Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    20019
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46797
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/27/24 in Posts

  1. ஒரு சின்ன உதாரணம் திரு சுமந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்த போது சில பொன்(_) மொழிகளை உதிர்த்து இருந்தார். "எஜமான் நீங்க ரொம்ப நல்லவரு, யாழ்ப்பாண மக்கள் மீது உங்களுக்கு சிறப்பு பிரியம் உண்டு. நீங்கள் இந்த மக்களுக்கு கடந்த வருடங்களில் நிறைய நல்லது செய்திருக்கிறீர்கள். 2004 தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்காமல் உங்கள் வெற்றியை அவர்கள் கேள்விக்குறியாக்கியதை இப்போது மனப்பூர்வமாக உணர்கிறார்கள்" ... இந்த செய்தியை சிங்கள ஊடங்கங்கள், யூ டியூபர்ஸ் வீடியோ வடிவில் வெளியிட்டு சிங்கள இனவெறி அரசியலை வெள்ளை அடிக்கிறார்கள். வடக்கு மக்களுக்கு என்ன பிரச்சினை? அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லையே!! பாருங்களேன் நம்ம ஜனாதிபதிக்கு ஏன்னா ஒரு வரவேற்பு அங்கே. இந்த டயஸ்போரா தமிழருக்கு தான் இங்குள்ள சுமூக சகஜீவன வாழ்வியலை குழப்பி இனவாதத்தை தூண்டி விடும் அவசரம் தெரிகிறது. ஆகவே கவனமாக இருங்கள் மக்களே. சுமந்திரனை போல நாட்டுப் பற்றாளரை மதிப்போம், ஆதரவு வழங்குவோம் என்று செய்தி போட்டு அவர்கள் சுய இன்பம் அடைகிறார்கள். முதிர்ச்சியான அரசியல்வாதியே இந்த தரம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள் பாவம்!!! பொன்(_) - தவிர்க்க வெண்டிய ஒரு வார்த்தையை பிரயோகித்தமைக்கு மன்னிப்புகோருகிறேன். திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
  2. குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில் 🚗 30 நிமிடத்தில் செல்லக் கூடிய தொலைவில்தான் இருந்தது நல்லதாக போய் விட்டது. அவர்... நேற்று வந்து, இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு நாளை காலை புறப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தமையால்... காலம் குறுகிய நேரம் என்பதாலும், எப்படியும் இன்று சந்திப்பது என்று முடிவெடுத்து... அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளமாக செய்யலாம் என சொன்னார். குமாரசாமி அண்ணை வசிப்பது ஜேர்மனியின் ஒரு தொங்கலில் என்றால்... நாம் வசிப்பது மற்ற தொங்கல். இடையில் 550 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் வசிக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் மீண்டும் எப்போ கிடைக்கும் என தெரியாது என்ற படியால்... இருவரும் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். 🙂 இனி... எமது வீட்டிற்கு அண்மையில் வசிக்கும் @Paanch அண்ணையுடன் தொடர்பு கொண்டு, குமாரசாமி அண்ணையை சந்திக்க இன்று மதியம் நேரம் இருக்குமா என கேட்ட போது... அவரும் முழு உற்சாகத்துடன் தானும் வருவதாக தெரிவித்தார்🥰. பின்... @Kavi arunasalam த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இன்று குடும்பத்துடன் ஐரோப்பிய உல்லாசப் பயணம் செய்ய புறப்பட்டுக் கொண்டு இருப்பதால்.. கலந்து கொள்ள முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார். தொடரும்.... ✍️
  3. 40 நாட்களுக்கு முன் என் குடும்பத்தினர்க்கு ஒரு சுப நிகழ்விற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் இன்ன நாள்தான் என முடிவு செய்யப்படவில்லை. தேதியுடன் அழைப்புதழ் வந்ததும் முதலில் வேலை விடுமுறையை முடிவு செய்து விட்டு. சிறித்தம்பிக்கு நான் செல்லும் இடத்தை தெரியப்படுத்தினேன். அவரும் உடனடியாக அந்த இடம் தான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் தான் இருக்கின்றது என தெரியப்படுத்தினார். சந்திப்பது பற்றியும் கூறினார். ஆனாலும் இடம் வலம் நேரகாலம் எதையுமே தீர்மானிக்கவில்லை. இருந்தாலும் சிறித்தம்பியை அவர் வீட்டில் என் குடும்ப சகிதம் அவர் வீட்டிற்கே சென்று சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் என் அடிமனதில் இருந்து கொண்டே இருந்தது. கால நேர சூழ்நிலைகள் நன்றாக இருந்தால் இப்படியான சந்திப்பு நடக்க இருக்கும் என என் குடும்பத்தினரிடமும் தெரிவித்திருந்தேன்.
  4. காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில் சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்லை. தமிழ் ஆட்களின் நேரத்தைப் பற்றி 😂 நான் நன்கு அறிந்து இருந்ததால்.... பத்தரை மணிக்கே, பாஞ்ச் அண்ணைக்கு தொலை பேசி எடுக்க, அவர் தனது மகளுடன் எனக்கு முன்னால் தாங்கள் வந்து விட்டோம் என்று காரில் கைகாட்டிய படி கடந்து சென்றார். 🙂 நான் அவர்களின் நேரம் தவறாமையை தவறாக எடை போட்டு விட்டேனே என்று மனதிற்குள் சங்கடப் பட்டுக் கொண்டு... பாஞ்ச் அண்ணையும் நானும் ஒரு காரில் குமாரசாமி அண்ணையை சந்திக்க அதிவேக நெடுஞ்சாலையில் பழைய தமிழ்ப் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணித்தோம். எனக்கு வாகனம் ஓடுவதை விட.... அருகில் இருந்து பயணிப்பதுதான் பிடித்தமானது என்பதால்... வாகனம் ஓடும் பொறுப்பை பாஞ்ச் அண்ணையிடமே கொடுத்து விட்டேன். நாங்கள் எதிர்பார்த்த நேரம் 11 மணிக்கு, மண்டபத்திற்கு சென்று வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றால்.... தவில், நாதஸ்வர கச்சேரி இசை நடந்து கொண்டிருந்தது. குமாரசாமி அண்ணையை... முன், பின் கண்டிராததால் அவரை எப்படி கண்டு பிடிப்பது என்ற யோசனையுடன் நானும், பாஞ்ச் அண்ணையும் போற, வாற ஆக்களைப் பார்த்து... இவர் குமாரசாமியாக இருப்பாரோ... அவர் குமாரசாமியாக இருப்பாரோ என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு இருந்தோம். 😂 🤣 குமாரசாமியார் சுழியன். எங்களுக்குத்தான்... குமாரசாமியாரை தெரியாதே தவிர, அவருக்கு எங்களை நன்றாக தெரிந்தே இருந்தது🙂. பட்டு வேட்டி சால்வையுடன்... தமிழ்ப் பழமாக எங்கள் முன் ஒருவர் சிரித்துக் கொண்டு வந்து கதைக்கும் போதும் பாஞ்ச் அண்ணை குமாரசாமியை தேடுகின்றோம், அவர் எங்கு இருக்கின்றார் என்று சொல்ல முடியுமா என்று கேட்க, வந்தவர் வாங்கோ... இந்த மேசையில் இருந்து கதைப்போம் என்று, அவரும் பிடி கொடுக்காமல் எம்மை அழைத்துச் சென்றார். குமாரசாமியாரின் குரல் எனக்கு பரிச்சயமானது என்பதால்... இவர்தான், நாம் தேடிய ஆள் என்று கண்டு பிடித்து... கட்டிப் பிடித்து... கொஞ்சிய கையுடன் பொறுங்கோ என்று... கோப்பியும், தட்டு நிறைய பலகாரமும் கொண்டு வந்து தந்தார். அந்த சுப நிகழ்விற்கு குமாரசாமி அண்ணையை நாம் தேடிப் போய் இருந்தாலும்.... பாஞ்ச் அண்ணை முன்பு ஜேர்மன் விளையாட்டுக் கழகத் தலைவராக இருந்த போது... சிறுவர்களாக விளையாடிய பலர் இளைஞர்களாக பாஞ்ச் அண்ணையிடம் வந்து தமது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். என்னுடன் முன்பு வேலை செய்த பலரையும் அந்த நிகழ்வில் 25 வருடங்களுக்கு பின்பு கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 🙂 யாழ். களத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித் திறமையை பற்றி நாம் நிறைய கதைத்தோம். சிலரின் அபரிதமான ஆற்றல்கள் உண்மையிலேயே வியக்க வைத்தது. அந்த வகையில்... யாழ்.களத்தின் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றுதலுக்கு உரிய திறமைசாலிகள் என்பதை நாம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது சிறப்பு. 👍 முதல் முறை சந்தித்த சந்திப்பு என்ற போதும்... உடன் பிறந்த சகோதரன் ஒருவரை கண்ட மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்தது. இப்படியான நல் உள்ளங்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த யாழ்.களத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம். ❤️
  5. குமாரசாமி அண்ணா, தமிழ் சிறி, பாஞ்ச் சிறப்பான சந்திப்பு. முகம் காண கடினமாக இருக்கும் யாழ் உறவுகளின் சந்திப்புக்கள் என்றும் நினைவுகளில் நீங்கா இடம் பிடிக்கும். 2015-16 களில் மோகன் உட்பட யாழ் உறவுகள் சிலரை சந்தித்தது பசுமையான நினைவுகளாக இன்றும் உள்ளது. மீண்டும் ஒரு முறையேனும் சந்திக்க ஆவலாக உள்ளேன். சந்திப்புக்கள் தொடரட்டும். வாழ்க்கை என்பது ஒரு முறைதான் வாழ்வது, உங்கள் அறிவினால் அறிமுகமானவர்களை சந்திக்கவேயில்லை என்று மனம் பின்னாளில் ஏங்குவதை தவிர்ப்பது நல்லது .
