Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்9Points3061Posts -
நியாயம்
கருத்துக்கள உறவுகள்6Points2137Posts -
kandiah Thillaivinayagalingam
கருத்துக்கள உறவுகள்5Points1487Posts
Popular Content
Showing content with the highest reputation on 07/09/24 in all areas
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
5 pointsமருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்கல்களை கொண்டு வரலாம். இது ஒன்றும் சினிமா இல்லை. சினிமாவில் நடிகர் அர்ச்சுன் மூன்று நாள் முதல்வராக வந்து தமிழ்நாட்டை மாற்றி அமைத்தார். இங்கே அர்ச்சனா அப்படி சினிமா பாணியில் செயற்படுவது பலருக்கும் பல தீங்குகளை கொண்டுவரும். இலங்கை ஒரு மூன்றாம் உலக நாடு. மனித உரிமைகளில் பின் தங்கி உள்ள ஒரு நாடு. ஊழல்கள் மலிந்த நாடு. அரசாங்க அமைச்சரே மருந்து ஊழல் காரணமாக உள்ளே போனார். அர்ச்சனா நினைப்பது போல் குட்டையை கிளறுவதால் தீர்வு கிடைக்காது. இன்னும் குழப்பங்களே அதிகமாகும். தனியொருவர் முழு வைத்தியசாலை ஊழியர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் அதனால் வரக்கூடிய தீமைகளே அதிகம். கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனை சம்மந்தமாக நிறைய காணொளிகள் பார்த்தேன். எல்லாரும் சேர்ந்து ஒரு குழுவாக ஒற்றுமையாக பணி ஆற்றினால்தான் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும். அனைவரும் விரைவில் சமாதான பேச்சுக்களில் ஈடுபட்டு, சமரசம் கண்டு மேற்கண்ட வைத்தியசாலையை நல்ல முறையில் இயங்க வைப்பார்க என எதிர்பார்ப்போம்.5 points
-
குறுங்கதை 10 -- அமீபா குளம்
3 pointsஅமீபா குளம் -------------------- அமீபா ஒரு ஒரு கல விலங்கு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள். நுண்ணோக்கியினூடாக அதைப் பார்த்த மாதிரியும் ஒரு ஞாபகம். பார்க்காமலேயே பார்த்தது போலவே ஒரு உணர்வாகக் கூட இருக்கலாம். ஒரு அமீபாவில் ஒரே ஒரு கலம் மட்டும் இருக்கும் போது, ஒரு மனித உடம்பில் எத்தனை கலங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றீர்கள்? 20லிருந்து 40 டிரில்லியன் கலங்கள் வரை இருக்குமாம். 20 இலட்சம் கோடியிலிருந்து 40 இலட்சம் கோடி வரை. இந்தியாவில் 2ஜி காற்றலை ஊழலில் தான் இப்படியான ஒரு எண்ணை கடைசியாகக் கேள்விப்பட்டது. அமீபா இப்பொழுது திடீரென்று செய்திகளில் அடிபடுகின்றது. அமீபா மனிதர்களுக்குள் போய் அவர்களின் மூளையை அழிக்கின்றது, மூளையை தின்று விடுகின்றது என்று செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது. பயப்பட வேண்டாம், இது எல்லோரையும் தாக்காது என்கின்றார்கள். மூளை இருப்பவர்களை மட்டும் தான் இது தாக்கும் என்று சொல்ல வருகின்றார்களா என்று குறுக்குமறுக்காக யோசிக்கக்கூடாது. அழுக்கு நீரில் குளித்தால், அதுவும் அதில் ஒருவரையோ அல்லது மிகச் சிலரையோ மட்டுமே இது தாக்குகின்றது. அழுக்கு நீரில் இருக்கும் அமீபா மூக்கினூடு அல்லது வாயினூடு உள்ளே போய், மூளை வரை போகும் என்கின்றனர். மாரியில் பெய்யும் மழை தான் ஊர்க் கோவில் குளங்களின் ஒரே ஒரு நீர் ஆதாரம். எந்தக் குளத்திலும் இயற்கையாக நீர் ஊற்று இருந்ததை நான் காணவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பெய்யும் மாரி மழையில் கோவில் குளங்கள் நிரம்பும். சில வருடங்களில் நிரம்பி வழிந்தும் இருக்கின்றன. மிகுதி மாதங்களில் அதே தண்ணி தான், அங்கேயே நிற்கும், பச்சை நிறமாக மாறும், வற்றும். என்ன நிறம் ஆனாலும் நாங்கள் அந்த நிறத் தண்ணீருக்குள் பாய்ந்து பாய்ந்து முங்கி முங்கி எழுந்திருக்கின்றோம். குளத்திற்கு அருகில் இருக்கும் மரத்தில் ஏறிக் குதிப்பது, கோவில் கூரையில் ஏறிக் குதிப்பது, எல்லாப் படிகளையும் நீளவாக்கில் தாண்டிக் குதிப்பது என்று மூளை கெட்ட தனமாக பலவற்றைச் செய்திருக்கின்றோம். ஒரு குளத்தின் அருகில் நின்ற கத்தேக்க மரத்தில் உயரத்தில் பலகையை கிடையாக கட்டி, அதில் இருந்து துள்ளிக் கூட குதித்திருக்கின்றோம். அமீபாவும் அங்கு குடியிருந்திருக்க வேண்டும் இப்பொழுது தெரிகின்றது. நிற்கும் அழுக்குத் தண்ணீர், இளஞ்சூடு என்று அமீபா வளர்வதற்கேற்ற எல்லா காரணிகளும் சரியாகப் பொருந்துவது மட்டும் தான் ஒரு காரணம் என்றில்லை. 'உன்ரை மூளையும் இரும்புச் சூளையும் ஒன்று............' என்று திட்டுகள் பல தடவைகள் விழுந்திருக்கின்றது. அமீபா தான் ஒரு பகுதியை எடுத்து விட்டதோ என்று இப்பொழுது சந்தேகமாக இருக்கின்றது. 'உங்களுக்கு மூளையே இல்லை.............' என்று இன்று அடிக்கடி வரும் வரியும் அதையே உறுதிப்படுத்துகின்றது. ஐந்தாம் வகுப்பில் இருந்த வருடம். ஒரு கோவிலின் ஐயர் மகனும் எங்களின் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். பெரிய கோவில் ஒன்றிலும், சில சின்னக் கோவில்களிலும் அவர்களின் குடும்பம் பூசை செய்து கொண்டிருந்தது. ஒரு நாள் பெரிய கோவில் குளத்தில் எங்களுடன் குளித்தான். பல மணி நேரங்களின் பின், போதும் என்று நாங்கள் வெளியில் வந்து விட்டோம், அவன் வரவேயில்லை. குளித்துக் கொண்டேயிருந்தான். பின்னர் சில நாட்கள் சின்ன ஆஸ்பத்திரி, பெரிய ஆஸ்பத்திரி என்று படுக்கையில் கிடந்தான் ஐயர் நண்பன். அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டான். சன்னி ஆக்கி விட்டது என்று ஊரில் சொன்னார்கள். சிறுவர்களுக்கு என்று இருக்கும் இடுகாட்டில் ஒரு பெரிய சமாதி அவனுடைய பெயரில் கட்டினார்கள். இன்றும் அது அங்கே இருக்கின்றது. சமீபத்தில் ஊர் போய் இருந்த போது, எல்லாக் கோவில் குளங்களையும் போய்ப் பார்த்தேன். கடும் வெயிலில் காய்ந்து, அடி மட்டத் தண்ணீருடன், கடும் பச்சை நிறத்தில் இருந்தன. எத்தனை டிரில்லியன் அமீபாக்கள் அங்கு நீந்திக் கொண்டிருக்கின்றனவோ.3 points
-
சம்பந்தர் காலமானார்
2 points2 points
- சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
நான் கேட்டதுக்கும் உங்க பதிலுக்கும் என்னய்யா சம்மந்தம் 😊2 points- குறுங்கதை 10 -- அமீபா குளம்
2 points🤣..... 'அமீபா' என்ற பெயரே அந்தப் பக்கத்து பெயர் போலவும் இருக்கின்றது.................😜.2 points- கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக அதிக வாய்ப்பு.. வெளியான சி.என்.என் கருத்துக்கணிப்பு
இனி… இந்திய ஊடகங்களின் அலப்பறையை தாங்க முடியாது. இவ்வளவுக்கும்… கமலா ஹரிஸ் பண்டி இறைச்சி சாப்பிடுகின்ற ஆள். அதை… இந்தியர்கள் வசதியாக மறைத்து விடுவார்கள்.2 points- 'என் மனச திருப்பிக் கொடு'
2 points'என் மனச திருப்பிக் கொடு' "என் மனச திருப்பிக் கொடு இல்லை என்றால் என்னையே எடுத்துவிடு உன் மனசை தந்து விடு இல்லை என்றால் உன்னையே தந்துவிடு" "எண்ணங்களின் தொகுப்பே மனம் என்றால் நல்ல மனிதர்களை நீ நாடு கன்னங்களின் குழியே அழகு என்றால் நல்ல சிரிப்பை நீ தேடு" "நான் என்ற உணர்வு தோன்றின் மனம் அகங்காரம் ஆகி விடும் ஏன் என்ற கேள்வி பிறப்பின் மனம் புத்தி ஆகி விடும்" "மனது ஆன்மா தொடர்பு பற்றி இறையியல் அன்று எமக்குச் சொன்னது மனது வெறும் உளவியலின் தோற்றமென அறிவியல் இன்று எமக்குச் சொல்லுது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points- குறுங்கதை 10 -- அமீபா குளம்
2 pointsஅமீபாவுக்கும் மூளை இருந்திருக்க வேண்டும் அதனால் அது மூளை கெட்டுப்போனவர்களைத் தாக்குவதில்லை ......... அது பெண்களுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது.......! 😂2 points- மினி மெஸ்ஸி
