்கலின் வெளிப்பாடுன்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு... அடுத்து என்ன.. இலங்கை விசாவுக்கு அப்பிளை பண்ணப் போனால்.. அங்கு ஒரு ஆறுதல்.. இப்பவும் அப்ப போலவே 32 பவுன் தான் (ஆனால் டொலரிலதான் செலுத்தனும்..) ஒரு மாத கால விசாவுக்கு வாங்கிறாங்கள் என்று. சரி விசாவுக்கு அப்பிளை பண்ணி அது ஒரு இரண்டு மணித்தியாலத்துக்குள்ள வந்து சேர.. கோவிட் கோதாரி என்னென்ன கென்டிசன் போட்டிருக்கு என்று பாப்பமுன்னு.. கூகிளாரைக் கேட்க.. அவர் இங்க கூட்டிணைத்துவிட்டார்.. https://www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/entry-requirements இங்க போய் வாசிச்சு தலைசுத்தி ஏதோ ஒருமாதிரி ஒரு லிங் கிடைக்க http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=151&Itemid=196&lang=en அதைத் தட்டி அங்க போனால்.. அவன் கோதாரிப்படுவான்.. கொவிட் இன்ஸ்சூரனும் எடுக்கனும் என்று போட்டிட்டான். சரின்னு அதுக்கும் ஒரு 1500 ரூபாவுக்கு ஏற்ற அளவில பவுன்ஸை கொட்டி அதையும் ஆன்லைனில எடுத்திட்டு.. கொவிட் வக்சீன் சேர்டிபிக்கட்டும் இருக்குத்தானே எனிக் கிளம்புறது தான் பாக்கின்னு நினைக்க.. அங்கால தட்டினால்.. அங்கால எயார்லைன்ஸ் காரன் ஒரு ஈமெயில் போட்டிருக்கான். அதில இன்னொரு லிஸ்ட். அதில இருந்த லிங்கை தட்டினால்.. கொவிட் சேர்டிபிக்கட் மட்டும் போதாது.. பயணத்துக்கு முன்.. 72 தொடக்கம் 48 மணித்தியாலத்துக்குள் எடுத்த கொவிட் பி சி ஆர் நெகட்டிவ் சேட்டிபிக்கட் தேவைன்னு போட்டுருந்தான். இதென்னடா கோதாரின்னிட்டு.. சரி.. வேலை செய்யுற ஆஸ்பத்திரில ஒரு ரெஸ்டை செய்து அதோட போவம் என்றால்.. நோ நோ.. பி சி ஆர் ரெஸ்ட்.. குறிப்பிட்ட தனியார் கம்பனில தான் செய்யனுன்னும் அதுக்கும் ஒரு லிஸ்ட்.. அதுக்கும் லிங்குகள். எப்படி எல்லாம் பணம் பண்ணுறாங்கள்.. ரிக்கெட்டை வேற போட்டுத் தொலைச்சாச்சு.. அதுவும் சீப்பான ரிக்கெட் என்று றிபன்ட் எடுக்க முடியாத சீப்புக்கு போட்டதால.. வேற வழியின்றி.. சீப்பான பி சி ஆருக்கு தேடினால்.. கோம் கோவிட் கிட் மட்டும் தான் சீப்பென்னு வந்திச்சு. சரின்னு அதை புக் பண்ணினால்.. கோவிட் கிட் வீட்டுக்கு வராது போய் எடுக்கனுன்னு வந்திச்சு. அட கோதாரிப் படுவாரே இதை முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானேன்னு திட்டிட்டு.. சொன்ன இடத்த எடுக்கப் போனால்.. அவன் கடையைச் சாத்திட்டான். பிறகு அடுத்த நாள் வேலைக்குப் போற நேரமா அவசர அவசரமாக் கிளம்பி அங்க போனால்.. கடைக்காரன் ஈயோட்டிக்கிட்டு நிக்கிறான். சரி அது அவன் பிழைப்புன்னு நினைச்சுக் கிட்டு.. நம்ம