Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38770
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/15/25 in all areas

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 31வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும்தான் 20 ஓட்டங்களுக்கு மேல் வேகமாக அடித்தாடி எடுத்திருந்தனர். எனினும் எல்லோரும் விக்கெட்டுகளை விரைவாகப் பறிகொடுத்தமையால் 15.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களும் குறைந்த இலக்கை அடைய நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் வெல்லும் வாய்ப்பு இருந்தும் சகல விக்கெட்டுகளையும் 15.1 ஓவர்களிலேயே 95 ஓட்டங்களுக்கு இழந்து வாய்ப்பைத் தவறவிட்டனர். 95 ஓட்டங்கள் தொடரின் மிகக் குறைந்த ஓட்டங்களாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. யுவேந்திரா சாஹல் 4 விக்கெட்டுகளையும் மார்கோ ஜன்சென் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த @செம்பாட்டான் க்கும் @ஈழப்பிரியன் க்கும் மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. GMT நேரப்படி நாளை புதன் 16 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 16 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 07 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் கந்தப்பு தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ சுவி சுவைப்பிரியன் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  3. அபாரமான விளையாட்டு ...... சொல்லி வேல இல்ல ......... சென்னையின் மானத்தைக் கல்கத்தா காப்பாற்றி விட்டார்கள் ......... ! 😂
  4. வரே வா. என்ன ஒரு சம்பவம். பஞ்சாப் ஆபார வெற்றி. Thriller in Mullanpor @ஈழப்பிரியன் என்ன சொல்றேல் குறைந்த ஓட்டங்களுடன் KKR. எப்பவுமே சொல்வது. விளையாட்டில், முடியும் வரை அது முடியவில்லை. மீண்டும் நிருபணமாகியிருக்கிறது. சாகலின் உருட்டலில் உருண்ட கொல்கத்தா. வாவ்.
  5. Animal Universe · Suivre eonpsSrtdo3h14haf1r7fmc0l30,i i0706 la4:i28m2amlf0180citvu0f · A picture is worth a thousand words . These pure-hearted homeless kids in India who barely have enough to survive on the streets themselves selflessly spent the little they had to buy bandages and plasters to help this wounded stray puppy heal ........ ! 👍
  6. புதுப்புது வார்த்தை எல்லாம் அண்ணா அண்ணா என்று வருகுது. எப்படியும் நெருங்கியிருக்கும்
  7. இவ்வருடம் நடைபெற்ற ஐபிஎல்லில் பவர் பிளேயில் பந்து வீசிய அஸ்வின், Overton ,முகேஷ் சவுத்திரி போன்றோர்கள் அதிக ஒட்டங்களை குடுத்தார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் Khaleel Ahemed உடன் Anshul Kamboj சிறப்பாக பவர் பிளேயில் குறைந்த ஒட்டங்களை குடுத்தார்கள். குறிப்பாக பூரான், ஏய்டன் மார்க்கம் போன்றோர்கள் பவர் பிளேயில் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்தது. நேற்று சென்னை அணியின் களத்தடுப்பு (fielding) சிறப்பாக இருந்தது . குறிப்பாக Markram அடித்த பந்தை ராகுல் திருப்பதிபிடித்த விதத்தை சொல்லலாம். முந்தைய போட்டிகளின்போது எதிரணியினர் அடித்த பந்துகளை பிடிக்கத்தவறியதினால் அதிக ஒட்டங்களை விட்டுக் குடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பஞ்சாப் அணியின் ஆர்யா அடித்த பந்தினை இருமுறை பிடிக்க சென்னை அணி வீரர்கள் தவறிவிட்டார்கள். இதனால் ஆர்யா அப்போட்டியில் 103 ஒட்டங்களை பெற்றார். முதலில் பிடித்திருந்தால் சென்னை சிலவேளை அப்போட்டியில் வென்று இருக்கலாம். தோனியும் நேற்று நன்றாக விளையாடிய ரிஷப் பண்ட் , ஆயுஷ் பதோனி, அப்துல் சமித் ஆட்டமிழக்க காரணமாக இருந்தார். வழமை போல நேற்று நூர் அகமது சிறப்பாக பந்து வீசினார். shaik ரஷீத் சச்சின் ரவீந்திர போன்றோர்கள் முதன்முறையாக இந்தவருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் 50 ஓட்டங்களுக்கு மேல் சென்னை அணி எடுக்க உதவினார்கள். சிவம் துபே ஆரம்பத்தில் மெதுவாக அடித்து விளையாடினார். ஆனால் தோனி வந்து வேகமாக அடித்து அணி வெல்வதற்கு உதவி செய்தார். LSG அணியின் Ravi Bishnoi யும் சிறப்பாக 3 ஓவரில் 18 ஓட்டங்கள் குடுத்து 2 விக்கட் எடுத்தார். அவருக்கு ஏன் 4 வது ஓவர் வழங்கப்படவில்லை என வர்ணனையாளர் மைக்கல் கிளாக் கேள்வி எழுப்பி இருந்தார். விரைவாக அடிக்க கூடிய டேவிட் மில்லருக்கும் அடிப்பதற்கு LSG சந்தர்ப்பம் வழ்ங்கவில்லை.
