Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38771
    Posts
  2. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    16477
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46798
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3061
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/03/24 in Posts

  1. நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 77 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி குறைந்த வெற்றி இலக்கை 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். சிறிலங்கா வெல்லும் எனக் கணித்த @வீரப் பையன்26 க்கும் @வாதவூரான்க்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 8 2 நிலாமதி 8 3 குமாரசாமி 8 4 தமிழ் சிறி 8 5 நுணாவிலான் 8 6 பிரபா USA 8 7 ஏராளன் 8 8 கிருபன் 8 9 ரசோதரன் 8 10 அஹஸ்தியன் 8 11 கந்தப்பு 8 12 எப்போதும் தமிழன் 8 13 நந்தன் 8 14 நீர்வேலியான் 8 15 கல்யாணி 8 16 கோஷான் சே 8 17 வீரப் பையன்26 6 18 சுவி 6 19 தியா 6 20 புலவர் 6 21 P.S.பிரபா 6 22 வாதவூரான் 6 23 வாத்தியார் 6
  2. நான் புலம்பெயர்ந்து வந்து நான்கு வருடங்கள் என் மனைவி பிள்ளகளப் பார்க்க முடியாது தவித்த தாக்கத்தையும் சோகத்தையும், திரும்பவும் யாழ்களம் செல்ல இயலாதிருந்த இரண்டு வருடங்களில் அனுபவித்தேன், இடைஇடையே சிறீ மற்றும் வன்னியரின் இவர்களின் தொடர்புகள் சற்று ஆறுதல் தந்ததை மறுக்க முடியாது. இந்நேரத்தில் தமிழ் சிறீ அவர்கள், கள உறவு குமாரசாமி அவர்களை நாளை சந்திப்போமா என்று கேட்டது கனவுபோல் இருந்தது. எங்கு எப்படி எவ்வாறு என்பதெல்லாம் விபரமாகக் கூறினார், சிறீயருக்கும் கால்கள் இன்னமும் பூரண குணமாகாதபடியால் அவர் மகன் அல்லது மகள் கூட்டிச்செல்வார்கள் என்ற எண்ணத்தில் சரி வருகிறேன் என்றேன். மறுநாள் காலை 10.30மணிக்கு ஒரு வியாபார நிலையத்தில் சந்தித்துச் செல்வதாகவும், என்மகள் என்னை அந்த நிலையத்திற்குக் கூட்டிச் செல்வதாகவும் முடிவாயிற்று. சூரியன் பார்த்து நேரம் கணிக்கும் பண்பாட்டிலிருந்து பாஞ் இன்னமும் விடுபடவில்லையோ என்ற ஐயத்தினால் போலும் “பாஞ் எங்குள்ளீர்கள்” என்ற சிறீயரின் கேள்வி என் போனில் ஒலித்தது. போன் ஒலிக்கவும் நாங்கள் அவருக்குக் கைகாட்டிக் கடக்கவும் சரியாக இருந்தது. மகிழூந்தில் சிறீயர்மட்டுமே இருந்தார். “உங்களுக்கு கால்கள் இயலுமா? தூரம் ஓட்ட முடியுமா? என்று கேட்டதுதான் தாமதம், அந்தக் கேள்விக்காகவே காத்திருந்ததுபோல் திறப்பை என்னிடம் தந்துவிட்டார். நான் பலமுறை ஓடி அனுபவப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை, சில மணித்துளிகளில் மகிழூந்து வைபவம் நடைபெறும் மண்டபத்தை அடைந்தது. நாங்கள் அழையா விருந்தாளிகள். ஓசிச் சோற்றுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிடுவார்களோ என்று விழி பிதுங்கிநிற்க “அண்ணைவாங்கோ” என்ற வரவேற்பு அதிசயிக்கவைத்தது. பல காலமாக சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்காத என் நண்பன். “வாங்கோசிறி” தமிழ்சிறியோடு வேலைபார்த்த அவரது நண்பன். மனம் அமைதிபெற வந்தவிடையத்தை ஆரம்பித்தோம், “கனோவரில் இருந்துவந்த குமாரசாமி என்பவரைத் தெரியுமா?” எங்களைப் பார்த்து புன்முறவல் பூத்தவர்கள் எல்லோரிடமும் இந்தக் கேள்வி பாய்ந்தது. முகமெல்லாம் மலர்ந்த புன்முறுவலோடு பட்டுவேட்டி சரசரக்க ஒரு குமரன் வரவே அவரிடமும் எங்கள் கேள்வி தொடர்ந்தது. அவரோ வாருங்கோ இருங்கோ” என்று எங்களை வரவேற்றவர், பக்கத்தில் ஒருவருக்கு சைகைகாட்ட காப்பியோடு பலகாரத்தட்டுகள் பறந்து வந்தன. குமாரசாமி அவர்களின் தமிழ்மொழி ஆற்றலை அவரது எழுத்தில் அறிந்து வியந்தேனே தவிர அவரோடு அதிகம் கதைத்துப் பேசியதில்லை, ஆனால் அதிகம் கதைத்து குரல் அறிந்த தமிழ்சிறி அந்தக் குமரனைக் கட்டியணைத்து சாமியண்ணை என்றார். மொட்டைத் தலையோடு வயதான ஒரு பெரியவராக என் மனதில் பதித்துவைத்த குமாரசாமியரை குமரன்சாமியாக கண்ட அதிர்ச்சியில் நான் உறைந்து நின்றேன்.