2 pointsமெஸ்சியை ஆபிரிக்கா எப்போ வாங்கியது? பாவம் அந்தக் கண்டத்தின் சூட்டிலை நல்லா கறுத்துப் போனார்.🥶😮💨2 points- திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு,
உ திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு, நிர்வாக இயக்குனர், “உதயன்” பத்திரிகை, யாழ்ப்பாணம். 08.06.2024 உங்களை எப்படி விளித்து இக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு காலத்தில் நீங்கள் எங்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் என்றாலும், இப்போது உங்களை நண்பர் என்று விளித்து எழுத என் உள்ளம் மறுத்து நிற்கிறது. காரணம், இப்போது நீங்கள் எங்களுக்கு மட்டும் அல்ல எவருக்குமே உண்மையான நண்பராக இல்லை என்பதுதான்!. நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப் போங்கள்! நான் எங்களின் பழைய நட்பை நினைந்து உங்களை இடித்துரைப்பதற்காகவே இக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். எனது இந்த முயற்சியால், எந்தப்பயனும் விளையப் போவதில்லை என, என் அறிவுக்குத் தெரிந்தாலும், என் கடமையாய் நினைந்து பயனை எதிர்பாராமல் இக் கடிதத்தைப் பொது வெளியில் எழுதுகிறேன். வயதும், அனுபவமும் காலப்போக்கில் பலரையும் வலிமைப்படுத்தும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவை உங்களை வலிமைப்படுத்துவதற்குப் பதிலாக வக்கிரப்படுத்தி வருவதாகவே தோன்றுகிறது. அந்த எனது முடிவின் கடைசிச் சான்றாக, கடந்த 04.07.2024ஆம் திகதி உங்களது உதயன் பத்திரிகையில் வந்திருந்த தலைப்புச் செய்தி அமைந்து போயிற்று. அச் செய்தியைக் கண்டு மற்றைய தமிழர்களைப் போலவே நானும் பேரதிர்ச்சி அடைந்தேன். கடந்த தினங்களில் பயணம் ஒன்றில் இருந்ததால், உடன் எழுத நினைத்த கடிதத்தை, இப்பொழுதான் எழுத முடிகிறது. “செஞ்சொற்செல்வர்” கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களையும், அவர் நடாத்தி வரும் மகளிர் இல்லத்தினையும், இழிவு செய்யும் நோக்கத்தோடு அச் செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஆறு.திருமுருகன் அவர்களைப் பற்றியும், அவரது சமய, சமூக, தமிழ்ப் பணிகள் பற்றியும் நான் சொல்லித்தான் உலகத்திற்குத் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. தனி ஒரு மனிதாக நின்று, தன் சுயமுயற்சியால் அவர் செய்து வரும் அளப்பெரும் பணிகளை எடுத்துரைப்பதானால், இக் கட்டுரை பல பக்கங்களாக நீண்டுவிடும் என்பதால், எல்லோருக்கும் தெரிந்த அந்த விடயங்களை இங்கு மீளவும் வரிசைப்படுத்தாமல் விட்டுவிடுகிறேன். சுருங்கச் சொல்வதானால், பாராளுமன்ற உறுப்பினர்களாய் இருந்த உங்களைப் போன்றவர்கள், அரச நிதியில் சமூகத்திற்காகச் செய்த பணிகளைவிடப் பலமடங்கு பணிகளை ஆறு.திருமுருகன் நம்மினத்திற்காகச் செய்திருக்கிறார். தெல்லிப்பழை துர்க்கையம்மன்ஆலயத்தில் தொடங்கிய அவரது பணிகள், பின்னர் யாழ்ப்பாணம் அளவாய் விரிந்து, இன்று இலங்கை பூராகவும் பரவியிருக்கிறது. இந்த உண்மையைச் சாதாரண ஒரு தமிழ்ப் பாமரனும் அறிந்துள்ள நிலையில், பத்திரிகைத் துறை சார்ந்த உங்களுக்கு அவரது பெருமை தெரியாமல்ப் போனது ஆச்சரியம் தருகிறது. ஆறு.திருமுருகனின் பெயரை வலிந்து இணைத்தும், அவரது தனி ஒழுக்கம் பற்றி மற்றவர்களுக்கு ஐயம் ஏற்படும் வகையிலும், மிகக் கொடூரமான வக்கிரத்துடன், உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்றை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிட்டிருந்தீர்கள். சமூகத்தின் முக்கியமான ஒருவர் பற்றிய, உறுதிப்படுத்தப்படாத செய்தியை, தலைப்புச் செய்தியாக இடுமளவிற்குத்தான், உங்களது பத்திரிகைத்துறை அனுபவம் இருக்கிறதா? என நினைந்து ஆச்சரியப்படுகிறேன். பத்திரிகையை நீங்கள் சமூக வளர்ச்சிக்காக அன்றி உங்களின் வளர்ச்சிக்காகவே நடாத்தி வருகிறீர்கள். சமூகமா?, வீடா? என்ற ஓர் நிலை வந்தால் சமூகத்தைத் தூக்கிக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு வீட்டை வளர்க்கத் துணிபவர் நீங்கள். உங்களின் இந்தச் சுய உருவம் இன்னும் பலருக்குத் தெரியவில்லை. நீங்கள் வெளியிட்ட ஆறு.திருமுருகன் பற்றிய வக்கிரச் செய்திக்குப் பின்னாலும் கூட, வீட்டை வளர்க்கும் உங்களது சுயநலம் பதிவாகியிருப்பதை நான் அறிவேன். போர்க் காலத்தில், டாக்டர் யோகு பசுபதி அவர்களின் பலகோடி பெறுமதியான இல்லத்தை, இயக்கங்களிடம் இருந்து காப்பாற்றித் தருகிறேன் எனக் கூறி, வாடகைக்கு எடுத்த நீங்கள், போர் முடிந்த பின்பு அவரது வாரிசுகள் அவ் வீட்டு உரிமையை மீளக் கேட்டபோது, அதனை அவர்களிடம் கொடுக்காமல் அச் சொத்தை “விழுங்கிவிட” முற்பட்டீர்கள். ஒன்றும் செய்ய முடியாத அக்குடும்பத்தினர், அந்த வீட்டை அறப்பணிகளுக்கு எனத் திருமுருகனின் “சிவபூமி” அறக்கட்டளைக்கென எழுதிக் கொடுத்துவிட, அச் சொத்தை விழுங்கிவிட நினைத்த உங்களது எண்ணம் கனவாயிற்று. அதன் பின்பும் அச் சொத்தைச் தரமாட்டேன் என்று நீங்கள் பிடிவாதம் பிடிக்க, அண்மையில்த்தான் திருமுருகன் உங்களுக்குத் தனது சட்டத்தரணி மூலம் “நோட்டீஸ்” அனுப்பியிருந்தாராம். உங்களது “சுத்துமாத்து” வேலைகளுக்கு அஞ்சாமல் உறுதியாய் நின்ற திருமுருகன் மேல் உங்களுக்கு ஏற்பட்ட கோபமே, இப்போது உங்களது பத்திரிகையின் தலைப்புச் செய்தியாய் வெளிவந்திருக்கிறது. நண்பரே! உங்கள் பத்திரிகையின் ஊடாக மட்டுமே மக்கள் உலகத்தைப் பார்த்து வந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இணையத்தளங்களில், நிமிட நேரங்களில் “சுடச்சுடச்” செய்திகள் பரிமாறப்பட்டு வரும் சூழ்நிலையில், பத்திரிகைகள் எல்லாம் தேவையற்ற விடயங்களாய் அன்றாடம் மாறிவரும் உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள். அதனால்த்தான் அரசியற் தலைவர்கள், சமூகப் பணியாளர்கள், நிறுவனத் தலைவர்கள், பொது நிறுவனங்கள், அறிஞர்கள் எனப் பலதரப்பட்டோரையும் உங்கள் பத்திரிகையின் பொய்ச் செய்திகளால் மிரட்டி, அடிபணிய வைத்துக் “கோலோச்சிய” காலம் முடிந்துவிட்டதை இன்னும் உணராமல் இருக்கிறீர்கள். கடந்த காலங்களில், பழிவாங்கும் பொய்மைச் செய்திகளால் மற்றவர்களை வீழ்த்திக் காரியம் சாதித்துப் பழக்கப்பட்ட உங்களுக்கு, ஊடகங்கள் மக்கள் வயப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இனி அது நடக்காத காரியம் எனும் உண்மை புரியவில்லை. அது புரியாத காரணத்தால்த்தான், “காலாவதி” ஆகிவிட்ட அதே பழைய அஸ்திரத்தை இன்னும் உங்களது எதிரிகள் மேல் ஏவ முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊகத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத ஓர் செய்தியைத் தலைப்புச் செய்தியாய் இட்ட நீங்கள், வேண்டுமானால் பலராலும் பேசப்படும் பின்வரும் செய்திகளைக் கூட உங்கள் பத்திரிகையின் தலைப்புச் செய்திகள் ஆக்கலாமே!. உங்களுக்காக அச்செய்திகளைச் சுருக்கித் தருகிறேன். • “ஷப்றா” நிதிநிறுவனம் என்ற ஒன்றை ஆரம்பித்து, ஏழை மக்களின் பணத்தை “ஏப்பம்” விட்டு, சரவணபவன் வாழ்ந்து வருகிறார் என்பது அச்செய்தியில் ஒன்று. • தங்களது பெண்பிள்ளைகளின் கல்யாணத்துக்காகச் சிறுகச்சிறுகச் சேர்த்த பணத்தை “ஷப்றா” நிறுவனத்தில் இட்ட பலர் அது தொலைந்துபோக, துயரம் தாழாமல் தூக்கிட்டுக் கொண்டார்கள் என்பது மற்றொன்று. • சரவணபவன், மக்களை ஏமாற்றியதோடு