Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    38754
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3054
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19122
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/29/25 in Posts

  1. இன்றைய முதலாவது Play-off Qualifier 1 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி போட்டியில் வெல்லும் நோக்கோடு விளையாட வந்ததாகத் தெரியவில்லை! தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 14.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 101 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஃபில் சோல்ற்றின் புயல்வேகத்தில் ஆட்டமிழக்காது எடுத்த 56 ஓட்டங்களுடனும் மயங் அகர்வால், ரஜட் பரிடாரின் கமியோ ஆட்டங்களுடனும் 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்லும் என சரியாக கணித்த இருவருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. மண்டபத்தின் திறப்பு இன்னும் இந்தியத் தூதரகத்தில் மட்டுமே உள்ளது. அதனால் யாழ்ப்பாணிகள்.. மண்டபத்தின் வெளியில் நின்று கட்டிடத்தை பார்த்து விட்டு, போக வேண்டியதுதான். தமிழனின் மையப் பகுதியில் அமைந்த கட்டிடத்தினை, தமிழன் பாவிக்கக் கூட உரிமை இல்லை. பெயர் மட்டும்... கலாச்சார மண்டபமாம். இது என்ன காலாச்சாரமோ... கட்டினவனுக்குத்தான் வெளிச்சம். பிற் குறிப்பு: எனது அறிவுக்கு எட்டியவரை.... இந்த மண்டபத்தை இந்தியா தனக்குப் பாவிக்க கட்டியதாகவே கருதுகின்றேன். ஒரு காலத்தில் இந்தியாவின் சொல்லுக்கு... இலங்கை கீழ்ப்படியாமல் முறுகல் நிலை ஏற்பட்டால்... இந்திய இராணுவத்தை பலாலியில் கொண்டுவந்து இறக்கி.. இதனை இந்திய ராணுவ முகாமாக பாவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது. மையப் பகுதியில் இந்த நிலத்தை யாழ். மாநகரசபை இந்தியாவிடம் கொடுத்ததே பெரிய தவறு. கோடிக்கு கணக்கில்... கோவிலுக்கு செலவு செய்யும் நம்மவர்கள்... அந்த மண்ணுக்கு என்று பொதுவாக ஒரு அழகிய பிரமாண்டமான கட்டிடத்தை கட்டி இருக்கலாம். நம்மிடம்தான்... தூர நோக்குப் பார்வை என்றும் இருந்ததில்லையே.
  3. நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்... ஒரு நடிகராகப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களது உரையாடலும் அவரது தமிழ்ப்பற்றும் என்னை நடிகருக்கப்பாலான வேறொரு கோணத்தில் நோக்க வைக்கிறது. அதனை யாழ் கள உறவுகளோடு பகிரந்துகொள்ளும் நோக்கோடு இணைத்துள்ளேன். நன்றி யூரூப் இணையம் வேண்டுகோள்: பொருத்தமற்ற பகுதியில் இணைத்துள்ளேனென்றால், பொருத்தமான பகுதிக்கு நிருவாகத்தினர் மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. நாம் போராடி கொண்டிருந்த போது….புன்னகை மன்னன் படத்தில்….”உங்களுக்கும் சிங்களவருக்குமான பிரச்சனையை அங்கே வைத்து கொள்ளுங்கள், இங்கே வேண்டாம்” என சொன்ன கமல்…. தெனாலியில் “ஏன் யுத்தம் ஆரம்பித்தது என எனக்கு அன்றும் தெரியவில்லை, இன்றும் தெரியவில்லை” என ஒரு ஈழதமிழன் சொல்வதாக வசனம் பேசிய கமல்…. இன்று தமிழ் பற்றிய சர்சையில் சிக்கி கொண்டுள்ளார்…. காலம் விசித்திரமானது. இந்த எந்த மொழி பழையது என்ற சர்ச்சை யாழிலும் பலதடவை விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். உண்மையில் இது மதம் போல ஒரு நம்பிக்கை. எனது மதம் உண்மையானது, உனது மதம் பொய்யானது என அடிபடுவது போலவே இதுவும். எந்த மொழியியல் அறிஞரும் 100% சோதனை கூட ஆதாரத்தை ஒப்ப ஆதாரத்துடன் இந்த மொழிதான் மூத்தது என நிறுவ முடியாது. நாம் ஒரு ஆராய்சியை காட்டினால், அவர்கள் இன்னொன்றை காட்டுவார்கள். மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள். சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣. கமலே இதை யோசிக்காமல் உளறிவிட்டேன்…இப்போ எப்படி தப்பிப்பது என நினைத்து கொண்டிருப்பார். அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣. கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர். 12,000 வருடத்துக்கு முன் தமிழர் பூம்புகாரில் துறைமுகம் கட்டினர் என இதே யாழில் எழுதப்பட்டு, லைகுகள் வாளியில் அள்ளப்பட்டது வரலாறு🤣. பிகு முன்பே எழுதியதுதான். தமிழ், தெலுகு, கன்னடம், துளு, மலையாளத்தின் ஒற்றுமைகளை வைத்து பார்க்கின், அவற்றில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கி பார்க்கின், திராவிடமொழிகளின் மூத்தாவாக ஒரு மொழி - அதை Porto Dravidian எனலாம் அல்லது திராவிடம் என்ற சொல் அலர்ஜியானவர்கள் X எனலாம் - இருந்திருக்க வேண்டும். இந்த X மொழி தமிழ் என்கிறோம் நாம். இல்லை X இல் இருந்து மிச்சம் எல்லாம் வந்தன என்கிறனர் அவர்கள். அதிலும் கூட X இன் பிள்ளைகளில் மூத்தது தமிழ் (இலக்கிய செழுமை, நெடிமை) என்பதை கூட அவர்கள் ஏற்க தயாரில்லை. இது எந்த மதம் உண்மையானது என்பதை போல அறிவு, ஆதாரத்துக்கு அப்பாற்பட்டு நம்பிக்கை, இனப்பெருமை சார்ந்த ஒரு விடயம். என்னை பொறுத்து - நான் வாசித்து அறிந்ததை, என் குறை அறிவை வைத்து நான் இப்போ நம்புவது (இது நாளை ஆதார அடிப்படையில் மாறலாம்) X - தமிழாக இருக்க வாய்புள்ளது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியாது. அது அழிந்து போன ஒரு ஆதி மொழி வடிவமாக இருக்கலாம் (லத்தீன், சமஸ்கிருதம், அரமையிக்). இப்போ இருக்கும் தென்னிந்திய மொழிகளில் காலத்தால் மூத்தது தமிழ்.
