Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    13
    Points
    15791
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  3. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    5896
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/10/24 in Posts

  1. நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில் சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் சென்று " எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ" என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர் "அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே" "கி.. கி.. .ஒம் அண்ணே" "நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே " "சீ சீ டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை" "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் " "ஒம் " "அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்" "அப்ப நீங்கள் சோறு சாப்பிடுவதில்லையே " "ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்" "என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல" "வயசு போகவில்லை , உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்" "அட கடவுளே பிறகு " "பிறகு மகளும், பேரப்பிள்ளைகளும் முதலுதவி செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை" "வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்" "இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை" "சன் இன் லோவும் 'டை' பூசுறவறே" "ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் " "புது பிராண்டுக்கு 'ஹினி பிக்' நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ" "புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்" "அண்ணே உது 'சண் இன் லோ' வின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி" அவரும் சிரித்தபடி எழுந்தார் , "இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி" "உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு" " சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி" "எந்த டாக்குத்தர்" "யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்" "வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் " இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது "டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே " “அவையளுக்கும் நடேசருக்கும் அட்டாஜ் கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்" "ஏன்டா?," "நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்" " குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ? எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்" "போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும் வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்" அப்படியே நடந்து வந்தவர் மூலஸ்தான பின் சுவரை பார்த்து "இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்," "விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு" "இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பி, சனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்ச‌னான் இப்ப தெளிந்திட்டன்" "வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ" "நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்" "இறைசக்தியோ" "அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...." "என்ன அண்ணே சொல்லுறீயல்" "நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்" "அது நடக்குது தானே" "அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு" " இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு" "உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் " "அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு" "இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது “ என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர். "என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?" "உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள் அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்" "யார் நியுசிலாந்துக்காரன்களே" "உந்த நக்கல் தானே கூடாது" "ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்" "ஒம் நல்ல‌ வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் .... நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம், ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும் நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்" "இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்" "ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்" "சரி சரி வாங்கோ" "உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத‌" "யார் அந்த இலைட் குறூப் அண்ண" "அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள் இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...
