Leaderboard
-
மெசொபொத்தேமியா சுமேரியர்
கருத்துக்கள உறவுகள்13Points8557Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்6Points38771Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்5Points46798Posts -
nedukkalapoovan
கருத்துக்கள உறவுகள்5Points33035Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/06/23 in all areas
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
13 pointsஇலங்கையில் ஆறு மாதங்கள் நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, நினைத்ததை உண்டு மகிழ்ந்து, நினைத்த இடங்களுக்குப் போய்வந்து இப்படி இன்னும் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கனடாவில் இருக்கும் என் நண்பியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அடியே நல்ல யோசனை எனக்கும் உப்படித் திரியவேண்டும் என்று ஆசை இருக்கடி. நானும் நீயும் சேர்ந்து போவோமாடி என்றாள். இந்தியா சென்று ஒரு மாதமாவது எல்லா இடங்ககளையும் சுற்றிப் பார்த்துவிட்டு இலங்கை வந்து அங்கு ஒரு மாதம் நின்றபின் அங்கிருந்து ஒஸ்ரேலியா சென்று இரண்டு மூன்று வாரங்கள் அங்கு பார்த்தபின் மீண்டும் இலங்கை வந்து நின்றுவிட்டு திரும்புவதே திட்டம் என்றேன். எனக்கு இந்தியா செல்வதில் விருப்பம் இல்லை என்றவளை நீ முன்னர் அங்கு சென்றுள்ளீரா என்று கேட்க இல்லை என்றாள். நீர் ஒருமுறை சென்றால் மீண்டும் போக ஆசைப்படுவீர் என்று கூறி இந்தியாவில் எந்த இடங்களுக்குப் போகலாம் என்று அவளுக்குக் கூறினேன். நான் விபரித்ததைக் கேட்டபின் அவளுக்கும் ஆசை வந்ததோ என்னவோ சரி உமக்காக வாறன் என்றாள். எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறமாயினும் இவளே எனக்கு இடைஞ்சலாய் வந்திடுவாளோ என்னும் யோசனையும் ஓடிக்கொண்டிருந்தது. அவளை நான் ஒரேயொரு தடவைதான் சந்தித்திருந்தேன். தொலைபேசியில் என்னதான் கதைத்தாலும் அவர்களோடு கூட இருக்கும்போதுதான் அவர்களது குணம் முழுவதுமாகத் தெரியவரும் என்பதும், என் நினைத்ததைச் செய்து முடிக்கும் குணமும் அவளுக்கும் எனக்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்துமா என்னும் யோசனையையும் தந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கு விடுதிகளில் தங்கும்போது சுத்தமான நல்ல விடுதிகளிலேயே தங்கவேண்டி இருக்கும். பணமும் அதற்கேற்ப அதிகமாகவும் இருக்கும். தூர இடங்களுக்குச் செல்லும்போது பொது வாகனங்களில் செல்வது எமக்குச் சரிவாராது. அதற்கும் பாதுகாப்பான வாகனங்களில் செல்வதாயின் அதிக செலவாகும். இதற்கெல்லாம் அவளால் ஈடுகட்டமுடியுமா என்னும் யோசனையும் ஓடியது. சரி உனக்குத் துணையாக அவள் வருகிறாள் தானே. அதுவே பெரிய விடயம். அதனால் பணத்தைப் பற்றி யோசிக்காதே என்றது மனம். இலங்கையில் எனக்கு வசிப்பதற்கு எனது சிறியதாயார் வசிக்கும் என் கனடாத் தங்கையின் வீட்டில் மலசலக்கூட வசதியுடன் ஒரு அறை உண்டு. அந்த அறையுள் 120 - 200 அளவுள்ள கட்டிலும் உண்டு. நானும் கணவரும் சென்றாலோ அல்லது உறவினர்கள் சென்றாலோ இருவர் மட்டும் அங்கு தங்கலாம். அதாவது கணவன் மனைவி ஒட்டி உரசிக்கொண்டு சகித்துக்கொண்டு படுத்தாலும் தனியாக அக்கட்டிலில் படுப்பதுதான் சுகமானது என்பதும் ஒரு நண்பியுடன் அக்கட்டிலைப் பகிரவே முடியாது என்றும் என் மனம் கூற, அவளுடன் கதைக்கும்போது அவளுக்கும் இதைக் கூறினேன். ஒரே ஒரு அறை தான் உங்கள் வீட்டில் இருக்கா? வேறு அறைகளே இல்லையா என்று குத்தலாகக் கேட்டாள் இன்னும் மூன்று அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என் சிறிய தாயாரும் மிகுதி இரு அறைகளிலும் இவ்விரண்டு பேராக நான்கு இராமநாதன் அக்கடமியில் கற்கும் மாணவிகளும் இருக்கின்றனர் என்றேன். அப்ப நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்போம். செலவை இருவருமாகப் பங்கிட்டுக்கொள்வோம் என்றாள் அவள். அது ஒருவிதத்தில் நல்ல யோசனையாக இருந்தாலும் வாடகையே காட்டாமல் இருக்க வீடு இருக்கும்போது எனக்கு ஏன் வீண் செலவு என எண்ணியபடி நீர் உமது அம்மாவுடன் தங்கியிரும். ஒவ்வொருநாளும் வெளியே போகும்போது இருவரும் சேர்ந்து போவோம் என்றேன். உமக்கு என் அம்மாவைப் பற்றி சொன்னால் விளங்காது. நான் அவவிடம் சென்றால் அவதான் எனக்கு முழுப் பாதுகாப்பும் என நினைத்துக்கொண்டு எங்கை போறாய் ? ஆரோடை போறாய்? எத்தினை மணிக்கு வருவாய் என்று சின்னப்பிள்ளை போலவே நடத்துவா. அதுமட்டுமில்லை அயலட்டைக்கெல்லாம் அது இது என்று வாங்கிக் குடு என்று கரைச்சல் வேறை. அதுமட்டுமில்லை இல்லாத கடனெல்லாம் சொல்லி கண்ணீர் விட்டால் எனக்கு ஒண்டும் செய்ய ஏலாமல் போயிடும். அதனால அவவிட்டை நிக்கிறது சரிவாராது என்றாள். சரி யோசிப்பம் என்றுவிட்டு என கணவனின் சகோதரி வீட்டிலும் எல்லா வசதியும் உண்டு. சரி நான் அங்கு நின்றுகொண்டு இவளை எங்கள் வீட்டில் தங்கவைப்போம் என மனதுள் எண்ணிக்கொள்கிறேன். பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற இத்தனை இலகுவாகச் சம்மதித்துவிட்டனரே என மகிழ்வும், நான் இல்லாமல் ஆறு மாதம் இருந்து பாருங்கோ. அப்ப தெரியும் என்அருமை என விசனமும் ஏற்பட்டது. அதன் பின் அங்கு போய் எங்கு எல்லாம் செல்வது, யாரை எல்லாம் சந்திப்பது என்று மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட நின்மதியுடன் வேலைத் தலத்திலும் நான் ஆறுமாத காலம் அங்கு தங்கியிருப்பது பற்றி கூறத் தொடங்கினேன். நான் வேலை செய்வது எனது நண்பனின் தபாற் கந்தோரில் என்பதனால் அவருக்கும் பகிடிபகிடியாக விடயத்தைக் கூற அவரோ நம்பவில்லை. 2019 ம் ஆண்டு கோவிட் வந்தபோது மெசெஞ்சரில் ஒரு குழுவை உருவாக்கி அதில் “சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்” என்னும் குழுவை உருவாக்கி அதில் 143 பேர் அப்போது இணைந்திருந்தனர். அதனூடாக அனைவரின் பங்களிப்புடன் பலருக்கும் உணவுப் பொருட்கள் முதல் பல உதவிகளையும் செய்தபடி இருந்தார் சுப்பிரமணிய பிரபா என்னும் முகநூல் பெயருடைய ஒருவர். அவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவரின் செயற்றிட்டம் எமக்குப் பிடித்திருந்தமையால் அவரின் திட்டப்படி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் உருவாக்கி பலருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் புலம்பெயர்ந்து வாழும் எனைப் போன்ற எட்டுப் பேரும் இலங்கையில் இருக்கும் இன்னொருவருமாக பத்துப்பேர் கொண்ட குழு இதில் இணைந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொருவர் மட்டும் நாட்டுக்குச் சென்று வந்தாலும் பண்ணையை யாருமே சென்று பார்க்கவில்லை. பிரபா அனுப்பும் படங்களிலும் வீடியோவிலும் பண்ணை பரந்து விரிந்து செழிப்பாகக் காணப்பட்டது. நான் அதைப் போய் பார்க்கப்போகிறேன் என்பதும் எனக்கு மகிழ்வையும் ஒரு எதிர்பார்ப்பையும் தந்திருந்தது. ஆரையும் நம்பிக் காசைக் குடுத்திட்டு. உனக்கு வேறை வேலை இல்லை. நான் சொன்னால் கேட்கப் போகிறாயோ? என்ணெண்டாலும் செய்துகொள் என்று பலதடவை மனிசன் புறுபுறுத்தும் நான் கவலைப்படவே இல்லை. என கண்முன்னே பெரிதாய் விரிந்தது பண்ணை. ஒன்று13 points
-
அவர்களை வாழவிடுங்கள்.
