Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3061
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38770
    Posts
  3. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1223
    Posts
  4. island

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1749
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/14/25 in Posts

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 30வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் விக்கெட்டுகளை இழந்ததனால் ரிஷப் பந்தின் 63 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களும் நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் வெல்லும் வாய்ப்பு குறைந்திருந்தது. எனினும் ஷிவம் டுபேயின் நிதானமான 43 ஓட்டங்களுடனும் இறுதியில் வாணவேடிக்கை காட்டிய தோனியின் 26 ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. நீங்கள் சொல்வது சரி ஆனால் ஒரு அல்லது பல. தமிழர்கள் ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில்,....... ..இது போன்ற நாடுகளில் தேர்தலில் நின்று அந்தந்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெல்லும் போது ரொம்பவும் மகிழ்ச்சியாக வாழ்த்துக்கள்… தெரிவிக்கிறீர்கள். ....அவர்கள் தமிழ் மொழி பேசலாமா?? மேலும் எவராகவிருந்தாலும். என்ன மொழி பேசினாலும் மக்களுக்கு சிறந்த சேவை. ஆற்றினால். அவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள்
  3. இன்றைய அதிசயம் ------------------------------ பிள்ளையார் இயேசு பெருமான் புத்த பெருமான் இப்படி பல தெய்வங்களில் இருந்து நீர் பால் இரத்தம் கூட உலகில் அங்கங்கே வடிந்து கொண்டிருக்கின்றது இது அதிசயம் ஒரு துளி ஈரமும் வருடங்களாக காணாமல் வறண்டு வெடித்து ஒரு இடம் அங்கே ஒரு வெள்ளைக் கொக்கு ஓடின ஓணாணை பிடித்து அப்படியே முழுங்கியது இதுவும் அதிசயம் கடுங்குளிர் காலத்திலும் நெருப்பாக வெயில் எரிய அனல் காற்றும் சேர அந்த இடமே பற்றி எரிந்தது இது அவலமான அதிசயம் இன்று மொட்டை மரம் ஒன்றில் கண்களை மூடியிருந்த குருவிகள் 'இது என்ன அதிசயம் தண்ணீர் மேலே இருந்தும் விழுமா............' என்று என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே உறைந்து நிற்கின்றன வானம் பிளந்து கொட்டும் மழையில் இங்கு இன்றைய அதிசயம் இதுதான்.
  4. ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ---------------------------------------------------- 'இதோ உங்களின் பேபி................' என்று சொல்லியே புத்தம் புதிதாக என்னை வாங்கியவரிடம் கொடுத்தார்கள் வாங்கியவருடன் ஒரு பெரிய பேபியும், இரண்டு சின்ன பேபிகளும் வந்திருந்தனர் நல்லதொரு குடும்பம் என்று நானும் சந்தோசப்பட்டேன் சின்னப் பெண் ஒரு வருடத்திற்கு இருக்கைக்கு மேல் ஒரு இருக்கை போட்டு இருந்தார் பெரிய பையன் தெனாவெட்டாக பின்னுக்கு போய் மூன்றாவது வரிசையில் தனியே இருப்பான் சில மாத கவனிப்புகளின் பின் ஆரம்பித்தார்கள் அவர்களின் வேலைகளை அவர்கள் சாப்பிடுவதில் கொஞ்சம் கொட்டி அப்படியே விட்டார்கள் ஏதோ நானும் சாப்பிடுவது போல அது நாறி நான் மூச்செடுக்க முடியாமல் தவித்தேன் சீப்பு பவுடர் பேனை பென்சில் இன்னும் என்ன என்னவோ எல்லாம் நாலு கதவுகளுக்குள்ளும் வைத்தார்கள் எதை வைத்தாலும் எடுக்க மாட்டார்கள் இன்னும் புதிதாகவும் கொண்டு வந்து வைப்பார்கள் பின்னர் தேடி சண்டை போடுவார்கள் அவர்கள் ஒழுங்காக குளித்தார்கள் எனக்கு எதுவும் கிடையாது மழையும் இல்லாத ஊர் இது காடு மலை வனாந்தரம் எல்லாம் ஓடினேன் நூறாயிரம் மைல்கள் கடந்தேன் அப்பப்ப ஓயில் மட்டும் மாற்றினார்கள் மற்றது எதுவும் செய்யவில்லை நான் உள்ளுக்குள் உருகி ஒரு நோயாளியாகி கொண்டிருந்தேன் யாரு சாமி இந்த இளையராசா................. தினமும் அவர் இசை தான் இதுக்கு மேலும் முடியாது என்று மக்கர் பண்ண ஆரம்பித்தேன் என்னைத் திருந்தாமல் இன்னொரு புதுசைக் கொண்டு வந்தார்கள் நான் இப்ப அடிமாடாக ஆகினேன் இந்தப் பயல் ஒரு விளையாட்டுப் பைத்தியம் விளையாடுவது விளையாடதது என்று எல்லாக் குப்பைகளாலும் என்னை நிறைத்தார்கள் இப்ப இந்தப் பயலைத் தவிர வேறு எவரும் எனக்குள் வருவதேயில்லை எஞ்சின் லைட்டை எரித்துக் காட்டினேன் அவனில் ஒரு அசைவும் இல்லை உறுமிப் பார்த்தேன் பாட்டுச் சத்தத்தை பலமாக்கி கேட்கின்றான் இப்ப இந்தக் கணத்தில் இந்த நடுரோட்டில் என் மூச்சை நிறுத்தப் போகின்றேன் என்னில் எந்த தப்புமே கிடையாது எல்லாமே இந்தப் பயலின் கவலையீனம் தான்.
