Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    39355
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3127
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88834
    Posts
  4. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    7613
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/22/24 in Posts

  1. மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி. மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார். மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1379132
  2. நண்பர்களை உருவாக்குவதற்கான போர்… அகரன் வீட்டின் பின்புறத்தில் மூங்கில் தடிகளை வெட்டி வீட்டுத்தோட்டத்திற்கு வேலி போட்டபடி இருந்தேன். மகள் என்னுடன் நிற்பதற்கு விரும்பினாள். அப்படி நிற்பதென்றால் நான் செய்யும் வேலையை நிறுத்தவேண்டும். வீட்டில் உள்ள சேவல் தன்னை கொத்திவிடும் என்று கத்துவாள். ஒரு சேவலுக்கு ஆறு பேடுகள் அவசியம் என்று எமக்கு கோழிகளை விற்ற பிரெஞ்சுப்பெண் சொன்னாள். இளம்பருவ சேவல் வளர்ந்து வர்ணங்களை வளர விட்டதோடு சண்டித்தனத்தை எங்களிடமும் காட்ட ஆரம்பித்திருந்தது. மகளைக்கண்டால் திரத்த ஆரம்பித்துவிடும். மகள் பெரிய தடியை வைத்திருந்தாலும் அதை தாக்கப் பயன்படுத்த மாட்டாள் என்பதை சேவல் எப்படியோ அறிந்து விட்டது. மகளுக்கு எப்போதும் ‘நீ பயம் கொள்வதை அறிந்துதான் அது உன்னை கொத்த வருகிறது. எதிர்த்து நில் ஓடிவிடும்’ என்பேன். அவள் கண்களை விரித்து கேட்பாள். ஆனால் ஒருபோதும் அதை எதிர்க்க மாட்டாள். நான் வேலையை விட்டுவிட்டு அருகே இருந்த கற்குந்தில் இருந்து அவளிடம் பேச ஆரம்பித்தேன். ‘இதோ உன்னை தாக்க வந்தால் நீ அடிக்கலாம். எதற்காக அஞ்சுகிறாய் ?’ என்றேன். ‘அப்பா, சேவலை நான் தொடர்ந்தும் எதிரியாக்க விரும்பவில்லை. நண்பனாக்க விரும்புகிறேன்’ என்று பிரெஞ்சு மொழியில் கூறினாள். என் சரீரம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. சூரியன் எங்களருகே விழுந்துகொண்டிருந்தது. பிளே வயல்களின் வருடல் காற்று வந்துகொண்டிருந்தது. என் மடியில் தடியோடு மகள் இருந்தாள். என் மூளை காற்றால் பிளக்கப்பட்டு பறப்பது போல இருந்தது. *** தமிழின் நவீன இலக்கியத்தில் போர் பற்றிய பதிவுகள் பலவும் இருக்கின்றன. எண்ணமுடியா நட்சத்திரம் போல் கவிதைகள் மற்றும் கட்டுரைகள். போரியல் நாவல் என்றால் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கப்பால்’ அதன் சிறிய பகுதியை ஆரம்பித்து வைத்தது. ஹெமிங்வே யின் படைப்புகளில் விருப்பும் பாதிப்பும் உடைய ப.சிங்காரம் தொடர்ந்து எழுதாமல் விட்டது நமக்கு இழப்பு. அவரைத் தொடர்ந்து ஈழம் 35 ஆண்டுகள் யுத்தத்தில் நனைந்தது. இருந்தும் அங்கிருந்து போரியல் நாவல்கள் மிகக்குறைவாகவே வெளியாகி உள்ளன. அசல் போரை பதிவு செய்யும் நாவல்களாக 1985 வெளியான ‘விடியலுக்கு முந்திய மரணங்கள்’ , 1992 இல் எழுதப்பட்ட ‘போருலா’. , தூயவனின் ‘போரும் மருத்துவமும்’ , குணா கவியழகனின் ‘நஞ்சுண்ட காடு’ , ‘அப்பால் ஒரு நிலம்’ மற்றும் முதலாம் உலக யுத்தம் பற்றிய ச.பாலமுருகனின் ‘டைகிறிஸ்’ . சுகாஸ் என்ற த. பாலகணேசனால் கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் பற்றிய விடிவுக்கு முந்திய மரணங்கள் முதலாவது போர்பற்றிய பதிவு. இதை எழுதும்போது பாலகணேசனுக்கு வயது 21. 21/11/1992 இல் பலாலி இராணுவமுகாம் தாக்குதலில் 57 பேர் சாவடைந்தனர். அதில் ‘லியோ’ என்ற வீரனும் சாவடைகிறான். அப்போது அவனுக்கு இருபது வயது. அவனது நெஞ்சுப் பையில் ஒரு கையெழுத்துப்பிரதி இருக்கிறது. அதை எடுத்தவர்கள் வாசித்ததும் நெருப்பில் விழுந்த ஈயத்துண்டுபோல் ஆகிவிடுகிறார்கள். மாங்குளத்தில் இருந்த இராணுவ முகாம் தாக்குதல் பற்றி தன் அனுபவங்களை ஒரு நாவலாக எழுதி பையில் வைத்திருந்தான் லியோ. அந்த நாவலின் முடிவில் ‘மாங்குள இராணுவ முகாம் தகர்ப்பு நினைவுகள் இத்தோடு முடிவுறுகிற போதும் அடுத்து சிலாவத்துறை நினைவுகள் என் நெஞ்சில் பாயத்தொடங்குகின்றன..’ என்று முடிக்கின்றான். அவன் சிலாவத்துறை பற்றி எழுத முதல் மரணமடைந்து விட்டான். லியோ எழுத்து உலகுக்கு அவன் தனது பெயரை ‘மலரவன்’ என்று பதிந்திருந்தான். அவனது தந்தை ஒரு மருத்துவர். அத்தோடு மூத்த அண்ணன் வைத்திய கலாநிதி. போரில் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அண்ணனுக்கு தம்பியின் உடல் சென்றடைகிறது. அதுதான் அண்ணனின் கண்ணீரும் தம்பியின் இரத்தமும் கலந்த இடம். மலரவனின் அழகியலான மொழி, சமூகப்பார்வை, மரங்களுக்காக வடிக்கும் கண்ணீர், காடுகளில் விழி தூங்காதிருந்து வானத்தையும் , நட்சத்திரங்களையும் கண்ணிமைக்குள் அடைத்துப்பார்க்கும் கவிதைப் பார்வை போருலாவை இன்றும் படிக்கும்போது ஆச்சரியமாகவே உள்ளது. அவன் இறந்தாலும் அவனது படைப்பு மனம் ‘போர் உலாவில்’ பேசிக்கொண்டே இருக்கிறது. இந்த சிறிய வயதில் எப்படி இத்தனை அவதாரம் கொள்ள முடிந்தது என்று ஏங்குகிறது மனம். அவனை பார்க்க முடியாது. அவன் எழுதிவிட்டு செத்துப்போனவன். தான் எழுதியது நூலாகும் என்றுகூட அறியாத போராளி. 1990 கார்த்திகை 9ம் திகதி மாங்குளம் இராணுவ முகாமை தாக்குவதற்கு உழவு இயந்திரத்தில் மணலாற்றில் இருந்து புறப்படுகிறார்கள். களமுனையை சென்றடைய காடுகளூடாக நீண்ட பயணம். காடுகளுக்குள் மரங்களை வெட்டி குற்றிகளைப்போட்டு அதன் இடைவெளிகளில் மண்ணை நிரப்பி தேவையான இடங்களில் பாதை அமைத்து பயணிக்கிறார்கள். ‘பால்போல தெறித்த வெண்ணிலவை முகில்கள் வெட்டியோடின. விரைவில் அவற்றை கலைத்துவிட்டு நிலவு வெளியே வந்து சிரித்தது’ என்ற வரி மலரவனின் அழகியலுடைய குறியீட்டு மொழியின் வெளிச்சம். ‘எவ்வளவு நல்ல காடு, தாய் மாதிரி இவ்வளவு காலமும் எங்களை காத்தது இதுதானே, இனி எப்ப வரப்போறம் ? ஆவலை அடக்க முடியாமல் கைகளை உயர்த்தி ‘டாட்டா’ காட்டினேன்.’ இரவு வேளையில் போராளிகள் நகர்வை அறிந்து உலங்குவானூர்தி தாக்கத்தொடங்குகிறது. களமுனையை அடைய முதலே போர் வந்து சிவப்புப் பழங்களை அனுப்பி உயிர் கேட்கிறது. அத்தடையை நீக்கிக் கடந்தால் அலம்பில் ஊர் எங்கும் தென்னந்தோப்புகள். ‘பெரிய குடை போன்ற தென்னைகள் சுமக்க முடியாமல் தேங்காய்களைச் சுமந்த வண்ணம் காற்றில் தலைவிரிகோலமாக தள்ளாடுவது பார்க்க பயமாக இருந்தது’ இரவுப் பயணத்தில் தடுமாறிய உழவு இயந்திரம் பிரண்ட போது பெட்டிக்குள் நசிந்து போன வசந்தனின் ஒரு கையும் காலும் மோசமாக பாதிக்கப்படுகிறது. அருகே இருந்த கிராமத்து வீட்டில் அவசர வைத்தியம் நடகக்கிறது அங்கிருந்த இளம் பெண்ணைப் பார்த்து ‘ அக்கா நீங்கள் சரியா எங்கட மூத்தக்கா வித்தி மாரி’ என்கிறான். களப்படுக்கையில் குருதியில் தோய்ந்திருக்கும் தோழனைப்பார்த்து ‘தேங்காய்‌ நெய்விளக்கு உருகி உருகி அழுதது.’ என்ற எழுத்தின் நுண்மை மனதின் அறையெங்கும் புகுந்துவிடக் கூடியது. முள்ளியவளை கடந்து முறிப்பு குளக்கட்டில் ஓய்வெடுக்கும் போது அவர்களை சூழ்ந்துகொண்ட மாணவர்கள், ‘நீங்கள் எத்தனை ஆமியை சுட்டனிங்கள் ?’ ‘ஏன் சுடவேணும் அவங்கள் பாவமல்லோ?’ ‘அப்ப.. எங்கட மாமாவை பெரியப்பாவை ஏன் சுட்டவங்கள் ?’ களமுனையில் பசியோடும் , தூக்கம் இன்றிய கண்களோடும் இருக்கும் போராளிகளை கண்ட தாய்மார் தங்கள் வீடுகளில் இருந்து உணவுடன் படையெடுத்த போது ‘அருவி பாய்கிறதா ? அன்பு பாய்கிறதா ? தெரியவில்லை’ என்று நெகிழ்ந்த சொல்லில் மலரவன் மொழியை மலர வைக்கிறான். மாங்குளம் இராணுவ முகாமை மறைந்திருந்து பார்வையிடுவதும் , அதன் இராணுவத்திட்டமிடல்களும் எந்த நேரத்திலும் இராணுவச் சூட்டுக்கு ஆளாகும் நிலையில் நடைபெறுகிறது. மயில் ஒன்று தூரத்தே அகவியது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னத்தொடங்கின. மாரி கால மழையில் உப்பிக்கிடந்த வெள்ளைச்சுவர்களில் சிறிது சிறிதாய் பொத்தான்கள் இடப்பட்டிருந்தன. கூரையூடாக வானத்தின் நிர்வாணம் தெளிவாய்த்தெரிந்தது.’ முப்பத்தி நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் மாங்குளத்தின் படத்தை மலரவனின் எழுத்து மனதில் வரைகிறது. அவர்கள் தாக்குதலுக்கு நேரடி உறுதிப்படுத்தல்களை மேற்கொள்ள 40 மீற்றரை கடக்க 40 மைல் சுற்றிவரவேண்டிஇருந்தது. தோழர்களின் இழப்போடும் கரும்புலி வீரன் போர்க்கின் சக்ககைவண்டித்தாக்குதலோடும் மாங்குளம் போராளிகளிடம் வீழ்கிறது. விமானங்கள் சகடை, புக்காரா, பைற்ரர் போராளிகளை குண்டுகளால் சல்லடை போட்டபோதும் மனதில் இருந்த அவர்களின் பலம் இயந்திரங்களை வென்று நிலத்தை மீட்கிறது. ‘மனிதன் உணவுக்காக மனிதனை கொல்லவில்லை. ஆக்கிரமிப்புக்காக கொல்கிறான்’ என்ற மலரவனின் ஏக்கம் மனித மூளையின் இருட்டான முரண்பாட்டுச்சிக்கலை கேள்வி கேட்கிறது. நாவலைப் படிக்கிறபோது சக போராளிகளின் அனுபவங்களும், அவர்களை ஆயுதமேந்தத்தூண்டிய கதைகளும், வேறுபட்ட மன உணர்வுகளோடு ஒன்றுசேர்ந்து ஓர்மமாகி நிற்கும் இளைஞர்களும் சுதந்திரத்திற்காக தாம் புன்னகையோடு தோளில் சுமந்தபாரத்தை இனிய மொழியில் பதிவு செய்கிறது. வாசகனை தாக்குதல் நடைபெறும் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது. போர் எத்தனை கொடியது ? எத்தனை மானுட வலி நிறைந்தது ? மனிதனை மனிதன் கொல்லும் அபந்தத்தின் சந்தியில் நிறுத்தி சிந்திக்கத் செய்கிறது. ஓர் போராளி இறந்த செய்தியை அவன்வீட்டுக்குச் சென்று தாயிடம் மரணச் செய்தியை சொல்லும் போராளிகளின் மனதையும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் அடிக்கடி மனம் போர்க் காலங்களில் சிந்திப்பதுண்டு. மலரவனின் வீட்டுக்கு அச்சத்தோடு சென்ற போராளிக்கு வேறு விதமான அனுபவம் கிட்டுகிறது. அழுது கொண்டிருந்த தாய் போராளிகளை கண்டாலும் அழுகையை நிறுத்திவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்துவந்து கொடுக்கிறார். அது வங்கிக்கணக்கு. மலரவன் பிறந்தபோது தந்தை அவன் பெயரில் இட்ட பணம் லச்சங்களாக பெருகி அதில் இருந்தது‌ என்று பின்னுரையில் சு.ப தமிழ்ச்செல்வன் பதிவு செய்கிறார். என்‌ மனம் மலரவனை‌ இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய பாரத்தை புன்னகையோடு சுமந்திருக்கிறான் ? அத்தனை மலர்களின் வாழ்வும் அர்த்தமற்றதா ? என்று அங்கலாய்த்தபடி‌இருந்தது. *** மகள்‌ ‘சேவல் வருகிறது’ என்று என்மீது தொங்கி ஏறினாள். அவள்‌ என்னிடம்‌ ‘சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை’ என்ற சொல் கல் வீழ்ந்த குளமாக வட்டங்களை உருவாக்கியது. ‘மகளே, உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்‌ இதை நீ எங்கே‌ கற்றுக்கொண்டாய் என்றேன்?’ தமிழிலும் பிரெஞ்சிலுமாக அவள் இப்படிச்சொன்னாள், ‘அப்பா, என் பள்ளியில் என்னை செயிம் , மக்சிம் , மரியா ஆகியோர் விளையாட்டுக்கு சேர்ப்பதில்லை. நான் போனால் விரும்பமாட்டார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் நான்‌ இருந்தால் எழுந்து சென்றுவிடுவார்கள். ‘ ‘ஓ..என் செல்லமே நீ ஏன் மடம் லுனாவிடம் சொல்லவில்லை ?’ ‘இல்லை அப்பா. அப்படி சொன்னால் மடம் லுனா அவர்களை புனி செய்தால் அவர்கள் மேலும் எனக்கு எதிரி ஆகிவிடுவார்கள்’ ‘அப்படி என்றால் உன்னோடு‌ யாரும் விளையாடமாரட்டார்களா ?’ ‘இல்லை. மற்றவர்கள் அவர்களோடு விளையாடுவதால் என்னை சேர்க்க மாட்டார்கள். ஆனால் நான் இப்போது தனியே ‌விளையாடுவேன். ஒருநாள் அவர்கள் எனக்கு அமி ஆவார்கள். அப்போது நான் சேர்ந்து விளையாடுவேன். ‘உனக்கு வருத்தமாக இல்லையா ?’ ‘இல்லை. நான்தானே தனியே விளையாடப்பழகிவிட்டேன். அதனால்தான் சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை அப்பா. எனக்கு நண்பர்கள் வேண்டும்’ என்றாள். ௦௦௦ அகரன் பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார். https://akazhonline.com/?p=7333
  3. “போர் உலா” இதுவரை படிக்காதவர்களுக்கு: https://noolaham.net/project/729/72885/72885.pdf
  4. கடைஞ்செடுத்தா ***. மீடியாவை நேரடியாகச் சந்திக்க வக்கில்லை. அதுக்குள்ளை வந்திட்டார் தானும் ஒரு ஆள் எண்டு. இந்தியாவின் இங்லிஷ் தெரியாத ஒரேயொரு பிரதமர் என்ற பெருமை வேறு! இந்த *** பரமாத்மா அனுப்பினாரெண்டால் பாருங்கவன் பரமாத்மாவின் நிலைமையை!