4 pointsஅமைதியான நீரோடடமாய் அவர்களது வாழ்வு சென்று கொண்டிருக்கையில், புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் , வயது வந்த பெண்ணுக்கு பெற்றோர் திருமணம் செய்ய ஆசைபடடனார். தமக்கு அறிந்தவர் தெரிந்தவர்களுக்கு சொல்லியும் வைத்தனர். செல்வி இரண்டு அண்ணா மா ருக்கு ஒரு செல்லத்தங்கை . புல ம் பெயர்ந்த தமிழ் தாய் தந்தைக்கு மகளாக வளர்ந்தவள். பெற்றாரும் பெண்பிள்ளை என்ற கிராமத்து வழக்கில் , ஜெர்மனியில் வாழ்ந்தாலும் மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்கள் அவளு க்கு ஒரு நண்பிகளும் இல்லை . பாடசாலைக்கு கூட்டிப்போய் கூட்டி வரும் தந்தை , இவர்களது திருமணம் சற்று வயதான காலத்திலே நடந்தது. செல்வி பிறக்கும் போது தாய்க்கு நாற்பது வயது. சமய கடமைகளி ல் மிகவும் ஊறி போனவர்கள். ஒரு வகை போதகக் கூட்ட்ம் என்றும் சொல்லாம். ஞாயிற்றுக்கிழமை என்றால் முழுக் குடும்பமும் ஜெபக் கூட்ட்த்திலே இருப்பார்கள். மூத்தமகன் பியானோ வாசிக்க இளையமகன் மத்தளம் வாசிக்க பாட்டுக் குழுவில் செல்வியும் முக்கிய அங்கத்தவர். இப்படியாக சர்ச்சும் வீடுமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கையில் அந்தக் கூட்ட்த்தில ஒரு குடும்பத்தினர் இவர்களுக்கு நண்பாராக்கினார். பேச்சு வாக்கில் தமது மகள் திருமணமாகி தமக்கு அருகில் குழந்தைகளுடன் வாழ்வதாகவும். , துபையில் வேலை செய்யும் மகன் தம்மிடம் வந்து சேர்ந்துவிடடால் தமது முழுக்குடும்பமும் ஒன்றிணைந்துவிட்ட் மகிழ்ச்சி எனக் கூறினார். பையனை பற்றி விசாரித்தபோது வயதும் பொருத்தமாக இருக்கவே செல்விக்கு மணமுடிக்க ஆயத்தமாகினர். எல்லா ஒழுங்கும் முற்றுப் பெற்று மாப்பிள்ளை துபாயிலிருந்து தாய் நாடு வந்து, இவர்களும் பெண்ணும் அங்கு சென்று பதிவு திருமணம் செய்யலாம் என முடிவெடுத்தனர். செல்வியையும் தொலைபேசியில் பேச செய்து இருவருக்கும் பிடித்து போக பதிவு திருமணத்துக்கான நாள் முடிவு செய்தனர் தாய கத்துக்கு சென்று , பெரியப்பா வீட்டில் வந்து தங்கியிருந்த மாப்பிள்ளை சகல ஆயத்தங்களும் செய்து இனிதே திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் இவர்கள் ஜெர்மனி திரும் பினார். ஜெர்மனி வந்ததும் சில வாரங்களில் மாப்பிள்ளையை குடும்ப ஒன்றிணைவு மூலம் எடுக்க செல்வி ஆயத்தங்கள் செய்தார் . பத்திரங்களை நிரப்பி தகவல்களை சேகரித்து ஆயத்தங்கள் நடந்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் செல்வியை தங்கள் வீட்டுக்கு அழை த்தனர். அங்கு சென்று மதிய உணவு முடிந்து வீட்டுக்கு வர ஆயத்தமாகும் போது வருங்கால மாமியார் தனியே அழைத்து , செல்வியின் வேலை ,சம்பளம் என எல்லாம் விசாரித்தார். இறுதியில் மகன் இங்கு வந்து கலியாணம் சர்ச் இல் நடந்த பின் தங்களுடன் இருக்க வேண்டுமெ ன்றும் இருவரும் கடன் முடியுமட்டும் தனி க் குடித்தனம் செல்லா நினைக்க வேண்டாமென்றும் , மகனை துபாய்க்கு அனுப்பிய விடயத்தில் கடன் இருக்கு என்றும் மாமியார் செல்வியின் காதில போட்டு வைத்தார். ஏற்கனவே செல்வி கணவன் வந்து தங்க ,ஒழுங்கு செய்யும் போது விண்ணப்பத்துக்கு தேவை என்பதால் அவளது வேலை பார்க்கும் இடத்துக்கு அருகே வீடு பார்த்து அட்வான்ஸ் கட்டி அங்கிருந்து தான் வேலைக்கு செல்கிறாள். மாமியார் வீட்டுக்கு சென்ற செல்வி நேராக தாயிடம் வந்தாள். மிகவும் கோபமாக காணப்படடாள் அழுகையின் மத்தியில் "இவ்வளவு காலம் பொத் தி பொத் தி வளர்த்து ஊர் உலக நடைமுறை தெரியாமல் வைத்து என்னை இப்ப டி ஒரு இடத்தில் தள்ளி விடடீர்களே "என்று குமுறினாள் . தொடர்ந்து "குடும்ப ஒன்றிணைவு விண்ணப்பம் அனுப்ப மாடடேன்" என்றாள் . தாய் தந்தை க்கு இடிவிழுந்த்து போலானது . இப்படிப் பட்ட் மாமியாருக்கு தங்கள் மகளை கொடுத்து விட்டொமே என்று பெருங்கவலை கொண்டனர். மாப்பிள்ளை பெடியனோடு பேசிப்பார்ப்போம் என சமாதானம் செய்யப் பார்த்தனர் . மாப்பிளை வர முன்னமே இப்படி சட்ட்ம் போடும் மாமியாருடன் எப்படி வாழ்வது எம்மை நிம்மதியாக வாழ விடமாட்ட்ர்கள். என்று கோபித்து கொண்டு வேலை இடத்துக்கு அண்மையில் உள்ள வீட்டுக்கு சென்று விடடாள் .வார விடுமுறைக்கு தாய் தந்தையை பார்க்க வரவில்லை. கடைசியில் அவளிடம் சென்று தாய் தந்தை விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிந்தவர் மூலம் தாயகத்தில் ஒழுங்கு செய்தனர். இது இவ்வாறு இருக்கும் போது செல்வியின் தொலைபே சி யோ மடலோ ஒரு மாதத்துக்கு மேலாக வரவில்லை என மிகவும் கவலைப்பட்டு அவன் தாயிடம் தொடர்பு கொண்டு கேட்ட் போது தாய் மேலோட்ட்மாக சொன்னார். அதைக் கேட்ட பையன் மிகவும் கவலைப்படட துடன். தாய் தந்தையிடமே பேச்சு வார்தையற்று இருந்தான். செய்த வேலையையும் விட்டு வந்து ...கலியாணமும் குழம்பி ...என்ன செய்வதென அறியாது .யாருக்கும் சொல்லமால் இந்தியா சென்று விடடான் .. போலீசார் மூலம் தேடியும் ஆள் கிடைக்க வில்லை. என்ன செய்வதென அறியாது தாய் தந்தையர் கவலையோடு இருக்க , மூத்த அண்ணாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவ்ர்களைப்பார்க்க சென்றவளுக்கு இன்னும் துயரம் அதிகமானது . அண்ணி மீது வெறுப்பானது. இவர்களுக்கு எல்லாம் கால காலத்தில் திருமணமாகி குழந்தையுடன் வாழ்கிறர்கள் என மனக் குழப்பம் ஆனது . பொறியில் சிக்கிய மான் போன்ற நிலையில் இருந்தாள் .செல்வி . காலம் உருண்டோடியது ...இரு இளம் உள்ளங்களை மனம் நோக செய்த குற்ற உணர்வில் இரு குடும்பமும் பேச்சு வார்தையற்று இருந்தனர். செல்வியின் தாய் தந்தையர் நோய்யுற்றனர். இருவரும் மண வில க்கு பெறாமல் வேறு திருமணமும் செய்ய முடியாது .இரு உள்ளங்களை ஒன்று சேரவிடாமல் தவிக்க விடட பாவத்தை தே டிக் கொண்டனர். காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என புலம்பலாயிற்று . இவர்களின் வாழ்வை காலம் தான் மாற்ற வேண்டும். உலக நிலைவரம் தெரியாத பெற்றோர் , வெளிநாட்டு சென்றும் பண ஆசை பிடித்த , அறியாமை கொண்ட பெற்ற்வர்கள். இளம் உள்ளங்களின் மன உணர்வுகளைப் புரியாத பெற்ற்வர்கள் இன்னும் வாழ்கிறார்கள். காலம் கணனி மயமாகி விட்ட்து. மாற்றங்களை கிரகித்து மாறா விடடால் நாம் தான் மடையார் ஆவோம். தற்போது இளைய தலை முறை நன்றாக கணித்து விவரம் தெரிந்தவர்களாக உள்ளனர். பெற்ற்வர்கள் அவர்களை நம்ப வேண்டும். பெற்ற்வர்கள் பிள்ளைகளை தோழர்களாக பாவித்து பழக வேண்டும். அப்போது தான் அவர்களும் எதையும் மறை க்காமல் பகிர்ந்து கொள்வார்கள். உண்மை கலந்த கற்பனை .4 points
-
பூபதித்தாயே வணங்குகின்றோம்!