  5. GMT நேரப்படி நாளை செவ்வாய் 15 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS எதிர் KKR இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 21 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் செம்பாட்டான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  6. கருணாநிதி தெலுங்கர் என்பதே வெறும் பொய்யர்களின் பரப்புரை. கருணாநிதி மட்டுமல்ல எம்ஜிஆர், ஜெயலலிதா, அனைவருமே தமிழர்களே. தமிழ்நாட்டு மக்களால் பல முறை முதலமைச்சராகவும் தொடர்சசியாக தோல்வியை தழுவாத சட்டசபை உறுப்பினராகவும் தமிழ் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவரின் அரசியலை விமர்சிக்கலாம் தவறில்லை. ஆனால் ஒருமுறை கூட கட்டுப்பணம் பெற முடியாத, ஒரு சிறிய கிராமசபை உறுப்பினராக கூட வெற்றி பெற வக்கற்ற கட்சிகள் தமக்கு ஒவ்வாதவர் மீது இனவெறி தாக்குதல் செய்வது ஏற்றுகொள்ள தக்கதல்ல. அதை விட தாமே இனவாதத்தால் பாதிக்கப்பட்டோம் என்று கூறும் ஈழத்தமிழர்கள் அடுத்தவன் நாட்டுக்குள் இனவாதம் பேசுவது சிங்கள இனவாதத்தை விட மோசமானது. அதிகாரம் கிடைக்காமலே இப்படி என்றால் அதிகாரம் கிடைத்திருந்தால்…. சொல்லி வேலை இல்லை.
  7. பிள்ளைகளை தனியே அனுப்பும் போது அவர்கள் மீது உள்ள அதீத பாசத்தின் காரணமாக மிகைப்படுத்தப்பட்ட பயத்தை ஏற்படுத்துவது பொதுவாக எமது நாடுகளில் பெற்றாரின் பொதுவான இயல்பு. இது தமிழருக்கும் பொதுவான ஒன்றே. சிங்கள இனவாத அரசியல்வாதிகள் தமிழர் மீது அளவுக்கு அதிகமான பயம் ஏற்படும் விதமாக அப்பாவி சிங்கள மக்களை நம்ப வைக்க பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதுவும் ஒரு காரணம். பொதுவாகவே இனவெறியர்களின் தந்திரம் இவ்வாறாக அடுத்த இனத்தின் மீது பயத்தை ஏற்படுத்துவதே. சிங்களவரில் சரத்விஜசேகரா, விமல் வீரவம்ச போன்றோரும் தமிழ் நாட்டில் சீமான் போன்ற இனவெறியர்களும் இதே போன்ற பரப்புரையையே மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பரப்புரைகளே மிகைப்படுத்தப்பட்ட பயத்தை பெற்றோருக்கு ஏற்படுத்துகிறது.
  8. உனக்கு என்ன வேண்டுமென்றாலும் தருகிறேன். சிவப்பு சட்டையை காலி பண்ணு என்று கேட்டிருப்பார் போல. சிம்போலிக்காக கொடுக்கிறாராம்.🙂
  9. சின்ன சிவத்த தொப்பிகாரனின் ஆட்சியை கவிழ்க்க உதவி செய்ய முடியுமா என கேட்டிருப்பார்...🤣
  10. எனக்கு போட்டியைப் பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. எண்ணிக்கையைப் பார்த்த போது கலை வந்தவன் மாதிரி தாண்வமாடியிருக்கிறார் என்று மாத்திரம் தெரிந்தது. தொடர்ந்தும் முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கும் @suvy க்கு வாழ்த்துக்கள்.
  11. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெஸ்வாலின் அதிரடியான 75 ஓட்டங்களுடன் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஃபில் சால்ட்டின் சிக்ஸர்ஸ், பவுண்டரிகளுடனான 65 ஓட்டங்கள் மழையெனப் பொழிந்ததாலும், விராட் கோலியின் நிதானமான ஆட்டமிழக்காமல் பெற்ற 62 ஓட்டங்களுடனும் 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் அதிகமான ஓட்டங்களைக் குவிக்கும் நோக்குடன் வேகமாக அடித்தாடும் உத்தியுடன் விளையாடியதால் திலக் வர்மாவின் 59 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை அடையும் நோக்கோடு ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடி விளையாடினர். குறிப்பாக கருண் நாயர் 89 ஓட்டங்களை மின்னல் வேக அடியின் உதவியுடன் எடுத்திருந்தார். எனினும் கேஎல் ராகுலின் விக்கெட் விழுந்ததோடு வெற்றிபெறும் வாய்ப்பை இழந்து இறுதி மூன்று பந்துகளின் மூன்று பேர் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்ததால் 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 193 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @சுவைப்பிரியன் உம், @Eppothum Thamizhan உம் @goshan_che க்கு உதவியாக அருகணைந்து இறுதிப் படிகளில் நிற்கின்றனர்!
