Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 05/12/24 in all areas
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - இரண்டு ---------------------------------------------------------------------- கட்டுநாயக்காவில் இருந்து அப்படியே நேரே ஊர் போவது, கொழும்பிற்கு போவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். கொழும்பில் செய்து முடிக்க வேண்டிய அலுவல்கள் இருந்தால் அன்றி, வெறுமனே கொழும்பு போய், பின்னர் அங்கிருந்து ஊர் போவது நாட்களை வீணடிப்பது போலவும் தெரிந்தது. கொழும்பில், வெள்ளவத்தையில், இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அமைப்பும், நெருக்கமும் அங்கே போக வேண்டும் என்ற விருப்பத்தை இல்லாமல் ஆக்குகின்றன. இந்த தொடர் மாடிக் கட்டிடங்களை, குடிமனைகளை இப்படிக் கட்ட எப்படி அனுமதித்தார்கள் என்பது ஆச்சரியமே. வாகனம் வெளியில் தயாராக நின்றது. நீண்ட தூரப் பயணம், இரவு ஓட்டம், ஆகவே வாகன ஓட்டுனருக்கு ஒரு பேச்சுத் துணைக்கு முன்னுக்கு இருக்கலாம் என்று ஏறினேன். ஆனாலும் முன் இருக்கையில் இருக்கவே கூடாது என்று பலர் கூறிய அறிவுரையும் ஞாபகத்தில் இருந்தது. கொழும்பு - யாழ் ஓட்டத்தில் பல விபத்துகள் நடப்பதாகவும், முன் இருக்கையில் இருப்பவர்களே அதிகமான ஆபத்திற்கு ஆளாகுகின்றனர் என்று ஒரு தரவையும் சொல்லியிருந்தார்கள். ஏறி இருந்த பின், சீட் பெல்ட்டை போடலாம் என்று இழுத்தேன். சீட் பெல்ட் இங்கு பார்க்க மாட்டார்கள் என்றார் ஓட்டுநர். அது வேலையும் செய்யவில்லை. அதை திருத்த வேண்டும் என்று அவரே சொன்னார். சினிமாக்களில் வரும் வாகன விபத்தில் முன் கண்ணாடியின் ஊடாக பறந்து விழுந்து உருளும் ஒரு சினிமா கதாநாயகன் ஒரு சிராய்ப்புக் கூட இல்லாமல் அப்படியே எழும்பி நடப்பார். ஒரு கதாநாயகன் ஆகும் சந்தர்ப்பம் உருவாகிக் கொண்டிருந்தது. 'புத்தளம் வழியே தான் போவீர்கள்?' என்று சும்மா கேட்டேன். அப்படித்தானே எல்லோரும் வழமையாகப் போவார்கள். புத்தளத்தில் ஒரு கடையில் நிற்பாட்டுவார்கள். புத்தளம் எனக்கு கொஞ்சம் பழக்கமான இடமும் கூட. 90 களில் சில மாதங்கள் அங்கு இருந்திருக்கின்றேன். புத்தளம் வழியே தாங்கள் ஓடுவதில்லை என்றார் ஓட்டுநர். புத்தளம் நகரத்தினூடு செல்லும் வீதிகள் மிக மோசமானவை என்றும், அதை விட போலீஸ்காரர்கள் பல இடங்களில் சும்மா சும்மா நிற்பட்டித் தொல்லைகள் கொடுப்பார்கள் என்றும் சொன்னார். எதற்காக நிற்பாட்டுகின்றனர் என்றேன். வேறு என்னத்திற்கு, எங்களிடம் ஏதாவது வாங்கத்தான் என்று அலுத்துக் கொண்டார் ஓட்டுநர். நாங்கள் நிற்பாட்டா விட்டால், போலீஸ்காரர்கள் வீதியில் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்தும் விடுவார்கள் என்றும் சொன்னார். என்றுமே தீராத கொடுக்கல்களும், வாங்கல்களும். புத்தளத்தின் பின் பக்க காட்டு பகுதியினூடு வாகனம் சென்றது. குறுகலான, பல திருப்பங்களுடன் இருந்த வீதி அது. நீண்ட நீண்ட தூரங்களிற்கு ஒரு கடையோ, வெளிச்சமோ இல்லாத பகுதிகள். அடிபட்டால் ஏனென்று கேட்பதற்கு ஆள் நடமாட்டமோ, அல்லது வேறு வாகனங்களோ இல்லை. இன்று புது வருட இரவு என்பதால், வேறு வாகனங்கள் தெருவில் இல்லை என்று ஓட்டுநர் சொன்னார். அவர்களின் நிறுவன வாகனங்கள், மொத்தம் 15, அநேகமாக இந்தப் பாதையில் போய் வருகின்றன என்றார். அப்படியே போய் கல்கமுவவில் ஏறி, அனுராதபுரம் போய், பின்னர் யாழ்ப்பாணத்திற்கான வழமையான பாதை என்றார். விமான நிலையத்தில் இருந்து ஊர் செல்ல ஒரு முழு வாகனத்திற்கு 40,000 ரூபாய் கட்டணம். தனித் தனி இருக்கைகளாகவும் அவர்களே விற்கின்றனர். ஒரு இருக்கை 4, 000 ரூபாய். ஆனால் ஒன்பது பேர்கள் சேர்ந்தால் மட்டுமே இவர்களின் வாகனம் அன்று போகும். ஒன்பது பேர்கள் சேரா விட்டால், சேர்ந்தவர்களை வேறு ஒருவரிடம் கொடுத்து விடுகின்றனர். கொழும்பு - யாழ் ஓடிக் கொண்டிருக்கும் பெரிய சொகுசு பஸ் நிறுவனங்கள் ஒரு இருக்கைக்கு 3,000 ரூபாய் என்று கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், பொதிகளின் எண்ணிக்கை கூடினால், அதற்கு மேலதிக கட்டணம் அறவிடுகின்றனர். ஒரு மாதத்தில் ஒரு வாகனம் கொழும்பிற்கு எத்தனை தடவைகள் போய் வரும் என்று கேட்டேன். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக வரும் கோயில் திருவிழா மாதங்களில் பத்து அல்லது பதினைந்து தடவைகள் கூட போய் வருவோம் என்றார். இந்த நாட்களில் உழைப்பது தான் மொத்த வருமானத்தின் பெரும் பங்கு என்றார். ஒரு மாதத்தில் 15, 000 கிலோ மீட்டர்கள் மேல் ஓடுகின்றனர்! இந்த வாகனங்கள் 25 வருடங்களிற்கு மேலாக தெருக்களில் கை மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன. மொத்தமாக எத்தனை ஆயிரங்கள் கிலோ மீட்டர்கள் இவை ஓடியிருக்கும். இவை எப்படி தாக்குப் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமே. அதை விட அவர் சொன்ன இன்னொரு தகவல் ஆச்சரியம். சில வருடங்களில் முன் இதே வாகனத்தை 25 இலட்சம் ரூபாய்களுக்கு வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியிருக்கின்றனர். பின்னர் 12 இலட்சங்கள் செலவழித்து திருத்த வேலைகள் செய்திருக்கின்றனர் (ஆனால் சீட் பெல்ட்டை திருத்தவில்லை.....😀). இந்த வாகனத்தின் தற்போதைய பெறுமதி 68 இலட்சங்கள் என்றார். சாதாரண வாகனங்களின் பெறுமதி இப்படி அதிகரிக்கும் என்பது வெளிநாடுகளில் வாழும், வீட்டுத் தேவைக்கு வாகனங்கள் வைத்திருக்கும் எங்களுக்கு நம்ப முடியாத ஒரு விடயம். ஒரே ஒரு இடத்தில் நிற்பாட்டி இலங்கையில் எங்கும் எல்லோரும் அருந்தும் நெஸ்கஃபே ஒன்று குடித்தோம். யாராவது கடையில் நல்ல ஒரு தேநீர் போட்டுக் கொடுக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது. பின்னர் முறிகண்டியில் ஒரு சின்ன வழமையான தரிப்பு. அங்கும் கடையில் நெஸ்கஃபே இயந்திரமே. ஆனையிறவில் இராணுவ வீரர் ஒருஅர் வலுக் கட்டாயமாக வாகனத்தை நிறுத்தினார். இங்கு வேகத்தை குறைக்க வேண்டும், நீ ஏன் குறைக்கவில்லை என்று ஓட்டுநருடன் முறைத்தார். பணம் எதுவும் இருவருக்குமிடையில் கை மாற்றப்படவில்லை. அதை தாண்டியவுடன், 'இவங்களுக்கு வேற வேலை' என்று ஓட்டுநர் சொன்னார். எனக்கு அந்த இராணுவ வீரர் செய்தது சரி என்றே பட்டது. ஆனையிறவைப் பற்றி பிள்ளைகளுக்கு பெரிய கதை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பிள்ளைகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பிறகு இன்னொரு தடவை சந்தர்ப்பம் வரும் போது சொல்லுவோம் என்று விட்டுவிட்டேன். பளை எங்கும் புதிய தென்னம் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சரியாக காலை 6:30 மணி அளவில், ஊரில் இருக்கும் வீட்டு வாசலின் முன் வாகனத்தை கொண்டு வந்து நிற்பாட்டினார். 5 1/2 மணி நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறைக்கு. இது ஒரு சாதனையாகத்தான் இருக்கும். நாங்கள் எட்டு அல்லது ஒன்பது மணிக்குத்தான் வந்து சேருவோம் என்று வீட்டில் இருந்த எவரும் அந்த நேரத்தில் எழும்பி இருக்கவில்லை. (தொடரும்..........)3 points
-
உண்மை, ஆனால் எமது இளையோரிடமோ அல்லது எம்போன்றோரிடமோ கொண்டு சென்று சேர்த்தல் இலகுவானதல்ல. தமிழகக் கதாநாயகக் கவர்ச்சிச் திரைப்பட நுகர்வுகளுள் அமிழ்ந்துவிட்ட சூழலில் இதுபோன்ற முயற்சிகளைத் தமிழ்ப்பரப்பிலே நிறுவனப்பட்ட அமைப்புகள் ஊடாக விழிப்புநிலையேற்படுத்துதல் தேவைப்படுகிறது. அதற்கு யாழிலும் புலத்திலுமாகப் பல அண்மைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. இணைப்புக்கு நன்றி!3 points
-
இன்று சிட்னி மண்ணில் திரையரங்கில் பார்த்தேன். எம்மவர்களின் படைப்புகளை நாம்தான் ஆதரிக்க வேண்டும். அழகாக படம் எடுத்திருக்கிறார்கள். திரை அரங்கில் சென்று பாருங்கள்.3 points
-
1977 பொது தேர்தலில் ஒற்றுமையை காட்டினால் விடிவு வரும் என்றார்கள். பின்னர் வந்த ஆயுத இயக்கங்கள் தேர்தலை புறக்கணித்தால் விடிவு வரும் என்றார்கள். பின்னர் 2004 ல் திரண்டு வாக்களித்தால் விடிவு வரும் என்றார்கள். மக்கள் திரண்டு வாக்களித்து 22 பாராளுமன்ற உறுப்பினரைக் கொடுத்தார்கள். 2005 ல் தேல்தலை புறக்கணித்தால் விடிவு வரும் என்றார்கள். விடிவை எதிர்பார்தத மக்கள் அதிர்ந்தே போனார்கள். பின்னர் 2013 ல் வடக்கு மாகாண சபை தேர்தலில் திரண்டு வாக்களித்தால் விடிவு வரும் என்றார்கள். இப்போது பொது வாக்காளருக்கு வாக்களித்தால் விடிவு வருமாம். இன்று ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி தமது வாழ்வை கழிக்கும் நிலாந்தன் அன்று உரியவர்களுக்கு இதே போல இடித்துரைத்திருந்தால், இந்த அரசியல் ஆய்வுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம்.2 points
-
சினிமா இன்று தேக்கத்தில் இருக்கிறது என்பதை தொடர்ந்து அத்தகைய படங்களைப் பார்த்து வந்திருப்போர் அறிவர். இதன் அரசியல், பொருளியல், கலாச்சாரப் பரிமாணத்தை அதில் ஈடுபட்டிருப்போர்தான் அனுபவங்களுடன் பேசமுடியும். என்றாலும், அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க இரு படங்கள் வந்திருக்கின்றன. மதிசுதாவின் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' அப்படங்கள். 2009 மே மாதத்தின் இறுதிப் போர்காலத்தின் அனுபங்களை மதிசுதாவின் படம் பேச, ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' 2009குப் பின் துவங்கி இன்றுவரையிலுமான ஈழத்து வாழ்வின் இருண்ட நினைவுகளைப் பேசுகிறது. ஈழத்தின் முதல் நான்லீனியிர் வெகுஜனப் படம் என 'ஊழி'யைக் குறிப்பிடலாம். ரஞ்ஜித்தின் முதல் படமான 'சினம்கொள்' மிகமிக நேரடியான கதைசொல்லல் கொண்ட படம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஈழத்தில் 'நிலம், கல்வி, காதலுறவு' போன்ற பிரச்சினைகள் குறித்த மிகுந்த இருண்ட சித்திரங்கள் மூன்று சமாந்தரக் கதைகளாக படத்தில் விரிகிறது. இருண்ட காலத்திலும் துளிர்விடும் 'நம்பிக்கை' என்பதை நான்காவது பிரச்சினையாக அல்லது கதையாக எடுத்துக் கொள்ளும் 'ஊழி' அதனிலும் இருண்மையே விரவியிருக்கிறது என்பதையே சுட்டுகிறது. துயர இசை படமெங்கும் ஒலிக்கும் ஊழி ஈழத்தின் இருண்ட சமகாலம் குறித்த முகாரி ராகம். சினிமாவைப் பிரச்சாரமாக அல்லாமல், கலையாக அணுகும் அக்கறையுள்ள ஒருவர் ரஞ்ஜித் ஜோசப் என்பதை ஊழி மெய்ப்பிக்கிறது. நேர்மறை எதிர்மறை சமநிலை அலசல் விமர்சனத்திற்கு இது தருணம் அல்ல. பலரும் படத்தைப் பார்த்தபின் அதனைச் செய்யலாம் எனக் கருதுகிறேன். யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran2 points
-
முதலில் இந்தக் கைக்கூலியான சிவசேனை மாட்டை ஒழிப்பவற்கே எனது வாக்கு.2 points
-
வணக்கம். காலையில் எழுந்ததும் இன்றைய நாள்(05/11/2024) குறித்த திட்டமிடல் குறித்துப் பேசினேன். மனைவியார் சொன்னார், “நாளைக்கு மதர்சு டே, ஆகவே கடைகள்ல கூட்டமா இருக்கும்”. தொடர்ச்சியாக ஒரு பேச்சைப் பதிவு(ஆடியோ கிளிப்) செய்து குழுக்களிலும் ஒருசிலருக்கும் அனுப்பி விட்டு வேலைகளைத் துவக்கி இருந்தேன். வணிக வளாகத்தை நோக்கி வண்டி சென்று கொண்டிருக்கும் போது ஓர் அழைப்பு. நார்த்கரொலைனாப் பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவரின்(president of University of North Carolina Tamil Students Organization) அழைப்பு அது. வண்டியைச் செலுத்திக் கொண்டேவும் உட்கிடை உரையாடற்கடத்தியின் ஊடாகப் பேசலானேன். “Appa, you are more inline with mother of mother's day" என்றார். நன்றி சொல்லி, நலம் விசாரிப்புக்குப் பின்னர் பேச்சு முடிவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், அன்னையர் நாளின் அன்னை குறித்த தேடலையும் நாடலையும் மேற்கொண்டேன். அமெரிக்க சிவில்வார், உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தில் கொந்தளிப்புகள் மேலோங்கி இருந்தன. பிள்ளைவளர்ப்பில் விழிப்புணர்வு வேண்டி, உள்ளூர் அளவில் தாயார்களுக்கான சங்கங்கள் அமைத்து விழிப்புணர்வு ஊட்டி வந்தார் யேனா ஜார்விஸ் என்பார். அடுத்தடுத்து அன்னையர்கள் நலம், கடமைகள் கருதிப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தார் யேனா. 1905ஆம் ஆண்டு மறைந்த தம் தாயாரின் செய்த பல தியாகங்களை மேற்கோள் காட்டி, 1908ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட வழிவகுத்தார் யேனா அவர்கள். தொடர்ந்து யேனா அவர்கள் மேற்கொண்ட அலுவல்களின் வழி, குடியரசுத் தலைவர் வுட்ரோ வில்சன் அவர்கள், மே மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை நாட்டின் அதிகாரப்பூர்வமான அன்னையர் நாளாகவும் விடுமுறைநாளாகவும் அறிவித்தார். நாடெங்கும் அன்னையர்நாள் பரபரப்பாகக் கடைபிடிக்கப்பட்டது. யேனா அவர்கள் சொல்லொணாத்துயர் கொண்டார். நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியிலிருந்து அன்னையர் நாளை நீக்க வேண்டுமெனப் போராடவும் விழைந்தார். காரணம்? அத்தகு நாள் அதன் நோக்கத்தில் இருந்து, அடிப்படையில் இருந்து விலகி, நழுவி, வணிகமயமாக்கப்பட்டதுதான் காரணம். அரசாங்கத்துடன் பேசிப் பேசி, தம் மறைவுக்குச் சற்று முன்பாக, 1948ஆம் ஆண்டு, நீக்கப்பட்டதைக் கண்டு சற்று மனம் ஆற்றிக் கொண்டார். இருந்தாலும், இன்றளவும், அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட்டே வருகின்றது. அன்னையர் நாளின் அன்னைக்கு நாம் செய்யும் தொண்டு என்னவாக இருக்க முடியும்? உள்ளபடியே அவரின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொண்டு செயற்படுவதால் மட்டுமே அது ஈடேறும். மகவினை ஈன்றுகின்ற போது ஒருவர் தாய் ஆகின்றார். அதன் நிமித்தம் அவர் பல்வேறு அர்ப்பணிப்புகளை, தன்னலம் கருதாமல் தியாகங்களைச் செய்கின்றார். ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்பு என வர்ணிப்பர். அதற்கும் மேற்பட்டு, மகவு ஈன்றபின்னரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே மீள்கின்றார். உயிர்நீர்களின்(hormonals imbalance) சமன்பாடின்மை நிமித்தம் மனச்சோகை(postpartum depression), தாய்ப்பால் ஊட்டுதற்சிக்கல்கள், தன்னுடற்கட்டுமான மீள்பணிகளெனப் பலவும். பிரசவத்திற்குப் பிறகான மனச்சோகை என்பது 80% பெண்களுக்கு ஏற்படுவதாகவும், எழுவரில் ஒருவருக்கு அது பெரும்சிக்கலாகவே உருவெடுப்பதாகவும் அற்வியற்கட்டுரைகள் சொல்கின்றன. பெரும்பாலானோர் இதனை இனம் கண்டு கொள்வதே இல்லை. மாறாக, பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் என்பதாகக் கருதி விடுகின்றனர். நீண்டநாள்ச் சிக்கல்களாக இன்னபிறவும். According to the WHO, more than a third of women experience lasting health problems after giving birth, including: Pain during sexual intercourse (30%) Low back pain (32%) Anal incontinence (19%) Urinary incontinence (8-31%) Anxiety (9-24%) Depression (11-17%) Perineal pain (11%) Fear of childbirth (tokophobia) (6-15%) சும்மா, அன்னையர் நாளில் லாலா பாடி, குளிர்விப்பதால் மட்டுமே மேன்மை கிட்டிவிடுமா? இது போன்றவற்றை வெளிப்படுத்தி, நல்லதொரு புரிதலையும் ஒத்துழைப்பையும் கவனிப்பையும் நல்குவதால் மட்டுமே, அன்னையர் நாளின் அன்னையாரான யேனா ஜார்விஸ் அவர்களின் புகழுக்கு வலுசேர்க்க முடியும். மாந்தகுலத்துக்கும் மேன்மை கிட்டும். அன்னையர் நாள் வாழ்த்தும் வணக்கமும்!! -பழமைபேசி, pazamaipesi@gmail.com http://maniyinpakkam.blogspot.com/2024/05/blog-post.html2 points