  5. தமிழர்களுக்குத் தனிநாடு உருவாவதை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இன்னும் சொல்வதானால், சமஷ்ட்டி முறையிலான தீர்வையோ அல்லது இந்திய மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரத்தினை ஒத்த தீர்வையோ ரஜீவ் காந்தி தமிழர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. இதனை நேரடியாகவே போராளிகள் தலைவர்களான பிரபாகரன், சிறீ, பத்மநாபா மற்றும் பாலக்குமார் ஆகியோரிடம் 1985 ஆம் ஆண்டு ரஜீவ் தெரிவித்திருந்தார். மேலும், ஜெயாரினால் 1984 ஆம் ஆண்டு மார்கழியில் நடத்தி முடிக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபையினையே, சற்றுத் திருத்தங்களுடன் அதிகாரப் பரவலாக்க அலகாக ஏற்றுக்கொள்ள ரஜீவ் சம்மதித்தார். . தனது புகழ்ச்சிக்காகவும், இந்தியாவை பிராந்திய வல்லரசு எனும் தரத்திற்கு உயர்த்துவதற்காகவும் ரஜீவினால் நடத்தப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கின்றதோ இல்லையோ, ஆனால் இந்தியா தலைமையில் பேச்சுக்கள் நடந்தன என்று சரித்திரம் எழுதப்படுவது ரஜீவிற்கு முக்கியமானதாக இருந்தது. தமிழருக்கு ஏதாவது கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவிற்குக் கரிசணை இருந்தது உண்மை. ஆனால், அது தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யவேண்டுமா என்பதில் இந்தியாவிற்கு உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை. 1987 இல் இந்திய அமைதிப்படை வந்ததே ஜெயாரின் வேண்டுகோளினால் எனும்போது, அது தமிழர்களுக்குச் சார்பாக இயங்கும் என்று எதிர்பார்த்தது எமது மடமை. 2015 அல்லது 2016 ஆக இருக்கலாம், அவுஸ்த்திரேலியாவின் பேர்த்த் நகரில் இந்தியாவின் முன்னாள் புலநாய்வுத்துறையின் இயக்குநரும் இன்னும் சில முக்கியஸ்த்தர்களும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்தார்கள். இறுதி யுத்தத்தில் புலிகளை இந்தியா அழிக்க முடிவெடுத்ததன் நோக்கம் அனைவரும் எண்ணியிருந்த ரஜீவின் கொலையினைக் காட்டிலும், 1987 இல் இந்தியப்படையினை புலிகள் எதிர்க்க எடுத்த முடிவுதான் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. பிராந்திய வல்லரசும், உலகின் ஐந்தாவது பெரிய இராணுவத்தைக் கொண்டதுமான இந்தியாவை சிறிய ஆயுத அமைப்பான புலிகள் இயக்கம் எதிர்த்துப் போரிட முடிவெடுத்தமை இந்தியாவைப் பொறுத்தவரை பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. 1991 இல் ரஜீவ் கொல்லப்பட்டாலென்ன, உயிர் தப்பியிருந்தாலென்ன, இந்தியா புலிகளைப் பழிவாங்க 1987 இலேயே முடிவெடுத்து விட்டது என்று நினைக்கிறேன். 2005 இல் இந்திய காங்கிரஸின் தலைவியாக சோனியா வந்தமையும், இலங்கையில் மகிந்த ஆட்சிக்கு வந்தமையும் இரு நாடுகளுக்கும் சாதகமான சூழ்நிலையினை உருவாக்கிக் கொடுக்க, இந்தியா தனது சபதத்தை நிறைவேற்றிக்கொண்டது.
  6. பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்கும் அறிவிப்பு ஒன்றினை நோர்வே முன்னெடுக்க உள்ளது. இதனை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் குறிப்பாக ஸ்பெயின் அயர்லாந்து போன்ற நாடுகளும் ஆதரிப்பதாக அறிவிக்க உள்ளன. இஸ்ரெயில் தனது கண்டனத்தை எக்ஸ் இல் தெரிவித்துள்ளது. பிரெஞ்சுச் செய்தி மூலம் : https://www.ouest-france.fr/monde/palestine/guerre-israel-hamas-plusieurs-pays-europeens-vont-reconnaitre-lexistence-dun-etat-palestinien-bd808140-17fc-11ef-89e1-9d0ea397ae43
  7. 42 இல் இருந்து 52 வரைக்கான கேள்விகளுக்கு பதிலைக் காணோம் 🤔
  8. சில பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள். பிளே வயல்களின் = கோதுமை வயல்களின் அவர்களை புனி செய்தால் = அவர்களைத் தண்டித்தால் எனக்கு அமி ஆவார்கள் = எனக்கு நண்பர் ஆவார்கள் கதை எழுதியுள்ள விதம் மொழிபெயர்ப்பு இல்லாமலே புரியக்கூடியதாக உள்ளது என்று நினைக்கிறேன்.
  9. மோடி ஐயா இன்னும் மணிப்பூர் போகவில்லை........ அது சம்பந்தமாக ஒரு பத்திரிகை மாநாடு கூட இன்னும் நடத்தவில்லை. இவரின் தீவிர முஸ்லிம் எதிர் நிலைப்பாட்டால் தான், இலங்கையிலிருந்தே நான்கு பேர்கள் அங்கு போய் பிடிபட்டு இருக்கின்றார்கள் போல. இந்த வாரம் ஒடிசாவில் ஒரு மேடைப் பேச்சில் ஒடிசாவையும், தமிழ்நாட்டையும் கொழுவியிருக்கின்றார். குஜராத் கலவரத்தில் இருந்து ஆரம்பித்தவர், அப்படியே ஒரே ஏறு முகம் தான்.... இவரால் தெற்குமே, அமைதியில், தேய்ந்து விடும் போல கிடக்குது.
  10. "மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!" "கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து உயங்கினை, மடந்தை!’ என்றி-தோழி!- அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?" [நற்றிணை 174] ஆண்பறவை ஒன்று தன் பெண் பறவையை கூவி அழைக்கின்றது. அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும் படி முழக்க மிடுகிறது. அப்படியான கோடைக் காற்று வீசுகின்ற கடினமான வீதியால் சென்ற உன் காதலர் மீண்டு வந்து உன்னை கட்டிப் பிடித்து இனிதாக நீங்களிருவரும் ஓரிடத்தே ஒன்றாக பிரிக்க முடியாதவாறு இருந்தீர்கள். ஏன் இப்ப நீ பெரிதும் வருந்துகின்றாய்? என தோழி கேட்டாள். அதற்கு அவள் உண்மையை அறியாதவர்க்கு அத்தன்மை யாகவே தான் காணப்படும்; என் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கோட்பாட்டை யுடையனாயிருந்து இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையினிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை கொடுத்து விட்டான், இங்ஙனம் வேறு ஒருவளிடம் அன்பு வைத்தவனுக்கு என்மேல் எப்படி அன்பு, கனிவு தோன்றும்?; அன்பு இல்லாமல் காமத்தை தணிக்க என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் நான் வேறு வழி இன்றி அவனைத் தழுவிக் கொள்வதனாலும் என்ன பயன்? இது காதல் கனிவு இல்லாத புணர்ச்சி அல்லவா? எப்படி அவனை நான் உண்மையாக காதலிக்க முடியும்? நான் மனைவி மட்டுமே .. காதலி அல்ல .. என்கிறாள். அப்படி என்றால், யாரை, எப்படிப் பட்ட வரை, அவள் உண்மையாக காதலிக்க முடியும் என்கிறாள்? அதற்கும் சங்க பாடல், அகநானூறு விடை கூறுகிறது. இப்பாடல்கள் எல்லாம் கி.மு. காலத்துப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது. இனி அகநானூறு 268 பார்ப்போம். "அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய காமம் கலந்த காதல் உண்டுஎனின், நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; " இங்கு தலைவி தோழியை பார்த்து சொல்கிறாள்: "தோழி! நீ அறியாமல் பேசுகிறாய். யானையும் புலியும் சண்டையிட்டுக் கொண்ட களத்தில் ஒடும் இரத்தம் புலால் நாற்றம் ஆடிக்கும். அங்குப் பூக்கும் வேங்கை (Pterocarpus marsupium), குளவி (Patchouli) ஆகிய பூக்கள் அந்தப் புலால் நாற்றத்தைப் போக்கும். அப்படிப் பட்ட மலை நாட்டின் தலைவன் அவன். அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு ‘காமம் கலந்த காதல்’ என்றால் மிகவும் நல்லது. அதனை நீ தேடித் தருவ தென்றால் அவனிடம் செல்லும் படிக் கூறு. "வெறும் காமம் என்றால், தயவு செய்து வேண்டாம் என்கிறாள். அதாவது, காதல் மிகுந்த காமக் கூட்டம் ( புணர்ச்சி ) உளதாயின் அது மிக நன்றாகும் என்கிறாள். இன்னும் ஒரு தலைவி, அகநானூறு 332 இல், திருமணத்திற்குப் பின்னர் தோழியிடம் கூறுகிறாள் : "நின் புரை தக்க சாயலன் என, நீ அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் வண்டு இடைப் படாஅ முயக்கமும், தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! " தோழி! “நாடன் [மன்னன், தலைவன்] உன் புரைமைக்குத் [உயர்ச்சி, பெருமை] தக்க சாயலை உடையவன்” என்று நான் அடங்குமாறு நீ அன்போடு கூறிய இன்சொல் உண்மையாகவே வாய்க்கப் பெற்றுள்ளேன். விரும்பியவர்க்கு அமிழ்தம் கிடைத்தது போல, திருமண மாலையுடன் கூடிய மார்பினை வண்டொலியும் இடையில் புகமுடியாத படி அவன் என்னைத் தழுவினான். களவுக் காலத்தில் முதல்நாள் துய்த்த இன்பம் போல இன்றும் சிறந்து நிற்கின்றன." என்கிறாள். மற்றும் ஒரு சங்கத் தலைவி, அகநானூறு 361 இல், "வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும் கவவுப் புலந்து உறையும் கழிபெரும் காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் ...", அதாவது, "நெஞ்சே ! தலைவியின் மார்பில் தோய்ந்து முயங்கும் [தழுவுதல்; புணர்தல்] முயக்கத்தினை ஒரு நூல் இடையே தடுப்பினும் அதனை வெறுத்து உறையும் மிகப் பெரிய காதலோடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் [அனுபவம்] காட்டிலும் சிறந்தது ஒன்று இல்லை என்று அடித்து சொல்கிறாள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. ராஜீவ் படுகொலை நிகழ்ந்து இருக்காவிடினும், ராஜீவ் கொலைப் படையினரை அனுப்பி இருக்காவிடினும் கூட, இந்தியா ஈழப் போராட்டத்தை நசுக்கித் தான் இருக்கும். ராஜீவ் கொலை ஒரு சாட்டாக, வாப்பாக போய்விட்டது.