கொவிட் கிட் பெட்டியை.. பொறுக்கிக்கிட்டு.. போயிட்டன். அடுத்த நாள் அந்த ரெஸ்டை வீட்டில வைச்சு எடுத்திட்டு.. இதை இப்ப எங்க கொண்டு போய் எப்ப போடுறதுன்னா.. தேடினா.. அதுக்கு இன்னொரு இடத்தைச் சொன்னாங்கள். இதென்னடா வடிவேல் காமடி மாதிரி.. இந்தச் சந்தில் இருந்து அந்தச் சந்துக்கு வரச் சொல்லுறான்டான்னு.. நினைச்சுக்கிட்டு அங்க போய் அதை தொபட்டீர் என்று பெட்டியில் போட்டதில்.. சரி சாம்பில் விழுந்த விழுகைக்கு சுக்கு நூறாகி இருக்கும்.. கொடுத்த பவுன்சும் தூள் துளாயிட்டென்னு.. நினைச்சிட்டு நேரம் போக.. கடைசியில ஒரு மெயில் வந்திச்சு.. சாம்பிள் கிடைச்சிட்டுது.. லாப்புக்கு அனுப்பியாச்சுன்னு. அப்ப தான் சுக்குநூறான சிக்கலில் இருந்து வெளிப்பட்டு மனசு.. இன்னொரு சிக்கலுக்க மாட்டிவிட்டுது. எல்லாம் சரி.. தம்பி.. இப்ப உனக்கு றிசல்ட் பொசிட்டுவ் வுன்ன.. வந்துன்னு வைச்சுக்க.. இவ்வளவு காசும் அம்போ. அது தெரியுமோன்னு சொல்லிச்சு. அப்ப தான் மறுபுத்திக்கு உறைக்க வெளிக்கிட்டிச்சு. சரி.. எதுவா கிடந்தாலும் போறது போகத்தானே செய்யுமென்னு.. அப்படிப் போனாலும்.. ஓவர் டைம் செய்து விட்டதைப் பிடிக்கலாமென்னு.. இன்னொரு மனசு.. அந்த சலன மனசை வலிஞ்சு சமாதானப்படுத்த.. நள்ளிரவுக்கு முன்.. மீண்டும்... போன் மணி.. டிங் கன்னு ஒலிக்க.. ஈமெயிலை சொடிக்கினால்.. பி சி ஆர் றிசல்ட் பிடிஎவ்வில வந்திருந்திச்சு. அது நெகட்டிவ் தான். அது எனக்கு எப்பவோ தெரியுமுன்னு.. இப்ப அந்த சலன மனசு.. தனக்கு தானே மார்தட்டிக் கொண்டிச்சு. சரி எனிக் கிளம்புறது தானே பாக்கின்னுட்டு.. ஊருக்கு சும்மா போகேலுமோ.. அங்க பருப்புத் தொடங்கி மஞ்சள்.. வரைக்கும்.. தட்டுப்பாடு. கரண்ட் வேற கட் பண்ணுறாங்கள் என்று யாழில ஒட்டிற செய்திகளை விடாமல் வாசிச்ச அறிவு எச்சரிக்க... எனி ஊரில போய் சொந்தங்களை அதுவேணும்... இதுவேணுன்னா.. கேட்டா.. அதுங்க இருக்கிற கடுப்புக்கு.. செருப்பால அடிக்குங்கள்.. என்றிட்டு.. பல சரக்குகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு.. வெயிட்டைப் பார்த்தால்.. 5 கிலோ எல்லை தாண்டிட்டு. சரி இதில எதை எடுத்து வெளில போடுறது.. ஒன்னையும் போடேலாது.. கொண்டு போ.. எயார் போட்டில பார்க்கலாம் என்று ஏதோ ஒரு மனசு தைரியம் கொடுக்க பெட்டியைக் கட்டி ரெடி பண்ணிட்டு இருக்க.. இன்னொரு டிங் மணி கேட்டிச்சு. ஈமெயிலை துறந்து பார்த்தால்.. செக் லிஸ்ட் எல்லாம் சரியோன்னு பாருன்னு எயார்லைன்ஸ் காரன் லிஸ்ட் அனுப்பி இருந்தான். எல்லாம் இருக்கு.. ஆனால் லொக்கேட்டர் போம் இல்லை.. சரின்னு அதை நிரப்புவம் என்று