  2. ஒரு கட்சிக்குள், சஜித்துக்கு ஆதரவாக ஒரு அணி. ரணிலுக்கு ஆதரவாக இன்னொரு அணி. பொது வேட்பாளருக்காக மூன்றாவதாக ஒரு அணி. சுமந்திரனுக்கு தான் சஜித்தை ஆதரிக்கின்றாரா அல்லது அனுரவை ஆதரிக்கின்றாரா என்பதில் அவருக்கே குழப்பம். தமிழ் சனம் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு நாமம் போடப் போகினம். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் வாக்குகளைப் பெறும்.
  3. என்ன சாரதி நீ ...... கல்லு ரோட்டில மாட்டு வண்டில் போனமாதிரி மெதுவா போகிறாய் ........! 😂
  4. இப்பவெல்லாம் நரை முடிக்காரரை பாக்கிறதே பெரிய கஷ்டமாய் கிடக்கு......தலைக்குத்தான் அடிக்கினம் எண்டு பார்த்தால் மீசைக்கும் சேர்த்து எல்லே அடிக்கினம். 🤣
  5. போலிகள் கல்லா கட்டும் மண் பள்ளியில் தத்துவக் கல்வி இல்லாததன் போதாமையையே ஜக்கி, நித்தி, இப்போது மகாவிஷ்ணுவைப் போன்ற மோசடிக்காரர்கள் நிரப்புகிறார்கள். தத்துவம் என்பது ஆன்மீகம் அல்ல. பக்தி யுகத்திலும் பின்னர் கண்ணதாசன் பாடல்களாலும் அப்படி ஒரு மயக்கம் இங்கு ஏற்பட்டிருக்கிறது. தத்துவக் கல்வியானது வாழ்க்கை நெறிக்கல்வியோ யோகா பயிற்சியோ அல்ல. தத்துவம் என்பது தர்க்கம், அறம், உளவியல், பிரக்ஞையியல், தோற்றப்பாட்டியல் என பல விசயங்களை போதிப்பது. அது நம் மாணவர்களை புதிய சிந்தனை, கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்த்தும். வாழ்வின் சாராம்சம் என்ன, பொருள் என்ன, நோக்கம், இலக்கு என்ன, சுயம், மனம், உடல் என்றால் என்ன ஆகிய கேள்விகளை புறவயமாக ஆராய தத்துவக் கல்வி உதவும். தத்துவம் பயிலாமல் நேரடியாக மாணவர்கள் அறிவியலுக்கும் தொழில்நுட்பக் கல்விக்கும் போகும்போது ஒரு பெரும் வெற்றிடத்தை அகத்தே உணர்வார்கள். அதை அவர்கள் போதைப் பழக்கம், உடலீர்ப்பின் மயக்கம், பொழுதுபோக்கு மயக்கத்தின் பாற்பட்டு நிரப்ப முயல்வார்கள். அப்போதும் நுட்பமானவர்களுக்கு போதாமை தென்படும். அவர்கள் கள்ள சாமியார்களிடம் சிக்குவார்கள். அடிமையாகி அழிவார்கள். ஆனால் தத்துவப் பயிற்சி தரும் சிந்தனைத் தெளிவும் மொழிக்கூர்மையும் மகத்தானது, ஒப்பற்றது. இந்தியா முழுக்க எந்த பள்ளியிலும் கல்லூரியிலும் மாணவர்களுக்கு இப்பயிற்சி தரப்படுவதில்லை. அதை பயன்படுத்தித் தான் ஜக்கி மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார். ஒரு காலத்தில் ஆந்திராவில் இருந்தும் காஞ்சியில் இருந்தும் மகத்தான தத்துவவாதிகள் நளந்தாவுக்கு சென்று வாயிலில் காற்று நிற்கும் தத்துவவாதி காவலர்களை வாதில் வென்று உள்நுழைந்து பயின்று பெரும் பௌத்த மெய்யியலாளர்களாகி உலகையே வெல்லும் தத்துவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நாகார்ஜுனர் ஒரு உதாரணம். திக்நாகர், தம்மபாலர் வேறு சில முக்கிய மெய்யியலாளர்கள். பௌத்த ontologistகளின் சாயலில் தோன்றிய ஹுசர்ல், ஷோப்பன்ஹெர், நீட்சே, ஹைடெக்கர் போன்றோரை உலகமே இன்று படிக்கிறது. ஆனால் நாம் மகாவிஷ்ணு போன்றோர் உளறுவதை கேட்டுக்கொண்டு குழப்பமாக வீற்றிருக்கிறோம். ஊழ் என ஒன்று உண்டா என்பதற்கே நம்மால் தர்க்கரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை. அதை சரியாக பொருள்படுத்தி வாயை அடைக்க முடியவில்லை. வெறும் தொழில்கல்வியில் மட்டும் கவனம் செலுத்தியதன் விளைவே இது. முன்பு தத்துவம் பொன்போல விளைந்த மண் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. இப்போது கோமாளிகள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். பெரும் அதிகாரமும் பணமும் படைத்த போலிகள் மெய்யியல் முகமூடி அணிந்து கல்லா கட்டுகிறார்கள். Posted 19 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2024/09/blog-post_9.html
  6. அந்த துணிக்கடையில் ஒரு பெண் உள்ளே நுழைந்தார்.. "ஏங்க, வன்னியர் குழந்தைக்கு ட்ரெஸ் கிடைக்குமா..?? என்றார்... . "இருக்குமா, அந்த செக்‌ஷனுக்கு போங்க.." என்றார்... . என்னடா பெரியாரு மண்ணுக்கு வந்த சோதனைனு பீதியில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த என்னை கடைக்காரரே சமாதானப்படுத்தினார்... . அவங்க கேட்டது One Year, குழந்தைக்கு Dress, நீங்க ஒன்னும் பதறாதீங்க... . அப்பாடா.. . ஓ.. இது சாதி பிரச்சனையோன்னு பார்த்தேன்.. நல்ல வேளை இது மொழியை ஸ்டைலா பேசற குந்தானிகளால வந்த பிரச்சனை.. . 24 மணி நேரமும் நம்ம பதட்டத்துலயே வச்சுருக்கானுங்க.... Venkat Bvk
  7. கொடிகாமத்தில் செய்தது போலவே, உடுப்பிட்டியிலும் ஒரு பரிசளிப்பு விழாவையும் சேர்த்தே வைத்திருந்தால் உடுப்பிட்டியிலும் கொஞ்சமாவது கூட்டம் வந்திருக்கும். ஆனால் வடமராட்சியில் இப்போது மூன்று லீக்குகள் இருக்கின்றதென்று நினைக்கின்றேன் - வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு. இதில் யாரைக் கூப்பிடுவது, யாரை விடுவது என்று அது வேற ஒரு பிரச்சனை இருக்குது. ஏன் தேவையில்லாத வம்பு என்று தான் உடுப்பிட்டியில் பரிசளிப்பு விழா நடத்தவில்லை போல.........
