Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19134
    Posts
  2. ரதி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    14998
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33035
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    5
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/13/23 in all areas

  1. "நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது." நான் அந்தளவு முட்டாள் இல்லை என்று தான் இன்று வரை நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். எல்லோரின் நீண்ட கருத்துக்களையும் முழுமையாக வசிப்பது இல்லை. சிலரின் கருத்துக்களை வசிப்பதுண்டு. அந்த மாதிரியான விம்பமேயன்றி வேறொன்றும் இல்லை. "உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது." இதுவும் எனது நோக்கமோ ஆர்வமோ இல்லை.
  2. உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது. பேசாமல் திரியின் தலைப்பை “இஸ்ரேல் கமாஸ் மோதலில் நன்னியின் வகிபாகம்” என மாற்றிவிடுமாறு கோரலாம் என நினைக்கிறேன்🤣. நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது. எனக்கு அவர் மேல் இருந்த/இருக்கும் விம்பம் ஒன்றேதான். இந்த தளத்திலேயே இளையவர், எமது போராட்டத்தின் வரலாற்றை மிகுந்த சிரத்தை எடுத்து, தன்னளவில் நேர்மையாக தொகுக்கிறார். 2009 இன் பின் “நீ என்ன செய்தாய்” என ஆளை ஆள் கேட்டு வாயால் வடை சுட்டு கொண்டிருந்த நம் மத்தியில் இந்த தளத்தை உருப்படியான வகையில் பயன்படுத்தியுள்ளார். இன்னும் 50 வருடத்தில் வந்து பார்த்தால் இங்கே அவர் பதிவுகள் மட்டுமே பிரயோசனமானவையாக இருக்கும். இது மட்டுமே நான் நன்னியின் மீது வைத்திருக்கும் விம்பம். இது அப்படியேதான் இருக்கிறது. இதை தவிர அவர் நல்லவர், வல்லவர், முஸ்லிம்களை வெறுக்கமாட்டார், சிகெரட், தண்ணி அடிக்கமாட்டார், ஜல்சா படம் பார்க்கமட்டார், பீடா போட மாட்டார் ….இப்படி எந்த விம்பமும் அவர் மேல் எனக்கு இருந்ததில்லை. இனியும் இராது.
  3. தமிழர்கள் யூதர்கள் மட்டும் இல்லை. பலஸ்தீனியர்களும் கூட இல்லை. அவர்களுக்கு ஆபத்து என்றவுடன் அல்ஜசீரா ஓவர் டைம் பாக்குது… ஐநா? இலங்கை சொன்னவுடன் பெட்டி கட்டி கிளம்பிய ஆட்கள்…இப்போ வெளியேறும் உத்தரவை மீளப்பெற இஸ்ரேலை நெருக்குகிறது. ஐ சீ ஆர் சி… முஸ்லிம் நாடுகள்… வத்திகான்… HRW… Amnesty International …. எல்லாரும் மற்ற பக்கம் திரும்பி நிண்ட ஆக்கள்தான். யூதன்/ பஸ்தீனியன் என்றால் உயிர், தமிழன் என்றால் ம**. இதை சொல்வதால் இந்த பிணக்குகளில் அவலம் வர வேண்டும் என்பதல்ல. நாம் எல்லாராலும் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை நினைவு படுத்தவே. இதில் அவன் பெரிது இவன் சிறிது என்று எதுவும் இல்லை.