2 pointsபூபதித்தாயே வணங்குகின்றோம்! வாழ்வுத் தேடலில் சுழன்றிடும் தாய்மையின் வரம்பினை உடைத்து வரலாற்றுத் தாயாகி தேசத் துயரினை நெஞ்சினில் ஏந்தியே பாசத் தாயாகிப் பசியேற்று நோன்பிருந்து தமிழீழத்து வெளியெங்கும் நிறைந்தாயே தாயே! நீதிக்காய் இன்னும் கண்திறக்கவில்லை என்று நீதியே சாவுக்குள் நிலையிழந்து கிடந்தாலும் நீதிக்காய் நீண்ட காத்திருப்பு நிச்சயமாய் ஒருநாள் பெருந்தீயாய் எழுகின்ற வேளைவரும் காலமதில் மாமாங்க முன்றலிலே ஒளிதோன்றும் தாயே! நின் பசிதீரும் அப்போது பகலாகும் தாயகமே நிழலரசை இழந்த இனம் நிலையரைசைக் கையேற்கும் எம் இளைய தலைமுறையோ தாயகனின் சிந்தனையை புதிய திசைவழியே பதியமிடும் காலமதில் நின் முகமாக நிலம் பூக்கும்! நிலம் பூக்கும் நீர் நிலைகள் வழிந்தோடும் பாவலரும் ஆடலரும் கூடியுந்தன் புகழுரைப்பர் தமிழீழப் பெண்களது தனித்துவத்தின் குறியீடாய் தமிழ் உலகு உள்ளவரை வாழும் புகழ்படைத்த எழுச்சியின் வடிவான பூபதித்தாயே வணங்குகின்றோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points
-
அந்தக் கண்கள்- நிழலி
1 pointஅந்தக் கண்கள் *************************** அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன. எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது, நாசிகளில் மரணத்தின் வாசனை. . ************************* எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு. மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக. மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும். பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது. ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன். அன்றும் அப்படித்தான் டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது. இரவு 8 மணி. சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது. பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது. தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார். ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். அந்த முட்டைகளின் ருசி தனி ருசி! மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்.... தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர். நான் தொடர்து காரை செலுத்துகின்றேன். திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார். 85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன். என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன. அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார். எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன... அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன.. அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன.. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன. என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன... அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம். ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது. என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன. அழ வேண்டும் போலவும் இருந்தது. நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது. சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. "மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார். "இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன். அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார். என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது. பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன். அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார் மீண்டும் அவ் வழியால் திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன். அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன. நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன். "பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார். "இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள். நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன். அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர். அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார். என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம். யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார். இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும் இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!1 point
-
வெள்ளித் தேரோட்டி...
1 pointசிறுக ஓர் தேர் கட்டி ஊர் கூடி இழுக்க ஆசை வைச்சு.. தமிழ் தேசியம் சில்லாய் வைச்சு கருத்துக்கள் எனும் தடம் பதித்து ஆண்டுகள் 25 தானிழுக்க வெள்ளித் தேராய் ஓடுகிறது அதுவே யாழ் களம்..! களத்தின் நாயகனே மோகன் எனும் முதல்வரே தேரோட்டியாய் தாங்கள் என்றும் அமைய வேண்டும்...! விலகி நின்றாலும் நீங்கள் வழிநடத்த வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் அதன் காலக் கண்ணாடியில்...! வம்புகள் தும்புகள் வந்தாலும் போனாலும் சம்பவங்கள் நொடி மறந்து கருத்தால் வேறுண்டாலும் தமிழால் இணைந்து நவீனத்துவம் உள்வாங்க தொடரட்டும் யாழ் எனும் வெள்ளித் தேர் இழுப்பு...!! இன்று போல் என்றும் ஊர்கூடி இழுக்கட்டும் பொழுதுகள் இனிதே பயனடைய.. மொழியும் மக்களும் தெளிவடைய...!! ஆக்கம்: நெ.போ (31-03-2023)1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point- கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
பிழையான சக்கர சங்கிலி கொண்டுவந்தபடியால் இனி வேலைக்காகது மெதுவாக திரும்ப வேண்டியது தான்.ஆனாலும் எப்படி போவது?பிள்ளைகள் விளையாட வைத்திருந்த பனி அள்ளும் சவல் எடுத்து மெதுவாக தோண்டி தோண்டி கொஞ்சம் கொஞ்சமாக அருகில் இருந்த வீட்டு பாதையில் திருப்பிவிட்டோம்.நியூயோர்க்கில் வண்டி ஓட்டும் போது பனி தொடங்கினால் றைக்சன் கொன்றோலை வேலை செய்யாமல் பண்ணிவிடுவேன்.இது ஓரளவுக்கு பனியை கவ்விப் பிடிக்கும்.நீங்களும் முயற்சி செய்யலாம். இதற்கும் அதே மாதிரி றைக்சன் கொன்ரோலை நிற்பாட்டி போட்டு பெரிய கஸ்டப்பட்டு இருபக்கமும் வந்த வாகனங்களை நான் மறிக்க பின்பக்கமாக வெளியே வீதிக்கு வந்துவிட்டது.இனி பள்ளம் என்றபடியால் மெதுவாக போய் சேர்ந்துடலாம். எனக்கும் கால் விறைத்து இயலாத கட்டம்.வானுக்குள் ஏறியவுடன் சப்பாத்து ஒன்று இரண்டு சொக்ஸ் எல்லாம் களட்டி போட்டு சூட்டையும் காலுக்கு படக்கூடிய மாதிரி திருப்பிவிட்டு இருந்தேன்.போன உயிர் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது போல இருந்தது.கொட்டேலுக்கு போய் உடைகளை மாற்றிவிட்டு எல்லோரும் ஒரு குட்டி தூக்கம். எழும்பி பார்த்தால் பெரியபெரிய தடலாக பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுது.எல்லா அறைக் கதவுகளிலும் அறிவித்தல் ஒட்டப்பட்டிருக்கிறது. இப்போது முதல் மறு அறிவித்தல்வரை அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.சக்கரத்துக்கு சங்கிலியோ வாகனத்துக்கு நான்கு சக்கரத்துக்கும் பிடிப்புள்ள வாகனம் மட்டுமே வீதியில் ஓடலாம் என்று இருந்தது.மதிய சாப்பாடும் அம்போ தான்.வீட்டிலிருந்து கொண்டு போன ரூணா பாண் வாழைப்பழம் இதை வைத்து ஒருமாதிரி சமாளித்தாகிவிட்டது.இனி என்ன செய்வது திரும்பவும் படுக்கை தான்.பிற்பகல் எழும்பி வாகனத்தை கொஞ்சம் துப்பரவாக்கி வைத்திருந்தால் நாளைக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று வெளியே போனால் இந்த நிலையில் வாகனம். விடுதியில் இருந்த சவல் தும்புதடியைக் கொண்டு மகளும் மருமகனும் துப்பரவாக்கினர்கள்.எனது சப்பாத்து இன்னமும் ஈரமாக இருந்ததால் என்னால் உதவி செய்ய முடியவில்லை. பனிப் பொழிவுக்கு மத்தியிலும் நீச்சல் தடாகத்தில். பனிப் பொழியும்.1 point- 50 வருடங்களின் பின்னர் நிலவுக்கு பயணிக்கவுள்ள விண்வௌி வீரர்கள்