அல்லாமல், “ஷப்றா” நிதிநிறுவனத்தை ஆரம்பித்துத் தன்னிடம் ஒப்படைத்த, மைத்துனரைக் கூட ஏமாற்றி “மொட்டை” அடித்து ஊரை விட்டு ஓடச் செய்தார் என்பது இன்னொன்று. • சரவணபவன், ‘உதயன்’ என்கின்ற பத்திரிகையை ஆரம்பித்ததன் மூலம், ஊடக அதிகாhரத்தைக் கையில் வைத்து, பலரது வாய்களையும் அடைத்து, தன்னைப் பற்றிய இரகசியங்கள் வெளிவராமால் பார்த்துக் கொண்டார் என்பது வேறொன்று. • சரவணபவன், பத்திரிகைத் துறையில் அனுபவமும், ஆற்றலும் கொண்டிருந்த வி;த்தியாதரனை, ஆபத்து வரும் போதெல்லாம் தனக்குக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டார் என்பது மற்றொன்று. • தன்னை விட்டு வித்தியாதரன் விலகி விடமால் இருப்பதற்காகவும், அவர் ஆற்றலை முழுமையாய் உறிஞ்சிக் கொள்வதற்காகவும், மிகக் கெட்டித்தனமாக அவரது தங்கையையே திருமணம் செய்து, உறவுச் சங்கிலியால் அவரையும் கட்டிப் போட்டார் என்பது இன்னொன்று. • போர்க்காலத்தில் எல்லாம் வித்தியாதரனை முன் தள்ளிவிட்டுப் போர் முடிந்ததும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைச் சரவணபவன் தான் அபகரித்துக் கொண்டார் என்பது வேறொன்று. • இனத் துரோகிகள் பலர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்;டிருந்த அவ் வேளையில், வி;த்தியாதரனது உறவைப் பயன்படுத்திப் புலிகளை வளைத்துப் போட்டு, சரவணபவன் தப்பித்துக் கொண்டார் என்பது பிறிதொன்று. • நிதிநிறுவனத்தை மூடிய சரவணபவனுக்கு புதிய பத்திரிகை நிறுவனத்தைத் தொடங்கப் பணம் கிடைத்ததன் மர்மம் என்ன? அப் பணத்தை நிதிநிறுவனத்தால் நஷ்டப்பட்டவர்களுக்கு அவர் ஏன் பகிர்ந்தளிக்கவில்லை? இப்படிப்பட்ட துரோகிகளை புலிகள் மன்னித்தது எப்படி? என்பது வேறொன்று. • புலிகளின் தலைவர் பிரபாகரனையே உதயன் பத்திரிகைக்கான விளம்பரதாரியாகவும் பயன்படுத்திய மர்மத்தின் பின்னணி என்ன? என்பது மற்றொன்று. • யாழில் வெளிவந்து கொண்டிருந்த வேறுசில தமிழ்ப் பத்திரிகைகளின் மூடு விழாவிற்கு சரவணபவனே காரணராய் இருந்தார் என்பது இன்னொன்று. • போர் முடிந்து புலிகள் அழிக்கப்பட்ட பின்பு நடந்த தேர்தலில், தனது பத்திரிகைப் பலத்தைக் காட்டித்தான் கூட்டமைப்புக்குள் தனக்கான ஓர் “சீற்” றையும் சரவணபவன் பெற்றுக் கொண்டார் என்பது வேறொன்று. • அக் கட்சிக்கும் சரவணபவன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, தனக்குப் பிடிக்காத, தன் அணி சார்ந்த மற்றவர்களைக் கூடத் தோற்கடிப்பதற்குத் தனது பத்திரிகையை அவர் பகிரங்கமாகப் பயன்படுத்தினார் என்பது பிறிதொன்று. • சிங்களத் தலைவர்களுடனான தொடர்பு சிரச்சேதத்திற்கு உரிய குற்றம் என்னுமாற்போல் எழுதியும், பேசியும் வந்த சரவணபவன், சிங்கள ஐனாதிபதியை அழைத்து, யாழ்ப்பாணத்தில் தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வைத்தார் என்பது மற்றொன்று. இப்படியாக ஊகத்தின் அடிப்படையில் இடக்கூடிய இன்னும் பல தலைப்புச் செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. உங்களைச் சந்திக்க வருகிறவர்களிடம் பத்திரிகைத் தர்மம் பற்றி வகுப்பெடுக்கும் உங்களது பத்திரிகைத் தர்மம், எப்படியானது என்பதை எடுத்தக்காட்ட இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிடவேண்டி உள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் செல்லாமல் விடுவதற்காக, அவர்களை ஏமாற்ற நினைத்து நீங்கள், புரட்டாதிச் சனிக்கு எள் எரிக்கக் கோயிலுக்குப் போகும்படி வெளியிட்ட பத்திரிகைச் செய்தி இன்றும் இளைஞர்களால் நையாண்டியாகப் பேசப்பட்டு வருகிறது. இவ்வளவும் ஏன்? உங்களை எமது நண்பராக நினைத்திருந்த எங்களுக்குக்கூட நீங்கள் வஞ்சனை செய்யத் தவறவில்லை. கொழும்பில் நாங்கள் ஆலயம் கட்டியபோது அதற்கென நிதியுதவி வழங்க வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வருகையைப் பயன்படு;த்தி, அவருக்கு நாங்கள் விலைபோய் விட்டதாகச் செய்திகள் வெளியிட்டு, எங்களை இனத் துரோகிகளாக அடையாளப்படுத்த முயன்றீர்கள். அந் நிகழ்வின் உச்சகட்டமாக, “டக்ளஸ்” அவர்கள் எங்களின் இடத்திற்கு வருகை தந்திருந்த புகைப்படங்களை, உங்கள் பத்திரிகையில்; ஒரு பக்கம் நிறைய வெளியிட்டு, அவருக்கு நாங்கள் வாழ்த்துச் சொல்வதாக ஓர் பொய்யான விளம்பரத்தைத் தயாரித்து, அதனை நாங்கள் தான் வெளியிட்டோம் என மக்களை நினைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அதன்கீழ் “கம்பன் குடும்பத்தார்” எனப் பெயரிட்டு நீங்கள் செய்த வக்கிர வேலைக்கு நிகரான ஓர் செயலை வேறு எந்தப் பத்திரிகையும் செய்திருக்குமா? என்று தெரியவில்லை. இப்படி வஞ்சகமாக நீங்கள் செய்த திருவிளையாடல்களை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களைப் பொறுத்தவரை ஆற்றலாளர்கள் எவரானாலும் அவர்கள் உங்கள் கால்களை “நக்கிக்” கொண்டு உங்களிற்கு கீழேதான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது பிச்சையாக இட்டுக் கொண்டிருப்பீர்கள். உங்களை மீறி அவர்கள் செயல்ப்படத் தலைப்பட்டால் பின்னர் எந்த வகையிலேனும் அவர்களை “வேரறுக்கத்” தயங்க மாட்டீர்கள். இதுதான் உங்களது பாணி. நண்பரே! ஒன்றை மறந்து போகாதீர்கள்! சிலரைச் சில பேர் சில காலம் ஏமாற்றலாம். பலரைப் பலபேர் பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எக்காலத்திலும் எவராலும் ஏமாற்றிவிட முடியாது!. இவ்வுண்மையை வெகுவிரைவில் நீங்கள் உணரப் போகிறீர்கள். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்” என்றும் “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்றும் நம் தமிழ்ப்புலவர்கள் சும்மா சொல்லி விட்டுப் போகவில்லை. திருமுருகன் மீதான உங்களது பழிவாங்கும் படலத்தில் பொது மக்களுக்குப் பல ஐயங்கள் எழுந்துள்ளன. இரண்டு நிறுவனங்களை மூடும்படி “கவர்னர்” உத்தரவிட்டதாய் நீங்கள் வெளியிட்ட செய்தியில், திருமுருகனது பெயரையும் அவரது நிறுவனத்தினது பெயரையும் வலிந்து சேர்த்திருக்கும் நீங்கள், மற்றைய நிறுவனத்தின் பெயரையோ, அதை நடத்துபவர்களின் பெயரையோ வெளியிடாமல் விட்டிருப்பது ஏன்? என மக்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இல்லங்களை மூடும் படி கவர்னர் உத்தரவிட்டதாக நீங்கள் வெளியிட்ட செய்தியினை, மறுநாளே “கவர்னர்” மறுத்திருக்கிறார். அதிலிருந்து அச்செய்தி பொய்ச் செய்தி எனத் தெரியவருகிறது. முக்கிய பிரமுகர் ஒருவரை இழிவுபடுத்தும் உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை, தலைப்புச் செய்தியாக இட்டிருக்கும் உதயன் பத்திரிகையின் மீது இலங்கையின் ஊடக நிறுவனம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? அறிய மக்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள். தான் சொன்னதாக ஓர் பொய்ச் செய்தியை வெளியிட்ட “உதயன்” பத்திரிகை மீது “கவர்னர்” இதுவரை எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கமாலிருப்பது ஏன்? மக்கள் கேட்டு நிற்கிறார்கள். ஒரு வேளை பலரும் சொல்லுமாற்போல் மதம் சார்ந்த ஒரு அரசியலுக்குள் கவர்னர் அகப்பட்டிருக்கிறார் என்பது நிஐம்தானா? இது மக்களின் அடுத்த கேள்வியாய் இருக்கிறது. திருமுருகனிடம் பல வகையிலும் பயன் பெற்ற பலரும், இன்று அவர்மேல் வீண்பழி சூட்டப்பட்டிருக்கும் நிலையில் மௌனம் காத்து நிற்பது வேதனை தருகிறது. நம் தமிழ்ச் சமூகம் யார் எதைச் செய்தாலும், “வீரமிலா நாய்களாய் நெட்டை மரங்கள் என நின்று புலம்பும் பெட்டைப் புலம்பல்” செய்வதை