Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. maathine

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    3043
    Posts
  3. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    2134
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    16477
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/20/25 in all areas

  1. மனிதநேயம் எங்கே அதிகாரப் போட்டிகளின் உக்கிர ஆட்டத்தில் அல்லாடி அலைந்து உயிர்கள் வதைக்கப்பட, சதிகாரக் கூட்டமோ சமர் என்ற பெயரில் எறிகருவிகளால் ஆட்டம் போடும் கொடுமை இன்னும் எத்தனை காலமோ? துடித்துத் துடித்து மக்கள் சாவோடு போராட எடுத்து எடுத்து எறிகணைகளை வீசி வீசி கோரமான விளையாட்டை தொடர்கின்ற கொடுங்கோலர்களின் ஆக்கிரமிப்பு ஆசைகள் அடங்கி ஒடுங்கும் நல்ல நாள் வருமா? சின்னச்சின்ன குருத்துகளெல்லாம் சிதைக்கப்படுவது எவர் கண்களிலும் ஈரத்தை கொண்டு வரவில்லையே போர்க்கருவிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு போட்டி போட்டு அழித்தலைத் தொடரும் ஈவிரக்கமில்லா நாடுகளிடம் மனித நேயமா? மனிதப் படுகொலைகள் ஒரு பக்கம் தொடர பச்சிளங்குழந்தைகள் கொடிய பசியால் துடிக்க “எமக்கு வேண்டியது ஆளுகை அதிகாரம்தான்” என்றே சொல்லி போரிடும் நாடுகளைக் கேட்க ஆருமின்றியே அவலங்கள் தொடர்கின்றன மந்தாகினி
  2. ஓம். நன்றி நன்றி. நன்றி. உண்மைதான். மிருகவதைக்கு கூப்பாடு போடும் குரல்கள் எங்கே? நன்றி. நன்றி. நன்றி. அதிகார ஆட்டங்களால் உயிர்கள் பலியாகிக்கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே
  3. இனி வருமா sudumanal காஸா படுகொலைக்குப் பின் உலகம் பூராவும் இஸ்ரேல் மீதான மக்களின் வெறுப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. காஸா இனப்படுகொலையை எதிர்த்து பல பேரணிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரான்ஸ், பிரித்தானியா, இப்போ ஜேர்மனி என ஆட்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஏதோ முனகுவதற்கு இந்த எதிர்ப்புப் போராட்டங்கள்தான் காரணம். அது அவர்களின் பிழைப்புவாதமாக இருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் போற்றத் தக்கவை. அவை ஏற்கனவே பலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்து வருபவை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அயர்லாந்து காஸா படுகொலையை எதிர்த்தும் சியோனிச இஸ்ரேலை கண்டித்தும் அரசியல் ரீதியாக கிழித்து தொங்கவிட்டுக் கொண்டே இருப்பவர்கள். ரசியாவுக்கு விதித்த 27000 பொருளாதாரத்தடையுடன் இன்னும் இன்னுமாய் 17, 19 என கொசுறு கொசுறாய் கூட்டுகிற இந்த ஒன்றியம் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தடையைத் தன்னும் ஏவியதில்லை. மாறாக இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை உடையது என காஸா மக்களின் புதைகுழிமேல் நின்று சங்கு ஊதுவது இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்போ இஸ்ரேல் ஈரான் மீது வலிந்து தொடுத்த தாக்குதலின்போது ஈரான் தன்னை பாதுகாக்கும் உரிமை கொண்டது என்பதை சொல்ல அவர்கள் தயாராக இல்லை. மாறாக ஏதோ ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கிறதாக மாற்றி மொழிபெயர்த்து, அதனடிப்படையில் இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை உடையது என அதே சங்கை மீண்டும் ஊதுகிறார்கள். இதுதான் அவர்களின் மேக் அப் ஜனநாயகம். ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், ஹவுதி அமைப்புகளை சுட்டிக் காட்டி ஈரான் பயங்கரவாதிகளை வளர்ப்பதாகவும், மத அடிப்படைவாதிகளை வளர்ப்பதாகவும் சொல்லும் மேற்குலகமும் அதன் இரைச்சலுக்குள் அகப்பட்டவர்களும் ஒன்றை மறைக்கிறார்கள். அந்த மூன்று அமைப்புகளும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருப்பவர்கள். மத அடிப்படைவாதிகளல்ல. யார் மத அடிப்படைவாத அமைப்பினராக வெறியாட்டம் ஆடியவர்கள்/ஆடுபவர்கள் என்ற உண்மையை ஏன் மறைக்கிறார்கள். அல் கைடா, ஐஎஸ்ஐஎஸ், பொக்கோ கராம் போன்ற மத அடிப்படைவாதிகள்/பயங்கரவாதிகளை உருவாக்கியவர்கள் அமெரிக்காவும் பிரித்தானியாவும்தான் என்பது வரலாறு. இவர்களே ஏகாதிபத்தியத்துக்கு விளக்கு பிடித்தவர்கள். பிறகு இந்த வளர்த்த கடாவில் ஒரு பட்டி ஆடுகள் இந்த தோற்றுநர்களின் மார்பில் பாய்ந்த கிளை வரலாறும் உண்டு. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மண்ணின் விளைபொருள் ஹமாஸ். இஸ்ரேலின் லெபனான் மீதான ஆக்கிரமிப்பின் விளைபொருள் ஹிஸ்புல்லாஹ். அவர்களது செயற்பாட்டில் விமர்சனங்கள் இருக்கலாம். இருக்கும். அது அவர்களை பயங்கரவாகிகள் எனவோ மத அடிப்படைவாதிகள் எனவோ அவதூறு சொல்ல போதுமானதல்ல. 1993 இல் ஐநா சபையால் 160 நாடுகளுக்கு மேல் வாக்களித்த two state (பலஸ்தீனம், இஸ்ரேல்) தீர்வை இஸ்ரேல் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக பலஸ்தீன மண்ணை மட்டுமன்றி சிரியா, லெபனான் நாடுகளின் எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்து அகண்ட இஸ்ரேல் என்ற one state தீர்வினை சாதிக்க வெறியாட்டம் ஆடிவருகிறது. ஈரானும் ஹமாஸ் உம் மறுபக்கத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்க தயாராக இல்லை. இந்தப் போக்கை இரு தரப்பும் தொடர்ந்தால் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமே இல்லை. பெரியண்ணனின் நிழலில் மத்திய கிழக்கின் சண்டியனாக வெறியாட்டம் ஆடிய இஸ்ரேலின் பிம்பத்தை எவரும் எதிர்பாராத விதத்தில் ஈரான் அடித்து நொருக்கியிருக்கிறது. இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு எதிரான உலக மக்களின் குரல் பல நாடுகளின் ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்பட்ட தொடர் கோபத்திலிருந்த மக்கள் இஸ்ரேலின் மீதான ஈரானின் உச்சந்தலை அடியை கொண்டாடுகிறார்கள். இது நசுக்கப்பட்ட அல்லது அரசுகளால் செவி மடுக்கப்படாத தமது மனிதாபிமானம் சார் குரலினதும் மனித அறத்தினதும் தோல்வியிலிருந்து எழுந்திருக்கிற உளவியல். ஈரான் இந்த ஆதரவினதும் தமது அதி தாக்குதல் பலத்தினதும் நியாயமான திமிருடன் two state தீர்வை முன்வைத்து மேசைக்கு வர வேண்டும். உலக நாடுகள் ஐநா இனால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட two state தீர்வின் அடிப்படையில் பேச இஸ்ரேலை மேசைக்கு இழுத்து வர வேண்டும். இல்லையேல் ஈரானின் தாக்குதல் வெற்றிப் படியில் ஏறப் போவதில்லை. இந்த சந்தர்ப்பம் இனி வருமா தெரியாது. இரு நாடுகளும் தரைப்படை கொண்டு மோத நிலத் தொடர்பு இல்லை. எனவே இராணுவ ரீதியாக எவரும் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. மூலைமுடுக்கெல்லாம் (சுமார் 750) இராணுவத் தளங்களையும் ஈரானைச் சுற்றி மத்தியகிழக்கு நாடுகளில் அடிவருடிகளையும் கொண்டுள்ள பெரியண்ணன் புகுந்தால் எல்லாம் நாசமாகும். அண்ணனுக்கு நிலத் தொடர்பு எதுவும் தேவையில்லை என்பதை கவனம் கொள்ள வேண்டும். இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரல் வழி அண்ணன் ஈராக்கினுள் உள்ளட்டதைப் போல, ஈரான் அணுகுண்டுக்கு திரி வைப்பதுதான் பாக்கி என சொல்லி உள்ளட நேரமாகாது. எனவே ஈரான் காலத்தைக் கைப்பற்ற வேண்டும். பொருளாதார வீழ்ச்சியும், 2027 இல் சீனாமீது போர் தொடுப்பதற்கான தயாரிப்புகள் காய்நகர்த்தல்கள் எனவும் சிக்குப்பட்டு நிற்கும் அமெரிக்கா நெத்தன்யாகுவின் இந்தப் போருக்குள் உள்ளடுமா என்ற சந்தேகத்தையும் சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது. அதேநேரம் இஸ்ரேலின் அழிவை அது ஒருபோதுமே சகித்துக் கொள்ளாது என்பதால் ஈரானின் இராஜதந்திர நகர்வு அவசியமானது. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றெல்லாம் ஈரானின் தாக்குதலைக் காட்டி உசுப்பேத்தும் கதைகள் ஒன்றுக்குமே உதவாது!. ravindran.pa https://sudumanal.com/2025/06/19/இனி-வருமா/#more-7187
  4. நிகழ்தகவை குறைக்க எப்படி பாகிஸ்தான் அணுஆயுதத்தை வைக்க மேற்குலகு விட்டது?.இந்தியாவுக்கு செக் வைக்க பாகிஸ்தான் தேவைப்பட்டது மேற்குலகுக்கு. நிகழ்தகவை குறைக்க இன்னொரு நாட்டை செய்யாமல் தடைசெய்வது ஒரு வகை. ஏன் வைத்திருப்பவர்கள் குறைக்க அல்லது இல்லாமல் செய்ய முடியாது?? நிகழ்தகவை குறைக்க இஸ்ரேல் எந்த வகைக்குள் வரும்??? இது அமெரிக்காவை விட சுத்துமாத்து. பலஸ்தீனத்துக்கு ஈரான் உதவுவது தான் மிக மிக முக்கிய காரணம். ஈரானை அடக்கி விட்டால் பலஸ்தீனியர்கள் ஏதிலிகள் ஆகி போராட மாட்டார்கள் என்பதுடன் நாளுக்கு சராசரியாக 50 பேரை கொன்றால் அவர்களின் போராடும் வீரியம் குறையும் என்ற தந்திரமே. யாரந்த பல நாடுகள்?? அமெரிக்காவுடனான தலபானின் கொண்டாட்டம், இஸ்ரேலின் ஐ எஸ் எஸ்லின் கொண்டாட்டம், பின்லாடனின் தந்தையின் வெள்ளை மாளிகை சிவப்பு கம்பள வரவேற்பு என கூறிக்கொண்டே போகலாம்.இவை எதற்குள் அடங்கும்?? வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனைகள் அமெரிக்காவின் உற்ற நண்பர்களான ஜப்பானின் அடுப்படியில் விழுகிறது. தென் கொரியாவின் கடற்கரையில் விழுகிறது. என்ன சகோ இப்படி சப்பை கட்டு கட்டுகிறீர்கள்??
  5. 🤣..................... பையன் சார், நலமா, இந்தப் பக்கம் வருவது குறைவு போல தெரிகின்றது. டிக்டாக்கில் ஒரு ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் போல.................... வட கொரியா அதிபரின் புதுக்கப்பல் கடலில் விட்ட அன்றே இரண்டாகப் பிளந்து போய்விட்டது. மனிதர் கடும் கோபத்தில் சிலரை பிடித்து அடைத்து வைத்திருக்கின்றார். அவர்களை அவர் கொன்று கூட இருக்கலாம். இப்பொழுது அந்தக் கப்பலை ஒட்டுவது தான் அவரது முதல் வேலை. அந்தக் கப்பல் ஒரு துண்டாக கடலில் மிதந்த பின் தான் தலைவன் வெளியே வேறு அலுவல்களுக்கு வருவார்...............🤣. அதிபர் ட்ரம்ப் தான் ஒரு அமைதி விரும்பி என்று சொல்லுவார். நீங்கள் உட்பட பலரும் அதையே திருப்பிச் சொன்னீர்கள். அதிபர் ட்ரம்ப் விரும்புவது அவரை மட்டுமே என்று நாங்கள் சிலர் எப்போதும் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே............... நாலு வருடங்கள் பட்டுத்தான் பாருங்களேன்.............😜. நிகழ்வுகளை மூன்று வகைகளாக எழுதலாம் என்றிருக்கின்றது: எங்களுக்கு தெரிந்தவற்றை எழுதுவது எங்களுக்கு விருப்பமானவற்றை ஊகங்களாக எழுதுவது எங்களின் அரசியல் தேவைகள் கருதி திரித்து எழுதுவது நீங்கள் இரண்டாவது வகையில் மிக நல்லாகவே எழுதியிருக்கின்றீர்கள்.....................👍.
  6. நான் நினைக்கின்றேன் ஸ்புட்னிக் செய்திகளின் அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. ஸ்புட்னிக் செய்தி தளம் ஈரான் சார்பு நிலையை கடைப்பிடிக்கின்றது. எந்தவொரு விமானமும் விழுத்தப்பட முடியாத ஒன்று அல்ல. ஆனால், உண்மையில் விழுந்தால் அதை ஈரான் காட்சிப்படுத்தும். இதுவரை அப்படியொரு காணொளி வந்ததாக தெரியவில்லை. இஸ்ரேல் டிரோன் ஒன்றை வீழ்த்திய காணொளி ஒன்று நேற்று பார்த்தேன். நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றின் பிரகாரம் பூமியை அதிக ஆழம் ஊடுருவி செல்லும் குண்டை போடக்கூடிய விமானம் சுட்டு வீழ்த்தப்படக்கூடிய சாத்தியம் அறவே இல்லாமல் இல்லை என கூறப்படுகின்றது. அதிகார, ஆணவ, மற்றும் பழிவாங்கள் போட்டிகளின் மத்தியில் மக்கள் அவலங்கள் அனைத்து தரப்பிலும் தொடரப்போகின்றது.
  7. ஜப்பானியர்கள் செய்த பாவமும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் போர்களை நடத்துவதற்கு கூறும் காரனிகளில் அணுகுண்டும் ஒன்று, இரஸ்சியா உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பில்லை என போரினை நடத்துகிறது அல்லவா? குருவை மிஞ்சிய சிஸ்சியனாகிவிட்டீர்கள், உங்கள் எழுத்துக்களை பார்ப்பதில் சந்தோசம்.
  8. அவலை நினைத்து உரலை இடிப்பது என்ன பானை கிளாஸ் எல்லாம் இடித்து உடைக்கலாம் எனெனில் நாங்கள் பாதுகாப்பான மேற்குலக நாடுகளில் பவுத்திரமாக இருக்கின்றோம்
  9. ந‌ன்றி அருமையா சொன்னீங்க‌ள்..................
  10. பையன் சார், அமெரிக்கா அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் நினைப்பதில் புதிதாக எதுவும் இல்லை. பலரும் இப்படியே தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் போல. சாதாரண வேலிச் சண்டையிலேயே பக்கத்து வீட்டுக்காரர்களை பாம்பு கடிக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் நாங்கள். இவ்வளவு செய்யும் அமெரிக்காவை விட்டு விடுவோமா என்ன. அமெரிக்கா போக இன்னொருவர் அந்த இடத்திற்கு வரப் போகின்றார் என்றால், அந்த மாற்றம் நடக்காமலேயே இருக்கலாம். எந்த தனி வல்லரசுமே தர்மம் அற்றது, சுயநலம் மிக்கது. வேற்றுமையில் ஒற்றுமை தேடுவோம் என்ற அடிப்படை சீனாவிடமோ அல்லது ரஷ்யாவிடமோ கிடையாது, அதனாலேயே நாங்கள் அங்கே குடியேறுவது கிடையாது. மேற்கு நாடுகளில் சிலரிடமாவது இந்த இயல்புகள் உண்டு. அதனாலேயே நாங்கள் மேற்கு நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றோம். சைனா தனிப்பெரும் வல்லரசாவதும், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக வந்ததும் ஒரே மாதிரியான நிகழ்வுகள். அவலை நினைத்து உரலை இடிப்பது போல...................