-
குமாரசாமி, படம் சொல்வது ஒரு பொதுமகனின் கருத்தை. தேர்தலுக்கு வாக்குப் போட்டோம். இவருக்குத்தான் வாக்குகள் போடுங்கள் என்று சொன்னோம். தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொன்னோம். தமிழன் ஒருவரை (இரண்டு தடவைகள்) வேட்பாளராக நிறுத்திப் பார்த்தோம். மாற்றங்கள் இல்லை. போராடிப் பார்த்தோம். வெல்ல முடியவில்லை. பேசிப் பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை. ஒற்றுமையாகச் செயல்பட எங்களால் முடியவில்லை. ‘ஏணியும் பாம்பும்’ விளையாட்டாக மீண்டும் ஆரம்பக் கட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறோம். ரஞ்சித் குறிப்பிடுவது போல் ‘யாசகம் செய்து வாழ முடியாது’ என்ற வாசகத்தை விட்டு ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற முறையை எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இன்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இல்லை. ஒருவேளை பின்னாட்களில் ஏதாவது மாற்றங்கள் வரலாம். வழிகள் கிடைக்கலாம். யாருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற பொறுப்பை மதிப்புக்குரிய பொதுமகனிடமே விட்டு விடுவது நல்லது. அங்கே வாழும் அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும்.2 points
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று -------------------------------------------------------------------- ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது. லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர் அங்கிருந்து கொழும்பு என்று பயணத்தை திட்டமிட்டிருந்தோம். கதே பசிபிக் விமான நிறுவனம் மற்றைய விமான நிறுவங்களுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது மிக விரைவாக இலங்கைக்கு இங்கிருந்து போய்க் கொண்டிருக்கின்றது. விமானப் பயணம் மொத்தம் 22 மணித்தியாலங்கள், அதில் இரண்டு மணித்தியாலங்கள் ஹாங்காங்கில் தங்கி நிற்கும் நேரம். உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் என்ற தரவரிசையில் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் அடிக்கடி வரும். மிகவும் சிறிய ஒரு இடத்தில், நெருக்கலான, பெரும் நகரின் மத்தியில், ஒரு குதிரை லாட வடிவில் இது அமைந்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்கு கரையினூடான பிரதான நுழைவாயிலாக இது இருப்பதால், இந்த விமான நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் இதை ஒரு விமான நிலையம் என்று எண்ணாமல், இதை ஒரு பஸ் நிலையம் போன்று பயன்படுத்துவது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகின்றது. 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கே நடைபெற உள்ளது. இந்த விமான நிலையத்தை காட்டியே ஒலிம்பிக் நிர்வாகக் குழு இந்த நகரத்தை இலகுவாக நிராகரித்து இருக்கலாம். ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. இருக்கும் இந்த சின்ன இடத்தில் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் இங்குள்ளவர்களின் திட்டமிடும் திறன் மீது நம்பிக்கை உள்ளது. கதே பசிபிக் விமானம் சிறிது தாமதித்து புறப்பட்டது. ஹாங்காங்கில் போய் கொழும்பு செல்லும் அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு நேரம் மட்டு மட்டாகவே இருப்பது போல தெரிந்தது. சில வாரங்களின் முன், நண்பர் ஒருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டு ஹாங்காங்கில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தை தவற விட்டுவிட்டார். பின்னர் ஹாங்காங்கிலிருந்து பெங்களூர் போய், அங்கிருந்து கொழும்பு போனார். இரண்டு மணித்தியால இடைவெளிக்கு பதிலாக நான்கு மணித்தியால இடைவெளி இருந்தால் பதற்றம் இருக்காது என்றும் தோன்றியது. மற்றபடி குறை சொல்ல முடியாத விமான நிறுவனம் கதே பசிபிக். விமானங்களில் பணிபுரிபவர்களில் மிகவும் வேகமாகவும், நிதானமாகவும் செயற்படுபவர்கள் என்றால் இவர்களாகத்தான் இருக்க முடியும். பணிபுரிபவர்கள் எல்லோருமே ஜிம்னாஸ்டிக் பயின்றவர்கள் போல, அப்படி இலகுவாக நெளிந்து வளைந்து ஏறி இறங்கி விமானத்தின் உள்ளே இடம் பெயர்கின்றார்கள். 15 மணி நேர முதலாவது பயணம் ஒருவாறு முடிந்தது. அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு போதுமான நேரம் இருந்தது. கட்டுநாயக்காவில் வி எஃப் எஸ் குளோபல் நிறுவனம் இன்னும் விசா வழங்கும் நடைமுறையை ஆரம்பித்திருக்கவில்லை. இலங்கை குடிவரவு அதிகாரிகளே விசாவை வழங்கினர். ஏற்கனவே ஒரு விசாவிற்கு 50 டாலர்கள் என்று எங்கள் நால்வருக்கும் 200 டாலர்களை இணையத்தில் கட்டி இருந்தோம். ஏதோ ஒரு படிவத்தை நிரப்பவில்லை என்று அதை திரும்பவும் நிரப்பச் சொன்னார்கள். நிரப்பிக் கொண்டு போனால், அங்கு எவரும் இல்லை. நாங்கள் அங்கே இறங்கியது புது வருடம் பிறந்த இரவு. புதுவருட பிறப்பை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தின் உள்ளேயே சில இடங்களில் புதுவருட உணவு, இலவசமாக, வழங்கிக் கொண்டிருந்தனர். குடிவரவு அதிகாரிகள் அதற்கு போய் விட்டனர். ஒரு சாதாரண உரையாடலின் பின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் விசாவை வழங்கினார். கடவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு வெளியில் நடக்க ஆரம்பித்தால், 'ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று ஒரு குரல் பின்னால் இருந்து வந்தது. திரும்பினால், அங்கே இன்னொரு அதிகாரி வந்து கொண்டிருந்தார். இவருக்கு நாங்கள் என்ன உதவி செய்து விட முடியும் என்றபடியே அவரைப் பார்த்து, 'பரவாயில்லையே நீங்கள் இரண்டு மொழிகளையும் கதைக்கிறீர்கள்' என்றேன். தான் ஒரு தமிழன் என்று அவரது பெயரைக் காட்டினார். இஸ்லாமியர் ஒருவர் அப்படிச் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அருகில் இருந்த டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இலவசமா அல்லது இலஞ்சமா, இது என்ன வகை என்று நான் யோசித்தபடியே எதுவும் சொல்லாமல் நின்றேன். புரிந்து கொண்ட அவர், அவரே காசைக் கொடுப்பதாகச் சொல்லி 22 டாலர்களை என்னிடம் கொடுத்தார். கடையில் வாங்க வேண்டிய நான்கு சாக்லேட்டுகளையும் கடைக்குள் வந்து காட்டினார். புதுவருடம் ஆதலால் வீட்டுக்கு போகும் பொழுது பிள்ளைகள் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இவர் வீட்டில் இருப்பவர்கள் சித்திரை புதுவருடம் கொண்டாடுபவர்கள் என்றால், அவர்/அவர்கள் யாராக இருக்கும் என்ற தேவையில்லாத கணக்கு ஒன்று மனதில் ஓடத் தொடங்கியது. பொதிகள் எல்லாவற்றையும் சேர்த்து எடுத்த பின், எந்தவித சோதனைகளும் இன்றி வெளியில் வந்தோம். நேரம் கிட்டத்தட்ட இரவு 1 மணி. அந்த நடு இரவு நேரத்தில் இருந்த வெக்கையும், புழுங்கலும் வர இருக்கும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றன என்ற ஒரு அறிமுகத்தை கொடுத்தன. இரண்டு பிள்ளைகளும் முழித்த முழி அதற்குச் சான்று. (தொடரும்.....)1 point
-
பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர Posted on March 31, 2024 by தென்னவள் 124 0 தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில் முனைப்பாக உள்ளார். வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டும் தமது எண்ணத்தை நிறைவேற்ற சஜித் ஆவலுடன் காத்திருக்கிறார். அனுர குமாரவின் மொழிக் கொள்கை என்ன என்பதற்கு கனடாக் கூட்டத்தில் கூறப்பட்ட ஷஎலியட்ட தாண்ட| பதில் போதும். இவைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஒரே தீர்வு தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதுதான் என்றால் தவறிருக்காது! இந்த வருடத்தில் நடைபெற்றேயாக வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமா, இடம்பெறாதா, ஒரேயடியாக பின்தள்ளப்பட்டுப் போகுமா என்ற கேள்விகள் அரசியல் கட்சிகளிடையே தொடர்ந்து நிலவி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று, வருகின்ற அக்டோபர் மாத முதலாவது சனிக்கிழமை (5ம் திகதி) தேர்தல் நடைபெறுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எத்தனை அவுன்ஸ் நம்பகத்தன்மை கொண்டதென்ற அடுத்த கேள்வி இப்போது முனைப்புப் பெற்று நிற்கிறது. இதற்கான முதற்காரணம், ரணிலை ஜனாதிபதி அரியாசனத்திலேற்றி இன்றுவரை இறக்காமல் பாதுகாத்து வருகின்ற பொதுஜன பெரமுன நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென அடாப்பிடியாக நிற்பதே. இந்தக் கோரிக்கையை ரணிலிடம் நேரடியாக முன்வைத்தவர் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச. எதற்குமே நேரடியாகப் பதிலளிக்காது அலைக்கழித்து வரும் ரணில், ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் கட்டாயம் நடத்தப்பட வேண்டியது என்று மட்டும் நாசூக்காக பதிலளித்துவிட்டு, தேர்தலுக்கான அக்டோபர் 5ம் திகதியை வெளியிட்டார். ரணிலிடம் தமது பருப்பு அவியாது என்பதைப் புரிந்து கொண்ட பசில், அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன செயற்குழுக் கூட்டத்தில் – நான் பொதுத்தேர்தலை முதலில் நடத்துமாறு ரணிலிடம் கோரினேன். அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே அவரது விருப்பம்போல் செயற்படுமாறு கூறினேன் என்று தமது இன்றைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இதனாலோ என்னவோ பெரமுனவின் தேசிய அமைப்பாளராக ஷகுட்டி ராசா| நாமல் ராஜபக்சவை கட்சி நியமித்துள்ளது. நாமலை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டுமென விடாப்பிடியாக கேட்டு வரும் கட்சியின் ஓர் அணியினருக்கு இது வாய்ப்பாகப் போயிற்று. இவர்கள் தொடர்ந்து அந்த வாய்ப்பாட்டையே வாசித்து வருகின்றனர். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க – சிறிமாவோ பண்டாரநாயக்க தம்பதியினரின் ஏகபுதல்வரான அனுர பண்டாரநாயக்கவும் இன்றைய நாமல் ராஜபக்ச போன்று உயர்மட்டத்தில் வைத்துப் பார்க்கப்பட்டவர். தமது பெற்றோர் அமர்ந்த ஆசனத்தில் (அப்போது பிரதமர் பதவி) தாமும் ஏற வேண்டுமென துடியாய்த் துடித்தவர் அனுர பண்டாரநாயக்க. ஒரு கட்டத்தில் தமது தந்தை உருவாக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சபாநாயகர் பதவியைப் பெற்றவர். பொறுமை காத்து அவர் அரசியல் செய்திருந்தால் அவரது சகோதரி சந்திரிகா குமாரதுங்க பெற்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதிப் பதவிகள் அவருக்கே கிடைத்திருக்க வேண்டியவை. ஷவெள்ளை மாடு கொழுத்தாலும் வழுவழுப்பு நீங்காது| என்பது போல அனுர பண்டாரநாயக்க பெயரளவில் குடும்ப வாரிசாக உயர்ந்திருந்தாலும் அரசியல் செயற்பாட்டிலும் அந்த நிலைக்கு வளர்ந்திராததால் எல்லாமே பொரிமாத்தோண்டி கதையானது வரலாறு. இந்த அரிச்சுவட்டிலேயே நாமலும் இன்று நடைபயில்கிறார். ரணிலும் நாமலும் மலையும் மடுவும் போன்றவர்கள். இதனை நன்கு புரிந்து கொண்டதால்தான் நாமல் இப்போது ஜனாதிபதிப் போட்டியில் இறங்குவதை அவரது தந்தை மகிந்த விரும்பவில்லை. இன்னுமொரு ஐந்து ஆண்டுகள் ஷநம்மடை ஆள்| ரணில் ஜனாதிபதியாக இருப்பாரானால், அடுத்து வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் வயதாலும் அனுபவத்தாலும் தகுதி பெற்றுவிடுவாரென்று மகிந்த கருதுகிறார். ஏறத்தாழ பசிலும் இப்போது அந்த நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார். அதனாற்தான், நெருக்கடியான நேரத்தில் ஆட்சியை பொறுப்பேற்ற ரணில்; பொருளாதார ரீதியாக நாட்டைக் காப்பாற்றி (தங்களையும் காப்பாற்றினாரென பகிரங்கமாகக் குறிப்பிடாமல்) மக்களுக்கு பசி நீக்குகிறார் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார். பசில் இவ்வாறான முடிவெடுத்ததற்கு மூன்று காரணங்கள் உண்டு. 1. ரணிலுக்கெதிராக பெரமுன ஒருவரை களமிறக்கினால் ஏற்கனவே அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்களாக இருப்பவர்கள் ரணிலின் பக்கம் செல்வர். இதனால் பெரமுன பிளவடையும். 2. எக்காரணம் கொண்டும் ஜே.வி.பி. வேட்பாளர் அனுர குமார வெற்றி பெறுவதை அனுமதிக்கக்கூடாது. 