  12. நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை! பிரதமர் மோடி பரபரப்பு தகவல்… MAY 22, 2024 டெல்லி: என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான், ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என பிரதமர் மோடி கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 18வது மக்களவையை அமைப்பதற்காக நாடு முழுவதும் தேர்தல் பிரசார பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே நடைபெற உள்ளது. இதையடுத்து, ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்கிடையில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் கடுமையாக போராடி வருகின்றன. இநத் நிலையில், தனியார் ஊடகத்துறையினருடன், நாட்டின் தற்போதைய நிலைமை, பாஜகவின் வளர்ச்சி, அரசியல் மற்றும் ஆன்மிகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, நான் பயாலிஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை, என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பராம்த்மாதான் என்றவர், அனைத்து இந்தியர்களுக்கும் சேவை செய்யவே நான் வந்துள்ளதாக தெரிவித்தவர், பாஜக அல்லாத மாநிலங்கள் மற்றும் தென்னிந்தியாவில் பாஜகவின் செயல்பாடு குறித்து பேசியதுடன், தென் மாநிலங்களில் ஊழல் மற்றும் வம்ச அரசியலை விமர்சிக்கிறார், மாற்றத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். தனது வாழ்க்கை குறித்து பேசிய பிரதமர் மோடி, என் தாயார் உயிரோடு இருந்தவரை, இந்த உலகிற்கு நாள் என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந் தேன். ஆனால், என் தாயின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்து பார்த்தேன், அதில் கிடைத்த தெளிவுகளைத் தொடர்ந்து, இப்போது நான் பலவற்றை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன் என்றார். சிலர் எனது கருத்துக்கு எதிராக பேசலாம், ஆனால், நான் இதை முழு மனதாக நம்புகிறேன், என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான் என்றவர், நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றார். எந்தவொரு விஷயத்தையும் நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகவே கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருப்பதாகவும், நான் என்ன செய்தாலும் தெய்வீக சக்தியால் ஈர்க்கப்பட்டு, இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னை அனுப்பியுள்ளார், நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/prime-minister-modi-said-am-not-human-being-not-born-biologycally/ https://patrikai.com/god-sent-me-to-this-world-prime-minister-modi-sensational-information/
  13. நானும் களத்திலை இறங்கி நீந்தி விளையாடுவம் எண்டு பாக்கிறன்.......மேலை ஒராள் @நிலாமதி தடக்குப்படுறதை பாக்க எனக்கு குலைப்பன் அடிக்குது. 🤣
  14. @நிலாமதி அக்கா வாழ்த்துக்கள்.
  15. இன்றைய இரண்டாவது Play-off போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிடையே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் இறுதியில் ஒரு ஓவர் மீதமிருக்க 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி அடுத்த Qualifier 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது. ஒருவருமே இன்று விளையாடிய அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணிக்காததால் அனைவரும் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை ஆனால் தலா மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது!): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நிலாமதி 64 2 அஹஸ்தியன் 62 3 கல்யாணி 62 4 நுணாவிலான் 62 5 புலவர் 62 6 வீரப் பையன்26 56 7 முதல்வன் 56 8 சுவி 56 9 ஏராளன் 56 10 கந்தப்பு 56 11 எப்போதும் தமிழன் 56 12 வாதவூரான் 56 13 கிருபன் 56 14 நீர்வேலியான் 56 15 ஈழப்பிரியன் 52 16 கோஷான் சே 52 17 கறுப்பி 48
  16. @நிலாமதி அக்கா, பதில்களை புதிய பதிவில் தந்தாலும் பிரச்சினையில்லை! இது கிரிக்கெட் போட்டி! என்னதான் கனடா, அமெரிக்காவுக்கு விசுவாசம் இருந்தாலும் அவர்கள் சுப்பர் 8 க்கு வருவார்கள் என்பது ரொம்ப ஓவர்!!😱
  17. தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொடடவனை ,,,மறந்ததென்ன
  18. 👍.... எனக்கு இந்தச் சொற்கள் முற்றிலும் புதியவை, ஆனால் வாசிப்பின் போது இந்த சொற்களின் இதே அர்த்தங்கள் புரிந்தது போலவே இருந்தது. கதையின் ஒவ்வொரு வரிகளிலும் ஒரு நிதானம் இருந்தது.
  19. ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு ஒரு சூழில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் அம்மாக்களிலேயே இடம்பெறுவதாகவும், அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும் நிலையில், இயற்கையான கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த தாய் பிரசவித்தானது மருத்துவ துறையில் மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுவதாகவும், அத்துடன் பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் சுகதேக ஆரோக்கியத்துடன் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார். https://thinakkural.lk/article/302244
  20. மீண்டும் பதிவதில் பிரச்சினையில்லை. 20 அணிகள், முதல் சுற்று, சுப்பர் 8 என்று மாற்றிவிட்டதால் கேள்விகளும் அதிகம். கூகிள் ஷீற்றில் பதிந்தால், சுப்பர் 8 க்கு தெரிவாகக்கூடிய அணிகளைக் காட்டும். அவற்றைக்கொண்டு எப்படி போட்டிகள் நடக்கும். எந்த அணி வெல்லும் என்று இலகுவாகக் கணிக்கலாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள்..
  21. காமடி பண்ண எங்கே கற்றுக் கொண்டீர்கள் என்று இப்போ தான் தெரியுது.😀
  22. கூக்கில் ப‌திவை விட‌ நானும் த‌லைவ‌ரும் போட்டி ப‌திவை ப‌திஞ்ச மாதிரி ப‌தியுங்கோ அக்கா அது சுக‌ம் நான் உந்த‌ கூக்கில் இதை ட‌வுன்லூட் செய்ய‌ 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ போட்டி எல்லாம் காட்டுது அத‌ உட‌ன‌ அழிச்சு விட்டு வ‌ழ‌மை போல‌ ப‌தியிற‌ மாதிரி ப‌திஞ்சேன் இந்த‌ கேள்வி கொத்தை பார்த்து த‌லை சுத்துது என்று சொன்ன‌ இர‌ண்டாவ‌து நீங்க‌ள் அத‌ற்க்கு முத‌ல் த‌லைவ‌ர் சொல்லி விட்டார் நான் கைபேசியில் இருந்து ப‌தியும் போது என‌க்கு எப்ப‌டி த‌லை சுத்தி இருக்கும் என்று யோசிச்சு பாருங்கோ ஹா ஹா லொல்😁...............................