  5. உண்மைகளை, வரலாறுகளை புதைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, விசுகு ஐயா. ஆனால் கமல் போன்றோரின் பேச்சுகளை நம்பி நடவடிக்கைகளில் இறங்குவது மண் குதிர் ஒன்றை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமானம் மற்றும் குறிப்பாக கமல் சரியான புரிதலோ அல்லது தொடர்ச்சியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக விடயங்களை சொல்லுகின்றார். இவரது பேச்சுக்களால் இதுவரை ஒரு விடயம் கூட சமூகத்தில் மாற்றம் அடையவில்லை என்பது கண்கூடு. ஒரு புள்ளியை மட்டுமே பார்க்காமல், பின்நோக்கி சென்று ஒரு கோடாக பார்த்தால் இவரின் அவசரத்தனங்களை அறிந்து கொள்ளலாம். எனது சொந்த அனுபவத்தை, திருச்சியில் என் பெற்றோரின் மரணச் சான்றிதழ்கள் பெற்ற நிகழ்வை, இங்கு களத்திலேயே ஒரு கதையாக எழுதியிருக்கின்றேன். அந்தக் கதையில் கமலின் ஊழல் எதிர்ப்பு கோசமும், நடவடிக்கைகளும் வருகின்றது. அந்தக் கதையின் சாராம்சமே கமலும், இவரைப் போன்றவர்களும் நிஜ உலகிலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கின்றார்கள் என்பதும், இவர்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமே அற்றது என்பதும்தான். வெறும் பரபரப்பு மற்றும் விளம்பரங்களுக்காக தங்களுக்கு தேவையான நேரங்களில், சினிமா வெளியீடு அல்லது தேர்தல் காலங்களில், எதையாவது உணர்வுபூர்வமாக சொல்லிவிட்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். தமிழின் தொன்மை இப்பொழுது இந்திய மத்திய அரசின் தொல்துறைப் பிரிவால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையான பிரச்சனை. இதை கேள்வி கேட்க ஆரம்பித்தது சு. வெங்கடேசன். சில வருடங்களின் முன் மொழிகள் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கும் போது தமிழுக்கு மிகக்குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. அப்போதும் இதை தட்டிக் கேட்டவர் வெங்கடேசன் தான். மேடையில் இரண்டு வரிகளை சொல்லி விட்டு, பின்னர் அதையே அன்பு, நட்பு என்று சமாளித்துக் கொண்டு போகும் கமல் போன்றோர் இந்த விடயங்களின் பக்கம் வருவதேயில்லை. இந்தப் பக்கம் வர வேண்டும் என்றால், ஒன்று அதில் தீவிரமாக இருக்க வேண்டும், இரண்டாவது நல்ல புரிதல் இருக்கவேண்டும். தமிழ் மொழி மூவாயிரம் வருடங்களோ அல்லது ஐயாயிரம் வருடங்களோ எவ்வளவு பழமையானது என்பதை ஆதாரங்களுடன் நாங்கள் முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் திரட்டவேண்டும். அதை உலகில் இந்த துறையில் இருப்பவர்களுடன் பகிரவேண்டும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரிசா பாலு போன்றவர்களின் ஆதாரங்கள் எங்கள் ஊடகங்களை தாண்டி வேறு எங்கேயும் போகாது. இதை விடுத்து, மலையாளம் தமிழில் இருந்து தான் வந்தது என்று மேடைகளில் சொல்வதால் கிடைக்கும் பயன் தமிழ் - மலையாளிகள் வெறுப்பு மட்டுமே. தமிழ் மூவாயிரம் வருடங்களாக அப்படியே இருக்கின்றது (எழுத்துரு மாறியிருக்கின்றது போல.......), ஆனால் மலையாளம் 800 வருடங்களாக மட்டுமே இங்கிருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் எங்களால் வெளியிட முடியும் என்றால், மேடைகளில் இப்படியான பேச்சுக்களை பேசும் தேவையே இல்லை. பல வருடங்களின் முன் தமிழ்மொழி ஒரு ஆபிரிக்க மொழியிலிருந்து தான் வந்தது என்ற ஒரு கட்டுரையை வாசித்திருக்கின்றேன். ஆபிரிக்காவிலிருந்து ஒருவர் எழுதியிருந்தார். அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதப்பட்டிருந்தது. சிரித்து விட்டு அதை விட்டுவிட்டேன். இதையே பல ஆபிரிக்கர்களும் மீண்டும் மீண்டும் வந்து சொன்னால், சிரிப்பு வருவதற்கு பதிலாக எரிச்சல் வர ஆரம்பித்து, இறுதியில் வெறுப்பு தான் வரும். கிட்டத்தட்ட இதுவே தான் தென்னிந்தியாவில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி பற்றி வேறு எந்த மொழிகளைப் பேசும் மக்களுடன் எந்த வித ஒப்பீடும் செய்யாமலேயே பேசலாம்.
  6. என்ன அதிசயம், முதல் இருவரும், மும்பை வெல்லும் என்று கணித்துள்ளனர்.
  7. நாளை வெள்ளி (30 மே) இரண்டாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 75) வெள்ளி 30 மே 2:00 pm GMT முலான்பூர் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI ஐந்து பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் எனக் கணிக்கவில்லை. போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய போட்டியில் ஐவருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைதானா???
  8. வேடனை விடுதலை செய்யுங்கள் * "நான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையன் அல்ல நீ தம்புரானுமல்ல. ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!" வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை. வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன. அந்தப் பாடல்கள்தான் இன்று எல்லோர் மூளையையும் இதயத்தையும் ஊடுருவுகிறது. அவனது பாடல்கள் வியாபகமானவை. பலஸ்தீனம் குறித்து, மியன்மார் குறித்து, சிரிய அகதிச் சிறுவன் கடற்கரையில் இறந்து கிடந்தது குறித்து, அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் நிறவெறிப் பொலிசால் கொல்லப்பட்டது குறித்து, நிறவாதம் குறித்து, கறுப்புநிறம் சார்ந்த ஒதுக்கல் குறித்து, அடிமைத்தனம் குறித்து, போலி தேசியவாதம் குறித்து, வர்க்க வேறுபாடு குறித்து, பயங்கரவாதம் குறித்து எல்லாம் பேசுகிறான். அவன் தனது வலியின் மேல் நின்று இந்த ஒடுக்கப்படும் மக்களின் வலிகளை சர்வதேச மனிதனாகப் பார்க்கிறான். உணர்கிறான். பாடுகிறான். யசீர் அரபாத் முழங்கிய வாசகமான “ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் (சமாதானத்துக்கான) ஒலிவ் கிளையையும் தாங்கி நிற்கிறேன்” என்ற வாசகத்தையும் பாடுகிறான். யசீர் அரபாத் குறித்த விமர்னத்தோடு அவனது இந்த வரியை அணுகுவது அபத்தம். கலைஞன் என்ற வகையில் எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகவே அதைப் பயன்படுத்துகிறான். அதேபோலவே ஈழத்தில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, அதை எதிர்த்துநின்ற புலிகளை ஒருசில வரியில் பாடுகிறான். அவனது சர்வதேசியத்தன்மையை மறுத்து அவனை இழுத்துவந்து வீரத் தமிழன்டா. கேரளா தத்தெடுத்த யாழ்ப்பாணத் தமிழன்டா, புலிப்பால் குடித்தவன்டா, அதடா.. இதடா.. என்றெல்லாம் குறுக்குகிற முட்டாள்தனத்தை (ஈழ, புகலிட, தமிழக) தமிழர்கள் கைவிட வேண்டும். கேணைத்தனமான குறுந் தமிழ்த் தேசிய அரசியல் வியாதியிலிருந்து தொடங்கும் இந்த கூக்குரலுக்கு உரியவர்கள் சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வேடனுக்கு கிட்ட நெருங்கி வர பொருத்தமற்றவர்கள். ஓர் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட துயர வரலாறும் வலியும் கொண்ட ஈழத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலகின் தெருக்களில் -ஒருமுறையல்ல பலமுறை- பலஸ்தீன இனவழிப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவது அபூர்வம். நானும் சூரிச் ஆர்ப்பாட்டங்களில் ஒவ்வொரு முறையும் தேடிப் பார்ப்பதுண்டு. ஊஹம்!. இதுதான் நம்மட தமிழ்த் தேசிய முகம்; இனவழிப்புக்கு எதிரான குரலின் முகம். இன்னொரு வகையில் சொன்னால் இதுதான் சர்வதேசியவாதியாக உணர்வது குறித்த கரிசனையின் அளவு. இதுக்கை போய் வேடனின் சர்வதேசக் குரலை புரிய எவ்வாறு முடியும். அவனை வீரத் தமிழனாக புனையும் முனைப்பு இந்த புரியாமையின்பாற் பட்டதுதான். மியன்மார் குறித்த வேடனின் பாடல் வரியில் பாய்ந்து தொங்கி, “நீங்கள் புத்த மதத்தை பேணி வாழ்ந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்க வேண்டி வந்திருக்காது” என தேசியத் தலைவர் சொன்னதாகவும், அதை வேடனின் வரிகள் பிரதிபலிக்கிறதாகவும் வேடனோடு முடிச்சுப் போட்டு கதைக்கிற அளவுக்கு சிலர் போயிருக்கிறார்கள். வேடனது சாதியம் குறித்த குரல்களால் வெகுண்டெழுந்த சங்கிகளின் நோக்கத்துக்கு இதே முடிச்சு நல்ல வசதியாகப் போக வாய்ப்பிருக்கிறது. அவனது குரலை ஒடுக்க சங்கிகள் கங்கணம் கட்டுகிறார்கள். வேடனுக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். அதிகார வர்க்கங்களுக்கு விளிம்புநிலை மக்களின் தலைநிமிர்த்திய குரல்கள் எப்போதும் அச்சமூட்டுபவை. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அதுசார்ந்த நெருக்கடிகள் அவனுக்கு அருகிலேயே உள்ளன. இதுக்கை போய் ஈழ சென்றிமென்ற் பேசுபவர்கள் புகுந்துபோய் விளையாட என்ன இருக்கிறது. கேரளாவின் கேசரி இதழின் ஆசிரியர் என்.ஆர்.மது வேடனின் சர்வதேசக் குரலை மடைமாற்றி அந்த சர்வதேசியத்தன்மைக்கு பின்னாலுள்ள சக்திகள் ஜிகாதிகள் என கண்டுபிடித்துச் சொல்கிறார். உடலின் கறுப்புநிறத்தை வைத்தும் தன்னை ஒதுக்கியதற்கு எதிர்வினையாற்றுகிற அவன் தனது மேலங்கியின்றி மேடையில் நிமிர்ந்து நிற்பதை காபரே நடனம் என மது பரிகசிக்கிறார். இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா ரீச்சர் "றப் இசையைப் பாட வேடன் யார்" என -றப் இசையின் வரலாறு தெரியாமல்- லூசுத்தனமாக கேட்கிறார். உங்கள் பாரம்பரிய கலைகளை விட்டுவிட்டு என்ன றப் பாடவேண்டியிருக்கிறது என்கிறார். 2001 இல் வெளித்தெரியாதிருந்த வேடனின் “குரலற்றவர்களின் குரல்” (Voice of Voiceless) என்ற யூரியூப் பாடலில் வந்த வரியில் ஓரிடத்தில் “கபட தேசியவாதிகள்” என வருகிறது. அந்தச் சொற்களை முன்வைத்து, நான்கு வருட தூக்கம் கலைந்தெழுந்து இப்போ வந்து பொங்குகின்றனர் பாஜக வினர். பாலக்காடு பாஜக கவுன்சிலர் மினிமோல் வேடன் மோடியை போலி தேசியவாதி என பாடுகிறார் எனவும் இலங்கைவழி வந்த வேடனை என்.ஐ.ஏ இன்னும் ஏன் விட்டுவைத்திருக்கிறது என மத்திய அரசைக் கேட்கிறார். அந்த கபட தேசியவாதி என்பது நரேந்திர மோடியை பழித்த சொற்கள் என கண்டுபிடித்து வேடன் தேசத்துரோகி என்ற றேஞ்ச்சுக்கு போய் கேரள தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துகின்றனர். சரி அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. உலகின் மிகப் பெரும் சனநாயக நாடு என பெயரெடுத்திருக்கும் இந்தியாவில் மோடியை விமர்சிக்க ஒரு இந்தியக் குடிமகனுக்குக்கூட உரிமை இல்லையா என்ன. கேரள அரசு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் வேடன் பக்கம் நிற்கிறது. அது ஒரு பெரிய ஆறுதல். அதற்கான கட்சி அரசியல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம் என்றபோதும் அது வேடனுக்கான பாதுகாப்பு உணர்வு தரும் ஒன்றுதான். அத்தோடு மம்முட்டி, பிர்திவிராஜ் போன்ற பிரபலமான நடிகர்கள் வேடனுடன் நிற்கிறார்கள். “ஆயிரம் ஆண்டுகளாக நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டோம். இப்போ வேடன் பேசட்டும். அதைக் கொஞ்சம் கேளுங்கள்” என சங்கிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மம்முட்டி. பிருதிவிராஜ் “வேடனின் குரல் அடிமைப்பட்டவர்களின் குரல். குரலற்றவர்களின் குரல்” என்றார். ஆனால் தமிழக நடிகர்களோ இசையமைப்பாளர்களோ (பிரகாஸ்ராஜ் தவிர) கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். திரையில் உசுப்பேத்துவது, தேர்தல் மேடையில் முழங்குவது என ஓடித்திரியும் நடிகர்களின் முகமூடிகளை வேடனின் யதார்த்தமான நேர்மையான குரல் அச்சுறுத்துகிறதோ தெரியவில்லை. தாமே தமது சினிமா களத்தின் ஆளுகைக்குள் இசையை வைத்திருக்கும் இவர்களுக்கு அதுக்கு வெளியில் வேடனின் சுயாதீனக் கலை புயலாக எழுவது சவாலாக இருக்கிறதோ என்னவோ. ஒருவேளை வேடனையும் இந்த சினிமாவுக்குள் இழுத்து வீழ்த்தி பத்தோடு பதினொன்றாக ஆக்கிவிட திட்டம் போடுகிறார்களோ தெரியவில்லை. நடக்கலாம். அது வேடனின் கையில் உள்ளது. இப்படியாக வருகின்ற தடைகள், கள்ளமௌனம், உரிமை பாராட்டுதல், முடிச்சுப் போடுதல் எல்லாம் ஒன்றை புரியவைக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் குரலை அங்கீகரிக்காத தன்மைதான் அது. அரசியல் களத்தில் மட்டுமல்ல கலைமேட்டிமையின் அல்லது கலையதிகாரத்தின் களத்திலும் அது நிகழத்தான் செய்யும். எல்லாவற்றையும் மேவி வருகின்ற விடாப்பிடியாக மக்கள் நலனை முன்னிறுத்தி எளிய மனிதர்களுக்காக ஒலிக்கிற இசை வடிவங்களை காலம் நீண்டும் மக்கள் கொண்டாடவே செய்வர். அதற்கு உதாரணமாக, எல்லா எதிர்ப்புகளையும் சந்தித்து அவற்றை உறுதியாக தாண்டி தன்னை நிலைநிறுத்திய றேகே இசைப் பாடகன் பொப் மார்லி நினைவில் வருகிறான். வேடனுக்கு அந்த துணிச்சல் வாய்க்குமா?. எதிர்காலம்தான் இதற்கான பதிலைத் தரும். இப்போதைக்கு “எல்லா குறுக்கல் வாதங்களிலிருந்தும் வேடனை விடுதலை செய்யுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது. All reactions: Thank you:Ravindran Pa https://www.facebook.com/share/p/1GdxBpxTjy/
  9. திமுக மகனுக்கு எம்பி சீட் கொடுத்து வென்றும் விட்டார். கட்சியில் பழைய பெரும்புள்ளிகள் எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள், அல்லது போய்விட்டார்கள். இருக்கும் ஒரே ஆள் மல்லை சத்யா - அவருடன் துரை பகிரங்கமாக மோதி வைகோ இருவரையும் சமாதானம் செய்தார். 82 வயதாகிறது - பழைய கம்பீரம் அடியோடு போய்விட்டது. அடிக்கடி கோபம் வருகிறது. வார்த்தை தவறுகிறது. ஓய்வு கட்டாயம். வைகோவுக்கு பின் கட்சியை துரை மீண்டும் திமுகவில் சேர்க்கலாம். லெட்டர்பாட் செலவாவது மிஞ்சும். இப்போதே செய்யாலம் - ஆனால் வைகோ பிரிந்த நேரம் உயிர்நீர்த்தோர் நினைவு அதை தடுக்கும். வைகோ இறந்தபின் அப்படி ஒரு நெருடலும் இராது. திமுக திட்டமிட்டு காயடித்த ஒரு அருமையான ஆளுமை வைகோ. அவரின் அரசியல் தகிடுதத்தங்களும் வீழ்ச்சிக்கு துணை போயின. அரசியலில் தரவுகளை விரல் நுனியில் வைத்து கொண்டு, அரங்கத்தை கட்டிபோடும் பேச்சாற்றல் கொண்டிருப்பது மட்டும் தலைவனாக வெல்ல போதுமானதாக இராது, துண்டு சீட்டை வைத்து பேசும் ஆட்களிடம் கூட தோற்று போக வேண்டி வரும் என்பதன் வாழும் உதாரணம் வைகோ. அமெரிக்காவில் அல் கோரை the President we never had என்பார்கள். அதேபோல் தமிழ் நாட்டில் வைகோ the CM they never had. ஈழத்தமிழரின் நன்றி வைகோவுக்கு எப்போதும் உண்டு.