  12. மேலைநாட்டு குடிமக்களின் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற ஈழ தமிழ் வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்கள் திருகுறளையோ அல்லது தமிழ் பழமொழி ஒன்ற சொல்லிவிட்டார்கள் என்பதற்காக இனி அவர்கள் தங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கிய மேலைநாட்டு குடிமக்களின் முகத்தில் குத்திவிட்டார்கள் என்று எடுத்து கொள்ளலாம் மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஜெயலலிதாவுடன் ஊழல் மோசடியில் தண்டணை பெற்ற சசிகலாவையோ பழனிச்சாமியையோ தமிழர்கள் என்பதற்காக அதிகாரம் கொடுத்தால் கொள்ளை தான் அடிப்பார்கள் நான் இப்போது தமிழ் பழமொழிகளை பாடமாக்கி வைத்திருந்து மற்றவர்களுடன் கதைக்கின்ற போது எடுத்து அடித்து விடுகிறேன் நானும் சீமான் மாதிரி பச்சை தமிழன் தான் 🤣
  13. ஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழுக்க கிளிசரியா மரத்தடியில் கட்டி வைத்து விட்டு அடுத்த நாள் அவிழ்த்துவிட்டேன் அப்படியே வீட்டை சுற்றிச் சுற்றியே நின்றது அடுத்த அடுத்த மாதம் முட்டை போட ஆரம்பித்தது முதல் முட்டை போடு முன் பெரிய எடுப்புகள் எல்லாம் எடுத்தது ஒரு அதிகாலையிலேயே தலைமாட்டில் வந்து பதுங்கியது அது கேரிக்கொண்டு திரியும் போதே முட்டை போடப் போகின்றது என்று ஆச்சி சொன்னார் அதைப் பிடித்து கடகத்தால் கவிழ்த்து வைக்க முட்டை போட்டது சுற்றி இருந்த மூன்று வீட்டுக்கும் அது முட்டை போட்ட விசயம் தெரிந்தது அப்படி ஒரு விடாத கொக்கரிப்பு பன்னிரண்டு முட்டை போட்டு விட்டு அது அடை என்று ஒரு மூலையில் குணுகிக்கொண்டு படுத்துவிட்டது பின்னர் அயலூரில் முட்டை வாங்கி அடை வைத்து குஞ்சுகள் வந்து வந்து அதன் குடும்பம் பெருகியது பின்னர் முட்டை நாங்கள் கடையில் வாங்கவே இல்லை சரி இங்கும் கோழி வளர்ப்போம் என்று விசாரித்தேன் அக்கம்பக்கத்தவர்கள் சம்மதம் சொல்லவேண்டும் முதலில் பின்னர் ஒரு பெரிய கூடு வேண்டும் கோழிகளுக்கு தீனி வாங்க வேண்டும் கடையில் மருத்துவரும் வந்து போவார் அப்பப்ப அந்த செலவும் இருக்கின்றது கோழிக் குஞ்சுகளும் வாங்க வேண்டும் அதை மறந்துவிட்டேன் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் முதல் முட்டை கிடைக்கும் போது செலவு ஆயிரம் டாலர்கள் ஆகி விடும் என்று கணக்கு காட்டுகின்றது கலிகாலம் தான்!
  14. உண்மைதான். அவர் வந்து துரத்தலில் ஸ்திர நிலையைக் கொண்டு வந்துவிட்டார். அவர் ஆட்டமிழந்திருந்தால், எல்லாம் மாறியிருக்கும். லக்னோவும் ஒரு பிடிய விட்டினம் (பிடிச்சிருந்தாலும், பெரிய பாதிப்பு இருந்திருக்காது என்று நினைக்கிறன். அவர்கள் ஏலவே கிட்ட வந்திட்டினம்).
  15. ஜ‌டேயா ம‌ற்றும் ர‌குல் திர்ப‌தி இவ‌ர்க‌ள் இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ங்கின‌தில் இருந்து என்ன‌த்த‌ சாதிச்ச‌வை என்று ச‌த்திய‌மாய் தெரியாது....................... அஸ்வின் ஜ‌டேயா எல்லாம் அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் , இவ‌ர்க‌ளால் அணிக்கு பாத‌க‌ம்.................. அப்கானிஸ்தான் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் தான் திற‌மைய‌ வெளிக் காட்டினார் ம‌ற்ற‌ 10 வீர‌ர்க‌ளும் பெரிய‌ அள‌வில் திற‌மைய‌ வெளிக்காட்ட‌ல‌................இந்த‌ மைச்சும் சென்னை தோத்தா சென்னை வெளிய‌..............................அறிமுக‌ இள‌ம் வீர‌ர்அருமையா 27 ர‌ன்ஸ் அடிச்சார்.................அந்த‌ சின்ன‌ப் பெடிய‌னுக்கு பாராட்டுக்க‌ளும் வாழ்த்துக்க‌ளும்..........................
  16. இவ்வளவு தரவுகளை ஒற்றைப் பதிவில் தந்திருக்கிறீர்களே? நீங்கள் "வேலை வெட்டி" இல்லாமல் இருக்கிறீர்களா? 😎
  17. 2025 Masters வெற்றியாளர் ரோரி மெக்கல்ரோய் Rory McIlroy இந்த வருட மாஸ்டேர்ஸ் சற்றுமுன் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ரோரி மெக்கல்ரொய் வெற்றியீட்டி பச்சை மேல்சட்டையைத், Green Jacket, தனதாக்கிக் கொண்டார். 35 வயதான ரோரி இதற்காக 14 வருடங்களாகப் போராடிக் கொண்டிருந்தார். 2011 ஆம் வருடப் போட்டி அவரின் வாழ்க்கையில் ஏறபடுத்திய வலியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. நான்கு புள்ளிகள் முன்னணியில் இருந்து. கடைசி நாளில் காலடி எடுத்து வைத்தவர், கடைசியில் மிக மோசமாகத் தோற்றார். Meltdown என்று சொல்வார்கள். அவனால் ஒரு பந்தையும் fairwayல் அடிக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப மரங்களுக்கும், வெளியாலும் அடித்து, 8 புள்ளிகளால் பின்தங்கினார். மூன்றாம் நாள் முடிவில் முதலாவதாக இருந்தவர் கடைசி நாளில 15வது ஆளாக வந்தார். அன்றிலிருந்து, ஒவ்வொரு வருடமும் அவரின் முயற்சிகள் கைகூடவேயில்லை. கோல்பில் நான்கு முக்கிய போட்டிகள் உள்ளன. எல்லாவற்றையும் வென்றவர்கள் வெகு சிலரே. கடைசியாக வென்றவர் டைகர் வூட்ஸ், Tiger Woods. ரோரி 2014ஆம் ஆண்டு மூன்றாவது போட்டியை வென்றார். மாஸ்டர் போட்டியை வென்றால் நான்கு பெரும் போட்டிகளையும் வென்றவர் என்று போற்றப்படுவார், Grandslam Champion. அந்த 2011 meltdown லிருந்து அவரால் வெளிவரவே முடியவில்லை. ஒவ்வொரு வருடப் போட்டிகளிலும் அவரின் மேலான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருந்தது. இறுதியில் 2025 அவரின் ஆண்டாக அமைந்தது. அவர் இப்போ Grandslam Champion. நான்கு முக்கிய போட்டி வெற்றியாளர். அவரின் மேல் இருந்த அழுத்தம், மனச் சோர்வு, படபடப்பு எல்லாம் பறந்தன. ஒரு வீரனால் எவ்வளவுதான் தாங்க முடியும். எல்லாவற்றையும் தாங்கினார். இவ்வருடமும் அவ்வளவு இலகுவான வெற்றியாக அமையவில்லை. இன்றும் நான்கு புள்ளிகள் முன்னிலையில், போட்டியை ஆரம்பித்தவர், எல்லா விதமான தவறுகளையும் செய்தார். 2011 மீண்டுமா என்று படபடப்புடன் உலமே பார்த்துக் கொண்டிருந்தது. கடைசியில் இருவர் ஒரே புள்ளிகளைப் பெற, போட்டி playoff நோக்கிச் சென்றது. அவர் யோசித்திருப்பார், என்னடா நடக்குது. ஏன் இந்தப் போட்டி மட்டும் எனக்கு இந்த ஆட்டம் காட்டுது என்று. அப்படியான நாள் இன்று. இறுதியில், playoffல் ஒரு புள்ளியைப் பெற்று, போட்டியைத் தனதாக்கிக் கொண்டார். இப்படம் எல்லாக் கதையையும் சொல்லும்.