இணைப்பிற்கு நன்றி! நிலவுக்குப் போகும் முதல் பெண் இவர். ஆனால், 60 களில் விண்வெளிக்குப் போன முதல் பெண்ணாக ரஷ்யாவின் வலன்ரீனா ரெறஸ்கோவா இருக்கிறார். தற்போது யுனைரட் ரஷ்யா கட்சியின் சார்பில் ரஷ்ய நாடாளுமன்ற (Duma) உறுப்பினராக இருக்கிறார்.1 point- கறுப்புப் பட்டியல்
1 pointவணக்கம், முற்றிலும் பக்கச்சார்பான செய்திகளையும், பிரச்சார நோக்கில் சோடிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தமையால் RT News பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு RT News இன் நேரடி இணைய இணைப்பும் பல இணைய வழங்கிகளால் தடுக்கப்பட்டுள்ளது. யாழ் இணையம் நம்பகத்தன்மையையான தகவல்களையே அனுமதிக்கும் என்பதால் RT News கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, RT News இலிருந்து நேரிடையாகவோ அல்லது அதன் செய்திகளை பிரதியிடும் வேறு தளங்களில் இருந்து செய்திகள் யாழில் காவப்படுவதும், பிரசுரிப்பதும் களவிதிகளை மீறிய செயற்பாடுகளாக கருதப்படும் என்றும், இவ்வறிவித்தலை சட்டைசெய்யாது செயற்படுவர்கள் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டுவரப்படுவார்கள் என அறியத்தருகின்றோம். நன்றி1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointயாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பிரபாகரன் நீர்வேலி வங்கிக்கொள்ளை, தங்கத்துரை குட்டிமணியின் கைதுகள், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலின்போது இடம்பெற்ற அரச பயங்கரவாதம் ஆகியவை தமிழ்ப் போராளி அமைப்புக்கள் மீது அரச இராணுவம் பாரிய தேடியழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வழிசமைத்திருந்தது. இதனால், யாழ்க்குடாநாட்டில் தனது இரகசிய மறைவிடங்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பது உகந்ததல்ல என்பதனை பிரபாகரன் உணரத் தொடங்கினார். மிகுந்த களைப்படைந்த நிலையிலும், பலவீனமாகவும், சோர்வாகவும் காணப்பட்ட பிரபாகரன் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை நடத்தும் பொறுப்பினை மாத்தையாவிடம் அப்போதைக்குக் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டிற்குப் பயணமானார். பிரபாகரனும் அவரது நம்பிக்கைக்குரிய சில இளைஞர்களும் 1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் 6 ஆம் திகதி அதிகாலை படகு மூலம் தமிழ்நாட்டின் வேதாரணியத்திற்குத் தப்பிச் சென்றனர். வேதாரணியத்தின் வரைபடம் ஆனால் அந்தக் கடற்பயணம் இலகுவானதாக இருக்கவில்லை. தனக்கு நம்பிக்கையான எம். கே. சிவாஜிலிங்கத்தினூடாக (டெலோ உறுப்பினர்) தனது பயணத்திற்கு படகு ஒன்றினை ஒழுங்குசெய்யுமாறு பிரபாகரன் கேட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி இரவு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் தமது தேர்தல் வெற்றியை வெடிகொழுத்திக் கொண்டாடிக்கொண்டிருக்கும்வேளை, பிரபாகரனும் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் 10 இளைஞர்களும் வல்வெட்டித்துறைப் பொலீஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த வீடொன்றிற்கு இரகசியமாக வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ஒரு ஜி - 3 ரைபிள், ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு உப இயந்திரத் துப்பாக்கி, ஒரு ஒற்றைச் சூட்டுத் துப்பாக்கி மற்று சில கைத்துப்பாக்கிகள் ஆகிய ஆயுதங்கள் இருந்தன. திடீரென்று ஒரு துப்பாக்கி வெடித்துவிட்டது, ஆனால் அவர்களின் அதிஷ்ட்டமாக கட்டிலின் மெத்தையொன்றிற்குள் சன்னம் புகுந்துகொண்டதனால் சத்தம் வெளியே கேட்கவில்லை. மறுநாள் , ஆனி 6 ஆம் திகதி, முழுநாளும் அவர்கள் அந்த வீட்டிலேயே ஒளிந்திருந்தனர். அன்று இரவு, படகுப் பயண்த்திற்காக கடற்கரை நோக்கி அவர்கள் மெதுவாக நகர்ந்து செல்கையில் இராணுவ ஜீப் வண்டியின் விளக்கு வெளிச்சத்தினைக் கண்ணுற்றார்கள். உடனேயே கடற்கரை மணலில் வீழ்ந்து படுத்துக்கொண்ட அவர்கள், தாம் கிடந்த பகுதியினை அந்த ஜீப் வண்டி கடந்து செல்லும்வரை அசையாது கிடந்தார்கள். "படகில் பயணிக்கும்போது பிரபாகரன் சிந்தனையில் மூழ்கியிருந்தார். பின்னால் தொலைவில் மறைந்துகொண்டிருக்கும் கடற்கரையினைப் பார்த்துக்கொண்டு இருந்த அவர், தமிழ் மக்கள் மீது ஜெயார் நிகழ்த்திவரும் அட்டூழியங்களுக்குப் பழிவாங்கியே தீருவேன் என்று சொல்லிக்கொண்டார்" என்று அன்றிரவு அவருடன் படகில் தமிழ்நாட்டிற்குச் சென்றுகொண்டிருந்த கிட்டு பின்னர் எழுதியிருந்தார். வைகாசி 31 ஆம் திகதியிலிருந்து ஆனி 2 ஆம் திகதி வரையான மூன்று நாட்களிலும் நடைபெற்ற நிகழ்வுகள், தமிழ் மக்களின் உரிமைகளையும், சுய கெளரவத்தையும், கண்ணியத்தையும் மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவாவினை அவருள் அதிகரித்திருந்தது. "தம்மிடமிருக்கும் அதிகார மமதையிலும், தமக்கு எதுவுமே ஆகப்போவதில்லை என்கிற அகம்பாவத்திலும் சிங்களவர்கள், தமிழர்களின் கலாசாரத் தலைநகரையும், தமிழர்களின் பொக்கிஷமான நூலகத்தையும் எரித்தார்கள். தமிழர்கள், அவர்கள் நினைப்பதுபோல அக்கிரமங்களுக்கு அடங்கிக் கிடக்கும் இனமல்ல என்பதை சிங்களவர்களுக்கு நிச்சயம் புரியவைப்போம்" என்று அவர் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். 1958 ஆம் ஆண்டு, எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் சைவ மதகுரு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம், 1974 ஆம் ஆன்டு சிறிமாவின் ஆட்சியில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒன்பது அப்பாவிகளின் படுகொலைச் சம்பவம், 1981 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் யாழ்நகரும், யாழ் நூலகமும் எரியூட்டப்பட்ட சம்பவம் ஆகியவையே பிரபாகரனை ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டம் ஒன்றினை உருவாக்கவும், தொடர்ந்து முன்னெடுக்கவும் உந்தித் தள்ளியிருந்தது என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டிற்குப் பாதுகாப்பாக வந்திறங்கிய பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையான விடயங்களில் தன்னை ஈடுபடுத்தத் தொடங்கினார். அன்றிலிருந்து தனது இலட்சியத்தின்மீது தான் கொண்டிருந்த உறுதியிலும், அர்ப்பணிப்பிலும் எந்த விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி செயற்பட்டு வரலானார். தமிழ்நாட்டின் சிறுமலை காட்டுப்பகுதியில் பயிற்சியில் ஈடுபடும் பிரபாகரனும் புலிகளும் தனது இயக்கத்திற்கென்று சிறுமலை, பொள்ளாச்சி மற்றும் மேட்டூர் ஆகிய காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பான வாழ்விடங்களை அவர் உருவாக்கினார். இந்த மறைவிடங்களிலேயே புலிகள் இயக்கத்திற்குச் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் ஆயுதப் பயிற்சியிலும், தொலைத் தொடர்புக் கருவிகளை உபயோகிப்பதிலும் பயிற்றப்பட்டனர்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointநூலக எரிப்பின் பின்னாலிருக்கும் மர்மமும் யாழ் நூலகத்தை எரித்த பொலீஸ் காடையர்களைக் காப்பாற்ற ஜெயார் ஆடிய நாடகமும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட இராணுவப் பிரிவின் உண்மையான நோக்கம் யாழ் நூலத்தை எரிப்பதும், ஏற்கனவே தம்மால் அடையாளம் காணப்பட்ட யாழ்நகரின் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை எரிப்பதும் தான் என்று எதிர்க்கட்சிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தன. இதேவகையான விமர்சனங்களையே அமிர்தலிங்கமும் தான் ஜனாதிபதிக்கு ஆனி 2 இல் எழுதிய கடிதத்திலும், ஆனி 9 அன்று பாராளுமன்றத்தில் தனது பேச்சிலும் குறிப்பிட்டிருந்தார். இக்குற்றச்சாட்டுக்களை மறுக்க அரசு ஒருபோதுமே முயன்றிருக்கவில்லை என்பதன் மூலம், இக்குற்றச்சாட்டுக்களை அரசு ஆமோதித்திருந்தது என்பது தெளிவாகிறது. இக்குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயாரும், ஏனைய ஆளும்கட்சி உறுப்பினர்களும் அரச படைகள் இத்தாக்குதல்களில் ஈடுபடவில்லையென்றும், தமது சகாக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைக் கண்ணுற்ற பொலீஸாரே வன்செயல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறி இத்திட்டமிட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தியிருந்தனர். மேலும், எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனத்தில் இந்த அக்கிரமங்கள் நடந்தவேளை முக்கிய அமைச்சர்களும், பாதுகாப்புத் தலைமை அதிகாரிகளும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இந்த வன்செயல்களை ஊக்குவித்திருந்தது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும் கூறியிருந்தன. இந்த வன்முறைகளின் பொழுது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இரு முக்கிய அமைச்சர்களும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்காவும், கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவும் தான் என்பது குறிப்பிடத் தக்கது. அதேவேளை பொலீஸ் மற்றும் இராணுவத்தின் அதிகாரிகளாக வன்முறைகளின்போது அரச காடையர்களுக்குத் தலைமை தாங்கியோர் பாதுகாப்புச் செயலாளர் கேணல் சி.ஏ. தர்மபால, அமைச்சரவைச் செயலாளர் ஜி.வி.பி. சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் ஆனா செனிவிரட்ண, இராணுவத்தின் அதிகாரிகளின் பிரதானி பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க மற்றும் உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன ஆகியோராகும். வன்முறைகளின்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இரு அமைச்சர்களும் ஜெயாரின் அரசாங்கத்தில் மிகவும் பலம்வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டதுடன், ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் அறியப்பட்டவர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்களை தலைமையேற்று வழிநடத்தவென்று ஜெயாரினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தொழிற்சங்கக் காடையர்கள் என்று பெயர்பெற்ற ஜாதிக சேவக சங்கமய எனும் குண்டர் பிரிவை சிறில் மத்தியூ வழிநடத்த, லங்கா ஜாதிக எஸ்டேட் சேவக சங்கமய எனப்படும் சிங்கள மலையகத் தொழிற்சங்கக் காடையர்களை காமிணி திஸாநாயக்கா வழிநடத்தி வந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் விரோதிகளுக்கெதிரான திட்டமிட்ட வன்முறைகளில் ஈடுபடுத்துவதற்கென்று இவ்விரு காடையர் கூட்டங்களும் அரசால் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வந்தன. இந்த அமைச்சர்கள் இருவரும் தம்முடன் இக்காடையர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். ஜெயாரின் ஆலோசகராக கடமையாற்றிய தமிழரான பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் எழுதிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இலங்கைத் தமிழர்களும்" எனும் புத்தகத்திலிருந்து ஒரு கூற்று , "யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் காமிணி திஸாநாயக்கா அங்கு நடந்த விடயங்கள் குறித்து சில தகவல்களை தொலைபேசியூடாக என்னுடன் பகிர்ந்துகொண்டார். காமிணி, எனது சகலையான செல்வநாயகம் சந்திரகாசனின் நெருங்கிய நண்பர் என்கிற முறையில்க் கூட இத்தகவல்களை என்னுடன் பகிர்ந்துகொண்டிருக்கலாம். எனக்குத் தெரிந்ததெல்லாம், காமிணி என்னுடன் தொலைபேசியில் பேசும்பொழுது, அவருக்கருகில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும் இருந்திருக்கிறார் என்பதுதான். அருகிலிருந்து ஜெயார் காமிணிக்குச் சொன்ன இரகசியங்களை காமிணி இன்று மறந்திருக்கலாம்". சிங்களக் காடையர்களான ஜெயவர்த்தனவும் காமிணி திஸாநாயக்கவும் காமிணி திஸாநாயக்க என்னுடன் பேசுகையில், "பொலீஸார் தமது சகாக்கள் கொல்லப்பட்டதால் மிகுந்த கோபம் கொண்டிருந்தார்கள்" என்று கூறினார். நூலகம் எரிக்கப்பட்ட இரவில் கோபம் தலைக்கேறிய நிலையில் பொலீஸார் வன்முறையில் ஈடுபட்டனர். தமது சகாக்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கியே தீருவோம் என்று அவர்கள் சபதம் எடுத்திருந்தனர். ஆனால், யாழ்ப்பாணத்தின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சிறில் மத்தியூ எதற்காகத் தலையிட்டார் என்பதுபற்றி காமிணி வாயே திறக்கவில்லை. அவர் என்னிடம் சிறில் மத்தியூ தொடர்பாகக் கூறிய ஒரே விடயம், "நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமாகும்போது என்னையழைத்த ஜனாதிபதி ஜெயவர்த்தனா, சிறில் மத்தியூ பல பஸ்களில் ஆட்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் போகிறார், அவர் மீது ஒரு கண் இருக்கட்டும்" என்று கூறினார் என்பது மட்டும்தான். ஆனால், இதில் எனக்குப் புரியாத விடயம் என்னவென்றால், தனது அடியாட்களை பஸ்களில் கூட்டிக்கொண்டு சிறில் மத்தியூ யாழ்ப்பாணம் போகிறார் என்று தெரிந்தும் அவரை ஜெயவர்த்தனா ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பதுதான். காமிணி என்னுடன் மேலும் பேசும்போது, யாழ்ப்பாணத்தில் இயங்கிய மதுபான விற்பனை நிலையங்களை உடைத்துச் சூறையாடிய பொலீஸாரும், இராணுவத்தினரும் போதை ஏற்றிக்கொண்டே வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்று கூறினார். பொலீஸாரும், இராணுவத்தினரும் வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது காமிணியும் முன்னணியில் நின்று இவற்றினை ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து மேற்பார்வை செய்துகொண்டிருந்திருக்கிறார். இவற்றைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. "அவர்கள் போதை தலைக்கேறி, ஆவேசத்துடன் வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நான் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றேன், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனது வாழ்நாளில் மரணத்திற்கு மிக அருகில் நான் அதுவரை சென்றிருக்கவில்லை. வன்முறைகளில் ஆவேசத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர்களைப் பார்த்து ஒருவார்த்தைதன்னும் நான் பேசியிருந்தால், அவர்கள் தங்கள் கோபம் அனைத்தையும் என்மீது திருப்பி, எந்தத் தயக்கமும் இன்றி என்னையும் கொன்றிருப்பார்கள். அவர்களின் வன்முறைகளை மெளனமாக ஆமோதித்து அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. ஆனால், அவர்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரிக்கும் நாசச்செயலில் ஈடுபடுவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை" என்று