இலங்கை குடிவரவு குடியகழ்வு இணையத்துக்கு போனால்.. அவங்கள் இன்னொரு சந்துக்கு போன்னு இணைப்பைக் கொடுத்தாங்கள். அங்க போனால்... அது பாஸ்போட்டை படம் எடு.. உன் மூஞ்சியை படமெடுன்னு ஆயிரத்தெட்டு ஆலாபரணம். சரின்னு அதெல்லாம் செய்திட்டு.. சில்லெடுப்பில இருந்து வெளில வருவமென்றால்.. கியு ஆர் கேட் வரமாட்டேன்னு நின்னுட்டுது. ஏதோ பிழைச்சுப் போச்சு... அல்லது நம்மட பெயரும் தடை லிஸ்டில இருக்கோன்னு.. கோதாரி உந்த யாழில எழுதப் போய்.. நம்மளையும் தடை பண்ணிட்டாய்களோன்னு.. திட்டித் தீர்த்துக் கொண்டிருக்க.. கியுஆர் கோட்டுக்கு இந்த இந்த புரவுசரில் போனால் தான் அது சரிவருன்னு சொல்லி இருக்க.. அதைக் கண்ட பின் தான்.. யாழை திட்டினதை வாபஸ் வாங்கினது. சரின்னு லாப்டாப்பை விட்டிட்டு.. போனுக்கால போய் மீண்டும் முயற்சி செய்ய கியூஆர் கோட் வந்திச்சு. இப்ப பார்த்தால்.. நமக்கு தலை சுத்திச்சுது. எத்தினை டாக்கிமென்ட் மொத்தமா வேணும். ஒன்றை கூட்டினால்.. மற்றது விடுபடுகுது. சரின்னு எல்லாத்தையும் போனில ஒரு போல்டருக்குள்ள போட்டு அமுக்கிட்டு.. கிளம்ப.. மனசு சொல்லிச்சு.. போன் சார்ச் இறங்கினால்.. மவனே என்ன செய்வாய்..??! வாய் தான் பார்க்க முடியுமுன்னு நினைச்சிட்டு.. உடன எல்லாத்தையும் பிரின்ட் பண்ணி வைச்சும் கொண்டன். இப்படியா... சில்லெடுப்புக்கள் பலதோடு நாள் கழிய.. போற நாளும் வந்திச்சு. வழமையா எயார் போட்டில ராப் பண்ணி தெரிஞ்ச ஒருத்தரை எயார் போட்டில ராப் பண்ணி விடக் கேட்டால்.. அந்தாள் சொல்லிச்சு.. தம்பி உந்த பழைய விலைக்கு எல்லாம் எனி வர முடியாது. இப்ப கொவிட்டோட.. தரிப்பிடக் காசு மட்டுமல்ல.. ஒரு ரோட்டுக்க நுழையவும் காசு வாங்கிறாங்கள்.. புது விலைக்கு ஓமுன்னா வாறனுன்னு. ஏதோ வந்து தொலையப்பான்னு சொல்லி புக் பண்ண.. அந்தாளும் வர.. கட்டின பெட்டிகளையும் ஏத்திக் கிட்டு எயார்போட்டில போய் இறங்கினால்.. அங்க சனம் குறைவில்லாமல் திரியுது. அதில சிலது மாஸ்கை மூக்குக்கு கீழ விட்டிட்டு திரியுது. சிலது மாஸ்கே இல்லாமலும் திரியுது. பார்த்தால் எயார்போட் செக்குரிட்டியே அப்படித்தான் திரியுறான். சரி நாம மனசுக்க வெந்து.. ஊர் திருந்தவா போகுது.. நாம நம்மளைப் பாதுகாத்துக்கிட்டு போவம்.. என்றிட்டு.. எயார்லைன் செக்கப்புக்கு போனால்.. அவன் சொன்னான்.. எல்லாம் சரி.. உம்மட பெட்டியள் நிறை கூடிப் போய் கிடக்குன்னு. ஒரு பெட்டையை திறந்து மறு பெட்டிக்குள் திணிச்சிட்டு வாருமுன்னு. என்னடா கறுமம்.. எப்படி திணிச்சாலும்.. மொத்தம் அவ்வளவும் போகத்தானேடா வேணும்.. என்றிட்டு.. அவனின்ர மனத் திருப்திக்கு பெட்டியை திறந்து.. திணிக்க இப்ப இரண்டு பெட்டியும் மூட முடியாமல்... முக்க வைச்சிட்டுது. வெளிக்கிட்டு வந்த கோலமெல்லாம் அலங்கோலமாகி.. வியர்வை வழிஞ்சு கலைஞ்சோட.. மீண்டும் போய் அவனிட்ட நின்றால்.. இப்பவும்.. 