விட வேறெதுவும் செய்ய மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்து விட்டீர்கள் போல. மக்களின் அமைதி, புயலுக்கு முன் வரும் அமைதி. அதைக் கண்டு நீங்கள் சந்தோசப்படாதீர்கள்.! பின்னால் வரப்போகும் புயலை நீங்கள் தாங்க மாட்டீர்கள். இன்று நீங்கள் பத்திரிகை நிறுவனத் தலைவர், சிறந்த வியாபாரி என்ற நிலைகளைத் கடந்து விரும்பியோ, விரும்பாமலோ மக்கள் பிரதிநிதியாகவும் மாறியிருக்கிறீர்கள். அதை நினைந்து நீங்கள் நடப்பதாய்த் தெரியவில்லை. உங்களது கேவலமான செயல்கள் உங்கள் கட்சியையும் பாதிக்கப் போவது நிச்சயம். நிறைவாக ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன். திருமுருகனை வீழ்த்தவென நீங்கள் போட்ட சுருக்குக் கயிற்றில் இப்போது உங்களது கால்களே மாட்டிக் கொண்டிருக்கிறன. அண்மைக் காலமாக “வலம்புரி” யினது எழுச்சியையும், “உதயனது” வீழ்ச்சியையும் மக்கள் கண்கூடாகக் கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில் உங்களது இழி செயல்களால் நீங்கள் தொடங்கிய “உதயனுக்"கு நீங்களே சமாதி கட்டி விடாதீர்கள்! எனக் கேட்டுக் கொள்கிறேன். இக்கடிதம் உங்களை நிறையக் காயப்படுத்தும் என்பது நிச்சயம். இதிலி ருக்கும் “செவிகைக்கும் சொற்களை” ஏற்றுத் திருந்தினால் அது உங்களுக்கு நல்லது. அதைவிடுத்து ஜெயராஜு க்கு எதிராக அடுத்த என்ன சூழ்ச்சி செய்யலாம்? என நினைக்கத் தொடங்குவீர்களே ஆனால், தர்மத்தின் சாட்டையடிக்கு விரைவில் ஆளாவீர்கள் என்பது மட்டும் நிச்சயம். அன்பன், கம்பவாரிதி இ.ஜெயராஜ் (Facebook)1 point- பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?
😗...... விஜய் சேதுபதியின் 'க/பெ. ரணசிங்கம்' படத்தின் கதை.......... என்ன கொடுமை, சார்......1 point- கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?
1 point'கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?' என்னும் இக்கட்டுரை 'அருஞ்சொல்' இதழில் கு. கணேசன் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்றது. பலருக்கும் பலதும் ஏற்கனவே தெரிந்த தகவல்கள் தான், ஆனால் இலகுவான ஒரு நடையில் இதை எழுதியிருக்கின்றார். நல்ல ஒரு வாசிப்பாக அமையலாம். *********** கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா? (கு.கணேசன், 07 Jul 2024) -------------------------------------------------------------------------------------------- இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள். நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒல்லியாக இருக்கும்போது தெருவில் நடந்து போனால், ஒரு பூச்சிகூட கண்டுகொள்ளாது. ஏதோ ஆசைப்பட்டு, வாய் ருசிக்குச் சாப்பிட்டு, ‘தெனாலிராமன்’ வடிவேலுபோல் உடல் பெருத்து, முன் வயிற்றில் தொப்பை விழத்தொடங்கினால்போதும், படாத கண்ணெல்லாம் பட்டுத் தொலைக்கும். “உடம்பைக் குறைங்க. எதுக்கும் ஒரு தரம் பிஎம்ஐ, கொலஸ்டிரால் எல்லாம் பார்த்துக்கோங்க… கொழுப்பு கூடுறமாதிரி தெரியுது. வெறும் வயித்துல ‘லிப்பிட் புரோஃபைல்’ பார்த்தா கரெக்டா இருக்கும்…” இப்படியான இலவச ஆலோசனைகள் மத்தியமரிடமிருந்து கட்டாயம் கிடைக்கும். “கொழுப்பு இல்லாத பால் குடிங்க. கொலஸ்டிரால் இல்லாத எண்ணெயை வாங்குங்க” என்றெல்லாம் ஊடகங்கள் போதாத குறைக்குப் பாடம் நடத்தும். உங்களுக்கோ குழப்பம் கூடிவிடும். உடல் பருமனுக்கும் கொலஸ்டிராலுக்கும் என்ன சம்பந்தம்? கொலஸ்டிராலை ஏன் அந்தக் கால வில்லன் நடிகர் நம்பியாரைப் பார்ப்பதுபோலவே பார்க்கிறோம்? வாருங்கள், அதையும் பார்த்துவிடலாம். கொலஸ்டிரால் விரோதியல்ல! எல்லோரும் நினைப்பதுபோல் கொலஸ்டிரால் நமக்கு விரோதியல்ல! அது ஒரு சாதுவான சத்துப் பொருள். அதிக சக்தி தருகிற, நம் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒரு கொழுப்புப் பொருள். நம் உடல் கார்போஹைட்ரேட்டைத் தயாரிப்பதில்லை; புரோட்டீனைத் தயாரிப்பதில்லை. ஆனால், கொலஸ்டிராலை மட்டும் தயாரித்துக்கொள்கிறது. அப்படியானால், நமக்குத் தேவையான ஒரு ‘விஐபி’யாகத்தானே அது இருக்க வேண்டும்? கல்லீரல், குடல், அட்ரீனல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்குச் சினைப்பைகள் என உடலில் பல இடங்களில் கொலஸ்டிரால் ஃபேக்டரிகள் இருக்கின்றன. இவை தினமும் 700 மில்லி கிராம் கொலஸ்டிராலைத் தயாரிக்கின்றன. உங்கள் எடை 70 கிலோவாக இருந்தால், நீங்கள் சுத்த சைவமாகவே இருந்தாலும் சரி, உங்கள் உடலில் 140 கிராம் கொலஸ்டிரால் கட்டாயம் இருக்கும். ஏன்? என்ன அவசியம்? உடலில் செல்களின் வளர்ச்சிக்குக் கொலஸ்டிரால் அவசியம். மூளையின் செயல்பாட்டுக்குக் கொலஸ்டிரால் தேவை. கொழுப்பு உணவைச் செரிக்க, பித்தநீரைச் சுரக்க கொலஸ்டிரால்தான் தேவை. நரம்புகளைப் பாதுகாக்கும் சவ்வுகள் வளர வேண்டுமா? அதற்கும் கொலஸ்டிரால் வேண்டும். நம் உடலின் வெப்பம் சமச்சீராக இருக்க வேண்டுமானால் கொலஸ்டிரால் இருக்க வேண்டியது கட்டாயம். டீன்ஏஜில் ஆணுக்கு மீசையும், பெண்ணுக்கு மார்புகளும் வளர வேண்டுமானால் கொலஸ்டிரால் இல்லாமல் முடியவே முடியாது. சுகம் காணும் தாம்பத்தியத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் உதவுகிற ஸ்டீராய்டு ஹார்மோன்களுக்கு அடிப்படையே இந்தக் கொலஸ்டிரால்தான். இப்படிப் பல வழிகளில் நமக்குக் கைகொடுக்கும் நண்பனாகத்தானே கொலஸ்டிரால் இருக்கிறது! பிறகேன் அதை எதிரியாகப் பார்க்கிறோம்? கொலஸ்டிராலை இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்தப் புதிர் விலகும்! கொலஸ்டிராலில் இரண்டு வகை! நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு, இல்லையா? அதுமாதிரிதான் கொலஸ்டிராலிலும் இரண்டு தினுஷு உண்டு! கெட்ட கொலஸ்டிரால், நல்ல கொலஸ்டிரால்! அது என்ன கெட்டது, நல்லது? சாதாரண கொலஸ்டிரால் அதன் ரசாயன முறைப்படி உடல் திசுவிலிருந்து ரத்தத்துக்குள் தனியாகப் போக முடியாது. அதை ரத்தத்தில் தூக்கிச் சென்று சுற்றுலா காண்பிக்கத் தனி வாகனம் தேவை. அதன் பெயர் ‘லிப்போ புரோட்டீன்’. கொலஸ்டிரால் இதன் முதுகில் ஏறிக்கொண்டு உடலில் ஊர்வலம் வரும்போதுதான் அதன் அடுத்த பக்கம் தெரிகிறது. ‘லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன்’, ‘ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன்’ என்றெல்லாம் வாய்க்குள் நுழையாத பெயர்களைச் சொல்லி உங்களை இம்சைப்படுத்த விரும்பவில்லை. முதலாவதை எல்டிஎல் (LDL) என்றும், இரண்டாவதை ஹைச்டிஎல் (HDL) என்றும் நம் வசதிக்குச் சொல்லிக்கொள்ளலாம். இவற்றைத் தயாரிப்பதும் கல்லீரல்தான். சரி, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? சுருக்கமாகச் சொன்னால், ஹைச்டிஎல் நல்ல கொலஸ்டிரால். எல்டிஎல் கெட்ட கொலஸ்டிரால். எப்படி? அது செய்யும் காரியம் அப்படி. ரத்தத்தில் எல்டிஎல் பயணிக்கும்போது, போகிற போக்கில் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிளவுகளில் படியத் தொடங்குகிறது. இதனால் ரத்தக்குழாய் தடித்து ரத்த அழுத்தம் அதிகரிக்க வழிசெய்கிறது. அப்போது முதல் முறையாக ‘பிபி பேஷண்ட்’ என்ற முத்திரை குத்தப்படுகிறது. “உப்பைக் குறைங்க, கொழுப்பைக் குறைங்க” என்கிற ஆலோசனை ஆரம்பமாகிறது. நாக்குக்கு அது புரிகிறதா? எது வேண்டாமோ அதைத்தான் அதிகம் தேடி ஓடுகிறது. நமக்கும் “சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடாமல் பிறகு