Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 02/26/24 in all areas
-
தமிழ் மக்களும் ராஜதந்திரிகளும்! நிலாந்தன்.
முன்பெல்லாம் நான் நினைப்பதுண்டு, தமிழர்களாகிய எங்களுக்கு, நாங்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும், எந்தவித பயமுன்றி, எங்களது நிலத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது என்று.. ஆனால் நிலமை/எண்ணம் அப்படி இல்லை என்பதைத்தான் இப்பொழுதுதெல்லாம் உணர்கிறேன். நாங்கள் இலங்கை பெளத்த நாடு என்பதை பிழையென கூறும் நாங்கள் இந்து/கிறிஸ்தவம் என பிரிந்து போகிறோம். ஒரே மதம் என்ற காரணத்திற்காக பிழையானவர்களையும் ஆதரிக்கிறோம். ஊரில் ஏற்கனவே கோயில்கள் இருக்க வீதிக்கொரு கோயிலை கட்டுகிறோம். அதே நேரம் கிளிநொச்சியில் உள்ள பின் தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு ஒரு கட்டிடத்தைக் கட்ட நிறைய யோசிக்கிறோம். புலம்பெயர்ந்த தேசங்களில் பல்வேறு சங்கங்கள். தென்னிந்திய நடிகர்களின் நிகழ்ச்சிகளையும், அவர்களது படங்களை விநியோகிக்கும் உரிமையை அனேகமாக செய்வது ஈழத்தமிழர், ஆனால் ஊரில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்க quality சரியில்லை, ticket விற்க முடியாது என பல காரணங்களை அடுக்குவோம். ஊரில் சமூக சீர்கேடுகளை(சிறுவர் துஷ்பிரயோகம் தொடக்கம் பல) ஒரு சாதாரன விடயமாக கடந்து போகிறோம். அதற்கு எதிரான நடவடிக்கைகளை கூட சேர்ந்து எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளோம். நாங்கள் ஊரில் வளர்ந்த காலத்தில் இப்படி நடைபெற்றதா? இல்லை. அந்த காலப்பகுதியில் இளமை வயதில் இருந்தவர்களின்(பெரும்பாலானோர்) பிள்ளைகள்தான் இன்றுள்ள இளைய சமூதாயம் என நினைக்கிறேன். அவர்கள்தான் இன்று சோம்பேறிகளாகவும் போதைக்கும் அடிமையாகி வருகிறார்கள். இன்று தமிழர்களாகிய எங்களது எண்ணங்கள் வேறு என்றே தோன்றுகிறது. எங்களிடம் அரசியல் பலமும் இல்லை ஆயுதபலமும் இல்லை, பொருளாதார பலமும்(?) இல்லை, மக்கள் பலமும் இல்லை. நிலமை இப்படி இருக்கையில் நிலாந்தன் தமிழ் மக்கள் தங்களது பேரம் செய்யும் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பேராசைப்படுகிறார்.5 points
-
இன்றைய வானிலை
4 pointsசில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்..... ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ... யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃 *****4 points
-
ஆண்டவனையும் கேட்க வேண்டும்
2 pointsஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும். ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்…இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள். ஆண்டவர்களில் மூன்றுபேர், படைத்தல், காத்தல், அழித்தல் என்று தங்களுக்கான பொறுப்புகளை தங்களுக்குள்ளேயே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். இதில் படைப்பவன், படைத்தலுடன் தன் வேலையை நிறுத்திக் கொண்டான். காத்தல், அழித்தல் செய்பவர்கள் கொஞ்சம் குளப்படி. தேவையில்லாத விடயங்களையும் செய்யக் கூடியவர்கள். அப்படிச் செய்யும் தில்லு முல்லுகள் எல்லாம் ஆண்டவனின் ‘திருவிளையாடல்கள்’ என்ற பதத்துக்குள் அடங்கிவிடும். அழித்தல் வேலை செய்த ஆண்டவனின் மாமனார் (பெண் கொடுத்தவர்), ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்துக்கு மருமகனை அழைக்கவில்லை. அது மருமகனுக்குப் பொறுக்கவில்லை. கோவம் தலைக்கேறி ஒரு தாண்டவமும் ஆடி, தனது வேலையாளான வீரபத்திரனை அனுப்பி, யாகத்தை அழித்து மாமனாரையும் கொலை செய்வித்தான் . இந்தக் கொலையை செய்ய ஆளை அனுப்பியவன் ஆண்டவன் என்பதால் ‘வதம்’ செய்வித்தான் என்று குறிப்பிட்டால்தான் சரியாக இருக்கும். அடுத்து காத்தல் செய்பவன். இவன் அழித்தல் செய்பவனை விட ஓவரான குழப்படிக்காரன். தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை கொடுக்கும் தீராத விளையாட்டுக்காரன். பெண்களை மயக்கும் மாயவன். பெரும் தந்திரசாலி. ஒரு தடவை நரகன் என்ற அரசனுடன் (பின்னாளில் நரகாசுரன்) பிரச்சனையாகிப் போனது. நரகன் பலசாலி. அவனுடன் மோதினால் காத்தல் வேலை செய்யும் தான் கந்தல் ஆகிவிடுவேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான். நரகன் நல்லவன், அறிஞன், வீரன் என்பதெலாம் காத்தல் ஆண்டவனுக்குத் தேவைப்படாத விடயங்கள். தந்திரத்தால் நரகனை அழிக்கத் திட்டம் போட்டான். ‘நரகன் ஆண்களுடனையே போர் செய்வான். எக்காலத்திலும் பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டான்’ என்ற தகவல் அவனுக்குக் கிடைத்தது. நரகனை போருக்கு அழைத்துத் தன் மனைவி சுபத்திரையிடம் ஆயுதம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தான். நரகன், பெண்களை மதிப்பவன். கொண்ட கொள்கையில் நிலையாய் நிற்பவன். போர்க்களத்தில் தன்னுடன் மோத வந்திருப்பது ஒரு பெண் என்பதால், தன் ஆயுதங்களை எடுக்காமல் அமைதியாக நின்றான். கணவன் சொல் கேட்டு சுபத்திரை அம்பு விட்டாள். நரகன் செத்துப் போனான். “நரகன் அழிந்துவிட்டான். இந்நாளை இனி வரும் காலங்களில் நன்னாளாகக் கொண்டாடுங்கள்” என்று மக்களுக்கு ஆணையிட்டான். காத்தல் வேலை செய்தாலும், தன்னுடைய மச்சான் செய்யும் அழித்தல் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது போலே, இரணியனை கொலை (வதம்) செய்தான். பரசுராமன் என்று மாற்றுப் பெயரில் போய் தன் தாயையே கொன்றான். கெளரவர்களில் ஒருத்தனை மட்டும் விட்டு விட்டு எல்லோரையும் அழித்தான்.. என்று அவனின் காத்தல் வேலை அழித்தலாகத் தொடர்ந்தது. இதை எல்லாம் கேள்விப் பட்ட எங்களை ஆண்ட கந்தனுக்கும் கை துருதுருக்க அவனும் சூர பத்மனை கொலை (வதம்) செய்து, ஆண்டாண்டு காலமாக அதை நினைவு கூரவும் செய்திருக்கிறான். இப்படிப் போகிறது எங்களை ஆண்டவர்கள் கதை. அமைதி தேடி ஆண்டவர்களின் இருப்பிடத்துக்குப் போனால், ஆண்டவர்கள் எல்லாம் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறார்கள். கால்களில் யார் யாரையோ போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னிகளை ஒன்றுக்கு இரண்டாக அணைத்து வைத்துக் கொண்டு காட்சி தருகிறார்கள். ஆனாலும் நாங்கள் அங்கே போய்த்தான் அமைதியைத் தேடிக் கொள்கிறோம். ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம்.2 points
-
பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
2 pointsஉச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