  8. சுவிட்லந்தில் மட்டும் இல்லை இலங்கையில் நடந்தாலும் பெயரை மறைத்து எழுதலாம். இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தில் சண்டை நடந்தால் அதை இலங்கை அரசியல் கட்சி ஒன்றின் கூட்டத்தில் சண்டை நடந்தது என்று செய்தி எழுதலாம்
  9. Published By: Vishnu 10 Sep, 2024 | 08:57 PM (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்திருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை (10) வவுனியாவில் கூடிய ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கான கட்சியின் விசேட குழு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரி எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிடுவதற்கும், எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கும் தீர்மானித்துள்ளது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தாம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை எனவும், மாறாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த உத்தரவாதத்தை வழங்கக்கூடிய ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஒருவரையே ஆதரிப்போம் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து கட்சி ரீதியாகத் தீர்மானம் மேற்கொள்வதற்கு முன்பதாக கடந்த மாத இறுதியில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அவருக்குத் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இம்மாதம் முதலாம் திகதி வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதெனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்தீர்மானம் குறித்து கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத தலைவர் மாவை சேனாதிராஜா எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அதற்கு மறுதினம் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி எடுத்திருக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவித்தார். அதேவேளை மத்திய குழுக்கூட்டம் நடைபெற்ற தினத்தன்று லண்டனில் இருந்த சிறிதரன், சமஷ்டி தீர்வு குறித்து சஜித் பிரேமதாஸ வழங்கிய உத்தரவாதம் என்னவென்று கேள்வி எழுப்பியதுடன், இம்முறை தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதற்குத் தான் மேற்கொண்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய குழறுபடிகளுக்கு மத்தியில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளர்கள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து, அவற்றின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதெனத் தீர்மானிக்கும் நோக்கில் தமிழரசுக்கட்சியினால் கடந்த மாதம் நிறுவப்பட்ட விசேட குழு செவ்வாய்க்கிழமை (10) வவுனியாவில் கூடியது. தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் உள்ளடங்கும் குழுவில், சரவணபவன் தவிர்ந்த ஏனைய ஐவரும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஆகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவருடன் கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார். அத்தோடு எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால், எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறிதரன், அவரது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவே முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்ததாகவும், ஆனால் அது அவருடைய விருப்பம் எனும்போதிலும், கட்சி அதற்கு அனுமதி அளிக்காது எனத் தாம் கூறியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார். அதேபோன்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கட்சியினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு இசைவாக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்தி விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்கு சிறிதரன் உள்ளடங்கலாக சகலரும் இணங்கியதாகவும் கூறினார். தமிழர்களை ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு அறிக்கை வெளியிட உத்தேசம் : 14 ஆம் திகதி மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருக்கவும் தீர்மானம்! | Virakesari.lk
  10. 🤣.......... எங்களோட சேர்ந்து தமிழின் நிலையும் இப்படியாகி விட்டதே, ஐயா............. தேர்தல் நாட்களில் மட்டும் கவனிப்பார்கள்........