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித உடலின் பல அற்புதமான திறன்களில், கற்களை உற்பத்தி செய்யும் திறனை விசித்திரமான ஒன்று எனக் கூறலாம். சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பை கற்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும். ஆனால் அவற்றைத் தவிர்த்து, உடலில் வேறு கற்களும் உருவாகலாம். யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத உடலின் பாகங்களில் அவை இருக்கலாம். உடலில் உருவாகும் இந்த கற்கள் எதனால் ஆனவை? இவை உருவாகாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? சிறுநீரக கற்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகில் பத்தில் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்னை உள்ளது. இரத்தத்தில் இருந்து சிறுநீரில் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கசிவதால் இது ஏற்படுகிறது. ஆக்சலேட்டுகள் என்பவை தாவரங்கள் மற்றும் மனிதர்கள் இரண்டிலும் காணப்படும் இயற்கை சேர்மங்கள் ஆகும். அதிக அளவு கால்சியம் மற்றும் ஆக்சலேட் கசிவு காரணமாக, அவை திட நிலையை அடைந்து, ஒரு கல் வடிவத்தைப் பெறும். சிறுநீரக கற்களின் அளவும் மாறுபடலாம். இவை ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலத்திலிருந்து ஒரு சென்டிமீட்டர் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். கற்கள் அசாதாரண வடிவத்திலும் இருக்கலாம். ஆனால் சிறுநீரக கால்வாயின் (calyces) கிளைகளுக்குள் கற்கள் உருவாகத் தொடங்கினால், அது மானின் கொம்பு வடிவத்தையும் பெறலாம். இது ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் (staghorn calculus) என்று அழைக்கப்படுகிறது. கற்கள் எப்போது பிரச்னையாக மாறுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுநீரக கற்கள், சிறுநீர்க் குழாய்களின் பாதையைத் தடுக்கும் போது பிரச்னை ஏற்படலாம். அதாவது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை எடுத்துச் செல்லும் இரண்டு குழாய்களில் ஏதேனும் ஒன்றைத் தடுக்கும்போது இது நடக்கலாம். இதனால், சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், கீழ் முதுகில் கடுமையான வலியையும் பாதிக்கப்பட்ட நபர் அனுபவிக்கலாம். இதன் காரணமாக, சிறுநீரகத்தைச் சுற்றி சிறுநீர் குவியத் தொடங்குகிறது அல்லது சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பித்தப்பையில் கற்கள் உருவாவதும் ஒரு பிரச்னையாகும், இவை பித்தப்பை கற்கள் என்று அழைக்கப்படுகின்றன. பித்தப்பையில் இருந்து குடலுக்கு பித்தநீரைச் எடுத்துச் செல்லும் குழாய்களில் அல்லது பித்தப்பைக்குள் இந்த கற்கள் உருவாகின்றன. பித்தநீரில் உள்ள கொழுப்பு அல்லது நிறமிகள் காரணமாக பித்தப்பை கற்கள் உருவாகலாம். அவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். சிறுநீரக கற்களைப் போலவே, பித்தப்பைக்குள் (பித்த நாளம் போன்றவை) ஒரு குறுகிய இடத்தில் பித்தப்பைக் கற்கள் சென்றால், அவை வயிற்று வலி, தொற்று மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். கல் உருவாவதற்கான பிற காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எக்ஸ்-ரேயில் எடுக்கப்பட்ட இந்தப் படம் நோயாளியின் வலது சிறுநீரகத்தில் கல் இருப்பதைக் காட்டுகிறது. இவை தவிர, வெவ்வேறு உடல் திரவங்களாலும் கற்கள் உருவாகலாம். உதாரணமாக, உமிழ்நீர் கற்கள் அதாவது உமிழ்நீரில் உள்ள கற்கள். காதுகள், தாடை மற்றும் நாக்கின் கீழ் உள்ள சுரப்பிகளால் உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. உமிழ்நீர் வாய்க்குள் விழுந்த பிறகு, உணவை ஈரமாக்கி, ஜீரணமாக்கும் செயல்பாட்டில் அது பெரும் பங்கு வகிக்கிறது. கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் போன்ற பல்வேறு தனிமங்களில் இருந்து உமிழ்நீர் கற்கள் உருவாகலாம். உமிழ்நீர் வாய்க்கு வரும் குழாயில், உமிழ்நீர் கல் உருவானாலோ அல்லது சிக்கிக்கொண்டாலோ, அது வாயில் உமிழ்நீர் விழுவதை நிறுத்தலாம். இது நடந்தால், ஒரு நபருக்கு கடுமையான வலி மற்றும் வாயில் வீக்கம் ஏற்படலாம். உமிழ்நீர் நின்றுவிடுவதால் உமிழ்நீர் சுரப்பியில் தொற்று ஏற்பட்டால், அது வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதற்கும் வழிவகுக்கும். டான்சில் கற்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இது தவிர டான்சில்களிலும் கற்கள் காணப்படும். தொண்டையின் அடிப்பகுதியிலும் பின்புறத்திலும் டான்சில் சுரப்பிகள் அல்லது அடிநாவு சுரப்பிகள் அமைந்துள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லிம்பாய்டு திசுக்களின் குழுக்கள். ஆனால் அவை மீண்டும்மீண்டும் வீக்கமடைந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம் என்பது தான் நகைமுரண். டான்சிலில் க்ரிப்ட்ஸ் (Crypts) என்று அழைக்கப்படும் குழிவுகள் (Cavities) உள்ளன. சில நேரங்களில் இவை உணவு மற்றும் உமிழ்நீரைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இதனால் டான்சில் கற்கள் அல்லது டான்சிலோலித்ஸ் உருவாகும். இந்த கற்கள் முதலில் மென்மையாக இருக்கும், ஆனால் காலப்போக்கில் அவை கடினமாகிவிடும். இதன் காரணமாக, வாய் துர்நாற்றம் மற்றும் அடிக்கடி தொற்றுநோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவை மட்டுமல்லாது உடலில் உள்ள வேறு சில பொருட்கள் கெட்டியாகி கற்களாக மாறிவிடக்கூடும். உதாரணமாக, சில சந்தர்ப்பங்களில், மனித மலம் அவ்வாறு மாறக்கூடும். அத்தகைய நிலை கொப்ரோலைட் (coprolite) என்று அழைக்கப்படுகிறது. இது தவிர தொப்புளில் சேரும் தோல் பகுதிகளும் கெட்டியாகி கற்கள் போல் ஆகிவிடும். இந்த கற்கள் ஓம்பலோலித்ஸ் (omphalolyths) என்று அழைக்கப்படுகின்றன. கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES சில எளிய முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும் கற்களைத் தவிர்க்கலாம். இவற்றில் மிக முக்கியமான