எப்போது சாப்பிடுவதாம்?” என்று சொல்லத் தோன்றிவிடுகிறது. வாரம் தவறாமல் வீக் எண்ட் பார்ட்டியில் சாப்பிட்ட பர்கரும் கிரில் சிக்கனும் கொடுத்த கூடுதல் கொலஸ்டிரால் ரத்தக்குழாயின் உள்ளளவைக் குறைத்துவிடுகிறது. இது ரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. பாசி படிந்த தண்ணீர்க் குழாய் அடைத்துக்கொள்கிற மாதிரி அடைத்துக்கொள்கிறது. கொஞ்சம் யோசியுங்கள். இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் இந்த எல்டிஎல் படிந்து அடைத்துவிட்டால் என்ன ஆகும்? மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். நீங்கள் நெஞ்சுவலிக்காக டாக்டரிடம் சென்று, இசிஜி, ஆஞ்சியோகிராம் என ஏதாவது எடுத்துப் பார்த்திருந்தால், ‘அத்திரோஸ்கிலிரோஸிஸ் ஆரம்பமாகிவிட்டது. தர்ட்டி பர்சென்ட் அடைப்பு இருக்கு. கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம்’ என்று உங்கள் கார்டியாலஜிஸ்ட் எச்சரித்திருப்பாரே, அது இதுதான். சரி, இதுவரை நண்பனாக இருந்த கொலஸ்டிரால் இப்போது எதிரியானது எப்படி? நம் கல்லீரல் தானாகவே கொலஸ்டிராலை தயாரிப்பது ஒரு புறம். நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பிலிருந்து கொலஸ்டிராலைத் தயாரிப்பது இன்னொரு புறம். நாம் சாப்பிடும் உணவில் 20% வரை கொழுப்பு இருக்குமானால், இந்த இரண்டுவித கொலஸ்டிரால் உற்பத்தியும் சரியாகவே இருக்கும். அதாவது, தினமும் 27 கிராம் கொழுப்பு, 35 கிராம் நட்ஸ் மற்றும் விதைகள் எடுத்துக்கொண்டால் நெய், வெண்ணெய், பாமாயில் ஆகியவற்றைத் தினமும் 10 கிராமுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் கொழுப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் இணைந்து ஆய்வுசெய்து, வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் இது. இந்த அளவு அதிகமாகும்போதுதான் பிரச்சினை. அதிலும் குழம்பாக உட்கொள்ளப்படும் மாமிச உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பைவிட வறுத்த, பொரித்த, எண்ணெயில் குளித்த, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் உறங்குகிற உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்புதான் முக்கிய எதிரி. அளவுக்கு மீறி உடலுக்குள் நுழையும் இந்த வகை கொழுப்பைக் கல்லீரல் பித்தநீரில் சேமித்துக்கொள்ளும். தொப்பை விழுமளவுக்குக் கொழுப்புணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது இதுவரை சேமித்துவைத்த கொழுப்பை கொலஸ்டிராலாக அது மாற்றிவிடும். அப்போது உடலுக்குள் கொலஸ்டிரால் உற்பத்தியாவது தேவைக்கு அதிகமாகும். பிறகென்ன, நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஆரம்பமாகும். நண்பனும் எதிரிதான், எப்படி? சரியான வோல்டேஜில் எரியும் வண்ண விளக்குகளின் வெளிச்சத்தை நம்மால் ரசிக்க முடியும். அதேநேரம் வோல்டேஜ் அதிகமாகி மின்னல்போல் வெளிச்சம் கொட்டினால் அதை ரசிக்க முடியுமா? அப்படித்தான் அளவோடு உணவு சாப்பிடும்வரை கொலஸ்டிரால் நமக்கு நண்பன். அளவுக்கு மீறி சாப்பிட்டு, உடல் பருமனுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டால், நண்பனும் எதிரிதான். உடலின் அதிசயத்தைப் பாருங்கள். ஆபத்து இருக்கும் இடத்தில்தான் பாதுகாப்பும் இருக்கிறது. கெட்ட கொலஸ்டிராலைத் தயாரிக்கும் அதே கல்லீரல்தான் நல்ல கொலஸ்டிராலையும் தயாரிக்கிறது. நல்ல கொலஸ்டிரால் எனப் புகழப்படும் ஹைச்டிஎல் என்ன செய்கிறது தெரியுமா? இதய ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்து கல்லீரலுக்குக் கொடுக்கிறது. அதைக் கல்லீரலானது பித்தநீராக மாற்றி சிறுநீரிலும் மலத்திலும் வெளியேற்றுகிறது. நமக்கு உடல் பருமன் இருந்தாலும் உடனே மாரடைப்பு வராமல் பாதுகாப்பது ஹைச்டிஎல் மேற்கொள்ளும் இந்த மெக்கானிஸம்தான். எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? எல்டிஎல் அதன் எல்லையைத் தாண்டினால், நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், எல்டிஎல்லின் கை ஓங்கிவிடும். ஹைச்டிஎல் அப்போது தூங்கிவிடும். அப்படியான ஒரு கெட்ட நாளில் மாரடைப்பு எனும் எம தூதன் எட்டிப் பார்ப்பதைத் தடுக்க முடியாது. எல்லாம் உடல் பருமனின் உபயம்! https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-cholesterol1 point- "ஈரம் தேடும் வேர்கள்" / குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா
"ஈரம் தேடும் வேர்கள்" / குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா1 point- சம்பந்தர் காலமானார்
1 point- இந்திய சீன உறவுகளை சமநிலைப்படுத்துவதற்கு இலங்கை முயற்சி - ரொய்ட்டர் மாநாட்டில் அலிசப்ரி
தான் போக வழியில்லாத மூஞ்சூறு விளக்குமாறக் காவின கதைதான்,. 🤣1 point- கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக அதிக வாய்ப்பு.. வெளியான சி.என்.என் கருத்துக்கணிப்பு
இன்டியன் எல்லாம் இப்ப கமலா மாமியின் குலம் கோத்திரம், சாதி சனம் எல்லாம் தேட வெளிக்கிட்டு உரிமை கொண்டாடத் தொடங்கியிருப்பாங்களே,.... எங்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, நாடார் குலத் திலகம், அமெரிக்காவில் புலியை சுழகால் அடித்துக் கலைத்த மறத் தமிழிச்சி எங்கள் அஞ்சா நெஞ்சம் கமலா ஹரி(ஸ்) நாடார் அவர்களை வாழ்த்துவோம் வணங்குவோம்,.. . 🤣1 point- 'என் மனச திருப்பிக் கொடு'
1 pointஐயா அவரைத் தில்லை என அழைக்கப்போவதாக யாழ் கள உறவு ஒருவர் எழுதி இருந்தவர்!1 point- குறுங்கதை 10 -- அமீபா குளம்
1 pointவல்லிபுரக் கோவில் குளம்தான் நான் ‘ஒல்லி’ கட்டி நீந்திப் பழகிய குளம். வெள்ளைக் களி மண் கலங்கி பச்சையாகவும் இல்லாமல் மஞ்சளாக இல்லாமலும் இருக்கும் தண்ணீர். அங்கே குளித்தால் கண்டிப்பாக கேணியில் தண்ணி அள்ளிக் குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒருநாள் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது கரையில் ஒருவர் குந்தியிருந்நு கொண்டு கழுவிக் கொண்டிருந்தார். “என்னடா செய்யிறான்?” என்று நண்பனைக் கேட்டேன். “பக்கத்திலே பத்தை ஒன்று இருக்கு கவனிக்க இல்லையே? அங்கையிருந்துதான் வந்தவன்” என்றான். விழுந்தடித்து கரைக்கு வந்தேன். சமீபத்தில் ஊருக்குப் போன போது அந்தக் குளத்தைப் போய்ப்பார்த்தேன்1 point- சம்பந்தர் காலமானார்
1 pointசம்பந்தன் ஈழத்தமிழினத்தின் மூத்த பழம்பெரும் அரசியல்வாதி. பல அரசியல்களம் கண்டவர்.வெளிநாட்டு அரசியல் ராஜதந்திரிகளுடன் நேரடியாக பேசும் வல்லமை கொண்டிருந்தவர்.சிங்கள அரசியல்வாதிகளுடனும் இவரின் தொடர்புகளை குறைத்து மதிப்பிட முடியாது. கிட்டத்தட்ட பலம் மிக்க அரசியல்வாதியாக இருந்தவர். அது ஒரு புறம் இருக்க.... சம்பந்தனால் தமிழினத்தின் பிரச்சனைகளைத்தான் தீர்க்க முடியவில்லை. ஆனால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்க்கட்சிகளையும் பலமாக ஒன்றிணைக்கும் வழிவகைகளையாவது செய்திருக்கலாம்.கட்சிகளை ஒருங்கிணைத்து பல இறுக்கமான கட்சி யாப்புகளை உருவாக்கி கட்டுக்கோப்புடன் வைத்திருந்திருக்கலாம்.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- 'என் மனச திருப்பிக் கொடு'
1 pointஅத்தியடில் குத்தியன் இருப்பதாக எண்ணிவந்தேன்…. நல்ல கவிஞர் இருப்பதையும் இன்று கண்டேன், வாழ்த்துக்கள்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களே!!🙌 பெயர் எழுதிக் களைத்துவிட்டேன். வணக்கம்!👋1 point- குறுங்கதை 10 -- அமீபா குளம்