  23. IPKF காலத்தில் நாம் அங்கு இருந்ததால் நாம் அவற்றுக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். ஆனால் மூடிய கதவுகளுக்குள் நடந்ததாகக் கூறுபவைகளுக்கு சாட்சி என்று தற்போது எவரும் இல்லை. எனவே யாரும் எப்படியும் எழுதலாம். 1) எங்கள் விடுதலைப் போராட்டம் தென்னிந்தியக் கண்டத்துக்குள் மட்டும் நடப்பதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும். 2) தமிழீழம் என்பது உருவமில்லாத உன்னதமான உணர்வு. மனிதரைக் கொல்வதனூடாக அதனை வெற்றி கொள்ள முடியாது. எத்தனை முள்ளிவாய்க்கால்கள் வந்தாலும் அந்த உணர்வு வெற்றிகொள்ளப்பட முடியாது.
  24. திரு கபிதான் அவர்களைத் திருப்திப்படுத்தவேண்டுமெனில் யாராவது எதையாவது எடுத்துவிடுங்கோப்பா. இந்திய அமைதிப்படையின் தோல்வியும் ராஜீவ் காந்தியின் சாவுமே முள்ளிவாய்க்காலின் முகவுரையாகும். ஆனால் இந்தியா முள்ளிவாய்க்கால்மூலம் புலிகளை வெற்றிகொண்டிருக்கலாம் ஆனால் தமிழர்களையோ இல்லையேல் சிங்களவர்களையோ வெற்றிகொள்ளவில்லை என்பதே நடப்பு நிலமை.
  25. தாயும் சேய்களும் தந்தையுடன் அமோகமாய் வாழட்டும்.........! 💐
  26. இதுவரை 146 நாடுகள் பலஸ்தீனை அங்கிகரித்தபோதும் அது தனிநாடாக்கப்படவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.
  27. இலங்கையில் அமைதி இல்லையென்றும் இனவழிப்பு நடக்கிறது என்றும் அங்குள்ள எமது தலைவர்கள் சொல்லவில்லை.
  28. பலஸ்தீனத்தில் மட்டுமல்ல ஈழத்தீவிலும் இரண்டு தேசங்கள் அமையாது அமைதியும் திரும்பாது,இனவழிப்பும் முடிவுறாதென்பதை எப்போது ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?
  29. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ; தமிழர் அரசியல் எங்கே போகிறது? May 20, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு் முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை அடைந்ததையே நாம் கண்டோம். நாட்டைச் சின்னா பின்னப்படுத்திய போருக்கு காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணங்கத்தீர்வு ஒன்றைக் காணவேண்டிய தேவை ஒன்று இருக்கிறது என்று தென்னிலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதியிடம் சிந்தனை இருப்பதாக தெரியவில்லை. இந்த பதினைந்து வருடங்களிலும் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஓரளவுக்கேனும் திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கிய திசையில் ஒரு அங்குலமேனும் நாடு முன்னோக்கி நகரவில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரசியலமைப்பின் அங்கமாக இருந்துவரும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது கூட இறுதியில் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. உலகின் வேறு எந்த நாட்டிலும் அரசியலமைப்பில் உள்ள ஒரு ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி அரசியல் சக்திகள் வீதிகளில் இறங்கி போராடியதாக நாம் இதுவரை அறியவில்லை. ஆனால் இலங்கையில் அது நடக்கிறது. இலங்கைப் பாதுகாப்பு படைகள் போரில் விடுதலை புலிகளை தோற்கடிப்பதற்கு துணிச்சலான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய பெருமைக்கு எப்போதும் உரிமை கோரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சிங்கள மக்களின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை வேண்டுமென்றே அலட்சியம் செய்து இலங்கையை நீண்டகாலத்துக்கு ஆட்சி செய்யும் கனவுடன் பெரும்பான்மை இனவாத அரசியலை மேலும் தீவிரமாக முன்னெடுத்தார். அவர் போர் வெற்றியை அதற்காக தாராளமாகப் பயன்படுத்தி முக்கிய பிரச்சினைகளில் இருந்து சிங்கள மக்களின் கவனத்தை திசைதிருப்பினார். அந்த தந்திரோபாயம் சில வருடங்களுக்கு அவரது குடும்பம் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு உதவியதே தவிர, சிங்கள மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டுவரவில்லை. பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் என்பது அடிப்படையில் தவறான ஆட்சி முறையையும் ஊழல் முறைகேடுகளையும் மூடிமறைப்பதற்கான ஒரு உபாயமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது என்ற உண்மை அம்பலமாவதற்கு நீண்டகாலம் எடுக்கவில்லை. என்றாலும் இன்னமும் கூட தென்னிலங்கை அதில் இருந்து முறையான பாடத்தைக் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இலங்கை அரசியல் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி ராஜபக்சாக்களை இரு வருடங்களுக்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டிய பின்னரும் கூட இன்னமும் அவர்கள் திரைக்குப் பி்ன்னால் இருந்து அரசாங்கத்தை இயக்கக்கூடியதாக இருப்பதும் தங்களது ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெறும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று அவர்களால் கூறக்கூடியதாக இருப்பதும் பெரும் துரதிர்ஷ்டவசமானதாகும். மக்கள் கிளர்ச்சியும் அதற்கு பின்னரான அரசியல் நிலைவரமும் தென்னிலங்கை மக்களின் அரசியல் சிந்தனையில் ஏதாவது நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதை தேசிய தேர்தல் ஒன்றின் மூலம் மாத்திரமே தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இன்னமும் நான்கு மாதங்களில் நடத்தப்படவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார நெருக்கடி மீதே பிரதான வேட்பாளர்கள் கவனம் செலுத்துவார்கள். வேறு பிரச்சினைகளுக்கு குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டிய அவசியம் குறித்து அவர்கள் அக்கறை செலுத்தக்கூடிய சாத்தியமில்லை. கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணியில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தனது எதிர்கால அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள மக்களின் ஆதரவுடன் தீர்வைக் காணும் என்றும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் என்றும் கூறினார். ஆனால், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதை அவர் குறிப்பிடுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக தமிழர்கள் அணுகக்கூடிய ஒரே சிங்களத் தலைவர் என்ற தோற்றப்பாடு ஒன்று அவருக்கு இருக்கின்ற போதிலும், சிங்கள தேசியவாத வாக்காளர்களை அந்நியப்படுத்தக்கூடியதாக இனிமேலும் எந்த அணுகுமுறையையும் கடைப்பிடிக்கும் துணிச்சலை அவர் காண்பிக்கக்கூடிய சாத்தியம் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையொன்றில் பதின்மூன்று பிளஸ் என்றோ அல்லது சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்றோ வாக்குறுதி வழங்குவதன் மூலம் தமிழர்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக பேரம் பேசப்போவதில்லை என்று கூறியிருந்தார். சகல சமூகங்களையும் அரவணைக்கும் வகையில் இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தப்போவதாக அவர் உறுதியளித்தார். அது தொடர்பில் அண்மையில் தனது கட்டுரை ஒன்றில் அரசியல் ஆய்வாளர் ராஜன் பிலிப்ஸ் ஏற்கெனவே ஒவ்வொருவரினதும் தேசிய அடையாள அட்டையிலும் கடவுச்சீட்டிலும் ஒரு வகை அடையாளம் இருக்கிறது. அநுரா குமார மேலதிகமாக என்ன அடையாளத்தைக் கொடுக்கப்போகிறாரோ என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பியிருந்தார். சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சிங்கள மக்கள் விரும்பாத எந்தவொரு வாக்குறுதியையும் பிரதான வேட்பாளர்களில் எவரும் வழங்கப்போவதில்லை என்பது நிச்சயமானது. அதேவேளை தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டிய அவசியத்தை எந்த வேட்பாளரும் தங்களது தேர்தல் பிரசாரங்களில் சிங்கள மக்களிடம் உரத்து வலியுறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் தவறான சிந்தனைகளின் பின்னால் செல்கின்றவர்களாகவே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவந்த கடந்த காலப் பாதையில் இருந்து சிங்கள மக்களை சரியான பாதைக்கு திசைதிருப்பும் வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்த தலைவராக எவரையும் காண முடியவில்லை. இத்தகைய பின்புலத்தில், போருக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மாத்திரமல்ல, அவர்களின் வாழ்வாதார மனிதாபிமானப் பிரச்சினைகளும் கூட மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன. அரசாங்கப் படைகளினதும் கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல் சக்திகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புகளில் இருந்து தங்களது நிலங்களை தமிழ் மக்களால் பாதுகாக்க முடியாமல் இருக்கிறது.போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு கூட அவர்கள் போராட வேண்டியிருக்கிறது. அத்தகைய நினைவுகூரல் நிகழ்வுகளை படையினரையும் பொலிசாரையும் பயன்படுத்தி தடுப்பது இனப்பாகுபாட்டின் குரூரமான ஒரு வடிவமாகும். இந்த தடவை பொலிசாரின் நடவடிக்கைகளில் ஒரு விசித்திரமான அணுகுமுறையை காணக்கூடியாக இருக்கிறது. வடமாகாணத்தில் நினைவு நிகழ்வுகளுக்கு எந்த இடையூறையும் செய்யாத பொலிசார் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் அவற்றை தடுக்கிறார்கள். இதன் பின்னால் உள்ள தர்க்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. போருக்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களை உரிய முறையில் வழிநடத்துவதற்கு உருப்படியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லை என்பது அவர்கள் எதிர்நோக்குகின்ற ஒரு முக்கியமான பிரச்சினையாகும். தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், கடந்தகால அவல அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு பொருத்தமான முறையில் அவர்களை வழிநடத்துவதற்கு விவேகமான அரசியல் தலைவர்கள் இல்லை. போரின் முடிவுக்கு பிறகு வடக்கு,கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் வரலாற்றுப் பொறுப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் தானாக வந்துவீழ்ந்தது. அதை உகந்த முறையில் கையாண்டு மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான ஒரு அரசியல் சமுதாயத்தை நிறுவவுதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தவறினர். வெறுமனே கட்சி அரசியல் நலன்களை முன்னிறுத்தி அவர்கள் செயற்பட்டார்களே தவிர, போருக்கு பின்னரான சூழ்நிலைகளில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக்கூடிய ஒன்றிணைந்த பலமான ஒரு அரசியல் சக்தியாக கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டவில்லை. அதற்கான விவேகமோ அல்லது அர்ப்பணிப்போ அவர்களிடம் இருக்கவில்லை. அதன் விளைவாக இன்று தமிழர் அரசியல் சமுதாயம் சிதறுண்டு கிடக்கிறது. சகல தமிழ்க் கட்சிகளுமே ஏதோ ஒரு வகையில் பிளவுண்டு கிடக்கின்றன. அவர்கள் தங்களுக்கு இடையிலான தகராறுகளைத் தீர்ப்பதற்கே இயலாதவர்களாக இருக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் அக்கறை காட்டுவதற்கு நேரம் எங்கே இருக்கிறது? தமிழர்களுக்கு எவற்றைக் கொடுக்கக்கூடாது என்பதில் பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் சிங்கள அரசியல் சமுதாயம் பெரும்பாலும் ஐக்கியப்பட்ட ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற அதேவேளை, தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைக்் கோருவதற்கு ஐக்கியப்பட்ட ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாமல் தமிழ்க்கட்சிகள் இருக்கின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் அக்கறை அற்றதாக இருக்கும் நிலையில், ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்தினதும் உலகத்தினதும் கவனத்தை ஈர்ப்பதற்கு முன்னென்றும் இல்லாத வகையில் தமிழ் அரசியல் சக்திகளின் ஐக்கியம் அவசியமாக தேவைப்படுகின்ற வேளையில் அவர்கள் படுமோசமாக பிளவுண்டு கிடக்கும் கவலைக்குரிய நிலையைக் காண்கிறோம். அண்மைய வாரங்களாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனை தொடர்பில் தமிழ்க்கட்சிகள் கலந்தாலோசனைகளை நடத்திவருகின்ற போதிலும், அவர்கள் கருத்தொருமிப்புக்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பது கஷ்டமானதாகும். சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்ற தான்தோன்றித்தனமான நகைப்புக்கிடமான கருத்துக்களை நோக்கும்போது அரசியல் சார்பற்ற கண்ணியமான பிரமுகர் எவரும் பொது வேட்பாளராகக் களமிறங்க முன்வருவாரா என்பது சந்தேகமே. அதேவேளை, கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடன் தமிழ் மக்களைக் கட்டிப்போடும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களில் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களையும் போரில் அநியாயமாக கொன்றுகுவிக்கப்பட்ட மக்களையும் நினைவுகூரவும் கௌரவிக்கவும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், கற்பனைசெய்து பார்த்திருக்க முடியாத தியாகங்கள் நிறைந்த அந்த போராட்டங்கள் இறுதியில் அவலமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று சுயவிமர்சனம் செய்யாமல் வெறுமனே நினைவுகளுடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இதை விளங்கிக் கொள்ளவேண்டியது மிக மிக அவசியம். இது இவ்வாறிருக்க, தமிழ் தேசிய அரசியலில் இரு புதிய ஆரோக்கியமற்ற போக்குகள் தீவிரமாக ஊடுருவுகின்றன. அதில் ஒன்று மதத்தீவிரவாதம். தமிழ்த் தேசியவாத அரசியல் தொடக்கத்தில் இருந்தே மதசார்பற்றதாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சகல மதப்பிரிவினரையும் அது அரவணைத்தது.பல தசாப்தங்களாக தமிழர்களின் தலைவராக மதிக்கப்பட்ட காலஞ்சென்ற எஸ்.ஜே வி. செல்வநாயகம் இந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் முஸ்லிம்கள் உட்பட தமிழ்பேசும் சமூகத்தின் சகல மதப்பிரிவினரும் அவரது தலைமையை ஏற்றுச் செயற்பட்ட காலம் ஒன்று இருந்தது. தமிழ்த் தேசியவாத அரசியலில் இருந்த மிகவும் குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான அம்சமாகவும் அது விளங்கியது. அண்மைக்காலமாக தமிழர் அரசியலை இந்துமதத்துடன் அடையாளப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளராக இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரே களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அது மாத்திரமல்ல அண்மைக்காலமாக அரசியல் செயற்பாடுகளில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்தும் இந்து துறவிகளில் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது. இந்த முயற்சிகளில் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா முன்னெடுக்கும் இந்துத்வா கொள்கையின் தாக்கம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மற்றையது இலங்கைத் தமிழர் அரசியலில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தீவிரவாத நிலைப்பாட்டைக் கொண்ட சக்திகளின் அதிகரித்த செல்வாக்கு. புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு பயனுறுதியுடைய பங்களிப்பைச் செய்த நீண்ட காலகட்டம் ஒன்று இருந்தது. தமிழ் மக்கள் மீதான அரசாங்கங்களின் ஒடுக்குமுறையை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதில் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மகத்தான பங்களிப்பைச் செய்தது. ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில சக்திகள் அநாவசியமான ஆதிக்கத்தைச் செலுத்த முனைந்து நிற்கிறார்கள். இதனால் இன்றைய தமிழர் அரசியலில் முன்னென்றும் இல்லாத வகையில் ஊழல்தனமான போக்குகள் அதிகரித்திருக்கின்றன.வெளிநாட்டில் இருந்து அனுப்புகின்ற பணத்தின் மூலம் இலங்கைத் தமிழர் அரசியலின் திசைமார்க்கத்தை தீர்மானிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். நாட்டில் வாழும் தமிழர்களுக்கு எத்தகைய அரசியல் தீர்வு வேண்டும் என்பதை மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்துகொண்டு நடைமுறைச் சாத்தியமற்ற தீவிவாதம் பேசுகின்ற சக்திகள் ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது. வெளிநாட்டு தமிழ்ச் சக்திகளின் ஆரோக்கியமற்ற தலையீடுகள் தமிழ்ப் பகுதிகளில் சமூக விரோத செயற்பாடுகளுக்கும் ஊக்கமளிக்கின்றன. இன்றைய இலங்கைத் தமிழ்ச் சமூகம் நினைத்துப்பார்க்க முடியாத தியாகங்கள் நிறைந்த மூன்று தசாப்தகால விடுதலைப் போராட்டம் ஒன்றைக் கடந்துவந்த சமூகத்துக்கு இருக்கவேண்டிய எந்த குணாதிசயத்தையும் கொண்டதாக இல்லை. இவ்வாறாக, நிலைவரங்கள் தொடருமாக இருந்தால், உலகம் கவனிக்காத ஒரு மக்கள் கூட்டமாக இலங்கை தமிழர்களும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் முழக்கங்களைச் செய்துகொண்டு குடாநாட்டுக்குள் மாத்திரம் கொக்கரிக்கின்ற ஒரு கூட்டமாக தமிழ் அரசியல்வாதிகளும் மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. https://arangamnews.com/?p=10762
  30. பிரிந்து இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உள்ளனவா என்று சரி பாருங்கள் @நிலாமதி அக்கா! சில கேள்விகளுக்கு சுப்பர் 8 இல் அமெரிக்கா, நெதர்லாந்து எல்லாம் விளையாடும் என்று போட்டுள்ளீர்கள். கஷ்டப்பட்டும் கடைசியில் வரத்தான் இந்தப் பதில்கள் உதவும்!