விஷயம் உடலில் சரியான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். சரியான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரை நீர்த்துப்போகச் செய்கிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் வாயில் பாக்டீரியாக்கள் உருவாகாமல் தடுக்கிறது. இந்த முறையால் உடலில் பல வகையான கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். டான்சில் கற்களைத் தவிர்க்க, வாயை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். வழக்கமான பல் துலக்குதல் மூலம் அதன் ஆபத்தை குறைக்கலாம். இவை தவிர, உணவுமுறையும் முக்கியமானது, குறிப்பாக பித்தப்பைக் கற்களுக்கு. கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் உடல் பருமனும் உடலில் கற்களை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்கள் விரும்பினாலும் கூட தவிர்க்க முடியாத பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். பால் பொருட்கள், கீரை வகைகள் போன்ற கால்சியம் மற்றும் ஆக்சலேட் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்க உதவும். கற்கள் தொடர்பான பிரச்னை இருந்தால் என்ன செய்வது? பட மூலாதாரம்,GETTY IMAGES ஏற்கனவே ஒருவருக்கு உடலில் கற்கள் இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. கற்கள் காரணமாக ஒருவருக்கு உடல்நிலை மோசமடைந்தால், எண்டோஸ்கோபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்ற வேண்டியிருக்கும். சிறுநீரகக் கல் ஏற்பட்டால், சிறுநீரகக் குழாய் வழியாக கல் சிறுநீர்ப்பையை அடைந்து உடலில் இருந்து வெளியேறும் வரை காத்திருக்கலாம். சில சமயங்களில், சிறுநீர்ப்பையில் இருந்து ஒரு கல் வெளியேறும் போது, மடுவில் கல் தாக்குவதால் மெல்லிய சத்தம் உண்டாகும். கற்களைப் பிடிக்க சிறுநீர் கழிக்கும் போது தேநீர் வடிகட்டியைப் பயன்படுத்தும்படி உங்கள் மருத்துவர் உங்களிடம் சொல்லலாம். உமிழ்நீர் கற்கள் பிரச்னையைப் பொருத்தவரை, சில சமயங்களில் எலுமிச்சையை உறிஞ்சுவது கூட நிவாரணமாக இருக்கும். உமிழ்நீர் உருவாகும் செயல்முறையை எலுமிச்சை அதிகரிக்கும். அதிக உமிழ்நீர் ஒரே நேரத்தில் உமிழ்நீர் குழாயில் வழியாக வரும் போது கல் தானாகவே வெளியேறிவிடும். இதுபோல பல்வேறு வகையான கற்களுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் எளிய அன்றாட நடவடிக்கைகளும் அவை உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும். https://www.bbc.com/tamil/articles/cn007dq3gkvo
  7. அண்ணை வேணாம் அடுத்த போட்டிக்கு ஆள் தேவை! அதனால அவசரப்படவேணாம்!!
  8. ஏன் பையா ...... கொல்கத்தாவின் பீல்டிங்கும் சரி பாட்டிங்கும் சரி விறுவிறுப்பாகத்தானே இருந்தது......! ஆனால் காவ்யா கவலையுடன் கண்ணீர் விட்டதைக் கண்டதும் கல்கத்தா ஏன்தான் வென்று தொலைச்சுதோ என்று எனக்கும் கவலையாகி விட்டது....... உங்களுக்கும் அப்படி கவலை ஏற்பட்டதா பையா.......! 😢
  9. இந்த திரியின் போக்கில் எனது முதற்கேள்வியின் தொடர்ச்சியாக அடுத்ததாக நான் இறுதியில் இப்படி கேட்க இருந்தேன். உங்கள் கருத்து அதற்கு அப்படியே சாட்சியாகிறது. கேள்வி: காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில ஆக்கிரமிப்பு எதிரான பேரணிகளில் அல்லது ஒன்று கூடல்களில் பத்து இருபது மக்கள் தொகையில் தான் பங்கு பெறுகிறார்கள். ஆனால் இவ்வாறான இராணுவ அல்லது அரச ஆதரவு மற்றும் ஒன்று கூடல்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள் என்றால் இதில் எந்த பகுதி மக்களை சிங்களவர்கள் அல்லது சர்வதேசம் ஏன் புலம்பெயர் தமிழர்கள் பைத்தியக்காரர்களாக வகைப்படுத்துவர்??? அப்படி வகைப்படுத்தினால் ஒரு பகுதி மேலும் மேலும் குறைந்து செல்வதும் மற்றப் பகுதியினர் தொடர்ந்து அதிகரித்து செல்வதும் தொடர்ந்தால் நாம் இறுதியில்????
  10. கால நேரங்கள் நெருங்க நெருங்க சந்திப்பை எப்படி வைக்கலாம் என என் மனதுக்குள் யோசித்துக்கொண்டே இருந்தேன். இதற்கான பொறுப்பை சிறித்தம்பியிடம் ஒப்படைக்கவும் விருப்பமில்லை. காரணம் நான் செல்ல இருக்கும் கொண்டாட்ட நிகழ்வு என்ன நிலையில்,திட்டமிட்ட படி நேரகாலத்திற்கு நடந்தேறுமா என உத்தரவாதம் அறவே இல்லை. தமிழ் கொண்டாட்ட நிகழ்வுகளின் அனுபவம் இங்கே கண்முன்னே வந்து பேயாட்டம் ஆடியது. 😂 இருப்பினும் குறிப்பிட நாளுக்கு முதல் எதையுமே தீர்மானிக்கலாம் என பேசாமல் இருந்து விட்டேன். என்னதான் இருந்தாலும் இந்த சுப நிகழ்வு சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் எப்போது வருமோ என்ற பயமும் ஏக்கமும் மனதை குடைந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் இதே போல் தான் இன்னொரு யாழ்கள உறவின் சந்திப்பை வேலை நிமித்தம் காரணமாக அண்மைய நாட்களில் தவற விட்டிருந்தேன். "அண்ணை தெண்டிச்சு வரப்பாருங்கோ" என மனமார/உரிமையோடு கூப்பிட்டும் சந்திக்க முடியவில்லை என்ற மனக்கவலை வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது. ☹️
  11. எப்படி பலகாரங்கள் தொண்டைக்குள்ளால இறங்கியது. முழியே காட்டிக் கொடுத்திருக்குமே?
  12. ஆனாலும் சிங்கன் @குமாரசாமி மகா கெட்டிக்காரன். உறவினர்களின் கொண்டாட்டத்திலேயே பெரிய விருந்தோம்பல் செய்தது மட்டுமல்லாமல் பொதி செய்தும் கொடுத்திருக்கிறார்.
  13. அழகிய மரங்கள் நிறைந்த அடர் காடு .........! 🦚
  14. எங்கள் உரையாடலில்… உங்களின் திறமையை பற்றியும் கதைத்தோம். அதிலும்… யாழ். அகவை 26, சுய ஆக்கம் பகுதியில் நீங்கள் பல்வேறு கருப் பொருளில், பல ஆக்கங்களை எழுதிய உங்கள் ஆற்றலைப் பார்த்து வியந்தோம். 🤝👍🏽 அந்தத் திறமைக்கு… எமது பாராட்டுக்கள் ரசோதரன். 👏🏻 🙂
  15. யார் என்ன தான் சொன்னாலும் விடுதலை தேசியம் என்பது மக்கள் மனங்களில் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. இதைப்பற்றி ஊரில் கதைக்க எனக்கும் பயம்.அங்குள்ளவர்களுக்கும் பயம். திறந்தவெளி சிறைச்சாலையில் உள்ளவர்களின் மனநிலை இது தான். அதையும் மீறி சாந்தனின் இறுதி ஊர்வலம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாவீரர்தினங்களின் போது தம்மையும் அறியாமல் வெளிப்படுத்துகிறார்கள்.