  4. மினக்கெட்டு பதிலெழுதியமைக்கு நன்றி ...நாங்கள் கடைசி வரைக்கும் மு.வாய்க்காலில் இருந்தேன் என்று சொல்ற பல பேரை பார்த்து விட்டேன் ...யாழிலேயே சில பேர் சுத்திட்டு இருக்கினம் தலைவருக்கு கீழ் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர் இவ்வளவு இன துவேசம் பிடித்த ஆளாயிருந்தால் ,அது குறித்து புலிகளும் தலைவரும் தான் வெட்க பட வேண்டும். உங்கள் எழுத்துக்களை வைத்துப்பார்த்தால் 95ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பிறந்து இருப்பீர்கள் என்பது எனது ஊகம் ...நீங்களவர்களின் அக்கிரமங்களை நேரில் பார்த்தீர்களா? இனி மேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
  5. உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி ...நீங்களே அவர் பிழை விட்டு விட்டார் என ஒத்துக் கொள்கிறீர்கள் ...என்னால் உங்கள மாதிரி பிழையை பார்த்து கொண்டு இருக்க முடியாது...அது பிழை என்று சுட்டிக் காட்டினேன்.. செய்வது பிழை என்று தெரிந்தும்,ஏதோ ஒரு காரணத்திற்குக்காய் அவர்களை ஊக்கப்படுத்துவதால் அல்லது கண்டும் காணாமல் விடுவதால் தான் அவர்கள் இல்லாமற் போகிறார்கள் அல்லது மென் மேலும் பிழை விடுகிறார்கள்
  6. துருக்கி சவுதிஅரேபியா ஈரான் பாகிஸ்தான்......போன்ற நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்குகிறது பாலஸ்தீனம் முஸ்லிம் நாங்களும் முஸ்லிம் என்பதற்காக அல்லது மனித உயிரிழப்பு தவிர்க்க வேண்டும் என்ற ???? மேற்சொன்ன நாடுகள் 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது ஏன் குரல் கொடுக்கவில்லை நாங்கள் முஸ்லிம்கள் இல்லை எனவே… வகை தொகை இன்றி இறக்கலாம். அது பிழையில்லை..மாறாக ரொம்ப சரியானதாகும்...இந்த பாலஸ்தீனனர்கள். முஸ்லிம்களில்லை என்றால் உதாரணமாக இந்துக்கள் அல்லது கிறித்தவர்கள் என்றால் இறக்கலாம். அழிக்கப்படலாம். இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு கத்தார் எகிப்து. துருக்கி....போன்ற நாடுகள் [பாலஸ்தீனத்துக்கு ] உதவிகள். வழங்க அனுமதியளித்துள்ளது ஆனால் இலங்கை 2009 இல் வணங்க முடி கப்பலை தமிழருக்கு உதவிகளை வழங்க அனுமதிக்கவில்லை பாலஸ்தீனர்கள் பலமுடையவர்கள். என்றால் இஸ்ரேலை விட மிக மிக அதிகமான நாச வேலைகளை செய்வார்கள் இது என்னுடைய அனுமனம். மற்றும் இஸ்ரேல் தன்னுடைய பூர்விக பூமியில்தான் இருக்கிறது ...பாலஸ்தீனனருடைய நாட்டில் இல்லை ஆனால் அனேகருடைய எண்ணம் இஸ்ரேல் பாலஸ்தீனருடைய பூமி ....நாடு என்பது இது மிகவும் பிழையான கருத்து ஆகும்
  7. அமெரிக்கா எனும் உலகப் பயங்கரவாத நாடு... ஈராக்.. சிரியா.. ஆப்கானிஸ்தான்.. வியட்நாம் என்று எல்லா போர்முனைகளிலும் ஒரு தலைப்பட்சமாக வெள்ளைப் பொஸ்பரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்துள்ளது. இதனை மனித உரிமை அமைப்புக்கள் சான்று படுத்தியும் உள்ளன. அதேபோல்.. டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் ரஷ்சிய மொழி பேசும் மக்களை கொன்றொழிக்க.. வெள்ளை பொஸ்பரஸை பாவித்திருக்கிறது. இப்போ.. ரஷ்சிய மொழி பேசும் மக்களின் விடுதலைக்காக போராடி வரும் ரஷ்சிய படைகள் மீதான எதிர்தாக்குதலின் போது உக்ரைன் வெள்ளை பொஸ்பரஸ் உட்பட அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் வழங்கிய கொத்தணிக் குண்டுகள்.. ஆபத்தான கதிரியக்கக் குண்டுகளை எல்லாம் வீசி வருகிறது. அதற்கு ரஷ்சியா தகுந்த பதிலடியும் கொடுத்து வருகிறது. ஆக உக்ரைன் போர் முனையில்.. ரஷ்சியா மட்டுமல்ல.. உக்ரைனும்.. அமெரிக்கா மேற்குலக நாடுகள் வழங்குகின்ற உக்ரைன் அரச பயங்கரவாதத்திற்கு சார்பாக..