  11. வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த உதவி கோரல் 20/06/2025 மாரீசங்கூடல் உயரப்புலத்தில் வசிக்கும் சிவானந்தராசா லக்சன் (பேசமுடியாதவர், மகனும் பேசமுடியாதவர், மனைவி இதய நோயாளி) என்பவருக்கு அரசின் பத்து லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது. வீடு கட்டும் பணிகளை நிறைவு செய்ய மேலும் ஏழரை லட்சம் ரூபா தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே உங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி ஒரு குடும்பத்தை குடியிருக்க உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம். தொடர்புகொள்ள +94 77 777 5448, +94 77 959 1047 (WhatsApp, Viber)
  12. இது பல பரிமாணங்கள் உள்ள பிரச்சனை. ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கு நெருக்கி விட்டது என்பது திசைதிருப்பும் பொய். உண்மையில் நோக்கம், இரான் அரசாங்க அமைப்பை மாற்றுவது, ஆகப் பிந்தியதும், முந்தியதும், இந்தோ பசிபிக், அதை ஒத்த நவீன பட்டுப் பாதையும். (இதை வேறு திரியில் படம் போடு காட்டினால் கூட பூகோள ராஜதந்திரம் என்னவென்று கேட்பவர்களும் இங்கே இருக்கிறர்கள், மற்றவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று கொக்கு மண்ணுக்குள் தலையை புதைத்த கதையாக) கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முதல் தான் சீனாவில் இருந்து கசக்ஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஊடக, நேரடியாக ஈரானுக்கு சரக்கு புகையிரத பாதை அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது உள்ளது. (அமெரிக்கா / மேற்குக்கு சீன பொருளாதர தளத்தில் மட்டும் வைத்து, வவன்முறை பலத்தையும் சேர்த்து அடித்தது போல அடி. us ஆல் தாங்க முடியாமல் இருக்கிறது, ஏனெனில் கடல் வழியால் தடுத்தால் தரைவழி இப்பொது உள்ளது. மற்றும் பொருளாதார தடை என்று அமெரிக்கா வாலாட்ட முடியாது) எனவே, இப்பொது இரான் அணு ஆயுதம் என்ற போர்வை எடுக்கப்பட்டு இருக்கிறது, ஈரானில் உள்ள அரசாங்கத்தை அகற்றுவதற்கு. (டிரம்ப் சும்மா வாய்ச்சவடாலுக்கு சொன்னதே, அவரின் தேசிய புலனாய்வு director சொன்னன இரான் அணுஆயுதத்தை தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு மேல் தேவை என்றதை தான் கேட்கவில்லை என்று. எந்த அதிபராவது அப்படி இருந்தாலும் சொல்லமாட்டார், Trump இன் வாயால் விளாசும் போக்கால் வெளிவந்து உள்ளது. ஆகவே, ஈரான் அணு ஆயுதம் என்ற பிரச்சனை மட்டும் இப்போதைய தாக்குதல் முனைப்பில் மூல காரணம் அல்ல) இதன் மறுவளம், அமெரிக்காவின், இஸ்ரேல் இன் அந்த இடத்தில உள்ள ஈரான் அந்த பிராந்திய விடயங்களில் தங்களை மீறக்கூடாத நிலையில் ஈரான் இருக்க வேண்டும் என்ற கொள்கையின் விளைவு. அதுக்குதான் இஸ்ரயேலிடம் மாத்திரம் அணுஆயுதம், அமெரிக்காவின் கொள்கை இஸ்ரேல் ஏ எப்போதும் இராணுவ / பல மேலாண்மை கொண்டு இருக்க வேண்டும் என்பது (இதை QME என்று அமெரிக்கா சொல்கிறது, இஸ்ரேல் qualitative military edge எப்போதும் கொண்டு இருக்க வேண்டும் என்று) அத்துடன் இஸ்ரேல் இன் zionist சிந்தனையும் - அந்த பிராந்தியத்தில் தாம் சொல்வதே நடக்க வேண்டும், மற்ற நாடுகள், இனமாக அரபுகள், persians கதைக்க, எதிர்க்க கூடாது என்ற கொள்கை. (அமெரிக்காவின் பொம்மையான ஷாவின் ஆட்சியில் கூட, ஈரானுக்கு அணு சக்தியை வெளியில் இருந்து, US ஏ சகல கட்டுமானக்கனலை வழங்கும், எரிபொருளை வழங்கும், மற்றும் பாவிக்கப்பட்ட அணு எரிபொருளின் பக்க விளைவன புளுடோனியம் கூட ஈரானில் இருந்து அகற்றப்படும் என்பது. ஷா கூட அதை ஏற்கவில்லை. ) ஆகவே, ஈரான் அணு துறையை வைத்து இருக்க கூடாது என்று அமெரிக்கா / மேற்கு, இஸ்ரேல் நாண்டு பிடிப்பது ஈரானில் உள்ள அரசாங்களால் அல்ல (இங்குள்ள சிலரின் விளக்கப்படி ஈரானில் இப்பொது ஆட்சியில் இருக்கும் முல்லாக்களால் அல்ல) US, மேற்கின் நடத்தையால், முதலில் செய்த JCPOA ஐ அமெரிக்கா குழப்ப, eu உம் அதாய் எதிர்க்காமல் வேறு பக்கம் பார்வையை திருப்பி கொண்டு நின்றது, இறுதியாக கூட விபரங்கள் பற்றிய பேச்சுவார்த்தைக்கு 2 நாள் இருக்கும் போது இரானின் கவ்வனத்தை திருப்பும் சந்தர்ப்பமாக பாவித்து தாக்குதல் நடத்தியது, அதை முற்றாக அமெரிக்கா அறிந்து ஆமோதித்து என்பது போண்றவைகளும், எந்தவொரு ஒப்பந்தமும், treaty என்றால் கூட சாத்தியம் இல்லாத நிலைக்கு வந்துள்ளது. தாக்குதலை பொறுத்தவரை, இஸ்ரேல், us, மேற்கு முதலில் தந்திரோபாய அடிப்படையில் இரானை கணிசமாக நிலைகுலைய வைத்து இருந்தாலும், 24 மணிநேரத்துக்குள் இரான் சுதாகரித்து மீண்டதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம், ஈரனின் அரச, அரசாங்க, படை அமைப்பை மேற்கு, us க்கு இப்போதும் குழப்பமாகவே இருக்கிறது. (மறுவளமாக, அமெரிக்கா வேறு நாடடு படைகளுக்கு உதவி, பயிற்றசை கொடுப்பது, அந்தா படைகளில் பரவி, விரவி அறிவத மூலம் உத்தியோகப்பற்றற்ற செல்வாக்கை உருவாக்குவதுக்கு. ஈரானில், எந்த ஒரு குறித்த வெளிச்சக்தி உதவி இன்றி அதன் படை பலத்தை காட்டி எழுப்பி வைத்து இருக்கிறது, புலிகளை போல, இது அமெரிக்காவுக்கு மூலையில் இருந்து குதி வரை குத்திக் கொண்டு இருக்கிறது) கேந்திர அடிப்படையில் அமெரிக்கா, இஸ்ரேல், மேற்கு இதில் மாட்டுப்பட்டு உள்ளது. (இதன் அடிப்படை காரணம் சீன, ரஷ்யா என்ற சகதியில் மறுவளத்தில் போட்டியாக இருப்பதால்) மாட்டுப்பட்டதன் ஒரு காரணம் பகுதியாக டிரம்ப் இன் வாயால். சீனா, ருசியா வெளியில் சொல்வதை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாது. (அவை US ஐ மாட்டிவிட்டு, பின் இரானுக்கு என்ன உதவி செய்யலாம் என்பதை பற்றியே சிந்திக்கும் சந்தர்ப்பம் கூட) ( சீனாவை பற்றி இவிடயங்களில் அறிவதற்கு, முன்பும் இங்கு சொல்லி இருக்கிறேன்.சீன அரசியல், ராஜதந்திர, இராணுவ சிந்தனையாளர் Sun Zi (ஆங்கிலத்தில் Sun Tzu , காலம் கி.மு 600 - 400) எழுதிய The Art of War என்பதை வாசித்து அறியலாம். (இணையத்தில் பல இடங்களில் இருக்கிறது) )