  16. World Pictures · Suivre · 9 itinéraires de train les plus dangereux au monde.. * lien en 1er commentaire
  17. நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம் May 23, 2024 — கருணாகரன் — யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஈழத் தமிழரின் அரசியல் இன்னும் மூக்குச் சிந்தும் (அழுது புலம்பும்) நிலையிலிருந்து மீளவில்லை. மட்டுமல்ல, அது உடைந்தும் நலிந்தும் சீர்குலைந்த நிலைக்குள்ளாகி, அதைத் தூக்கி வளர்த்தவர்களையே இன்று துக்கத்துக்குள்ளாக்கியுள்ளது. “பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள்….” என இந்தத் துக்கத்தை பத்தியாளர் நிலாந்தனும் வெளிப்படுத்தியிருக்கிறார். நிலாந்தனுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மக்களுடைய கூட்டுத் துக்கமும் இதுவேதான். இந்தப் பலவீனமான – பரிதாபமான – பாதகமான நிலைமைக்குரிய கூட்டுப் பொறுப்பை, தமிழரின் தீவிர அரசியலைக் கேள்விக்கும் விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் இடமின்றித் தொடரும் ஊடகர்கள், புத்திஜீவிகள், பத்தியாளர்கள், அரசியற் தரப்பினர், பல்கலைக்கழக சமூகத்தினர், தமிழ்ச் சிவில் சமூகத்தினர் உட்பட சில மதப் பிரமுகர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களுடைய கூட்டுத் தவறே இந்த நிலைக்குக் காரணமாகும். காரணம் எளியதே. யுத்தத்திற்குப் பிறகான சூழல் (Post – War period) என்பது முற்றிலும் வேறானது. அது தமிழ்ச் சமூகத்தையும் அதனுடைய அரசியலையும் புத்தாக்கம் செய்ய வேண்டியது. 1. அரசியற் சிந்தனை மாற்றத்தின் அடிப்படையில். துரோகி – தியாகி என்று கறுப்பு – வெள்ளையாக அரசியலைச் சுருக்கிப் பார்க்காமல், முடிந்த அளவுக்கு அனைத்துத் தரப்புகளோடும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கு முயற்சித்திருக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தை ஒருங்கிணைத்துத் திரட்டி, அரசியல், பொருளாதார, அறிவியல் ரீதியாகப் பெரும் அணியாக்கியிருக்க வேண்டும். இதில் புலம்பெயர் மக்களையும் உள்வாங்கிருக்க முடியும். இதில் உள்ள சிக்கலான அக – புற நெருக்கடிகளைப் புரிந்து கொண்டு அவற்றைக் கையாளக் கூடிய எந்தத் தலைமையும் மேலெழவில்லை. அதனால் இவை எல்லாம் அப்படி நிகழவில்லை. அரசாங்கத்தோடு இணைந்து நிற்கின்ற தரப்புகளும் தமிழ்த்தேசியத் தரப்புகளும் எப்படி ஒருங்கிணைந்து செயற்பட முடியும்? என்ற கேள்வி எழலாம். இதற்குச் சிறந்த பதில், இந்த இரண்டு தரப்புகளும் இவை இரண்டுக்கும் அப்பாலான சமூக விடுதலையுடன் கூடிய இனவிடுதலையை முன்னிறுத்தும் தரப்புகளைக் கூட தம்முடன் இணைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கவில்லை என்பதாகும். காரணம், இந்த இரண்டு தரப்பும் தேர்தல் அரசியலில் மட்டும் மையங் கொண்டிருந்ததேயாகும். அதற்கு அப்பால், விடுதலை அரசியலை இவை முன்னிறுத்திச் சிந்தித்திருந்தால், அதைப் பலப்படுத்தும் மூலோபாயம், தந்திரோபாயம், வேலைத்திட்டம் என்ற அடிப்படையிலேயே செயற்பட முயன்றிருக்கும். ஆகவே இதில் பெரும் தவறு நிகழ்ந்தது. இதைச் சுட்டிக்காட்டி, புத்தாக்க அரசியலை மேற்கொள்வதற்குரிய அழுத்தத்தைக் கொடுப்பதில் தமிழ்ச் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் பத்தியாளர்களும் பல்கலைக்கழக சமூகத்தினரும் தவறி விட்டனர். பதிலாக இதைச் சுட்டிக்காட்டிய தரப்பினரை விலக்கம் செய்வதிலேயே இந்தத் தரப்பினர் குறியாக இருந்தனர். இன்னும் அப்படித்தான் உள்ளனர். கெட்டாலும் பரவாயில்லை, எந்தப் புத்திமதியையும் கேட்க மாட்டோம் என்ற பிடிவாதமும் அறியாமையும் இவர்களைச் சூழ்ந்துள்ளது. 2. தமிழ்ச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மீள்குடியேற்றத்தையும் புனரமைப்பையும் அரசாங்கமே தனித்து மேற்கொண்டது. அதற்கான செயலணியைக் கூட யுத்தப் பாதிப்பு நடந்த வடக்குக் கிழக்கில் செயற்படுத்தவில்லை. யாரும் இதில் இடையீட்டைச் செய்யவில்லை. இதில் தமிழ்ப் புத்திஜீவிகளும் துறைசார் வல்லுனர்களும் பெரும் தவறிழைத்தனர். இதைப்பற்றி இந்தக் கட்டுரையாளர் மட்டுமே பல தடவை சுட்டிக்காட்டியிருந்தார் மேலும் சிலரும் பேசியுள்ளனர். தமிழ் அரசியற் கட்சிகள், அவற்றின் தலைவர்கள் (அரச ஆதரவு – எதிர்ப்பு இருதரப்பும்தான்) எவையும் இதைப்பற்றிச் சிந்தித்ததில்லை. இதனால் தமிழ்ச்சமூகம் பொருளாதார ரீதியாகம் சமூக நிலையிலும் நலிவடைந்து கொண்டே செல்கிறது. குறிப்பிடத்தக்க அளவுக்குப் புதிய தொழில்துறைகள் எதுவும் 15 ஆண்டுகளில் வடக்குக் கிழக்கில் உருவாக்கப்படவில்லை. இப்போது இந்தப் பிராந்தியத்திலுள்ள தமிழர்களுக்கான ஒரே தெரிவு நாட்டை விட்டு வெளியேறுதல். அல்லது அரச தொழில் வாய்ப்புகளில் சரணடைதல் மட்டுமே. 3. தமிழ்ச்சமூகத்தின் அக – புற முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதில் நேர்மையான வழிமுறைகளை தமிழ்த்தேசியச் சக்திகள் எவையும் உரிய முறையில் கவனப்படுத்திச் செயற்படவில்லை. இதனால் இதை வேறு தரப்புகள் தமக்கிசைவாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதைக்குறித்த சமூகவியல், பொருளியல் ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் குறைந்த பட்சம் தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களாவது பங்களித்திருக்க முடியும். சற்று முயற்சித்திருந்தால், இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதைக்குறித்த ஒரு கவனத்தை உண்டாக்கி, ஒட்டு மொத்தமாக அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு ஆய்வுகளைச் செய்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால், கள நிலையை பொதுவெளியில் சரியாக முன்வைத்திருக்க முடியும். அது செய்யப்படவே இல்லை. 4. வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் பலமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. ஏன், சம்பிரதாயமாகக் கூட அது நிகழவில்லை. இன்னும் கடந்த காலத் தவறுகள், பிரச்சினைகளுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் பகைமை நிலையே நீடிக்கிறது. அத்துடன் இன்னொரு தமிழ் பேசும் சமூகத்தினரான மலையக மக்களுடனான அரசியல் உறவையும் வளர்க்கவில்லை. இதனால்தான் தற்போது தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டைத் தனியே வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகத்துக்குள் மட்டும் மட்டுறுத்திப் பார்க்கும் அவலம் நேர்ந்திருக்காது. இதிற்கூட இன்னும் நெருக்கடியே உண்டு. தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் மட்டுமல்ல, எத்தகைய அரசியல் நிலைப்பாட்டையும் ஒரு முகப்பட்டு எடுப்பதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகளிடத்தில் கூட ஒருங்கிணைவும் புரிந்துணர்வும் இல்லை. இந்தப் பலவீனத்தைப் புரிந்து கொள்வதில் கூட இன்னும் அரசியற் கட்சிகள், அவற்றின் தலைமைகள் உள்ளிட்ட தமிழ்ச்சக்திகள் எவையும் உருப்படவில்லை. 5. எதிர்ப்பு அரசியல் – இணக்க அரசியல் இரண்டுக்கும் இடையிலான அர்த்தப்பாடுகளில் உள்ள குழப்பமாகும். உண்மையில் தமிழ்த் தரப்பு இவை இரண்டையும் அதன் சரியான பொருளில் இங்கே மேற்கொள்ளவில்லை. இங்கே எதிர்ப்பு அரசியல் என்பது, செயற்தன்மையற்ற தனியே வாய்ச் சவாடல் அரசியலாகவும் இணக்க அரசியலானது, சரணடைவு அரசியலாகவுமே சுருங்கிப்போயுள்ளது. இவை இரண்டினாலும் எந்தப் பெரும்பயன்களும் மக்களுக்குக் கிடையாது. மட்டுமல்ல, இவை எந்த வகையிலும் ஒடுக்கப்படும் மக்களுடைய விடுதலைக்குரியவை இல்லை. இதனால்தான் தமிழ்ச் சமூகம் தமிழ் அரசியற் சக்திகளிடத்திலும் அதை வலியுறுத்துவோரிடத்திலும் நம்பிக்கையற்றிருக்கிறது. எவரிடத்திலும் நம்பிக்கை கொள்ள முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான பொறுப்பையும் இந்தச் சக்திகளே ஏற்க வேண்டும். வெறுமனே புலம்புவதால் பயனில்லை. கூடவே பகையை மறப்பதற்கான களமும் காலமும் இதுவாகும். எந்த வகையிலும் இலங்கையில் இனிமேல் முரண்பாடுகளை மீளுருவாக்கம் செய்ய முடியாது. அப்படி மீள வளர்த்தால் அதனால் பாதிப்புக்குள்ளானோரே தொடர்ந்தும் பாதிப்பைச் சந்திக்க நேரும். அரசுக்கும் ஆட்சித் தரப்பினருக்கும் அதனால் பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படாது. அதுதான் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு நான்கு காரணங்கள் உண்டு. 