காமிணி என்னிடம் கூறினார். தான் கூறியதெல்லாம் உண்மையே என்று கூறி தனது தொலைபேசித் தொடர்பை அவர் முடித்துக்கொண்டார். மறுநாள் என்னைச் சந்தித்த ஜனாதிபதி ஜெயார், நடந்தவற்றை அப்படியே காமிணி என்னிடம் கூறியிருப்பதாகக் கூறினார். கீழுள்ள காமிணியின் அறிக்கை சில விடயங்களை ஏற்றுக்கொள்கிறது, பொலீஸாரே யாழ் நூலகத்தை எரித்தனர். "எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை, ஆகவே அவர்கள் செய்வதை நான் அனுமதித்தேன்" - இந்தக் கூற்றைக் கவனியுங்கள். காமிணி வன்முறைகளின்பொழுது முன்னால் இருந்திருக்கிறார். பொலீஸாரின் அளவிற்கு மீறிய ஆவேசமும், கோபமும், பழிவாங்கும் உணர்வுமே நூலகம் எரிக்கப்படக் காரணமாகியிருந்தன என்று காமிணி கூறுகிறார். இலங்கையின் இந்தியத் தலையீடு எனும் புத்தகத்தினை எழுதிய சிங்கள இனவாதியான ரொகான் குணவர்த்தன ஒரு அத்தியாயத்தில் பின்வருமாறு கூறுகிறார், " பொலீஸ் மா அதிபரான ஆனா செனிவிரட்ன என்னுடன் பேசும்போது யாழ்ப்பாணத்திற்கு அப்போது வந்திருந்த உதவிப் பொலீஸ் மா அதிபரும், ஒரு முக்கிய அமைச்சரும் பொலீஸாரின் கோபத்தை விஸ்வரூபமாக்கி, அவர்களை உணர்ச்சியூட்டி ஆவேசப்படுத்தினர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து யாழ் நூலகத்தை எரித்தனர் என்று கூறினார்" - பக்கம் 72 இல் இது பதியப்பட்டிருக்கிறது. நூலகம் எரிக்கப்பட்ட கொடுஞ்செயலில் தனது பெயரும் தொடர்ச்சியாக பிணைக்கப்பட்டு செய்திகள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் காமிணி திசாநாயக்கா, தான் பொலீஸாரைத் தூண்டிவிட்டு நூலகத்தை அவர்களுடன் சேர்ந்து எரிக்கவில்லையென்றும், அவர்களைச் சமாதானப்படுத்தி வன்முறைகளைக் கட்டுப்படுத்தவே முயன்றதாகவும் பிடிவாதமாகக் கூறிவந்தார். ஜெயவர்த்தனாவும் தனது பங்கிற்கு நூலக எரிப்பு விடயத்திலிருந்து எப்படியாவது தனது அடிவருடியான காமிணியின் பெயரைத் துடைத்துவிட பகீரதப் பிரயத்தனம் செய்துவந்தார். ஆனால், காமிணியே ஒரு கட்டத்தில் இச்செயலுக்கான அவமானத்துடன் வாழ்நாளைக் கழிக்கவேண்டியிருக்கிறது என்று பேராசிரியர் சிவத்தம்பி உட்பட பல தமிழர்களிடம் வாய்விட்டுக் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 1991 ஆம் ஆண்டு, இன்னொரு சிங்கள இனவாதியான லலித் அதுலத் முதலியுடன் சேர்ந்து அன்றைய ஜனாதிபதி பிரேமதாசவுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை காமிணி திஸாநாயக்கா கொண்டுவந்தபோது, பிரேமதாசா யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தை மீளவும் பேசுபொருளாகக் கொண்டுவந்தார். 1991 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி புத்தளம் சகிராக் கல்லூரியின் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமதாச பின்வருமாறு கூறினார், "1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலின்போது, எமது கட்சியின் சில முக்கிய அமைச்சர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல பஸ்களில், நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து திரட்டிய தமது அடியாட்களையும் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தனர். யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் இவர்கள் ஈடுபட்டதோடு தேர்தல்களையும் குழப்பியிருந்தனர். அன்று யாழ்ப்பாணத்தில் கலகம் விளைவித்த அதே ஆட்கள்தான் இன்றும் கலகம் ஒன்றை உருவாக்க முயல்கின்றனர். அன்று விலைமதிப்பற்ற வரலாற்றுப் புத்தகங்களை நூலகத்துடன் எரித்தவர்கள் யாரென்று நீங்கள் தேடினால் இன்று எனக்கெதிராக கலகம் செய்யக் காத்திருப்பவர்களின் முகங்களே அவை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்" என்று வெளிப்படையாகவே யாழ் நூலக எரிப்பிற்கும் காமிணி திசாநாயவுக்கும் இடையிலிருக்கும் நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தியிருந்தார். . மூன்று நாட்களுக்குப் பின்னர், 1991 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 19 ஆம் திகதி கண்டியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி பிரேமதாச யாழ் நூலகத்தை முன்னால் நின்று எரித்தது காமிணி திஸாநாயக்கதான் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். கொல்லப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அமிர்தலிங்கத்தின் கருத்துப்படி ஆசியாவின் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகத்தை எரித்தது மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திஸாநாயக்கதான் என்று உறுதியாக நம்பியிருந்தார். 1981 ஆம் ஆண்டு ஆனியில் நான்குநாள் பயணமாக அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருடன் பயணிக்கும் ஊடகவியலாளர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். யாழ் நூலகத்திற்கு அருகாமையிலிருந்த திறந்த வெளி அரங்கில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரேமதாசவின் செயலாளரான பிரட்மன் வீரக்கோனுடன் அரங்கின் முன்வரிசயில் நானும் அமர்ந்திருந்தேன். அங்கு பேசிய பிரேமதாச, யாழ் நூலகத்தின் பக்கம் தனது கையைக் காட்டி, " "அந்த கம்பீரமான கட்டடத்தைப் பாருங்கள். அது யாழ்ப்பாணத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்று என்னிடம் கூறினார்கள். யாழ்ப்பாணத்து மக்கள் இந்தப் பொக்கிஷம் குறித்து மிகவும் பெருமைப்படுகிறார்களாம். அது இலங்கையின் நூலகம் என்பதால் நாமும் இதுகுறித்துப் பெருமைப்பட வேண்டும். இது உங்களின் பொக்கிஷம் மட்டும் அல்ல, எங்களதும் தான். ஏனென்றால் நாம் எல்லோரும் இலங்கையர்கள்" என்று அவர் பேசினார். 1991 இல் கண்டியில் தன்மீது பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு காமிணி திஸாநாயக்க பதிலளித்திருந்தார். சுமார் 5 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதமொன்றினை ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எழுதிய காமிணி, அதன் பிரதிகளை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்திருந்தார். அந்த வகையில் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கும் காமிணியின் கடிதத்தின் பிரதியொன்று கிடைத்திருந்தது. அதனை ஆசிரியர் என்னிடம் கொடுத்திருந்தார். பிரேமதாசா மீதான காமிணி மற்றும் லலித் அத்துலத் முதலியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகச் செய்திகளைத் தயாரித்து வந்ததினால், இந்தக் கடிதமும் எனக்கே வழங்கப்பட்டிருந்தது. ஆகவே, நான் இக்கடிதம்பற்றிய செய்தியை பத்திரிக்கையில் பதிந்துவிட்டு, கடிதத்தின் மூலப்பிரதியை என்னுடனேயே வைத்திருக்கிறேன். தனது கடிதத்தில் காமிணி மூன்று விவாதங்களை முன்வைத்து, யாழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நிறுவுவதற்கு முயன்றிருந்தார். அவையாவன, 1. தான் நூலகம் எரிக்கப்பட்ட நாளில் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லையென்றும், தான் பண்டாரவளையின் வெலிமடைப்பகுதியில் இருந்ததற்கான பயண ஒழுங்குப் பத்திரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் காமிணி கூறினார். 2. பாராளுமன்றத்தில் நூலக எரிப்புப் பற்றிப் பேசிய அமிர்தலிங்கம், காமிணி நூலக எரிப்பில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை ஒருபோதும் சொல்லவில்லையென்று அவர் வாதாடினார். 3. 