1 point🤣..... இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது..... ஆதவன் அந்தச் செய்தியில் 'மனித குளம்' என்று எழுத்துப்பிழை விட்டு இருப்பார்கள். அங்கேயிருந்து தான் 'அமீபா குளம்' என்ற இந்த தலைப்பு உருவானது...1 point- கருத்து படங்கள்
1 point1 point- சம்பந்தர் காலமானார்
1 pointமுட்டாள் கூட்டத்திற்குப் பயந்து தனது சொந்தக் கருத்தை கூறத் தவறுவது நல்ல அறிகுறி அல்ல. அண்மையில் ஒருவருடன் கதைக்கும்போது அவர் பாசிசம் என்றால் என்னவென்று மிகச் சுருக்கமாக கூறினார். அதாவது "சமூகத்தில் உள்ள நல்ல, ஆரோக்கியமான, பயன்தரக்கூடிய, வளர்ச்சிக்கு உதவக் கூடிய எல்ல அழகான அம்சங்களையும் சமூகத்தில் இருந்து அகற்றுதல்" என்றார். இன்றைய எமது யாழ் மையவாத, வறண்ட சமூகத்திற்கு மெத்தவே பொருந்தும். இது யாழ் களத்திலுள்ள பலருக்குப் புரியாது என்பது வெட்கக்கேடு.1 point- 'என் மனச திருப்பிக் கொடு'
1 point- குறுங்கதை 10 -- அமீபா குளம்
1 pointஒரு பக்கம் உங்கடை கதை. மற்றப் பக்கம் இஸ்ரோ தலைவரின் விண் கல் பூமியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றது என்ற எச்சரிக்கை..! எந்தப் பக்கத்தால திரும்பிறது???? பி. கு: கதை நல்லாருக்கு…!1 point- குறுங்கதை 10 -- அமீபா குளம்
1 pointஇது வீட்டுக்காரி தானே? வீட்டுக்கு வீடு வாசல்படி. இறங்கி அமீபாவுக்கு ஒரு காய் சொல்லிப் போட்டு வந்திருக்கலாமே?1 point- சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
உங்கள் கருத்திற்கு நன்றி, மன்னிக்கவும் உங்கள் கருத்துடன் உடன்பாட்ட்ற்கு வரமுடியாமைக்கு, சில கோட்பாடுகளை எந்த வித பின்புலத்தினையும் கவனத்தில் கொள்ளாமல் அவ்வாறே உள்வாங்குதல் எனும் முறைமையிலான கற்கை நெறியினை Kind learning என அழைக்கிறார்கள், இந்த வகையிலேயே வரலாற்றினையும் (பொதுவான வரலாறாக இருந்தாலும் மத சார்பிலான வரலாறாக இருந்தாலும்) அணுகிறார்கள். இதனால் திரைமறைவில் காணப்படும் உள்குத்துக்களை அறிய முடிவதில்லை அல்லது அறிய விரும்புவதில்லை இது நீண்ட கால நிலைத்தன்மையினை பாதிக்கிறது. இந்த வரலாற்று புரளிகள் உள்ளடி வேலைகளை அறிந்து கொள்வதற்கு புரிந்துணர்வு ஏற்படுத்தக்கூடிய பாரம்பரியமற்ற கற்கைநெறி வேண்டும் என கூறப்படுகிறது இதனை Wicked learning என அழைக்கிறார்கள், இந்த பாரம்பரியமற்ற கற்கை நெறியினை பின்வரும் உதாரணத்தில் கூறலாம். நாம் பாரம்பரிய முறை கற்றல் நெறிகளின் பின்புலம் கொண்டவர்களாக இருப்பதால் சில நடைமுறை ஒவ்வாத விடயங்களுக்கான விடைகளை காண முயற்சிப்பதில்லை அல்லது விரும்புவதில்லை என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). எனது கருத்து சில தற்பொது எமக்கு பிடிக்காத விடயங்களை கடந்து போவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது அதனை எதிர்கொள்ள எமது வரலாற்று தவறுகளை கற்று கொள்ளவேண்டும் என மற்றவர்கள் கூறும் விடயம் சரியாக இருக்கும் என கருதுகிறேன்.1 point- குட்டிக் கதைகள்.
1 pointஅட ராமா என்னத்த சொல்ல கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ். ‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர். போனான். ‘சிட் டவுன்’ உட்கார்ந்தான். அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது. ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள். அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார். வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார். ‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார். ‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் புரூஃபிங், வசதியான நாற்காலி, உயர்ந்த கார்ப்பெட். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்’ என்றான் ரமேஷ். ‘இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லல்லை?’ ‘கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். நான் பாட்டுக்க சுத்தமா இருக்கிற இந்த ரூம்ல யாரோ ஒரு மடையன் குப்பை போட்டிருக்கான்னு சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லல்லை’ நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘சரி, வெளியில ஒரு அம்மா தரையை துடைச்சிக்கிட்டு இருக்கும், அதைக் கூப்பிட்டு குப்பையை எடுத்துப் போடச் சொல்லுங்க’ என்றார் வலது. ‘அந்தம்மா பேர் என்ன சார்?’ மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். ‘இட்ஸ் ஓக்கே. உங்க யாருக்கும் அந்தம்மா பேரு தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்றவன் எழுந்து நடந்து போய் கதவைத் திறந்து வெளியில் உட்கார்ந்திருந்த பியூனிடம் ‘அந்தம்மா பேர் என்ன?’ என்று கேட்டான். பியூன் சொன்னான். ‘பவானி, இங்கே வாம்மா’ என்று கூப்பிட்டான். சுத்தம் செய்யச் சொன்னான். மறுபடி வந்து நின்றான். ‘சிட் டவுன். ஏன் நிக்கறீங்க?’ உட்கார்ந்தான். ‘எல்லா விஷயத்தையும் நல்லா கவனிக்கிறீங்க. வேலைக்காரர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னும் ஒரே ஒரு கேள்வி. அதுக்கும் சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு மார்க்’ ‘கேளுங்க சார்’ ‘எங்க நாலு பேர்ல ஒருத்தர் தொழிற்சாலை முதன்மை அதிகாரி, ஒருத்தர் பர்ஸான்னல் டிப்பார்ட்மெண்ட் ஹெட், ஒருத்தர் ஃபைனான்ஸ் ஹெட், ஒருத்தர் உங்க பாஸ். யார் யார் என்னென்னன்னு சொல்லல்லைன்னா கூட பரவாயில்லை. தொழிற்சாலை ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?’ ‘நான் வரும்போது நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துகிட்டீங்க. அது என்னை கன்ஃப்யூஸ் பண்ணத்தானே ஒழிய அவர் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்களும் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்கதான் பாஸ். நான் சரியா பதில் சொல்லச் சொல்ல உங்க முகத்தில் பெருமை தாங்கல்லை. எப்படிப்பட்ட ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன் பார் என்கிற பெருமை தெரியுது. மீதம் ரெண்டு பேர் அமைதியா இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர்தான் ஃபேக்டரி ஹெட். நீங்க எல்லாருமே ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட் வச்சி ஏதோ நோட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இதுவரை எதுவுமே எழுதிக்கல்லை. அவர் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்பார். சம்பளம் பேசும்போதுதான் எழுதுவார். ஆகவே ரெண்டாவதா இருக்கிறவர்தான் ஃபேக்டரி ஹெட். இடது கோடியில் இருக்கிறவர் பர்ஸான்னல் மேனேஜர். அவர்தான் இந்த நாடகத்துக்கெல்லாம் டைரக்டர். ‘ஸ்ப்ளெண்டிட்.. உங்க ஆப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். ஒரு மெய்ண்ட்டனன்ஸ் ஆளுக்கு இருக்க வேண்டிய தகுதி அது. வெய்ட் பண்ணுங்க. வீ வில் லெட் யு நோ’ ‘சார், புது விதமான இண்ட்டர்வியூ சார். வழக்கமா வந்ததும் ஃபைலை வாங்கிப் பார்க்கிறது. டெல் அஸ் சம்திங் அபௌட் யூ மிஸ்டர் ரமேஷ்ங்கிறது. இதெல்லாம் எதுவுமே இல்லை. டக்குன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சூப்பர் சார்’ ‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’ ‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’ ‘பின்னே நீங்க?’ ‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’....!! இந்த கதையின் நீதி என்ன??1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சம்பந்தர் காலமானார்