3. சஜித் பிரேமதாசவின் எதிர்காலத்தை சூனியமாக்கி அரசிலிருந்து அப்புறப்படுத்த ஒரேவழி ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே. ஆக, இன்றைய களநிலைவரப்படி ஆட்சித் தரப்பின் ஆதரவோடு ரணில் ஜனாதிபதி வேட்பாளராகிறார் என்பது நம்பக்கூடிய நிச்சயமாகிறது. எனினும், ரணில் தொடர்ந்து பெரமுன, சஜித் அணி ஆகியவற்றை பிய்த்தெறியும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் நாடு முழுவதும் சென்று தேர்தல்; அட்வான்ஸ் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். அதிகாரபூர்வமாக வெசாக் தினத்தின் பின்னரேயே தேர்தல் பிரசாரம் ஆரம்பமாகுமெனை அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17க்கும் அக்டோபர் 17க்குமிடையில் நடைபெறுமென்று நம்ப வைக்கும் அறிவிப்புகளையும் விடுத்து வருகின்றார். கடந்த ஒருவாரத்தில் பருத்தித்துறை, றாகம மருத்துவமனைகளில் புதிய கட்டிடங்களை கையளித்தது, நாட்டின் மிகப்பெரிய மகப்பேற்று மருத்துவமiiயை காலியில் திறந்து வைத்தது, அரச ஊழியர்களுக்கு ஏப்ரலில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு, ஓய்வூதியகாரர்களுக்கு ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வு, பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு என பல நிகழ்ச்சிகளில் ரணில் நேரடியாக பங்கேற்று வருவதானது, ‘ஐயா லெக்~ன் கேட்கிறார்” என்ற பிரபல நாடகத்தை நினைவூட்டுகிறது. இப்படியான சாதக சமிக்ஞைகள் காணப்படும் அதேசமயம், தேர்தலுக்குப் பொறுப்பான தேர்தல் ஆணையாளர் இரண்டு விடயங்களை அறிவித்து அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் இவ்வருடத்தில் நடத்தக்கூடிய வலுவுடன் தேர்தல் திணைக்களம் இருப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டம்பர் 18ம் திகதி நடத்தினால் நல்லது எனவும் இவர் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் திணைக்களம்தான் தேர்தல்களை நடத்தினாலும் ஆட்சித்தரப்பில் ஜனாதிபதி தமக்கான சகல நிறைவேற்று அதிகாரங்களையும் பயன்படுத்தி முடிவெடுப்பார் என்பதே யதார்த்தம். கடந்த வருடம் உள்;ராட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுத்த தேர்தல் திணைக்களம் அதற்கான திகதி அறிவித்து, அபேட்சகர் கட்டுப்பணம் செலுத்தி வாக்குச் சீட்டுகளையும் அச்சடித்துக் கொண்டிருந்த வேளையில் – தேர்தலுக்குப் பொறுப்பு தேர்தல் ஆணையாளர், வாக்குப் பெட்டி ஜனாதிபதியின் கைகளில் – என்ற தலைப்பில் இந்தப் பத்தியில் எழுதப்பட்டது ஞாபகம் இருக்கிறது. அச்சொட்டாக அவ்வாறே தேர்தல் ரத்தானது. இன்றுவரை தேர்தல் நடைபெறவில்லை. இதனை அரசியல் கட்சிகளும் மறந்தேவிட்டனர். வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுவது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. மேலும் ஐந்தோ பத்துப்பேர் போட்டியிடக்கூடும். தாம் அமைச்சராக இருந்தபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசினால் ராஜிவ் அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தால் உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இருக்குமென கூறிவரும் அவரது ஆட்சியிலேயே அந்த அதிகாரங்களை மத்திய அரசு பயன்படுத்தி தமிழர் பிரதேச காணிகளும் வழிபாட்டுக்குரிய நிலங்களும் அபகரிக்கப்படுகின்றன. வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டுவேனென்று தெரிவித்த சஜித் பிரேமதாசவிடம் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜே.வி.பி. வேட்பாளர் அனுர குமார திசநாயக்க புனித கங்கையில் நீராடி புனிதமான மனிதராக காட்சி கொடுக்க முனைகிறார். தமிழர் வாக்குகளை இலக்கு வைத்து அண்மையில் வடக்கே சென்ற இவர் கிழக்குக்கும் செல்லப் போகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இம்மாத நடுப்பகுதியில் கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்ற ரொறன்ரோ கூட்டத்தில் சுமார் இருநூறு வரையான தமிழர்களும் பங்குபற்றினர். இமாலய பிரகடனத்தினால் சிக்கலுக்குள்ளாகியிருக்கும் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளும் இங்கே காணப்பட்டனர். அனுர குமார திசநாயக்க தமது தாய்மொழியான சிங்களத்தில் உரையாற்றினார். இதனை தமிழில் கேட்க அதற்கான செயலி வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் அது இயங்காமல் போயிற்று. ‘தமிழில் மொழிபெயர்ப்புத் தாருங்கள்” என தமிழர் ஒருவர் வேண்டினார். மேடையிலிருந்த பிரமுகர் ஒருவரிடமிருந்து ‘எலியட்ட தாண்ட” எனப் பதில் வந்தது. இதன் அர்த்தம் வெளியே போ என்பது. தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில் முனைப்பாக உள்ளார். வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டும் தமது எண்ணத்தை நிறைவேற்ற சஜித் ஆவலுடன் காத்திருக்கிறார். அனுர குமாரவின் மொழிக் கொள்கை என்ன என்பதற்கு கனடாக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பதில் போதும். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், இவைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஒரே தீர்வு தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதுதான் என்றால் தவறிருக்காது! பனங்காட்டான் பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர – குறியீடு (kuriyeedu.com)1 point
-
தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன் ராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் பொழுது உள்ளூரில் கட்டுரைகளை வாசிப்பவர்கள் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது. வேட்பாளரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர்களிற் பலர் அது தொடர்பாக இதுவரையிலும் வந்திருக்கக்கூடிய கட்டுரைகளை காணொளிகளை வாசிக்கவில்லையா? கேட்கவில்லையா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு விடயத்தைக் குறித்த ஆழமான வாசிப்போ விளக்கமோ இன்றிக் கருத்து கூறுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தில் அரசியல் ஆர்வமுடைய வாக்காளர்கள் மட்டுமல்ல, பத்திரிகை ஆசிரியர்கள், புலமையாளர்கள், காணொளி ஊடகங்களில் கேள்வி கேட்பவர்கள், யுடியூப்பார்கள்… என்று அனைவரும் அடங்குவர். இவர்கள் பொது வேட்பாளர் என்ற ஒரு தெரிவை விளங்காமல் எழுதுகிறார்களா அல்லது எல்லாவற்றையும் நன்கு விளங்கிக்கொண்டும் ஏதோ ஒரூ சூதான அரசியல் உள்நோக்கத்தோடு,யாருக்கோ தங்களுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்காக எழுதுகிறார்களா? தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் மிகத் தெளிவாக வகிடு பிரித்துக் காட்டுகிறது. அரசியல்வாதிகள்,ஊடகங்கள், யுடியுப்கள் போன்றவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கின்ற பலரும் எங்கேயோ ஒரு விசுவாசப் புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்கள் வெளித்தோற்றத்துக்கு ஆளுக்காள் தொடர்பற்ற உதிரிகளாகத் தோன்றலாம். ஆனால் அவர்களில் பலர் ஏதோ ஒரு தரப்புக்கு விசுவாசமானவர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். பொது வேட்பாளரை எதிர்க்கும் பொழுது அவர்கள் காட்டும் வன்மம்,வெறுப்பு,பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றன அவர்கள் எந்தளவுக்கு தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள் என்பதைக் காட்டுகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னுறுத்தி எழுதுபவர்கள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள், ஜனாதிபதித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மறைமுக வாக்கெடுப்பை நடத்துவது, அதில் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு பொது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவது, அதாவது தமிழ்த் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியை விடவும் தேய்மானமே அதிகம். பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் தோன்றியுள்ளன. கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன. மக்கள் அமைப்புகள் தோன்றிப் பின் சோர்ந்து விடுகின்றன. தமிழ் மக்களை வடக்கு கிழக்காய் சமயமாய் சாதியாய் இன்னபிறவாய் சிதறடிக்க விரும்பும் சக்திகள் தமிழ் மக்களாலேயே தெரிந்தெடுக்கப்படுகின்றன. 2009க்கு பின்னிருந்து தமிழ் கூட்டு மனோநிலை என்பது கொந்தளிப்பானதாக காணப்படுகிறது. யாரையும் நம்ப முடியாத சந்தேகப் பிராணிகளாக தமிழ் மக்கள் மாறிவருகிறார்கள். எல்லாவற்றுக்கு பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக மாறி வருகிறார்கள். அதாவது தமிழ் மக்களைப் பிரித்துக்கையாளும் சக்திகளுக்கு உள்ளூர் முகவர்கள் அதிகரித்து வருவதாக ஒரு கூட்டுப் பயம்; ஒரு கூட்டுச் சந்தேகம்; ஒரு விதத்தில் ஒரு கூட்டு நோய் அதிகரித்து வருகிறது. இது ஒரு கூட்டுத் தோல்வி மனப்பான்மையின் விளைவு. தோல்வி மனப் பான்மையிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பது என்றால் ஒருவர் மற்றவரை நம்பும்; ஒருவர் மற்றவருக்குத் தோள்கொடுக்கும் கூட்டுப் பலத்தில் நம்பிக்கை வைக்கும் ஓர் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்கான கடந்த 15ஆண்டுகாலப் பரிசோதனைகளில் இருந்து கற்றுக்கொண்டு, சிவில் சமூகமும் அரசியல் சமூகமும் இணைந்த ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பது குற்றமா? தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவது குற்றமா? தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது குற்றமா? அப்படியென்றால் எமது பள்ளிக்கூடங்களில்,பாலர் வகுப்பில் “ஒற்றுமையே பலம்”; “ஒன்று திரண்டால் உண்டு வாழ்வு”;“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று படித்ததெல்லாம் பொய்யா? தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிவில் சமூகங்கள் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்றுதானே கேட்கின்றன? தமிழ்மக்களை யாரிடமாவது சரணடையச் சொல்லி கேட்கின்றனவா? தமிழ்மக்களை யாருக்காவது விலை கூறி விற்க முற்படுகின்றனவா? இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக வெற்றுக் காசோலைகளாக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை, தமிழ் மக்களின் பேரபலத்தை உயர்த்தும் வாக்குகளாக மாற்றுவது தவறா? ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு எதிர்காலத்தில் தமிழ் அரசியலில் நிர்ணயகரமான ஒரு கட்டமைப்பாக கூர்ப்படைய வேண்டும் என்று கூடி உழைப்பது குற்றமா? தமிழ்ப் பொது வேட்பாளர் தோற்றால் எல்லாமே தோற்றுவிடும், அது தமிழ் மக்களைப் புதை குழிக்குள் தள்ளிவிடும்… என்றெல்லாம் எழுதுகிறார்கள். அப்படியென்றால் தமிழ் மக்கள் இப்பொழுது மட்டும் என்ன வெற்றிப் பாதையிலா சென்று கொண்டிருக்கிறார்கள் ? இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மிகப்பெரிய திருப்பகரமான வெற்றி எதையுமே பெற்றிருக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்கள் இனிமேல்தான் தோற்க வேண்டும் என்று இல்லை. கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் எனப்படுவது வெற்றியின் அரசியல் அல்ல. சிறிய தேர்தல் வெற்றிகள்,சில குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் எழுச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால் தொடர்ச்சியான வெற்றிகள் அல்ல. அதாவது தமிழ் அரசியலை ஒரு புதிய கட்டத்திற்கு திருப்பக்கூடிய வெற்றிகள் அல்ல. எனவே தோல்வியைக் காட்டி பயமுறுத்தும் அரசியல்வாதிகள் தாங்கள் ஏற்கனவே தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை மறைக்கிறார்களா ? கடந்த 15 ஆண்டுகாலம் தமிழ் மக்களுக்கு திருப்பகரமான வெற்றி எதையும் பெற்றுத்தரவில்லை. எனினும் காலம் ஒரு அரிதட்டு.அது பலரைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. பலரை அந்த அரிதட்டு சலித்துக் கழித்து விட்டிருக்கிறது. இப்பொழுது பொது வேட்பாளர் என்ற விடயமும் பலர் எங்கே நிற்கிறார்கள்? யாருக்கு விசுவாசமாக நிற்கிறார்கள்?யாரை சந்தோஷப்படுத்த எழுதுகிறார்கள்? போன்ற எல்லாவற்றையுமே தெளிவாக வெளியே கொண்டு வந்திருக்கிறது. பொது வேட்பாளர் தோற்கக்கூடாது. உண்மைதான். தோற்கக் கூடாது. அவ்வாறு தோற்கக் கூடாது என்று சொன்னால் அதற்காக தமிழ் மக்கள் கூட்டாக உழைக்க வேண்டும். அதற்குத்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. அரசியல் சமூகமும் சிவில் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது, இரண்டு தரப்பும் ஒன்றை மற்றொன்று பலப்படுத்தி அந்த முயற்சியை முன்னெடுக்கலாம், அதேசமயம் தேர்தல் அரசியல் எனப்படுவது வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான். கடந்த 15 ஆண்டுகால தோல்விகரமான அரசியல் பாதையில் இருந்து தமிழ் அரசியலை திருப்பகரமான விதத்தில் தடம் மாற்ற ஒரு பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. அதில் தோற்கலாம் வெல்லலாம். ஆனால் அது பரிசோதனை. இப்போதிருக்கும் தோல்விகரமான பாதையில் இருந்து தமிழரசியலை திசை மாற்ற முயற்சிக்கும் ஒரு பரிசோதனை. எனவே தோல்வியைக் குறித்து அச்சப்படுவோர் அல்லது தோல்வியை காட்டிப் பயமுறுத்துவோர்,தாங்கள் ரகசியமாக “டீல்” செய்ய முயற்சிக்கும் அரசியல்வாதியின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? அல்லது தமிழ் மக்களின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெல்லப் போவதில்லை. அவர் ஜனாதிபதியாக வரப்போவதும் இல்லை. ஆனால் அவர் தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவார். அதைவிட முக்கியமாக,தமிழ்ப் பொது நிலைப்பாடு ஒன்றை நோக்கி தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார். அவர் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஒரு வேட்பாளர்தான். இலங்கை முழுவதற்குமான தமிழ் வேட்பாளர் அல்ல. தமிழரசியல் கடந்த 15 ஆண்டுகளாக பிமுகர் மைய அரசியலாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் யார் அந்தப் பிரமுகர்,பொது வேட்பாளராக களமிறங்க போவது ? என்ற கேள்வி எழுகிறது. கட்டாயமாக அவர் ஒரு பிரமுகராக இருக்கத் தேவையில்லை. தேர்தலில் தனக்கு கிடைக்கும் பிரபல்யத்தை அடுத்தடுத்த தேர்தல்களுக்கு முதலீடு செய்யும் ஓர் அரசியல் விலங்காக அவர் இருக்கக் கூடாது. அவரும் அவர் பயன்படுத்திய பொது சின்னமும் எதிர்கால தேர்தல்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற ஒரு உடன்படிக்கைக்கு அவர் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். பொது வேட்பாளராக ஒரு பிரமுகரைத் தேடும் அனைவரும் ஏன் மற்றொரு அன்னை பூபதியை உருவாக்குவது என்று சிந்திக்கக்கூடாது? அன்னை பூபதி உண்ணாவிரதம் இருக்கும் வரையிலும் அவரை யாரென்று அநேகருக்குத் தெரியாது. ஆனால் 30 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததன் மூலம் நவீன தமிழ் வரலாற்றில் அழிக்க்கப்பட முடியாத இடத்தைப் பெற்றார். அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து மற்றொரு அன்னை பூபதியைக் கட்டியெழுப்ப முடியாதா? அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. யாரும் உயிர் துறக்கத் தேவையில்லை. உயிரைக் கொடுத்தது போதும். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட ஒரு வேட்பாளர் வேண்டும், தமிழ் அரசியலை கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்த ஒரு பொதுகட்டமைப்பானது எதிர்காலத்தில் கூர்ப்படையத் தேவையான ஒரு பொதுத்தளத்தை அவர் பலப்படுத்துவார். அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு களமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் இங்கு முக்கியம். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைப் பலப்படுத்தும் ஒரு பரிசோதனை. அதில் எத்தனை முறை தோற்றாலும் அதைவிட வேறுவழி தமிழ் மக்களுக்கு உண்டா? ஏனென்றால் ஐக்கியப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு அடுத்த கட்டமே இல்லை. அடுத்தகிழமை பதினைந்தாவது மே 18 வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருக்கும் தமிழ் அரசியலை ; கடந்த 15 ஆண்டுகளாகத் தேய்ந்து கொண்டு போகும் கட்சி அரசியலை; கட்சிக்காரர்களிடமிருந்தே கட்சிகளைக் காப்பாற்றவேண்டிய ஒரு காலகட்டத்தில்; வடக்காய் கிழக்காய் சாதியாய் சமயமாய் இன்னபிறவாய் சிதறிக் கொண்டே போகும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாகத் திரட்டுவதைவிட உன்னதமான ஒரு நினைவு கூர்தல் உண்டா? https://www.nillanthan.com/6754/1 point
-
உலக பொதுமறை திருக்குறள் புலால் மறுத்தல் பற்றி பேசுகின்றது. பசுவதை தவிர்க்கப்படல் வேண்டும் என்பது ஒரு புதிய சிந்தனை அல்ல. அதேசமயம் நடைமுறை உலக ஒழுங்கில் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் மாட்டிறைச்சியின் பங்கு முக்கியமானது.1 point
-
அன்னையர் நாள் / Mother's Day [12 மே 2024 / 12 th May 2024] அன்னையர் நாள் விடுமுறை தினம், அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் [Anna Jarvis] அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் [Grafton, West Virginia] உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. உதாரணமாக ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, இத்தாலி, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள் மே மாதத்திலும், அயர்லாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவை மார்ச் மாதத்திலும் கொண்டாடுகின்றன. சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந் ஜார்விஸ் [Mrs. Ann Marie Reeves Jarvis] என்ற பெண்ணின் மகள் அனா ஜார்விஸ் [Anna Jarvis] முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். அதன் பின், அனா ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். தம் எண்ணத்தை, அனா ஜார்விஸ் பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது. இங்கிலாந்தை பொறுத்த வரையில் அங்கு பழங்காலத்தில் தாய்க் கடவுளுக்கு வசந்த விழா கொண்டாடப் பெற்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அங்கு “லென்ற்” [Lent] என்ற வழிபாடு இருந்ததாகவும், “லென்ற்” என்ற வார்த்தையின் அர்த்தம், இளவேனிற் காலத்தின் முதல் நாள் என்றும், பனியும் குளிரும் முடிய, பயிர் போடும் காலம் இது என்றும், அது பின் சமயமயப்பட்டது என்றும் கூறுகின்றனர். அதனை தொடர்ந்து, 16ம் நூற்றாண்டில் தாய்மை ஞாயிறு ["MOTHERING SUNDAY"] என்ற நாள் முதன் முதலாக அனுசரிக்கப் பட்டதாகவும், அதுவே பின்னாளில் அமெரிக்காவின் தாக்கத்தால் இங்கிலாந்திலும் அன்னையர் நாள் ["Mother's Day"] என மாறியது என்கின்றனர். Mother's Day is a celebration honoring the mother of the family, as well as motherhood, maternal bonds, and the influence of mothers in society. It is celebrated on various days in many parts of the world, most commonly in the months of March or May, For example, the most of countries such as Canada, Sri Lanka, India, Germany, Italy, Japan, New Zealand, Ausralia, America etc celebrates on May and few countries such as United Kingdom & Ireland on March. The origin of Mother’s Day as we know it took place in the early 1900s. A woman named Anna Jarvis started a campaign for an official holiday honoring mothers in 1905, the year her own mother died. The first larger-scale celebration of the holiday was in 1908, when Jarvis held a public memorial for her mother in her hometown of Grafton, West Virginia. Over the next few years, Jarvis pushed to have the holiday officially recognized, and it was celebrated increasingly in more and more states around the U.S. Finally, in 1914, President Woodrow Wilson signed a proclamation making Mother’s Day an official holiday, to take place the second Sunday of May. In the UK, actually they don’t have “Mother’s Day”. Although it’s popularly referred to as Mother’s Day, due to American influence, the correct term is “Mothering Sunday”, which began as a religious festival in the Middle Ages and is many hundreds of years older than the purely secular and commercial Mother’s Day, celebrated in the USA and some other countries. Historians believe it evolved from the 16th-century Christian practice of visiting mothers in the season of Lent. "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா - என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா.... நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா - என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" "என் உழைப்பும் உயர்வும் உன்கனவேயம்மா... உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பேயம்மா.... நான் மீண்டும் வேண்டுவது உன் கருவறையம்மா" "வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே பாரோடி பறந்தாலும் நான் உன் சிறகே அம்மா - என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயம்மா" "தாயின் காலடியும் ஒரு ஆலயமே.... அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே - நான் கண்ட முதல் வைத்தியரும் நீயம்மா" "மண்ணும் பெண்ணும் என்சுவாசமே அம்மா.... தாய்மை பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா - என் அழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்தவளே" "நான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே என்றும் நான் உன் மழலை அம்மா.... தெய்வம் உனக்கு தந்த குழந்தை அம்மா" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்) "In my heart, The god I pray is you Mother is only my prime god" "My Sincerity & honesty- is you The life, I am living- is yours You become flowered creeper with my pregnant" "Again I need one more time- your womb My work & advancement - is your dream your smelling flower- is my life" "Even shoot from roots- wood apple is wood apple Even child fly anywhere- it is your feather My light house for my life- is you " "Even scent from your foot step- is a temple which is a peace of mind for me You are my first doctor " "Earth & woman are breath for life Chastity is a cultured behaviour of you You felt fear on my cry & felt happy on my laugh" "I call you as "Amma" - is your blessing I am Always your - hailing toddler Your god gifted child - is me " (Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna)1 point
-
அன்பு நண்பர்களுக்கு: இவை நான் இதுவரை எழுதிய நீண்ட கட்டுரைகள். பல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும், ஆனால் வெவ்வேறாக உள்ளன. உங்களின் விருப்பம் தெரிவித்தால், அவையை நான் இங்கு பதிய முயலுவேன் அல்லது லிங்க் தருவேன். நீங்கள் வாசித்து உங்கள் கருத்துக்கள் பதியும் பொழுது நானும் அதனுடன் சேர்ந்து வளர்ச்சியடைவதுடன் கட்டுரைகளும் மேலும் திருத்தப்பட்டு அழகு பெறுகிறது! நன்றி தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] / 82 parts [இந்த தமிழ் கட்டுரையை உடனடியாக அல்லது எல்லோருக்கும் தேவையற்ற ஆழமான விபரங்களைத் தவிர்த்து 36 பகுதிகளாக சுருக்கி பதிவிடவுள்ளேன்] Origins of Tamils? [Where are Tamil people from?] / 82 parts "Scientific Contributions [or glories] of Ancient Tamils" / 16 parts தமிழரின் உணவு பழக்கங்கள் / 27 parts FOOD HABITS OF TAMILS / 27 parts 'Story or History of writing' / 25 parts 'எழுத்தின் கதை அல்லது வரலாறு' / 25 parts An analysis of history of Tamil religion / 20 parts "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / 20 parts "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / 30 parts நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] / 30 parts Superstitious Beliefs Of Tamils / 19 parts தமிழரின் நம்பிக்கைகள் [மூட நம்பிக்கைகள்] / 21 parts தை மாதம்{mid of January} ஒரு சிறப்பான மாதம்! / 04 parts Thai[mid of January]is a special month for Tamils! / 04 parts Jallikattu-An ancient Tamils bull taming sport / 02 parts ஜல்லிக்கட்டு-ஒரு வீரமிக்க பண்டைய தமிழர் விளையாட்டு! / 02 parts "பண்டைய தமிழ் பாடல்களில் விஞ்ஞானம்" / 06 parts "ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / 04 parts Irrigation of Ancient Tamils, Mesopotamia to South India / 04 parts "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / 05 parts Do we need to celebrate Deepavali and Deify Rama as God? / 05 parts Heroes [Warriors] of Purananuru / 05 parts புறநானுற்று மா வீரர்கள் / Heroes [WARRIORS] of Purananuru / 05 parts FORGET GOD[RELIGION] FOR THE TIME BEING;AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” / 04 parts ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / 04 parts Is Saivism the same as Hinduism[vaidika-dharma ] or is it a different one? / 04 parts சைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா?அல்லது வேறா? / 04 parts இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் / 12 parts Death & Its Beliefs of Tamils / 12 parts "தமிழ் புத்தாண்டு" / 02 parts "Tamil New Year" / 02 parts "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் / 02 parts "Crimes against humanity / 02 parts "முதுமையில் தனிமை" / 03 parts விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / 02 parts தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? / 02 parts கொரோனா வைரஸ் / வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா ? வரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா ? / 04 parts கடன் [கி மு 3000 ஆண்டில் இருந்து / 04 parts "ஒருபால் திருமணம்" / 04 parts "same-sex marriages" / 04 parts உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / 10 parts "முதல் மற்றும் இரண்டாவது கொரோனா வைரஸ் அலைகள்" / 04 parts அன்றும் இன்றும் / 04 parts "பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் காட்டும் வேறுபாடுகள்" / 03 parts "புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் ! / 02 parts "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / 10 parts "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்"/ பல பண்டைய பாடல்களின் வரிகள் ஊடாக ஆகஸ்ட் 07,2016 நட்பு தினத்தில் ஒரு நட்புடன் கூடிய காதலுக்காக எங்கும் ஒரு இளம் பெண்ணின் சிறு கதை/ 05 parts "தோஷமும் விரதமும்" / 2 parts முதியோருடன் ஒரு அலசல்: மனித பார்வை [Human vision] / 2 parts "மிருகங்களில் இருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / 4 parts "புறநானூற்று மாவீரர்கள்" / 8 parts 'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / 10 parts "தமிழர்களின் பண்டைய நான்கு கல்கள்" / 08 parts மொழியின் தோற்றம்: மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? / 10 parts முதியோருடன் ஒரு அலசல்: நினைவாற்றல் இழப்பு / 02 parts 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / 44 parts முதியோருடன் ஒரு அலசல்: மனித பார்வை / 02 parts முதியோருடன் ஒரு அலசல்: நினைவாற்றல் இழப்பு / 02 parts "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை" / 03 parts "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / 05 parts "The truth & false in Mahavamsa and the historical & scientific evidences" / 32 Parts [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point