கிழக்கு தீமோர் இந்தோனேசியா என்ற நாட்டினால் ஆக்கிரமிக்க பட்ட நாடு ....அதற்கு முதல் போர்த்துக்கல் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடு அதாவது இந்தோனேசியாவை ஒல்லாந்தர்கள் ஆட்சி செய்யும் பொழுது போர்த்துக்கல் இதை ஆட்சிக்கு உட்படுத்தினர் ...இது முக்கியமாக காலணித்துவ நாடுகள் தங்களுக்கு வசதியாக சிறு தீவுகளை ஆட்சிக்கு உட்படுத்தி தங்களது மொழியையும்,மதத்தையும் அந்த மக்களுக்கு திணித்து விட்டு சென்றது வரலாறு..இந்தியாவுக்கு அருகில் சிறிலங்கா,கோவா..சீக்கிம்.....சீனாவுக்கு அருகில் தாய்வான் ..கொன்கொங்.... ..இந்தோனேசியாவுக்கு அருகில் கிழக்கு தீமோர்.அவ்வாறு செய்தமைக்கு காரணம் அவர்களின் தூர நோக்கு அதாவது ஜனநாயாக பண்புகள் உலகம் பூராவும் பரவ வேண்டும் அத்துடன் முதலாளித்துவ் சிந்தனைகள், வலதுசாரிகள் உலகம் பூராவும் இருக்க வேணும் என்ற கொள்கையின் அடிப்படையில்... அந்த நோக்கில் கிழக்கு தீமோர் பூர்வீக குடிகளை போத்துகீச மொழி பேசுபவர்களாகவும்,மற்றும் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர்களாகவும் உருவாக்கி வைத்திருந்தனர்...போத்துகீச பொருளாதரம் வீழ்ச்சியடைந்த வுடன் சுதந்திரம் அந்த தீவுக்கு கொடுத்தனர் போத்துகீசர்....இதை சகிக்க முடியாத இந்தோனேசியா ஆக்கிரமிப்பு செய்தது.... இதை தாங்கி கொள்ளாத மேற்குலகமும் அவர்களின் கூட்டாளி அவுஸ்ரேலியாவும் அந்த நாட்டு மக்களை தம்வசமாக்க ஆயுத போராட்டத்திற்கு ஊக்கமளித்து பல உதவிகளை செய்து சுதந்திரம் வழங்கி தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து வைத்துள்ளனர்... ஆசியாவில் இரண்டாவ்து கிறைஸ்தவ மதம் பின்பற்றும் நாடாக அது உள்ளது ..கிறிஸ்தவ மதத்தினர் பெருமான்மையினராக் இருந்து ஆட்சி செய்யும் நாடுகள் இரண்டே உண்டு ஒன்று பிலிப்பைன்ஸ்,மற்றது கிழக்கு தீமோர் .... இந்தோனேசியா சர்வதேசிய அளவில் செல்வாக்கு பெற்ற பிராந்திய வல்லரசாக் இருந்திருந்தால் கிழக்கு தீமோரர் மக்களுக்கும் எமது நிலை தான் ஏற்ப்பட்டிருக்கும்... தற்பொழுது பப்புவாநீயுகினியில் இதே போன்ற நிலையை உருவாக்க தீயா வேலை செய்கின்றனர் .... ஆயுத போராட்ட வெற்றி தோல்வி பிராந்திய நலன் கருதியே தீர்மாணிக்கப்படுகிறது .... தென்சுடான் ,எரித்த்ரியா யாவும் இதன் பின்னனியே ... கோவா,சீக்கிம் போன்ற நாடுகளை தன் வசப்படுத்திய இந்தியாவுக்கு தன்னுடைய ஜம்மு கஷ்மீரின் எல்லைகளை பாதுகாக்க முடியாமல் போனது ...பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கவின் பலம் .... {ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள்} அவர்கள் வெற்றி பெறவில்லை ...அவர்களை நிழல் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பவர்கள் வெற்றி பெற்றார்கள் ...எந்த போராட்டத்தயும் வெற்றி பெற வைப்பது அவர்களின் நிழல் ஆக்கிரமிப்பாளர்கள்2 points
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
2 points
- இன்றைய வானிலை
2 pointsசிட்னி புத்திரன் என்ற பெயரில் பொன்னாலைப் பகுதியில் மரக்கன்றுகள் வழங்கியது புத்தன் அண்ணா தான். அகரம் யுரியூப்பில் பார்த்தனான். யாழிலும் புத்தன் அண்ணா இணைத்திருந்தவர்.2 points- இன்றைய வானிலை
2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
2 points- இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!
இவர் என்னத்தில சிறப்பாம். முதல் இருந்தவர் ஆட்சி கவிழ்ப்பில் சிறந்தவர் என்று சொல்லிச்சினம்2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒரு மனிதனுடைய பெறுமதி (value) என்பது அவனது குடும்பம் சார்ந்து இருக்கலாம், இனம் சார்ந்து இருக்கலாம், இதையெல்லாம் தாண்டி உலகம் சார்ந்தும் இருக்கலாம். இங்கே "இனத்திற்கு என்ன செய்தார் (கொல்லப் படாமலிருக்க என்ன செய்தார்?)" என்று நக்கலாகக் கேள்வி கேட்ட உறவுகளுக்காக கீழே இணைப்பு. https://hrp.law.harvard.edu/fellowships/visiting-fellowships/neelan-tiruchelvam-memorial-fellowship/ ஹார்வார்ட் சட்டக் கல்லூரியின் மனித உரிமைக் கழகம் இன்னும் நீலன் திருச்செல்வம் புலமைப் பரிசிலை அவர் நினைவாக வழங்கி வருகிறது. அந்த அமைப்பின் தளத்தில் இருக்கும் நீலன் பற்றிய விபரிப்பு: Neelan Tiruchelvam (1944-1999) was a Sri Lankan peace and human rights activist, lawyer, scholar and politician. Recognized nationally and internationally for his unyielding commitment to social justice and his efforts to end the Sri Lankan Civil War, Neelan Tiruchelvam was also a pioneering scholar of constitutional theory and minority rights. His illustrious career encompassed stations as Member of the Sri Lankan Parliament, Founding Director of the International Centre for Ethnic Studies, and Chair of the Council of Minority Rights Group International. One month before he was scheduled to join Harvard Law School as a Visiting Professor, Tiruchelvam was assassinated in Sri Lanka on July 29, 1999. During his life, Tiruchelvam had built deep connections with Harvard Law School, where he obtained his LL.M. in 1970 and completed his S.J.D. in 1973. He returned to Cambridge in 1986 as one of the first Visiting Fellows at the Human Rights Program (HRP), which had been created just two years before. While at HRP, Tiruchelvam delivered the Edward A. Smith Lecture about human rights in the context of ethnic conflict in Sri Lanka. On September 17, 1999, HRP organized a memorial service for Neelan Tiruchelvam at Harvard Law School. The memorial service proceedings are available on the HRP website.2 points- பணம் அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு: பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்
2 pointsகனடா தமிழனின் செயல் | யாழ்ப்பாண இளைஞர்கள் https://www.youtube.com/watch?v=R8vHo0_vRFw2 points- அக்காவின் அக்கறை......!
1 pointஅக்காவின் அக்கறை அன்பாய் என்னை அருகிலிருத்தி வலிக்காமல் தலைவாரி வகிடெடுத்த பின்னாலே சித்திரமாய் திலகமிட்டுடுவாள் தந்தையே தடியெடுத்திடினும் தானோடி வந்து தாவியெடுத்தென்னை தன்னோடணைத்து தான் அடிவாங்கி என்துயர் போக்கிடுவாள் முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில் பின் எல்லோரையும் தள்ளி விட்டு எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள் கபடி விளையாடுகையில் கிளிபோலப் பறந்து பறந்து காலாலே கலங்கடித்து காளையரையும் விரட்டிடுவாள் எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும் எப்போதும் சண்டையும் சச்சரவும் கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள் முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில் முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள் அக்காளும் முன்போல் இல்லை குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று தளராமல் அடிக்கின்றார் அக்காளை அன்று என்னைப் பொத்திக் காத்தவளை அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள் படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள் உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால் என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும் இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......! ஆக்கம் சுவி ......! யாழ் அகவை 26 க்காக ........!1 point- நிலவில் கால் பதிக்க மீண்டும் போட்டா போட்டி - முந்துவது யார்?