பேரழிவு.. தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சப்பிளை செய்து பயன்படுத்தி வருகின்றன. ஆனால்.. இஸ்ரேல் - பலஸ்தீனப் பிரச்சனையில் அது அல்ல விடயம். பலஸ்தீனம் சார்ந்து எந்தப் பேரழிவு மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை. இஸ்ரேல்.. பலஸ்தீனம் மீது ஒருதலைப் பட்சமாகவும் மக்கள் செறிந்து வாழும் இடங்களாகவும் பார்த்து அப்பாவி மக்களை இயன்ற அளவு படுகொலை செய்யும் நோக்கோடு வெள்ளை பொஸ்பரஸ் உட்பட பல வகை தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வருவதோடு.. இஸ்ரேல்.. சகட்டு மேனிக்கு.. லெபனான்.. சிரியா.. மேற்குக் கரை.. ஜோடான் என்று அயலில் உள்ள நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதோடு.. அதன் பிராந்திய அரச பயங்கரவாதத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் கேட்டுக் கேள்விக்கு உட்படுத்தவிடாமல்.. ஆதரித்து.. ஆயுதங்கள்.. நிதி உதவிகள் வழங்கி ஊக்குவித்தும் வருகின்றன. ஆக மொத்தத்தில்.. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தங்களின் சுயநல ஆதாயத்திற்காக.. இஸ்ரேலின்.. உக்ரைனின் அரச பயங்கரவாதங்களை தமது இஸ்டத்துக்கு பயன்படுத்தி வருவதோடு.. மிக மோசமான மனித இனப்படுகொலைகளையும் அரங்கேற்றி வருகின்றன. இஸ்ரேல் மீது பலஸ்தீன காசா மக்கள் தாக்குதல் நடத்தவில்லை. இஸ்ரேல் - கமாஸ் மோதலில் இஸ்ரேல் நடந்து கொண்ட மிக மோசமான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் விளைவே கமாஸின் இஸ்ரேல் மீதான தாக்குதல் என்று கமாஸ் கூறியிருப்பதோடு.. அது ஒரு பழிவாங்கல் தாக்குதல் என்றும் கூறி இருக்கிறது. இந்த நிலையில்.. காசா பலஸ்தீன அப்பாவிகளைக் குறிப்பாக 450 குழந்தைகள் உட்பட 1500 பேரை 4000 தொன் குண்டுகளை கொட்டிக் கொன்ற இஸ்ரேலின் செயல்.. எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இஸ்ரேலில் தாக்குதலில் ஈடுபட்ட எல்லா கமாஸ் உறுப்பினர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவும் 1500 கமாஸ் உடலங்களை தாம் அவதானித்திருப்பதாகவும் கூறிவிட்ட பின்னும்.. தாக்குதலாளிகள் தண்டிக்கப்பட்ட பின்னும் காசா மீது குண்டு வீசி 450 குழந்தைகள் உட்பட 1500 அப்பாவி மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்குள்ளேயே குண்டு வீசி அழிப்பதன் இஸ்ரேலின்.. அமெரிக்காவின்.. மேற்குலகின் நோக்கம் என்ன.. இன அழிப்பும்.. இஸ்ரேலின் அரச இராணுவ பயங்கரவாதத்தை தமக்கான மத்திய கிழக்கிற்கான.. முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ளுதலுமே. இந்த சேட்டையை டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனின் நடப்பு அரச பயங்கரவாதிகளை பயன்படுத்தி செய்ய வெளிக்கிட்டு... ரஷ்சியாவை நேட்டோ விரிவாக்கம் மூலம் அச்சுறுத்த விளைந்ததன் விளைவே.. அதாவது அமெரிக்காவாலும் மேற்குலகாலும் தூண்டப்பட்ட ஒரு பயங்கரவாத யுத்தமே.. ரஷ்சிய - உக்ரைன் மோதலாக உருவாகியுள்ளது. ஆக மொத்தத்தில்.. அமெரிக்க... ஜனநாயகக் கட்சியின் மனித இனத்துக்கு எதிரான.. கொடும் சிந்தனைப் போக்கு கொண்ட தலைமைத்துவ.. கொள்கை வகுப்புக் கொடியவர்களின் செயலால் தான் இத்தனை பேரழிவுகளும் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்.. பல வகையான உருட்டல்களை உருட்டிக்கொண்டு திரிகிறார்கள் இங்கு. அது அவர்களின் மனச்சாட்சிக்கே விரோதம் என்பதும் அவர்களுக்கு தெரியும். இருந்தும்.. விசமத்தனத்துக்காக அதனை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மக்களுக்கு இதனை தெளிவு படுத்தவே.. இப்பதிவு இடப்படுகிறது.