-
இப்படி பல புதிய பழக்கங்களை புலம், புலம்பெயர் நாட்டில் நாம் தமிழகத்தை பார்த்து பழகி வருகிறோம். இதேபோல் இன்னொரு விடயம் வழைகாப்பு/சீமந்தம். அதேபோல் பெண் வீட்டுக்கு போய் பெண்பார்க்கும் முறையும் முன்னர் இல்லை. இப்போ தலைகாட்டுகிறது.1 point
-
தனி ஒரு மனிதனுக்கு மாட்டு கொத்து இல்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்! இவ்வண், உடான்ஸ் சாமியார் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிஸ்டேக் & மாட்டுகொத்து நுகர்வோர் பேரவை1 point
-
முன்பு சம்பளக் காசில் சேர்த்து வைத்து தான் தங்கம் வாங்கலாம் இப்பொது ஒரு " call " கொடுத்தால் போதும் வங்கியில் வந்து விழும் காசு வெளிநாடு காசு ஐயா வெளிநாட்டுக் காசு...1 point
-
1 point
-
“Oozhi” (ஊழி) is a poignant portrayal of the aftermath of the war in Srilanka, where promises of peace crumble in the face of enduring injustice, directed by Ranjith Joseph who previously made the well acclaimed film “Sinam Kol” 2009 ஆண்டுக்கு முன்னர் போரின் மத்தியிலும் வாழ்க்கை தரத்திலும், கலாச்சார மேன்மையிலும் முன்னுதாரணமாக இருந்த தமிழர் நிலம் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இருண்ட ஊழிக்காலத்துக்குள் மூழ்கிப்போகும் ஊழியே இது. Shows at Auburn reading cinemas, Sydney ,Australia May 12th Sunday- 3.30pm May 25th Saturday - 3.30pm May 26th Sunday - 3.30pm Online booking - https://www.eventboss.com/ Tickets - Jana 0401842780 Siva 0424 757 814 Naventhira 0435 039 160 Ganesh 0430 050 0511 point
-
எங்கள் புலிகள் மிச்சம் வைத்ததை Ukrainian முடிக்கிறாங்கள், ஆனால் சில தமிழர்கள் Ukraine இற்கு எதிரா Russians ஐ support பண்ணுவதையும், Donald Trump வெல்வேணும் என்று விரதம் இருக்கிறதை பார்க்க நல்ல கூத்தாய் இருக்குது…1 point
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் அகஸ்டின் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடலில் நொதிகள் உள்ள இந்த நெளியும் புழுக்கள் நெகிழியைச் சிதைக்கின்றன. இவை அப்படிச் செய்யவில்லையெனில் இந்த ப்ளாஸ்டிக் சிதைவதற்கு பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள்கூட எடுக்கும். முதல் பார்வையில் மெழுகுப்புழுக்கள் பற்றி குறிப்பாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. மெழுகு அந்துப்பூச்சிகளின் வளைந்து நெளியும் லார்வா வடிவம், தேனீக்கள் தங்கள் தேன்கூடுகளை உருவாக்கப் பயன்படுத்தும் மெழுகைச் சாப்பிடுகின்றன. தேனீ வளர்ப்பவர்கள் ஒரு நொடிகூட சிந்திக்காமல் இந்தப் புழுக்களை அழித்துவிடுவார்கள். ஆனால் 2017ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலில் முதுகெலும்பு கொண்ட விலங்குகளின் கரு வளர்ச்சியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மூலக்கூறு உயிரியலாளர் ஃபெடெரிகா பெர்டோச்சினி, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய, இந்த உயிரினங்கள் பற்றிய ஒரு கண்டுபிடிப்பைச் செய்தார். பெர்டோச்சினி, புதிதாக தேனீ வளர்ப்பவர். தேன்கூட்டை சுத்தம் செய்த பிறகு சில மெழுகுப் புழுக்களை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து, அவற்றை அங்கே விட்டுவிட்டார். சிறிது நேரம் கழித்து இந்தப் புழுக்கள் பிளாஸ்டிக்கில் சிறிய துளைகளை உருவாக்கத் தொடங்கியதை அவர் கவனித்தார். புழுக்களின் வாய் பட்டவுடனேயே ப்ளாஸ்டிக் சிதைய ஆரம்பித்தது. படக்குறிப்பு,இந்தப் புழுக்களின் 'உமிழ்நீரில்' செரிஸ், டிமீட்டர் என்ற இரண்டு முக்கியமான நொதிகள் இருந்தன. "அதுவொரு உண்மையான யுரேகா தருணம் - அது அருமையாக இருந்தது," என்று தனது ஆரம்ப கண்டுபிடிப்பு மற்றும் அதன் அர்த்தம் என்ன என்பது மனதில் பதிந்த அந்தத் தருணத்தை பெர்டோச்சினி விவரிக்கிறார். "அதுதான் கதையின் ஆரம்பம். ஆராய்ச்சித் திட்டத்தின் ஆரம்பம், எல்லாவற்றுக்குமான ஆரம்பம்," என்று அவர் குறிப்பிட்டார். மனிதர்களாகிய நமக்குச் செய்யக் கடினமாக இருக்கும் ஒன்றை அந்தப் புழுக்கள் செய்து கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் அந்தப் புழுக்கள் உணவு போல ப்ளாஸ்டிக்கை ஜீரணிப்பது போலவும் தோன்றியது. பெர்டோச்சினி மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் புழுக்களின் வாயில் இருந்து சுரந்த திரவங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். இந்த 'உமிழ்நீரில்' செரிஸ், டிமீட்டர் என்ற இரண்டு முக்கியமான நொதிகள் இருந்தன. இவை முறையே ரோமன் மற்றும் கிரேக்க வேளாண் பெண் தெய்வங்களின் பெயர்களாகும். அவை பிளாஸ்டிக்கில் உள்ள பாலிஎத்திலீனை ஆக்சிடைஸ் செய்து சிதைவை ஏற்படுத்தின. படக்குறிப்பு,"இந்தp புழுக்களின் நொதிகளை பிளாஸ்டிக் கழிவுகளில் பயன்படுத்துவதே இறுதி குறிக்கோள்," என்கிறார் பெர்டோச்சினி. தேன் கூடுகளை அழிக்கும் அவற்றின் திறனைப் பார்க்கும்போது அவற்றை பிளாஸ்டிக் மாசுபாட்டு சூழலில் அப்படியே விடுவது சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்று பெர்டோச்சினி குறிப்பிடுகிறார். ஆனால் இந்தp பூச்சிகளால் உற்பத்தி செய்யப்படும் என்சைம்கள், உலகின் பிளாஸ்டிக் மாசு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் என்றும் அவர் நம்புகிறார். பெர்டோச்சினி இப்போது பிரான்சில் உள்ள பயோரிசர்ச் ஸ்டார்ட்அப் பிளாஸ்டிசென்ட்ரோபியில் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். பிளாஸ்டிக்கை உடைப்பதில் இந்த நொதிகளைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். "இந்த நொதிகளை பிளாஸ்டிக் கழிவுகளில் பயன்படுத்துவதே இறுதி குறிக்கோள்" என்கிறார் பெர்டோச்சினி. "இந்தக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு உலகளவில் நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு தீர்வாக மாற்றப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார். பயன்தரக்கூடிய என்சைம்கள் பல்வேறு உயிரினங்களில் காணப்படுகின்றன. சில பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக்கை ஜீரணிக்கின்றன. ஆனால் உயர் விலங்கினங்களில் இது மிகவும் அரிதானது. கடந்த 2022ஆம் ஆண்டில், பிளாஸ்டிக்கை விரும்பி உண்ணும் மற்றொரு முதுகெலும்பில்லாத உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் "சூப்பர் வார்ம்" ஜூபோபாஸ் மோரியோ. இது பாலிஸ்டிரீன் கொண்ட உணவு மூலம் தனது எடையை அதிகரித்துக் கொள்கிறது. பிளாஸ்டிக் மீதான நமது நம்பிக்கையையும், நுகர்வையும் குறைக்கப் பல உலகளாவிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இந்த இலக்கிற்காக, பல நாடுகளும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளன. மேலும் 2024இன் பிற்பகுதியில் உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இறுதியில் இதுபோன்ற நொதிகள், பிளாஸ்டிக்கை குறைக்கப் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் இந்தச் சிறிய புழுக்களின் பங்கும் இருக்கலாம். பிளாஸ்டிக் பயன்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிளாஸ்டிக் முழுவதுமாக சிதைவதற்குப் பல தசாப்தங்கள் முதல் நூற்றாண்டுகள் வரை ஆகும். இன்று உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. அதில் 19 முதல் 23 மில்லியன் டன்கள் (சுமார் 2,000 குப்பை லாரிகளுக்குச் சமமானவை) நீர்வாழ் உயிரின சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் செல்கின்றன. அதில் பெரும்பாலானவை நுண்ணுயிர்களின் இருப்பிடமாக மாறுகின்றன அல்லது விலங்குகளால் உண்ணப்படுகின்றன. பிளாஸ்டிக் முழுவதுமாக சிதைவதற்குப் பல தசாப்தங்கள் முதல் நூற்றாண்டுகள் வரை ஆகும். https://www.bbc.com/tamil/articles/c6pyj8kjkz3o1 point
-
ரஞ்சித் அவர்களே வணக்கம், இந்த நேரமற்ற உலகினுள் நேரமெடுத்துத் தமிழ்தேசிய அரசியலை உயிர்ப்போடு வைத்திடமுனையும் உங்களது முயற்சிக்கு எனது நன்றியும் வாழ்த்தும். எம் கடன் பணி செய்து கிடப்பதேயென்று செயற்படும் உங்களுக்கு வார்த்தைகளால் நன்றிகூறுதல் பொருந்தாதபோதும் வேறுவழி தெரியவில்லை.1 point
-
ரஞ்சித்தவர்கள் முன்வைத்த வினாவை சற்று விரிவாக நிலாந்தனவர்கள் அலசியுள்ளார். இதிலே போட்டியிடும் சிங்களத்தரப்புகளைவிடச் சில தமிழ்த்தரப்பகளின் பதட்டமே நோக்குதற்குரியது. நன்றி1 point
-
இதை ஏற்க எம்மில் பலருக்கு விருப்பமில்லை. கட்சிபேத அரசியலைத் தொடர்ச்சியாகச் செய்து, அக்கட்சி கைகாட்டும் சிங்கள பெளத்தன் ஒருவனுக்கு வாக்குப் போடவேண்டும் என்று கேட்கிறார்கள். கேட்டால் தமிழ் மக்களை இன்னும் அதளபாதாளத்திற்குள் தமிழ் வேட்பாளர் விழுத்திவிடுவாராம். ஆகவே மரியாதையாக ரணிலுக்கே தமிழகள் தமது வாக்குகளை மறவாது போடவேண்டுமாம். அருமை! இதுதான் உண்மை. தமது இருப்பையும், தாம் வாக்குகளை வாங்கிக் கொடுக்கவிருக்கும் சிங்கள பெளத்தன் ஒருவனது வெற்றியையும் நினைத்தே இவர்கள் கவலைப்படுகிறார்கள். இதுவும் ஒரு கோணம்.1 point
-
1 point
-
KKR vs MI: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா தகுதி - திருப்புமுனை ஏற்படுத்திய ரஸல், ராணா பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2024 சீசனில் இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றை அதிகாரபூர்வமாக உறுதி செய்யாமல் இருந்தன. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நெருக்கமாக இருந்தபோதிலும், அதை உறுதி செய்ய ஏதாவது ஒரு வெற்றி தேவையாகவே இருந்து வந்தது. அந்த வெற்றியை நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றதையடுத்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு 18 புள்ளிகளுடன் முதல் அணியாகத் தகுதி பெற்றது. அதேநேரம், முதல் இரு இடங்களைப் பிடிக்கவும் கொல்கத்தாவுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மழையால் ஆட்டம் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 16 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. முதல் இரு இடங்களில் கொல்கத்தா இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 12 போட்டிகளில் 9 வெற்றி 3 தோல்விகளைப் பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளே ஆஃப் சுற்றையும் முதல் அணியாக உறுதி செய்தது. நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா அணி வலுவாக 1.428 என இருக்கிறது. கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் சாதாரணமாக வென்றாலே 22 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்க வைக்கும். ஒருவேளை இரு ஆட்டங்களிலும் தோல்வி அடையும்பட்சத்தில் 18 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்திருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றில் இருப்பதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்து, மற்றொரு ஆட்டத்தில் வென்றால்கூட கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கலாம். பட மூலாதாரம்,SPORTZPICS ஆனால், அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 3 லீக் ஆட்டங்களில் ஒன்றில் தோற்று மற்ற இரு ஆட்டங்களில் வெல்ல வேண்டும். ஒருவேளை கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முடித்து நிகர ரன்ரேட்டில் வலுவாக இருந்தபோதிலும், ராஜஸ்தான் அணி 22 புள்ளிகளுடன் முடித்தால் ராஜஸ்தான் அணிதான் முதலிடத்தைப் பிடிக்கும். ஒருவேளை கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் அணியும் தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடன் முடித்தால், நிகர ரன்ரேட் அடிப்படையில் முதல் இரு இடங்கள் முடிவு செய்யப்படும். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் அணியைவிட வலுவாக கொல்கத்தா இருக்கிறது. அடுத்த இரு வெற்றிகளால் கொல்கத்தா அணி இன்னும் புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டை வலுப்படுத்தும். ஆனால், ராஜஸ்தான் அணி 0.426 என கொல்கத்தா ரன்ரேட்டைவிட ஒரு புள்ளி குறைவாக இருப்பதால் நிகர ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடிப்பது மாபெரும் வெற்றிகளைப் பெற்றால்தான் சாத்தியம். ஆதலால், கொல்கத்தா அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே முதல் இரு இடங்களைப் பிடிப்பது உறுதி. மும்பை அணிதான் ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இருப்பினும் ஆறுதல் வெற்றிக்காக நேற்று களமிறங்கி 9வது தோல்வியைச் சந்தித்தது. மும்பை அணி இதுவரை 13 போட்டிகளில் 4 வெற்றி, 9 தோல்வி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. தனது கடைசி லீக்கில் லக்னெள அணியை மும்பை அணி வரும் 17ஆம் தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் ஒருவேளை மும்பை அணி வென்றால், லக்னெளவின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். ஒருவேளை லக்னெள அணி வென்றால், ப்ளே ஆஃப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும். தமிழக வீரர் வருணுக்கு ஆட்டநாயன் விருது பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது பந்துவீச்சாளர்கள்தான். ஈரப்பதமான ஆடுகளத்தை நன்றாகப் பயன்படுத்தி, மும்பை பேட்டர்களை ரன்சேர்க்கவிடாமல் திணறவிட்டனர். குறிப்பாக சுனில் நரைன், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இருவரும் மும்பை பேட்டர்களின் கைகளைக் கட்டிப்போடும் வகையில் பந்து வீசினர். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சராசரியாக ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே இருவரும் விட்டுக்கொடுத்தனர். இதில் வருண் சக்ரவரத்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக பவர்ப்ளே ஓவர்கள் முடிந்து, அடுத்த 5 ஓவர்களை வருண், நரைன் வீசி வெறும் 22 ரன்கள் மட்டுமே அடிக்க மும்பை பேட்டர்களை அனுமதித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பெரும் நெருக்கடி அளித்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ரஸல், ராணா திருப்புமுனை ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸலும் பந்துவீச்சில் நேற்று 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கெனவே நரைன், வருண் பந்துவீச்சில் ரன் சேர்க்க முடியாமல் சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் திணறி வந்தனர். இதில் ரஸலும் தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்தி, ஸ்லோவர் பால், நக்குல் பால், ஸ்லோ பவுன்சர் என வீசி ஸ்கை பேட்டரை திணறவிட்டார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஸ்கை 11 ரன்களில் ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல டிம் டேவிட் வந்தவேகத்தில் ரஸல் பந்துவீச்சில் டக்அவுட் ஆகி வெளியேறினார். இரு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி ரஸல் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித் தரக் காத்திருந்த திலக் வர்மா, நமன் திர் இருவரையும் ஹர்சித் ராணா வெளியேற்றினார். இந்த 4 பந்துவீச்சாளர்கள்தான் கொல்கத்தா அணி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து டிபெண்ட் செய்து கொடுத்தனர். கொல்கத்தாவின் பேட்டிங் எப்படி இருந்தது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணிக்கு வழக்கமாக அதிரடியான தொடக்கம் அளிக்கும் நரைன்(0), பில் சால்ட் (6) ஸ்ரேயாஸ்(7) மிகச் சொற்ப ரன்களில் வெளியேறினர். பவர்ப்ளேவில் கொல்கத்தா 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெங்கடேஷ்(42), நிதிஷ் ராணா(33), ரஸல்(20), ரிங்கு சிங்(20) ஆகியோர் சிறிய கேமியோ ஆடி சேர்த்த ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர். எந்த பேட்டரும் அரைசதம்கூட அடிக்கவில்லை, அனைத்து வீரர்களின் பங்களிப்பால் 157 ரன்கள் எனும் ஸ்கோரை கொல்கத்தா அடைந்தது. பும்ராவின் மேஜிக் பந்துவீச்சு ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை நேற்று எதிர்கொண்ட சுனில் நரைன் நிச்சயமாக சில வினாடிகள் திகைத்திருப்பார். பும்ரா வீசிய பந்து யார்க்கராக ஸ்டெம்பை பதம் பார்க்கும் என்று நரைன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். இந்த பந்துக்கு எந்தப் பதிலும் இல்லாமல் நரைன் டக்-அவுட்டில் வெளியேறினார். இந்த சீசனில் நரைன் டக்-அவுட் ஆவது இதுதான் முதல்முறை. பும்ரா வீசிய முதல் ஓவர் முதல் பந்து, பும்ராவின் கையில் இருந்து ரிலீஸ் ஆகும்போது அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கிச் சென்றது. ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் ஸ்விங் ஆகி நரைனின் ஆஃப் ஸ்டெம்பை தட்டிவிட்டு க்ளீன் போல்டாக்கியது. அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கி பந்து செல்கிறது என நினைத்து பேட்டை தூக்கியவாறு நரைன் நிற்க பந்து ஸ்டெம்பை தட்டிவிட்டு சென்றதைப் பார்த்து நரைன் சில வினாடிகள் திகைத்து நின்றார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ‘நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை’ பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “எங்களுக்கு இந்த சீசனும், இந்த ஆட்டத்தின் தோல்வியும் கடினமாக இருந்தது. பேட்டிங்கில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும் அதை நடுவரிசையில் வந்தவர்கள் பயன்படுத்தாதற்கு விலை கொடுத்துவிட்டோம். ஆடுகளம் கண்டுபிடிக்க முடியாத அளவு வித்தியாசமாக இருந்தது, ஆனால், தருணம்(மொமென்ட்டம்) என்பது முக்கியமானது, அந்தத் தருணத்தை, வாய்ப்புகளை நாங்கள் கைப்பற்ற முடியவில்லை." "இந்தச் சூழலுக்கு இந்த இலக்கு அடையக்கூடியதுதான். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். மழை காரணமாக, பந்துகள் பவுண்டரி சென்றாலே ஈரமாகிவிடுகிறது. கொல்கத்தா அணியும் சிறப்பாகப் பந்துவீச்சில் செயல்பட்டனர். அடுத்து வரும் ஆட்டத்தை அனுபவித்து விளையாட வேண்டும், நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், நாங்கள் போதுமான அளவு நல்ல கிரிக்கெட்டை இந்த சீசனில் விளையாடவில்லை,” எனத் தெரிவித்தார் ஃபார்ம் இழந்து தவிக்கும் ரோஹித் சர்மா மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளாகவே ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த நிலை நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி பவுண்டரிகளை அடித்து வரும் நிலையில் ரோஹித் சர்மா விருப்பமில்லாமல் பேட் செய்தார். அதிலும் குறிப்பாக வருண் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க பலமுறை ரோஹித் முயன்றும் பந்து அவருக்கு மீட் ஆகவில்லை. பவர்ப்ளே ஓவர்கள் முழுவதும் களத்தில் இருந்த ரோஹித் சர்மா பேட்டிலிருந்து ரன்கள் வருவது நேற்று கடினமாக இருந்தது. 24 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 19 ரன்கள் சேர்த்தார் இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். பட மூலாதாரம்,SPORTZPICS ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 79 ஆக இருந்தது. இஷான் கிஷன் அதிரடியாக பேட்டை சுழற்றியதால்தான் பவர்ப்ளேவில் மும்பை 59 ரன்கள் சேர்த்தது. டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் ரோஹித் சர்மா இப்படி ஃபார்மின்றி தவிப்பது இந்திய அணியின் நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. மறுபுறம் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கிலும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை ஃபார்மிலும் இல்லை, பந்துவீச்சிலும் ஜொலிக்கவில்லை. ஆனால், இந்திய அணிக்கு துணை கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளதும் பல்வேறு கேள்விகளை கிரிக்கெட் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது. நம்பிக்கையளித்த பேட்டர்கள் சூர்யகுமார் யாதவ்(11) நடுவரிசை பேட்டர்கள் ஹர்திக் பாண்டியா(2), டிம் டேவிட்(0), நேஹல் வதேரா(3), ஆட்டமிழந்தாலும், திலக் வர்மா, நன் திர் இருவரும் மும்பை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயன்றனர். கடைசி 18 பந்துகளில் 57 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஐபிஎல் டி20 தொடரில் இந்த ஸ்கோர் எட்டக்கூடியதுதான். ஹர்சித் ராணா வீசிய 14வது ஓவரில் திலக் வர்மா சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். நமன் திர் உற்சாகமடைந்து, ரஸல் வீசிய 15வது ஓவரில் இரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா, நமன்திர் மீது நம்பிக்கையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், ராணா வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் திலக் வர்மா(32), நமன்திர்(17) இருவரும் விக்கெட்டை இழக்க மும்பையின் கதை முடிந்தது. https://www.bbc.com/tamil/articles/cnd6jw30dj9o1 point
-
இப்போது அட்சிய திருதி நாள் அதிஷ்டம் வரும் என்று யாழ்பாணத்தில் தங்க நகைகள் வாங்குகின்றனராம்.முன்பு இந்த பழக்கம் இலங்கையில் இருக்கவில்லையாம்.1 point
-
1 point
-
எனக்கும் தெரியும் நந்தன்.அவரது சகோதரியையும் அறிவேன். அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.1 point
-
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, தலா 6 போட்டிகளில் வெற்றியையும், ஆறில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியினர், ஐபிஎல் விதிகளை மீறியதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பந்துவீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற ஐபிஎல் விதிகளை டெல்லி அணி மீறுவது இது மூன்றாவது முறையாகும். அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணி உடனான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்டிற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், நாளைய போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது. அதேபோல், அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை டெல்லி அணியினர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதால், மூன்றாவது முறையாக மீறியதற்காக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.puthiyathalaimurai.com/sports/cricket/rishabh-pant-suspended-for-a-match-and-fined-30-lakhs-for-maintaining-slow-overrate1 point
-
இரண்டு மாவீரர்களை கொண்ட குடும்பத்தில் இருக்கும் கவி ஜயாவுக்கு ,உங்களை என்னை விட நிறையவே பொறுப்பும் கடமையும் உண்டு1 point
-
வேற யார். பைடனுக்கு தான். இங்கு கூடுதலானவர்கள் தாங்கள் குடியரசுக்கட்சி ஜனநாயககட்சி சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் என பதிந்து வைத்திருப்பார்கள். கூடுதலானவர்கள் அதன்படியே வாக்களிப்பர். சுதந்திரமாக உள்ளவர்கள் யாரின் வாக்குறுதிகள் நல்லதோ அதற்கு வாக்களிப்பர்.1 point
-
உண்மை தான். ஆனாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மாவீரர் குடும்பத்திலிருந்து மக்களை எண்ணி ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி எழுத பொதுமகன் போடா போ.பொத்திக் கொண்டு உன்ரை வேலையைப் பார் என்ற மாதிரியும் எண்ணலாம். ஏனென்றால் கருத்துப் படங்கள் ஒவ்வொருவர் கண்ணிலும் வித்தியாசமாக படும். மற்றும்படி கவி அருணாசலம் வரையும் எல்லாமே நானும் ரசிப்பேன்.1 point
-
1 point
-
சொல்லலாம் ,ஆனா உங்களுக்கு எறிஞ்ச செருப்புளில மிச்சம் இருக்குமோ என்டு யோசிக்கிறன்.😁1 point
-
யாழ்ப்பாணம் சிங்கப்பூருக்கு கிட்டவா வந்திட்டுது.வெய்யில் மட்டும்தான் பிரச்சனையா இருக்கு1 point
-
சுய கண்டடைதல் : கல்பற்றா நாராயணன் தமிழில் : அழகிய மணவாளன் “கண்ணாடி மிக அதிகமான பதிப்புகள் வெளிவந்த பெஸ்ட் செல்லர் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் கொண்ட என்றென்றைக்குமாக வாசிக்கப்படும் நூல் பைபிளைவிட அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்பட்ட புனிதமான நூல்.“ (நிழலை கைப்பற்றுதல் – கல்பற்றா நாராயணன்) கண்ணாடிக்கு பச்சைத்தண்ணீரின் நிறம். பிரதிபலித்தல் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் நீலநிற நீர்த்தேக்கம் (Now I am a lake mirror- Sylvia Plath). நார்ஸிஸஸ் தன் நீர்ப்பிம்பத்தால் ஈர்க்கப்பட்டு மூழ்கி மறைந்த தடாகம் ஒவ்வொருமுறை நான் கண்ணாடி பார்க்கும்போதும் எழுந்துவருகிறது. மனிதர்கள் அதில் நீந்தித்திளைக்கிறார்கள். அதில் மூழ்கி தங்களை தொலைத்தும் விடுகிறார்கள். கண்ணாடியைவிட ஈர்ப்பான வேறு எந்த பொருளையும் மனிதன் படைக்கவில்லை.‘ கண்ணாடியைப் பார்த்து வாங்கமுடியாது/ கண்ணாடி பார்ப்பவர்களாக ஆகிவிடுவோம்’. கண்ணாடி மாட்டப்படாத வீடு எது? அங்காடிகளில் ’இது ஒரு வீடு’ என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. நீரில் பிரதிபலித்த ’சுயரூபம்’ தான் மனிதனில் தன்னுணர்வை உருவாக்கியது. தன் சொந்த நீர்ப்பிம்பத்திலிருந்து உருவாகிவரும் தன்னுணர்வை விவரிக்கும் உருவகக்கதை ஒன்றுண்டு: நிறைமாத கர்ப்பிணியான புலி மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளை பதுங்கியிருந்து தாக்குகிறது. ஆடுகள் தப்பிவிடுகின்றன. வேகமாக பாய்ந்தது கீழே விழுந்த அதிர்வில் புலி குட்டியை ஈன்றுவிட்டு பிரசவத்திலேயே இறந்தும் விடுகிறது. ஆடுகள் அனாதையான புலிக்குட்டியை தங்களுடன் எடுத்துச்சென்று வளர்த்தன. அது ஆடுகளுடன் புல்லை உணவாக சாப்பிட்டது. ஆடுபோல கனைத்து, மிகமெதுவாக நடந்து புல்மேய்ந்து வாழ்ந்தது. ஒருநாள் ஆடுகளுடன் இருந்த அந்த புலிக்குட்டியை இரை தேடிவந்த புலி ஒன்று பார்க்கிறது. புலியைப்பார்த்ததும் ஆடுகள் ஓடி மறைந்துவிடுகின்றன. பயத்தில் ஸ்தம்பித்து நின்ற புலிக்குட்டியை புலி ஆசுவாசப்படுத்தியது. ‘ நீ என் உறவினன். நீ ஆட்டுக்குட்டி அல்ல புலிக்குட்டி. நீ வளர்ந்து பெரிதாகும்போது என்னைப்போல ஆவாய். நாம் புல் சாப்பிட வேண்டியவர்கள் அல்ல. ஆட்டிறைச்சியும் முயலிறைச்சியும்தான் நமது உணவு. என்னுடன் வா, உனக்கு உன்னை யார் என்று காட்டித்தருகிறேன் ’ என்று சொல்லி புலிக்குட்டியை அருகே உள்ள ஆற்றிற்கு அழைத்துச்சென்றது. ஆற்றங்கரையின் ஓரத்தில் தன்னுடன் நின்ற புலிக்குட்டியிடம் ஆற்றை பார்க்கச்சொன்னது புலி. புலிக்குட்டி சிறியது என்றாலும் பார்க்க புலிபோலவே இருக்கும் தன் நீர்ப்பிம்பத்தை பார்த்தது. தன்னை அழைத்துவந்த புலியை பார்த்தது, தன்னால் எவ்வளவுமுடியுமோ அவ்வளவுக்கு தன்னையே பார்த்துக்கொண்டது, தன் நீர்ப்பிம்பத்தை பார்த்தது. மாறிமாறி பார்த்ததுக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் புலியாக ஆகக்கூடிய உயிர்த்துடிப்பு தன் உடலில் நிறைந்திருப்பதை உணர்ந்துகொண்டது. தான் புலிதான் என்று அதற்கு நம்பிக்கை வரத்தொடங்கியது என்றாலும் புலியின் உருமல் அதை அச்சுறுத்தியது. ’வா இது முடியவில்லை. உன்னை இன்னும் நீ அறியவேண்டியிருக்கிறது’ என்று சொல்லி புலி ஒரு முயலை வேட்டையாடி புலிக்குட்டிக்கு கொடுத்தது. புல் சாப்பிட்ட பழகிய புலிக்குட்டி முதன்முறையாக சுவை என்றால் என்ன என்பதை அறிகிறது. புலி மட்டுமே அறிய சாத்தியமான தீவிரமான சுவை. தீப்பற்றியது