1. பிராந்திய சக்தியான இந்தியா தொடக்கம் அவுஸ்திரேலியா, யப்பான் மற்றும் மேற்கு நாடுகள் அனைத்தும் இலங்கையின் முரண்பாட்டைத் தணிவு நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றே வலியுறுத்தின – இன்னும் அப்படித்தான் சொல்கின்றன. நல்லிணக்கம், பகை மறப்பு, கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தீர்வை எட்டுங்கள் என்றே எல்லா நாடுகளும் வலியுறுத்துகின்றன. இதைச் செய்ய வேண்டியது அரசாங்கம் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பும்தான். முக்கியமாகத் தமிழ்த்தரப்புமாகும். ஆனால், இது நிகழவில்லை. இதனால் இந்த நாடுகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்சினையில் தமது கவனக்குவிப்பை மட்டுப்படுத்தியுள்ளன. அதாவது இது தொடர்பாக அவை சீரியஸாக இல்லை. எனவே இலங்கை அரசை விடச் சர்வதேச சமூகத்தை நம்பிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கே பாதிப்பும் ஏமாற்றமும் ஏற்படும். 2. செயற்பாட்டு அரசியல் இல்லாதொழிந்து விட்டது. இதனால் அரசின் ஒடுக்குமுறையையும் இனவாத நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் பலமற்றுப் போனது. ஆகவே அரசின் இனவாதச் செயற்பாடுகளை எந்த வகையிலும் மட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அரகலய போன்றதொரு மக்கள் போராட்டத்தை (சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு) மேற்கொள்வற்கு தமிழ்ச்சமூகத்தினால் முடியுமா? முடியாது என்பதே வெளிப்படையான பதில். காரணம், அப்படியான அரசியற் கூருணர்வும் அர்ப்பணிப்பு மனப்பாங்கும் இன்று தமிழர்களிடத்தில் இல்லாதொழிந்துள்ளது. 3. பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்துவதற்கான பணிகளைச் செய்வதற்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை என்றொரு புலுடா தொடர்ந்து விடப்படுகிறது. ஆனால், இதைக் கடந்து பலர் தனியாகவும் கூட்டாகவும் பல விதமான பணிகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். எந்த அரசியற் கட்சியையும் விடத் தனியாட்களாகவும் அமைப்புகளாகவும் செய்து வரும் பணி பெரிது. இதைச் சிவில் செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர் சமூகமும் அரசியற் கட்சிகளும் செய்யாது ஒதுங்கின. இதனால் தாம் கையறு நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தமிழர்களிற் பெரும்பாலானோர் சிந்திக்கின்றனர். இதை எதிர்கொண்டு எழுவதற்குப் பதிலாக தாம் தப்பித்தால் போதும் என்று விலகிச் செல்கின்றனர். 4. தமிழ் மக்கள் சமாதானத்திலும் அமைதித் தீர்விலும் பற்றுக் கொண்டவர்கள். அதையே அவர்கள் நாடுகிறார்கள் என்ற நம்பிக்கை பிற சமூகங்களிடம் வலுப்பெறவில்லை. தாம் சமாதானத்தின் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று சத்தியம் செய்தாலும் அதை நம்பக்கூடிய சூழல் இன்னும் பிற சமூகங்களிடம் உருவாகவில்லை. இதைப்பற்றிய மீளாய்வும் கள ஆய்வும் மிக அவசியமானது. சமாதானத்திலும் தீர்விலும் மெய்யாகவே எமக்குப் பற்றிருக்குமானால் இந்த ஆய்வைச் செய்து, அதற்கான பரிகாரமும் காணப்பட வேண்டும். இல்லையெனால் இந்த மாதிரி அணிகள், குழுக்கள், பிரிவுகள் என்றே நிலைமை நீடிக்கும். https://arangamnews.com/?p=10777
  18. போராட்ட/ யுத்தகாலத்திற்கு முன்னரும் இப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன. இப்படி பெரும்பான்மையாக ஆர்ப்பாட்டமாக இல்லாமல் எல்லாமே நடந்தேறின. அதை எவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அன்றைய காலங்களில் ஊடக வெளிச்சங்களும் இல்லை. தமிழ் மக்களும் அதற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றே நினைக்கின்றேன். நான் மட்டக்களப்பில் இருந்த போது வெசாக் பண்டிகைகளுக்கு சென்றிருக்கின்றேன்.புதினம் பார்க்க சென்றிருக்கின்றேன். தீன் பண்டங்கள் வாங்கி உண்டிருக்கின்றேன்.வித்தியாசமான உணவுகள்.வித்தியாசமான சுவைகள். தமிழ் கலாச்சாரத்தை விட வித்தியாசமான உடை நடை பாவனை மக்கள் கண்ணுக்கு கவர்ச்சி என பலவற்றை சொல்லலாம். ஆனால் ஒன்றுமட்டும் சொல்வேன்.நான் அங்கு சென்று வந்ததால் என் இன விடுதலையும் அல்லது தமிழ் இன பற்றும் தமிழ் உணர்ச்சியும் எள்ளளவும் குறையவே இல்லை. எனினும் சிங்கள பேரினவாதிகள் இப்படியான சம்பவங்களை அரசியலாக்கினால் நாமும் அரசியலாக்குவதில் தவறில்லை. அதே நேரம் எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்கள் கூட்டம் இல்லை என்றால் அங்கே எமது அரசியல்வாதிகளின் தவறே ஒழிய மக்கள் தவறில்லை.
  19. வீரப்பையனுக்காகாவே இந்தப் போட்டியில் கலந்து கொண்டேன். அது மட்டுமல்ல பல சிரமங்களுக்கு மத்தியில் போட்டியை நடாத்தும் கிருபன்ஜி யின் உழைப்புக்காகவும் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறேன். ஒரு சிக்கல் யூன் 14 திகதி ஜரோப்பிய கால்பந்தாட்ப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. எனக்கு கிரிக்கட்டை விட கால்பாந்தாட்டப் போட்டிகளை விரும்பி ரசிப்பேன். இதே பிரச்சினை யாழ்களத்தில்பலருக்கும் இருக்கும்.
  20. # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN CAN 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT SCOT 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA PNG 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN SL 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN Select IRL Select IRL Select USA Select USA Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) PAK #A2 - ? (1 புள்ளிகள்) IND 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM Select SCOT Select SCOT Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) AUS #B2 - ? (1 புள்ளிகள்) ENG 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI AFG AFG Select AFG Select PNG Select PNG Select UGA Select UGA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) NZ #C2 - ? (1 புள்ளிகள்) AFG 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL SL BAN Select BAN Select NED Select NED Select NEP Select NEP Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA #D2 - ? (1 புள்ளிகள்) SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 IND SA IND 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 AUS AFG AUS 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 NZ PAK PAK 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 ENG SL SL 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 AUS SA AUS 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 IND AFG IND 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 PAK SL SL 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 NZ ENG NZ 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 IND AUS AUS 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 AFG SA SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 ENG PAK PAK 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 NZ SL NZ சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK PAK ENG Select ENG NZ NZ Select NZ Select SL Select SL Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) PAK #அணி 1B - ? (2 புள்ளிகள்) NZ 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS AFG Select AFG Select SA Select SA Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) AUS #அணி 2B - ? (1 புள்ளிகள்) IND 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) PAK 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) RACHIN RAVINDRA 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
  21. எப்படியும் கடைசியாக வாற ஆள்த்தானே ஆறுதலா வாங்க.