  3. இது இனவாத செயலா இல்லையா என தெரியாது, ஆனால் மாணவிகள் இவ்வாறு காதுகளை மூடிக் கொண்டு வரும் போதே பரீட்சை மண்டபத்தியே நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டும். அப்படி எடுக்காமல், பெறுபேறுகள் வரும் போது அதை வெளியிடாமல் இடை நிறுத்தம் செய்வது சரியான செயலாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பரீட்சை மண்டபத்திலேயே முஸ்லிம் ஆசிரியைகளைக் கொண்டு, காதுகளை மூடிக் கொண்டு வந்த மாணவிகளை சோதனை செய்து விட்டு அனுமதித்து இருந்தால் இந்த பிரச்சினை எழுந்திருக்காது. காதுகளை மூடிக் கொண்டு வந்த மாணவிகள் எல்லாரும் பரீட்சையில் களவு செய்யத்தான் அப்படி வந்தனர் எனச் சொல்வது இனவாத பேச்சாகவே கொள்ள வேண்டி இருக்கு.
  4. 😀...... எல்லாம் நல்லாகவே போகுது, ஈழப்பிரியன். எங்களின் அணி எதிரணிக்கு ஏற்ற அளவில் மட்டுமே இப்ப விளையாடுது. எல்லா வித்தைகளையும் இப்பவே இறக்கி விடக் கூடாது, செமி பைனல் & பைனல் ஆட்டங்களில் முழுவதையும் இறக்குவது தான் எங்களின் திட்டம்........🤣
  5. ஏன்? ஒவ்வொருவரின் இடம் வலம் பார்த்தா யாழ்களத்தில் உறவுகளை தேடி வைத்திருக்கின்றோம்? 😂
  6. அவர் எத்தனையாம் மனைவி என்று ஒருவரின தனிப்பட்ட வாழ்வை ஏன் எட்டிப் பார்பான்? உலகறிய சட்டப்படி திருமணம் செய்து வாழ்கின்றனர். அரசியல் என்று வரும் போது, இருவருக்கும் கொள்கை என்ற ஒன்று அறவே இல்லை. தாம் எந்தக் கூட்டணியில் இருக்கின்றோம் என்று கூட சரியாக தெரியாமல் உளறிக் கொட்டியவர்கள்.
  7. ஓமோம் கந்தையர்! நீங்கள் இருக்கிற இடங்களிலை ஒரு ஜேர்மன்காரரை காணேலாது....எல்லாம் துருக்கி மற்றும் அரபு வசந்தக்காரர்கள் எல்லோ......அவையள் வேலை வெட்டிக்கு போகமாட்டினம். சாப்பிடுறதை தவிர வேறை வேலையும் இல்லை.....எனவே😛
  8. ந‌ட‌ந்து இருக்க‌லாம் நேபாள் அணி சின்ன‌ அணி 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு தெரிவாகாத‌ அணி நெத‌ர்லாந் ப‌ல‌ வ‌ருட‌மாய் பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாடி இருக்கு இங்லாந்தை இர‌ண்டு முறை 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் வென்ற‌ அணி நெத‌ர்லாந் அணியில் கூட‌ தென் ஆபிரிக்கா ம‌ற்றும் நியுசிலாந் அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் விளையாடின‌வை ஒரு சில‌ நெத‌ர்லாந் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் அணியில் இருக்கின‌ம் ப‌யிற்ச்சி ஆட்ட‌த்தில் நாச‌மாய் போன‌ இல‌ங்கை அணிய‌ நெத‌ர்லாந் அணி போன‌ கிழ‌மை தோக்க‌டிச்ச‌வை பெரிசா தோக்க‌டிச்ச‌வை😁.......................................... உங்க‌ளுக்கு ஏறு முக‌ம் அண்ணா இப்போதைக்கு நீங்க‌ள் கீழ‌ வ‌ர‌ வாய்ப்பு மிக‌ குறைவு🙏🥰...............................................