போன்ற உன்மத்தத்தில் அது முயல் இறைச்சியை கடித்து கிழித்து உண்டது. அது தன்னையறியாமலேயே உருமியது. மறைந்திருந்த தேற்றைப்பற்களும் நகங்களும் வெளியே வந்தன. என் பருவடிவம் புலியாக ஆகிக்கொண்டிருக்கிறது. தானாக ஆதல் என்பது எவ்வளவு கம்பீரமான அனுபவம்! எந்த உருவகக்கதையையும்போல இந்த கதையிலும் புலி புலி அல்ல. இந்த கதையில் நிகழ்வதுபோல இம்மாதிரியான புறவயமான தூண்டுதலால் புலிக்குட்டி புலியாக ஆவதில்லை. தன் நீர்ப்பிம்பத்தை கண்டுகொள்ளவோ, அந்த கண்டுபிடிப்பை மாற்றத்திற்கான தூண்டுதலாக ஆக்கவோ புலியால் முடியாது. ஆனால் அந்த ஆற்றல் கொண்ட மனிதனின், அவன் பரிணாமத்தின் கதையாக மாற இந்த புலிக்கதையால் முடியும். மனிதப்பரிணாமத்தின் பொதுத்தன்மையை விவரிப்பதற்காக மட்டுமல்ல அதன் நுட்பமான தனி இயல்புகளையும் சொல்ல இந்த கதையால் முடியும். நரேந்திரனில் விவேகானந்தரை கண்டுகொண்டு அதை நோக்கி அவரை செலுத்திய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையும் ஒருவகையில் இந்த புலிக்கதைதான். குழந்தைப்பருவத்தில் மனித சிசு தாண்டிவரும் ஒரு இக்கட்டை நாடகீயமாக இந்த கதை கையாண்டிருக்கிறது. எப்போது என்று உறுதியாக சொல்லமுடியாத தொல்பழங்காலத்தில், இன்றைய நவீன மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் அதன் குழந்தைப்பருவத்திலிருந்த மனிதன் தன் தோற்றத்தை/’சுய’ ரூபத்தை நீர்ப்பிம்பத்தில் கண்டுகொண்டுதான் அவனாக ஆகத்தொடங்குகிறான். அது நீர்ப்பிம்பமாக இருக்கலாம் அல்லது பிளாட்டோ சொல்வதுபோல எரியும் நெருப்பிற்கு பின்புறம் உள்ள குகைச்சுவற்றில் பதிந்த நிழலாக இருக்கலாம். அதில் மனிதன் முதல்முறையாக தன்னை நேரடியாக பார்க்கிறான் (ஒருவகையில் எல்லா புகைப்படங்களும் நீர்ப்பிம்பங்களின் பதிலிவடிவங்கள் அல்லவா?). நீர்ப்பிம்பத்தில் தன்னை கண்டடைந்து அதுவழியாக தன்னுணர்வு உருவாகி வருவதன் புறவயமான சித்திரம் இந்த கதையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த உருவகக்கதை மிகப்பழையது. ‘கண்ணாடிப்பருவம் (mirror stage)’ என்ற லக்கானின்(Jacques Lacan) உளவியல்ரீதியான கண்டுபிடிப்பிற்கு பல காலம் முன்பே இந்த கதையில் அந்த கருதுகோள் தோற்றம் மாறி நம்மிடம் வந்துசேர்ந்துவிட்டிருக்கிறது. ஒருவகையில் ஆன்மிகமான தேடலில் தன்னை அறிதல்(Realisation) நிகழ்வதற்கு முன்பு கடக்கவேண்டிய தடையையும் அந்த கதை சுட்டிக்காட்டுகிறது. ஸ்ரீநாராயண குரு தான் நிறுவிய கோவில்களில் கண்ணாடியை பிரதிஷ்டை1 செய்தது தன்னுணர்வு கொண்ட மனிதனை உருவாக்குவதற்காகத்தான் (’ஆத்மவிலாசம்’ என்ற பெயரில் நாராயணகுரு ஒரு வசன கவிதை எழுதியிருக்கிறார். அதில் கண்ணாடி பற்றிய அவருடைய அகத்தரிசனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. எவ்வளவு விளக்கங்கள் அளித்தாலும் தீராத அர்த்த சாத்தியங்களுடன், அதற்குமேல் செறிவாக்கவே முடியாத அளவுக்கு அடர்ந்த மொழியில் அந்த கவிதை எழுதப்பட்டிருக்கிறது). புல்தின்று ஆடுகளுடன் வாழ்ந்த அந்த புலிக்குட்டியைப்போல மனிதன் என்ற போதம் இல்லாமல் வாழ்பவர்களை தன்னுணர்வு கொண்டவர்களாக ஆக்குவதற்காகத்தான் நாராயணகுரு கண்ணாடியை பிரதிஷ்டை செய்தார். கண்ணாடியில் நீ உன் உடலைப்பார். இது மனித உடல். ஈழவன் என்றோ, தலித் என்றோ பிராமணன் என்றோ உள்ள பிரிவினைகளுக்கு அப்பால் உள்ளது மனித உடல். எந்த மனிதனிலும் உள்ள எண்ணற்ற சாத்தியங்கள் உன்னிலும் உண்டு. கண்ணாடியில் உன்னைப்பார். உன்னில் இருப்பது சாதி முத்திரையில்லை, மனிதன் என்ற முத்திரை மட்டும்தான். கண்ணாடியில் உன்னைப்பார், ஒரே ஒரு சாதியும் ஒரேயொரு மதமும் ஒரே ஒரு தெய்வமும்தான் இருக்கிறது, அது எந்த வகைபேதங்களும் அற்ற ’மனிதனை’த்தானே காட்டுகிறது? தன்னுணர்வை உருவாக்கும் கண்ணாடி என்ற ஊடகத்தை வழிபாட்டிற்கு உரியதாக ஆக்குவது வழியாக ’மனிதனை’ உருவாக்கியெடுக்கிறார் நாராயணகுரு. மனிதன் அல்லாத மற்ற எந்த உயிரினத்தாலும் அறிந்துகொள்ளமுடியாத தன்னுணர்வை நாராயணகுரு அழுத்தமாக சொல்கிறார். உண்மையில் நாராயணகுரு கண்ணாடி பிரதிஷ்டை செய்யவில்லை, கண்ணாடியில் மனிதனை அவர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். மனிதன் தவிர்த்த உயிர்க்குலங்கள் அனைத்தும் இயற்கை என்ற மென்பொருளில் நிம்மதியாக வாழ்கின்றன (மனிதன் அந்த சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவன்). மனிதன் தான் சுயமாகவே உருவாக்கிக்கொண்ட, ஆனாலும் அவனுக்கு போதுமானதாக இல்லாத மென்பொருளில் இயங்குகிறான். இதைப்பற்றிய கற்பனையம்சம் நிறைந்த விவரணை கிரேக்க தொன்மமான எபிமெதீயஸ்(Epimetheus) ப்ரோமெதீயஸ்(Prometheus) என்ற இரட்டையர்களின் கதையில் இருக்கிறது. மனிதன் தவிர்த்த பிற உயிரினங்களுக்கு எபிமெதீயஸ் தன்னிடம் இருக்கும் அரியவற்றை வரமாக கொடுக்கிறான். அடர்ந்த தோல், உடலின் மேற்பரப்பில் குளிர்தாங்கும் அடர்ந்த ரோமங்கள், குளம்பு, நகம், தேற்றைப்பல், கொம்பு, பல அடுக்குகள் கொண்ட குடல், பார்க்க அழகான புறவுடல், அதிக வேகம், உடல்வலிமை, தீவிரமான புலன்கள் என உயிர்வாழ்க்கைக்கு அவசியமானவற்றையெல்லாம் உயிர்களுக்கு எபிமெத்யூஸ் அளிக்கிறான். மனிதனின் முறை வரும்போது தன் கைவசம் இருப்பதையெல்லாம் எபிமெத்யூஸ் கொடுத்து தீர்த்துவிட்டிருந்தான். பிறர் உதவியில்லாமல் வாழமுடியாத, மிகமிக கைவிடப்பட்டவனான மனிதன் முன் எபிமெத்யூஸ் தன்னிடம் எதுவும் இல்லை என கையை விரித்துவிட்டான். மனிதனுக்கு நல்ல உடையைக்கூட எபிமெதீயஸ் அளிக்கவில்லை. மனிதன் மேல் இரக்கம் கொண்ட ப்ரோமெதீயஸ் தேவலோகத்திலிருந்து நெருப்பை கவர்ந்துவந்து அவனுக்கு அளிக்கிறான். நெருப்பை எரிபொருளாக ஆக்கி தான் உயிர்வாழ்வதற்குரிய மென்பொருளை தானே உருவாக்கிக்கொண்டான் மனிதன். முதல்முறையாக நீரில் உற்று பார்க்கும்போது அதில் இருக்கும் பிம்பம் தன் சொந்த நிழல்தான் என்பதை மனிதன் கண்டடைகிறான். ப்ரோமெதீயஸ் அவனுக்கு அளித்த நெருப்பின் முதல் ஒளிர்வு அந்த தருணத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த தருணத்திலிருந்து தன்னைத்தானே பார்த்துக்கொள்ள முடியாத- கண்டுகொள்ள முடியாத- ஆரம்பகட்ட உயிரினங்களிலிருந்து மனிதன் உயர்கிறான். அதுவரை கடவுளைத்தவிர யாராலும் அறிய முடியாத அவனுடைய பிம்பத்தை, நிழலை மனிதன் முதன்முறையாக காண்கிறான். ஆத்மவிலாசம் என்ற கவிதையில் ‘இந்த கண்ணாடிதான் நம் கடவுள்’ என்று நாராயணகுரு சொல்கிறார். ’ நம்மை நாம் நேருக்கு நேராக பார்க்கமுடிந்ததில்லை’. இதோ இப்போது அதற்கான வழிமுறை உருவாகியிருக்கிறது. ‘கடவுள் என்பது பரிசுத்தமான கண், அது கண்ணாடியாகவும் ஆகியிருக்கிறது’. கண்ணாடியை கடவுளின் சதுர வடிவமான கண் என்கிறார் சில்வியா பிளாத். பயணத்திற்கு கிளம்பும் மனிதன் கண்ணாடிமுன் நின்று விடைபெற்றுசெல்வதுபோன்ற ஓவியம் ஒன்றை வரைவது வழியாக ஒட்டுமொத்த மனித வளர்ச்சியின் நுண்வரலாற்றை ஒவியனால் சித்தரித்துக்காட்டிவிடமுடியும். மலையாள நாவலாசிரியரும் இதழாளரும் ஆன எம்.பி.நாராயணபிள்ளையின் ‘நினைவுகூர்தல்’ என்ற சிறுகதை கண்ணாடியைப்பற்றிய கண்டடைதல்கொண்ட நல்ல சிறுகதை. அந்த சிறுகதையில் கதைசொல்லி ஒரு கடிதமெழுதி முடித்து அடியில் கையெழுத்துப்போடும்போது சட்டென அவனுக்கு தன் பெயர் நினைவுக்கு வராது. எவ்வளவு முயற்சித்தாலும் பெயர் நினைவுக்கு வராது. ஒருவன் இல்லாத இடத்தில் அவனை பிரதிநிதித்துவப்படுத்துவது அவன் பெயர்தான். ஒருவனை நேரில் பார்த்தேயிராதவர்களுக்கு அவனுடைய பெயர் மட்டும்தான் அவனாக இருக்கிறது. பெயர் என்பது மனிதனைவிட விரிவானது, அவனுடைய பதிலி. ”ஒருவனின் உண்மைத்தன்மை அவனுடைய பெயர்தான் இல்லையா? பெயர் இல்லாவிட்டால் தன்னால் இந்த கடிதத்தை முழுமையாக்க முடியுமா? யாரிடமாவது கேட்க முடியுமா தன் பெயர் என்ன என்று? அதுவும் இந்த இரவில்? (பெயரிடுவதற்கு முன்பு உள்ள இன்மையை, இருளை இந்த இரவு நினைவுபடுத்துகிறதோ?) என் முகத்தை பார்த்தால் ஒருவேளை பெயர் நினைவுக்கு வரலாம். அதை பார்க்கலாம்….. மெழுகுவர்த்திக்கு நேராக உள்ள கண்ணாடிக்கு நேராக நடக்கிறான். நல்ல பரிச்சயம். பரிசயமுள்ளவர்களை பார்க்கும்போது சிரிக்கவேண்டும் அல்லவா. சிரித்தேன். கண்டுபிடித்துவிட்டேன். ஓ, இது வேலப்பன் அல்லவா?” கதைசொல்லிக்கு வேலப்பன் என்ற தனித்தன்மையை அளித்த மனிதப்பண்பாடு அதன் பயணத்தை தொடங்கியது கண்ணாடிப்பிம்பத்திலிருந்து உடைத்து வெளிவந்த தன்னுணர்விலிருந்துதான் இல்லையா? கண்ணாடிக்கு முன் நின்றவுடன் எவ்வளவு வேகமாக கதைசொல்லி தன்னை அறிந்துகொள்கிறான், எவ்வளவு சீக்கிரம் அவனுக்கு அவன் பெயர் நினைவுக்கு வருகிறது! “இந்த கண்ணாடிப்பிம்பம் வழியாகத்தானே நான் வேறுபட்ட இருப்பாக ஆகியிருக்கிறேன்? வேறு ஒரு இருப்பான ’கையெழுத்து’ இப்போது என்னுடையதாக ஆகிவிட்டது. ‘ வி.வேலப்பன். இது போதும். இனி கையெழுத்திடலாம். வி.வேலப்பன் என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்கடியில் ஒரு கோடு வரைந்து இரண்டு புள்ளிகள்” நீர்ப்பிம்பத்தில் தன்னை கண்டுகொண்டதால் மட்டும் மனிதன் விலங்காக அல்லாமல் ஆவதில்லை. மேலும் தன்னுணர்வு இல்லாததை விலங்குகளும், பறவைகளும் மோதாமையாகவும் உணர்வதில்லை. அவை இயற்கையின் மென்பொருளில் பாதுகாப்பாக தொடர்வதற்கு அந்த அறியாமை அவசியமானது. ‘செயற்கை நுண்ணறிவால்’ உருவாக்கப்பட்ட, தானாகவே இயங்கும் வாகனம் ஓட்டுநரால் இயக்கப்படும் வாகனத்தைவிட பாதுகாப்பானதாக இருப்பது போல இயற்கையின் பிடியில் உள்ள விலங்குகளின் நிலை நாம் இருக்கும் நிலையைவிட பாதுகாப்பானது. செயற்கை நுண்ணறிவில் இயங்கும் வாகனத்திற்கு முன்னே ஆபத்துகள் எதுவும் இல்லை, வளைவில் சட்டென எதிர்ப்படும் வாகனங்கள் அதிர்ச்சியடையச் செய்வதில்லை, தற்செயல்கள் இல்லை, நாளை இல்லை, நேற்று இல்லை, மரணம் இல்லை. அந்தந்த கணங்கள் மட்டும். தன்னால் நிறைந்த தான் மட்டும். தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் முயலை மனிதக்கற்பனையில் பிறந்த கதைகளில் மட்டும்தான் பார்க்கமுடியும். ஒரு தனிவிலங்கிற்கு தனக்கு மட்டுமேயான எந்த பொறுப்பும் இல்லை, எந்த பதற்றமும் இல்லை. எந்த விலங்கும் தனித்தன்மை கொண்டதல்ல. தனித்தன்மையை அடைவதற்கு அவசியமான வீழ்ச்சியையோ உயர்வையோ அவற்றின் பரிணாத்தில் எதிர்கொள்ளவில்லை. ஒன்றாம் நூற்றாண்டின் நரிக்கும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு நரிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள நரிக்கும் கொயிலாண்டியில் உள்ள நரிக்குமிடையே எந்த வித்தியாசமும் இல்லை. அவற்றிற்கு கால-இடம் இல்லை. தன் நிழலை தன்னுடையதுதான் என்று கண்டடைவதற்கான அறிவு அவற்றிற்கு அருளப்பட்டிருந்தால் அவை இயற்கையின், பாதுகாப்பின் மென்பொருளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும். கண்ணாடியுடன் தங்களால் உரையாட முடிவதில்லை என்பதை விலங்குகள் போதாமையாக உணர்வதில்லை. விலங்கு தன் சொந்த நிழல் தன்னுடையதுதான் என்பதை அறிய நேர்ந்தால் அவை நார்ஸிஸஸ் போல மனம் பிறழ்ந்துவிடும். நீரில் தெரியும் பிம்பம் தன்னுடையதுதான் என்று அவை அறிந்திருந்தால், அந்த பிம்பம்மீது கண்மூடித்தனமாக காதலிக்க ஆரம்பித்திருக்கும். அந்த காதலின் மிக மோசமான நிலையைத்தான் நாம் நார்ஸிஸஸில் பார்க்கிறோம். நார்ஸிஸஸிற்கு மனிதன் தவிர்த்த உயிரினங்களுக்கு உள்ள பாதுகாப்பு கவசம் (இயற்கையை நாம் அப்படியும் அழைக்கலாம்)இல்லாமலாகிறது, தனக்கென சுயமான பாதுகாப்பு கவசத்தை படைப்பதற்கான ஆற்றலும் அவனுக்கு இல்லை. தன்னுணர்வாக கனிவடைவதற்கு முன்பு உள்ள குருட்டுத்தனமான சுயமோக நிலை. இயற்கை அளித்த பாதுகாப்பின் கூட்டை உடைத்து வெளியே வந்த தன்னை எல்லாம் மறந்து கட்டித்தழுவிக்கொள்கிறான் நார்ஸிஸஸ். நார்ஸிஸஸின் கதை தொல்பழங்காலத்தில் எங்கேயே நிகழ்ந்த சம்பவமோ, அந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதையோ அல்ல. வெளிப்படாமல் இருக்க சாத்தியமில்லாத, இந்த ஒரு வடிவத்தில் அல்லாமல் வேறெப்படியும் வெளிப்படமுடியாத ஒரு கண்டடைதல்தான் நார்ஸிஸஸின் கதை. நம் வழியாக, நம்மையும் கதாப்பாத்திரங்களாக ஆக்கி இன்னும் தொடரும் ஒரு கதை (அதை முழுமுற்றாக பகிர்ந்து முடிக்க முடியாததால் அதை நாம் ‘தொன்மம்’ என்று சொல்கிறோம்). நாம் இன்னும்கூட நார்ஸிஸஸுக்கு தீவிரமான விழைவை ஏற்படுத்திய தற்பிம்பத்தை வெறுக்கக்கூடியவர்களாக ஆகவில்லை. தன்னை எவ்வளவு வரைந்தாலும், எவ்வளவு புகைப்படங்கள் எடுத்தாலும், இதோ இன்று தொடர்ச்சியாக தற்படங்கள் எடுத்தாலும் மனிதனுக்கு நிறையவில்லை. அசாதாரணமான கோணங்களில் தற்படம் எடுப்பதற்காக அபாயகரமான இடங்களில் தவறிவிழுந்து இறப்பவர்கள் என உலகம் முழுக்க தினம் ஒருவர் என்ற கணக்கில் நார்ஸிஸஸ்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முன்பு வகுப்பறைகளில் புத்தகங்களுக்கு கீழே மறைத்துவைத்த கண்ணாடியில் பார்த்து உதடு, கண், மூக்கு இவற்றையெல்லாம் மனதில் பதியவைத்துக்கொண்டவர்கள் இன்று செல்ஃபி எடுக்கும் வசதி உள்ள கைபேசியை நெஞ்சில்வைத்து உறங்குகிறார்கள். எந்த மனிதனும் நார்ஸிஸஸ் விழுந்து இறந்த தடாகத்தில் நீராடி நிறைவடைந்தவர்கள் அல்ல. ‘ நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தில் மற்ற யாரையும் நான் பார்க்கவில்லை’ எதிலும் படியும் தற்பிம்பத்தை தான் என்று நினைத்து மயங்கும் ஒவ்வொரு கணமும் நாம் நார்ஸிஸஸாக ஆகிவிடுகிறோம். தான் வடித்த சிற்பத்தின் அழகில், முழுமையில் பித்தாகி தற்கொலை செய்துகொண்ட சிற்பியும் நார்ஸிஸஸ் அன்றி பிறிதொருவன் இல்லை. கதையில் என்பதுபோல கணநேரத்தில் நாடகீயமான மரணம் எதுவும் நிகழாமலிருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய சில அம்சங்கள் ஆழமான சுயமோகத்தில் உள்ளது. தற்பிம்பத்தை பார்த்து ’அது நான்தான்’ என்று நம்மை அறியாமலேயே நாம் உணரும்நிலை தன்னறிதல் அல்ல. தற்பிம்பத்தை பார்த்து அது தன் பிம்பம்தான் என்ற கண்டடைதலிலிருந்துதான் (realisation) தன்னை