நிலவில் கால் பதிக்க அமெரிக்கா, இந்தியா, சீனா போட்டா போட்டி - முந்துவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 பிப்ரவரி 2024, 11:02 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்ததே முதல் முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது. அதற்கு பிறகு, தொடர் அப்பல்லோ திட்டங்களின் மூலமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி இதுவரை மொத்தம் 12 பேரை நிலவில் தரையிறக்குவதில் வெற்றி பெற்றுள்ளது அமெரிக்கா. அதை தொடர்ந்து ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் தங்களது விண்கலம், லேண்டர்கள் அல்லது ரோவர்களை தரையிறக்குவதில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இதில் மனிதர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் அமெரிக்கா தனது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. சீனா மற்றும் இந்தியாவும் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றி வருகின்றன. நிலவில் தளம் அமைக்க அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுமே போட்டாபோட்டியில் ஈடுபட்டுள்ளன. இதில் முந்தப் போவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்ததே முதல் முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது நிலவுக்கு பயணம் விண்வெளிக்கு செல்ல ராக்கெட் தொழில்நுட்பம் மிகமிக அவசியம். பனிப்போர் காலகட்டத்தில், யார் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்பதில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு போட்டித் தொடங்கியது. அந்த போட்டியில் 1961 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றது. 'தி எக்கனாமிஸ்ட்' பத்திரிகையின் மூத்த ஆசிரியரும், 'தி மூன் : எ ஹிஸ்டரி ஃபார் தி ஃபியூச்சர்' என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஆலிவர் மார்டன், “மனிதர்களை நிலவு அல்லது விண்வெளிக்கு அழைத்துச் செல்வது மிகப்பெரிய சவாலான பணி என்று கூறப்படுகிறது. இது உலக அரங்கில் குறிப்பிட்ட நாட்டின் நம்பகத்தன்மையையும், பலத்தையும் அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சோவியத் ஒன்றியத்தின் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்கா மீதான அழுத்தம் அதிகரித்தது” என்று கூறுகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், "சோவியத் வெற்றிக்கு பிறகு அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தின் சாதனையை விட வேறு ஒரு சிறந்த சாதனையை படைக்க விரும்பியது." இதை விட பெரிய சாதனையாக நிலவுக்கு ஒரு மனிதனை அனுப்புவதே கருதப்பட்டது. ஆனால், அதற்கு அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் தேவைப்பட்டது. இருந்தாலும் நிலவில் கால் பதிப்பதன் மூலம், உலக அரங்கில் தனது முத்திரையை பதிக்க விரும்பியது அமெரிக்கா” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1961 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றது. “அதனை தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு, அப்பலோ 11 விண்கலம் மூலம் இரண்டு விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி மெரிக்கா வெற்றி பெற்றது. அதன் பிறகு மற்ற அப்பல்லோ பயணங்கள் மூலம் மேலும் பத்து பேரை நிலவுக்கு அனுப்புவதில் வெற்றி பெற்றது. இது பெரிய அறிவியல் சாதனை மட்டுமல்ல, அமெரிக்காவின் அரசியல் சாதனையும் கூட. நிலவின் மேற்பரப்பில் இரண்டு மனிதர்கள் நடந்து செல்லும் படங்கள் உலகம் முழுவதும் பரவியது. ஆனால் அதைவிட மற்றொரு படம் மக்களை மிகவும் கவர்ந்தது.” மேலும் பேசிய ஆலிவர் மார்டன், "நிச்சயமாக நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் இருக்கும் படங்கள் உலகம் முழுவதும் பரவின. ஆனால், அதைவிட நிலவிலிருந்து பூமியை எடுக்கப்பட்ட படம்தான் உலக மக்களின் மனதில் இடம்பிடித்தது. உயிர்கள் வாழும் கிரகமான பூமியின் படத்தை மக்கள் பார்த்து திகைத்து போய் நின்றது மட்டுமின்றி, அவற்றை தங்களது வீடுகளில் போஸ்டர்களாக ஒட்டிக் கொண்டனர்” என்று குறிப்பிடுகிறார். அதற்கு பிறகு சோவியத் யூனியனால் நிலவுக்கு மனிதனை அனுப்பவே முடியவில்லை. ஆனால் 1970களில் மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பதன் முக்கியத்துவம் ஏன் குறைந்தது? அதற்கு காரணம் இதில் அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதே என்று ஆலிவர் மார்டன் நம்புகிறார். அது ஏற்கனவே ஒன்றுக்கும் அதிகமான முறை மனிதர்களை ஆய்வுக்காக விண்வெளிக்காக அனுப்பிவிட்டது. இந்நிலையில் அதன் மீதான ஆர்வம் குறைந்து, அந்த திட்டங்களையே அமெரிக்கா நிறுத்திவிட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த திட்டங்கள் இப்போது உயிர் பெற்றுள்ளன. நிலவில் மனிதனை தரையிறக்கும் முயற்சியை மீண்டும் முன்னெடுத்துள்ளது அமெரிக்கா. ஆனால், மற்ற நாடுகளுக்கு முன் அதை செய்து முடிப்பது கடினம்தான். இந்த முறை போட்டியும் கடுமையாக உள்ளது என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவும் சீனாவும் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகி வருகின்றனர். நிலவுக்கு செல்வதற்கான போட்டி அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான நிலையில் உள்ளது. ஆனால், இந்த முறை இரு நாடுகளும் தங்களது போட்டியை பூமிக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளனர். தொழில்நுட்பம் சார்ந்து எழுதிவரும் இணையதளமான ஆர்ஸ் டெக்னிகாவின் விண்வெளி விவகாரங்களுக்கான மூத்த ஆசிரியர் எரிக் பர்கர் கூறுகையில், “அமெரிக்காவும் சீனாவும் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகி வருகின்றனர். இதற்காக இருவரும் சர்வதேச கூட்டாளிகளுடன் தங்களது ஒத்துழைப்பை தொடங்கியுள்ளனர். இது நேரடியாக அரசியலுடன் தொடர்புடையது என்கிறார்.” "நிலவின் மேற்பரப்பில் குறைந்த ஈர்ப்பு விசையே உள்ளது என்பதாலும், அது பூமிக்கு மிக அருகில் இருக்கிறது என்பதாலும் அது நடைமுறை சாத்தியமான மற்றும் சிறந்த இலக்காக பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். ஆனால் நிலவுக்கோ வெறும் மூன்று நாட்கள் போதும். எனவே நிச்சயமாக நிலவுதான் அடுத்த இலக்காக இருக்கும்.” நிலவை அடைவதற்கான இந்த போட்டி குறித்து பேசுவதற்கு முன், அதிலுள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப சிக்கல்களைப் குறித்து பேசுவது அவசியம். இந்த பயணத்தில் ராக்கெட்டை விண்வெளிக்கு எடுத்துச் செல்வதும், விண்வெளி வீரர்களை கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பதும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதும் மிகப்பெரிய சவாலாகும். அதே ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு கொண்டு வர, நிலவில் இருந்து ஏவுவது இன்னும் கடினம் என்கிறார் எரிக். "பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவும்போது அதை கண்காணிக்கவும், கவுண்ட் டவுன் தொடங்கவும், எரிபொருள் இயக்கத்தை தொடங்கவும், ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனே செயல்பாட்டை நிறுத்தவும் வசதிகள் உள்ளன. ஆனால், நிலவில் இது எல்லாமே தானியங்கி முறையில் தான் நடக்கும். மேலும், ராக்கெட் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நுழையும்போது அதன் வேகம் அதிகமாக இருப்பதால் வெளிப்படும் வெப்பத்திலிருந்து ராக்கெட்டை பாதுகாக்க வலுவான வெப்ப கவசம் தேவைப்படுகிறது.” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த போட்டியில் நிலவின் தென் துருவத்தின் மீது தான் அதிக ஆர்வம் உள்ளது. இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, விண்வெளி வீரர்களின் உயிரையும், மக்களின் பில்லியன்கணக்கான டாலர்களையும் மீண்டும் பணயம் வைக்க வேண்டிய அவசியம் உள்ளதா? ஒருவேளை இப்போது இந்த பந்தயத்தின் வடிவம் மாறியிருக்கலாம். ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், முதலில் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வது யார் என்பது அல்ல, மாறாக சந்திரனில் மனிதன் வாழக்கூடிய மற்றும் அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தொழில்நுட்பத்தை யார் முதலில் கண்டுபிடிப்பது?, அதாவது யார் முதலில் நிலவில் மனிதக் குடியேற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதே இந்த போட்டி. இதுகுறித்து எரிக் பர்கர் கூறுகையில், இந்த போட்டியில் நிலவின் தென் துருவத்தின் மீது தான் அதிக ஆர்வம் உள்ளது, ஏனெனில் அந்த பகுதியில் உள்ள பள்ளங்கள் சூரிய ஒளி படாமல் எப்போதும் இருளில் இருக்கும். அங்கு நீர் பனிக்கட்டி வடிவில் உறைந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இது ஒரு மிக முக்கியமான வளமாக இருக்கலாம். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவு கொண்ட இந்தப் பகுதியில் ஆராய்ச்சி மையத்தை நிறுவ ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள். இது ஒரு சிறிய பகுதி என்பதால் அதன் மீதான கட்டுப்பாடு யார் என்பதில் மோதல் ஏற்படுமா? தற்போதைய கேள்வியே அதன் தொழில்நுட்ப அல்லது அரசியல் பலன் என்ன என்பதுதான். இந்த போட்டியே மக்கள் மனதில் யார் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதேயாகும். அதில் அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக சீனா இருக்கும் என்பதே எரிக் பர்கரின் கருத்து. எரிக் பர்கரின் கூற்றுப்படி, கடந்த இருபது ஆண்டுகளில் சீனா இதில் நிறைய முன்னேற்றத்தை கண்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற சிறிய மாதிரியை தயார் செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தனது பயணத்தின் போது, சீனா செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்தது மட்டுமல்லாமல், அதன் மேற்பரப்பில் தரையிறங்குவதில் வெற்றியும் பெற்றது. இது பெரிய சாதனை. 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் தனது ஆய்வுத்தளத்தை உருவாக்க சீனா விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா இதே விஷயத்தை 2028 ஆம் ஆண்டிற்குள் செய்ய விரும்புகிறது. ஆனால் அதன் திட்டம் ஏற்கனவே தாமதமாகிவிட்டது. இதற்காக அந்நாடு கோடீஸ்வரர் எலான் மஸ்க் மற்றும் அவரது 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தை சார்ந்துள்ளது. நாசாவிற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஸ்டார்ஷிப் விண்கலம் இல்லாமல் இது சாத்தியமில்லை என்று கூறுகிறார் எரிக் பெர்கர். விண்வெளி ஆய்வு பணிகளுக்காக அமெரிக்காவும், சீனாவும் தனியார் நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாசாவின் 'ஆர்டெமிஸ் மிஷன்' திட்டத்திற்காக விண்கலத்தை தயாரிக்கும் பொறுப்பு எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலவில் வணிகத்திற்கான சாத்தியங்கள் நிலவில் மனிதர்களை இறக்கி, அங்கேயே சில காலம் தங்கி ஆராய்ச்சி செய்ய பல வகையான தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இதில் பல நாடுகள் ஆர்வமாக உள்ளன. நிலா குறித்த ஆராய்ச்சி மற்றும் அங்குள்ள வளங்களை அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு என்னென்னெ விதிகள் மற்றும் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்தின் வடக்கு அம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் விண்வெளி கொள்கை மற்றும் ஒழுங்குமுறை பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் அமெரிக்காவும் அதன் ஆர்ட்டெமிஸ் மிஷனும் இந்த திட்டத்தை தலைமையேற்று நடத்தும் என்று நம்புகின்றன" என்கிறார். "பல நாடுகளும், நிறுவனங்களும் நிலவில் தங்களது நிலைகளை உருவாக்கி, அங்கு கிடைக்கும் வளங்களைச் சுரண்ட ஆசைப்படுவதனாலேயே அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதே காரணம்தான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கும் உள்ளது. நிலவில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க முடியும்.” பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டதன் மூலம் சீனா ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால் இந்த துறையில் இன்னமும் மிக முக்கியமான நபராக எலான் மஸ்க் இருந்து வருகிறார். நாசாவின் 'ஆர்டெமிஸ் மிஷன்' திட்டத்திற்காக விண்கலத்தை தயாரிக்கும் பொறுப்பு அவரது நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் லட்சியம் மிகப் பெரியது என்று கூறுகிறார் கிறிஸ்டோபர் நியூமன். மேலும் "இந்த விண்கலம் தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருப்பதன் மூலம் மனித எதிர்காலத்தின் திசையை நிர்ணயிக்கும் பணியில் தான் ஈடுபட்டுள்ளதாக காட்ட விரும்புகிறார் எலான் மஸ்க்” என்கிறார் கிறிஸ்டோபர் நியூமன். “வேற்று கிரகங்களில் மனித குடியிருப்புகளை நிறுவுவதில் எலான் மஸ்க்கின் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும். அவர்களின் லட்சியம் வெறும் லாபமீட்டுவதையும் தாண்டி மிகப்பெரியது." விண்வெளி ஆய்வுப் பணிகளில் தனியார் நிறுவனங்களை இணைத்துக்கொள்வது பல கேள்விகளை எழுப்புகிறது. இதுகுறித்து பேசிய கிறிஸ்டோபர் நியூமன் , நாம் மற்ற கிரகங்களுக்குச் செல்ல விரும்பினால் அல்லது அங்கு மனிதர்களைக் குடியேற்ற விரும்பினால், அங்கு என்ன விதிகள் இருக்கும்?, குற்றங்கள் எவ்வாறு வரையறுக்கப்படும்?, தண்டனைகள் எப்படி வழங்கப்படும்?. இந்த விதிகளின் எல்லைக்குள் தனியார் நிறுவனங்களை வைத்திருப்பது சவாலானது. இத்தகைய சூழலில், விண்வெளிப் பயணங்களில் தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருப்பது அரசாங்கங்களுக்கு கவலையளிக்கும் விஷயம் என்பது நிரூபிக்கப்படலாம்” என்கிறார். "ஸ்பேஸ்எக்ஸின் பிரச்னையும் இதுதான்" என்கிறார் கிறிஸ்டோபர் நியூமன். இதன் வழியாக எலான் மஸ்க் மிகவும் சக்தி வாய்ந்த நபராக மாறுவார். அதற்கு பின் அவரைக் கட்டுப்படுத்துவது கடினம். நாம் தற்போது வாழ்ந்து வரும் பூமியில் அழிவு ஏற்பட்டால் மற்ற கிரகங்களில் குடியேறி விடலாம் என்று, அங்கெல்லாம் மனித குடியேற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. அவர்களுள் ஒருவர்தான் எலான் மஸ்க். ஆனால், மற்ற கிரகங்களில் குடியேற்றங்களை நிறுவுவதற்கு முன்பு மனிதர்களை நிலவில் சில காலம் வைத்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் என்ன பலன்கள் கிடைக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியது. அதன் மூலம் சந்திரனில் சல்பர், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது" நிலவில் நீர் இருக்கிறதா? இல்லையா? அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியரும், விண்வெளிக் கொள்கை நிபுணருமான நம்ரதா கோஸ்வாமி பேசுகையில், “ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையின் குறிக்கோளே நிலவில் முகாமை உருவாக்குவதுதான். இதன் மூலம் நிலவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தலாம். மேலும் செவ்வாய் கிரகத்தை அடையும் திறனையும் அதிகரிக்க முடியும். சமீபத்தில், நிலவில் இரும்பு, டைட்டானியம் மற்றும் பிற பயனுள்ள கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.” "இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியது. அதன் மூலம் சந்திரனில் சல்பர், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் பனிஉறைந்த நீர் இருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. 