  9. "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்" அது முற்றிலும் சரி யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை. அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு இதைப் பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன் அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம் ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப் பயன்படுத்துவது இல்லை. ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான் புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம் நிறைய சொல்ல இருக்கும் ஆனால் குறைவாக பேசுவார்கள். புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது நன்றி உங்கள் கருத்துக்கு "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது. உதாரணமாக, இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911 இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு. ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது. இன்று [படித்த, படிக்காத] எல்லா அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்? இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும் அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம். நன்றி
  10. அடிச்சு சொல்லுறேன் ஒருத‌ரும் இல‌ங்கையை தெரிவு செய்து இருக்க‌ மாட்டின‌ம் என்று கார‌ண‌ம் நிறைய‌ சின்ன‌ அணிக‌ள் விளைய‌டுவ‌தால் அதில் ஒன்றை தெரிவு செய்து இருப்பின‌ம்.................................. இவ‌ங்க‌ட‌ விளையாட்டை பார்க்க‌ என‌க்கு க‌டுப்பு வ‌ருது..............................மார்கேட்டில‌ கீரை விக்க‌ தான் தாங்க‌ள் லாய்க்கு என்று நிறுவிக்கின‌ம்😂😁🤣.....................................................................
  11. முடிந்தவற்றை கதைத்து இப்ப ஒன்றும் ஆகிவிடாது. முதலில் சுக்கு நூறாக தமிழ் கட்சிகளை உடைத்து கடைசியில் சொந்த கட்சியினை நார் நாராக உடைத்த சுமாவை தமிழர் அரசியலில் இருந்து மக்கள் துரத்த வேண்டும் . இது காலத்தின் தேவை. மற்றும்படி மக்கள் தெளிவாக உள்ளார்கள் . தலைவனை சுயம்புவாக ஏற்று கொண்டவர்கள் அவர்கள். யாரும் அவர்களின் இதய துடிப்பை மாற்றமுடியாது .
  12. மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நமீபியா அணி குறைந்த இலக்கை எட்ட முயன்று 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை எடுத்து சமநிலையை அடைந்ததால் வெற்றி சுப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்கப்பட்டது. சுப்பர் ஓவரில் நமீபியா விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களையும் ஓமான் ஒரு விக்கெட் இழப்பிற்கு 10 ஓட்டங்களையும் எடுத்தன. முடிவு: நமீபியா சுப்பர் ஓவரில் வெற்றியீட்டியது நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் வெல்லும் எனக் கணித்த @theeya க்கு புள்ளிகள் இல்லை!
  13. உணவின் அளவு விடயத்தில் நீங்கள் சொல்வது என்னவோ உண்மைதான். வயசு போகப்போக பசி எனக்கும் கூடுகின்றது. உட்கொள்ளும் உணவின் அளவும் அதிகரிக்கின்றது. வடை மட்டுமா அருகில் பாகு/உருண்டை/முறுக்கு என எது கிடந்தாலும் அம்பிடுவது எல்லாம் தட்டுடன்/பையுடன் காலியாகிவிடும். சாப்பிடுவதில் அப்படியொரு வெறித்தனம் இப்போது.
  14. பிளான் போட வெளிக்கிட......சிறித்தம்பியர் நானும் பாஞ் அவர்களும் குறிப்பிட்ட விலாசத்திற்கு 11.30 மணியளவில் வருகின்றோம். ரெலிபோனை கால்சட்டை பொக்கற்றுக்குள் வைத்திருக்கவும் என செய்தி அனுப்பியிருந்தார்....😄 பிளான் போட வெளிக்கிட......சிறித்தம்பியர் நானும் பாஞ் அவர்களும் குறிப்பிட்ட விலாசத்திற்கு 11.30 மணியளவில் வருகின்றோம். ரெலிபோனை கால்சட்டை பொக்கற்றுக்குள் வைத்திருக்கவும் என செய்தி அனுப்பியிருந்தார்.... உடனேயே வாட்ஸ் அப்பில் கவியரும் சிலநேரம் வரலாம் என எழுதியிருந்தார்....நானும் இரட்டிப்பு மகிழ்ச்சி எண்டு எழுதி அனுப்ப....அடுத்த கணமே அவர் வரமாட்டார். கவி சுற்றுலா போகின்றாராம்....வரமாட்டார் என அடுத்த மசேஜ் வந்தது.வந்த மகிழ்சியில் ஒரு கவலை என்றாலும்...... கட்டளைக்கமைய இரண்டு பணிஸ்களை கட்டிக்கொண்டு றூமுக்கு விரைந்தேன். அந்த 11.30 நேரத்தோட நிக்கணும் எண்ட ரெஞ்சன் கூடக்கூட நானும் குடும்பமும் அள்ளிக்கட்டிக்கொண்டு விழா மண்டபத்தை நோக்கி நெருப்பாய் பறந்தோம்
