Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    34975
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    88007
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    32055
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19163
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/23/22 in all areas

  1. *பயமாக இருக்கிறது....* *இன்றைய தலைமுறையினரின் போக்கு.....* *2K KIDS க்கு -- 20ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு* பிடித்த பேச்சாளர் - சீமான் பிடித்த இயக்குநர் - அட்லீ *பிடித்த சாப்பாடு - புரோட்டா& நூடுல்ஸ்* பிடித்த இசையமைப்பாளர் - அனிருத் *பிடித்த விளையாட்டு - பப்ஜி, ப்ளூ வேல்* *பிடித்த வரலாற்றுப் புத்தகம் - வாட்ஸ்அப்* *பிடித்த சொல் - மொக்கை* *பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்* *படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.* *கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...* *யாருக்குமே மரியாதை தரக்கூடாது..* *தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...* *எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...* *விழுமியங்களே தேவையில்லை, சாதி, மதம்தான் எல்லாம்...* *சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..* *பெண்கள் மீது மரியாதையே இல்லை..* *ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...* *சினிமா பாடல் வரிகளைக் கூட சொந்த ரசனையோடு சொல்லத் தெரியாது..* *வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌..* *ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..* *ஒரு வரி கூட வாசிப்பதில்லை..* *தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...* *ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..* *பிரபலங்கள் வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந் தாலும் அதையும் சுயமி selfee எடுத்து முகநூலில் போட வேண்டும்..* *பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌..* *சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌..* *எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..* *எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..* *ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....* *இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..* *பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..* *பெற்றோர்கள் சுத்தம்;* *அவர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..* *தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...* *வீட்டில் அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....* *இவர்கள் உள்ளுக்குள்* *வேறொரு உருவமாய்* *வளர்ந்து கொண்டிருக் கிறார்கள்..* *பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவ தில்லை..* *கடந்த ஐந்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்‌‌..* *தான் பார்க்கும் பெண்ணோ ஆனோ தான் தன் எதிர்கால துணை என இருபாலருமே முடிவெடுத்துக் கொண்டு பெற்றோருக்கும் உற்றோருக்கும் தெரியாமலேயே தங்கள் உறவை வளர்த்துக் கொண்டு உடம்பையும் உள்ளத்தையும் இழக்கிறார்கள்.* *நான் 80, 90 s kid களுக்கும் வகுப்பெடுத்திருக்கிறேன்...* *இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..* *மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம்.* *இது இருபாலருக்கும் பொருந்தும்.* *நான் பேசுவது பொதுவான மனநிலை குறித்த பார்வையில்தான்..* *விதிவிலக்கு களை அல்ல..* *பல பெற்றோர்கள் தம் பிள்ளைகள் அந்த விதிவிலக்குகளில் தம் பிள்ளையும் ஒரு ஆள் என்று பொய்யாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.* *காலம் காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக இதை எண்ணி விடாதீர்கள்*. *எனக்கு இரண்டுக்கும் வேறுபாடு தெரியும்.* *சமீபமாக வகுப்பறைகளில் ரசித்த சினிமா பாடல்களின் வரிகளையாவது சொல்லுங்க என்று கேட்டு அதற்குக் கூட பதில் வராமல் ஏமாந்து கொண்டிருக்கி றேன்*. *ஐந்தாண்டு களுக்கு முன்பெல்லாம் இப்படிக் கேட்டால் மாணவர்கள் அசத்தி விடுவார்கள்.* *காரணம் யாராக, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்*. *ஆனால் யதார்த்தம் இதுதான்.* *காதுகளே இல்லாத தலைமுறையிடம் நாம் பழைய சொற்களோடு தோற்றுக் கொண்டிருக் கிறோம்* *கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில்* *இப்படி ஒரு ரசனை கெட்ட,* *சுய சிந்தனையற்ற*, *சோம்பலும் அலட்சியமும் கொண்ட* *தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை*. *எதிர்கால வரலாறு இந்தத் தலைமுறையைக் காறி உமிழும்.* *மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை.* *பயமாக இருக்கிறது...* *இன்றைய தலைமுறையின் போக்கு.....* -சமூக அக்கறையுள்ள ஆசிரியராய் -புலவர்காளமேகம்-