1981 ஆம் ஆண்டு, எதிர்க்கட்சிகள் தன்மீது நூலக எரிப்பிற்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது, அப்போது பிரதமராக இருந்த பிரேமதாசவே தனக்குச் சார்பாக வாதாடியிருந்தார் என்றும் காமிணி கூறியிருந்தார். ஆனால், காமிணியின் காரணங்களை முற்றாக ஒதுக்கித் தள்ளிய பிரேமதாச, யாழ் நூலகத்தை எரித்தது காமிணி திஸாநாயக்கவே என்றும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். அத்துடன், அவர் இன்னொரு ரகசியத்தையும் கூறினார். அதாவது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தீர்மானம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டபோது காமிணி திஸாநாயக்க அதனை முழுதாக எதிர்த்தார் என்றும் பிரேமதாச கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை காமிணியோடு சேர்ந்து இன்னும் இரு அமைச்சர்கள் எதிர்த்திருந்தனர். அவர்கள் யாரெனில், அமைச்சர் சிறில் மத்தியூவும், அமைச்சர் காமிணி ஜயசூரியவுமாகும். "தமிழர்களுக்கென்று எந்த அதிகாரமும் கொடுக்கப்படலாகாது" என்பதே காமிணி திஸாநாயாக்க உட்பட்ட மூன்று அமைச்சர்களினதும் நிலைப்பாடாக இருந்தது. இனங்களுக்கிடையிலான நீதிக்கும், சமத்துவத்திற்குமான இயக்கம் எனும் அமைப்பு யாழ் நூலக எரிப்புப் பற்றி விசாரிப்பதற்கு தூதுக்குழு ஒன்றினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தது. அதன் அறிக்கையின் படி, "மிகவும் அவதானமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்படி, யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட வன்முறைகளும், நூலக எரிப்பும் மிகவும் திட்டமிட்ட வகையில் நூறிலிருந்து 175 பொலீஸாரைக் கொண்ட குழுவொன்றினால் நடத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது". அந்த அமைப்பு பின்வரும் சம்பவத்தையும் பதிவுசெய்திருந்தது, கண்டியிலிருந்து காங்கேசந்துறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சிங்களப் பாதிரியார் ஒருவரை சுமார் யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் காக்கிக் காற்சட்டையும், வெண்ணிற பெனியன்களும் அணிந்திருந்த மூன்று நபர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். தாக்குதலாளிகளுடன் முற்றான சீருடையில் ஒரு பொலீஸ் அதிகாரியும் சம்பவ இடத்தில் நின்றிருக்கிறார். வாகனத்தின் முன் கண்ணாடியை இரும்புக் கம்பிகளால் அடித்து நொறுக்கிய பொலீஸார், வாகனத்தின் சாரதியையும் கடுமையாகத் தாக்கியபோது அவர் நினைவிழந்து வீழ்ந்திருக்கிறார். வாகனத்தின் நடத்துனரான சிங்களவரும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தம்மால் தாக்கப்பட்ட மூவரும் சிங்களவர்கள்தான் என்பதை உணர்ந்தபின்னர், தாக்குதலில் ஈடுபட்ட பொலீஸார், அவர்களை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து ஜீப் வண்டியில் ஏறிச் சென்றிருக்கிறார்கள். யாழ் பொலீஸ் நிலையத்திற்கு தம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி சிங்களப் பாதிரியார் முறையிடச் சென்றவேளை, அங்கிருந்த பொலீஸார் அதனை ஏற்க மறுத்து விட்டார்கள். யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த மூன்று சிங்களவர்களையும் அங்கு பணிபுரிந்த தமிழ் வைத்தியர்களும், தாதிமாரும் மிகவும் அன்புடனும், கனிவுடனும் பராமரித்திருக்கிறார்கள். யாழ் வைத்தியசாலையின் கட்டிலில் படுத்திருந்தபடியே பற்றியெரியும் யாழ்நகரை அந்தச் சிங்களப் பாதிரியார் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். லயனல் பெர்ணான்டோ பொலீஸாரின் திட்டமிட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த வன்முறைகளிலும், நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்ட பொலீஸாரையும் அதிகாரிகளையும் விசாரித்துத் தண்டனை வழங்கவேண்டும் என்றும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து அரசு மீது கடுமையான அழுத்தங்கள் எழுந்து வந்தன. இந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்ய ஜெயார் ஒரு சூழ்ச்சியைச் செய்தார். அதுதான், பொலீசாரின் வன்முறைகளை விசாரிக்க பொலீஸ் திணைக்களத்தில் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொள்ளப்போவதாக அவர் அறிவித்தார். விசாரணைகளின் அதிகாரியாக கிங்ஸ்லி விக்கிரமிசிங்க நியமிக்கப்பட்டதுடன், அவர் சாட்சிகளைப் பதிவுசெய்ததோடு, அடையாள அணிவகுப்புக்களினூடாக 187 பொலீஸார் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்கள் தடுத்தும் வைக்கப்பட்டனர். அதன்பிறகு இதுகுறித்து அரசோ, பொலீஸாரோ எதனையும் செய்ய முற்படவில்லை. விசாரணையும் அத்துடன் முற்றுப்பெற்று விட்டது. ஜெயாரின் அடக்குமுறை அரசின் இலக்கணமான "தமிழரைத் தாக்குவோரைக் கெளரவிப்பது" என்பதற்கமைய அத்தனை பொலீஸாரும் பதவியுயர்வு வழங்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து சிங்களப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்து அனுப்பிவைக்கப்பட்டனர். நிவாரணத்திற்கான வேண்டுகோள்களை அடக்குவதற்கு முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரான லயனல் பெர்ணான்டோவை நிவாரணங்களை மதிப்பீடு செய்யும் அதிகாரியாக ஜெயவர்த்தன நியமித்தார். லயனல் பெர்ணான்டோவும் ஜெயாரின் விருப்பத்தின்பேரில் யாழ் நூலக எரிப்பிற்கு நிவாரணமாக பத்து லட்சம் ரூபாய்களைக் கொடுக்கலாம் என்று மதிப்பிட்டார். நிவாரணக் கொடுப்பனவை ஒருவருடம் வரை தாமதித்து மெளனம் காத்த ஜெயார், 1982 ஆம் ஆண்டு ஆனி 10 ஆம் திகதி யாழ் நூலகத்தை மிளக் கட்டுவதற்கான தேசிய நிதி எனும் திட்டத்தை ஆரம்பித்தார். ஆனால், லயனல் பெர்ணான்டோ மதிப்பிட்ட பத்து லட்சம் ரூபாய்களைக் காட்டிலும் மிகக் குறைந்தளவு பணத்தையே ஜெயவர்த்தனா நூலகப் புணரமைப்பிற்குக் கொடுத்திருந்தார்.1 point- எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
1 point- படம் கூறும் கதைகள்
1 point- படம் கூறும் கதைகள்
1 point- படம் கூறும் கதைகள்
1 pointமாதகல் மயிலிட்டி தொண்டமானாறு கரையோரமாக செல்லும் இந்து சமுத்திரத்தின் உப்புக்காற்றை கொண்டுவரும் வீதி வழி சென்று உள்ளேன். மிக மோசமான நிலையில் வீதி உள்ளது. நிறைய திருத்த வேலைகள் செய்யவேண்டும். வாகனத்தில் சென்று ஆசனம் புளிக்கின்றது. கிட்டத்தட்ட அந்த கரையோரம் முழுவதும் இப்படியான காட்சிகள் தொடரும். இந்த பெரிய பிரபஞ்சம் எல்லைகள் இன்றி எவ்வளவு பரந்து விரிந்துள்ளது. சற்று உன் கண்களை அகலத்திறந்து பார்த்து, உணர்ந்து அமைதி கொள்வாய் மனிதா!1 point- படம் கூறும் கதைகள்
1 pointஅந்த வடலிக்கை இருந்ததையே பிரபாவின் கமராக்குள் அமுக்கி விட்டாவே.கெட்டிக்காரி.1 point- படம் கூறும் கதைகள்
1 pointஇரண்டுமே நினைவிற்கான குறியீடாக காட்டி ஒற்றுமையாக இருந்தாலும் கசகசாவைப் போற்றுபவர்கள் காந்தளினையும் போற்றும் காலம் வராதா! என நினைப்பதுண்டு.. வருகைக்கும் கவிதைக்கும் நன்றி Goshan.. காகிதப்பூக்கள் என்றாலும் கூட அவர்கள் அவற்றை பேணிப் பாதுகாக்கும் நிலை எங்களைவிட வித்தியாசமானதே.... கண்ணீர்ப் பூக்களாகிய காந்தளை நாங்கள் எப்படி நினைவூறுகின்றோம்? நன்றி அண்ணா வருகைக்கும் கருத்திற்கும் கொஞ்ச காலத்திற்கு முன்பு Canberraவில் உள்ள Australian War Memorial Museumத்திற்கு சென்றிருந்த பொழுது அங்கே சுவரில் பதிக்கப்பட்டிருந்த காதிக கசகசா பூக்களைப் பார்த்தவுடன் எனக்கு காட்டில் பூத்திருக்கும் எங்களது காந்தளே நினைவுற்கு வந்தது.. நன்றி அங்கிள் வருகைக்கும் கருத்திற்கும்.. அண்மையில் முள்ளிவாய்க்கலிற்கு போயிருந்த பொழுது வீதியோரத்தில் காந்தள் கொடி ஒன்றை வளர்ந்துவரும் பனையின் ஓலைகள் மூடி மறைத்து இருந்த காட்சி..1 point- தையல்கடை.