  8. 1981ல் பிரபகரன், உமா மகேஸ்வரன் சென்னை பாண்டி பஜார் துப்பாக்கி சண்டைக்காக கைது செய்யப்பட்ட போது கைது செய்யப்பட்ட பிரபாவை சந்தித்ததோடு அவர்களை நாடுகடத்துவதை தடுக்க அனைத்து கட்சியினரும் இணைந்து முயற்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் கிட்டத்தட்ட விடுதலை புலிகளின் பிரச்சாரகர் போலவே செயற்பட்டார். 1987 ல் இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்திய படுகொலைகளை தமிழகத்தில் பரப்புரை செய்ததோடு இந்திய- புலிகள் யுத்தத்தின் காரணமாக தமிழ் நாட்டு மக்களிடையே இருந்த குழப்பநிலையை போக்க பேருதவி புரிந்தார். அன்று திமுக கட்சியில் இருந்த வைகோ கட்சி அரசியல் தொடர்புகள் மூலம் ஜோர்ஐ் பெர்னாண்டஸ் போன்ற வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து இந்திய இராணுவத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பிரச்சாரங்களை முன்னெடுத்ததோடு அவரை நிரந்தரமாக ஈழப்போராட்டத்தின் ஆதரவாளராக மாற்றுனார். பின்னர் ராஜீவ் கொலைக்கு பின்னரான பாரிய நெருக்கடி நிலையிலும் ஈழப் போராட்டதை ஆதரித்து பல முறை அதற்காகவே சிறை சென்றார். இருப்பினும் தற்போது சீமான் என்ற காமடியன. எம்மை entertainment செய்ய கிடைத்துள்ளதாலும் வைகோவால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதாலும், “ நன்றி மறத்தல் மிக நன்று”, என்ற ஈழதமிழ் அரசியலின் நியாயப்பட்டிடன் அடிப்படையில் அவரை தூக்கி கடாசி தமிழர் இல்லை என்று கறிவேப்பிலை போல் தூக்கி எறிவது நியாயம் தான். ( வைகோவின் தமிழக உள்ளூர் அரசியல் கூத்துகளை பற்றி எனக்கும் உடன்பாடு இல்லை. விமர்சனம் உண்டு)
  9. சென்னை அணிக்கு தோனி மாதிரி யாழ்கள விளையாட்டு திரிக்கு நிங்கள் இருக்கிறீர்கள், இரண்டு பேரும் சரியான நேரத்தில் மீள வந்ததால் இந்த போட்டி சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன். அஸ்வினுக்கு தற்போது கொடுத்துள்ள இடைவேளை அவர் மீண்டும் சிறப்பாக சென்னை ஆடுகளத்தில் மீண்டும் ஆட வழிவகுக்கலாம், அவரை சென்னை போட்டியில் பயன்படுத்துவார்கள், ஆனால் அடுத்த போட்டி மும்பாயில் நடைபெறும் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கமாட்டார்கள் என நம்புகிறேன். நூர் அகமட், குல்டீப் இருவரும் இடதுகை மணிக்கட்டினால் பந்து வீசும் பந்து வீச்சாளர்கள், இவர்களின் தாக்கம் 20 ஓவர் போட்டிகளில் அதிகமாக காணப்படும். உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு, நான் தெரிவு செய்த அணிகள் கூட நினைவிருப்பதில்லை, கிருபன் போடும் அந்தந்த நாளுக்குரிய தெரிவுகளை பார்க்கும் போதுதான் தெரியும் எனது தெரிவுகள்.
  10. ஐசே நேத்து பூரா சக்தி டீ வீ பர்த்துகொண்டிருந்தன் வா. சிங்களவன் / தமிழன் ஆண் பெண் எல்லோரும் ஒன்றாக அப்படி கிளுப்பு..கிளுப்புவா... அஜல்... குஜால் வா... ஐசே தலவாணி அடி போட்டியில.... தமிழன் தலவாணி வச்சி தூக்கி... தூக்கி... அடிக்கிறாவா.. கீழ இருந்து சிங்கள குட்டிகள் கத்துராள்வள் வா.. சுந்தரலிங்கம் ஒந்தட காஹன்ட... உஸ்ஸ உஸ்ஸ‌ காஹன்டா.. வெடுனத் அபி அல்லனவா.....🤣 ஐசே கயிரு இழுக்கிறான்கள்வா...தமிழ் / சிங்கள..ஆம்பள பொம்பள எல்லாரும் ஒரசி... ஒரசிவா... ........ rubbing shoulder இல்லவா இது rubbing with boobs. அம்மட சிரி ...அப்பிடி ஜொலி வா.. சொல்லி வேல இல்லவா... குளிர்ல வெரச்சி வெரச்சி இருக்கமா இங்க வாங்கா கோசன் தொர...😍 ஒரு தமிழன் கேற்கிறான் வா.. ஒர் அ ழகான சிங்கள குட்டிகிட்ட? "ஒயா காவா ஒந்த கொகிஸ் அச்சுவாக் தியனவா நேதா"? அவள் சொல்லினிறாள் "மகே கொகிஸ் அச்சு சம‌னல வகே என்று".....சிரிப்பு வா..😝 மார சூன் வா... இங்க கொக்கீஸ் அச்சு தேடுகின்றேம் வா நாங்கள்... இவன் இப்படி வீடியோ போடுரான்..... சாதரண ஒரு இந்திய வம்சாவளி தமிழரை, இந்த அரசாங்கம் யாழில் அமைச்சராக நியமித்ததையே ஏற்றுக்கொள்ளத / சக தமிழ் பேசும் மக்களை மதிக்காத இந்த யாழ் மையவாதம் எப்படி சிங்களவன்களை இனதுவேசம் பிடித்தவன் என கூறலாம்? "The pot calling the kettle black" வீடியோவில் இவர் அப்பாவிகள் கொல்லப்படவில்லை என்கிறார்? அப்போ மத்திய வங்கி குண்டு வெடிப்பில் எத்தனை அப்பாவிகள் இறந்தார்கள்?