  8. @Sabesh @ரதி & மற்றாக்காள் (என் மீது வெறுப்புள்ளோர்) --------------------------------------------------- நான் எங்கு மாட்டுவேன் என்று காத்திருந்த கண்மணிகளின் தீனிக்காக,🤪 ஓம், நான் முள்ளிவாய்க்காலுக்குள் இருந்தனன். மே 15, பின்னேரம் 6:00 மணிக்கு தமிழீழத்தின் கடைசி எல்லைக்கோடை கடந்தனான் (அந்தக் கடைசி இடத்தை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன், காணொளி காட்சியாக). நான் எனது ஆவணங்களில் முள்ளிவாய்க்காலில் இருந்தனான் என்பதை எழுதியுள்ளேன். ஆண்டொருமுறை யாழ் களம் வருவோர் வாசிக்காது என் பிழை அன்று🥴. யாழ் களத்தில் நான் நேரில் சந்தித்த எறிகணை வீச்சொன்று தொடர்பாக ஒரு சிறு குறிப்பொன்று எழுதினேன் (கருணாநிதி தொ. திரியில்), ஆனால் பின்னர் தேவையற்ற தனிப்பட்ட தகவல் என்பதால் நீக்கிவிட்டேன். அடுத்து, இதுவோ கருத்துக்களம். நானோ பெயரோ முகவரியோ அற்ற ஒருத்தன். எனவே, குறிப்பிட்ட ஒன்றையோ ஒன்றிற்குத்தானோ ஆதரித்து எழுதவேண்டும் என்றில்லை. கள விதிமுறைகளுக்கு உட்பட்டு அவரவர் விருப்பப்படி எழுதலாம். மனித மனம் வேறுபட்டது, அதே போலத்தான் சிந்தனைகளும். கருத்துக்களத்தில் உயர்ந்ததான (அப்படித்தான் நான் கடைப்பிடிக்கிறேன்) விதிமுறை தான் இங்கு ஆள்கிறது, மனித மதிப்பு இல்லை. என் மீது யாரேனும் மதிப்போ, மரியாதையோ வைத்திருந்தால், அதை இப்போதே தூக்கியெறிந்துவிடுங்கள். நான் எக்காலதிலும் எவரிடமேனும் மதிப்பையோ நற்பெயரையோ வேண்டுவதற்காக எழுதியதோ எழுதப்போவதோ கிடையாது. என்றென்றும் என் மனம் போனபடியே போவேன் (ஒரேயொரு தடவை குழப்பத்தால் சறுக்கினும் பொதுமக்களின் ஆலோசனைக்காமைவாக சீர்தூக்கி சரிசெய்தேன் என்பதையும் விதப்பாக குறிப்பிட விரும்புகிறேன்). எது சரியென்று தோன்றுகிறதோ அதை செய்வேன். பிழையெனில் கள விதிகளுக்குட்பட மட்டுறுத்தினர்கள் வெட்டியெறிந்து- விடலாம், விடுவார்கள். எந்தவொரு கருத்தையும் ஏன் வெட்டினீர்கள் என்று இதுவரை கேள்வி கேட்டதில்லை, கேட்கப்போவதுமில்லை (ஏனெனில் நான் பெரும்பாலும் கருத்துக்கள் எழுதுவது குறைவு) எனக்குச் செய்யத் தெரியாத சிலவற்றை, சில கள உறவுகளிடமோ இல்லை நிர்வாகத்திடமோ ஆலோசனை கேட்டு அதன்படி செய்வதுண்டு. நான், இங்கே முஸ்லிம்களை எதிர்க்க என்ன காரணம் என்பதை இந்தத் திரியில் பலமுறை எழுதிவிட்டேன். சில கள உறவுகள் வாசிக்கவில்லை/ வாசித்தாலும் வீம்புக்காக இல்லையென்கிறார்கள் போலும். இருப்பினம் அச்சில பேருக்காக மீளத் தெளிவாக எழுதுகிறேன்: 1985 - 1990களில் என் இனத்தை கொன்று குவித்து அதை ஆடிப்பாடி மகிழ்வோடு கொண்டாடினார்கள். அதை இன்று திருப்பிச் செய்கிறேன். நான் இஸ்ரேல் செய்வது, மக்கள் கொலை தவறென்று ஐந்தாம் பக்கம் @புலவர் எழுதிய அத்தனையையும் ஒத்துக்கொண்டேன். அவர் அதில் எழுதிய அத்தனை கருத்துக்களோடும் ஒத்துப்போனேன். ஆனால், "சோனாவின்ர நிலைப்பாட்டிலை நான் மாற்றமில்லை... எங்களுக்கு நடந்த போது கொண்டாடி மகிழ்ந்த சோனாக்கு இப்ப விழேக்கிலை நான் வெடி கொழுத்தி மகிழ்கிறேன். என்றென்றும்...." 