  18. CSK, அவரை 3 வருசமா அணியில வைத்திருக்கினம். போன ஏலத்திலே திரும்பவும் வாங்கி இருக்கினம். 2022ல் நடந்த U19 உலகக்கிண்ண வெற்றியாளர்.
  19. சென்னை வெல்லுதோ இல்லையோ. விசில் போடும் கூட்டத்துக்கு இது காணும். தோனி எடுத்த review. பூரானை அனுப்பி வைத்தது. தோனி எறிந்த பந்து ஓட்டமிழப்பைச் செய்து சமத்தை அனுப்பி வைத்தது. தோனி பிடித்த பிடி, மிக மிக உயரே சென்ற பந்தை பிடித்த பிடி, பாந்தை அனுப்பி வைத்தது. இதுவே காணும் இன்றைக்கு. அதோட இப்போட்டியை வென்றுவிட்டால்.... ஜயகோ. இப்பவே கண்ணக் கட்டுதே.
  20. 179வரையும் அடிக்கலாம். மனதைத் தளர விட்டுடாதீங்க😁
  21. கடந்த 3-4 போட்டிகள் சென்னை வெல்லும் என்று பதிந்தேன் தோற்றது. இன்று தோற்கும் என்று பதிந்துள்ளேன். எனவே வெல்லும். இன்றும் சென்னை தோற்றால் எப்போதும் தமிழனுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.
  22. "கருணாநிதி வீட்டில் தெலுங்கில் தான் பேசுவார்கள் (இப்போது "ஸ்ராலின் வீட்டிலும் தெலுங்கில் தான் பேசுவார்கள்") 😂 இதெல்லாம் முகநூல் பதிவர்கள் சில ஆண்டுகளாகவே பரப்பி, இப்போது யாழிலும் பரவலாக ஒப்புவிக்கப் படும் வதந்திகள். இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டால் இன்னொரு யூ ரியூப் குப்பையை இணைத்து விட்டு "தந்து விட்டேன்" என்பார்கள். இதை நம்பி நீங்களும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது வேடிக்கை. ஒரு தமிழ் தலைவருக்கு அயல் மாநில மொழி தெரிந்தால் அவர் எப்படி தமிழர்களின் முகத்தில் உமிழ்கிறார்? தமிழர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். தமிழ் மொழியை தன் அரசு மூலம் அவர் வளர்க்கிறார். ஒரு உதாரணத்திற்கு, "பச்சைத் தமிழன்" எடப்பாடியின் ஆட்சியில் ஈயோட்டிக் கொண்டிருந்த தமிழ் மொழி இயக்ககம், ஸ்ராலின் ஆட்சியில் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறது. இதனால் தான் தமிழ் நிலைக்குமேயொழிய "தமிழ் உலகின் முதல் மொழி, பேச்சுக்கு "ஸ்" போட்டு ஸ்பீச் வந்தது" என்று போலி அறிவியல் வளர்க்கும் தரப்புகளால் தமிழ் வளராது! மாறாக கேலிக்குள்ளாகும்!
  23. கவலை வேண்டாம். நீங்கள் குடும்பத்துடன் நல்ல நிலையில் உள்ளதையிட்டு உங்கள் அம்மா மகிழ்வுடனேயே சென்றிருப்பார். எனது அப்பா அவர் குடும்பத்தில் ஒரே ஒரு பிள்ளை. அவரது தாயும் தந்தையும் இறக்கும் போதும் அருகில் இல்லை கொள்ளி வைக்கவும் இல்லை. இப்படி எத்தைனையோ குடும்பங்கள் உள்ளன.
  24. ஐரோப்பிய நாட்டில் குடியேறியும் தொட்டதற்கெல்லாம் தெய்வக் குற்றம் காண்பவர்கள் உள்ள சமுதாயத்தில் வாழ்கிறோம். உலகில் அரங்கேறும் அநீதிகளையெல்லாம் கண்டுகொள்ளாத இறைவன் மீது குறை ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளாது என்ற அதீத நம்பிக்கையை விட, இதன் மூலம் கடவுளைத் தாம் எந்தத் தராரதத்தில் வைத்துள்ளோம் என்று கூடச் சிந்திக்க முடியாதவர்களாக உள்ளனர். உங்களைப் போன்றோரின் எழுத்துக்கள் இச் சமுதாயத்திற்கு அவசியமானவை. நன்றி.