2026 இல், இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து நிலவில் உள்ள பனி உறைந்த நீரைக் கண்டறிய நிலவுக்கு மற்றொரு பயணத்தை தொடங்க உள்ளன. நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கு பனியாக உறைந்துள்ள நீர் அவசியம். ஏனெனில் அதில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்க முடியும்.” விண்வெளியில் மேலும் ஆய்வு செய்வதற்கு நிலவை ஒரு தளமாகப் பயன்படுத்தலாம் என்பதை இவை சுட்டிக்காட்டுகின்றன. “நிலாவை தளமாக்குவதன் மூலம் அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை எளிதில் அனுப்ப முடியும்” என நம்புகிறார் நம்ரதா கோஸ்வாமி. 2036ம் ஆண்டுக்குள் நிலவில் தளம் அமைத்து விட வேண்டும் என சீனா விரும்புகிறது. இந்தியாவும் இதே திட்டத்தை அறிவித்துள்ளது. வெற்றி கிடைத்தால், நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அங்கிருந்து ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான செலவு மிகவும் அதிகம். காரணம் நிலவின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளியேறுவதை விட, பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளியேற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது. அதனால்தான், பல நாடுகளும் நிலவை முக்கியத்துவம் வாய்ந்த வளமாக பார்க்கின்றன. ஆனால் இது தவிர, எதிர்காலத்தில் நிலவால் கிடைக்கும் நன்மைகள் ஏதேனும் உண்டா? உதாரணமாக, நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியில் இருக்கும். ஆனால், அங்கு மேகங்களோ அல்லது வளிமண்டலமோ இருக்காது. எனவே நிலவின் அந்தப்பகுதியை சூரிய சக்தியை பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்ய பயன்படுத்த முடியும். இதுகுறித்து நம்ரதா கோஸ்வாமி கூறுகையில், "நிலவில் சூரிய சக்தியை உற்பத்தி செய்து, மைக்ரோவேவ் மூலம் குறைந்த சுற்றுப்பாதையில் பெரிய செயற்கைக்கோள்கள் வழியாக பூமிக்கு அனுப்ப முடியும்" என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியில் உள்ள புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் சில காலத்திற்குப் பிறகு தீர்ந்துவிடும். அதுபோன்ற சூழலில், விண்வெளியில் காணப்படும் சுத்தமான சூரிய ஆற்றல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நிலவில் கால் பதிக்க அமெரிக்கா, இந்தியா, சீனா போட்டி - முந்துவது யார்? பூமியில் இரவு நேரம் இருக்கிறது, அதே போல் இங்கு வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் சூரிய சக்தி உற்பத்தியை பாதிக்கிறது. ஆனால் விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய சக்தியை உருவாக்க முடியும். பூமியில் உள்ள புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் சில காலத்திற்குப் பிறகு தீர்ந்துவிடும். அதுபோன்ற சூழலில், விண்வெளியில் காணப்படும் சுத்தமான சூரிய ஆற்றல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். தற்போது இங்கு எழும் கேள்வி என்னவென்றால், யார் இந்த வளங்களை, எந்த அளவு பயன்படுத்த முடியும்? 1967 விண்வெளி ஒப்பந்தத்தின் படி, எந்த நாடும் விண்வெளியில் அதிகாரத்தை செலுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவோ, சீனாவோ நிலவின் இருண்ட பகுதிக்கு சென்று அங்கு குடியிருப்புகளை ஏற்படுத்தினாலும் கூட, அதை தங்கள் பகுதியாக உரிமைகோர முடியாது. ஆனால் யதார்த்தம் இதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். நிலவின் வளங்களை சமமாக பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான எந்த சட்ட அமைப்பும் தற்போது இல்லை என்றும், முதலில் அங்கு சென்றடையும் நாடுகளே இதன் மூலம் பயனடையும் என்பதே கவலைக்குரிய விஷயம் என்றும் நம்ரதா கோஸ்வாமி கூறுகிறார். இந்நிலையில் அடுத்த முறை நிலவில் யார் முதலில் காலடி வைப்பது என்பது தற்போதைய கேள்வி? ஆனால், இந்த காலகட்டத்தில் நிலவை அடைவது என்பது விஞ்ஞான ரீதியிலான சாதனைக்கானது மட்டுமல்ல, அதை தாண்டி நிலவில் இருந்து சூரிய சக்தியைப் பெறவும், அங்கு ஒரு தளத்தை உருவாக்குவதன் மூலம் மற்ற கிரகங்களுக்கு ஆய்வு பணிகளுக்கு செல்லவும் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். தற்போதைய நிலவரத்தை பொறுத்தவரை 2028ல் அமெரிக்கா மீண்டும் நிலவில் காலடி எடுத்து வைக்கும் என தெரிகிறது. இரண்டு வருடங்கள் கழித்து சீனாவும் பத்து வருடங்கள் கழித்து இந்தியாவும் நிலவில் காலடி வைக்கும். https://www.bbc.com/tamil/articles/crg4y1jjl3xo1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இவ்வளவு மாவீரர்களையும், மக்களையும் காவு கொடுத்து விட்டு சாதாரண மாநில அரசு, மாகாண அரசு என்ற சிங்கள,மேற்கு, இந்தியாவின் சுத்துமாத்துக்கு தலைவர் பிரபாகரன் ஆம் என்பாரா? எத்தனை ஏமாற்று வித்தைகளை (சிங்களத்தின்) தமிழ் மக்கள் கண்டு விட்டார்கள். நோர்வேயின் திருகு தாளங்கள் சொல்லி மாளாது. அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் மேற்கு வெருட்டி இருக்கும் என்பதை தற்போது அமெரிக்கா, மேற்கு நாடுகள் பலஸ்தீனுக்கு செய்வதை பார்க்கும் போதே சொல்லலாம். சும்மா எழுதவில்லை. கருத்துக்களை அவதானித்தால் எழுதுகிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் கேட் கப்பட்ட கேள்விக்கு பதில் அது ஒரு துன்பியல் நாடகம் என சொன்னதே. ஆகவே அக்கொலை புலிகளால் நடாத்தப்பட்டது என நம்புகிறீர்களா? அந்த வசனத்தை திருப்பி 15 வருடங்களின் பின் நக்கலாக இத்திரியில் பாவிப்பதன் நோக்கம் என்ன??1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- இன்றைய வானிலை
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!
வாழ்த்துக்கள் பார்த்தால் ஜேர்மன்காரி மாதிரி இருக்கிறது வணக்கம் வாருங்கள்… இப்போதைக்கு யாழ்ப்பாணம் போக வேண்டாம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்திப்பார்கள்.1 point- தேசியத்தலைவரின் மகள் துவாரகா,சந்தேகங்களைத் தீர்க்கும் சந்திப்பு.
1 point- தேசியத்தலைவரின் மகள் துவாரகா,சந்தேகங்களைத் தீர்க்கும் சந்திப்பு.
எனது மக்களை நம்பியே அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்.1 point- தேசியத்தலைவரின் மகள் துவாரகா,சந்தேகங்களைத் தீர்க்கும் சந்திப்பு.
இவ தலைவர் அவர்களின் மகள் இல்லை!1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஏன் இல்லை? எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்ட்து. ஆனால் எல்லாம் மீறப்பட்ட்துடன், சில கிழித்தெறியப்பட்ட்து. செய்யவில்லை என்று சொல்ல வேண்டாம். ஆயுதப்போராட்டம் என்பது சும்மா மக்களை பிச்சைகாரக்கும் போராட்டமாக இருக்க கூடாது. ஆபிரிக்காவில் யுத்தம் என்று சொல்லி மக்கள் இன்னும் இன்னும் பிச்சை காரர்களாக மாறுகிறார்கள் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. அது யுத்தம் அல்ல ஒரு கொள்ளை கும்பலின் வெறியாட்டிடம்தான் அங்கு நடக்கின்றது. ஆனால். கிழக்கு தீமோர் தென் சூடான் போன்ற தேசங்களிலும் போராடினார்கள் வெற்றி பெற்றார்கள். யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு, சமாதானம் பண்ண ஒரு காலம் உண்டு. இல்லாவிடடாள் முடிவு அழிவுதான். அன்டோன் பாலசிங்கத்தின் கருத்துக்களுக்கு செவி கொடுத்திருந்தாலே எல்லாம் ஒரு நன்மையில் முடிவடைந்திருக்கும் . நிச்சயமாக இனிமேல் தீர்வு என்பது இருக்காது. எல்லோரும் இலங்கையர் என்று வாழ்வதுதான் தீர்வாக அமைய போகின்றது. இது எனது கருத்து.1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியரும் விண்ணப்பம்!