  13. இஸ்ரேல் அணு ஆயுதத்தை வைத்துள்ளது. ஏன் அவர்களுக்கு பொருளாதார தடை இல்லை? முதலாவது காரணம், இஸ்ரேல் 1960 ம் ஆண்டுகளிலேயே, மற்றைய ஐந்து அணு ஆயுத நாடுகள் போன்று, அணு ஆயுதங்களை தயாரித்துவிட்டது. அன்று எவரும் எவர் மேலும் தடை விதிக்கும் நிலை உலகில் இருக்கவில்லை. இரண்டாவது காரணம், அமெரிக்கா - பிரான்ஸ் - இங்கிலாந்து - இஸ்ரேல் என்றும் ஒரே அணியிலேயே இருக்கின்றார்கள். இதில் பிரான்ஸ் மட்டுமே அவ்வப்போது இஸ்ரேலின் கொடுமைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு நாடு. இவர்கள் இஸ்ரேலுக்கு எந்தப் பொருளாதார தடைகளையும் அறிவிக்கமாட்டார்கள் ஏனெனில் நட்பு நாடுகள். ஆனால் ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளை அறிவிக்கலாம். இவர்கள் இருவரும் தடைகளை அறிவித்தாலும் எதுவும் ஆகப் போவதில்லை. அணு ஆயுதம் வரை, பொருளாதார தடை வரை , ஒரு நாளுக்கு 50 ஆக கொன்றால் ஒரு இனத்தை அழிக்கலாம் என்ற குரூரம் யாரிடம் உள்ளது? ஒரு உதாரணம்???? வேறு இனமோ அல்லது வேறுபாடுகள் கொண்ட மனிதர்களை கொன்று அழிக்கலாம் என்ற கொடூரம் காலம் காலமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதர்களிடம் இருக்கின்றது. ஹிட்லரும், அவரது படையினரும் யூதர்களை இலட்சக் கணக்கில் கொன்று அழித்தார்களே. ஒரு நாளைக்கு 50 அல்ல, ஐம்பதினாயிரம் யூதர்களை ஹிட்லர் கொன்றார். பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தால் இந்தியாவில் தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் செத்து விழுந்தார்களே. ருவாண்டாவில் ஒரு இனம் இன்னொரு இனத்தை தினமும் கொன்று அழித்தார்களே. அமெரிக்கப் பழங்குடிகள், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் என்று கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டார்களே. இப்படி ஆயிரம் நிகழ்வுகள் பூமியில் சில ஆயிரம் வருடங்களாக நடந்து கொண்டேயிருக்கின்றது. அணு ஆயுதம் இன்றைய உச்ச ஆயுதமாக இருக்கின்றது. நச்சு வாயு ஒரு காலத்தில் இருந்தது. தீக்குண்டம் ஒரு காலத்தில் உச்ச ஆயுதமாக இருந்திருக்கும். கழுமரம் கூட ஒரு காலத்தில் இருந்திருக்கும். தனது நலம் எப்படி முழு அரபு உலகமும் வேடிக்கை பார்க்கும் போது பலஸ்தீனத்துக்கு மட்டும் உதவ முயல்கிறது. அதுவும் பலஸ்தீனியர்கள் வேறு முஸ்லீம்களாக உள்ள போது?? பலஸ்தீனத்தில் ஹமாஸிற்கு உதவியது போலவே சிரியாவில் அசாத்துக்கு உதவி செய்தது, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு உதவி செய்தது. ஈராக்கில் ஒரு புரட்சிப்படையை உருவாக்கி உதவி செய்தது, ஹூத்தீஸ் அமைப்பிற்கு உதவி செய்வது என்று பலவற்றை ஈரான் செய்து கொண்டிருக்கின்றது. இது பொதுவான மனிதநலமா அல்லது தன்னலமா என்ற கேள்வி இங்கு எப்படி வருகின்றது? சி ஐ ஏ ,மொசாட் செய்த கொலைகளை காட்டிலுமா??? சிஐஏ, மொசாட் செய்த கொலைகளை விடவா இலங்கை அரசு செய்து விட்டது என்றும் இலங்கை அரசு சார்பான ஒருவர் கேட்கக்கூடும். அதற்கும், உங்களின் கேள்விக்கும் பதில் ஒன்றே.
  14. கிருபன் இந்தியா நாடாளுமன்ற தேர்தல்- தமிழகம் போட்டியிலும் முதலாவது இடத்தை பிடித்திருக்கிறார் போட்டியை நடாத்திய கோஷான், முதல் 3 இடங்களை பெற்ற கிருபன், ஈழப் பிரியன், வாதவூரான் ஆகியோருக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள்.
  15. வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த ‘தண்ணி மருந்து’ ஊழல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மனைவி, இரு மகள்கள், மருமகன் பிணையில் விடுவைப்பு. ஆனால் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் மகள் சமித்ரி ஜனனிகா சிறைக்கு, அவர் தந்தையை போலவே கீல்ஸ் பையோடு சிறை செல்வதை படத்தில் காணலாம்! Vaanam.lk
  16. வெற்றி பெற்ற‌ பெரிய‌ப்புவுக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰 ம‌னுஷ‌ன் இந்த‌ போட்டியில் தான் முத‌ல் முறை வெற்றி பெற்று இருக்கிறார்...................ச‌ந்தோஷ‌த்தில் மித‌க்க‌ டென்மார்க்கில் இருந்து இர‌ண்டு விஸ்கி போத்த‌ல‌ அனுப்ப‌லாம் என்று இருக்கிறேன் லொள்😁.............................
  17. நிர்வாக‌த்தை தொட‌ர்வு கொண்டால் அதை அவ‌ர்கள் ச‌ரி செய்வின‌மே க‌ந்த‌ப்பு அண்ண‌........................க‌ட‌ந்த‌ 10வ‌ருட‌மாய் நானும் கைபேசி ஊடாக‌ தான் எல்லாம் செய்கிறேன்..................கொம்பியூட்ர‌ பாவிக்காம‌ விட்டு 10வ‌ருட‌த்துக்கு மேல் ஆகுது........................
  18. மந்தாகினி, உங்கள் கவிதைகளின் ரசிகன் நான்…! ஆணவம் என்றும் நிலைத்ததில்லை, கொஞ்சம் பொறுத்திருங்கள். வரலாறு என்பது ஒரு வட்டத்தில் தான் பயணிக்கின்றது..!