  11. அப்படித்தான் ஒன்றாக இருந்தோம், விசுகு ஐயா. உங்களுக்கு இங்கிருக்கும் பலரை விட மிக நன்றாகவே எங்களின் வரலாறு தெரியும். ஆரம்பத்தில் இந்தப் பிரதேசம் பல கூறுகளாகப் பிரிந்தே கிடந்தது. என்னுடைய ஊரே இரண்டாகப் பிரிந்து இருந்தது. பின்னர் ஒன்றாகியது. ஒரு தலைமை, ஒரு கொள்கை, ஒரு இலட்சியம், அதை விட முக்கியமாக அந்த தலைமையின் அந்த இலட்சியத்தை அடைந்து விடலாம் என்று நாங்கள் எல்லோரும் அன்று நம்பியது, இவை தான் அந்த ஒற்றுமைக்கு காரணம். இன்று அப்படியான ஒரு நம்பிக்கையை கொடுப்போர் என்று எவரும் எங்கள் மத்தியில் இல்லை..............😌.
  12. சுமந்திரனின் வாய் அப்படி. பாவம் சஜித்துக்கு... கிடைக்க இருந்த வாக்கையும் இந்தாள் கெடுத்துப் போட்டுது. சுமந்திரன், சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டார். +++++++ +++++++ +++++++ +++++++ "சிலர் வாயை திறந்து பேசினால்... வெள்ளி கொடுக்கலாம். சிலர் வாயை மூடிக் கொண்டிருந்தாலே... பவுண் கொடுக்கலாம்." 😂 👆- துருக்கிய பழமொழி -👆 சுமந்திரன் எந்த வகை.... என்பதை, உங்கள் தெரிவிற்கே விட்டு விடுகின்றேன். 🤣
  13. அந்த பிள்ளை தன்னால் முடியுமானதை செய்து பெயர் எடுத்துள்ளது. சப்பாத்து அடுக்குவது உங்களுக்கு சரிவராவிட்டால் வேறு ஏதாவது வித்தியாசமாக செய்து பார்க்கலாமே. ஐடியா தேவை என்றால் தரலாம்.
  14. அப்புக்காத்து சுமந்திரன் என்பவர், முதலில்... சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராம். பிறகு... 10 நாள் கழித்து, சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடி மக்களுக்கு அறிவிப்பாராம். மக்களை இவர் முட்டாள் பயலுகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரா. நீங்கள், ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் 😂. கட்சி தலைமைக்கு கட்டுப் பட்டு, வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே போதும். 🤣
  15. ஆட்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட சஜித்தின் பிரசாரக்கூட்டம் யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் இன்று முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர். நண்பகல் வரை மக்களை ஒன்றுதிரண்டுவதில் ஏற்பாட்டாளர்கள் தோல்விகண்ட நிலையில் இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ் செய்தியாளர் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவிற்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. https://www.facebook.com/share/v/prxb4BYdqQSjydXq/
  16. அறிக்கை மரியாதைக்காக விடப்பட்டது என்று காவித் திரிந்தவர்கள் வரிசையில் வரவும்
  17. எனக்கும் வாக்கிருந்து வாக்குப் போட்டால் முதலாவது சங்கிற்கும் இரண்டாவதாக சயித்துக்குமே போட்டிருப்பேன்.
  18. வழக்கம்போல் நாசூக்கான நையாண்டியுடன் உங்களின் கட்டுரை அருமை புத்ஸ் ........... அப்பப்ப வந்து எழுதவும் . ......! 😁
  19. இங்கு ஒரு கோவிலில் பூசகரே... மக்களின் ஆதரவுடன் தமிழில் பூசை செய்வோம் என முன் வந்த போது, கோவில் நிர்வாகத்தின் ஒரு பகுதி கோவிலை பூட்டி, திருவிழாவும் செய்ய விடாமல் பண்ணி விட்டார்கள். இவ்வளவிற்கும் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தமிழ் என்றவுடன் இவர்களுக்கு ஏன்... கசக்கின்றது என்று தெரியவில்லை. நல்லதொரு கட்டுரைக்கு நன்றி புத்தன்.
  20. நம்மடையர்களின் சமஸ்கிருத மோகமும் ஒரு காரணம்!