இங்கு ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் யார் என்று சிந்திக்க வேண்டும். எந்த இனத்தை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் இனவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். பொதுவாக சிங்கள இனத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். நேர்மையாக சிந்திக்கிற , மனிதாபிமானத்துடன் அணுகும் அரசியல்வாதிகள் அரசியலில் மிகவும் குறைவு. அப்படியானவர்கள் இதில் களம் இறங்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது. ஒன்று மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றது பணம் வேண்டும். எனவே உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இனி ஒரு யுத்தம் வராது என்பது எல்லோரும் கருதும் ஒரு விடயம். நானும் அப்படிதான் நினைக்கிறேன். எனவே அதிகார பகிர்வு எல்லாம் எழுதவும், கதைக்கவும் மட்டுமே. வெளிநாட்டு தலையீடுகள் என்று கூறினாலும் நிலைமையை பொறுத்து இலங்கை அதைசமாளிக்கும். சீனா, ருசியா இருக்கும் வரைக்கும் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது.1 point- இன்றைய வானிலை
1 point- பெரும்பான்மை வாதம் குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்
அதுவும் இந்தியாவில் போய் நின்று சொல்கின்றார்...இந்தியாவுக்கு அரசியல் பாடம் எடுக்கின்றார் போல.... இந்து பெரும்பான்மை என ஆட்சி செய்ய வேண்டாம் பெளத்தர்களும் உண்டு என சொல்லுகின்றார் போலும்...1 point- கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
எந்த நாட்டு கடற்படை அதிகாரிகள் என்று தெரியவில்லை...சில யூ டியுப் விண்னர்கள் இந்தியா ஹெலிகப்பட்டர் என சொன்னார்கள்...1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நடந்தவைகள் எல்லாம் 100% சரியானவை என்று அதற்கு நியாயம் கற்பித்து அவை எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை எனப் புனிதப்படுத்தி அதை எமது பெருமையாக் கூறி காவியம் எழுதுவதும், அந்தப் புனிதமானவற்றில் நியாயமற்ற பாரிய படுகொலைகளும் உள்ளனவே எனச் சுட்டிக்காட்டும் போது, அந்த விவாதத்தில் அதற்கு பதில் சொல்ல முடியாத நிலையை அடையும் போது, பழசை இனி கிண்டி என்ன பிரயோசம், நீங்கள் என்ன பழசே கிண்டிக் கொண்டிருக்கின்றீர்கள், என்று எம்மைக் குற்றம் சாட்டுவதும், அதன் பின்னர் மீண்டும் தாம் அதே பழசை கட்டிப்பிடித்து தொங்கிக்கொண்டு, தாம் பழசு என்று கூறிய அதே விடயங்களை பெருமையாக பேசி அதே தவறான அரசியலை தொடரவேண்டும் என்ற பொருள்பட பேசும் வரட்டுத் தத்துவத்துக்கு பெயர் தான் தேசியம் என்றாகி விட்டது கவலைக்குரியது.1 point- பெரும்பான்மை வாதம் குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்
அதை வரும் ஜனாதிபதி, பொது தேர்தலில் சிங்கள மக்களுக்கு கூற வேண்டும். வெளி நாடுகளில் இருக்கும்போது அல்லது வடக்கு கிழக்கில் இருக்கும்போது ஒன்றயும் சிங்கள பகுதியில் இருக்கும்போது ஒன்றயும் கூற கூடாது.1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியரும் விண்ணப்பம்!
வரலாறு பல பாடங்களை விட்டு சென்றுள்ளது ...ஒரு லயனல் பெர்ண்டோ வைத்து மொத்த சிறிலங்கா இனவாத செயல்களையும் மறைக்க முடியாது....சிங்கள அதிகாரிகள் நல்லவர்களாக இருப்பார்கள் ...ஆனால் சட்டங்கள் ஊடாக மக்கள் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்....அதற்குறிய அதிகாரங்கள் பிர்தேச மக்களுக்கு தேவை....1 point- கருத்து படங்கள்
1 point1 point- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியரும் விண்ணப்பம்!
இவர்கள் எல்லாம் இனவாதம் , மத வாதம் என்று மற்றவர்களை தூற்றுவார்கள். தங்கள் யார் என்பதை ஒரு நாளும் எண்ணியது கிடையாது. வெள்ளையடிக்கப்படட கல்லறைகள். இவர்கள் தங்களது நிலையை, தாங்கள் எங்கேயிருக்கிறோம் என்று முதலில் உணரும் வரைக்கும் தமிழனுக்கு விடிவில்லை. எத்தியோப்பிய பல்கலை கழகத்தை குறிப்பிட்டிருந்தீர்கள். சில வேளைகளில் அவர்களை பிழையாகா நாம் விளங்கி இருந்தாலும் நம்மைவிட ஒருபடி மேலேதான் இருக்கிறார்கள். ஒரு பழமொழி சொல்லுவார்கள் அது இந்த தமிழர்களுக்கு நன்றாகவே பொருந்தும். எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியையும் மாற்றினாலும் மாற்றும் இவர்களோ மாற மாடடார்கள் என்று. நிறையபேர் இந்த பாகுபாடடை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையை எழுதும்போது தாம் தூம் என்று துள்ளு குதிப்பார்கள்.1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 19 ஆதா ஆடையுற்பத்தி நிறுவனத்தில் வேலை முடித்து வெளியேற இரவு ஏழு மணியாகியிருந்தது. பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தாள். உந்துருளியில் வந்து சேர்ந்தான் சமிந்த. ஏறியிருந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். சமிந்தவின் சீருடையில் கமழ்ந்த வாசனை நாசியை அரித்தது. லேசாக மழை துமித்தது. சமிந்தவின் தோளில் நாடி நிறுத்தி நெருக்கியிருந்தாள். அறிவியல் நகரிலிருந்து மாங்குளம் நோக்கி உந்துருளி மெல்ல விரைந்தது. ஆதாவுக்கு அப்போழ்து சுகமாயிருந்தது. இராணுவத்தினனோடு நெருக்கமாக அமர்ந்து ஆதா செல்வதை எதிர்த்திசையில் வந்த வைத்தியலிங்கம் கண்டார். அன்றிரவே “இவளொரு பட்டை வேசை. ஆர்மிக்காரங்களோட படுத்து சீவியத்தைப் போக்கிறாள்” ஆதாவின் வீட்டின் முன்பாக நின்று வைத்தியலிங்கம் வெறிபிடித்துக் கத்தினார். அவரோடு கூடியிருந்தவர்களும் பக்கப்பாட்டு பாடினார்கள். அவளுடைய வீட்டின் கூரையில் கற்கள் வீசினர். நாய்கள் குரைத்தன. பதிலுக்கு எதுவும் செய்யாமல் நகத்திற்கு வண்ணப் பூச்சிட்டுக் கொண்டிருந்தாள் ஆதா. சமிந்த அவளைத் தொடர்பு கொண்டான். அடுத்தமாதம் விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும் போது, அவளையும் வருமாறு அழைத்தான். வெளியே நாய்களின் குரைப்பொலி இன்னும் அடங்கவில்லை. ஆதாவுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. பார்க்கலாமெனச் சொல்லி அலைபேசியைத் துண்டித்தாள். அதிகாலையில் எழுந்து மதியத்திற்கும் சேர்த்து சமைத்து, வேலைக்கு புறப்படுகையில் காலை எட்டு மணியாகியிருந்தது. பேருந்து தரிப்பிடத்திற்கு