  15. eBay Kleinanzeigen ist jetzt Kleinanzeigen. அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மறுபிறவி எடுத்த என் இதயம் கனிந்த வணக்கங்கள்🙏🙏 எனது இதயத்தை இயக்குவதில் பிரதான பங்குவகிக்கும் இரத்தக் குழாய்யொன்று இயங்கமறுத்து என் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர முயன்றதைக் கண்டறிந்த வைத்தியர் எனது நெஞ்சை வெட்டிப்பிளந்து அந்தக் குழாய்வழியை மாற்றியமைக்க 5 மணித்தியாலங்கள் சென்றதாம், அதன்பின்பு இருதயம் தடையின்றி இயங்குவதற்காக நெஞ்சில் ‘மின்கலம் ஒன்றைப் பொருத்தும்போது இன்னொரு குழாயில் இரத்தம் கசிவது கண்டு அதனைச் சரிசெய்யாது விட்டால் இவருடைய வாழ்க்கை இன்னமும் 11நாட்களே என்று வைத்தியர் தெரிவித்ததால் வெட்டித் தைத்த இடத்தை மீண்டும் வெட்டி மேலும் 4 மணித்தியாலங்கள் சிகிச்சை நடைபெற்றதாம். கடவுளைக் காட்டித் தமிழர்களை மயக்கி வடவர் தங்கள் மொழியை தமிழர்களுடைய கோவில்களில் வளர்த்து வருவதுபோல், என்னை மயக்கமடைய வைத்து இதனைச் செய்ததால் சிகிச்சையின் தாக்கத்தை நான் உணரவில்லை. “செல்வத்துள் செல்வம் அருள்ச் செல்வம்” என்று பொய்யா மொழிப்புலவர் கூறியிருந்தார், ஆனாலும் நிலத்தில் அருள்ச் செல்வத்தையும் தேடிச் சேர்த்த காடையர்கள் பலர் இலங்கையில் இருப்பது கண்டு, அதிலும் அரச ஆட்சி அதிகாரத்திலிருந்து சொந்த மக்களையே கொல்லும் கொடியவர்களிடமிருந்தும் தப்புவதற்காக புலம்பெயர்ந்து வந்தபோதும், கூட இருந்தே குழிபறிக்கும் என் சொந்தங்களான என் நலம்காக்கும் இரத்த நாளங்களில் சில கருனாகூட்டம் போல் குழிபறித்ததால் வந்தநிலை இது. கள உறவுகளில் ஒருவரான திரு குமாரசாமி அவர்களைச் சந்திக்க வழிசமைத்த என் நண்பர் தமிழ்சிறீ அவர்களுக்கு என்நன்றிகள்.🙏🙏
  16. 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
  17. எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள். கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  18. Doctor Appointment: .வைத்தியருடனான முன்பதிவு Medical Appointment: முன்பதிவு .....வைத்தியருடனான முன்பதிவு வைத்தியரைக் காண விரும்பினால் முன்பதிவு செய்யவும். சந்திக்க குறிக்கும் நேரம் நியமனம், அழைத்தல், உத்தியோக பூர்வ சந்திப்பு நேரம் விடயங்களைப்பொறுத்து அழைக்கபடும்.. வங்கிமேலாளருடனான சந்திப்பு நேரம்.
  19. சந்திப்பு எனும் பதம் நியமனம் என்பதை விட அதிகம் பொருத்தமாக உள்ளது. Doctor Appointment: Medical Appointment: Business Appointment: Bank Appointment: இவ்வாறு விரிந்து செல்கின்றன. வேறு ஏதாவது பதில்கள்? @suvy @ஈழப்பிரியன் @நன்னிச் சோழன்
  20. தென் ஆபிரிக்கா இன்னும் கொஞ்சம் வேகமாக அடித்து இருக்கலாம். நெட் ரன் ரேட்டில் பங்களாதேஷ் உள்ளே வர, இலங்கை வெளியே போகும் நிலை வர வேண்டும்.......
  21. அதைத் தான் நானும் யோசிச்சனான் அங்கை தான் நானும் பாக்கிறேன் 🙏
  22. இப்படியா😂 ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல.... அல்லது இப்படியா என்று தான் யோசிக்கிறேன்😁 காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா? துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா?அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?... எனக்கும் தான்🤣
  23. ஓம் வாத்தி சார் சொல்ல‌ வார்த்தை இல்லை தென் ஆபிரிக்காவுக்கு அந்த‌ மாதிரி அடி இந்த‌ அடிய‌ தென் ஆபிரிக்க‌ வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் வாழ் நாளில் ம‌ற‌க்க‌வே மாட்டின‌ம்😁😁😁😁😁😁😁......................................................... வெஸ்சின்டீஸ் வெளி ஏறும் போது அந்த‌ அன்று நீங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு ஆறுத‌ல் சொல்ல‌ அவ‌ர் உங்க‌ளுக்கு திருப்ப‌ சொல்ல‌ நினைச்சு பார்க்க‌ இப்ப‌வே ஒரே சிப்பாய் இருக்கு சிரிப்பாய் இருக்கு கையோ கையோ🤣😁😂.....................................................