  21. புலத்திலே ஆலயங்களில் ஏற்பட்டுவரும் மடைமாற்றத்தை உரையாடலாகப் பதிவுசெய்துள்ளமை சிறப்பு. நானும் அண்மையில் ஒரு ஆலயத்துக்கு நெய்விளக்கேற்றுவமென்று போனா அம்பாள் ஆலயம் 'தேவஸ்தானம்' ஆக மாறி ஐயப்பர் வரை குடியேறியுள்ளார். திருத்தவேலைக்காக எல்லாத் தெய்வங்களையும் வரிசையாக வைத்துள்ளார்கள். திருத்திமுடிய என்பெயரிலை வருமென்று பார்ப்பம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. தமிழ் அரசுக் கட்சியின் இன்றைய கூட்டம்... சட்டை கிழியாமல், வேட்டி அவிழாமல், மண்டை உடையாமல்... அமைதியாக நடக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகின்றேன்.
  23. மக்கள் வரிப்பணத்திலிருந்தே மக்களுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன, அந்த மக்களிடம் வாங்கும் பணத்தை மக்களுகு வழ்ங்குவதற்கு இடைத்தரகர்களாக உள்ள அரசியல்வாதிகள் அந்த பணத்தை ஆட்டையை போட்டு பெருச்சாளி ஆகுகிறார்கள், தமது பணத்தையே திரும்ப பெறுவதற்கு இந்த ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிற நிலையில் இருக்கிறது, இந்த அரசியல்வஸ்துக்களுக்கு வாக்களிப்பதை விட்டு விட்டு வரி கட்டுவதை நிறுத்தினால் சில வேளை வழிக்கு வருவரக்கூடும். மக்கள் காசையும் குடுத்து அவர்களின் காலில் விழும் நிலைக்கு இலங்கை அரசியல் மிகவும் தரம் தாழ்ந்துள்ளதா?
  24. இங்கு நீங்களும் இன்னும் சிலரும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்கு போடக் கூடாதென பகிரங்கமாக கூறுகிறீர்கள். அப்போ யாருக்கு வாக்கு போடவேண்டுமென்றால் நாசூக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எழுதுகிறீர்கள். இங்கு முக்கிய வேட்பாளர்களாக மூவரே உள்ளனர். ஏன் உங்களால் நேரடியாக இவர்களைக் காட்ட முடியாமல் உள்ளது? பொது வேட்பாளர் இந்தியாவின் கீழ் இயங்கியது தான் உங்களுக்கு தெரிகிறதா? அப்போ இவ்வளவு காலமும் தமிழர் கட்சிகள் யாரின் கீழ் இயங்கினார்கள்? நானோ நீங்களோ வாக்குப் போடப் போவதில்லை. அப்படி இருக்கும் போது நாங்கள் இங்கே எழுதுவதால் தேர்தலில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. ஆனபடியால் வெளியே வந்து ஒரு ஆளைக் காட்டுங்க. காலாகாலமா எந்த வாளிக்குள் உங்கள் குப்பைகளைப் போடுகிறீர்கள்? போட்டு அவர்களை அழகு பார்க்க அவர்களோ குனியவிட்டு வெழுவெழென்று வெழுக்கிறார்கள்.
  25. சரியாக சொன்னீர்கள்.. மகிந்தவை ஒழிக்க மைத்திரியை தெரிவு செய்தபோதுதான் சாவுப்பயம் இல்லாமல் றோட்டில் போனோம்.. அந்த கணங்களை 80 களில் புலம்பெயர்ந்து பென்சன் எடுப்பவர்களால் ஒரு போதும் உணர்ந்து கொள்ளமுடியாது.. மைத்திரி வென்ற நாள் அன்று சாவுப்பயமில்லாமல் றோட்டில் போன நிமிடங்கள் இன்னும் கண்ணில் வந்து போகுது.. அது ஒரு வித சுதந்திரத்தை உணர்ந்த தருணம்.. தற்காலிகமாக என்றாலும் அந்த சிறிய சிறிய விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அரசியல்தலைவர்களை தெரிவு செய்து சாகாமல் உயிருடன் ஆவது இருந்து பிள்ளைகுட்டிகளை பெற்று தமிழர் தேசத்தை சுடுகாடு ஆக்காமல் இனப்பெருக்கி பொருளாதாரத்தில் முன்னேறுவதே தமிழருக்கு இன்றுள்ள தீர்வு.. முஸ்லீம்களை பார்த்து தமிழர்கள் வாழ கற்றுக்கொள்ளனும்..