  11. 'கொபசெ' சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து! Mathivanan MaranUpdated: Tuesday, April 15, 2025, 18:14 [IST] நாம் தமிழர் கட்சியை தொடங்கிய நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். அண்மையில் கொத்து கொத்தாக, நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறி பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியில் தற்போது சீமானுக்கு பக்க பலமாக இருப்பவர்களில் முக்கியமான நபர் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன். பொதுமேடைப் பேச்சுகளால் வழக்குகள் தொடரப்பட்டு சிறைக்கு சென்றவர் சாட்டை துரைமுருகன். திரைப்பட நடிகை மற்றும் சீமான் தொடர்பான விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தியவராகவும் கூறப்பட்டவர் சாட்டை துரைமுருகன். இந்த நிலையில் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக இன்று சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை சாட்டை துரைமுருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், துரைமுருகன் நடத்தும் சாட்டை யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை; அதில் வருகிற கருத்துகள்-செய்திகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்; அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பாகாது என சீமான் தெரிவித்துள்ளார். நித்தியானந்தா? நயினார் நாகேந்திரன்? மோதல் என்ன? இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்களில் விசாரித்த போது, தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் நயினார் நாகேந்திரன், இஸ்லாமியருக்கு எதிரான சங்கி எல்லாம் இல்லை என்பது உள்ளிட்ட கருத்துகளை சாட்டை துரைமுருகன் பேசியிருந்தார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி, பாஜகவின் பி டீம் என விமர்சிக்கப்படும் நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பொதுவெளியில் பகிரங்கமாக பாராட்டி நற்சான்று கொடுத்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்தே சாட்டை துரைமுருகன் தொடர்பாக சீமான் அறிக்கை வெளியிட்டார் என்கின்றனர். மேலும், பல்வேறு பலாத்கார வழக்குகளில் தேடப்படுகிற பாலியல் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவிடம் சாட்டை துரைமுருகன் பேட்டி எடுத்து ஒளிபரப்ப இருந்ததும் சீமானின் அறிக்கைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-issues-sudden-statement-against-duraimurugan-unrest-continues-within-naam-tamilar-katchi-011-695989.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி இது சீமானும் தூஷண துரைமுருகனும் இணைந்து ஆடும் நாடகம். முன்பும் இப்படி பிரிவு நாடகம் ஆடியுள்ளனர். சுப முத்துகுமார் கொலை முதல் பலதில் சீமானின் குடுமி தூஷண துரைமுருகன் கையில். அவரை பகைத்தால் சீமான் களி தின்ன வேண்டி வரும். நேரடியாக சீமான் பாஜக ஆதரவு நிலை எடுத்தால் எதிர்ப்பு பலமாக இருக்கும் என்பதால், சீமான் சொல்லி, துரைமுருகன் பாஜக நிலை எடுக்கப்போகிறார். சீமானை தூஷண துரையின் பிஜேபி ஆதரவு நிலையில் இருந்து தள்ளி வைக்கும் கள்ள ஏற்பாடே இது. இதில் சாதி வெறி பிடித்த தூஷண துரைமுருகனும், நையினார் நாகேந்திரனும் ஒரே சாதி என்பது கொசுறு தகவல்.
  12. ஆசை தோசை அப்பளம் வடை...... இப்ப இந்த மொடேர்ண் வாழ்க்கையில 95தான் வயோதிப வயசாம். ஆகவே 👈👉👆👇 🙂
  13. இல்லை அதையும் நான் கவனித்தேன் அணியின் தலைவராக பல இடங்களில் சிறப்பாகச் செயற்பட்டது உண்மை. சிறப்பாக விளையாடியதும் உண்மை இருந்தாலும் கிரிக்கெட் வாரியம் அவரைச் சிறந்த வீரராக தேர்ந்தெடுத்தது சரியல்ல அந்தப் பந்து வீச்சாளர் சிறப்பாகச் செயற்பட்டதை யாரும் பெரிதாக எடுக்கவில்லை தல மட்டுமே பெரிதாகத் தெரிந்தது அது தான் எனது ஆதங்கம்🙏
  14. மிக மிக சரியான கருத்துகள் நடைமுறையில் உண்மையும்கூட வாழ்த்துக்கள் ஆமாம் ஆனால் இதனால் எந்தவொரு பிரயோஜனம் இல்லை ..நீங்கள் மேலே தெளிவாக சொல்லி உள்ளீர்கள் இதனால் தமிழருக்கு இலங்கை தமிழருக்கு எந்தவொரு நன்மையுமில்லை ஆனால் சீமானுக்கு பல நன்மைகள் உண்டு”
  15. என்னைப்பொறுத்தளவில் இந்திய நாட்டு அரசியல் மட்டுமே எப்போதும் இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது- இனியும் இருக்கும் . தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஒரு நாளும் இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்க முடியாது . ஆனால் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளினால் ஈழத் தமிழர்களின் அரசியலை தீர்மானிக்க முடியும் என்று பரப்புரை செய்து தன் அரசியல் வாழ்வைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களின் ஒருவர் தான் சீமான். சரி அவர் தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு ஈழத் தமிழர்களை முன்னிறுத்துவதால் அவருடைய வளர்ச்சி குறையவில்லை ஒவ்வொரு தேர்தலிலும் அவருடைய வாக்கு வங்கி மேலே செல்கின்றதே , அப்படியென்றால் தமிழ் நாட்டு மக்களிடையே ஈழத் தமிழ் மக்கள் மீது இருக்கும் கரிசனை அதிகரிக்கின்றது என்றுதானே எடுக்க வேண்டும். தமிழ் நாட்டு மக்களிடம் ஈழப்போராட்டத்தின் மீது கரிசனை இருக்கும் வரை ஈழப்போராட்டம் தக்க வைக்கப்படும்.. இந்தக் கரிசனை தக்க வைக்கப்பட வேண்டும். சீமான் சுயநல அரசியல் செய்தாலும்..... இன்றைய நிலையில் தமிழ் நாட்டு மக்களை ஈழப் போராட்டத்தின்பால் ஈர்த்து வைத்திருக்கும் ஒரு கருவியாக நாங்கள் சீமானைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
  16. பஞ்சாப் விளையாட்டு முடிய ஒரு மரணவீடு போய் இப்போ தான் வந்தேன். பஞ்சாப் கோழி புரியாணி தந்திருக்கிறார்கள்.
  17. வெங்க‌டெஸ் ஜ‌ய‌ர் ம‌ற்றும் ரிங்கு சிங் இவ‌ர்க‌ள் தான் தோல்விக்கு கார‌ண‌ம் முக்கிய‌ கார‌ண‌ம் ரிங்கு சிங் , ரிங்கு சிங்கின் அவ‌ச‌ர‌ம் தான் தோல்விக்கு கார‌ண‌ம் ப‌ந்து நிறைய‌ இருக்கு ர‌ன்ஸ் குறைய‌ இருக்கு , ஏன் அவ‌ர‌ப் ப‌ட்டு அவுட் ஆகினார் என்றால் தெரிய‌ல‌ என‌க்கு................................ சென்னை ஒரு அவ‌மான‌த்தில் இருந்து தப்பித்து விட்ட‌து அண்ணா குறைந்த‌ ர‌ன்ஸ்சில் இப்போது கே கே ஆர் முன் நிலையில்............................. ரிங்கு சிங் எப்ப‌டி அவுட் ஆகினார் என்று பார்த்தியா ந‌ண்பா ப‌ந்து கூட‌ இருக்கும் போது வீர‌ர்க‌ள் இப்ப‌டி அவ‌ச‌ர‌ப் ப‌ட‌க் கூடாது ............................