  24. 🤣...... எங்களின் அணிக்கு, மேற்கிந்தியா, என்ன சோதனை காத்திருக்குதோ....அன்றைக்கு பையன் சார் நம்மளை வைச்சு செய்யப் போகின்றார்........🤣.
  25. புதிசா க‌ட்டின‌ நியூயோக் கிரிக்கேட் மைதான‌ம் ந‌ல்ல‌ அழ‌காய் இருக்கு🙏🥰.............................................................
  26. 👍........ இன்னும் கொஞ்ச ரன்கள் இல்லை, பையன் சார், ஓமான் ஒரே ஒரு ரன் கூட அடிச்சிருந்தாலே போதும்...... வாத்தியாருக்கே கணக்கு சொல்லிக் கொடுக்கிற அளவிற்கு வளர்ந்திட்டன்.......😋. என்னுடைய நேரம் பின்னேரம் 5:30 மணிக்கு தொடங்கினது 9:00 மணிக்கு முடிந்தது. நமீபியாவிற்கு விளையாடின ஒரே ஒரு வீரரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நடிகை நமீதாவின் நிறத்தில் இருந்தார்கள். பெயர்கள் எதுவும் போட்டிருக்கா விட்டால், இது தான் இங்கிலாந்து அணியாக்கும் என்று நான் நினைத்திருப்பன்.
  27. இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது😂? "பகட்டு" உணவு என்று அபிலாஷ் குறிப்பிடும் பீசாவும், ஏனைய உணவுகளும் ஆரோக்கியமான உணவுகளை விட விலை குறைவு தான். அதனால் வசதியில்லாதோர் பாதிக்கப் படுவதும் உண்மை தான். ஆனால், எங்கள் உடலுக்கு நாம் தான் பொறுப்பு. இந்தியா, இலங்கையை எடுத்துக் கொண்டால் பல விடயங்களை இலவசமாகத் தரும் அரசாங்கம், ஆரோக்கிய உணவையும் சமைத்துக் குழைத்து எங்கள் வாயில் ஊட்டி விட வேண்டுமென்று எதிர்பார்ப்பது கொஞ்சம் மிகையான எதிர்பார்ப்பு. விற்பவன் பளபளப்பாக காட்டுகிறான் என்பதற்காக வாடிக்கையாளன் ஆராயாமல் வாங்கி முழுங்குவது வாடிக்கையாளன் தவறேயொழிய அரசினதும், வியாபாரியினதும் தவறல்ல.
  28. மெக்சிகோ பாதுகாப்பான இடமல்ல. அடுத்து துட்டும் வேணுமல்லோ? நானும் உங்களைப் போல இளைப்பாறிவிட்டு சோசல் காசில இருக்கிறன். அளந்து தான் செலவு செய்யணும்.
  29. ஒருக்கால்…. அரபு நாடுகள் பக்கம் போய் வாறது. 😂 🤣
  30. அப்படி சொல்லப்படாது.... நல்லவர்கள் பாதம் பட்டால் பொன் விளையுமாம் 🤣
  31. ஓஒஓ மாம்பழத்து வண்டு ..........! 😍
  32. இவர் அதிபராக இருந்த காலம் யூனியனின் பொற்காலம் என்று அழைப்பார்கள். 86 இல் க பொ த உயர்தரத்தில் சுகந்தன் என்ற மாணவர் கணித பிரிவில் 372 புள்ளிகள் பெற்று அகில இலங்கையில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். ஆழ்ந்த இரங்கல்கள்
  33. பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் ஓமானை சுப்பர் ஓவரில் வென்றது நமிபியா 03 JUN, 2024 | 12:24 PM (நெவில் அன்தனி) நமிபியா - ஓமான் அணிகளுக்கு இடையில் பார்படோஸ், கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுப்பர் ஓவர் முறையில் நமிபியா வெற்றிபெற்றது. பிலான் கான் வீசிய சுப்பர் ஓவரில் நமிபியா விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் வைஸ் 13 ஓட்டங்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 8 ஓட்டங்களையும் பெற்றனர். டேவிட் வைஸ் வீசிய சுப்பர் ஓவரில் ஓமான் ஒரு விக்கெட்டை இழந்து 10 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. நசீம் குஷி 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஸீஷான் மக்சூத் 6 ஓட்டங்களைப் பெற்றார். இரண்டு அணிகளும் தத்தமது 3ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ஓமான் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 110 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா கடைசிக் கட்டத்தில் கடும் சவாலை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. போட்டியின் 18ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களுடன் சிறந்த நிலையில் இருந்த நமிபியா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. குறிப்பாக மெஹ்ரான் கான் வீசிய கடைசி ஓவரில் 2 விக்கெட்கள் வீழ்ந்தமை நமிபியாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. துடுப்பாட்டத்தில் ஜான் ப்ரைலின்க் 45 ஓட்டங்களையும் நிக்கலஸ் டெவின் 24 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மெஹ்ரான் கான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 10 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த ஓமான், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் 100 ஓட்டங்களைக் கடந்தது. காலித் கய்ல் 34 ஓட்டங்களையும் ஸீஷான் மக்சூத் 22 ஓட்டங்களையும் அயான் கான் 15 ஓட்டங்களையும் ஷக்கீல் அஹ்மத் 11 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரூபன் ட்ரம்பள்மான் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டேவிட் வைஸ் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: டேவிட் வைஸ் https://www.virakesari.lk/article/185172
  34. தியா உங்க‌ளுக்கு முட்டை.................................................