  10. முத்துக்கு முத்தாக ....... ! 😍
  11. ராஜ்ய சபாவுல எங்களுக்கு தெரியாத இந்தி மொழியிலையா பேசறீங்க இருங்கடா என்ன பேசினாலும் புரியாத மாதிரி ஒரு ஆளை அனுப்புறோம் பாருங்க...!!!
  12. இந்தத் திரிப்பக்கம் எட்டியும் பார்க்காமல் இருக்க வைத்துவிட்டது! நானும் மடைத்தனமாக CSK ஐ play-off க்கு வரும் என்று கணித்திருந்தேன்😩
  13. கடற்புலி லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி https://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTM0MjA= லெப்.கேணல் செல்வி கணபதிப்பிள்ளை கலாதேவி நெடுந்தீவு, யாழ்ப்பாணம் https://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTkzNjY=
  14. அந்த வட்டங்களை இனியும் காவிக்கொண்டு திரியக்கூடாது. அப்படியான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். Michael Jackson நிற வெறிக்காக போராடி வெற்றி பெற்றவர் என்பதை மறக்க கூடாது.
  15. வேடன் மலையாளத்தில் ஏற்கனவே பிரபல்யம். 4 கிராம் கஞ்சா தான் இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. தேடி பார்த்ததில் ஏற்கனவே ஈழம் சம்பந்தமாகவும் சாதி அடிமை சம்பந்தமாகவும் பல பாடல்களை பாடியுள்ளார் என தெரிய வருகின்றது. யார் கம்பு சுத்தினாலும் ஈழத்தமிழர்களுக்கு விடிவு வரணும்.
  16. லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..
  17. மும்பை வெல்லவேணும் என்பவர்கள் கையொத்துங்கோ பாப்பம்🤪
  18. நிச்சயமாக. இலங்கையில் ஒருவர் திடிரெனெ பிரபலாமாகி - இந்தியாவில் அவருக்கு பல வாய்புகள் மேடைகள் எல்லாம் கொடுக்பப்பட்டன. திடிரென நரி ஏன் அம்மணமாக ஓடுகிறது என கிண்டினால்…. அவர் உமாகரன இராசையாவின் தம்பியாம். அண்ணம் கவிதை சொல்கிறேன் என வந்து, பின் காவி உடை போட்டு தான் நாக்பூர் எனபதை வெளிகாட்டினார். தம்பி இசையோடு வருகிறார் என நினைத்து கொண்டேன். ஆகவே இவர்கள் யார் எனபதை கொஞ்சம் ஆழமாக பார்கவும் வேண்டும்.
  19. அங்கு கர்நாடகாவில் எதிரும் புதிருமாக இருக்கும் சித்தராமையாவிலிருந்து எடியூரப்பா வரை கமலின் கருத்தை மறுத்துவிட்டார்கள். கமலுக்கு வரலாறே தெரியாது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கந்தரோடையில் அன்றே விகாரைகள் இருந்தன, ஆகவே அன்றே முழு இலங்கையுமே ஒரு பௌத்த தேசமே என்றால், நாங்கள் ஏற்றுக்கொள்வோமா, இல்லைத் தானே. ஒரு தரப்பினர் உண்மை, மறுக்க முடியாத வரலாறு என்று ஒன்றை வாதாடுவதும், இன்னொரு பக்கம் அதே விடயத்தை அது அப்படியில்லை என்று வாதாடுவதும் ஒன்றும் புதிது அல்லவே. மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன கமலே, 'நான் சொல்வது எனக்கு சரி. நீங்கள் சொல்வது உங்களுக்கு சரி...........' என்று தானே சொல்லியிருக்கின்றார். நான் சொல்வது எனக்கு சரி என்பதன் பொருள் இது அவருடைய தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே என்ற பொருளில் தானே வருகின்றது. தொடர்ந்து பேசிய கமல் இந்த மொழி ஆராய்ச்சியை பேசுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும், அவர் உட்பட, தகுதிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கின்றார். மன்னிப்பு என்ற வார்த்தை இல்லாத ஒரு மன்னிப்பை கேட்டிருக்கின்றார் கமல். 'அன்பு.............' என்று வேறு ஒரு அர்த்தமும் சொல்லியிருக்கின்றார். சிவராஜண்ணா மீதான அன்பை வெளிப்படுத்துவதன் கமலின் நோக்கம் என்றால், அப்படித்தான் கமல் இப்போது சொல்லுகின்றார், தமிழும் கன்னடமும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருக்கலாம். தான் சிவராஜண்ணாவிற்கு ஒரு சித்தப்பா போல என்றவர், இரு மொழிகளையும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். வரலாறு எது, உண்மை எது, இட்டுக்கட்டிய கதைகள் எவை என்பன ஒரு புறம் இருக்கட்டும். இப்படியான பேச்சுகளால் இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் எந்த நல்லவையும் நடக்கப் போவதில்லை. மாறாக பிரிவும் வெறுப்புமே தூண்டி விடப்படுகின்றது. தமிழ்த்தேசியம் என்று தீவிரமாக நிற்கும் போது, நாங்களே திராவிடம் என்ற பகுப்பை ஆங்கிலேயர்களின் அறிமுகம் என்று சொல்லி ஒதுக்குகின்றோம், திராவிடத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். திராவிடம் இல்லாமல் தமிழ் எப்படி மூலமொழியாகி இருக்கும் என்று நாங்களே சிந்திப்பதில்லை. ஆகவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரள மக்கள் இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது. அரசியல் நலன்கள் நோக்கி சிலர் நிராகரிக்கின்றார்கள். சுயமரியாதை வேண்டி சிலர் நிராகரிக்கின்றார்ர்கள். இந்த மொழிகள் ஒரே குடும்பம் என்று சொன்னால் எவரும் நிராகரித்து எதிர்க்கப் போவதில்லை.
  20. இது இப்ப ஒரு மேட்டிமைத்தனம் ஆகிவிட்டது இல்லையா. என்னமோ போங்க. கேட்டுக் கேட்டு சலிப்பா இருக்கு.