  18. உங்கள் பதிவு மறந்தாலும் பரவாயில்லை எனது தவறான பதிலுக்கு மதிப்பெண்குடுத்தது மன்னிக்க முடியாதது.🤣
  19. கடைசியாக KKR இனை முடிச்சுவிட்டார்கள், பஞ்சாப் அணியினை மைக்மோகன் என கூறியதை மீளப்பெற்றுக்கொள்கிறேன்.🤣
  20. பழைய சோறு இப்படி சட்டிக்குள் அம்மாவோ அக்காவோ குழைக்க ஆளுக்கு ஒரு திரனை கையில் அல்லது பூவரசம் இலையில் வாங்கி சாப்பிட அந்தமாதிரி இருக்கும் . ........! 😂
  21. விஜய் சங்கர் நிதானமாக விளையாடக்கூடியவர். overton இறுதி நேரத்தில் கண்டபடி அடித்து ஓட்டங்கள் பெறக்கூடியவர். முன்பே இவரை விட்டால் கண்டபடி அடித்து விரைவில் ஆட்டமிழப்பார்.
  22. உண்மை தான் க‌ந்த‌ப்பு அண்ணா 2007 உல‌க‌ கோப்பையில் இந்தியா வ‌ங்கிளாதேஸ்சிட‌ம் தோல்வி அடைந்து ஆர‌ப சுற்றுட‌ன் வெளிய‌ போன‌து☹️..........................இந்தியா க‌ப்டன் ராகுல் ராவிட் க‌ண்ணீர் விட்டு அழுதார் ம‌ன‌ம் உடைந்து போய்☹️........................ கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியாவில் இருந்து தான் அதிக‌ ப‌ண‌ம் கிடைக்குது , அடுத்த‌தாக‌ இங்லாந்திட‌ம் இருந்து........................பாக்கிஸ்தானில் வீர‌ர்க‌ளுக்கு ஊதிய‌ம் க‌ம்பி 2010ம் ஆண்டு மூன்று பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் இங்லாந்தில் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டு பிடிப‌ட்டு சிறையில் அடைத்த‌வை அப்போதே எழுந்த‌ விம‌ர்ச‌ன‌ம் பாக்கிஸ்தான் கிரிக்கேட் நிர்வாக‌ம் வீர‌ர்க‌ளுக்கு பெரிதாக‌ ஊதிய‌ம் கொடுப்ப‌தில்லை அத‌னால் தான் வீர‌ர்க‌ள் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌டுகின‌ம் என்று..............................
  23. நம்மை போட்டுக் கொடுத்துடாதே என்று கெளரவமாக போய் சொல்ல வேண்டாமோ?
  24. 15 APR, 2025 | 04:46 PM மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் இன்று செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித நேய செயற்பாட்டாளர்களான 3 பேர் நோர்வே நாட்டிலிருந்து தனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று விளையாட்டு போட்டிகள் மற்றும் அன்னையின் திருவுருவப் படத்தை வாகனத்தில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அமைதியாகச் செய்ய வேண்டிய இந்த நினைவேந்தலை இந்த மூவரும் அரசியலாக்கி இலாபமடையவுள்ளனர். இவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த 3 பேரின் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி இவர்களைத் தடைசெய்து அமைதியாக நினைவேந்தலைச் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/212043
  25. தோனியின் குறி தவறாத தாக்குதல் ....... அதுவும் பாட்ஸ்மன் மீது தொடாமல் அவருக்கு மேலாகச் சென்று விக்கட்டைத் தாக்கியது பந்து .......! 😂
  26. என்ன‌ தான் அண்ணா நானும் நீங்க‌ளும் 19வ‌ய‌துக்காக‌ உல‌க‌ கோப்பை பார்த்தாலும் அதில் இருந்து ஜ‌பிஎல்லுக்கு தெரிவாகும் வீர‌ர்க‌ள் ஒரு சில‌ர் ம‌ட்டுமே இப்ப‌ இந்திய‌ அள‌வில் ஒவ்வொரு மானில‌த்திலும் 20ஓவ‌ர் போட்டி ந‌ட‌த்துகின‌ம் அதெல்லாம் நாம் நேர‌ம் ஒதுக்கி பார்க்க‌ மாட்டோம்.................அந்த‌ போட்டிக‌ளில் திற‌மைய‌ வெளிப் ப‌டுத்தின‌ ப‌ல‌ புது முக‌ங்க‌ள் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்....................... ஜ‌பிஎல் இன்று ந‌ட‌க்கும் போட்டிய‌ கூட‌ க‌ணிக்க‌ முடியாது இர‌ண்டு அணிக‌ளும் ச‌ம‌ ப‌ல‌த்துட‌ன்...............சென்னை அணிக்கு ப‌ல‌ வ‌ருட‌மாய் விளையாடின‌ இங்லாந் வீர‌ர் மோர்ன் அலிய‌ ஏன் ஏல‌த்தில் விட்டார்க‌ள் என்று தெரியாது மோர்ன் அலி கே கே ஆரில் ந‌ல்லா விளையாடுகிறார்👍....................................
  27. அட அந்த முனாவா. மூவன்னா என்டத் தான், கொஞ்சம் குழம்பிட்டன். அப்ப சரி. தலையையும் ஆட்டத்தில் சேர்த்துக்கலாம். என்ன இப்பிடி சொல்லிப் போட்டீங்கள். ஆறுமுகம் ஏறினா நம்மபாடு அதோகதிதான். விடக்கூடாது. மந்திர தந்திரம்தான் போடவேணும் போல.