🤣 என்றேன். இந்தக் குறிப்பிட்ட சில கண்மணிகளுக்கு கண்ணில்லையென்றால் நான் பாடில்லை. மீண்டும் என் எழுத்தில் தெரிவிக்கிறேன், இஸ்ரேல் அப்பாவி மக்களை கொல்வது தவறுதான். நன்கு அறிவேன். ஆனால், சோனாக்கள் எங்களுக்கு நடந்ததைக் கொண்டாடினாங்கள், ஆகையால் அவங்களுக்கு நடப்பதைக் கொண்டாடுகிறேன். இஸ்ரேலின் உளவு அமைப்பு எமக்குச் செய்தவற்றையும் நான் எழுதியுள்ளேன். அவர்களுக்கு மதமே முக்கியம், இனமன்று. ஆகையால் அந்த மூலநாடிக்கு அனைத்து வழிவகையிலும் அடிக்கிறேன். புண்படுத்தியிருந்தால் மிகவும் மகிழ்கிறேன்.😁😁 வேண்டுமென்றுதான் செய்கிறேன். மற்றது, கமாஸும் உந்த மு***களும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம். மதத்திற்காக எதையும் செய்வார்கள். உயிரிழந்த இஸ்ரேலியர்களின் சாவை வெளிநாடுகளில் மகிழ்வோடு கொண்டாடுகிறார்கள். நான் வாழும் நாட்டில் இறந்த இஸ்ரேலியர்களின் சடலங்களை ஊடகங்களுக்குக் காட்டி குதூகலிக்கிறார்கள். இதை மாந்தநேயம் என்றால், நீங்கள் அறிவிலிகள், உணர்வற்றவர்கள். இம்முறை, வேசுபுக்கிலும் துவிட்டரிலும் நான் கண்ட சில கருத்துக்களும், பதிவுகளும் என்னை மிகவும் கோபம் கொள்ளச் செய்தன. அவற்றில் - சோனாவோடு சேர்ந்த சிங்களவன், வாச்சான் பிழைச்சான் என்று புலியைத் கீழ்த்தனமாக எழுதி பாலஸ்தீனப் பயங்கரவாதத்தை தூக்கினான். அதற்கு சோனாக்கள் இனியில்லையென்ற ஆதரவை நல்கினாங்கள். பாலஸ்தீன ஆயுதாரிக் குழுக்களை "விடுதலை வீரர்கள்" என்பாங்கள், அண்ணாக்களை "பயங்கரவாதிகள்" என்பாங்கள். தங்களுக்கு வந்தால் அரத்தமாம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியாம்... ஆகையால் நான் அவங்களுக்கு பகரடி கொடுக்கிறேன், அதே பாணியில். என்னினத்தை கொன்று குவித்ததை ஒரு நாளும் அவங்கள் ஏற்றதுமில்லை (இந்தத் திரியே மிகச் சிறந்த சாட்சி. புத்திசாலிக்கு எதைச்சொல்கிறேன் என்பது விளங்கும்), மன்னிப்புக் கேட்டதுமில்லை. அதனால் நான் அவற்றைத் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பேன், கிடைக்கும் வாய்ப்புகளிலும், நானே உண்டாக்கியும்! பாலஸ்தீனம், ஒரு காலமும், எனது தேடல் அறிவிற்கிட்டியவரை, எமக்காக ஒரு குரல் கொடுத்ததில்லை, போர்க்காலத்தில். (ஆருமே எமக்கும்தான் கொடுத்ததில்லை, அதற்காக நாம் கொடுக்காமல் இருக்கலாமா என்ற பழையை கம்பைச் சுற்ற வேண்டாம்) இன்னும் சொல்லவேண்டுமென்றால் எங்களுக்கு செய்ததற்கு இவங்கள் மன்னிப்புக் கேட்கும் வரை நான் எதிர்ப்பன்.