  21. மேட்ச் பிக்சிங் மாதிரித்தான் தெரியுது! இல்லாவிட்டால் இன்னும் ஆறு ஓவர் இருக்கும்போது இப்படியா அடித்து அவுட் ஆவார்கள்! அப்படி அவுட் ஆகி இருந்தாலும் பரவாயில்லை! எனக்காவது புள்ளிகள் கிடைத்திருக்கும்!😜
  22. நீங்கள் சொல்லியிருப்பவை சரியானவையே. லோக்சபா தேர்தல்களில் சில காரணங்களால் போட்டியிட முடியாமல் போன அல்லது தோல்வியடைந்த சிலர் ராஜ்யசபா சென்று அங்கிருந்து முக்கிய பங்களிப்பு வழங்கியிருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தேர்ந்த, முழுநேர அரசியல்வாதிகளாகவும் இருப்பார்கள். நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போட்டியிட தயங்கி பின்வாங்குவதும் இப்படியான ஒரு வழியும் இருப்பதாலேயே.
  23. ’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’ உள்ளூராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும், வாய் மூலமான மாத்திரம் இல்லாது எழுத்து மூலமான பேச்சாகவும் அமைய வேண்டும் என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/எம்-ஏ-சுமந்திரன்-கஜேந்திரகுமார்-நாளை-பேச்சு/175-358211
  24. அண்ணாவின் மிக சிறப்பான மாநில சுயாட்சி தத்துவம் பற்றிய ஆங்கில பேச்சுகள் ராஜ்ய சபா எம்பியாக இருக்கும் போதே நிகழ்தப்பட்டன. ப. சி, மற்றும் முரசொலி மாறன் போன்றோரும் ராஜ்யசாபா எம்பிகளாக இருந்துகொண்டேன் அரசியலில் முக்கிய வகிபாகத்தை வகித்தனர். அன்புமணி ஒன்றிய சுகாதாரதுறை அமைசாராக பல எதிர்புகளை தாண்டி சீர்திருத்தங்களை அமல் செய்தபோதும் ராஜசபா எம்பிதான் என நினைக்கிறேன். ஆனால் அநேகர் இதை ஒரு கவுரவபதவிபோலவே நடத்துகிறனர்.
  25. பிகு மனவருத்தம் ஆனால் இதை பெருசுபடுத்தபோவதில்லை என வைகோ கூறியுள்ளாராம்.
  26. வணக்கம் வாத்தியார் . ........... ! ஆண் : காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது ஆண் : அட தட்டுனா விட்டத்த கொட்டினா நோட்டத்தான் ஆனந்தம் காவேரி தான் அட சுக்ரன் உச்சத்தில் லக் தான் மச்சத்தில் வந்தது கை காசு தான் ஆண் : என்றும் மன்னர் தான் எங்கும் வின்னர் தான் ஹோய் யா ஆண் : அண்ணாச்சி ஆனந்தம் ஆயாச்சே ஹே ஹேய் ஆரம்பம் பம் பம் பம் …. ஆண் : அக்கம்பா ஹா ஹா போடே போடே ஆண் : யூ மேன் ஒத்தே சாணி மேல கால் வச்சா டிர்டி ஆகும் ஷூ ஒத்தே ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து ஆண் : தேடி பாக்குறேன் காந்திய தான் காணும் ஆண் : …………………….. ஆண் : தேடி பாக்குறேன் காந்திய தான் காணும் தேசத்துல நாளும் சாந்திய தான் காணும் ஆண் : ரூபா நோட்ல வாழுறாரு காந்தி வாய் நிறைய ஜோரா புன்னகைய ஏந்தி ஆண் : காச பாத்தா காந்தி தாத்தா போலே நாம் சிரிப்போம் ஆண் : வந்தாச்சே கை காசு ஹேய் ஹேய் ஹேய் பத்தாது ஆண் : அமுக்கி போடு சூட்கேஸு ஆண் : தட்டினா என்ன முடிஞ்சு போச்சா ஆண் : ராமலிங்கம் ஏய் சுந்தரலிங்கம் ஏய் ராமலிங்கம் கைல காசே சுந்தரலிங்கம் வாய்ல தோசை ராமலிங்கம் சுந்தரலிங்கம் அவுத்து உடே ஆண் : ஆஹா வீணை என்ன போடு போடுது பார் என்னது வீணையா ஐ நோ மேன் நம்ம மண்டலின் ஸ்ரீனிவாசன் வாசிப்பாரே அட அதான் ஹிந்தில சித்தரு செம ராகம் பா ஆண் : நானும் நீயும் தான் ஆடுகிற போது அசந்து நிக்கும் ஊரு பிகில் அடிக்கும் பாரு டாப் டக்கர் ஜோடியின்னு பேசும் ஆக மொத்தம் தேசம் வாழ்த்துகள வீசும் ஆண் : ராமலிங்கம் சுந்தரலிங்கம் ரெண்டும் ஆண் சிங்கம் ஆண் : எந்நாளும் ஆ ஊரெங்கும் நம்மோட உட்டாலகடி ராஜாங்கம் ........ ! --- காசு மேல காசு வந்து ---
  27. இந்த முறைப் போட்டியில் மடையர்களே அதிகம். ஆனபடியால் பரவாயில்லை.
  28. அதன் அதுதான் இறுதி வெற்றியாளர் என்றும் கணித்திருந்தேன்.சென்னைப் பாசம் காரணமாக.ஆனால் சென்னை அண் என்னை வைச்சு செய்து விட்டது.
  29. அண்ணை, கஞ்சா வழக்கு, புலிப்பல் வழக்கு போட்டாயிற்று. இனி தேசிய புலனாய்வு முகமை வழக்கு(NIA) போடலாம்!