  28. தமிழ் நாட்டில் தமிழர் தமிழர் அல்லாதோர் என 300,500 வருடங்கள் முன்பு வந்தோரை பிரித்து பார்க்கும் கலககாரார் யார் என பார்த்தால்… ஒன்றில் மலையாளிகளாக இருப்பார்கள் (சீமான்).… அல்லது தமது போராட்த்தை கூட நடத்தாமல் வெளிநாடு ஓடி வந்து விட்டு, அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை, தாம் 64 இயக்கமாக பிரிந்து தம் நாட்டை நாசப்படுத்தியது போல் நாசப்படுத்த எண்ணும், புலம்பெயர் ஈழ தமிழராக இருப்பார்கள். சீமான் தமிழர்… நிம்மி தமிழர் என்றால்… ஸடாலினும் தமிழர். ஸடாலின் தெலுங்கர் என்றால்.. சீமான் மலையாளி… நிம்மி…மங்கோலியா🤣
  29. ருத்துராஜ் கைக்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதினால், 17 வயதான இளம் வீரர் Ayush Mhatre அவர்கள் சென்னை அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் ஒரு சகல துறை வீரர்
  30. முதல் தலைமுறை பட்ட கஷ்டங்களினால் அனுபவத்தினால் இரண்டாம் தலைமுறை சற்றுப் பிறழ்வின்பால் சென்றாலும்.... மூன்றாம் தலைமுறையை காப்பாறும் முயற்சியில் ஆவது முதலாவது தலைமுறையினர் ஈடுபடுவார்கள் என நான் நினைக்கின்றேன் அப்போது மம்மி டாடி வராது அப்பா அம்மா என்ற சத்தம் வருவதற்கான அறிகுறிகள் எம்மிடையே அதிகமாக காணப்படுகின்றது
  31. பையன் வந்தாச்சு திரி கலகலப்பாகப் போகுது.
  32. சும்மா பதிந்தாலும் சிந்திக்க வைக்கும் பதிவு. இன்று அரசாங்கம் என்ற சிக்கலான கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதிலேயே அதிக பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. இன்றைய தொழில்நுட்ப வசதிகளால் நீரை வேறு வழிகளில் சேமிக்கவும் இலகுவாக சிக்கனமாகப் பயன்படுத்தவும் வழிகள் உள்ளன. ஆனால் சரியான அறிவூட்டல் இல்லாமையும் சனத்தொகைப் பெருக்கமும் நீர்ப்பஞ்சத்தை உருவாக்குகிறது.
  33. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 30வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் விக்கெட்டுகளை இழந்ததனால் ரிஷப் பந்தின் 63 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களும் நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் வெல்லும் வாய்ப்பு குறைந்திருந்தது. எனினும் ஷிவம் டுபேயின் நிதானமான 43 ஓட்டங்களுடனும் இறுதியில் வாணவேடிக்கை காட்டிய தோனியின் 26 ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  34. ஒரு மாதிரி சென்னை கரை சேர்ந்திட்டுது . .........! 😂
  35. 🤣 நான் தலையங்கத்தை பார்த்து விட்டு…இந்த பயங்கரமான ஜேர்மன் வாழ் தமிழர்கள் ஒரு ஐந்து பேரை ஊருக்கு அனுப்பி சிங்களவனுக்கு ஒரு காட்டு காட்டலாம் எண்டு நினைச்சேன் வா🤣
  36. கருணாநிதி தெலுங்கர் என்பதே வெறும் பொய்யர்களின் பரப்புரை. கருணாநிதி மட்டுமல்ல எம்ஜிஆர், ஜெயலலிதா, அனைவருமே தமிழர்களே. தமிழ்நாட்டு மக்களால் பல முறை முதலமைச்சராகவும் தொடர்சசியாக தோல்வியை தழுவாத சட்டசபை உறுப்பினராகவும் தமிழ் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவரின் அரசியலை விமர்சிக்கலாம் தவறில்லை. ஆனால் ஒருமுறை கூட கட்டுப்பணம் பெற முடியாத, ஒரு சிறிய கிராமசபை உறுப்பினராக கூட வெற்றி பெற வக்கற்ற கட்சிகள் தமக்கு ஒவ்வாதவர் மீது இனவெறி தாக்குதல் செய்வது ஏற்றுகொள்ள தக்கதல்ல. அதை விட தாமே இனவாதத்தால் பாதிக்கப்பட்டோம் என்று கூறும் ஈழத்தமிழர்கள் அடுத்தவன் நாட்டுக்குள் இனவாதம் பேசுவது சிங்கள இனவாதத்தை விட மோசமானது. அதிகாரம் கிடைக்காமலே இப்படி என்றால் அதிகாரம் கிடைத்திருந்தால்…. சொல்லி வேலை இல்லை.
  37. முள்ளிவாய்க்கால் அவலங்களை மீண்டும் நினைவுபடுத்திய பதிவு.
  38. பிள்ளைகளை தனியே அனுப்பும் போது அவர்கள் மீது உள்ள அதீத பாசத்தின் காரணமாக மிகைப்படுத்தப்பட்ட பயத்தை ஏற்படுத்துவது பொதுவாக எமது நாடுகளில் பெற்றாரின் பொதுவான இயல்பு. இது தமிழருக்கும் பொதுவான ஒன்றே. சிங்கள இனவாத அரசியல்வாதிகள் தமிழர் மீது அளவுக்கு அதிகமான பயம் ஏற்படும் விதமாக அப்பாவி சிங்கள மக்களை நம்ப வைக்க பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதுவும் ஒரு காரணம். பொதுவாகவே இனவெறியர்களின் தந்திரம் இவ்வாறாக அடுத்த இனத்தின் மீது பயத்தை ஏற்படுத்துவதே. சிங்களவரில் சரத்விஜசேகரா, விமல் வீரவம்ச போன்றோரும் தமிழ் நாட்டில் சீமான் போன்ற இனவெறியர்களும் இதே போன்ற பரப்புரையையே மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பரப்புரைகளே மிகைப்படுத்தப்பட்ட பயத்தை பெற்றோருக்கு ஏற்படுத்துகிறது.