  9. அவர் உருவாக்கிய பல ஆவணக்காப்பு திரிகளிலும், நல்ல திரிகளிலும் நீங்கள் அவற்றை வரவேற்று ஒரு பதில் தானும் எழுதியதை நான் கண்டில்லை. தவறை மட்டும் தான் கண்டு பிடிப்பீர்களோ ஐயா? இது தான் ஈனத்தமிழ் குணம். சிங்களவர் தம் இனத்துக்கு ஆதரவாக இருக்கும் ஒருவரை எக்காலத்திலும் குறை சொல்லார், ஆனால் தமிழர்கள் தம் இனத்திற்கு மினக்கெடும் ஒருவர் ஒரு தவறு விட்டால், ஓடோடி வந்து அதை சொல்லி சொல்லியே அவரை முடக்கி விடுவர். இப்படியே நடத்துங்கோ இந்த அவசர யுகத்தில் தம் பெறுமதியான மணித்துளிகளை லாபம் எதுவுமில்லாமல் செலவழிப்பவர்களையும் முடக்குங்கோ.
  10. இதை எழுதும் போது நீங்கள் நன்னியை நினைத்து பாத்தீங்களா? ...நீங்கள் தான் அவர் இறுதி யுத்தத்தின் போது அங்கு இருந்தார் என்று எழுதி இருந்தீர்கள்...மக்கள் கொத்து கொத்தாய் இறப்பதை கண்ணால் கண்ட ஒருவரால் எப்படி மற்றவர்களின் இறப்பில் சந்தோசப்பட முடியுது?
  11. முன்னரும் யாழில் இதை நான் எழுதினேன். அடுத்த உலக யுத்தம் மத அடிப்படையில்தான் அமையும். அதாவது இஸ்லாமியர் எதிர் ஏனையோர் என்பதாக. அண்மையில் பேகம் வழக்கில் இங்கே பிறந்து வளர்ந்த ஒரு பங்களாதேச பெண்ணை - இந்த நாட்டின் குடி இல்லை என ஆக்கினார்கள். ஐசில் உடன் போய் சேர்ந்தார் என. ஹை கோர்ட்டும் கை விரித்து விட்டது. இப்படியான நிலை எல்லாம் 10 வருடம் முன்பு கூட நினைத்து பார்க்கவியலாதது. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கில் இஸ்லாமியரின் மீதான பிடி இறுகிறது. சட்டம் என்பது பாராளுமன்று நினைப்பதுதான். மிக இலகுவாக மாற்றலாம். பாராளுமன்றும், பெரும்பான்மையும் விரும்பினால். எமது வாழ்நாளில் இந்த போரை நாம் சிலவேளை காணாமல் போகலாம்…ஆனால் மேற்கை பொறுத்தவரை இந்த நிலை எடுப்புக்கு மாறான ஆட்கள் இந்த நாடுகளில் இருந்து வெளியேற்றபடுவது கட்டம் கட்டமாக ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டம் வரை சட்டப்படி இது நடக்கும். போர் காலம் நெருங்க இது சட்டத்துக்கு புறம்பான வழிகளிலும் நடக்கும்.