1 pointசம்பந்தரை... எனது பெருந் தலைவர் என்று சொன்னதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். 😎 அப்படி சொல்லும் அளவுக்கு அவர் எள்ளளவும் தகுதியான ஆள் அல்ல. மிகவும் ஏமாந்த, தோல்வி உற்ற அரசியல்வாதி தான்... இரா. சம்பந்தன்.1 point- சம்பந்தர் காலமானார்
1 point2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது சுயநிர்ணய உரிமையினையும், தனிநாட்டையும் வலியுறுத்தியே உருவாக்கப்பட்டது. இலங்கையரசாங்கத்திற்கும், புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையினை வெகுவாக வரவேற்ற கூட்டமைப்பு, புலிகளைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றும் ஏற்றுக்கொண்டது. இன்னொருவகையில் சொல்லப்போனால் புலிகளின் ஆயுதபோராட்டத்திற்கு அரசியல் ரீதியிலான நியாயப்படுத்தல்களை செய்யும் அமைப்பாகவும் இயங்கியது. இதனாலேயே 2001 மார்கழி மற்றும் 2004 சித்திரை ஆகிய காலங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னரை விடவும் அதிகமான வாக்குகளை அக்கட்சியினால் பெற முடிந்தது. அதாவது புலிகளின் ஆசீர்வாதத்துடன் அரசியலில் ஈடுபட்டமையினால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவினையும் இக்கட்சியினால் பெற்றுக்கொள்ள முடிந்தது. சம்பந்தரை ஆறு தடவைகள் தமிழ் மக்கள் தவறாது பாராளுமன்றம் அனுப்பி அழகுபார்த்தார்கள் என்று அகமகிழும் அவரின் ஆதரவாளர்கள் அவர் உண்மையிலேயே 8 - 9 தடவைகள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்குபற்றியிருந்தார் என்பதையும், அவர் 2-3 தடவைகள் தோல்வியடைந்தார் என்பதனையும் சொல்லப்போவதில்லை. இதுகூட "Cherry Picking" என்று கடந்து சென்றுவிடலாம். அவ்வாறு அவர் தோற்ற மூன்று வருடங்களாவன 1989, 1994 மற்றும் 2000 ஆகும். இதில் விசேஷம் என்னவென்றால் 1989 தேர்தல் இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆயுதமுனையில் அதன் கூலிகளான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய ஆயுத அமைப்புக்களுடன் இணைந்து சம்பந்தரின் கூட்டணியும் போட்டியிட்டிருந்தது. சம்பந்தர் இதுவரையில் போட்டியிட்ட தேர்தல்களில் பெற்ற வாக்குகளைப் பார்த்தால் 1977 இல் 15,144 வாக்குகள்(வெற்றி). 1989 இல் 6,048 வாக்குகள்(தோல்வி). 1994 இல் 19,525 வாக்குகள் (தோல்வி). 2000 தேர்தலில் தெரிவுசெய்யப்படவில்லை. 2001 தேர்தலில் 40,110 வாக்குகள் (வெற்றி). 2004 தேர்தலில் 47,735 வாக்குகள் (வெற்றி). 2010 தேர்தலில் 24,488 வாக்குகள் (வெற்றி). 2015 தேர்தலில் 33,834 வாக்குகள் (வெற்றி). 2020 தேர்தலில் 21,422 வாக்குகள் (வெற்றி). இவற்றுள் குறிப்பிடப்படவேண்டிய விடயம் யாதெனில் புலிகளுக்கு அனுசரணை வழங்கியும், அவர்களை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டும் சம்பந்தர் அரசியல் நடத்திய 2001 (40,110) மற்றும் 2004(47,735) ஆகிய வருடங்களிலேயே அவரது அரசியல் சரித்திரத்தில் அதிகமான வாக்குகளைத் தமிழர்கள் அளித்தார்கள் என்பது. ஆக, பெருந்தலைவர் சம்பந்தனுக்கு புலிகளின் ஆசீர்வாதத்தினாலேயே இந்த அதிகரித்த வாக்குகள் கிடைத்தன. இதனை இல்லையென்றும், சம்பந்தனின் மேல் தமிழ் மக்கள் கொண்ட ஒப்பற்ற அன்பினாலேயே அவ்வருடங்களில் அவ்வாறு வாக்களித்தார்கள் என்றும் அவரது புகழ்பாடிகள் சொல்லக்கூடும். அவர்களைத் தவறென்று நிறுவுவதில் எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அப்படிப் புகழ்பாடி இன்புறுவது அவர்களின் விருப்பம். புலிகளின் அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்த சம்பந்தன், போர் முடிவுற்று பல வருடங்களுக்குப் பின்னர் வழங்கிய அறிக்கையொன்றில் "புலிகளை அழித்துவிட்டு தீர்வு தருவோம் என்று எமக்கு வாக்குறுதியளித்தார்கள். அதனாலேயே அது நடக்கும்வரை பேசாதிருந்தோம்" என்று கூறியிருந்தார். புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு , அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் ரீதியிலான நியாயத்தன்மையினை அதுவரை வழங்கிவந்த சம்பந்தன் இறுதிப்போரின்போது பேசாமல் இருந்தது ஏன்? தமிழ் அரசியல்த் தலைவர்களில் மிகவும் அனுபவமும், முதிர்ச்சியும் வாய்ந்தவராக அன்று காணப்பட்ட அவர், மக்களை இணைத்துக்கொண்டு யுத்தத்தினை நிறுத்து என்று இலங்கையரசையும், இந்தியாவையும், சர்வதேசத்தையும் நோக்கிக் கூக்குரல் இட்டிருக்க வேண்டுமா இல்லையா? அவரும் அவரது கட்சியும் செய்யும் அரசியல் மக்களுக்கானதென்றால் 2009 இல் மக்களை இலங்கையரசு பலியிட்டு வருகையில் அதுகுறித்துப் பேசவேண்டியது அம்மக்களின் அரசியல்த் தலைவரின் கடமையல்லவா? தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய மூத்த அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தமிழரின் ஆரம்ப கால அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டவரான சம்பந்தனுக்கு இலங்கையரசும், இந்திய அரசும் ஈழத்தமிழர் நலன் தொடர்பாக எவ்வாறான கொள்கைகளைக் கொண்டிருந்தன என்பது தெரியாமல் இருந்திருக்கும் என்பது நம்பக்கூடியதா? அப்படியானால், புலிகளை முற்றாக அழித்துவிட்டு அரசியல்த் தீர்வினை தங்கத் தட்டில் வைத்துத் தருவோம் என்று அவர்கள் கூறியபோது எப்படி நம்பினார்? இறுதிநாட்களில் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது அம்மக்களினதும், போராளிகளினதும் அரசியல் முகமாக இருந்த கூட்டமைப்பு செய்தது என்ன? தொலைபேசிகளை அணைத்துவைத்துவிட்டு தமிழ்நாட்டில் சென்று தஞ்சம் புகவேண்டிய தேவையென்ன சம்பந்தனுக்கு? 1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தில் நரவேட்டையாடிக்கொண்டிருந்தவேளை அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துகொண்டு இந்திய ஆக்கிரமிப்பை ஆதரித்தமையினை விடவும் சம்பந்தனும் அவரது கட்சியினரும் செய்தது கோழைத்தனமானதா இல்லையா? தனது மக்கள் கொல்லப்பட்டிருக்கும்போது, சாகட்டும், புலிகள் அழிந்தால்ச் சரி, மீதமிருப்போருக்குத் தீர்வை வாங்கிக் கொடுக்கலாம் என்று சம்பந்தர் இருந்தமை சரியானதா? 2001 இல் சுயநிர்ணய உரிமை, தனிநாடு, ஏகபிரதிநிதித்துவம் என்று கர்ஜித்த சம்பந்தன் 2009 களில் புலிகள் அழியட்டும், மீதியைப் பின்னர் பார்க்கலாம் என்றும், 2009 இற்குப் பின்னர் ஒன்றுபட்ட இலங்கை, பிரிக்கப்பட முடியாத இலங்கை, இலங்கையர்களாக அடையாளம் காணுவோம், எமக்குள் தமிழர் சிங்களவர் என்று பிரிவு வேண்டாம் என்றும் கூறத் தலைப்பட்டது எங்கணம்? ஆக, தமிழரின் நலன்கள் தொடர்பான சம்பந்தரின் அக்கறையென்பது தன்னெழுச்சியானால் வந்தது அல்லவென்பதும், புலிகளின் இருப்பினாலேயே அவர் செயற்கையாக அதனை வரிந்துகொண்டிருந்தார் என்பதும் நிரூபணமாகிறது அல்லவா? சமத்துவம், சம பங்கு, ஐம்பதிற்கு ஐம்பது என்று ஆரம்பித்து பின்னர் சமரச அரசியலாகவும், இறுதியில் சரணாகதி அரசியலாகவும் சம்பந்தனின் அரசியல் ஆனதேன்? இவர்தான் தமிழர்களின் பெருந்தலைவரா??? நம்பீட்டம்!!! நேரத்திற்கொருமுறை வேஷம் கலைக்கும் சிலருக்கு ஆரம்பத்தில் புலிகள் தமிழர்களின் காவலர்களாகவும், பின்னர் தமிழர்களை அழித்தவர்களில் அவர்களே முதன்மையானவர்களாகவும் தெரிவதில் வியப்பில்லை. அவர்கள் அப்படிச் செய்யாதுவிட்டால்த்தான் வியக்கவேண்டும், ஆகவே கடந்து