  19. வழமையாக ஒற்றை வரியில் கேள்வி கேட்பீர்கள். இன்று எழுதியிருக்கின்றீர்கள்................👍. நிகழ்தகவை குறைக்க எப்படி பாகிஸ்தான் அணுஆயுதத்தை வைக்க மேற்குலகு விட்டது?.இந்தியாவுக்கு செக் வைக்க பாகிஸ்தான் தேவைப்பட்டது மேற்குலகுக்கு. இந்தியாவைக் கட்டுப்படுத்தவே பாகிஸ்தானை அனுமதித்தார்கள் என்றால் அதுவும் அணு ஆயுத யுத்த நிகழ்தகவை கட்டுப்படுத்தவே என்று தானே வருகின்றது. இந்தியாவிடம் மட்டுமே இருந்தால், அது இந்தியாவின் மேலாதிக்கத்தை நிறுவும் அல்லவா. சமீபத்தில் இருவரும் இரண்டு நாட்கள் சண்டை போட்டதாகச் சொன்னார்கள். பின்னர் பின்வாங்கிவிட்டார்களே. இஸ்ரேலிடமும். எகிப்திடமும் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்தப் பிரதேசம் ஓரளவாவது அமைதியாக இருக்கக்கூடும். நிகழ்தகவை குறைக்க இன்னொரு நாட்டை செய்யாமல் தடைசெய்வது ஒரு வகை. ஏன் வைத்திருப்பவர்கள் குறைக்க அல்லது இல்லாமல் செய்ய முடியாது?? நிகழ்தகவை குறைக்க இஸ்ரேல் எந்த வகைக்குள் வரும்??? வைத்திருப்பவர்கள் அணு ஆயுத பரம்பல் கட்டுப்பாடு ஒப்பந்தம் மூலம் புதிய அணு ஆயுதங்களை செய்வதை கட்டுப்படுத்திக் கொண்டு தானே இருக்கின்றார்கள். புதிய பரிசோதனைகளுக்கு கூட தடை உள்ளதே. பழைய ஆயுதங்களை பயன்பாட்டில் இல்லாமல் ஆக்குவதும் அவர்களில் ஒப்பந்தத்தில் இருக்கின்றது தானே. இது அமெரிக்காவை விட சுத்துமாத்து. பலஸ்தீனத்துக்கு ஈரான் உதவுவது தான் மிக மிக முக்கிய காரணம். ஈரானை அடக்கி விட்டால் பலஸ்தீனியர்கள் ஏதிலிகள் ஆகி போராட மாட்டார்கள் என்பதுடன் நாளுக்கு சராசரியாக 50 பேரை கொன்றால் அவர்களின் போராடும் வீரியம் குறையும் என்ற தந்திரமே. பலஸ்தீனத்துக்கு எவருமே உதவவில்லை. அந்த மக்கள் நிவாரணம் பெற நிற்கும் போது கூட இஸ்ரேல் இராணூவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இங்கே கேட்க நாதியற்ற மக்கள் அவர்கள். ஹமாஸ் குழுவிற்கு ஈரான் உதவுவது பலஸ்தீன மக்களுக்கு உதவுவது அல்ல. ஈரானை அழித்து தான் பலஸ்தீனத்தை அடக்க வேண்டும் என்ற நிலை கிடையாது. இன்றைய காசாவில் ஈரானால் எதுவுமே செய்யமுடியாது. யாரந்த பல நாடுகள்?? நேட்டோவில் இருக்கும் எந்த நாடும் ஈரானின் அணு அயுத திட்டத்திற்கு ஆதரவு கிடையாது. அமெரிக்காவுடனான தலபானின் கொண்டாட்டம், இஸ்ரேலின் ஐ எஸ் எஸ்லின் கொண்டாட்டம், பின்லாடனின் தந்தையின் வெள்ளை மாளிகை சிவப்பு கம்பள வரவேற்பு என கூறிக்கொண்டே போகலாம்.இவை எதற்குள் அடங்கும்?? இவை அமெரிக்க அரசின் தன் நலன் கருதிய நடவடிக்கைகள் என்பதற்குள் வரும். இதையே தான் ரஷ்யா செய்கின்றது. சீனா செய்கின்றது. இந்தியா செய்கின்றது. இங்கு எந்த வல்லரசும் இப்படி செய்யாமல் இருப்பதில்லை. ஈரானும் இதையே செய்தாலும், தேர்ந்தெடுத்த ஒரு அரச நிர்வாகப் பொறிமுறைகளில் இருக்கும் கட்டுப்பாடுகள் தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகார அரச நிர்வாகத்தில் கிடையாது. இது தான் ஈரான் அரசுக்கும், அமெரிக்க அரசுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு. வடகொரியாவின் அணுஆயுத பரிசோதனைகள் அமெரிக்காவின் உற்ற நண்பர்களான ஜப்பானின் அடுப்படியில் விழுகிறது. தென் கொரியாவின் கடற்கரையில் விழுகிறது. என்ன சகோ இப்படி சப்பை கட்டு கட்டுகிறீர்கள்?? அவை அணு ஆயுதப் பரிசோதனைகள் கிடையாது. ஏவுகணைகள். அத்துடன் வட கொரிய மீது அமெரிக்காவும், மேற்குலகும் விதித்திருக்கும் தடைகள் மிகக் கடுமையானவை.
  20. போட்டி கேள்வி கொத்த‌ அடுத்த‌ மாத‌க் க‌ட‌சியில் ஆர‌ம்பித்தால் ந‌ல்லா இருக்கும் உல‌க‌ கோப்பையில் விளையாடும் ம‌க‌ளிர்க‌ளின் பெய‌ர்க‌ள் இன்னும் வெளியிட‌ வில்லை க‌ந்த‌ப்பு அண்ண‌..................போட்டிய‌ திற‌ம் ப‌ட‌ ந‌ட‌த்துவீங்க‌ள் அதில் மாற்றுக் க‌ருத்து இல்லை..................... இந்த‌ முறை இல‌ங்கை ம‌ற்றும் இந்தியாவில் ந‌ட‌ப்ப‌தால் , பின‌ல் வ‌ரை இந்தியா ம‌க‌ளிர் போவின‌ம் இல‌ங்கை ம‌க‌ளிர் சொந்த‌ நாட்டில் ந‌ல்லா விளையாட‌க் கூடிய‌வை , போன‌ மாத‌ம் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர‌ சொந்த‌ ம‌ண்ணில் வென்ற‌வை......................ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை போட்டி பார்க்க‌ ந‌ல்லா இருக்கும் பொழுதும் போகும் அதோட‌ அவ‌ள‌வேன்ட‌ அழ‌கையும் ர‌சிக்க‌லாம் லொள்😁❤️🥰👍...............................
  21. ஆசுப்பத்திரியில் நாலு கட்டில் ரெடியாய் இருக்காம்
  22. ஒரு குட்டித் தூக்கம் போட விடுகிரான் இல்லையே ? எங்கடா கொம்மா?😃
  23. ஈரானின் பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஈரானின் இஸ்ரேல் நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை தமது நாட்டுக்கு மேலாக செல்வதாக கூறி தாக்கியழிக்கிறார்களாம் ஆனால் அவர்களின் நாட்டிற்கு மேலாக செல்லும் இஸ்ரேல் தாக்குதல் விமானங்களை எதுவும் செய்வதில்லை, சிரியாவின் ஒரு பரந்த வெளியின் மேலாக சில மீற்றர் உயரத்தில் மிக தாழ்வாக இஸ்ரேல் போர் விமானம் பறந்து செல்கிற காணொளி ஒன்று இணையத்தில் பார்த்தேன். பக்கத்தில் உள்ள இஸ்லமிய நாடுகளே ஈரானுக்கு உதவவில்லை, ரஸ்சியாவினால் தற்போதய சூழ்நிலையில் ஆயுத உதவி செய்ய முடியுமா என தெரியவில்லை, சீனா ராடார் சாதனங்களை வழங்கியதாக செய்தி வந்திருந்தது, இந்த இரு நாடுகளும் ஈரானுடன் ஏதோ ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளன என கருதுகிறேன். தகவல் தொடர்பு உதவிகளை ஈரானால் பெறமுடிகிறது என கருதுகிறேன், இரண்டு காணொளிகளில் விமான எதிர்ப்பு ஏவுகனை பகுதியினை அண்டிய பகுதியில் ஏவுகணைத்தாக்குதல் நடந்ததை அக்காணொளியில் காண முடிகிறது. இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே சீனாவும் இரஸ்சியாவும் செய்யக்கூடும் என கருதுகிறேன். அத்துடன் இந்த போர் நீண்டகால அடிப்படையில் நிகழாது என கருதுகிறேன், இஸ்ரேல் தனது தாக்குதல் விமானங்களில் ஏறத்தாழ 50 விமானங்களை பயன்படுத்துகிறது, அதனடிப்படையில் மொத்தமாக உள்ள 280 விமானத்தில் 168 விமானங்களை பயன்படுத்துகிறது (40% ரிசர்வ் மற்றும் திருத்த மாற்றீடாக 112 விமானங்கள்) அதில் 50 விமானங்கள் எனும்போது 30% சுழற்சியினை பயன்படுத்துகிறது, இது இஸ்ரேல் ஈரான் தொடர்பான திட்டமிடல் மதிப்பீட்டினை காட்டுகிறது, அதாவது ஈரானின் பதில் தாக்குதல் அல்லது ஈரானை பலவீனம் பற்றிய முழுமையான புரிதல். இஸ்ரேல் தனது விமானப்படையில் 20 விமானங்களை இழந்தால் இஸ்ரேலின் தாக்குதல் அணியில் தாக்குதலை தொடரமுடியாமல் அழுத்தம் ஏற்படும், ஆனால் அவர்கள் ஈரானின் படை பலம் அல்லது அதற்கான மாற்றீட்டினை சரியாக கொண்டுள்ளதால் ஈரானால் எதுவும் செய்ய முடியவில்லை, ஆனால் தாக்குதலை 2 - 3 கிழமைக்கு மேல் தொடர முடியாது என கருதுகிறேன், இந்த போர் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போராகவே இருக்கும் என கருதுகிறேன் அல்லது அமெரிக்கா களமிறங்கினால் நிலமை மாறலாம்.