5 கிலோ கூட. எப்படி வசதி.. காசு கட்டுறியா.. இல்லை குப்பையில போடுறியான்னு கேட்டான் பாவி. குப்பையில போடவா.. இவ்வளவு கஸ்டப்பட்டு தூக்கிட்டு வாறன்.. எவ்வளவோ போட்டு எடுத்துக் கோ.. ஓவர் டைம் செய்து சேத்துக்கிறன் என்று நானே எனக்கு தெம்பூட்டிக் கொண்டு.. காட்டை நீட்டினால்.. அவன் பாவி.. 200 பவுனுக்கு கிட்ட உருவிட்டான். ஊருக்கு சும்மா போய் வாறது இப்ப ஒரு சரித்திரமாப் போச்சு.. மிச்சம்.. தொடரும்..
  5. ரஷ்யா ஐ ஐரோப்பா, எரிவாயு வாங்கிவதில் தவிர்க்க முடியும் என்றால், rouble இந்த பெறுமதி குறையும்.
  6. நல்ல ஐடியா. அனால், rouble ஐ வாங்க முடியுமா?
  7. கீழ கைலாயம் தெரியுது தோழர்..😊
  8. நடிகர் சங்க அறக்கட்டளை நிதிக்காக பூஜையோடு நின்ற படம்(2017)😊..☺️
  9. விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் நான்கு பேரும் சேர்ந்து நடித்து, பூஜையுடன் வெளிவராத படம்.. இவர்கள்இந்நாட்டுமன்னர்கள்
  10. உன்னாலே வந்தேனய்யா பாடல்
  11. பப்பாகாயில் மூன்று விதமான சமையல்......குழம்பு, வறை , பிரித்து.......செய்து அசத்தலாம்......! 👍
  12. எனது சி எப் டி யில் ரூபிளின் வர்த்தகம் மாசி மாதம் 25 ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்க டொலரை விற்று ரூபிளினை வாங்க உத்தேசித்துள்ளேன். இரஸ்சியா அதிகளவில் தங்கத்தை கொள்வனவு செய்கிறது அதற்கு கூறப்படும் காரணம், இரஸ்சிய ரூபிளின் பெறுமதியிழப்பு. ஆனால் இரஸ்சியா தனது பணத்தை தங்கத்துடன் peg செய்தால் அதன் பெறுமதி வீழ்ச்சி அடையாது, அது தான் இரஸ்சியாவின் திட்டமாக இருக்கும் என கருதுகிறேன். அத்துடன் தன்னுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் இரஸ்சிய பணமான ரூபிளில் செய்ய வேண்டும் என வலியுருத்துகிறது. இவ்வாறு நிகழ்ந்தால் வெறும் முகப்பெறுமதியில் (fiat currency) உள்ள உலக reserve நாணயமான டொலரின் மூலம் ஏற்படும் உலக பொருளாதார நெருக்கடிக்குத்தீர்வு ஏற்படும் (அமெரிக பொருளாதார சரிவு உலகை பாதிக்கும் நிலை) ஏனெனில் அமெரிக நாணய அச்சீடு Bretton woods தீர்மானப்படி (தங்க அகழ்வு வீதம் 1.5%) தற்போது செய்யப்படுவதில்லை. இது உலக பொருளாதாரத்திற்கு கால காலமாக உள்ள அச்சுறுத்தல். எனது கருத்து தவற்றக இருக்கலாம். இரஸ்சிய ரூபிளை இப்பொது வாங்கினால் இலாபம் என கருதுகிறேன், உங்களது அபிப்பிராயம் என்ன?
