ஆயு போவான் அதி உத்தம, மேன்மைதங்கிய, சிங்கள பெளத்த தேசியத்தின் காவலனே, சிங்க லே ஒடும் சிங்கராஜாவே, சிறிலங்கா சோசலிச குடியரசின் රාජපුත්ර
ஜனாதிபதி அவர்களே வணக்கமுங்கோ....
இது உங்களது இனவாத கொள்கைகளால் பாதிக்க பட்ட இன்னுமோரு தமிழ் தேசிய பும்பெயர் தமிழனால் உங்களுக்கு வழங்கப்படும் மரியாதை .....
எம் இனம் உங்களிடமும் உங்கள் தேசியத்திடம் கேட்டது ஒன்றே ஒன்று தான் சம அந்தஸ்துடன் எமது பிரதேசத்தில் தனித்துவத்துடன் வாழவிடுங்கள் என்று மட்டும் தான்...
எம்மக்கள் இந்த 74 வருடத்தில் பான் தா,பால் தா,டிசல் தா,காஸ் தா, மின்சாரம் தா என போரடவில்லை.
வாழ உரிமை மட்டுமே கேட்டார்கள்.அந்த உரிமைக்காக முதலில் அகிம்சை வழியாகவும் பின்பு 30 வருட ஆயுத போராட்டம் நடத்தினார்கள் இது யாவும் நீங்களும் நானும் சிறிலங்கா மக்களும் அறிந்ததே....
ஆயுத போராட்டகாலத்தில் போராட்டத்தை தலமை தாங்க பிரபாகரன்,தம்பி,தலைவர் என்ற செல்ல பெயருடன் மேதகு என்ற கெளரவ பட்டத்துடன் ஒருவ்ர் உங்களது சிறிலங்கா தேசத்தின் இராணுவத்துக்கு தொல்லை கொடுத்து போராடியதும் நீங்கள் அறிந்ததே...
அவரும் அவரது மக்களும் தளபதிகளும் தங்களை நம்பியே போராட்டத்தை நடத்தினார்கள் . ஒன்றல்ல இரண்டல்ல இருபதைந்து வருடங்கள் .
வல்லரசுகளின் எதிர்ப்பு (அமேரிக்கா,மேற்குலகு )
பிராந்திய வல்லர்சுகளின் எதிர்ப்பு(இந்தியா,சீனா)
இறையாண்மை நாடுகளின் எதிர்ப்பு (பாகிஸ்தான் ,கியுபா...)
ஐ.நாடுகள் சபையின் கண்டுகொள்ளா தன்மை (தெரிந்தும் தெரியாத்து போல் நடித்து உங்களுக்கு ஆதரவு தந்தமை)
வெளிநாட்டு தூதரகங்களின்(எதிர்ப்பு)
புலம் பெயர் உறவுகளின் சிறு பணப் பங்களிப்புடன் 25 வருடங்கள் தனது மக்களின் உணவுதேவையை பூர்த்தி செய்து ,உங்கள் இராணுவத்துடனும் பயங்கர இராணுவ தாக்குதல் செய்து தாக்கு பிடித்தது என்பது இமாலய சா தனை என்றே சொல்ல வேண்டும்.
வடமாகாண பருத்திதுறைமுனையிலிருந்து வவுனியா வரை 20 வருடங்களுக்கு மேலாக புகையிரத போக்குவரத்து ,பொது போக்குவரத்து எதுவும் இன்றி பயங்கர அனுபவங்களுடன் வவுனியாவரை வந்து அங்கிருந்து பயம் கலந்த உணர்வுடன் கொழும்பை அடைந்து மீண்டும் எங்கு போகிறோம் என்ற இலக்கின்றி புலம்பெயர்ந்து பல இன்னல்களுக்கு மத்தில் எம்மை அடையாளப்படுத்தி வாழும் இனம்....
அவர் பயங்கரவாதி,அவரை சூழவுள்ள மக்கள் பயங்கர வாதி என உலகம் பூராவும் பிரச்சாரம் செய்து உலக நாடுகளை நம்ப வைத்து மக்களை வழிநடத்திய போராளி குழுவை அழித்தீர்கள் ...
நீங்களும் உங்கன்ட இராணுவம் மட்டுமல்ல உலகம் பூராவும் உள்ள நாடுகளின் இராணுவ ஆலோசனைப்படி மக்களை கொலை செய்தீர்கள் .
தமிழரின் இரத்தம் இந்துமுத்திரத்தில் கலக்கட்டும் ,பெண்கள் சிங்கள இராணுவ வீரர்களுக்கு இரையாகட்டும் என சொல்லி கொன்றுகுவித்து ராஜ புத்ரா என சிங்கள மக்களால் கெளரவிக்கப்பட்டிர்கள்..