  24. உண்மையில் இஸ்ரேல் ஈரானில் தாக்கியிருந்தால் அதனால் மக்கள் கதிர் வீச்சால் இறந்திருப்பர், அப்படியெதுவும் நடக்காமையால் தாக்குதல் பொய் என்கிறீர்கள்?? இந்த வீடியோக்களைப் பார்த்து விடயங்களை அரை குறையாகப் புரிந்து கொள்வதை விட, இங்கே இணைக்கப் பட்டிருக்கும் பிபிசி செய்திகளைப் பார்த்தால் விடயம் தெளிவாகும் என நினைக்கிறேன். IAEA என்ற அமைப்பு கதிர் வீச்சு ஈரானில் தாக்குதல் நடந்த இடங்களில் அதிகரித்திருக்கிறதா என கண்காணித்து வருகிறது (இதே கண்காணிப்பு உக்ரைனிலும் நடந்தது). அழிக்கப் பட்ட இடங்களில் வெளியே கதிரியக்கம் அதிகரிக்கவில்லை. கட்டிடங்களின் உள்ளே அதிகரிப்பு இருப்பதாக செய்தியில் இருக்கிறது. அணு ஆயுதம் இங்கே அழிக்கப் படவில்லை. அணு ஆயுதத்தைத் தயாரிக்க அவசியமான யுரேனியத்தை செறிவு படுத்தும் நிலையங்கள் தான் தாக்கப் பட்டிருக்கின்றன. இந்த இடங்களில் கூட 60% செறிவான யுரேனியம் பெரும் தொகையில் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிச் சுத்திகரித்த யுரேனியத்தை மலைக்குக் கீழே தான் பதுக்கியிருப்பர், ஏனெனில் அது போனால் அணுவாயுதக் கனவும் போய் விடும். எனவே, அணுவாயுதம் அழிக்கப் பட்டது, அணு வாயுதம் தயாரிக்கும் இடம் அழிக்கப் பட்டது என்ற உங்கள் புரிதல் தவறு. யுரேனியம் செறிவாக்கும் மைய நீக்க சுழலிகள் (centrifuges) என்ற உபகரணங்கள் தான் இலக்கு என்பதை வெளிப்படையாக செய்திகளில் காண்கிறோம். இதைக் காணாமல் எங்கேயோ மூலையில் இருக்கும் வீடியோவை நம்பி நீங்கள் கருத்துரைப்பது ஆச்சரியம் தான்!
  25. மூன்றாம் உலகப்போர் வரும் என்று சொன்னார்கள். இது தொடங்கி விட்டதோ?
  26. நான் மூன்றாவதாநம்ப முடியவில்லை. போட்டியில் வென்ற கிருபன் அண்ணா, ஈழப்பிரியன் அங்கிளுக்கும் மற்றும் போட்டியைநடாத்திய கோசானுக்கும் வாழ்த்துக்கள். அவுஸ்ரேலியாவைத்தான் தெரிவு செய்தேன் ஆனாலும் தென்னாபிரிக்கா வென்றது மிக்க மகிழ்ச்சி
  27. முதல்வர் கிருபனுக்கு வாழ்த்துக்கள் 👏💐 ஈழப்பிரியன், வாதவூரானுக்கும் வாழ்த்துக்கள்👏 போட்டியை நடத்திய கோஷானுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருந்த செம்பாட்டானுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்❤️ தென்னாபிரிக்காவின் முதல் வெற்றியை மைதானத்தில் இருந்து பார்த்த கோஷானின் நேரடி ஒலிபரப்பிற்கும் நன்றிகள்! இதற்காகவே பிள்ளைகள் சொன்னபடி அவுஸ்திரேலியாவை தெரிவுசெய்தேன்! அவர்கள் சொன்னபடி எதிர்மறையாகவே நடந்தது! ஏனென்றால் என் ராசி அப்படி!!😜 வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வராததால் உடனே பதிய முடியவில்லை! தென்னாபிரிக்கா வென்றது மிக்க மகிழ்ச்சி! ஒரு கறுப்பின தலைவரின்கீழ்தான் வெல்லவேண்டுமென்று இருந்திருக்கிறது போலும்!!
  28. பண்டிதர் பரந்தாமன் எனது அண்ணன் நித்தியகீர்த்தியின் நண்பர். அறுபதுகளில், என் அண்ணன் நடத்திய மக்கள் நாடகக் குழுவில் அவர் முக்கியமான வேடங்களில் நடித் திருந்தார். தமிழகத்தில் "பால பண்டிதர்" என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டு, அவர் நாடு திரும்பிய பின்னர் எந்த வேலைகளும் கிடைக்காமல் இருந்தபோது பொழுதுபோக்குக்காக நாடக மேடையில் நுழைந்தார். பரந்தாமன் நாடகங்களுக்கு பாடல்களையும் எழுதியுள்ளார். அவருடைய பாடல்களில் ஒரு வரி எனது மனதில் இன்றும் பதிந்துள்ளது: “தொட்டால் சுடுவது நெருப்பல்லவா? தொடாமல் சுடுவது அழகல்லவா?” என்று அந்தப் பாடல் தொடங்கும். புலோலி தமிழறிஞர் கந்தமுருகேசனாரின் மாணவனான வீரகத்தி பரந்தாமன், எனது அண்ணனுடன் கந்தமுருகேசனார் பற்றி உரையாடும்போது, அடுத்த அறையில் இருந்து நான் கேட்ட சில சுவாரஸ்யமான விடயங்கள் எனக்குள் பதிந்து விட்டன. அதில் இரு முக்கியமான விடயங்கள்,“கந்தமுருகேசனார் ஒரு விஷயத்தை வேகமாகச் சொல்லும்போது, வேறு விதமான அர்த்தம் பிறக்குமென்று கூறுவார். ‘அக்காளைக்கு மேல் ஏறும் அந்நஞ்சு உண்ணியை எக்காளமும் காண்பது அரிது’ என்று ஒன்று. மற்றையது, புலவர் சண்முகநாதன் ஒரு விருந்துக்குப் போன போது உணவு பரிமாறுவதற்கு அவருக்கு முன்னால் வாழை இலை வைத்தார்கள். அந்த இலையைப் பார்த்த புலவர் சண்முகநாதன், “புண்ட இலை” என்று சொன்னார். அதன் பின்னர் அண்ட இலை போட அதுவும் புண்ட இலை என்றார்” இந்த இரண்டும் நான் நண்பர்களுடன் அன்று பகிர்ந்து கொண்டவை. 60களில் பண்டிதர் பரந்தாமன், சத்தியசாயிபாபாவுக்கு எதிராக"புட்டர் புரத்துப் புரட்டன்" என்று தொடராக பல கட்டுரைகளை எழுதிவந்தார். பின்னர் அவற்றைத் தனது பணத்திலேயே அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார். அவர் தனது ஆசிரியர் வேலையில் இணைந்து திருமணம் செய்து கொண்ட பிறகு, எனது அண்ணனும் வெளிநாட்டிற்கு புறப்பட்டுப் போக அவருடனான எனது தொடர்புகள் நின்றுவிட்டன. நான் புலம் பெயர்ந்த பிறகு, பண்டிதர் பரந்தாமன் விடுதலைப் புலிகளுக்காக புரட்சிப் பாடல்களை எழுதியிருந்தார் என அறிந்தேன். அதில் குறிப்பிட்ட பாடலாக, “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.அவன் போன வழியில் புயலென எழுந்து போரில் வந்தார் புலி வீரர்” என்ற பாடலைச் சொல்வேன்.