  12. நிச்சயமாக. முஸ்லிம்கள் நாடுகள் எல்லாம் தராள உதவிகள் செய்ய, வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்களும் தமிழ்நாட்டு திராவிட கட்சிகள், காங்கிரஸ்சும் யூதர்களுக்காக அவர்கள் தான் அந்த மண்ணின் பூர்வீககுடிகள் என்று தீவிரமான பிரசாரங்கள் செய்வார்கள்.
  13. உண்மைகளை சொல்லியுள்ளீர்கள். தமிழர்கள் முஸ்லிம்கள் இல்லை.யூதர்கள் முஸ்லிம்கள் இல்லை வகை தொகை இன்றி கொல்லபடலாம். வீதியில் ஊர்வலம் சென்று கொண்டாட்டம் கொண்டாடுவார்கள்.
  14. உங்களின் இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயங்களை உள்ளடக்கி இருக்கிறது. புலிகளின் தலைமை.. பலஸ்தீன விடுதலை மற்றும் போராளி அமைப்புக்கள் குறித்து ஒருபோதும் தமது எதிர் விமர்சனங்களை வைத்ததில்லை. அதேபோல்.. குர்திஸ் போராட்டம். கொசாவோ விடுதலைப்புலிகளின் சுதந்திரப் பறவையில்.. விடுதலையை ஆதரித்து ஆக்கம் வந்திருந்தது. கார்க்கில் போரில் புலிகள் ஹிந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்தார்கள். 11/09 தாக்குதலை ஈழநாதம் கண்டித்திருந்தது.
  15. The Flotilla 13 elite unit was deployed to the area surrounding the Gaza security fence in a joint effort to regain control of the Sufa military post on October 7th.
  16. இஸ்ரேலியர்களின் சரித்திரத்தில் பயணக்கைதிகளை மீட்பது முதல் முறையல்ல. உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய “ஒப்பரேஷன் தண்டபோல்ட்” 1976 ல் செய்து காட்டினார்கள்.
  17. உங்கள் நோக்கம் இது என நானும் கருதவில்லை. ஆனால் நான் அசெளகரியமாக உணர்தேன்.🙏
  18. தியேடடர் ஸீட் கொள்ளளவை விட அதிகமாக டிக்கற் விற்க்கப்பட்டிருக்கலாம் . கதிரைக்கு அடிபட்டு கதிரைகள் போச்சு 😀
  19. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு.
  20. என்ன ஜோக்கா? கிரிகெட் போட்டி திறந்தா தெரியும், நானும் @Eppothum Thamizhanஎப்படி பட்ட தோஸ்து எண்டு. உக்ரேன், இஸ்ரேல் விடயத்தில் கருத்து முரண். ஆனால் வேறு பலதில் அவருடன் கருத்தொற்றுமையுடனும் எழுதியுள்ளேன். இதென்ன இவ்வளவு சின்ன புள்ளைத்தனமாக யோசிக்கிறீங்க. அதே போலத்தான் @நியாயத்தை கதைப்போம். உடனும். அண்மையில் கூட அந்த 55+18 திரியில் நானும் நி.க வும் மட்டும் ஒரு நிலைப்பாட்டை எடுத்தோம். உண்மையில் ஒரே சூழலில், சிந்தனை புலத்தில் இருந்து வரும் இங்கே எழுதும் பலரின் கருத்தை விட அவரின் கருத்துக்கு ஒரு vale added கனம் இருப்பதாக கருதுகிறேன். மறுபடியும். ஆதரவும் எதிர்ப்பும் கருத்துக்கே ஒழிய கருத்தாளருக்கு இல்லை.