ஓட்டமும் நடையுமானாள். வைத்தியலிங்கம் தனது வீட்டுக்கு முன்பாக அமர்ந்திருந்து ஆதாவை அவர் பெயர் சொல்லியழைத்தார். அவள் பொருட்படுத்தாமல் நகர்ந்தாள். வைத்தியலிங்கம் கொதித்து வெருண்டார். “எடியே வேசை நில்லடி. உன்ர சாமானில அவ்வளவு கொழுப்போடி” என்றார். ஆதாவுக்குள் குருதியின் ஓட்டம் கலவரப்பட்டது. இறந்தகாலத்தின் நிழல் விழுத்திய சூரியோதயமென அவ்வளவு கம்பீரமான ஒளிக்கதிர்கள் திடுமென நிலமெங்கும் விரவியது. அழியாத காயத்தின் கண்களில் நீசப்படை எதிர்த்த வனத்திமிர். எதுவும் மிச்சமற்றவளின் சலிப்புடன் வைத்தியலிங்கத்தை நோக்கி வந்தாள். நெடும்பொழுதின் புயலென ஓருதையில் கீழே வீழ்த்தினாள். மல்லாந்து விழுந்த அவனின் நெஞ்சில் கால்கள் விரித்து அமர்ந்தாள். குரல்வளையில் உயிரின் மின்சொடுக்கு ஏறியிறங்கித் தவித்தது. கூந்தல் விரிந்த ஆதாவின் கைகள் நெரித்த குரல்வளையில் ஒருநொடி அசைவின்மை. “பிழைத்துப் போ மானங்கெட்டவனே” என்ற கட்டளையில் இருமிக்கொண்டெழுந்தது வைத்தியலிங்கத்தின் உடல். “எப்ப பார்த்தாலும் ஒருத்தியை வேசை, தாசையெண்டால் தாங்குவாளோ. உவன் வைத்திக்கு இன்னும் எப்பன் கூடவா அடி கிடைச்சிருக்க வேணும்” மாடன் சொன்னதும் சூழவிருந்தவர்கள் கைதட்டம் கொட்டிச் சிரித்தனர். “அவளென்ன, வைத்தியலிங்கத்தின்ர நோஞ்சான் மனிசியே. இயக்கத்தில கொமாண்டோ ரெய்னிங் எடுத்தவள். பெரிய சண்டைக் காயெல்லே” மாடன் மீண்டுமுரைத்தான். அவள் எழுந்து மிகவேகமாக நடந்தாள். வேலைக்குப் போகப்பிடிக்காமல் பிரதான வீதியிலிருக்கும் வாதா மரத்தின் கீழே அமர்ந்திருந்து சமிந்தவைத் தொடர்பு கொண்டாள். நிர்வாக வேலையொன்றுக்காக முல்லைத்தீவுச் செல்ல ஆயத்தமாவதாகச் சொன்னான். கூடவருவதாக அவள் சொன்னாள். சமிந்த சிலநொடிகள் தயங்கி யோசித்தான் போலும்! ஆதாவுக்கு விளங்கியது. “சரி நீ போய்விட்டு வேகமாகத் திரும்பி வா. நான் காத்திருக்கிறேன்” என்றாள். இலைகள் உதிர்ந்தன. வீதியில் வாகனங்களின் மூர்க்க இரைச்சல். நிலத்தின் அடியில் வேட்கைச் சுவடுகளின் நடப்பொலிகள் அலைந்து ஓயமறுக்கும் சப்தத்தை கேட்டுத்துடித்தாள். நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக, என் தாயார் என்னைப் பெற்றநாள் ஆசிர்வதிக்கப்படாதிருப்பதாக! உமக்கு ஒரு பெண்பிள்ளை பிறந்ததென்று என் தாய்க்கும், தகப்பனுக்கும் நற்செய்தி அறிவித்து அவர்களை மிகவும் சந்தோசப்படுத்தினவர்கள் சபிக்கப்படக்கடவர். என் தாயார் எனக்குப் பிரேதக் குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூழலுமாய் இருக்கும்படியாய் கர்ப்பத்திலே நான் கொலை செய்யப்படாமற் போனதென்ன? என்று கலங்கினாள். ஒளியுள்ள ஒரு மேகம் அவள் மேல் நிழலிட்டது. யுத்தம் சூதாடிக் கழிந்த சபையில் மிச்சம் வைக்கப்பட்ட கிருஷ்ணை. விடுதலை யாகத்தின் தீயில் தோன்றியவளின் முன்பாக எல்லாச் சிறுமைகளும் சாம்பலாகும். கருக்கலின் பாதையில் சமிந்த வருவது தெரிந்தது. விம்மிக் கசியும் தனது விழிகளைத் துடைத்து பெருமூச்செறிந்தாள். ஆவேசமாகச் சுழன்று வீசிய காற்றில் புழுதி கிளம்பியது. தூசெழுந்த வெளியில் வாதையின் சிலுவை சுமந்து நின்றாள் ஆதா! சமிந்த யுத்தக் களத்தில் பெரிய அனுபவம் கொண்டவனல்ல. ஆனாலும் இறுதியாக நடந்த யுத்தத்தில் பங்கெடுத்திருக்கிறான். புதுக்குடியிருப்பு பகுதியில் போராளிகளோடு நடந்த மோதலில் காயப்பட்டுமிருக்கிறான். ஆதாவுக்கும் அவனுக்குமிடையே காதல் பிறந்த தொடக்க நாட்களில் இருவரும் தங்களுடைய போர்முனை அனுபவங்களை கதைப்பது வழக்கமாயிருந்தது. *** ஒருநாள் இருவருமாகச் சேர்ந்து புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவிலுக்குச் சென்று திரும்பிய மாலைப் பொழுதில் மழை பெய்யத் தொடங்கிற்று. இருவரும் தொப்பலாக நனைந்து வீடு திரும்பினர். அவளை வீட்டில் இறக்கிவிட்டு இராணுவ முகாமிற்கு செல்ல ஆயத்தமானான் சமிந்த. ஆனால் அவனை வீட்டிற்குள் வருமாறு அழைத்தாள். சமிந்த வேண்டாமென மறுத்தான். தன்னால் ஆதாவுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாதென எண்ணினான். பொழியும் தூரவானின் பொருள் விளங்கிய காதலின் பாலிப்பு. சமிந்தவின் தலையைத் துவட்டிவிட்டு ஆடைகளை மாற்றுமாறு பணித்தாள். ஏற்கனவே அவனுக்கு வாங்கி வைத்திருந்த புத்தாடைகளைக் கொடுத்தாள். சுகநாதம் சூடிக்கொண்ட கூந்தலாய் அப்பொழுது குளிர்ந்தும் உலரத்தொடங்கியது. சமிந்த ஆடையை மாற்றும் போதுதான் முதுகிலிருந்த காயத்தழும்பைக் கண்டாள். “சமிந்த, இதுதான் புதுக்குடியிருப்பு காயமா?” என்று தழும்பைத் தொட்டுக் கேட்டாள். அவன் ஓமெனத் தலையசைத்து, உங்களுடைய “பசீலன் ஷெல்தான்” சொல்லிச் சிரித்தான். “நீங்கள், எங்களைக் கொல்ல இஸ்ரேல், இந்தியாண்டு ஓடியோடி ஆயுதம் சேர்க்க, நாங்கள் மட்டும் பனை மட்டையை வைச்சு உங்களைச் சுட ஏலுமோ. அதுக்குத் தான் இதுமாதிரியான ஏற்பாடுகள் எல்லாம். எங்கட ஒரு பசீலன் ஷெல்லுக்கு முன்னால உங்கட ஆயுதங்கள் எல்லாம் கொஞ்சம் சிறிசு தான்” ஆதா சொன்னாள். “பட்ட எனக்கு நோவு தெரியும். நீ சொல்வதை ஒத்துக்கொள்கிறேன்” என்றான் சமிந்த. இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்து தேத்தண்ணி அருந்தினர். அரியதரமிரண்டையும் எடுத்து வந்து கொடுத்தாள். “கொஞ்சம் இனிப்புக் குறைந்து போய்விட்டது, அடுத்த தடவை சரியாய் செய்வேன்” என்றாள். மழை குறையவேயில்லை. வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமிந்தவின் உந்துருளியைப் பார்த்துச் சென்ற சிலர், அந்த மழையிலும் விடுப்புக் கதைத்துக் கொண்டு போயினர். வெளியிலொரு வெளியிருப்பதை வீட்டினுள் இருந்த இருவரும் மறந்தனர். ஆதா தன்னுடைய போர்முனை அனுபவங்களின் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஐந்து தடவைகளுக்கு மேலாக களத்தில் விழுப்புண் அடைந்ததை அறையதிரும் வண்ணமுரைத்தாள். இனியும் என் நிலத்திற்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன். புகையிட்டு வேட்டையாடும் தேனடை போல பொஸ்பரஸ்களால் இரையாக்கப்பட்ட உடல்களின் மீந்த துண்டு நான். ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் ஓடிச் சிதறிப்போன என் தேசம் யாராலும் கடந்து போகாதவண்ணமாக பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றது. என் காயங்களின் மீது நட்சத்திரங்கள் நிரம்பியிருக்கின்றன. அவையொருநாள் அதிகாலை வானில் விடியலோடு ஒளிரும் என்றாள். சமிந்த அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான். பேரூழின் அவயங்கள் நதிமறந்து நீந்தத்தொடங்கின. ஆதாவின் மேனி திறந்தது. தீயின் சண்டமாருதம் இறங்கி அமர திடுமென மழை விட்டது. ஆதாவின் வீட்டுப்படலையை தட்டும் சத்தம் கேட்டு விழிப்புச் சீவியது. ஆதா ஆடைகளை சரிசெய்தபடி கதவைத் திறந்து வெளியேறினாள். வாடியுதிர்ந்த முகத்தோடு பிச்சை கேட்டு நின்றாள் சிறுமியொருத்தி. அவளுடைய தந்தை இரண்டு காலுமற்று முச்சக்கர சைக்கிளிலிருந்தார். தன்னிடமிருந்த காசையும், சமிந்தவிடமிருந்த காசையும் வாங்கி வீட்டிலிருந்த உணவுப் பொருட்களையும் கட்டிக்கொடுத்தாள். “மலர்களை ஏந்திநின்று புன்னகைக்க வேண்டிய இந்தச் சிறுமியின் கையில் திருவோட்டைக் கொடுத்து, பிச்சை கேட்க வைத்தது யுத்தம்தான். நீ அதனை உணர்கிறாயா சமிந்த?” ஒத்துக்கொள்வதைப் போல தலையாட்டினான் அவன். *** இன்றைக்கு காலையில் வைத்தியலிங்கத்தை அடித்ததை சமிந்தவிடம் சொன்னாள். முல்லைத்தீவுக்குச் சென்று திரும்பிய களைப்பிலிருந்தவனுக்கு அவள் சொன்னதைக் கேட்டதும் கலக்கமாயிருந்தது. அவன் உயிருக்கு ஏதும் தொந்தரவில்லையே என்று கேட்டான். செல்லமாக அவனுடைய காதைப்பிடித்து திருகி “என்னைப் பார்த்தால் கொலைகாரி மாதிரியா இருக்கு?” என்று கேட்டாள். “இல்லையா பின்ன. ஒருநாள், நீ எத்தனை ஆர்மிய சுட்டுக்கொன்றிருப்பாய் என்று கேட்ட போது, நானூறுக்கும் மேலே இருக்கும் என்றாயே” “ஓம். ஆனாலும் இந்த எண்ணிக்கையில் இப்போது ஒன்று அதிகமாக வாய்ப்பிருக்கு” என்றாள். “இனியுமா!” “ஓம், இப்ப நினைச்சாலும் – இந்தக் கணமே நானூற்று ஒன்றாய் ஆக்குவேன்” என்று விளையாட்டாக அவனது குரல் வளையைப் பிடிக்கப்போனாள். சமிந்த அவளை இறுக அணைத்துக் கொண்டான். இருவர் உயிருனுள்ளும் ஊர்ந்து தொங்கும் மதுரக் குலையிலிருந்து ஏந்தவியலாதபடிக்கு துளிகளின் சொட்டுதல். விரல்கள் நெய்யும் துணியென உடல்கள் விரிந்தமை பெரிய ஆறுதலாயிருந்தது. காலாதீதத்தின் நறுமணம் உதடுகுவித்து இருவரையும் முத்தமிட்டது. கனவில் தளிர்த்துப் பெருகும் சுடர் செடியைப் போல சமிந்தவின் சரீரத்தில் நீண்டிருந்தாள் ஆதா. அவர்கள் எப்போதும் சந்தித்துக் கொள்ளுமிடமிது. எவரின் வருகையும் நிகழாத துரவடி. தண்ணீரும் மரங்களும் சாட்சியாய் நாணமுற்று பார்க்க கூடினர். ஆதாவின் சரீரத்துக் காயத்தழும்புகள் போரின் கொம்புகள். மொழியின் தொன்ம எழுத்துக்கள். வயிற்றைக் குறுக்கறுத்து கொழுத்த நீளமெழுகுப் புழுவெனத் திரண்டிருக்கும் தழும்பின் மீது சமிந்த கைகளைப் பதிந்தான். கற்பாறையின் தகிப்பு. விசுக்கென கைகளை மீட்டான். “என்ன! தாங்கமுடியாதபடி சுடுகுதோ” ஆதா கேட்டாள். “ஓம் ஏன் இப்பிடிச் சுடுகுது” என்றான். “இது என்ர கடைசிக் காயம். இரணைப்பாலையில நடந்த சண்டையில வந்தது. மிச்ச எல்லாக் காயத்துக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் இதுக்கு எதுவும் இல்லை. எல்லாமும் தலைகீழானதற்கு பிறகு, கனவும் பசியுமாக தியாகத்தின் முன்னே பலிகொடுத்த குருதியூற்று இங்கிருந்துதான் பீறிட்டது.” என்றாள். சமிந்த அந்தக் காயத்தின் மீது முத்தம் ஈன்றான். இருவரில் பெருகும் கண்ணீரால் சரீரங்கள் சிலும்பின. உலை மூண்டு கொதித்தது. பட்டயங்களும், துப்பாக்கிகளும், ஆட்லறிகளும், வன்புணர்வுகளும், பெருங்கொடுமைகளும், போரும், போராட்டமும், மிலேச்சத்தனங்களும் இருளில் நின்று மிரண்டு பார்த்தன. கூடலின் முயக்கவொலியில் அலையோசை கனன்று பெருங்கடல் தாகித்தது. “நீயும் நானும் காதலிப்பதை உன்னுடைய ஊரவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். வைத்தியலிங்கம் மாதிரியானவர்கள் கடுமையான வசவுகளால் உன்னைத் திட்டுகிறார்கள். எனக்காக நீ எவ்வளவு துன்பப்படுகிறாய் என்று நினைத்தால் பெருந்துயரமாய் இருக்கிறது” சமிந்த சொன்னான். “துயரப்படு. சனங்கள் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக எங்களை வன்புணர்ந்து கொன்று புதைத்த வன்கவர் வெறிப்படையைச் சேர்ந்தவன் நீ. அவர்கள் சந்தேகப்படுவார்கள். எதிர்ப்பார்கள். உன் பொருட்டு என்னையும் விலக்குவார்கள். அது சரியானதுதான்” “இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் நாம் ஏன் காதலித்தோம் ஆதா!” “படபடக்காதே. காதலிப்பதற்கு நெருக்கடிகள் அவசியமானவைதான். நீயும் நானும் வாழ்ந்து முடியும் வரை நெருக்கடிகள் நீளும் பெலன்கொண்டவை. அதற்காக…அழிந்து போன போரின் தனிமையை நீ விட்டுச் செல்வாயா, சொல்!” “போரின் தனிமையா?” நீ புணர்ந்து பருகிய தழும்பின் நறுமணம் சுரந்த உன்னுடைய ஆதா போரின் தனிமையல்லாமல், வைத்தியலிங்கம் சொன்னதைப் போல வேசையில்லை என்பது உனக்குத் தெரியாதா! “ஆதா!” என் தனிமையின் வெறுமை எரியட்டும். அதன் சடசடப்பொலியில் எறிகணைகள் வீழ்ந்து தோன்றிய பள்ளங்கள் தூர்ந்து போகட்டும். என் கடைசிக்காயத்தின் தழும்பில் முத்தம் ஈன்று மூர்ச்சையாகும் வரை இயங்கி முயங்குவோம் என்றாள். ஆதா!….எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் சத்தம் கேட்கிறது. “எனக்கும் கேட்கிறது. ஆனால் நாம் எதிரும் புதிருமாய் போரில் மிஞ்சியவர்கள். இனிமேலும் காயப்படமாட்டோம் பயப்பிடாதே” என்ற ஆதாவின் வார்த்தைகள் நிலத்திற்கு ஆசுவசமாய் இருந்தது. https://akaramuthalvan.com/?p=17871 point- யாழ்ப்பாணத்தில் CEY NOR
1 pointநான் nrtb யில் சேர்ந்த புதிதில் அந்த பஸ் டிப்போ ஜெற்றியில் சீ .....நோருக்கு முன்பாகத்தான் இருந்தது.....அதனால் மாலையில் பைக்கட்டில் மீன், றால் வாங்க அங்கு அடிக்கடி போய் வந்திருக்கிறேன்......அப்போது சிறிய அளவிலான பைபர் போட்டுகள்தான் செய்துகொண்டு இருப்பார்கள்......இப்போ இவ்வளவு பெரிய போட்டுகளைப் பார்க்கும்போது பெருமையாய் இருக்கு.....! 👍 இணைப்புக்கு நன்றி புத்ஸ் .........!1 point- துவாரகா உரையாற்றியதாக...
1 point1 point- அழகு நிலவே
1 pointதாய்மண்ணை நினைக்கையிலே by Sofia Rahul & Gobiraj Sivalingam (Music by Steve Cliff)1 point- யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இன்றைய வானிலை
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.