  39. மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள் .........! 😍
  40. பிரதமேரே கோவிலில் பிரச்சாரம் செய்கின்றார் ...சட்டத்தை மீறி .... வடமாகாண ஆளுனரின் பதவி ஏற்பு வைபவத்தில் சந்தனம்,விபூதி பூச மறுத்த டோழர் சந்திரா ...சேர்ட் இல்லாமல் கோவில் தரிசனம் செய்கின்றார் ....டோழர்மாரின் சிவப்பு தொப்பி எல்லாம் காற்றில் பறக்கின்றது... "ஊழல் என புலம்புவதை தவிர வேறு ஒன்றும் யாம் அறியோம் மார்க்ஸே"
  41. இது சட்டத்திற்கு முரண் அல்லவா? ஒருவரின் அனுமதி இல்லாமல் படங்கள் காணொளிகள் எடுக்க முடியுமா? கேட்க ஆளில்லை என்பதால் இருக்குமோ?
  42. நாங்கள் ஒரு வேலைக்கு போனால்; மனச்சாட்சிக்கு பயந்து, சரியாக, வாங்கும் சம்பளத்துக்குஉண்மையாக, சம்பளம் தருபவர் மனநிறைவடையும் படி உழைக்கிறோம். அப்படித்தான் மற்றவர்களும் என நினைப்பது தவறு. அவர்கள் ஓம் என்று ஒத்துக்கொள்வார்கள், பிறகு ஏதேதோ சொல்லி இடையில் சென்றுவிடுவார்கள். அவர்கள் விட்ட குறை வேலையை வேறொருவர் தொடர மாட்டார். காரணம், அவர்களுக்குள் ஒரு கொள்கை. அதனால் அவர்கள் வேண்டுமென்றே இழுத்தடித்து தாங்கள் நினைப்பதை சாதித்து விடுகிறார்கள். ஒன்று, நீங்களும் அவர்களோடு களத்தில் இறங்கி நின்று வேலை செய்ய வேண்டும், எல்லா வேலைகளும் முடியாது. புல்லுபிடுங்கல், கூட்டல், துடைத்தல் வேலைகளில். மற்ற வேலைகளில் அவர்களோடு கூட நிற்பது நல்லது. நாங்களும் எங்கள் உறவினர்களை வேலைக்கு அழைத்தே நிறைய இழந்துவிட்டோம், இதனால் அவர்கள் நினைப்பது; நம்மை எப்படியென்றாலும் ஏமாற்றலாம், அவர்களை விட எங்களுக்கு வேலைக்கு வேறு கதி இல்லையென்றே. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்ற கற்றுக்கொண்டு விட்டார்கள். நாமே நம் வேலை செய்ய முயற்சித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்.
  43. ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக… Bookday04/03/2025 ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக ‘டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’… தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–3 – அ. குமரேசன் “உண்மையைச் சொல், சொன்னபின் ஓடிவிடு.” “எனது கல்வியில் எனது பள்ளிப் படிப்பு தலையிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை.” “புன்னகை என்பது மின்சாரம். தருபவரை மங்கிவிடச் செய்யாமல் பெறுபவரை ஒளிரச் செய்யும் வாழ்க்கை.” “எப்போதும் மற்றவர்களின் இறுதிநிகழ்வுகளுக்குச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுடையதற்கு அவர்கள் வர மாட்டார்கள்.” – இப்படியெல்லாம் எழுதியவர் மார்க் ட்வெய்ன் (Mark Twain) (1835–1910). தமது சமூக நையாண்டிப் படைப்புகளுக்காகவும் நகைச்சுவை இழையோடும் தெறிப்புகளுக்காகவும் உலகெங்கும் வாசிக்கப்படுபவர். ‘டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’, ‘ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்’, ‘அரசனும் ஆண்டியும்’, ‘மிசிசிப்பி வாழ்க்கை’, ‘முலாம் பூசிய காலம் – இன்றைய கதை’ ‘புடன்ஹெட் வில்சன்’ உள்ளிட்ட நாவல்கள் புகழ்பெற்றவை என இலக்கிய நேயர்கள் தெரிவிக்கிறார்கள். மார்க் ட்வெய்ன் (Mark Twain) டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’ நாவலின் தொடர்ச்சியாகவும், தனியாக வாசிக்க தக்கதாகவும் 1884இல் வந்தது ‘ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்’. இனவாதத்தைத் தூண்டுகிறது, கறுப்பின மக்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புகிறது, கெட்டவார்த்தைகளைப் பேசுகிறது என்று குற்றம் சாட்டப்பட்ட அந்த நாவல் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. பிரிட்டன் உள்பட வேறு பல நாடுகளில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இன்று உலக இலக்கியங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கும் அந்த நாவல் கூறுகிற இருவரின் பயணக் கதைக்குள் நாமும் பயணிப்போம். கதைச் சுருக்கம் 1840களில் நடக்கிற கதை. மிசோரி மாநிலத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தைச் சேர்ந்த சிறுவன் ஹக்கிள் பெர்ரி ஃபின். நண்பனான டாம் சாயர் சாகசங்களின் பலனாகப் பெருந்தொகை ஒன்றைப் பெறுகிறான். கணவரை இழந்தவரான டக்ளஸ், அவரது சகோதரி மிஸ் வாட்சன் இருவரும் ஹக்கைத் தங்கள் பாதுகாப்பில் வளர்க்கிறார்கள். சுதந்திரமான வாழ்க்கையை விரும்பினாலும் அவன் டாம் சாயரின் கூட்டத்தோடு இருப்பதற்காக அங்கேயே தங்குகிறான். குடிகாரனான தகப்பன் பாப் தனது பணத்தைக் கைப்பற்ற முயன்றதைத் தடுக்கிறான் ஹக். ஆத்திரத்துடன் அவனை வெகுதொலைவில் ஒரு தனி அறையில் அடைத்து வைக்கிறான். பாப் நிதானம் இழந்த போதையில் ஹக்கைக் கொல்லவும் முயல்கிறான். ஹக் தான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக நாடகமாடி ஒரு தீவுக்குத் தப்பிச் செல்கிறான். அங்கே மிஸ் வாட்சனின் அடிமையான கறுப்பின இளைஞன் ஜிம் அவனுடன் பழகுகிறான். அவள் தன்னை விற்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்து தப்பி