  2. டமார்…..காதை கிழிப்பது போல ஒரு பெரும் சப்தம். எங்கும் கந்தக நெடி… நாசி எங்கும் ரத்தமும், சதையும் கந்தகமும் நிரம்பி மூச்சு முட்டுவதை போல ஒரு உணர்வு. ஓடு…ஓடு…பங்கருக்குள் ஓடு…மனம் ஆட்காட்டி பறவையாய் ஓலமிடுகிறது. எப்படியாவது உயிர் வாழ்ந்து விட்டால் போதும் என்ற உத்தரிப்பு. பெரியார், கால்மார்க்ஸ், கடவுள் மறுப்பு எல்லாம் கண நேரத்தில் மறந்து போக, வாய் தன் பாட்டில் “நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க” என முணுமுணுக்கிறது. இங்கே அருகில் மரம் போல கிடப்பது அப்பாவா? “அப்பா எழும்புங்கோ, மிக் அடிக்குது பங்கருக்க ஓடுவம்”. இந்த மனிசன் ஏன் அசையாமல் கிடக்குது…. உடம்பு வேற சில்லிட்டு போச்சு…. ஐயோ அப்பா…எழும்பனை எண்ட ராசா…. இதோ இன்னொரு மிக்கின் மிகை ஓலி வெடிப்பு. வேற வழி இல்லை கட்டிலுக்கு கீழ பாயுவம். பொத்…..எங்கும் ஒரே இருட்டு….. திடீரென லைட் எரிகிறது ….. “என்னப்பா மறுபடியும் கனவே….” சலித்துக்கொண்டு கட்டிலுக்கு திரும்புகிறாள் 83 இல் கைக் குழந்தையாக வெளி நாடு வந்து விட்ட மனைவி. கட்டிலில் நாளை வாட்டர் பார்க் போகும் சந்தோசத்தோடு சலனம் இன்றி உறங்கிகொண்டிருக்கிறான் மகன். அப்பா? போடா பைத்தியக்காரா என ஏளனமாக சிரிக்கிறது கட்டில் அருகே இருக்கும் விளக்கு மேசையின் கால். மறுநாள் “மிஸ்டர் ராஜு உங்களுக்கு இருப்பது சிறுவயது யுத்த அனுபவங்கள் தந்த Post Traumatic Stress Disorder - நீங்கள் கொஞ்சகாலம் இந்த உக்ரேன் செய்திகளை பார்க்காமல் விடுங்கள்”. அட்வைஸ் பண்ணுகிறார் ஆங்கில வைத்தியர் மில்லர். “உங்கள் வலியை என்னாலும் உணர முடிகிறது ராஜு”. மில்லரின் கண்கள் பரிவை சொரிகிறன. “இது வலி இல்லை டாக்டர், வடு. ஆழ்மனதில் பதிந்து விட்ட அனுபவச் சுவடு. இன்னுமொருவனுக்கு அதுவே நடக்கும் போது இந்த சுவடு என்னை அறியாமலே தலையை தூக்கி பார்க்கும். இதை நீங்கள் அறியவோ, உணரவோ முடியாது”. வாய் வரை வந்த வார்த்தைகளை வலுகட்டாயமாக விழுங்கியபடி, “தங்க்யூ டொக்டர்” வினநயமா விடை பெற்றான் ராஜு.
  3. என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. பல ஆண்டுகள் நான் நாட்டை விட்டு புலம்பெயர்து வாழ்ந்தாலும் இன்றும் என்னுக்குள் அன்றைய எனது ஊரின் நினைவுகள்தான் இனிமை தருகிறது. இதேபோல் உங்கள் ஊர்களையும் நினைத்துப் பார்க்க இந்த சிறு கவிதை உதவினால் எனக்கு மகிழ்ச்சியே. அன்றுபோல் என் தீவு வேண்டும் ************************ அம்மாவின் அன்பு வேண்டும் அப்பாவின் கருணை வேண்டும் பனை தென்னை உணவு வேண்டும் பாசத்தின் உறவு வேண்டும் பனம் பாளைக் கள்ளு வேண்டும்-ஓலை பாய்தன்னில் உறங்க வேண்டும் கூள் காச்சிக் குடிக்க வேண்டும் கொண்டாடி மகிழவேண்டும். உரல் இடித்து சம்பல் வேண்டும் ஒடியல் பிட்டு கலந்து வேண்டும் மண்சட்டி சமையல் வேண்டும்-அந்த மகிழ்வான பொழுது வேண்டும். வெடி கொளுத்தும் பொங்கல் வேண்டும் கிறிஸ்மஸ் தாத்தா.. வீட்டுக்கு வரவும் வேண்டும் அயலவர்கள் கூட வேண்டும்-பழய அன்பு மழை பொழிய வேண்டும் வெளிநாட்டில் வாழும் போதும்-ஊர் விட்டு வந்த நினைவே தோன்றும் அழகான என்னூர் போல-இந்த அகிலத்தில் நான் கண்டதில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி.
  4. எது அடி? எது தலை ? தலை சுத்துது
  5. இல்லை, ரூபிள் மாசி 25 திகதியுடன் எனது CFD நிறுத்திவிட்டது, AUDJPY 85.700 Ascending triangle break வாங்கியது, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக வாங்கி வைத்திருந்த நாணயத்தினை திங்கள் கிழமை மூடிவிட்டேன். (Market maker Manipulation 60 pips quick drop in public holiday) தற்போது 93.600 மீண்டும் வாங்கியுள்ளேன், AUD bullish ( Commodity), வேலைப்பளு காரணமாக உடனே பதில் தரமுடியவில்லை.
  6. மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர் அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர் வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே
  7. ம்.....பண்ணியில் பண்ணிப்பாருமன் 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.