  13. வேலைக்கு ஆள் பிடிப்பது கஷ்டமாய் இருக்கு.....! 👍
  14. அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயம் வரை சேதி எட்டி இருக்கென்றால் பாருங்கோவன் ....சிறீ யின் சிறப்பு செய்தியை 😃
  15. தோள்பட்டையில் திடீரென ஒரு கை விழுந்ததும் திடுக்கிட்டு திரும்பினான் அவன். அங்கே மார்க்கஸ் சிரித்துக்கொண்டு நிற்க அவனோ "டேய் உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிண்டனான். கோல் எடுப்பம் என்று போனை தூக்க நீ வந்திட்டாய், சரி நான் கேட்டவிடயம் எப்படி ஏதாச்சும் சிக்கிச்சா....?" என்று முடித்தான். மார்க்கஸோ தலையை மெதுவாக ஆட்டிவிட்டு மச்சான் இங்க வெக்கை அதிகமாக இருக்கு வா கூலாக ஏதாவது சாப்பிட்டுக்கொண்டு கதைப்பம் என்று அருகே இருந்த கூல் பாரினுள் நுழைய இவனும் தொற்றிக்கொண்டான். இரண்டு பழரச கோப்பைகளை மேசையில் வைத்துக்கொண்டு மெதுவாக உறிஞ்சியவாறே இருவரும் பேச ஆரம்பித்தனர். மார்க்கஸ் ஆரம்பித்தான் "மச்சான் உன்னோட பட்ஜெட்டிற்கு கொழும்பில் இடம் பார்ப்பது கஷ்ட்டம், மாத வாடகைக்கே உன்னுடைய முழு சம்பளம் பத்தாது, நானும் தேடி தேடி களைச்சு போயிட்டன் ஆனால் ஒரு இடமிருக்கு தெஹிவளை பக்கம் கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருக்கும். நிறைய சிறிய சிறிய அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள், நம்மை போல நிறைய பேர் அங்கே தங்கி இருக்கிறார்கள் தனி அறை ஏழாயிரத்து ஐநூறு வரும், இன்னொருவருடன் சேர்ந்து தங்கினால் நான்காயிரத்திற்குள் முடிக்கலாம். கரண்ட் செலவை அவர்களே பார்த்து கொள்வார்கள். உனக்கு சம்மதம் என்றால் சொல் நாளைக்கே போய் பார்த்து விட்டு வரலாம்". மறுபேச்சின்றி தலையை ஆட்டினான் அவன். மாமியின் வீட்டில் நான் படும் அவஸ்தைகளுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்தவாறு. "சரி மச்சி நாளைக்கு மாலை 5 மணி போல போய் பார்க்கலாம் தானே என்று கேட்கவும் மார்க்கஸ்.. ம்ம் நான் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன் நாளைக்கு போவோம்" என்று சொல்லிக்கொண்டே இருவரும் எழுந்து கடையை விட்டு வெளியேறினர். மார்க்கஸ் கையினால் ஐந்து என்று சைகை செய்துவிட்டு திரும்பி வேகமாக நடந்து இவனது பார்வையை விட்டு மறையவும் இவனும் எதிர்திசையில் நடக்கலானான். மனமோ மிகுதியாக இருந்தவற்றை அசைபோடும் வேலையிலிறங்கியது..................(தொடரும்)
  16. கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது. இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது, பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள்