  25. https://www.facebook.com/reel/491276900667350
  26. பையா ஐ லவ் யு ........ பழைய பையனைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது . ....... சும்மா ஒரு ஜாலிக்காகத்தான் இதில் பங்கு பற்றுகிறோம் . ........ கடைசி அணியில் வருபவர்களுக்குத்தான் கலாய்ப்பதற்கு வசதிகள் இருக்கு . ......... முதல் அணியில் இருப்பவர்கள் சும்மா பம்மிக்கொண்டு இருக்க வேண்டும் ........ நான் கூட விலத்தித்தான் போனேன் ஆனால் அதுவா வந்து பிலாக்காய் பிசின் மாதிரி ஒட்டிக் கொண்டு நிக்குது . .........! 😂
  27. ஆமாம். சில நாட்களின் முன், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் வெற்றியாளர். சாகித் தீகலா, Sahith Theegala, என்னும் இந்திய வம்சாவளி வீரர் விளையாடியிருந்தார். இவர் இந்தியப் பெற்றோருக்கு கலிபோரினியாவில் பிறந்தவர். இப்போட்டியில் 29வது இடத்தைப் பிடித்தார். இவர் மிகத் திறமையானவர். இவ்வாறான major போட்டியொன்றை வெல்லக்கூடிய வீரர் என்று வகைப்படுத்தப் பட்டவர். நான்கு நாட்கள் எப்படி விளையாடுவினம் என்பதுதான் இங்கே கணக்கே. டெஸ்ட் போட்டிகள் மாதிரித்தான். பல தடைகளைக் கடந்து வரவேணும். முக்கியமாக மனத்தடையும் அழுத்தமும். கோல்பில் நீயே ராஜா, நீயே வில்லன். மற்றவர்கள் ஒரு காரணியே இல்லை. இன்னொருவர், அக்ஸய் பாத்தியா, Aksay Bhatia. இவரும் கலிபோர்னியாவில் பிறந்தவர். நான்கு நாட்களும் விளையாடி, 42வது இடத்தைப் பிடித்தார்.
  28. 🤣 சிரிப்புகள், நகைச்சுவைகள் பகுதிக்குரிய வீடியோ🤣.
  29. கருத்து எழுதாமலே கூட கருத்து பஞ்சம் வரலாம்🤣
  30. தமிழ் தேசியம் பேசினால் அவனை முதலில் அடி பின்பு ...என்ற கொள்கை பிடிப்போ🤣
  31. முதலீட்டு ஊக்குவிப்புடன் தனியே நின்றுவிடாது அரசியல் தீர்வையும் சமாந்தரமாக கொண்டு போக வேண்டும்.
  32. கேரளாவில் படிப்பறிவு வீதம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே (சம்ஸ்தானங்கள்) அதிகம். சுதந்திரத்துக்கு முந்தைய மெட்டிராஸ் பிரசெடென்சியில், இன்றைய கேரள பகுதிகள் இலங்கை போல வழமான இடமாகவும், அதிகாரிகள், ஆசிரியர்களை உருவாக்கும் இடமாகவும், இன்றைய தமிழ்நாட்டின், குறிப்பாக மத்திய, தென் தமிழ்நாட்டின் பகுதிகள் கூலி தொழிலாளர்க்ளை உருவாக்கும் இடமாகவும் இருந்தன. இலங்கைக்கு பிரிட்டிஷ் காலத்தில் வந்த மலையாளிகள் - ஆசிரியர்கள், கங்காணிகள், குறைந்தது டீ க்கடை போடுபவர்களாக வந்தனர் - ஆனால் தமிழர் தொழிலாளராகவே வந்தனர். இது கேரவாவிற்கு உள்ள நூற்றாண்டு கால early advantage. இதனால் கல்வி, பெண்கல்வி, சிசுக்கொலை என தமிழ் நாட்டை பீடித்துள்ள பலது கேரளாவில் இருக்கவில்லை. தமிழ்நாட்டை அதன் பிற்போக்குதனத்தில் இருந்து விடுவிக்க போராடியது போல் கேரளாவில் தேவைபடவில்லை. ஆகவே அங்கு கல்வியில், சுகாதாரத்தில், மாநில அரசின் கவனம் குவிவது இலகுவாகியது. பிற்போக்குதனத்தில் சுதந்திர்ந்த்தின் பின்னான தமிழ்நாடு ஆந்திரா, ஒரிசாவை போலவே இருந்தது. கேரளா அப்படி அல்ல. எண்ணிகை. கேரளாவில் சனத்தொகை தமிழ் நாட்டின் பாதி. கல்வியறிவு வித்தியாசம், 93% உம் 80% உம். இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று கேரள கம்யூனிச, காங்கிரஸ் அரசுகள் போல ஆரம்பம் முதலே தமிழ்நாட்டு அரசுகள் செயல்படவில்லை. காமராஜர், 60 களின் பின் திராவிட கட்சிகள்தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ராஜாஜி குலக்கல்வி வேண்டும் என்றார். அதே போல் கேரள கட்சிகள் அளவுக்கு, திராவிட கட்சிகள் இந்த விடயத்தில் தீவிர முனைப்பு காட்டவில்லை என்பதும் உண்மை. ஆனால் தனியே எழுத படிக்க தெரிந்த கேரளாவை விட தமிழ்நாட்டிலும், கர்னாநடகாவிலும் கல்வியில், தொழில் கல்வியில், ஐ.டி. யில் சிறப்பு தேர்ச்சி உள்ளதும் உண்மை. உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னேதான் நிற்கிறது. சுந்தர் பிச்சைகள், சிவன்கள் தமிழ்நாட்டில் வருவது போல் கேரளாவில் இல்லை. அதே போல் industrialization தொழில்மயமாதலில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் என நினைக்கிறேன். கச்சதீவு ஒரு மேட்டரே இல்லை. அது தமிழக அரசியல்வாதிகள் மாறி மாறி உதைக்கும் புட்போல். இதை நாமும் தூக்கி கொண்டு திரிவதுதான் எல்லாத்தையும் வெண்ட பகிடி. தமிழக மீனவர் இலங்கை நேவியிடம் அடி வாங்குவது கச்சதீவிலோ அதன் அருகிலோ அல்ல, நெடுந்தீவுக்கு அருகிலும், வல்வெட்டிதுறைக்கு அருகிலும். கச்சதீவு இந்தியாவிடம் இருந்தாலும் இது இப்படித்தான் இருக்கும்.