உலகநாடுகள் உங்களுடன் கைகொர்த்து ஜனநாயகத்தை காக்க முன்வந்தன...நாட்டை அபிவிருத்தி செய்ய பணத்தை வாரி வாரி வழங்கினர்.
முப்படைகள் மற்றும் பொலிஸ் படைகள் முழு ஆதரவு,ஆகாய போக்குவரத்து,கப்பல் போக்குவரத்து யாவும் உங்கள் வசம், அங்கீகரிக்கபட்ட சர்வதேச பணபரிவர்த்தனைகள் ....அதை இயக்க /இயங்க வைக்க தகுதி /தகமை/புலமைகள் கொண்ட நிர்வாக அதிகாரிகள் இருந்தும் உங்களுக்கு மக்கள் வழங்கிய ஐந்து வருட ஜனாதிபதி பதவியை தக்க வைத்து கொள்ள முடியாமல் போய்விட்டதே .... ராஜ புத்ரா....ஒன்றில்
சுய புத்தி இருக்க வேணும் அல்லது சொல் புத்தி இருக்க வேணும் உங்களுக்கு இரண்டும் இல்லை என எங்களுக்கு ஏற்கனவே தெரிந்து தான் வாக்கு போடவில்லை ... நீங்கள் அழிவை தந்தாலும் கெளரவமான
முறையில் உங்களை நிராகரித்தோம் ....
ராஜ புத்ரா சிங்க லெ(சிங்கள இரத்தம் ) என உசுப்பேத்தி 69 லட்சம் வாக்குகளை அளித்து ராஜா மாத்தையாவாக
அரண்மையில் யில் அமர வைத்த சிங்களய சகோதரஜாக்கள் ,,,,
வருங்கால ஜனதிபதி தொடக்கம் கூலி தொழில் செய்யும் சதாரண பிரஜை வரை இன்று உங்களை குண்டுகளால் துளைக்கின்றனர்.
மூளை.இருக்கின்றதா...பீரங்கி குண்டு...டுமீல்
பொன்னையா ....விமான குண்டு ..டமில்
விதை(போலை) இருக்கா....எரிகுண்டு புஸ்ஸ்
பிஸ்ஸா(விசரா)....ஆர்ட்லரி....ஊஊஊ
கரியா....ஏகே47..டுமில்..
உங்கள் குடும்பத்தை வேறு ,சொல்ல முடியாத வார்த்தைகளால் துளைத்தெடுக்கின்றனர்...
வெளியே போ ,இந்த நாட்டில் இருக்காதே ,உனது தாய் நாட்டுக்கு போ,நீ களவாடிய சொத்துக்களை திருப்பி நாட்டுக்கே கொடு ....நீயும் உன்குடும்பமும் நாட்டை விட்டு அரசை விட்டு வெளியே போ...
இவ்வளவு பாராட்டுக்களையும் பெற்றும் நான் போகமாட்டேன் என அடம் பிடிக்கிறீங்கள் பாருங்கோ...உண்மையிலயே நீங்கள் பிஸ்ஸு தான் ...
போராளிகளின் தளபதிகளை வெளிநாட்டு புலனாய்வு சக்திகளுடன் இணைந்து அவர்களை கண்காணித்து விமான குண்டுகள் போட்டு அழித்தீர்கள் ,சிலருக்கு பணம் பதவி ஆசைகளை கொடுத்து உங்கள் பக்கம் இழுத்தீர்கள்...இந்த இக்கட்டான சூழலிலும் நீங்கள் இந்த நரித்தனத்தை விட வில்லை....ஆனால் உங்கள் மக்களும் உங்களை ஆதரித்தகட்சி எம்பிக்களும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்..
இன்று உங்கள் உறவுகளையே அண்ணன் ,தம்பி,மாமன் மச்சான் எல்லோரையும் வெளியேற சொல்லி உங்களை ராஜ புத்ரா ரராக கொண்டாடிய மக்களே துரத்தியடிக்கின்றனர்...
இறுதிவரை களத்தில் நின்று தன்னையே அழித்துகொண்ட அந்த மேதகு முன்பு நீங்கள்? சீரோ......எங்களுக்கு
ஆனால் ராஜ புத்ரா ஆக் கிய உங்கள் மக்களுக்கு நீங்கள் நாய் புத்ர சீ சீ பல்லோ புத்ர....
உங்கள் பெயர்..... மானம் மரியாதை சர்வதேசம் மற்றும் தெரு தெருவாக ....,பறசூட்டில் பறக்கிரது
.