  17. மேலே உள்ளது தான் நெடுஞ்சாலையின் பெயர்.பெயர் தான் நெடுஞ்சாலை ஆனால் ஒற்றையடிப் பாதையே.வேகமும் ஒரு சில இடங்கள் 55 மைல்கள்.கூடிய தூரம் 15-20-25 இப்படியாகவே இருந்தது.நாங்கள் விரும்பினால்க் கூட வேகமாக ஓட முடியாது. படங்கள் எடுக்கக் கூடிய இடங்கள் இருந்தன.ஆனாலும் எமது கைபேசியினால் பரந்த தேசங்களை எடுக்க முடியாது.ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை மிகவும் ரசிக்கக் கூடிய இடமாக இருந்தது.நின்றுநின்று போகிறபடியால் தொடர்ந்து கார் ஓட வேண்டாமென்று பிள்ளைகள் இடையில் ஒரு கொட்டேலும் போட்டிருந்தனர். பிற்பகல் 6 மணிபோல் கொட்டலை சென்றடைந்தோம்.இரவு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம்.நீண்ட தூரம் கார் ஓடுவதானால் நிறைய சாப்பிடுவதில்லை.காலை சாப்பாடு கொட்டேலில் மீண்டும் பகல் 9.30 போல புறப்பட்டோம்.அன்றைய தினம் அதிகம் நின்று செல்லவில்லை.ஒரேஒரு இடம் தான் பார்க்க திட்டமிட்டிருந்தோம்.வேறோன்றுமில்லை வண்ணாத்தி பூச்சிகளே. குறிப்பிட்ட ஒரு அரைமைல் சுற்றளவில் தேனீக்கள் எப்படி இருக்குமோ அதே மாதிரி வண்ணாத்தி பூச்சிகள்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது.படமெடுக்கலாம் என்று கைபேசியில் பார்த்தா எல்லா வண்ணாத்தி பூச்சிகளும் சிறிய தேனீக்கள் போல தெரிந்தன. அங்கிருந்கு நேராக மகளாக்கள் நின்ற இடத்துக்கு போய் சேர்ந்தோம். அடுத்த நாள் கொலிவூட் என்ற பெரிய எழுத்துக்கள் உள்ள விளம்பரத்தை பார்க்க போனோம். நான் நினைத்திருந்தது வேறு.கண்ட காட்சியோ வேறு. இதுவரை நான் நினைத்தது கொலிவூட் நடிகர் நடிகைகள் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களே அந்தப் பகுதியில் இருப்பார்கள்.உள்ளே போய் பார்க்க கட்டணம் அறவிடுவார்களோ பெரிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கனக்க எண்ணியிருந்தேன்.நான் தான் இதை ஒருதரமாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல பிள்ளைகள் சிரிக்கிறார்கள்.இதைப்போய் என்னத்தை பார்க்க போறீங்கள் என்று. ஒரு மலைப் பிரதேசத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காரில் போக பல பாதைகள் இருக்கும் என எண்ணுகிறேன்.நாங்கள் போன பாதை மலையில் கொஞ்ச தூரம் போனபின் குடிமனைகள் உள்ள இடத்தால் ஒரு கார் மட்டுமே போக கூடியவாறு வீதிகள் இருந்தன.அங்குள்ள மக்கள் இதை பார்க்க வருபவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்த றோட்டால் போக கூடாது தனியார் றோட்டு வாகனம் நிறுத்தக் கூடாது என்று பலவாறு எச்சரிக்கை பலகைகள் தொங்கவிட்டிருந்தனர். ஓரளவுக்கு மேல் எமக்கும் யோசனை.ஏதோ கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு மலையில் சிறிது தூரம் ஏறி போய் பார்த்தோம்.வழமையில் நல்ல காலநிலையாக இருந்த இடம் நாங்கள் போனகிழமை மிகவும் குளிராக இருந்தது.காலநிலை நன்றாக இருந்தால் நிறைய கூட்டம் அந்த கொலிவூட் என்ற விளம்பர பலகையிலேயே ஏறி படங்களெல்லாம் எடுப்பார்களாம். இதனிடையே நீர்வேலியானை சந்தித்தது பற்றி எழுதியிருந்தேன். கடைசியாக ஒரு கோவிலுக்கு போய் தரிசனத்துடன் எமது லாஸ் அங்கிலஸ் சுற்றுலாவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். வரும்போது நெடுஞ்சாலை 5 வழியாக 6 மணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். நன்றி. இனிவராது. யாராவது கலிபோர்ணியா போனால் நிச்சயம் இந்த பாதையில் பயணித்து பாருங்கள்.