  33. பிரதமேரே கோவிலில் பிரச்சாரம் செய்கின்றார் ...சட்டத்தை மீறி .... வடமாகாண ஆளுனரின் பதவி ஏற்பு வைபவத்தில் சந்தனம்,விபூதி பூச மறுத்த டோழர் சந்திரா ...சேர்ட் இல்லாமல் கோவில் தரிசனம் செய்கின்றார் ....டோழர்மாரின் சிவப்பு தொப்பி எல்லாம் காற்றில் பறக்கின்றது... "ஊழல் என புலம்புவதை தவிர வேறு ஒன்றும் யாம் அறியோம் மார்க்ஸே"
  34. விசுகர்! அவர்கள் விரும்புவது,வேண்டுவது கருத்து வெற்றியே ஒழிய....இன வெற்றிக்காக எதுவும் இல்லை. கவலை வேண்டாம். காலம் பதிலளிக்கும்.
  35. ஈழ தமிழர்கள் இனக்கலவரங்களை உருவாக்கியதாக சரித்திரங்கள் இல்லை. இதை சிங்கள சமுதாயங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஈழத்தமிழர்களின் அத்தியாவசிய நடவடிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் எம்மால் ஆன அடுத்த கட்ட நடவடிக்கை.
  36. ஐஸ்வர்யாராஜின் வீட்டுக்காரர் பெயர் அபிஷேக்பச்சன் என்று தெரியும். எதுக்கும் தேவைப்படாத அந்த அபிஷேக்கை விட இந்த கிரிக்கெட் அபிஷேக்கை தெரிந்து வைத்திருக்கலாம்........😜. எனக்கு தெரிந்த கோலியையும், ரோகித்தையும் தெரிவு செய்து வைத்திருக்கின்றேன்.......... வைக்கப் போகின்றார்கள் இருவரும் ஆப்பு எனக்கு......🤣.
  37. ஞாபக சத்தியை இழக்க மருத்துவம் செய்கிறார்கள் அடித்த. கொள்ளைகள். எல்லாத்துக்கும் தெரியாது என்று பதிலளிப்பார்கள். இலட்சிமிகளிடமிருந்து திருடி. இருப்பார். திருடுவதற்க்கு ஆட்சியில் இருக்க தேவையில்லை ஆட்சியில் பங்கு கொள்ளவும் தேவையில்லை 😀
  38. ஈழத்திலும் சரி... தமிழகத்திலும் சரி... "பரிமளம்" என்ற பெயரில் இருப்பவர்கள் எல்லாம், புருசன்காரனுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றார்கள். 🤣 @ராசவன்னியன் , @சுப.சோமசுந்தரம், @புரட்சிகர தமிழ்தேசியன் 😂
  39. இன துரோகிகளின் இறுதி காலம் மிக மிக கசப்பானது!! Vhg ஏப்ரல் 12, 2025 தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை தளபதியாக இயங்கிய கருணா,தன்னுடைய பதவி காலத்தில் நடைபெற்ற அத்தனை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் மட்டக்களப்பில் பிரதான சுடரினை ஏற்றி மடிந்த வீரர்களுக்காக அஞ்சலித்து வந்திருக்கிறார் . இறுதியாக 2003 கார்த்திகை இருபத்தி ஏழில் தனது இறுதி அஞ்சலியை தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் செலுத்தினார். விடுதலைப்புலிகளின் பாரம்பரியத்தை மீறி அந்த ஆண்டில் சில புதுமைகளை சேர்த்து அந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்.முன்னேற்பாடுகளிலும் வீரர்களின் அணிநடைமற்றும் அஞ்சலிக்கும் முறை என்பவற்றையும் தானே முன்னின்று பயிற்சி வழங்கி வழிநடத்தினார். சமாதான உடன்படிக்கை காலத்தில் அந்த மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்திருந்தமையால் தரவை மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றன.மரபை மீறிய அந்த மாவீரர் நாள் நிகழ்வு பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தின. அந்த இறுதி நிகழ்வோடு விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு பிரிந்த அவர்,அதன் பின்னர் போராளிகள் தொடர்பிலான எந்த ஒரு அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை. 2003 ற்கு பின்னரான மாவீரர் நாள் அனுட்டானங்கள் நடைபெறும் பொழுதுகளில் ,கருணா நிறைந்த மது போதையில் கிடப்பதாகவே அவரது அருகாமையாளர்கள் காதோடு காது வைத்து பேசிக்கொள்வர். தனது கட்டளையை ஏற்று சண்டையிட்டு மடிந்து போன வீரனைகூட நினைவில் கொள்ளும் நிலையில் அவர் இருப்பதில்லை என்பதுதான் தகவல். ஆனால்,திடீரென ஞானம் வந்தது போல் கதிரவெளியில் கடந்த 10 ஆம் திகதி போய் நின்றிருக்கிறார் கருணா. சித்திரை 10 ஆம் திகதியை பிள்ளையான் அணியினர் சிவப்பு சித்திரை எனும் பெயரில் வெருகல் துறை மற்றும் ஏனைய இடங்களில் தம்மோடு இருந்து மாண்டு போன அல்லது தமிழினத்தை காட்டிக்கொடுத்தனர் என குற்றஞ்சாட்டி விடுதலை புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சில உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வந்திருந்தனர் . தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் இதுவரை இடம்பெற்று வந்த அந்த நினைவேந்தல் முதல் தடவையாக இம்முறை கருணா அவர்களின் கைக்கு மாறியிருக்கிறது. 