  22. அவசரம் ஒண்டும் இல்லை. ஆறுதலாக வரவும். இப்படிக்கு @goshan_che
  23. நவநாஜிய பாணியிலே பல அரசாங்க துறைகள் இணைந்து பலம் பொருந்தியவர்களுடன் சேர்ந்து எங்கள் இருப்புகளை, குடித்தொகையை மாற்றியமைக்க முயல்கின்றனர் - பேராசிரியர் பத்மநாதன் Published By: RAJEEBAN 27 MAY, 2024 | 06:02 PM நவநாஜிய பாணியிலே பல அரசாங்க துறைகள் இணைந்து பலம் பொருந்தியவர்கள், செல்வாக்கு பொருந்தியவர்களுடன் இணைந்து அவர்கள் எங்கள் இருப்புகளை குடித்தொகையை மாற்றியமைப்பதற்கும் முயல்கின்றனர் என தெரிவித்துள்ள பேராசிரியர் பத்மநாதன் மீண்டும் எங்களின் தேசிய உரிமையை எழுச்சியை வளர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார். பேராசிரியர் பத்மநாதனின் 'ஒரு மறைந்துபோன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றவேளை ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு அவர், "நாங்கள் மீண்டும் பாராளுமன்ற ரீதியாகவும் வெளிப்புறமாகவும் எங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவேண்டும். ஒன்று மட்டும் சொல்கின்றேன்... தமிழ் ஈழம் என்ற பேச்சுக்கு இடமில்லை. எந்த ஒரு நாடும் ஆதரிக்காது. இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது. மற்றவற்றை இறைமை அதிகாரம், சுயநிர்ணய உரிமை இவற்றைதான் பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் பேச்சுவார்த்தை மூலம் அவசியம்" எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையின்போது மேலும் கூறுகையில், "தமிழ் தேசியத்தின் உற்பத்திக்கு அடிநாதமான மொழிவழக்கும் இடையறாத நிலப்பரப்பும் கிறிஸ்துவுக்கு முதல் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது. இலங்கை தமிழர்களினதும் சிங்களவர்களினதும் முன்னோர்கள் நாகர்களின் வழிமுறை சந்ததியினரே. 19ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் கிடைத்த பின்னர் சிங்கள தலைவர்கள், படித்தவர்கள், ஸ்டேட் கவுன்சிலில் இருந்தவர்கள், பக்குவமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள், தமிழர்கள் ஒரு தேசிய இனம் நாட்டில் ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி அமையவேண்டும் என்றார்கள். நாங்கள் என்ன செய்தோம் எட்டியும் பார்க்கவில்லை. இப்போது என்ன சொல்கின்றோம்... ஒஸ்லோ பிரகடனத்தில் எழுதப்பட்டுள்ளது என்கின்றோம். இதனை நான் அவருக்கு பிரச்சாரமாக சொல்லவில்லை... உண்மையை சொல்லவேண்டும். எங்கள் பிரதிநிதிகள் பௌத்த விகாராதிபதியொருவருக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதியிடம் முறையிட்டவேளை அவர் அந்த திணைக்கள தலைவருக்கு சொன்னார், எனக்கு நீர் இந்த வரலாறு படிப்பிக்க தேவையில்லை, புராதன காலத்தில் வடகிழக்கில் உள்ள பௌத்த நிறுவனங்களின் நிலங்கள் எல்லாம் தமிழருக்கு சொந்தமானவை. அந்தளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இனவாதிகளை பற்றி நான் சொல்லவில்லை. இவர் இனவாதம் பேசாதவர். ஆனால், சில விடயங்களை செய்வதற்கு துணிச்சல் அற்றவர்; ஆற்றல் அற்றவர். எங்களுடைய கோமாளித்தனம் தொடர்ந்து வந்ததனால் எங்கள் இருப்பிற்கே பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையில் சொல்லப்பட்டவற்றை மீறிவிட்டனர், ஜனாதிபதியை கேளாமல் நீதிமன்றத்தை நிராகரித்தும் அவர்கள் பல விடயங்களை செய்கின்றார்கள். எங்கட ஆட்கள் 15 இலட்சம் பேர்தான் இருக்கின்றார்கள். ஆனால் இருப்பது 17 கட்சி மலையகத்தில் உள்ள கட்சிகளுடன் சேர்த்தால் 24 கட்சி. எங்கே போகப்போகின்றோம்! நாங்கள் தற்போது என்ன செய்யவேண்டும் என்றால், இவற்றை பாதுகாப்பதற்கு என்னென்ன நிறுவனங்கள் உள்ளனவோ தற்போதைய அரசமைப்பின்படி என்னென்ன நிறுவனங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அவற்றை பயன்படுத்தி இயக்கவேண்டும். அவற்றின் மூலம் இந்த ஆவணங்களை தேடவேண்டும், தேடி பாதுகாக்க வேண்டும், அருங்காட்சியகங்களை அமைக்கவேண்டும், காட்சிப்படுத்த வேண்டும், இவ்வாறான நூல்களை எல்லாம் மக்களுக்கு வழங்கி விளங்கப்படுத்தி மீண்டும் எங்களின் தேசிய உரிமையை, எழுச்சியை வளர்க்கவேண்டும். தேசிய உணர்ச்சி எனும்போது நான் அரசியல் பேசுகின்றேன் என எவரும் சொல்லக்கூடாது. சர்வதேச ரீதியாகவும் சிங்கள மன்னர்களின் ஆட்சி வழக்கின்படியும் தமிழ் மக்கள் அவர்களின் அரசுகள், பிராந்தியங்கள் தனித்துவமானவை. அரசுரிமையில் இறைமையில் பங்குள்ளவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம். இது பற்றி எங்களுடைய துறையில் உள்ளவர்கள்தான் அடக்கி வாசிக்கின்றார்கள். உள்ளதை சொல்வதற்கு பயப்படக்கூடாது. நாங்கள் மீண்டும் பாராளுமன்ற ரீதியாகவும் வெளிப்புறமாகவும் எங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவேண்டும். ஒன்று மட்டும் சொல்கின்றேன்... தமிழ் ஈழம் என்ற பேச்சுக்கு இடமில்லை. எந்த ஒரு நாடும் ஆதரிக்காது. இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது. மற்றவற்றை இறைமை அதிகாரம், சுயநிர்ணய உரிமை இவற்றைதான் பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் பேச்சுவார்த்தை மூலம் அவசியம். ஏனென்றால், நிலைமை ஒன்றும் நடக்காவிட்டால் 22ஆம் ஆண்டை பற்றித்தான் சிந்திக்கவேண்டும்" என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/184634
  24. 🤣...... தேனிசை தென்றல் தேவா அவர்கள் ராஜா என்ன கட்டுப்பாடுகள் போட்டாலும் பிரதி பண்ணியே தீருவது போல.......😀. இன்றைக்கு இங்கே விடுமுறை, மெமோரியல் டே. நாளைக்கு வேலையிலிருந்து தான் ஒரு தீர்வை யோசிக்க வேண்டும்.......🤣.
  25. எனக்கும் ஒரு கேள்வி உள்ளது? ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினால் மட்டும் போதுமா? 2வது 3வது வாக்குகளுக்கும் சேர்த்து இன்னும் இரண்டு தமிழ் வேட்பாளர்களை நிறுத்த ஏன் யோசிக்கவில்லை? ஏன் கேட்கிறேன் என்றால் 2வது 3வது வாக்குகளை யாரோ பெயர் தெரியாத சிங்கள வேட்பாளர்களுக்குப் போடுவதை விட தெரிந்த தமிழ் வேட்பாளர்களுக்குப் போட்டு தமிழர்களது ஒற்றுமையை(????) வெளிக்காட்ட வேண்டியது தானே!! இல்லை 2வது வாக்கு ரணிலுக்கு என்ற dealலா!!