அறிதல் நிகழ்கிறது. ஒன்றை அது மட்டுமாகவே பார்ப்பவர்களும் நார்ஸிஸ்டுகள்தான். நேரடியான பொருளில் (Literal reading) இலக்கியத்தை வாசிப்பவர்களும் நார்ஸிஸ்ட்டுகள்தான். வெறும் ஆடிப்பிம்பம் என்பதிலிருந்து தொடங்கி தன்னை அறிதல் நோக்கி உயர்ந்தும் படிநிலைகளில் முதல்படி நாராயணகுரு கோவில்களில் நிறுவிய ’கண்ணாடி’. கண்ணாடி பிம்பத்தில் ஒருவன் தன்னை பார்த்து, அதன் அடுத்த படியாக அது மனிதனின் பிம்பம் என்பதை உணர்ந்து, அதற்கு அடுத்த படியாக அது சாராம்சமானதோ, முழுமுடிவானதோ அல்ல நிழல்தான் என்று அறிந்து அதன்வழியாக ‘ அறியும் தன்னிலை’யை கண்டடையும் ஒரு மனிதனைத்தான் நாராயணகுரு உத்தேசித்தார். பிம்பமாக ஆவது எது? என்பதை அறியும் உயிரை (mortal). ‘நம்மை மட்டுமில்லை, நம்மால் காணப்படுவது அனைத்தையும் பிம்பமாக ஆக்குவதற்கான வாய்ப்பை கடவுள் நமக்கு அளித்திருக்கிறார்’ (ஆத்மவிலாசம்) கண்ணாடியில் தன்னை காண்பதற்கும் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. முகத்தில் ஏற்பட்ட காயத்தில் உள்ள ரத்தத்தை கண்ணாடியில் தெரியும் முகத்தில் துடைப்பதற்கும் கண்ணாடியை பார்த்து சொந்த முகத்திலிருந்து துடைப்பதற்கும் இடையேயான வேறுபாடு. நார்ஸிஸஸ் நீரில் தன்னை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு அதை கட்டியணைக்க முயன்றபோது அது தான் அல்ல, தன் நீர்ப்பிம்பம் என்று அவன் அறியவில்லை (அது நிழல், அது ஜடம் என்கிறார் நாராயணகுரு). சுயமோகத்தில் தன்னுணர்வின்மை உண்டு என்றும் அது ஆன்மாவை ஒட்டுமொத்தமாகவே அழிக்கக்கூடியது என்றும் நார்ஸிஸஸ் நமக்கு கற்றுத்தருகிறான். ‘சுயமே உருவாக்கிய தடைகளை’ இல்லாமலாக்குவது எளிதல்ல. ராமாயணத்தில் உள்ள சாயாக்ரஹணி கதை மனிதசுயம் கடக்கவேண்டிய தடை பற்றிய உருவகக்கதை. ராமாயணத்தில் சீதையைக்காண அனுமன் இந்திய பெருங்கடலை கடக்கும்போது சாயாக்ரஹணி என்ற அரக்கியிடம் அகப்படுகிறான், அவள் உயிர்களை கொல்வது அவற்றின் நிழலை கைப்பற்றுவது வழியாக. அவளிடம் அகப்பட்ட அனுமன் கொஞ்சநேரம் சஞ்சலமடைந்துவிடுகிறான். பின் தன் சுயத்தை மீட்டெடுத்து சாயாக்ரஹணி என்ற அரக்கியை அழித்துவிட்டு ராமனுக்காக தான் ஆற்ற வேண்டிய பயணத்தை அனுமன் தொடர்கிறான். இந்தியப்பெருங்கடல் நீரில் பிரதிபலித்த தன் நீர்ப்பிம்பத்தில் தன் சொந்த உடலின் கம்பீரத்திலும், அழகிலும் ஈர்க்கப்பட்டு சிந்தையற்று நின்றுவிட்ட அனுமன் தன்னை சூழ்ந்த நார்ஸிஸ சுழலில் சிக்கிக்கொண்டதன் கதையைத்தான் சாயாக்ரஹணி என்ற உருவகம் வழியாக வால்மீகி சித்தரித்திருக்கிறார். அது தான் அல்ல, தன் நிழல்தான் என்று அறிந்தபோது கைகூடிய தன்னறிதலுடன், அதிக தேஜஸுடன் அனுமன் சமுத்திரத்தை கடக்கிறான். ராமனுக்கு செய்யும் சேவையாக இலங்கை போகும் அனுமன் அழித்தது சுயமோகத்தைத்தான். நார்ஸிஸஸை வென்ற அந்த அரக்கி, அனுமனை கொஞ்ச நேரத்திற்கு குழப்பிய, சொந்த நீர்ப்பிம்பத்தின் முன் ஸ்தம்பித்து நிற்கச்செய்த அந்த அரக்கி, கண்ணாடி என்ற இந்த நீர்ப்பரப்பில் எப்போதும் இருக்கிறாள். சில்வியா பிளாத்தின் Mirror என்ற கவிதையில் தன் இளமையை கொஞ்சகொஞ்சமாக விழுங்கும் அந்த அரக்கியை தெளிவில்லாமல் என்றாலும் நம்மால் காணமுடிகிறது. தன் ஆடிப்பிம்பம் தன்னுடையதுதான் என்று எண்ணுபவர்களை அந்த அரக்கி மிகமிக எளிதாக கைப்பற்றிவிடுகிறாள். பெண் தன்னை கண்ணாடியில் பார்க்காமலிருக்கக்கூடிய தைரியத்தை அடையும்போதுதான் அவள் விடுதலை அடைகிறாள் என்று எழுத்தாளர் மாதவிக்குட்டி சுட்டிக்காட்டுவது பெண்களை இன்னும் சுவைத்து உண்ணும், கண்ணாடியில் இருக்கும் சாயாக்ரஹணி என்ற அரக்கியின் இருப்பைத்தான். ‘ நிழலை பிடித்துவைத்த இந்த அரக்கியை/ வீட்டு சுவரில் மாட்டியது ஏன்/ இப்போது எதற்காக என்றாலும் இந்த மூதேவியிடம் முகம் காட்டவேண்டும்/ வெளியே போகும்முன் முதலில் அவள் என்னை உடல்பரிசோதனை செய்து முடிக்கவேண்டும்/ கண்ணாடியில் தெரியும் முகங்களெல்லாம்/ அவள் உறிஞ்சிவிட்டதால் இரத்தம் வற்றிய முகங்கள்’ சுயமோகம் உலகம் மீதான காதலாக மாறும்போது இந்த அரக்கி பலவீனமானவளாக ஆகிவிடுகிறாள். ‘ அவனவன் சுயவிருப்பத்திற்காக செய்யும் விஷயங்கள் பிறரும் மகிழ்ச்சியடைவதாக ஆகும்போது’ அவள் இல்லாமலாகிவிடுகிறாள். இந்த பரிணாமத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய படைப்பு ஆற்றூர் ரவிவர்மாவின் ‘அர்க்கம்’ என்ற கவிதை. கவிதைசொல்லிக்கு தன் ஆடிப்பிம்பத்திலிருந்து கண்ணை விலக்க முடியவில்லை ‘ காலையில் வேலைக்கு கிளம்பும்போது எவ்வளவுமுறை கண்ணாடி பார்த்தும் நிறைவதில்லை’ கண்ணாடியில் மட்டுமல்ல நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்திலும் கவிதைசொல்லி தன்னைத்தவிர மற்ற யாரையும் பார்ப்பதில்லை. ஆனால் அது தான் அல்ல தன் நிழல் மட்டும்தான் என்றும், கண்ணாடியை விட்டு வெளியேறிவிட்டால் அது இல்லாமலாகிவிடுகிறது அதற்கென தனி இருப்பு இல்லை என்பதையும் கவிதைசொல்லி உணர்ந்துகொள்கிறான். எவ்வளவுமுறை பார்த்தாலும் தன் முகம் எப்படியிருக்கிறது என்பதை அறியமுடிவதில்லை. ஆடிபிம்பம் காட்டிய சுயத்தால் நிறைவடையாத கவிதைசொல்லி வீட்டைவிட்டு வெளியேறி, கோகர்ணத்திற்கும் கன்யாகுமரிக்கும் செல்கிறான். ஆன்மவிடுதலையை அளிக்கக்கூடிய நிலங்கள். பலரின் கொந்தளிக்கும் கேள்விகளுக்கு பதில் கிடைத்த இடம். ஆனால் அங்கு எங்குமே கவிதைசொல்லி ‘தன்னை தனக்கு காட்டவில்லை’ என்று உணர்கிறான். கீழை மரபை விடுத்து மேற்கத்திய நவீன சிந்தனையில் வழி தேடுகிறான். பீஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் செல்கிறான். பலருக்கு புதியவகையான சுயகண்டடைதலை அளித்த இடங்கள். காடு முழுக்க தேனைத்தேடி அலைந்தவன் கடைசியில் வீட்டிமுற்றத்தின் எருக்கங்செடியில் தேனை கண்டுடைவதுபோல தன் வசிப்பிடத்தில் தன் சூழலிலேயே அவன் தன் சுயத்தை கண்டடைகிறான். அப்போது அது தன்னில் மட்டும் இல்லை என்பதையும் அறிகிறான். தூரத்தில் உள்ள கடலின் நீலநீர்ப்பெருக்கும், அதன் விளிம்பில் உள்ள தொடுவான்கோடும், கீழே உள்ள நுரைக்கும் அலைவெளியும் கரையும் நான்தான். தன்னை வெல்வது, தன்னை கடப்பது என்பது தன் நிழல் மீதான, தன் பிம்பம் மீதான வெற்றிதான். தன்னை வென்றவனுக்கு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரதிபலிக்கும்தன்மையை அடைந்துவிடுகிறது. இந்த கவிதையில் அப்பட்டமான அழகு இல்லாத, யாருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வசீகரம் இல்லாத, அதனாலேயே தேன்கூடு கட்டும் தேனீக்களை ஈர்க்கக்கூடிய, சுயமாகவே மருத்துவகுணங்கள் கொண்ட எருக்கங்செடியில் கவிதைசொல்லி தன்னை கண்டடைகிறான். ’ நான் ஒரு எருக்காக நிற்கிறேன்’ ஒருவேளை மலையாளத்தில் மிக குறைவாக கண்ணாடிபார்த்த கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவாகத்தான் இருக்க வேண்டும். ஆற்றூர் ரவிவர்மாவை ஒரு தாவரமாக ஆக்கினால் அவர் எருக்குச்செடியாகத்தான் நின்றுகொண்டிருப்பார். புத்தனாக உருமாறிய சித்தார்த்தனின் வாழ்க்கையைப் பாருங்கள். சுயமோகம் கொண்டவனுக்கு நிம்மதியாக வாழ தேவையானதெல்லாம் சித்தார்த்த இளவரசனுக்காக மாளிகையில் அவன் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். அரசர்களின் வழக்கமான திரைக்கதையிலிருந்து அவன் திசைதிரும்பிவிடாமலிருக்கத் தேவையான எல்லாம். தன் அழகை புகழ சுவரெங்கும் கண்ணாடிகள்; தன் கவர்ச்சியை பிரதிபலிக்க நிறைய அழகிகள்; தன் கனிவை,அன்பை காட்ட அழகிய நல்லியல்புகள் கொண்ட மனைவி; தன் தகுதிகளை வாழ்த்திப்பாடும் நிறைய துதிபாடிகள், அவனின் சுவைவுணர்வை கொண்ட பல்வேறுவகையான உணவுகள், தன் அதிகாரத்தை நினைவுறுத்த பணியாட்கள், காட்டிலிருக்கும் உணர்வை தனக்காக அளித்த மலர்வனங்கள் அனைத்தும் அவனுக்கு இருந்தது… அரண்மனையில் தன்னை மகிழ்விக்கும், தன்னை துதிக்கும் இந்த கண்ணாடிகளிலிருந்து வேறுபட்ட ஒரு கண்ணாடி வெளியே இருந்தது. தன் இருபத்தி யொன்பதாம் வயதில் சித்தார்த்தன் அந்த கண்ணாடி முன் நிற்கிறான். அதில் சித்தார்த்தன் ஆழமான நிலைகுலைவை ஏற்படுத்தக்கூடிய காட்சிகளை பார்க்கிறான். முதுமையை, நோயை, வறுமையை, மரணத்தை. ஜரா-நரை பாதித்த அந்த மனிதனில் தன்னை மட்டுமல்ல தான் உட்பட உள்ள, இனி பிறக்கப்போகும் ஒவ்வொரு மனிதனையும் காத்திருக்கும் ஒன்றை ஆடிப்பிம்பமாக சித்தார்த்தன் பார்க்கிறான். நோயாளியின் நசிந்த உடல் யாரும் எப்போது வேண்டுமானாலும் ஆகச் சாத்தியமான நிலை ஒன்றை அவனுக்கு சுட்டிக்காட்டியது. இறந்தவிட்ட மனித உடல் ஒவ்வொரு மனிதனையும் காத்திருக்கும், யாராலும் தவிர்க்கமுடியாத நிலையை அறிவுறுத்தியது. அவையெல்லாவற்றை பிரதிபலித்த கண்ணாடியில் மிக மிக நிலைகுலைந்த ஒருவனின் பிம்பத்தை புத்தனாக ஆகிவிட்ட சித்தார்த்தன் காண்கிறான். அரண்மனையில் கண்ணாடியில் மாயை காட்டிக்கொண்டிருந்த வசீகரிமான ஆடிப்பிம்பம் சித்தார்த்தனுக்கு உவப்பில்லாததாகவும், பொருத்தமற்றதாகவும் ஆகிவிட்டது. மகிழ்பவர்கள், திருஷ்ணையில்(விழைவுகளில்) திளைத்திருப்பவர்கள் சுயமோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமான நிலையின்மை கொண்ட , அனைத்திலும் அழிவின் நிழல் கொண்ட உலகத்தில், அறியாமை மட்டும்தான் மனிதனின் நிம்மதிக்கு காரணம். மனிதப்பிரக்ஞையில் மரணமோ நிச்சயமின்மையோ அழிவோ உட்படவில்லை என்றும் அதனால்தான் மனிதன் எந்த யதார்த்தமும் இல்லாத மகிழ்ச்சியில் வாழ்கிறான் என்பதையும் சித்தார்த்தன் அறிகிறான். எந்த ஒன்றும் அது மட்டுமே அல்ல என்றும் அதன் இருப்பு அதை மட்டுமே சார்ந்தது இல்லை என்பதையும் சித்தார்த்தன் அறிகிறான். சித்தார்த்தன் அரண்மனையிலிருந்து இரவில் வெளியேறி பலவகையான தடைகளை தாண்டி புத்தனில் சென்றுசேர்கிறான். புனுயேலின்(Luis Bunuel) இயக்கிய மில்கி வே(Milky way) என்ற திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியால் உந்தப்பட்டு பால் சக்கரியா ‘ கண்ணாடி பார்க்கும்வரை’ என்ற பெயரில் சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். கிருஸ்து கண்ணாடியை எதிர்கொள்ளும் காட்சி. அந்த காட்சியின் தரிசனரீதியான ஆழத்திற்கு சக்கரியா பொருத்தமான கதைவடிவத்தை தந்திருக்கிறார். கிருஸ்துவிற்கு நன்றாக பொருந்தக்கூடிய வடிவம் (அவரை வேறு ஒரு வடிவில் நாம் கற்பனை செய்வதில்லை) நீளமான முடியும் தாடியும் மீசையும்தான். அதை வெட்டுவதற்காக கிருஸ்து நாவிதரின் கடைக்கு செல்கிறார். நாவிதர் அங்கே புதிதாக மாட்டப்பட்ட கண்ணாடியை பார்க்க சொல்கிறார். அதுவரை கிருஸ்து தன்னை எதிர்கொண்டதில்லை. அவர் சஞ்சலமடைகிறார். ‘ வேண்டாம் வேண்டாம்’ கிருஸ்து மிகமெல்லிய ஒலியில் கண்ணாடியிடம் சொல்கிறார். ‘ நீ என்னை எனக்கு காட்டவேண்டாம். அதில் நான் எதைப்பார்க்கப்போகிறேன் என்பதை இப்போது என்னால் ஊகிக்கமுடியவில்லை; எனக்கு பயமாக இருக்கிறது. கண்ணாடி மணிமுழங்குவது போன்ற ஒலியில் “ வா, கிருஸ்து வா… உனக்கு தெரியாதா? நீ எனக்குள்ளே இருக்கிறாய்; இரண்டே இரண்டு அடி முன்னால் வந்து கொஞ்சம் குனிந்து பார்த்தால்போதும், நாம் மூவரும் ஒன்றுதான் ‘. கிருஸ்து சொன்னார்.’ இல்லை இல்லை. நான் பார்க்கவிழைவதை நீ காட்டமுடியுமா? இல்லை, இல்லை’ தன் நீண்ட அங்கியில் வியர்வை வழிவதை உணர்ந்தார். கடும்புயலில் சிக்கியதுபோல தள்ளாடினார். அவர் எதை அஞ்சினார்? தன்னை தன் புறவயமான வடிவத்தில் பார்ப்பதையா? தன் தெய்வாம்சத்தை இழந்துவிடுவோம் என்று பயந்தாரா? தன்னை சூழ்ந்திருக்கும் ரகசியத்தன்மையை சோதித்துப்பார்ப்பதில் உள்ள அச்சமா? மனிதர்களை சரியான திசையில் செலுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தெய்வகுமாரன் தனித்தன்மையை, தனிமையை அஞ்சினாரா? இன்று நாம் காணும் கிருஸ்துவின் மழிக்கப்படாத முகம் (கண்ணாடியையே பார்த்திராத முகம்) அவரின் ஆரம்பகால ஓவியங்களில், சிற்பங்களில், மொழியில் வெளிப்படவில்லை (பைபிளில் கிருஸ்துவின் உருவம் சார்ந்த விவரணைகளே இல்லை. கிருஸ்துவின் ஆரம்பகட்ட சிற்பங்கள் ஒன்றில் christ with St.Paul (389 AD) மழிக்கப்பட்ட முகம்கொண்ட கிருஸ்துதான் இருக்கிறார். புனுயேலும் சக்கரியாவும் சித்தரித்திருக்கும் கிருஸ்துவின் சஞ்சலத்தைவிட அவரை தாடி மீசையுடன் சித்தரிக்கவேண்டுமா கூடாதா என்ற குழப்பத்தில் அவரை வரைந்த ஓவியர்கள் சஞ்சலம் அடைந்திருப்பார்கள். மழித்த முகம் கிருஸ்துவிற்கு பொருந்தக்கூடியதா? மழித்தலில் ஒரு பிரத்யேக காலம் இருக்கிறது. சவரக்கத்தி உண்டு. இன்றைய நம்முடைய வழக்கப்படி முன்னால் ஒரு கண்ணாடி உண்டு. பரமபிதாவின் மகன், எல்லாகாலத்திற்குமான மகன், அவருக்கு மழித்த முகம் பொருத்தமானதா? இந்த ஒரு பதற்றத்தைதான் சக்கரியா தன் சிறுகதை வழியாக நமக்கு பகிர்கிறார். கிருஸ்துவின் உருவம் பல நூற்றாண்டுகள் அழிவின்மையின் குறியீடாக நிலைநிற்க தாடி மீசை கொண்ட இயற்கையான தோற்றம் போதும் என சில கலைஞர்கள் முடிவெடுக்கிறார்கள். பின்னர் அதை யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனாலும் கண்ணாடி முன்னால் புயலில் சிக்கித்தவித்ததுபோல தடுமாறிய கிருஸ்துவை முதன்முதலாக கற்பனைசெய்த கலைஞன் எத்தனை இரவுகள் தூக்கமிழந்திருப்பான்? கடைசியில் அவனுடைய கிருஸ்து எந்த சஞ்சலமும் இல்லாமல் கண்ணாடியை நிராகரிக்கிறார். ——————————————————————————————————————– கேரளம் முழுக்க நாராயணகுரு சாதிமத பேதமில்லாமல் அனைவரும் வழிபடுவதற்கான கோவில்களை நிறுவினார். ஒவ்வொரு கோவிலிலும் கண்ணாடியையும் பிரதிஷ்டை செய்தார். எங்கு நிறைந்திருக்கும் கடவுளுக்கு வருணாசிரம பிரிவினை இல்லை, அவர் எல்லா மனிதர்களின் அகத்தில் இருக்கிறார். கடவுளை வழிபட வருபவர்கள் கண்ணாடியில் தன் ஆடிப்பிம்பத்தை காண்பதுவழியாக தன்னையும், தன்னில் உள்ள கடவுளையும் உணர்ந்துகொள்ள முடியும் என்பதால்தான் கண்ணாடியை பிரதிஷ்டை செய்தேன் என்கிறார் நாராயணகுரு. ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு. https://akazhonline.com/?p=71851 point