  30. இங்கு பலரது நோக்கம் புலிகளின் தியங்களை அர்பணிப்புக்களை மறைத்து நடந்து முடிந்த சில தற்செயல்களையும் சில தன்னிச்சையான முடிவுகளையும் வைத்து அவர்களை பயங்கரவாதிகளாகவே தக்க வைத்துக்கொண்டால் தாங்கள் மகாத்மாக்கள் மக்களுக்கா வெட்டி புடுங்கியவர்கள் என்ற எண்ணத்தில் மிதப்பதுதான். புலிகள் முள்ளிவாய்களில் இருந்த அத்தனை மக்களையும் கொன்றிருந்தால்கூட .... எதிர்கால தற்கால நல்லிணக்கங்களுக்கும் ஒற்றுமைக்கும் என்ன வில்லங்கங்கம் இருக்கப்போகிறது? இல்லாத புலிகளின் ஆதிக்கம் இப்போ எந்த வகையில் இப்போதைய அரசியல் முடிவுகளை தடுத்து நிறுத்த போகிறது? இருவராலும் பாதிக்கப்பட்ட்து தமிழ் மக்கள்தானே ? எங்களை நாங்களே சுட்ட்து தப்புதான் அது மாபெரும் குற்றம் என்று சிங்களவர்களுக்கு சென்று சொலவதில் ........ அதில் சிங்கள தரப்பிற்கு என்ன வில்லங்கம் / வியாக்கினம் இருக்கிறது? ஐநா சபை யாப்பிற்கு எதிரான முழுதான இனவழிப்பை ௩௦ வருடமாக செய்தவர்கள் சிங்களவர்களும் அவர்கள் அரசுகளும் இராணுவமும். அதுக்கு இணையாக எங்கள் காணி சண்டை வேலி சண்டையையும் ஆக்கினால்தான் ........ சிங்களவர்கள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தருவார்கள் என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதுக்கு என்ன பெயர் என்று எனக்கு தெரியவில்லை
  31. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்கும், கேட்கலாம். அறியாமை அல்லது ஆணவம் தான் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. வழமை போலவே இரண்டு வரிகளை அறிவுஜீவித்தனமாக சொல்லி விட்டு, மூன்றாவது வரியிலிருந்து பொருள் இல்லாமல் கதைக்க ஆரம்பிப்பது கமலுக்கு ஒரு பழக்கம் ஆகிவிட்டது. 'எனக்கு நான் சொல்வது சரி. உங்களுக்கு நீங்கள் சொல்வது சரி. வேறொருவருக்கு இரண்டுமே சரி. இன்னொருவருக்கு இரண்டுமே பிழை............................'. இது என்ன பேச்சு................🫣. பொதுவெளியில் பொறுப்புடன் கருத்துகளை சொல்லும் கடமையும், பொறுப்பும் புகழுடன் சேர்ந்து வருவது. சொந்த வீட்டினுள் ஒரு அறைக்குள் இருந்து எதையாவது சொல்லிக் கொள்ளலாம். மேடையில் ஏறினால் விவேகத்துடன் சமயோசிதமும் தேவை. தமிழர்கள் தவிர்ந்த எந்த தென்நாட்டவர்கள் தமிழ் மொழியை திராவிடத்தின் முதல் மொழி என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றார்கள்................. எவருமேயில்லை. நாங்கள் தான் திராவிடம் என்றும், எங்களின் மொழிக் குடும்பமே சமஸ்கிருதத்திலிருந்து வேறானது என்றும் சொல்லுகின்றோம். மற்றைய தென்நாட்டவர்கள் எப்படி ஆரம்பித்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்று சமஸ்கிருதத்தை தங்கள் மொழிகளில் மிக அதிகமாகவே கலந்துவிட்டார்கள். மலையாள மக்களே தாங்கள் சமஸ்கிருத வழியில் வந்தவர்கள் என்று தான் சொல்லுகின்றார்கள். இப்படி தமிழில் இருந்து தான் உங்களின் மொழிகள் வந்தன என்று மற்றவர்களுக்கு சொல்வது புதிதாக எதையும் நிரூபிக்கப் போவதில்லை. ஏற்கனவே மொழிவாரியான இனங்களுக்கிடையே இருக்கும் பிரிவினையை இது இன்னும் கூட்டும். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா என்று எந்த மாநிலமும் இந்தக் கோட்பாட்டை என்றும் ஏற்பதில்லை. இவ்வகையான பேச்சுகள் அவர்களைத் தூண்டுகின்றன. சாதாரணமாக ஒரு வேலைத்தளத்தில் இப்படியான பேச்சுகள் வந்தாலே அங்கே பிரிவு ஆரம்பித்துவிடுகின்றது. கமல் தமிழின் தொன்மையை ஆதாரத்துடன் நிலைநாட்ட விரும்பினால், கீழடி அறிக்கையை மத்திய அரசு ஏன் மாற்றச் சொன்னது என்று டெல்லியில் போய் போராடவேண்டும். இப்பொழுது ரஜனியிடம் இதைப் பற்றிக் கேட்கப் போகின்றார்கள். அவர் அம்பானி வீட்டுக்கு போய் வந்து விட்டே கைலாசம், வைகுண்டம் என்றவர். தமிழ் கைலாசம், கன்னடம் வைகுண்டம் என்று அவர் அவருடைய விளக்கத்தை இனிச் சொல்லுவார். 'கமல் சார் எவ்வளவு பெரிய அறிவாளி.................... நான் என்னத்தை சொல்லுறது................' என்று நழுவுவதற்கும் சாத்தியம் அதிகம்.
  32. கரும்புலி மேஜர் அரசப்பன் மயில்வாகனம் அருட்செல்வன் சந்திவெளி, மட்டக்களப்பு அரசப்பன் மயில்வாகனம் அருட்செல்வ...கரும்புலிகள் மேஜர் அரசப்பன் மயில்வாகனம் அருட்செல்வன் சந்...மட்டக்களப்பு நகரில் வைத்து தேசத்துரோகி ராசீக் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு
  33. Vedan | Subair | அநீதிகளை எதிர்த்து பாடும் வேடம்!
  34. இந்த செய்தியில் இந்த " மனிதாபிமான உணவு வினியோகம்" 😎 என்பதன் பின்னணியைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. காலாகாலமாக, காசாவிற்கு உணவு வினியோகம் செய்வது ஐ.நாவின் தொண்டு அமைப்புகள் தான். இஸ்ரேல், காசாவின் மீதான தாக்குதலை ஆரம்பித்த பின்னர், இந்த உணவு வினியோகத்தை மிகவும் குறைத்து விட்டது (ஒரு நாளைக்கு 500 லொறிகள் என்பதில் இருந்து 5 லொறிகள் என்ற நிலை தற்போது). உணவை ஆயுதமாகப் பிரயோகிக்கும் இந்த மிருகத் தனத்திற்கு பைடன் ஆட்சியில் ஆதரவு இருக்கவில்லை. எனவே, கொஞ்சமாவது லொறிகளின் எண்ணிக்கையை உயர்வாக வைத்திருந்தார்கள். இப்போது ட்ரம்ப் ஆட்சி வந்தவுடன், புதிதாக மீண்டும் தாக்குதலையும், உணவுத் தடுப்பையும் அமல் படுத்தி விட்டார்கள். இந்தப் பட்டினிப் பின்னணியில், பணம் பார்க்கும் ஆசையில் அலையும் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்களும் (security contractors), சில உணவு முகவர்களும் ட்ரம்பை அணுகியிருப்பார்கள் என ஊகிக்கிறேன். அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான் அமெரிக்க ஒப்பந்தக் காரர்களால், இஸ்ரேல் படையின் பாதுகாப்புடன் உணவை வினியோகிக்கும் GHF என்ற அமைப்பு. பெயரில் "மனிதாபிமானம்" இருந்தாலும், இது ஈராக்கிலும், ஆப்கானிலும் செய்தது போல, அமெரிக்க ஒப்பந்தக் காரர்களுக்கு வருமானம் தேடும், காசா மக்களை மந்தைகள் போல அலைய விடும் ஒரு திட்டம் என்பது பலருக்கும் தெரியும். எனவே, ஐ.நா அமைப்புகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்து விட்டன. "செய்து காட்டுகிறோம் பார்" என்று நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் நாளே இப்படியாக ஆகி விட்டது. என்றாலும் மீண்டும் மீண்டும் இப்படி செய்வார்கள், காசா மக்கள் அள்ளுப் படுவர், இஸ்ரேல் படைகள் சுடும். இறுதியில் "காசா மக்களின் பட்டினிக்கு அவர்கள் இப்படி நடந்து கொள்வது தான் காரணம்" என்று பிரச்சார வீடியோக்களை வெளியிட்டு விட்டு, கடையை மூடி விட்டுப் போவார்கள்! இந்த GHF பற்றிய மேலதிக தகவல்கள்: https://www.bbc.com/news/articles/cev41em3r9lo