சென்றுவிடலாம்.1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointஇயங்காத X-Ray கூடத்தில் வேலை செய்யும் Radiographerக்கும் மற்றும் மருந்தகமே இல்லாதமருந்தகத்தில் வேலை செய்யும் மருந்தாளருக்கும் எப்படி over time கிடைக்கின்றது. அதிஸ்டசாலிகள் அல்லவா?1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointஇங்கு அவதாருக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு நானும் இலங்கையில் வைத்தியர் என்று புருஸ் விடுற கூட்டம் நிறைய உண்டு .1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 point25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointபல மருத்துவ மனைகளிலும், கல்லூரிகளிலும்…. டக்ளஸ் தேவானந்தாவால் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க நியமிக்கப் பட்ட ஊழியர்களே அதிகம் வேலை செய்வதும்… அவர்களால் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் போன்ற சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம். அரசியல்வாதிகள் இப்படியான இடங்களில் மூக்கை நுளைக்காமல் இருந்தால் மட்டுமே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்க முடியும். யாழ். இந்துக் கல்லூரியிலும்…. சில அரசியல்வாதிகள் மூக்கை நுளைக்க முற்பட்ட போது தற்போதைய அதிபர் அதற்கு சம்மதிக்காததால் அவரால்… அங்கு சிறந்த சேவையை ஆற்ற முடிகின்றது.1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointதொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்ற எவரையும் அனுமதிக்கக் கூடாது.1 point- சம்பந்தர் காலமானார்
1 pointஈழத்தில் எதிரியாக இருந்தாலும்,அனாதையாக இருந்தாலும் ஒரு மரண நிகழ்வு நடந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரும் கூடி நின்று மரண நிகழ்வை நடத்துவர். ஆனால் ஒரு பழம்பெரும் எமது அரசியல்வாதி இறந்த பின் நடக்கும் கொடுமைகளையும் , பல இணைய தளங்களில் வரும் கருத்தோட்டங்களை பார்க்கும் போது.......இப்போதிருக்கும் தலைவர்கள் சுதாகரித்து கொள்வார்களாக.....1 point- மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன். அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது. சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தனது முயற்சி, மற்றும் அவருக்கு ஒத்தாசை வழங்கியவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் ஆதரவில் சிறப்பாக கோயிலையும், இதர நிர்வாகத்தையும் நீண்டகாலம் கொண்டு சென்றார். இங்கு செய்தியின் உண்மைத்தன்மை, விரிவான பின்புலம் தெரியாமல் ஆறு திருமுகனை நோக்கியதாக காழ்ப்புணர்வில் கருத்துக்கள் வைக்கப்பட்டு உள்ளன. துர்க்காபுரமோ, அதன்பாற்பட்ட செயற்பாடுகளோ ஆறு திருமுகன் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. கால ஓட்டத்தில் அவர் கட்டுப்பாட்டுக்குள் துர்க்காபுரம் சென்றுள்ளது. ஆனால், கோயில், அதன்பாற்பட்ட விடயங்களில் பலருக்கும் பங்கு, அக்கறை உள்ளது. தமது சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் யாழ்கருத்துக்களத்தில் சிலருக்கு சைவம், கோயில், கோயில் சம்மந்தப்பட்ட விடயங்கள் என்றாலே அடி வயித்தில் புளிக்காய்ச்சல் வருவதுகும் வேறுபட்ட விடயங்களை அதற்குள் இழுத்துக்கொண்டு வருவதுகும் கருத்துக்களத்தில் வழமையாக நடைபெறும் விடயங்கள். இது ஏற்கனவே ஒரு சிலரினால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. பெண்கள் விடுதிக்கு பொறுப்பாக அனுபவம் வாய்ந்த பெண் ஒருவர் பொறுப்பெடுத்து சிவத்தமிழ்செல்வியின் பணியை சிறப்பாக தொடர வேண்டும்.1 point- சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
பிரான்சில் 7500 private பாடசாலைகள் உள்ளன.அவற்றில் 85 வீதமானவை கத்தோலிக்க பாடசாலைகள். கனடாவில் கத்தோலிக்க பாடசாலை வட்டாரம் உண்டு. அவற்றின் கீழ் நிறைய கத்தோலிக்க பாடசாலைகள் இயங்குகின்றன.1 point- சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
எந்த நாட்டில் மதம் சம்பந்தமான அரச விடுமுறைகள் இருக்கின்றனவோ அந்த நாடுகள் மதம் சார்பான நாடுகள் அல்லவா?1 point- டெல்லியில் கனமழை பாதிப்பு: விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
தமிழ்நாட்டு எஞ்சினியர்கள் கட்டிய மேற்கூரையாக இருக்குமோ. 😂1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எங்கள் மூன்றுபேரின் சந்திப்புக்கும் வந்த வாழ்த்துக்ககளயும் வரவேற்புகளையும் காணும்போது….. யாழ்கள உறவுகள் அனைவரையும் அழைத்து ஒரு கொண்டாட்ட விழா வைக்கலாமோ என்று தோன்றுகிறது. 🤪 சாமியார் மோதிரம் மாத்தி முடிந்ததும், சிறியர் முறுக்குச் சாப்பிட்டு முடிந்ததும் வைக்கச் சொல்லி ஒரு பட்சி சொல்லுது.😆1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
1 point- எனது அறிமுகம்
1 pointஎனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்1 point- எனது அறிமுகம்
1 pointமௌனத்திலும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். "இது தான் என் இன்றைய நிலை" "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழப் பழகி விட்டேன்!” "குழந்தை பருவம் சுமாராய் போக வாலிப பருவம் முரடாய் போக படிப்பு கொஞ்சம் திமிராய் போக பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "உண்மை தேடி அலசத் தொடங்கினேன் வேஷம் போட்ட பலதைக் கண்டேன் ஒற்றுமை அற்ற மதங்களைக் கண்டேன் ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” "நானாய் வாழ அமைதி தேடினேன் வாழத் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் ஒன்றும் செய்யா கருங்காலி என்றனர்!” "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிம்மதியும் இல்லை எழுதத் தொடங்கினேன் மனதில் பட்டதை உற்சாகம் தந்தனர் மகிழ்வும் வந்தது!” "ஓடும் உலகில் நாமும் ஓடி ஓரமாய் வருத்தங்கள் ஒதுங்க வைக்க பேரப் பிள்ளைகள் தனிமை போக்க ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டேன்!” "உறங்கி கிடைக்கா மனது ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் பிறந்தநாள் கூட்டுது வயதை ஒருபக்கம் பிரிந்த உறவுகளை எண்ணுது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது அவளை நினைக்க அழுகை வருகுது வாழ்வை நினைக்க ஆத்திரம் வருகுது மரணத்தை நினைக்க மகிழ்ச்சி வருகுது!!” (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)1 point- எனது அறிமுகம்
1 point- எனது அறிமுகம்
1 pointவணக்கம் தில்லை. உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது. 🙂 நீங்கள், நேற்று யாழ்.களத்தில் இணைந்த அன்றே... உங்கள் பதிவுகள் மூலம்... வாசகர்களின் அதிக விருப்பப் புள்ளிகளைப் பெற்று, நேற்றைய தினம் 1️⃣ முதலாவது இடத்தைப் பெற்று சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளீர்கள். 🥇 பாராட்டுக்கள். தொடர்ந்து யாழில் இணைந்து இருங்கள். 🙂1 point- எனது அறிமுகம்
1 pointஇனிய யாழ் களத்துக்கு நல் வரவு தில்லை அவர்களே . நிறைய பதிவுகள் வைத்திருப்பீர்கள் போல ஒவ்வொன்றுக்கும் அந்தந்த பொருத்தமான பகுதியில் இணைத்து விடவும் தேவையேற்படின் உறவோசை பகுதியில் உங்கள் விளக்கங்களை கேட்டு எழுதினால் விடை தருவார்கள். உங்கள் பிளாக் இன் பெயர் விபரம் தந்தால் அங்கும் சென்று பார்ப்பார்கள்.1 point- எனது அறிமுகம்
1 point - சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.