  29. எனது பெருமதிப்புக்குரிய ஆசானுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். கணீர் என்ற குரலுடன், முகத்தில் புன்னகையும், மகிழ்வும் ததும்பக் கற்பித்த நாத்திகரான பண்டிதர் பரந்தாமன் ஆசிரியரிடம் சைவ சமய பாடம் கற்கும் பாக்கியம் எனக்கும் இருந்தது. சைவ சமயத்தை வெறும் பக்தி மதமாகக் பார்க்காமல் மெய்யியலாகக் கற்பித்து தத்துவம் மேல் விருப்பை ஊட்டியவர். —-—- “பிறமொழிக் கலப்பை அதீத மொழிப்பற்றுக் கொண்டு எதிர்த்த பண்டிதர் வீ.பரந்தாமன்” -வீரகேசரி- 08.12.2024 கொழும்பில் இருந்து வெளிவந்திருக்கும் வீரகேசரி வாரவெளியீட்டில்(ஞாயிற்றுக் கிழமை) பதிவேற்றம் பெற்றிருக்கும் ஆளுமை……. ஈழத்துக் கலை,இலக்கியப் பரப்பில் தமிழ்மொழி வாழ, இன உணர்வு மேலெழ அரும்பாடுபட்டு தற்போது உடலால்,உளத்தால் நலிவுற்றிருக்கும் பேரன்புக்குரிய மிகப் பெரும் ஆளுமை பண்டிதர் வீ.பரந்தாமன் ஐயா அவர்களின் பார்வையோடு இணைவோம்…… அன்போடு நோக்குகிறோம்:- தாயகக் கவிதாயினி பிறேமா எழில் அவர்களை. அன்புமிகு நன்றி திரு.சி.சிறிகஜன் அவர்கள், பிரதம ஆசிரியர், வீரகேசரி, மற்றும் நிர்வாகக் குழுமத்தினர்க்கும். யாழ்.உரும்பையூர் து.திலக்(கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து எழுதும்… வாரம் ஒரு படைப்பாளி… *********************** (பார்வை - 20) தாயக மண்ணின் முதுபெரும் கலை இலக்கியப் பேராளரும் கல்விசார் ஆசிரியரும் பாலபண்டிதர், பண்டிதர், மொழி ஆய்வாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், தாயக தேசப்பற்றாளர் என இப் பேராளுமைகளைக் கொண்ட பலராலும் நன்கு அறியப்பட்டு விருப்பத்தோடு அணுகக்கூடிய பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் பற்றிய பார்வையோடு இவ்வாரம் இணைகிறோம்… பழம்பெரும் பாரம்பரியத்தையும், புராதன மொழி, சமயம், கலாச்சார மரபு, பண்பாட்டு விழுமியங்களையும் தனித்துவமாகக் கொண்டு புலவர்கள் வாழ்ந்து நிறைந்த யாழ் வடமராட்சி பிரதேசத்தின் புலோலி தெற்கு எனும் சிற்றூரில் வீரகத்திப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இணையருக்கு 1942ஆம் ஆண்டு பண்டிதர் பரந்தாமன் அவர்கள் பிறந்தார். ஈழ, உலக தமிழ் இலக்கியப் பரப்பு இவரைப் புறந்தள்ளியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பட்டிதொட்டியெங்கும், உலகத்தின் மூலை முடுக்கெங்கும், தமிழர் வாழ்கின்ற தேசங்களெங்கும் இவரது வரிகளில் அமைந்த பாடல்கள் இவரது தனித்துவத்தை சாட்சியாக இன்று கட்டியங்கூறி நிற்கிறது. இன்றுமட்டுமல்லாது என்றென்றும் இவர் வரிகளும் ஆளுமைகளும் பேசப்படும். இவர் நவீனத்தைக் கிளறி எறிந்து மரபுரிமையோடு பின்னிப் பிணைந்தவையாக இவரது படைப்புகள் அமைவதோடு மக்களை அதற்குள் இலகுவாக உள்ளீர்த்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. சிறுபராயத்திலேயே தன் தாய்மொழிமீது தீராத காதல் கொண்டு தமிழ்ப் பொத்தகங்களை தேடி நாடி வாங்கி தானாகவே கற்று அறிந்துகொண்டு மனப்பாடம் செய்தலையும் தனது விருப்போடு ஒன்றாக்கிக்கொண்டார். பண்டிதர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை யா/புற்றளை பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யா/கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். தமிழ் அறிஞர் கந்த முருகேசனாரிடம் குருகுல முறையில் மேலதிகமாக தமிழ்க் கல்வியைக் கற்று பாலபண்ணிதர், பண்டிதர் கல்வியை (ஆசிரிய திராவிட பா.ஜா அபிவிருத்திச் சங்கத்தில் நிறைவு செய்தார். குடும்பம் வறுமையில் வாடிய போதும் தன் தாய்மொழி மீது கொண்ட அதீத தேடலையும் விருப்பத்தையும் கைவிடவில்லை. அதன் பயனாக தனது மேற்படிப்புவரை கல்விகற்று ஆசிரியப் பணியையும் ஆரம்பித்தார். கற்பித்தல் காலத்தில் இலகு முறையில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் இவருக்கு “நல்லாசிரியர்” விருது கிடைக்கப்பெற்றதும் சிறப்பம்சமாகும். இவரது ஆசிரியப் பணி பற்றி நோக்குகையில் * 1970ஆம் ஆண்டு மாணவ ஆசிரியராக * 1973 - 1974 வரை திருகோணமலை இந்துக்கல்லுரியில் பயிற்றப்பட்ட ஆசிரியராக * பதினெரு (11) ஆண்டுகள் யா/புற்றளை மகாவித்துயாலயத்தில் * யா/உடுத்துறை மகா வித்தியாலயம் * யா/மணற்காடு தமிழ்க் கலவன் பாடசாலை * 1983 - 1996 வரை யா/பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி * 1996 - 2002 வரை மு/கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் * 2005 - 2008 வரை கிளி/தமிழ்ப் பயிற்சிக் கல்லூரி ஆகிய கல்விச் சாலைகளில் தன் கற்பித்தல் திறனை பெரிதும் வெளிக்காட்டிநின்ற பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் தமிழ்மொழி மீதும், ஈழதேசத்தின் மீதும், தலைமைத்துவம் மீதும், களச் செயற்பாட்டாளர்கள் மீதும் தீராத பற்றுக்கொண்டு தனதுவீடு முதலான தன்பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்களைச் சூட்டி மாணவர்களுக்கும், களச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்ப்பற்றை ஊட்டிக் கற்பித்தார். தமிழ் இலக்கண இலக்கியத்தை இலகுவாக இனிமையாகக் கற்பிப்பதில் வல்லவர். “தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விடேன்" என்று கவிஞர் பாரதிதாசன் கூற, பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் ஒருபடி மேலே சென்று, "தமிழ்மொழியைப் பழித்துரைத்தால் எம்மையீன்ற தாயெனினும் அன்னாளைக் கொல்ல வேண்டும்" என முழக்கமிட்டார். இவரின் மொழியாற்றலால் கவரப்பட்ட தேசத்தின் தலைமைத்துவம் களச் செயற்பாட்டாளர்களுக்கு தமிழ்மொழி கற்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தார். அன்றைய காலத்தில் போக்குவரத்திற்காக தன் பணி நிமிர்த்தம் தனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேணும் என்று தேசத் தலைமைக்கு ஒரு வேண்டுகையைக் கவிதை வடிவில் எழுதினார். அவ்வரிகளாவன, "கொந்துமணி தேர்வேண்டேன் கோமகனே உன்னிடத்தில் கந்துகடா களிறும் யான் வேண்டேன் முன் நீ அழைத்தால் வந்துசெல்ல வளமாக மனமகிழ்ந்தே ஒரு சிறிய உந்துருளி தந்துதவ வல்லையோ உடன்பிறப்பே" என வரிகளைக் கோர்த்தனுப்பினார் பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள். உரியவர் கரம் கிடைத்ததும் உடனே படித்து மெய்சிலிர்த்தார். உள்ளத்தில் இருந்தவற்றை