  18. பார்வை ஒன்றே போதுமே..........( 6 ). சாப்பிட்டுவிட்டு எழுந்த சாமிநாதன் கை கழுவிவிட்டு தான் படுக்கும் கட்டிலின் கீழேயிருந்த பெட்டியை எடுத்து அதனுள் இருந்து ஒரு கைபேசியை எடுத்து சித்ராவிடம் கொடுக்கிறார். இதைப் பார் சித்ரா இது உனக்கு உபயோகப்படுமா என்று. இது விலை கூடிய ஆப்பிள் போன் ஐயா. இப்போதைக்கு என்னால் நினைத்தும் பார்க்க முடியாது. என்கூட படிப்பவர்களில் ஓரிருவர் வசதியானவர்கள் மட்டும் வைத்திருக்கினம். இதில் எல்லா வேலைகளையும் செய்யலாம் என்கிறாள். அப்படியா சரி அதை நீயே வைத்துக்கொள். அப்போ உங்களுக்கு ....எனக்கு முத்து வைத்திருக்கும் அந்த போனே போதும். அது ஒருமுறை சார்ஜ் போட்டால் ஒருவாரத்துக்கு மேல் சார்ஜ் இருக்குமாம்.யாரோ சொன்னார்கள். அவனும் புதிதாக நல்லதாக ஒன்று வாங்கிக் கொள்ளட்டும் என்கிறார். சித்ராவும் முத்துவும் ஓடிப்போய் அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள மகேஸ்வரியின் கண்களில் நட்பையும் மீறிய ஒரு சுடர் தெரிகின்றது. பிள்ளைகள் சும்மா பகிடியை விட்டுட்டு ஐயா சொல்லுறதை கவனமாக கேளுங்கோ. எனக்கும் முன்னம் இப்படி ஒரு யோசனை வரவில்லை. முத்து வீட்டு செலவுகள் பற்றி நீ யோசிக்காத. என்னிடமும் கொஞ்சப் பணம் இருக்கு. எங்கட வயலும் நல்லா விளைஞ்சிருக்கு, அறுவடை செய்து வித்தால் அதிலும் காசு வரும் சமாளிக்கலாம் என்று மகேஸ்வரி சொல்லிவிட்டு என்கூடப் படித்த பார்வதிதான் இப்ப கல்லூரி உப அதிபராக இருக்கிறா அவவிடம் சொன்னால் ஏதாவது செய்வா என்கிறாள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமன்றோ" முத்துவும் அரை மனதுடன் படிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். இந்த விடுமுறை முடிந்து கல்லூரி தொடங்கியதும் அவன் சேர்ந்து விடுவான். காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை. சித்ரா வக்கீல் படிப்பை எடுத்துக் கொண்டு படிக்க, முத்து பிஸினஸ் மேனேஜ்மண்ட் பற்றி படித்துக் கொண்டு வருகிறான். ஒருவர் பின் ஒருவராக இருவரும் தங்களது படிப்புகளை முடித்து பட்டங்கள், சான்றிதழ்களுடன் வெளியே வருகின்றார்கள். சித்ராவுக்கு சாமிநாதன் சங்கிலியையும், முத்துவுக்கு தனது கைக்கடிகாரத்தையும் பரிசாகக் கொடுக்கிறார்.