1 pointதச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(7). கடை வழமைபோல் நடந்து கொண்டிருக்கு. கடைச் சாவி இப்போதும் பிரேமாவிடம்தான் இருக்குது. சுமதி பின்னேரம் வரும்போது அநேகமாக பிரேமா ரேணுகா கடையில் இருக்க மாட்டார்கள். மிருதுளாவும் கபிரியேலும் வேலை செய்துகொண்டு இருப்பார்கள். பின் மிருதுளாவும் அன்றைய கணக்கு வழக்குகளை சுமத்தியிடம் விபரித்து விட்டு போவது வழக்கம். கபிரியேலும் சுமதியும் அதன்பின் 20:00 மணிவரை வேலை செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு செல்வார்கள். இரு வாரங்களின் பின் சித்தப்பா அவள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் ஆதாரங்களுடன் கூறிய தகவல்களைப் பார்த்த போது சுமதிக்கு தலை வெடித்து விடும் போல் இருந்தது. சித்தப்பா கடையில் நடப்பனவற்றை தன்னிடமிருந்த சிறிய ரகசிய கமராவில் பதிவு செய்து வைத்திருந்தார். அவர் தந்த தகவல்கள் படி.........! --- கடை காலை 09:00 / 09:30 மணிக்கு மேல்தான் தினமும் பிரேமா வந்து கடை திறக்கிறாள். அதுவரை ரோகிணி, மிருதுளா வீதியில் அல்லது தேநீர் கடைகளில் இருக்கிறார்கள். பல வாடிக்கையாளர்கள் கையில் பார்சல்களுடன் வந்து பார்த்து விட்டு வேறு கடைகளுக்கு செல்கிறார்கள். --- பின் அவர்கள் மூவரும் தேநீர் பிஸ்கட் சாப்பிட்டு கதைத்து வேலை தொடங்க மேலும் அரை மணிக்கு மேல் ஆகிவிடும். --- அப்போது வரும் வாடிக்கையாளர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் கதைத்து ஓடர்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதில் ஒரு குறையுமில்லை. --- அப்பப்ப சில நாட்களில் மட்டும் ரோகிணி தலையில் விக்ஸ் போன்ற ஓயின்மெண்ட் பூசிக்கொண்டு கீழ் அறைக்குப் போகிறாள். மிஷினில் இருந்து வேலை செய்வது குறைவு. --- மிருதுளா எப்போதும் வயர்லெஸ் போனில் கதைத்தபடிதான் அல்லது பாட்டு கேட்க்கிறாளோ தெரியவில்லை .....வேலை செய்கிறாள். தினமும் மாலையில் கடைக்கு வெளியே சென்று ஒரு இளைஞனுடன் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருகிறாள். கடந்த சில நாட்களில் அவர்கள் இருவரும் வீதியால் போகிறவர்கள் திரும்பிப் பார்க்குமளவு நிறைய சண்டை பிடிக்கிறார்கள். ---காலையில் 11:30 மணிக்கெல்லாம் பிரேமா வெளியே போய் விடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து கவனித்ததில் அவள் நேராக ஒரு சிறுவர் பாடசாலைக்கு சென்று இரண்டு சிறு பிள்ளைகளை வீட்டிற்கு கூட்டி செல்வதும் பின் 13:30 க்கு மீண்டும் அவர்களை பாடசாலையில் விட்டுவிட்டு 14:30 மணியளவில் கடைக்கு வருகிறாள்.மாலை 16:45 க்கு மீண்டும் வீட்டுக்கு செல்கிறாள். --- ரோகிணியும் மிருதுளாவும் 13:00 மணிக்கு கபிரியேல் வந்ததும் தாம் கொண்டுவந்த உணவையோ அல்லது கடையிலோ சாப்பிடுவார்கள். --- கபிரியேல் மட்டும் தினமும் சரியாக 13:00 மணிக்கு வேலைக்கு வருகிறான்.ஒரு நிமிடமும் சும்மா இருப்பதில்லை.நன்றாக வேலை செய்கிறான். --- கடையில் மிருதுளாதான் ஓடர் துணிகளை வெட்டுகிறாள். கபிரியேலும் ரோகிணியும் அவற்றை தைக்கிறார்கள். --- ஆட்கள் பொருட்கள் வாங்க வரும்போது ரோகிணி கீழ் அறையில் இருந்து வந்து வியாபாரம் செய்துவிட்டு போகிறாள். --- பிரேமாவுக்கு இன்னும் மிஷின்களை சரியாக செட் செய்து தைக்கத் தெரியவில்லை.மிருதுளாவோ ரோகிணியோதான் அவளுக்கு உதவி செய்கிறார்கள். மேலும் அவள் தனது வீட்டில் இருந்து துணிகளை இங்கு கொண்டுவந்து தைத்துக் கொண்டு போவதுபோல் தெரிகிறது. --- பின் மாலை 17:00 மணிக்கு நீ வந்து விடுகிறாய். நீயும் கபிரியேலும் 20:00 வரை வேலை செய்து பின் கடையை பூட்டி விட்டு செல்கிறீர்கள். --- மேலும் கபிரியேல் பகலில் என்ன செய்கிறான் என்று நான் கவனித்ததில் அவன் விரைவில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விடுவான் போல்தான் தெரிகிறது.நன்கு நாட்களுக்கு முன் அவன் பரிசுக்கு வெளியே இருக்கும் ஒரு லொறிக் கம்பெனியில் ஒரு மிக நீளமான (long vehicle) லொறியை அவர்களுக்கு ஓடிக் காட்டியதைப் பார்த்தேன். அவனிலும் பிழையில்லை காரணம் இளம் பொடியள் இப்படி ஒரு அறைக்குள் இருந்து வேலை செய்வது மூச்சு முட்டுறது மாதிரி இருக்கும் அவங்களுக்கு. அவரிடமிருந்து அவ்வளவு தகவல்களையும் வீடியோக்களையும் தனது போனுக்கு மாற்றிவிட்டு எழும்ப சுரேந்தர் வந்து வாங்கோ மாமா, இருந்து சாப்பிட்டுட்டு போங்கோ. --- வேண்டாம் மருமோன் அங்க பிரிட்ஸில நேற்றையான் மீன் குழம்பு இருக்கு நான் போறன். --- அதெல்லாம் நாளைக்கு சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு ஒரு கிளாசில் சிகப்பி நிற வைனை குடுத்து விட்டு இது கையாக் (gaillac) வைன் மாமா நல்லாய் இருக்கும். நான் மாசிக் கருவாட்டு சாம்பலுடன் பிட்டும் மற்றும் இறால் குழம்பும் வைத்திருக்கிறன் சூப்பராய் இருக்கும். --- இஞ்சேருங்கோ, இரவாச்சுது பிறகு மாமா தனியா வீட்டுக்கு போகவேனும், கணக்க ஒண்டும் எடுக்கிறேல்ல கொஞ்சமா எடுத்துட்டு போய் சாப்பிடுங்கோ இரண்டு பேரும் என்று சொல்லி விட்டு சுமதி போகிறாள். இன்னும் தைப்பார்கள்.........! 🎀1 point - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.