  26. படம் காட்டாத..... எண்டு துவங்கினால் என்ன செய்வியள்? என்ன செய்வியள்? 😂
  27. படக்குறிப்பு,‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ திரைப்படத்தில் ஒரு காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், அசீம் சாப்ரா பதவி, கான், சினிமா எழுத்தாளர் 25 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் பாயல் கபாடியாவின் புதிய திரைப்படமான 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் நடுவர் குழு (ஜூரி) விருதை வென்றுள்ளது. பொதுவாக மும்பை என்றாலே பாலிவுட் நட்சத்திரங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்காமல், அதே மும்பையின் இதயத் துடிப்பாக விளங்கும், புலம்பெயர்ந்த மக்களின் குரல்களைத் தனது திரை மூலம் ஒலிக்கச் செய்திருக்கிறார் பாயல். கபாடியாவின் முதல் புனைகதை திரைப்படமான ‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ என்ற இந்தப் படம், வியாழன் இரவு கேன்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படம் முடிந்த பிறகு அங்கிருந்தவர்கள் 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி இதைப் பாராட்டினர். இது அதன் இயக்குநருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமையும், பெரும் சாதனையும்கூட. இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி விருதைப் பெற்றுள்ளது. இது படத் தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான சாதனை. கடந்த முப்பது வருடங்களில் கான் திரைப்பட விழாவின் முக்கிய போட்டிப் பிரிவில் இந்தியத் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டதும் இதுவே முதல் முறை. இந்த படம் 38 வயதான இயக்குநர் பாயல் கபாடியாவையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. படக்குறிப்பு, மும்பைக்கு பணிக்காக புலம்பெயர்ந்த பெண்களின் கதையைப் பேசுகிறது பாயல் கபாடியாவின் இந்தப் படம். கடந்த நாற்பது ஆண்டுகளாகவே, உலகளாவிய திரைப்பட விழாக்களில் இந்திய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. கடந்த 1988ஆம் ஆண்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், மீரா நாயரின் சலாம் பாம்பே என்ற திரைப்படம், 'கேமரா டோர்' விருதை வென்றது. செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, மீராவின் ‘மான்சூன் வெட்டிங்(2001)’ என்ற திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருதை வென்றது. இயக்குநர் ரித்தேஷ் பத்ராவின் புகழ்பெற்ற திரைப்படமான ‘தி லஞ்ச்பாக்ஸ்’, 2013ஆம் ஆண்டு கேன்ஸில் கிராண்ட் கோல்டன் ரயில் விருதை வென்றது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குநர் சுசி தலாதியின் ‘கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்’ திரைப்படம் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ஜூரி மற்றும் பார்வையாளர்களின் விருதுகளை வென்றது. ஆனால் இந்தியா போன்ற உலகில் அதிக படங்களைத் தயாரிக்கும் ஒரு நாட்டுக்கு, பாம் டோர் அல்லது கேன்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய விருதுகளில் ஒன்று கிடைப்பது பல ஆண்டுகளாக எட்டாக்கனியாகவே இருக்கிறது. இருப்பினும் இந்த ஆண்டு கபாடியாவின் சிறப்பான மற்றும் பார்வையாளர்களை மனதளவில் தொடக்கூடிய இந்தப் படம் அந்த ஏக்கத்தைத் தனிப்பதற்கான நல்வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே இந்தப் படம் பல தரப்பில் இருந்தும் சிறந்த விமர்சனங்கள் மற்றும் நல்ல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தி கார்டியன் பத்திரிகை இந்தப் படத்திற்கு ஐந்து நட்சத்திரம் வழங்கி, "தனித்துவமான மற்றும் மனிதநேயம் நிறைந்த ஒரு கதை" என்று தனது மதிப்பாய்வில் விவரித்துள்ளது. விமர்சகர்கள், சத்யஜித் ரேயின் மஹாநகர் (தி பிக் சிட்டி) மற்றும் ஆரண்யேர் தின் ராத்திரி (டேஸ் அண்ட் நைட்ஸ் இன் தி ஃபாரஸ்ட்) ஆகியவற்றுக்கு இணையாக இந்தப் படத்தை ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். மேலும் இண்டிவயர் அதன் ஏ-கிரேடு மதிப்பாய்வில் கபாடியாவின் திரைப்படம் மும்பையின் அழகைப் பிரதிபலிப்பதாகத் தனது மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது. படக்குறிப்பு, இந்தப் படம் குறித்துப் பேசுகையில், "வேலைக்காக வீட்டைப் பிரிந்து வேறு இடத்திற்குச் செல்லும் பெண்களைப் பற்றிப் படம் எடுக்க விரும்பினேன்" என்கிறார் பாயல் கபாடியா. பிரபலமான இந்திய கலைஞரான நளினி மலானியின் மகளான பாயல் கபாடியா, பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மும்பையை நன்கு அறிந்தவர். அவர் கூறுகையில், "நாட்டில் உள்ள பல இடங்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு வேலை செய்வது சற்று எளிதாக இருக்கும் இடமாகவும் இது இருக்கிறது" என்கிறார். "வீட்டை விட்டு வேறு எங்காவது வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி படம் எடுக்க விரும்பினேன்." கபாடியாவின் ‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ திரைப்படம், வேலைக்காக மும்பைக்கு புலம்பெயர்ந்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்திய செவிலியர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனை மற்றும் சேர்ந்து வாழும் நெரிசலான அடுக்குமாடி குடியிருப்பு என அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் வாழ்க்கையை காட்சிப் படுத்தியுள்ளது. படத்தில் வரும் செவிலியரான பிரபா (கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் படத்தில் துணை வேடத்தில் நடித்த கனி குஸ்ருதி) ஒரு திருமணமானவர். அவரது கணவர் ஜெர்மனியில் பணிபுரிகிறார். அவர்களுக்குள் பெரிதாக எந்த வித தொடர்பும் இருக்காது. ஆனால் திடீரென்று ஒருநாள் எதிர்பாராத விதமாக அவரது கணவரிடமிருந்து ஒரு குக்கர் அவருக்கு பரிசாக கிடைக்கிறது. தனது திருமண வாழ்க்கையின் காதலுக்கான அடையாளம் இதுதான் என்பது போல் அவர் அந்த குக்கரை அணைத்துக் கொள்கிறார். கதையில் வரும் இரண்டாவது செவிலியரான அனு(திவ்ய பிரபா) மிகவும் துறுதுறுவென இருக்கும் குணம் கொண்டவர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இளைஞரான ஷியாஸை (ஹிருது ஹாரூன்) ரகசியமாக காதலிக்கிறார். அனு இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஷியாஸுடனான காதலை அவரது குடும்பம் ஏற்காது. சுமார் 2.2 கோடி மக்கள் நெருக்கியடித்து வாழ்ந்துகொண்டிருக்கும் மும்பையின் நெரிசலான சூழலும், அதன் கடுமையான மழைக்காலமும், அனுவையும் ஷியாஸையும் தனிமையில் காதலிக்க அனுமதிப்பதில்லை. இந்நிலையில், இவர்கள் பணிபுரியும் அதே மருத்துவமனையைச் சேர்ந்த மற்றொரு செவிலியரான பார்வதி (சாயா கதம், இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் இவர் நடித்த இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன), பெருநகரின் பணக்காரர்களுக்காக நகர்ப்புற குடிசைப்பகுதியை மறுசீரமைப்புக்கு உட்படுத்த, அவர் இருந்த பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பார்வதி மும்பையை விட்டே கிளம்பும் முடிவை எடுக்கிறார். இந்தத் திருப்பம், இந்தக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் போக்கை மாற்றுவதற்கான வாய்ப்பாக இருக்குமா? கபாடியா இந்தப் படத்திற்கு முன்பு இயக்கிய ‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ என்ற ஆவணப் படத்தில் வரும் மாணவர்களின் அரசியல் பிரச்னைகளுக்கும், இந்தப் படத்தில் பேசியுள்ள இருப்பிட அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த ஆவணப்படம் 2022ஆம் ஆண்டு கேன்ஸ் திருவிழாவின் டைரக்டர்ஸ் ஃபோர்ட்நைட் சைட்பார் பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் இது சிறந்த ஆவணப் படத்திற்கான லுயி டோர்(L'Œil d'or) "கோல்டன் ஐ" விருதை வென்றது. இந்தியாவின் புகழ்பெற்ற அரசு திரைப்படக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தைப் பேசும் கதையே ‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ ஆவணப்படம். அந்தப் போராட்டத்தில் தானும் ஓர் அங்கமாக இருந்த கபாடியா 2018இல் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, சினிமாத் துறையில் கால் பதித்தார். அவர் 2022இல் அளித்த நேர்காணல் ஒன்றில் அந்த ஆவணப்படத்தை "பொது பல்கலைக் கழகங்களுக்கான காதல் கடிதம் என்றும் அவை சமூகத்தின் அனைத்து அடுக்கு மக்களும் ஒன்றாக இருக்கக்கூடிய, அறிவார்ந்த மற்றும் அடிப்படை சுதந்திரத்தைப் பெறக்கூடிய இடமாக இருக்க வேண்டும்" என்றும் விவரித்தார். இதே உணர்வு அவரின் தற்போதைய படமான ‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ திரைப்படத்திலும் எதிரொலிக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c4nnj14pmgzo
  28. உலகிலேயே இலங்கையில் தான் யானைகளின் அடர்த்தி அதிகம் என்று எங்கோ வாசித்திருக்கின்றேன். எங்களால் அழித்துக் கொண்டே போகப்படும் காடுகள் தொடர்ந்து சிறுக்கின்றன. யானைகளுக்கு போதிய சாப்பாடும் இல்லை, போக்கிடமும் இல்லை. ஊருக்குள்ளும், வீதிகளிலும் அவை வருகின்றன. இதுவே தான் தமிழ்நாட்டிலும். உதாரணம்: சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் அவர்கள் யானைகள் உலாவும் காட்டை அழித்தே அவரின் பெரும் ஆச்சிரமத்தை உருவாக்கினார். எங்கே போகும் அங்கே குடியிருந்த யானைகள்?