எழுத்துவடிவாய் வேண்டுகை விடுத்த பண்டிதரின் உரிய வகைத் தேவை அறிந்து அவ்வேண்டுகையை சிரமேற்று அவருக்கான உந்துருளியை வழங்கியதோடு, முதன்முதலாக மோட்டார் சைக்கிள்( motor bike) என்ற வாகனத்துக்கான தூய தமிழ்ச்சொல்லான 'உந்துருளி' என்ற சொல் பண்டிதரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இவருடைய புலமைக்குச் சான்று. இவர் தமிழின எழுச்சி, மனங்கள் மாற்றங்காணும் வகையிலான எழுச்சி, மொழியினுடைய வளர்ச்சி நிலை என்ற கட்டமைப்புக்குள் நின்று இலக்கியங்களைப் படைத்தவராவார். இவருடைய தாயகப் பாடல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதில் இன உணர்வையும் மொழிப்பற்றையும் தேசப்பற்றையும் பெரிதும் விதைத்தது எனலாம். இவர் எழுதிய பாடல்கள் பல ஒலி நாடாக்களில் பதிவாக்கம் பெற்றுநிற்கிறது அவற்றுள் சில… 01. மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி.. 02. போடு போடு வீர நடைபோடு... 03. கோணமலை எங்கள் ஏணைமலை... 04. நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள்... 05. தம்பிகளே அன்புத் தங்கைகளே கொஞ்சம் நில்லுங்கள்.. 06.நிலவற்ற வானத்தில் வெள்ளி சிரிக்கும்…. இப் பாடல்கள் எக் காலத்திலும் மனதிற்கு இனிமையையும் தேசத்தின் பெருமையையும் இனமான உணர்வுகளையும் பறைசாற்றி நிற்கும் சான்றுகளாகும். இதனை வரியாக்கிய அவரது கரங்களுக்கும் சிந்தனா சக்திக்கும் ஈழதேசம் சார்பாக நன்றியுணர்வைக் காணிக்கையாக்குவதோடு இவர் இலக்கியப் பெருநிலத்தில் விதையாகத் தூவிய நூல்களாவன… 01. மனிதரும் கடவுளும் - 1968 02. தமிழ் 9 இன் பயிற்சி விடைகள் - 1975,1986 03. தமிழ்மலர் 10 இன் பயிற்சி விடைகள் - 1986 04.புதியதோர் புறம் (ஒலிநாடா) - 1990 05.தமிழ் நடந்த தடங்கள்( கவிதை) - 1995 06. கெரிலாப்போர் விரகுகள் - 1996 07. பண்டைக்குமரியும் பழங்குடித் தமிழரும் - 2001 08. திருக்குறளில் செந்தமிழாட்சி - 2005 09. வேரடிவழித் தமிழ்ச் சொற்பிறப்பியல் சிற்றகரமுதலி -2004 10. தமிழ்ப்பெயர் கையேடு மக்கட்பெயர் 46000 11. அருகிவரும் பழந்தமிழ்ப் பேச்சுவழக்கு சொற்பிறப்பியல் அகராதி 'அ' மட்டும். -2008 12. தமிழர் உறவுமுறைச் சொல்வழக்கு அகராதி -2016 இவ்வாறான அரிய நூல்களை தமிழுக்கும் அதன் நுகர்வோருக்கும் அள்ளியள்ளி படையல் செய்திருக்கும் இப் பண்டிதர் காலத்திருக்கு தந்திருப்பது அளப்பரிய கனதியாகும். அதுமட்டுமன்றி பெண்ணடிமை, பண்பாட்டுச்சிதைவுகள் , குடும்பவன்முறை போன்ற விழிப்புணர்வுசார் நாடகங்களையும் எழுதி ஆரம்பநிலை களச்செயற்பாட்டாளர்களுக்கு பயிற்றுவித்து அரங்கேற்றி பெரு வரவேற்பைப்பெற்ற அரங்காற்றுகைகளாக * அறியாமையின் விடிவு * வாழவிடுங்கள் * ஒற்றைச்சிலம்பு * காடுகாத்த காவலன் * வீழ்ந்த யாழ்ப்பாணம். இவ்வாறான பல்வேறுபட்ட கலை வடிவங்களை மொழி பிறழாது தாய்மொழியின்பால் நின்று படைப்பியக்கம் செய்தது வரலாற்று முக்கியத்துவம்பெற்று நிற்கிறது. பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்களுடைய கவிதைகளை நோக்கினால் சீர்திருத்த கருத்துகள் நிறைந்த சந்தங்கள், இயைபுகள் நிறைந்த வரிகளாகவே அமையும். இவருடைய “தமிழ் நடந்த தடங்கள்” என்ற கவிதையில்… "கடவுள் என்று வணங்குவர் செதுக்கிய கல்லை கனிச்சிலை கொள்வதற்கு ஏன் மனமில்லை மடமைக்கு இதைவிட வேறென்ன எல்லை --கெட்ட ஆடவர்க்கு போடுங்கள் மாடுண்ணும் புல்லை" இவ்வாறாக வாசிக்கும்போதே எல்லையற்ற ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்ற இப் பண்டிதர் சமூகத்துள் புரையோடிப் போயுள்ள சீர்வரிசைக் கொடுமையை கனகட்சிதமாக சாடி நிற்கிறார். இவ்வாறாக பல விடயப் பரப்புளை உள்ளடக்கிய கவிதைகளை தனது படைப்புகளில் ஆழமாகவும் அழகாகவும் வடித்துள்ளார். பண்டிதர் அவர்கள் தனது பன்முக ஆளுமைகளுக்காகப் பல விருதுகளும் சான்றுகளும் பெற்று மாண்பேற்றப்பட்டார். * நல்லாசிரியர்விருது * இலக்கியதுறை கலைப்பரிதி விருது ( வடமராட்சி வடக்கு கலாசாரபேரவை) * இயல்துறை கலைவாரிதி (வடமராட்சி கல்விவலயம்) * தமிழ்மாமணி விருது(அகில இலங்கை இளங்கோ கழகம்) * பேராளுமை விருது(வெண்மேரி அறக்கட்டளை) பன்முகத்தன்மை ஆளுமைக்கான விருது. மேற்குறிப்பிட்ட விருதுகள் மதிப்பளித்து நின்றாலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் உலக இலக்கியப் பரப்பிலும் பண்டிதர் வீ.பரந்தாமன் என்றாலே தமிழின் மாமேதை என்கின்ற தனித்துவ அடையாளம் என்றும் அவரை அலங்கரித்து நிற்கிறது. இது பெறுதற்கரிய விருதாகும். சமூகப் பரப்பிற்குள், வாழ்வியல் முறைமைகளுக்குள் பார்த்தீனியச் செடியைப்போல் ஆங்காங்கே பற்றிப் படர்ந்திருக்கும் சமூகப் பிறழ்வுமிக்க செயற்பாடுகளை தன் தாய்மொழியை ஆயுதமாகக் கொண்டு சீர்செய்ய நினைத்த பண்டிதர் அவர்கள் தனது முதலாவது காகிதப் பிரசவமாக “கடவுளும் மனிதனும்” என்ற தலைப்புத்தாங்கி வெளிவந்து அவரது கொள்கையைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. தாய்மொழியையே தெய்வீகமாகக் கொண்டு இன்பத் தமிழில் மட்டுமே இறையின்பம் காண்பவர் பண்டிதர் வீ.பரந்தாமன் ஆவார். பேச்சுவழக்கிலோ எழுத்துமுறையிலோ பிறமொழிக் கலப்பை அதீத மொழிப் பற்றுடன் எதிர்ப்பவர். தமிழ், ஆளுமைமிக்க தலைமை, தாயக நிலம், தமிழர் கலை கலாச்சாரப் பண்பாடு, என தான் வரித்த கொள்கைப் பற்றோடும் உணர்வோடும் வாழ்ந்துவருபவர். இவ்வாறான ஆளுமையும் தாயக தேசத்தில் தீராத பற்றுமுடைய இவர் தமிழ் இனத்திற்குக் கிடைத்த அரும்பெரும் சொத்து எனலாம். வயது மூப்பின் காரணமாக உடல்மெலிந்து குரல் தளர்ந்து சிந்தனாசக்தி குன்றி நின்றாலும் ஓடியோடி தமிழுக்காய் உழைத்த கால் ஓய்ந்தாலும் படைத்த படைப்புகளும் ஆற்றிய சேவைகளும் தமிழுக்காய் அர்ப்பணித்த வாழ்வியல் தடங்களும் ஓயாது நிலைத்திருந்து உங்கள் கதை பேசி நிற்கும். உங்கள் படைப்புகளுக்காய் ஈழதேசம் என்றும் நன்றியுணர்வைப் பற்றி நிற்பதோடு நலம்பெற வேண்டி நிற்கிறோம். து.திலக்(கிரி), 08.12.2024,
  30. மண்குதிரைக்காக அல்ல, மண்குதிரையை காட்டி மக்களை ஏமாற்றும் அற்ப பதர்களை இனம்காட்டவும் அரசியல் என்பது அறிவு ரீதியனதேயொழிய பக்தி ரீதியானது அல்ல என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே எனது கருத்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.