  26. விசுகு,அவர்களது போராட்டத்தில் ஒரு தீர்வுதான் அது தமிழீழம். ஓரளவாவது என்று அவர்கள் உடன்பட்டிருந்தால் இத்தனை மாவீரர்கள் இல்லை. அரசியல் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதில் அனந்தியும் அடக்கம். மாவீரர்கள் மதிப்புக்குரியவர்கள். போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களது தியாகம் அளப்பரியது. அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவதும், அரசியல் செய்வதும் ஏற்புடையது அல்ல. மாவீரர்களை எப்படி அனந்தி இதயத்தில் வைத்திருக்கின்றாரோ அது போல்தான் மற்றவர்களும். அனந்தி தனது சாக்கடை அரசியலுக்குள் புனிதமான மாவீரர்களை இழுத்து சேரடிக்காமல் இருக்க வேண்டும். பொது வேட்பாளரை மாவீரன் பிரபாகரனே ஏற்கமாட்டார்.
  27. 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் மதுரை மகா என்ற காமடியனாக இருந்தவர், அப்படியே ஒரே பாய்ச்சலில் ஒரு ஆன்மீகக் குருவாக மாறும் அதிசயம், மகாவிஷ்ணு என்னும் பெயருடன், நடந்தது பாரதியும், புதுமைப்பித்தனும், பெரியாரும் வாழ்ந்த, திராவிடம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியிலேயே. நித்தியானந்தா இந்த இடத்திற்கு வருவதற்கு எத்தனை வருடங்கள் எடுத்தார். எத்தனை மாஜிக் ஷோ நடத்தினார். ஆனால் மதுரை மகா அப்படியே அசால்டாக அலுங்காமல் குலுங்காமல் ஒரு ஆன்மீகக் குருவாகினார். சான்பிரான்ஸ்சிஸ்கோ, சிகாகோ என்று முதலீடுகளை உலகெங்கும் தேடும் முதல்வர் ஸ்டாலின், முதலில் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது யார் இந்த மதுரை மகாவை பாடசாலைகளில் பேச அனுமதித்தது என்று. இவர்கள் சொல்வது போல அது பள்ளித் தலைமையாசிரியையோ அல்லது பள்ளி மேலாண்மைக் குழுவோ அல்ல. இதைக் கண்டுபிடித்து வெளியில் சொல்ல இன்னும் எத்தனை நாட்கள் இவர்களுக்கு தேவை? மதுரை மகா தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு ஆன்மீக வழிகாட்டி என்றில்லை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று முன்னர் கோபால் பற்பொடி விற்கப்பட்ட அததனை நாடுகளிலும் அவருக்கு கிளைகள் உண்டு. மேலதிகமாக, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்றும் பறந்து சேவை செய்து கொண்டிருக்கின்றார். இங்கு அமெரிக்காவில் நித்தியின் பக்தர்கள் அடுத்த ஒரு குருவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள், அதற்கிடையில் மகாவிற்கு இப்படி ஆகிவிட்டது............🤣.
  28. சிவாஜிலிங்கம் நின்றது போலவே தான் அரியநேத்திரனும் நிற்கின்றார் என்று ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், இன்டர்நெட் ட்ராபிக் கொஞ்சம் குறைந்திருக்கும்...........தேவையில்லாமல் எவ்வளவு கட்டுரைகளையும், பத்திகளையும் வாசித்தும், எழுதியும் விட்டோம்............
  29. தமிழ் கட்சிகளின் இந்த கூத்துகளால், அங்குள்ள தமிழ் இளைய சமூகம் தேசியக் கட்சிகளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகக் கவரப்பட்டு, தமிழ் தேசிய அரசியலில் இருந்து முற்றாக அன்னியப்பட்டு போகப் போகின்றனர். தமிழ் பொதுவேட்பாளர் நியமனம் என்பது, தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை உலகுக்கு ஓங்கி சொல்லப் போகின்றது என்று முதல் நாளில் இருந்தே நான் அச்சப்பட்டு சொல்லி வருவது ஈற்றில் உண்மையாக நிகழ்ப் போகின்றது.