  31. அக்கா கேள்வி 41 இல் அளித்த பதிலில் இருந்தே 42க்கு பதிலளிக்க வேண்டும். கேள்வி 44 இல் அளித்த பதிலில் இருந்தே 45 க்கு பதிலளிக்க வேண்டும். 46க்கு பதிலளிக்கவில்லை.
  32. ரஸ்ஸியா அண்மையில் ஆரம்பித்திருக்கும் இராணுவ நடவடிக்கையில் குறைந்தது 60 உக்ரேனியக் கிராமங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகளின் உதவியிருந்தாலும் கூட உக்ரேனினால் ஓரளவு காலத்திற்கு மேல் இந்த யுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியாது. களத்தில் நேரடியாக தமது இராணுவத்தினரை இறக்கி ரஸ்ஸியாவுடன் நேரடி மோதல் ஒன்றிற்குச் செல்லும் நோக்கம் மேற்கிற்கு இல்லை. மறுபக்கம், ரஸ்ஸியா என்ன வில கொடுத்தாவது இந்த யுத்தத்தில் தான் தோற்பதைத் தடுத்தே தீரும். ரஸ்ஸிய இராணுவத்தில் இணைந்து போராட இந்தியா, நேபாளம், பெலரஸ், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து முன்னாள் , இந்நாள் இராணுவ வீரர்கள் வந்து குவிகிறார்கள். இவர்களுக்கு ரஸ்ஸிய இராணுவ வீரர் ஒருவருக்கு ஒப்பான மாதச் சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. உக்ரேன் இராணுவத்தில் சம்பளத்திற்குச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இருப்பதாக நான் அறியவில்லை, சில இலங்கையர்களைத் தவிர. தேவையற்ற, அநியாய, அழிவு யுத்தம். இரு தரப்பும் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து முடிவிற்குக் கொண்டுவருவது அவசியம்.
  33. தொடர்ந்து ஒரு சில சம்பவங்களை நினைவு கூரும் பிபிசி ஊடகம் இந்திய இராணுவத்தால் ஈழத்தில் நடந்த அஜாரகங்களை கூற மறுப்பதேன். ஒரு பக்க கதைகள் என்றுமே நியாயங்கள் ஆகாது. ⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨⩨
  34. இதே சம்பவங்கள் ஈரானிய,ரஷ்ய,வடகொரிய விமானங்களில் நடந்திருந்தால் தகர டப்பா பீலிங்கில் கருத்து எழுதியிருப்பீர்கள். 😂
  35. ஒரே ரபிளா கிடக்கு.....சரி கலந்துக்கிறன் 🤣
  36. ❤️....... மோகன் அண்ணா அப்பொழுது ஊரில் பெரும் பிரபலம். அவர் கடைகளின் வாசல்களில் எழுதும் பெயர்களையே நாங்கள் ரசிகர்களாகப் பார்ப்போம். அந்தப் படங்களை கட் அவுட் என்று சொல்வோம். இன்றும் அது இருக்கின்றது, இந்த தடவையும் இருந்தது. ஆனால் கட் அவுட்டுகள் முன்னர் மிகச் சிறப்பாக இருந்தன என்று மனம் சொல்கின்றது. மோகன் அண்ணாவின் கட் அவுட் ஒவ்வொரு வருடமும் வங்கிக்கு அருகில் இருந்தது என்று நினைக்கின்றேன். பாலா மாஸ்டர் அவர்களின் கட் அவுட் அதற்கு அடுத்ததாக அரியோட்டி பள்ளிக் கூடத்திற்கு அருகில். ஒவ்வொரு கட் அவுட்டும் எவ்வளவு பெரிய முயற்சியும், பலரது உழைப்பும். இவர்கள் பெரும் கலைஞர்கள். 'அம்மன்...' என்றே வீட்டில் இன்றும் சொல்கின்றோம்/கூப்பிடுகின்றோம், ஏழு கடல் மலை தாண்டியும் விட்டுப் போகாத ஒரு பழக்கம்........🤣. நகை விவகாரம் உண்மையே. ஆனால் இன்று திருடர் பயம் காரணமாக கவரிங் நகையாக மாறிவிட்டது. அதையும் கழுத்து மூடும் வரை இன்றும் போடுகின்றனர்........😀
  37. இப்போ திறக்குதில்லையாமே! கணனி மயப்படுத்திதாலேயோ?
  38. 👍..... அதிகமான இளைஞர்கள் ஊர் விட்டு ஊர் வந்து இப்படிச் செய்வதனால், அவர்களுக்கு தெரிந்தவர்கள், சொந்தங்கள் என்று இவ்விடங்களில் இல்லை. அதனாலேயே பயம் அல்லது தயக்கம் என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது. ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒரு வீட்டிற்கு போய் விட்டு திரும்பி வரும் போது நன்றாக இருட்டிவிட்டது. தீருவிலில் பகுதியில் இருக்கும் தூபி வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தோம். குமரப்பா, புலேந்திரன் மற்றும் அவர்களுடன் மாவீரர்களானவர்களின் ஞாபகார்த்தமாக கட்டிய தூபி. தூபியின் அடையாளமே இன்று அங்கு இல்லை. இராணுவம் எப்போதோ அதை அழித்துவிட்டது. அந்தப் பகுதி முழுவதும் கும்மென்ற இருட்டு. தூபி வீதியில் இருந்த எல்லா மின்விளக்குகளும் உடைக்கப்பட்டிருந்தன. திடீரென்று பார்த்தால் இருட்டில் தனியே ஒருவர் நின்றிருந்தார். கையில் புகைத்துக் கொண்டிருந்தது. மனைவி பயந்துவிட்டார். ஒரு பத்து அடிகளில் இன்னொருவர் அதே போல. பின்னர் இருவர். அந்தப் பகுதியை கடகடவென்று தாண்டிய பின்னரே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. எஙகள் வீட்டில் இருந்தவர்கள் மிகவும் கடிந்து கொண்டனர். அந்தப் பகுதியால் இரவில் எவருமே போவதில்லை என்றனர். எப்படியான ஒரு நிலைமை.........😌
  39. கடந்த சில வருடங்களாக அடிக்கடி விமானப் பயணங்கள் . ஒரு தடவை எழும்பி நடந்தோ கழிவறைக்கோ போய் வந்தால் மீண்டும் இருக்கைப் பட்டியை அணிந்து கொள்வேன். இது பழகிவிட்டது.
  40. இலங்கையில் நிகழ்ந்தது / நுட்பமாக இன்றும் நடந்து கொண்டு இருப்பது இனப்படுகொலை அல்ல என்று பாலஸ்தீனர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இன்றுவரைக்கும் சொல்லிக் கொண்டு இருப்பது எந்தளவுக்கு சுய நலமானதோ, பக்கச்சார்பானதோ அதே அளவுக்குத் தான் இதுவும்.