ஓடத் திட்டமிட்டிருப்பதைக் கூறுகிறான். அவனுடன், ஹக்கும் இணைகிறான். இருவரும் மிசிசிப்பி நதியில் ஒரு கட்டுமரத்தில் பயணம் செய்கிறார்கள். ஒரு வெள்ளப் பெருக்கின்போது கரையொதுங்கும், அவர்கள் ஒரு படகு வீட்டைக் காண்கிறார்கள், அங்கு ஜிம், துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடக்கும் ஒருவரது உடலைக் காண்கிறான். ஆனால், ஹக் அதைப் பார்க்க வேண்டாமென்று தடுத்துவிடுகிறான். நகருக்குள் செல்லும் ஹக் அங்கே ஜிம்மைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதை அறிகிறான். ஹக்கை ஜிம்தான் கொலை செய்துவிட்டதாக கதை பரவியிருக்கிறது. ஜிம்மிடம் திரும்பி வருகிறான். இருவரும் மறுபடியும் தங்கள் கட்டுமரத்தில் தப்புகிறார்கள். ஓரிடத்தில் தரைதட்டி நிற்கும் ஒரு நீராவிப் படகைப் பார்க்கிறார்கள். அதில் இரண்டு திருடர்கள், மூன்றாவது நபரைக் கொல்லப் போவதாகக் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஹக்கும் ஜிம்மும் அந்தத் திருடர்களின் படகில் தப்பிச் செல்கிறார்கள். இதற்கிடையே பயணத்தில் பல சவால்கள் குறுக்கிடுகின்றன. சமாளித்துத் தொடர்கிறார்கள்.. திடீரெனப் படகு மூழ்கிவிடுகிறது. இருவரும் பனி மூட்டத்தில் பிரிந்துவிடுகிறார்கள். ஒருவழியாக மீண்டும் சந்திக்கிறபோது, இப்படி நடக்கும் என்று தன் கனவில் வந்ததாக ஹக் பொய்யாகச் சொல்கிறான். உண்மை தெரியவரும்போது ஜிம் மிகவும் வருத்தமடைகிறான். தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்தவனான ஜிம் எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறான் என்று அறியும் ஹக் அவனைப் புண்படுத்திவிட்டதை எண்ணி தானும் வருந்துகிறான். இருவரும் நெருக்கமாகிறார்கள். சில வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். எசமானர்களிடமிருந்து ஓடிப்போன கறுப்பின அடிமைகளைப் பிடிக்க வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஹக் அப்படி யாரையும் பார்க்கவில்லை என்று கூறி, ஜிம்மைக் காப்பாற்றுகிறான். ஒரு கட்டுமரத்தில் பயணம் தொடரும் நிலையில் ஒரு நீராவிக் கப்பல் வந்து மோதுகிறது. ஹக்கும் ஜிம்மும் மீண்டும் பிரிகிறார்கள். வழியில், கிரேஞ்சர் ஃபோர்டு குடும்பத்தை சந்திக்கிறான் ஹக்.. அந்தக் குடும்பத்திற்கு சீப்பர்ட்சன் குடும்பத்துடன் முப்பது ஆண்டுகாலப் பகை. இப்போது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த இருவர் காதலித்து ஓடிப்போன பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.. இரு தரப்பினரின் மோதல் ஒரு கொலையில் முடிகிறது.அங்கிருந்து தப்பிக்கும் ஹக் மறுபடியும் ஜிம்முடன் இணைகிறான். மன்னர் குடும்பம் என்று கூறிக்கொள்ளும் இரண்டு மோசடிக்காரர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மோசடிகளுக்கு ஹக்கையும் ஜிம்மையும் உதவ வைக்கிறார்கள். ஒரு நகரத்தில் மோசடிக்காரர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் மேடை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். மூன்றாம் நாள் இரவில், ஏமாற்றப்பட்டதை அறிந்து பழிவாங்கத் துடிக்கும் முந்தைய காட்சியின் பார்வையாளர்களிடம் தந்திரமாகக் கட்டணத்தை வசூலிக்கும், மோசடிக்காரர்கள் ஓடிவிடுகிறார்கள். அந்த இருவரும் அடுத்த நகரத்தில் அண்மையில் இறந்துவிட்ட பீட்டர் வில்க்ஸ் என்பவரின் சகோதரர்களைப் போல் நடித்து, அவரது சொத்தை திருட முயல்கிறார்கள். ஆதரவற்றவர்களாக நிற்கும் அவருடைய மருமகள்களுக்காக அந்தச் சொத்தை மீட்க ஹக் உதவுகிறான். வில்க்ஸின் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு மேலும் இரண்டு பேர் வருகிறார்கள், குழப்பம் ஏற்படுகிறது. ஹக்கை மோசடிக்காரர்கள் பிடித்து வைக்கிறார்கள். அவர்கள் ஏற்கெனவே ஜிம்மைப் பிடித்து பெல்ப்ஸ் என்பவரிடம் விற்றுவிட்டதை ஹக் கண்டறிகிறான். அவனை விடுவிக்க உறுதியேற்கிறான். இந்தக் கூட்டத்திடமிருந்து தப்பித்து அங்கே போகிறான். பெல்ப்ஸ் ஹக்கை தங்கள் மருமகன் டாம் சாயர் என்று தவறாக நினைக்கிறார்கள். அவர்களுடன் இணக்கமாகப் பழகுகிறான். திரும்பி வரும் டாம் சாயர் நடப்பதைப் புரிந்துகொண்டு ஹக்கின் நாடகத்திற்கு ஒத்துழைக்கிறான். மன்னர் குடும்பம் என்று ஏமாற்றி வந்தவர்கள் பற்றி எல்லோருக்கும் தெரிவிக்கிறான் ஹக். ஊரார் அவர்களின் முகத்தில் தார் பூசி இறகுகள் ஒட்டி நகரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள். ஜிம்மைத் தப்பிக்க வைக்கும் முயற்சியில் டாம் சாயர் காயமடைகிறான். தப்பித்துச் செல்ல இருந்த ஜிம் அவனைக் கவனித்துக் கொள்வதற்காகத் தங்குகிறான். அப்போது கைது செய்யப்பட்டு பெல்ப்ஸிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறான். அந்நேரம் டாமின் அத்தை பாலி வருகிறார். ஹக், டாம் இருவரது உண்மையான அடையாளங்களை வெளிப்படுத்துகிறார். மிஸ் வாட்சன் இறந்துவிட்டதையும், அவர் தனது உயிலில் ஜிம்மை விடுவித்துவிட்டதாக எழுதியிருப்பதையும் பாலி விளக்குகிறார். டாம் அந்த விசயம் தனக்குத் தெரியும் என்றும், வேண்டுமென்றே அதை மறைத்து ஜிம்மை ஒரு விறுவிறுப்பான முறையில் மீட்க