21 வருடங்களுக்கு பின்னர் போராளிகளை அஞ்சலிக்கச்சென்ற கருணா,யாரை நினைவுகூர்ந்திருப்பார்? கருணா என்ற ஒற்றை நபருக்காக தான் கொண்ட கொள்கை,கோட்பாடு எல்லாவற்றையும் மறந்து வெருகல் துறையில் களமாடிய பாரதிராஜாவை நினைவு கூர்ந்திருப்பாரா?அம்மான் என்ற பெயரைக்கேட்டாலே புல்லரித்து நின்ற மாபெரும் தளபதி ராபட்டை நினைவுகூர்ந்திருப்பாரா?அல்லது ஊரவன் என்ற அடிப்படையில் தன்னை நம்பி வந்த ஜிம்கலி தாத்தாவை நினைவுகூர்ந்திருப்பாரா? அல்லாது போனால் கருணா தலையீடு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுள் இருக்கவேண்டும் என்று வாதாடியதால் பிள்ளையானுக்காக கொல்லப்பட்ட நந்தகோபனை நினைவுகூர்ந்திருப்பாரா?பிள்ளையானின் கோட்டைக்குள் நின்று கருணாவுக்காக கொக்கரித்து வெல்லமுடியாது போகவே சையனைட் அருந்தி மாண்டுபோன மருத்துவ போராளி திலீபனை நினைவுகூர்ந்திருப்பாரா? எத்தனை எத்தனை பெறுமதியான உயிர்களை தனது சுயநலத்திற்காக பலியிட்ட கருணா அவர்கள்,நேற்றுவரை அந்த நினைவுகளே இன்றி கிடந்து,இன்று வந்து விளக்கேற்றி அஞ்சலிப்பதன் மாயமென்ன? இங்கே இரண்டு கேள்விகள்தான் தொக்கி நிற்கின்றன. 1.இனி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு கருணாதான் தலைவரா? 2.இனி பிள்ளையானை இந்த அரசாங்கம் சிங்களவர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்கள் நடாத்திய அத்தனை கொலைகளுக்கும் காரணகர்த்தாவாக்கி சிறையிலேயே அடைத்துவிடபோகிறதா? வியாளேந்திரனின் சிறை பிரவேசம்,பிள்ளையானின் கைது,கருணாவின் மீளுருவாக்கம் என்பனவெல்லாம் தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் நல்ல வரலாற்று பாடங்களை கற்றுத்தந்துகொண்டுதான் இருக்கின்றன. "இன துரோகிகளின் இறுதி காலம் மிக மிக கசப்பானது" https://www.battinatham.com/2025/04/blog-post_99.html
  40. இப்பாடலில், கொற்கையிலிருந்து (குறுநில மன்னனாக) ஆண்டு வந்த வெற்றி வேற்செழியன் நெடுஞ்செழியனுக்குப் பின் மதுரை வந்து பாண்டி நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறான் என்று சொல்லுமிடத்தில் எத்தகைய சிறப்பு மிக்க பாண்டிய நாடு என்று குறிக்க, "பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைந்த திருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலி யூட்டி உரைசெல வெறுத்த மதுரை மூதூர்" என்று சேரன் செங்குட்டுவனுக்கு எடுத்தியம்புகிறான் மாடலன் மறையோன். அஃதாவது "ஆயிரம் (ஈரைஞ்ஞாற்று) பொற்கொல்லர் (கண்ணகிக்குப் பொற்கொல்லன் மூலமாக இழைக்கப்பட்ட அநீதிக்குத் தண்டனையாயகவும், பாண்டிய நாட்டிற்கு ஏற்பட்ட பழி போக்கவும்) உயிர்ப்பலியாகத் தம் உயிர் ஈந்தனர்; அத்தகைய மதுரை மூதூர்" என்றுதான் நான் வாசித்த இரண்டு உரையாசிரியர்கள் உரை சொல்கின்றனர். அவ்வாறாயின், தண்டனை என்பது நாம் கட்டுரையில் சொல்லும் பலியாகாது என்பது என் கருத்து. கூடுதலாக சான்றாண்மை மிக்க உரையாசிரியர்கள் ஓரிருவரை வாசித்து விட்டு மாறுபாடு இருப்பின் மீண்டும் உங்களிடம் வருகிறேன். இது தொடர்பாக மேலும் ஒன்று கூற விழைவு. நான் வாசித்த, கேட்ட வரையில் சங்கப் பாடல்களில் நரபலி காணவில்லை என்று எழுதினேனே தவிர, தமிழ் நாகரிகம் ஏனைய பண்டைய நாகரிகங்களில் இருந்து வேறுபட்டு நிவந்து நிற்பதாக்கும் என்று நான் நம்பவில்லை. சமூக உளவியல் என்பது அனைத்துக் குழுக்களிலும் இயற்கையாய் ஒரே மாதிரிதான் தோன்றி வரும் என்பதில் எனக்கு மாறுபாடில்லை (ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியிற் தெளிந்தனம்). புலிகளில் சைவப் புலி என்று எதுவுமில்லை (There is no vegetarian tiger). உதாரணமாக, "கங்கை கொண்டான், கடாரம் வென்றான்" என்றெல்லாம் புலவர்கள் பாடினார்களே தவிர, அப்போது பெண்களைக் கவர்ந்து வந்து அந்தப்புரங்களை நிரப்பிய அயோக்கியத்தனங்களைப் பாடுவதில்லை. புரவலர்களைச் சார்ந்து வாழ்ந்த புலவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? Now in a lighter vein : நான் சிலம்பில் வாசிக்காத பகுதியை வாசிக்க வைத்த வில்லவன் அவர்கள் பாடல் பெறத் தகுதியானவர். இப்போதைக்கு முழுப் பாடலாக இல்லாவிடினும் ஒரு வரியாவது பாடுகிறேனே ! அவர் தற்போது குறிப்பிட்ட நீர்ப்படைக் காதை, வரி 238 ல் சேரன் செங்குட்டுவன் "வில்லவன் வந்தான் வியன் பேரிமயத்து" என்று பாடப் பெறுகிறான். அவ்வரியினை இளங்கோவடிகளிடம் இரவல் பெற்று, "வில்லவன் வந்தான் சிலம்புச் செல்வத்து" என்று நமது வில்லவன் அவர்களைப் பாடலாமே !