  41. படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஆறு ---------------------------------------------------------------- குட்டிக் கடை என்றாலும் எங்கள் வீட்டவர்கள் அங்கும் எட்டு மணித்தியாலங்கள் செலவழிக்கும் திறமை பெற்றவர்கள். அவர்கள் காலை முன் வைத்து ஒரு கடைத் தெருவில் இறங்கி விட்டால், சுன்னாகமும், தி நகரும் ஒன்றே. ஒரு கட்டத்தில் மதியம் தாண்டிய பின் இனிமேல் பசி பொறுக்க முடியாது என்ற நிலையில், சரி, சாப்பிடப் போவம் என்று வந்தார்கள். 'ஒரு நல்ல சைவச் சாப்பாட்டுக் கடையாக பார்த்து நிற்பாட்டப்பா...' என்று ஓட்டுனரிடம் சொன்னதில் ஒரு வார்த்தை பெரும் பிழையான வார்த்தை. 'நல்ல' என்ற அடைமொழியை நான் சொல்லியிருக்கக்கூடாது. அவர் அங்கிருந்து இன்னும் தூரம் ஓடி திண்ணைவேலியில் இருக்கும் லவின்ஸ் என்னும் ஒரு கடைக்கு எங்களைக் கொண்டு வந்தார். உயர்தர இந்திய சைவ உணவு அல்லது அப்படி ஏதோ ஒன்று அக்கடையின் முகப்பில் எழுதப்பட்டிருந்தது. இது தான் இந்தப் பயணத்தில் நாங்கள் முதலாவதாகப் போகும் உணவகம். எனக்கு எந்தக் கடைகள் பற்றியும் எதுவுமே தெரியாது, என் மனைவியும் யூ டியூப் சேனல்களில் துணிக்கடைகள் போன்றவற்றை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருந்தவர், ஆனால் உணவகங்களை பார்த்து வைக்க நினைக்கவில்லை. நாங்கள் ஆறு பேர்கள், வாகன ஓட்டுநர் உட்பட. மெனு கார்ட்டை தந்தார்கள். குடிப்பதற்கு ஜூஸ், லஸ்ஸி, சோடா என்று சிலவற்றை சொன்னோம். ஒரு ஆரஞ்சு ஜூஸ் 4000 ரூபாய்கள் என்று போட்டிருக்கின்றார்கள் என்று பிள்ளைகள் காட்டினார்கள். அங்கு வேலை செய்பவர் ஒருவரைக் கூப்பிட்டு, இது என்ன 4000 ரூபாய் ஆரஞ்சு ஜூஸ் என்று கேட்டோம். ஆரஞ்சை பிழிந்து கொடுப்பார்கள் என்றார். அவர் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை. நாங்கள் அந்த ஜீஸ் எடுக்கவும் இல்லை. இந்த 4000 ரூபாய் ஜூஸ் பற்றி ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் யாரோ செய்தி போட்டிருக்கின்றார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். ஒரு செட் பூரி, பரோட்டா, ஒரு தோசை என்று மிகச் சாதாரண உணவுகளையே எடுத்தோம். கறிகளையும் எடுங்கள் என்றார்கள் அங்கு வேலை செய்பவர்கள். ஏன், பூரி, பரோட்டா போன்றவற்றுடன் ஒன்றும் வராதா என்று கேட்டோம். வரும், ஆனால் அது போதாது என்றனர். சரி என்று நான்கு கறிகளையும் எடுத்தோம். மிகச் சாதாரணமான ஒரு சாப்பாடு. அமெரிக்காவில் லிட்டில் இந்தியா என்னும் ஒரு பகுதியில் தான் என்னுடைய வீடு இருக்கின்றது. ஆதலால் அருகிலேயே பல இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் சாதாரண, விலை மிகவும் குறைந்த ஒரு உணவகத்தில் இருக்கும் தரமே இங்கும் இருந்தது. அதே மணமும், குணமும், சின்ன சின்ன இரும்புச் சட்டிகளும். எதையும் சாப்பிட்டு முடிக்கவும் இல்லை. நான்கு கறிகளில் இரண்டு கறிகளை தொடக்கூட இல்லை. 24 ஆயிரம் ரூபாய்கள் என்று பில்லைக் கொடுத்தார்கள். நம்ப முடியவில்லை, கூட்டிப் பார்த்தேன், 24 ஆயிரங்களே. பின்னர் கூகிளில் இந்த உணவகத்தினை தேடிப் பார்த்தேன். பொதுவாக எல்லோரும் நன்றாகவே சொல்லியிருக்கின்றனர். என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. இதே வேளையில், பின்னர் ஒரு நாள் நல்லூர் கோவிலின் வீதியில் இருக்கும் Lemon Tree Hotel என்னும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். இந்த தடவை நாங்கள் எட்டுப் பேர்கள். அதே 'இந்திய சைவ....' என்ற அடைமொழியுடன் இந்த இடமும் இருந்தது. இங்கும் சிற்றுண்டி வகைகளும், மதிய உணவு வகைகளும் இருந்தன. தென் இந்திய தாலி போன்று ஒரு மதிய உணவு கொடுத்தனர். வேறு உணவுப் பண்டங்களையும் எடுத்திருந்தோம். சிலவற்றை வீட்டுக்கு கட்டியும் கொண்டோம். மொத்தமாக ஆறு ஆயிரங்கள் என்று பில் வந்தது. என்னைக் கேட்டால், அந்த உயர்தர உணவகம் என்று போடப்பட்டிருந்த உணவகத்தில் இருந்தது போன்று அல்லது அதை விட சிறப்பாக இங்கு உணவுகள் இருந்தன. என்ன, சின்ன சின்ன இரும்புச் சட்டிகளில் இவர்கள் பரிமாறவில்லை என்பது மட்டுமே பெரிய வித்தியாசம். என்ன சொன்னாலும் சைவம் என்றால் எங்களுக்கு சரியாக அமைவது மலாயன் கபே என்பதில் பெரிதாக மாற்றுக் கருத்துகள் இருக்காது என்று நினைக்கின்றேன். என்றும் அந்த உணவகம் அப்படியே இருக்கின்றது. இரண்டாம் தடவை அங்கு போயிருந்த பொழுது ஒரு சம்பவம் நடந்தது. முதல் தடவை பிள்ளைகளையும் அங்கு கூட்டிப் போயிருந்தோம். நன்றாகவே இருக்குது என்றார்கள். இரண்டு வாரங்களில் பிள்ளைகள் அமெரிக்கா திரும்பி விட்டார்கள். இருவருக்கும் வேலை, அதில் ஒருவர், இளையவர், இந்த வருடம் தான் வேலை ஆரம்பித்து இருக்கின்றார். ஆரம்பத்தில் வருடத்திற்கே அமெரிக்காவில் இரண்டு வாரங்கள் தான் விடுமுறை கொடுப்பார்கள். இவருக்கு நான்கே மாதத்தில் சிறிது இரக்கப்பட்டு இரண்டு வாரங்கள் விடுமுறை கொடுத்தது அமெரிக்க சட்டக் கோவைகளுக்கு கொஞ்சம் எதிரான ஒரு விடயம். இரண்டாம் தடவை மலாயன் கபே போயிருந்த போது, ஒரு பருப்பு வடை எனக்கும், மனைவிக்கு ஒரு முக்கோண ரொட்டி என்றும் சொன்னேன். அதைக் கேட்டவர் சில விநாடிகள் என்னையே பார்த்துக் கொண்டே நின்றார். நல்ல உயரமான ஒரு இளைஞன். போனவர் ஒரேயொரு உளுந்து வடையுடன் மட்டும் திரும்பி வந்தார். பருப்பு வடை என்றேன் மீண்டும். ஒரு வேளை கடலை வடை என்று தான் கட்டாயம் சொல்ல வேண்டுமோ என்று கடலை வடை என்றும் சொன்னேன். அந்த இளைஞன் மெதுவாக என் காதருகில் குனிந்தார்............... தான் தமிழ் இல்லை என்றும், ஒரு சிங்களவர் என்றும் மிகப் பணிவாகச் சொன்னார். சிங்களத்திலேயே சொன்னார். கொஞ்சம் ஆச்சரியமாகப் போய்விட்டது. அது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்களே வந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று காட்டுகின்றோம் என்று சொல்லி விட்டு, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்றேன். தான் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்றார். பீடம் கிளிநொச்சியில் இருக்கின்றது, இங்கு யாழ் நகரில் என்ன செய்கின்றீர்கள் என்றேன். அவர்களின் பயிற்சி ஒன்றுக்காக யாழ் நகரில் இப்போது தங்கியிருப்பதாகச் சொன்னார். நானும் படிக்கும் காலத்தில் இரண்டு தடவைகள் பயிற்சிக்காக மொத்தமாக ஆறு மாதங்கள் தென் பகுதியில் வாழ்ந்திருக்கின்றேன். ஆனால் பயிற்சிக் காலத்தில் ஒரு உணவகத்தில் வேலை செய்வது புதிய விடயம். அது அந்த இளைஞன் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியது. அவரின் பெயர் சொன்னார். சொந்த இடம் கதிர்காமம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். கிளிநொச்சியில் எலக்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் சில விடயங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் கதைத்தோம். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியில் வரும் போது திரும்பிப் பார்த்தேன். அந்த இளைஞர் ஒரு மேசையில் நாலு ஆட்களிடம் மாட்டுப்பட்டிருந்தார். சமாளித்து, கற்றுக் கொண்டு தான் வாழ்க்கையில் முன்னுக்கு போக வேண்டும். நாங்களும் இப்படித்தானே பயணித்தோம். மனைவி கேட்டார், 'எல்லாம் சரி, அந்தப் பொடியன் எப்படி உங்களோட உடனேயே சிங்களத்தில் கதைச்சது?' எனக்கும் ஏன், எப்படி என்று விளங்கவில்லை. அடுத்த முறை போய், கதிர்காமம் போய், நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். (தொடரும்...........)
  42. 🤣...... நீங்கள் அந்த மருத்துவர்கள் சொல்கின்ற 'வில்லங்கம்' பிடித்த ஆட்களில் ஒருவர். உங்களுடன் அவர்கள் மேற்கொண்டு கதைக்க மாட்டார்கள், வெறுமனே பில் மட்டும் தான் உங்களுக்கு தருவார்கள்......... சந்தையைக் கூட பார்க்கவில்லை, ஈழப்பிரியன். எதிரிலேயே Kings Park என்று ஒரு கடை. இன்னும் ஒரு பார்க் வேற இருந்தது. அவர்கள் மூன்று கடைகளுக்கும் போனார்கள். நான் கார் ஓட்டுனரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டுக் கொண்டிருந்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.