  30. சுவிஸ் தமிழர்களின் தொகையைவிட அமைப்புகளின் தொகை அதிகரித்துக்கொண்டு போகிறது. கடவுள் புண்ணியத்தில் "ஒரிஜினல்" புலிகள் மீதான தடையை நீக்காமல் விட்டது நல்லதா போச்சு. இலையென்றால் இப்ப விடுதலைப்புலிகள் என்ற பெயரிலையே 1008 அமைப்பு தோன்றியிருக்கும்.
  31. Savoir+ · Suivre 3 j · Comité de contrôle de la qualité du lait பூனையாய் பிறந்தால் கஷ்டமே இல்லை ........! 😂
  32. இது உண்மையாகத்தான் இருக்கும் போல . ........! முந்தநாள் ஒரு வாகனம் திருத்துவதற்கு கழட்டி சில உதிரிப் பாகங்களை இன்னொருவர் மூலம் ஓடர் பண்ணினனான் .......இன்று வந்து எனது கணணியைத் திறந்தால் அந்தந்தப் பொருட்கள் வேறு எங்கெங்கு வாங்கலாம் என்று விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கு . .......!
  33. கடந்த சில தினங்களுக்கு முன் பிரேசிலிய புவியியல் சேவை, அமேசான் படுகையில் உள்ள அனைத்து ஆறுகளும் வரலாறு காணாத அளவில் குறையும் என்றும் இதனால் உள்ளூர் சமூக மக்கள் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது. இத்தகைய சூழலில், அமேசான் மழைக்காடுகளின் வழியாக செல்லும் ஆறுகளில் நீர்மட்டம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வழக்கமாக ஜூன் கடைசி வாரத்தில் இருந்து ஜூலை முதல் வாரத்தில் இங்கே வறட்சிக் காலம் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில், ஜூன் முதல் பாதியிலேயே நீர் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சராசரியை விட குறைவாக காணப்படுகிறது. நவம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை அமேசான் பகுதிகள் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவை பெற்றுள்ளது. வறட்சி காரணமாக ஆறுகளில் பயணம் மேற்கொள்வது கடுமையாக இருப்பதாகவும், நீர் உட்கொள்ள முடியாத அளவிற்கு கலங்கலாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக வெளியில் இருந்து வரும் நீரை நம்பியுள்ளனர். இப்பகுதிகளில் வசிக்கும் வயதானவர்கள் கூறுவது இன்னும் மோசமானதாக இருக்கிறது. 57 வயதான மீனவர் இதுதொடர்பாக கூறுகையில், “இங்கிருக்கும் வயதானவர்கள் யாரும் இதுபோன்ற வறண்ட நதியைக் கண்டதில்லை. என் தந்தை கூட இதுபோன்று தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என கூறினார்” என்றுள்ளார். ஏனெனில், 121 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக இதுபோன்ற வறட்சி அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வறண்ட கால நிலையால், அங்கு காட்டுத்தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்கள் தங்களது போக்குவரத்து தேவைகளுக்காக, மோட்டார் படகுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆறுகளில் நீர் குறைந்தது, தங்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும், விளைப்பொருட்களை நகரங்களுக்கு கொண்டு செல்வது சாத்தியமற்று இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏனெனில், அப்பகுதி மக்களுக்கு ஆற்றுப் பயணங்களே மிக வசதியானதாக இருக்கிறது. சாலைப் போக்குவரத்து என்றால், அடர்ந்த மழைக்காடுகளுக்கு ஊடாக செல்லும் மண் சாலைகள் மட்டுமே உள்ளன. ஆறுகளை நம்பி மீன்பிடிக்கும் தொழிலை செய்யும் சமூகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளும் பயிர்களுக்கு தண்ணீர் இன்று சமீப நாட்களில் தத்தளித்து வருகின்றனர். இருக்கும் தண்ணீரும் அதிகளவில் சூடாக காணப்படுவதால் நீர்வாழ் உயிரினங்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கவலை அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் பேரழிவிற்கான சாத்தியமாகவும் இதைக் கருதுகின்றனர். https://thinakkural.lk/article/309196

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.