  41. அவசியமான பதிவு putthan. 👏 என் நண்பன் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்கிறான். யாழ்நிலத்தடிநீர் நிலைமைகளைப் பற்றி அவன் கதைக்கத் துவங்கினால் மிகவும் மனவருத்தமாக இருக்கும். சில்லறை அரசியல் ஆதாயங்களுக்காகவும் தொலைநோக்கில்லாத சுயநலநோக்கங்களுக்காகவும் எம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதால் எமது வருங்கால சமுதாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் குடிநீர் எல்லாருக்கும் உரிய வளமாக இல்லாது வியாபாரப் பொருளாகி விட்டுது.
  42. மண் அரிப்பைத் தடுக்கும் என்பது நாங்கள் அங்கே கண்கூடாகவே பர்த்தது. என் ஊர் மிகவும் மணல் பாங்கானது. அங்கு கடற்கரை ஓரம் தென்னை மரங்களும், உள்ளே பனைமரங்களும் வளர்கின்றன. இந்த மரங்களின் நாருரி வேர்கள் அந்த மண்ணை அப்படியே சேர்த்தே வைத்திருக்கின்றன. இவை நீரை எப்படி தேக்கி வைக்கின்றன என்று தெரியவில்லை. Word Wide Web என்பது போல Root Wide Web என்று மரங்களின் வேர்கள் பற்றிய ஒரு கட்டுரையை சில காலத்தின் முன் வாசித்திருக்கின்றேன். வேர்கள் முடிகின்றன என்று நாங்கள் நினைக்கும் புள்ளியிலிருந்து மைல்கள் நீளமான வேர்கள் நுண்ணுயிர்களால் ஆக்கப்படுகின்றன என்றும், அவை எப்படி தாய் மரத்துடன் கொடுத்தும், எடுத்தும் வாழ்கின்றன என்றும் அதில் இருந்தன. எங்களின் பனை, தென்னைக்கும் இந்த இயல்புகள் இருக்கின்றது போல.
  43. இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே கிறுக்கனாக்கி என்னைக் கிறுங்கச் செய்தவளே சறுக்கியே விழுந்தேனே சண்டாளி உன்நினைப்பில் பொறுக்கியாகி உன்மீது பித்தனாகிப் போனேண்டி! வண்டுகள் மொய்க்கின்ற வண்ண மலரடிநீ வான்மீது மிளிர்கின்ற விண்மீனின் ஒளியடிநீ பல்லவன் வடித்தநல் பருவமங்கைச் சிற்பம்நீ பாவையெந்தன் மனதிற்குள் பாட்டிசைக்கும் சுரங்கள்நீ! தோகை மயிலெனத் தோன்றுதடி உன்னுருவம் வாலைக் குமரியெந்தன் வழித்தடத்தில் நகருகின்றாய் சேலைக்கு அழகான சித்திரப் பெண்ணழகே தூயஎன் காதலாலே துடிக்கின்றேன் உன்னாலே! நெற்றிப் பிறையினிலே நீள்புருவம் கொண்டவளே வேல்விழியால் கணைதொடுத்து வித்தைகள் காட்டுகிறாய் கொவ்வை இதலழகி குண்டுமல்லிச் சிரிப்பழகி ஒளவை மொழியினிலே அருள்வாக்குத் தாவேண்டி! கன்னக் குழியழகும் கலைமமான் விழியழகும் சின்ன இடையழகும் செவ்வந்தி நிறத்தழகும் காதோரம் கதைபேசும் கருங்கூந்தல் குழலழகும் நீயருகே வருகையிலே நெஞ்சை இழுக்குதடி! பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணுகின்ற பெட்டகமே பண்ணிசைத்துப் பாடவல்ல பாக்களின் கவிவடிவே எண்ணங்கள் பரிமாற ஏங்கித் தவிக்கின்றேன் தண்ணீரில் தாமைரையிலையெனத் தவிக்கவெனை விடலாமோ
  44. ஏனெனில், நீங்கள் குறிப்பிடுகின்றவர்கள் ஒரு போதும் எதிர்த்து போராடாதவர்கள். போராட்டம் நிகழும் போது கிரிக்கெட் மட்ச் பார்ப்பதைப் போன்றே ஆதரவு கொடுத்தவர்கள். பெடியல் நல்லா அடிக்கிறார்கள் என்று பொப்கோர்னை சுவைத்தபடி ரசித்த ரசிகர்கள் இவர்கள். தன் இனத்தின் விடுதலைப் போரை உளமாற ஆதரித்தவர்கள், அப் போராட்டத்துக்கு தன்னாலான உதவிகளை உளமாற கொடுத்தவர்கள் இன்னொரு இனத்தின் விடுதலைப் போர் தோற்றுப் போக வேண்டும் என்றோ, அவ் இனத்தின் விடுதலை போரை முன்னின்று நடாத்த முனைகின்றவரை கோமாளி என்றோ நக்கல் அடிக்க மாட்டார்கள்.
  45. எங்கள் அம்மாவும் 2 ஆண் பிள்ளைகள் என்று மகிழ்வாய் இருந்தவ, நாங்கள் தசைபலவீனமாதல்(Muscular Dystrophy) எனும் நோயால் பாதிக்கப்பட்டதால் ஆறாத துயரமடைந்துள்ளார். எனினும் நாங்கள் அம்மாவிற்கு ஆறுதலாக இருப்பதோடு அவவின் பொழுதுபோக்க யுரியூப் காணொளிகளை கணனியில் போட்டுக் காட்டுவோம். அண்மையில் வழுக்கி விழுந்து கையில் வெடிப்பு ஏற்பட்டு தற்போது மெதுவாக நலமாகி வருகிறார்.
  46. நான் அவுஸ்ரேலியா வந்த போது மழை பெய்து கொண்டேயிருந்தது, அப்போது கூறினார்கள் மழை இல்லாமல் தண்ணீருக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்களாம் என, நான் அவர்களிடம் கூறுவதுண்டு நான் வந்ததனால் அவுசில் மழை பெய்ததது என இன்றுவரை தண்ணீருக்கு கட்டுப்பாடில்லாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது, ட்ரம்ப் அழைத்தால் அமெரிக்கா வருவது பற்றி சிந்திக்கலாம்.😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.