  29. பழக்கத்தை மாத்துவது கடினம் சிறியண்ண..கு.சா தாத்தா..தாத்தாவாகவே இருக்க விடுங்கள்..யாழில் மட்டும் நான் உட்பட தாத்தா என்று தானே சொல்வது..இனி இந்த திரி கொழுந்து விட்டு எரியாமல் இருந்தால் சரி..🤭
  30. மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..
  31. நல்ல சந்திப்பும், அருமையான வர்ணிப்பும். @குமாரசாமி அண்ணை எம் ஜி ஆர் கலரில் தக தக என பட்டு வேட்டி சால்வையில் மின்னி இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது😎. @Kavi arunasalam போய் இருந்தால் உங்கள் அனைவரையும் ஒரு கருத்தோவியமாக்கி இருப்பார். படம் இல்லாவிடிலும் கருத்துபடமாவது பாத்திருக்கலாம். நேரம் வாய்கவில்லை.
  32. வ‌வ்வ்வ்வ்வ்வ் ந‌ல்ல‌ சந்திப்பு அது உங்க‌ள் எழுத்தின் மூல‌ம் தெரியுது த‌மிழ்சிறி அண்ணா🙏🥰............................................................
  33. எனது நோக்கம் இதுதான். எம் கண்முன்னே நடக்கும் சிங்கள பெளத்த செயற்பாடுகளின் சூட்சுமத்தை நாம் பார்க்கத்தவறிவிடுகிறோம். எம்மை இன்று பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் சிலரின் இணக்க அரசியலினாலும், தேசியத் துறப்பினாலும் மக்கள் அரசியலில் இருந்து விலகிவருகிறார்கள், அல்லது நடக்கும் சூட்சுமத்தைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். நான் மக்களைத் துரோகிகளாக ஒருபோதும் நினைத்ததுமில்லை, எழுதியதுமில்லை. இது தவறாக என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 25/11/2023
  34. ஆம் சுவி, எதிர் பார்த்ததை விட ஒரு மங்களகரமான இனிமையான சூழலில் இந்தச் சந்திப்பு நடை பெற்றதாலும்… சந்திப்பின் போது மூவரும் மாறி மாறி சுவராசியமான விடயங்களை பேசிக் கொண்டு இருந்ததாலும் இரண்டரை மணித்தியாலம் எப்படி போனதென்றே தெரியவில்லை. உண்மையில் மனதிற்கு மகிழ்வான சந்திப்பாக அமைந்ததில் எம் மூவருக்கும் மகிழ்ச்சியே. 🥰
  35. அதை ஏன்…. கேட்கிறீர்கள். குமாரசாமியார் தந்த உபசரிப்பையும், விருந்தோம்பலையும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அளவிற்கு செய்து விட்டார். ❤️ நாம் புறப்படும் போது… இரண்டு பெரிய பை நிறைய உளுந்து 🥯வடைகளையும், அதற்கு பச்சை மிளகாய் சம்பலும், பூந்தி லட்டுக்களும், 🍰“கேக்”குகளையும் 🎂 எமது வாகன தரிப்பிடத்துக்கு கொண்டு வந்து தந்து அசத்தி விட்டார். 💓
  36. அதில் ஒரு “தொழில் ரகசியம்” இருக்கு கண்டியளோ….. 😁 தலைப்பிலேயே…. சந்திப்பில் ஒரு படமும் இல்லை என்றால், ஒரு குருவியும் திரிக்குள் வந்து எட்டியும் பார்க்க மாட்டார்கள் என்பதால் போடவில்லை.😂 (சும்மா தமாசு.) 🤣 நாளை பாஞ்ச் அண்ணையுடன் இதனைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கின்றேன். எப்படியும் அடுத்த சில நாட்களுக்குள், அவரை மீண்டும் யாழ். களத்தில் எழுத வைக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுளேன். 🙂
  37. மாகாணசபைகளின் அதிகாரத்தை படிப்படியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கின்றேன். சிங்களப் பகுதிகளில் இது ஒரு பிரச்சினை இல்லை. மாகாணத்தின் அதிகாரமும், மத்திய அரசின் அதிகாரமும் சிங்களவர்களின் கைகளில் தான் என்பதால்/ ஆனால், வடக்கு கிழக்கில் அப்படியான நிலை இல்லை என்பதுடன், இவ்வாறு தேசிய பாடசாலையானால் அப் பாடசாலைகள் மேலும் இன ரீதியிலான ஒதுக்கல்களுக்குள்ளாகும் வாய்ப்புகள் தான் அதிகம்.
  38. அவர்களை போகும் வழியில்... வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டு செல்லும் படிதான் கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால், நேற்று மதியம் தாண்டித்தான் அங்கிருந்து புறப்பட்டு இரவு இங்கு விடுதிக்கு வந்து சேர்ந்ததால்.... என்னால் அவர்களை வீட்டிற்கு கூப்பிட முடியாமல் போய் விட்டது. 🙂 அத்துடன் நாளை காலை அவர்கள் புறப்படுவதால்... சந்திப்பை தவற விட்டுவிடுவமோ என்ற அச்சத்தால் இன்றே அந்த நிகழ்வில்.... பட்டு வேட்டி சால்வையுடன் மங்களகரமாக நின்ற குமாரசாமி அண்ணாவை சந்தித்தோம்.
  39. @theeya, இறுதியாக வரும் அணிகள் பற்றிய 6 கேள்விகளுக்கும் பதில்கள் தரவில்லை. பதில்களை உங்கள் அட்டவணையில் இருந்து எடுக்கின்றேன். மாற்றவேண்டும் என்றால் சொல்லுங்கள்.
  40. இந்தக் கருத்தில் சாதாரணப் பொதுமக்களை சேர்த்தது அநாவசியமானது. அதுவும் இந்த திரியில் அப்படி கருத்துப்பட எழுதாத போது, மக்களைப் பற்றி தேவையற்று கூறப்பட்ட சொல். இந்த திரியில் கூற வந்த விடயம், நிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கிறார்கள், பல சீரழிவுகளை கண்டும் காணாமல் போகிறார்கள். அவைகளைப் பற்றியும் கொஞ்சம் சிந்திக்கத்தான் கேட்கப்படுகிறது. அப்படி கேட்பது தவறானாதாக தோன்றவில்லை.
  41. 🤣......... பலம் எங்களுக்கு வரவில்லை........நாங்கள் தான் யானைக்கு பழம் கொடுத்தோம், அது சாப்பிட்டு விட்டு பலமாகவே நின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.