  35. தமிழ் என்ன என்று அகராதியில் தேடினால் நியமனம், பணிக்கு அமர்த்து, உத்தியோகம் என்று வருகின்றது. சொந்தமாக யோசித்து வந்தது சந்திப்புக்கான நேர முன்பதிவு.
  36. உழுந்து வடை மட்டுமே ஒன்பது என்றால்.....மற்றைய பலகாரங்களின். அளவீடு என்ன?? .. கடலை வடை,.லட்டு,.முறுக்கு பயற்றம் பணியாரம்,. சீனியரியம். .........விஸ்கி பிரண்டி, ..போத்தல்கள். கிடைக்கவில்லையா,???
  37. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19 ஓவர்களில்தான் குறைந்த வெற்றி இலக்காகிய 137 ஓட்டங்களை 5 விக்கெட்டுக்களை இழந்து அடையமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் என எல்லோருமே கணித்தமையால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் இரு போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 4 2 வீரப் பையன்26 4 3 நிலாமதி 4 4 குமாரசாமி 4 5 தியா 4 6 தமிழ் சிறி 4 7 நுணாவிலான் 4 8 பிரபா USA 4 9 வாதவூரான் 4 10 ஏராளன் 4 11 கிருபன் 4 12 ரசோதரன் 4 13 அஹஸ்தியன் 4 14 கந்தப்பு 4 15 எப்போதும் தமிழன் 4 16 நந்தன் 4 17 நீர்வேலியான் 4 18 கல்யாணி 4 19 கோஷான் சே 4 20 சுவி 2 21 புலவர் 2 22 P.S.பிரபா 2 23 வாத்தியார் 2
  38. வடை சாப்பிட என்றே வயிற்றை காயவைத்து போட்டுத்தாக்குகிறார்கள் போல 😄
  39. இந்த‌ உல‌க‌ கோப்பை இங்லாந் , இந்தியா , அவுஸ்ரேலியா , நியுசிலாந் , இந்த‌ 4 நாடுக‌ளில் ஒரு நாடு கோப்பையை தூக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் உல‌க‌ கோப்பைக்கும் பொருத்த‌ம் இல்லை , பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளின் விளையாட்டை பார்க்க‌ இவ‌ர்க‌ள் கைக்கும் கோப்பை போக‌ வாய்ப்பில்லை பாப்போம் இந்த‌ மாத‌ம் 29ம் திக‌தி யார் கோப்பை வெல்லுகின‌ம் என்று..............................................................
  40. இந்திய‌ர்க‌ள் எப்ப‌டி கிரிக்கேட்டுக்கு அடிமையோ அதே போல் அமெரிக்காவில் NFL விளையாட்டுக்கு அமெரிக்க‌ர்க‌ள் அடிமை அமெரிக்காவில் NFL விளையாட்டுக்கு தான் முக்கிய‌த்துவ‌தும் அத‌ற்க்கு பிற‌க்கு தான் ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ள் MLB ,NHL , NBA , MLS இப்ப‌டியான‌ விளையாட்டுக்க‌ள் தான் அமெரிக்கா ம‌க்க‌ள் இட‌த்தில் வ‌ர‌வேற்ப்பு பெற்ற‌ விளையாட்டுக்க‌ள்🙏🥰................................................ உல‌க‌ ம‌க்க‌ள் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்த‌ விளையாட்டு ம‌ழையால் த‌டைப் ப‌ட்டு இருக்கு😂😁🤣...........................ம‌ழையால் விளையாட்டு கைவிட‌ ப‌ட்டால் புள்ளிக‌ள் எங்க‌ளுக்கு கிடைக்காது☹️................................................................
  41. ஒரு பெண் சுயமாக வாழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ தலைக்கணம் என்று பெயர் வைக்காதீர்கள்..அவர்களுக்குள்ளும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் விருப்பு வெறுப்புக்கள் என்று எவ்வளவோ இருக்கும்.எல்லாவற்றையும் சகித்து கொண்டு தான் வெளி உலடகில் தானும் ஒரு ஜீவன் என்று வாழ முற்படுகிறார்கள்..அது சரி சக கருத்தாளரை ஒழுங்காகத் தானே மதிக்கிறீங்கள் எல்லோரும்.