விரும்பியதாகவும் தெரிவிக்கிறான். படகு வீட்டில் இறந்து கிடந்தது ஹக்கின் அப்பா பாப்தான் என்று கூறுகிறான் ஜிம். பெல்ப்ஸ் குடும்பத்தினரால் தத்தெடுத்து வளர்க்கப்படுவதிலிருந்து தப்பித்துச் சுதந்திரமாக வாழ விரும்பும் ஹக் பூர்வகுடிமக்கள் வாழும் பகுதிக்குச் செல்கிறான். உடைபட்ட தடை குழந்தைகளின் ரசனைக்கான சாகசக் கதையாக எழுதப்பட்ட இந்த நாவல் உண்மையில் கறுப்பின மக்களை எப்படியெல்லாம் வெள்ளையினக் கனவான்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று காட்டுகிறது. ஒரு சிறுவனின் சாகசப் பயணத்தை வைத்து, சமூக நிலவரங்களைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. உண்மை நிலையைக் காட்டுவதற்காக, வசனங்களில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த கடுமையான சொற்களையும் வசவுகளையும் சேர்த்திருக்கிறார் மார்க் ட்வெய்ன் (Mark Twain). வெள்ளைச் சமூகத்தினருக்கு அவர்களது இனவாத ஆணவங்களை அம்பலப்படுத்தியதால் நாவல் பிடிக்காமல் போனது. போலியான காரணங்களைக் கூறி தடை விதிக்க வற்புறுத்தினார்கள். மனசாட்சிப்படி செயல்பட விரும்பும் ஹக் பாத்திரம், மத போதனைகளை மீறுவதாக இருக்கிறது என்று அன்றைய கிறிஸ்துவ மதவாதிகளும் எதிர்த்தார்கள். இனவாத, மதவாதப் பார்வைகளுடன் இருந்த அமெரிக்க மாநிலங்களின் ஆட்சியாளர்கள் நாவலுக்குத் தடை விதித்தார்கள். பல ஆண்டுகள் கடந்த பின்னரே தடை விலக்கப்பட்டது. ‘தி அட்வெஞ்ச்சர்ஸ் ஆஃப் ஹக்கிள்பெர்ரி ஃபின்” (Adventures of Huckleberry Finn) நாவல் வெளியான காலத்தில் பெரிய விருதுகள் ஏதும் வழங்கப்படவில்லை. இருப்பினும், காலப்போக்கில் இந்த நாவல் இலக்கிய உலகில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றது. அமெரிக்க இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கான படக்கதை வடிவத்திலும், சில திரைப்படங்களாகவும் மக்களிடம் வந்திருக்கிறது. அமெரிக்க இலக்கியத்தின் போக்கை மாற்றியமைத்த புத்தகங்களில் ஒன்று என்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறது. அடிமைத்தனத்திற்கு, இனவெறிக்கு எதிராகக் களம் இறங்குவோருக்கு ஒரு இலக்கியத் துணை என்ற இடத்தையும் பிடித்திருக்கிறது. எழுதியவர்: அ.குமரேசன் https://bookday.in/books-beyond-obstacles-3-the-adventures-of-tom-sawyer-novel-oriented-article-written-by-a-kumaresan/
  44. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 26ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2025) 27ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்த யாழ் இணையம், உலகத் தமிழர்களின் எண்ணங்களையும், உள்ளங்களையும் இணைக்கும் தருணங்களை உருவாக்கி வருகிறது. பல கருத்தாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழ் மொழியின் வளத்தையும், கருத்துச்சுதந்திரத்தையும் பறைசாற்றும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாண்டும், முன்னைய ஆண்டுகள்போலவே யாழ் இணைய உறவுகள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனிப்பட்ட ஆக்கங்களை பகிர்ந்து, விவாதங்களைப் பகிர்ந்ததற்காக அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம். தகவல் பரிமாற்றத்தில் விழிப்புணர்வு: ஈழத்திலும் உலகத்திலும் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும் சதி முனைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நம்பகமான தகவல்களை பகிர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும், ஆனால் அவை உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். தமிழ் நலனுக்காக ஒருமைப்பாடு: தாயக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடரும் நிலையில், உலகத் தமிழர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக் கரங்களை நீட்டியதை இங்கு நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. சமூக நீதி, சமவுரிமை மற்றும் தமிழ்த் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும். புதிய உறுப்பினர்கள் – புதிய தொடக்கம்: இப்புதிய ஆண்டில், மேலும் புதிய உறுப்பினர்களை யாழில் இணைக்கும் ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் இதுவரை இணைந்திராவிடில் இணைந்து உங்கள் கருத்துக்களைப் பதிவிடும்படி வேண்டுகின்றோம். அத்துடன் உறுப்பினர்கள் உங்கள் சுற்றத்திலுள்ளவர்களுக்கு யாழ் இணையத்தை அறிமுகப்படுத்தி, கருத்துக்களத்தில் அவர்களையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் மட்டுறுத்துனர்களுக்கும் யாழ் செழிப்புற வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கும் பாவனையாளர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இணைவோம் – வளர்வோம்: கடந்த காலங்களில் கூறியது போன்று, எமது மண்ணோடும், மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாக, துணையாக, ஒற்றுமையாய் பயணிப்போம். “நாமார்க்கும் குடியல்லோம்” நன்றி, யாழ் இணைய நிர்வாகம் திகதி: 30 மார்ச் 2025

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.