  35. நீண்ட காலத்திற்கு பின்னர் காதுக்கு இனிமையான அமைதியான பாடலை கேட்கின்றேன்.😍 https://youtu.be/QJ-4za89Y6k?si=J7im5V7LmBCF6pfY பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் பெண் : சிவம் கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை ஆண் : ………………………………. தீம் தோம் த தீம் தன தோம் தன தோம் பெண் குழு : தீம் தன தோம் தன தீம் தன தோம் இருவர் : தீம் தன தோம் தன தீம் தன தோம் பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் மற்றும் குழு : கண் விழித்தேன் அவன் காணவில்லை கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் : என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வழி தீரவில்லை பெண் மற்றும் குழு : கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா பெண் மற்றும் குழு : போதும் போதும் என சென்றாயா ஆண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா உறவும் நீ வேண்டியெங்கும் ஆண் : …………………………….. பெண் : ……………………………….. ஆண் : ஓ….. பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் ஆண் : மோக பனி போர்வையில் கரம் கோர்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன் பெண் : நான் காதலி காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் ஆண் மற்றும் பெண் : வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன் பெண் : காலம் யாவும் நீதானே இந்தக் காலன் வந்தால் வெல்வேனே ஆண் : மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே மண்ணில் மின்னல் வீழாதே பெண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ சொல் சொல் சொல் சொல் சொல் சொல் பெண் : காதில் விழும் வரும் வரை காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ…. பெண் : இன்னும் ஒரு முறை எந்தன் கதை சொல்லவா பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் பெண் : சிவம் கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை
  36. கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் கனகசபை அருள் முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு சுதாகரன் கனகசபை அருள் முறக்கொட்...கடற்கரும்புலிகள் கப்டன் சுதாகரன் கனகசபை அருள் முறக்கொட்ட...முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு சித்தா பாலசிங்கம் சிற்றூபன் சுழ...கடற்கரும்புலிகள் கப்டன் சித்தா பாலசிங்கம் சிற்றூபன் சுழி...முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு
  37. குழுநிலைப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @நந்தன் க்கு வாழ்துக்கள்
  38. ஒன்றுஅனுரா இனவாதிகளுக்கு பணிந்து போக வேண்டும், அப்படியானால் நாட்டில் சமாதானத்தை, நல்லிணக்கத்தை அவரால் கட்டியெழுப்ப முடியாது. கட்டியெழுப்ப வேண்டுமாயின் இந்த அச்சுறுத்தலுக்கு பணியாது, உண்மையில் இவர்கள் செய்த வேலைக்கு, இவர்களை சிப்பாய் என்று அழைத்ததே மேல், போரில் என்ன நடந்தது என நடந்தவற்றை காட்டுகிறேன் பார்க்க தயாரா என கொக்கரிப்பவர்களிடம் கேட்க வேண்டும். அப்படி போரில் நடந்த அக்கிரமங்களை நீங்கள் பார்க்கதயாரென்றால் இவர்கள் போர்க்குற்ற வாளிகள் ஆவர், பிரச்சனையில்லையா என கேள்வி கேட்க வேண்டும். ஆனால் அனுரா அதை செய்யமாட்டார், அதை செய்யவில்லையென்றால்; இந்த பிரச்சனை தொடர்கதைதான். ஆனாலும் சர்வதேசம் ஒருநாள் இவற்றை வெளியிடத்தான் போகிறது. இலங்கையில் இனவழிப்பு நடைபெறவில்லை என்பவர்கள். அப்போ என்ன சொல்லப்போகிறார்கள்? இனவழிப்பு நடைபெறவில்லையென்றால் ஏன் சணல் நான்கை பார்ப்பதற்கு இலங்கையில் தடை செய்துள்ளார்கள்? உங்கள் வீரர்களின் வீரத்தை, தியாகத்தை பார்க்க அவ்வளவு வெறுப்பு உங்களுக்கே. ஆனால் வெற்றி விழா, கோசம். அவர்கள் ஒன்றும் சும்மா போரிடவில்லை. இருக்கும்போது சம்பளம், இறந்தபின் குடும்பத்தினருக்கு சம்பளம். அதுவும் ஏம்மாற்றப்பட்டே போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
  39. செய்தியைக் கவனியுங்கள், திருமணத்தின் பின்னர்தான் மக்ரோன் ஏற்றம் கண்டுள்ளார். ஜனாதிபதி ஆகியுள்ளார். உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையானால் யோசித்து முடிவு எடுங்கள் 🤣
  40. இலங்கையில் தமிழர் பற்றிய பிராமிக் கல்வெட்டுக்கள் – ஓர் அறிமுகம் September 28, 2022 | Ezhuna இலங்கைத் தமிழர்களுக்கு 2500 ஆண்டுகளுக்குக் குறையாத வரலாறு மற்றும் வழிபாட்டு பாரம்பரியம் உள்ளது. பண்டைய இலங்கைத் தமிழர் பற்றி இதுவரை பலரும் அறிந்திராத, இதுவரை வெளிச்சத்துக்கு வராத, அரிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இலங்கையில் ‘பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர்’ எனும் இவ்வாய்வு அமைகிறது. இலங்கையில் வாழ்ந்த தமிழர் பற்றிய முக்கிய சான்றாக விளங்குவது 2300 ஆண்டுகளுக்கு முன்பு கற்குகைகளில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களாகும். இவ்வாறான ஐந்து பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. அந்த கல்வெட்டுக்களில் தமிழர்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களை இக்கட்டுரைத்தொடர் வெளிப்படுத்துகின்றது. அத்தோடு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த ஒரு வேலைத் திட்டத்தில், இலங்கையில் காணப்படும், 1500 பிராமிக் கல்வெட்டுகளை மீள்வாசிப்பு செய்ததன் பயனாக வெளிக்கொணரப்பட்ட பல்வேறு அம்சங்களை ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்துவதாகவும் இத்தொடர் அமைகிறது. இவ் ஆய்வில் தமிழர் பற்றி கூறும் மேலும் பல பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 600 சிங்களக் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து அவற்றிலும் தமிழர் பற்றிக் கூறப்பட்டுள்ள பல விபரங்கள் பற்றியும் இத்தொடர் கட்டுரை கூறுகிறது. இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழும் தமிழரும் இலங்கையில் கல்மேல் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் முதலாவதாக எழுதப்பட்டவை பிராமிக் கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரை பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் முற்காலப் பிராமி, பிற்கால பிராமி என இரு வகையாக பிரித்துள்ளனர். இலங்கை முழுவதிலும் சுமார் 2500 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கல்வெட்டுக்கள் தெற்காசியாவில் இலங்கையைத் தவிர வேறெந்த பிரதேசங்களிலும் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இங்குள்ள இயற்கையான கற்குகைகளிலும், கற்பாறைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1500 கல்வெட்டுக்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 1000 கல்வெட்டுக்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இவற்றில் தமிழர் மற்றும் இந்து சமயம் தொடர்பான கல்வெட்டுகள் பல உள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 1500 கல்வெட்டுக்களில் தமிழர் பற்றிய 5 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மேலும் இந்து தெய்வங்கள் சம்பந்தமான 300 கல்வெட்டுக்களும் உள்ளன. இவற்றைத்தவிர முனிவர்கள் அல்லது சித்தர்களின் பெயர்கள் பொறிக் கப்பட்ட சுமார் 250 பிராமிக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. தமிழர் என்ற பெயரைத் தவிர இலங்கையில் வாழும் ஏனைய இனங் களின் பெயர் பொறிக்கப்பட்ட எந்த ஒரு பிராமிக் கல்வெட்டேனும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “தமெத” (தமிழ்) எனப் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் இலங்கையில் கிடைக்கப் பெற்ற பிராமிக் கல்வெட்டுக்களில் 5 