  42. சரி, பேசலாம். 2005 இல் வன்னியில் ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று இயக்கம் கேட்டது உண்மைதானே? இதனை எவரும் மறுக்கவில்லையே? பிறகேன் இந்த Cherry picking கேலிகள்? ரணிலிலிருந்தே ஆரம்பிக்கலாம், 2002 மாசியில் ரணில் அரசாங்கம் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? தமிழர்களுக்குத் தீர்வொன்றினை வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று இங்கு எவராவது உண்மையாகவே நம்புகிறீர்களா? போர்க்களத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகள், கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதல், அதனால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் என்பவற்றைத் தவிர இலங்கை அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தைகளுக்குப் போகவேண்டிய தேவை இருந்ததா? சரி, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாயிற்று. பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்பொழுது, 2004 இல் பங்குனியில் கருணாவை புலிகள் இயக்கத்திடமிருந்து பிரித்தெடுத்து புலிகளைப் பலவீனமாக்கியது யார்? பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து, நியாயமான தீர்வெதனையும் முன்வைக்காது, சர்வதேச வலைப்பின்னலுக்குள் புலிகளைச் சிக்கவைத்து, படிப்படியாக பேச்சுக்களில் புலிகளை வேண்டாத தரப்பாக ஓரங்கட்டியது யார்? ரணில் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவிருந்த மிலிந்த மொரகொடை மற்றும் நவீன் திசாநாயக்கா ஆகியோர் அக்காலத்தில் வெளிப்படையாகவே கூறிய விடயங்களை எவராவது கவனித்தீர்களா? புலிகளைப் பலவீனப்படுத்தி அழிப்பதற்காகவே கருணாவைப் பிரித்தெடுத்து, புலிகளை சர்வதேச வலைப்பின்னலுக்குல் வீழ்த்தி அமுக்கினோம், மகிந்த தானே புலிகளை அழித்தேன் என்று மார்தட்டலாம், ஆனால் புலிகளை நாம் பலவீனமாக்கி ஒடுக்கியிருக்கவிட்டால், மகிந்தவால் யுத்தத்தில் வெற்றிகொண்டிருக்க முடியாது என்று கூறினார்களே? ரணில், மிலிந்த மொரகொட, ரொகான் குணரட்ண, பீரிஸ், ரோகித்த போகொல்லாகம என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் புலிகளைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தைக் காலத்திலிருந்தே ஈடுபடவில்லையா? அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் , ஜப்பான், உதவி வழங்கும் நாடுகள் என்று அனைத்துமே புலிகளுக்கெதிராக ஐக்கியதேசியக் கட்சியினால் திருப்பிவிடப்படவில்லையா? அப்படியான நிலையில் 2005 இல் தம்மை வஞ்சித்த ரணிலை தேர்தலில் தோற்கடிக்க புலிகள் எடுத்த முடிவு எந்தவிதத்தில் தவறானதாக இருக்க முடியும்? நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் நடைபெறப்போகின்றன எனும் செய்திகள் முதன்முதலில் வெளிவந்தபோதே 1993 இல் நோர்வே தலைமையில், அமெரிக்காவின் அனுசரணையுடன், பாலஸ்த்தீனத்திற்கும், இஸ்ரேலிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றியும் அதன் முற்றான தோல்விபற்றியும் பலராலும் பிரஸ்த்தாபிக்கப்பட்டதே? அவ்வொப்பந்தம் முற்றாகக் கிழித்தெறியப்பட்டு, அரபாத் இஸ்ரேலியர்களால் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட, இஸ்ரேல் சார்பாக சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதமரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்றுவரை பலஸ்த்தீனர்களுக்கு காஸாவிலும், ரபாவிலும் நடப்பது என்ன? இவ்வாறான ஒப்பந்தங்களை மேற்குலகு செய்வதன் காரணமே, தமது பிணாமிகளான நோர்வேஜியர்களை இறக்கி போரிடும் மக்களை சோர்வடையச் செய்து, பலவீனப்படுத்தி, ஈற்றில் போராட்டத்தைத் தோற்கடிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 2005 தேர்தலில் மகிந்த ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சிக்கு வந்ததை இந்தியா உட்பட மேற்குலகு சற்றும் விரும்பியிருக்கவில்லையாயினும், புலிகளை அழிக்க அவனைப் பாவித்தன. பல தருணங்களில் மகிந்தவே "இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடத்தினோம்" என்று கூறியிருக்க மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவந்ததாலேயே நாம் அழிக்கப்பட்டோம் என்று கூறுவது எவ்விதத்தில் சரியாக இருக்கும்? ஆட்சியில் மகிந்த இருந்தாலென்ன, ரணில் இருந்தாலென்ன, முள்ளிவாய்க்கால் நிச்சயம் நடந்தேயிருக்கும். ஏனென்றால், அது மகிந்தவின் போரல்ல, மாறாக மேற்குலகின் முற்றான அனுசரணையோடு இந்தியாவால் நடத்திமுடிக்கப்பட்ட போர். ரணில் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவோ அல்லது மேற்குலகோ முள்ளிவாய்க்கால் யுத்தத்தினை நிச்சயம் நடத்தியிருக்காது என்று இங்கு எவராலும் உறுதியாகக் கூறமுடியுமா? மகிந்தவைக் காட்டிலும் ரணில் நல்லவனாக எம்மில் பலருக்குத் தெரிவது எப்படி? தீவிர இனவாதியான ஜெயவர்த்தனவினால் பயிற்றுவிக்கப்பட்ட ரணில் எப்படி தமிழர்களைப்பொறுத்தவரை நல்லவனா மாறினான்? 