அவர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் அவர் வற்புறுத்தி அவர்களிடம் கொடுத்துவிடுகிறார். அன்று நடந்தது, கோபத்தில் சாமிநாதன் அந்த கிளப்பை விட்டு சென்றபின் ரேகா தள்ளாடியபடி ஒரு இளைஞனின் அணைப்பில் கவுண்டருக்கு வருகிறாள். அவளிடம் விடுதி மானேஜர் வந்து ரேகாம்மா சற்று முன்புதான் உங்கள் கணவர் இங்கு வந்து உங்களை விசாரித்து விட்டு சென்றார் என்று சொல்ல,அதைக் கேட்டதும் ரேகாவுக்கு போதை சட்டென்று குறைந்து விட்டது. இப்போ அவர் எங்கே எனக் கேட்டாள். அவர் உள்ளேதான் எங்காவது இருப்பார் என நினைக்கிறேன் என்று அந்த மானேஜர் சொன்னார்.ரேகாவும் ஒவ்வொரு மேசையாக அவரைப் போய்த் தேடியும் அவரைக் காணவில்லை. அப்போது அவளுடன் பொழுதைக் கழித்த அந்த வாலிபன் இன்னொரு நடுத்தரவயசுப் பெண்ணை அணைத்தபடி வந்து என்ன ரேகாம்மா பதட்டமாய் இருக்கிறீங்கள் ஏதாவது பிரச்சினையா என்று கேட்க ....ம் .....பிரச்சினை போலத்தான் இருக்கு. சற்று முன் எனது கணவர் இங்கு வந்திருக்கிறார் போல, என்னை உன்னுடன் சேர்த்து பார்த்திருப்பாரோ என்று சந்தேகமாய் இருக்கு. எதுக்கும் நீயும் கவனமாய் இருந்துகொள். அவனோ சந்தேகமே வேண்டாம் மேடம். நாங்கள் மாடியில் இருந்து இறங்கி வரும்போதே அவரை நான் பார்த்தேன். அவரும் எங்களைப் பார்த்தார். அதன்பின் அவர் கோபமாக எழுந்து சென்றதையும் நான் பார்த்தேன். ஓ...ஷிட் .....என்று புறுபுறுத்தவள், ஏன் நீ இதை எனக்கு முதலே சொல்லவில்லை என்று கடிந்து விட்டு வெளியே ஓடிவந்து ட்ரைவர் சுந்தரத்தை அழைக்க அவனும் பிடித்துக் கொண்டிருந்த சிகரட்டை கீழே போட்டு மிதித்து விட்டு ஓடிவந்து என்னம்மா என்றான். முட்டாள் உனக்கு எத்தனைதரம் சொல்வது சிகரெட் பிடித்து விட்டு என்முன்னே வராதே என்று, கொஞ்ச நேரத்துக்கு முன் ஐயாவைப் பார்த்தாயா, அவர் இங்கு வந்திருந்தாரா என்று கேட்டாள். அவர் வந்திருக்க வேண்டும். அவரது கார் அங்கு நின்றதைப் பார்த்தேன் ஆனால் அவரைக் காணவில்லை. சரி ....கெதியா வண்டியை எடு வீட்டுக்கு போகலாம் என்றாள். வீட்டுக்குள் ஓடிச்சென்றவள் அவசரமாக தங்களது அறைக்கு சென்று பார்த்தாள்.அங்கே சாமிநாதன் இல்லை.கட்டிலில் அவர் கந்தோருக்கு கொண்டுசெல்லும் கணனிக் கைப்பை கிடந்தது...........! பார்ப்போம் இனி........! ✍️ ( அன்புள்ளங்கள் நீங்கள் தரும் ஊக்கத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.