  21. ஒரு கள உறவின் நிலைப்பாட்டை அவரிடமே நேரடியாக கேட்பதுதான் சரி. எனவே @நன்னிச் சோழன் ஐ tag பண்ணியுள்ளேன். என்னிடம் கேட்ட கேள்விக்கு பதில்: இரு வேறுபட்ட மனித இழப்புகளில், தமது நிலைப்பாடு, விருப்பு வெறுப்பு கருதி மாறுபட்ட நிலையை எடுக்கும் அனைவருக்கும் நான் எழுதியது பொருந்தும். நன்னிக்கும். அதேபோல் நேரம் கிடைக்கும் போது மட்டும் தமிழன் கேட்ட கேள்விக்கு எழுதிய பதிலிலேயே கூறி விட்டேன். காஸா விடயத்தில் நன்னிக்குக் எனக்கும் பாரிய அணுகுமுறை வேறுபாடு உண்டு. நான் எனக்காக மட்டும்தான் எழுத முடியும். எனது நிலைப்பாடு: 1. தமிழ், யூத, பலஸ்தீன அரபி, உக்ரேன் தேசிய இனங்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் சுய நிர்ணயத்தோடு வாழ வேண்டும் (உக்ரேனின் ரஸ்ய மொழி பிராந்தியத்தில், ரஸ்ய படைகள், உக்ரேன் படைகளை நீக்கி, ஒரு ஐநா பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும் எனவும் எழுதியுள்ளேன்). 2. எந்த உயரிய அரசியல் நோக்குக்காகவும் பொதுமக்கள் வேண்டும் என்றே இலக்கு வைக்கப்படுவதை எதிர்க்கிறேன். இதற்கு மாறாக நான் எழுதி இருந்தால் - வாங்கோ மேலும் கதைக்கலாம். பிகு நீங்கள் கேள்வி கேட்டபோது நன்னியை மட்டும் அல்ல, திருவாளர்கள் முரளிதரன், சந்திரகாந்தன் கடந்த முறை எலக்சன் கேட்ட போது நீங்கள் கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இதே யாழில் எழுதி நான் முரண்பட்டதையும் நினைத்து கொண்டேன்.
  22. இரெண்டாம் உலக யுத்ததின் முன்னும், அதன் போதும்…..கால்நடைகளை விட மோசமாக ஒட்டு மொத்த யூத இனமே நடத்தப்பட்டது. ஹிட்லரால் மட்டும் அல்ல. தன்னை நோக்கி படை எடுக்காமல் விட்டால் - யூதரை என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற நிலையை ஸ்டாலின் எடுத்தார். கிட்லருடன் உடன்படிக்கை செய்தார். யூதரை பற்றி எதுவும் சொல்லாமல், செக்கொஸ்லோவியாவின் Sudetenland ஐயும் எடுத்துக்கொள், ஆனால் அடுத்த எந்த ஐரோப்பிய நாட்டையும் பிடியாதே என கிட்லரோடு ஒப்பந்தம் போட்டார் பிரிட்டனின் சேம்பர்லின். பேர்ல்காபர் தாக்கப்படும் வரை - யூதர் கொலைகள் அமெரிக்காவை போரில் இறக்கவில்லை. இப்படியா மில்லியன் கணக்கான யூதர்களின் சாவு, இழப்பு, வன்கொடுமைகள் போரின் சகல தரப்பாலும் கிள்ளுகீரையாகவே நடத்தப்பட்டது. ஆனால் இன்று? ஒரு யூத தாயின் கோரிக்கை பிரஞ்சு தொலைகாட்சியில் ஒரு மணி நேரம் போகிறது. ஜனாதிபதி விரைந்து பதில் கொடுக்கிறார். பாடம் புரிகிறதா?
  23. இலங்கைக்கு கொத்தணிக்குண்டுகளை வழங்கியது ரஸ்ஸியாவே.
  24. சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. ம்ம்ம் அந்த சப்பிளை அனைத்தையும் ஷாப்பிங் பேக்கில் போட்டு அதை சொறிலங்கா ராணுவ முகாமுக்கு தவணைமுறையில் அனுப்பி வைத்ததே எங்கட நெடுக்கர் தான். 🙊
  25. ஆர். அஸ்வின்னின் அபாரமான ஆட்டங்கள் .......! 😂
  26. எனக்கு அவரின் மேலிருந்த விம்பம் இந்த திரியில் அவர் எழுதிய கருத்துக்களின் பின்னர் உடைந்து விட்டது. 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.