2002 இல் சமாதானப் பேச்சுகளில் அவன் ஈடுபட்டான் என்பதாலா? அதனால் நாம் அடைந்த நண்மையென்ன? 1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து இனவாதியான ஜெயாரின் அரசில் முக்கிய அமைச்சராக இருந்து வந்தவன். தமிழர்களுக்கெதிரான பல இனவாதச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டவன். யாழ் நூலக எரிப்பில் காமிணி, சிறில் மத்தியூவோடு களமிறங்கியவன். ஜெயாரின் அரசாங்கத்தில் இருந்த தீவிர இனவாதிகளான காமிணி, லலித் போன்றோருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவன். 1988 - 1989 ஆகிய காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்களைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தான் என்கிற வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் பட்டலந்தை ஆணைக்குழுவால் இவன் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. 1994 இல் சந்திரிக்கா தமிழர்களுக்கு நாடு கொடுக்கப்போகிறாள் என்று பாராளுமன்ற‌த்திலேயே தீர்வுப்பொதியினை எரித்து தனது இனவெறியைக் காட்டியவன். 2015 இல் தமிழர்களின் தயவில் நல்லிணக்க அரசாங்கம் என்று ஒன்றை அமைத்துக்கொண்டு, தமிழர்களுக்கு 100 நாட்களில் தீர்வு தருவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தான், ஆனால் நான்கு வருடகால ஆட்சியில் அவனால் செய்யப்பட்டவை என்று எதுவுமே இல்லை. இன்றும் ஆட்சியில் இருக்கிறான். தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக எதனையும் தருவேன் என்று இதுவரை சொல்லவுமில்லை, இனிமேலும் அப்படித்தான். இவனது ஆட்சியிலேயே முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கான பொலீஸ், இராணுவத்தினது அடாவடித்தனங்களும், அட்டூழியங்களும் நடக்கின்றன. ஆக, இவனை 2005 இல் தோற்கடித்தமைக்காகவே தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இவனிருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்துதான் இருக்கும். ஏனென்றால், அதற்கான புறச்சூழலை உருவாக்கி, புலிகளைப் பலவீனப்படுத்தியது இவனே. ரணில் அமைத்துக்கொடுத்த கொலைக்களத்தில் மகிந்த சுதந்திரமாக தமிழர்களைக் கொன்று முடித்தான். இல்லை, ரணில் மிகவும் நல்லவன், அவனிருந்தால் தமிழர்கள் அழிக்கப்பட்டிருக்கவே மாட்டார்கள் என்றால், 2009 இற்கு முன்னதாக, இவன் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் கொல்லப்படவே இல்லையா? உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கு குற்றஞ்சுமத்த ஒருவர், இருக்கவே இருக்கிறார்கள் புலிகள். ஆகவே, அவர்கள் மீது இலகுவாகப் பழியினைப் போட்டுவிட்டு உங்கள் கடமை முடிந்ததாக நீங்கள் ஆறுதல்ப் பட்டுக்கொள்ளலாம். உங்களுக்காகப் புலிகள் போராடும்வரை அவர்கள் தேவையானவர்கள், இன்று போராட்டம் முற்றுப்பெற்று விட்டதால் அவர்கள் குற்றவாளிகள். நன்றாக இருக்கிறது உங்களின் வாதம்.
  43. அவர் நிச்சயமாக 2005ம் ஆண்டு நடந்தவைகளை மனதில் வைத்தே சொல்லியிருக்கின்றார். ஆனால் இன்று மக்கள் எவர் சொல்லியும் ஒரு அணியாக கேட்கும் நிலையில் இல்லை. அப்படியான ஒரு வலுவான தலைமை தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலேயெ இல்லை என்றே தெரிகின்றது. முஸ்லிம் மக்கள் ஒரு அணியாகத் திரளக்கூடும்.
  44. கள்ள பெண்ணே... என் கண்ணை கேட்கும் கண்ணே... என் கற்பை திருடும் முன்னே... நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்... மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்... என் நெஞ்சை கொத்தி தின்றாய்... எனக்கு உன்னை நினைவில்லையே... பூங்காவில் மழை வந்ததும்... புதர் ஒன்று குடை ஆனதும்... மழை வந்து நனைக்காமலே... மடி மட்டும் நனைந்தாய்.... மறந்தது என்ன கதை?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.