கல்வெட்டுக்களில் “தமெத” எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் என்பதன் பிராகிருத வடிவமாகும். இவற்றில் வட மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்தில் 2 கல்வெட்டுக்களும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் 1 கல்வெட்டும், வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் 1 கல்வெட்டும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு சான்றுகள் மூலம் 2000 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கும், தமிழ் மொழி பேசப்பட்டுள்ளது என்பதற்கும் இக்கல்வெட்டுக்கள் முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. இது பற்றி இலங்கையின் மூத்த வரலாற்று பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்கள் சில முக்கிய குறிப்புக்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு. “கி. மு. மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையிலே தமிழ் ஒரு பேச்சு மொழியாக வழங்கியமைக்கு ஆதாரமாய் அமைகின்ற பிராமிச் சாசனங்கள் தமிழர் பற்றியும் தமிழர் சமுதாயப் பிரிவுகளைப் பற்றியும் குறிப் பிடுகின்றன. அவற்றிலே பல இனங்களைச் சேர்ந்த சமூகங்களின் பெயர்களும், சமுதாயப் பிரிவுகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. தமிழர், நாகர், முருண்டி, காபோஜி என்னும் இனப் பெயர்கள் அவற் றில் உண்டு. பரதர், பதர், பிராமணர் என்போர் பற்றியும் அவற்றிலே குறிப்புகள் உண்டு. இரண்டாயிரத்துக்கும் மேலான பிராமிச் சாசனங்கள் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றிலே சிங்களர் பற்றிய குறிப் பெதுவும் காணப்படவில்லை. “சிங்களர்” எனும் இனம் பிராமிச் சாசனங்கள் எழுதப்பட்ட காலத்தில் உருவாகியிருக்கவில்லை என்று கருத வேண்டியுள்ளது. சிங்க உருவம் பொறித்த மிகப் புராதனமான நாணயமும் நாகராசன் ஒருவனின் பெயரையே குறிப்பிடுகிறது.” என பேராசிரியர் எஸ். பத்மநாதன் தனது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் “வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழரின் குடியிருப்புகளும், சமுதாயமும் பிராமிச் சாசனங்களின் காலம் முதலாக உற்பத்தியானவை என்று கொள்ள முடிகிறது” எனக் கூறியுள்ளார். தமிழர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் இந்திரபாலா பின்வருமாறு கூறியுள்ளார். “இலங்கையில் வாழ்ந்த தமிழ் இனக்குழு பிராமிக் கல்வெட்டுக்களில் தமெட என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கல்வெட்டுக்கள் அநுராதபுரத்தில் மட்டுமன்றி, அப்பால் இன்று தமிழர் வாழும் இடங்களாகிய வவுனியா மாவட்டம் (பெரிய புளியங்குளம்), மட்டக்களப்பு மாவட்டம் (ஸேருவில)மற்றும் அம்பாறை மாவட்டம் (குடிவில்) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.” “இலங்கையில் தமிழ் மக்கள் பற்றிக் கிடைக்கும் மிகப்பழைய எழுத்து மூலாதாரங்கள் பொ. ஆ. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுக்களாம். எனினும் அதற்கு முன் அவர்கள் இலங்கையில் இருந்திருக்கக்கூடும் என்று கொள்ளத் தொல்லியல் சான்றுகள் உள்ளன. அத்துடன் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே, தமிழ் பேசுவோர் பரவலாகத் தமிழ் நாட்டிலும் மற்றும் அயல் இடங்களிலும் இருந்தனர் என்று கொள்ள இடமுண்டு எனக் கொண்டால் இலங்கைக்கும் அதே காலமளவில் அவர்கள் வந்திருக்கலாம் என்று கூறலாம். தமிழ் பேசுவோர் மட்டுமன்றி வேறு திராவிட மொழிகளைப் பேசுவோரும் அங்கு இருந்திருக்கலாம்”. இவ்வாறு பேராசிரியர் இந்திர பாலா தனது “இலங்கைத் தமிழர்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் சில முக்கிய விடயங்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பு பின்வருமாறு, “தென்னாசியாவில் பெளத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் அம்மத மொழியான பிராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தபோது இலங்கையில் தான் பிராகிருத மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு கூடுதலாகக் காணப்படுகிறது. இதில் அவதானிக்கக் கூடிய சிறப்பம்சம் ஆரம்பகாலக் கல்வெட்டுக்களில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராகிதம் மற்றும் தமிழ் மொழிக்குரிய பெயர்கள், சொற்கள் காலப்போக்கில் தமிழ் மயப்படுத்தப்பட்ட நிலையில் எழுதப்பட்டிருப்பதாகும்.” “இந்த மாற்றத்திற்கு இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த மக்கள் புதிதாக பெளத்த மதத்துடன் அறிமுகமான பிராகிருத மொழியை அம்மொழிக்குரிய வடபிராமி எழுத்தில் எழுதிய போதும், காலப்போக்கில் தமக்குப் பரிச்சயமான தமிழ் பிராமியிலும் பிராகிருத மொழியை எழுத முற்பட்டமை காரணம் எனலாம்”. இவ்வாறு பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றி பேராசிரியர் பரமு புஷ்பரட்னம் தனது இன்னுமோர் நூலில் கூறியுள்ள சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு: “இக்கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு அக்கால சமூகத்தின் பல தரப்பட்ட மக்கள் அளித்த நிலம், குளம், கால்வாய், குகை, கற்படுக்கை, பணம், உணவு போன்ற தானங்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றில் பலவற்றில் தானமளித்தவர் பெயரோடு அவரின் வம்சம், பட்டம், பதவி, தொழில், மதம், இனம் போன்ற தரவுகளும், அவர்கள் வாழ்ந்த இடம், ஊர், நாடு போன்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இதனால் இக்கல்வெட்டுகள் இலங்கையின் குறிப்பிட்ட காலப்பகுதிக்குரிய மொழி, எழுத்து, மதம், பண்பாடு, சமூகம், இடப்பெயர் என்பவற்றை அறிந்துக்கொள்ளவும், சமகாலப் பாளி இலக்கியங்கள் கூறும் வரலாற்றின் நம்பகத் தன்மையை மதிப்பிடவும் உதவுகின்றன.” பக்கத்தில் ஏன் கத்தரிக்கோல் வைக்கிறன் என்றால் தவறாக இருந்தால்..வெட்டி விடவும்.✂️🖐 https://www.ezhunaonline.com/brahmic-inscriptions-on-tamils-in-ceylon-an-introduction/
  41. லெப்.கேணல் சோ (சத்தியநாதன்) செல்லத்துரை புவனேந்திரன் உயிலங்குளம், மன்னார் https://veeravengaikal.com/index.php?option=com_maaveerarlist&view=maaveerarlist&layout=detail&detail=MTY5NzY=&Itemid=129
  42. நானே வருவேன் Lyrics-கண்ணதாசன் பாடியவர்:பி .சுசீலா. இசை-வேதா --- நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் இங்கும் அங்கும் யாரென்று யாரறிவார் .ஆ.ஆ..(நானே) உன் மங்கலமாலை பெண்ணாக உன் மஞ்சள் குங்கும மலராக நான் வந்தேன் உன்னிடம் உறவாட உன் மாளிகை சொல்லும் கதையாக சொந்தம் எங்கே செல்லும் அது வந்து வந்து செல்லும் அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே) மயங்கும் கண்ணைப் பாராமல் கலங்கும் நெஞ்சைக் கேளாமல் பிரிந்து செல்ல எண்ணாதே என் கண்ணீர் பேசும் மறவாதே..எ.எ... மாலை வந்த வேளை மனம் தந்த பாதை அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே) என் நெஞ்சம் என்பது நீயாக என் நினைவுகள் எல்லாம் ஒளியாக என் காதல் கோயில் சிலையாக நான் கண்டேன் உன்னை துணையாக .. கைகள் செல்லும் தூரம் உன்கண்கள் வந்து சேரும் அவன் தந்த உறவல்லவா.ஆ.ஆ.(நானே)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.